Jump to content

கனேடிய தமிழ் பாடகி ஜெசிக்கா எஸ்.பி பாலசுப்பிரமணியத்துடன் நிற்கும் காட்சி.

Recommended Posts

  • Replies 159
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சூப்பர் சிங்கர் ஜெசிக்காவா - அனுசுயாவா??? - விறுவிறுப்பான போட்டி..!

JAN 31, 2015

விஜய் டிவி நடத்தும் சூப்பர் சிங்கர் ஜூனியர் போட்டி பலராலும் விரும்பி பார்க்கப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சி இப்பொழுது நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று நடந்த வைல்ட் கார்டு சுற்றில் கனடாவை சேர்ந்த ஜெசிக்கா மற்றும் அனுசுயா இருவருக்கும் கடும் போட்டி நிலவியது.

வோட்டுகளின் அடிப்படையில் தேர்ந்தேடுக்கப்படுபவர்கள் இறுதி சுற்றுக்கு செல்லலாம் என்ற நிலையில் ஜெசிக்கா மற்றும் அனுசுயா இருவருக்கும் இடையில் போட்டி தீவிரமாக இருந்தது. வோட்டு எண்ணிகையின் இறுதியில் ஜெசிக்கா சுமாராக 14.2 லட்சம் வோட்டுகளும் அனுசுயா சுமார் 13.8 லட்சம் வாக்குகளும் பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்கள். ஸ்ரீஷா நடுவர்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

http://ta.newstig.com/single-standard.php?pid=11231

Link to comment
Share on other sites

Super Singer “சூப்பர் சிங்கர் ” ஜெசிக்கா ஜூட்ஸ் இன்று வைட் காட்டில் தெரிவானார் .

Super Singer “சூப்பர் சிங்கர் ” ஜெசிக்கா ஜூட்ஸ் இன்று முதல் ஆறு போட்டியாளர்களில் ஒருவராக  தெரிவானார் .

கடுமையான பயிற்சியை மேற்கொண்ட இந்த இளம் கனடியப் பாடகி தற்போது நடை பெறும் போட்டியில் முதல் ஆறு போட்டியாளர்களில் ஒருவராகத் தெரிவு செய்யப் பட்டுள்ளார். கூடுதலாக சர்வதேச உள்நாட்டு Votes  ஐ பெற்று வைட் காட்டில் இன்று தெரிவு செய்யப்பட்டார்.

இவர் மாத்திரமே இப்பொது இருக்கின்ற ஒரே ஒரு சர்வதேசப் போட்டியாளர் ஆகும். கடந்த பத்து மாதங்களாக மேற்கொண்ட கடும் பயிற்சி காரணமாகத் தனது பாடும் திறமையை வளர்த்துக் கொண்டார். இதற்குக் காரணமாக இருந்தவர்கள் அவரது குரல் பயிற்சியாளர் ஆனந்த் வைத்தியநாதன், நடுவர்களாகக் கடமை புரிந்த மனோ, சித்ரா, மால்குடி சுபா ஆகியோர் ஆகும். அத்துடன் இசை அமைப்பாளர்  ஏ. ஆர்  ரஹ்மான், பாடகர்களான எஸ். பி. பாலசுப்ரமணியம், எஸ் .ஜானகி, சிரினிவாஸ், எஸ்.பி. சைலஜா போன்ற பலருக்கு முன்னால் பாடிப் பராட்டுதல்களைப் பெற்றார்.

