Jump to content

வெற்றிப் பெண்கள்


Recommended Posts

11:00 மணிக்குள்ஆர்டர் தந்தால் போதும்! அலுவலகங்களில் பணிபுரிவோருக்கு, வெறும், 60 ரூபாய்க்கு, வீட்டு சாப்பாடு 

Tamil_News_large_150853320160425002251.j

விற்று வரும் அன்னலட்சுமிகள் மூவரில் ஒருவரான நித்யா: 'இது கதிர்வேலன் காதல்' படத்து ஷூட்டிங்கிற்காக, கோயம்புத்துார் வந்திருந்த, உதவி இயக்குனர் நந்தகுமாருடன் காதல் ஏற்பட்டு, திருமணம் செய்து கொண்டோம். பெற்றோர் ஆதரவு இன்றி, சென்னையை புரட்டிப் போட்ட வெள்ளப் பாதிப்பின்போது, கையில் காசு இல்லாமல் ரொம்ப கஷ்டப்பட்டோம். அப்போது தான், நான் நல்லா சமைப்பேன் என்பதால், கீழ் வீட்டு அக்கா ஷெர்லின் மேரி, பக்கத்து வீட்டு கவிதா இருவருடன் சேர்ந்து, வீட்டு சாப்பாடு விற்பனையில் இறங்கினேன்.

உடம்புக்கு தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக் பேப்பர்களில் பார்சல் செய்யாமல், டிபன் கேரியரில் சாப்பாட்டைக் கொண்டு செல்கிறோம். அதுமட்டுமின்றி, ஓட்டல் சாப்பாடு வெள்ளையாக தெரிய சோடா மாவும், ருசிக்காக அஜினமோட்டோவும் சேர்ப்பர். கொஞ்சம் சாப்பிட்டதும், வயிறு நிறைந்து, வயிற்று பிரச்னை உண்டாகும்.

ஆனால், நாங்கள் சமைக்கும் சாப்பாட்டில், உடலுக்கு தீங்கு விளைவிக்கும் எந்தப் பொருளையும் கலப்பதில்லை. அதனால் தான், ஆண்கள் மட்டுமின்றி, அலுவலகத்தில் பணிபுரியும் பெண்களும் வாங்குவதால், ஆர்டர் கொடுப்பவரின் எண்ணிக்கை அதிகமாகிறது.ஸ்கூட்டியில் போய், மதியம், 1:00 மணிக்குள் டிபன் பாக்ஸ்களை அலுவலகத்தில் கொடுத்து, மாலை வாங்கி வருவோம்.

ஷெர்லின் மேரி: நித்யாவின் சொந்த ஊர் கோவை; எனக்கு நாகர்கோவில்; கவிதாவுக்கு கேரளா. நாங்கள் மூவரும் வெவ்வேறு ஊர் என்பதால், ஒவ்வொரு நாளும் எங்களின் ஊர் ஸ்பெஷலுக்கு ஏற்ற மாதிரி விதவிதமாக செய்வோம்.பிசினஸ் செய்ய முடிவு செய்ததும், நிறைய கம்பெனிகள், அலுவலகங்களுக்கு சென்று, 'நோட்டீஸ்' கொடுத்தோம். முதலில், மூன்று ஆர்டர் தான் வந்தது. குறைந்த ஆர்டர் என்றாலும், துவண்டு போகாமல் செய்து கொடுத்தோம். இப்போது, தினமும் குறைந்தது, 50க்கும் மேற்பட்ட ஆர்டர் வருகிறது.

சாம்பார், ரசம், வடை, பாயசம், கூட்டு, பொறியல் என, 'அன்லிமிடெட்' சாப்பாட்டுடன், எங்கள் வாடிக்கையாளர்களுக்கு, வெரைட்டி ரைஸ், ஸ்வீட் என, நிறைய சர்ப்ரைஸ் கொடுப்போம்.
சைவ சாப்பாடு, 60 ரூபாய்க்கும், அசைவ சாப்பாடு, 70 ரூபாய்க்கும் கொடுக்கிறோம். அசைவ உணவில், வெறும் குழம்பு மட்டுமின்றி, மீன், சிக்கன் என, ரெண்டு பீஸ் போட்டுத்தான் கொடுக்கிறோம். சாப்பாடு வேண்டுவோர், காலை, 11:00 மணிக்குள் ஆர்டர் தந்தால் போதும்.

ஒரு சாப்பாடு மட்டும் ஆர்டர் செய்தால், வாங்கும், 60 ரூபாயும், பெட்ரோலுக்கே போய்விடும். அதனால், மூன்று சாப்பாடு ஆர்டர் செய்பவர்களுக்கே சேவை செய்கிறோம். வரும் பணத்தில், மளிகை சாமான், வீட்டு வாடகை போக, 15 ஆயிரம் ரூபாய் வரை கிடைக்கிறது!

http://www.dinamalar.com/splpart_detail.asp?id=93

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெண்கள் எப்போதும் சாதனையாளர்கள் தான் தடைகள் உடைத்தால்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாப்பாட்டுக் கடையை சரியான முறையில் செய்தால் நட்டம் வராது. பெண்களுக்கு வாழ்த்துக்கள்...!

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • 2 months later...

தயாரிப்பதும் சுலபம்!

Tamil_News_large_160390320160911002239.jpg

டிடர்ஜெண்ட், டிஷ்வாஷ் லிக்விட் விற்பனை செய்து வரும் வைரமணி: மதுரையைச் சேர்ந்தவள் நான். என் இரு பெண்களை படிக்க வைத்து, திருமணம் செய்து கொடுத்ததுடன், புதிதாக வீடு கட்டியதால், கடன் அதிகமானது; கணவரின் வருமானம் கடனை அடைக்க போதவில்லை.
குடும்ப கஷ்டத்தைப் போக்க, என்ன செய்வது என யோசித்த போது, மதுரை காந்தி மியூசியத்தில் பெண்களுக்கான தொழிற்பயிற்சிகள் அளிப்பதை அறிந்தேன். முதலீடு ரொம்பக் குறைவான பிசினஸ் எது என விசாரித்ததில், டிஷ்வாஷ் லிக்விட் தயாரிப்பு பற்றி தெரிய வந்தது. உடனே அதை தேர்ந்தெடுத்தேன்.
கற்றவுடன், வெறும், 500 ரூபாய் தான் முதலீடு போட்டு, தயாரிக்கும் வேலையில்
ஈடுபட ஆரம்பித்தேன். டிடர்ஜெண்ட் மற்றும் டிஷ்வாஷ் லிக்விட் தயாரிக்க கரன்ட், மிஷின், பெரிய இடம் எதுவும் தேவையில்லை. நம் வீடே போதும், ஒரு மணி நேரத்தில் தயாரித்து விடலாம்.
டிடர்ஜென்ட் லிக்விட் தயாரிக்க சமையல் சோடாவும், டினோபாலும் வாங்கி, சரியான
அளவில் கலந்து மாவுப் பதத்துக்கு வந்ததும், தண்ணீர் சேர்த்து, கலர், சென்ட் கலந்து அரை லிட்டர், 1 லிட்டர் என பாட்டில்களில் அடைத்து விடுவேன். 1 லிட்டர் கெமிக்கல் விலை, 100 ரூபாய் தான். அதன் மூலம், 4 லிட்டர் தயாரிக்கலாம்.
ஒரு பாட்டில், 50 ரூபாய்க்கு விற்கிறேன். இதுவே, வெளியில், 100 ரூபாய்க்கு மேல் விற்கின்றனர். அதேபோல், டிரைசோடியம் பாஸ்பேட், வாஷிங்சோடா வாங்கி, 20 நிமிடத்தில் டிஷ்வாஷ் லிக்விட் தயாரித்து விடலாம்.
கடையில், 1 லிட்டர், 200 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்தாலும், 1 லிட்டர், 50 ரூபாய்க்கு விற்கிறேன். பெரிய பெரிய கம்பெனிகள் பணத்தை கொட்டி, 'டிவி' மற்றும் பேப்பரில் விளம்பரம் கொடுத்து மார்க்கெட்டைப் பிடிக்கின்றன.
என் தயாரிப்புக்கு, 'மெரிட் கிளீனிங் லிக்விட்' என பெயர் சூட்டி, அக்கம் பக்கத்து தோழிகள், ஏரியாவாசிகளிடம் முதலில் அறிமுகப்படுத்தினேன். 'வாங்கி உபயோகித்து, நல்லா யிருந்தால் பைசா கொடுங்க' என, வினியோகம் செய்தேன். இன்று, எங்கள் ஏரியாவில் இருக்கும்
எல்லாருமே, என்னிடம் தான் வாங்குகின்றனர்.
அது மட்டுமல்ல, என் தயாரிப்புகளை பல பெண்கள் வாங்கியும் விற்பனை செய்கின்றனர். மாதம், 12 ஆயிரம் ரூபாய் வருமானம் வருவதால் கடனை அடைக்க, என் கணவருக்குத் துணையாக இருக்க முடிகிறது.
என் பிசினஸ் ஆர்வத்தை ஊக்குவித்து, என்னாலும் சம்பாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையை உருவாக்கியது என் கணவர் தான். நான் இருக்கும் ஏரியாவில் மட்டுமே இவ்வளவு வருமானம் வருகிறதெனில், தமிழக அளவில் விற்பனை செய்தால், அதிக வருமானத்தை ஈட்டலாம்.

http://www.dinamalar.com/splpart_detail.asp?id=93

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

களம் புதிது: உறுதிக்குக் கிடைத்த விருது!

படங்கள்: எஸ். கிருஷ்ணமூர்த்தி.
படங்கள்: எஸ். கிருஷ்ணமூர்த்தி.

கணவருக்கு உதவிசெய்யத் தென்னை நார் தொழிற்சாலைக்குள் நுழைந்தவர், இன்று இந்தியாவின் சிறந்த நார் தொழிற்சாலை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். வாடிப்பட்டி அருகே குலசேகரன்கோட்டையில் நார் தொழிற்சாலை நடத்தும் கவிதா, முயற்சி செய்தால் எதையும் சாதிக்கலாம் என்பதை நிரூபித்துவருகிறார். இவர் கிராமப்புறப் பெண்களைக் கொண்டு தென்னை மட்டையில் இருந்து நார் உற்பத்தி செய்து, அவற்றை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துவருகிறார்.

தென்னை நார், கயிறு உற்பத்தியில் கேரளாவே முன்னிலை வகிக்கிறது. அடுத்தபடியாகத் தமிழகத்தில் மதுரை, ராஜபாளையம், பொள்ளாச்சி, தென்காசி, திண்டுக்கல், ஈரோடு, திருப்பூர் உட்பட பரவலாக 5,000-க்கும் மேற்பட்ட சிறு, குறு தென்னை நார், கயிறு தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு உற்பத்தியாகும் நார் மற்றும் தென்னை நார் கட்டிகள் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில், மத்திய கயிறு வாரியம் ஆண்டுதோறும் சிறந்த தொழில்முனைவோர் விருது வழங்கிவருகிறது. இந்த ஆண்டுக்கான விருதுக்குத்தான் கவிதா தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

பெண்களால் கிடைத்த ஊக்கம்

கணவர், குடும்பம், குழந்தைகள் என்று பம்பரமாகச் சுழலும் இல்லத்தரசிதான் கவிதாவும். திடீரென தொழிலதிபர் அவதாரம் எடுத்தது எப்படி?

“நான் பி.எஸ்சி. முடித்திருக்கிறேன். என்னுடைய கணவர், தென்னை நார் தொழிலில் ஈடுபட்டுவந்தார். குழந்தைகள் வளர்ந்து உயர் கல்வி படிக்கத் தொடங்கியதும் அவருக்கு உதவி செய்வதற்காக எங்களுடைய தென்னை நார் தொழிற்சாலைக்குள் நுழைந்தேன்” என்று சொல்லும் கவிதா, கடினமான இந்தப் பணியில் பெண்கள் ஈடுபட்டதைப் பார்த்து ஆச்சரியப்பட்டிருக்கிறார்.

“அவர்கள் உறுதியோடு வேலைசெய்யும்போது நாம் ஏன் தயங்க வேண்டும் என்று நானும் இந்தத் தொழிலில் முழு நேரமும் ஈடுபடத் தொடங்கினேன். கடந்த நான்கு ஆண்டுகளாக இந்தத் தொழிற்சாலையை என்னுடைய முழுப் பொறுப்பில் விட்டுவிட்டார் என் கணவர்” என்று சொல்கிறார் கவிதா.

