Jump to content

வெண்முரசு – ஒரு பார்வை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வெண்முரசு – ஒரு பார்வை

வெ.சுரேஷ்

வெண்முரசு- ஒரு பொதுப்பார்வை

நேற்றுதான் தொடங்கியது போல் இருக்கிறது ஜெயமோகனின் மகாபாரத ஆக்கமான வெண்முரசு. அவரே கூறியிருக்கும்படி, இது 10 வருட செயல்திட்டம். ஆண்டுக்கு ஒரு புத்தகம் என்ற கணக்கில் பத்து புத்தகங்கள் வர வேண்டும். ஆனால் தொடங்கிய 7 மாதங்களிலேயே 3 புத்தகங்கள் வந்துவிட்டன. சுமார் 2500 பக்கங்கள் அளவுக்கு எழுதியாயிற்று. இதற்கிடையே பல கட்டுரைகள், கேள்வி பதில்கள், விவாதங்கள், வெண்முரசு பற்றிய கேள்விகளுக்கென்றே தனியாக ஒரு தளம், இலக்கியச் சந்திப்புகள் மற்றும் நெடும்பயணங்கள். ஜெயமோகனின் ஆற்றலும் உழைப்பும், அனைத்துக்கும் மேலாக புறச்சூழல் எப்படி இருந்தாலும் கவனம் குலையாத அவரது படைப்பூக்கமும், இதுதான் யோக மரபில் சொல்லப்படும் ஏகாக்கிரக நிலையோ என்று பிரமிக்க வைக்கின்றன.

இன்றைய தமிழ் இலக்கியச் சூழலில் ஒரு புத்தகம் வந்தால் அது குறித்த ஒரு பார்வை முக்கியமான இதழ்களில் வருவதற்கு ஆகும் காலத்தை எழுத்தாளன் கணக்கில் எடுத்துக் கொண்டால் எழுதுவதை விட்டு விடலாம் என்றே தோன்றும். ஆனால் ஜெயமோகன் அப்படி விடக்கூடியவரல்லர். மேலும், அவர் எழுதுவதைத் தொடர்ந்து வாசித்து, உடனடி எதிர்வினையாற்றும் தீவிர வாசகர்கள் இருப்பதும் ஒரு மிகப்பெரிய பலம். ஏன், அவரை ஒவ்வொரு நாளும் வாசிப்பவர்களில் நானுமே ஒருவன். என் அன்றாட நிகழ்ச்சி நிரலில் காலை ஆறரையிலிருந்து ஏழு மணிக்குள் நிச்சயமாக வெண்முரசு பாராயணம் உண்டு. அந்த அரை மணி நேரத்தில் சமையற்கட்டு பக்கமிருந்து எத்தனை சத்தம் வந்தாலும் காதில் போட்டுக் கொள்வதில்லை.

எத்தனை முறை படித்தாலும், நாடகமாகவோ திரைப்படமாகவோ பார்த்தாலும் அலுக்காத ஒன்று மகாபாரதம். நவீன காலத்தில் அது பல இந்திய மொழிகளில் பலவாறு மறு ஆக்கம் செய்யப்பட்டுள்ளது. இவற்றுள் நான் மொழியாக்கங்கள் வழியே படித்திருப்பவை கன்னடத்தில் பைரப்பாவின் பர்வம், மலையாளத்தில் இரண்டாமிடம் (எம் டி வி), இனி நான் உறங்கலாமா (பி.கே பாலக்ருஷ்ணன்) மராத்தியில் யயாதி (காண்டேகர்).

ஆனால் ஏனோ மகாபாரதம் தமிழ் இலக்கியவாதிகளைப் பெரிதும் கவரவில்லை என்றே தோன்றுகிறது. தமிழில் ராஜாஜி எழுதியது வியாசபாரதத்தின் சுருக்கமான நேரடி தமிழாக்கம், ராஜாஜியின் தனிக்கற்பனை கலவாத நூலென்பதால் அதை மறு ஆக்கம் என்று சொல்ல முடியாது. எம். வி வெங்கட்ராமின் நித்யகன்னி ஒரு நாவல்தான், ஆனால் பாரதத்தின் ஒரு சிறு பகுதியைத்தான் அவர் தொட்டிருக்கிறார். எஸ்.ராவின் உபபாண்டவம் நான் மேலே சொன்ன மறு ஆக்கங்களின் தரத்திலும் வரிசையிலும் வைக்கத் தகுந்த படைப்பாகவே தோன்றவில்லை. பாரதம் பற்றிய சிற்சில சிறுகதைகளும் தமிழில் உண்டு. இவற்றுள் ஜெயமோகனின் திசைகளின் நடுவே, இறுதி விஷம், பத்ம வியூகம், களம், அதர்வம், நதிக்கரையில் ஆகிய மகாபாரதச் சிறுகதைகளே நான் தமிழில் படித்த மகாபாரத மறு ஆக்கங்களில் சிறந்தவை என்று கருதுகிறேன்.

ஒருவிதத்தில் அந்தச் சிறுகதைகள் எல்லாமே ஓர் ஒத்திகைதான், ஜெயமோகன் முழு மகாபாரதத்தையும் தன் மொழியில், தன் பாணியில் எழுதுவதற்கு எடுத்துக் கொண்ட சிறு முயற்சிகளே அவை என்று சொல்லலாம். அவர் முழு பாரதத்தையும் எழுதுவது காலப்போக்கில் தவிர்க்க முடியாத நிர்பந்தம் என்றே எப்போதும் தோன்றும். ஆகவே அவர் வெண்முரசு என்ற பெயரில் அந்தப் பணியைத் துவங்கியது மிகவும் இயல்பாகவே இருக்கிறது. தற்காலத் தமிழ் எழுத்தாளர்களில் அவரிடம் மட்டுமே அதற்கான மொழிவளமும் சொல்லாக்கத் திறனும் நடையும் அமையப் பெற்றிருக்கிறது. அவை அவரது பழந்தமிழ் இலக்கியப் பயிற்சியினாலும் அவருக்கே உரிய இயல்பான தனித்திறனாலும் அமைந்தவை. சுந்தர ராமசாமி போன்ற ஓர் அசல் நவீனத்துவ எழுத்தாளரோடு முரண்பட்ட பார்வை கொண்டவராகத் தன்னை அவர் நிறுவிக் கொண்டதும் இதற்கு ஒரு காரணியாக இருக்கலாம். நவீனத்துவத்தின் கட்டுப்பாடுகளிலிருந்து முற்றிலும் தன்னை விடுவித்துக் கொண்டவர் ஜெயமோகன்.

அவருக்குச் சற்றே முந்தைய தலைமுறையில் நாஞ்சில் நாடனுக்கு தமிழின் பழந்தமிழ் இலக்கியப் பயிற்சி அதிகமும் உண்டு. அவர் இது போன்ற ஒரு முயற்சி செய்திருக்கலாம். ஆனால் வியப்பளிக்கும் வகையில், அவர் மகாபாரதம் குறித்து அவரது கட்டுரைகளில்கூட ஏதும் எழுதியதாகக் எனக்கு நினைவில்லை. அவர் மனம் கம்பனில் தோய்ந்தது. ஆக, ஜெயமோகனும் வியாசனுமே ஒருவருக்கொருவர் பொருத்தமானவர்கள்.

வெண்முரசு பற்றிப் பேசும்போது மனதில் எழும் முதல் கேள்வி, ஒரு படைப்பு முழுமையடைவதற்கு முன் அதற்கு விமர்சனம் எழுதுவது சரியாகுமா? ஆனால் அப்படிப் பார்த்தால் வெண்முரசுக்கு இன்னும் 10 வருடங்களுக்குப் பின்தான் விமர்சனம் எழுத வேண்டும். இதுவரை வெளிவந்துள்ள மூன்று புத்தகங்களுமே, நடையிலும் உள்ளடக்கத்திலும் வெவ்வேறு தொனியைக் கொண்ட தனித்தனி நாவல்கள் என்றே ஜெயமோகன் குறிப்பிடுகிறார். ஆகையால் ஒவ்வொரு புத்தகமும் நிறைவடைந்த உடனேயே அதைப் பற்றிய பார்வைகள் வருவது இயல்பானதே, அதில் தவறொன்றுமில்லை.

நானறிந்தவரை மகாபாரதம் மூன்று வகைகளில் மீளுருவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது (20ம் நூற்றாண்டில்). ஒன்று, மிகவும் சாமானிய யதார்த்த தளத்தில் அதன் அமானுஷ்ய, நம்ப முடியாத நிகழ்வுகளை முற்றிலும் அகற்றிவிட்டு எழுதப்பட்ட மகாபாரதம். இதன் சிறந்த உதாரணம் பைரப்பாவின் பர்வம். பீட்டர் ப்ரூக்ஸின் மகாபாரத நாடகமும் அதன்பின் வந்த திரைப்படமும்கூட இந்த வகையைச் சார்ந்தவை. மகாபாரதத்தை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் கோணத்தில் பார்த்து மனித உணர்ச்சிகளின் போராட்டக்களமாகவும் அறச் சிக்கல்களைப் பேசுவதாகவும் பார்ப்பது இரண்டாம் வகை அணுகல். எம்டிவியின் இரண்டாமிடம் மற்றும் பி. கே. பாலகிருஷ்ணனின் இனி நான் உறங்கட்டும் இவற்றுக்குச் சிறந்த உதாரணங்கள். மூன்றாவது பார்வை, மார்க்சிய பொருள்முதல்வாத வரலாற்றுவாத அணுகுமுறை. இது ராகுல் சாங்கிர்த்யாயன் வழி, அவர் நானறிந்த வரையில் பாரதத்தை முழுமையான ஒரு படைப்பாக எழுதவில்லை என்றாலும்கூட. தமிழில் அருணன் எழுதிய பூரு வம்சம் இந்த வகையின் அவ்வளவாக வெற்றி பெறாத ஓர் உதாரணம். திரைப்படங்கள் மெகா சீரியல்கள் தனி வழி. ஆனால் அவற்றிலும் சோப்ராவின் மகாபாரதத்தில் மாசூம் ராஜாவின் உரையாடல்கள் குறிப்பிடத்தகுந்த இலக்கிய அந்தஸ்து கொண்டவை. அதை வெங்கட் அழகாகவே தமிழாக்கம் செய்துள்ளார்..தமிழில் வந்த கர்ணன் மாயா பஜார் போன்ற திரைப்படங்களும் ரசிக்கத் தக்கவயாகவே இருந்தன. இவை தவிர, மிக அண்மையில் சோ, மகாபாரதத்தை ஓர் இந்து தர்ம நூலாக மிகச் சிறந்த முறையில் விவாதித்து எழுதியிருக்கிறார்.

இவற்றில் ஜெயமோகனின் வெண்முரசு எந்த வகையைச் சேரும்? ஒரு கோணத்தில் இது ஒரு தனிவகை, இன்னொரு கோணத்தில் மேற்சொன்ன அத்தனை வகைகளையும் உள்ளடக்கியது.

ஜெயமோகன் பெரிதினும் பெரிது படைப்பதையே தனது லட்சியமாகத் தொடர்ந்து முன்வைப்பவர். சின்னஞ்சிறு கதைகள் பேசுவதில் விருப்பமில்லாதவர். அதனால் அவரது மகாபாரதம் நிச்சயமாக ஒரு மிக விரிந்த தளத்தில் இருக்கும் என்பது எதிர்பார்க்கக்கூடியது. அவர் அதைத் தனி மனிதர்களின் நுட்பமான உணர்ச்சிப் போராட்டங்களின், அறச்சிக்கல்களின் அரங்கமாகவும் மிக நுட்பமான, உக்கிரமான அரசியல் சூதாட்டக்களமாகவும் பெரும் குலக்கலப்புகளின், போட்டிகளின், வரலாறுகளின் மூலம் இன்னும் சில ஆயிரம் ஆண்டுகளுக்கான இந்தியச் சமூகத்தின் அடிப்படை கட்டுமானங்கள் உருவாவதை சித்தரிக்கும் சான்றாவணமாகவும் பேரரசுகள் உருவாவதற்கு அடிப்படையான வணிகப் பொருளாதாரச் சக்திகளின் எழுச்சிகளையும் போட்டிகளையும் காட்டும் சமூக வரலாற்று அறிவியல் பார்வையும் கொண்ட பல வகைகளிலும் முழுமையடைந்த மிகப்பெரும் படைப்பாகவே வெண்முரசைப் படைக்க எண்ணுகிறார் என்பதை இந்த முதல் மூன்று நாவல்களிலிருந்து நாம் கண்டுகொள்ளலாம்.

அதனாலேயே இதுவரை எழுதப்பட்ட மறு ஆக்கங்களில் இல்லாத அளவுக்கு பாரதத்தின் நிலப்பகுதிகளையும், பருவ நிலைகளையும், கனிம வளங்களை எல்லாமும்கூட சித்தரித்துக் காட்டக்கூடிய ஒன்றாகவே இந்த நாவல்கள் உருவாகி வருகின்றன. இதில் எவ்வளவு தூரம் அவர் வெற்றிப் பெற்றிருக்கிறார் என்பதே கேள்வி. இதற்கான விவாதங்கள் ஒவ்வொரு நாவலையும் முன்வைத்து ஓரளவேனும் விரிவாகச் செய்யப்பட வேண்டும் – ஒரு முதல் முயற்சியாக முதற்கனல், மழைப்பாடல், வண்ணக்கடல் ஆகிய மூன்று நாவல்களையும் இந்த இதழில் உள்ள பிற கட்டுரைப் பகுதிகளில் தனித்தனியாகப் பேசியிருக்கிறேன். இங்கு இது குறித்துச் சில அடிப்படை கருத்துகளை மட்டும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

புனைவாகவோ தொன்மமாகவோ நின்றுவிடாமல் அதற்கப்பால் இந்திய வரலாற்று ஆய்வுகளையும் அறிவியல் தரவுகளையும் இந்திய நிலவியலையும் கருத்தில் கொண்டு இந்திய சமூக வரலாற்றுச் சித்தரிப்பாக வாசிக்கப்படக்கூடிய மெய்ம்மை கொண்டதாக எழுதப்பட்டிருக்கிறது என்பதுதான் வெண்முரசின் தனித்தன்மை. பொதுவாகப் புனைவுகளில் தகவல் பிழைகள் போன்றவை முக்கியமானவை அல்ல என்ற ஒரு கருத்து உண்டு. அது ஓரளவுக்குத்தான் நியாயம் என்பேன். அதிலும் பிற புனைவுகளைக் காட்டிலும் முழுமையை நோக்கிச் செல்லும் வெண்முரசு போன்ற ஒரு நாவலுக்கு, அது தன்னுள் கொண்டிருக்கும் நம்பகத்தன்மை மிக முக்கியமானதாகிறது.

எந்த ஒரு புனைவிலும் அதன் படைப்பாளிக்கும் வாசகனுக்கும் இடையே குறைந்தபட்ச புரிந்துணர்வு ஒன்று உண்டு. வாசகன் அவனது தரப்பிலிருந்து தன் சுயவிருப்பத்தின் பேரில் அவநம்பிக்கையைத் தளர்த்திக் கொண்டு அந்தப் படைப்புக்குத் தன்னை ஒப்புக் கொடுக்கிறான் (Willing Suspension of Disbelief). ஒரு புனைவில் இது இவ்வாறாக, இந்தக் காலத்தில், இந்த இடத்தில் நிகழ்ந்தது என்று படைப்பாளி காட்டும்போது அதை வாசகன் அதிக அளவில் கேள்விகள் கேட்காமல் ஏற்றுக்கொண்டு அந்தப் புனைவின் உலகில் திளைக்கும்போதுதான் படைப்பு அந்த வாசகனின் மனதில் வெற்றிகரமான ஒன்றாக நிலை பெறுகிறது. மாறாக இது இவ்வாறு, இந்தக் காலத்தில் இந்த இடத்தில் நிகழ்ந்திருக்க சாத்தியமில்லை என்று ஒரு வாசகன் மனதில் ஐயம் எழ இடம் கொடுக்குமேயானால் அங்கு புனைவின் ரசவாதம் நிகழ்வதில்லை. இது போன்ற ஐயங்கள் எழ இடம் கொடுக்காவண்ணம் படைப்பை எழுதிச் செல்வதே ஒரு படைப்பாளியின் முன் உள்ள முதன்மைச் சவால். வெண்முரசு நாவலில் சில இடங்களில் இந்த willing suspension of disbelief கூடுதலான சோதனைக்கு உள்ளாகிறது என்பது என் எண்ணம். இந்த இடங்கள் நாவலை ஒரு செவ்வியல் காவியம் என்ற உயர்நிலையில் இருந்து, என்னளவில் ஒரு சாகசப் புனைவு என்ற நிலைக்கு ஆங்காங்கே இறக்கிவிடவும் செய்கிறது.

ஆனால் இது போன்ற இடங்கள் சிலவே. மேலும் இந்த ஐயங்கள் வினாக்கள் எல்லாமே என் தனிப்பட்ட ரசனையிலிருந்தும் அறிதலில் இருந்தும் எழுபவை. இன்னொரு வாசகருக்கு இவை முழுவதும் ஏற்றுக் கொள்ளக் கூடியவையாகவும் இருக்கலாம். அதேபோல் எனக்கு இதில் பிடித்து மற்றவர்களுக்கு ஓரளவுக்குப் பிடிக்காமல் போகக்கூடிய ஒன்றையும் நான் சொல்லலாம் என்று நினைக்கிறேன்- சிலருக்கு இந்த மூன்று புத்தகங்களுமே வார்த்தைப் பெருக்கு கொண்டவையாகத் தோன்றலாம். ஆனால் இது போன்ற ஒரு நாவலில் அதற்கு இடமுண்டு என்றே நினைக்கிறேன். இந்த மூன்று நாவல்களிலுமே பல வரிகள் மேற்கோள்களாகப் பயன்படுத்தக்கூடிய அழகுடன் தனித்து நின்று மின்னுகின்றன. இதைச் சொல்லும்போது அ.முத்துலிங்கம் சமீபத்தில் நோபல் பரிசு பெற்ற ஆலிஸ் மன்றோ சொல்வதாகச் சொன்ன ஒன்று நினைவுக்கு வருகிறது. ஆலிஸ் மன்றோ கதையை எழுதி முடித்தபின் மீண்டும் படிக்கும்போது ஏதாவது ஒரு வரி தனி அழகோடு இருப்பது போல் தோன்றினால் உடனே அதை நீக்கி விடுவாராம். எல்லாருக்கும் இப்படி இருக்க வேண்டியதில்லை. என்னைப் பொறுத்தவரை, ஜெயமோகனின் மொழி அழகு தீசலில் உள்ள ருசி போல் படிப்பதற்குக் கிறக்கமாகவே உள்ளது. அதிலும் இப்போது வரும் நீலம் தொடரின் மொழி மூச்சுத் திணற வைக்கிறது.

இந்த மூன்று நாவல்களில் முதல் இரண்டும் புத்தகங்களாக வெளிவந்துவிட்ட நிலையில் இவற்றை தமிழ் இலக்கிய உலகம் எதிர்கொண்ட விதம் என்ன என்று பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. முதற்கனல் வெளிவந்து நான்கைந்து மாதங்களுக்கு மேல் ஆன நிலையில் இதுவரை ஒரு நல்ல விமர்சனம்கூட வரவில்லை என்பது வருத்தமளிக்கக்கூடியது. வந்திருக்கும் விமர்சனங்கள் எல்லாம் என் போன்ற வலைப்பதிவர்கள் செய்ததுதான். நான் எதிர்பார்ப்பது மகாபாரதத்தில் நல்ல வாசிப்புள்ள, பழந்தமிழ் இலக்கியப் பயிற்சி பெற்ற, இந்திய தத்துவ இயலில் நல்ல பரிச்சயம் உள்ள எழுத்தாளர்கள் மற்றும் விமர்சகர்களின் எதிர்வினைகள். ஆனால் அப்படி எதுவும் இல்லை.

தமிழின் முன்னணி இலக்கியப் பத்திரிக்கைகளோ இப்படி ஒரு நிகழ்வு நடப்பதாகவே காட்டிக் கொள்வதில்லை. ஜெயமோகன் இதைத் துவக்கியபோது வாழ்த்து தெரிவித்த, ஆரம்ப அத்தியாயங்கள் குறித்துப் பாராட்டி எழுதிய தமிழ்ப் படைப்பாளிகள் யாரும் முழுமையான ஒரு விமர்சனம் எழுத இதுவரை முன்வரவில்லை என்பது வியப்பும் ஏமாற்றமும் தருகிறது. இத்தனைக்கும் ஜெயமோகன் தொடர்ந்து தமிழில் வரும் நல்ல படைப்புகளைக் கவனப்படுத்திக்கொண்டும் நிறைய சந்தர்ப்பங்களில் முழுமையான விமர்சனங்களையும் எழுதிக் கொண்டே இருப்பவர். காவல் கோட்டம், ஆழிசூழ் உலகு, மணல் கடிகை போன்ற நாவல்களுக்கு அவர் எழுதியுள்ள விமர்சனங்கள் காலம் கடந்து நிற்கும் வலிமை பெற்றவை. ஆனால் கடந்த 5-6 ஆண்டுகளில் வெளிவந்துள்ள அவரது படைப்புகள் குறித்த ஆழமான, காத்திரமான விமர்சனங்கள் வந்திருக்கிறதா என்று தேடிப் பார்க்கவேண்டிய நிலைதான் உள்ளது. அண்மையில் வெளிவந்த காலச்சுவடு செப்டம்பர் இதழில் அசோகமித்திரன் தன நேர்காணலில் வெண்முரசுப் பற்றி கூறியிருக்கும் கருத்தைப் பார்க்கும்போது இப்படியான விமர்சனங்கள் வராமலிருப்பதே மேல் எனவும் தோன்றிவிடுகிறது.

எது எப்படியாயினும் பத்து வருடங்களில் பத்து புத்தகங்கள் என்று ஆரம்பித்தது – முதல் வருடம் முடியும் முன்னரே நான்கு (ஐந்து?) புத்தகங்கள் வெளியாகிவிட்ட அதிசயத்தைக் கண்ட வியப்புடன் 10 வருடங்களின் முடிவில் என்னென்ன நிகழுமோ என்று பார்க்கப் பேராவலாகத்தான் உள்ளது.

oOo

முதற் கனல்- உரைநடையில் ஒரு காவியம்

ஜெயமோகனின் பாரதமான வெண்முரசின் முதல் நாவலான முதற் கனல் ஜனமேஜெயனின் சர்ப்ப சத்ர யாகத்தை நிறுத்தவரும் ஆஸ்திகன் தன அன்னை மானசா தேவியின் வேசர நாட்டிலிருந்து புறப்படுவதில் துவங்கி அவன் வெற்றியுடன் தாயிடம் திரும்புவதில் முடிகிறது. இடையில் வைசம்பாயனரின் சொல்லில் விரிகிறது பாரதம். வியாச பாரதத்தில் உள்ள பகுதியைப் பொறுத்தவரை சந்தனுவின் மரணத்தில் துவங்கி சிகண்டி பீஷ்மரை இன்னாரென்று அறியாமல் சந்தித்து தன்னைச் சிஷ்யனாக ஏற்றுக் கொள்ள இறைஞ்சும் இடத்தோடு முடிகிறது.

வெண்முரசு நாவல் வரிசையில் முதல் புத்தகமாகிய முதற்கனலை நிச்சயமாக ஒரு காவியப் படைப்பு எனக் கூறலாம். காவியத்துக்குரிய கம்பீரம், நளினம், பாத்திர வார்ப்பு, தத்துவச் செறிவு, சொற்சுவை என பல வகைகளில் பிரம்மாண்டமான ஒரு படைப்பு இது.

இதன் கம்பீரம் மற்றும் பிரம்மாண்டம். இந்தப் பிரம்மாண்டம் என்பதை ஒரு திரைப்படம் குறித்துச் சொல்லும்போது எளிதில் விளக்கிவிடலாம். ஆனால் எழுத்தில் சற்று கடினம்தான், ஓர் உள்ளுணர்வாக வேண்டுமானால் உணர முடியும். இந்த உணர்வு தோன்றுவதற்கு ஒரு முக்கிய காரணம், ஆஸ்திகனின் அஸ்தினபுரி பயணக் காட்சிகள், கங்கையின் தோற்றம், விந்திய சாரலின் தோற்றம், சப்தசிந்துவின் வர்ணனை, பீஷ்மரின் தேசாந்திரக் காட்சிகள், சிகண்டி பீஷ்மரைச் சந்திக்கும் பாலை நில விவரணைகள் என்று பல நிலவியல் காட்சிகளின் சித்தரிப்பைச் சொல்லலாம். சிறுவயதில் டென் கமாண்ட்மெண்ட்ஸ், பென் ஹர் போன்ற படங்களில் திரையில் பார்த்த பிரம்மாண்டம் இங்கு வார்த்தைகளில் விரிவதைக் காண முடிகிறது.

காவியத்தன்மையின் மற்றொரு இயல்பைப் பார்த்தால், பாத்திரங்களின் சித்தரிப்பு அதியற்புதமாக அமைந்திருக்கிறது. பீஷ்மர், அம்பை, வியாசர், சிகண்டி, ஆகியோர் மீது புது வெளிச்சம் விழுகிறது என்றால், மகாபாரதத்தில் மிகச் சிறிய பாத்திரங்களாக வருபவர்கள் விரிவடைந்து துலக்கம் பெறும் அழகு குறிப்பிடத்தக்க ஒரு முக்கிய அம்சம்.

உதாரணமாக, விசித்திர வீரியன். முகலாய வரலாற்றில் பாபருக்கும் அக்பருக்குமான ஒரு காற்புள்ளியே ஹுமாயுன் என்று சொல்லப்படுவதுண்டு. அதைப்போல் சந்தனுவுக்கும் திரிதிராஷ்ட்ரன் மற்றும் பாண்டுவுக்கும் இடையே உள்ள காற்புள்ளி போலத்தான் வியாச பாரதத்தில் விசித்திரவீரியன் பாத்திரம் அமையும். ஆனால் முதற் கனலின் விசித்திர வீரியன் ஓர் அசாத்தியமான கற்பனை வீச்சுடன், மறக்க முடியாத ஒரு பாத்திரமாக, ஒளிமிகுந்த ஒரு வால் நட்சத்திரம் போல் ஜ்வலித்து அடங்குகிறான். முக்கியமாக அவன் தன் அணுக்கரான ஸ்தானகருடனும் அம்பிகையுடனும் நிகழ்த்தும் உரையாடல்களில் உள்ள கைப்பும் நகைச்சுவையும் அபாரம்.

அம்பையின் தாய் புராவதியின் துயரம். நான் படித்த எந்த பாரதத்திலும் அம்பையின் தாய் சித்தரிக்கப்பட்டதில்லை. ஆனால் முதற் கனலில் அம்பையின் தாய் புராவதியின் பாத்திரமும் அவரது துயரமும் முடிவும் மனதை அசைக்கின்றன. பிறகு அம்பையின் பூசகனாக வரும் படகோட்டி நிருதன்.

பாத்திரங்களுக்கிடையேயான உறவுகளின் நுட்பமும் தன்மையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது. பீஷ்மருக்கும் அம்பைக்கும் இடையே இருப்பது ஆழமான வெறுப்பா அல்லது காதலா? சத்யவதிக்கு சித்ராங்கதன் எப்படி பொருள்படுகிறான்? சிகண்டிக்கும் பீஷ்மருக்குமான உறவு வியாசருக்கும் சுகருக்கும் இடையே உள்ளது, என்று அசைபோட வைக்கும் அம்சங்கள் ஏராளம்.

