Jump to content

அழிந்து வரும் மொழிகளில் தமிழுக்கு எட்டாவது இடம்


Recommended Posts

உலகின் தற்போதைய மக்கள் தொகை 724 கோடி. உலகின் மக்கள் தொகை வேகமாகப் பெருகிவருகிறது. ஆனால், உலக மக்களின் பல மொழிகள் அதைவிட வேகமாக அருகி மறைந்து வருகின்றன. சொந்த மக்களால் கைவிடப்படுதல், ஆதிக்க மொழிகளால் கழுத்து நெறிக்கப்படுதல், பயன்படுத்தாமல் ஒதுக்கிவைத்தல், தங்களது தாய்மொழியை மதிப்பு குறைந்ததாக நினைத்தல் எனும் முதன்மையான நான்கு காரணங்களால் மொழிகள் மரணமடைகின்றன.

 

உலக அளவில் இப்போதைக்கு 7,105 மொழிகளும், அதில் இந்தியாவில் மட்டும் சுமார் 880 மொழிகளும் பயன்பாட்டில் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உலக அளவில் 1,000 க்கும் குறைவான மக்கள் தொகையினரால் சுமார் 2,000 மொழிகள் பேசப்படுவதாகவும், இந்திய அளவில் கடந்த 50 ஆண்டுகளில் 220 மொழிகள் அழிந்துவிட்டதாகவும் மேலும் ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. உலகின் அனைத்து மொழிகளும் பாதுகாக்கப்படவேண்டும் என்பதை ஐக்கிய நாடுகள் அவை உள்ளிட்ட உலகளாவிய மொழி நிறுவனங்கள் வலியுறுத்துகின்றன.

 

ஆண்டுதோறும் பெப்ரவரி 21 ஆம்  திகதி உலக தாய்மொழி தினமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. உலக அளவில் இன்றைக்குப் பயன்பாட்டில் இருக்கும் 7,105 மொழிகளில் ஆங்கிலம், சீனம், ரஷ்யன், ஸ்பெயின், இந்தி உள்ளிட்ட வெறும் 13 மொழிகள்தான் 10 கோடிக்கும் மேற்பட்ட மக்களால் பயன்படுத்தப்படுகிற மொழிகளாக இருக்கின்றன. இந்த 13 மொழிகளில் நமது தமிழ்மொழியும் ஒன்றாக இருக்க வாய்ப்பில்லை.

 

தமிழ்நாட்டிலும், இந்தியாவிலும், பிறநாடுகளிலுமாக உலக அளவில் தமிழர்கள் 10 கோடி பேர் இருக்கலாம். எனினும், தமிழர்களிடையே தமிழ்மொழி எந்த அளவுக்குப் பேச்சு மொழியாகவும், பயன்பாட்டு மொழியாகவும் இருக்கிறது எனும் ஒரு மிகப்பெரிய கேள்வி நம்முன் எழுகிறது. தமிழர்களின் தாய்மொழியான தமிழ் வெறும் வாய்மொழியாக இருக்கிறதே தவிர, அது அவர்களின் வாழ்க்கை மொழியாக இல்லை. உலக அளவில் இன்னும் 100 ஆண்டுகளில் அழிந்துவிடும் வாய்ப்புள்ள 25 மொழிகளில் தமிழ்மொழி 8 ஆம் இடத்தில் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சவையின் யுனெஸ்கோ 10 ஆண்டுகளுக்கு முன்பே எச்சரிக்கை செய்திருக்கிறது.

 

பயன்படுத்தப்படாத நிலை, வேகவேகமாக வேற்றுமொழிச் சொற்கள் கலந்துவிடுகிற கலப்படநிலை போன்ற அளவுகோள்களின் அடிப்படையில் கணக்கிடப்பட்டு தமிழ்மொழிக்கு இந்த 8 ஆம் இடம் வழங்கப்பட்டிருக்கிறது. "தமிழை யாராலும் அழிக்க முடியாது. அது முன்தோன்றிய மூத்தமொழி, உயர்தனிச் செம்மொழி, இலக்கிய வளம் செறிந்த மொழி, இலக்கணங்களால் ஆனமொழி' என்றெல்லாம் சில அறிஞர்கள் பேசுவதுண்டு. அத்தகையப் பேச்சு அவர்களது மொழிப் பற்றின் விளைவாக எழுகின்ற ஒரு நம்பிக்கைதானேயன்றி சமூக அறிவியல் அல்ல. பயன்படுத்தப்படாத எதுவொன்றும் படிப்படியாக மறைந்து அழிந்துவிடும் என்பது மொழிகளுக்கும் பொருந்தும்.