இவர்களது தொழிற்சாலையில் ஏற்றுமதி ரக நார் யூனிட், நார் கழிவு கட்டி யூனிட் ஆகிய இரண்டு யூனிட்கள் செயல்படுகின்றன. 130 தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்களில் 99 சதவீதம் பேர் பெண்கள். ஓட்டுநர் பணியை மட்டும் ஆண்கள் கவனித்துக்கொள்கின்றனர். மதுரை சுற்று வட்டாரத்தில் உள்ள பத்து கிராமங்களைச் சேர்ந்த பெண்களுக்குத் தங்கள் தொழிற்சாலையில் வேலைவாய்ப்பு அளித்திருக்கிறார் கவிதா. தென்னை நார், தென்னை நார் கழிவுக் கட்டிகளை உற்பத்தி செய்து சீனா, அமெரிக்கா, பெல்ஜியம், இலங்கை, நெதர்லாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துவருகிறார்.

“தினமும் ஏழு டன் தென்னை நாரும், ஐந்து டன் தென்னை நார் கழிவுக் கட்டிகளையும் ஏற்றுமதி செய்கிறேன். தென்னை நாரிலிருந்து தயாராகும் கட்டிகளுக்கு ஐரோப்பிய நாடுகளில் நல்ல வரவேற்பு இருக்கிறது. அங்கு மண்ணுக்கு பதில் இந்த நார் கழிவுக் கட்டிகளில் விதைகளைப் பரப்பி விவசாயம் செய்கின்றனர். தென்னை நார் கழிவுத் தூளை உற்பத்தி செய்வது மிகுந்த சிரமம். மூன்று மாதம் வரை தண்ணீரை ஊற்றிப் பதப்படுத்தி, வெயிலில் காயவைத்து அதில் விதை முளைப்புத் திறன் ஏற்படுத்திய பிறகே, ஏற்றுமதி செய்ய முடியும். இந்தத் தூள் கிலோ எட்டு ரூபாய்க்கு விற்பனையாகிறது. தென்னை நார் கிலோ எட்டு ரூபாய் முதல் 12 ரூபாய்வரை போகிறது. தற்போது உள்நாட்டு வியாபாரிகள் மூலமே வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறேன். விரைவில் நானே நேரடியாக ஏற்றுமதி செய்யத் திட்டமிட்டிருக்கிறேன்” என்கிறார்.

தன்னிடம் பணிபுரியும் பெண்களின் குழந்தைகளின் கல்விச் செலவுகளுக்கு உதவிசெய்கிறார் கவிதா. சிறந்த பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி உற்சாகப்படுத்துகிறார். இதுபோன்ற தொழிலாளர் நலச் செயல்கள் கவிதாவை வெற்றியை நோக்கி நகர்த்துகின்றன. இந்த விருது இன்னும் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தியிருப்பதாகச் சொல்லும் கவிதா, லூதியானாவில் நடைபெறவிருக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கையால் விருது வாங்கவிருக்கிறார்.

 

http://tamil.thehindu.com/society/women/களம்-புதிது-உறுதிக்குக்-கிடைத்த-விருது/article9146568.ece?widget-art=four-all

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

முகம் நூறு: நெருக்கடியால் நிறைவேறிய கனவு

நாகலட்சுமி.
நாகலட்சுமி.

நம் சமூகத்தில் பேசி, தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டிய பல விஷயங்களைப் பற்றி பெண்கள் வாய் திறப்பதே இல்லை. பெண்கள் இப்படித் தவிர்க்கும் சங்கதிகளில் முதன்மையானது மாதவிடாய். மாதவிடாய் நாட்களில் பேணப்பட வேண்டிய சுகாதாரம் மற்ற எதையும்விட முக்கியம். “நம் கருப்பையிலிருந்து வெளியேறும் ரத்தத்தைச் சில மணி நேரத்துக்குச் சேகரித்துவைக்கும் நாப்கின்கள் தரமாக இருக்க வேண்டும். காரணம் மாதவிடாய் நாட்களில் கருப்பையின் வாய் திறந்திருக்கும். அந்த நேரத்தில் கிருமிகள் கருப்பைக்குள் நுழைவது எளிது. சுகாதாரத்தில் நாம் காட்டுகிற சின்னதொரு அலட்சியம்கூட நம்மைப் பேராபத்துக்கு அழைத்துச் சென்றுவிடும்” என்கிறார் நாகலட்சுமி. சென்னை கெருகம்பாக்கத்தில் சானிட்டரி நாப்கின்கள் தயாரிக்கும் தொழிலை நிர்வகித்துவரும் இவர், இதுவரை ஒன்றரை லட்சம் பெண்களுக்கு மேல் மாதவிடாய் கால சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை அளித்ததுடன், சானிட்டரி நாப்கின்கள் செய்வதற்கான பயிற்சியையும் அளித்திருக்கிறார். யுனிசெஃப் அமைப்பின் மாஸ்டர் டிரெயினராக இருந்த இவர், வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களுக்கும் பயிற்சி அளித்திருக்கிறார்.

புதிய அடையாளம்

நாகலட்சுமி, சிறு வயதிலேயே தாயை இழந்தவர். விடுதிகளில் தங்கிப் படித்ததால் வெளியுலகமே தெரியாமல் வளர்ந்திருக்கிறார். மத்திய அரசு அதிகாரியான அப்பாவின் வழிகாட்டுதலால் எலெக்ட்ரானிக் இன்ஸ்ட்ருமெண்டேஷன், ஃபேஷன் டெக்னாலஜி படித்தார். இவர் படித்த படிப்புக்கு ஏற்ற வேலைக்குச் செல்ல நெடுந்தொலைவு பயணிக்க வேண்டும் என்பதால், கெருகம்பாக்கத்தில் வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள பள்ளியில் ஆசிரியர் பணியில் சேர்ந்தார். சில மாதங்களில் திருமணம் நடக்க, அடுத்தடுத்து மகனும் மகளும் பிறந்தனர். கணவருடைய தொழிலில் சுணக்கம் ஏற்பட்டு, பொருளாதார ரீதியாகச் சிக்கல்களைச் சந்தித்தபோதுதான், ஏதாவது செய்தே ஆகவேண்டும் என்று முடிவெடுத்தார் நாகலட்சுமி.

“சின்ன வயசுல இருந்தே ஏதாவது தொழில் தொடங்கணும்னு எனக்கு ஆசை. ஆனா, அதுக்கு வழிகாட்ட யாருமில்லாததால இல்லத்தரசிங்கற அடையாளத்தோட மட்டும் இருந்தேன். வீட்ல பணக் கஷ்டம் வந்தப்போதான் என் தொழிலதிபர் கனவு மீண்டும் மேலெழுந்துச்சு” என்று சொல்லும் நாகலட்சுமி தன் வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள அஞ்சல் நிலையத்தில் பெண்கள் கூட்டமாக நிற்பதைப் பார்த்தார். விசாரித்தபோது அவர்கள் மகளிர் சுயஉதவிக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. உடனே தங்கள் பகுதியில் உள்ள பெண்களை ஒருங்கிணைத்து மகளிர் சுயஉதவிக் குழு ஒன்றைத் தொடங்கினார்.

“குழு தொடங்கினா, ஏதாவது தொழில் செய்யணுமே. எனக்கு டெய்லரிங் தெரியுங்கறதால அதைத்தான் முதல்ல ஆரம்பிச்சேன். காஞ்சிபுரம் பி.டி.ஓ. ஆபிஸுக்கும் மாவட்டத் தொழில் மையத்துக்கும் போய் என்னென்ன தொழில் தொடங்கலாம், அதுக்கு எவ்வளவு லோன் கிடைக்கும்னு விசாரிச்சேன்” என்று சொல்லும் நாகலட்சுமி, எட்டு தையல் மிஷின்களோடு தனது தொழிலை விரிவுபடுத்தினார்.

வந்தது புதிய பாதை

நட்சத்திர ஓட்டல்களில் வைக்கப்படும் கைக்குட்டை தயாரிக்கும் ஆர்டர் பெரிய அளவில் கிடைத்தது. நல்ல வருமானம் வந்தாலும் வருடத்தில் ஒன்பது மாதங்கள் மட்டுமே வேலை. மீதியிருக்கும் மூன்று மாதங்களுக்கு என்ன செய்வது?

“அப்போதான் என்.ஐ.எஃப்.டி. சார்பில் தரமணியில் சானிட்டரி நாப்கின் தயாரிக்கும் பயிற்சி நடக்கப் போறதைப் பத்தி தகவல் கிடைச்சுது. தமிழகம் முழுவதும் இருந்து 32 பேர் அந்தப் பயிற்சியில கலந்துக்கிட்டோம். பயிற்சி முடிஞ்சதும் யாருமே தொழில் தொடங்கத் தயாரா இல்லை. காரணம் அங்கே பயிற்சி மட்டும்தான் கிடைச்சுது. ஒரு பொருளைத் தயாரிக்கறதைவிட, அதைச் சந்தைப்படுத்தறதுதான் முக்கியம். சானிட்டரி நாப்கின்களை எப்படி விற்பனை செய்யறதுன்னு தெரியாம பலரும் தயங்க, நான் துணிஞ்சு இறங்கினேன்” என்று புன்னகைக்கிறார் நாகலட்சுமி.

ஆரம்பத்தில் இவருடன் சுயஉதவிக் குழுவைச் சேர்ந்த இருவர் சேர்ந்து தொழில் தொடங்கியிருக்கிறார்கள். நாளடைவில் அவர்கள் விலகிக்கொள்ள, தொழில் தொடங்குவதற்காக வாங்கிய கடன் தொகை முழுவதும், இவரது தலையில் விழுந்தது.

“எப்படிச் சமாளிக்கப்போறோம்னு முடங்கி உட்காராம, அடுத்து என்னன்னு யோசிச்சேன். யாரையும் நம்பாம நானே களத்தில் இறங்கினேன். சிவில் சப்ளை ஆபிஸுக்குப் போனேன். 24 அமுதம் சிறப்பு அங்காடிகளில் விநியோகிப்பதற்கான ஆர்டர் எனக்குக் கிடைச்சுது. அதுக்கப்புறம் ஏறுமுகம்தான். வேலை செய்தே ஆகணும்னு கட்டாயம், ஏதாவது ஒரு தொழில்ல சாதிக்கணுங்கற விருப்பம். இது ரெண்டும்தான் எனக்கு இப்போ அங்கீகாரத்தைக் கொடுத்திருக்கு” என்று சொல்லும் நாகலட்சுமி, பதினைந்து ஆண்டுகளாக சுயதொழில் செய்துவருகிறார்.

1_3038762a.jpg

இயற்கை வழியில்

தனக்கு வருகிற ஆர்டர்களைப் பல சுயஉதவிக் குழுக்களுக்கும் பிரித்துக் கொடுக்கிறார். நாப்கின் தயாரிப்பில் பல புதுமைகளைச் செய்ய இவரது தொழில்நுட்ப அறிவு கைகொடுக்கிறது.

“கையில் தயாரிக்கும் நாப்கின்களில் பொதுவா விங்க்ஸ் மாடல் செய்ய மாட்டாங்க. நான் அதையும் செய்தேன். நிறைய பெண்கள் ஏன் நாப்கின் தயாரிக்கிற தொழிலுக்கு வரத் தயங்கறாங்கன்னு யோசிச்சப்போதான், அவங்களுக்கு இதைப் பத்தி போதுமான விழிப்புணர்வு இல்லைன்னு புரிஞ்சது. இது தொழில் மட்டுமல்ல, பெண்களின் ஆரோக்கியத்துக்கு வழிகாட்டுற சேவையும்கூடன்னு அவங்களுக்கு விளக்கினேன். ரசாயனங்கள் நிறைஞ்ச வெளிநாட்டு நாப்கின்களை கேள்வியே கேட்காம பயன்படுத்துறோம். அந்த நாப்கின்களின் தரம், செயலாற்றும் தன்மை இதைப் பத்தியெல்லாம் யாருகிட்டே போய் கேட்க முடியும்? அதுவே நம்ம ஊர்ல ஒருத்தர் சானிட்டரி நாப்கின் தயாரிச்சா, அதோட நிறைகுறைகளைச் சொல்லலாம். நம்மளோட எதிர்பார்ப்பையும் பகிர்ந்துக்கலாம். வாடிக்கையாளர்களின் கருத்துக்கு ஏற்பதான், ஒவ்வொரு மாடலையும் நான் மேம்படுத்தியிருக்கேன்” என்று சொல்லும் நாகலட்சுமி, தாவரப் பொருட்களையும் மூலிகைப் பொருட்களையும் பயன்படுத்தி நாப்கின்கள் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருகிறார்.

