Jump to content

ஜெ. மீதான சொத்துக்குவிப்பு வழக்கு - ஜெ., ஜாமின் வழக்கில் ஆஜராவேன் : சுப்பிரமணியன் சாமி அறிவிப்பு


Recommended Posts

ஜெ.,வின் 2வது நாள் சிறைவாசம்: காலை 5:30க்கு நடைபயிற்சி; 7:30க்கு டிபன்

 

பெங்களூரு:சொத்து குவிப்பு வழக்கில், சிறைத் தண்டனை பெற்ற ஜெயலலிதா, நேற்று இரண்டாவது நாளை சிறையில் கழித்தார்.

 
பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில், பெண்கள் பிரிவில் அடைக்கப்பட்டுள்ள அவருக்கு, கைதிக்குரிய எண்ணாக, 7,402 வழங்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு, சிறை அதிகாரிகள், அவருக்கு, சப்பாத்தி, குருமா வழங்கியும், அதை சாப்பிட மறுத்து, பழங்களையே சாப்பிட்டார். வெளியிலிருந்து உணவு கொண்டு வர சிறை நிர்வாகம் அனுமதிக்கவில்லை. அதேநேரத்தில், தலையணை மற்றும் பெட்ஷீட்கள் வழங்கப்பட்டன.அதிகாலை, 5:30 மணிக்கு எழுந்த அவர், சிறை வளாகத்திலேயே நடைபயிற்சி மேற்கொண்டார். பின், அவருக்கு, சிறை ஊழியர் வீரப்ப பெருமாள் என்பவர், மூன்று இட்லி, சாம்பார், சட்னி அடங்கிய உணவுப் பொட்டலத்தை கொடுத்தார்.காலை, 7:30 மணிக்கு அதை சாப்பிட்ட ஜெயலலிதாவுக்கு, மூன்று தமிழ் நாளிதழ்களும், இரண்டு ஆங்கில நாளிதழ்களும் வழங்கப்பட்டன. காலை, 8:00 மணிக்கு, ஒரு டம்ளர் பால் வழங்கப்பட்டது.சிறையில் பெண்கள் பிரிவில், வி.வி.ஐ.பி.,க்களுக்கான அறையான, 23ல் அவர் அடைக்கப்பட்டுள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை.
சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரனுக்கு, 7,403, 7,404, 7,405 என்ற கைதி எண்கள் வழங்கப்பட்டுள்ளன. கர்நாடக முன்னாள் அமைச்சரான ஜனார்த்தன ரெட்டிக்கு அடுத்த அறையில், சுதாகரன் அடைக்கப்பட்டுள்ளார்.
 
 
சென்னையில் இருந்து உடை
 
 
பரப்பன அக்ரஹார சிறையில் கைதிகளுக்கு, அதிகாலை, 4:00 மணிக்கு, காபி வழங்கப்படும். காலை, 6:00 மணிக்கு அவர்களை, படுக்கையிலிருந்து சிறை ஊழியர்கள் எழுப்பி விடுவர். பின், 7:00 மணியளவில், உப்புமா, புளியோதரை, எலுமிச்சை சாதம், அவல், தக்காளி சாதம் போன்றவை வழங்கப்படும். மதியம், 11:00 மணியளவில், ஒன்றரை பிளேட் சாதம், ஒரு களி உருண்டை, பச்சை பயறு அல்லது சுண்டல் என, ஏதாவது ஒரு சிறு தானிய குழம்பு; மாலை, 6:30 மணியளவில், ஒரு களி உருண்டை, சோறு, பச்சை பயறு குழம்பு அல்லது சாம்பார் வழங்கப்படும்.இரவு, 8:30 மணியளவில், தேவைப்பட்டால் சாப்பாடு மீண்டும் வழங்கப்படும். இவை அனைத்தும் கைதிகளுக்கு சுடச்சுடவே வழங்கப்படும். 
 
இது தவிர, சிறையில் உள்ள உணவு கேன்டீனில், காலையில், இட்லி, வடை, பூரி, சப்பாத்தி வழங்கப்படும். ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வகை உணவு தயாரிக்கப்படும்.வடை, 10 ரூபாய்; மற்ற உணவு வகை, 20 ரூபாய். ஆம்லேட் தேவைப்பட்டால் வழங்கப்படும்.
 
வெளியிலிருந்து சாப்பாடு:இதுமட்டுமின்றி, பழ வகைகள், பேக்கரி அயிட்டங்கள் தனியாக விற்பனை செய்யப்படுகின்றன. இவை கைதிகள் தங்கியுள்ள, அறைக்கே கொண்டு வந்து, சிறை ஊழியர்கள் வழங்குவர். இதற்காக, 'தனியாக' பணம் கொடுக்க வேண்டும்.ஜெயலலிதாவுக்கு, நேற்று மதியம் வெளியிலிருந்து சாப்பாடு கொண்டு வரப்பட்டது. இந்த சாப்பாடு, நீண்ட நேரம் சூடாக இருக்கும் வகையில் நன்றாக 'பேக்' செய்யப்பட்டுள்ளது. 20 சாப்பாடு டப்பாக்கள் கொண்டு செல்லப்பட்டன.சென்னையில் இருந்து ஜெயலலிதாவின் உடைகள், சிறப்பு வாகனம் மூலம், சிறைக்கு கொண்டு வரப்பட்டன. ஜெயலலிதா வந்த கார், சிறை வளாகத்தில் ஒரு ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. அதிலிருந்த தேசிய கொடி அகற்றப்பட்டு விட்டது. சசிகலாவை, அவரது சகோதரி மகன் டாக்டர் வெங்கடேஷ், நேற்று முன்தினம் மாலை சந்தித்துள்ளார். உடல்நிலை சரியில்லை என, நேற்று முன்தினம் இரவு, சுதாகரன் கூறியதால், அவருக்கு சிறையிலுள்ள மருத்துவமனையில், குளுக்கோஸ் ஏற்றப்பட்டது.
 

 

Link to comment
Share on other sites

  • Replies 118
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஜெயலலிதாவிற்கு வழங்கப்பட்ட தீர்ப்பு எமது விடுதலை சார்ந்து நல்ல அறிகுறி அல்ல

ஜெயலலிதாவிற்கு வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து ஈழத்தமிழர்கள் கொண்டாட எதுவுமேயில்லை. மாறாக இந்த தீர்ப்பினூடாக பிராந்திய அரசியலில் எமது விடுதலைக்கு எதிரான ஒரு “செக்” வைக்கப்பட்டுள்ளதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஜெயலலிதா எமக்கான நிரந்தர நேச சக்தி கிடையாது. அவரது ஆரம்ப கால நவடிக்கைகளை பார்த்தாலே அது புரியும்.

அத்தகைய ஒருத்தரை எமது தொடர் போராட்டங்களினூடாக எமக்குச் சார்பாகத் திருப்பியது சமகால வரலாறு.

தமிழக மக்களின் ஒட்டுமொத்த எண்ணப்பிரதிபலிப்பாய், தமிழீழ பொதுவாக்கெடுப்புக்கு தீர்மானம் நிறைவேற்றியது தொடக்கம் அவரது சமகால பங்களிப்புக்களை நிறையவே சொல்லலாம். இது எம்மீதான அக்கறையின்பாற்பட்;டதல்ல என்றபோதும் சமகால அரசியல் களம் என்பது இத்தகைய நலன் சார்ந்த பின்புலத்தில்தான் கட்டியெழுப்பப்படுகிறது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். தமிழீழம் சார்ந்து டெல்லிக்கு அச்சுறுத்தலாக இருந்த ஒருத்தரை நாம் இழப்பது எமது விடுதலை சார்ந்து நல்ல அறிகுறி அல்ல.

அதுவும் சிங்களத்திற்கு எதிராக அனைத்துலக விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டிருக்கும் இந்த நேரத்தில் தமிழக அழுத்தத்தின் மைய அச்சாக இருந்த அவரை நாம் இழந்தது இராஜதந்திர ஆட்டத்தின் போக்கையே திசைமாற்றும் அபாயம் நிறைந்தது.

தமிழர்களுக்கு எதிரான டெல்லியின் ஒரு நிகழ்ச்சி நிரலாகவே இதைப்பார்க்க வேண்டியிருக்கிறது.

ஜெயலலிதா தமிழீழ விடயத்தில் மட்டுமல்ல அண்மைக்காலமாக மீனவர் பிரச்சினை, மூவர் தூக்கு தண்டனையை ரத்து செய்தமை என்று தமிழகம் சார்ந்துகூட மிகத் தீவிரமாக இருந்தது இந்திய கொள்கை வகுப்பாளர்களுக்கு ஏகத்திற்கும் எரிச்சலை ஊட்டிய விடயமாகும்.

நீதித்துறைக்கும் அரச எந்திரத்திற்கும் எந்த தொடர்புமில்லை என்பது வாதத்திற்கு சரியாக இருக்கலாம், ஆனால் இந்தியா போன்ற தேசங்களில் இத்தகைய “தீர்ப்பு” களின் பின்னணயில் அரசியல் மறைந்திருப்பதையும் நாம் அறிவோம்.

ஒரு வேளை மோடி அரசு ஜெயலலிதாவின் ஆதரவுடன் டெல்லியில் ஆட்சி அமைத்திருந்தால், இந்த தீர்ப்பு இப்படியா அமைந்திருக்கும் என்பதை உங்கள் சிந்தனைக்கே விட்டுவிடுகிறோம்.

