Jump to content

ரகசிய சிநேகிதியும், கள்ளக்காதலனும்!


Recommended Posts

"ஹலோ யாரு பேசுறது"

"பிக் எப்.எம்.மோட ரகசிய சிநேகிதியா?"

"ஆமாங்க நான் ரகசிய சிநேகிதி தான் பேசுறேன். நீங்க யாரு"

"என் பேரைச் சொல்ல விரும்பலீங்க. என் ப்ரெண்ட்ஸ்ஸெல்லாம் என்னை தோஸ்த்துன்னு கூப்பிடுவாங்க. நீங்களும் அப்படியே கூப்பிடுங்க"

"சரி தோஸ்த். உங்க காதலி பேரு என்ன? எப்போலே இருந்து காதலிக்கிறீங்க. இப்போ உங்க காதல் எந்த கண்டிஷன்லே இருக்கு?"

"என் காதலியோட பேரையும் சொல்ல விரும்பலீங்க. அவங்களுக்கு வேற ஒருத்தரோட கல்யாணம் ஆயிடுச்சி"

"ஸோ பிட்டி. என்ன ஆச்சி? எப்படி பிரிஞ்சீங்க?"

"என் காதலியோட அப்பா ஒரு அரசியல் கட்சி பிரமுகர். எந்தக் கட்சின்னு சொல்ல விரும்பலை. அவரால என் உயிருக்கு ஆபத்து வருமுன்னு என் காதலியே என்னை பிரிஞ்சி வேற கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டாங்க"

"அடப்பாவமே. உங்க காதலியை கடைசியா எப்போ பார்த்தீங்க?"

"இப்பக்கூட அவங்க கூட தியேட்டர்லே தான் இருக்கேன் மேடம். கல்யாணத்துக்கு அப்புறமா கூட எங்க ரெண்டு பேருக்கும் தொடர்பு இருக்கு"

"அய்யய்யோ. இது அவங்க ஹஸ்பெண்டுக்கு தெரியுமா?"

"அது எப்படிங்க தெரியும்? எனக்கு என்ன வருத்தம்னா அவங்க எனக்கு கிடைக்காம போயிட்டாங்களேங்கிறது தான். அப்படியும் சொல்ல முடியாது. இப்பவும் நாங்க ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் சந்திச்சிக்கிட்டு தான் இருக்கோம்"

"இண்ட்ரஸ்டிங்.... உங்களுக்குள்ளே வேற என்னவெல்லாம் இருக்குன்னு சொல்ல முடியுமா?"

"அதெல்லாம் வெளிப்படையா சொல்ல முடியாதுங்க"

"உங்களுக்கு எப்போ கல்யாணம்"

"எனக்கும் கல்யாணம் சீக்கிரமா நடக்கப் போவுதுங்க. பொண்ணெல்லாம் கூடப் பார்த்தாச்சி"

"தேங்க்ஸ் பார் யுவர் காலிங் தோஸ்த். உங்க காதலியோட நீங்க லைப்பை என்ஜாய் பண்றதுக்கு இந்த ரகசிய ஸ்நேகிதியோட வாழ்த்துக்கள். இப்போ உங்களுக்கு புடிச்ச ஒரு லேட்டஸ்ட் சாங் வந்துக்கிட்டே இருக்கு"

********************************************************************************

**

மேலே கண்ட உரையாடல் என்னுடைய கற்பனை அல்ல. அலுவலகம் விட்டு இல்லத்துக்குச் டூவீலரில் செல்லும்போது சும்மா டைம் பாஸுக்காக என்னுடைய மொபைலில் எப்.எம். கேட்டுக்கொண்டே செல்லுவது வழக்கம். நேற்று இரவு ரிலையன்ஸ் நிறுவனத்தின் BIG FMல் கேட்ட கருமம் தான் இது.

உண்மையிலேயே ஒரு நேயர் இந்த FMன் போன் - இன் நிகழ்ச்சிக்கு பேசினாரா? இல்லை இது அந்த ரேடியோ நிலையத்தின் செட்டப்பா என்ற சந்தேகம் எனக்குண்டு. வேலை வெட்டி இல்லாமல் தொடர்ந்து யாராவது இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கிறார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. இல்லையென்றால் சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்படாத இதுபோன்ற கள்ளக்காதலை வெளிப்படையாக ஒருவர் சொல்லும் அளவுக்கு நம் சமூகம் மாசடைந்து விட்டதா என்றும் தெரியவில்லை.

