Jump to content

அனுபவங்கள்...(புதிய முயற்சி)

Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சில விடயங்களை பற்றி நாம் கருத்து எழுதும் போதோ அல்லது கருத்துக்களை வாசிக்கும் போதோ, அது சிலரது மனதைப் புண்படுத்த போகின்றதோ அல்லது அவர்களுக்கு நல்ல பாடங்களை கற்பித்து வாழ்வில் முன்னேற வழி வகுக்க போகின்றதோ என்பதை அறிந்து கொள்வது சற்று கடினம். அது அவரவர் அதை எடுத்துக் கொள்ளும் விதத்தில் இருக்கின்றது,

அந்த வகையில், நாம் ஏன் அனைவருக்கும் வாழ்க்கையில் முன்னேற அல்லது நல்ல வழியில் வாழ்க்கையினை கொண்டு செல்ல உதவக்கூடாது? இங்கே களத்தில் 20 வயதில் இருந்து 50 வரை உறுப்பினர்கள் இருப்பார்கள் போலத்தெரிகின்றது. அதிலும் மாணவர்களில் இருந்து பல் கலை வல்லுனர்கள் வரை இருக்கின்றார்கள்.

நம் அனைவருக்கும், பல அனுபவங்கள் ஏற்பட்டிருக்கும் வாழ்கையில், கல்லூரி நாட்களில், பல்கலையில், வேலை செஇயும் இடங்களில் மேலும் பல இடங்களில். அதில் அறிவார்த்தமான், பாடங்களை உணர்த்தக்கூடிய, தெரியாததை தெரிந்து கொள்ளக்கூடிய அனுவங்களை நாம் ஏன் இங்கு மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளக்கூடாது? அது மற்றவர்களுக்கு பல வகைகளில் உதவக்கூடும், அத்தோடு, ஒரு பொழுதுபோக்கு அம்சமாகவும் இருக்கும். தயவு செய்து காதல், சுயசரிதை, மற்றும் ஏமாற்றப்பட்ட கதைகள் இங்கு வேண்டாம். உதாரணத்திற்கு, உங்கள் பல்கலைகழகத்தில் நீங்கள் செய்த/செய்கின்ற ஏதாவது ஒரு ஆரய்ச்சி பற்றி அல்லது அதனால் நீங்கள் அடைந்த நன்மை பறி அல்லது தீமை பற்றி, அல்லது உங்கள் வேலை இடத்தில் நீங்கள் உங்கள் வேலையை கட்சிதமாக முடிப்பதற்க்கு நீங்கள் கையாழும் உங்களுடைய தனிப்பட்ட முறைகள் பற்றி எழுதலாம்...

நம்ம ஜமுனா, பல்கலையில் எவரும் தன்னை பார்கின்றார்கள் இல்லை என்பதற்காக சோட்ஸ் அணிந்து செல்வன போன்றனவும் உண்மையாக இருக்கும் பட்சத்தில் எழுதலாம்....

அனுபவமுள்ள ஒருவர் தயவு செய்து ஆரம்பிங்கப்பா.... நாரதர் அண்ணா என்ன ஆளைக்காணம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாருக்கும் எந்தவிதமான அனுபவங்களும் ஏறபடவில்லையா? அல்லது கலந்து கொள்ள விருப்பம் இல்லையா? உங்கள் கருத்துகளை கூறுங்கள். நன்றி.

Link to comment
Share on other sites

யாருக்கும் எந்தவிதமான அனுபவங்களும் ஏறபடவில்லையா? அல்லது கலந்து கொள்ள விருப்பம் இல்லையா? உங்கள் கருத்துகளை கூறுங்கள். நன்றி.

நீங்கள் தானே அநுபவமுள்ள ஒருத்தர் தான் ஆரம்பிக்க வேண்டும் என்று சொன்னனீங்கள் அப்ப எப்படி நான் ஆரம்பிக்கிறது

:evil: :evil: :evil:

Link to comment
Share on other sites

நல்ல முயற்ச்சி ஆன இங்க சரிவருமோ தெரியாது, எதுக்கும் நீங்கள் அனுபவங்களை வகைப் படுத்திப் போட்டா நல்லம்.எழுதவதற்கு அல்லது நினைவை மீட்பதற்கு அது தூண்டுகோலாக அமையலாம்.

எனது வேலை,படிப்பு சம்பந்தமான பொதுவான அனுபவங்களைத் தொகுத்தால்,

1) நீங்கள் இப்போது இருக்கும் இடத்தில் உங்கள் திறமைகள் கவனிக்கப்படா விட்டால் அந்த இடத்தை விட்டு போவது நல்லது.

2)முயற்ச்சி திருவினை ஆக்கும்.விடாது பல முனைகளில் முஅயற்ச்சி செய்ய வேண்டும்.

3)உங்களுக்குப் பிடித்த துறையில் வேலை செய்வது நல்லம்.பிடிகாததைச் செய்வதால் நீங்கள் அதில் திறமாகச் செயற்பட மாட்டீர்கள்.

4)இன்னொருவருக்குக் கிடைக்காதது உங்களுக்குக் கிடைக்காது என்று எண்ண வேண்டாம்.தொடர்ந்து சுய முயற்சி அவசியம்.

5) எப்போதும் உங்கள் துறையில்,உங்கள் தொழிற்துறையில் உலகளாவிய ரீதியாக என்ன மாற்றங்கள் நிகழுகிறது என்பதையும் அவை உங்களின் வேலையில் எவ்வாறு தாக்கம் செலுத்தக் கூடும் என்பதையும் கவனித்துக் கொண்டிருங்கள்.தொலை நோக்கு என்பது அவசியம்.இது உங்கள் வாழ்க்கையைத் திட்டமிடவும் அவசியம்.

இப்போதைக்கு இவ்வளவும் காணும், தனிப்பட்ட அனுபவங்களை எழுதப் போய் சில பேர் உவர் தன்ர சுயதம்பட்டம் அடிக்கிறார் என்று எழுதவெளிக்கிடுவினம் எதுக்கு தேவயில்லாத வேலை இவ்வளவும் காணும்.

சும்மா எதாவது கேள்வி இருந்தா கேளுங்க பதில் தெரிந்தவர்கள் எழுதுவார்கள்.

அண்ணா இவ்வளவும் அருமையான தத்துவம் இராவணுக்கு சொல்லி தத்துவத்துக்கு மாத்த சொல்லுங்கோ ஆனால் என்ன கடைப்பிடிக்கிறதுதான் கஷ்டம் :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் தானே அநுபவமுள்ள ஒருத்தர் தான் ஆரம்பிக்க வேண்டும் என்று சொன்னனீங்கள் அப்ப எப்படி நான் ஆரம்பிக்கிறது

:evil: :evil: :evil:

அதுதான் தொடங்கிடடாங்களில்ல... சும்மா சோட்ஸ போட்டுக்கொண்டு அலையுறத விட.... எழுதலமல்ல...... பார்க்கலாம் என்ன அனுபவம் இருக்கு உங்களுக்கு... என்று..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.