இறுதிப் போட்டியாளர்களில் ஒருவராகத் தெரிவு செய்யப் படுவோம் என்ற நம்பிக்கை கொண்டுள்ளார். அவரது கனவு நனவாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் ஆதரவும் வாழ்த்துக்களும் அவருக்குக் கிடைத்துள்ளது. அவர் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

இவர் பற்றிய மேலதிக தகவல், விஜய் தொலைக்காட்சியால் நடத்தப் படும் சூப்பர் சிங்கர் ஜூனியர் நான்கு நிகழச்சியில் கனடா மார்க்கம் நகரை வதிவிடமாகக்  கொண்டவர் ..இவர் இசை ஞானம் மிகுந்தவர். இந்தியாவில் நடைபெறும் இப் போட்டியில் பங்கு பெறுவதற்காகக் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டார். பாடசாலைக்குச் செல்லும் போது ஐந்தாவது  வயதிலியே கர்நாடக இசையைத் தகுதி வாய்ந்த சிறந்த ஆசிரியர்களிடம் கற்கத் தொடங்கினார். அத்துடன் இசை கருவிகளை மீட்டுவதிலும் சிறந்து விளங்கினார். RCM  பியானோ போட்டியில் தங்கப் பதக்கம் பெற்றார். T.V.I. தொலைக்காட்சியினால் நடத்தப் பட்ட கனடிய சூப்பர் சிங்கர்  போட்டியில் முதல் இடம் பெற்றார். தனது திறமையைப் பரந்த அளவில் வெளிப் படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் பங்கு பெற முடிவு எடுத்தார்.jesika.jpg

http://ekuruvi.com/super-singer-jesika-jnhba/ekuruviTamilNews

Link to comment
Share on other sites

யெசிக்கா யூட் இன்று முதல் ஆறு போட்டியாளர்களில் ஒருவராக  தெரிவானார் என்ற இடுகையை நானும் ஈகுருவியில் பார்த்தேன். இந்தப்போட்டியை நடாத்தும் சூப்பர் சிங்கரே இன்னமும் முடிவைப்பற்றி அறிவிக்காத நிலையில் ஈகுருவிக்கு எப்படி முடிவுகள் தெரிந்தது. ஈகுருவி ஞானம் பெற்றது எந்த மரத்தடியில்.????  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனேடிய பாடகி ஜெசிக்கா யூட்  இறுதி சுற்றுக்கு தெரிவாகி இருக்கின்றா..வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

34cd8ac7296899cde0342935815785c3

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகளும் வாழ்த்துக்களும் ஜெசிக்கா 

கனடாவில் பிறந்து வளர்ந்து

தமிழ்  உச்சரிப்பு

இசை என எதிலும் தளம்பாது

தமிழக கலைஞர்களோடு போட்டி போட்டு வெல்வது எவ்வளவு திறமை வேண்டும்...

ஈழத்தமிழராக பெருமைப்படுகின்றேன்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

14 லட்சம் வாக்குகள்

நன்றி  உலகத்தமிழருக்கு...

நன்றாக பேசுகின்றார்

நன்றி  சொல்வதும் திறமாக இருக்கிறது

மிளிர்வார்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

wild card ல் 5வது தெரிவானா அனுசா மற்றும் 6வதாக தெரிவு செய்யப்பட்ட த்ரிஷாவுக்கு கொடுத்த ஆரவார ஆதரவினை ஈழத்தை பூர்வீகமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட ஜசிக்காவுக்கு கொடுக்கவில்லை என்பதை பார்க்கும்போது கொஞ்சம் கவலையாக இருக்கின்றது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
நடுவர்களின் முகத்தில் மகிழ்ச்சியை காண முடியவில்லை காரணம் என்னவாக இருக்கும் ?  :rolleyes:
 
