Jump to content

யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு..


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
அன்றாடச் சாவு நின்று
விவாசாயி செழிக்கட்டும்
அதுவரை 
படைத்தவன் தேர்
பாதியிலே நிற்கட்டும்.
-வாலிதாசன்.
 
Image may contain: 1 person
  • Like 1
Link to comment
Share on other sites

  • Replies 3.9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க்கை மீண்டும் ஒருவருக்குக் கொடுக்கப்படும் என்பது நிச்சயமில்லை. இந்தமுறை அது ஏன் தரப்பட்டுள்ளது என்பதில் கூட நிச்சயமில்ல. நீ அதற்குத் தகுதியானவனா? அதை நீ சம்பாதித்திருக்கிறாயா? உயிர் வாழ்தல் அதை உனக்கு கொடுக்கக் கடமை பட்டுள்ளதா? அது ஒரு சுத்தமான பரிசு, உயிர் வாழ்தலின் அதிகமான நிறைவின் மூலம் வரும் பரிசு. நீ அதற்குத் தகுதியானவனா இல்லையா என்றெல்லாம் அது கவலைப்படுவதில்லை. அது உனது தகுதிகளை பற்றிக் கேள்வி கேட்பதில்லை. உனது நன்னடத்தை ஒழுக்கம் இவை பற்றி விசாரிப்பதில்லை. உன் மீது எந்த வேண்டுகோளையும் விதிப்பதுமில்லை, எந்த விதமான விதிமுறைகளும் இன்றி வெறுமனே அது உனக்குத் தரப்படுகிறது. இந்தப் பரிசு ஒரு வணிக ரீதியானது அல்ல. உன்னிடம் எந்த வித எதிர் பார்ப்புகளையும் அது பதிலுக்குக் கேட்பதில்லை. உன்னிடம் அதை கொடுத்து நீ என்ன வேண்டுமானாலும் செய்து கொள் என்று முழு சுதந்திரத்தையும் அது அனுமதிக்கிறது.

- ஓஷோ..

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"ஏ.ஆர்.ரகுமான் பெற்ற உயர் விருது"

 

"அப்பொழுது கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் என்ற தமிழ் படம் வெளியாகியது, அந்த படத்தில் "கண்ணா மூச்சி ஏனடா" என்ற பாடலை எப்பொழுது வானொலியில் ஒலிபரப்புவார்கள் என்று வானொலி முன்னே காத்திருப்பார்  பிரபாகரன்.

அடிக்கடி அந்த பாடலை கேட்டுவிட்டு "பின்னிபுட்டான்யா நம்ம பையன்" என்று ரகுமானை பற்றி சகபோரளிகளிடம் பெருமையாக பேசிகொள்வர்.

அந்த பாடல் ஒலிபரப்ப ஆரம்பித்தவுடன் எந்த வேலை இருந்தாலும் விட்டுவிட்டு உடனே வானொலியின் முன்னே உட்கார்ந்துகொள்வார், அவர் மிகவும் ரசிக்கும் பாடல் அது"

போர் சூழலில் இருந்த போதும்  ரகுமானுக்கு கிடைத்த ஆஸ்கர் விருதை நினைத்து தலைவர் பெருமை அடைந்திருப்பார்.

லைவரின் வாழ்த்து ஏ.ஆர்.ரகுமான்  பெற்ற உயர் விருது தானே....

"ஏ.ஆர்.ரகுமான் பிறந்த தினம்..

http://nallasivam20.blogspot.ca/2017/01/blog-post_6.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
jayalalithas-biopic.jpg

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு திரைப்படம் உருவாக்கப்படும் என்ற செய்தி முன்னதாக ஊடகங்களில் வெளியாகிவந்தது.யார் அந்த படத்தை இயக்கப்போகிறார் என்று அனைவரும் எதிர்பார்த்து இருந்த நிலையில் தெலுங்கு திரைப்பட உலகின் முன்னணி மூத்த இயக்குனரான தாசரி நாராயண ராவ் 'அம்மா ' என்ற தலைப்பை தெலுகு சேம்பர் ஆப் காமெர்ஸில் பதிவு செய்து உள்ளார்.தெலுங்கு,தமிழ்,ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப் படுகிறது.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யோ புரட்சி

இன்னும் நன்மைசெய்து துன்பம் வாங்கும் உள்ளம் கேட்பேன்.1f641.png:(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
HOME  இலங்கை  சற்றுமுன்னர் க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியன…!
 
 
சற்றுமுன்னர் க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியன...!

சற்றுமுன்னர் க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியன…!

on: January 07, 2017In: இலங்கை

2016ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. இலங்கை பரீட்கைள் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், www.doenets.lk என்ற இணையத்தளம் ஊடாக பெறுபேறுகளை பார்வையிட முடியும் என பரீட்சைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, 2016ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2ஆம் திகதி ஆரம்பமாகி 27ஆம் திகதி வரை இடம்பெற்றது.

2016ஆம் ஆண்டு உயர் தரப்பரீட்சையில் 3 இலட்சத்து 15 ஆயிரத்து 605 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர். இவர்களில் 2 இலட்சத்து 40 ஆயிரத்து 991 பேர் பாடசாலை பரீட்சார்த்திகளும், 74 ஆயிரத்து 614 தனியார் பரீட்சார்த்திகளும் பரீட்சைக்கு தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
HOME  கிளிநொச்சி  துயிலுமில்லத்துக்குள் நுழைய தடைபோட வேண்டும், பொலிஸாரின் கோரிக்கையை நிராகரித்த நீதவான்!
 
 
துயிலுமில்லத்துக்குள் நுழைய தடைபோட வேண்டும், பொலிஸாரின் கோரிக்கையை நிராகரித்த நீதவான்!

துயிலுமில்லத்துக்குள் நுழைய தடைபோட வேண்டும், பொலிஸாரின் கோரிக்கையை நிராகரித்த நீதவான்!

கிளிநொச்சி, கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் பொது நினைவுச் சமாதி ஒன்றை அமைக்கும் பணியில் நேற்று மாவீரர்களின் உறவினர்கள் மற்றும் முன்னாள் போராளிகள் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது கரைச்சி பிரதேச சபை செயலாளர் க.கம்சநாதன் சம்பவ இடத்திற்கு சென்று பொதுச் சமாதி அமைக்கும் நிறுத்துமாறு கோரியிருந்தார்.

ஆனால், ஏற்பாட்டாளர்கள் மறுத்துவிட, சம்பவ இடத்திற்கு கிளிநொச்சி உதவி பொலிஸ் அத்தியட்சகர் றொசான் ராஜபக்ஸ தலைமையில் பொலிஸார் ஏற்பாட்டாளர்களுடன் சமரசமாக பேசி வியாழன் மாலை கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வாக்குமூலங்களை பதிவு செய்த பின்னர் நேற்று காலை கிளிநொச்சி நீதவான் நீதிமன்றுக்கு சமூகமளிக்குமாறு கூறியிருந்தனர்.
அதனடிப்டையில் நேற்று காலை கிளிநொச்சி நீதவான் நீதிமன்று துயிலுமில்லத்தில் பொதுச் சமாதி அமைக்கும் பணியில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் ஐவர் முன்னிலையாகிருந்தனர். இவர்கள் சார்பாக மூன்று சட்டத்தரணிகளும் முன்னிலையாகியிருந்தனர்.

கரைச்சி பிரதேச சபையின் செயலாளரின் முறைபாட்டையடுத்து, கிளிநொச்சி பொலிஸார் இவர்கள் மீது சட்ட விரோதமாக காணிக்குள் உள்நுழைந்து கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டனர் என்றே வழக்கு பதிவு செய்திருந்தனர்.
அத்தோடு கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம் அமைந்துள்ள காணிக்குள் எவரும் உட்பிரவேசிக்காமல் இருப்பதற்கு நீதிமன்றத்திடம் தடை உத்தரவு ஒன்றை பெற்றுக்கொள்ள பொலிஸார் கோரிய போது அதனை நிராகரித்த கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜா, குற்றவியல் வழக்கான 433 மற்றும் 490 கீழ் வழக்கு பதிவு செய்துள்ள வழக்கொன்றிற்கு இவ்வாறான தடையுத்தரவு வழங்க முடியாது என தெரிவித்துவிட்டார்.

அத்தோடு நீதிமன்றம் பொதுச் சமாதி அமைக்கும் பணிகளில் ஈடுபட்ட ஐந்து பேரையும் தலா 50 ஆயிரம் ரூபா சரீர பிணையில் விடுதலை செய்ததோடு, வழக்கை எதிர்வரும் மாதம் 20ஆம் திகதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

#கொடுமை

உயர்தர பரீட்சையில் கணித பிரிவில் அண்மையில் விபத்தில் பலியான சத்தியநாதன் சிவதுர்க்கா என்ற மாணவியே வவுனியா மாவட்ட மட்டத்தில் முதலாமிடம் பெற்றுள்ளார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பஞ்சு அருணாச்சலம் பற்றிய ஆவணப் படம் சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது

Jan 07, 2017

 

பஞ்சு அருணாச்சலம் பற்றிய ஆவணப் படம் சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது

தமிழ்த் திரையுலகின் மகத்தான திரைக்கதாசிரியரும், தயாரிப்பாளரும், இயக்குநரும், பாடலாசிரியருமான மறைந்த திரு.பஞ்சு அருணாசலம் பற்றிய ஆவணப் படம், சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படவுள்ளது.

`தொட்டதெல்லாம் பொன்னாக்கிய படைப்பாளி` என்கிற பெயரில் உருவாகியுள்ள இந்த ஆவணப் படத்தை, திரு அருள் புரொடெக்சன்ஸ் சார்பில் லலிதா ஜெயானந்த் – எஸ்.உமா மகேஸ்வரி ஆகியோர் தயாரித்துள்ளனர்.     

இந்த ஆவணப் படம் ஏற்கெனவே சென்ற நவம்பர் மாதம் கோவா நகரில் நடைபெற்ற உலகத் திரைப்பட விழாவின்  இந்தியன் பனோரமா பிரிவில் முதன்முறையாகத் திரையிடப்பட்டு பெரும் வரவேற்பினை பெற்றது. 

இந்த ஆவணப் படத்தை புளூ ஓஷன் திரைப்பட – தொலைக்காட்சி கல்லூரியின் தலைவரான கோ.தனஞ்ஜெயன் இயக்கியுள்ளார். சுதர்சன் ஸ்ரீனிவாசன் ஒளிப்பதிவு செய்ய, ஜே.எஸ்.விக்னேஷ் படத் தொகுப்பை கவனிக்க, ஒலிப்பதிவு மற்றும் இசையமைப்பை ஷாமந்த் மேற்கொண்டுள்ளார். 

panchu-arunachalam-1

பஞ்சு அருணாசலம் அல்லது பஞ்சு என அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்ட இவர், சாதனைகள் பல படைத்த ஒரு படைப்பாளி மட்டுமல்ல. ரஜினிகாந்த் – கமல்ஹாசன் என்ற இரு பெரும் சாதனையாளர்கள் தமிழ் சினிமாவில் உருவாக, தனது எழுத்துகள் மூலம் பெரும் பங்காற்றியவர். இளையராஜாவை அறிமுகம் செய்து ஒரு இசை புரட்சியையே தமிழ் சினிமாவுக்குக் கொண்டுவந்தவர்.

தமிழ் சினிமாவில் பஞ்சுவின் சாதனைகள் மதிப்புமிக்கது.  இவர்  45 திரைப்படங்களுக்குக்  கதை எழுதியுள்ளார். 90 திரைப்படங்களுக்கு திரைக்கதை-வசனம் எழுதியுள்ளார். இவற்றில், 70  படங்கள் வெற்றி பெற்றுள்ளன. 50  படங்கள்  100  நாட்களுக்கு  மேல் ஓடி சாதனை படைத்தவை. இது மட்டுமல்ல, 150 திரைப்படங்களில், 300 பாடல்களுக்கு மேல் எழுதியவர். 45  படங்களை தயாரித்த பெருமைக்குரியவர். 

1958-இல் `கவியரசு` கண்ணதாசனின் உதவியாளராகத்  தனது திரைப் பணியை தொடங்கிய பஞ்சு, கடந்த 47 வருடங்களில் சாதனைகள் பல படைத்து, அதை பெரிதாகக் காட்டிக் கொள்ளாமல் இருந்தவர். 

இசைஞானி இளையராஜாவை சினிமாவுக்கு 1976-ல் தனது தயாரிப்பான ‘அன்னக்கிளி’யில் அறிமுகம் செய்து இசை புரட்சியை செய்தது  இவரது மகத்தான சாதனைகளில் ஒன்று.

இந்த ஆவணப் படத்தில் `இயக்குநர் இமயம்` பாரதிராஜா கூறியதுபோல,  “தமிழ் சினிமாவை முதன் முதலில் ஸ்டுடியோக்களுக்கு வெளியே எடுத்துச் சென்று `அன்னக்கிளி` திரைப்படத்தை வெளிப்புறங்களிலேயே படப்பிடிப்பு நடத்தித்  தயாரித்ததும்  இவர்தான்.

ரஜினிகாந்த்துக்கு 23 மாறுபட்ட திரைப்படங்களை எழுதி, அவரை ஒரு பெரிய நடிகனாக மாற்றியதும், கமல்ஹாசனை, வெகுஜன மக்களிடம் தனது எழுத்துகள் மூலம் 13 படங்களில் கொண்டு சென்றதும் பஞ்சு அவர்கள்தான்.

இந்த ஆவணப் படம், பஞ்சுவின் சிறு வயது முதல்,  அவர் கடந்து வந்த பாதை,  குடும்பம்,  அவரது  திரைப்படப்  பிரவேசம்,  முதலில் சந்தித்த தோல்விகள் – வெற்றிகள் – சாதனைகள் – அதன் பின் பெற்ற தோல்விகள் – படிப்பினைகள் என அனைத்து விஷயங்களையும் எடுத்துரைக்கிறது. 

95 நிமிடங்கள் ஓடும் இந்தப் படத்தில், சாதனையாளர்கள் பலர், பஞ்சுவுடன் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை  உணர்வுபூர்வமாக விவரித்துள்ளனர். பஞ்சுவின் திரைப்படங்கள்  பலவற்றிலிருந்து பல காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.

பஞ்சுவின் திரைப்படங்களைப் போல, இந்த ஆவணப்  படத்தில், 35  பெரிய சாதனையாளர்கள் அவரது  படங்கள்  பற்றியும்,  தங்களது  வாழ்க்கையில் பஞ்சுவின் பங்களிப்பு பற்றியும் மனம் திறந்து பேசுகிறார்கள். இவர்களின் பங்களிப்பால், இந்த ஆவணப்  படம் பெரும் மதிப்பை பெற்றது.

Dhananjeyan sir with Legendary Paanchu Sir

Dhananjeyan sir with Legendary Paanchu Sir

குறிப்பாக, `சூப்பர் ஸ்டார்`  ரஜினிகாந்த்,  பாரதிராஜா,  மகேந்திரன்,  வி.சி.குகநாதன், ஜி.என்.ரங்கராஜன்,  சிங்கிதம் சீனிவாசராவ்,  பி.லெனின்,  கங்கை அமரன், அபிராமி ராமநாதன்,  கே.ஆர்.,  கலைஞானம், `முக்தா` வி.சீனிவாசன், ஆர்.சுந்தர்ராஜன்,  சுந்தர் சி.,  ஏ.வெங்கடேஷ்,  அண்ணாதுரை கண்ணதாசன், சி.வி.ராஜேந்திரன், `சித்ரா` லட்சுமணன்,  சுரேஷ் கிருஷ்ணா,  சத்யராஜ், பிரபு,  குஷ்பு சுந்தர்,  ராதிகா சரத்குமார், ஒளிப்பதிவாளர் பாபு போன்றவர்களின் ஆர்வமும்,  பங்களிப்பும் இந்த ஆவணப் படத்திற்கு மிகப் பெரிய பலமாக அமைந்திருக்கிறது.

இந்த சாதனையாளர்களின் பேட்டிகளும் கருத்துகளும், ஒரு தொலைக்காட்சித் தொடராக, விரைவில்  வெளிவர இருக்கிறது. திரையரங்கிலும் வெளியாகவிருக்கும் இந்த 95 நிமிட ஆவணப் படம்,தொலைக்காட்சியில் ஒளிபரப்பு முடிந்தவுடன் டி.வி.டி. மற்றும் புளு-&ரே போன்ற  மின் தகடுகளின் மூலமும் வெளிவரும்.

தொட்டதெல்லாம் பொன்னாக்கிய ஒரு மாபெரும் சாதனையாளரை பற்றிய இந்த ஆவணப் படம், சினிமாவில் நுழைய நினைக்கும் அனைவருக்கும் ஒரு வரப் பிரசாதம். சினிமாவில் உள்ளவர்களுக்கு ஒரு படிப்பினை.