ஜெயலலிதா தமிழர் நலன் சார்ந்த கோசங்களுடன் ஒரு பிரதமர் வேட்பாளராக கடந்த தேர்தலில் உருவெடுத்தது தமிழர் நலனுக்கு எதிரான கொள்கையுடயை இந்திய கொள்கை வகுப்பாளர்களை கலக்கப்படுத்தியதன் விளைவே இந்த கடுமையான “தண்டனைக்கு” ஜெயலலிதாவை உட்படுத்தியுள்ளது என்றே கூற வேண்டும்.

ஜெயலலிதா சிறையில் இருக்கும் போது அவர் புராணம் பாடியபடி மீதிக்காலத்தை ஆளப் போகும் “பொம்மை அரசு” தமிழீழ விடுதலை சார்ந்து என்ன தீர்மானத்தை நிறைவேற்ற முடியும?

ஒரு வேளை இந்த இக்கட்டின் காரணமாக ஆட்சி மாறினாலும் இன்னொரு பெரும் சக்தியான திமுக வென்று என்னத்தை கிழிக்கப்போகிறது? எமக்கு கடைசியாக எஞ்சியுள்ள கோவணத்தையும் உருவிவிட்டுத்தான் கருணாநிதி மரணத்தை தழுவுவார்.

இந்த இரண்டு கட்சிகளுக்கும் மாற்று என்று நாம் நம்பும் மூன்றாவது அணி ஒன்று உருவாகும் என்று நாம கடந்த காலங்களில் பார்த்து ஏமாந்ததுதான் மிச்சம்.

இனஅழிப்புக்கு வெள்ளையடிக்கும் சிங்கள லொபியை காவும் ஒரு வியாபார நிறுவனமான “லைகா” எதிர்ப்பிலேயே ஒற்றுமை காணமுடியாத தமிழ்த்தேசிய சக்திகள் எப்படி மூன்றாவது அணியாக ஒரு மாற்று அரசியலை செய்வார்கள் என்று நாம் எதிர்பார்க்க முடியும்?

எனவே இந்த இக்கட்டான நேரத்தில் தமிழர்கள் ஜெயலலிதா என்ற துருப்பு சீ;ட்டை இழந்து நிற்பதுதான் உண்மை.

எல்லாவற்றையும் கடந்து வந்த நாம் இதையும் கடந்து போவோம். “தோல்வியைக்கூட எமக்கு சாதகமாக்கு” என்பது தேசியத்தலைவர் வாக்கு.

எனவே இந்த இடைவெளியை தமிழகத்திலுள்ள தமிழ்த்தேசிய சக்திகள் ஒன்றிணைந்து எதிர் கொண்டு நிரப்பினால் தமிழீழம் மட்டுமில்லை தமிழகம்கூட ஒரு பெரிய மாற்றத்தை நிகழ்த்தும்.

ஈழம்ஈநியூஸ்.

இதில் நிறைய உண்மை இருக்கிறது. சமீப காலமாக எமக்கு ஆதரவாக குரல் கொடுத்த ஒரு தலைவியின் வாய்க்கு பூட்டு போட்டுளார்கள். இதில் எழும் கேள்விகள் பல. இந்தியா 87ம் ஆண்டு மாதிரி ஒரு தன நலன் சார்ந்து இலங்கை தமிழர் பிரச்சனயில் மீண்டும் மூக்கை நுழைக்க போகிறதா? சர்வதேச விசாரணையின் தீவிரத்தை குறைக்க முற்படுகின்றதா?

Link to comment
Share on other sites

ஜெயலலிதாவை முன்பும் ஒருமுறை சிறையில் போட்டுள்ளார்கள். அப்போது ஈழவிடுதலைப் போருக்கு எதிராக இருந்தார். அதனால் ஈழ ஆதரவு சக்திகள் அவரை உள்ளே தூக்கிப் போட்டார்கள் என்று எழுதுவதா? :D

இது பதினெட்டு வருடமாக இவர் இழுத்தடித்து வந்தது. இப்போது சுருக்கில் மாட்டிக்கொண்டார். கலைஞர் குடும்பத்துக்கும் இதுவே நடக்க வாய்ப்பு உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

------

பரப்பன அக்ரஹார சிறையில் கைதிகளுக்கு, அதிகாலை, 4:00 மணிக்கு, காபி வழங்கப்படும். காலை, 6:00 மணிக்கு அவர்களை, படுக்கையிலிருந்து சிறை ஊழியர்கள் எழுப்பி விடுவர். பின், 7:00 மணியளவில், உப்புமா, புளியோதரை, எலுமிச்சை சாதம், அவல், தக்காளி சாதம் போன்றவை வழங்கப்படும். மதியம், 11:00 மணியளவில், ஒன்றரை பிளேட் சாதம், ஒரு களி உருண்டை, பச்சை பயறு அல்லது சுண்டல் என, ஏதாவது ஒரு சிறு தானிய குழம்பு; மாலை, 6:30 மணியளவில், ஒரு களி உருண்டை, சோறு, பச்சை பயறு குழம்பு அல்லது சாம்பார் வழங்கப்படும்.இரவு, 8:30 மணியளவில், தேவைப்பட்டால் சாப்பாடு மீண்டும் வழங்கப்படும். இவை அனைத்தும் கைதிகளுக்கு சுடச்சுடவே வழங்கப்படும். 

-----

 

அடப் பாவிங்களா... விடிய கொஞ்சமாவது மனுசரை நித்திரை கொள்ள விடுங்கப்பா....

விடிய நாலு மணிக்கு எழுப்பி காப்பி கொடுக்காதீங்க :lol: .

சிறையில், நாள் முழுக்க சாப்பிட்டுக் கொண்டே இருக்கலாம் போலை இருக்கு.

சாப்பாட்டு... அயிட்டங்களும் நல்லாய் இருக்கு. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடப் பாவிங்களா... விடிய கொஞ்சமாவது மனுசரை நித்திரை கொள்ள விடுங்கப்பா....

விடிய நாலு மணிக்கு எழுப்பி காப்பி கொடுக்காதீங்க :lol:

சிறையில், நாள் முழுக்க சாப்பிட்டுக் கொண்டே இருக்கலாம் போலை இருக்கு.

சாப்பாட்டு... அயிட்டங்களும் நல்லாய் இருக்கு. :D

போக விருப்பமா:lol: போய் கொஞ்ச நாள் ஜெய்க்கு துணையாக இருந்திட்டு வாங்கோ:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழ தமிழர் வலிகளில் குளிர் காந்தவர்களில் இவரும் ஒருவர். அப்பாவி மக்களின் உயிரை மதியாது ஆணவ போக்கில் திமிராக நடந்து கொண்டதன் விளைவு தான் இது. ஆனால் விடுதலை பயணத்தில் இப்ப ஜெயாவின் உதவி தேவை. இவ எப்பவும் எங்களுக்கு எதிராக மாறலாம். MGR எப்படி பணம் சம்பாதித்தார், எப்படி ஆட்சி செய்தார் என்பது எங்கள் கேள்வியல்ல ...காலத்தை உணர்ந்து எங்களுக்கு எப்படி உதவினார் என்பதுதான் முக்கியம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போக விருப்பமா :lol: போய் கொஞ்ச நாள் ஜெய்க்கு துணையாக இருந்திட்டு வாங்கோ :D

கனிமொழி அக்கா என்றால் ஆவது போய்  ஒத்தாசையா இருக்கலாம்.
இந்த அம்மாவோடு போய் இருந்து என்ன செய்வது ? பின்பு பிதா மகன் ஆக்கிவிடுவார்.  
Link to comment
Share on other sites

நட்புக்கு மிகப்பெரிய விலை கொடுத்தாரா ஜெயலலிதா?

 

jayalalithaa_new_2131442f.jpg

 

மன்னார்குடியில் வந்த குடும்பத்தினருடனான அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் நட்பு ஒரு நாள் அவரது அரசியல் வாழ்வை முடக்கும் என்ற அவரது அரசியல் விசுவாசிகள் பலரது கணிப்பை உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளது சனிக்கிழமை வெளியான தீர்ப்பு.

1991-96 காலகட்டத்தில் ஜெயலலிதா தமிழக முதல்வராக இருந்தபோது நடந்த சம்பங்கள் குறித்து நன்கு அறிந்தவர்களின் குற்றச்சாட்டு சசிகலா அந்தக் காலகட்டத்தில் அரசியல் சாசனத்திற்கு அப்பாற்பட்டு அதிகாரங்களை கையில் வைத்திருத்தார் என்பதாகவே இருக்கும். சசிகலாவும் அவரது சகாக்களும் தமிழகம் முழுவதும் இடங்களை வாங்கிக் குவிப்பதில் மும்முரமாக இருந்தனர்.

1980-களில் அதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்தார் ஜெயலலிதா. அப்போது இருந்தே ஜெயலலிதாவும்-சசிகலாவும் நல்ல நட்புறவில் இருக்கின்றனர். கட்சிக் கூட்டங்கள், பொதுக் கூட்டங்கள், தேர்தல் பிரச்சாரங்கள் என ஜெயலலிதா எங்கு சென்றாலும் அவருடன் சசிகலாவும் இருப்பார்.

ஜெயலலிதாவின் வீட்டிலேயே சசிகலா தங்க ஆரம்பித்தார். சசிகலா தவிர அவரது குடும்பத்தைச் சேர்ந்த 8 பேரும் அவருடன் ஜெயலலிதாவின் வீட்டில் தங்கினர். சசிகலாவின் உறவினர்களில் ஒருவரான பாஸ்கரன் தொலைக்காட்சி ஒன்றை நிர்வகித்து வந்தார். மற்றொரு உறவினர் வி.என்.சுதாகரன் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் ஆனார்.