அம்பிகை மற்றும் அம்பாலிகையுடன் கூடியபிறகு வியாசர் கொள்ளும் ஆழமான மனக்கிலேசம் இதுவரை இலக்கியப் படைப்புகளில் காட்டப்படாத ஒன்று. தமிழகத்திலிருந்து வடக்கு நோக்கிப் பயணிக்கும், அஜீவக கருத்தின் ஊற்றினைப் போல காட்டப்படும் சாத்தன் எனும் முனிவருடனும் தன மகன் சுகருடனும் இது குறித்து அவர் மேற்கொள்ளும் உரையாடல்கள் மிக உயரத்தில் நிற்கின்றன. இதைப் போலவே அம்பை முதலான இளவரசிகளை விசித்திர வீரியனுக்காகச் சிறை கொள்ள, தான் போவதை பற்றி பீஷ்மர் கொள்ளும் தடுமாற்றம், அது குறித்து வியாசருடன் அவர் மேற்கொள்ளும் உரையாடலும். வியாசர் அங்கு சிபியின் கதையைச் சொல்வதும் அதைக் கேட்டுக் கொண்டிருக்கும் சித்திரகர்ணி என்னும் சிம்மம் கந்தினி எனும் பசுவுடன் யுகம் யுகமாக தான் கொள்ளும் உறவினை நினைவு கூர்ந்து அதை வேட்டையாடுவதும் அந்த நிகழ்விலிருந்து பீஷ்மர் அடையும் தெளிவும் ஓர் அற்புதமான தனி சிறுகதையாகவே உள்ளது.

காவியத்துக்குரிய தத்துவ ஆராய்ச்சி என்று எடுத்துக் கொண்டால், சித்திரகர்ணி, குஹ்யஜாதை என்ற சிங்கம் மற்றும் கழுதைப்புலியின் உரையாடல்கள் மற்றும் அவை உணர்த்தும், உண்பதும் உண்ணப்படுதலுமே இப் பிரபஞ்சத்தின் முடிவுறாத விளையாட்டு என்ற தரிசனம் உருவாகி வருவதைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

அதே போல் சுகப்பிம்ம ரிஷியும் வியாசனும் சந்திக்கும் இடம். விந்தய மலைப் பிரதேசத்தில் எங்கோ இருப்பதாகக் கூறப்படும் அந்த இடத்தின் வர்ணனையில் ஒரு புது உச்சத்தைத் தொடுகிறார் ஜெயமோகன். விசித்திர வீரியனின் நோய்தீர்க்க வரும் அகத்தியர் மரபில் வந்த ஒரு தென்னக முனிவரின் பாத்திரமும் குறிப்பிடத்தக்கது.

நாவலில் ஜெயமோகனின் எழுத்தில் கவித்துவம் ஒரு உச்சத்தை தொட்டு அங்கேயே தங்கி நிற்கிறது. எத்தனையோ உதாரணங்களைச் சொல்லலாம். எனக்கு மிக மிகப் பிடித்த ஒன்று பீஷ்மனிடம் காதல் கொண்டு அவனிடம் திரும்பும் அம்பையுடன் சுவர்னை, சோபை, வ்ருஷ்டி என்று சொல்லப்படும், பெண்ணின் மாறும் பருவத்துக்கு உரிய தேவதைகள் ஊடாடும் தருணங்கள்.

இதில் ஜெயமோகன் புதிதாக உருவாக்கியிருக்கும் தமிழ் சொற்கள் குறித்தே தனியாக எழுதலாம். பிரசவ அறை என்பதற்கு ஈற்றரை, ஒப்பனை அறை என்பதைச் சொல்லும் அணியறை, சாபம் என்பதற்கு தீச்சொல், ஜாதகம் என்பதற்குப் பிறவி நூல், அமாவாசையை குறிக்கும் கருநிலவு நாள், மௌன விரதம் என்பதற்கான பேசா நெறி என்று உடனடியாக நினைவுக்கு வருவது தவிர இன்னும் நிறையப் புதுச் சொற்களை உருவாக்கிக் கையாள்கிறார் ஜெயமோகன். மேலும் அத்தியாயங்களின் பெயர்களுமேகூட கவித்துவமும் ஒன்றுக்கும் மேற்பட்ட பொருளும் கொண்டவை.

இறுதியாக, ஆனால் முக்கியமாக குரு வம்சத்தை அழிக்கும் பெருவல்லமை கொண்ட பெருநெருப்பாகிய பெண்ணின் வஞ்சினம் என்பதைக் குறிக்கும் முதற் கனல் என்ற அந்தத் தலைப்பு. மொத்தத்தில் முதற்கனலில் காவியத்தன்மை முழுமையாகக் கைவரப் பெற்றிருக்கிறது என்று சொல்லலாம்.

இவற்றைச் சொன்ன அதே சமயம முதற் கனலில் எனக்குக் குழப்பம் ஏற்படுத்திய, புரிந்துகொள்ள முடியாத சில அம்சங்களும் உண்டு.

சிகண்டி அம்பையின் மறுபிறவியாக இல்லாமல் வளர்ப்பு மகனாக ஏன் இருக்க வேண்டும்? இதை மர்மம் கலைத்தல் என்று எடுத்துக் கொள்வதா?

இது குறித்துக் கொஞ்சம் விவாதிக்க வேண்டியிருக்கிறது. நிறைய இடங்களில் ஜெயமோகன் யதார்த்தத்தை மீறிய இடங்களைச் சித்தரிக்கும்போது அவற்றின் மீயதார்த்த அம்சங்களை நீக்கவே செய்கிறார். ஆனால் அது ஓர் ஒழுங்கமைவு பொருந்தப்பெற்ற அணுகுமுறையாக இருப்பதில்லை. உதாரணமாக, சிகண்டியை அம்பையின் மறுபிறப்பாகக் காட்டுவதை அவர் தவிர்ப்பதற்கு அது யதார்த்தத்தை மீறிய ஒன்று என்பதுதான் ஒரே காரணம் என்று புரிகிறது. ஆனால் சிங்கங்களும் கழுதைப்புலிகளும் நாகங்களும் உயர் தத்துவமேகூடப் பேசும் ஒரு படைப்பில் இது மட்டும் ஏன் தவிர்க்கப்பட வேண்டும்? இந்தச் சிக்கல் முதற் கனலைவிட அடுத்த நாவலான மழைப்பாடலில் இன்னும் அதிகம்.

மீண்டும் மீண்டும் வரும் நாகர்கள். பாரதத்தில் நாகர்கள் கணிசமாகவே குறிப்பிடப்படுகிறார்கள், புராதன இந்தியாவில் அவர்கள் ஒரு தனி இனம் என்று கொள்வதற்கும் இடம் உண்டு. இருப்பினும் முதற் கனலில் வரும் நாகர் பாத்திரங்கள் ஒரு நண்பர் குறிப்பிட்டிருந்தது போல், இது மகாபாரதமா அல்லது நாகபாரதமா என்றே கேட்க வைக்கிறது. உதாரணமாக தாக்ஷாயனியின் தந்தை தக்ஷன் உட்பட பலரும் ஏன் நாகராக இருக்க வேண்டும்? இந்த இடத்தில் ஜெயமோகன் பிரஜாபதியான தட்சனையும், நாக அரசனான தக்ஷகனையும் குழப்பிக் கொள்கிறாரோ என்ற சந்தேகம் வருகிறது. ஆஸ்திகன் ஜனமேஜெயனிடம் தானம் கேட்குமிடத்திலும் தக்ஷகனின் உயிர் என்பதற்குப் பதிலாக தட்சனின் உயிர் என்றே வருகிறது.

யஜ்னசேனன் என்னும் துருபத மன்னனின் பாத்திரம். நான் படித்தவற்றுள் எல்லாம் இவன்தான் சிகண்டி, திரௌபதி, திருஷ்டத்யும்னன் உட்பட 11 மக்களின் தந்தை. ஆனால் ஜெயமோகன் படைப்பில் ஏனோ சிகண்டி யஜ்னசேனனின் சகோதரன் முறையாகக் காட்டப்படுகிறான்.

வியாச பாரதத்தில் இருப்பது போலவே எழுத வேண்டும் என்பதோ அல்லது அதிலிருந்து விலகவே கூடாது என்பதோ அல்ல. ஆனால் அத்தகைய விலகல்களுக்கு, அதிலும் குறிப்பாக முக்கியமாக உறவு முறைகளையேகூட மாற்றுவதற்கு மிக வலுவான காரணங்கள் தேவை. அது பொருந்தியும் வர வேண்டும். உதாரணமாக, அம்பை பீஷ்மன் மேல் காதல் கொள்வதாகக் காட்டியிருப்பதும் பீஷ்மனும் நிலைதடுமாறுவதும் பின் இறுகி தன்னிலைக்குத் திரும்புவதுமாக இருப்பதும், நிராகரிக்கப்பட்ட காதல் பெரும் வன்மமாக மாறுவதும் பொருத்தமானதாகவே இருக்கிறது. ஆனால் சிகண்டி- துருபதன் உறவு முறையை மாற்றியது குறித்து இதுவரை எழுதியுள்ளதில் அப்படியான எந்த காரணமும் எனக்குத் தெரியவில்லை.

நாவல் ஆஸ்திகன் தன் இருப்பிடம் திரும்புவதோடு முடிவதில் ஒரு முழுமை இருந்தாலும் வைசம்பாயனரின் பாரதக் கதை முடியும் இடம் (பீஷ்மர்- சிகண்டி சந்திப்போடு) சற்றே ஏமாற்றம் தருவதோடு வலிந்து செய்தது போலவும் இருக்கிறது. இது ஒரு புறமிருந்தாலும் ஒரு முறை படித்து முழுவதும் அள்ளி விடமுடியாமல் பலமுறை படித்துத் திளைக்க வேண்டிய ஒரு படைப்பு இது என்று நிச்சயமாகக் கூறுவேன்.

oOo

மழைப்பாடல் – பெண்குரல்கள்

மகாபாரதத்தில் ஸ்திரீ பர்வம் என்ற ஒரு தனி பர்வமே உண்டு, யுத்தம் முடிந்ததற்குப் பின்னால். ஆனால் ஜெயமோகனின் வெண் முரசு இரண்டாவது புத்தகத்தையே ஸ்திரீ பர்வம் என்று கூறலாம். அந்த அளவுக்கு மழைப்பாடலில் பெண்களே ஆதிக்கம் செலுத்துகிறார்கள். பீஷ்மன் தன் தேசாந்திரத்தை முடித்துக்கொண்டு அஸ்தினபுரி திரும்புவதில் துவங்கி பாண்டுவின் மரணத்துக்குப் பின் சத்யவதி, அம்பை, அம்பாலிகை ஆகியோர் வனம் புகுவதில் முடியும் மழைப்பாடல் முழுக்க முழுக்க சத்யவதி,அம்பிகை, அம்பாலிகை காந்தாரி மற்றும் குந்தி ஆகியோருக்குரிய களம்தான்.

முதற் கனல் நாவலிலிருந்து நிச்சயமாக ஒரு வேறுபட்ட தொனியில்தான் இதை எழுதியிருக்கிறார் ஜெயமோகன். இதில் மகாபாரதம் நடக்கும் நிலவியல் மற்றும் காலம் குறித்த விரிவான நுணுக்கமான சித்தரிப்புகள் வருகின்றன. முதற் கனல் மலையிலிருந்து ஆர்பரித்துக் கொட்டும் அருவி என்றால் மழைப்பாடல் சமவெளியில் விரிந்து பரந்து எளிதில் கண்டுகொள்ள முடியாத வேகமும் ஆழமும் கொள்ளும் பெரும் நதி என்று சொல்லலாம்.

இந்த இரண்டாவது நாவலில் ஜெயமோகன் ஒரு மிகப் பெரும் சவாலை ஏற்றுக் கொள்கிறார். ஒன்று, அஸ்தினபுரியின் அரண்மனை மனிதர்களின் தனிப்பட்ட ஆசைகள், போட்டிகள், உறவுகள், பிணக்குகள் ஆகியவற்றின் சித்திரம். இன்னொன்று, மகாபாரதத்தை அதன் காலகட்டத்தின் நிலவியல் அரசியல் பொருளியல் மற்றும் சமூகப் பின்னணிகளோடு பொருத்திப் பார்க்கும் ஒரு பார்வை. இதற்கு முன்னான மறு ஆக்கங்களில் இந்த இரண்டையும் இணைத்துப் பார்க்கும் பார்வை இல்லவே இல்லை என்றே சொல்லலாம்.

மேலே சொன்ன இந்த இரு சவால்களில் முதலாவதில் முழு வெற்றி அடைகிறார் ஜெயமோகன். வியாச பாரதத்தில் வெறும் அடிக்குறிப்புகள் போலவே காணப்படும் அம்பிகை, அம்பாலிகை ஆகிய இரு பாத்திரங்களும் சரி, ஓரளவுக்குச் சித்தரிக்கப்பட்டிருக்கும் சத்யவதியின் பாத்திரமும் சரி, ஜெயமோகனின் பெரும் கற்பனையால் தமிழ் புனைவுலகில் இதுவரை வந்துள்ள எந்த பெண் பாத்திரங்களுக்கும் இணையாகத் தனி பெரும் இருப்பை அடைகிறார்கள். மீனவர் குலத்தில் பிறந்து அஸ்தினபுரியின் க்ஷத்ரிய குலத்தில் வாழ்க்கைப்படும் சத்யவதியின் கனவுகளும் லட்சியங்களும் மனவுறுதியுமே அஸ்தினாபுரியின், பாரதத்தின் வரலாற்றைச் செலுத்தும் விசைகளாகும் சித்திரம் அற்புதமாக வளர்ந்து வந்திருக்கிறது. பீஷ்மனும்கூட மீற முடியாத மிகப் பெரும் ஆளுமையாக சத்யவதி உருவாகியிருக்கிறாள். இவ்வளவு உறுதியும் தன்னம்பிக்கையும் இலட்சிய வேகமும் ராஜ தந்திரமும் கொண்ட சத்யவதியினுள் அழியாமல் இருக்கும் எளிமையான மீனவப் பெண்ணும், வயதானவருக்கு வாழ்க்கைப்பட்ட ஒரு இளம் பெண்ணும் இருப்பதைப பார்க்க முடிகிறது. பின், கடைசியில் வனம் புகுவதற்கு முன் முற்றிலும் கணிந்து ஒரு எளிய மூதன்னையாகவே தோற்றமளிப்பதும் அதே சத்யவதிதான் என்று எண்ணுகையில் பிரமிப்பு ஏற்படுகிறது.

பீஷ்மரால் வென்றெடுக்கப்பட்டு அஸ்தினாபுரிக்குள் முதிரா இளம் பெண்ணாக வரும் அம்பிகையும், தன் மூத்த சகோதரியின் கை பற்றி கிட்டத்தட்ட ஒரு சிறுமியாகவே விரிந்த விழிகளுடன் வரும் அம்பாலிகையும், ஒருவொருக்கொருவர் பார்த்துக்கொள்ளக்கூட விரும்பாதவர்களாக ஆவதும் பின் பாண்டுவின் மரணம் ஏற்படுத்தும் பெரும் வெறுமையில் தாம் அதுவரை கொண்ட பெரும் பகைமை ஒழிந்து மீண்டும் தாயும் சேயும் ஆவதும் மானுட அகங்களின் ஆழங்கள் நாம் ஒருபோதும் இதுவே இறுதி என்று அறியவொண்ணாத ஆட்டங்கள் நிகழும் களம் என்பதையே காட்டுவதாகும். அவர்கள் தங்கள் மைந்தர்களான திருதுராஷ்ட்ரனிடமும் பாண்டுவிடமும் கொள்ளும் உறவும் விலகலும் அவர்களிடம் காந்தாரியும் குந்தியும் ஏற்படுத்தும் மாற்றங்களும் அப்படியே.

நிச்சயமாக, குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய இன்னொரு பாத்திரப் படைப்பு குந்திதேவி. ஒரு அழுமூஞ்சிக் கதாபத்திரமாகவேதான் இதுவரை குந்தியைப் படித்தும் பார்த்தும் இருக்கிறேன். ஆனால் ஜெயமோகன் படைத்திருப்பது ஒரு ஆண்மகனின் கம்பீரம் சற்றே கலந்த பேரழகியான குந்தி தேவியை.

ஐராவதி கார்வே தன் மகாபாரதக் கட்டுரைகளில் (யுகாந்தா) குந்தியயைப் பற்றிக் ஒருபோதும் தன் வாழ்வைத் தானே தீர்மானித்துக்கொள்ள முடியாத ஒரு பெண் என்று குறிப்பிடுவார். ஆனால் ஜெயமோகனின் குந்திதேவி அப்படியல்ல. கர்ணனைக் கருக்கொள்வதிலிருந்து, பின் அக்கருவை அழிக்க முற்படுவதில் தொடர்ந்து, பாண்டுவோடு காட்டுக்குப் போய் தன் மற்ற மைந்தர்களை பெறுவதிலும், மாத்ரியுடனான உறவிலும் மிக மிக உறுதியான, தீர்க்கமான இலட்சியமிக்க பெண்ணாகவே மாற்றிப் படைத்திருக்கிறார் ஜெயமோகன். நம் நேசத்துக்குரிய குந்தி என்று சொன்னாலும் மிகையாகாது. இதில் விதுரனுக்கும் குந்திக்கும் இடையேயான உறவு ஒரு தனி நுட்பமான இழை. அறியப்படாமலேயே இதுவரை இருக்கும் விதுரனின் தாயான சிவையின் சித்தரிப்பும் சிறப்பித்துச் சொல்லப்பட வேண்டிய ஒன்று.

இப்படி ஒவ்வொரு பாத்திரமுமே தனித்தன்மை கொண்டு மிளிர்வதைச் சொல்லிக்கொண்டே போனால் அதற்கு நாமும் ஒரு வெண் முரசுதான் எழுதவேண்டியிருக்கும்- அளவில். அது சாத்தியமற்ற ஒன்று. எனவே, இதில் வரும் ஆண் பாத்திரங்களில் திருதிராஷ்ட்ரனும் பாண்டுவும் சகுனியும் விதுரனும் நாம் வழக்கமாகப் பார்த்திருக்கும் தன்மை கொண்டவர்களாக இல்லை. அதிலும் எப்போதும் துவக்கத்திலிருந்தே எதிர்மறை பத்திரமாகவே வரும் சகுனி இதில் மிகச்சிறந்த அரசியல் மதியூகியாகவும் சகோதர பாசத்தின் இலக்கணமாகவும் காட்டப்படுகிறான். மாறாக எப்போதும் ஒரு தர்மாத்மாவகவே காட்டப்படும் விதுரன் சற்றே scheming politician போலக் காட்டப்படுதலும் சுவாரசியத்தை கூட்டுகிறது என்பதை மட்டும் கூறி முடித்துவிடுகிறேன்.

அதேபோல் இதில் வியாசரிடமிருந்து விலகி ஜெயமோகன் படைத்திருக்கும் பல விரிவான நிகழ்வுகளும் கதைமாந்தர்கள் ஒருவொருக்கொருவர் கொள்ளும் உறவுகளும் படித்து அனுபவித்து விரித்துப் பேசப்பட வேண்டியவை. இவற்றுக்குச் சிறந்த உதாரணங்கள் பீஷ்மர் மேற்கொள்ளும் காந்தாரப்பயணம், அங்கு நிகழ்பவை, பீஷ்மருக்கும் சகுனிக்குமான உறவு, காந்தாரி அஸ்தினபுரிக்குள் நுழைந்ததும் நிகழும் குருதி மழை, கர்ணன் பாண்டவர்கள் மற்றும் துரியோதனனின் பிறப்புகளை விவரிக்கும் விதம், குந்தியின் சுயம்வரத்தில் போட்டி விவரங்கள் என்று பலவற்றைச் சொல்லலாம் .எதைச் சொல்லி எதை விட என்ற பெரும் திகைப்பே ஏற்படுகிறது.

மேற்சொன்ன அனைத்துமே அற்புதம் என்று ஒரு வார்த்தையில் முடித்துக் கொண்டு எனக்கு திருப்தியளிக்காத சில அம்சங்களைச் சொல்கிறேன்.

திருதுராஷ்ட்ரன் தோற்றம் மற்றும் அவன் உடல் மொழி சித்தரிக்கப்படும் முறை அதிருப்தி அளிகிறது. மிகப் பெரும் பலசாலியாகவும் கட்புலன் இழப்பிற்கு ஈடு செய்யும் வகையில் நுட்பமான செவிப் புலன் கொண்டவனாகவும் காட்டப்படும் திருதுராட்ரன் சமயத்தில் ஹல்க் மற்றும் கிங்காங் போலக் சித்தரிக்கப்படுகிறானோ என்ற எண்ணம் ஏற்பட்டது. அதே போல் அவன் பீஷ்மரைப் போருக்கு அழைப்பதும், பின்னர் காந்தாரத்தில் அவன் தனி ஒருவனாக கிட்டத்தட்ட 50 காந்தார வீரர்களைக் கொன்றுவிட்டு, நேராக காந்தாரி அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அறையின் கதவுக்கு முன் சென்று அதை உடைத்துத் திறந்து அவளைத் தோளில் தூக்கி வரும் காட்சியும். இந்தச் சம்பவங்கள் இந்நாவல் தொடர்ந்து இயங்கி வரும் ஒரு மிக உயர்ந்த தளத்திலிருந்து குப்புற விழுந்து ஒரு சராசரி சாகசக் கதைப் பாணியில் அமைந்துவிடுகின்றன. இவை தவிர்க்கப்பட்டிருந்தாலும் கூட நாவலுக்கு எந்தக் குறைவும் இல்லை என்பதே என் பார்வை. அதேபோல் குறைப் பிரசவம் போல் காட்டப்படும் பீமன் பிறப்பும் பலவீனமும், பின் அவன் குரங்குகளால் பாலூட்டி வளர்க்கப்படும் விதமும் டார்ஜான் கதை படிக்கும் உணர்வைத்தான் ஏற்படுத்துகிறது. பீமன் பிறப்பு குறித்த எந்த பாரதக்கதையிலும் இல்லாத ஒன்று இது என்றே நான் நினைக்கிறேன்.

இப்போது நான் சொன்ன அந்த இரண்டாவது சவாலுக்கு வருவோம். இன்று நம்மிடையே புழங்கும் பலவேறு மகாபாரதப் பிரதிகளிலுமே பாரதம் நடைபெற்ற காலம், நிகழ்ந்த இடங்கள் மற்றும் பத்திரங்களின் வயது ஆகியவை மிகவும் குழப்பமானவைதான். இதில் ஜெயமோகன் துணிந்து தன் படைப்பில் ஒரு திட்டவட்டமான் கால இட பின்னணியைப் படைத்திருக்கிறார். ஆனால் அதில் சில இடங்கள் கேள்விக்குரியவையாக அமைந்து விடுகின்றன. முக்கியமாக, நான் அறிந்தவற்றில் இருந்து சொன்னால் சில தகவல் பிழைகளும் உள்ளன. இவை எல்லாமே கதையோடு தொடர்பற்ற, தேவையற்ற கவனச் சிதறல்களாக இருக்கின்றன என்றும் சொல்லலாம்.

ஐதீகப்படி மகாபாரதம் நடைபெறுவது, துவாபர யுக- கலி யுக சந்தியில். பாரதத்தின் பெரும் போர் முடிந்து தருமன் 36 வருடங்கள் அரசாண்டபின் கிருஷ்ணனின் அவதாரம் முடியும்போதுதான் த்வாபர யுகம் முடிவுக்கு வந்து கலி யுகம் பிறப்பதாக ஐதீகம். ஆனால் ஜெயமோகன் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் திரேதா யுகம் முடிந்து துவாபர யுகம் பிறப்பதைப் பார்ப்பதாக பாத்திரங்களின் உரையாடல் மூலம் சொல்கிறார். மேலும் வெண் முரசுக்கான விவாதங்கள் நடைபெறும் தனி இணையதளத்தில் ஒரு கேள்விக்கு பதில் சொல்லும் போதும் பாரதம் திரேதா யுக துவாபரயுகச் சந்திப்பில் நடப்பதாகவே கூறுகிறார்.

பீஷ்மர் காந்தார தேசத்துக்குப் பயணம் போகும்போது இடையில் மொஹஞ்ச தாரோ (நேரடியாக இந்தப் பெயர் வராவிட்டாலும்கூட அந்தப் பெயரின் பொருள் வருகிறது) இடிபாடுகளைக் கண்டு போவதாக வருவது ஒரு பெரிய காலக் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. மொஹஞ்ச தாரோவின் காலம் கிட்டத்தட்ட முடிவான ஒன்று. ஆனால் பாரதத்தின் காலம் அப்படியல்ல, இதிஹாச காலத்தையும் வரலாற்று காலத்தையும் குழப்பிக் கொண்டிருக்க வேண்டாம். மேலும் இது எந்த வகையிலும் நாவலின் ஓட்டத்திற்கு உதவவில்லை. இந்தப் பகுதி இல்லாமல் போனாலும் நாவலுக்கு ஒரு குறைவும் நேராது.

தவிர கதையின் உள்ளேயே வரும் காலக் கணக்குகளும்கூட நம்ப முடியாததாக இருக்கிறது. பீஷ்மர் தன தேசாந்திரத்தை முடிக்கும் இடமான கூர்ஜரத்தில் சிராவண மாதம் முதல் வாரம் இருக்கிறார் என்று வருகிறது. அங்கிருந்து அவர் அஸ்தினபுரி சென்று பின் காந்தாரம் சென்று வருவது, மீண்டும் திருதுராஷ்ட்ரன் காந்தாரி திருமணத்திற்காக காந்தாரம் சென்று திரும்புவது, அந்த வருடத்தில் மிகத் தாமதமாக தென்மேற்குப் பருவமழை வருவது என்று சம்பவங்களுக்கு ஒரு கால இட, பருவ நிலை சார்ந்த பின்னணி உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் அந்தத் தாமதமான மழைக் காலத்திலேயே குந்தியின் அறிமுகம் அவள் கர்ப்பமாக இருக்கும் நிலையில் நடக்கிறது. பிறகு கர்ணன் பிறப்பு சூரியன் உச்சத்தில் இருக்கும் (கோடை) சித்திர மாதம் விசுவா ராசியில் என்று வந்தபின் கர்ணனை குந்தி தொலைப்பது மீண்டும் ஒரு மழைக்காலத்தில் என்றும் பாண்டு குந்தியின் சுயம்வரத்திற்கு கிளம்புவது மீண்டும் மழைக்காலத்தில் என்றும் வருவது நிச்சயமாக ஒரு சரியான, துல்லியமான காலவரிசையில் அமையவில்லை என்றே நான் நினைக்கிறேன். இந்தக் காலக் கணக்குகள் இவ்வளவு மெனக்கெட்டு காட்டப்பட்டிருக்கக்கூட வேண்டாம் என்றே தோன்றுகிறது. தவிர அம்பிகை அம்பாலிகைக்கு இடையே தோன்றும் பகை உணர்வின் தோற்றுவாயான சம்பவங்களின் நாடகீய சித்தரிப்புக்காக காலக் கணக்குகள் சௌகரியம் போல இழுக்கப்படுவதும் நிகழ்கிறது. உதாரணமாக அடுத்தடுத்த நாட்களில் கருவமையும் திருதராஷ்ட்ரன் பிறப்புக்கும் பாண்டுவின் பிறப்புக்கும் இடையேயான கால இடைவெளி- அதுவும் ஒரு பிளாஷ் பேக் உத்தியில் சொல்லப்படுவது செயற்கைத்தன்மை கொண்டதாக உள்ளது.