“நாப்கின்களில் மேற்பரப்புக்கு மல் காட்டன் வகையைப் பயன்படுத்தலாம். செயற்கைத் துணியோடு ஒப்பிடும்போது இது கொஞ்சம் விலை அதிகம். ஆனா, சிக்கனத்தைவிட நம் ஆரோக்கியம் முக்கியமல்லவா! மாதவிடாயின்போது கருப்பையின் வாய் மூடிக்கொள்ளும் கடைசி நாட்களிலாவது இவற்றைப் பயன்படுத்தலாம். பெண்களுக்குக் கருப்பை, கருமுட்டைப் பை, கருப்பை வாய், கருப்பைக் குழாய் ஆகியவற்றில் புற்றுநோய் ஏற்படுவது நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. அதனால், கருப்பையின் நலம் காக்கும் வகையிலும், தோலுக்குப் பாதிப்பு ஏற்படுத்தாத வகையிலும் மலைவேம்பு, கற்றாழை ஆகியவற்றுடன் ஏழு வகையான மூலிகைகளைக் கலந்து நாப்கின்கள் தயாரிக்கும் பணியைச் செய்துவருகிறோம். மக்களின் ஆதரவைப் பொறுத்து இதை விரிவாக்கும் எண்ணம் இருக்கிறது” என்று சொல்கிறார் நாகலட்சுமி.

படங்கள்: க.பரத்

 

http://tamil.thehindu.com/society/women/முகம்-நூறு-நெருக்கடியால்-நிறைவேறிய-கனவு/article9202211.ece?homepage=true

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

களம் புதிது: ஆஸ்திரேலியாவில் சாதித்த ‘சாய்வாலி’

chai_2_3070123f.jpg

நம் நாட்டில் பலருக்கும் ஒவ்வொரு நாளும் தேநீருடன்தான் தொடங்குகிறது. புத்துணர்ச்சி பெறுவது முதல் எடை குறைப்புவரை ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு பரிமாணத்துடன் இடம்பெற்றுவிடுகிறது தேநீர். தேநீரைத் தன் உற்சாகத்துக்கு மட்டுமல்ல, வியாபாரத்துக்கான உத்தியாகவும் பயன்படுத்திவருகிறார் உப்மா. ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் வசிக்கும் உப்மா விரதியின் அடையாளம் விதவிதமான சுவைகளில் தயாராகும் தேநீர் வகைகள்!

சண்டிகரைச் சேர்ந்த உப்மா, தேநீர் தயாரிப்பதற்காக ‘ஆர்ட் ஆஃப் சாய்’ வகுப்புகளை ஆன்லைனில் நடத்திவருகிறார். அத்துடன் தேயிலை கலவைகளை ஆன்லைனில் விற்பனையும் செய்துவருகிறார். இந்தியக் கலாச்சாரத்தில் தேநீர் குடிப்பதற்காக மக்கள் எப்போதும் ஒன்றுகூட விரும்புவார்கள்.

“இங்கே மகிழ்ச்சியான நேரங்களிலும் கடினமான நேரங்களிலும் தேநீர் தவறாமல் இடம்பெறுகிறது. ஆஸ்திரேலிய ஹோட்டல்களில் நான் எவ்வளவோ தேடிப் பார்த்தும் ஒரு டீயைக் குடிக்க முடியவில்லை. அப்போதுதான் டீத்தூள் கலவை தயாரிக்கும் ஐடியா பிறந்தது” என்று சொல்லும் இவர், முதலில் இந்தத் தொழிலைத் தன் குடும்ப உறவுகள், நண்பர்களிடமிருந்து தொடங்கியிருக்கிறார். பின்னர், அருகிலுள்ள மொத்த மற்றும் சில்லறை விற்பனைக் கடைகளில் தேயிலைக் கலவையை விற்பனைக்கு வைத்திருக்கிறார். இன்று நிற்கக்கூட நேரமின்றி ஓடிக்கொண்டு இருக்கிறார்.

வழக்கறிஞராகத் தன் பணியைத் தொடரும் உப்மாவுக்கு, அவருடைய தாத்தாதான், மூலிகைகள், வாசனை மசாலாக்களைக் கொண்டு ஆயுர்வேத தேநீர் போடக் கற்றுத்தந்திருக்கிறார். மெல்போர்னில் ‘சாய்வாலி’ (பெண் டீ விற்பனையாளர்) என்ற பெயரில் ஆன்லைனில் தேயிலை கலவையை விற்பனை செய்துவருகிறார். அருமையான மணமும் சுவையும் ஆஸ்திரேலியர்களின் ருசியுணர்வைத் தூண்ட 26 வயதில் உப்மா, வெற்றிபெற்ற தொழில் முனை வோராக மாறியிருக்கிறார்.

இந்த ஆண்டுக்கான இந்திய ஆஸ்திரேலிய வர்த்தக மற்றும் சமூக விருது வழங்கும் விழாவில், சிறந்த பெண் தொழிலதிபர் விருதை கடந்த வாரம் சிட்னியில் பெற்றிருக்கிறார். விருதைப் பெற்ற உப்மா, “ஆஸ்திரேலிய மக்கள் காபிக்கு மாற்று ஒன்றைத் தேடிக்கொண்டிருந்தனர். இதுவே சரியான நேரம் என்று டீ விற்பனைத் தொழிலைக் கையில் எடுத்தேன். ஆஸ்திரேலிய சமூகத்துக்கு, டீ மூலம் இந்தியக் கலாச்சாரத்தைக் கொண்டுசேர்க்க வேண்டும் என்பதுதான் என்னுடைய குறிக்கோள்” என்று சொல்லியிருக்கிறார்.

http://tamil.thehindu.com/society/women/களம்-புதிது-ஆஸ்திரேலியாவில்-சாதித்த-சாய்வாலி/article9309676.ece?widget-art=four-all

Link to comment
Share on other sites

வானவில் பெண்கள்: சூப் கடையால் சீரான வாழ்க்கை

படம்: எல். சீனிவாசன்
படம்: எல். சீனிவாசன்

சூழ்நிலையும் சந்தர்ப்பமும் ஒருவருக்குச் சாதிக்கத் தூண்டும் ஆற்றலை உருவாக்கித் தருகின்றன. வாழ்க்கை தரும் சவால்களைக் கண்டு துவண்டு விடாமல், துணிச்சலோடு எதிர்கொள்பவர்கள் தனித்தன்மை மிக்கவர்களாக, சாதனையாளர்களாக மாறிவிடுகிறார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவர் ஓமனா. காதல் திருமணத்தால் உதாசீனப்படுத்தப்பட்ட ஓமனா, ஆதி நாராயணனோடு சென்னையில் இல்லறத்தைத் தொடங்கினார். ஹோட்டலில் வேலை செய்த கணவரின் வழிகாட்டுதலில், 30 ஆண்டுகளுக்கு முன்பு கோடம்பாக்கத்தில் உருவானதுதான் ஜே.ஆர்.ஹாட் ஹெர்பல் அண்ட் வெஜ் சூப்ஸ்.

ஆரோக்கியத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்ததால், விரைவில் வளர்ச்சி கண்டது இவரது கடை. அன்றாடம் கிடைக்கும் மூலிகை சூப்புடன், நாள்தோறும் ஒரு கீரை சூப் என்பது இந்தக் கடையின் அடையாளம். ஆயிரக்கணக்கானவர்கள் இவரது கடையின் வாடிக்கையாளர்கள்.

சூப் கடை வைக்கும் எண்ணம் எப்படி வந்தது?

என் கணவர் பணியாற்றிய ஹோட்டலில் அவர் செய்த சூப்புக்கு அமோக வரவேற்பு கிடைத்தது. அந்தக் கைப்பக்குவத்தைக் கற்றுக்கொண்டு, நான் ஒரு சூப் கடை வைக்க முடிவு செய்தேன். இன்று மூன்று கிளைகளாக வளர்ந்து விட்டது!

உங்கள் கடையில் என்ன சிறப்பு?

மற்ற சூப் கடைகளிலிருந்து ஏதாவது ஒரு விதத்தில் நாம் வித்தியாசப்பட வேண்டும் என்று நினைத்தேன். அப்போது உதித்ததுதான் நாள்தோறும் ஒரு சூப். இங்கே தினமும் மூலிகை சூப் கிடைக்கும்.

மூலிகை சூப் என்றால் என்ன?

மூலிகை சூப் என்பது ரோஜா, வல்லாரை, வால்மிளகு, மிளகு, சுக்கு, துளசி, கருந்துளசி, சித்தரத்தை, சதக்குப்பை என்று 25 பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இதைக் குடிப்பதால் சளி, இருமல், சர்க்கரை, மூட்டுவலி, உள்ளிட்ட பிரச்சினைகள் தீரும். இதனால் ஆரோக்கிய சூப் என்ற பெயரும் கிடைத்தது.

மிர்தானியா சூப் என்றால் என்ன?

மிளகு, பூண்டு, இஞ்சி, தனியா, சீரகம், கருவேப்பிலை ஆகியவற்றைக்கொண்டு தயாரிக்கப்படுகிறது. இதனால் வாயு, சளி, இருமல் தொல்லை தீரும்.

சூப் விற்பனை எப்போது?

மாலை 4.30 மணி முதல் இரவு 11 மணிவரை ஒரு நாளைக்குக் குறைந்தது 100 லிட்டர் சூப் விற்பனை செய்கிறோம். மாலை நேரத்துக்கு உகந்த ஆரோக்கிய பானம் என்பதால் தேடி வரும் வாடிக்கையாளர்கள் அதிகம். கார்த்திகை, மார்கழி, தை போன்ற குளிர்காலங்களில் விற்பனை களைகட்டும். சூப்பில் முறுக்கு போட்டுத் தருவது எங்கள் சிறப்பு. ஒரு ரூபாய் ஐம்பது பைசாவில் தொடங்கிய சூப், தற்போது 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தினமும் மூலிகை சூப் குடிப்பது நல்லதா?

நல்லதுதான். அன்றாடம் தயாரிப்பதால் ரசாயனம் எதுவும் கலப்பதில்லை. சூப் பவுடரையும் விற்பனை செய்கிறோம். அவற்றில் பாதுகாப்புக்காக ரசாயனம் சேர்ப்பது கட்டாயமாகிறது. சூப் பவுடரைத் தண்ணீர் விட்டுக் கலந்து, கொதிக்க வைத்து, கொத்தமல்லித் தழை சேர்த்துப் பருகலாம்.

30 வருட அனுபவம் எப்படி இருக்கிறது?

கூட்டம் அதிகமாக இருக்கும் காலங்களில் அடிக்கடி வழக்கு போட்டுவிடுவார்கள். அதிலிருந்து மீள்வதுதான் பெரிய பிரச்சினையாக இருந்தது. சில நல்ல மனிதர்களின் உதவியால் அவற்றையெல்லாம் சமாளித்துவிட்டோம். இப்போது வயதாகி விட்டதால், என் மகனிடம் கடையை ஒப்படைத்துவிட்டோம். அவன் சான்ட்விச் வகைகளை அறிமுகப்படுத்தி, இளைஞர்களைக் கவர்ந்துவருகிறான்.

வாடிக்கையாளர்கள்?

திரை நட்சத்திரங்கள், நடிகர்கள், பாடலாசிரியர்கள், சின்னத்திரை நட்சத் திரங்கள் என்று பலரும் எங்களது வாடிக்கையாளர்கள். காரில் இருந்தபடியே சூப்பை சுவைத்து விட்டுச் சென்றுவிடுவார்கள்.

 

http://tamil.thehindu.com/society/women/வானவில்-பெண்கள்-சூப்-கடையால்-சீரான-வாழ்க்கை/article9309835.ece?widget-art=four-all

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

படம் பிடிக்கும் தொழிலில் தடம் பதிக்கும் பெண்கள்

 

திருமணம் உட்பட அனைத்து விசேஷ வீடுகளில் முக்கிய பங்கு வகிப்பவர்களாக வீடியோகிராஃபர் மற்றும் புகைப்பட கலைஞர்கள் இருக்கிறார்கள். அதிலும் புகைப்படக் கலைஞர்கள் என்றாலே ஆண்களாகத்தான் இருப்பார்கள். சில துறைகளில் பெண்கள் ஆண்களுக்கு நிகரில்லை என்று சொல்வோரின் கூற்றை சுக்குநூறாக உடைத்தெறியும் விதமாக, வீடியோகிராபர் மற்றும் புகைப்படக்கலைஞர்களாக சென்னையை கலக்கிக்  கொண்டிருக்கும் ஐந்து பெண்களை சந்தித்தேன்.

5.jpg

* செளமியா ரகுநாத், படப்பை

“இந்தத் துறையை தேர்ந்தெடுப்பதற்–்கு முக்கிய காரணம் என்னுடைய அப்பா. அவர் ஒரு சிறந்த வெட்டிங் போட்டோகிராஃபர்.  சிறு வயதிலிருந்தே எனக்கும் இதில் ஆர்வம் ஏற்ப்பட்டது. பதினொன்றாம் வகுப்பு படிக்கும்போது  போட்டோகிராஃபர் ஆகணும்னு முடிவு எடுத்தேன். ஒரு புது விதமான போட்டோகிராஃபரா ஆகணுங்குற ஆசைதான் இருந்தது. அதுக்காகவே மீடியா கோர்ஸ்  படிச்சேன். படிக்கும் போதே புகைப்படங்கள் வைத்து டாகுமென்ட்ரி செய்ததுண்டு. 