1995 செப்டம்பரில் நடைபெற்ற சுதாகரனின் பிரம்மாண்ட திருமண நிகழ்ச்சி ஊடகங்களில் வெளியானதே, பொதுமக்கள் மத்தியில் எதிர்ப்பு அலைகளை ஏற்படுத்தியது. அந்த எதிர்ப்பின் பலன் தேர்தலில் எதிரொலித்தது. மக்களவைத் தேர்தலில் அதிமுக 39 தொகுதிகளிலும் தோல்வியடைந்தது. 1996 பொதுத் தேர்தலில் 4 சட்டமன்ற தொகுதிகளில் மட்டுமே அதிமுக வெற்றி கண்டது.

சிறிய பிரிவு:

தேர்தல் பின்னடைவுக்குப் பின்னர், சசிகலா, மற்றும் அவரது குடும்பத்தினருடனான நட்புறவை துண்டித்துக் கொள்வதாக ஜெயலலிதா அறிவித்தார். வளர்ப்பு மகனையும் கைவிட்டார். வாழ்நாள் முழுவது நகைகள் அணியப்போவதில்லை என சூளுரைத்தார்.

சசிகலாவின் நடவடிக்கைகளுக்கு அமலாக்கப் பிரிவு முதலில் செக் வைத்தது. தொலைக்காட்சி சேனலுக்கு டிரான்ஸ்பாண்டர்கள் வாங்கியதில் அந்நிய செலாவணி விதிமுறைகளை மீறியதாக பாஸ்கரன் கைது செய்யப்பட்டார். 1996 ஜூன் மாதம் சசிகலாவும் அந்நியச் செலவாணி சட்ட விரோத பயன்பாடு, கடத்தல் தடுப்புச் (COFEPOSA) சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து டி.டி.வி.தினகரனும் கைதானார்.

ஆனால், சசிகலா விடுதலையான பின்னர், மீண்டும் மலர்ந்தது ஜெயலலிதா - சசிகலா நட்பு. ஆனால், அரசு பி.ஆர்.ஓ.வாக இருந்த சசிகலாவின் கணவர் எம்.நடராஜன் எப்போதுமே ஜெயலலிதாவின் நல் அபிப்ராயத்தைப் பெறவில்லை. அவர் அதிகாரத்தைக் கைப்பற்ற முயற்சிப்பதாக ஜெயலலிதா சந்தேகித்தார்.

இதனால், டிசம்பர் 2011-ல் சசிகலா குடும்பத்தினர் சசிகலா குடும்பத்தினரை நட்வு வளையத்தில் இருந்து மீண்டும் வெளியேற்றினார் ஜெயலலிதா. அதிமுகவை கையகப்படுத்த நடராஜனும், மற்றவர்களும் கூட்டுச் சதியில் ஈடுபடுவதாகக் கருதி ஜெயலலிதா இந்த நடவடிக்கையை மேற்கொண்டார்.

ஜெயலலிதாவின் நடவடிக்கை கட்சித் தொண்டர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மன்னார்குடி குடும்பத்தினருடனான நட்பே ஜெயலலிதாவுக்கு கேடு விளைவித்ததாக கட்சியினர் நம்பினர். ஆனால், அதிமுக தொண்டர்கள் மகிழ்ச்சி 100 நாட்கள் மட்டுமே நீடித்தது. சசிகலா, தன்னை மன்னித்து ஏற்றுக் கொள்ளுமாறு விடுத்த கோரிக்கைக்கு பணிந்தார் ஜெயலலிதா.

1990-களில் சசிகலாவும் அவரது கூட்டாளிகளும் துவங்கிய தொழில்நிறுவனங்கள் மூலம் கிடைத்த சொத்தே பின்னாளில் ஜெயலலிதாவை நீதிமன்றங்களில் நிறுத்தியது. சட்ட விரோதமாக சம்பாதிக்கப்பட்ட பணத்தை இந்த நிறுவனங்களே வருவாய் என திரித்துக் கூறின என்பது தற்போது நிரூபிக்கப்பட்டுள்ளது.

தமிழில்: பாரதி ஆனந்த்

 

http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE/article6457405.ece?widget-art=four-rel

 

Link to comment
Share on other sites

விஐபி கவனிப்பை மறுத்த ஜெயலலிதா'- சிறை அதிகாரிகளை வியக்கவைத்த அணுகுமுறை

 

newPic_4153_jpg_2137764f.jpg

ஜெயலலிதா| கோப்புப் படம்.

சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா.

சிறையில் ஜெயலலிதா தனக்கென சொகுசு வசதிகள் ஏற்படுத்தித் தருமாறு எவ்வித நிபந்தனையும் வைக்கவில்லை என சிறைச்சாலையின் மூத்த அதிகாரி ஒருவர் ஜெயலலிதாவின் வியக்கவைத்த அணுகுமுறை குறித்து தெரிவித்துள்ளார்.

கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி ஜெய்சிம்ஹா செய்தியாளர்களிடம் கூறியதாவது: "மேடம் ஜெயலலிதா எவ்வித வி.ஐ.பி வசதியும் கோரவில்லை. பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள மற்ற கைதிகளைப் போலவே அவரும் நடத்தப்படுகிறார்.

சிறைக்காவலர்கள், அதிகாரிகளிடம் அவர் மிகவும் நாகரிகமாக நடந்து கொள்கிறார். மருத்துவர்கள் அறிவுறுத்தியதால் இரும்புக் கட்டில் வேண்டும் என கேட்டார். அது மட்டுமே அவர் முன்வைத்த கோரிக்கை. தொலைக்காட்சி வசதிகூட அவர் கேட்கவில்லை.

ஜெயலலிதா கடுங்காவல் தண்டனை பெற்றவர் இல்லை என்பதால் அவர் விருப்பப்படியே அவரது உடைகளையே அணிய அனுமதிக்கப்பட்டுள்ளது. எனவே மகிழ்ச்சியுடன் அவர் சேலை உடுத்தியிருக்கிறார். மற்ற எந்த ஒப்பனைகளையும் அவர் செய்து கொள்ளவில்லை.

ஜெயலலிதாவுடன் சிறையில் அடைக்கப்பட்ட சசிகலா, இளவரசி ஆகியோரும் அடுத்தடுத்த அறைகளிலேயே இருப்பதால் அவர்கள் இருவரும் ஜெயலலிதாவை கவனித்துக் கொள்கின்றனர்.

உணவு முறையை பொருத்தவரை அவர் பால், பிஸ்கெட், பிரவுன் பிரெட், சப்பாத்தி போன்றவற்றையே உட்கொள்கிறார். செய்தித்தாள்களை வாசிக்கிறார். தவறாமல் மூன்று ஆங்கில நாளிதழ்களை தினமும் அவர் வாசிக்கிறார். நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறார்" என்றார்.

 

http://tamil.thehindu.com/india/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%90%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/article6468653.ece?homepage=true

 

Link to comment
Share on other sites

 

தாக்குதல் அச்சம்: சுப்பிரமணியன் சுவாமி வீட்டிற்கு கூடுதல் பாதுகாப்பு

 

newPic_1768_jpg_2129093h.jpg

சுப்பிரமணியன் சுவாமி| கோப்புப் படம்.

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் அவர் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதையடுத்து பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமியின் சென்னை, மதுரை வீடுகளின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதனையடுத்து கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டது.

தீர்ப்பு வெளியானவுடன் மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளிலும், சுப்பிரமணியன் சுவாமியின் உருவபொம்மை, உருவப்படங்களி எரித்து அதிமுகவினர் போரட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை சாந்தோம் பகுதியில் உள்ள சுப்பிரமணியன் சுவாமி வீட்டின் மீதும், மதுரையில் உள்ள அவரது வீட்டின் மீதும் கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதனையடுத்து கூடுதல் போலீஸார் அங்கு குவிக்கப்பட்டனர்.

கடந்த 1991-96 காலக்கட்டத்தில் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா தனது வருமானத்திற்கு அதிகமாக ரூ.66 கோடியே 65 லட்சத்து 20 ஆயிரத்து 395.59 சொத்து குவித்ததாக அப்போதைய ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கடந்த 14-6-1996 அன்று சென்னை மாநகர‌ அமர்வு நீதிமன்றத்தில் புகார் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/article6452772.ece?widget-art=four-rel

 

 

1016130_559793384121405_8858850696759384

 

 

Link to comment
Share on other sites

ஏன்? யாரையும் சந்திக்க ஜெயலலிதா மறுப்பது ஏன்? பெங்களூரு சிறை நேரடி காட்சிகள்
 
பெங்களூரு நகரில், ஒரு ஓரமாய் ஒதுங்கிக்கிடக்கிறது பரப்பன அக்ரஹார மத்திய சிறைச்சாலை. ஓசூர் போகும் சாலையில், எலக்ட்ரானிக் சிட்டிக்கு பக்கத்தில், ஐந்து கிலோ மீட்டர் உள்வாங்கி, நகரத்தின் நிழல் இன்னமும் சரியாக படாத கிராமிய சுழலில் அமைந்துள்ளது இந்த பகுதி.
 