இந்தக் கால, பருவ நிலைக் குழப்பம் உச்சம் கொள்வது குந்தி அர்ஜுனனை கருக்கொண்டு பெற்றெடுக்கும் சம்பவத்தை விவரிப்பதில்.. குந்தி மழைக்காலத்தில் கருவுருகிறாள் என்று வருகிறது. அதற்குப் பின் கோடையின் சித்தரிப்பும் கோடை முதிர்ந்தபின் பனிக்காலம் வருவதாகவும் வருகிறது.அதன் இறுதியில் பங்குனியில் அர்ஜுனனின் பிறப்பு.நிகழ்கிறது. இந்தியப் பெரு நிலத்தில் எந்த ஒரு பகுதியிலுமே (சொல்லப் போனால் உலகெங்குமே) கோடைக்குப் பின் தான் பருவ மழைக்காலம்.பின்பு ஒரு சிறு autumn பின்புதான் தான் பனிக்காலம்.இந்த எளிமையான பருவகால வரிசையில் ஜெயமோகனை போன்ற ஒரு இயற்கை அவதானிப்பாளர் குழம்புவது ஆச்சரியமாக உள்ளது. ஒரு சாதாரண எடிட்டிங் இந்தக் குறையை நிவர்த்தி செய்து விடும். ஆனால் ஏனோ அது நிகழவில்லை.

பொதுவாகவே ஜெயமோகனின் பலம் அவர் தனிமனிதர்களின் ஆழ் மன ஓட்டங்கள், மனிதர்களுக்கிடையே உள்ள உறவுகளின் உளவியல் சிக்கல்கள், புரிந்துகொள்ள முடியாத மனிதச் செய்கைகளின் மூலமான நனவிலி ஊற்றுவாய்கண்கள் ஆகியவற்றை சித்தரிப்பதில் உள்ளது. இதில் அவர் கரைகண்டவர். ஆனால் இவற்றுக்கு அடிப்படையாக வரும் பிண்ணணி களத்தின் கால-இட சித்தரிப்பில் தடுமாறுகிறார் என்ற எண்ணம் எனக்குண்டு. அவரது சமீப ஆக்கங்களான உலோகம், அனல்காற்று, இரவு ஆகிய படைப்புகளிலும் இந்தக் குறை உண்டு என்பதை நான் அவற்றை வாசிக்கும்போதும் உணர்ந்தேன்.

மேலே சொல்லும் இந்தக் குறைபாடுகள் மழைப்பாடலை முதற் கனலின் உயரத்தை அடைவதிலிருந்து தடுக்கிறது என்றாலும் நான் முதலில் கூறிய நேர்மறை அம்சங்கள் இந்த நாவலின் வாசிப்பை ஒரு சிறந்த அனுபவமாக்குகிறது என்றே சொல்ல வேண்டும். வழக்கம் போல சண்முகவேல் ஜெயமோகன் வார்த்தைகளில் விவரிப்பதை எல்லாம் தன டிஜிட்டல் தூரிகையில் சிரமம் தெரியாதவண்ணம் தீட்டிவிடுகிறார் என்பதையும் சொல்லியாக வேண்டும்.

oOo

வண்ணக்கடல் – பாரத நெடும்பயணம்

மூன்றாவது நாவலான வண்ணக் கடல் எதிர்பாராத இடத்திலும் விதத்திலும் துவங்குகிறது. தென் தமிழ்நாட்டில், சொல்லப்போனால் குமரி நில நீட்சியில், தென் மதுரையில் ஏழ்பனைநாட்டு மருதூர் சாத்தன் பெரும்பாணன் மகன் இளநாகன், ஐந்நிலத்தையும் தன் வெண்குடை நிழலில் ஆளும் அரசன், மூவேந்தரும் அடிபணியும் மூத்தோன், தென்கடல் தொட்டு வடமலை ஈறாக மண்ணளக்கும் தண்கோலேந்திய கொற்றவன், தென்முடி என மணிமுடி சூடிய மன்னன் சேந்தூர் கிழான் தோயன்பழையன் எனும் அரசனைப் பகடி செய்து பாடி மூன்று செம்புக் காசுகள் பரிசில் பெறுவதில் துவங்குகிறது. சட்டென்று,நாம் வெண் முரசின் 3 நூலைப் படிக்கிறோமா அல்லது இது புதிதாக வேறு எதாவதா என்றே ஐயம் வருகிறது.

பின்னர்தான் தெளிவாகிறது, இந்த மூன்றாவது நூல் முற்றிலும் வேறு பாணியில் எழுதப்படுகிறது என்பது. இளநாகன் தென்மதுரை வரும் வடபுலத்துப் சூதர்களின் பாடல்களில் பேசப்படும் அஸ்தினபுரியின் கதைகளைக் கேட்டு அதை நேரில் காண பயணம் செய்கிறான். இந்தியாவின் பல்வேறு இடங்கள் வழியாக அவன் பல்வேறு சூதர் குழுக்களுடன் அஸ்தினபுரிக்கு பயணம் செய்யும்போது அவர்கள் ஒவ்வொருவரும் கூறும் கதைகள் வழியாக விரிகிறது வெண் முரசு வழியே கௌரவ- பாண்டவர்களின் வாழ்வின் அடுத்தடுத்த கட்டங்கள். உடன், தென்கோடியில் இருந்து அஸ்தினபுரி வரை நீளும் அன்றைய பாரதத்தின் நிலக் காட்சிகளும் அவற்றின் வரலாறுகளும்.

இறுதியில் இளநாகன் அஸ்தினபுரி சேர்ந்தானா, அவன் கேட்டறிந்த அஸ்தினபுரி நிகழ்வுகள் எல்லாம் உண்மையில் நடந்தவையா, நடந்தவை என்றால் அண்மைய அல்லது பழங்காலத்திலா, அஸ்தினபுரி என்பதே உண்மைதானா என்ற ஒரு மயக்க நிலையுடன் முடிவடைகிறது நாவல்.

இந்த வடிவம் குறித்து பிறகு பார்க்கலாம். இந்த நாவலில் சூதர் பாடல்கள் மூலம் விரியும் வியாச பாரதக் கதை பாண்டுவின் மரணத்துக்குப் பின் பாண்டவர்களோடு குந்தி அஸ்தினபுரி சென்றடைவதில் துவங்கி இளம் பாண்டவர்களும் கௌரவர்களும் அரங்கேற்றம் செய்யும்போது அங்கே கர்ணன் பிரவேசித்து தன் திறமைகளைக் காட்டி அர்ஜுனனை போட்டிக்கு அழைத்து அவமானப்படுத்தப்பட்டு, பின் துரியோதனனால் அங்கநாட்டு அரசனாகப் பட்டம் சூட்டப்படுவதோடு முடிகிறது.

பெயருக்கேற்றார்போல் கதாபாத்திரங்களின் பல்வேறு குணநலன்களின், ஆசாபாசங்களின் வண்ணக் கலவையாகவும், இந்தியாவின் நிலவியலின் வண்ணக் களஞ்சியமாகவுமே விரிந்திருக்கிறது இந்நாவல். இளம் பாண்டவர்களின், கௌரவர்களின் வளர்ச்சியை, அவர்களின் உறவின், பகையின் வளர்ச்சியை விவரிக்கும் நாவலில் மிகச் சிறப்பாக உருவாகி வருவது துரோணரின் பாத்திரம். ஒரு திரஸ்கரிக்கப்பட்ட, க்ஷத்ரியனா பிராமணனா என்ற அடையாளச் சிக்கலில் என்றென்றும் சிக்கியிருக்கும், தன மகன் அச்வத்தாமனின் நல்வாழ்வைத் தவிர எதுவும் பெரிதில்லை என்று நினைக்கும், மிகச் சிக்கலான பாத்திரமாக துரோணரை உருவாக்கியிருக்கிறார் ஜெயமோகன். பல படைப்புகளில் வெள்ளை வெளெரென்று பழுத்த பழமாக துரோணரை பார்த்துப் பழக்கப்பட்டவர்களுக்கு இதில் வரும் கருத்த இறுகிய குறு உருவம் படைத்த துரோணர் முற்றிலும் புதியவர்.

துரியோதனனும் பீமனும் இணைபிரியாத தோழர்களாக சிறிது காலம் வலம் வருவதும் ஜெயமோகன் உருவாக்கும் ஒரு சுவாரசியமான விலகல். ஒருவரின் ஆடிப்பிம்பமாகவே இன்னொருவரைக் காணும் இரண்டு பேருக்கும் இடையே நிகழும் விலகல், முக்கியமாக துரியோதனன் மனதில் பீமன் மீது விழும் குரோதத்தின் விதை முளைவிடும் அந்தச் சம்பவம் மிகச் சிறப்பாக சித்தரிக்கப்பட்டுள்ளது.பீமன் மற்றும் துரியோதனன் கரங்களை நாகங்களின் வடிவங்களாக , உறைவிடமாக சித்தரிப்பது ஒரு மகத்தான கற்பனை.

பீமனின் மடைப்பள்ளி ஆர்வமும் முதுபெரும் சமையற்காரரின் சிநேகமும் அன்னத்தின் வழியாக பிரம்மத்தை அறியவரும் அவனுக்கேயான ஞான மார்க்கமும் புதிய திறப்புகள். பீமனுக்கு அன்னம் போல் அர்ஜுனனுக்கு அம்பு. உலகின் மாபெரும் வில்லாளியாகும் அர்ஜுனனின் துவக்கப் பாடங்கள் விரிவது அற்புதம். தனுர்வேதம் குறித்த விவரங்கள் உண்மையிலேயே ஜெயமோகன் தனுர்வேதத்தை எங்கு கற்றார், எப்படி கற்றார். என்று அசர அடிக்கின்றது. எவ்வளவு உழைப்பு, எவ்வளவு அறிதல்கள், அதைச் சொல்வதில்தான் என்ன அழகு!

பின் கண்டிப்பாக கர்ணன். அதிகம் பேசாத, தன் பேரழகால் சூதர்கள் நடுவே தனித்து தெரியும், எப்போதும் சிந்தனையில் ஆழ்ந்திருக்கும் ஆழமான ஒரு ஆளுமையாக கர்ணனை படைத்திருக்கிறார் ஜெயமோகன். அதேபோல் ஏகலவ்யன். துரோணர் ஏகலவ்யனின் கட்டை விரல் காணிக்கை பெறும் அந்தக் கட்டம் பிரமிக்கத்தக்க வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது. அதிகம் அறியப்பட்டிராத ஏகலவ்யனின் தாய் பாத்திரமும் இன்னொரு உச்சமான சிருஷ்டி. இவர்களுக்கெல்லாம் இணையாகவே மிகச் சிக்கலான ஆளுமையாக உருவாக்கப்பட்டிருக்கிறான் துரியோதனனும்.

பிரமிப்பு ஏற்படுத்தும் வர்ணனைகளுக்கும் காட்சிகளுக்கும் பஞ்சமேயில்லாத படைப்பு இது. குறிப்பாக, குந்தி தன் மைந்தர்களுடன் வனத்திலிருந்து அஸ்தினபுரி செல்லும் வழியில் கார்க்கோடகனைச் சந்தித்து கர்ணன் குறித்து உரையாடல் நிகழ்த்தும் கனவு போன்ற காட்சி, பீமன் மீது கொண்ட குரோதத்தால் காட்டில் தனித்தலையும் துரியோதனன் ஒரு கந்தர்வனைக் கண்டு தன மென்மை நீங்கி பூரண வலிமை அடையும் காட்சி, துரோணர் துருபதனால் அவமதிக்கப்பட்டு பாஞ்சாலம் விட்டு நீங்கும் இடம், பீமன் நாகலோகம் சென்று விஷம் அருந்தி மீளும் காட்சிகள், மற்றும் நாவலின் இறுதியில் அரங்கேற்றக்களம் காட்சியில் இளம் பாண்டவர்கள் பயிற்சிக் களத்தில் பொருதுவதும், கர்ணனின் பிரவேசமும் பின் நடப்பவையும் என்று பல கட்டங்களைச் சொல்லலாம். இந்த களம் காட்சி ஏற்கனவே ஜெயமோகனின் களம் சிறுகதையில் விவரிக்கப்பட்ட ஒன்று. ஆனால் இம்முறை பீம-துரியோதனன் யுத்தப் பயிற்சிக்கு மாறாக பீமன்- துச்சாதனன் மோதுவதாக வருகிறது.

இவையனைத்தும் இந்நாவலை மிக உயர்ந்த தளத்தில் வைக்கும் என்றால் விவாதங்களுக்கும் சர்ச்சைக்கும் உரிய இடங்களும் கணிசமாகவே உண்டு.

வண்ணக்கடலின் மிகவும் முக்கியமான குறையாக அதன் வடிவத்தை, இளநாகனின் கதைமூலமாக பாரதக்கதை விரிவதை நான் சொல்வேன். இளநாகனின் அஸ்தினபுரி நோக்கிய பயணத்தில் சில அற்புதமான காட்சிகள் உண்டு என்றாலும் இரு பகுதிகளும் ஒட்டவேயில்லை. பாரதச் சம்பவங்களை நேர்க்கூற்றாகவே கூறியிருக்கலாம் என்றும் இளநாகன் பகுதிகள் இல்லாவிட்டாலும் ஒரு சேதமும் இருக்காது என்பதுமே என் அவதானிப்பு.

பின் மீண்டும் கதையின் காலம் மற்றும் அக்கால இந்திய நிலவியல். மழைப்பாடலில் மொஹஞ்ச தாரோ என்றால் வண்ணக்கடலில் குமரி நிலம் (கண்டம்?). இளநாகனின் ஊர் எழபனைநாடு என்பதும் இதில் சொல்லப்படும் மதுரை நெல்வேலிக்கு தெற்கே என்பதும் குமரிநில நீட்சியில் அல்லது குமரி கண்டத்தில் என்று ஆகிறது. இது மகாபாரதத்தின் இணைகாலமென்றால் மகாபாரதக் காலத்தில் குமரிக் கண்டமும் மொஹஞ்ச தாரோவும் சம காலம் என்று ஆகிவிடுகிறது. போகட்டும் என்றால், வெண்முரசு துவக்கத்தில் (முதற் கனலில்) வியாசர் குமரி முனையில் அம்மன் பாதத் தடம் பதிந்த பாறையில் அமர்ந்து ஊழ்கத்தில் ஈடுபட்டார் என்ற குறிப்பும் இப்போது வண்ணக்கடலில் குமரிக்கோட்டின் (மலையில்) உச்சியில் அமைந்திருக்கும் அன்னையின் ஆலயம் இருப்பதைக் குறிப்பிடுவதும் ஒன்றுக்கொன்று முரண் ஆனது. இந்த இரண்டும் ஒரே காலகட்டத்தில் எப்படி இருக்க முடியும் என்கிற கேள்வி எழுகிறது.

வியாச பாரதத்தில் இருந்து ஒரு மாபெரும் விலகலாக ஜெயமோகன் செய்திருப்பது கர்ணனின் பிறப்பு குறித்த ரகசியம். வியாச பாரதத்தில் அவன் குந்தியின் மைந்தன் என்பது குந்தி மற்றும் கிருஷ்ணனுக்கும் மட்டுமே தெரிந்த ஒன்று என்றே அமைகிறது. அல்லது வேறு யாருக்கும் தெரிந்திருப்பதைப் பற்றி ஏதும் இல்லை. ஆனால் ஜெயமோகன் கர்ணனைச் சுற்றி அஸ்தினபுரியின் ஒற்றர்கள் இருந்ததாகவும் அவனிடமே அஸ்தினபுரியின் முத்திரை மோதிரம் ஒன்று இருப்பதாகவும் எழுதுகிறார். மேலும் பீமனுக்கு ஓர் உள்ளுணர்வாக (தர்மனுக்குத் தோன்றாத) குந்தி கர்ணன் உறவு முறை தெரியும் என்பது போல் ஊகிக்க இடம் தருகிறார். இது கதையின் ஓட்டத்தில் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய பலமான முடிச்சு. இதை எப்படி கொண்டுபோகப் போகிறார் என்பதைப் பார்க்க வேண்டும். மேலும் மழைப்பாடல் நாவலில் கர்ணன் பிறப்பின்போது கவச குண்டலங்கள் இருப்பது போல் காட்டப்படுவதில்லை. இந்த நாவலில் கர்ணனின் 12வது வயதில் சூரியனின் அருள் பெரும் இடத்திலிருந்து அவன் கவச குண்டலங்கள் பெறுவதாக வருவது ஒருபிற்சேர்க்கை என்றே தோன்றுகிறது.

மேலும் ஜெயமோகன் திகைக்க வைக்கும் அளவுக்கு இதில் தகவல்களைக் கொட்டுகிறார். இதில் எவ்வளவு சரியாக அமைந்துள்ளது என்று காண்பதற்கு பல மகாபாரதங்களில், இந்து மத தரிசனங்களில் மிக விரிவான ஞானம் வேண்டும். ஆனாலும் கணிசமான அளவுக்கு பல்வேறு பாரதங்களை படித்ததுண்டு என்ற முறையில் நான் அறிந்த இடங்களில் சில பிழைகள் அல்லது விடுபடல்கள் உள்ளன என்று கண்டு கொள்ளும்போது நான் அறியாத பகுதிகளில் ஆசிரியரின் எழுத்துக்களை அப்படியே ஏற்றுக் கொள்வதில் ஒரு தயக்கம் ஏற்படுகிறது.

இதற்கு ஒரு உதாரணம், பலிச்சக்கரவர்த்தியின் கதை நிகழும் பகுதியாக ஏறக்குறைய இன்றைய ஜார்க்கண்ட் பகுதியைக் காட்டுவது. இன்றைய இந்தியாவில் மகாபலி எங்காவது கொண்டாடப்படுகிறார் என்றால் அது கேரளாவில் மட்டும்தான்(அந்தப் புராணத்திலும் சில பொருத்தமின்மைகள் உண்டுதான்). அப்படியிருக்க ஏன் ஜெயமோகன் ஜார்க்கண்ட் அருகே இதை வைக்கிறார்? இன்னொன்று விஷ்ணு புரம் நாவலின் ஞான சபை விவாதங்களை நினைவு படுத்தும் பிரஹலாதன்-ஹிரன்ய கசிபு விவாதத்தில் அசுர ஞானத்தின் தந்தையாக ஆங்கிரச ரிஷியின் மகனான ப்ருஹஸ்பதி கூறப்படுகிறார். இங்கு கூறப்படும் அசுர ஞானம் என்பது சார்வாகம் என்று புரிகிறது. இதன் ஆசிரியர் ப்ருஹஸ்பதிதான் என்பதும் சரிதான். ஆனால் ஆங்கிரசரின் புதல்வரான ப்ருஹஸ்பதி அல்ல என்றே நான் நினைக்கிறேன். ஏனெனில் ஆங்கிரச ரிஷியின் மகனான ப்ருஹஸ்பதி தேவர்களின் குரு.மற்றொன்று இளநாகனின் பயணங்களில் அவன் சமண மதத்தின் முதல் ஐந்து தீர்த்தங்கரர்களை வழிபடும் வணிகர்களை சந்திப்பது. இது சமண மதம் மகாபாரதக் காலத்திலேயே இருந்ததாக குறிப்பாக சொல்வது. இது போன்ற கேள்விகள் எழும் சந்தர்ப்பங்கள் நிறையவே உள்ளன.

இதுபோன்ற பல ஐயங்கள், கேள்விகள் மற்றும் நாவலின் வடிவம், அதில் இடம் பெரும் மீயதார்த்தக் காட்சிகள், அவ்வாறான காட்சிகள் காட்டப்படாமை குறித்தெல்லாம் ஜெயமோகன் வெண்முரசு விவாதத் தளத்தில் பதிலளிக்கிறார். குறிப்பாக இதன் வடிவம், கூறுமுறை என்பது குறித்து இது தான் உருவாக்கும் puranic realism என்ற பதத்தையும் குறிப்பிடுகிறார். பௌராணிக யதார்த்தம் என்ற அளவில்தான் வெண்முரசு நிற்கப்போகிறதா என்ற கேள்வி அதன் அனைத்து பகுதிகளும் எழுதி முடிக்கப்படும்வரை தொடரும் என்றுதான் நினைக்கிறேன். வெண்முரசு வாசிப்பில் இந்தக் கேள்விகளுக்கும் ஐயங்களுக்கும் பொருட்படுத்தத்தக்க முக்கியத்துவம் உண்டு என்றே தோன்றுகிறது. இதைச் சொல்லும் அதே நேரத்தில் வாசிப்பின் இன்பத்தை வழங்குவதில் எந்தக் குறையும் இம்மூன்று நாவல்களும் வைப்பதில்லை என்பதையும் அழுத்திச் சொல்ல வேண்டும்.

oOo

http://solvanam.com/?p=35582

Link to comment
Share on other sites

  • 1 year later...
  • கருத்துக்கள உறவுகள்

நீலம் -கிருஷ்ணா கிருஷ்ணா ஒரு பார்வை- வே.சுரேஷ்

 

nitya.jpg?w=474&h=313

ஒரு மேற்கோளுடன் தொடங்கலாம்.”உலகம் எங்கும் தியாகம், காதல் என இலக்கியம் மீண்டும் மீண்டும் பேசுகிறது. காரணம் அது அடிப்படை உணர்ச்சிகளை உன்னதமாக்கும் போக்கு என்பதனாலேயே. அதிலிருந்தே பண்பாடு உருவாகிறது என்பதனாலேயே உலகில் எந்த இலக்கியமும் அடிப்படை உணர்ச்சிகளை நோக்கித் திரும்பி போகும்படி பேச முடியாது. நவீனத்துவம் (Modernism) அதற்கு முன் இருந்த புத்தெழுச்சிவாதத்தை (Romanticism) எதிர்த்துப் பேசியது. புத்தெழுச்சிவாதம் உன்னதமாக்கலை மட்டுமே முன்வைத்தது. ஆகவே நவீனத்துவம் அடிப்படை உணர்ச்சிகளை நோக்கி கவனத்தை ஈர்த்தது. அடுத்த கட்டத்தில் பின்நவீனத்துவம் மீண்டும் உன்னதமாக்கலையே பேசும்.”

மேலே உள்ளவை ஜெயமோகன் தன ஆசான்களில் ஒருவராக என்றும் குறிப்பிடும் நித்ய சைதன்ய யதியின் வார்த்தைகள். இலக்கியம் குறித்த ஒரு உரையாடலில் கூறப்பட்டவை. புத்தெழுச்சிவாத மற்றும் நவீனத்துவ காலத்தைக் கடந்தபின் வந்த படைப்புகளை வரையறைக்கும் ஒரு பார்வை என இதைக் கொள்ளலாம். ஏறத்தாழ 1950களில் துவங்கி 80களின் இறுதி வரையிலும் நவீனத்துவமே தமிழ் இலக்கியப் படைப்புகளில் ஆதிக்கம் செலுத்தியது. நவீனத்துவத்தின் இலக்கிய வகைகளான, யதார்த்தவாத, இயல்புவாத, இருத்தலியல்வாத படைப்புகளே அதிக அளவில் எழுதப்பட்டன.

மனிதனுக்கு நேரடி அனுபவமாகும் சாத்தியமற்ற, நிருபணவாதத்தன்மையுடன் கூடிய நிகழ்வுகளைத் தாண்டிய எதையும் சந்தேகித்து ஒப்புக்கொள்ள மறுக்கும் ஒரு போக்கே நவீனத்துவம் என்று சொல்லலாம். இதில் மனிதனின் எந்த உணர்ச்சி நிலையும் உன்னதமாக்கப்படுவதில்லை. கறாரான புறவய மதிப்பீடுகள், அது மிகப் பெரும்பாலும் கொண்டு சேர்க்கும் இருண்மைப் பார்வை ஆகியவையே இலக்கியத்தின் முக்கிய அம்சங்களாக பார்க்கப்பட்டன. வாழ்வின் சலிப்பூட்டும் அம்சங்கள், உடைத்தெறிய முடியாத அன்றாடத்தின் தளைகள், ஆகியவையே இலக்கியத்தின் முக்கிய பேசுபொருள் ஆக இருந்தன.

இந்த நிலை திடீரென்று 90களில் உடைந்தது. இதற்கு பல காரணிகள் உண்டு. எனக்கு சட்டென்று இப்போது தோன்றுவது, இந்த மூன்று காரணங்கள். கி. ராஜநாராயணின் படைப்புகள் உண்டாக்கிய தாக்கம் (91ல் அவருக்கு சாகித்திய அகாடெமி பரிசு அளிக்கப்பட்டது), லத்தீன் அமெரிக்க எழுத்துகள் தமிழ் மொழிபெயர்ப்பில் பரவலாகக் கிடைத்தமை, மூன்றாவதும் முக்கியமானதுமாக ஜெயமோகனின் விஷ்ணுபுரம் நாவல் ஏற்படுத்திய தாக்கம்.

இவை மூன்றுக்கும் பின்னர் எழுதப்பட்ட சிறந்த படைப்புகள் பலவும் நவீனத்துவத்தை மீறிச் சென்றன. ஒரு பெரும் கொண்டாட்டமாக, எளிய பொதுப்புத்தி சார்ந்த பகுத்தறிவால் புரிந்துகொள்ளப்பட முடியாத, ஏராளமான விசைகளின் இழுப்புகள் மற்றும் உந்துதல்களின் விளைவு என்று வாழ்வைப் பார்க்கும் படைப்புகள் எழுதப்படத் துவங்கின.

indira-partthasarathi.jpg

இனி மேற்கோளில் சுட்டப்பட்ட உன்னதமாக்கலுக்குச் செல்வோம். நவீனத்துவம் அடிப்படை உணர்ச்சிகளைப் பேசுவது என்றும், பின்நவீனத்துவம் உன்னதமாக்கலை நிகழ்த்தும் போக்குக்கு இட்டுச் செல்லும் என்று சொல்வதற்கு மிகப் பொருத்தமான ஒரு சான்று இருக்குமாவென்றால் ஒரே பொருளையும் குறிப்பிட்ட ஒரே வாழ்வையும் பேசும் ஒரு நவீனத்துவப் படைப்பையும், அதற்கு நேரெதிராக, மரபில் வேர் ஊன்றி பின்நவீனத்துவத்தில் கிளை பரப்பிய வேறொரு படைப்பையும் ஒப்பிட்டுப் பார்த்தாக வேண்டும். இப்படிப்பட்ட படைப்புகள் ஏதும் உண்டா என்ற கேள்வியும், நித்ய சைதன்ய யதியின் கூற்றுக்கேற்ற பின்நவீனத்துவப் படைப்புகள் தமிழில் வரத் தொடங்கிவிட்டனவா என்ற கேள்வியும் எனக்கு உண்டு.

எதற்கு இவ்வளவு பெரிய பீடிகை என்றால் சமீபத்தில் ஜெயமோகனின் நீலம் நாவல் படித்தபின் எழுந்த எண்ணங்கள்தான். அதை படிக்கும்தோறும் மனதின் இன்னொரு பக்கத்தில் இந்திரா பார்த்தசாரதியின் கிருஷ்ணா கிருஷ்ணா நாவல் ஓடிக்கொண்டே இருந்தது.