தமிழ் சினிமாவின் முக்கிய படைப்பாளியான பஞ்சுவை பற்றிய இந்த ஆவணப் படம் ஒரு புதிய பாதையை உருவாக்கி, பிற சாதனையாளர்களை பற்றியும் ஆவணப் படங்கள் தயாரிக்க ஒரு உந்துதல் தரும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

ஆவணப் படக் குழு:

ஆராய்ச்சி, எழுத்து மற்றும் இயக்கம்: கோ. தனஞ்ஜெயன் (இயக்குநர் & பாஃப்டா திரைப்படக் கல்லூரி)

தயாரிப்பு : லலிதா ஜெய்ஆனந்த் மற்றும் எஸ். உமா மகேஸ்வரி

ஒளிப்பதிவு : சுதர்சன் சீனிவாசன்

படத்தொகுப்பு : ஜெ.எஸ். விக்னேஷ்

பின்னணி இசை: ஷமந்த்

பஞ்சு அவர்களது ஆவணப் படம், சென்னை உலகத் திரைப்பட விழாவில் ஜனவரி 8-ம் தேதியன்று ஐநாக்ஸ் திரையரங்கில் மாலை 4.30 மணிக்கு திரையிடப்படவுள்ளது.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்டீபன் ஹாகிங் எனும் நம்பிக்கை நாயகன் - சிறப்பு பகிர்வு

ஜனவரி 8: ஸ்டீபன் ஹாகிங் எனும் நம்பிக்கை நாயகன் பிறந்த தினம் ஜனவரி எட்டு. இதே தினத்தில் எழுபத்தி ஒரு வருடங்களுக்கு முன் பிறந்தார் அவர் ;பள்ளியில் சுட்டியாக இருந்த அவர் இளம் வயதிலேயே வீட்டில் கிடந்த சாமான்கள்,கடிகார பாகங்கள் அட்டைகள் எல்லாவற்றையும் இணைத்து ஒரு கணினியை உருவாக்கினார் . அப்பா மருத்துவம் படிக்க சொல்ல இவர் இயற்பியலை ஆக்ஸ்போர்டில் படித்தார் ; வகுப்புகள் அவருக்கு போர் அடித்தன . மூன்று வருட காலத்தில் மொத்தமே ஆயிரம் மணிநேரம் தான் படித்திருப்பார் ; முதல் கிரேடில் தேர்வு பெறாவிட்டால் காஸ்மாலஜி துறையில் மேற்படிப்பை படிக்க இயலாது ;எனினும் தன் திறனை கல்லூரியின் நேர்முகத்தில் காட்டி கேம்ப்ரிட்ஜில் சேர்ந்தார் ...

stephenhakins.jpg

எதோ தடுமாற்றம் உண்டானது ;மாடிப்படியில் நடக்கும் பொழுது தடுமாறினார் ;மங்கலாக உணர ஆரம்பித்தார் .பேச்சு குழற ஆரம்பித்தது ;செயல்பாடுகள் முடங்கின -மோட்டார் நியூரான் நோய் என அழைக்கப்பட்ட அரிய நோய் தாக்கி இருந்தது . இரண்டு வருடம் வாழ்ந்தால் கடினம் என்றார்கள் ;முதலில் நொறுங்கிப்போனவர் பின் நம்பிக்கையை வளர்த்துக்கொண்டு பணிகளை தொடர்ந்தார் .

காலம் மற்றும் அண்டவெளி பற்றிய அவரின் முனைவர் கட்டுரை ஆடம்ஸ் பரிசை பெற்றது -இந்த காலத்தில் கரங்கள் செயலற்று போயின ; சுத்தமாக பேச முடியாத நிலை உண்டானது. எனினும் பேச்சு உருவாக்கும் கருவி மூலம் பேசி வருகிறார் .

1979 இல் கேம்ப்ரிட்ஜில் நியூட்டன் உட்பட பதினான்கு பேர் மட்டுமே வகித்த லுகாஸியன் கணித பேராசிரியர் ஆனார் .கருந்துளைகளில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சை பற்றிய அவரது அறிவிப்பு ஹாகிங் கதிர்வீச்சு என அழைக்கபடுகிறது . காஸ்மாலஜி துறையை சார்பியல் மற்றும் குவாண்டம் இயற்பியல் எனும் இரண்டு பிரிவுகளின் ஊடாக கண்ட முதல் அறிஞர் இவரே ; இவரின் "A Brief History of Time" நூல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது .

ஐன்ஸ்டீனுக்கு பின் உலகின் தலைசிறந்த கோட்பாட்டு இயற்பியலாளர் இவர் ;சோதனைகளை கடந்து சாதிக்க தூண்டும் அவரிடம் ,"உங்களுக்கு வாழ்க்கை வெறுப்பாக இல்லையா ? எப்படி இத்தனை துன்பங்களுக்கு நடுவிலும் தீவிரமாக உங்களால் செயலாற்ற முடிகிறது ?" என்று கேட்கப்பட்டது ,"என்னுடைய இருபத்தி ஒரு வயதிலேயே என்னுடைய எதிர்பார்ப்புகள் மருத்துவர்களால் பூஜ்யமாக ஆக்கப்பட்டுவிட்டது. அதற்கு மேல் நான் பெற்றது எல்லாமே போனஸ் தான். எதை இழந்தோம் என்பது அல்ல விஷயம் ? எது மிச்சமிருக்கிறது என்பதே முக்கியம் ! வாழ்க்கை சுகமானது !" என்றார். நீங்களும் மிச்சமிருப்பதில் மின்னிடுங்கள்

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராபர்ட் பேடன் பவல் பிரபு (Robert Baden-Powell) (பெப்ரவரி 22, 1857 - ஜனவரி 8, 1941) ஸ்கவுட் எனப்படும் சாரணர் இயக்கத்தை உருவாக்கியவர் ஆவார். இவர் இங்கிலாந்தில் பிறந்த ஆங்கிலத் தளபதி. 1906 ஆம் ஆண்டு சாரணர் இயக்கத்தை தோறுவித்தார்.

1910 இல் சிறுமிகள் சாரணர் இயக்கத்தையும் தொடங்கினார்.

சிறுவர்களுக்கான சாரணீயம் (Scouting for Boys) என்ற நூலை 1908 ஆம் ஆண்டு பதிப்பித்தார். ஆபிரிக்காவிற்குத் திரும்பிய பேடல் பவுல் தனது புத்தகமான எய்ட்ஸ் டு ஸ்கவுட்டிங் (Aids to Scouting) வெற்றிகரமாக விற்பனை ஆவதனையும் அவை பல இளைய மற்றும் ஆசிரியர்களைப் பயிற்றுவிப்பதற்குப் பயன்படுவதையும் கண்டார். 

1907 ஆம் ஆண்டு சாரணீயம் ஓர் சோதனை முயற்சியாக 22 சிறுவர்களுடன் தொடங்கியது. முதலில் தேசிய ரீதியில் துவங்கப்பட்ட இம்முயற்சி பின்னர் உலக அளவில் புகழ்பெற்றது.

1920 இல் முதலாவது உலக சாரணீய ஜம்போரியானது ஒலிம்பியாவில் நடைபெற்றது.

No automatic alt text available.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யேசுதாஸ் எனும் மகா கலைஞன்! - பிறந்த நாள் சிறப்புப் பகிர்வு


ஒரு மலையாள நடிகர் தன் பேட்டியில், முதன் முதலில் தன்னுடைய வாய்ஸ் டெஸ்ட்க்காக திருவனந்தபுரம் ரேடியோ ஸ்டேஷன் சென்ற பொது அவர்களால் நிராகரிக்கப்பட்டவர். பின்னாளில் அவர்களே இவரை இவர் இல்லத்தில் சென்று காணும் நிலை ஏற்பட்டது என்று சொல்லியிருந்தார். அவர் சொன்ன இவர் கே,ஜே.யேசுதாஸ்.

கட்டசேரி ஜோசப் யேசுதாஸ், கேரள மாநிலம் கொச்சியில் 1940ம் ஆண்டு ஜனவரி 10ம் தேதி பிறந்தவர். 2017 ஜனவரி 10 ஆம் தேதியோடு 77 வயதை நிறைவு செய்கிறார்.

முதன் முதலில் கால்பாடுகள் என்ற மலையாளத் திரைப்படத்தில் 1960-ல் பின்னணி பாடினார். தமிழில் எஸ். பாலசந்தரின் பொம்மை படத்தில் ‘நீயும் பொம்மை, நானும் பொம்மை’ பாடலின் மூலம் அறிமுகமானார். அந்தப்பாடலே வரவேற்புப் பெற்றதென்றாலும், எம்ஜிஆர் நடித்த உரிமைக்குரல் படத்தில் இவர் பாடிய விழியே கதை எழுது பாடல் இவருக்குப் பெரிய அறிமுகத்தைக் கொடுத்ததென்று சொல்கிறார்கள்.

தெய்வம் தந்த வீடு, அதிசய ராகம், விழியே கதை எழுது, செந்தாழம் பூவில், என் இனிய பொன் நிலாவே, கண்ணே கலைமானே, அம்மா என்றழைக்காத உயிரில்லையே உட்பட ஏராளமான இனியபாடல்களைப் பாடி தமிழ்மக்களின் வாழ்வில் பிரிக்கமுடியாதவராகவே மாறிப்போனார். எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல், என்.டி.ராமாராவ், அமிதாப், சஞ்சீவ் குமார், சத்யன், பிரேம் நசீர், மம்மூட்டி, மோகன்லால் உள்பட இந்தியாவின் பிரபல நடிகர்கள் பலருக்கும் பாடல்களைப் பாடியுள்ளார்.

திரை இசை, கர்நாடக இசை, பன்மொழிப் பாடல்கள் மட்டுமின்றி தெய்வீகப் பாடல்களாலும் நம்மை எல்லாம்வசீகரித்து ஆட்கொண்ட இவர், 17 மொழிகளில் ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான பாடல்களைப் பாடி மாபெரும் இசை வேள்வியையே நடத்திக் காட்டியிருக்கிறார். சிறந்த பாடகருக்கான தேசிய விருதை 7 முறையும், பல்வேறு மாநில அரசுகளின் விருதுகளை 43 முறையும்வென்றவர். போகாத நாடில்லை, பாடாத மொழியில்லை, பெறாத விருதில்லை எனும் வகையில் இவரது சாதனை சரித்திரம் விரிகிறது.

1968ல் சோவியத் அரசின் அழைப்பின் பேரில் கலாசாரத் தூதராக ரஷ்யாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். கஜகஸ்தான் வானொலியில் இவர் பாடிய ரஷ்ய மொழிப் பாடல் அந்நாட்டு ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. புகழ்பெற்ற லண்டன் ராயல் ஆல்பர்ட் ஹால் (2001), சிட்னி ஓபரா ஹவுஸ் (2006) அரங்குகளில் இசை நிகழ்ச்சி நடத்தும் வாய்ப்பும் இவரைத் தேடி வந்தது. 1965ல் இந்தியா - சீனா இடையே போர் நடந்தபோது, நாடு முழுவதும் இசை நிகழ்ச்சிகளை நடத்தி நிதி திரட்டியவர், டெல்லியில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியிடம் அதை நேரில் வழங்கி அவரது பாராட்டுகளைப் பெற்றார். தமது திரை வாழ்வில் வெற்றிகரமாக 50 ஆண்டுகளை நிறைவு செய்து இசைப் பயணத்தை தொடர்ந்து வரும் அவர் மலையாளம், தமிழ், இந்தி, கன்னடம், தெலுங்கு, வங்காள மொழி, குஜராத்தி, ஒரியா, மராத்தி, பஞ்சாபி, சமஸ்கிருதம், துளு, மலாய், ரஷ்யன், அரபி, இலத்தீன், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் 50,000-க்கும் கூடுதலான திரைப்பாடல்களைப் பாடி ஈடு இணையற்ற சாதனையாளராக விளங்கி வருகிறார்.

சிறந்த திரைப் பின்னணிப் பாடகர் என்ற வகையில், ஏழு முறை தேசிய விருது பெற்று சாதனை படைத்துள்ளார். மாநில அளவில் கேரளம், தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரம் மற்றும் மேற்கு வங்க அரசுகளிடம் மொத்தம் 45 முறை சிறந்த திரைப்பாடகராக விருது பெற்றுள்ளார். 1975 -ல் பத்மஸ்ரீ விருதும் 2002 -ல் பத்மபூஷண் விருதும் பெற்றிருக்கிறார். திரையிசையுடன்,கர்நாடக இசைக்கச்சேரிகள்பல நிகழ்த்தியுள்ளார். சமயப் பாடல்கள், பிற மெல்லிசைப் பாடல்கள் அடங்கிய இசைத் தொகுப்புகளையும் வழங்கியுள்ளார். மலையாளத் திரைப்படங்களுக்கு இசை இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். 2006ஆம் ஆண்டு சென்னை ஏவிஎம் அரங்கில் ஒரேநாளில் நான்கு தென்னிந்திய மொழிகளிலும் 16 திரைப்படப் பாடல்களை பாடி சாதனை நிகழ்த்தினார்.

இவ்வளவு சாதனைகளைப் படைத்திருந்தாலும் 1977 இல் வெளியான அந்தமான் காதலி படத்தில், அந்தமானைப் பாருங்கள் அழகு..., நினைவாலே சிலை செய்து உனக்காக வைத்தேன்... ஆகிய இரு பாடல்களையுமே யேசுதாஸும் வாணி ஜெயராமும் பாடியிருந்தனர். இவற்றில் இரண்டாவது பாடலான நினைவாலே சிலை செய்து உனக்காக வைத்தேன்.. திருக்கோயிலே ஓடிவா.. என்ற வரிகளைப் பாடும்போது, திருக்கோயிலை 'தெருக்கோயிலே' என உச்சரித்திருப்பார் யேசுதாஸ். இது பலத்த விமர்சனத்துக்குள்ளானது. பத்திரிகைகள் மட்டுமின்றி சில கவிஞர்களும் கூட இதனைக் கண்டித்தனர். ஆனால் யேசுதாஸ் இதற்கு எந்த பதிலும் அளித்ததில்லை. தொடர்ந்து பல ஆண்டுகளாக விமர்சிக்கப்பட்ட இந்த உச்சரிப்பை, தனது திரையுலகப் பயணத்தின் 50 வது ஆண்டில் திருத்திக் கொண்டார் யேசுதாஸ். சென்னையில் கடந்த 2015 ஜனவரியில் நடந்த இசை நிகழ்ச்சியில் இந்தப் பாடலைப் பாடினார் யேசுதாஸ். அப்போது திருக்கோயிலே.. வரி வந்தபோது சட்டென்று நிறுத்திய அவர், "ரொம்பப் பேர், ரொம்ப வருஷமா இந்தப் பாட்டில் என்னுடைய உச்சரிப்பைக் குறை கூறி வந்தனர். இப்போதும் சிலர் சொல்கிறார்கள்.

அந்த உச்சரிப்பு தவறுதான் என ஒப்புக் கொள்கிறேன். காரணம் அப்போது நான் தமிழுக்குப் புதிது. அப்போதுதான் கற்க ஆரம்பித்தேன். அந்தப் பாடல் பாடும்போது இசையமைப்பாளர் எம்எஸ்வியோ, பாடலாசிரியர் கண்ணதாசனோ அங்கில்லை. வேறு வேலையில் இருந்தார்கள். உதவியாளர்கள் எல்லாம் சாப்பிடப் போயிருந்தார்கள். அதனால் என் உச்சரிப்பை யாரும் கவனிக்கவில்லை. அப்படியே ரெக்கார்ட் ஆகி வந்துவிட்டது. இப்போது, இந்த மேடையில் அந்தத் தவறை திருத்திக் கொள்கிறேன்,' என்று கூறி, திருக்கோயிலே ஓடி வா.. என சரியான உச்சரிப்புடன் பாடினார்.

செயற்கரிய பல சாதனைகளுக்குப் பிறகும், தான் செய்தது பிழை என்பதை உணர்ந்து பொதுமேடையில் அதை ஒப்புக்கொண்டு வருத்தம் தெரிவித்தது, அவர் செய்த சாதனைகளிலேயே பெரிய சாதனை என்று பலராலும் பாராட்டுப் பெற்றார்.

Image may contain: 1 person
Edited by யாயினி
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Image may contain: 1 person, closeup
 
 
1,எந்த வேலையையும் தனது விருப்பத்துக்கு ஏற்றவாறு மாற்றுபவன் அறிவாளி.
2. மலை போன்ற சகிப்புத்தன்மை, இடைவிடாத முயற்சி, எல்லையற்ற நம்பிக்கை இவைதாம் நற்காரியத்தில் வெற்றி தரும்.
3. உண்மைக்காக எதையும் தியாகம் செய்யலாம்; ஆனால் எதற்காகவும் உண்மையைத் தியாகம் செய்யக்கூடாது.
4. நீங்கள் மகத்தான பணியைச் செய்யப் பிறந்தவர்கள் என்பதில் நம்பிக்கை வையுங்கள்.
5. மக்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். நீங்கள் உங்களது சொந்த, உறுதியான முடிவில் பிடிப்புடன் இருங்கள்.
6. நான் எதையும் சாதிக்க வல்லவன் என்று சொல்லுங்கள். நீங்கள் உறுதியுடன் இருந்தால் பாம்பின் விஷம்கூட சக்தியற்றதாகிவிடும்.
7. நீ உன் குறிக்கோளில் வெற்றியடைய வேண்டுமானால் அதைப் பற்றிய எண்ணம் உன் உடல் முழுவதும் பரவி இருக்க வேண்டும்.
8. உங்களுக்குத் தேவையான எல்லா வலிமைகளும் உங்களுக்குள்ளேயே குடிகொண்டிருக்கின்றன என நம்புங்கள்.
9. நமது நெற்றியில் சுருக்கங்கள் விழட்டும்; ஆனால் இதயத்தில் சுருக்கம் விழவேண்டாம். ஏனெனில் இதயம் கிழடு தட்டக்கூடாது.
10. மனிதன் எந்த அளவுக்கு உயர்ந்தவனாகிறானோ அந்த அளவுக்குத் தக்கபடி அவன் கடுமையான சோதனை
களைக் கடந்து செல்லவேண்டும்.