கை காட்டுகின்றனர்:
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிறைக்குள் போகும் வரை, பலருக்கு இதன் விலாசத்தை சரிவர சொல்லத் தெரியவில்லை. ஆனால், இப்போது 'டிஎன்' என்ற தமிழ்நாடு பதிவு எண் கொண்ட வாகனத்தை பார்த்தாலே, எல்லாரும் எளிதாக இந்த சிறைப்பகுதியை கைகாட்டி விடுகின்றனர். சிறைக்கு போகும் பாதைக்கு ஒரு கிலோமீட்டர் தூரம் முன்பாகவே, போலீசார் தடுப்பு போட்டு, பாதுகாப்பு பணியை மேற்கொண்டுள்ளனர். இதைத்தாண்டி தமிழக அமைச்சர்கள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள், மேயர்கள் உள்ளிட்டோர், 
 
தங்களது அடையாள அட்டையை காண்பித்து உள்ளே போய் வருகின்றனர். அப்படிப்போக முடியாதவர்கள், தடுப்புக்கு அந்த பக்கம் நின்று கொண்டு, 'தெரிந்தவர்கள் யாராவது வருகிறார்களா?' என்று வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கின்றனர்.
 
என்ன நடக்கிறது? கடந்த ஐந்து நாட்களாக ஜெயலலிதாவை பார்க்க சென்றவர்கள்; யார், யார் பார்த்தார்கள்; சிறையின் உள்ளே என்ன நடக்கிறது என்பது அதிகாரபூர்வமாக தெரியாத நிலையில், ஊடகங்கள் தங்கள் யூகத்திற்கு ஏற்ப எழுதினர். ஆறாவது நாள், சிறை டி.ஐ.ஜி., வந்தார்; ஊடகங்களை அழைத்தார்; சில விஷயங்களை சொன்னார். அவர் சொன்னதில் இருந்து, ''ஜெயலலிதா உள்ளே போன நாள் முதல் இன்று வரை யாரையும் பார்க்கவில்லை; பார்க்கக்கூடாது என்பது இல்லை; ஆனால், பார்க்கவில்லை. இதற்கு, விருப்பம் இல்லாதது ஒரு காரணமாக இருக்கலாம் அல்லதுஅவர் தங்கியிருக்கும் செல்லில் இருந்து, அரை கிலோ மீட்டர் தூரம் நடந்து வர சிரமமாக இருக்கலாம். அடுத்ததாக, சிறையில் அவர் தங்கியிருக்கும் அறையில் ஒரு மின்விசிறி மட்டுமே உள்ளது. அவரது மருத்துவர்களின் ஆலோசனைபடி, ஒரு கட்டில் மட்டுமே கூடுதலாக கொடுக்கப்பட்டுள்ளது. உணவைப் பொறுத்தவரை மற்ற சிறைக் கைதிகளுக்கான உணவுதான் வழங்கப்படுகிறது. அவர் நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்றவைகளால் பாதிக்கப்பட்டிருப்பதால், மருத்துவர்களின் ஆலோசனைபடி கூடுதலாக சில உணவுகள் வழங்கப்படுகின்றன. சிறைத்துறை சட்டப்படி பார்வையாளர் நேரம், வேலைநாட்களில் காலை
 
10:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை மட்டுமே. இவ்வாறு, அவர் கூறினார்.
 
ஆர்ப்பாட்டம்:
ஆக, ஐந்து நாட்களாக போய்வந்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள், சிறைக்கு எதிரே உள்ள 'ஷாமியானா' பந்தலில், சும்மா உட்கார்ந்திருந்து விட்டு வந்தனர் என்பது தெரிந்தது. உள்ளே அனுமதி இல்லை என்று அவர்களுக்கு தெரியும்; ஆனால், தமிழகத்தில் இருந்தால், பார்ப்பவர்களுக்கும் விசாரிக்கிறவர்கள் அனைவருக்கும் பதில் சொல்ல வேண்டிவரும். மாறாக, இப்படி சிறை எதிரே காத்திருந்துவிட்டு வருவது எளிதாக இருந்திருக்கலாம். 
 
தொண்டர்கள் சென்னை, சேலம், கிருஷ்ணகிரி பகுதியில் இருந்து கிடைத்த வாகனங்களில் வருவதும், கறுப்பு சட்டை அணிவதும், மொட்டை போடுவதும், சாலையில் விழுந்து புரள்வதும், கோஷமிட்டு, ஆர்ப்பாட்டம் செய்து, கர்நாடக போலீசிடம் அடிவாங்குவதும், அழுது அரற்றுவதுமாக இருக்கின்றனர். முடிவு எதுவாக இருந்தாலும், இனி 7ம் தேதிக்கு பின்தான் என்பது தெரிந்த பின், இப்போது சிறைவாசல், வெகு சில போலீசுடன் வெறிச்சோடிப்போய் கிடக்கிறது. இப்போது உள்ள கேள்வி எல்லாம், 7ம் தேதி என்ன நடக்கும்? என்பதுதான்.
- நமது நிருபர் -
 

 

Link to comment
Share on other sites

சசிகலாவுடன் ஜெயலலிதா பேசுவதில்லை: பாதுகாப்பு அதிகாரி ககன் தீப் பேட்டி

 

sasi_2140032f.jpg

கோப்புப் படம்: ம.பிரபு

பெங்களூர் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலையும் மாலையும் மைசூர் சாமூண்டீஸ்வரியை வணங்குவதாகவும், சசிகலா உள்ளிட்ட யாருடனும் அவர் பேசுவதில்லை எனவும் அவரது பாதுகாப்பு அதிகாரி ககன் தீப் கூறியுள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா கடந்த 27-ம் தேதி பரப்பன அக்ரஹாரா மத்திய‌ சிறையில் அடைக்கப்பட்டார். அவரது உடல்நிலை குறித்தும், அடுத்தக்கட்ட அரசியல் நடவடிக்கைகள் குறித்தும் ஊடகங்களில் பல்வேறு செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் ஜெயலலிதாவின் சிறப்பு பாதுகாப்பு அதிகாரி ககன் தீப்பை சந்தித்து பேசினோம். அவர் கூறியதாவது:

ஜெயலலிதா மிகவும் நலமுடன் இருக்கிறார். அவருடைய பாதுகாப்பு அதிகாரி என்ற முறையில் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தருகிறேன். தினமும் 3 முறை அவரது உடல்நிலையை பரிசோதித்து தேவையான மருந்து மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. அதேபோல சிறை மருத்துவர் விஜய குமாரும் அவரது குடும்ப மருத்துவர் சாந்தராமனும் பரிந்துரைக்கும் உணவுகள் வழங்கப்படுகின்றன.

சிறைக்கு வந்த சில நாட்கள் ஜெயலலிதா காலையில் நடைபயிற்சி மேற்கொண்டார். ஆனால் இப்போது அவர் நடைப்பயிற்சி மேற்கொள்வதில்லை. பெரும்பாலான நேரத்தை செய்தித்தாள் வாசிப்பதற்காக பயன்படுத்துகிறார். அவருக்காக பிரத்யேகமாக நியமிக்கப்பட்டுள்ள பெண் சிறைக்காவலர்களிடம்கூட எந்த உதவியும் கேட்பதில்லை. பெரும்பாலும் தனிமையில் இருக்கிறார்.

தன்னை பரிசோதிக்க வரும் மருத்துவர்கள், செவிலியர்களிடம் கன்னடத்தில் பேசுகிறார். சில நேரங்களில் அவரை நலம் விசாரிக்கும் சக கைதிகளிடம் பேசுகிறார். சசிகலா, சுதாகரன், இளவரசியுடன் பேசுவதில்லை. ஒருவேளை நான் பார்க்காத நேரங்களில் அவர்கள் பேசிக்கொள்ளலாம்.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு அவருடைய சிறைக்காவலர் திவ்யாஸ்ரீ யிடம், தசரா திருவிழாவைப் பற்றி பேசி இருக்கிறார். அதனைத் தொடர்ந்து தனக்கு மைசூர் சாமூண்டீஸ்வரி படம் வேண்டுமென கேட்டுள்ளார். எனவே உடனடியாக அவருக்கு சாமூண்டீஸ்வரி படம் வழங்கப்பட்டது. சனிக்கிழமை காலையும் மாலையும் அவர் சாமூண்டீஸ்வரியை வணங்கியதாக எனக்கு தகவல் கிடைத்தது என அவர் தெரிவித்தார்.​

 

http://tamil.thehindu.com/opinion/reporter-page/%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/article6472009.ece?homepage=true

 

Link to comment
Share on other sites

ஜெயலலிதாவுக்கு கிடைத்தது ஜாமின்

 

jaya.jpg

 

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை ஜாமினில் விடுவிக்க கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஜெயலலிதாவை நிபந்தனை ஜாமினில் விடுவிக்க அரசு தரப்பு வழக்குரைஞர் பவானி சிங் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இதனையடுத்து அவரை நிபந்தனை ஜாமினில் விடுவிக்க நீதிபதி சந்திரசேகரன் உத்தரவிட்டார்.

முன்னதாக வழக்கில் ஜெயலலிதா சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ராம் ஜெத்மலானி, அரசு தரப்பு கருத்தைக் கேட்காமலேயே ஜாமீன் வழங்கலாம். மேலும், இது போன்ற வழக்குகளில், உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புகளையும் அவர் சுட்டிக் காட்டினார்.

ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற லாலு பிரசாத் யாதவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது போல ஜெயலலிதாவுக்கும் ஜாமீன் வழங்க வேண்டும் என்று ராம் ஜெத்மலானி வாதாடினார்.