இபாவின் கிருஷ்ணா கிருஷ்ணா வெளிவந்து ஏறத்தாழ எட்டு வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டன. ஆனால் நீலம் நாவலை படிக்கும்தோறும் என்னை அறியாமல் என் மனம் அதனுடன் கிருஷ்ணா கிருஷ்ணாவை ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டே இருந்தது. இவை இரண்டுக்குமான முக்கியமான ஒற்றுமை, இவை இரண்டுமே கிருஷ்ணனின் கதைகள். இரண்டிலுமே பாகவதத்திலோ பாரதத்திலோ எங்குமே சொல்லப்படாத ராதையின் பாத்திரத்துக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் முக்கியத்துவம்.

இபாவின் கிருஷ்ணா கிருஷ்ணா வடிவத்தில் நவீனத்துவத்தைத் தாண்டிய படைப்பு. ஜரா என்ற வேடன் தன்னிடம் கிருஷ்ணன் சொன்னதை நாரதனுக்குச் சொல்லி நாரதன் நமக்குச் சொல்வது போன்ற அமைப்பு கொண்ட நாவல். சம்பவங்களைப் பொருத்தவரையில் நேர்க்கோட்டு வரிசையில் அமையாதது. உரையாடல்களில் ஏராளமான ஆங்கில வார்த்தைப் பிரயோகங்கள் நிறைந்த சமகாலத்தன்மை கொண்டது. கிருஷ்ணனை வழமையான பார்வையில் இருந்து விலகி கட்டுடைத்துப் பார்ப்பது. அவனை ஒரு நடைமுறைவாத, அறச்சூழ்ச்சி மதியூகியாகவே முன்வைக்கிறது. இதற்கு அவன் துரியோதனனிடம் சொல்லும் கூற்று ஒரு சான்று.

“யுத்தம் என்கிறபோது தர்மம் அதர்மம் என்று எதுவுமில்லை; அநியாயத்தை நியாயத்தால் வெல்ல முடியவில்லையென்றால் அநியாயத்தை அநியாயத்தால் வெல்வதில் தவறேதுமில்லை… நீ ஆடும் ஆட்டத்தைப் பார்த்து அதற்கேற்ப ஆட்ட விதிகளைப் புதுப்பித்துக் கொண்டு ஆடுகின்றேன் நான்… இதுதான் என்னுடைய இப்பொழுதைய தர்மம். உன் தர்மவிதிகளுக்கு ஏற்பத்தான் நான் என் தர்மவிதிகளை அமைத்துக்கொள்ள வேண்டியிருந்தது; இதில் தவறேதுமில்லை… வாழ்க்கை என்பது ஒரு சதுரங்க ஆட்டம். நீ காய்களை நகர்த்துவதற்கு ஏற்பத்தான் நானும் காய்களை நகர்த்தியாக வேண்டும்… இதில் உணர்ச்சிகளுக்கு இடமே இல்லை… இதைத்தான் நான் போர்த் துவக்கத்தில் அருச்சுனனிடம் சொன்னேன்…”, என்று குறிப்பிடுகிறான் கண்ணன்.

காந்தி தன் காலம் முழுதும் முடிவுகளைவிட வழிகளையே முக்கியமாகக் கருதினார். அதற்கு அவர் கீதையின் துணையையும் நாடினார். ஆனால் இபாவின் கிருஷ்ணன் முடிவுகள் வழிகளை நியாயப்படுத்தும் என்றே வழிகாட்டுகிறான். பெண்ணியம் பேசும், பிறவிகளில் ஏற்றத்தாழ்வு காண்பதைக் கண்டிக்கும் ஒரு நவீன யுகக் கிருஷ்ணனையே படைத்திருக்கிறார் இ.பா.

இபாவின் கிருஷ்ணனும் காலத்தின் ஓட்டத்தையும் மாற்றத்தையும் கடந்து நிற்கும் வல்லமை கொண்டவனாகக் காட்டப்படுவதில்லை. நரைதிரை மூப்புக்கு ஆளாகி தன வாணாளின் கடைசியில் ராதையைப் பார்க்க எண்ணி பிருந்தாவனம் வரும் கிருஷ்ணன் ராதாப் பாட்டியைக் காண விரும்பாமல் திரும்பி வந்து ஜராவின் அம்புக்குக் காத்திருந்து கண் மூடுவதே நாவலின் முடிவு. பிறப்பிலிருந்து இறப்பு வரை கிருஷ்ணனின் முழு வாழ்வையும் விவரிக்க நகைச்சுவையும் அங்கதமும் கலந்த ஒரு துள்ளலான, விறுவிறுப்பான, படிக்கப் படிக்க சலிக்காத நடையையே கிருஷ்ணா கிருஷ்ணாவில் கையாண்டுள்ளார் இ.பா.

“உலகறிந்து எழுந்தவர் ஒருங்குணர்ந்து உய்ந்திடும் ஒரு பொருள் நீ’ என்று சிறுகரிச்சானின் முதற்குரல் எழ விழித்தெழுந்து மைநீலம் விலக்கி மணித்தளிர் சிலிர்த்துக்கொண்டது மால்திகழ் பெருஞ்சோலை. முகைப்பொதியவிழ்ந்த பல்லாயிரம் இதழிமைகளைத் திறந்து வானை நோக்கியது. இன்நறும் வாசம் எழுப்பி பெருமூச்சுவிட்டுக்கொண்டது.

“கானுறைவோய்! கடலுறைவோய்! வானுறைவோய்! வளியுறைவோய்! எங்குளாய் இலாதவனாய்?’ என்றது அன்னை நீர்க்காகம் தன் குஞ்சுகளை நெஞ்சுமயிர்ப்பிசிறில் பொத்தியணைத்து, கருங்கூர்வாய் திறந்து. ‘இறையோய்! இங்குளாய்!’ என்றன மரங்களில் விழித்தெழுந்த பிற காகங்கள்,”

என்ற வரிகளுடன் துவங்கும் நீலம் இந்த முதல் அத்தியாயத்திலிருந்தே மரபில் வேரூன்றி நவீனத்துவத்தைத் தாண்டி புத்தெழுச்சிவாத சாயல்கள் அதிகம் கொண்ட படைப்பு என்பதை காட்டிவிடுகிறது. நீலம் கிருஷ்ணனின் முழு வாழ்வைச் சொல்வதல்ல. அவனது கோகுல வாழ்வையும் பிருந்தாவன லீலைகளையும் கம்ச வதத்தையும் விவரித்துப் பின் ஒரு தாவலில் அவனது அந்திமப் பருவத்தில் முடிகிறது.

நீலத்தின் மிக முக்கியமான அம்சம் அதன் மொழிநடை. நான் இங்கு சுட்டிக்காட்டியுள்ள பத்தி ஒரு சிறு துவக்கமே. வெண் முரசு தொடரே ஒரு செவ்வியல் மொழிநடையைக் கொண்டது என்றபோதும், நீலம் அதிலும் ஒரு உயர்தளத்தை அடைந்து மயக்கும் மொழி அழகைக் கொண்டது. இது குறித்து ஜெயமோகன் தளத்தில் வந்த கடிதங்களைக் காணும்போது சற்றே மரபிலக்கிய, அல்லது செந்தமிழ் நடையில் வாசித்துப் பழக்கம் இல்லாதவர்களுக்கு இந்த மொழிநடை ஒருதடையாக இருந்தது எனத் தெரிகிறது (என் நண்பர் ஒருவரும், “எதற்காக இப்படி அண்ணா, கருணாநிதி போன்றோர் எழுதிய பாணியில் இப்போது எழுதவேண்டும்?” என்று ஆதங்கப்பட்டார். இது அண்ணா, கருணாநிதி மொழியல்ல, பெரியாழ்வார் ஆண்டாள், அருணகிரி, குமரகுருபரர் மொழி என்று சொன்னேன். மரபிலக்கிய , பக்தி இலக்கிய அறிமுகம் சிறிதேனும் இல்லாதவர்கள் இம்மாதிரி ஒரு மொழிநடை என்றாலே அண்ணா, கருணாநிதி மொழி என்று கூறிவிடும் அவலத்துக்கு என்ன செய்வது!)

நீலம் கிருஷ்ண லீலையின் மற்ற பகுதிகளைவிடவும் ராதையுடனான் கிருஷ்ணனின் காதலையே முதன்மைப்படுத்துகிறது. சாதாரண மானுடக் காதல் என்பதைத் தாண்டி பிரபஞ்ச காதலின் குறியீடாக அதை மாற்றுகிறது.

தமிழின் திணை மரபையும், வடக்கிசை மரபின் ராக ராகினி வகைபாட்டையும் , பரத நாட்டிய மரபின் பாவனைகளான அஷ்ட நாயகி கருதுகோள்களையும் உள்ளடக்கி ஒற்றை பெரும் படைப்பாக அதை உருவகித்துக் காட்ட முனைந்திருப்பதாக ஜெயமோகன் குறிப்பிடுகிறார். கிருஷ்ணா கிருஷ்ணா எந்த அளவுக்கு கிருஷ்ணனை ஒரு நடைமுறைவாத அரசியல் சூழ் மதியாளன் ஆக்குகிறதோ, அந்த அளவுக்கு நீலம் அவனை பிரபஞ்சக் காதலின் மையப் பொருள ஆக்குகிறது. அடிப்படை உணர்ச்சியான காமம் இங்கு உன்னதமான தெய்வீகக் காதலாகிறது. மேலும், கிருஷ்ணன் கம்சனைக் கொன்றபிறகு தன் தாய் தந்தையரை விடுவிப்பதோடு நீலம் கிருஷ்ண லீலையை நிறுத்திக்கொண்டு ராதையிடம் திரும்புகிறது. இதர கிருஷ்ண பராக்கிரமங்களை விவரிப்பதைத் தவிர்த்துவிட்டு ராதாகிருஷ்ண நாயகநாயகி பாவத்தையே அற்புதமான மொழி அழகுடன் தென்னிந்திய, வடஇந்திய இலக்கிய மரபுகளின் வழியாக சித்தரிக்கிறது.

ஆச்சரியமளிக்கும் வகையில் இரு நாவல்களுமே பௌதிக ரீதியாகவும் சம்பவரீதியாகவும் ஒரே இடத்தில், சொல்லப்போனால் கிருஷ்ணன் தன் அந்திமக் காலத்தில் மீண்டும் பிருந்தாவனம் திரும்புவதில் முடிகின்றன. இந்த இடத்தில்தான் நான் முதலில் சொன்ன மேற்கோளின் சான்றாதாரமாக இந்த இரு படைப்புகளும் என் மனதில் பதிந்தன. இ.பாவின் படைப்பில் காலம் என்ற மாபெரும் இருப்புக்கு முன் இளமையும் காதலும் மாமனிதர்களும்கூட ஒரு வரையறைக்கு உட்பட்டு விடுவதைக் காண்கிறோம். முடிவிலியை, அழிவற்றதை நோக்கி நீள்வதில்லை.

இபா நாவலில், பிருந்தாவனத்துக்குத் திரும்பி வரும் கிருஷ்ணன், நெடிய அரசூழ்மதி வாழ்வில் தன உள்ளே இருந்த (ராதையால் உருவான) இசையைத் தொலைத்துவிடுகிறான்.அது மீண்டும் அவன் வசமாவதில்லை. வயதான ராதாப் பாட்டியை சந்திக்கும் துணிவின்றி காலத்தின் முடிவை ஏற்றுக் கொண்டு திரும்பி விடுகிறான். இதுதான் இந்நாவலை நிச்சயமாக ஒரு நவீனத்துவ மனதின் படைப்பு என்பதை கட்டியம் கூறும் இடம்.

இதே இடத்தில்தான் நீலமும் முடிகிறது. ஆனால் அங்கு ராதை பாட்டியல்ல. அவள் ஒரு பிச்சி என வாழ்ந்து மறைந்து யாதவகுலத்தின் குலதெய்வம் ஆகிவிட்டிருக்கிறாள். அவளுக்கு ஒரு சிறு ஆலயம் இருக்கிறது. யமுனைக் கரையில் நின்ற இளநீலக் கடம்பு. அதனடியில் சிறுபீடம் ஒன்றின்மேல் சிற்றாடை கட்டி செந்தாமரை மொட்டேந்தி நின்றிருக்கிறாள் ராதை. முகிழ்த்த சிறுமுலையும் முறுவலிக்கும் இதழ்களும் விரிந்த மலர்முகமும் விழிநிறைந்த ஒளியுமாய் காத்திருக்கிறாள் கன்னி அன்னை, காதலரின் தெய்வம்.

ஆனால் அங்கே இன்றைய பிருந்தாவனத்திலும் யாதவ குலத்தில், உலகில் ராதைகள் பிறந்து கொண்டே இருப்பார்கள் என்பதைக் காட்ட சிறுமியான ஒரு ராதையும் இருக்கிறாள். இங்கும் கிருஷ்ணர் ஒரு குழல் வாங்கி இசைக்க விரும்புகிறார். ஆனால் இந்தக் குழல் இந்தச் சின்ன ராதையின் நீலக்கடம்ப மரத்தில் மறைத்து வைத்த குழல். இங்கும் முதலில் கிருஷ்ணன் இதழ் சேர்த்த குழலில் இசை வருவதில்லை. அதைப் பார்த்துச் சிரிக்கிறாள் இந்தப் புது ராதை. இப்போது குழல் மொழி கொள்கிறது. குயில்நாதம் ஒன்று எழுகிறது.

“‘ராதே’ என அது அழைத்தது. காற்றில் கைநீட்டிப் பரிதவித்து ‘ராதே! ராதே! ராதே!’ என மீளமீளக் கூவியது. கண்டடைந்து குதூகலித்து. ‘ராதை! ராதை! ராதை!’ என கொஞ்சியது. கல்நின்ற கன்னியின் முகத்தை ராதை பார்த்தாள். கல்விழிகள் காட்சிகொண்டன. குமிழிதழ்கள் முறுவலித்தன. சுற்றி எழுந்து சுழன்று நடமிட்டது செவ்விழி. பீலிவிழி விரிந்த தலையும் புன்னகை பெருகும் இதழுமாக யமுனைப்பெருங்கரையில் யாதவர்தம் அரசியின் முன் குழலூதி நின்றிருந்தான் கண்ணன்.”

இப்படியான ஒரு உன்னதக் காட்சியுடன் முடிகிறது நீலம். இங்கு கிருஷ்ணா கிருஷ்ணா நாவலின் முடிவைப்போல காலம் வென்று மனிதர்கள் சிறுத்து விடுவதில்லை. காதல் எனும் உன்னத உணர்ச்சி யுகங்களைக் கடந்து பிறவிகளைக் கடந்து வெல்வதைக் காண முடிகிறது.

இதைச் சொல்லும்போது கிருஷ்ணா கிருஷ்ணா நாவலின் முடிவு ஏற்கத்தக்கதல்ல என்றாகிவிடுவதில்லை. அதன் உள்ளடக்கத்தில் செயல்படும் நவீனத்துவ சிந்தனையின் இயல்பான உச்சத்தையே அந்த நாவல் அடைகிறது. அதுவே அதற்கு பாந்தமாகவும் பொருத்தமாகவும் உள்ளது, அதை ஒரு மிகச் சிறந்த படைப்பாகவும் ஆக்குகிறது.

மீண்டும் நாம் யதியின் மேற்கோளுக்கு வருவோம். ஆம், நவீனத்துவம் புத்தெழுச்சிவாதத்தை மறுத்துப் பேசுகிறது. புத்தெழுச்சிவாதம் உன்னதமாக்கலையே முன் வைத்தது. நவீனத்துவுத்துக்கு அடுத்து வரும் பின்நவீனத்துவ காலகட்டம் மீண்டும் உன்னதமாக்கலையே பேசும், என்ற அந்த வாசகத்துக்குச் சான்றாகவே நவீனத் தமிழ் இலக்கியத்தின் இரு மாபெரும் கலைஞர்களின் இந்த இரு படைப்புகளும் விளங்குகின்றன என்றே எனக்குத் தோன்றுகிறது.

 

 

http://www.jeyamohan.in/64054#.VwfD_vkrJD8

 

Link to comment
Share on other sites

வெண்முகில் நகரம், இந்திரநீலம், காண்டீபம் வெய்யோன்...மற்றும் இப்போது எழுதிக்கிட்டு இருக்கும் பகுதிவரை படித்துகொண்டிருக்கிறன் ,

புத்தகம் வாங்கி எல்லாம் இல்லை அவரின் வலைத்தளத்தில் ஒவ்வொரு நாளும் அப்டேற் ஆகும், தெரிந்த கதைதான் என்டாலும் புதிதாய் என்ன தான் எழுதுகிறார் எண்டு பார்ப்பம். 

அவரின் உழைப்பு உண்மையாகவே மலைக்க வைக்குது என்ன எழுத்து புனைவு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெய்யோன் வரை

ஜெயமோகனின் வெண் முரசு தொடரின் முதல் மூன்று நூல்கள் பற்றி ஏற்கெனவே ஒரு விரிவான பார்வையை முன்வைத்துவிட்டேன்  . நீலம் குறித்தும் எழுதியாயிற்று  . அதன் அடுத்த நூல்களான, பிரயாகை, வெண் முகில் நகரம், இந்திர நீலம், காண்டீபம் மற்றும் இதோ இப்போது முடிந்திருக்கும்  வெய்யோன் ஆகியவை பற்றியதே.இந்தப்பதிவு.

Prayagai_Cகண் சிமிட்டும் நேரத்தில் இவ்வளவு புத்தகங்கள் வந்துவிட்டன   காலத்தின் வேகத்துக்கு இணையாக ஓடுகிறார் ஜெயமோகன்.  உலகக் காவியங்களில் மகாபாரதமே பெரியது என்பது நமக்குத் தெரிந்ததுதான், ஆனால் வெண் முரசு நூல் வரிசையை படிக்கும்போது முதலில் தோன்றும் உணர்வு என்னவென்றால், மகாபாரதம் சுருக்கமான கதையாக இருக்கும் போலிருக்கிறதே என்பதுதான். மேலும் மகாபாரதத்தையே  அதிக சிக்கல்கள்  இல்லாத எளிமையான நூலாகவும் தோன்றச்செய்துவிடுகிறது,  வெண் முரசு.  மகாபாரதத்தை எவ்வளவுக்கெவ்வளவு விரிவாக்க முடியுமோ  அந்தளவுக்கு விரிவாக்கி, தனிமனித சிக்கல்களையும், அரசியல் பின்னணியையும் விரித்தெடுத்துப் பேசுகிறது

வெண் முரசு மீது   இதுவரை அதன் வடிவம், உள்ளடக்கம் ஆகியவற்றைப் பற்றி பேசும்  விமரிசனப்பூர்வமான மதிப்பீடுகள் (critical review ) வரவில்லை என்றே எனக்குத் தோன்றுகிறது. முதல் நூலான முதற் கனல் ஓரளவு இத்தகைய கவனம் பெற்றது. ஆனால் அடுத்தடுத்த நூல்கள் இன்னமும் நல்ல விமர்சனங்களை எதிர்பார்த்துக் காத்துக் கிடப்பதாகவே  படுகிறது. இந்திராபார்த்தசாரதி,நாஞ்சில் நாடன், மற்றும் பி.ஏ  கிருஷ்ணன் ஆகியோர், முதற் கனல் குறித்து கருத்து கூறியிருக்கிறார்கள். மற்ற புத்தகங்கள் குறித்து ஏதும் கூறியதாகத் தெரியவில்லை. வெண் முரசை விவாதிப்பதற்கென்றே தளமும் குழுமங்களும் இருக்கின்றன. ஆனால் அவை விமரிசனப்பூர்வமான மதிப்பீடுகளைக் கண்டடைய முயற்சிப்பதாக எனக்குத் தோன்றவில்லை. ஜெயமோகனின் இந்த பெரும் முயற்சிக்கு  தமிழ் இலக்கிய உலகின், குறிப்பாக அச்சு ஊடகங்களின் எதிர்வினை  என்னைப் பொருத்தவரையில் பெரிய ஏமாற்றத்தைத் தருகிறது

வெண் முரசுக்கு இவ்வளவு  குறைவான  விமர்சனங்கள் வந்திருப்பதற்கு ஒரு வகையில்அதன்  வகைப்பாடு,  ழானர் (genre) ஒரு முக்கியமான காரணமாக இருக்கலாம் என்று தோன்றுகிறது. ஒரு யதார்த்தவாத, இயல்புவாத அல்லது நவீனத்துவ  நாவலுக்கு வைக்கப்படும் இலக்கிய விமர்சன அளவுகோல்கள் இந்த நூல்வரிசைக்குப் பொருந்தாது. ஒரே சமயத்தில்  இந்த வகைப்பாடுகளின் கூறுகளோடு, மாய யதார்த்த அம்சங்களும் மிகு கற்பனை (Fantasy ) வகை படைப்புகளின் அம்சங்களும் இதில் கலந்தே இருக்கின்றன. ஏதாவது  ஒரு அம்சத்தை முன்  வைத்து விமர்சிக்க வழி இல்லை எனலாம்.

இன்னொரு காரணம், புராணங்களின்  மறுஆக்கங்களை படிக்கும் போது அதன் வாசகனுக்கு ஏற்படும் இயல்பான ஒரு திகைப்பு. மறு ஆக்கத்தின் ஆசிரியர் மூலத்திலிருந்து விலகும்  போதெல்லாம், அதன் வாசகன் தான் ஏற்கெனவே அறிந்ததை மறக்க வேண்டியுள்ளது.அது பல சமயங்களில் இயல்பாக நடந்து விடுகிறது என்றாலும்,முக்கியமான இடங்களில் விலகல்கள் நடக்குமிடத்து நிச்சயமாக அவன் மனதில் இயல்பான கேள்விகள் பல எழுவதைத் தவிர்க்க முடியாமலாகிறது.

வெண் முரசு நாவல்கள் புராண-யதார்த்தம் (Puranic-Reality) எனும் ழானரைச் சேர்ந்தது என்று ஜெயமோகன் சொல்கிறார். அந்த வகைமையில் இதுவே முதல் படைப்பாக இருக்க வேண்டும், புராணத்தை மறுஆக்கம் செய்வது இன்றைய நவீன யுகத்துக்குரிய தரிசனங்களை  நோக்கிச் செல்லும் எழுத்தாளனுக்கு ஏன் முக்கியமாகிறது? அதன் உளவியல் என்ன? அதன் அடிப்படைகள் என்ன? – இவையும் முக்கியமான கேள்விகள். இந்தக் கேள்விகளுக்கான விடைகளை ஜெயமோகன் முதலிலிருந்தே சொல்லி வந்திருந்தாலும், சமீபத்தில், மிகத்தெளிவாக முன் வைத்திருக்கிறார் – மரபை மறு ஆக்கம் செய்தல் :.

என் நோக்கில் இலக்கியம் புராணங்களை ஏன் கவனிக்கவேண்டும்? அவை ஆழ்படிமவெளிகள், படிமத்தொகைகள் என்பதனால்தான். அவற்றின் கதைமாந்தரை மாற்றியமைத்து பார்ப்பது, இன்றைய அரசியலை அதன் மேல் போட்டுப்பார்ப்பது போன்றவை எவ்வகையிலும் பொருளற்றவை. அவை எளிய விளையாட்டுக்கள் மட்டுமே. அவற்றை எப்படி ஆழ்மனத்தை வெளிக்கொண்டுவர, தத்துவ விவாதங்களை நிகழ்த்த, பண்பாட்டை மறுஆக்கம் செய்ய நாம் கையாள்கிறோம் என்பதே முக்கியமான கேள்வி

இங்கு ஒன்று சொல்லலாம்-  ஜெயமோகன் எழுப்பும் வினாக்களின் அடிப்படையில், வெண்முரசு நாவல் மூன்று தளங்களில் இயங்க முற்படுகிறது:

  • மகா பாரத தொன்மத்தைத் தன் ஆழ்மன படிமமாகக்  கொண்ட  மானுட அகம்
  • மகா பாரதத்துக்குப் பொருந்தும் சிந்தனையைக் கொண்டு ஆய்வு செய்யப்படக்கூடிய தத்துவம்
  • மகா பாரதக்  கதையில் இடம்பெறும் வரலாறு மற்றும் பண்பாடு

இவை மூன்றும் இந்தியா என்ற நிலப்பகுதியுடனும்ம் இந்து என்ற சமய உணர்வுடனும் காலம்தோறும் இணைத்துப் பேசப்படுபவை. இந்துக்களின் தேசம் இந்தியா என்றும் பாரதம் இந்துக்களுக்கு உரியது என்றும் வலியுறுத்தப்படும் இந்நாளில்தான் வெண்முரசு எழுதப்படுகிறது. எனவே அது ஒரு தேசீயவாதப் பிரதி என்றும் இந்துத்துவப் பிரதி என்றும்  விமரிசனங்கள் எழுகின்றன. இதை வெவ்வேறு விளக்கங்கள் வாயிலாக ஜெயமோகன் எதிர்கொள்வதைப் பார்க்க முடிகிறது  புனைவு வெளிக்கு அப்பால், பாரதம் போன்ற ஒரு புராணத்தை மறுஆக்கம் செய்வது என்பது ஜெயமோகன் சொல்வது போல் ஆழ்மனத்தை வெளிக்கொணர்தல், தத்துவங்களை விவாதித்தல், பண்பாட்டை மறுஆக்கம் செய்தல் என்ற அளவில் நின்றுவிடுவதில்லை: அது பாரதம் எவருக்கு உரியது என்ற கேள்விக்கான பதிலையும் தேடிச் செல்வதாகும். நம் பண்பாடு மற்றும் அரசியல் தரப்புகளின் இரு தீவிர முனைகளிலும் இருப்பவர்கள் வெண்முரசு முயற்சியை பதட்டத்துடன் அணுக இதுவும் ஒரு காரணமாகிறது. இந்த அடிப்படையிலேயே வெண்முரசு புனைவின் எல்லைகளுக்கு வெளியே, பண்பாட்டு, அரசியல் வெளிகளுக்கும் உரியதாகிறது.

மேலும், மேற்கூறிய  மரபை மறு ஆக்கம் செய்தல்  என்ற கட்டுரையில், 

புராணங்களில் வில்லனை கதாநாயகனாக்குவது போன்றவை வெறும் உத்திகள். புராணங்களே அவற்றுக்கெல்லாம் முழுமையாக இடம் கொடுத்தே எழுதப்பட்டுள்ளன. புராணங்களை அரசியல் விளக்கமளித்து எழுதுவதும் என்னைப்பொறுத்தவரை மேலோட்டமானதுதான். அவை ஆழ்படிமங்களை சமூகமனதில் நிறுவுகின்றன. கவித்துவமான படிமங்களை ஒரு சமானமான மொழியாகவே ஆக்கித்தருகின்றன. அவற்றைக்கொண்டு ஆன்மிகமான, தத்துவார்த்தமான தேடல்களை அவை நிகழ்த்துகின்றன. அந்தத் தளத்திற்குச் சென்று அவ்வுரையாடலை முன்னெடுக்கவேண்டும்

என்றேன் என்றும் எழுதுகிறார்.