நான் சிலகாலம் முன்பு ஒரு பத்திரிகையில் பணிபுரிந்தேன். அந்தப் பத்திரிகையில் வாசகர் கடிதம் என்ற பெயரில் எழுதப்படுபவைகளில் பெரும்பாலானவை உதவி ஆசிரியர்கள் எழுதுவதே. அதுபோலவே அப்பத்திரிகை ஆசிரியர் வாசகர்களின் கேள்விக்கு பதில் அளிப்பதும் இதுபோல ஒரு செட்டப் தான். அவரே அவருடைய அரசியல் சார்பான கருத்துக்களை சொல்ல ஏதாவது ஒரு வாசகர் பெயரில் கேள்வி எழுதி (இதெல்லாம் எவன் கேக்கப்போறான்) அதற்கு பதிலும் எழுதுவார். துக்ளக் சோ செய்வதைப் போல.

அதுபோன்ற ஒரு டெக்னிக்கை தான் தனியார் FM நிறுவனங்கள் செய்கிறது என நினைக்கிறேன். இதற்காக திறமையான மிமிக்ரி கலைஞர்களை அவர்கள் நியமித்திருக்கக் கூடும். ஏனென்றால் சென்னையில் இப்போது 7 FM ரேடியோக்கள் ஒலிபரப்பி வருகின்றன (2 அரசு, 5 தனியார்). இத்தனை ரேடியோக்களிலும் கிட்டத்தட்ட 90 சதவிகிதம் போன் - இன் நிகழ்ச்சிகளே வருகிறது. 24 மணிநேரமும் எவனாவது உட்கார்ந்து தொலைபேசியில் லைன் பிடித்து இந்த மாதிரி கதையெல்லாம் விடுகிறான் என்பது நம் காதில் பூச்சுற்றும் முயற்சி என்றே நான் நினைக்கிறேன்.

(http://madippakkam.blogspot.com)

Link to comment
Share on other sites

இப்பிடித்தான் லக்கி இங்கை ஒரு ரேடியோ இயங்குகிறது... அரசியல் எல்லாம் பேசுவினம் யாராவது விசயம் தெரிஞ்சான் கடுப்பில உண்மையிலேயே லைனில வந்தால் லைனை கட்பண்ணீட்டு ஹலோ ஹலோ, ஓ அவரின் இணைப்பு துண்டிக்க பட்டு விட்டது எண்டு தங்கட கதையை தொடருவீனம்...

Link to comment
Share on other sites

எனக்கு எந்த பத்திரிகைனு தெரியும் ஆனால் சொல்ல மாட்டன் லக்கி..ஆனால் அந்த பத்திரிகையினுடைய ஆசிரியர் வயதானவர் எல்லா? பதில் சொல்பவருடைய படத்தை பார்தால் இளமையாக இருக்கின்றதே?

Link to comment
Share on other sites

நாம் இருக்கும் நாட்டில் கூட இது நடக்கின்றது. தங்களே போட்டி என்று அறிவித்து தங்களின் சொந்தக்காரர்களின் பெயரில் எல்லாம் ஆக்கங்களை அனுப்பி தங்கள் குடும்பத்துக்குள்ளேயே பரிசில்களை கொண்டு போவார்கள்.

லக்கி சொன்னமாதிரி வியாபார போட்டி தான் இதற்கு காரணம். ஒன்று தங்களுக்கு நிறைய நேயர்கள் இருக்கின்றமாதிரியும் தங்கள் ஏதோ புதுக்கருத்தை சொல்வது போலவும் நினைத்து இப்படி எல்லாம் செய்கின்றார்கள் என்று நினைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

லண்டனில் ஒரு வானொலி தேவை இல்லாமல் கண்டதையெல்லாம் அலட்டுவினம் நல்ல முறையான ஆட்களிடம் மாட்டுப்பட்டால் தாங்களே தொடர்பை துண்டித்துவிட்டு அவர்கள் சொன்னதை கேலி செய்வதும் தாங்கள் சொல்வது சரியென சொல்வதும் அதைவிட அந்த வானோலியில் ஒரு சிலர் தான் தொடர்ந்து பங்கு பற்றுவார்கள்.

Link to comment
Share on other sites

எனக்கு எந்த பத்திரிகைனு தெரியும் ஆனால் சொல்ல மாட்டன் லக்கி..ஆனால் அந்த பத்திரிகையினுடைய ஆசிரியர் வயதானவர் எல்லா? பதில் சொல்பவருடைய படத்தை பார்தால் இளமையாக இருக்கின்றதே?

சுண்டல் நிறைய நோண்டுறீங்க.... அவருக்கு படம் ஏது? அவர் முகத்தை கார்ட்டூனாகத் தானே போடுவார்? :lol::lol::lol:

Link to comment
Share on other sites

அட சாய் நானும் எடுப்பம் எடுப்பம் எண்டு பாக்கிறன் நீங்களோ எஸ்கேப் ஆகிறிங்க..

Link to comment
Share on other sites

அடக்கடவுளே உலகத்துல இப்படி எல்லாம் நடக்குதா?? ம்ம் ரொம்பக் கெட்டுத்தான் போச்சு :cry: :cry:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.