அரசு வழக்குரைஞர் பவானி சிங்கின் வாதத்துக்கு பதில் அளிக்கும் வகையில் கூறிய ராம் ஜெத்மலானி, ஜெயலலிதா, சட்டத்துக்கு உட்பட்டு நடப்பவர். அவருக்கு ஜாமீன் வழங்கினால், நாட்டை விட்டு எங்கும் தப்பிச் சென்றுவிட மாட்டார் என்றும் உறுதி அளித்தார்

 

http://www.dinamani.com/latest_news/2014/10/07/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9C/article2466247.ece

 

 

ஜெயலலிதா ஜாமீன் மனுவை முதலாவதாக விசாரிக்க நீதிமன்றம் மறுப்பு

 

ramjet_2142523f.jpg

பெங்களூர் உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி | படம்: கே.பாக்ய பிரகாஷ்

ஜெயலலிதா ஜாமீன் மனுவை முதல் மனுவாக விசாரிக்க கர்நாடக உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு மீதான விசாரணை மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையடுத்து பெங்களூரின் சில முக்கியப் பகுதி களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ஜெயலலிதாவின் ஜாமீன் மனுவை முதல் மனுவாக விசாரிக்கக் கோரப்பட்டது. ஆனால், ஜெயலலிதா மனுவை முதலில் விசாரிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.

ஜெயலலிதா தரப்பில் வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி ஆஜரானார். ஜெயலலிதா மனுவை அவசர மனுவாக கருதி முதல் மனுவாக விசாரிக்க வேண்டும் என நீதிபதியிடம் ராம் ஜெத்மலானி கோரிக்கை விடுத்தார். ஆனால், மனுவை வரிசைப்படியே விசாரிக்க முடியும் என நீதிபதி சந்திரசேகர் மறுப்பு தெரிவித்துவிட்டார்.

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரின் ஜாமீன் மனு வரிசை எண் படி 73-வது வழக்காக விசாரணைக்கு வந்தது.

பிற்பகல் 2.30 மணிக்கு விசாரணை:

ஜெயலலிதா ஜாமீன் மனு மீது கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் விசாரணை பிற்பகல் 2.30 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதா தரப்பில் ஆஜரான ராம் ஜெத்மலானி வாதம் ஒரு மணி நேரம் வாதிட்டார். வழக்கறிஞர் பவானி சிங்கும் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என தனது வாதத்தை முன்வைத்தார். இரு தரப்பு வாதங்களும் எழுத்துப்பூர்வமாகவும் அளிக்கப்பட்டன.

தொடர்ந்து சசிகலா, இளவரசி தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டு வந்தனர். உணவு இடைவேளைக்காக நீதிமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பிற்பகல் 2.30 மணிக்கு ஜாமீன் மனு மீதான வாதம் மீண்டும் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ராம் ஜெத்மலானி வாதம்:

ஜெயலலிதா தரப்பில் வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி, உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை மேற்கோள் காட்டி ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கக் கோரி ராம் ஜெத்மலானி வாதிட்டு வருகிறார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனைக்கு எதிராக ஜெயலலிதா தரப்பில் தாக்கல் செய்த அப்பீல் மனு நிலுவையில் உள்ள நிலையில், அவருக்கு ஜாமீன் வழங்கலாம் என உச்ச நீதிமன்றத்தில் வழங்கப்பட்டுள்ள சில தீர்ப்புகளை ஜெத்மலானி மேற்கோள்காட்டி வாதிட்டார்.

பவானி சிங் வாதம்:

ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து எதிர் மனு தாக்கல் செய்த வழக்கறிஞர் பவானி சிங், ஜாமீன் வழங்கினால் ஜெயலலிதா வெளிநாட்டுக்கு தப்பிச் செல்லக்கூடும் என்பதால், அவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என வாதிட்டார்.

"ஜெயலலிதா மிகவும் சக்தி வாய்ந்த பிரபலர். அவருக்கு, ஜாமீன் வழங்கினால் ஜெயலலிதா வெளிநாட்டுக்கு தப்பிச் செல்லக்கூடும். அதனால் அவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது. ஜாமீன் வழங்கினால் தண்டனையில் இருந்து தப்பிக்கவும் அவர் முயற்சிக்கலாம்" என அவர் தெரிவித்தார்.

ஜெத்மலானி பதில்:

அதற்கு பதிலளித்த ராம் ஜெத்மலானி, "ஜெயலலிதா எப்போதும் சட்டத்தை மதித்து நடப்பவர், எனவே அவர் நாட்டை விட்டு வெளியேற முயற்சிக்க மாட்டார்" என்றார்.

ஜாமீன் மனு:

கடந்த 29-ம் தேதி ஜெயலலிதா உள்ளிட்ட நால்வர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை கடந்த 1-ம் தேதி விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்ற விடுமுறைக் கால நீதிபதி ரத்னகலா, இவ்வழக்கை வழக்கமான நீதிபதிக்கு மாற்றி உத்தரவிட்டார்.

ஜெ.வின் உடல்நிலை கருத்தில் கொள்ளப்படுமா?

''ஜெயலலிதாவுக்கு 66 வயதாகிறது. நீரிழிவு, இதயக் கோளாறு, ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டு இருப்பதால் அவரது உடல்நிலை குன்றியுள்ளது. ஒரு பெண் என்ற வகையில் தொடர்ந்து சிறையில் இருந்தால் அவருக்கு தீவிர மன அழுத்தமும் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. எனவே, அவரை உடனடியாக ஜாமீனில் விடுவிக்க வேண்டும். அவ்வாறு விடுவிக்கப்பட்டால் ஜெயலலிதா சட்டத்திற்கு விரோதமாக செயல்பட மாட்டார்'' என்ற வாதத்தை முன்வைக்க இருப்பதாக ஜெயலலிதாவின் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

அரசு தரப்பு வழக்கறிஞர் பவானிசிங், ''ஜெயலலிதா தமிழக அரசியலில் மிகவும் செல்வாக்கு மிக்கவராக‌ இருக்கிறார்.அவரை ஜாமீனில் விடுவித்தால் இவ்வழக்கின் போக்கை மாற்றவும், தண்டனையில் இருந்து தப்பிக்கவும் முயற்சி செய்வார். மேலும், அவர் தலைமறைவாகி விடவோ, வேறு நாடுகளுக்கு தப்பி செல்லவோ வாய்ப்பு இருக்கிறது. எனவே ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது''என வாதிடப் போவதாக தெரிவித்தார்.

144 தடை உத்தரவு:

ஜெயலலிதாவின் ஜாமீன் மனு மீதான விசாரணை நடைபெறு வதால் பெங்களூரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன. பெங்களூரில் தமிழர்கள் அதிகம் வசிக்கக் கூடிய பகுதிகளில் போராட்டங்கள் நடத்தவும், ஊர்வலம் செல்வதற் கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பெங்களூர் மாநகர காவல் ஆணையர் எம்.என்.ரெட்டி, 'தி இந்து'விடம் கூறும்போது, ''ஜெயலலிதாவின் ஜாமீன் மனு விசாரணைக்கு வரவிருப்பதால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட‌ அதிமுகவினர் பெங்களூருக்கு வரத் தொடங்கியுள்ளனர். எனவே, தமிழக எல்லைகளில் தீவிர வாகன சோதனை நடத்தவும், அசம் பாவிதங்களை தடுக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கர்நாடக உயர் நீதிமன்ற வளாகத்தில் அனைவரும் தீவிர பரிசோத னைக்குப் பிறகே அனுமதிக்கப் படுவர். வ‌ழக்கறிஞர்கள் மற்றும் அதிமுகவினரின் போராட்டத்தை கட்டுப்படுத்தும் விதமாக கர்நாடக உயர் நீதிமன்ற வளாகம், பெங்களூர் சிறப்பு நீதிமன்ற வளாகம்,விதான சவுதா வளாகம் மற்றும் சிறை அமைந்திருக்கும் பரப்பன அக்ரஹாரா ஆகிய இடங்களில் செவ்வாய்க்கிழமை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது” என்றார்.

ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பவானி சிங், மேல் முறையீட்டு வழக்கிலும் அரசு வழக்கறிஞராக நீட்டிக்கப்பட்டுள்ளார். இதற்கான ஆணையை கர்நாடக அரசும், தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையினரும் பிறப்பித்துள்ளனர்.

தமிழகத்தில் அதிமுக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் அவர்களுடைய கட்டுப்பாட்டில் இருக்கும் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையால் நியமிக்கப்பட்ட பவானி சிங் நியாயமாக நடந்து கொள்வாரா என்ற சந்தேகம் திமுக வட்டாரத்தில் ஏற்பட்டுள்ளது. எனவே அரசு வழக்கறிஞராக பவானிசிங் தொடர்வதற்கு திமுக எதிர்ப்பு தெரிவிக்கும் என தெரிகிறது. அவ்வாறு எதிர்ப்பு தெரிவித்தால் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைப்பது மேலும் தாமதமாகலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

 

http://tamil.thehindu.com/india/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/article6477730.ece?homepage=true

 

Link to comment
Share on other sites

ஜெயலலிதா பிணை மனு நீதிமன்றத்தால் நிராகரிப்பு
 
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை வைக்கப்பட்ட தமிழக முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதாவுக்கு பிணை வழங்க கர்நாடக உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
jayalalitha_4.jpg
முன்னதாக பிணை வழங்கப்பட்டதாக தவறான தகவல்கள் நீதிமன்றத்துக்கு வெளியே பரவின. நீதிபதியின் தீர்ப்பு பின்னர் தான் வெளியானது.
 