வெண்முரசின் அரசியல், பண்பாட்டு இலட்சியங்கள் எதுவாக இருந்தாலும் அதன் இயங்குதளம் அரசியலோ, பண்பாடோ அல்ல; மொழியும் அதனால் சாத்தியப்படும் கதைசொல்லலுமே என்று உணர்த்தி, முதலும் முடிவுமாக தான் ஒரு கலைஞன் என்றே ஜெயமோகன் தன்னை நிறுவிக் கொள்கிறார்.  எங்கும் உள்நோக்கமும் மறைந்திருக்கும் செயல்திட்டமும் காணப் பழகிவிட்டோம். இந்த நிலையில், தன் படைப்பூக்கத்தின் போக்கில் தான் பாரதப் பண்பாட்டை மறுஆக்கம் செய்வதாக ஜெயமோகன் சொல்வதை அவநம்பிக்கையுடன் எதிர்கொள்பவர்களைக் குறை சொல்ல முடியாது. தனி மனித அரசியல், பண்பாட்டு நோக்கங்களால் தீர்மானிக்கப்படாத மறு ஆக்கத்தை ஜெயமோகனின் படைப்பூக்கம் நிகழ்த்துகிறது என்பதை எவ்வாறு ஒருவர் உணர முடியும்?   ஒரு புனைவாக மட்டுமே வெண்முரசை ஜெயமோகன் முன்னிருத்தியிருந்தால் இது போன்ற கேள்விகள் அவசியமற்றவை என்று ஒரு வேளை சொல்ல முடியும், ஆனால் அவரே பண்பாட்டு மறுஆக்கம் என்று சொல்லும்போது இது எதையும் தவிர்க்க முடியாமல் போகிறது.

       வெண் முரசு நாவல் உணர்த்தும் பண்பாடு, அரசியல் போன்றவற்றைப் பேச இது நேரமல்ல. முழு நாவலும் நிறைவடைவதற்கு முன் நாம் எந்த முடிவுக்கும் வந்துவிட முடியாது. எனவே,  பெருமளவு, புனைவுக்குரிய கூறுகளை அடிப்படையாகக் கொண்டே வெண் முரசு நூல்களைப் பற்றி ஒரு விமர்சனத்தை இப்போது முன்வைக்கலாம என்று தோன்றுகிறது.

” புராணங்களில் வில்லனை கதாநாயகனாக்குவது போன்றவை வெறும் உத்திகள்,” என்று ஜெயமோகன் சொன்னாலும்வெண் முரசிலும் இது குறிப்பிடத்தக்க அளவில் நடக்கத்தான் செய்கிறது (இதனால் எத்தகைய ஆழ்படிமங்கள் சமூக மனதில் நிறுவப்படக்கூடும் என்ற கேள்வி நம்மை மீண்டும் அரசியல் மற்றும் பண்பாட்டு விவாதத்துக்குக் கொண்டு செல்வது தவிர்க்கப்பட முடியாதது). துரியோதனன் மற்றும் திருதராஷ்ட்ரனின் பாத்திர அமைப்புகள் நல்ல உதாரணம். பாரதத்திலும், துரியோதனனின் மேன்மையான நற்குணங்கள் சொல்லப்படாமல் இல்லை. ஆனால் பாரதத்தைச் செலுத்தும் விசைகளில் மிக முதன்மையானது,  துரியோதனன் பாண்டவர்களின் திறன்கள் மீதும் அவர்கள்  மீதும் தன் குலப்பெரியோரும் மக்களும் காட்டும் அபிமானம் குறித்த பொறாமைதான்.  அவனது இந்தக் குணம் திருதராஷ்டிரன் தவிர மீதி அனைவராலும் கவனித்து வெறுக்கப்பட்டாலும், துரியோதனனிடம் கனிவும் அளவுகடந்த நம்பிக்கையும்  கொண்ட  திருதராஷ்ட்ரன் அவனது குணத்தைக் கண்டிக்கவோ அவனது நடத்தையில் தாக்கம் ஏற்படுத்தவோ இயலாதவனாகவே இருக்கிறான். இதுவே மகாபாரதத்தின் அடிப்படை முடிச்சும் சிக்கலும்.

ஆனால் வெண் முரசில் ஜெயமோகன், இந்த விஷயத்தில் துரியோதனன் சார்பாகவே ஒரு மென்மையான அணுகுமுறையைக்  கையாண்டு அவனை ஒரு நாயகனாக்கவே முயல்கிறார். இதற்காக மூலத்தில் இல்லாத  சில சம்பவங்களைச் சேர்க்கவும் செய்கிறார்.  புதிய சம்பவங்களைச் சேர்ப்பதில் குறை காண ஏதுமில்லை. ஒரு மறு ஆக்கம், அப்படியே மூலத்தை ஒட்டியே எழுதப்படுமானால், அது எழுதப்படுவதற்கான காரணமே இல்லை என்று ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் அப்படிச் செய்யும் போது  அதில் மூன்று விஷயங்களைக்  கவனிப்பேன். ஒன்று அந்த சம்பவங்களைச் சேர்ப்பதற்கு  மூலத்தில் ஒரு சிறு அடிப்படையாவது இருக்க வேண்டும். இரண்டாவது, இந்த விலகலும், அதை ஒட்டி வரும் சம்பவங்களும் இந்த மறு  ஆக்கத்தின், அதுவரையிலான கதைப் போக்கின் தர்க்கத்துக்கும், இதில் வரக்கூடிய பாத்திரங்களின் குணாம்சங்களுக்கும் பொருந்தி இயல்பாக உருவாகி வந்திருக்க வேண்டும், வலிந்தோ ஜோடிக்கப்பட்டதாகவோ செயற்கையாகவோ அமைக்கப்பட்டிருப்பதைப் போல வாசகன் மனதில் ஒரு எண்ணத்தை உருவாக்கிவிடாமல்  இருக்க வேண்டும். மூன்றாவதாக,  மூலத்தை விட்டு விலகும் இடங்கள் பாத்திரப்படைப்புக்கும் கதைக்களனுகும் மேலும் செறிவு அளிப்பதாக இருக்க வேண்டும். வெண் முரசு நாவலின் சில பகுதிகள் இந்த அம்சங்களில் என்னைப் பொறுத்தவரை முழு திருப்தியைத் தரவில்லை என்றே சொல்வேன். இதில் அப்படி  வரும்  சில சம்பவங்களையும், அது குறித்த எண்ணங்களையும் முன்வைக்கிறேன்.

இந்தப் போக்கு முதலில் வண்ணக்கடல்  நாவலில் இருந்தே தொடங்குகிறது. அதில் பாண்டு இறந்தபிறகு,  குந்தியும்,,பாண்டவர்களும் அச்தினபுரிக்கு வந்தபின் பீமனும் துரியோதனனும் இணைபிரியா தோழர்களாகக் காட்டப்படுகிறார்கள். ஆனால் கானகத்தில் துரியோதனன் ஒரு கரடியால் தாக்கப்படும்போது பீமனால் காப்பாற்றப்படுகிறான், அங்கிருந்து தொடங்குகிறது துரியோதனனின் பீமன் மீதான அசூயை. பாரதத்தில் இந்த சம்பவம் இல்லை. இருவரும் தோழர்கள் என்று காட்டப்பட்டப் பிறகு இப்படியான ஒரு சம்பவம் தேவைப்படுவதைப் புரிந்து கொள்ளலாம். ஆனால் இதற்குப் பின் வருவதுதான் செயற்கையான திருப்பங்கள்.  வளர்ந்து கொண்டேபோகும் பாண்டவர்கள் மீதான குரோததத்துக்கு ஜெயமோகன் பிரயாகை நாவலில் பாரதத்தில் (இங்கு பாரதம் என்று சொல்லும்போது, அதன் critical edition ஐயே குறிப்பிடுகிறேன்) இல்லாத  மேலும் இரு சம்பவங்களை இணைத்தும், குந்தியை  பாரதத்தில் வரும் பாத்திர வார்ப்புக்கு நேர்மாறாக நாடாளும் பெரு  விழைவு கொண்டவளாகப்  படைத்தும் இந்த பூசலை வளர்க்கிறார். பாண்டவர்கள் வென்று வரும் சௌவீர மணிமுடியை அஸ்தினபுரி அரசன்,   பீஷ்மர், ஆகியோருக்குக் காண்பிக்கும் முன்னரே குந்தி தான் அணிந்து மகிழ்வதாக சித்தரித்து இருப்பது ஒன்று. இன்னும்  அதிகமாக, மதுராவின் மீது ஏகலவ்யனின்   படையெடுப்பை   முறியடிக்க பலராமரும் கிருஷ்ணனும் முறையே துரியோதனன் மற்றும் குந்தியிடம் உதவி கேட்பது ஆகியவற்றைச் சொல்லலாம். இதில் துரியோதனனின் கோரிக்கையை தருமன்   நிராகரிக்கிறான். கிருஷ்ணனின் கோரிக்கையை குந்தி ஏற்று, படைகளை கிருஷ்ணனுக்கு உதவியாக அனுப்புகிறாள். போரில்  அர்ஜுனனும், கிருஷ்ணனும் வெற்றி  பெறுகிறார்கள். இதில் உள்ள குறைபாடு என்றால் (இப்படி ஒரு சம்பவம் மூலத்தில் இல்லை என்பதை விட்டுவிடுவோம்). அஸ்தினபுரியின் படைகள் யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளன என்பதுதான். இதில் குந்தி அச்தினபுரியின் பேரரசி என்று மீண்டும் மீண்டும் குறிப்பிடப்படுகிறாள். ஆனால் அச்தினபுரியை ஆளும் திருதராஷ்ட்ரனின் பட்டத்து ராணியான காந்தாரிதானே அச்தினபுரியின் அரசி, குந்தி அல்லவே? அஸ்தினபுரியின் அதிகார வரிசைக்கு  (hierarchy)  முற்றிலும் புறம்பான ஒரு சம்பவமாகவே இது புனையப்பட்டுள்ளது.    

இந்த வெற்றி துரியோதனின் பகைமையை மேலும்  வளர்த்து பாண்டவர்களை வாரணவதம் அனுப்பி  அங்கு  அவர்களை அரக்கு மாளிகையில் தீக்கிரையாக்க முயற்சிக்கும்  அளவுக்கு கொண்டுபோகிறது. ஆனால் இங்கும்  இரண்டு விலகல்களும் முரண்களும் உள்ளன. ஒன்று வாரணவதம் சதிக்கான பொறுப்பு  முற்றிலும் சகுனி மற்றும் அவரது உதவியாளர் கனிகர் மீது ஏற்றப்பட்டு அதற்காக துரியன் குற்ற உணர்வு கொள்பவனாகக் காட்டப்படுகிறான். இன்னொன்று, இதற்கு முன்னால்  வரும்,  பீமனுக்கு உணவில் விஷம் கலந்து  அவனை கங்கையில் எறியும் சம்பவம். இந்த சம்பவத்திலும், துரியோதனனுக்கு முற்றிலும் தொடர்பு இல்லாதது  போலவே ஆசிரியர் காட்டுகிறார். முழுக்க முழுக்க துச்சாதனனும் துச்சலனுமே ஏற்பாடு செய்யும் சதி வேலையாக இது காட்டப்படுகிறது. துச்சாதனன் தன்  அண்ணன் மீது வைத்திருக்கும் பெரும் பக்திக்கு சான்றாக இது அமைந்தாலும், துரியோதனன் அறியாத வண்ணம் ஒரு செயலை துச்சாதனன் உட்பட இளைய கௌரவர்கள்  செய்யத் துணிவது அவர்கள் அதற்கு முன்னும் அதற்குப் பின்னும் சித்தரிக்கப்படும் விதத்துக்கு முற்றிலும் முரணாகவும்,  பொருந்தா வண்ணமும்  உள்ளது.

துரியோதனனின் இந்தப் பகைமை வளர்ந்து திரௌபதி சுயம்வரத்தில் பாண்டவர்களின் வெற்றிக்குப் பின்  உச்சத்திற்குப் போகிறது. அந்த நிகழ்ச்சி முடிந்ததும் துரியோதனன் மற்றும் கர்ணன் உட்பட பிற கௌரவர்கள் காம்பில்யத்தின் மீது படைஎடுப்பதில் முடிகிறது. அதில் தோற்று திரும்பியவர்கள் திருதராஷ்ட்ரனின் கோபத்தை சந்திக்கிறார்கள். பிறகு பாண்டவர்களுடனான திருமணப் போட்டிகள் நடக்கின்றன. துரியன் பீமனை முந்தி காசி இளவரசி பானுமதியை வெல்கிறான். பகைமை தொடர்கிறது. ஆனால், இதன் பிறகு இவர்களுக்குள்  உள்ள போட்டியை விரும்பாமலும்  வாரணவதம் சதியில் துரியோதனனின் பங்கு இருக்கும் என்று தன் உள்ளம் சந்தேகித்ததை உறுதி செய்து கொள்ளும் திருதராஷ்ட்ரன், தன் மக்கள் துரியோதனன், துச்சாதனன் மற்றும் கர்ணன் ஆகியோரை மூர்க்கமாகத் தாக்கி கிட்டத்தட்ட கொன்றே  விடுகிறார். இந்தக் காட்சி மிக செயற்கையாக நம்பவே முடியாத வண்ணம் புனையப்பட்டுள்ளது. அதைவிட நம்ப முடியாதது இந்தத் தாக்குதலுக்குப் பின் துரியோதனன் குணத்தில் வரும் மாற்றம். அங்கிருந்து பாண்டவர்களின் மீதான தன் பகையையே அவன் மறந்துவிடுவதாகவும், அவர்கள் எது கேட்டாலும் கொடுத்துவிட சித்தமாக உள்ளதாகவும் அவன் பாத்திரம் மாற்றப்படுகிறது. கர்ணன் திருதிராஷ்டிரனால் தாக்கப்பட்டதை அறியும் குந்தி அவர் மீது மேலும் வன்மம் கொள்கிறாள். துரியோதனன் இந்த சம்பவத்துக்குப் பின் உடலிலும் உள்ளத்திலும்  மென்மையடைந்து (பானுமதியுடனான அவன் மணமும் ஒரு காரணம் என்று சொல்லலாம்) விடுகிறான். குடியிலும், கொண்டாட்டத்திலும் (உண்டாட்டத்திலும்) தான் அதிக நேரம் செலவழிப்பவனாகக் காண்பிக்கப்ப்டுகிறான்.

இன்னொரு முக்கியமான அம்சம் இங்கே சொல்லியாக வேண்டும். வெண் முரசில், திரௌபதியின் மீது துரியோதனன் கர்ணன் இருவருக்கும்  ஏற்படும் விழைவு. மகாபாரதம் பொதுவாகவே மண்ணாசையின்  கதை என்றே வர்ணிக்கப்படுவது. ராமாயணத்தை பெண்ணாசையின் கதை என்றும் சொல்வதுண்டு. ஆனால் இங்கு ஜெயமோகன், வெண் முரசில் மண்ணாசையுடன் பெண்ணாசையும் அடிப்படையில் இருப்பதாக புனைந்துள்ளார். கர்ணன் மீது திரௌபதிக்கு ஒரு ஈர்ப்பு உள்ளதாக சமண பாரதம் ஒன்றில்  மட்டுமே ஒரு  குறிப்பும் ஒரு உபகதையும் உண்டு என்று தெரிகிறது. மகாபாரதத்தின் தரப்படுத்தப்பட்ட பதிப்பிலோ வேறு எந்த version இலோ இது கிடையாது. கர்ணனுக்கும் ஏன் துரியோதனனுக்குமே இப்படி ஒரு ஈர்ப்பு உள்ளதாக புனையப்பட்டுள்ளதும் பாண்டவர்களின் மீதான கர்ணனின் பகைமைக்கு இந்த உணர்வு ஒரு பின்னணியாக இருந்து கொ ண்டே இருப்பதும், அவ்வளவு ரசிக்கத்தக்கதாக இல்லை இது ஏறத்தாழ அவதூறு பேசும் வம்புப்பேச்சின் அளவுக்கே போய் விடுகிறது. .இந்த கர்ணன் திரௌபதி ஈர்ப்பு குறித்து ஐராவதி கார்வே அவர்களின் பார்வையை இங்கு நினைவு கூறலாம்.

இந்தப் பொருந்தாத சம்பவங்களும் பாத்திரங்களின் குணாம்சங்களில் வரும் செயற்கையான  மாறுதல்களும் உச்சம் பெறுவது வெய்யோனில். இது கர்ணனின் திருப்தியற்ற  மணவாழ்வையும் அவன் கௌரவர்களுக்கு எவ்வளவு முக்கியமானவன் என்பதையும் வெய்யோனின் மகனாதலால் அளித்தே வாழ்பவன்  என்பதையும் முதன்மையாகச் சொல்லும்  படைப்பு. ஆனால் இதில்தான் கௌரவர்களுக்கும் பாண்டர்களுக்குமான பகை  திரும்பி வரவே முடியாத புள்ளிக்கு சென்று முடிவதும் விவரிக்கப்படுகிறது. இந்திரப்ரஸ்தம் அமைக்கப்பட்டதும் அங்கு நடக்கும் விழாவுக்கு கௌரவர்கள் சென்று அவமானம் அடைந்து திரும்புவதும்  இதில் வருகிறது. ஆனால் வேய்யோனில், விளங்கிக் கொள்ள முடியாத காரணங்களுக்காக, பாரதத்தின் மூலத்திலிருந்து பெரும் மாற்றங்களை செய்திருக்கிறார் ஜெயமோகன். இந்திரப்ரஸ்தத்திற்கு கௌரவர்கள் மற்றும் ஏனைய அரசர்கள் அனைவரும் செல்வது தருமன் வெற்றிகரமாக செய்து  முடிக்கும் ராஜ சூய யாகத்துக்காக என்பதுதான் மூலத்தில் உள்ளது.. ஆனால் இங்கு ராஜசூய யாகம் பற்றிய  பேச்சே இல்லை. அந்த நகரத்தின் அணையாப் பெருஞ்சுடரை  ஏற்றுவதற்காக நடத்தப்படும் ஒரு விழாவுக்காக 56 தேசத்திலிருந்தும் அரசர்கள் வருகிறார்கள்.. துரியோதனன் இப்போது பாண்டவர்களின் நட்பை விழையும்  ஒருவன், பாண்டவர்கள் மட்டுமல்ல பாரத வர்ஷத்திலேயே போர்கள் இல்லாத ஒரு நிலையை காண விரும்பும் ஒரு மகாத்மாவாக  இருக்கிறான்.அவனிடம் காணப்படும் இந்த மாற்றங்களுக்கெல்லாம்  அன்று திருத்ராஷ்ட்ரனிடம் பட்ட அடிதான் காரணம். இந்தத் தருணத்தில் ,பீமன் வந்து அவர்களை விழாவுக்கு அழைக்கும் விதத்திலேயே அவனை அஸ்தினபுரியின் அரசனாக மட்டுமே அழைக்கிறான் என்றும், நெருங்கிய உறவினனாக அல்ல என்றும், துரியனை சுற்றியிருக்கும் அனைவருக்கும் புரிகிறது. ஆனால், அவனுக்கு மட்டும் புரிவதில்லை. ( மூலத்தில் இந்த யாகத்துக்கான அழைப்பை விடுக்க  அஸ்தினபுரிக்கு வருவது நகுலன்.இதிலேயே  நுட்பமான செய்தி ஒன்று இருக்கிறது.) இதை நம்ப வாசகனுக்கு மிகப் பெரிய நம்பிக்கையுணர்வு தேவைப்படுகிறது. .இதில் இன்னுமொரு பெரிய அனர்த்தம், அந்த விழாவுக்கு ஜராசந்தன் வருவதும், வழியில் அவனைக் கண்ட கர்ணன், கௌரவர் படகில் அவனை ஏற்றிக் கொள்வதும், அவர்கள் எல்லோரும் ஒன்றாக இந்திரப்பிரச்தத்திற்குப் போவதும். மூல பாரதத்தில் தருமனின் இந்திரப்பிரஸ்தத்தில் ராஜ சூய யாகமே  ஜராசந்தனை வதம் செய்த பின்னர்தான் நடைபெறுகிறது. ஆனால், இங்கு ராஜ சூய யாகம் அல்லாமல் நடைபெறும் ஒரு  விழாவுக்கு ஜராசந்தனுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டு, அவனும் வருகிறான். அதுவும் துரியனின் தோழமை பூண்டு.

                        நல்லெண்ணத்துடன் வரும் துரியோதனனை பாண்டவர்கள் சந்தேகப்படுவது என்ற ஒரு காரணத்துக்காகவே இந்த ஜராசந்தன் வருகை  திணிக்கப்படுகிறது  என்றே தோன்றுகிறது. முதலில் பீமனின் கௌரவர்கள் மீதான  பகை (அவனுக்கு விஷமளித்த நாள் முதல் உருவானது, வாரணவதம், காம்பில்யப் போர் ஆகிய  சம்பவங்களுக்குப் பின்   அதிகரிப்பது),  மாறுவதாக வெண் முரசில் எந்த சம்பவமும் இல்லை, அவன் அவர்களை அழைக்க வரும்போது இளைய கௌரவர்களுடன்  கொஞ்சி விளையாடுவது தவிர. இது மிகச் சாதாரணமானது. அந்தப் பகை ஜராசந்தன் இந்திரப் பிரஸ்தத்துக்கு   வராமல் இருந்தால்கூட  அப்படியேதான் இருக்கும். ஆனால் நாவலில்  ஜராசந்தனின் இந்த வருகையை துரியோதனின் களங்கமற்ற  அறியாமை மீது பாண்டவர்கள் கொள்ளும் சந்தேகத்துக்கும் பகைமைக்கும் காரணமாகக் காட்டுவது  இயல்பாக இல்லை. இந்த ஒரு அற்ப காரணத்துக்காக நாவலில் ஜராசந்தனின் வதமும்  தள்ளிப் போடப்படுகிறது, ராஜ சூய யாகமும் கைவிடப்படுகிறது. மேலும் முன்னரே சொன்னது போல பீமனை நஞ்சருந்தச் செய்து கங்கையில் தள்ளிவிடும் சம்பவமே  இந்தப் பகைமையின் முதல் கல். அது வீசப்படுவதும் கௌரவர்களால். ஆனால் இங்கு எதிர்வரும் போருக்கான  பொறுப்பு நைச்சியமாக பாண்டவர்கள்  மீது ஏற்றப்படுகிறது. இதற்கான தர்க்கப்பூர்வமான நகர்வு வெண் முரசு நாவல்களிலேயே இல்லை என்பதே அதன்   பலவீனம். ஆனால் நாவல் வரிசை தொடரும் என்ற நிலையில் இந்த ஜராசந்த வதைப் படலத்தை ஜெயமோகன் எப்படி கொண்டு  வருகிறார் என்பதையும்ஆவலுடன் கவனிக்க வேண்டியிருக்கிறது.

இன்னொன்றும் சொல்ல வேண்டும், துரியோதனன்  மனைவியின் ஆளுகைக்குட்பட்ட ஊமைக் கணவனாகவே காட்டப்படுகிறான். இந்திரப்ரஸ்தத்திற்கு பானுமதியும் வந்திருக்கிறாள், ஆனால் துரியன் தான் செய்யவிருக்கும் சமாதான முயற்சிகள்  குறித்து அவளிடம் ஏதும்  சொல்வதாகக் காட்டப்படுவதில்லை. இங்கே இதற்கு முன்னால்  வரும் சில அத்தியாயங்களில் அஸ்தினபுரியின் அரசை நடத்தும்  பொறுப்பே பானுமதியின் கையில்தான் உள்ளது என்பது போலவும் காட்டப்படுகிறது. ஆனால் அதற்கெல்லாம் முரணாக,  இங்கு பானுமதி சுத்தமாக  மறக்கடிக்கப்படுகிறாள்.

மேலும் வெண் முரசு நாவலின்  பின்னணியாக  அதன் ஆசிரியர் கொண்டுவரும்  அரசியல் காரணங்களும் ஏற்கும்படி இல்லை.  அதுவரை வந்த அரசியல் சமநிலைகளுக்கும் விவரிப்புகளுக்கும்  நேர் எதிராக எந்தவித முகாந்திரமும் இல்லாமல் திரும்புகிறது கதைப் போக்கு.. மஹாபாரத காலத்தின் அரசியல் என்று ஆசிரியர்  விவரிப்பது ஏற்கெனவே இருக்கும் தொன்மையான க்ஷத்ரிய குலங்களுக்கும் உருவாகிவரும் புதிய சக்திகளுக்கும்  இடையேயான போட்டி  என்பது. இதில் மகதம், அச்தினபுரி, காந்தாரம், மற்றும் பாஞ்சாலம்  ஆகியவை தொன்மையான  க்ஷத்ரிய குலங்கள் என்றும்,  புதியதாக உருவாகி வரும், அரச  குலங்கள் என யாதவ அரசுகளையுமே ஜெ காட்சிபடுத்துகிறார். ஆனால் வெய்யோனில் திடீரென்று அந்தத் தொன்மையான க்ஷத்ரிய குல வாரிசான ஜராசந்தன் பாதி   அசுர குலத்தவன் என்றும் க்ஷத்ரியர்களுக்கு எதிரானவன் என்றும் மாற்றப்படுகிறான். இதற்குக்  காரணமாக, அவன் இளமையில்  ஜரையிடம் (ஜராசந்தன் இருபாதிகளாக இருந்தபோது ஒன்றாகச் சேர்த்தவள்) பால் குடித்து வளர்ந்தவன் என்றும் கானகத்தில் இளமையைக் கழித்தவன் என்றும் ஒரு புனைவைக்  கட்டுகிறார். இந்த இடத்தில் மழைப்பாடலில் ஜரசாந்தனின் தந்தை ப்ருஹத்ரதனுக்கு காந்தாரியை மணமுடிக்க கேட்டு வரும் காந்தார அமைச்சரிடம் தன தொன்மையான குல மேன்மையைக் காட்ட குதிரைச் சவுக்கைப் பரிசாகக் கொடுத்து அனுப்புவதை   நினைவுகூரலாம். அத்தகைய குலத்தில் வந்த ப்ருஹத்ரதனுக்கு காசி இளவரசிகள் மூலமாகப் பிறக்கும் ஜராசந்தனை பாதி அசுர குலத்தவனாகக் காண்பிப்பது சற்றும் பொருந்தவில்லை. மேலும், (இது பற்றி வண்ணக்கடளிலேயே ஒரு குறிப்பு உண்டு என்றாலும்) இதுவரை தொன்மையான மற்ற க்ஷத்ரிய குலங்கள் பாண்டவர்களை யாதவகுலத்தவர்களாகவே பார்க்கிறார்கள் என்றே புனையப் பட்டதும் இங்கு   மாறி, அவர்கள் ஜராசந்தன் போன்ற அசுர குலத்தவர்களை ஏற்றுக் கொள்ளாத தூய க்ஷத்ரிய குலத்தவர்கள் என்று  ஒரு மாற்றம் செய்யப்படுகின்றது. இதுவும், அதுவரை வந்த கதைப் போக்கிற்கு   மாறான ஒரு நிலைப்பாடாகத் தெரிகிறது.இது தர்க்கத்துக்கு அப்பாற்பட்டதாகவும் கதைசொல்லலின் ஒழுங்கைக் குலைப்பதாகவும் ஆதாரமற்றதாகவும் தோன்றுகிறது.