அப்பொழுது காலேஜ் இண்டன்ஷிப்  மூலமாக தனியார் தொலைக்காட்சியில் பகுதி நேர வேலை கிடைத்தது. காலேஜ் முடிச்சதும் அப்பாவோடு நிகழ்ச்சிகளில் போட்டோ எடுக்கக் கத்துக்கிட்டேன். பின் தனியாக ஆர்டர்கள் எடுக்கத் துவங்கினேன். கம்பெனி தொடங்கி 2 வருடங்களாக சுமார் 28 சுப நிகழ்ச்சிகளுக்கு ஆல்பம் செய்து கொடுத்திருப்பேன். எங்க வீட்ல எல்லோரின் ஆதரவு இருந்தாலும் கூட, நீண்ட தூரப் பயணம் செய்ய வேண்டி இருக்கும்னு அம்மா மட்டும் அடிக்கடி வருத்தப்பட்டதுண்டு. ஆனால் உனக்கு இந்தத் தொழில் வேண்டாமென்று யாரும் சொன்னது கிடையாது. 

5a.jpg

வாடிக்கையாளர்களும் தன் குடும்பத்தில் ஒருத்தராகத்தான் என்னைப் பார்ப்பதால் என் வேலையும் சுலபமாகிறது. ஆரம்ப காலகட்டத்தில் தனியாக ஆர்டர் எடுக்கும்போது ஆண் போட்டோகிராஃபர்கள் சிலர், என்ன பொண்ணெல்லாம் போட்டோ எடுக்க வந்துருக்கு, நம்மை விட  நல்லா எடுக்க முடியுமாங்கிற மாதிரி பார்ப்பாங்க. அது மனசுக்குக் கஷ்டமாக இருந்தது. பிறகு என்னுடைய திறமையைப் பார்த்து மிரண்டு போனவர்களையும் பார்த்திருக்கேன். 

ஆரம்பத்தில்  வாடிக்கையாளர்கள் ‘ஒரு பொண்ணால நீண்ட நேரம் நின்று போட்டோ எடுக்க முடியுமா’ என்ற சந்தேகத்தோடதான் பார்த்தாங்க. ஒரு சிலர் ஆச்சரியப்பட்டு வந்து என்ன ஊக்கப்படுத்தியதுண்டு. ரெகுலர் வாடிக்கையாளராக மாறியவர்களும் இருக்காங்க. திருமண சடங்குகளின்போது பெண்ணாக இருப்பதால் என்னால சுலபமாக கூட்டத்தில் நுழைந்து படம் பிடிக்க முடியுது. இதுவே ஒரு ஆணாக இருந்தா வழி விடாமல் தள்ளி விட்டுடுவாங்க. வெட்டிங் போட்டோகிராஃபி மட்டுமல்லாமல் மாடல் போட்டோகிராஃபியும் செய்து வருகிறேன். 

 

5b.jpg

போட்டேகிரா ஃபர் தொழில் பெண்களுக்கு மிகவும் எளிதான  தொழிலாகவும் பிடித்தமான வேலையாகவும் இருக்கும். பல்வேறான அனுபவங்களை கற்றுக்கொடுக்கக்கூடியது. ஒரு முறை  என் அப்பாவுக்கு அவருடைய பால்ய நன்பர் ஒருவர். அவரது வீட்டு திருமணத்திற்கு புகைப்படம் எடுக்குமாறு சொல்லி இருந்தார். அப்போது அப்பா போக முடியாத சூழ்நிலை காரணமாக நான் சென்றிருந்தேன். 

படங்கள் நல்லா எடுப்பாளா என்று அவர்களுக்குப் பெரிய சந்தேகம். படம் சரியாக வரலைன்னா அப்பாவுக்கு கெட்டப் பெயர் வந்துடும். எந்த சூழ்நிலையிலும் முக்கியமான புகைப்படங்களை தவற விடக்கூடாது, படங்களும் நல்லா வரணும்னு கவனிப்பாக எடுத்தது மறக்கவே முடியாது’’.

* ப்ரியதர்ஷினி, மயிலாப்பூர் 

‘‘சென்னையில் உள்ள எம்.ஓ.பி. வைஷ்ணவா கல்லூரியில் விஷ்வல் கம்யூனிகேஷன் படிச்சேன். 2012ல் நண்பர் ஒருவர் முஸ்லிம் கல்யாணம் ஒண்ணு இருக்கு. போட்டோ எடுக்க முடியுமா என்று கேட்டாங்க. முஸ்லிம் கல்யாணங்களில் மணமகள் தனியாகவும், மணமகன் தனியாகவும்தான் சடங்குகள் செய்வாங்க. அதனால சில வீடுகளில் ஆண்களை மணமகள் இருக்கும் இடத்திற்கு அனுமதிக்க மாட்டாங்க. அப்பொழுதுதான் எனக்கு இந்த வாய்ப்பு கிடச்சது. முதல் முறை என்பதால் பதட்டமாக  இருந்தது. 

ஆனால் இதுதான் என்னுடைய தொழிலாக மாறும்னு நான் அப்போ நினைக்கலை. இஸ்லாமியத் திருமணங்களில் பெண்கள் மட்டுமே இருக்கிறதால எனக்கு பழகுவதற்கு ஈசியா இருந்தது. அந்த அனுபவம் எனக்கு ஆர்வத்தை தூண்டியது. அதன் பின் போட்டோ எடுப்பதையே முழு நேர வேலையா மாத்திக்கிட்டேன். இதனால் பல அனுபவங்கள் எனக்குக் கிடத்தன. வெளியூர்களுக்கு போகக்கூடிய வாய்ப்புகள் கிடைத்தன. பலதரப் பட்ட மக்களை சந்திக்க முடிந்தது. இதெல்லாமே எனக்கு புதுசா இருந்தது. இந்தத் துறையில பெரிசா எந்தப் பிரச்னையையும் சந்திக்கலைன்னாலும் ஒரு சில சின்னச் சின்ன மன வருத்தங்கள் வந்திருக்கு. 

திருமணத்திற்கு வர்றவங்க போட்டோகிராஃபரா பார்க்க மாட்றாங்க. ஒரு பொண்ணாத்தான் பார்க்கிறாங்க. இத்தனை ஆண்டுகாலமா ஆண்கள் மட்டுமே பார்க்கக்கூடிய துறை என்பதால் அவ்வளவு சீக்கிரம் இருபாலராலும் ஏத்துக்க முடியறது இல்லை. எப்படி சிறுமைப்படுத்தலாம் என்றிருப்பார்கள் சில சமயங்களில். சமூகம் எப்படி பார்க்கிறது என்று ஒரு பக்கம் இருந்தாலும். வீட்டில் இன்னும் பயத்தோடதான் பார்க்கிறாங்க. ‘இது கஷ்டமான வேலை. 

இது உனக்கு வேணாம்’ என்று எங்க வீட்ல சொன்னாங்க. கொஞ்ச கொஞ்சமாகதான் அவங்களுக்கு புரிய வைக்க வேண்டி இருந்தது. இப்போ அப்படியான பிரச்னைகள் எதுவும் இல்லை. நண்பர்களோடு சேர்ந்துதான் ஆர்டர் எடுத்து பண்றேன். திருமணம் மட்டுமல்லாமல் எல்லா சுப நிகழ்ச்சிகளுக்கும் எடுக்க ஆரம்பிச்சிட்டோம். கூட்டமா வந்து போட்டோ எடுக்க தடையா நிற்கும்போது  ஆரம்பத்தில் நகர்ந்து போங்கன்னு சொல்றதுக்கு தயக்கமா இருந்தது. பின் கொஞ்சம் சத்தமா சொன்னா எல்லோருமே கேட்கிறாங்க என்பதைக் கண்டுபிடிச்சேன். பெண்கள் ஃப்ளைட் எல்லாம் ஓட்டும்போது நாங்க இதைப் பண்றது பெருசா தெரியலை. 

சென்னை மட்டுமல்லாமல் தமிழகத்தில் பல்வேறு இடங்களுக்கும் சென்று நிகழ்ச்சிகள் எடுத்திருக்கேன். ராமநாதபுரம் மாவட்டத்தில் உத்ரகோஷ மங்கை கோயில் உள்ளது. இது சுமார் 2000 வருடம் பழமையான கோயில். அங்கு நடைபெற்ற திருமணத்திற்குப் போயிருந்தேன். அது பழங்குடியினர் திருமணம். அவர்கள் மற்றவர்களைவிட மாறுபட்டு இருந்தாங்க. முதலில் ஆச்சர்யப்பட்டவங்க என்னை அவங்க வீட்டுப் பிள்ளையாக நினைச்சு உபசரிச்சாங்க. 

அவர்களது அன்பும், அனுசரிப்பும் என்னை அதிலிருந்து மீள முடியாதபடி ஆக்கியது. அதற்குப் பிறகு கிராமங்களில் இருந்து வரக்கூடிய ஆர்டர் எதையும் விட்டது இல்லை. குன்னூர் பகுதியில் படுவா இன மக்கள் வாழும் கிராமத்தில் ஒரு ஆர்டர். சந்தோஷமா போன எனக்கு அங்க பெரிய ஆச்சர்யமே காத்திருந்தது. அவர்களுடைய கலாசாரமும், சடங்குகளும் வித்தியாசமா இருந்தது. மணப்பெண்ணும் மாப்பிள்ளையும் எதிர் எதிராக அமர்ந்து முகத்தைப் பார்க்காமல் தாலி கட்டும் சடங்கு இன்னும் எனக்கு மறக்கலை’’. 

* ஷாலினி, திருவான்மியூர் 

‘‘டிகிரி முடிச்சிட்டு சில மாதங்கள் சினிமா துறையில் உதவி கேமரா மேனாக வேலைக்குச் சேர்ந்தேன். கருத்து வேறுபாடு காரணமாக  அதிலிருந்து விலகிட்டேன். அப்பொழுதுதான் வெட்டிங் போட்டோகிராஃபரா ஆகலாம்னு முடிவு பண்ணினேன். அதைத் தொடர்ந்து போர்ட்டிரைட்ஸ், பிரிவெட்டிங், போஸ்ட் வெட்டிங், மெட்டநெட் போட்டோகிராஃபி, கிட்ஸ் போர்ட்டிரைட்ஸ் என அனைத்து விதமான போட்டோக்களை எடுக்க தொடங்கிட்டேன். 

முதல் முறையா எடுக்கும் போது எல்லோருமே ஆச்சர்யமா பாத்தாங்க. சிலர் வந்து கேப்பாங்க. நல்லா படிச்சிட்டு ஏன் இந்த வேலைக்கு வந்தீங்க, கஷ்டமா இல்லையா? எப்படி செய்றீங்க என்பார்கள். எனக்கு இந்த வேலை பிடிச்சிருக்கு, ஆர்வமாகவும் இருக்கு. புதுப்புது அனுபவங்கள் இதன் மூலமா எனக்கு கிடைச்சிருக்கு. மன நிறைவா வேலை பார்க்கிறேன்னு அவங்கக்கிட்ட சொல்லி இருக்கேன். 

எங்க வீட்ல எனக்கு நம்பிக்கையும் ஆதரவும் கொடுத்தாங்க. நேரத்துக்கு சாப்பிடுவதில்லை, உடம்பை கவனித்துக்கொள்வதில்லை என அறிவுரை சொல்வதுண்டே தவிர எனக்கு எதிர்ப்பு தெரிவிச்சது கிடையாது. தமிழ்நாடு தவிர பிற மாநிலங்களுக்கும் அதிகமாக பயணம் செய்ததுண்டு. பெங்களூர், மகாராஷ்ட்ரா போன்ற மாநிலங்களில் திருமண நிகழ்ச்சிகள் அவர்களது கலாசாரத்தை எனக்கு கற்றுக்கொடுத்தன. 

கடந்த வருடம் பெங்களூரில் திருமண நிகழ்ச்சி முடிந்து மழையின் காரணமா திரும்பி வர முடியாத சூழல்ல மாட்டிக்கிட்டேன். எனக்கு அங்கே யாரையும் தெரியாது. என்ன பண்றதுன்னு தெரியாம ரொம்ப கஷ்டப் பட்டு சென்னைக்கு வந்த அனுபவம் மறக்கவே முடியாது. இந்தத் தொழிலை ஆண்கள் மட்டும்தான் செய்ய முடியும், நம்மால முடியாது என பல பெண்கள் நினைக்கிறாங்க. அந்தத் தவறான எண்ணத்தை பெண்கள் மாத்திக்கணும்’’.