 

தாய்மொழியாக இருந்தும்கூட இன்றைய நிலையில் தமிழ்நாட்டில், தமிழர்களாலேயே தள்ளி நிறுத்தப்படுகிற ஒரு மொழியாகத்தான் தமிழ் இருக்கிறது. தமிழின் பெருமைகள் மேடைகளில் முழங்கப்பட்ட அளவுக்கு அதன் வளர்ச்சிக்கான திட்டங்கள் மேற்கொள்ளப்படவில்லை, நிரந்தரமாக அதைப் பாதுகாத்து நிலைபெறச் செய்வதற்கான வழிமுறைகளும் காணப்படவில்லை. "எங்கும் தமிழ்' "எதிலும் தமிழ்' என்பதெல்லாம் அழகான முழக்கங்களாக மட்டுமே இன்றைக்கு நம்மிடம் இருக்கின்றன. வாழவைக்காமல் "வாழ்க' "வாழ்க' என்று மொழியிடம் விண்ணப்பம் செய்பவர்களாக நாம் இருக்கிறோம்.

 

ஒரு காலத்தில், இரண்டு தமிழர்களுக்கிடையே நிகழும் உரையாடல்களில் ஆங்கிலத்தைக் கலப்பது என்பது ஒரு கலாசாரமாகத் தொடங்கியது. இப்போது அது கட்டாயமாகிவிட்டது. "தமிழ் என்பது நமது மொழிதான். அதன் அருமை பெருமையெல்லாம் சரிதான். ஆனால், அது இன்றைய நமது வாழ்வியலுக்குப் பயன்படாது' போன்ற கருத்துகள் தொடர்ந்து விதைக்கப்பட்டு அவை இன்றைக்குப் பெரும்பாலானோரின் மனங்களில் ஆழமாக வேரூன்றி அகலக் கிளைவிரித்துப் பரவியிருக்கின்றன. தயாரிக்கப்படுவது தமிழ்த்திரைப்படங்களாக இருந்தாலும், தமிழர்களே அவற்றின் நுகர்வோராக இருந்தாலும் அவற்றின் தலைப்புகள், பாடல்கள், உரையாடல்கள் போன்றவற்றில் கூச்சமின்றியும் தங்குதடையின்றியும் ஆங்கிலம் கலக்கப்படுகிறது. ஒரு திரைப்படத்திற்குத் தமிழில் பெயர் சூட்டினால் அப்படத்திற்கு அரசு வரிவிலக்கு அளிக்கிறது. ஆனால் அந்தத் திரைப்படத்தைத் தயாரிக்கும் நிறுவனத்தின் பெயர் வேறு எந்த மொழியில் இருந்தாலும் பரவாயில்லை என்ற நிலை இருக்கிறது.

 

இது எந்த வகைப்பட்ட தமிழ் மீட்பு நடவடிக்கையோ தெரியவில்லை. மொழியில் கலப்படம் செய்தால் அதற்காகத் தண்டனை அளிக்கின்ற பல உலக நாடுகளுக்கிடையே, கலப்படம் செய்யாமல் இருக்கிறவர்களுக்கு பொருளாதாரச் சலுகை அளிப்பவர்களாக, வெளிப்படையாகச் சொல்லவேண்டுமென்றால் அதற்குக் கையூட்டுக் கொடுப்பவர்களாக நாம் இருக்கிறோம். வாழ்வின் மிக முதன்மையான கட்டங்களில் தமிழர்களுக்குத் தங்களது தாய்மொழியான தமிழ் நினைவுக்கு வருவதேயில்லை. வாழ்க்கைக்கும், வங்கிக்கணக்கு நடைமுறைகளுக்கும், வரவு  செலவு வணிகத்திற்கும் வருமானத்திற்கும் தமிழ் பொருந்தாது அல்லது பயன்படாது என்கிற அறிவியலுக்குப் புறம்பான தாழ்வுமனப்பான்மையே அதற்கான காரணங்களாக இருக்கின்றன. எனவேதான் தமிழர்களின் கல்வி, வேளாண்மை, வணிகம், கலை, மருத்துவம் என்று அத்தனைத் துறைகளிலும் நிறுவனங்களின் பெயர்கள் மட்டும் வேறு ஒரு மொழியில், மிகவும் குறிப்பாக ஆங்கில மொழியில் பதிவு செய்யப்படுகின்றன. அந்த வகையில் இன்று , தமிழ் மக்கள் பார்ப்பதற்கான திரைப்படங்களை "மூவிஸ்'களும், "தியேட்டர்ஸ்''களும், "ஸ்டுடியோ'களும் தயாரித்துத் தள்ளிக் கொண்டிருக்கின்றன. தமிழ் மக்கள் வாங்குவதற்கான பொருள்களை "அன்கோ'களும், "பிரதர்ஸ்'களும், "சன்ஸ்'களும், "டிரேடர்ஸ்'களும், "எண்டர்பிரைசஸ்'களும் விற்றுக்கொண்டிருக்கின்றன. தமிழ் மக்களுக்குத் தேவையான பணத்தை "பெனிபிட்'களும்,  "சிட்பண்ட்'களும் கொடுத்துக் கொண்டிருக்கின்றன. தமிழ் மக்களின் தங்க நகைகளை பான்புரோக்கர்ஸ்கள் அடகு பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழ் மக்கள் பார்ப்பதற்கான தொலைக்காட்சிகளை நெட்வோர்க்குகளும் கம்யூனிகேஷன்களும் ஒளிபரப்பிக் கொண்டிருக்கின்றன.