         வெண் முரசில் வரும்  திரௌபதியின் பாத்திரப்படைப்பும் விவாதிக்கத்தக்கது. பொதுவாக திரௌபதி தன்  வாழ்வைத் தான்  தீர்மானிக்க முடியாத பாத்திரமாகவே விவரிக்கப்படுபவள். ஐந்து கணவர்களைக்  பெறுவது முதல் அவள் படும் அல்லல்கள் கடைசிவரை ஓய்வதில்லை. இதில் எதையுமே அவள் முடிவு செய்வதில்லை என்பதே ஒரு  பொதுவான புரிதல் . ஆனால் ஜெயமோகனின் பாஞ்சாலி அப்படி படைக்கபட்டவளல்ல..பாஞ்சாலி கதாபாத்திர உருவாக்கம், சில இடங்களில் ஜொலிக்கிறது. உதாரணமாக அவளது வேறுபட்ட விழைவுகளே அவள் ஐந்து கணவர்களை அடையக் காரணம் என்று சித்தரிக்கப்படும் விதம். அவளுக்கும் அவளது சுயம்வரத்தில் நாண் ஏற்றி குறியை தகர்க்க  வைக்கப்பட்டிருக்கும் கிந்தூரம் எனும் வில்லுக்குமான தொடர்பு போன்றவற்றைச் சொல்லலாம். ஆனால் இந்திரப்ரஸ்தம் அமைக்கப்படும் இடமும் விதமுமே அவளது தேர்வு என்று புனையப்படுவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. உண்மையில் இந்திரப்ரஸ்தமாக மாறும் காண்டவப் பிரஸ்தம், வழங்கப்படுவதில் பாண்டவர்கள் ஏமாற்றப்படுகிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் இங்கு பாஞ்சாலியின் விருப்பப்படியே அந்த இடம் அவளால் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு வழங்கப்படுவதாக அமைக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வுக்கு பாஞ்சாலத்தின் ஐந்து குலத்தவர்களில் ஒன்றான துர்வாச குலத்தின் முனிவருக்கு நாகர்களின் மேலுள்ள பகையின் காரணமாக, தட்ச நாகர்கள் வாழும் காண்டவ வனத்தை அழிக்கும்  விழைவை அவர், தன சிஷ்யயையான பாஞ்சாலியிடம், புகட்டுவது போலப் புனையப்பட்டுள்ளது.

    இங்கு ஒரு மாற்று வரலாறாக, வெண் முரசு   முழுவதுமே நாகர்கள் இடையறாது முக்கிய பாத்திரங்களாக வருவதும் இந்த பாரதவர்ஷத்தின் பூர்வ குடிகள் அவர்களே என்றும் இந்த நிலமே நாகலந்தீவு, என்றழைக்கப்பட்டிருநதது என்பதும் ஒரு பெரும் புனைவாக அமைக்கப்பட்டுள்ளதை குறிப்பிடவேண்டும். ஒருவேளை இந்த நாகர்களின் வரலாறு தான் ஜெயமோகன் தன் மறு ஆக்கத்தில், முன்வைக்கும் முக்கியமான வரலாறு, மற்றும் பண்பாடு குறித்த ஒரு மாற்றுப் பார்வை  அல்லது அவர் சொல்லும், பண்பாட்டு மறுஆக்கமோ? அப்படி இருக்கும் பட்சத்தில், இந்த விஷயத்தில், ஜெயமோகனின் பார்வை, அவர் மீது சுமத்தப்படும், “இந்துத்துவ” அடையாளங்களைவிட அதிகம், இந்திய இடதுசாரி முற்போக்கு வரலாற்றாசிரியரின் பார்வையாகவே உள்ளது என்பதைக் குறிப்பிட வேண்டும் (ஆனால் வரலாற்றின் அறியப்படாத இன்னொரு பக்கமாக ஜெயமோகன் அளிக்கும் சித்திரம், அவர் ஆதரிப்பதாக கருதப்படும் தரப்புகள் உட்பட எந்தத் தரப்புக்கும் நிறைவை அளிப்பதாகத் தெரிவதில்லை என்பதுடன் ஒரு பண்பாட்டையே மறு உருவாக்கம் செய்வது என்பது தனி ஒரு இலக்கியப் பிரதியின் சக்திக்கு அப்பாற்பட்ட ஒன்று எனவும் தோன்றுகிறது.).

வெண்முரசில் இந்த நாகர்கள்  பன்னகர்கள் என்றும் உரகர்கள் என்றும், இரண்டு இனங்களாக பிரிந்திருப்பவர்களாகக் காட்டப்படுகிறார்கள் . அதனுள் மேலும், கௌரவ்ய, வாசுகி, திருதராஷ்டிரிய, ஐராவத மற்றும் தட்ச குலங்களாகவும்  பிரிக்கப்படுகிறார்கள். பல்வேறு பாத்திரங்களின் கூற்றாக இவை சொல்லப்படுகின்றன. ஒரு முழுமையான மாற்று வரலாறாக வெய்யோனில் இவை கர்ணனுக்கு காண்டவ / இந்திரப் பிரஸ்த்தத்தை விட்டு  வெளியேறும், முது நாகினி  மற்றும் மீதமிருக்கும் நாகர்களாலேயே சொல்லப்படுகிறது. ஆனால் இந்த வரலாறும் மிகக் குழப்பமாக உள்ளது. உதாரணமாக, நாகர்கள் குறித்த வெய்யோன் பகுதி 50ல் வரும் கதைக்கும் பகுதி 62 மற்றும் 63ல் வரும் கதைக்கும் உள்ள முரண்பாடுகளைக் காணலாம். இதன் மேலும்  ஒரு பிழையாக நாகர்களின் ஒரு குலம் தட்ச குலம் (காண்டவ வனத்தில் வாழ்வது) ) என்று  தட்சப்  பிரஜாபதியின் பெயரால்  அமைக்கப்படுகிறது.. இந்தக் குலம்  தக்ஷகக்   குலம்  என்பதே சரியானது ஆங்கிலத்தில் தட்சப் பிரஜாபதி, daksa என்றும், நாகக்  குலத்தின் தலைவன், Thakshaka என்றுமே குறிப்பிடப்படுகிறார்கள். வெட்டம் மானியின் puranic encyclopediaவிலும்   அப்படியே உள்ளது. ஆனால் ஜெயமோகன் ஏனோ இதை தட்சன் என்றும் தட்ச குலம் என்றுமே குறிப்பிடுகிறார்.

           இந்த நாககுலத்தோர், தங்களுக்குப் பாண்டவர்களால் இழைக்கப்பட்ட அநீதிக்காக கர்ணனிடம் அடைக்கலம் புகுகிறார்கள் இளம் தட்சனான அஸ்வ சேனன் அர்ஜுனனின் அம்புகளால் உருக்குலைந்து  போயிருப்பதைப் பார்க்கும் கர்ணன் அது உண்டாக்கும் பெரும் அற உணர்ச்சியால்,நாகர்களின் பக்கம் நிற்க உறுதி பூணுகிறான்.. அதற்காக அவன்  இழப்பது அவனது மெய்யான தம்பிமார்களையும், பாரத வர்ஷத்தின் அரசப் பதவியையும் அதற்கும் மேலாக (மீண்டும் ) பாஞ்சாலியின் கரத்தையும் என்று  அறிந்தும் அவனது பேரறம் அவனை நாகர்களின் பக்கம் நிற்க வைப்பதையே ஒரு  உச்சமாகக் கொண்டு வெய்யோன் முடிவடைகிறது. அத்தருணத்தில் நம்முள்  இயல்பாக எழும் ஒரு கேள்வி இந்தப் பேரறத்தான், கௌரவர்கள் வாரணவதத்தில் பாண்டவர்களை கொல்ல முயன்றதை கேள்விப்பட்டவுடன் எப்படி இயல்பாக அதைத் தாண்டி விடுகிறான் என்பதுதான். .இதை ஏன் சொல்ல வேண்டியிருக்கிறது என்றால், இந்த உச்சம் வலிந்து செய்யப்பட்டதுதான் என்பதும் கர்ணனின் பின்னிருந்து செயல்படுவது ஆசிரியர் முயன்றிருப்பது போல  மேலான அறம்  அல்ல செஞ்சோற்றுக் கடன் என்பதும்தான்.. அதுதான் அவனை கௌரவர்களின் தீச்செயல்களைப்பார்க்க விடாமல் செய்கிறதே அன்றி, இங்கு சொல்லப்படுவது போன்ற ஒரு அறம் சார்ந்த நிலைப்பாடல்ல .

          ஒரு பொதுக் கருத்தாகச் சொல்வதானால் இந்தத் தொடரில் , இதுவரை வந்துள்ள  9 நாவல்களில், மூன்று கிட்டத்தட்ட பாரதத்தின் முக்கியமான பாதையை விட்டு விலகுகின்றன,  இதில், வண்ணக்கடலுக்குப் பிறகு, நீலம், ஒரு நல்ல மாற்றாக இருந்தது, ஆனால் , பிரயாகை, மற்றும் வெண் முகில் நகரம் ஆகியவற்றுக்குப் பின், இந்திர நீலம் ,மற்றும்,காண்டீபம், இரண்டுமே தொடர்ச்சியாக, , மகாபாரதத்தின், முக்கியக் கதையிலிருந்து விலகிப் பயணிப்பவை ஆக அமைவது, சற்று தொய்வை ஏற்படுத்துகிறது என்பதையும் சொல்ல வேண்டியிருக்கிறது

அடுத்து இந்தத் தொடரில் ஒரு மெய்நிகர் அனுபவத்தை வழங்கும் பொருட்டு  செய்யப்பட்டிருக்கும் விவரணைகள்  மற்றும் பட்டியலிடுதல்  என்ற இரு அம்சங்களைப் பார்க்கலாம்.. மகாபாரத காலத்தின் நிலவமைப்புகள், ஆறுகள், கதைமாந்தர்களின் நடை உடை பாவனை  என்று மிகப்பெரிய ஒரு நிகர் உலகை இங்கே உருவாக்கி காட்டியிருக்கிறார் ஜெயமோகன். இது பல இடங்களில் மிகவும் ரசிக்கத்தக்கதாக  இருந்தாலும், சில  இடங்களில் சற்று அதிகப்படியாக போய்விடுகிறதோ என்றும் எண்ணாமலிருக்க  முடியவில்லை. கதாபாத்திரங்களின்  மெய்நிகர் வாழ்வைச் சொல்லுமிடத்து அவர்களின் ஆடைகள், அணிகலன்கள்,  பழக்க வழக்கங்கள் எல்லாம் சொல்லப்படுகின்றன. கர்ணன், கர்ணன் பட சிவாஜி போலவே மீசையை அடிக்கடி நீவிவிட்டுக் கொள்வது உட்பட.ஆனால் காவிய  நாயகர்கள் ஏப்பம் விடுவதையும் அவர்களுக்கும் அபான வாயு பிரிவதையும் எல்லாம் எழுத வேண்டுமா  என்று  தோன்றாமலில்லை. முன்னர் ஒரு கட்டுரையில், ஜெயமோகனே, திரௌபதி தன் முந்தானையை சரி செய்து கொண்டாள்  என்பது போல  எழுதுவதில் தனக்கு உடன்பாடில்லை என்று சொல்லியிருக்கிறார். ஆனால் இங்கு அந்தச் செயலைப்போல பலவற்றை விவரித்து எழுதியுள்ளார். இதுவெல்லாம் ஒரு வாசகனுக்கு மெய்நிகர் அனுபவத்தை அளிக்கவே என்று புரிகிறது, ஆனால் அளவுக்கு மிஞ்சினால்..?

            காலம்  இடம்  வயதுகள் குறித்த குழப்பங்கள் மகாபாரதத்திலேயே அதிகம்தான். ஆனால், இங்கே  ஜெயமோகன் அவற்றில் நாடும் துல்லியம் மேலும் குழப்பத்தை எற்படுத்துகிறது. ஒரு  உதாரணம்,பாஞ்சாலியின் சுயம்வரத்தின்போது  துருபதனை பார்க்கும் தருமன், “இந்தப் பதினேழு வருடங்களில் அவர் நிரம்ப மாறியிருக்கிறார் என்று சொல்கிறான். இது துருபதனை துரோணருக்காக அர்ஜுனன் வென்ற நிகழ்வுக்குப்பின் 17 வருடங்களுக்குப் பின் இந்த சுயம்வரம் நிகழ்கிறது என்பதைக் காட்டுகிறது.  அப்படிக் கணக்கிட்டால், அந்தத்  தோல்விக்குப்பின் துருபதன், தவமெல்லாம் செய்து, யாகத்தில் பாஞ்சாலியைப்  பெற ஒரு இரண்டு  வருடம் என்று கொண்டால் கூட, சுயம்வரத்தின் போது  அவளுக்கு வயது 15தான், ஆனால் பாஞ்சாலியின் தோற்றத்தையும் மனத்திட்பத்தையும் வர்ணிக்கும் விதத்துக்கும் அவள் வயதுக்கும் அது பொருத்தமேயில்லாமல் இருக்கிறது முக்கியமாகத் தோற்றம். இந்தக் கேள்விகளையெல்லாம், பாஞ்சால, யாக நெருப்பிலிருந்து வரும்போதே, யுவதிஆக  வருகிறாள் என்று காட்டுவதன்  மூலம் வியாசர் தவிர்த்துவிடுகிறார் இல்லையா?

             இன்னொரு விஷயமாக ,ஆசிரியரின் தற்காலப்  பயணங்கள்,இந்தக் காவியத்தில் பிரதிபலிப்பதைச்  சொல்லலாம். அவர் வடகிழக்குப் பகுதியில் பயணம் செய்யும்போது  மர  வேர்களால் ஆன ஒரு உயிர்ப்பாலத்தைக் காண்கிறார். அது அவரே அறிந்தோ அறியாமலோ அவரது புனைவிலும் வருகிறது. சல்லியனின் தலைநகரான சகலபுரியில் தேக்கு  மரமும்  சால மரமும் இணைந்த ஒரு மரக் காவல் கண்காணிப்புக் கோபுரம் வழியாக- ஆனால் இங்கு ஒன்றை நினைவில் கொள்ள வேண்டியிருக்கிறது, தேக்கும், சால மரமும் ஒரே இடத்தில் .முக்கியமாக, சகலபுரியில் (அது இன்று  Sialkot என்கிற பெயரில்  பாகிஸ்தானில் உள்ள பகுதி) வளர வாய்ப்பேயில்லை. தேக்கு மரங்கள்  விந்தியத்துக்கு வடக்கேயும், சால மரங்கள் விந்தியத்துக்குத் தெற்கேயும் வளர்வதில்லை என்பது ஒரு புவியியல் உண்மை. இதைப் படிக்கும்போது அதை மறக்க வேண்டி உள்ளது. இதுதான் அதிகமாக  நுண்விவரங்களை அளிப்பதில்  உள்ள பிரச்சினை. சரி, சல்லியன் அதீத முயற்சி செய்து அப்படி ஒரு கோபுரத்தை அமைத்தார் என்று வைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. அதே போல சஞ்சயன் என்ற  திருதராஷ்ட்ரனின் உதவியாளர் பாத்திரம் முக்கியமாக அறிமுகப்படுத்தப்படுகிறது. ஆனால் சில பகுதிகள் கழித்து   அந்தப் பாத்திரம் முற்றிலும் மறக்கப்பட்டுவிட்டது போலுள்ளது.

    நான் மேலே சொல்லும் எல்லா குறைகளும் இருந்தாலும் வெண் முரசு நாவல் தொடர் ஏன் முக்கியமானது என்றால், அதில் ஜெயமோகன் நிகழ்த்திக் காட்டும் புனைவின் பெரும் ரசவாதமும், அவரது மொழியழகும், சொல்லாட்சியும். இதற்கு பலப்பல இடங்களையும் சொற்றொடர்களையும் சொல்லிக் கொண்டே போகலாம். மேலும் அவர் புதிய சொற்களை அறிமுகம் செய்துகொண்டே இருக்கிறார், எரி குளம் ,பிறவிநூல், தீச்சொல், நாற்களம்,  அதற்கு மேல், பிராயச்சித்தம் எனும் சொல்லுக்கு ஈடாக அவர் வழங்கியுள்ள பிழையீடு எனும் சொல், மேலும் மூலக் கதைக்கு பெரும் துணை புரியும், மூலக் கதையையே வேறு கோணத்தில் அலச வைக்கும் உப கதைகளும் அபாரம் என்று சொல்ல வேண்டும். அதேபோல ஒவ்வொரு நிகழ்வும் கதையும் எந்தப் பாத்திரத்தின் பார்வையிலே சொல்லப்பட வேண்டும்  என்பதில் அவரது தேர்வும் அற்புதமானது. வெண் முகில் நகரம் நாவலின்  நிகழ்வுகள், பூரிசிரவஸ்,  சாத்யகியின் பார்வையில், இந்திர நீலத்தில் ருக்மிணியின் மணம் அவளின் வளர்ப்புத்தாய், அமிதையின் பார்வையில் என்று நிறையச்சொல்ல வேண்டியிருக்கிறது.  குறிப்பாக பாரதத்தில் ஒரு சின்ன பாத்திரமாக வரும் பூரிசிரவசை வெண் முகில் நகரத்தில் ஒரு முக்கிய, மறக்க முடியாத பாத்திரமாக்கி விட்டதிலும், வெய்யோனில், ஜயத்ரதனின் கதையும், அவனது தந்தையின் பாத்திரமும், அந்த தீர்க்கதமஸ் முனிவரின் கதையும்,ஜெயமோகனின்   மேதைமைக்கு சான்றுகள்.

புராணங்களின் மறு ஆக்கங்களைக் குறித்த அவரது மூன்றாவது  கருத்தான ஆழ்படிமங்களை  (இவை தொல் படிமங்கள் என்று இருக்க வேண்டும் என்றே நான் நினைக்கிறேன்) ஆன்மீகத் தளத்துக்கும், தத்துவார்த்தத தளத்துக்கும் நகர்த்திப்  பார்க்கும் தன்மை என்று சொல்வதற்கு உதாரணமாக அமைந்த  இடங்களும் இந்த நாவல் வரிசையைத் தவற விடகூடாத ஒன்றாகச்  செய்வதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

என்னை மிகவும் கவர்ந்த  இரண்டு  இடங்களைச் சொல்கிறேன். ஒன்று, பாஞ்சாலி என்றாலே  ஐவரின் பத்தினி, என்பதை  சாக்த வழிபாட்டின் ஒரு வெளிப்பாடாக மாற்றி, ஐந்து திரிகளிலும் அனல்ஒளி  கொண்டு எழும் தீபம் ஆடியின் அனல் என்றாகி  வரும் வெண்முகில் நகரம் நாவலின் 19வது பகுதி.

 இரண்டாவதாக, இந்திரநீலத்தில் பார்க்கும்  அனைவரின்  மனத்திலும் பெரும்  விழைவினை உருவாக்கும்,  என்றும் அடைய முடியாத , அடைந்தாலும் நிறைவை ஒரு போதும் வழங்காத, பெரும் செல்வத்தின் குறியீடான அந்த சியமந்தக மணி கிருஷ்ணனின் எட்டாவது மனைவி காளிந்தியின் கைகளில் தன் உயர் மதிப்பையெல்லாம் இழந்து வெறும் கூழாங்கல்லாக மாறும் இடம்.

நிறைகளை விடக் குறைகள் அதிகமாகச் சொல்லியிருக்கிறேனோ என்று தோன்றலாம். அதிலும் இதில் நான் சொல்பவற்றில் பெரும்பாலானவை, ஜெயமோகன் அவர்களிடமே நேர்ப் பேச்சிலும் எழுத்திலும் விவாதித்து அவரால் அநேகமாக பதில் சொல்லப்பட்டவை. இருப்பினும் நான் திருப்தியடையாத இடங்களை மட்டுமே இங்கு சொல்லியிருக்கிறேன். இந்த இடங்களில் பெரும்பாலானவை மூல மகாபாரதத்தை விட்டு விலகும் இடங்கள்தான் என்றும் தோன்றலாம். அதில் உண்மை இல்லாமல் இல்லை. ஆனால் விலகல் எல்லாமே பிழைகள் என்றோ குறைகள் என்றோ சொல்லவில்லை. முன்னரே சொன்னதுபோல், நான் இந்த விஷயத்தில் மூன்று விஷயங்களை மட்டுமே கவனத்தில் கொண்டிருக்கிறேன்-

ஒன்று, ஒரு புதிய சம்பவத்தைச் சேர்ப்பதற்கு மூலத்தில் ஒரு சிறு அடிப்படையாவது இருக்க வேண்டும்.

இரண்டாவதாக,  விலகலும் அதை ஒட்டி வரும் சம்பவங்களும் இந்த மறு ஆக்கத்தின், அதுவரையிலான  கதைப் போக்கின் தர்க்கத்துக்கும் பாத்திரங்களின் குணாம்சங்களுக்கும் பொருந்தி இயல்பாக உருவாகி வந்திருக்க வேண்டும்.

மூன்றாவதாக,  மூலத்தை விட்டு விலகும் இடங்கள் பாத்திரப்படைப்புக்கும் கதைக்களனுக்கும் மூலத்தைவிட அதிக செறிவு அளிப்பதாக இருக்க வேண்டும்.

இதைச் செய்யத் தவறிய பகுதிகள் சிலவற்றையே இங்கு குறிப்பிட்டிருக்கிறேன்.

இத்தனை சொல்லும் அதே சமயத்தில், இதெல்லாம்  முற்றிலும் புறவயமான ஒன்றல்ல என்பதையும் சொல்ல வேண்டும்.  இந்தக் கேள்விகள் எதுவும் எழாமலேயே இந்த நூல் வரிசையை ஆழ்ந்து படிப்பவர்கள் ஏராளம் உண்டு என்பதையும் நான் அறிவேன். நான் சொல்லும் இந்தக் குறைகளை எல்லாம்   மீறி, இத்தொடரின் அடுத்தப் பகுதி எப்போது வரும்  என்று நானும்  காத்திருக்கிறேன் என்பதே உண்மை. இந்த வரிசையைப் படித்தவர்கள் மீது அது உண்டாக்கும் பிடிப்பு அத்தகையது. அதுவே அதன் வெற்றி .வெண் முரசு தொடரை  தமிழ் கூறு நல்லுலகு, நேர்மறையாகவோ எதிர்மறையாகவோ, இன்னமும் கொஞ்சம் அதிகம் தீவிர வாசிப்புக்கு உட்படுத்தலாம் என்பதே என் ஆசை.

- See more at: http://solvanam.com/?p=44270#sthash.3zTSKAxW.dpuf

 

Link to comment
Share on other sites

  • 1 year later...
  • கருத்துக்கள உறவுகள்

வெண்முரசு வரிசையில் – பன்னிரு படைக்களம்: ஒரு பார்வை

panirupadai_2

ஜெயமோகனின் மஹாபாரதப் பயணம் பன்னிரு படைக்களத்தில் தொடர்கிறது  (இந்த மதிப்பீட்டை எழுதி முடிப்பதற்குள் இதற்கு அடுத்த நாவல், ‘சொல்வளர்க்காடு’, இதுவும் எழுதி முடிக்கப்பட்டு விட்டது). இதுவரை  வந்த அனைத்து நாவல்களையும் பார்க்க, இந்த நாவலிலேயே ஜெயமோகன் மஹாபாரதத்தை தொடராக எழுதுவதன் நோக்கம் துல்லியமாகத் துலங்குகிறது என்று சொல்லலாம். இதுவரை வந்த நாவல்கள் அனைத்தும் சில இடங்களை விரித்தெடுத்தன, சில இடைவெளிகளை அபாரமான கற்பனைகளால் நிரப்பின, கவித்துவமான மொழியாலும் புதுப்புது சொல்லாக்கங்களாலும் உவகையூட்டின. ஆனால் பன்னிரு படைக்களமென்னும் இந்த நாவலில், ஜெயமோகன்  எதை அடிப்படையாக வைத்து இதை எழுதத் தொடங்கினாரோ அந்த நோக்கத்தை நோக்கி ஒரு தீர்மானகரமான திரும்புதலை நிகழ்த்துகிறார் என்றே சொல்லவேண்டும்.

இந்த நாவல், ஜராசந்தன் கதையில் துவங்குகிறது. சொல்லப் போனால் ஜராசந்தனின் ஆளுமையில் உள்ள இருமைக்கு ஒரு பீடிகையாக ரம்ப கரம்பர் கதையுடனும், துரியோதனனின்  வீழ்ச்சியை உருவகப்படுத்தும் விதமாக, தாயுடனான ஈர்ப்பும் முரணும் பகையும், தவிர்க்கவியலாத அழிவுப்பாதையை  நோக்கிய பயணமும் கொண்ட ரக்தபீஜன் கதையுடனும்  தொடங்குகிறது. பௌண்டரிக வாசுதேவன் வதம், ஜராஸந்த வதம், சிசுபால வதம் போன்ற களங்கள் வழியாக இறுதி உச்சமாக, அஸ்தினபுரியில் நிகழும் சூதாட்டப் படைக்களத்தில் பாண்டவர்களின் தோல்வியுடனும் பாஞ்சாலியின் வஸ்திராபரணத்துடனும் முடிகிறது. இடையில் நிச்சயமாக, ராஜ சூய யாகமும் நிகழ்கிறது.

இப்படி ஏராளமான சம்பவங்களும் மூலத்துக்கு இன்னும் துலக்கம் சேர்க்கும் கிளைக்கதைகளும் உருவகக் கதைகளுமாக ஒன்றுக்கும் வேறுபட்ட பல திரிகள் இருந்தாலும் பன்னிரு படைக்களத்தில் முக்கியமாக ஜெயமோகன் காட்டுவது இதுதான் என்று சொல்லலாம்:  மண்ணாசை, தாயாதிக் காய்ச்சல் மற்றும் தனிமனித அறம் சம்பந்தப்பட்ட சிக்கலான கேள்விகளே மகாபாரதத்தின் அடிப்படை என்பதிலிருந்து வேறுபட்டு, மிக விரிவான தத்துவப் பின்னணி கொண்ட  பல்வேறு சமூகங்களுக்கிடையே நிகழும் மேலாதிக்கத்துக்கான போட்டி, பல்வேறு வாழ்க்கை நோக்குகளின்  பூசல் என்று நிலைநாட்டுவது வெண்முரசு. இவற்றை ஒவ்வொன்றாகக் காணலாம் எனினும் முதலில் ஒன்று சொல்ல வேண்டும்- ஒவ்வொரு வாழ்க்கை நோக்குக்கும் பிரதிநிதியாக பாத்திரங்களை உருவாக்கியிருக்கிறார் ஜெயமோகன்.

முதலில் ஜராசந்தனுக்கு அவர் அளித்திருக்கும் நாக, அசுர மற்றும் அரக்க பின்னணி. தொல்வேதம் எனும் நாகவேதத்தை மீண்டும் பாரதத்தில் நிலைநாட்ட வந்திருப்பவனாக தன்னை எண்ணிக்கொண்டு, அன்றைய காலகட்டத்தில் கருத்து தளத்தில் நிலைகொண்டிருக்கும் நால்வேதத்தை எதிர்ப்பவனாகவும் அரசியல் களத்தில் நிலை பெற்றிருக்கும் க்ஷத்ரிய மேலாதிக்கத்தை தகர்க்க முயற்சிப்பவனாகவும், அதற்காகவே நூறு க்ஷத்ரிய அரசர்களை வென்று அவர்களை பலி கொடுத்து நாகவேதத்தின் அடிப்படையிலான ஒரு யாகத்தை செய்பவனாகவும் அவனை படைத்திருக்கிறார் ஜெயமோகன்.

அடுத்து, சிசுபாலன்.  சிசுபாலன் அன்று நிலை பெற்றிருந்த க்ஷத்ரிய மேலாதிக்கத்தைப் பாதுகாக்கவும், அதற்கு சவாலாக எழுந்து வரக்கூடிய யாதவ குடிகளுக்கு, குறிப்பாக கிருஷ்ணனின் வளர்ச்சிக்கு எதிரானவனாகவும் கட்டமைக்கப்படுகிறான்.