* பவானி, அசோக்நகர்

‘‘அடிப்படையில் காலநேரம் பார்க்காமல் வேலை பார்க்கவேண்டும் என்பதாலும், கனமான கருவிகளை தோளில் சுமக்க வேண்டிய கட்டாயம் போன்றவை பெண்களுக்குக் கொஞ்சம் தயக்கம் ஏற்படுத்தலாம். பெண்கள் குழந்தையை பத்து மாதம் வயிற்றில் சுமப்பது மற்றும் குடும்பப் பொறுப்புகளை தோளில் சுமப்பதற்கான மன உறுதியெல்லாம் இயற்கையிலே அதிகம் இருக்கும்போது இது நமக்கு நிச்சயமாக சவாலாக இருக்காது என்ற நம்பிக்கையில் இந்தத் தொழிலுக்கு வந்தேன். 15 ஆண்டுகளாக திருமணங்கள் மற்றும் விசேஷங்களுக்கு போட்டோ மற்றும் வீடியோ எடுக்கும் வேலை செய்து கொண்டிருந்தவர் அசோக் நகர் போஸ். 

அவரிடத்தில் உதவியாளராக 2013ம் ஆண்டு சேர்ந்தேன். 6ம் வகுப்பு வரைதான் படித்தேன். போட்டோ மற்றும் வீடியோ பற்றியெல்லாம் எனக்கு ஒன்றும் தெரியாது. தையல் பணியில் போதுமான வருமானம் இல்லாமல் சிரமப்பட்டுக்  கொண்டிருந்தபோது இஸ்லாமியத் திருமணங்களில் பெண் புகைப்படம் மற்றும் வீடியோ கலைஞர்களுக்கு உள்ள தேவை பற்றி போஸ் சொன்னார். 

ஒவ்வென்றாக கற்றுக் கொண்டு. புகைப்படம் எடுப்பது மற்றும் வீடியோ கவரேஜ் பணி மட்டுமல்லாமல் காட்சித் தொகுப்பு, ஆன்லைன் மிக்சிங், கிராஃபிக்ஸ், ஹெலிகேம் என அனைத்து விதமான பணிகளையும் கற்றுக்கொண்டு சிறப்பாக செய்து வருகிறேன். குறுகிய காலத்தில் இப்படி சிறப்பான முன்னேற்றங்களை எட்டியதற்கு என்னுடைய ஆர்வமும் என் வழிகாட்டியான  போஸ்தான் காரணம்’’.
                        
* புனிதா, மயிலாப்பூர் (வீடியோகிராஃபர்)

‘‘12ம்  வகுப்பு முடிச்சிட்டு வீட்ல இருந்தேன். எங்க அப்பாவுடைய நண்பர் ஒருவர் ஸ்டுடியோவில் வேலை இருக்கு செய்றீங்களான்னு கேட்டார். எங்க அப்பாவும்  மறுப்பு தெரிவிக்காம போகச் சொன்னார். எங்க வீட்ல நாங்க 5 பேர் சகோதரிகள். என்னை எங்க வீட்டில் ஆண் பிள்ளை மாதிரிதான் வளர்த்தாங்க. 1993ம் ஆண்டு நான்  வீடியோகிராஃபர் வேலைக்கு வந்தேன். என்னோட ஆசான் குருமூர்த்தி அய்யா.  ஆரம்பத்தில் ரொம்ப பயம் இருந்தது.  

மெல்ல மெல்லத்தான் கத்துக்கிட்டேன். திருமணம் ஆனதுக்குப் பிறகும் எனக்கு எந்தத் தடையும் வந்தது கிடையாது. என்னுடைய கணவரும் எனக்கு நல்லா உறுதுணையாக இருந்து வருகிறார். சொல்லப்போனால் என்னுடைய கணவரும் கத்துக்கிட்டு என்கூட ேபாட்டோ எடுக்க வர்றாங்க. இப்போதெல்லாம் வெளியூர்ல நிகழ்ச்சி வந்தால் நாங்க குடும்பத்தோடு போயிடுவோம். எனக்கு ஒரு பையனும் ஒரு பொண்ணும் இருக்காங்க. சுமார் 24  வருசமா இந்த ஃபீல்டுல இருக்கேன்’’.

http://kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=3548&id1=84&issue=20161116

Link to comment
Share on other sites

கதவு திறக்கும் கனவு விரியும்

படங்கள்: எல்.சீனிவாசன்
படங்கள்: எல்.சீனிவாசன்
 
மழை தூறி ஓய்ந்த ஒரு மாலை நேரத்தில் அந்தத் தொழிற்சாலைக்குள் நுழைந்தபோது ஆச்சரியமாக இருந்தது. சென்னை வண்டலூரை அடுத்த வேங்கடமங்கலம் கிராமத்தில் இருக்கிற அந்தத் தொழிற்சாலை முழுக்கப் பெண்கள் நிறைந்திருந்தார்கள்! மின்சாரப் பயன்பாட்டைச் சீர்செய்யும் ஸ்டெபிலைசர், கேபிள்கள் போன்ற எலெக்ட்ரானிக் பொருட்கள் தயாரிக்கும் அந்தத் தொழிற்சாலையில் அவ்வளவு பெண்களைப் பார்த்தபோது மகிழ்ச்சியாக இருந்தது. பெண்களால் இயக்கப்படும் இந்தத் தொழிற்சாலையை வெற்றிகரமாக நடத்தி வருபவரும் ஒரு பெண்தான்!

“எல்லாக் கதவுகளும் தட்டியவுடன் திறந்து விடுவதில்லை. முழு முயற்சியுடன் மோதும்போது கதவும் திறக்கும்; நம் கனவும் விரியும்” என்று உற்சாகத்துடன் ஆரம்பிக்கிற ஜெயலட்சுமி, அந்தத் தொழிற்சாலையின் வெற்றிக்கு ஆணிவேர்.

2_3086346a.jpg

“கன்னியாகுமரிதான் என் சொந்த ஊர். எங்க ஊர்ல பெண்கள் படிப்பாங்க. ஆனா கிராமத்தைத் தாண்டி வெளியே வர மாட்டாங்க. நான் ஸ்கூல் படிக்கும்போதே யாரையும் சார்ந்து இல்லாம ஒரு தொழில்முனைவோரா ஆகணும்ங்கற குறிக்கோளோடு இருந்தேன். ஒரு பெண் முன்னேறினால் ஒரு குடும்பமே முன்னேறும் என்பதை அனுபவத்தில் உணர்ந்திருந்தேன். அதனால் நான் ஒரு தொழிற்சாலை அமைத்தால் அதில் பெண்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பு வழங்கணும்னு அப்போவே முடிவெடுத்திருந்தேன்” என்று சொல்லும் ஜெயலட்சுமி, இன்று தன் கனவை மெய்ப்பித்திருக்கிறார். தான் நடத்திவரும் இரண்டு தொழிற்சாலைகளிலும் 110 பெண்களைப் பணியில் அமர்த்தியிருக்கிறார்! தன்னிடம் பணிபுரியும் பெண்களின் குழந்தைகள் பள்ளி விட்டு வந்ததும் விளையாடுவதற்காகத் தொழிற்சாலையிலேயே பூங்காவையும் காப்பகத்தையும் அமைத்திருக்கிறார்.

ஜெயிக்க வைத்த வேட்கை

“திருமணமாகி சென்னை வந்தபோது எல்லாமே புதிதாகத்தான் இருந்தது. எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்டரானிக்ஸ் இன்ஜினீயரிங் முடித்தவுடன், இந்தத் துறையில் தனியாகத் தொழில் தொடங்கணும்னு விரும்பினேன். ஆனால் அதிலுள்ள சிரமங்களைத் தெரிஞ்சுக்கணும்னா அடிப்படை வலுவா இருக்கணுமே. அதனால் ஐந்து நிறுவனங்களில் பத்து ஆண்டுகள் வேலை செய்தேன். நடுவில் வாய்ப்பு கிடைக்கும்போது கான்டிராக்ட் எடுத்து, தனியா தொழில் செய்தேன். தனியே தொழில் தொடங்கியபோது வங்கிக் கடன் முதல் வட்டிவரை பயமுறுத்தின. ஆனா எப்படியாவது ஜெயிக்கணும்ங்கற உந்துதல் பயத்தைப் போக்கி, என்னை உத்வேகப்படுத்துச்சு. குடும்பத்தையும் தொழிலையும் சரியான விகிதத்துல பேலன்ஸ் செய்தேன். தொழிற்சாலைக்கு என் மகன்களையும் அழைத்துச் செல்வேன். என் கனவை அவங்களும் புரிஞ்சுக்கிட்டாங்க. அவமானங்கள், கஷ்டங்களைத் தாண்டி வந்து திரும்பிப் பார்க்கும்போது, 16 ஆண்டுகள் கடந்து விட்டிருந்தன” என்று முழுமூச்சாகச் சொல்லி முடிக்கிறார் ஜெயலட்சுமி.

மேலும் “குறித்த நேரத்தில் பொருட்களை டெலிவரி செய்வதும் தொடர்ச்சியான தர மேம்பாடும்தான் தன் வளர்ச்சிக்குக் காரணம்” என்றும் சொல்கிறார் அவர்.

3_3086345a.jpg

பூஜ்யத்திலிருந்து…

வாழ்க்கைப் பயணம் சில நேரங்களில் திரைப்படத்தைவிடவும் சுவாரஸ்யமான திருப்பங்களைக் கொண்டிருக்கும். சில ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம் அது. கொடுத்த ஆர்டரை நிறுவனங்கள் கேன்சல் செய்ய, ஒரே இரவில் பொருளாதார நெருக்கடிக்கு ஆளானார் ஜெயலட்சுமி. முன்கூட்டியே அட்வான்ஸ் கொடுத்து, வேலைக்கு அமர்த்திய 300 தொழிலாளர்களும் வீட்டைச் சுற்றி அமர்ந்திருந்தார்கள். செய்வதற்கு வேலை இல்லை, ஆனால் சம்பளம் கொடுக்க வேண்டும் என்றால் யாரும் உடைந்துதானே போவார்கள்.

“ஒரே தொழிலை மட்டும் செய்யும்போது, மாற்று ஏற்பாடு இல்லாத நெருக்கடியை அப்போதுதான் உணர்ந்தேன். இருந்த பணத்தைப் பகிர்ந்தளித்து விட்டு, மறுநாள் வங்கிக்கு ஓடினேன். ஏற்கெனவே கடன் பெற்றுச் சரியாகத் திருப்பிச் செலுத்தியிருந்ததால், மீண்டும் கடன்பெற முடிந்தது. மறு படியும் பூஜ்யத்திலிருந்து தொடங்கினேன். அனுபவம்தான் சிறந்த ஆசான்” என்று சொல்கிறார் ஜெயலட்சுமி. அதற்குப் பிறகு மருத்துவத்துறை சார்ந்த பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தைத் தொடங்கினார்.

பெண்ணுக்கு வேலை வேண்டும்

பிரசவ கால நாப்கின்கள், டிஸ்போசபிள் பெட் பிராடக்ட்ஸ், குழந்தைகளுக்கான டயபர்கள் என்று மருத்துவமனைகளின் தேவைகளைக் கேட்டறிந்து, தயார் செய்து கொடுத்தார்.

“இந்த நிறுவனத்திலும் முழுக்கப் பெண்களையே பணியில் அமர்த்தினேன். இயக்குவதற்குப் பயிற்சி அளித்தேன். நாப்கின்களில் பிளாஸ்டிக், கெமிக்கல் இல்லாமல் தயாரிக்க, தைவான் நாட்டின் தொழில்நுட்பத்தைப் பின்பற்றுகிறேன். சென்னையைச் சுற்றியுள்ள மருத்துவமனைகளுக்கு நாப்கின் உள்ளிட்ட மருத்துவத்துறை சார்ந்த பொருட்களை விற்பனை செய்துவருகிறேன்” என்பவர், மருத்துவத்தையும் பொறியியலையும் ஒன்றாக இணைப்பது குறித்த ஆராய்ச்சியில் தற்போது ஈடுபட்டுவருகிறார். பிகினி நாப்கின் (பெல்ட் மாடல்) உள்ளிட்ட புதிய முயற்சிகளையும் மேற்கொண்டு, வெற்றி பெற்றிருக்கிறார்.

“தேடலையும் புது முயற்சிகளையும் நிறுத்திவிட்டால் ஒரே இடத்தில் தேங்கி விடுவோம். அடுத்த கட்டமாக இரண்டு நிறுவனங்களையும் ஒன்றிணைத்து, இன்னும் நிறையப் பெண்களுக்கு வேலை தர வேண்டும்” என்று தன் திட்டங்களை அடுக்கிக் கொண்டேபோகிறார் ஜெயலட்சுமி. சுற்றி நிற்கும் பெண்கள் அதை ஆமோதித்துப் புன்னகைக்கிறார்கள்!