தெரிவானவர்களில் கரிப்பிரியா த்ரிஷா ஸ்பூர்தி ஆகியோர் தெலுங்கர்கள் மனோவும் தெலுங்கர்தான் பரத் மலையாளி சித்திரா மலையாளி மற்றைய இருவரும்தான் தமிழர்கள் என்று நினைக்கின்றேன். :blink: ஏன் தமிழ்நாட்டில் சிறந்த பாடகர்கள் இல்லையா அல்லது அதிலும் அரசியலா ????  :unsure:   
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
மிகவும் மகிழ்ச்சியான செய்தி.
உண்மையில் ஜெசிக்காவிற்கு நல்ல குரல் வளம் , திறமை , மற்றும் இசை மேல் உண்மையான பற்றுதல் இருக்கின்றது. அவரினது கடின உழைப்பும் உலகதமிழர்களின் த்ரிவுமே இன்றைய இந்த வெற்றி. 
அவரின் சரளமான  தமிழில் நன்றி உரை கேட்க ஆனந்தமாக இருக்கிறது.
அவர் இனி வரும் சுற்றுகளில் மிகவும் கடினமான பாடல் பாடவேண்டி இருக்கும். 
நிறைய மூச்சுப் பயிற்சி நிச்சியம் தேவை ... (breathing techniques / exercise)    
அவருக்கு இனிமேல் நிச்சியம் சினிமாப் பாடல்கள் பாடுவதற்கு சான்ஸ் கிடைக்கும் என்று நம்பலாம்.
அவர் தான் சூப்பர் சிங்கராய் வருவார் என்ற எதிர்பார்புகளுக்கு அப்பால் இதுவே பெரும் வெற்றி தான்.
பூவே பூச்சுடவா பாடல் பாடிய விதம் அருமை... keep it up girl  :)
Link to comment
Share on other sites

நடுவர்களின் முகத்தில் மகிழ்ச்சியை காண முடியவில்லை காரணம் என்னவாக இருக்கும் ?  :rolleyes:
 
தெரிவானவர்களில் கரிப்பிரியா த்ரிஷா ஸ்பூர்தி ஆகியோர் தெலுங்கர்கள் மனோவும் தெலுங்கர்தான் பரத் மலையாளி சித்திரா மலையாளி மற்றைய இருவரும்தான் தமிழர்கள் என்று நினைக்கின்றேன். :blink: ஏன் தமிழ்நாட்டில் சிறந்த பாடகர்கள் இல்லையா அல்லது அதிலும் அரசியலா ????  :unsure:   

வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு. ஆனால் வந்தவர்கள் தமிழரை வாழவைக்கமாட்டார்கள். தங்கள் இனத்தையே வாழவைப்பார்கள் என்பதற்கு உதாரணமாகி நிற்கும் சுபர்சிங்கர் நடுவர்கள்.
 
இதில் அரசியல் இருப்பதாகத் தெரியவில்லை. தமிழரிடம் காணாத இனப்பற்று அவர்களிடம் அங்கு வெளிப்படையாகத் தெரிகிறது. உற்றுக் கவனித்தால், மக்கள் தீர்ப்பு மகேசன் தீர்ப்பு என மிகவும் ஆதங்கத்துடன் மனோ கூறுவது தெரிகிறது.
 
இந்த விடயத்தில் தமிழர்கள் தங்கள் ஒற்றுமைக் காட்டியது அளவற்ற ஆனந்தத்தை அளிக்கிறது. 
 
இறுதிப் போட்டியிலும் இந்த ஒற்றுமை ஓங்கட்டும்.
 
நன்றி தமிழினமே மிக்க நன்றி.!!  :)  :)

பட்டும், திருந்தாத தமிழ் இனம்,

இதிலையாவது ஒற்றுமையாக இருக்கிறார்களே! என சந்தோசப்பட்டுக்கொள்ள வேண்டியதுதான்! :(:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் கிறாண்ட் பினாலியில சிறிசாவுக்குத்தான் போடுவன். பெங்களூர் பிள்ளை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னைபொறுத்தவரை ஜசிக்காவுக்குத்தான் ஏனென்றால் நாங்கள் ஒரு நலிந்த இனம் என்பதினால்  முதலில் நாம் எமது குழந்தையை ஆதரிப்போம் அதன் பின்னர் மற்றவையைப் பற்றி சிந்திக்கலாம்   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஜெசிக்கா வெல்லவேண்டும் என சிலவாக்குகள் பதிந்திருந்தேன். அவர் வெல்ல வேண்டும் என விரும்பினேன். ஆனால் எனது மனச்சாட்சியின்படி சிறிசாவும் அனுசாவும் ஜெசிக்காவினை விட நன்றாகப் பாடுவார்கள். ஜெசிக்காவும் நல்ல பாடகி. ஆனால் அவரைவிட சிறிசா, பரத், பூர்த்தி,கரிப்பிரியா போன்றவர்கள் நன்றாகப் பாடக்கூடியவர்கள். தேவையில்லாமல் அவர்கள் தெழுங்கர், மலையாளி என்று எதுக்கெடுத்தாலும் பிழை பிடிக்காதீர்கள்.