 

Image may contain: 1 person
 
 

இன்று சுவாமி விவேகானந்தரின் 154  ஜனன தினம்
-----------------------------------------------------------------------------------

நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய்.உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய். 
உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே. 
நான் எதையும் சாதிக்க வல்லவன் என்று சொல்.
நீ உறுதியுடன் இருந்தால் பாம்பின் விஷம்கூட சக்தியற்றது ஆகிவிடும்.
பலமே வாழ்வு...பலவீனமே மரணம் 

சுவாமி விவேகானந்தர்

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாரதியும், நிவேதிதையும்.... 

கொல்கத்தாவில் டம்டம் என்ற இடத்தில் 1906-ஆம் ஆண்டு நிவேதிதையை பாரதியார் முதன்முதலில் சந்தித்தார். அப்போது, “உங்களுக்கு மணமாகிவிட்டதா?” என நிவேதிதை கேட்டார்.

“எனக்குத் திருமணமாகி ஒரு பெண் உள்ளாள்” என்றார் பாரதி. அதற்கு நிவேதிதை, “பின் ஏன் உங்கள் மனைவியை இங்கு அழைத்து வரவில்லை?” என்று கேட்டார்.

“எங்கள் சமூகத்தில் மனைவியைப் பொது இடத்திற்கு அழைத்துச் செல்லும் வழக்கம் இல்லை” எனறார் பாரதி.
அதைக் கேட்டதும், “சமூகத்தில் ஒரு பாதி அடிமைப்பட்டுப் கிடக்கும்போது மறுபாதி எப்படி விடுதலை பெற முடியும்? உங்களது மனைவிக்கே உங்களால் சுதந்திரம் பெற்றுத் தர முடியவில்லை? நாட்டிற்கு எப்படி நீங்கள் சுதந்திரம் பெற்றுத் தர முடியும்? இனியும் நீங்கள் அவள் தனி என நினைக்காது, உங்களிடமிருந்து பிரிக்க முடியாத ஒரு பகுதியாக நினைத்து, அவளைத் தேவியாகப் போற்றுங்கள். பெண்களை இருட்டில் தள்ளிவிட்டு, அவர்கள் அறியாமல் நீங்கள் மேலான நிலைக்கு வந்துவிட முயலுவது வீண்” என்றார் நிவேதிதை.

“சமுதாயம் என்பது ஒரு பறவையைப் போல! அதற்கு இரண்டு இறக்கைகள்! ஒன்று ஆண், அடுத்து பெண். ஓர் இறக்கையால் மட்டும் பறவை பறக்காது” என்ற சுவாமி விவேகானந்தரின் கருத்தைத் தான் சகோதரி நிவேதிதை பாரதிக்குச் சொன்னார். 

இதை பாரதி இவ்வாறு பாடுகிறார்:

‘ பெண்ணுக்கு விடுதலை என்று இங்கோர் நீதி
பிறப்பித்தேன், அதற்குரிய பெற்றி கேளீர்!
மண்ணுக்குள் எவ்வுயிரும் தெய்வம் என்றால்
மனையாளும் தெய்வம் அன்றோ! மதி கெட்டீரே!
விண்ணுக்குப் பறப்பதுபோல் கதைகள் சொல்வீர்,
விடுதலை என்பீர், கருணை வெள்ளம் என்பீர்,
பெண்ணுக்கு விடுதலை நீர் இல்லை என்றால்
பின் இந்த உலகிலே வாழ்க்கை இல்லை’.

பாரதியார் தமது ‘ஸ்வதேச கீதங்கள்’ நூலை நிவேதிதைக்கு சமர்ப்பித்தார். அதில் அவர் எழுதினார்:

‘ எனக்கு ஒரு விநாடியில் மாதாவினது மெய்த்தொண்டின் தன்மையையும், துறவின் பெருமையையும் சொல்லாமல் உணர்த்திய குருமணியும், பகவான் விவேகானந்தருடைய தர்மபுத்திரியும் ஆகிய ஸ்ரீமத் நிவேதிதா தேவிக்கு இந்த நூலைச் சமர்ப்பிக்கின்றேன்.’

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு கண் பார்வை கிடைத்துள்ளது

January 12, 2017

singer-vaikom.jpg

பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு தொடர் சிகிச்சையின் பலனாக கண் பார்வை கிடைத்துள்ளது. கேரளாவை சேர்ந்த பாடகி வைக்கம் விஜலட்சுமிக்கு பிறவியிலே பார்க்கும் திறன் இல்லை. இருப்பினும்  அவர் தனது  இனிய குரலில் பாடல்கள் பாடி அசத்தி வருகிறார்.

என்னமோ ஏதோ படத்தில வரும் புதிய உலகை புதிய உலகை,  குக்கூ படத்தில் கோடையில் மழை போல, வீர சிவாஜியில் சொப்பன சுந்தரி நான் தானே , உள்பட சுமார் 40 பாடல்களை பாடியுள்ளார்.

அவருக்கும் கேரளாவை சேர்ந்த இசையமைப்பாளர் சந்தோ{க்கும் எதிர்வரும் மார்ச் மாதம் 29ம் திகதி திருமணம் நடைபெற உள்ளது. திருமணம் நடைபெற உள்ள மகிழ்ச்சியில் இருக்கும் விஜயலட்சுமிக்கு பார்வை வந்தது இரட்டிப்பு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

விஜயலட்சுமி தனது வாழ்வில் என்றும் மகிழ்ச்சியுடன் இருக்க வாழ்த்துகிறோம்.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சோமாலியா குழந்தைகளுக்கு தன் சொத்தில் ஒரு பாதி: ஏ.ஆர்.ரஹ்மான்! 

ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான், ஒரே நேரத்தில் இரண்டு ஆஸ்கர் அவார்டு வாங்கிய தமிழன். இதோ மீண்டும் 2016&க்கான ஆஸ்கர் விருதும் ஓ.கே. ஆகிவிட்டது.

தமிழ் படங்களுக்கு இசை அமைப்பதை குறைத்துக் கொண்ட ரஹ்மான் ஹாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அங்கு அவரது சம்பளம் பல மில்லியன் கோடிகள்.

எங்கு எந்த நாட்டில் இருந்தாலும், ஐந்து வேளை தொழுகையை கட்டாயமாக நிறைவேற்றுவார். அதே போல எந்த நாட்டில் இருந்தாலும் ரம்ஜான் நோன்பு கட்டாயமாக இருந்து விடுவார்.

தான தர்மம் செய்வதிலும் தயாள குணம் கொண்டவர் ரஹ்மான். ஒரு இசை முயற்சிக்காக சோமாலியா சென்றார் ரஹ்மான். அங்கு 3000 ஆண்டு பழமையான இசைக் கருவிகள் புழக்கத்தில் இருந்து வருகிறது.

மூன்று வருடங்கள் பழகினால் மட்டுமே அந்த கருவியை வாசிக்க முடியும். ரஹ்மான் அந்த கருவியை பார்த்து ஒரு டஜன் வாங்கிக் கொண்டார். விலைபேசி வாங்கியும் கொண்டார்.

ஆனால், பரிதாபம் 3000 வருட பாரம்பரிய இசைக்கருவி சில நூறுகளே…! பார்த்தார் ரஹ்மான். இந்த இசைக்கருவிகளுக்கு சில நூறுகள் விலை என்பது அவமானம். இது விலைமதிப்பில்லாத கருவி.

வறுமை, பசி, பட்டினியால் வாடும் சோமாலியா குழந்தைகள் நலனுக்காக பல கோடிகளை நன்கொடையாக கொடுத்து விட்டார். ஆடிப்போனது சோமாலியா அரசு. அவர்களால் நம்பவே முடியவில்லை.

சோமாலியா பிரதமர் அழுதே விட்டார். சட்டென்று ரஹ்மான் கால்களில் விழப்போனார். பதறிப் போய் தடுத்த ஏ.ஆர்.ரஹ்மான் ஒரே ஒரு வார்த்தை சொன்னார்.

எல்லாப் புகழும் இறைவனுக்கே…!

Image may contain: 1 person
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Thursday, 12 January 2017

பொங்கலைப் போற்றும் சிங்கப்பூர்...

 
images%2B%25286%2529.jpg

தமிழர்கள் மிகுதியாக வாழ்வதோடு மட்டுமல்லாது,மரியாதையுடன் நடத்தப்படக்கூடிய உலக நாடுகளில்
மிக முக்கியமானது சிங்கப்பூர்.

நம்மூரில் பொங்கலை சிறப்பாக, மனமகிழ்வோடு கொண்டாட முடியாமல் நாம் திண்டாடி கொண்டிருக்கிறோம்.

ஆனால்,நம் சக தமிழ் மக்கள் வாழும் சிங்கப்பூரில் இன்று பொங்கல் திருநாள் கோலாகலமாக
துவங்கி சிறப்புற நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

குறிப்பாக தமிழர்கள் அதிகம்
வசிக்கும் பகுதி 'லிட்டில் இந்தியா'
பகுதி முழுதும் விழாக்கோலம் பூண்டுள்ளது.
 
images%2B%25285%2529.jpg

சாலையின் இருபக்கம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.அவையாவும் தமிழர் கலாச்சாரத்தை உலகிற்கு பறைசாற்றும் விதமாக உள்ளது.

அந்த வகையில்,அவர்களாவது நிம்மதியாக தமிழர் திருநாளான பொங்கலை கொண்டாடுகிறார்களே.. என்பதில் உண்மையில் தாய்த்தமிழக மக்களுக்கு மகிழ்ச்சியே..

ஆனால்,நம் தாய் தமிழகத்திலோ,
பொங்கலின் அங்கமான ஜல்லிக்கட்டு நடத்த  மத்திய மற்றும் மாநில அரசுகளிடம் சில ஆண்டுகளாக மன்றாடி கொண்டிருக்கிறோம்.

நான் கேட்குறேன்...நாம் காலம் காலமாக கடைபிடித்து வரும் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க இவர்கள் யார்...?

ஏன்...நாம் மன்றாட வேண்டும்...?

இது போன்ற உணர்வு சார்ந்த விஷயத்தில் மத்திய அரசின் நிலைப்பாடு்,தமிழ் இனத்தின் கலாச்சாரத்தை ஒழிக்க எடுத்த முயற்சியோ....என எண்ணத் தூண்டுகிறது

நமது இனத்திற்கும்,கலாச்சாரத்திற்கும், உணர்வுக்கும் மதிப்பளிக்காத
நாட்டில் வாழ்வது மிகவும் வேதனை அளிக்கிறது.

நீங்களே சொல்லுங்கள்....?

நாம் தேர்ந்தெடுத்த கடைந்து எடுத்த,
வடி கட்டுன,பயனில்லா இந்த முட்டாள் அரசியல்வாதிகளால் நமக்கு என்ன பயன்...?

இங்கு இருக்கிற எந்த ஒரு பிரதான அரசியல் கட்சிக்கோ,அந்த கட்சி சார்ந்த உறுப்பினர்களுக்கோ,இதை பற்றி பேச என்ன அருகதை இருக்கிறது...?

தேசிய கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொண்டு ஜல்லிக்கட்டு தொடர்பாக சட்டம் போடும் போது,எதிர்க்கத்துணியாது
வேடிக்கை பார்ப்பான்......

பதவியை ருசித்து,அனுபவித்து விட்டு அவர்கள் தான் காரணம் என்று வெட்கமில்லாமல் மக்களிடம் வோட்டு அரசியல் செய்வான்....

இன்னொரு கட்சியோ,அவர்கள் இருவர் தான் காரணம் என்று கைவிரிப்பான்....

ஏண்டா மடையங்களா.......?

அவன் தான் சரியில்லை...என்று தானே
மக்களாகிய நாங்கள் உங்களை தெரிவு செய்தோம் என்று,என்றாவது உங்களுக்கு உரைத்து இருக்கிறதா...?

அப்படி ஒருவேளை உங்களுக்கு உரைத்து இருந்தால்....
வாய் பேசாது,செயலில் அல்லவா...காட்டியிருப்பீர்கள்.

பதவி ஆசை பிடித்த கையாலாகாதா
உங்களை தேர்ந்தெடுத்ததற்காக, நாங்கள் எல்லாம் கூனிக்குறுகியல்லவா நிற்கிறோம்.

இப்படி அரசியல்வாதிகள்(வியாதிகள்) வாழுகிற தேசம்.குற்றம் சொல்லியே.... நாட்டையே குட்டிச்சுவராக்க பிறந்தவர்கள்,ஒரு போதும் மாறப்போவதில்லை.

மாறாக சிங்கப்பூரில் வாழ்ந்த தமிழ் அரசியல் வாதிகள் தாங்கள் வாழ்ந்த மண்ணுக்கும் , மக்களுக்கும் உண்மையாக இருந்தார்கள்.இப்போதும் இருக்கிறார்கள்.
 
images%2B%25287%2529.jpg


அதன் வெளிப்பாடாகவே,சிங்கப்பூர் நாடு தான் உயர்ந்த நிலை எட்ட காரணமாக இருந்த தமிழர்களையும்,அவர்களது கலாச்சாரத்தையும் கொண்டாடுகிறது...

ஆனால் இந்தியாவோ,அரசியல் வாதிகளின் அல்ப காரணங்களுக்காக
தமிழர்கள் நிம்மதியாக பொங்கல் விழா கொண்டாட முடியாமல் வருடம் தோறும்
திண்டாட வைக்கிறது.

இது மாறனும்....

அந்தந்த பகுதி வாழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்.

இந்தியா என்பது பல கலாச்சார பின்னணி கொண்ட மக்கள் வாழும் நாடு என்பதனை மனதில் கொண்டு சட்டம் இயற்ற வேண்டும்.

தவிர உணர்வை நசுக்கும் விதமாக செயல்படக்கூடாது என்பது தான் இங்கு வாழும் அனைத்து தமிழர்களின் எண்ணமும் வேண்டுகோளும்....

இல்லையேல் தேசீயம் என்கிற உணர்வே,தமிழர் மனதை விட்டு
மறைந்து போய்விடும் என்பதை ஆட்சியாளர்கள் மனதில் கொள்ள வேண்டும்.

சாதி,மதம் கடந்து ஒரு இனமாய்
ஜல்லிக்கட்டுடன் கொண்டாடும் பொங்கலை அனுமதிப்பீர்களா....?..
என்பது தான் கோடானுகோடி தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு.

நிறைவேறுமா......?

நிறைவேற்றுவீர்களா....?

https://kalkonaa.blogspot.ca/2017/01/blog-post_67.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆசிலிருந்து எழுதும்
கீதமஞ்சரியின் பக்கத்திலிருந்து.

புத்துணர்வு முகாம்...

 
 
 
b10.JPG
 
 
 
ஒவ்வொரு வருடமும் கணவரின் அலுவலகத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பாக வார இறுதிநாளொன்றில் ஏதாவதொரு பிரபல இத்தாலிய உணவகத்திலோ.. ஆஸ்திரேலிய உணவகத்திலோ விருந்து ஏற்பாடு செய்யப்படுவது வழக்கம். மதுவகைகளும் தாராளமாய் உண்டு. விரும்புவோர் விரும்பும் அளவுக்கு உண்டும் குடித்தும் மகிழலாம். வீட்டுக்குத் திரும்பிச்செல்ல வாடகைக்கார் அலுவலக செலவிலேயே வசதி செய்துதரப்படும். அலுவலகத்தில் பணிபுரியும் அனைவரும் தங்கள் இணையரோடு அவசியம் அதில் கலந்துகொள்வர். பதினெட்டு வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகளுக்கு அனுமதி உண்டென்றாலும் எவரும் குழந்தைகளோடு வருவதில்லை.
 
 
bi12.JPG
 
 
b1.JPG
 
 
 
bi27.JPG
 
 
 
சென்ற 2016-ஆம் வருடமும் அப்படி ஏதாவதொரு உணவகத்தில்தான் கிறிஸ்துமஸ் விருந்து இருக்கும் என்று நினைத்திருந்த எனக்கு இம்முறை ஒரு அதிசயம் காத்திருந்தது. இந்த முறை மது, அசைவம் இவற்றுக்கு இடமில்லை என்று குறிப்பிடப்பட்டது. இரண்டுமில்லாமல் என்ன கொண்டாட்டம்? என்ற கேள்விக்குக் கிடைத்த விடை வியப்பளித்தது. இயற்கையின் அழகும் அமைதியும் சூழ்ந்ததொரு வனப்பகுதியில் அமைந்துள்ள புத்துணர்வு முகாமில் ஒருநாள் பொழுதைக் கழிப்பது என்பதுதான் திட்டம்.
 
 
bi7%2B%25282%2529.JPG
 
 
b21.JPG
 
 
 
bi4.JPG
 
 
 
சிட்னி மாநகரின் பரபரப்பிலிருந்து விலகி வெகுதொலைவில் மலைக்காட்டுப் பகுதியில் வெளியிலிருந்து பார்த்தால் உள்ளிருப்பதே தெரியாமல் அமைந்துள்ளது அந்த புத்துணர்வு முகாம். உள்ளே பில்லபாங் எனப்படும் நீர்நிலையை ஒட்டி மலைச்சரிவுகளில் ஆங்காங்கே அழகான மரக்குடில்கள்… உணவுடன் தங்கும் வசதியும் உண்டு. பல நாட்டவரும் இங்கு வந்து தங்கி மனத்துக்கும் உடலுக்கும் புத்துணர்வு ஊட்டிச் செல்கின்றனர். புத்துணர்வு முகாமின் முக்கிய அம்சம் யோகா பயிற்சி மையம். இந்தியாவின் பெருமையையும் யோகா, தியானப்பயிற்சிகள் குறித்தும் அவர்கள் பேசக் கேட்கையில் மெய்சிலிர்த்துப்போகிறது. 