1_3086347a.jpg

K

 

http://tamil.thehindu.com/society/women/முகம்-நூறு-கதவு-திறக்கும்-கனவு-விரியும்/article9365056.ece?widget-art=four-all

Link to comment
Share on other sites

  • 3 months later...

உன்னால் முடியும்: எல்லோரும் தொழில் முனைவோர் ஆகலாம்

unnal_3140196f.jpg
 
 
 

இயற்கை வழி விவசாய விளை பொருட்களுக்கு சமீப காலத்தில் வரவேற்பு அதிகரித்து வந்தாலும், அதற்கான இடுபொருட்களை சொந்தமாக தயாரித்துக் கொள்வது எல்லோருக்கும் சாத்தியமில்லை. அதில் வெற்றி கண் டுள்ளார் திவ்யா. படித்தது பேஷன் டிசைனிங் சார்ந்த பட்டம், வேலைபார்த்தது அதைச் சார்ந்த பன்னாட்டு நிறுவனங்கள். ஆனால் எல்லாவற்றையும் துறந்து இயற்கை விவசாயிகளுக்கு உதவும் தொழில்முனைவோராக உருவாகி நிற்கிறார். அவரது அனுபவம் இந்த வாரம் ‘வணிகவீதி’யில்..

குடும்பம் மொத்தமும் விவசாயத்தில் தான் ஈடுபட்டுள்ளனர். அதிலிருந்து கிடைத்த வருமானத்தை வைத்துதான் என்னை படிக்க வைத்தனர். படிப்புக்கான கட்டணங்களை மொத்தமாக கட்ட வேண்டிய ஒவ்வொரு முறையும், இந்த பணம் எப்படி வந்தது என அப்பா விளக்குவார். எனக்கோ, வேலைக்கு சென்று சம்பாதித்து அப்பாவின் கஷ்டங்களைப் போக்க வேண்டும் என்கிற உந்துதல் வரும். விடுமுறை நாட்களில் நானும் விவசாய வேலைகளில் உதவி செய்வேன். இப்படித்தான் எனது விவசாய தொடர்புகள் இருந்தன.

படித்து முடித்ததும் சென்னை,பெங்களூரு நகரங்களில் வேலை பார்த்தேன். அதன் பிறகு விவசாயம் குறித்தெல்லாம் யோசனை யில்லை. ஆனால் எதிர்பாரத ஒரு சூழலில் விவசாயத்தை நோக்கி திரும்ப வேண்டி வந்தது. இயற்கை விவசாயம் குறித்த ஆர்வம், அதைச் சார்ந்த தொழிலில் இறங்க வேண்டும் என்று முடிவு செய்த பிறகு தமிழ்நாடு முழுவதும் பல விவ சாயிகளைச் சந்தித்தேன். பல விவசாய கூட்டங்கள், பயிற்சி அரங்குகளில் கலந்து கொண்டேன். ஒவ்வொரு மண் வளத்தையும் தெரிந்து கொள்வது, மாதிரி சேகரிப்பது என இரண்டு ஆண்டுகள் இந்த வேலைகளில் என்னை ஈடுபடுத்திக் கொண்டேன். இந்த காலகட்டத்திலேயே எனது ஆரம்ப ஆராய்ச்சிகளும் தொடர்ந்து கொண்டிருந்தது. எல்லா பரிசோதனைகளையும் எங்களது நிலத்திலேயே மேற்கொண்டோம். கூடவே இது தொடர்பான பட்டயங்களையும் வாங்கி னேன். அதன் பிறகுதான் இந்த தொழிலில் இறங்கினேன்.

நவீன விவசாயத்துக்கான இடுபொருட் கள் என்றால் மார்க்கெட்டிங் செய்வது மிக எளிதானது. ஆனால் இயற்கை வழி விவசாயத்துக்கான இடுபொருட்களை கொண்டு சேர்க்கும் வழி எளிதானதல்ல; இயற்கை வழி விவசாயத்தை மேற்கொள்பவர்கள் பலரும் கிட்டத்தட்ட ஜீரோ பட்ஜெட் விவசாயத்துக்கு முயற்சித்து வருபவர்களாகத்தான் இருப்

பார்கள். குறிப்பாக அவர்களது நிலத்திலேயே பல இடுபொருட்களையும் பூச்சி விரட்டிகளையும் தயாரித்துக் கொள்வார்கள். அவர்களிடம் சென்று எங்களது தயாரிப்புகளை விளக்கிச் சொல்லி விற்பனை செய்வது சாதாரணமாக நடக்கவில்லை. அதேசமயத்தில் ரசாயன மருந்துகளை பயன்படுத்துபவர்களை மாற்றுவதும் எளிதானதல்ல.

விவசாயிகளுக்கு மட்டுமில்லாமல், வீட்டுத் தோட்டம், மாடித் தோட்டம் வைத்துள்ளவர்களுக்கு எங்களது தயாரிப்புகள் பெருமளவு பயனுடைய தாக உள்ளது. இதனால் புதுமையான முறையில் மார்க்கெட்டிங் வேலைகளில் இறங்கினேன். குறிப்பாக ஆர்கானிக் பொருட்களை விற்பனை செய்யும் கடைகளில் காட்சிக்கு வைத்தேன். இவற்றை பயன்படுத்தும் சில விவசாயி களிடம் பேசி, அவர்கள் உற்பத்தியையும் அந்த கடைகளில் விற்பனைக்கு வைத் தோம். விவசாயிகளை உறுப்பினர்களாக சேர்த்து, அவர்களுக்கு போன் மூலமான ஆலோசனைகளையும் வழங்கினோம். அதற்காக ஒவ்வொரு விவசாயி, அவரது சாகுபடி, விளைச்சல் உள்ளிட்ட தகவல்ளை தொகுத்து டேட்டாபேஸ் உருவாக்கினேன்.

ஆரம்பத்தில் என் குடும்பத்தினர் உதவியோடு நான் மட்டுமே இறங்கினேன். அதன் பிறகு மெல்ல விவசாய துறை சார்ந்த 7 பட்டதாரிகளை வேலைக்கு எடுத்தேன். இப்போது 20 நபர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு அளித்துள்ளேன்.

ஆரம்பத்தில் இவற்றை கொண்டு செல்லும்போது என் அப்பா, தாத்தா வயது கொண்ட அனுபவம் வாய்ந்த விவசாயிகள், ‘விவசாயத்த பத்தி உனக்கு என்னம்மா தெரியும்’ என்பதுபோல டீல் செய்வார்கள். 500 தென்னை மரம் கொண்ட விவசாயிடம் 50 மரத்தை நான் பராமரிக்கிறேன் என்று பேசி பேசித்தான் நம்பிக்கை பெற முடிந்தது. இப்போது பல விவசாயிகளும் எங்களது இயற்கை வளர்ச்சி ஊக்கிகள், பூச்சி மற்றும் நோய் தடுப்பு மருந்துகளை நம்பி வாங்குகின்றனர்.

தமிழ்நாடு தவிர கேரளா சந்தையில் எங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்களில் கற்றுக் கொண்ட அனுபவத்தை விவசாயத்தில் பயன்படுத்துகிறேன். இளம் தலைமுறை ஆர்வத்தோடு விவசாயத்தில் இறங்கினால் ஒவ்வொருவரும் தொழிமுனைவோர்தான் என்கிறார் இவர்.

தொடர்புக்கு: vanigaveedhi@thehindutamil.co.in

 

http://tamil.thehindu.com/business/business-supplement/உன்னால்-முடியும்-எல்லோரும்-தொழில்-முனைவோர்-ஆகலாம்/article9571326.ece?widget-art=four-rel

Link to comment
Share on other sites

மெரினா பீச்சில் டீ விற்று வருமானம் ஈன்ற பெட்ரிசியா நாராயணன், சென்னையில் ஹோட்டல்கள் நிறுவிய கதை! 

full_ccfc275f90

பெட்ரிசியா தாமஸ் 17 வயதில் இந்து பிராமணர் நாரயணன் என்பவரை காதலித்து மணமுடிந்தார். பாரம்பரியமிக்க கிரித்தவ குடும்பத்தை சேர்ந்த அவர், தன் குடும்பத்தாரை எதிர்த்துக்கொண்டு திருமணம் புரிந்தார். அதனால் பெட்ரிசியாவின் தந்தை அவரை வெறுத்து குடும்பத்தை விட்டு ஒதுக்கிவிட்டார். துரதிர்ஷ்டவசமாக மணமுடிந்தவரும் போதைக்கு அடிமையாகி பெட்ரிசியாவை துன்புறுத்தி வந்தார். இரண்டு குழந்தைகளோடு போக இடமின்றி தவித்த பெட்ரிசியா செய்வதறியாத தவித்து வாழ்ந்தார். 


நன்றி: பிசினஸ் நியுஸ்
மகள் கஷ்டப்படுவதை பார்த்த பெட்ரிசியாவின் தாயார் அவருக்கு தள்ளுவண்டி மூலம் உணவுவகைகள் விற்பனை செய்ய பண உதவி செய்தார். அதைக்கொண்டு, பெட்ரிசியா மெரினா பீச்சில் இரண்டு மாற்றுத்திறனாளிகளை பணியமர்த்தி அந்த தள்ளுவண்டி கடையை நடத்திவந்தார். ஸ்னாக்ஸ், ஜூஸ், காபி, டீ என்று விற்பனை செய்தனர். 

”மெரினா எனது பிசினஸ் பள்ளி என்பேன். அங்கே தான் நான் எம்பிஏ பெற்றேன்,” என்று தி ஹிந்து நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார் பெட்ரிசியா. 
மெல்ல சூடுபிடித்த தொழிலின் காரணமாக, சில அலுவலக காண்டீன்களை பராமரிக்க வாய்ப்புகள் அவருக்கு கிடைத்தது. பின்னர் 1998 இல் நெல்சன் மாணிக்கம் ரோட்டில் உள்ள சங்கீதா ஹோட்டல் குழுமத்தின் இயக்குனராக பணியில் சேர்ந்தார் பெட்ரிசியா. 

குழந்தைகளும் வளர்ந்த நிலையில், அவரது கணவரின் நடவடிக்கைகள் மிகவும் மோசமானது. அவரது கணவர் பணம் கேட்டு சிகரெட் துண்டுகளை கொண்டு பெட்ரிசியாவின் உடலில் சுடுவார், பின் பல மாதங்கள் காணமல் போய்விடுவார், 2002இல் அப்படி சென்றபோது அவர் இறந்துவிட்டார்.  இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பெட்ரிசியாவின் மகளும் ஒரு சாலை விபத்தில் அவரது கணவருடன் இறந்துவிட்டார். 

வாழ்க்கையில் இத்தனை துயரங்களை கண்ட பெட்ரிசியா, மனமுடைந்த நிலையிலும் தனது மகனுடன் சேர்ந்து ‘சந்தீப்பா’ என்ற தனது மகளின் பெயரில் ஒரு ஹோட்டலை துவங்கினார். தன் மகளை அறவணைத்து வளர்த்தது போல் இந்த ஹோட்டலை வளர்த்தெடுத்தார். 2010 இல் FICCI’ இன் சிறந்த பெண் தொழில்முனைவோர் என்ற பட்டத்தையும் வென்றார். 