மூன்றாவதாகவும் மிக முக்கியமாகவும்  கிருஷ்ணன். வெண்முரசுத் தொடரில் இந்த நாவலுக்கு முன் கிருஷ்ணன், துவாரகையை அமைப்பது குறித்து பேசும் ஒரு இடத்தைத் தவிர, தன்  வாழ்நாள் குறிக்கோளையோ, தன்னைப் பற்றியோ நேரடியாக எதுவும் பேசுவதே இல்லை. பிறர் அவனைப் பற்றி பேசுவதைக் கொண்டே அவனது பாத்திரம் எழுப்பப்பட்டிருந்தது. பன்னிரு படைக்களத்தில்தான் அவன் தன் வாழ்நாள் குறிக்கோளை, புதியதொரு தத்துவத்தின் அடிப்படையில் பாரத சமூகத்தை அமைப்பது குறித்து, நேரடியாகப் பேசுகிறான். இருந்து மறைந்த தொல்வேதமெனும் நாகவேதம் மீண்டும் உயிர்த்தெழுவதைத் தடுப்பவனாகவும், நிலைபெற்றிருக்கும் நால்வேத மேலாதிக்கத்தை தகர்த்து வேதாந்தத்தின் பார்வையை நிலைநாட்டுபவனாகவும் அவனது பாத்திரம் கட்டப்படுகிறது. இவற்றை ஜராசந்தனுடனான வாதத்திலும் ராஜசூய யாகத்தின்போது சிசுபாலனின் கேள்விகளுக்கு பதில் உரைக்கும் போதும் கிருஷ்ணன் விளக்கமாகக் கூறுகிறான்.

  நான் அனைத்தையும் ஒளிகொள்ளச் செய்யும் சாந்தீபனி குருகுலத்தின் மாணவன். வேதமுடிவே மெய்மை என்றுரைக்கும் கொள்கை கொண்டவன். வேட்டும் வென்றும் கொண்டு எவரும் நிறையமுடியாதென்றும், அறிந்தும் ஆகியும் அவிந்துமே அமையமுடியும் என்றும் சொல்பவன். அழியாத வேதமுடிவெனும் மெய்ப்பொருளை இங்கும்நிலைநிறுத்தவே வந்தேன் என்றார்.

 மேழிபிடிப்பது வேள்வி. ஆழிகொண்டு கலம் வனைவதும் வேள்வியே. ஆபுரப்பது வேள்வி. மீன்பிடிப்பதும் வேள்வியே. செயலென்று தன்னை முழுதுணரும் அழிவிலா வேள்வியால் இனி இப்புவி தழைக்கட்டும். அனைவருக்குமென சமைக்கப்படும் அன்னமெல்லாம் வேள்விமிச்சமே வேள்வியென ஆற்றப்படும் செயல்களன்றி பிறவற்றால்சிலந்திவலையில் சிறகுள்ள பூச்சிகள் என சிக்கிக்கொண்டிருக்கின்றனர் மானுடர்.  எனவே வேள்வி நிகழ்க! நிகழ்வனவெல்லாம் வேள்வியென்றே ஆகுக!”/ 

 இதுவே கிருஷ்ணனின் பிரகடனம். இதை அண்மைக் காலத்தில் ஜெயமோகன்  நிகழ்த்திய கீதை பேருரைகளோடும்  ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

இந்தப் பார்வையே பன்னிரு படைக்களத்தின் மையமாகவும்,   மிக சர்ச்சைக்குரிய பகுதியாகவும் விளங்குகிறது. இந்தப் பார்வைக்கான அடிப்படை பாரதத்தில் உண்டா என்பது இயல்பான கேள்வி. ஜெயமோகன் பாரதத்தின் மௌனமான பகுதிகளைத்  தன் விருப்பம் போல், தான் நம்பும் வரலாற்றுப் பார்வையின் அடிப்படையில், கற்பனையைக் கொண்டு இட்டு நிரப்புகிறார் என்ற குற்றச்சாட்டு வலுவாக எழுவதற்கு வாய்ப்புள்ளது. அதற்கு அளிக்கப்படும் விடையாக, இது ஒரு புனைவு என்றும் இதைச் செய்வதற்கான சுதந்திரம் தனக்கு உண்டு என்றும் ஒரு புனைவில் பேசப்படும் விஷயங்களின் நம்பகத்தன்மைக்கு ஆராய்ச்சி செய்து கண்டடையப்பட்ட வரலாற்று உண்மைகள் அவசியமில்லை, அவற்றுக்கான மெல்லிய முகாந்திரங்கள் இருந்தாலே போதும் என்றும் ஜெயமோகன் சொல்லக்கூடும். அப்படிச் சொல்லியிருமிருக்கிறார். ஆனால் இங்குள்ள பிரச்னை, வெண்முரசு இதுவரை மறைக்கப்பட்ட ஒரு மாற்று வரலாற்றையும் பண்பாட்டையும் வெளிப்படுத்துகிறது என்று பல இடங்களில், பல்வேறு சமயங்களில் அவர் கூறுவதுதான். மாற்று வரலாறு, பண்பாடு ஆகியவற்றை முன் வைப்பது என்றால் அவற்றுக்கான ஆதாரங்கள் கேட்பது தவிர்க்கவியலாததாகிறது. எனினும், சந்தேகத்தின் பலனை ஆசிரியருக்கு அளித்துவிட்டு, சர்ச்சைக்குரிய இந்தப் புள்ளிகள், நாவலில் உள்ளார்ந்த தர்க்கத்துடன் புனையப்பட்டுள்ளதா என்று பார்க்கலாம். அதாவது, இதில் பேசப்படும் விஷயங்களுக்கு ஆதாரமாக இருக்கக்கூடிய புறத்தகவல்கள் பற்றி கேள்வி எதுவும் எழுப்பாமல், புனைவினுள் காணப்படும் அகத்தகவல்களும் அவற்றுக்கிடையே உள்ள உணர்வுத் தொடர்புகளும் திருப்தியளிக்கும் வகையில் ஒன்றுகூடி மேற்கண்ட புள்ளிகளுக்கு வலு சேர்க்கும் வகையில் இணைகிறதா என்று பார்க்கலாம்.  அப்படிப் பார்த்தாலும், அது திருப்திகரமாக வரவில்லை என்றே எனக்குத் தோன்றுகிறது.

பன்னிரு படைக்களத்தின் கதைப்படி சிசுபாலனும் ஜராசந்தனும் நெருங்கிய  நண்பர்களாகக் காட்டப்படுகிறார்கள். ஜராசந்தன் மரணத்துக்காக கிருஷ்ணனைப்  பழிவாங்கவும் பாண்டவர்களின் இந்திரப்ரஸ்தத்தின் மீது படையெடுக்க பிற க்ஷத்ரிய மன்னர்களின் உதவி கேட்பவனாகவும் சிசுபாலன் சித்தரிக்கப்படுகிறான். இங்கு எழும் முக்கியமான கேள்வி, நால் வேதத்தை மறுக்கும், தொல் நாகவேதத்தை உயிர்த்தெழச் செய்து, க்ஷத்ரியர்களை வேரறுக்க விரும்பும் ஜராசந்தனும், நால் வேதத்தின் நெறியினைப் பாதுகாக்கத் துடிக்கும், க்ஷத்ரிய மேலாதிக்கத்தை நிலைபெறச் செய்யும் எண்ணம் கொண்ட சிசுபாலனும், எப்படி நெருக்கமான  நண்பர்களாக இருக்க முடியும் என்பதுதான். இவர்களிடையே  இது குறித்து, எந்த ஒரு அறிவுபூர்வமான  விவாதங்களும் நிகழ்வதாகக் கதையில் இல்லை. இப்படியொரு விவாதம் நிகழாத காரணத்தால் எதிரெதிர் நோக்கங்களும் செயல்திட்டங்களும் கொண்ட இவ்விருவரும் நெருங்கிய நண்பர்களாக இருப்பதில் உள்ள முரண்பாடு நாவலில் வெளிப்படையாகப் பேசப்படும் வாய்ப்பு தவிர்க்கப்பட்டு விடுகிறது. க்ஷத்ரிய மேலாதிக்கத்தை கருவறுக்கத் துடிப்பவனாக கிருஷ்ணனை அடையாளம் கண்டு கொதிக்கும் சிசுபாலன், 100 க்ஷத்ரியர்களை சிறையிலடைத்து தான்  நடத்தும் தொல் நாகவேத யாகத்தில் பலி கொள்ள இருந்த ஜராசந்தனை மட்டும் எப்படி நண்பனாகக் கருத முடியும்? ஜராசந்தனும் க்ஷத்ரிய மேலாதிக்கத்தை தொடர்ந்து நிலைபெற வைக்க விரும்பும் சிசுபாலனை  நெருங்கிய நண்பனாகக் கொள்ள முடியும்? கதையாடலில் உள்ள இந்த முரண்பாட்டை ஜெயமோகன் கவனிக்கவில்லை என்றே தோன்றுகிறது. இது தர்க்கப்பிழை மட்டுமல்ல, ஒருவரையொருவர் கொன்றொழிக்கும் நோக்கங்களைக் அடிப்படையாகக் கொண்ட  இருவர் நெருங்கிய நண்பர்களாக இருக்கின்றனர் என்பது, பாத்திரப் படைப்பின் ஒருமைக்கு கேடு செய்கிறது, அவர்களின் நோக்கங்களுக்கு ஊறு செய்கிறது. கொலைக்களத்தில் எதிரெதிர் நிற்கக்கூடிய  இவர்கள் அந்த உணர்வு சிறிதும் இல்லாமல் அருகிருந்து உறவாடுகின்றனர் (வெய்யோன் நாவலில்).

ஜராசந்தன்- சிசுபாலன் நட்பு மட்டுமல்ல, அந்த உறவுக்கு வெளியே ஜராசந்தன் பாத்திர படைப்பு, அவன்  செய்யும் யாகம், மற்றும் அவனது வாழ்க்கை நோக்கு ஆகிய எல்லாமே சர்ச்சைக்குரிய வகையில், படைப்பின் உள்ளார்ந்த தர்க்கத்துக்கும் மாறாகவே உள்ளது. முதலில் ஜராசந்தன் நடத்தும் யாகம் தொன்மையான நாகவேதத்தின் அடிப்படையிலானது என்று சொல்லப்படுகிறது. ஆனால் நால்வேதத்திலேயே அவன் நடத்தும் யாகத்துக்கு இடம் உள்ளது. புருஷ மேத அல்லது நரமேத யாகம் எனும் இது, சுக்ல யஜுர் வேதத்தின் வாஜசனேயி சதபத பிராமண ,-காத்யாயன சிரௌத சூத்திரத்தில் (Vajasaneyi Samhita-Sataphana Brahmana-Katyayana Srauta Sutra)  சொல்லப்பட்ட ஒன்றுதான். நால்வேத மரபுக்கு எதிரானதாக இதைக் கட்டமைத்திருக்கிறார் ஜெயமோகன். புனைவில் அவ்வாறு இருக்கலாம் என்பதை ஒப்புக்கொண்டாலும், மரபில் உள்ள ஒன்று மரபுக்கு எதிரானது என்று புனையப்படும்போது கதைப்போக்கு மற்றும் ஆசிரிய கூற்றுக்கு அப்பால் அத்தகைய வாதத்துக்கான நியாயம் கதையில் நிறுவப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இயல்பானதே.

panirupadai_1

மேலும் முக்கியமாக, ஜரையினால் ஒன்றாக்கப்பட்டதானாலேயே ஜராசந்தனுக்கு ஒரு அரக்கப் பின்னணியை அளித்திருப்பதும் அவனது வரலாறும் கேள்விக்குரியவை. ஜராசந்தன் பிள்ளையில்லாமல் தவித்துத் தவமியற்றிய பிருஹத்ரதனின் மனைவிகளுக்கு  இருபாதிகளாகப் பிறந்தவன் என்பதும், ஜரை என்ற அரக்கியினால்  ஒன்றாக்கப்பட்டு ப்ருஹத்ரதனிடம் மீட்டளிக்கப்பட்டவன் என்பது நாம் அறிந்தது. ஆனால் இங்கு அந்தக் கதையிலிருந்து ஒரு படி மேலே சென்று, ஜரையை ஜராசந்தனின்  வளர்ப்பு அன்னை என்றும் அவளது முலைப்பால் உண்டு அவளிடமே சில காலம் வளர்ந்ததால் அவன் பாதி அரக்கன் என்றுமே புனைவைக் கட்டுகிறார் ஆசிரியர். இது போதாதென்று, தன் சகோதரர்களைக் கொன்று தன்  தந்தையையும் அன்னையரையும் நாடு கடத்திய பின்னர்  நாடாண்டவன் ஜராசந்தன் என்றும் இந்நாவலில் சொல்லப்படுகிறது. சாம்ராட் அசோகன் மற்றும், சுல்தானிய கதைகளை எதிரொலிக்கும் இக்கதைக்கான அடிப்படை பாரதத்தில் உண்டா என்ற கேள்வியைக் கூட புனைவுச் சுதந்திரத்தின் அடிப்படையில்  விட்டுவிடலாம். ஆனால், ஜராசந்தன் ப்ரஹத்ரதன் தவமிருந்து பெற்ற ஒரே மகனா, அல்லது அவனுக்கு முன் ப்ருஹத்ரதனுக்கு மகன் உண்டா, அவனுக்கு அடுத்தும் மகன்கள் உண்டா  என்பதிலெல்லாமே கூட இந்தப் பிரதியில் தெளிவு இல்லை. ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொன்று சொல்லப்படுகிறது.

வெய்யோன் நாவலின் 54ம் பகுதியில் ஜராசந்தன் தனக்கு முன் தன் தந்தைக்கு ஒரு மகன் இருந்து இளவயதில் இறந்ததாகக் கூறுகிறான். தனக்குப் பின் தன் அன்னையர் தந்தைக்குப் பிறந்த தன் சகோதரர்களைக் கொல்வதாகவும் வருகிறது. ஆனால், ப்ருஹத்ரதர் பிள்ளையில்லாக் குறையினால் தவம் புரிந்து, மிகவும் முதிர்ந்த வயதில்,  சண்ட கௌசிக ரிஷியிடம் வரம் பெற்று அதனால் ஜராசந்தன் அவர் பெற்ற ஒரே மகனாகப் பிறந்ததாகவும் வருகிறது. இதை பகுதி 9ல் பார்க்கலாம். ப்ருஹத்ரதரும் இவ்வாறே புலம்புகிறார்.

 “அரசனையும் அரசியரையும் முதுமை வந்தணைந்தது. அரண்மனை மருத்துவர் சூத்ரகர், “மைந்தரைப்பெறும் அகவையை தாங்கள் கடந்துவிட்டீர்கள் அரசே. அரசியரும் அவ்வெல்லையை கடந்துவிட்டனர் என்று அறிவித்தார். அன்றிரவு பிருஹத்ரதன் அரசியர் மாளிகையில் துணைவியருடன் இருக்கையில் துயர் தாளாது கண்ணீர்விட்டார். “வாழ்நாளெல்லாம் கடலோடி ஈட்டிய செல்வமனைத்தையும் கலமுடைந்து நீரில் விட்ட வணிகன் போலிருக்கிறேன். செல்வமென்பது இப்பிறப்பின் இன்பங்களையும் மறுபிறப்பின் நல்லூழையும் பெற்றுத்தரக்கூடியதென்று இளமையில் கற்றேன். என் கருவூலச் செல்வமனைத்தையும் வேள்வியறங்களுக்கு அளித்துவிட்டேன். வெறுங்கையுடன் விண்செல்லப்போகிறேன். புத் என்னும் இழியுலகுக்குச் சென்று இருளில் அமைவேன் என்றார்.”

 இங்கே அவருக்கு ஏற்கெனவே ஒரு பிள்ளையிருந்து அவன் இறந்தது போல் வரவில்லை. மேலும் மிக முதிர்ந்த வயதில் முனிவர் அருளால் ஜராசந்தனைப் பெறும் அருள் பெற்ற  அரசத் தம்பதியினர், ஜராசந்தன் ஜரையுடன் காட்டுக்குச் சென்றபின்னர், மேலும் பிள்ளைகளை பெற்றனர் என்று நம்புவதற்கான தேவை கதைபோக்கில் இல்லை, இது ஒரு முரணாக துருத்திக் கொண்டு தான் நிற்கிறது.

ஜராசந்தனுக்கு உடன்பிறந்தோர் உண்டா என்பது ஒரு கேள்வி. அதில் ஒருவர்  அவன் பிறக்கும் முன்னர் இறந்துவிட்டவரா, அவனுக்குப் பின் பிறந்த தம்பியர் அவனால் கொல்லப்பட்டனரா என்பது ஒரு கேள்வி. இத்தனையும் ஒரே படைப்பில் வரும்போது ஜராசந்தன் பாத்திரப்படைப்பில் குழப்பம் ஏற்பட்டு அவனது சித்திரம் பழுதுபடுவதுடன், சம்பவங்களின்  நம்பகத்தன்மையும் குலைகிறது .

ஜராசந்தனுக்கு ஒரு அரக்கப் பின்னணி அளித்து அவனை நால்வேத மறுப்பாளானாகக் காட்ட இது தேவைப்படலாம். ஆனால் எழுதப்பட்ட வகையில், கவனக்குறைவும் தர்க்க ரீதியிலானப் பிழைகளும், ஜராசந்தன் பாத்திரம் முழுமை அடையாமல், ஆசிரிய நோக்கத்தில் அசைக்கப்படும் வேறொரு நூலிலாடும் பாவையாய்த் தோன்ற காரணமாகின்றன.

அதே போல அவனது மகள்கள் விஷயத்திலும் இப்படியே.  ஜராசந்தன் மகள்களான அஸ்தி, பிராப்தி இருவருமே கம்சனின் மனைவியர் என்பதும் அவர்களின் கணவனான கம்சனைக் கொன்றதினாலேயே ஜராசந்தனுக்கு கிருஷ்ணன் மீது தீராப்பகை என்பதுமே பாரதத்தில்  வருவது. இங்கு இதிலும்  குழப்பம்.

ஜராசந்தன் தன்  மகள்களான அஸ்தி, பிராப்தி பற்றி வெய்யோன் பகுதி 54ல் இப்படி சொல்வதாக வருகிறது.

“மீசையை முறுக்கியபடி “தங்களுக்கு முதல் மனைவியில் இரண்டு மகளிர் அல்லவா?” என்றான் கர்ணன். “மதுராவை ஆண்ட கம்சரின் மனைவியர்.” ஜராசந்தன் “ஆம்” என்று சொன்னான். மகதத்து குலமுறைமைப்படி அவர்களை என் மகள்கள் என்று சொல்லவேண்டும். அவர்களின் அன்னை என் மனைவி அல்ல.” துரியோதனன் நோக்க,“என் தந்தையின் முதல் மைந்தர் இளமையிலேயே போரில் இறந்தார். அவரது மனைவி என்னைவிட இருபது வயது மூத்தவர். அவரது மகள்களை நான் தந்தையென நின்று கம்சருக்கு கையளித்தேன். எனக்கு அப்போது பதினாறு வயது என்றான்.”

இதன்படி இருவரும் ஜராசந்தரின் மகள்களாகின்றனர்.

வெய்யோனில் அவ்வாறிருந்தால் இங்கு, பன்னிரு படைக்களத்தின் ஒரு  பகுதியில் கம்சனின் மனைவியர் பற்றி  இப்படி வருகிறது.

அவனுக்கு (கம்சனுக்கு) மகத மன்னன் பிருஹத்ரதரின் தங்கை மகளின் புதல்விகளை மணம் புரிந்து வைக்கப்போவதாக செய்தி உள்ளது என்று தேவவாகர் சொன்னார். “ஆம், அது ஒரு அழியா முடிச்சு. ஆனால் அப்பெண்கள் அரசரின் நேரடிக்குருதியினர் அல்ல. பிருஹத்ரதரின் தந்தைக்கு சூத்திரப்பெண்ணில் பிறந்த மகளின்புதல்விகள். ஆஸ்தி, பிராப்தி என அவர்களுக்கு பெயர்.”

அஸ்தி பிராப்தி இருவரும், ஜராசந்தனின் தந்தையான பிருஹத்ரதரின் தந்தைக்கு சூத்திரப்பெண்ணில் பிறந்த மகளின் புதல்விகள் என்பதால் அவர்கள் பன்னிரு படைக்களத்தில் ஜராசந்தனுக்கு அத்தை மகள்கள் என்ற முறையாகின்றனர்.

ஜராசந்தனுக்கு ஒரு அரக்கப் பின்னணி அளித்து அவனை நால்வேத மறுப்பாளானாகக் காட்ட இது உதவலாம். ஆனால் இது போன்ற முரண்பாடுகள் வெறும் தகவல் பிழைகள் என்ற நிலைக்கு அப்பால், கதையை அதுவரை கொண்டு சென்ற தர்க்கத்தை உடைத்து, நடந்தது நடக்கப்போவது என்று அனைத்தையும் கேள்விக்குறியாக்குகின்றன. ஒரு கதையில் உறவுமுறைகளே மாறுவதைக் கடந்து செல்வது அவ்வளவு சுலபமல்ல. உணர்வுகளைப் பிணைக்கும் கண்ணிகள் அவை.

வெண்முரசின் பலங்களான அழகிய மொழி நடை, உவகையூட்டும் புதிய சொல்லாக்கங்கள் இந்த நாவலிலும் ஏராளமாக  உண்டு. ஜெயமோகனின் பாரத நாவல்கள் எல்லாவற்றுக்குமே  பொருந்தப் போகும் அவற்றை மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டே போகலாம். இதற்கு முந்தைய கட்டுரைகளில் நிறையவே சொல்லியுமிருக்கிறேன். இன்றும் அவை ஒவ்வொரு நாளும் மிக அதிகமாகப் பேசப்பட்டு வருகின்றன. எனவே, தற்போதைக்கு அதைப் பேசாமல், நாவலின் பொருள் குறித்தும் அமைப்பு குறித்தும் பேசுவது அவசியமாகிறது.

பன்னிருப் படைக்களத்தின் இன்னொரு சிறப்பாக,சம்பவங்கள் நடைபெறும் மாதங்களும் அவற்றின் பருவ நிலைகளும் பாத்திரங்களின் மீது ஏற்படுத்தும் தாக்கங்கள் வெளிப்படும் அழகு என்று சொல்லலாம்.

ஆனால் இதிலும் சில நெருடும்  பிழைகள் வந்துவிடுகின்றன. முக்கியமாக, ராஜக்ருஹத்தில் ஜராஸந்த வதம் நடப்பது ஐப்பசி மாதத்தில் என்று வருகிறது. பெருமழைக்கிடையே அந்தச் சம்பவங்கள் விவரிக்கப்படுகின்றன. ஐப்பசி மழைக்காக அஸ்தினாபுரம் ஏங்கிக் காத்திருக்கிறது என்றும் வருகிறது. ஐப்பசி மழை என்பது கடலோர ஆந்திரம், மற்றும் தமிழ்நாட்டு நிலப்பகுதிக்குரியது. வட இந்தியாவின் மழைக்காலம், ஆவணியோடு முடிவடைவது. மிஞ்சிப் போனால் புரட்டாசியின் முதல் பாதிவரையே  அங்கு மழைக்காலம். புராண காலகட்டத்தில்  எப்படியோ தெரியாது. ஆனால் இந்த பருவநிலை கிட்டத்தட்ட கடந்த பனியுகம் முடிவு பெற்றதிலிருந்தே  இப்படித்தான் உள்ளதாக அறிவியல் மற்றும் வானியல் கணிப்புகள் உள்ளன. (வெண்முரசு நடைபெறும் காலம், சிந்து சமவெளி வெளி நாகரீகத்தின் அழிவுக்குப்  பின் என்று மழைப்பாடல் நாவலில் ஒரு காட்சி உண்டு). ஆனால் ஜெயமோகன் அவரது அநேக கட்டுரைகளிலும்கூட , இந்தப்  பருவ  காலத்தை தவறாகவே எழுதுகிறார். படைப்புக்கு  நம்பகத்தன்மை அளிக்கும் பின்னணித் தகவல்கள் தவறாக அமைந்து விடும்போது  அது நம்பகத்தன்மையை இழக்கிறது. கதைதானே என்று சொல்லலாம். ஆனால் புனைவென்பதோர் அறிதுயில் கனவென்றால், இது போன்ற முரண்பாடுகள் நம்மை அதிலிருந்து வெளியே தூக்கி வீசி விடுகின்றன. வாழ்வனுபவத்தை மட்டுமல்ல, வாசிப்பனுபவத்தையும் மறந்து, கணத்துக்குக் கணம் காணும் தோற்றத்தை ஏற்கும் மனமயக்கம்தான் (புனைவுக்குத் தன்னை ஒப்புக் கொடுத்தல் ) இலக்கியப் புனைவுகளை அணுகுவதற்குரிய மனநிலை என்ற கோரிக்கை ஏற்கத்தக்கது என்று எனக்குத் தோன்றவில்லை.

panirupadai_3

பன்னிரு படைக்களம்  மிக நீண்டதொரு நாவலாகத் தோன்றுவதற்கு, அதன் உள்ளே இருக்கும் பல உச்சங்கள் ஒரு காரணம். பௌண்டரீக வாசுதேவன் வதம், ஜராஸந்த வதம், சிசுபால வதம், ராஜசூய யாகத்தின் முழுநீள விவரணைகள், அஸ்தினபுரியின் சூதாட்டக் காலத்துக்கான விரிவான விவரிப்புகள், சூதாட்டம், பின் பாண்டவர்கள் அடிமையாதல், இதையெல்லாம் தாண்டி, இந்த நாவலின் உண்மையான உச்சமாக அமைந்திருக்க வேண்டிய பாஞ்சாலி சபதம் வருவதற்குள் பல தீவிர உணர்வு நிலைகளுக்கு ஆட்படுத்தும் கட்டங்கள் வந்து விடுவதால், பாஞ்சாலி சபதம், அது ஏற்படுத்த வேண்டிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றே தோன்றுகிறது. இத்தனைக்கும் இந்தப் பகுதியில் ஜெயமோகனின்  உரையாட்சி ஓர் புதிய உச்சத்தை எட்டியிருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

இங்கு விவாதத்துக்குரிய இன்னொன்றையும்   முன்வைக்கிறார் ஜெயமோகன். பாஞ்சாலி துகிலுரியப்படுகையில், அதிலிருந்து அவளைக் காப்பாற்றுவது யார் என்பது பாரதம் வாசிக்கும் யாருக்கும் தெரியும். ஆனால் ஒரு நவீன வாசகனுக்கான இந்த நாவலில் அமானுஷ்ய சம்பவங்களைத் தவிர்க்கும் பொருட்டு கிருஷ்ணன் அருள் என்று அல்லாமல், அந்தத் தருணத்தில் அவனை நினைக்கும் துரியோதனனின் மகளான லக்ஷ்மணையின் தலைமையில் கௌரவர் இல்லப் பெண்கள் காப்பதாக மாற்றியிருப்பது அவ்வளவு பொருத்தமாக எனக்குத் தோன்றவில்லை. மேலும், துரியோதனன் மகளான லக்ஷ்மணை கிருஷ்ணை என்று திரௌபதியின் பெயரால் அழைக்கப்டுவதும், அவளைப் போலவே தோற்றம் கொண்டவளாகக் காட்டப்படுவதும் எல்லாம், ஒரு வாசகன் பிரதி மீது வைக்கும் எளிய நம்பிக்கையை (credulousness ) ரொம்பவே சோதிக்கிறது என்றே சொல்ல வேண்டியிருக்கிறது. இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல, பாஞ்சாலி சபதம் அவள் வாயால் அவையில் உரைக்கப்படாமல் அவளது அணுக்கத் தோழியான மாயையின் வாய்மொழியாக வருவதுகுறித்து என்ன சொல்வது என்று தெரியவில்லை. திரௌபதியை பேரன்னையாக உருவகித்து எழுதி வருவதால், இந்தப் பகுதியில் வஞ்சினம்கூட அவளால் உரைக்கப்படாமல் இருப்பதாகப்  பாராட்டி ஒரு நண்பர் எழுதியிருந்தார். அப்போது, எனக்கு அந்த சபதத்தையும் தோழியே முடித்து வைக்க வேண்டும் என்று அந்த நண்பர் எதிர்பார்க்கிறாரோ என்ற சந்தேகத்தை அளித்தது. வஞ்சினம் உரைத்தலே அன்னைக்கு ஊறு எனில், அவள் அதைத் தீர்த்தல் எவ்வாறு? (ஆனால் இது ஜெயமோகனின் கருத்து என்று நம்புவதற்கு, அவர் ஏதும் இது பற்றிக் கூறவில்லை. படைப்புக்கு இணக்கமான வகையில் வாசகன் தன்னை மிதமிஞ்சிய அளவில் ஒப்புக்கொடுத்தல் அவனது வாசிப்பை எங்கு கொண்டு செல்கிறது என்பதைச் சுட்டவே இதைச் சொல்கிறேன்).