ஜெயலலிதாவுக்கு தரப்பட்ட தண்டனையை ரத்து செய்ய வேண்டிய அவசியம் இல்லையென நீதிபதி தெரிவித்தார்.
 
ஜெயலலிதாவுக்கு பிணை வழங்க ஆட்சேபணை இல்லை என்று அரசு வழக்கறிஞர் கூறியும் பிணை கிடைக்கவில்லை.
 
இந்நிலையில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கும் பிணை இல்லை. தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் நிராகரிப்பு. தண்டனைக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் நிராகரிப்பு.
 

 

முன்னதாக பிணை வழங்கப்பட்டதாக தவறான தகவல்கள் நீதிமன்றத்துக்கு வெளியே பரவியமை குறிப்பிடத்தக்கது.
 
 

 

 

மகிழ்ச்சியில் துவங்கிய கொண்டாட்டம் சோகத்தில் முடிந்த பரிதாபம்

 

Tamil_News_large_1086926.jpg

 

ஜெயலலிதாவிற்கு ஜாமின் கிடைத்ததாக, வெளியான தகவலை தொடர்ந்து, அ.தி.மு.க., தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அரை மணி நேரத்தில், ஜாமின் மனு ரத்து செய்யப்பட்டதாக வெளியானத் தகவலை தொடர்ந்து, தொண்டர்கள் சோகத்தில் மூழ்கினர்.

 
அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதாவிற்கு, சொத்து குவிப்பு வழக்கில், நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து, கடந்த மாதம் 27ம் தேதி, பெங்களூரு சிறப்புநீதிமன்றம் தீர்ப்பளித்தது.இதனால், அமைச்சர்கள் பெங்களூருவில் முகாமிட்டு, ஜெயலலிதாவை ஜாமினில் வெளியே கொண்டு வர, நடவடிக்கை மேற்கொண்டனர். அவரது ஜாமின் மனு, நேற்று கர்நாடக உயர் நீதிமன்றத்தில்விசாரணைக்கு வந்தது. ஜெயலலிதா தரப்பில், வக்கீல் ராம் ஜெத்மலானி வாதாடினார். அரசு தரப்பில், வக்கீல் பவானி சிங் ஆஜரானார். விவாதம் மதியமும் தொடர்ந்தது.தீர்ப்பை அறிய, சென்னையில் உள்ள, அ.தி.மு.க., தலைமைஅலுவலகத்தில், நுாற்றுக்கணக்கான தொண்டர்கள் திரண்டிருந்தனர்.
 
மாலை 3:15 மணிக்கு, ஜெயலலிதாவிற்கு நீதிமன்றம், நிபந்தனை ஜாமின் வழங்கியதாக, ஒரு 'டிவி'யில் பரபரப்பாக செய்தி வெளியானது.அதை கேட்டு, அ.தி.மு.க., தொண்டர்கள் கொண்டாட்டங்களில் இறங்கினர். மகளிர் குத்தாட்டம் போட்டனர். அனைவருக்கும் லட்டு வழங்கப்பட்டது.சில நிமிடங்களில் அமைச்சர்கள் வேகமாக, அலுவலகம் வந்தனர். அனைவரும் தொண்டர்களுடன், மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர்., சிலைக்கு, தொண்டர்கள் கற்பூரம் காண்பித்து, தேங்காய் உடைத்தனர். இரண்டு குடங்களில், பால் எடுத்து வந்து, சிலைக்கு அபிஷேகம் செய்தனர்.அமைச்சர் வளர்மதி, நிர்வாகிகள் சிலரை அழைத்து, பட்டாசு, இனிப்பு வாங்கி வரும்படி உத்தரவிட்டார்.
 
அனைத்து அமைச்சர்களும்,அலுவலகம் உள்ளே தரை தளத்தில், நாற்காலியில் அமர்ந்து, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்தனர்.கட்சி அலுவலகத்தை சுற்றியுள்ளப் பகுதிகளில் இருந்து, தொண்டர்கள் தலைமை அலுவலகத்திற்கு, வாகனங் களில் வந்து குவிந்தனர். மேளதாளங்கள் ஒலிக்க துவங்கின; பட்டாசுகள் கொளுத்தப்பட்டன.அதேபோல், மாநிலம் முழுவதும், அ.தி.மு.க.,வினர் கொண்டாட்டங்களை துவக்கினர். இருசக்கர வாகனங்களில், கட்சி கொடிகளை கட்டிக் கொண்டு, ஜெயலலிதாவை வாழ்த்தி கோஷமிட்டபடி, நகரை வலம்வந்தனர்.
 
அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், மாலை 4:20 மணிக்கு, ஜெயலலிதாவிற்கு ஜாமின் வழங்கப்பட்டதாக வெளியானத் தகவல் தவறானது என, குறிப்பிட்ட அந்த டிவியே செய்தி வெளியிட்டது.அதைப் பார்த்ததும், அமைச்சர் கள் அதிர்ச்சி அடைந்தனர். உயரதிகாரிகளை தொடர்பு கொண்டு, தகவலை உறுதிப்படுத்தினர். அதைத் தொடர்ந்து, கொண்டாட்டங்கள் உடனடியாக நிறுத்தப்பட்டன.தொண்டர்கள் சோகத்தில் மூழ்கினர். ஆத்திரமடைந்த பெண்கள், நீதிபதியையும், கருணாநிதியையும் திட்டி தீர்த்தனர். சிலர், வழக்கம்போல அழுது புலம்பினர்.சோக மயமான அமைச்சர்கள், அலுவலகத்தின் முதல் தளத்திற்கு சென்றனர். ஆங்காங்கே மறியலில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி, கலைந்து போகச் செய்தனர்.கோலாகலமாக ஆரம்பித்தகொண்டாட்டம், அரை மணி நேரத்தில், சோகமாக முடிவுக்கு வந்தது
 
Link to comment
Share on other sites

எரிக்கபட்ட காளையர் கோயில் ஆட்சி இனி அப்புட்டுத்தான் அம்மா ..

10527671_1545819485634602_47131312004531

Link to comment
Share on other sites

ஜெ.,வுக்கு ஜாமின் கிடைப்பது எளிதல்ல: சுப்பிரமணியன் சாமி கர்ஜனை

 

''ஜெயலலிதாவுக்கு அவ்வளவு எளிதாக ஜாமின் கிடைத்து விடாது; சட்டத்தின் ஆழம் புரியாமல், ஜெயலலிதா தரப்பினர் கோர்ட்டை எதிர் கொண்டு வருவது பரிதாபமாக உள்ளது,'' என, பெங்களூரு உயர் நீதிமன்றத்தில், ஜெயலலிதா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமின் மனு தள்ளுபடியானதும், பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி கருத்து கூறினார்.
 
ஊழல்வாதி
 
இதுகுறித்து, 'தினமலர்' நாளிதழுக்கு அவர் அளித்த சிறப்பு பேட்டி: ஜெயலலிதாவை கடவுளாக நினைத்து, அவர் கட்சியினர் இன்னமும் அவர் புகழ் பாடிக் கொண்டிருக்கின்றனர். அவர் ஊழல் வழக்கில் கடுமையாக தண்டிக்கப்பட்டிருக்கும் ஒரு ஊழல்வாதி என்பதை, அக்கட்சியினர் முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டும்.அப்படி ஒரு எண்ணம் வந்தால் தான், அவர்கள் நீதிபதி வழங்கிய தீர்ப்பை ஏற்றுக் கொள்வர். கடவுளுக்கே மனிதன் தண்டனை வழங்கலாமா என்று போஸ்டர் அடிப்பதை எல்லாம் விடுவர். கடவுளுக்கு மனிதன் தண்டனை வழங்குவது தவறென்றால், அ.தி.மு.க.,வினர் தங்கள் கடவுளாக நினைக்கும் ஜெயலலிதா ஏன் ஊழல் புரிய வேண்டும்?அவர் தன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, சொத்து சேர்த்தார் என்பதை, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம், தீர்ப்பில் தெள்ளத் தெளிவாக சொல்லிவிட்டது.அப்படி இருக்கும்போது, ஜெயலலிதாவுக்கும், சசிகலாவுக்கும் மற்றவர்களுக்கும் அவ்வளவு எளிதாக, ஜாமின் கிடைத்து விடாது. சட்டம், நீதிமன்ற தீர்ப்பின் ஆழம் புரியாமல் ஜெயலலிதாவும், அவர் தரப்பினரும் கோர்ட்டை எதிர் கொள்கின்றனர். பதினெட்டு ஆண்டு காலம் இழு இழு என இழுத்து நடத்தி வழங்கப்பட்ட தீர்ப்பிற்கு, ஒரே வாரத்தில் ஜாமின் பெற்று வெளியே சென்று விட ஜெயலலிதா துடிக்கிறார். சட்டம், அவர் நினைக்கும் அளவுக்கு அவ்வளவு பலவீனமாக இல்லை என்பதை, கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி 
சந்திசேகரா, ஜாமினை மறுத்து, தெளிவாக சொல்லிஇருக்கிறார். குற்றவாளிகளுக்கு கேட்டதும் ஜாமின் கொடுக்க வேண்டும் என்பது, குற்ற வழக்கில் அடிப்படை உரிமை அல்ல என்பதை, இப்பவாவது ஜெயலலிதா புரிந்து கொள்ள வேண்டும்.
 