“நான் இரண்டு ஊழியர்களுடன் தொழிலை தொடங்கினேன். இன்று 200 பேர் வரை என் ஹோட்டலில் பணிபுரிகின்றனர். என் வாழ்க்கைமுறை மாறியுள்ளது. சைக்கிள் ரிக்‌ஷாவில் பயணித்த நான் அடுத்து ஆட்டோ பின்னர் என் சொந்த காரில் செல்கிறேன். ஒரு நாளைக்கு 50 பைசா வருமானம் சம்பாதித்த நான் இன்று 2 லட்சம் ரூபாய் வரை ஈட்டுகிறேன்,”
என்று பெட்ரிசியா ரீடிஃப் பேட்டியில் கூறியுள்ளார். பெட்ரிசியாவின் இந்த போராட்டம் அசாத்தியமானது.

https://tamil.yourstory.com/read/ce2635af57/tion-of-the-tea-sold-petriciya-income-calving-marina-beach-chennai-hotels-founded-in-the

Inspiring Success Story of Patricia Narayan

 

FeaturedImage

Patricia+Narayanan+_+Sandeepha+Restaurant.jpg

 

இந்த இணைப்பில் மேலும் பல வெற்றிகரமான அனுபவங்கள் உள்ளன ஆர்வம் உள்ளவர்கள் வாசியுங்கள் சிறந்த வற்றை இங்கே இணைத்து விடுங்கள்