 

தமிழ் மக்கள் கேட்பதற்கான பாடல்களை ஆடியோக்கள் வழங்கிக் கொண்டிருக்கின்றன. தமிழ் மக்களின் நோய்களுக்கான மருந்துகளை மெடிக்கல்ஸ்கள் விநியோகித்துக் கொண்டிருக்கின்றன. தமிழ் மக்களின் நோய்களை ஹாஸ்பிட்டல்ஸ்கள் குணப்படுத்திக் கொண்டிருக்கின்றன. தமிழ்ப் பிள்ளைகளின் கல்வித் தேவைகளை மெட்ரிகுலேஷன்கள் தீர்த்து வைத்துக் கொண்டிருக்கின்றன. தமிழர்கள் மேற்கொள்ள வேண்டிய பயணங்களை டிராவல்கள் தீர்மானித்துக் கொண்டிருக்கின்றன. தமிழ் மக்களுக்குத் தேவையான வேளாண்மை பொருட்களை அக்ரோ பார்ம்கள் கொடுத்துக் கொண்டிருக்கின்றன.

 

தமிழர்களின் பசியை ஹோட்டல்களே போக்கிக் கொண்டிருக்கின்றன. இவ்வாறாகத்தான் துறை தோறும் தமிழ் முழக்கம் செய்து கொண்டிருக்கிறார்கள் தமிழர்கள். தமிழ்நாட்டில் சண்டைகள் தமிழிலும், அவற்றின் பொருட்டான வழக்குகள் வேறு ஒரு மொழியிலும் நடக்கின்றன.

 

தங்களது வாழ்வின் முதன்மையான கட்டங்களில் தமிழை வளாகங்களுக்கு வெளியே நிற்க வைத்துவிடுகிறார்கள் தமிழர்கள். அந்த வகையில் நீதிமன்றங்களுக்கு வெளியேயும், கல்வி நிறுவனங்களுக்கு வெளியேயும், திருமண அரங்குகளுக்கு வெளியேயும், இசையரங்குகளுக்கு வெளியேயும், நிதி நிறுவனங்களுக்கு வெளியேயும், வழிபாட்டுத் தலங்களுக்கு வெளியேயும், வணிகச் செயல்பாடுகளுக்கு வெளியேயும் தமிழை கால்கடுக்க நிற்க வைத்து உள்ளே நுழைகிற தமிழர்கள், வேலை முடிந்தவுடன் வெளியே வந்து தங்களது தமிழைக் கட்டிப்பிடித்துக் கொண்டு குலவுகிறார்கள், மூச்சுவிட்டுக் கொள்கிறார்கள், இளைப்பாறிக்கொள்கிறார்கள், சிரித்துக் கொள்கிறார்கள்.