 முடிவாக இப்படிதான் சொல்ல வேண்டும். எவ்வளவுக்கெவ்வளவு அற்புதமான தருணங்கள் உள்ளனவோ அதே அளவிற்கு கேள்விக்குரிய, நம்ப முடியாத, பலவீனமான பாத்திரங்களும் சம்பவங்களும் கொண்ட படைப்புதான் பன்னிரு படைக்களம். எப்போதும் உள்ள இடையறாத விவாதங்கள் போதாதென்று கூடுதலாக, இடையறாத பயணங்களும் வேறு பல பணிகளும் ஜெயமோகனை பற்றிக்கொண்டிருக்கும் இந்நாட்களில் அவர் இந்த அளவு எழுதுகிறார் என்பதே பிரமிப்புக்குரிய ஒன்று. இதற்கு இணை என்று மட்டுமல்ல, இது போன்ற முயற்சியும்கூட பிறர் கற்பனைக்கும் சாத்தியமில்லாமல் இருக்கிறது. ஆனால் இத்தனை வசீகரங்களும் அலைக்கழிப்புகளும் கவனக்குலைப்புகளும் இல்லாத இன்னும் அமைதியான காலத்தில், இன்னும் ஓய்வும் அமைதியும் இன்னும் ஒருமையும் கூடிய உலகில் ஜெயமோகன் இருந்திருக்கக்கூடாதா என்று ஏக்கமாகவே இருக்கிறது. அப்போது அவர் எழுதியிருக்கக்கூடிய நாவல்களின் இக்குறை வடிவங்கள்தான் இப்போதைக்கு நமக்கு கிடைப்பது.

~oOo~

 

http://solvanam.com/?p=46763

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

சொல் வளர் காடு அவ்வளவாக பிடிக்கவில்லை இப்போது நீர்க்கோலம் நன்றாக போகுது  ஒவ்வொரு நாளும் 10-20 நிமிஷங்க போதும் ஒவ்வொரு பகுதியும் அவ்அப்போது படித்துவிடலாம். பானுமதியை நல்லதொரு ஆளுமையாகவே காட்டியிருக்கிறார் அவர்களை கடத்தி வரும்போதும் பீமனுடன் சண்டை வருகிறது தங்கையை பீமன் கடத்துகிறான் பானுமதியை கர்ணனும் துரியனும் கடத்துகிறார்கள் மாமலர் பீமன் திரௌபதியிற்காக சௌகந்தி /? மலர் தேடி செல்வது அனுமனை சந்திப்பது கூறப்படுகிறது.கதை தெரியும்ன்றதால என்னதான் எழுதுறார் என்று பார்க்கலாம் 

Link to comment
Share on other sites

  • 4 months later...
  • கருத்துக்கள உறவுகள்

வெண்முரசு நாவல் – சொல்வளர்காடு – ஒரு பார்வை

மஹாபாரதத்தில், குருக்ஷேத்திரப் போர்ப்பகுதியைத் தவிர்த்துவிட்டால், மிகப் பெரிய பகுதி வனபர்வம்தான். சொல்லப்போனால், நிகழ்வுகள் ஒரு தலை தெறிக்கும் வேகத்தில் சென்று முடியும் சபாபர்வத்தின் இறுதி பகுதிகளுக்கும், பின்னர் தொடங்கவிருக்கும் போர்ப்பகுதிகளுக்கும் இடையில், வன பர்வம் சற்றே தொய்வு ஏற்படுத்தும் ஒன்று. அளவில் சிறியதான, விராட பர்வம்கூட கீசக வதம், இறுதியில் வரும் அர்ச்சுனன்- கௌரவ படைகளின் இடையேயான யுத்தம் என்று சுவாரஸ்யங்களைக் கொண்ட பகுதி. ஆனால், 12 ஆண்டு கால வனவாசம் அப்படி அல்ல. அதனால்தானோ என்னவோ அதில் ஏகப்பட்டக் கதைகள் இணைக்கப்பட்டுள்ளன. வெண்முரசு நூலாசிரியர் ஜெயமோகன் சொல்வது போல, பாரத தேசத்தின் பல்வேறு கதைகளையும் அதில் கொண்டு வந்து விடும் ஒரு நோக்கம் தெரிகிறது. ராமாயணம் முழுமையாகச் சொல்லப்படுகிறது. சத்தியவான் சாவித்திரி கதை, நள தமயந்தி கதை ஆகியவை அதில் மிக முக்கியமானவை. பின் அர்ஜுனன், பீமன் ஆகியோரின் நீண்ட இரு பயணங்கள், இடையே ஜயத்ரதன், சித்ராங்கதன், ஆகியோருடன் போர்கள் என்று சொல்லிக் கொண்டே போகலாம். அப்படியும் பாரதத்தின் தொய்வான பகுதி இதுவே என்றுதான் தோன்றும். மகாபாரதத்தை மறு உருவாக்கம் செய்யும் ஒவ்வொருவருக்கும் இந்த வனபர்வம் மிகுந்த சவால் அளிக்கக்கூடியது. அதில் எதை விடுத்து எதைச் சொல்வது?

இந்தக் குழப்பம் தனக்கும் இருந்தது என்று ஜெயமோகன் தன் சொல்வளர்க்காடு முன்னுரையில் எழுதியிருக்கிறார். அதனால், வனபர்வத்தின் நிகழ்வுகளில் மிக முக்கியமானவற்றை மட்டும் தொகுத்து தனது வெண்முரசு தொடரில் மூன்று நூல்களாக எழுதி முடித்துவிட்டார். சொல்வளர்க்காடு, கிராதம், மாமலர், மூன்றுமே வனத்தில் பாண்டவர்கள் தங்கியிருந்த காலம் பற்றியது என்பதைவிட, அவர்கள் பயணம் செய்தது பற்றிய நூல்கள் என்பதே சரியான விவரிப்பாகும். இவற்றில் சொல்வளர்க்காட்டில் திரௌபதியும், பாண்டவர்களும் ஒவ்வொரு வனமாக பயணம் செய்தாலும் அதில் உள்முகப் பயணம் அமையப் பெறுபவர் யுதிஷ்டிரர்தான். தருமன், அந்தப் பயணத்தின் மூலம் தர்மர் ஆகிறார் என்பதே சொல்வளர்க்காடு நாவலின் மையம்.

பாண்டவர்களுக்கு பெரும் அவமானத்தில் முடியும் சபாபர்வத்தின் பின் வாசகன் மனதில் எழும் கேள்வி ஒன்றுண்டு. இந்த அவமதிப்பை, கீழ்மையை, அதையும் தாண்டி, பாண்டவர்களுக்குள்ளும், திரௌபதிக்கும் அவர்களுக்கும் இடையேயும் உருவாகும் மன வேற்றுமையை அவர்கள் எப்படி கடந்து சென்றிருப்பார்கள் என்பதும்,, ஒவ்வொருவருக்கும் இடையேயான உறவு எப்படிப்பட்டதாக மாறியிருக்கும் என்பதே கேள்வி. அதற்கு மூல நூலில் பெரிய விளக்கமில்லை.அவ்வப்போது பீமனும், திரௌபதியும் வெளிப்படுத்தும் சீற்றங்களைத் தவிர கிட்டத்தட்ட எதுவுமே நடக்காதது போலவே அவர்கள் தங்கள் வீழ்ச்சியைக் கடந்து செல்கின்றனர். ஆனால் சொல்வளர்க்காடு நாவலின் ஒரு முக்கியமான அம்சம், திரௌபதி தர்மனிடம் கொள்ளும் விலக்கமும், அதை எதிர்கொள்ள முடியாத அவரது தவிப்பும், பின் அதைக் கடக்க தன்னை தயார்ப்படுத்திக் கொள்ளுதலும் ஆகும். அதே போல, பாண்டவ சகோதரர்களுக்குள் நடைபெறும் உரையாடல்களைக் கொண்டு, குறிப்பாக பீமன் அர்ஜுனன் ஆகியோரிடையே நடக்கும் உரையாடல்களைக் கொண்டு, அவர்களுக்குள் இருக்கும் அன்பும், நெருக்கமும், மிக அழகாக வெளிப்படுத்தப்பட்டுள்ளன. பீமனின் கசந்த, கூரிய நகைச்சுவை, அதனை சமன்படுத்தும், கசப்பு கலவாத எளிய அன்பை வெளிப்படுத்தும் அர்ஜுனனின் நகைச்சுவை, மற்றும், சகதேவனின் முழுமையான சமநிலை வாய்ந்த ஞானச் சொற்கள் என்று சகோதரர்களுக்கு இடையேயான உரையாடல்கள் நிகழும் பகுதிகள் ஆழமான அர்த்தம் பொதிந்தவையாய், தனி அழகு கொண்டிருக்கின்றன.

Writer_Jeyamohan_Author_JeMo_JM_Tamil_Fi

ஒவ்வொரு வனமாக பாண்டவர்கள் பயணிப்பதை ஒவ்வொரு வனத்திலும் ஒரு உபநிஷதத் தத்துவச் சிந்தனை அறிமுகமாவதாக இணைத்து ஒரு தத்துவப் பயணமாகவும் செல்கிறது நாவல். உபநிஷத்துக்கள் பிறந்து, பெரிதும் விவாதிக்கப்பட்ட காலகட்டமாக உருவகித்து இது புனையப்பட்டுள்ளது என்று சொல்லவேண்டும். உபநிஷத்துக்கள் மட்டுமின்றி, அருக நெறி, பௌத்த நெறிகளும் இதில் விவாதப் பொருள் ஆகியிருக்கின்றன.

எவ்வளவோ தத்துவங்களைக் கேட்டு தன் மனதிலிருக்கும் குற்ற உணர்வைப் போக்கிக் கொள்ள தர்மன் முனைந்தாலும் எதுவும் அவரை சமாதானப்படுத்துவதில்லை. ஏனெனில், தனது தவறு மன்னிக்க முடியாத ஒன்று என்று அவருக்குத் தெரிந்தே இருக்கிறது என்பது மிக அருமையாக வெளிப்பட்டிருக்கிறது. பாண்டவர்களின் வனவாசத்தின்போது கிருஷ்ணன் அட்சய பாத்திரத்தை திரௌபதிக்கு அளிக்கும் கதைகள் தவிர்க்கப்பட்டிருக்கின்றன. மாறாக, அவர் பாண்டவர்களை வனத்தில் சந்திக்கும் சந்தர்ப்பம், கிருஷ்ணன் அஸ்தினபுரியில், சூதாட்டம் நடக்கும் வேளையில் ஏன் பாண்டவர்களுக்கு உதவ முன்வரவில்லை என்பதை விளக்குவதற்கு பயன்படுத்திக் கொள்ளப்பட்டிருக்கிறது. கிருஷ்ணனின் யாதவ குலத்தில் பிளவு உருவாகி விட்டதாகவும், அது பலராமரையும் கிருஷ்ணரையும் பிரிவுக்கு உள்ளாக்கியிருப்பதாகவும் கதை கட்டமைக்கப்பட்டுள்ளது. பாரத போரின் போது, பலராமர் நடுநிலை வகித்து தீர்த்த யாத்திரைக்குப் புறப்பட்டு விடுவதையும், யாதவர்களின் பெரும்பகுதியினர் கிருஷ்ணருடன் இல்லாமல் எதிர்த்தரப்பில் போர் புரிவதையும் கணக்கில் எடுத்துக் கொண்டால், கிருஷ்ணன் தன் சகோதரனையும் சமூகத்தையும் மட்டுமல்ல, தன் காலத்தையும் கடந்த பார்வையைக் கண்டடையும் பயணம் ஒன்றை மேற்கொள்வதை நோக்கியே வெண்முரசின் இந்தப் பகுதியில் கதை பின்னப்பட்டுள்ளது புலப்படுகிறது. இது புரிந்து கொள்ளக்கூடியதுதான்.

இந்தப் பகுதியில்தான் மீண்டும் தனது நோக்கத்தை, தனது வேதாந்தத்தை, உபநிஷத்துக்களை அடிப்படையாக வைத்து தான் உருவாக்க நினைக்கும் சமூகம் குறித்து பேசுகிறார் கிருஷ்ணர். இதுவரை இருந்த வேத நெறிகளை விலக்கி, அல்லது இணைத்து, ஒரு புது ஞான நெறியை கிருஷ்ணர் உருவாக்கும் போக்கினை சொல்வளர்க்காடு படம் பிடித்துக் காட்டுகிறது. அது சாந்தீபனி முனிவரின் சமன்வய கொள்கை எனும் பெயரில் விவாதிக்கப்படுகிறது. ஜெயமோகனைத் தொடர்ந்து வாசிக்கும் ஒருவருக்கு இதில் சொல்லப்படுவது அவரது செல்லக் கோட்பாடான முரணியக்கம் எனும் தத்துவமே என்பதைப் புரிந்து கொள்வது கடினமல்ல. “ஒன்றின் எதிர்நிலையும் அந்நிலை அளவே உண்மையானது என்று சாந்தீபனி கல்விநிலை சொன்னது’ என்ற வாசகத்தின் மூலம் இது தெளிவாகிறது. இதில் தருமன் கண்டு உரையாடும் சாந்தீபனி முனிவரின் வாய்மொழியாக கிருஷ்ணன் சங்காசுரனை வென்று பாஞ்சஜன்யத்தை கைப்பற்றுவதும், குருதட்சிணையாக கடல் கொண்டதாக நம்பப்பட்ட தன் ஆசிரியரின் மகனை (இந்த முனிவர்தான் அவர்) மீட்டளிப்பதும் வழக்கமான கதையிலிருந்து விலகி மிக வித்தியாசமான ஒரு கோணத்தில் சொல்லப்படுகிறது. இதற்கெல்லாம் அடிப்படையாக, வாழ்வு என்பது ஒரு லீலையா, அல்லது மாயையா, எனும் விவாதத்தில் அவன் தன் ஆசிரியரிடம் முரண்படுவதும், அதன் பயனாய், அவரிடம் தீச்சொல் பெற்று, ,அதுவே அவன் கண்டடையும் புதிய நெறிக்கு அடிப்படையாக அமைவதும் மிகச் சிறந்த உரையாடல்களின் மூலம் சொல்லப்பட்டுள்ளது.

நாவலின் ஒரு முக்கிய அம்சம் இது என்றால், திரௌபதியின் கடும் கோபத்தையும், தனக்கு கௌரவர் சபையில் நேர்ந்தது குறித்த கழிவிரக்கத்தையும், எதிர்கொள்ளும் கிருஷ்ணன் அவளிடம் சொல்லும் பதில் விவாதிக்கத்தக்க, முக்கியமான பார்வையாகும். இதுவரையில், திரௌபதி சபையில அவமானப்படுத்தப்பட்டதை ஒரு அபலைக்கு நேர்ந்த மிகத் துயரமான சம்பவமாகவே படித்து, கேட்டு, பார்த்துப் பழக்கப்பட்டவர்களுக்கு இங்கு கிருஷ்ணன் அளிக்கும் விளக்கங்கள் அதிர்ச்சியையே ஏற்படுத்தும். அரசி என்று களமாட வந்ததற்குப்பின் பாஞ்சாலிக்கு நேர்ந்த அவமானங்கள் ஒரு எளிய பெண்ணுக்கு நேர்ந்தவை அல்லவென்றும் அரசியல் தோற்ற அரசிக்கு நேர்ந்ததென்றும் சொல்லி, அந்த நிகழ்வுகளுக்கு அவளையே பொறுப்பாக்குகிறான் கிருஷ்ணன். பாரதத்தை ஆளும் சக்ரவர்த்தியாக விரும்பியவர் தருமன் அல்லவென்றும் திரௌபதிதான் என்றும் கிருஷ்ணர் இங்கு சொல்வதற்கேற்ப முதலிலிருந்தே திரௌபதியின் பாத்திரம் கட்டமைக்கப்பட்டிருப்பது இங்கு பொருந்தி வருகிறது. பாரதத்தை அணுகிய நவீன இலக்கியகர்த்தாக்கள், சிந்தனையாளர்கள், அனைவரிடமிருந்தும் இந்நூலின் ஆசிரியர் விலகி நிற்கும் புள்ளி என்று இந்த இடத்தைச் சொல்லலாம்.நான் படித்தவற்றுள், பாரதி, ஐராவதி கார்வே, பி.கே பாலகிருஷ்ணன், எம்.டி. வாசுதேவன் நாயர், பைரப்பா, ஆகிய யாரும் இப்படியோர் திரௌபதியை உருவாக்கவில்லை. பாரதத்தின் மைய அச்சு துரியனின் மண்ணாசை என்பதைத் தாண்டி,, இங்கு திரௌபதியின் மண்ணாளும் ஆசை, பாரதத்தின் சக்கரவர்த்தினியாக முடிசூடும் பெருவிழைவு, என மாற்றுவது வெண்முரசின் முக்கியமான அம்சங்களில் தலையாயது. இது விவாதத்துக்குரியது என்பதிலும் சந்தேகமில்லை. கிருஷ்ணனுக்கும் திரௌபதிக்கும் இடையே நடக்கும் விவாதம், இந்நாவலின் இரு சிறந்த உச்சகட்டங்களில் ஒன்று.

இரண்டாவது, நிச்சயமாக வனவாசத்தின் இறுதியில் (வெண்முரசு தொடரைப் பொறுத்தவரையில், இந்த நாவலின் இறுதியில்) வரும் யக்ஷப் பிரச்னம். உண்மையில் இந்த நாவலின் 57 மற்றும் 58ம் அத்தியாயங்கள் நவீன தமிழ் இலக்கியத்தின் மிகச் சிறந்த பகுதிகள் என்று எதிர்காலம் கொண்டாடும் சிறப்பு வாய்ந்தவை. பாரதத்தில் தருமனைத் தவிர இதர பாண்டவர்கள் வீழ்ந்துபட்ட விஷச் சுனையருகே யக்ஷன் ஒருவனால் தருமனை நோக்கிக் கேட்கப்படுபவையாக வரும் கேள்விகளை இங்கு தருமனின் உள்ளத்தின் ஆழத்திலிருந்து, அவனது மூதாதையரும், ஆசிரியர்களும், சுற்றமுமே, அக்கேள்விகளின் தன்மைக்கேற்றவாறு எழுப்புவது போல அமைத்திருப்பது ஜெயமோகனின் அபாரமான கற்பனைக்கும் மேதைமைக்கும் சான்றாகும். இந்தப் பகுதிகளை நான் அவை வெளிவந்தது முதல் கணக்கற்ற முறை படித்து மகிழ்ந்திருக்கிறேன்.

பொதுவாகவே, வெண்முரசில் முதல் நாவலிலிருந்தே மேற்கோள் காட்டத்தக்க வகையில் மின்னும் வரிகள் வந்து கொண்டேயிருக்குமென்றாலும், சொல்வளர்க்காடு நாவல், தத்துவங்களுக்கு அதிகம் இடம் கொடுக்கும் ஒன்று என்பதால், அம்மாதிரியான வரிகள், புதிய அரிய, உச்சத்தைத் தொடுகின்றன. நான் ரசித்த சில வரிகளை தருகிறேன்.

“அன்பிலிருந்து விலங்குகளுக்கு விடுதலையே இல்லை. அன்பை அறுக்கத் தெரிந்த ஒரே உயிர் மானுடனே”

“மானுடம் உறவுகளால் பின்னப்பட்டது. பற்றே இதன் இயக்க விசை. அன்பென்று அதை சொல்கிறோம். இரக்கமென்று பிறிதொரு தருணம் கூறுகிறோம். நெஞ்சுருகாதவன் வாழ்வதே இல்லை. இங்குள்ள அனைத்தும் அவனுக்கு மறுக்கப்பட்டுள்ளது.”

“இவ்விசும்பும் புடவியும் பிரம்மத்தின் விளையாட்டுக்கள். செயலுக்குத்தான் தேவையும் இலக்கும் உண்டு. ஆடல் ஆடலின் இன்பத்திற்கென்று மட்டுமே நிகழ்த்தப்படுவது. அது ஆடியும் கன்னியுமாகி தன்னை பார்த்துக் கொள்கிறது. சிம்மமும் மானுமாகி தன்னைக் கிழித்து உண்கிறது. புழுவும் புழுவுமாகிப் புணர்ந்து புழுவாகப் பிறக்கிறது. அலைகளினூடாக தன்னை நிகழ்த்திக் கொள்கிறது கடல்.”

“கதைகளில் உள்ள ஒத்திசைவு வாழ்க்கையில் இல்லை. எனவே நாம் கதைகள் வாழ்க்கையை வழிநடத்தவேண்டுமென விழைகிறோம். கதை போல வாழ்க்கையை ஆக்க நம்மையறியாமலேயே முயல்கிறோம். அப்படியே கதை போல நிகழ்ந்தது என்பதே நாம் ஒரு நிகழ்வைப் பற்றி சொல்லும் உச்சநிலை பாராட்டு. அது கதையல்ல என்றால் கதையென்றாக்கிக் கொள்வோம். கதையென ஒத்திசையாத ஒன்றை நினைவிலிருந்தே அகற்றுவோம்.”

பீமனின் விருகோதரன் எனும் பெயருக்கு ஒரு அற்புதமான ஒரு விளக்கம் அளிக்கப்படுகிறது-

“அவருடைய பசி அதிலிருக்கிறது. அவர் சமைக்கும் உணவை உள்ளத்தால் உண்டு விடுகிறார். அவருள் அது சமைக்கப்பட்டு நம் நாவுக்கு இனிதாக மீண்டு வருகிறது. உண்டு புறந்தருதலால்தான் அவர் ஓநாய் வயிற்றர் எனப்படுகிறார்”.

மேலே உள்ளவற்றைப் போல சொல்லிக் கொண்டே போகலாம். இவை அளிக்கும் வாசிப்பின்பத்துக்காகவே சொல்வளர்க்காடு நாவல் படித்து ரசிக்கத்தக்கது.

தவிர, சாந்தீபனி ஆசிரமத்திலிருந்து வெளியேறும் கிருஷ்ணன், தன் ஆசிரியரின் இறந்த மகனை மீட்டுக் கொண்டு வரும் கதை, மாய மந்திர நிகழ்வுகள் நீக்கப்பட்டு, யதார்த்த தளத்தில் புனையப்பட்டிருக்கும் விதமும் சிறப்பானது.

Jeyamohan_Novel_SOLVALAR_KAADU_EPI_23.jp

இவ்வளவு சிறப்புகளுக்கிடையே ஒரு சில நெருடல்களும் இருப்பதைச் சுட்டத்தான் வேண்டியிருக்கிறது.

முதலாவது, மகாபாரதத்தின் சிக்கல்களுக்கும் பின் வரும் யுத்தத்திற்கும் பாஞ்சாலியின் தன்முனைப்பையே முதன்மைக் காரணமாக்குவது. இது காலகாலமாக பாரதத்தை அறிந்தவர்களுக்கு ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாக இருக்கலாம். வெண்முரசு தொடரைப் பொறுத்தவரையில், இதற்கான பின்னணி துவக்கத்திலிருந்தும், குறிப்பாக வெய்யோன் நாவலில், பாஞ்சாலி இந்திரப்பிரஸ்தம் அமைக்க இடம் தேடும் தருணத்திலும் தரப்பட்டிருக்கிறது.(கூடவே, நாவலின் துவக்கத்திலிருந்தே குந்தி தேவியின் பாத்திரம் சற்றே குறுகிய மனமும் காழ்ப்பும் கொண்டதாகவே காட்டப்பட்டிருப்பதும், திருதிராஷ்ட்ரன் எப்போதும் பேரறத்தான் என்றே குறிப்பிடப்படுகிறது). இந்தக் கோணம் ஆண்களின் ஆணவமும் அதிகார ஆசையும் பின்னால் தள்ளப்பட்டு பெண்களின் தன்முனைப்பும், விழைவுகளுமே ஒரு பேரழிவுக்கு முழுமையான காரணம் என்பது போல புரிந்து கொள்ளப்பட இடம் தருகிறது.

இரண்டாவது நெருடல் , நாவலின் கட்டுமானத்திலும் சம்பவங்களின் முன்னுக்குப் பின்னுமான முரண்சித்தரிப்பிலும் உள்ளது. இந்நாவலில் கிருஷ்ணன் கம்சனைக் கொல்ல, தன்னை அக்ரூரர் சாந்தீபனி முனிவரின் ஆசிரமத்திலிருந்து அழைத்துப் போவதாகச் சொல்கிறான். ஆனால், வெண்முரசு தொடரின் நீலம் நாவலில், இந்தச் சம்பவம், கோகுலத்தில் நடப்பதாகவே (ஒரு அற்புதமான அத்தியாயம் அது) எழுதப்பட்டுள்ளது. பின் மீண்டும், இப்போது வரும் ‘எழுதழல்’ நாவலின் 74 வது அத்தியாயத்தில், அக்ரூரர் இப்படிச் சொல்கிறார்- “நிமித்திகர் குறிதேர்ந்து கோகுலத்திற்குச் சென்று இளைய யாதவரையும் மூத்தவரையும் இங்கு இட்டு வந்தவன் நான்.” இது தொடரின் ஒருமையைச் சீர்குலைப்பதாகவே அமைகிறது.

இந்த நெருடல்கள் இருப்பினும்,, அண்மைக்கால நாவல்களில் அபூர்வமான வாசிப்பின்பத்தை வழங்கியதோடு, பல வகைகளில் சிந்தனையைத் தூண்டுவதாக உள்ள வகையிலும், இந்தியாவின் தொன்மையான தத்துவங்கள் மேல் பெரும் ஆர்வத்தை தூண்டும் வகையிலும் அமைந்த ஒரு படைப்பு என்பதிலும் வெண்முரசு தொடரிலேயே, முதற்கனல், நீலம் ஆகியவற்றோடு முதல்வரிசையில் நிற்கக்கூடிய படைப்பு இது என்பதில் சந்தகமேயில்லை.

பாரதத்தில் யக்ஷப் பிரச்னத்தோடு பாண்டவ வனவாசம் முடிந்து விடுகிறது, ஆனால், வெண்முரசு தொடரில், இன்னும் இரு நாவல்களிலும் பாண்டவ வனவாசம் தொடர்கிறது. அவை குறித்து இன்னொரு சமயத்தில் பார்க்கலாம்.

ISBN9788184937305
வெளியீடு: கிழக்கு
ஆண்டு: 2017
பக்கங்கள்: 728
வண்ணப் புகைப்படங்கள்: 58
செம்பதிப்பு: ₹ 1200.00
மென்னட்டை: ₹ 750.00

 

http://solvanam.com/?p=50954

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.