 
 
bi13.JPG
 
 
 
b25.JPG
 
 
 
b9.JPG
 
 
காலையும் மாலையும் முறையான யோகா பயிற்சி வகுப்புகள், பிரத்தியேகமான எண்ணெய் மசாஜ், இதமான வெந்நீர்க்குளியல், காய்கறி, கீரை, பழங்கள், மூலிகைத்தண்ணீர் என சுவையான இயற்கை உணவு, உயர்ந்தோங்கிய மரங்களின் நிழலில்.. விதவிதமான பறவையொலி பின்னணியில் இசைக்க… அழகிய வண்ணங்களில் தாமரைகள் மலர்ந்து காட்சியளிக்கும் தடாகத்தை ரசித்தபடி… காலாற காட்டுப்பாதையில் நடை, அலுவலக நட்புகளோடு அமைதியான சூழலில் அளவளாவல் என அன்றைய நாள் எங்கள் ஒவ்வொருவருக்கும் மறக்கமுடியாத நாளாகிப்போனது. 
 
 
  
b20.JPG
சிவப்பு ரோசெல்லா 
(crimson rosella)
 
 
bi2-%2Beastern%2Byellow%2Brobin.JPG
கிழக்கத்திய மஞ்சள் ராபின் 
(eastern yellow robin)
 
 
 
bi10.JPG
கிழக்கத்திய ரோசெல்லா
 (eastern rosella)
 
bi19.JPG
பெல் மைனர் பறவையும் 
ஆலிவ் முதுகு ஓரியோல் பறவையும்
(bell miner & olive backed oriole female)
 
bi28%2B-%2Bwonga%2Bpigeon.JPG
வோங்கா புறா (wonga pigeon)
 
 
bi30%2Bkingfisher.JPG
மீன்குத்தி (kingfisher)
 
 
 
bi25.JPG
மஞ்சள்முக தேன்குருவி 
(yellow faced honey eater)
 
bi23%2B-%2Beastern%2Bspinebill.JPG
கிழக்கத்திய வளைமுள்ளலகு சிட்டு
 (eastern spinebill)
 
bi31%2B-%2Bfemale%2Bsatin%2Bbowerbird.JPG
சாட்டின் போவர் பெண்பறவை
 (satin bower bird female)
 
bi32%2Bred%2Bbrowed%2Bfinch.JPG
செம்புருவச் சிட்டு (red browed finch)

எதை எடுப்பது.. எதை விடுப்பது என்று முடிவெடுக்கமுடியாதபடி ஏராளமான இயற்கைக் காட்சிகள்… பறவைகள்… எல்லாவற்றையும் புகைப்படமெடுக்க முடியாவிட்டாலும் எடுத்தவற்றுள் சிலவற்றை இங்கு பகிர்ந்துள்ளேன். 

வருடத்தின் இறுதியில்.. வரவிருக்கும் புத்தாண்டை நோக்கிய பயணத்தின் ஒரு அங்கமாக இப்புத்துணர்வு முகாம் அமைந்தது என்றால் மிகையில்லை.. அலுவலகத்தின் அழுத்தும் கடமைகளிலிருந்து சற்றே விடுபட்டு மனத்தை ரிலாக்ஸ் செய்யும் உத்தேசத்தோடு புதியதொரு அனுபவத்தை வழங்கிய உயரதிகாரிக்கும் அவர்தம் மனைவிக்கும் நன்றிசொல்லிப் பிரிந்து அனைவரும் அவரவர் இல்லம் திரும்பினோம்.

http://geethamanjari.blogspot.ca/search?updated-min=2017-01-01T00:00:00%2B11:00&updated-max=2018-01-01T00:00:00%2B11:00&max-results=3

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொங்கலை    கொண்டாடும்   நட்புகள்   அனைவருக்கும்

 
 
 இனிய   பொங்கல்    நல்வாழ்த்துக்கள் ....  
 
 
 
 
755b5382d62c6c1b8c4d6fedff34d1eb_XL.jpg

 
 
 
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிலம்,நீர்,தீ,காற்று,ஆகாயம் என்னும் ஐம்பூதங்களின் ஒத்துளைப்போடும் கொண்டாடப்படும் ஒரு திரு நாள் தைத் திருநாள்...

 

அனைவரும் சகல நலன்களும்,வளங்களும் பெற்று நீடுழி வாழ மீண்டும் என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

 
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொங்கல் தமிழர் பண்பாட்டு உயிர்ப்பின் திருநாள். :- அ.மயூரன்

மனித வாழ்வின் சமூகவியல் பண்பாட்டுத்தளத்தில் நிகழும் நிகழ்வுகளில் பண்டிகைகள், சடங்குகள் என்பன முக்கியம் பெறுகின்றன. இவை காலம், இடம், சூழல், தேவை, நோக்கம் என்பவற்றினால் வேறுபாடடைகின்றது. மனிதவாழ்வு பண்பாட்டுக்குரியது என்பதால் உயிரியல் நிலையில் நிகழ்வுகள் பண்பாட்டு வயப்படுகின்றன. அந்தவகையில் தமிழர் சடங்குகள் சமூக, பொருளாதார, அரசியல், போரியல்,சமய, தளங்களைச் சார்ந்தும் அமைகின்றன. அந்தவகையில் தமிழர் பண்பாட்டின் உயிர்ப்பிற்கு உறுதியாய் இன்றுவரை தொடரும் பண்டிகைகளில் தைப்பொங்கல் முக்கிய இடம் வகிக்கின்றது.

தமிழரின் வாழ்வியற்தடத்தில் இன, மத பேதங்களைக்கடந்து தமிழன் என்ற உறுதிப்பாட்டில் ஒற்றுமையடையச் செய்வது பொங்கலே. இப்பொங்கல் பண்டிகையானது இந்து. கிறிஸ்தவ, முஸ்லிம்கள் என்ற வேறுபாடுகள் அற்று தமிழனின் பண்பாட்டியலின் உயிர்ப்பின் தைப்பொங்கல் உறுதியாகவே விளங்குகிறது. தமிழர்களின் வாசல்கள் தோறும் கோலம் போட்டு நிறைகுடம் வைத்து அந்த சூரிய தேவனுக்கு தன் நன்றிக்கடனினை செலுத்துகின்றார்கள்.

ஈழத்ததைப் பொறுத்தவரை 2009 .இற்கு முன்னர் தமிழர் உயிர்ப்பின் உயிர் நாடியாக இப்பொங்கல் விளங்கியது தாம் ஆலயங்களில், வீடுகளில், பொது இடங்களில், களமுனைகளில் என பொங்கிச் சூரியனுக்கு தன் நன்றிக்கடனைச் செலுத்துகின்றனர். களமுனைகளில் போராளிகள் தங்களை ஆயத தளபாடங்களை வைத்து சூரியனுக்கு பொங்கி நன்றிக்கடன் செலுத்துகின்றனர். ஈழத்தைப் பொறுத்தவரையில் ஈழத்தில் தமிழர் திருநாள் தனித்துவம் பெற்றது எனில் அது தமிழீழ விடுதலைப்புலிகளையே சாரும். மார்கழி மாத மழை இருளாலும், தை மாதப்பனியாலும் அல்லல்படும் மக்களுக்கு யானிருக்கிறேன் என நாற்றிசையும் தன் ஒளி பரப்பி கிளம்பும் சூரியனுக்கு நன்றிக்கடன் செய்கின்ற நாளாகவும் இது அமைகின்றது.

பொங்கலின் பிண்ணி:- 

தைப்பொங்கற் பண்டிகையின் பின்னணியை நோக்கில் நெல்லின் அறுவடை கண்ட மகிழ்ச்சியில் தம் உழைப்பிற்கு உதவி செய்து நின்ற அனைத்திற்கும் நன்றிக்கடன் செலுத்தும் ஆனந்தவிழாவாகவே கொண்டாடப்படுகிறது. இனி இந்தப் பொங்கற் பண்டிகை ஏன் தைமாதத்தில் மட்டும் கொண்டாடப்படுகின்றது என நோக்கில்

புவியின் காலநிலைத்தளத்தில் தென்னிந்தியாவும், ஈழமும் ஒரே புவியியல் சார் தன்மைகளுக்கு உட்படுவதால் இங்கே புரட்டாதி முதல் மார்கழி வரை மழைக்காலப்பகுதியாக விளங்குகின்றது. இதன்போது குளங்கள், நீர்நிலைகள் நிறைந்து பயிற்செய்கைக்கு ஏற்ற நீர்ப்பாசனத்தை வழங்குகின்றது. இதனால் விளைநிலங்கள் விளைச்சலுக்கு உள்ளாகி தை மாதத்தில் மழைக்காலம் முடிவடைய தை மாத்தில் அறுவடை செய்கின்றார்கள். இது பொங்கல் நிகழ்விற்குப் பொருத்தமாக அமைகின்றது.

அத்துடன் தமிழுக்கு அறநூலான திருக்குறள் தந்தவர் திருவள்ளுவர். ஆதலினால் திருவள்ளுவனி;ன் பெயரிலேயே தமிழர் ஆண்டும் ஆரம்பிக்கப்பட்டு திருவள்ளுவர் ஆண்டு தை மாதத்தை முதன்மையாகக் கொண்டு மார்கழி மாத்தில் முடிகின்றது. திருவள்ளுவர் காலம் கி.மு 31 என்கின்றனர் இதனாலேதான் எமது நாள்காட்டிகள் திருவள்ளுவர் ஆண்டு எனத் தொடங்குகின்றது. இது தொடங்குகின்ற நாளே தைப்பொங்கல் நாள். இதுவே தமிழனின் புத்தாண்டு தினம் என்கின்றனர்.

தமிழறிஞர்கள். வரலாற்றுக்காலங்களில் பொங்கல் வரலாற்றுக் காலங்களில் தைத்திருநாளான பொங்கலினை பழந்தமிழர்கள் சிறப்பாகக் கொண்டாடியிருக்கிறார்கள் என்பதற்கு வரலாற்றுக்காலங்கள் சான்றாதாரப்படுத்துகின்றன. சங்ககாலத்தில் பொங்கல் நாளை அறுவடை விழாவாகவே தமிழர்கள் கொண்டாடியிருக்கின்றனர். என்பதனை சங்க இலக்கியங்களில் ஒன்றான புறநானூற்றின் 22ஆம் பாடல் விளக்கிறது.

‘அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல….’

என்று குறந்தோழியூர் கிழார் எனும் புலவர் அறுவடை விழாவை சாறு கண்ட களம் என வருணிக்கின்றார். அத்துடன் சங்ககால நூல்கள் பலவும் தைத்திருநாளை சிறப்பாக எடுத்தியம்பியிருக்கின்றன.

‘தைஇத் திங்கள் தண்கயம் படியும்’ (நற்றிணை)

‘தைஇத் திங்கள் தண்ணிய தரினும்’ (குறந்தொகை) 

‘தைஇத் திங்கள் தண்கயம் போல்’ (புறநானூறு)

‘தைஇத் திங்கள் தண்கயம் போது’ (ஐங்குறுநூறு)

‘தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ’ (கலித்தொகை)

எனப்பலவாறாக தைத்திருநாளின் சிறப்பியல்புகளை பழந்தமிழர் இலக்கியங்கள் தெளிவுபடுத்திக் காட்டுகின்றனர். இது தமிழர் திருநாளை பழந்தமிழன் எவ்வாறு சிறப்பாகக் கொண்டாடினான் என்பதனை எடுத்தியம்புகின்றன.

அடுத்து கிட்டத்தட்ட கி.பி 9ஆம் நூற்றாண்டுகளில் எழுந்த சீவக சிந்தாமணி என்னும் காப்பியத்திலும் பொங்கல் பற்றி குறிப்பிடும் போது

‘மதுக்குலாம் அலங்கல் மாலை

மங்கையர் வளர்த்த செந்தீப்

புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்’

என பொங்கலினை குறிப்பிடுகின்றது.

மேலும் இந்தியா, ஈழம் ஆகிய நாடுகளை அடிமைப்படுத்தியிருந்த போத்துக்கீசர் பொங்கலின் சிறப்பினை தெளிவு படுத்தியிருக்கின்றனர். அதாவது கி.பி. 16ஆம் நூற்றாண்டில் தென்னிந்தியாவுக்கு வந்த அப்போடூபாய் எனும் போத்துக்கீச அறிஞர் தான் எழுதிய‘இந்துக்களின் பழக்க வழக்கங்களும், வாழ்க்கை முறைகளும் எனும் நூலிலே பொங்கல் உழவர்களின் அறுவடை நாளாக சிறப்பாக கொண்டாடப்பட்டதாக குறிப்பிட்டிருக்கின்றார்.

இவ்வாறாக தமிழர் திருநாளான பொங்கல் வரலாற்றுக்காலம் முதல் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருவதனைக் காணலாம் தை மாதம் உத்தராயண புண்ணிய காலம் என்பர். அதாவது சூரியன் தை மாதம் முதல் ஆனி மாதம் வரை வடதிசையில் சஞ்சரிக்கும் காலம் உத்தராயண காலம் எனவும், ஆவணி முதல் மார்கழி வரை தென் திசையில் சஞ்சரிக்கும் காலம் தெட்சிணாயணம் எனவும் வழங்கப்படும்.

பொங்கலன்று சூரியன் தென் திசையிலிருந்து வடதிசைக்குத் திரும்புவதாக ஒரு ஐதீகம். வான சாஸ்திரத்தின் படியும், சோதிட சாத்திரத்தின் படியும் சூரியன் இம்மாதத்தில் கும்ப லக்கணத்தில் இருந்து மகர லக்கணத்திற்கு வருவதாக்க கூறப்படுகின்றது. இதை மகர சங்கிராந்தி என்பர். இதுவே பொங்கல் தினமாகும். உத்தராயணத்தின் ஆரம்பம் என்கின்ற இந்த வேளையில் சூரியனுக்கு அர்ப்பணம் செய்து வணங்கும் மரபும் இணைந்திருப்பதனால் இத்தமிழர் பண்டிகை சைவ சமய ரீதியிலும் முக்கியம் பெறுகின்றது.

தமிழர் புத்தாண்டு மாற்றமடைவதற்கான காரணம்

இவ்வாறு சங்க காலத்தில் தை மாதத்திலேயே பொதுவாகப் புத்தாண்டு காலம் இருந்தாலும் அதன் பின்னர் தமிழகத்தில் ஆதிக்கம் செலுத்திய ஆரியப்பிராமணியங்களின் வருகையிலிருந்து பிராமணியங்களின் கலாச்சாரம் இந்தியாவில் அடிபரவ அது அப்படியே ஈழத்திலும் மாற்றமமையச் செய்திருந்தன. இந்திய வரலாற்றுக்காலங்களைப் புரட்டிப்பார்த்தால் தமிழகத்தை ஆட்சி செய்தவர்களில் குப்தர் காலமும் முக்கியம் வாய்ந்த ஒன்றாக விளங்குகின்றது.

அவ்வாறு ஆழப்பட்ட குப்தர் காலத்திலே 2ம்; சந்திரகுப்தன் என்பவன் தன்னுடைய பெயரினை வி;க்கிரமாதித்தன் எனும் பெயரில் மாற்றிக்கொண்டு ஆட்சி செய்தான். இவன் தன்னுடைய பெயரால் ‘விக்கிரம சகம்’ எனும் ஆண்டு முறைமையை அறிமுகப்படுத்தினான். இது சோதிடம், வானவியல், ஜாதகம் முதலியவற்றைப் புகுத்தி இவன் மேற்கொண்ட முயற்சியே இன்றைய சமய ஆண்டு முறைமையாகும். இந்த விக்கிரமாதித்தன் உருவாக்கிய விக்கிரமசகம் என்னும் ஆண்டு முறைமையானது சித்திரை முதல் பங்குனி வரையான ஆண்டுச்சழற்சியையும், பிரபவ முதல் அட்சய வரையான 60 ஆண்டுச் சக்கரத்தையும் வரையறுத்தது. இந்த பிரபவ முதல் அட்சய வரையான 60 ஆண்டுச் சுழற்சிகளில் எதுவுமே தமிழில் இல்லை.