 

இதுதான் இன்றையத் தமிழர்கள் தங்களது தாய்மொழியான தமிழை வாழவைக்கும் முறையாக இருக்கிறது. இன்றைய நிலையில், நாம் தமிழைத் தலைவர்களின் சொற்பொழிவுகளாகவும் திரையிசைப் பாடல்களாகவும் வசனங்களாகவும் கேட்கலாம். கவிதை, கதை, கட்டுரை, செய்தித்தாள்கள் மற்றும் பருவ இதழ்களாகப் படிக்கலாம். அதாவது தமிழைக் கேட்கலாம் படிக்கலாம். இந்த இரண்டு நிலைகளைத் தாண்டி வாழ்வின் தேவைகளுக்குப் பயன்படுத்தலாம் என்கிற பேச்சுக்கே இப்போது இடமில்லை. - 

 

http://thinakkural.lk/article.php?article/zampjchlfb32869ddb9dd5d869758yowqaee9a76bf217a2a3c54833pyglp#sthash.PBo01F9w.dpuf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மெல்லத் தமிழினிச் சாகும் - இதன் உண்மை விளக்கம் தான் என்ன? ------------------------------------------------------------------------------------------ சுப்ரமணிய பாரதியார் அவர்கள் எழுதிய வரிகள் ஏன் தவறாக எடுத்து கொள்ளப்படுகிறது? பலர் அவர் எழுதிய பாடலின் ஒரு பகுதியை மட்டுமே படிக்கின்றனர்!! பலரும் பாரதியை "மெல்லத் தமிழினிச் சாகும் " என்ற வரிக்காகவும், அதை ஒத்த வரிகளுக்கும் சாடுகின்றனர்: "மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்" தமிழின் எதிர்காலத்தைப் பற்று பேசும் பலர் மேற்கோளிடும் வரிகள் இவை தான்: "புத்தம் புதிய கலைகள் - பஞ்ச பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும் மெத்த வளருது மேற்கே - அந்த மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை சொல்லவும் கூடுவதில்லை - அவை சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்" ஆனால், அவர் எழுதிய முழு பாடல் இது தான்: --------------------------------------------------------------------------- ""கன்னிப் பருவத்திலே அந்நாள் - என்றன் காதில் விழுந்த திசைமொழி எல்லாம் என்னென்னவோ பெயருண்டு - பின்னர் யாவும் அழிவுற்று இறந்தன கண்டீர்! தந்தை அருள் வலியாலும் - முன்பு சான்ற புலவர் தவ வலியாலும் இந்தக் கணமட்டும் காலன் - என்னை ஏறிட்டுப் பார்க்கவும் அஞ்சி இருந்தான் இன்றொரு சொல்லினைக் கேட்டேன் - இனி ஏது செய்வேன்? எனதாருயிர் மக்காள்! கொன்றிடல் போலொரு வார்த்தை - இங்கு கூறத் தகாதவன் கூறினான் கண்டீர்! "புத்தம் புதிய கலைகள் - பஞ்ச பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும் மெத்த வளருது மேற்கே - அந்த மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை சொல்லவும் கூடுவதில்லை - அவை சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்" என்றந்தப் பேதை யுரைத்தான் - ஆ! இந்த வசை எனக்கெய்திடலாமோ? சென்றிடுவீர் எட்டுத் திக்கும் - கலைச் செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்! தந்தை அருள் வலியாலும் - இன்று சார்ந்த புலவர் தவ வலியாலும் இந்தப் பெரும்பழி தீரும் - புகழ் ஏறிப் புவிமிசை என்றும் இருப்பேன்." "தமிழ் மெல்லச்சாகும் என்று கூறிய பாரதிக்கு இது ஒரு அரை கூவல். தமிழ் வாழும்; வளரும். அதையாராலும் அழிக்க முடியாது" என்று பலரும் வீர உரை ஆற்றுவது ஏன்? அவர் கூறிய " அந்தப் பேதை உரைத்தான்" என்ற வரிகளையும், 'அதை உடைப்போம்' என்ற அவர் சபதத்தையும் பலர் படிப்பது இல்லை. அவர்கள் பாரதியின் வரிகளைத் தவறாக புரிந்து