Link to comment
Share on other sites

தமிழகத்தின் இசைக்குரல்களாக இருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழர்கள் இல்லை.. (பாலசுப்ரமணியம், ஜேசுதாஸ், சிறீநிவாஸ், ஜானகி, சுசீலா இப்படி..) தமிழ்ப்பாடகர்களின் குரல்கள் சற்று கரடு முரடாக இருக்கும் (சீர்காழி, திருச்சி லோகநாதன், புஷ்பவனம்.)

ஆகவே, தமிழகத்தின் "செல்லக்குரலாக" மலையாளிகள், தெலுங்கர்களை தேர்ந்தெடுப்பது என்பது இயல்பானது.. :lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திறமை இருந்தாலும் கேரளாவிலோ அல்லது கர்நாடகாவிலோ அந்தராவிலையோ தமிழர்களுக்கு சந்தர்பங்கள் கொடுப்பார்களா ? நான் அறிந்தவுக்கும் அப்படி இல்லை அப்படி இருக்கும்போது ஏன் நாம் அப்படி நினைக்ககூடாது ? 

தமிழகத்தின் இசைக்குரல்களாக இருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழர்கள் இல்லை.. (பாலசுப்ரமணியம், ஜேசுதாஸ், சிறீநிவாஸ், ஜானகி, சுசீலா இப்படி..) தமிழ்ப்பாடகர்களின் குரல்கள் சற்று கரடு முரடாக இருக்கும் (சீர்காழி, திருச்சி லோகநாதன், புஷ்பவனம்.)

ஆகவே, தமிழகத்தின் "செல்லக்குரலாக" மலையாளிகள், தெலுங்கர்களை தேர்ந்தெடுப்பது என்பது இயல்பானது.. :lol::D

இப்போது கொஞ்சம் கொஞ்சமாக மாறிவருகின்றது என்று நினைக்கின்றேன். :D  :)  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஜெசிக்கா வெல்லவேண்டும் என சிலவாக்குகள் பதிந்திருந்தேன். அவர் வெல்ல வேண்டும் என விரும்பினேன். ஆனால் எனது மனச்சாட்சியின்படி சிறிசாவும் அனுசாவும் ஜெசிக்காவினை விட நன்றாகப் பாடுவார்கள். ஜெசிக்காவும் நல்ல பாடகி. ஆனால் அவரைவிட சிறிசா, பரத், பூர்த்தி,கரிப்பிரியா போன்றவர்கள் நன்றாகப் பாடக்கூடியவர்கள். தேவையில்லாமல் அவர்கள் தெழுங்கர், மலையாளி என்று எதுக்கெடுத்தாலும் பிழை பிடிக்காதீர்கள்.

உண்மைதான்

நாம் வந்தோரை வாழவைக்கும் இனம்

அது தொடரணும்...

அது தான் முக்கியம்.... :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்போட்டி தமிழர் மட்டும்தான் பாடவேண்டும் என்று வைக்கவில்லை. யார் நன்றாகப் பாடுவார் என்றுதான் நடாத்துகிறார்கள். அதில் தமிழரல்லாதவர்களும் பாடுகிறார்கள். அவர்களில் சிலர் நன்றாகப் பாடுகிறார்கள். நடுவர்களும் அவர்களைத் தெரிவு செய்கிறார்கள். திறமையாகப் பாடாதவர்களைத் தெரிவு செய்தால் பிழை சொல்லலாம். ஜெசிக்கா திறமையான ஈழத்துப் பெண். இந்தியாவில் இருப்பவர்களுக்கு தென்னிந்திய இசை பழக அதிக வாய்ப்புக்கள் இருக்கிறது. கனடாவில் இந்தியாவில் இருக்கும் அளவுக்கு இசை பழக வாய்ப்பில்லை. அப்படியிருந்தும் அவர் நன்றாக முன்னுக்கு வந்திருக்கிறார். அவருக்கு நான் வாக்களித்திருக்கிறேன். எனினும் அவரை விட நன்றாகப் பாடக்கூடியவர்களும் இருக்கிறார்கள். காரணம் இந்தியாவில் இருக்கும் தேர்ச்சிபெற்ற இசைக்கலைஞர்கள், அவர்களுக்கு இசைப்பயிற்சி வழங்குகிறார்கள்.