இதுவே இன்று பிராமணியங்களினால் பின்பற்றப்படும் ஆண்டுமுறைமையாகும் இதன்பின்னரே பழந்தமிழன் தைமாதத்தில் கொண்டாடப்பட்ட புத்தாண்டானது சித்திரை மாதத்த்திற்கு மாற்றப்பட்டது. இந்த மாற்றத்தினைச் செய்த பெருமை குப்தர்களையே சாரும் குறிப்பாக விக்கிரமாதித்தனை (சந்திரகுப்தன்) சாரும். இதனால் புத்தாண்டு தினம் மாற்றமடைந்திருந்தது. காரணம் பிராமணியங்களின் ஆதிக்கம் சைவ சமயத்தில் மேலோங்கியிருந்தது. இதனால் எமது தமிழ்ப்புத்தாண்டு மதம் சார்பானதாக அமையப்பெற்றது.

ஆகவேதான் மறைமலை அடிகள் உட்பட்ட தமிழறிஞர்கள் எமக்கு மத அடிப்படையில் இ;ல்லாது தமிழனின் புத்தாண்டாக அமையக்கூடியவாறு எமக்க ஒரு புத்தாண்டை அமைப்பதற்கு 1921ஆம் ஆண்டு மறைமலையடிகள் தலைமையில் நடந்த தமிழ் மாநாட்டில் சுவாமி ஞானப்பிரகாசர் உற்பட 500 அறிஞர்கள் கலந்துகொண்டு தமிழருக்கு தனியான புத்தாண்டு ஒன்றைக் கொண்டாடுவது குறித்து விவாதித்தனர். அதில் எல்லா மதங்களும் தமது மதங்களை வளர்த்தவர்கள் நினைவையே புத்தாண்டாக கொண்டாட தமிழர்கள் மட்டும் மதம் சார்ந்து கொண்டாட முடியாத நிலை காணப்பட்டது. ஏனெனில் தமிழர்களில் பலர் பின்பற்றுவது சைவத்தினை இதனால் இதன் தோற்றம் இன்னதென்று கூறமுடியாது.

ஆகவே தமிழின் வரலாற்றை ஆராய்ந்து பார்த்தார்கள் அதில் தொல்காப்பியமே எமது ஆதிநூல் அதற்கு முன்பும் பலநூல்கள் தோற்றம் பெற்றாலும் அவை காலவெள்ளத்தால் அள்ளுண்டு போயின. எனவே தொல்காப்பியமே எமது ஆதிநூல். இதனை இயற்றியவர் பெயர் தெரியாமையால் இவரின் நினைவாகவும் புத்தாண்டு கொண்டாடமுடியாது. ஆகவே தமிழில் தெளிவாகத் தெரியக்கூடியதாக இருப்பது திருக்குறளை ஆக்கிய திருவள்ளுவரையே.

இவர் கி.மு.31இல் பிறந்தார் என்கின்றனர். இதில் குழப்பங்கள் இருக்கின்றன. திருவள்ளுவர் புத்தருக்கு முற்பட்டவர் என்கின்ற கருத்தும் நிலவுகிறது. ஏனெனில் அவர் காளி, விஷ்ணு பற்றித் தனது குறளில் குறிப்பிட்டிருக்கின்றார். ஆனால் புத்தர் பற்றி ஏதும் குறிப்பிடவில்லை. ஆகவே அவர் புத்தரிக் காலத்திற்கு முற்பட்டவர் என்கின்றனர். ஆனால் திருவள்ளுவர் பகவான் என்றழைப்பது புத்தரையே காரணம் திருவள்ளுவர் காலத்தில் விஷ்ணுவை பகவான் என்று அழைக்கப்படவில்லை. அத்துடன் தாமரை மலரோன் என்றழைப்பதும் புத்தரையே ஆகும். அந்தக்காலத்தின் பின்னர்தான் அது விஷ்ணுவுக்கும், இலக்குமிக்கும் வழங்கப்பட்டன.

எனவே கி.மு.31 ஐ திருவள்ளுவரின் ஆண்டாக உறுதிப்படுத்தி தை மாதம் முதல்நாளை புத்தாண்டாக கொண்டாட வேண்டும் என முடிவெடுத்தனர். இதன்போது கூறிய மறைமலையடிகள் ‘தைப்பொங்கலை சமயவிழா என்று சொல்லி சர்ச்சையைக்கிழப்பி குழப்பம் விளைவிக்க முயன்றாலும், தைமாதத்தை தமிழரின் புத்தாண்டு என ஏற்க முடியாது எனக்கூறுபவர்களும் இம்மாநாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று கட்டளை விடுத்தார். அத்துடன் பொங்கல் சமயசார்பு அற்றவிழா. தைமாதமே தரணியாண்ட தமிழர்களின் புத்தாண்டாக மாறவேண்டும’; என மறைமலையடிகள் முழங்கினார். இதை தந்தை ஈ.வெ.ரா பெரியார்அவர்களும், சுவாமி ஞானப்பிரகாசரும் ஏற்றுக்கொண்டனர். தைப்பொங்கலே தமிழர் புத்தாண்டாக மாற்றம் பெற்றது.இவ்விதமே திருவள்ளுவர் ஆண்டு கணிக்கப்பட்டது. மாறாக இது கருணாநிதியின் கண்டுபிடிப்பன்று.

இனி இத்தனை சிறப்புக்கொண்ட தைப்பொங்கலை தமிழர் திருநாளாக மாற்றவேண்டும் தைப்பொங்கல் நாளே தனிப்பெரும் பண்டிகை என 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் தமிழகத்தில் வாழ்ந்த பேராசிரியர் நமசிவாய முதலியார் அவர்களே முதன்முதலாக பறைசாற்றியவராவார். இவருக்கு தமிழ்பேசும் நல்லுலகு என்றென்றும் நன்றியுடையதாகின்றது. இவர் தமிழகத்தின் கடற்கரை மீன்பிடிக்கிராமங்களில் பொங்கலை சிறப்பாகக் கொண்டாட வழிவகுத்தவர். அதனைத் தொடர்ந்து பாவேந்தர் பாரதி தாசன் அவர்கள்

‘நித்திரையில் இருக்கும் தமிழா! 

சித்திரையல்ல உனக்குத் தமிழ்ப்புத்தாண்டு. 

தரணியாண்ட தமிழர்க்கு தை முதல்

நாளேதமிழ்ப்புத்தாண்டு’

என்றும்

‘பத்தன்று நூறன்று பன்னூறன்று

பல்லாயிரத்தாண்டாய்

தமிழர் வாழ்வின் புத்தாண்டு தை

மாதம் முதல் நாள் பொங்கல் நன்நாள்’

என்றார்.

இவ்வாறு தமிழறிஞர்கள் என்னதான் காத்தினாலும் நாம் கேட்டபாடு இல்லை சரி அதைவிட்டு விடையத்திற்கு வருவோம்.

தமிழக – ஈழப்பண்பாட்டுப்பரவலிடையே தமிழகப்பண்பாட்டு மரபுகள் ஈழத்தில் பரவியிருந்த போதும் சில அம்சங்கள் இச்சமூக குழுமங்களுக்கு ஏற்றவாறு வடிவம் பெற்றும் மாற்றமடைந்தும் காணப்படுகின்றது. தமிழகத்தில் நிலவும் சில வழமைகள் எமது ஈழப்பகுதியில் காணமுடிவதில்லை. ஈழத்தில் தைப்பொங்கல் என்னும் சொல் ஒரு தனித்துவ வழக்காறாக உள்ளது. ஆனால் தமிழகத்தில் தைப்பொங்கலின் முதன்நாள் போகிப்பண்டிகை என்ற பெயரில் பழைய பொருட்களை தீயிட்டுக் கொழுத்தி, பீடைகளை அகற்றி கொண்டாடுகின்றார்கள். இந்நிகழ்வு ஈழத்தில் இல்லை என்றே கூறலாம். தமிழகத்திலும்; அந்நிகழ்வு காலமாற்றத்தினால் மாறி பழைய பொருட்களுக்குப் பதிலாக ரயர்களைப் போட்டுக்கொழுத்தி இந்நிகழ்வினைக் கொண்டாடுவார்கள்.

மாட்டுப்பொங்கல்

பொங்கலிற்கு மறுநாள் மாட்டுப்பொங்கல். அன்று உழவர் தொழிலுக்கு முக்கியமாகக் கருதப்படும் மாடுகளை நீராட்டி அலங்கரித்து வழிபாடாற்றல் இந்நிகழ்வின் மரபு. உழவனே உலகிற்கு உயிர் கொடுப்பவன் அவன் இன்றேல் அவனியே இல்லை எனச் சொல்வார்கள். இதை கம்பன் கூட தனது ஏரெழுபது என்னும் நூலில்

‘மேழிபிடிக்கும் கைவேல் வேந்தர்க்கு நோக்குங் கை….’

என்று பாடுகிறான். ‘ஏன்

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்’

என்று வள்ளுவனும்

, ‘வரப்புயர நீருயரும்’

என்று ஒளவையும்,

உழவுத் தொழிலுக்கும் வந்தணை செய்வோம்

என பாரதியாரும் போற்றியிருக்கின்றனர்.

அப்படிப்பட்ட சிறப்புக்கள் மிக்க உழவர் திருநாளாகிய மாட்டுப்பொங்கல் சமூக மாற்றத்தின் நடுவே வெறும் சடங்காக மட்டுமே இந்நிகழ்வு நடாத்தப்படுகின்றது. இது காலமாற்றத்தின் தன்மையே. வயல்களில் நவீன உழவு இயந்திரங்களின் வருகையும் நீர் இறைக்கும் இயந்திரங்களின் பண்பாடுகளின் நுழைவாலும், தம் பணியிழந்த கால்நடைகளுக்கு வெறும் சடங்காக மட்டுமே இந்நிகழ்வு நடைபெறுகின்றது.

அத்துடன் தமிழர் பண்பாட்டின் வெளிப்பாடாய் மட்டுமன்றி தமிழர் பண்பாட்டின் விழுமியங்களை நிலை பெறச் செய்யவும் தமிழகத்தில் பொங்கலன்று நிகழும் ஜல்லிக்கட்டு நிகழ்வு முக்கிய இடம் பெறுகிறது. இது சங்ககாலத்தில் நடைபெற்ற காளையை அடக்கும் ஏறு தழுவுதலின் தொடர்ச்சியாகவே நடைபெறுகின்றது. இதுசங்ககாலத்தில் நடைபெற்ற ஏறதழுவுதலின் பண்பாட்டினைக் கொண்டிருக்காவிட்டாலும் தமிழர் பண்பாட்டினை தொடர்ந்தும் உயிர் பெறச் செய்கின்றது. ஆனால் இது ஈழத்தில் வண்டிற்சவாரிகளாக நடைபெறுகின்றன. வன்னியில் உருத்திரபுரம், வட்டக்கச்சி, விசுவமடு, வவுனிக்குளம் ஆகிய விளையாட்டு மைதானங்கள் இந்நாளில் களைகட்டும். நன்றாகச் சவாரி செய்யக்கூடிய மாடுகளை பந்தையப்படுத்தி வண்டியிற் பூட்டி சவாரி செய்வார்கள். இது கால மாற்றத்திற்கு ஏற்ப தமிழர் பண்பாடு ஈழத்தில் நடைபெறுவதனைக் காட்டுகின்றது.

கணுப்பொங்கல்

இந்த பொங்கலின் தொடர்ச்சியாக தமிழகத்தில் நடைபெறும் கணுப்பண்டிகை. ஈழத்தில் இல்லை. இது பெண்களுக்கான விஷேசமான தினமாகும். பொங்கற் பானையில் கட்டிய மஞ்சளினை எடுத்து பெரியவர்களிடம் கொடுத்து நெற்றி மற்றும் தாலியில் மூன்று தடவை ஒற்றிக்கொள்வர். பெரியவர்கள் இல்லாவிடத்தில் கணவனிடம் கொடுத்து ஒற்றிக்கொள்வர். இதன்போது பெண்களுக்கு பிறந்தவீட்டுச்சீதணம் என்று அனுப்புவதும் இந்நாளில் வழமையானது. பிறந்தவீடு செழிக்கவேண்டும் என்று தமிழகத்தில் இப்பண்டிகை கொண்டாடுவது வழக்கம். இது சங்ககாலத்தில் தை நீராடல் என அழைக்கப்பட்டது. இதனைப் பரிபாடல் 11 பாடல் குறிப்பிடும் போது

‘வையை நினைக்கு மடை வாய்த்தன்று 

மையாடல் ஆடன் மழப்புலவர் மாறெழுந்து 

பொய்யாடலாடும் புணர்ப்பி ரைவர் 

தீயெரிப் பாலுஞ் செறிந்த முன் பூற்றியோ 

தாயருகா நின்று தவத் தைந்நீராடல் 

நீயுரைத்தி வையை நதி’

மணமாகாத கன்னிப்பெண்கள் தாய்மார் அருகில் நின்று வைகையில் தைந்நீராடி சிறந்த கணவனைப் பெற வேண்டுமென பழந்தமிழர் வேண்டி சிறப்பாக இப்பொங்கல் நாளைக் கொண்டாடினர்.

ஈழத்தமிழர்களிடையே போகிப்பண்டிகை, கணுப்பண்டிகை ஆகியன இல்லை. காரணம் ஈழத்தில் ஒரு தனித்துவமான ஆரியக்கலப்புக்கள் பெரிதும் இல்லாத ஒரு இனக்குழுமம் வாழ்ந்தமையைச் சொல்லலாம். இதனால் ஆரியப்பிராமணியங்களின் கலாச்சாரச்சடங்குகளான இவையிரண்டும் ஈழத்தில் இல்லை. ஆனால் தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல் என்பன சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது தமிழர்களின் காலங்காலமான நம்பிக்கை. இதனால் தான் இது தமிழர்களின் மத்தியில் ஒரு உறுதியை புத்துணர்ச்சியை வளர்க்கும்.

போரின் விளைவால் புலம்பெயர்ந்து சிதறிச் சிக்கல்தன்மை வாய்ந்து அலைகின்ற சமூகமாக ஈழத்தமிழ்ச்சமூகம் இருந்தாலும் தாம் வாழும் இடங்களில் அதாவது அகதி முகாம்களிலும், வீடிழந்து தற்காலிக குடிசைகளில் வசித்தாலும், தம்மிடையே நீளும் பல பிரச்சனைகளுக்கு மத்தியிலும், தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற நம்பிக்கையில் தைப்பொங்கற் பண்டிகையை கொண்டாடுகின்றார்கள். 

பல குடும்பங்களில் துயரப்பொங்கலாக வரும் ஒவ்வொரு பொங்கலையும் அவர்கள் கொண்டாடுகின்றார்கள். ஏனெனில் தமிழை, தமிழர் பண்பாட்டினை ஆழமாக, ஆத்வாசமாக நேசித்த இனம் பூண்டோடு அழிக்கப்பட்டதனால் தம் குடும்பத்தலைவர்களை, உறவினர்களை இழந்தவர்கள் இப்பொங்கலை துயரப்பொங்கலாக கண்ணீர் பொங்கலாக தமிழர் பண்பாட்டில் பதிவு செய்கின்றார்கள்.

காலங்காலமாக, கூட்டாய், ஒற்றுமையாய் கொண்டாடிய பொங்கல் இன்று உறவுகளைப் பறிகொடுத்து, அங்கத்தவர்கள் இல்லா பொங்கலாய், முற்றங்கள் இல்லாத பொங்கலாய், வாழ்வின் ஆதாரமான உழைப்புக்களை, வருமானத்தினை எட்டமுடியாத பொங்கலாய், தமது தேசங்களுக்கு திரும்பிச் செல்ல முடியாது பிறர் முற்றங்களில் பொங்கும் பொங்கலாய், பலர் வாய்விட்டு தமது சோகங்களை சொல்லத்தயங்கும் பொங்கலாக கடந்த 2009 இற்கு பின் வருகின்ற பொங்கல் இடம்பெறுகின்றது இது தமிழர் பண்பாட்டில் பாரிய மாற்றத்தினை ஏற்படுத்தியிருக்கிறது.

மாற்றத்திற்கு உற்படாத சமூகம் இல்லை என்கின்ற இயற்பியல் விதிக்கமைய எமது ஈழத்தமிழர் சமூக வாழ்வும் மாறியிருக்கிறது.

அத்தோடு புலம்பெயர் வாழ்வில் மக்களிடையே பொங்கல் அவ்வவ் நாடுகளிகளின் தன்மைகளுக்கு ஏற்ப்ப வீட்டிற்குள்ளே அமைகின்றது. பெரும்பாலான மக்கள் ஆலயங்களுக்குச் சென்று தம் பொங்கற் பண்டிகையை கொண்டாடுகின்றார்கள். அத்துடன் ஈழத்தில் கூட முற்றத்தில் கோலமிட்டு பொங்குகின்ற நிகழ்வும் தொடர் மாடிக்கட்டங்களில் வசிப்போரிடம் இல்லை எனலாம். 

எது எவ்வாறாக இருந்தாலும் தமிழர் திருநாளான தைப்பொங்கல் திருநாளையே தமிழ்ப் புத்தாண்டு தினமாக, தமிழ்ப்பாரம்பரிய தினமாக பழந்தமிழன் கொண்டாடினான். எனவே தமிழர் சமூக, கலாச்சார, பண்பாட்டு விழுமியங்களைப் பிரதிபலிக்கும் தமிழர் பண்பாட்டின் உயிர்ப்பின் உறுதியாய் பொங்கல் நிகழ்வு அமைகிறது.

அ.மயூரன்

நன்றி

வீரகேசரி , தமிழ் நாதம்

Image may contain: text
Image may contain: one or more people and people sitting
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வியப்பூட்டும் வேலண்டைன் கதைகள் !