கொண்டுள்ளனர்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இஸ்ரேல்- ஈரான், இவங்கட நொட்டல்கள் பழகி விட்டது, தாங்கிக் கொண்டு சாதாரணமாக வாழலாம். ஆனால், இந்த "கேப்பில்" புகுந்து "திராவிடர் பேர்சியாவின் பக்கமிருந்து மாடு மேய்த்த படியே வந்த ஊடுருவிகள்" என்று "போலி விஞ்ஞானக் கடா" வெட்டும் பேர்வழிகளின் நுளம்புக் கடி தாங்கவே முடியாமல் எரிச்சல் தருகிறது😅. யோசிக்கிறேன்: இவ்வளவு வெள்ளையும் சொள்ளையுமான பேர்சியனில் இருந்து கன்னங் கரேல் திராவிடன் எப்படி உருவாகியிருப்பார்கள்? சூரியக் குளியல்? 
    • பொது நடைமுறையை சொல்கிறேன். கனடாவுக்கும் பொருந்தும் என நினைக்கிறேன். படிக்க போகாவிடின், கல்லூரி உ.நா.அமைச்சுக்கு அறிவிக்கும். அதன்பின், இவர் இப்போதைய நிலையை கருத்தில் எடுத்து - மாணவர் வீசா மீளப்பெறப்படும். அன்று முதல் இவர் ஓவர் ஸ்டேயர்.  ஆனால் வழக்கு முடிந்து, தண்டனையும் முடியும் வரை முதலில் ரிமாண்டிலும், பின் சிறையிலும் வைத்திருப்பார்கள். தண்டனை காலம் முடிந்ததும் நாடுகடத்துவார்கள். விண்ணப்பித்தாலும் பிணை கிடைத்திராது. குழந்தைகள் உட்பட 6 கொலை! 7வதை ரிஸ்க் எடுக்க எந்த நீதிபதியும் தயாராக இருக்கமாட்டார்கள். வாய்பில்லை - ஒரு கிரிமினல் குற்றம் மூலம் வரும் தண்டனை காலம் - வதிவிடத்துக்கு கணக்கில் எடுத்து கொள்ளப்படாது. வதிவிடத்துக்கு கணக்கில் எடுக்க அந்த காலம் சட்டபூர்வமானதும், தொடர்சியானதாயும் இருக்க வேண்டும். சிறைவாச காலம் சட்டபூர்வமானதல்ல. அதேபோல் ஒரு குற்றத்துக்காக சிறை போனால் “தொடர்சி” சங்கிலியும் அந்த இடத்தில் அறுந்து விடும். வெளியே வந்த பின், நாடு கடத்தாமல் விட்டால், தாமதித்தால் - சூரியின் பரோட்டா கணக்கு போல், சட்டபூர்வ & தொடர்சியான காலம் மீள பூஜ்ஜியத்தில் இருந்து ஆரம்பிக்கும்.  
    • புராணக்கதையின் படி, ஆர்க்கிமிடிஸ் குளியல் செய்யும் பொழுது கண்ட ஒன்றால்,  மிகவும் உற்சாகமடைந்தார், அவர் குளியலறையில் இருந்து குதித்து, மீண்டும் தனது பட்டறைக்கு  / அரச   அரண்மனைக்கு  / வீட்டிற்கு ஓடினார், யுரேகா (அதாவது "நான் அதை கண்டுபிடித்தேன்") என்று கத்திக் கொண்டே, ஆனால்  " பொருத்தமற்ற உடையுடன், அதாவது நிர்வாணமாக ". ஆர்க்கிமிடிஸ் எப்போதாவது "யுரேகா" என்ற வார்த்தையை கத்தினாரா / உச்சரித்தாரா என்று சிலர் சந்தேகிக்கிறார்கள், ஏனென்றால் இது விட்ருவியஸின் [Vitruvius 80–70 BC – after c. 15 BC ] ஒரு ரோமானிய கட்டிடக் கலைஞர் மற்றும் பொறியியலாளர் ஆவார்.] குறிப்பு ஆகும்.  - இந்த சம்பவம் நடந்த பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு அவரால் எழுதப்பட்டது. வாய்வழியாக வந்த கதையை தொகுத்து கொடுக்கப்பட்டது என்பதால்?   ஆர்க்கிமிடீஸ் கி.மு.287  - கி.மு.212 ; இது அவர் வாழ்ந்த காலம்  ஆகவே அந்த பண்டைய காலத்தில் நிர்வாணம் ஒன்றும்  அதிசயமாக இருந்து இருக்காது?      எல்லோருக்கும் எனது தாழ்மையான நன்றி 
    • பிணையை  மறுப்பதனூடாக  அவர் கனடாவில்  தங்கி இருக்கும் நாட்களை  அதிகரித்து அதை  தனது  வதிவிட விசாவுக்கு  சாதகமாக்க  முயல்கிறார் போலும்? சோத்துக்கு சோறும்  ஆச்சு? இருப்புக்கு  வீடும் ஆச்சு? விசாவும் ஆச்சு?
    • மகனுக்கு ஒரு குழந்தை பிறந்துள்ளது. எனவே வட கரோலினாவில் நிற்கிறேன். எதுக்கும்  @Justin ஐ கேட்டுப் பார்க்கவும்.அவருக்குத் தான் கிட்ட.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.