சீரியசாக...:லாலு பிரசாத் யாதவ், சுக்ராம், மதுகோடா, ஓம் பிரகாஷ் சவுதாலா போன்றவர்களின் ஊழல் வழக்கில், எலலாருக்கும் அவ்வளவு எளிதாக ஜாமின் கிடைத்து விடவில்லை. ஊழல் வழக்கை இப்படித்தான்,ரொம்பவும் சீரியஸாகவே கோர்ட் பார்க்கிறது. இதையெல்லாம், சந்திரசேகரா, தன் தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளதாக அறிகிறேன். கர்நாடகா உயர் நீதிமன்றமும், அங்கிருப்பவர்களும் ஊழலுக்கு எதிரான நிலைப்பாட்டில் தீர்க்கமாக இருப்பவர்கள் என, பலரும் சொல்ல கேள்விபட்டிருக்கிறேன். அதனால் தான், ஆரம்பத்தில் இருந்தே ஜெ., ஜாமின் அவ்வளவு எளிதல்ல என, நான் சொல்லி வந்தேன்.நீதிபதி குன்ஹா, தெளிவான ஒரு தீர்ப்பை கொடுத்த பின்னாலும், அதை கருத்தில் கொள்ளாமல் ஜெ.,வுக்கு ஜாமின் வழங்கப்பட்டிருந்தால், நீதிமன்றத்தின் மீது மக்களுக்கு பிடிப்பில்லாமல் போயிருக்கும்.தமிழகத்தில், ஜெ., விடுதலையை வலியுறுத்தி, அக்கட்சியினர், சினிமாத்தனமாக, தொடர்ந்து மக்களை பிரச்னைகளுக்கு ஆளாக்கி வருவதாக வந்த தகவல்களைத் தொடர்ந்து, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் பேசிக் கொண்டு தான் இருக்கிறேன். அவரும், தமிழக சட்டம் - ஒழுங்கை காப்பதில், முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்.
 
சினிமாத்தனம்:
 
அதனால், தமிழகத்தில் அ.தி.மு.க.,வினர் பாசாங்குக்கு, ஆங்காங்கே செய்யும் வன்முறை காட்சிகளும், போராட்டங்களும் மெல்ல குறைந்து வருகின்றன. இருந்தாலும், பள்ளி, கல்லுாரிகளை 
 
 
மூடுவது, பஸ்களை ஓடவிடாமல் செய்து வருவது என்று, தங்கள் சினிமாத்தனத்தை காட்டி வருகின்றனர்.அரசை கலைக்க கோருேவன்அது தொடரக்கூடாது; தொடர்ந்தால்,அதை உச்ச நீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்வேன். தமிழகத்தில் 356 சட்டப் பிரிவைப் பயன்படுத்தி, அ.தி.மு.க., அரசை கலைக்கக் கோருவேன். கவர்னர் ஆட்சி கொஞ்ச காலத்துக்கு இருக்கட்டும். இருந்தாலும், தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசை கலைப்பது, என் எண்ணம் அல்ல.அதற்காக அந்த அரசு, மக்கள் நலன் பற்றி சிந்திக்காமல், தொடர்ந்து ஒரு குற்றவாளியின் விடுதலைக்காக, வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு சாதகமாக நடந்து கொண்டிருந்தால், அதை பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்க முடியாது.எனக்கு, தமிழக மக்களும், அவர்கள் நலனும்தான் முக்கியம். அதற்காக, எந்த அளவிலும் நான் போராடத் தயாராக இருக்கிறேன். புரையோடிக் கொண்டிருக்கும் ஊழலால், இந்திய பொருளாதாரம் சுரண்டப்படுவதை எதிர்த்து போராடுவதும் தான், என் வாழ்நாள் கடமை. அதை இறுதி வரையில் தொடர்ந்து செய்வேன். ஊழல்வாதிகள் யாரையும், எப்பவும் விடமாட்டேன்.இவ்வாறு, அவர் பேட்டிஅளித்தார்.
 
- நமது நிருபர் -
 
 
Link to comment
Share on other sites

நேரடியாக தொடங்கியது மோடி - ஜெயலலிதா யுத்தம்: பிரதமரின் ஹரியாணா பேச்சுக்கு அர்த்தம் கற்பிக்கும் பாஜக

 

modijaya_2143384h.jpg

பிரதமர் நரேந்திர மோடியுடன் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா | கோப்புப் படம்

‘சிறையில் இருப்பவர்களின் ஆதரவு எங்களுக்குத் தேவையில்லை’ என்று ஹரியாணா தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பகிரங்கமாகப் பேசியதின் மூலம் ஜெயலலிதாவை நேரடியாக எதிர்க்க மோடி முடிவு செய்துவிட்டார் என்றே அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

ஜெயலலிதா கைது விவகாரத்தால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் வெற்றிடத்தை பயன்படுத்திக்கொள்ள மாநில கட்சிகள் மட்டுமின்றி தேசிய கட்சிகளும் தீவிரமாக பணியாற்றி வருகின்றன. குறிப்பாக, தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்திவிடலாம் என பாஜக கருதுகிறது. அதன் முதல்கட்டமாகத்தான் கடந்த உள்ளாட்சித் தேர்தலில் பெரிய கட்சிகள் எல்லாம் புறக்கணித்த நிலையில் அதிமுகவை எதிர்த்து பாஜக போட்டியிட்டது. பல இடங்களில் அதிமுக பாஜக இடையே கடும் மோதல்கள் ஏற்பட்டன. அப்போது முதல் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், அதிமுகவை கடுமையாக விமர்சித்துவருகிறார்.

தற்போது ஜெயலலிதா சிறையில் இருக்கும் நிலையில் தமிழகத்தில் அதிமுகவை எதிர்த்து முழு வீச்சுடன் செயல்படும்படி பாஜகவினருக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளதாக அக்கட்சியின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

ஹரியாணா தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய மோடி, ‘எனது அரசு மக்களின் ஆதரவில் இயங்கி வருகிறது. எங்களுக்கு சிறையில் இருப்பவர்களின் ஆதரவு தேவை. அதேபோல் மாஃபியாக்களின் ஆதரவும் தேவையில்லை’ என்று பேசினார். அரசுத் தேர்வாணைய ஊழல் வழக்கில் சிறையில் இருக்கும் இந்திய தேசிய லோக்தளம் கட்சித் தலைவர் ஓம்பிரகாஷ் சவுதாலாவை மனதில் வைத்தே மோடி பேசியதாக ஹரியாணா மக்கள் நினைக்கலாம். ஆனால், பீகாரின் லல்லு பிரசாத் யாதவையும் தமிழகத்தின் ஜெயலலிதாவையும் மனதில் வைத்துதான் அவர் அப்படி பேசியிருக்கிறார்.

இவ்வாறு பாஜக நிர்வாகிகள் கூறினர்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய அரசியல் விமர்சகர்கள், “பிரதமர் பதவிக்கான போட்டியில் ஜெயலலிதாவின் பெயர் எப்போது அடிபட்டதோ அப்போதே அதிமுகவுக்கு மோடி குறி வைத்துவிட்டார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் பெரிய கூட்டணி அமைத்தும் பாஜகவுக்கு ஒரு இடம் மட்டுமே கிடைத்தது மோடியின் கோபத்தை அதிகரித்தது. ‘ஊழல் எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் மீதான வழக்கு விசாரணையை விரைவுபடுத்த வேண்டும்’ என்று நாடாளுமன்றத்தில் மோடி பேசியதற்கும் இதுதான் பின்னணி காரணம். ‘எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் மீதான் ஊழல் வழக்குகளை விரைவில் முடிக்க வேண்டும். ஒருவேளை வழக்கு இழுத்தடித்தால் அதற்கான காரணத்தை உயர் நீதிமன்றத்துக்கு தெரிவிக்க வேண்டும்’ என்று மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தை கடிதம் எழுத வைத்ததும் அவர்தான். ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பாக மோடியிடம் சுப்பிரமணியன் சுவாமி கேட்டபோது, ‘நீதிமன்ற விசாரணைகளில் தலையிட மாட்டேன்’ என்று மோடி கூறியிருக்கிறார். இதையெல்லாம் மோடி ஜெயலலிதா மோதலின் விளைவுகளாவே கருதவேண்டி உள்ளது’’ என்றனர்.

நெருங்கும் திமுக

இன்னொரு பக்கம் பாஜகவை சத்தமில்லாமல் நெருங்க முயற்சி செய்துவருகிறது திமுக. மத்தியில் பாஜக ஆட்சி அமைந்தபிறகு சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் மோடியை கருணாநிதி பாராட்டி வருகிறார். ஒன்றரை மாதங்களுக்கு முன்பு நடந்த ஒரு கூட்டத்தில் பேசிய கருணாநிதி, ‘இந்திய பிரதமர்களிலேயே ஆற்றல் மிக்கவர் மோடி’ என்றார்.

சென்னை வந்த சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினார். அதுபற்றி கருத்து தெரிவித்த கருணாநிதி, ‘மோடியின் புகழுக்கு ரவிசங்கர் பிரசாத் களங்கம் விளைவித்துவிடக் கூடாது’ என்றார். பாஜகவை திமுக நெருங்க முயற்சிப்பதற்கு பல்வேறு காரணங்கள் இருப்பதாகத் தெரிகிறது. ஆனாலும், ‘இதனால் தங்களுக்கு என்ன பலன்’ என்ற யோசனையில் இதுவரை பிடிகொடுக்காமல் இருக்கிறது பாஜக.