வியப்பூட்டும் வேலண்டைன் கதைகள் !

Tags: காதலன், காதலர் தினம், காதலர் தினம் வரலாறு, காதலகாதல், சேவியர், வேலண்டைன் வரலாறு, வேலண்டைன்ஸ் டே

 

 

 

1. வேலண்டைன் தினம் வேலண்டைன் எனும் பாதிரியாரால் வந்தது என்பதே பொதுவான நம்பிக்கை. ரோம பேரரசரான இரண்டாம் கிளாடியுஸ் காலத்தில் ஆண்கள் திருமணம் செய்து கொள்ள தடை இருந்தது. திருமணம் செய்து கொண்டால் ஆண்களுடைய வீரம் குறைந்து விடும் என்பது அரசரின் எண்ணம். திருமணம் செய்து கொள்ளவேண்டும் என துடித்த ஆண்களுக்கு உதவினார் வேலண்டைன். அரச கட்டளையை மீறி திருமணங்கள் நடத்தி வைத்தார். மன்னனுக்கு விஷயம் தெரியவந்தபோது வேலண்டைனைப் பிடித்து மரண தண்டனை விதித்தார். அவர் கொல்லப்பட்ட நாள் தான் பிப்ரவரி 14. இது நடந்தது கி.பி 270. வேலண்டைன்ஸ் டே குறித்து உலவும் கதைகளில் பெரும்பாலானவர்கள் நம்பும் கதை இது.

 

2. அமெரிக்கா இந்த ஆண்டைய காதலர் தினத்தை ஒரு ஹாலிவுட் திரைப்படத்துடன் கொண்டாடுகிறது. “வேலண்டைன்ஸ் டே” எனும் பெயரில் வெளியாகும் இந்தப் படத்தை பிரபல வார்னர் பிரதர்ஸ் தயாரிக்கிறது. ஜெஸிகா அல்பா, கேத்தி பேட்ஸ், ஜூலியா ராபர்ட்ஸ், ஜெஸிகா பேல் ஆகியோர் நடித்துள்ளனர். கேரி மார்ஷல் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் காதலும், காமமும் இழையோடும் என்பதைச் சொல்லவும் வேண்டுமா ?

 

3. காதலர் தினத்தை யார் ரொம்ப ஆர்வமாய் வரவேற்பது ? காதலர்கள் என்பது உங்கள் பதிலென்றா அது தவறு. உண்மையில் காதலர் தினத்தை பெரிதும் எதிர்பார்ப்பது வியாபாரிகள் தான். வாழ்த்து அட்டைகள், பரிசுகள், சாக்லேட்கள், மலர்கள், சிடிக்கள், புத்தகங்கள் என அன்றைய தினத்தின் பிஸினஸ் பல பில்லியன் டாலர்கள். ஹால்மார்க் எனும் ஒரு நிறுவனம் காதலர் தினத்துக்காக வெளியிடும் வாழ்த்து அட்டைகளின் எண்ணிக்கை மட்டுமே ஆண்டுக்கு 20 கோடி !

 

4. அமெரிக்காவில் சராசரியாக இந்த காதலர் தினத்தன்று செலவாகும் ரோஜாக்களின் எண்ணிக்கை சுமார் 22 கோடி. பூக்களைப் போட்டி போட்டு வாங்குவது ஆண்கள் தான். 73 சதவீத விற்பனை அவர்களால் தான் நடக்கிறது. பூவுக்கே பூ கொடுக்கிறேன் என காதலுடன் பூ நீட்டுகிறார்கள் ஆண்கள். அப்படியானால் பெண்கள் ? வாழ்த்து அட்டைகள் வாங்குவதில் அவர்கள் தான் முதலிடத்தில் நிற்கிறார்களாம்!.

 

5. காதலர் தினத்தன்று சந்திக்கும் ஆணைத் திருமணம் செய்து கொள்வோம் எனும் நம்பிக்கை பண்டைக் காலத்தில் பரவியிருந்தது. அதனால் தன் மனதுக்குப் பிடித்தவரைச் சந்திக்க வேண்டுமே என பெண்கள் காத்திருப்பார்களாம். தனக்கு ஒரு காதலி கிடைப்பாளா என ஆண்களும் காதலர் தினத்தன்று அங்கும் இங்கும் அலைந்து திரிவார்களாம்.

 

6. கிரீட்டிங் கார்ட் பரிமாறும் வழக்கம் பதினேழாம் நூற்றாண்டிலேயே ஆரம்பமாகி விட்டது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் அது கிளைவிட்டுப் பரவியது. இன்றைக்கு அது மிகப்பெரிய வணிகத் தளமாகவும் விஸ்வரூபம் எடுத்துவிட்டது. உலக அளவில் கிறிஸ்மஸ் தினத்துக்கு அடுத்தபடியாக ஒரு பில்லியன் எண்ணிக்கை தாண்டி வாழ்த்து அட்டைகள் விற்பனையாவது காதலர் தினத்தில் தான். இமெயில், எஸ் எம் எஸ், இ-கார்ட், இண்டர் நெட் என ஹைடெக் வாசமடிக்கும் டிஜிடல் உலகம் இது. ஆனாலும் எந்த டெக்னாலஜியாலும் வாழ்த்து அட்டைகளை முழுமையாய் அழிக்க முடியவில்லை என்பது வியப்பு !

 

7. அமெரிக்கா போன்ற பல மேலை நாடுகள் வேலண்டைன்ஸ் தினத்தை காதலர்கள் மட்டும் கொண்டாடுவதில்லை. நண்பர்கள், சிறுவர்கள், பெரியவர்கள் என எல்லோரும் கொண்டாடுகிறார்கள். வகுப்பறைகளையல்லாம் அலங்கரித்தும், ஆசிரியர்களுக்குப் பரிசுகள் கொடுத்தும் மாணவர்கள் இந்த நாளைக் கொண்டாடுகிறார்கள். அமெரிக்காவில் வேலண்டைன் நாளில் வாழ்த்து அட்டை வாங்குவதில் ஆசிரியர்கள் முதலிடத்தில் இருக்கிறார்கள் என்பது வியப்பான உண்மை. இதற்கான புண்ணியத்தைக் கட்டிக் கொள்பவர்கள் ஆறு வயதுக்கும் பத்து வயதுக்கும் இடைப்பட்ட மாணவர்கள்.

 

8. சீனர்களின் காதலர் தின கதை சுவாரஸ்யமானது. சுவர்க்கத்தின் சக்கரவர்த்திக்கு ஏழு மகள்கள். ஏழாவது மகளான ஸி நூ அழகிகளுக்கெல்லாம் அழகி ! பேரழகி. ஒரு நாள் ஏழு சகோதரிகளும் நதியில் குளித்துக் கொண்டிருந்தார்கள். நுவூ எனும் இளைஞன் அவர்களைப் பார்த்தான். குறும்புத் தனமாக எல்லாருடைய ஆடைகளையும் எடுத்துப் போய்விட்டான். ஆடைகள் இல்லாமல் வெளியே வரமுடியாமல் சகோதரிகள் தவித்தனர். கடைசியில் தங்கள் கடைசித் தங்கையான ஸி நூ வை அவனிடம் சென்று ஆடை வாங்கி வர அனுப்பினார்கள். ஈரம் சொட்டச் சொட்ட பிறந்தமேனியாய் வந்து நின்ற அவளைப் பார்த்து, கண்டதும் காதல் கொண்டு, பின்னர் கல்யாணமும் செய்து கொள்கிறான் அவன். விஷயம் தெரிந்த மன்னருக்கு வந்ததே கோபம். இருவரையும் வானத்தின் இரண்டு மூலைகளில் கொண்டு போய் விட்டார். அவர்கள் ஏழாவது மாதத்தின், ஏழாவது நாளில் மட்டும் தான் சந்தித்துக் கொள்ள முடியும். அந்த நாள் தான் சீனர்களின் காதலர் தினம்.

 

9. காதலர் தினத்தில் காதலர்கள் வாழ்த்துக்களும், கவிதைகளும் எழுதும் போது உலகப் புகழ் பெற்ற காதலர்களைப் போல நாம் வாழ வேண்டும் என குறிப்பிடுவது வழக்கம். அவர்கள் குறிப்பிடும் பட்டியலில் வருபவர்கள் பெரும்பாலும் இவர்களில் ஒருவர் தான். ரோமியோ – ஜூலியட், லைலா – மஜ்னு, ஹீர் – ரன்ஹா, கிளியோ பாட்ரா – மார்க் ஆண்டனி, ஷாஜஹான் – மும்தாஜ்.

 

10. காதலர் தினத்தை மையமாகக் கொண்டு எக்கச்சக்கமான மூட நம்பிக்கைகள் உலவி வருகின்றன. காதலியர் தங்கள் மனம் கவர்ந்தவர்களின் பெயர்களையெல்லாம் ஒரு பாத்திரத்தில் எழுதிப் போடுவார்கள். பாத்திரத்தைக் குலுக்கி எடுக்கும் போது வரும் பெயர் தான் அவளுடைய கணவன். இது பதினேழாம் நூற்றாண்டுகளில் நிலவி வந்த பாப்புலர் வழக்கம்.

 

11. காதலர் தினத்தன்று காதலியின் கண்ணில் எந்தப் பறவை தென்படுகிறதோ அது அவளுடைய கணவனின் தன்மையைச் சொல்லும் என்பது காதலர் தினத்தன்று உலவி வந்த பண்டைய நம்பிக்கைகளின் ஒன்று. புறாவைக் காண வேண்டுமே என பெண்கள் பதறுவார்களாம். காரணம் புறாவைக் கண்டால் காதல் வாழ்க்கை ஆனந்தமாய் இருக்குமாம். கணவன் மிகவும் இரக்கமும், அன்பும், நேசமும் உடையவனாக இருப்பானாம் !

 

12. காதலர் தின பூக்களைப் பொறுத்தவரையில் சிவப்பு ரோஜாவுக்கு தான் முதலிடம். சிவப்பு ரோஜா சர்வதேச அளவில் காதல் மொழி பேசுகிறது. சிவப்பு ரோஜா கொடுத்தால் “காதல்” எனும் ஒரே மீனிங் தான் உலகெங்கும். சிவப்பு ரோஜா கொடுக்காத காதலர்கள், காதலியரின் பிரியத்துக்குரிய பூக்களைப் பரிசளிக்கிறார்கள். உலக அளவில் அதிகம் விற்கப்படுவதும், பரிமாறப்படுவதும், நேசிக்கப்படுவதும் சிவப்பு ரோஜாவே தான்.

 

13. ரோமில் பண்டைக்காலத்தில் கொண்டாடப்பட்ட ஒரு விழா லூப்பர் கேலியா. வாழ்க்கை வளமாக வேண்டும் என பாகான் கடவுளை வேண்டும் விழா இது. பிப்பிரவரி 13 முதல் 15 வரை கொண்டாடப்படும் இந்த விழா ரோம் நகரில் மிகப் பிரபலம். இதை கி.பி 490 களில் போப் கெலேஷியஸ் தடை செய்தார். ஆனாலும் மக்கள் இந்த விழாவை விடவில்லை. இந்த விழாவின் வீரியத்தைக் குறைக்கவும், இதை ஒரு கிறிஸ்தவ விழா மூலம் செயலிழக்கச் செய்யவும் போப் தீர்மானித்தார். எனவே பிப்பிரவரி 14ம் நாளை புனித. வேலண்டைன் நாள் என அறிவித்தார் என்பது பொதுவாக நம்பப்படும் வரலாறு.

 

14. இலக்கியங்களில் தவிர்க்க முடியாதவர் சேக்ஸ்பியர். அவருடைய காதல் பாடல்கள் வரலாற்றில் நீங்கா இடம் பிடித்தவை. அவருடைய புகழ் பெற்ற காவியங்களில் ஒன்று ஹேம்லெட். அதில் “நாளை வேலண்டைன்ஸ் டே” என்று துவங்கும் ஒரு காதல் கவிதைப் பாகம் வருகிறது. நான்காவது பாகத்தின் ஐந்தாவது காட்சியில் வரும் இந்தப் பாடல் 1600 களில் வேலண்டைன்ஸ் டே பிரபலமாய் இருந்திருக்கிறது என்பதன் இலக்கியச் சாட்சிகளில் முக்கியமானது இது.

 

15. கிழக்கு இங்கிலாந்தின் நார்போக் பகுதியில் வேலண்டைன்ஸ் தினத்தை வித்தியாசமாகக் கொண்டாடுகிறார்கள். கிறிஸ்மஸ் காலத்தில் கிறிஸ்மஸ் தாத்தா வீடுகளில் பரிசுகள் தரும் வழக்கத்தை ஒத்திருக்கிறது இது. பிரியத்துக்குரிய வீடுகளின் பின்வாசல் கதவைத் தட்டி இனிப்புகளை வைத்துச் செல்கின்றனர். அப்படி இனிப்புகளை வைப்பவர்களை “ஜேக்” என்று அழைக்கின்றனர். யார் இனிப்பை வைத்தது என்று தெரியாமல் பலர் அதை பயத்துடன் சாப்பிடுவதும் உண்டு.

 

16. பிரான்ஸ் நாட்டில் வேலண்டைன்ஸ் தினத்தை சிம்பிளாக புனித.வேலண்டைன் என்று அழைக்கிறார்கள். ஆனால் கொண்டாடுவதென்னவோ மற்ற நாடுகளைப் போலத் தான். ஸ்பெயினில் இந்த நாளை சேன் வேலன்டின் என்கின்றனர். ஸ்வீடனில் இந்த நாளை “எல்லா இதயங்களின் தினம்” என்று அழைக்கின்றனர். போர்ச்சுக்கல் நாட்டில் இந்த நாளின் பெயர். டயா டாஸ் நமோரோடோஸ். அதாவது பாய்பிரண்ட் மற்றும் கேள் பிரண்ட் தினம் !

 

17. பின்லாந்தில் வேலண்டைன்ஸ் டே மிக வித்தியாசமானது. இது காதலர் ஸ்பெஷல் தினம் அல்ல. இந்த நாளை அவர்கள் ஸ்டேவான்பாவியா என்று அழைக்கின்றனர். இதற்கு நண்பர்கள் தினம் என்பது பொருள். நண்பர்களாய் இருப்பவர்கள் இந்த நாளை வெகு விமரிசையாகக் கொண்டாடுகிறார்கள். இனிப்புகள், பரிசுகள், வாழ்த்து அட்டைகள் என எல்லாம் உண்டு. வேறு வேறு இடங்களில் இருக்கும் நண்பர்களெல்லாம் ஒரே இடத்தில் கூடி கும்மாளமடிப்பது இதில் ஹைலைட்.

 

18. பிப்பிரவரி 14ல் என்ன விசேஷம் என்று கேட்பார்கள் பிரேசிலில். அவர்களுக்கு நோ வேலண்டைன்ஸ் டே. ஆனால் அவர்கள் ஜூன் 2ம் தியதி காதலர் தினம் கொண்டாடுகிறார்கள். காதலர்கள் மற்றும் தம்பதியர்கள் வாழ்த்து அட்டை, சாக்லேட், பரிசு, முத்தம் இத்யாதி எல்லாவற்றையும் பரிமாறிக் கொள்ளும் நாள் இது. ஐயோ, அப்போ பிப்பிரவரி 14ல் ஒண்ணுமே இல்லையா என பதட்டப்படாதீர்கள். அந்த நாளை ஒட்டி அவர்கள் ஒரு விழா கொண்டாடுகிறார்கள். அதை ஹாலிடே ஆஃப் செக்ஸ் என்று அழைக்கிறார்கள் ! அப்புறம் என்ன ?

 

19. இந்தியாவுக்கும் காதலுக்கும் நெருங்கிய பந்தம் உண்டு. இந்திய இலக்கியங்களில் காதல் மைய இடம் பிடிக்கின்றன. உலகையே பிரமிக்க வைக்கும் காதல் சின்னமான தாஜ்மஹால் இந்தியாவில் இருக்கிறது. உலகத்தின் முதல் செக்ஸ் கல்வி நூலான காமசூத்ராவின் பிறப்பிடமும் இந்தியாவே தான். இருந்தாலும் வேலண்டைன்ஸ் டே அன்று கலவரம், மண்டை உடைப்பு, சட்டை கிழிப்பு எல்லாம் நடப்பதும் நம் நாட்டில் தான். இத்தனை களேபரங்களையும் தாண்டி காதலர் தினத்தைச் சிறப்பாகக் கொண்டாடும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இருக்கிறது. குறிப்பாக ஆசியாவில் காதலர் தின மார்க்கெட் அதிகம் உள்ள இடங்களில் முக்கிய இடம் இந்தியாவுக்கு.

 

20. சவுதி அரேபியாவில் காதலர் தினம் தடை மத அமைப்புகளால் தடை செய்யப்ட்டிருக்கிறது. இது இஸ்லாமிய சட்டங்களுக்கு விரோதமான விழா என்பது அவர்களுடைய நம்பிக்கை. இந்த விழா ஆண்களும் பெண்களும் சந்தித்து சில்மிசங்களில் ஈடுபட வழி வகுத்து விடும். ஏற்கனவே திருமணமான பெண்கள் சபலமடைய வழி வகுத்துவிடும் போன்றவையெல்லாம் அவர்கள் சொல்லும் காரணங்களில் சில. இருந்தாலும் திருட்டுத் தனமாக அங்கே காதலர் தினத்தைப் பலர் கொண்டாடுகின்றனர். ரகசியமாய் பூங்கொத்துகள் ஆர்டர் செய்து, அதை நள்ளிரவிலேயே மனசுக்குப் பிடித்தவர்களுக்கு கொண்டு சேர்த்து விடுகிறார்கள். பலர் இந்த நாளில் பெஹ்ரைன், எமிரேட்ஸ் போன்ற நாடுகளுக்குப் பறந்து வேலண்டைன்ஸ் டே கொண்டாடி விட்டு சைலண்டாகத் திரும்பி விடுவதும் உண்டு.