https://tamil.yourstory.com/tag/inspiration/page/1

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
    • 28 MAR, 2024 | 12:07 PM சிறுவர்களின் ஆபாசக் காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றுவது தொடர்பான முறைப்பாடுகளைப் வழங்குவதற்கு  புதிய முறைமையொன்றை  இன்று வியாழக்கிழமை (28) அறிமுகப்படுத்தவுள்ளதாகத்  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் இணையத்தளத்தினூடாக இன்று முதல் இது தொடர்பான முறைப்பாடுகளைப் பதிவு செய்ய  சந்தர்ப்பம் வழங்கப்படும் என அதன் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.   இதன் மூலம் பெறப்படும்  முறைப்பாடுகள்  நேரடியாக இங்கிலாந்தில் உள்ள "Internet Watch Foundation" க்பகு தெரிவிக்கப்படுவதுடன் அதனுடன் தொடர்புடைய ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.    மேலும், இந்த முறைப்பாடுகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் யார் என்பதைக் கண்டறிந்து, சர்வதேச  பொலிஸார் மூலமாகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.    கடந்த காலங்களில் சிறுவர்களின் ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்கள் இணையத்தில் வெளியானமை தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது .   ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில் முறைப்பாடு வழங்க புதிய வழிமுறை | Virakesari.lk
    • அதிஉயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் வடக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்பு.  (புதியவன்) அதி உயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் 21 வழிபாட்டுத் தலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவற்றுள் 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிக்கப்படவிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கூறியதாக அரச தலைவர் ஊடகப்பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.  இவ்வாறாக கட்டுவன், வசாவிளான் மற்றும் பலாலி ஆகிய பகுதிகளில் காணப்படும் ஆலயங்களே வழிபாட்டு நடவடிக்கைகளுக்காக விடுவிக்கப்படவுள்ளன. அரச தலைவர் ஊடகப்பிரிவின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், இணைத் தலைவர்களான வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் தலைமையில் இன்று நடைபெற்றது. இதன்போது கடந்த கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், புதிய பிரேரணைகளும் சமர்பிக்கப்பட்டன. இதன்போது உரையாற்றிய வடக்கு மாகாண ஆளுநர், சுமார் 30 வருடங்களுக்கு மேலாக எவ்வித வழிபாடுகளையும் நிகழ்த்தாத குறித்த ஆலயங்களுக்கு முதலில் மக்கள் செல்ல வேண்டும் எனவும், இவர்களுக்கான போக்குவரத்து வசதிகளை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் இராணுவத்துடன் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவித்தார். மக்கள் அங்கு செல்லும் போது ஊடகவியலாளர்களுக்கும் அனுமதி வழங்கப்பட வேண்டும் என இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த விடயம் தொடர்பில் பாதுகாப்பு தரப்பினருடன் கலந்துரையாடி பரிசீலிக்கப்படும் என மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவர்கள் தெரிவித்தார்கள். இதேவேளை, 1985 ஆம் ஆண்டுக்கு பின்னர் வனவள மற்றும் வனஜீவராசிகள் பணிமனையின் கீழ் கையகப்படுத்தப்பட்ட காணிகளை விடுவிக்குமாறு துறைசார் அமைச்சரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் ஏப்ரல் மாதத்துக்குள் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் ஆளுநர் தெரிவித்தார்.  இதேவேளை, வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் விவசாய நவீனமயமாக்கல் செயற்பாடு தொடர்பில் மாகாண சபைக்கு அறிவிக்க வேண்டும் என குறித்த செயற்றிட்டத்தின் பிரதிப் பணிப்பாளருக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்தார்.  அத்துடன் விதை உருளைக் கிழங்கில் பக்றீரியா தொற்று ஏற்பட்டமை தொடர்பான முழுமையான அறிக்கையை சமர்பிக்குமாறு மாகாண விவசாய அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தினார். அத்துடன் யுக்திய சிறப்புச் சுற்றிவளைப்பின் ஊடாக கைது செய்யப்படும் நபர்களுக்கான புனர்வாழ்வு செயற்பாடுகளை மாத்திரம் மேற்கொள்ளாது, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் முழு வலையமைப்பையும் கண்டுபிடிக்க வேண்டும் என பொலிஸாருக்கு ஆளுநர் தெரிவித்தார்.  மேலும் பொதுமக்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்துக்குள் பொலிஸ் காவலரன் ஒன்றை அமைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது. குறித்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான, சி.சிறிதரன், செ.கஜேந்திரன், யாழ்ப்பாண மாவட்ட பதில் செயலாளர் ம.பிரதீபன், வடக்கு மாகாண சபைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பணிமனைத் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், பொலிஸார், முப்படையினர், சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.  இதன்போது, பொதுமக்களின் காணியில் கட்டப்பட்டுள்ள யாழ்.தையிட்டி விகாரை இடித்து அகற்றப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், செ.கஜேந்திரன் குறிப்பிட்டிருந்தனர்.(ஏ) அதிஉயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு (newuthayan.com)
    • முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி,பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பாக மிகப் பெரிய ஆரவாரத்துடன் தி.மு.கவில் இருந்து பிரிந்து உருவான ம.தி.மு.க. தற்போது மிகவும் பலவீனமான நிலையை எட்டியிருக்கிறது. காரணம் என்ன ம.தி.மு.கவின் பொருளாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அ. கணேசமூர்த்தியின் தற்கொலை மரணம் அக்கட்சியினரை உலுக்கியிருக்கிறது. அதற்கு இணையான அதிர்ச்சியாக, இந்த நாடாளுமன்றத் தேர்தலில் அக்கட்சிக்கு பம்பரம் சின்னம் கிடைக்காமல் போனதைச் சொல்லலாம். அ. கணேசமூர்த்தியின் மரணத்தைவிட, பார்வை ரீதியாக மிக மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது இந்த விவகாரம். மாநிலத்தில் ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிடுவதால் அக்கட்சி கேட்ட சின்னத்தைத் தர முடியாது என மறுத்திருக்கிறது இந்தியத் தேர்தல் ஆணையம். துவக்கத்தில் ஒரே சின்னத்தில் 24 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட்ட கட்சி, தற்போது கூட்டணி அரசியலில் இரு தொகுதிகளில் போட்டியிட முடியாமல் சின்னத்தை இழந்து நிற்கிறது. தமிழ்நாடு அரசியலிலும் தி.மு.க. மீதும் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய கட்சியாகக் காட்சியளித்த ம.தி.மு.க., இவ்வளவு பெரிய சரிவை உடனடியாகச் சந்திக்கவில்லை. இந்தச் சரிவு படிப்படியாக நேர்ந்தது. வைகோவுக்கும் தி.மு.கவுக்கும் இடையிலான பிளவு தி.மு.கவின் முக்கியமான தளபதிகளில் ஒருவராக 1980களில் இருந்தவர் வை. கோபால்சாமி. தி.மு.கவின் மாநாடுகள், கூட்டங்கள் ஒவ்வொன்றிலும் அவருக்கெனவே இளைஞர்கள் திரண்டார்கள். ஆனால், 90களின் துவக்கத்தில் அவருக்கும் கட்சித் தலைமைக்கும் இடையிலான முரண்பாடுகள் முற்றத் துவங்கின. இந்த நிலையில், 1993இல் விடுதலைப் புலிகளால் தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக மத்திய - மாநில அரசுகளின் உளவுத் துறைகள் அனுப்பிய கடிதத்தை தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி வெளியிட்டார். இதையடுத்து, வைகோவுக்கும் தி.மு.கவுக்கும் இடையிலான பிளவு முற்றத் துவங்கியது. 30 மாவட்டச் செயலாளர்களில் 9 பேர் வைகோவுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டனர். அதே ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி தி.மு.கவை விட்டு நீக்கப்பட்டார் வைகோ. ஆதரவாக அறிக்கை வெளியிட்ட 9 மாவட்டச் செயலாளர்களும் நீக்கப்பட்டனர். செயற்குழு உறுப்பினர்களில் 40 பேர், பொதுக் குழு உறுப்பினர்களில் சுமார் 200 பேர், 9 மாவட்டச் செயலாளர்கள், சில சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் வைகோவுக்கு ஆதரவாக நின்றனர். எம்.ஜி.ஆர். தி.மு.கவைவிட்டு விலகியபோது ஏற்பட்ட பிளவைவிட இந்தப் பிளவு மிகப் பெரியது என அப்போது பலர் கருதினார்கள். காரணம், எம்.ஜி.ஆர். கட்சியைவிட்டு வெளியேறியபோது, தி.மு.கவின் மாவட்டச் செயலாளர்கள் யாரும் எம்.ஜி.ஆரோடு செல்லவில்லை. ஆனால், இந்த முறை, துடிப்புமிக்க மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய தலைவர்களான பொன். முத்துராமலிங்கம், செஞ்சி ராமச்சந்திரன், அ. கணேசமூர்த்தி, கண்ணப்பன், எல். கணேசன், ரத்தினராஜ், டிஏகே லக்குமணன், திருச்சி செல்வராஜ், நாகை மீனாட்சி சுந்தரம், மதுராந்தகம் ஆறுமுகம் உள்ளிட்டோர் வைகோவின் பக்கம் நின்றனர். இவர்கள் தவிர, திருச்சி மலர்மன்னன், முன்னாள் அமைச்சர் தங்கவேலு, புதுக்கோட்டை சந்திரசேகரன், கே.எஸ். ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கும் வைகோ பக்கம் நின்றனர். இந்தப் பின்னணியில் தி.மு.கவின் கட்சி, கொடி ஆகியவற்றுக்கு உரிமை கோரிய வைகோ அது நடக்காத நிலையில், 1994ஆம் ஆண்டு மே மாதம் ஆறாம் தேதி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியைத் துவங்கினார். இந்தக் காலகட்டத்தில் தமிழக அரசியலில் மிக முக்கியமான ஒரு கட்சியாக ம.தி.மு.க. பார்க்கப்பட்டது. அப்போதைய ஆளும் கட்சியான அ.தி.மு.கவை எதிர்ப்பதில் மிகப் பெரும் தீவிரத்தைக் காட்டினார் வைகோ. அ.தி.மு.க. ஆட்சியைக் கண்டித்து கன்னியாகுமரியில் இருந்து சென்னையை நோக்கி நடைபயணம் ஒன்றையும் மேற்கொண்டார் வைகோ. மதிமுகவும் பம்பரச் சின்னமும் ம.தி.மு.க. 1994இல் துவங்கப்பட்ட தருணத்தில் மயிலாப்பூர் மற்றும் பெருந்துறை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் ம.தி.மு.கவுக்கு மயிலாப்பூர் தொகுதியில் பேருந்து சின்னமும் பெருந்துறையில் பம்பரச் சின்னமும் ஒதுக்கப்பட்டது. கடந்த 1996ஆம் ஆண்டில் தேர்தல்கள் வந்தபோது, பா.ம.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஜனதா தளம், திவாரி காங்கிரஸ் ஆகிய கட்சிகளை உள்ளடக்கி, தனது தலைமையில் கூட்டணியை உருவாக்க விரும்பினார் வைகோ. ஆனால், கூட்டணியின் பெயர் ம.தி.மு.க. - பா.ம.க. கூட்டணி என இருக்க வேண்டுமென்று கூறியது பா.ம.க. இதனால், அந்தக் கூட்டணி உருவாக முடியவில்லை. முடிவில், ம.தி.மு.க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஜனதாதளம் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்தனர். இந்தக் கூட்டணியின் சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் குடை சின்னத்தில் 24 இடங்களில் போட்டியிட்டது அக்கட்சி. சட்டமன்றத் தேர்தலில் அதே சின்னத்தில் 177 இடங்களில் போட்டியிட்டது அக்கட்சி. சட்டமன்றத் தேர்தலில் 5.7 சதவீதமும் நாடாளுமன்றத் தேர்தலில் 4.5 சதவீதமும் அக்கட்சிக்குக் கிடைத்தன. இந்தத் தருணத்தில் ஒரு நிரந்தரச் சின்னத்திற்காக முயற்சி செய்தது ம.தி.மு.க. பெருந்துறை இடைத் தேர்தலில் ம.தி.மு.க. போட்டியிட்ட பம்பரச் சின்னம் நன்றாக இருக்கிறது, அந்தச் சின்னம் கிடைத்தால் சிறப்பாக இருக்கும் என மு. கண்ணப்பன் தெரிவித்த கருத்தை ஏற்றுக்கொண்டு, அந்தச் சின்னத்தைப் பெற முயற்சிகளை மேற்கொண்டது ம.தி.மு.க. வைகோவும் கே.எஸ். ராதாகிருஷ்ணனும் டெல்லியில் தங்கியிருந்து இந்தச் சின்னத்திற்காக தேர்தல் ஆணையத்தில் தொடர்ந்து பேசி வந்தனர். ஆனால், ம.தி.மு.கவின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டிருந்ததால், ஒரே சின்னத்தை ஒதுக்குவதில் பிரச்னை இருந்தது. இதையடுத்து, ஒரு கட்சி சில தொகுதிகளுக்கு மேல் போட்டியிட்டால், ஒரே சின்னத்தை ஒதுக்கலாம் என ஆணை வெளியிடப்பட்டு, பம்பரம் சின்னம் ம.தி.மு.கவுக்கு ஒதுக்கப்பட்டதாக நினைவுகூர்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். இதற்கு அடுத்து வந்த 1998 நாடாளுமன்றத் தேர்தலிலேயே அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற ம.தி.மு.கவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதில் 3 இடங்களில் வெற்றி பெற்று ஆச்சரியமளித்தது ம.தி.மு.க. இந்தத் தேர்தலில்தான் முதன்முதலில் பம்பரம் சின்னத்தில் போட்டியிட்டது அக்கட்சி. வாக்கு சதவீதம் 6.2ஆக உயர்ந்திருந்தது. மீண்டும் திமுகவுடன் கூட்டணி பட மூலாதாரம்,GETTY IMAGES கடந்த 1998ல் தேர்வுசெய்யப்பட்ட நாடாளுமன்றம் ஓராண்டிலேயே கலைக்கப்பட்டுவிட, 1999இல் மீண்டும் தேர்தலைச் சந்தித்தது இந்தியா. அதற்குள் பல விஷயங்கள் நடந்திருந்தன. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்த அ.தி.மு.க. அதிலிருந்து வெளியேறிவிட, தி.மு.க. உள்ளே வந்தது. எல்லாக் கூட்டங்களிலும் தி.மு.கவையும் வாரிசு அரசியலையும் விமர்சித்து வைகோ பேசி வந்த நிலையில், இப்படி ஒரு கூட்டணி உருவானது. ஆனால், தான் ஏற்கெனவே இருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள்தான் தி.மு.க. வருகிறது என்பதால், பெரிய முரண்பாடு இன்றி கூட்டணி அமைந்தது. இந்த முறையும் 5 இடங்கள். அதே பம்பரச் சின்னம். வாக்கு சதவீதம் குறைந்தாலும் வெற்றி பெற்ற இடங்களின் எண்ணிக்கையில் ஒன்று அதிகரித்தது. கடந்த 2001ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கியபோது தி.மு.கவுக்கும் ம.தி.மு.கவுக்கும் இடையில் பிரச்னைகள் ஏற்பட்டன. தமிழகத்தில் செல்வாக்கில்லாத கட்சியாக இருக்கும் பா.ஜ.கவுக்கு 23 இடங்களை அளிக்கும் நிலையில், எல்லாத் தொகுதிகளிலும் செல்வாக்கு கொண்ட தங்களுக்கு 21 தொகுதிகளை மட்டும் கொடுப்பது சரியல்ல என்றார் வைகோ. இதையடுத்து தனக்கு அளிக்கப்பட்ட 23 தொகுதிகளில் இரண்டைக் குறைத்துக்கொள்ள பா.ஜ.க. முன்வந்தது. ஆனால், தாங்கள் விரும்பிய தொகுதியைத் தரவில்லை என்றார் வைகோ. முடிவில் பா.ஜ.க. போட்டியிடும் தொகுதிகள் தவிர, மற்ற தொகுதிகளில் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்தார் வைகோ. வைகோ எடுத்த மிக மோசமான அரசியல் முடிவுகளில் ஒன்றாக, இந்தத் தேர்தலில் அவர் எடுத்த முடிவை அரசியல் பார்வையாளர்கள் குறிப்பிடுகிறார்கள். காரணம், இந்தத் தேர்தலில் 211 தொகுதிகளில் போட்டியிட்ட ம.தி.மு.க., ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. ஆனால், இதைவிட மோசமான முடிவுகளை எடுக்கக் காத்திருந்தார் வைகோ. பட மூலாதாரம்,வைகோ பொடா சட்டத்தில் கைதுசெய்யப்பட்ட வைகோ மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியதற்காக அவரைப் பொடா சட்டத்தில் கைதுசெய்தது அ.தி.மு.க. அரசு. இது நாடு முழுவதும் சலசலப்பை ஏற்படுத்தியது. பொடா சட்டத்தின் பிரிவுகள் எவ்வளவு கடுமையானவை எனக் காட்டுவதற்கான சின்னமாக உருவெடுத்தார் வைகோ. அவரை விடுவிக்க வேண்டுமென தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் குரல் கொடுத்தன. அதில் தி.மு.கவின் குரலும் இருந்தது. இதையடுத்து இரு கட்சிகளும் மீண்டும் நெருங்க ஆரம்பித்தன. வேலூருக்குச் சென்று வைகோவை நேரில் சென்று சந்தித்து வந்தார் தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி. 2004ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் ம.தி.மு.கவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட வைகோ, சென்னை வரை ஊர்வலமாக வந்து சேரப் பல மணிநேரம் ஆனது. சென்னையில் பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற வைகோ, நான்கு தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தார். கடைசியாக சிவகாசி தொகுதியின் பெயரைச் சொல்லி நிறுத்தியதும், தொண்டர்கள் அனைவரும் 'வைகோ', 'வைகோ' என முழக்கமிட்டனர். ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் அந்தத் தொகுதியில் சிப்பிப்பாறை ரவிச்சந்திரன் என்ற இளைஞர் போட்டியிடுவதாக அறிவித்தார் வைகோ. வைகோ அரசியல் ரீதியாக எடுத்த மிக மோசமான முடிவுகளில் இதுவும் ஒன்றாகப் பார்க்கப்பட்டது. காரணம், இந்தத் தேர்தலில் நான்கு தொகுதிகளிலும் ம.தி.மு.க. வெற்றி பெற்றது. வைகோ தேர்தலில் போட்டியிட்டிருந்தால், அவரும் நாடாளுமன்றம் சென்றிருக்க முடியும். ஆனால், அந்த வாய்ப்பை வேறொருவருக்கு அளித்தார் வைகோ. 2006ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் மறுபடியும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தினார் வைகோ. அ.தி.மு.கவுடனான வைகோவின் கூட்டணி பட மூலாதாரம்,GETTY IMAGES தி.மு.க. கூட்டணியில் 35 இடங்களைக் கோரிய ம.தி.மு.கவுக்கு 22 இடங்களைக் கொடுக்க முன்வந்தது தி.மு.க. இதையடுத்து, திடீரென அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்தார் வைகோ. சில ஆண்டுகளுக்கு முன்பு அவரை பொடா சட்டத்தின் கீழ் தமிழக அரசு சிறையில் அடைத்தபோது மிகக் கடுமையான விமர்சனங்களை ஜெயலலிதா மீது அவர் முன்வைத்திருந்தார். இந்த நிலையில், வைகோவின் முடிவு பலரையும் அதிரவைத்தது. இந்தக் கூட்டணியில் 35 இடங்களில் போட்டியிட்டு வெறும் 6 இடங்களை மட்டுமே அக்கட்சியால் வெல்ல முடிந்தது. 2009 நாடாளுமன்றத் தேர்தலிலும் அ.தி.மு.கவுடனான கூட்டணி தொடர்ந்த நிலையில், ஒரு இடம் மட்டுமே அக்கட்சிக்குக் கிடைத்தது. கடந்த 2011ஆம் ஆண்டு தேர்தல் நெருங்கியபோதும் அ.தி.மு.க. கூட்டணியிலேயே ம.தி.மு.க. இடம்பெற்றிருந்தது. ஆனால், பேச்சு வார்த்தைகள் நடைபெற்றபோது, ம.தி.மு.க. குறைந்தது 21 தொகுதிகளாவது எதிர்பார்த்தது. ஆனால், பேச்சுவார்த்தையை 6 தொகுதிகளில் இருந்து துவங்கியது அ.தி.மு.க. இதனால், கூட்டணியில் இருந்து வெளியேறி, தனித்துப் போட்டியிடத் தயாரானது ம.தி.மு.க. இந்த நிலையில்தான் ஒரு அதிரடியான முடிவை எடுத்தார் வைகோ. 2011ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணிப்பதாக ம.தி.மு.க. அறிவித்தது. ம.தி.மு.க. எடுத்த முடிவுகளிலேயே மிக மோசமான அரசியல் முடிவாக இந்த முடிவே பார்க்கப்படுகிறது. ம.தி.மு.கவின் பின்னடைவுகளுக்குக் காரணம் என்ன? ம.தி.மு.கவின் தொடர் பின்னடைவுகளுக்குக் காரணம், வைகோவின் முடிவுகள்தான் என்கிறார் அக்கட்சியின் ஆரம்ப காலத் தலைவர்களில் ஒருவரான கே.எஸ். ராதாகிருஷ்ணன். "வைகோ ஒரு விஷயத்தை அதைச் செய்ய வேண்டிய காலத்தில் செய்யவில்லை. ம.தி.மு.க. தற்போது அடைந்திருக்கும் பின்னடைவுகளுக்கு இதுவே காரணம்," என்று கூறும் கே.எஸ். ராதாகிருஷ்ணன், கூட்டணி தொடர்பாக அவர் எடுத்த மூன்று முடிவுகள் மிக மோசமாக இருந்ததாகச் சுட்டிக்காட்டுகிறார். கடந்த 2001ஆம் ஆண்டில், தி.மு.க. கூட்டணியிலேயே தொடர்ந்திருந்தால் சில இடங்களைப் பெற்றிருக்கக்கூடிய நிலையில், தனித்துப் போட்டியிட்டு எல்லாத் தொகுதிகளிலும் தோல்வியடைந்து, கட்சி பலவீனமாக இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தினார் வைகோ என்கிறார் ராதாகிருஷ்ணன். அடுத்ததாக 2006ஆம் ஆண்டு தேர்தலில், தி.மு.க. கூட்டணியில் இருந்து திடீரென அ.தி.மு.க. கூட்டணிக்கு மாறியது கட்சி மேலிருந்த நம்பகத் தன்மையை உடைத்தது என்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். "அப்போது திருச்சியில் மிகப் பெரிய தி.மு.க. மாநாடு நடந்தது. அதில் வைகோவின் கட்-அவுட்டும் வைக்கப்பட்டிருந்தது. அந்த மாநாட்டிற்கு வருவதாகச் சொன்ன வைகோ, திடீரென ஜெயலலிதாவை சந்தித்தார். அன்றைய தினமே கூட்டணி அறிவிக்கப்பட்டது. எப்படி ஒரு சந்திப்பில் கூட்டணி, இடங்கள் ஆகியவை முடிவாகும்? ஆகவே, முன்பே பேச்சுவார்த்தைகள் நடந்திருக்க வேண்டும் எனப் பலரும் கருதினர். இது அக்கட்சியின் மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கியது," என்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். வைகோ 2006இல் சரியான முடிவெடுத்திருந்தால் ம.தி.மு.க. அந்தத் தேர்தலில் சுமார் 15 இடங்களைப் பெற்றிருக்கும். கட்சி வலுவடைந்திருக்கும் என்கிறார் மூத்த பத்திரிகையாளரான குபேந்திரன். "வைகோ எப்போதுமே சரியான நேரத்தில் தவறான முடிவுகளை எடுப்பார் என்பதற்கு அந்தத் தேர்தல் உதாரணமாகிவிட்டது. அப்போது ஆரம்பித்த தவறு, சமீபகாலம் வரை தொடர்ந்தது. இதன் உச்சகட்டமாக 2011இல் தேர்தலையே புறக்கணிக்க வேண்டிய நிலை வந்தது," என்கிறார் குபேந்திரன். தி.மு.கவில் இருந்து வைகோ வெளியேறியபோது நொச்சிப்பட்டு தண்டபாணி, பாலன், இடிமழை உதயன், வீரப்பன், ஜஹாங்கீர் உள்ளிட்ட ஆறு பேர் தீக்குளித்தனர். ஆனால், வைகோ எடுத்த தவறான முடிவுகளால் அவர்கள் தியாகம் முழுவதும் வீணாகிவிட்டது என்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். தற்போது வைகோ உடல்ரீதியாக தளர்ந்திருக்கும் நிலையில், அவரது மகன் துரை வைகோ கட்சியை முன்னெடுத்துச் செல்கிறார். அவர் எடுக்கவிருக்கும் முக்கிய முடிவுகளே இனி கட்சியின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதாக அமையும். ம.தி.மு.க தொடர் பின்னடைவுகளை சந்திப்பது ஏன்? வைகோ எடுத்த முடிவுகள் எப்படி பாதித்தன? - BBC News தமிழ்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.