 

http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95/article6480451.ece?homepage=true

 

Link to comment
Share on other sites

ஜெயலலிதாவுக்கு பிணை மறுப்பு: தெற்கு ஊடகங்கள் கொண்டாட்டத்தில்

 

Jaya%20sinhala_CI.png

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஜெயராமுக்கு பெங்களுரில் நேற்று நடந்த வழக்கில் பிணை கிடைக்குமா கிடைக்காதா என்ற பரபரப்பு தமிழகத்திற்கு சற்றும் குறைவில்லாமல் இலங்கையிலும் நிலவியது. 

 
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் இலங்கை அரசாங்கத்துடன் பல்வேறு விடயங்களில் முரண்பட்டார். இலங்கைமீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினார்.
 
இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்ற தீர்மானத்தை கொண்டு வந்த அதேவேளை தனித் தமிழீழமே தீர்வு என்ற தீர்மானமும் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
 
அத்துடன் தமிழக - இலங்கை மீனவர் பிரச்சினையிலும் இலங்கையுடன் கடுமையான முரண்பாடுகள் ஏற்பட்டன. இவ்வாறான பல்வேறு காரங்களால் இலங்கை அரசு மட்டத்தில் ஜெயலலிதா மிகவும் நெருக்கடி கொடுத்தார்.
 
அண்மையில் சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா ஜெயராமுக்கு தண்டனை விதிக்கப்பட்டபோது சில சிங்கள ஊடகங்களும் அரச ஊடகங்களும் கொண்டாட்டத்துடன் செய்திகளை வெளியிட்டிருந்தன. 
 
இலங்கையில் நடக்கும் அரசியல் கூட்டங்களில் பேசும் சிங்கள அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் ஜெயலலிதாவின் சிறைவாசத்தை கண்டல் அடிப்பதும் அதற்கு சிங்கள ஊடகங்கள் முக்கியத்துவம் அளிப்பதுமாக இருந்தது. 
 
ஏரிக்கரை பத்திரிகை தினகரன் ( அரசாங்க ஊடகம்)
இந்நிலையில் நேற்றைய தினம் இடம்பெற்ற வழக்கில் ஜெயலலிதாவுக்கு பிணை கிடைக்குமா என இலங்கை ஊடகங்கள் பரபரப்போடு எதிர்பார்த்திருந்தன. 
 
முதலில் இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்த செய்தியின்படி ஜெயலலிதாவுக்கு பிணை கிடைத்தாக வெளியான செய்தியால் சிங்கள ஊடகங்களின் முகங்கள் சோபை இழந்தன.
 
அடுத்து சில மணித்துளிகளில் ஜெயலலிதாவுக்குப் பிணை இல்லை என்ற செய்தியை சில சிங்கள இலத்திரனியல் ஊடகங்கள் கொண்டாட்டத்துடன் விசேட செய்தியாக அறிவித்தன. 
 
இன்று வெளியான சில சிங்கள பத்திரிகைகளும் ஜெயலலிதாவிற்கு பிணை இல்லை என்ற செய்தியை கேலிச்சித்திரங்களுடன் கேலி செய்து செய்தியை வெளியிட்டுள்ளன. 
 
Link to comment
Share on other sites

ஜெ., ஜாமின் வழக்கில் ஆஜராவேன் : சுப்பிரமணியன் சாமி அறிவிப்பு

 

Tamil_News_large_1087939.jpg

 

'உச்ச நீதிமன்றத்தில் ஜெயலலிதாவின் ஜாமின் மனு விசாரணைக்கு வரும்போது, அதில் ஆஜராவது குறித்து யோசித்து வருகிறேன்,'' என, பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி கூறினார்.
 
இது குறித்து, அவர் கூறியதாவது: சொத்துக் குவிப்பு வழக்கில் சட்டப்படி தண்டிக்கப்பட்டு, பெங்களூரு சிறையில் இருக்கிறார் ஜெயலலிதா. அவரை எந்தவித சட்ட நடைமுறைகளும் இல்லாமல், பலர் ஜெயிலில் இருந்து வெளியே கொண்டு வந்து விடவேண்டும் என துடிக்கின்றனர். அது நடக்காது என்பதை ஆரம்பத்தில் இருந்தே நான் சொல்லி வருகிறேன். இருந்தாலும், பாவம் ரொம்பவே முயற்சிக்கின்றனர்.
 
ஜெயலலிதாவின் சட்ட ரீதியான முயற்சிகளுக்கு, நான் ஒரு போதும் குறுக்கே நிற்க மாட்டேன். முதலில் நீதிமன்றத்தையும், சட்டத்தையும், நீதிபதிகளையும் அவர்கள் மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும். இல்லையென்றால், அவர்கள் எத்தகைய சக்தி படைத்தவர்கள் என்பது குறித்து, அவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டியது தான்.
 
சட்டப்படி அவர் தண்டிக்கப்பட்டதும், அதை ஏற்காமல், தமிழகம் முழுவதும் வழக்குக்கு அடிப்படை காரணகர்த்தாவான என்னையும், வழக்கை முறையாக விசாரித்து தீர்ப்பளித்த நீதிபதி குன்ஹாவையும் கொச்சையாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் அ.தி.மு.க.,வினர் விமர்சித்திருக்கின்றனர். போஸ்டர்கள், பேனர்கள் மூலமாக கொச்சைப்படுத்தும் வாசகங்கள், படங்களை எழுதி வைத்திருக்கின்றனர். இது தொடர்பாக, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுப்பது குறித்து, விவரங்களை திரட்டி வருகிறேன்.அதற்கு முன்பாக, ஜெயலலிதாவின் ஜாமின் மனு உச்ச நீதிமன்றத்தில் வரும்போது, அந்த வழக்கில், புகார்தாரர் என்ற வகையில் ஆஜராகி, ஜாமின் வழங்குவதற்கு தடையேற்படுத்துவது குறித்து யோசித்து வருகிறேன்.
 
இனியும் அ.தி.மு.க.,வினர், எதிர்மறையான போக்கில் இருந்து, தங்களை, திருத்திக் கொள்ளாவிட்டால், ஜாமின் வழக்கில் நான் ஆஜராவேன். அதனால், ஜெயலலிதாவுக்கு கடுமையான சிக்கல் ஏற்படும்.அதேபோல, இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டிருக்கும் பவானி சிங் மீதும் பல்வேறு விதமான குற்றச்சாட்டுக்கள் கூறப்படுகிறது. அவருடைய நடத்தையிலும் மாறுதல்கள் இருப்பதால், அதை உன்னிப்பாக கவனித்து வருகிறேன். அவருடைய செயல்பாடுகள் இனியும் சரியில்லை என்றால், அதில் சட்டரீதியில் என்ன நடவடிக்கை எடுக்க முடியுமோ, அதை செய்வேன். என்னைப் பொறுத்த வரையில் ஊழல் செய்தவர்கள் அவ்வளவு எளிதாக, சட்டத்தின் சந்து பொந்துகளில் புகுந்து தப்பி விடக்கூடாது. இவ்வாறு, அவர் கூறினார். சுப்ரீம் கோர்ட்டில் சாமி மனு: தமிழக மீனவர்களை, இலங்கை அதிபர் ராஜபக் ஷே விடுதலை செய்தது தொடர்பாக, சுப்பிரமணியன் சாமி, பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதம் தொடர்பாகவும், தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக, 'டுவிட்டர்' மூலம் கருத்து தெரிவித்தது தொடர்பாகவும், சாமிக்கு எதிராக ஐந்து அவதூறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும் எனச் சொல்லி, சாமி, நேற்று, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனு, விரைவில் விசாரணைக்கு வரும் என தெரிகிறது.
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தி அவர்களின் தற்கொலை முடிவிற்கு அவரது தனிப்பட்ட மற்றும் குடும்ப விவகாரமே காரணம் என்ற ஒரு தகவல் வெளி வந்திருக்கின்றது. இந்த விவகாரம் வெளியில் வரவே கூடாது என்று நினைத்திருந்திக்கின்றார் போல....😌   https://minnambalam.com/political-news/mdmk-ganesh-murthy-last-days-secret-report-to-the-chief-minister/  
    • 'அதிர்ஷ்ட லாபச் சீட்டு' என்ற தலைப்பில் இந்த வாரம் இங்கே களத்தில் ஒரு சுய ஆக்கம் எழுதியிருந்தேன். அமெரிக்காவில் இருக்கும் லொட்டோக்களைப் பற்றியே எழுதியிருந்தாலும், உலகம் முழுவதற்கும் இது பொருந்தும் என்று நினைக்கின்றேன். அதில் இருந்து ஒரு பகுதி: 'இங்கு தினமும் மாலை நேரங்களில் இந்த சீட்டுகளில் விற்கும் கடைகளின் வாசல்களில் அன்றாடம் தொழில் முடித்து வருவோர்கள் பலர் சீட்டுகளை வாங்கி சுரண்டிக் கொண்டிருப்பார்கள். முடிவில் அவர்களின் முகங்களில் ஒரு வேதனை தெரியும். அதிஷ்ட லாபச் சீட்டு விற்பனையால் வரும் வருமானத்தில் இருந்து அரசாங்கம் பல நற்பணிகளை செய்கின்றது என்போர் இந்த வேதனையை பார்க்கவேண்டும்.'................😌  
    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.