 

21. “எனக்கொரு கேள் பிரண்ட் வேணுமடா” என காலம் காலமாகப் பாட்டுப் பாடியும் யாரும் மாட்டாத அப்பாவிகள் என்ன செய்வார்கள் ? அவர்களுக்கு ஆறுதல் சொல்ல ஒரு நாள் இருக்கிறது. ஏப்பிரல் 14. அந்த நாளின் பெயர் பிளாக் டே, கருப்பு தினம். தென் கொரியாவில் இந்த விழா பிரபலம். அதாவது பிப்பிரவரி 14ம் நாள் எந்த பரிசும் கிடைக்கவில்லையே, எந்தக் காதலியும் கரம் கோர்க்கவில்லையே என புலம்பும் சிங்கிள் பார்ட்டீஸ் இரண்டு மாசம் கண்ணைக் கசக்கியபின் கொண்டாடும் விழா. இந்த விழாவில் கொரியன் நூடுல்ஸ் சாப்பிடுவது ஒரு முக்கிய அம்சம். அதற்கு ஊற்றப்படும் சாஸ் கருப்பு கலரில் இருக்க வேண்டும் என்பது கட்டாயம் !

 

22. கிரீட்டிங் கார்ட் இல்லாமல் வேலண்டைன்ஸ் டே இல்லை எனும் நிலை தான் அமெரிக்காவில். வேலண்டைன் வாழ்த்து அட்டைகள் தான் பல வாழ்த்து அட்டை கம்பெனிகளையே வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. அமெரிக்காவில் ஒவ்வோர் ஆண்டும் விற்பனையாகும் வாழ்த்து அட்டைகளில் 25% வாழ்த்து அட்டைகள் வேலண்டைன் வாழ்த்து அட்டைகள் தான் எனப்து புள்ளி விவரக் கணக்கு.

 

23. செல்போனில் தனது காதலை வீடியோவாய் பதிவு செய்து உள்ளம் கவர்ந்த கள்வனுக்கோ கள்ளிக்கோ செல்போனிலேயே அனுப்பி விடுவது லேட்டஸ்ட் காதல் சொல்லும் முறை. சிலர் அதை அப்படியே அலேக்காக யூ டியூப் போன்ற இணைய தளங்களிலேயே பதிவு செய்து உலகுக்குத் தங்கள் காதலை உரக்கச் சொல்கிறார்கள்.

 

24. வேலண்டைன்ஸ் டே ஒரு நல்ல வியாபாரக் களம் என்பதைக் கண்டு முதலில் வாழ்த்து அட்டை உருவாக்கிய பெருமை எஸ்தர் ஏ ஹௌலாண்டா மவுண்ட் ஹோலியோக் –ஐச் சாரும். 1840ல் அமெரிக்காவில் இவர் வாழ்த்து அட்டைகள் உருவாக்கி விற்பனை செய்தார்.

 

25. ஜப்பானின் வேலண்டைன்ஸ் டே என்றாலே நினைவுக்கு வருவது சாக்லேட்! ஜப்பான் கடைகளெல்லாம் வேலண்டைன்ஸ் டேக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பாகவே சாக்லேட்களால் குவியும். வித விதமான வகைகளில், பாக்கெட்களில் விற்பனையாகும் சாக்லேட்களை வாங்குவது பெண்கள் தான். ஜப்பானில் பெண்கள் தங்கள் மனதுக்குப் பிடித்த எல்லா ஆண்களுக்கும் சாக்லேட் கொடுப்பார்கள். அதனால் யாராவது சாக்லேட் தந்தால் உடனே காதல் என்று டூயட் பாட முடியாது ! காதலர்களுக்குக் கொடுக்க பெண்கள் கடைகளிலிருந்து சாக்லேட் வாங்க மாட்டார்களாம். ஸ்பெஷலாக வீட்டிலேயே எக்ஸ்குளூசிவ் ஆக தயாராக்கி கையோடு ஊட்டியும் விடுவார்களாம்.

 

26. கொரியாவில் பிப்பிரவரி 14 தான் காதலர் தினம். காதலியர் தங்கள் காதலர்களுக்குச் சாக்லேட் பரிசளிப்பது தான் இந்த நாளின் விசேஷம். ஆனால் காதலர்கள் அந்த நாளில் காதலியருக்கு சாக்லேட் கொடுக்க மாட்டார்கள். என்ன கொடுமை இது என புலம்பிய கொரியா மார்ச் 14ம் தியதியை வயிட் டே, வெள்ளை தினம், என கொண்டாடுகிறது. இந்த நாளில் காதலர்கள் காதலியருக்கு சாக்லேட்களை வட்டியும் முதலுமாக வாங்கிக் கொடுக்கவேண்டும் !

 

27. காதலர் தினத்தின் இன்னொரு ஸ்பெஷல் டின்னர். மேலை நாடுகளைப் பொறுத்த வரையில் மங்கலான மெழுகு வர்த்தி வெளிச்சத்தில் காதல் வழியும் கண்களுடன் டின்னர் சாப்பிடுவது இந்த நாளின் முக்கிய அம்சம். கடற்கரை உணவகங்கள், கப்பல் ரெஸ்டாரண்ட்கள், மொட்டை மாடி ரெஸ்டாரண்ட்கள் போன்ற ஸ்பெஷல் இடங்கள் பல வாரங்களுக்கு முன்பே புக் ஆகி விடுமாம். வேலண்டைன் சாப்பாட்டின் போது ஷான்பைன் அருந்தாமல், வைன் அருந்தவேண்டும் என்பது எழுதப்படாத வழக்கம்.

 

28. அமெரிக்க ஆண்களில் 74 சதவீதம் பேர் வேலண்டைன்ஸ் டே கொண்டாடுகிறார்கள். கிறிஸ்மஸ், ஈஸ்டர், ஹாலோவீன் இந்த மூன்று நாட்களுக்கு அடுத்தபடியாக சாக்லேட் அதிகம் விற்பனையாவது வேலண்டைன்ஸ் டேயில் தான். சுமார் 1105 மில்லியன் டாலர்கள் பணத்தை சாக்லேட் வாங்கியே செலவழிக்கிறார்களாம்.

 

29. அமெரிக்க பெண்கள் தங்களுக்கு பாய் பிரண்ட் இல்லை என்பதை கொஞ்சம் கௌரவக் கொறச்சலாகப் பார்க்கிறார்கள். அதனால் பாய் பிரண்ட் இல்லாத பார்ட்டிகள் தங்களுக்குத் தாங்களே பூக்களை அனுப்பிக் கொள்கிறார்கள். அப்படியே வீட்டுக்கு டெலிவரி வரும் போது, ஓ.. மை ஸ்வீட் ஹார்ட் என பில்டப் கொடுத்து வாங்குகிறார்கள். அமெரிக்காவில் சுமார் 15 சதவீதம் பெண்களுக்கு இப்படித் தான் வேலண்டைன் பூக்கள் வருகின்றனவாம் !

 

30. ரிச்சர்ட் காட்பரியை வேலண்டைன்ஸ் தினத்தில் ஒரு முறை நினைவில் கொள்ளுங்கள். அவர்தான் 1800ல் முதன் முதலாக வேலண்டைன் சாக்லேட் பாக்ஸை அறிமுகப்படுத்தி வைத்தவர். அவர் ஆரம்பித்த பழக்கம் உலகெங்கும் பரவி விட்டது. அமெரிக்காவில் மட்டும் ஒவ்வோர் வேலண்டைன் தினத்திலும் செலவாகும் சாக்லேட் பாக்ஸ்களின் எண்ணிக்கை 3.6 கோடி !

 

31. ஓர்லான்ஸ் பகுதியின் மன்னனான சார்லஸ் 1415ல் லண்டன் சிறையில் கிடந்தார். சிறைத் தனிமையில் தனது மனைவியை ரொம்பவே மிஸ் பண்ணினார் மனுஷன். அதனால் ஒரு கவிதை எழுதி வேலண்டைன் தினத்தன்று மனைவிக்கு அனுப்பினார். அது தான் நமக்குத் தெரிந்த மிகப் பழமையான வேலண்டைன் காதல் கவிதை. அவர் போட்டது தான் இன்று மானே, தேனே பொன்மானே என எல்லோரும் எழுதித் தள்ளும் வேலண்டைன் கவிதைகளின் பிள்ளையார் சுழி.

 

32. வேலண்டைன்ஸ் தினத்தை விடுமுறை நாளாக்கி காதலர்களின் மனதில் லவ் வார்த்தவர் இங்கிலாந்து மன்னன் எட்டாம் ஹென்றி. 1537ல் இவர் வேலண்டைன் தினத்தை அதிகாரபூர்வ விடுமுறை நாளாக்கினார். எட்டாம் ஹென்றி மன்னன் காதல் விளையாட்டுகளில் அதீத ஆர்வம் உடையவர் என்பது தான் அதன் சீக்ரட் காரணம்.

 

33. காதலர் தினத்தில் காதலி சிணுங்குவாளோ இல்லையோ எல்லா செல்போன்களும் சிணுங்கோ சிணுங்கென்று சிணுங்கும். நல்ல வேளை கிரகாம்பெல் போனைக் கண்டு பிடித்தார். கிரகாம்பெல், காதலர் தினம், தொலைபேசி இந்த மூன்றுக்கும் ஒரு தொடர்பு உண்டு. தொலைபேசியின் காப்புரிமைக்காக 1876ம் ஆண்டு அவர் விண்ணப்பித்தார். அந்த நாள் பிப்பிரவரி 14 ! அட என்ன ஒரு தீர்க்கத் தரிசி அவர் !

 

34. காதலர் தின பரிசை யாரெல்லாம் வாங்குவார்கள் ? நீங்கள் சிந்தித்துப் பார்க்க முடியாத இடத்தில் இருப்பது செல்லப் பிராணிகள். மேலை நாடுகளில் 3 % செல்லப் பிராணிகள் தங்கள் எஜமானர்களிடமிருந்து காதலர் தின பரிசுகளைப் பெற்றுக் கொள்கிறதாம் !

 

35. வாழ்த்து அட்டைகள் தயாரிப்பதில் மிக முக்கியமான ஒரு நிறுவனம் ஹால்மார்க். ஹால்மார்க் நிறுவனத்தில் 1330 வகையான வேலண்டைன் ஸ்பெஷல் கார்ட் வகைகள் இருக்கின்றன. காமத்துப் பால் உட்பட 1330 குறள்கள் எழுதியவர் நமது வள்ளுவர். ஆனலும் இந்த 1330 க்கும் திருக்குறளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது கவனிக்க வேண்டிய விஷயம்.

 

36. ஐ லவ் யூ – என்றால் மனசுக்குள் மழையடிக்கும். ஆனால் ஐ லவ் யூ என்றால் மனதுக்குள் திகிலடித்த ஒரு நிகழ்வும் உண்டு. ஐ லவ் யூ எனும் ஒரு வைரஸ் 2000 ஆண்டில் முப்பது இலட்சம் கம்ப்யூட்டர்களுக்கு மேல் பாதித்து செயலிழக்க வைத்து விட்டது. ஐ லவ் யூ என்று தலைப்பிட்டு எந்த மெயில் வந்தாலும் மக்கள் அலறோ அலறென்று அலறினார்கள் ! கம்ப்யூட்டர் வைரஸ் வரலாற்றில் இந்த ஐ லவ் யூ வைரஸ் நிரந்தர இடத்தையும் பிடித்து விட்டது.

 

37. காதல் என்றாலே சட்டென மனதுக்குள் வரும் சிம்பல் இதயம். அதற்குப் பல காரணங்கள் உண்டு. இதயத்தில் ஆன்மா குடி கொண்டிருப்பதாக பண்டைக்காலத்தில் மக்கள் நம்பினார்கள். பலர் இதயத்தில் தான் அறிவும், உணர்ச்சியும் இருப்பதாக நம்பினார்கள். இதயத்தில் தான் உண்மை குடிகொண்டிருப்பதாக நம்பியவர்களும் உண்டு. சிவப்பு நிற இதயம் காதலின் இருப்பிடம் என கிரேக்கர்கள் நம்பினார்கள். அதனால் தான் மன்மத அம்பு இதயத்தில் பாய்ந்தால் தன்னிலை இழந்து காதல் வசப்பட்டு விடுவதாக பண்டைக்கால மக்கள் நம்பினார்கள். ஹார்ட் மேட்டர் இது தான்.

 

<p></p><p> </p>

படித்த இடத்தில் சுட்டது....

Edited by யாயினி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று திருவள்ளுவர் தினம்!

 

திருவள்ளுவர்

 

Thiruvalluvar

‘அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு’ என்று தொடங்கி, ஈரடி குறளில் உலகத் தத்துவங்கள் அனைத்தையும் ‘திருக்குறள்’ என்னும் உன்னதப் படைப்பில் மக்களுக்கு எடுத்துச் சொன்னவர், திருவள்ளுவர். உலகளாவிய தத்துவங்களைக் கொண்ட திருக்குறளைப் படைத்து, உலக இலக்கிய அரங்கில் தமிழ்மொழிக்கென்று ஓர் உயர்ந்த இடத்தை நிலைப்பெற செய்தவர். இவர் உலக மக்களால், ‘தெய்வப்புலவர்’, ‘பொய்யில் புலவர்’, ‘நாயனார்’, ‘தேவர்’, ‘செந்நாப்போதர்’, ‘பெருநாவலர்’, ‘பொய்யாமொழிப் புலவர்’ என்றெல்லாம் பல பெயர்களில் அழைக்கப்படுகிறார். அவர் எழுதிய திருக்குறள், வாழ்வியலின் எல்லா அங்கங்களையும் இனம், மொழி, பாலின பேதங்களின்றி காலம் கடந்தும் பொருந்துவது போல் கூறி உள்ளதால், திருக்குறளை சிறப்பிக்கும் விதமாக ‘உலகப் பொது மறை’, ‘முப்பால்’, ‘ஈரடி நூல்’, ‘உத்தரவேதம்’, ‘தெய்வநூல்’, ‘பொதுமறை’, ‘பொய்யாமொழி’, ‘வாயுறை வாழ்த்து’, ‘தமிழ் மறை’, ‘திருவள்ளுவம்’ போன்ற பல பெயர்களால் சிறப்பித்து அழைக்கின்றனர். அத்தகைய சிறப்புமிக்கத் திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு மற்றும் உலக இலக்கிய அரங்கில் அவர் படைத்த சாதனைகள் பற்றியறிய மேலும் தொடர்ந்து படிக்கவும்.

வாழ்ந்த காலம்: 2 ஆம் நூறாண்டு முதல் 8 நூற்றாண்டு வரையிலான இடைப்பட்ட காலம்

பிறப்பிடம்: மயிலாப்பூர், தமிழ் நாடு மாநிலம், இந்திய 

பணி: புலவர்

நாட்டுரிமை: இந்தியன் 

 

பிறப்பு

திருவள்ளுவர் அவர்களின் பிறப்பு மற்றும் பிறப்பிடத்திற்கான சரியான சான்றுகள் இல்லை என்று தான் கூறவேண்டும். ஏனென்றால், அவர் கி.மு.31 ஆம் ஆண்டு பிறந்திருக்கிறார் என்றும், மதுரையில் பிறந்ததாகவும், சென்னையில் உள்ள மயிலாப்பூரில் பிறந்ததாகவும் சிலரும் கூறுகின்றனர். மேலும், அவர் ஆதி – பகவன் என்ற பெற்றோருக்குப் பிறந்ததாகவும் சிலர் சொல்கின்றனர். ஆனால், இதுவரை இவை எதுவுமே உறுதிப்படவில்லை.

மேலும் சிலர், அவர் ஒரு கிறித்துவர் என்றும், சமண மதத்தவர் என்றும் பவுத்தர் என்றெல்லாம் கூட பொய்யானத் தகவல்களைப் பரிமாறுகின்றனர்.

வள்ளுவரின் திருக்குறள் 

திருக்குறளை எழுதி, உலக இலக்கிய அரங்கில், தமிழர்கள் பெருமிதமாக நெஞ்சம் நிமிர நிற்கும்படி செய்த உன்னதப் படைப்பாளி, திருவள்ளுவர். தன் அறிவாலும் மற்றும் சிந்தனையாலும் அவர் எழுதிய திருக்குறள், உலகப்புகழ் பெற்ற இலக்கியமாக மாறி, தமிழர்களுக்குப் பெருமையைத் தேடித் தந்திருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. இந்நூல், சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கிறது. மேலும், வாழ்வியலின் எல்லா அங்கங்களையும் இனம், மொழி, பாலின பேதங்களின்றி காலம் கடந்தும் பொருந்துவது போல் கூறி உள்ளதால், திருக்குறளை சிறப்பிக்கும் விதமாக ‘உலகப் பொது மறை’, ‘முப்பால்’, ‘ஈரடி நூல்’, ‘உத்தரவேதம்’, ‘தெய்வநூல்’, ‘பொதுமறை’, ‘பொய்யாமொழி’, ‘வாயுறை வாழ்த்து’, ‘தமிழ் மறை’, ‘திருவள்ளுவம்’ போன்ற பல பெயர்களால் சிறப்பித்து அழைக்ககின்றனர்.