கந்தப்பு அவர்களே, இசை கற்றலின் வசதியை பற்றி கூறியது நீங்கள் உண்மைதான்.. ஆனால் தமிழரசு கூறியதிலும் நியாயம் இருக்கிறது..

தமிழர்களின் பெருந்தன்மையால் மேலேறி உயர்ந்த மற்றவர்கள், எந்த விததிலும் அவர்கள் தமிழுக்காகவோ, தமிழ் இனத்திற்காகவோ ஏதும் செய்ததில்லை, குறைந்த பட்சம் இரங்கியதுமில்லை. அவர்களைப் பொறுத்த வரையில், இது பணமும், புகழும் கொழிக்க உதவும் தொழில், இதே இடத்தில் ஒரு தமிழர் வெற்றியீட்டி புகழேனியில் ஏறினால்  அது தமிழுக்கும், தமிழினத்திற்கும் பெருமை, அவருக்கும் ஓரளவாவது தமிழினத்திற்கு செய்ய மனமிருக்கும்..

உதாரணத்திற்கு யுகாதி, ஓணம் இன்ன பிற மற்ற மொழி பேசுவோரின் பண்டிகைகளுக்கு தமிழக அரசு நாடளவில் விடுமுறை விடுகிறது.. மற்ற மொழி பேசுவோர்கள் தமிழக அரசு வேலைகளில் சேரலாம்..(பின்னர் மொழித் தேர்வு ஊதிய உயர்விற்கு மட்டுமே எடுத்துக்கொள்ளப்படும், வேலைக்கு உத்திரவாதம் உண்டு).. எவரும் தமிழே பள்ளிகளில் படிக்காமல் எந்த உயர்கல்வியும் தமிழ் நாட்டில் கற்கலாம்..

இந்த பெருந்தன்மைகளில் ஏதாவதொன்று மற்ற மாநிலங்களில், செறிந்து வாழும் தமிழர்களுக்கு உண்டா..? இல்லவே இல்லை!  இது அரசியலே என்றாலும், தமிழன் தன்னை முதலில் உயர்த்தப் பார்க்க வேண்டும்.. தானுயர்ந்த பின் மற்றவர்களை பார்க்கலாம்..

ஈழத்தில் ஆங்கிலேயரிடம் தமிழன், சிங்களத்திற்கு வக்காலத்து வாங்கி நாங்கள் சகோதரர்கள், நீங்கள் வெளியேறும் வேலையை பாருங்கள் என்று கூறியதன் விளைவையே நீங்கள் இப்பொழுது அனுபவிக்கிறீர்கள்... :wub:

அந்த நிலை தமிழனுக்கு எந்த விதத்திலும் வரவேண்டாம் என விரும்பினால், தமிழை/தமிழனையே எப்பொழுதும் தெரிவு செய்யுங்கள்.. மேலே உயர்ந்தபின் முதலில் தன்னைக் காத்துக்கொண்டு, அடுத்தவனுக்கு கரம் நீட்டுங்கள்.. :icon_idea:

நன்றி! :)

நன்றி ஐயா

அதையும் நீங்கள் சொல்லும் போது

அதற்கு தனித்துவமும்

அனுபவமும்

பெறுமதியும்  அதிகரித்து விடுகிறது..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.