ஈரடிகளில் உலகத் தத்துவங்களை சொன்னதால், இது ‘ஈரடி நூல்’ என்றும், அறம், பொருள், இன்பம் அல்லது காமம் என்னும் முப்பெரும் பிரிவுகளைக் கொண்டதால், ‘முப்பால்’ என்றும் அழைக்கப்படும் இந்நூல், மனிதர்கள் தம் அகவாழ்விலும் சுமுகமாக கூடி வாழவும், புற வாழ்விலும் இன்பமுடனும், இசைவுடனும், நலமுடனும் வாழவும் தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது.

இந்நூல் அறத்துப்பால், பொருட்பால் மற்றும் காமத்துப்பால் (இன்பத்துப்பால்) என்னும் மூன்று பிரிவுகளைக் கொண்டது.

  • அறத்துப்பால் – முதல் பிரிவான ‘அறத்துப்பாலில்’ மனசாட்சி மற்றும் மரியாதை, நல்ல நடத்தை போன்றவற்றை பாயிரவியல், இல்லறவியல், துறவறவியல், ஊழியல் என்ற உட்பிரிவுகளில் தெளிவாக எடுத்துரைக்கிறார்.
  • பொருட்பால் – இரண்டாவது பிரிவான ‘பொருட்பாலில்’ உலக விவகாரங்களில் எவ்வாறு சரியான முறையில் நடந்து கொள்வது என்பதை அரசியல், அமைச்சியல், அங்கவியல், ஒழிபியல் போன்ற உட்பிரிவுகளில் விளக்கியுள்ளார்.
  • இன்பத்துப்பால் – மூன்றாவது பிரிவான ‘இன்பத்துப்பால்’ அல்லது ‘காமத்துப்பாலில், ஆண்கள் மற்றும் பெண்களுக்கிடையேயான காதல் மற்றும் இன்பத்தைத் தெளிவாக களவியல், கற்பியல் என்ற தலைப்புகளில் எடுத்துரைக்கிறார்.

முதல் பிரிவில் 38 அத்தியாயங்களும், இரண்டாவது பிரிவில் 70 அத்தியாயங்களும் மற்றும் மூன்றாவது பிரிவில் 25 அத்தியாயங்களும் உள்ளன. ஒவ்வொரு அத்தியாயத்தில் பத்து ஈரடி குறள்கள் என மொத்தம் 1330 குறள்கள் உள்ளன.

திருக்குறளில் உள்ள அனைத்து கருத்துகளும், உலகில் உள்ள அனைத்து திருக்குறள் சமயங்களுக்கும் பொருந்துவதாக உள்ளது. இந்நூல், ஏறக்குறைய 2000 ஆண்டு பழமையானது என்று கணிக்கப்பட்டாலும், இதை இயற்றப்பட்ட காலம் இன்னும் சரியாக வரையறுக்கப்படவில்லை.

அவர் இயற்றிய வேறு நூல்கள் 

திருக்குறளைத் தவிர, திருவள்ளுவர் மருத்துவம் பற்றிய இரு நூல்களான ‘ஞான வெட்டியான்’ மற்றும் ‘பஞ்ச ரத்னம்’ ஆகிய நூல்களை இயற்றியுள்ளதாகப் பலரும் தெரிவிக்கின்றனர்.

நினைவுச் சின்னங்கள்

இந்தியாவின் தென் கோடியில் அமைந்துள்ள முக்கடல் சங்கமிக்கும் இடமான கன்னியாகுமரியில், அவரின் புகழைப் பறைசாற்றும் விதமாக அவருக்கென்று ஒரு பிரம்மாண்டமான சிலை ஒன்று தமிழக அரசால் நிறுவப்பட்டுள்ளது. 133 அடி உயரமுள்ள இச்சிலை, 30 அடி உயரமுள்ள பாறை மீது அமைந்துள்ளது. இதனை அமைக்க 10 ஆண்டுகள் தேவைப்பட்டது என இதை வடிவமைத்த சிற்பி கணேசன் கூறியுள்ளார். மேலும், சிலையின் உட்புறச் சுவற்றில் ஒவ்வொரு அதிகாரத்திலிருந்து ஒரு குறள் வீதம் 133 குறட்பாக்கள் தமிழிலும், ஆங்கிலத்திலும் பொறிக்கப்பட்டுள்ளன.

அவர் நினைவாக, சென்னையில் ‘வள்ளுவர் கோட்டம்’ ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அவர் இயற்றிய திருக்குறளின் 1330 குறள்களும், இங்குள்ள குரல் மண்டபத்தில் பொறிக்கப்பட்டுள்ளது.

லண்டனிலுள்ள ரஸ்ஸல் ஸ்கொயரில் இருக்கும் ‘ஸ்கூல் ஆஃப் ஓரியண்டல் மற்றும் ஆப்ரிக்கன் ஸ்டடீஸ்’ என்னும் கல்வி நிறுவனத்தில், அவரது திருவுருவச்சிலை நிறுவப்பட்டுள்ளது.

திருவள்ளுவர் மறைந்தாலும், அவர் படைத்த திருக்குறள் என்னும் உன்னத நூல், எக்கால மனிதர்களுக்கு ஓர் வழிகாட்டியாக இருந்து தமிழர்களின் புகழையும் உலகளவில் ஓங்கச் செய்கிறது.

 
 
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருவள்ளுவர் சிலை  கன்யாகுமாரியில் அமைந்துள்ளதோடு 133 அடிகளைக் கொண்டது.

Image may contain: people standing, sky and outdoor
Image may contain: sky, cloud, ocean, outdoor, water and nature
  • Like 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உற‌வே ஏன் சீமான் மீது இம்புட்டு வ‌ன்ம‌ம்..........2009 முள்ளிவாய்க்கால் இன‌ அழிப்புக்கு துணை போனாரா அல்ல‌து த‌லைவ‌ருக்கு எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கு வைக்கோ ராம‌தாஸ் திருமாள‌வ‌ன் போன்ற‌வ‌ர்க‌ள் போல் துரோக‌ம் செய்தாரா...............எல்லாம் அழிந்த‌ நிலையில் த‌மிழீழ‌ம் என்ற‌ பெய‌ரை உயிர்ப்போடு வைத்து இருப்ப‌து 30ல‌ச்ச‌த்துக்கு மேல் ப‌ட்ட‌  எம் தொப்பில் கொடி உற‌வுக‌ள்...........பிர‌பாக‌ர‌ன் என்றாலே தீவிர‌வாதி என்று இருந்த‌ த‌மிழ் நாட்டில் பிர‌பாக‌ர‌ன் எம் இன‌த்தின் த‌லைவ‌ர் என்று கோடான‌ கோடி ம‌க்க‌ள் கேட்டுக்கும் ப‌டி சொன்ன‌துக்கா சீமான் மீது இம்ம‌ட்டு வெறுப்பா சீ சீ 2009க்கு முத‌ல் ஈழ‌ம் ஈழ‌ம் என்று க‌த்தின‌ கூட்ட‌ம் இப்ப‌ சிங்க‌ள‌வ‌னுக்கு விள‌ம்ப‌ர‌ம் செய்துக‌ள் இதை விட‌ கேவ‌ல‌ம் என்ன‌ இருக்கு...............அந்த‌ க‌ரும‌த்தை நான் தொட்டு என்ர‌ ந‌ட்ப்பு வ‌ட்டார‌ம் தொட்டு ஒருத‌ரும் கேடு கெட்ட‌ செய‌ல் செய்த‌து இல்லை................சீமான் மீது விம‌ர்ச‌ன‌ம் வைக்க‌லாம் ஆனால் அவ‌ர் கொண்ட‌ கொள்கையோடு உறுதியாய் நிக்கிறார் த‌னித்து நிக்கிறார்...........சீமான் காசு மீது பேர் ஆசை பிடித்த‌வ‌ர் என்றால் இந்த‌ தேர்த‌லில் ஆதிமுக்கா கூட‌ கூட்ட‌னி வைச்சு 500 கோடியும் 8 தொகுதியும் ஜா ப‌ழ‌னிசாமி கொடுத்து இருப்பார்................ த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் வாதிக‌ளை பார்த்தால் கூடுத‌லான‌ ஆட்க‌ள்  பெண்க‌ளுட‌ல் க‌ள்ள‌ உற‌வு வைத்து இருந்த‌வை அந்த‌ வ‌கையில் அண்ண‌ன் சீமான் வாழ்த்துக்க‌ள் ப‌ட‌ம் எடுத்த‌ போது விஜ‌ய‌ல‌ட்சுமி கூட‌ காத‌லோ அல்ல‌து ஏதோ ஒரு உற‌வு இருந்து இருக்கு.............நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே...........ஆனால் அண்ண‌ன் சீமான் அவ‌ரின் திரும‌ண‌த்தை வெளிப்ப‌டையாய் தான் செய்தார் அப்போது ஒரு பிர‌ச்ச‌னையும் வ‌ர‌ வில்லை அர‌சிய‌லில் வ‌ள‌ந்து வ‌ரும் போது அந்த‌ பெண்ண‌ திராவிட‌ கும்ப‌ல் ஊட‌க‌ம் முன்னாள் பேச‌ விடுவ‌து ம‌னித‌ குல‌த்துக்கு அழ‌கில்லை................. சீமான் த‌வ‌று செய்தால் அதை நான் ப‌ல‌ இட‌த்தில் சுட்டி காட்டி இருக்கிறேன்.............எங்க‌ட‌ த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ர் எப்ப‌டி ப‌ட்ட‌வ‌ர் என்று எம‌க்கு ந‌ன்றாக‌வே தெரியுன் அண்ண‌ன் சீமான் ஒரு ப‌டி மேல‌ போய் அள‌வுக்கு அதிக‌மாய் த‌லைவ‌ரை புக‌ழ் பாட‌ தொட‌ங்கி விட்டார்.............ஆர‌ம்ப‌ கால‌த்தில் அதிக‌ம் பேசினார் அப்போது எம‌க்கே தெரிந்த‌து அது உண்மை இல்லை என்று............இப்போது சீமானின் பேச்சில் ப‌ல‌ மாற்ற‌ம் தெரியுது.................நிஜ‌த்தில் ந‌ல்ல‌வ‌ர் அன்பான‌வ‌ர் ஆனால் அவ‌ரை சுற்றி ப‌ல‌ துரோகிய‌ல் இருக்கின‌ம் அவ‌ருட‌ன் க‌தைப்ப‌தை ரெக்கோட் ப‌ண்ணி  விஜேப்பியின் ஆட்க‌ளுக்கு போட்டு காட்டின‌து அப்ப‌டி க‌ட்சிக்குள் இருந்த‌வையே  ப‌ல‌ துரோக‌ங்க‌ள் செய்த‌வை உற‌வே 2009க்கு முத‌ல் த‌மிழீழ‌த்தில் ஒரு மாத்தையா ஒரு க‌ருணா.............த‌மிழ் நாட்டில் ப‌ல‌ நூறு க‌ருணா ப‌ல‌ நூறு மாத்தையா இதை எல்லாம் தாண்டி க‌ன‌த்த‌ வ‌லியோடு தான் க‌ட்சியை கொண்டு ந‌ட‌த்துகிறார் த‌ன‌து ம‌னைவிக்கு இந்த‌ தேர்த‌லில் சீட் த‌ர‌வில்லை என்று க‌ட்சியை விட்டு போன‌ ந‌ப‌ரும் இருக்கின‌ம்............... உங்க‌ட‌ பாதுகாப்புக்கு சொல்லுறேன் உற‌வே த‌மிழ் நாட்டுக்கு போகும் நிலை வ‌ந்தால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் ப‌ய‌ணிக்கும் இள‌ம் பெடிய‌ங்க‌ள் கூட‌ அண்ண‌ன் சீமானை ப‌ற்றி யாழில் எழுதுவ‌து போல் நேரில் த‌ப்பா க‌தைச்சு போடாதைங்கோ.............நீயார‌ட‌ எங்க‌ள் அண்ண‌ன‌ விம‌ர்சிக்க‌ என்று ச‌ண்டைக்கும் வ‌ந்து விடுவின‌ம்.............இப்ப‌டி ப‌ல‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் இருக்கு சொல்ல‌.............இது யாழ்க‌ள் ஆனால் இதே முக‌ நூல் என்றால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ஜ‌ரிம் சீமான சீண்டி பாப்ப‌வ‌ர்க‌ளுக்கு அவேன்ட‌ பானியில் ப‌தில் அளிப்பார்க‌ள்...............6வ‌ருட‌த்துக்கு முத‌ல் என‌க்கும் திமுக்கா சொம்புக்கும் வாத‌ம் ஏற்ப‌ட்டு க‌ட‌சியில் எப்ப‌டி போய் முடிந்த‌து என்று என‌க்கு ம‌ட்டும் தான் தெரியும்............யாழில் இருக்கும் மூத்த‌வையின் சொல்லை கேட்டு யாழில் நான் இப்ப‌ யார் கூட‌வும் முர‌ன் ப‌டுவ‌தில்லை..........இது தான் கால‌ நீர் ஓட்ட‌த்தில் பெரிய‌வ‌ர்க‌ள் சொல்ல‌  என்னை நானே மாற்றி கொண்டேன்.............. வெற்றியோ தோல்வியே த‌னித்து போட்டி யார் கூட‌வும் கூட்ட‌னி இல்லை அதுக்காக‌ தான் பெரும்பாலான‌ த‌மிழ‌க‌ இளைஞ்ர்க‌ள் வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானை தொட‌ர்ந்து ஆத‌ரிக்கின‌ம்🙏🥰.................
    • மக்கள் ஏமாற்றப்படுக்கின்றார்கள் தான் ஆனால் நூறுவீதம் இல்லை.. அதே நேரம் தமிழ் அரசியல்வாதிகளும் சரியானவர்கள் இல்லை. இருப்பினும் புலம்பெயர்ந்த பலரும் அங்கிருப்பவர்களும் தமிழர் உரிமைகள் பற்றி விவாதிக்கொண்டிருக்கும் வேளையில்...... தமிழர் பகுதிகளில் ஆடம்பர உல்லாச விடுதிகளும், புலம்பெயர் மக்களின் கோடிக்கணக்கான செலவுடன் மாட மாளிகைகளும் திறந்த வெளி  அட்டகாச நிகழ்வுகளும் புலம்பெயர் மக்களின் கோடை கால கொண்டாட்ட சுற்றுலாக்களும்..... தமிழர்களுக்கு பிரச்சனை ஏதுமில்லை என்பதை சொல்லி நிற்கின்றது.   போர் மூலம் வந்த  வறுமையால் வாடுபவர்களை இனப்பிரச்சனை அட்டவணைக்குள் சேர்க்க உடன்படுமா அந்த சிங்கள இனவாத அரசுகள்? புலம்பெயர் தமிழர்களே ஊரில் வீடுகட்டிக்கொண்டு  பிற்காலத்தில்  நிம்மதியாக வாழலாம் எனும் போது.....?!  
    • சீமானுக்காக எதையும் தாங்குவார்கள் புலன்பெயர்ந்த ஈழதமிழர்கள். தேர்தலில் சீமான் வெற்றிபெறவில்லை என்றால் மெசின் மோசடி , சீமான் ஆங்கில மோகத்தால் மகனுக்கு தமிழ்நாட்டிலேயே ஆங்கில வழிக் கல்வி கற்ப்பிப்பது தமிழ் பள்ளிகள் சரியில்லை. தமிழ் தமிழ் என்று முழங்குவது அவரது அரசியல் பிழைப்பு.  இவர்  தமிழ்நாட்டு முதல் அமைச்சராக வந்தால் அரசுபாடசாலைகளிலும் தமிழை தூக்கி எறிந்துவிட்டு ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிப்பார் தமிழ் செய்த அதிஷ்டம் அவர் முதல் அமைச்சராகும் வாய்ப்பே  இல்லை
    • அங்கு ஒரு வீட்டில் கஞ்சா புகைத்திருக்கின்றனர். பின்னர், முதலாவதாக, உடனிருந்து புகைத்த நண்பரே குத்திக் கொல்லப்பட்டிருக்கின்றார். குற்றவாளி என்று கைது செய்யப்பட்டவர் கஞ்சாவில் ஒரு வலுவான போதைப் பொருளை தன் நண்பர் கலந்து விட்டதாக இப்பொழுது சொல்லுகின்றார். எதைக் கலந்தாலும், எதைப் புகைத்தாலும், ஓட ஓட சக மனிதர்களை கத்தியால் குத்தும் அளவிற்கு நிலை தடுமாறுமா.....😢 Following his arrest in the frenzied attack, the suspect, Christian Soto, waived his Miranda rights to remain silent and told investigators he was high on marijuana he claimed was given to him by one of the slaying victims that he believed was laced with a strong narcotic, Winnebago County State's Attorney J. Hanley said at a news conference Thursday. https://abcnews.go.com/US/deadly-rockford-illinois-stabbing-spree/story?id=108605783    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.