Jump to content

''ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்'' - ஒளவையார்


Recommended Posts

''தொடர்ந்தும் யுத்தம்தான் தமிழ் தேசியத்தை காப்பாற்றும்'' என்ற உங்களது வாதங்களுக்கும் விவாதங்களுக்கும் நீங்கள் யாரிடமும் நிதியை எதிர்பார்த்து செய்யவில்லை என்பது எவ்வளவு தூரம் உண்மையோ அதே உண்மையுடந்தான் நானும் '' முடிவில்லாமல் தொடரும் யுத்தம் தமிழ் மக்களை அழித்தொழிக்கும்'' என்பதில் மிக தெளிவாக இருக்கிறேன்.

புதிய உலக ஒழுங்குக்கு அமைவாக எல்லா இடத்திலும் நிகழ்வுகள் நடைபெற வில்லை. உதாரணம் சீனா, இரான் மற்றும் அண்மையில் லெபனான்.சில வருடங்களின் முன் இந்திய அணுஆயுத பரீட்ச்சைகள்.........

உலக ஒழுங்குக்கு அமையவே நீங்கள் குறிப்பிட்ட விடயங்கள் எல்லாம் நடந்தவை.

அவற்றை மீறிஅல்ல.

'உலக ஒழுங்கு' என்பது அமெரிக்க நலன்களுக்கு வெளியேயும் நீண்டு கிளைகளும் விழுதுகளும் உலகெங்கும் பரப்பி நிற்கும் ஒரு இரட்சத விருச்சம். ஏனெனில் அடிப்படையில் அமெரிக்கா ஒரு தேசிய இனத்தோற்றலோடு உருவான ஐரோப்பிய நாடுகள் போல் அல்லாது ' அமெரிக்கர்' எனும் செயற்கையாக உருவாக்கப்பட்ட தேச எல்லைக்குள் வாழும் மக்களின் வாழ்விடம்.

ஆக, அமெரிக்கா இனம் சார்ந்ததோ மொழி சார்ந்ததோ உருவானதல்ல.

அதனால்தான் பல்தேசிய கம்பனிகளின் நலன்கள் என்பதே உலக ஒழுக்கை தீர்மாணிக்கும் நடைமுறையாகிவிட்டது.

2002ஆம் ஆண்டு யுத்த நிறுத்த உடன்பாட்டின் பின் இலங்கைகுள் நுழைந்த அந்நிய முதலீடுகள் முன் எப்போதும் இல்லாத அளவு இலங்கையின் உள்நாட்டு அரசியலை உலகமயமாக்கிவிட்டது. கடந்த ஆண்டு இலங்கையின் பொருளாதாரம் 8.7% ஆல் வளர்ந்துள்ளது.

அந்த முதலீட்டாளர்கள் தமக்கு லாபம் கிடைக்காவிட்டாலும் சமாதானத்தை ஆதரிப்பார்களே ஒழிய யுத்தத்தை ஆதரித்து தமது முதலீட்டை இழக்க விரும்பமாட்டார்கள்

Link to comment
Share on other sites

  • Replies 211
  • Created
  • Last Reply

......அமெரிக்கனுக்கு இருக்கிற பிரச்சினைகளில அவன் இங்க வந்து மல்லுக்கட்ட மாட்டான்.அதனால் ஏற்படும் இழப்புக்களை அமெரிக்க மக்கள் தாங்க மாட்டர்கள் .....

என்பதற்கு எனது பதில் இதுதான்........

....உங்கள் கோட்பாடுகளை உங்களோடு வைத்திருங்கள். தலமைக்கு உபதேசிக்க வெளிக்கிடாதீர்கள்..
Link to comment
Share on other sites

அய்யா சமாதானம் நீங்கள் கைய்யெழுத்தாக இட்டிருக்கும்

There is plenty of guilt in our region. No one is innocent, but as long as we allow the events on the ground to dictate policies, we are in trouble.

பற்றி கொஞ்சம் விளக்கம் தரமுடியுமா?

Link to comment
Share on other sites

என்பதற்கு எனது பதில் இதுதான்........

:arrow: கேள்வி: இலங்கைப் பிரச்சனைக்கு என்னதான் தீர்வு?

:arrow: பதில்: இலங்கையை பொறுத்தவரையில் தமிழர்களின் தேசத்தை சிங்களவர்கள் ஆக்கிரமித்து வைத்திருக்கிறார்கள்.

இதிலிருந்து தமிழ் மக்கள் விடுபட்டு தங்களை தாங்களே ஆளக்கூடிய சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் ஒரு தீர்வைத் அடையக்கூடிய சூழல் உருவாகின்ற போதே இலங்கைத்தீவில் அமைதி பிறக்கும்.

சிங்கள அரசும் சிங்கள மக்களும் தமிழர்களை ஆக்கிரமிக்க வேண்டும் தமிழர்களை இல்லாதொழிக்க வேண்டும் என எண்ணங்கொண்டு செயற்படுவார்களேயானால் ஒருபோதும் இலங்கைப் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கப்போவதுமில்லை. இந்தத் தீவு அமைதியடையப் போவதுமில்லை.

ஆகவே தமிழ் மக்களை சுதந்திரமாக சுயநிர்ணய அடிப்படையில் அரசமைத்து நிம்மதியாக வாழவிடுவார்களேயானால் அதுவே தீர்வுக்கு சிறந்த வழியாகும்.

சு.ப.தமிழ்ச்செல்வன்

Link to comment
Share on other sites

சமாதானம் இங்கு பிரச்சினை யுத்தமா சமாதனமா அல்ல, பிரச்சினை தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமை பற்றியது அதுக்குத்தான் போராட்டம் நடக்குது.யுத்தம் புரிவதற்காக இங்கு எவரும் போராடவில்லை.அதை முதலில் உணரும். நாம் எல்லோரையும் போலவே சமாதனத்துடன் சுய நிற்ணயத்துடன் வாழ்வதற்க்காவே யுத்தம் புரிய வேண்டிய நிலைக்குத்தள்ளப்பட்டுள்ளோம

Link to comment
Share on other sites

தம்பிமார் உதென்ன வீணா ஏட்டிக்குப் போட்டியா உதுக்குப்போய் சண்டைபிடிக்கவேணுமே?. முதலிலை நாங்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் மற்றவன்றை கருத்துக்கு றெஸ்பெக்ட் குடுக்கோணும் எண்டுறதை. அமெரிக்கன் பெரிய மோசமான ஆள் தம்பிமாரே 60 வதுகள்ளை அவன் சி.ஐ.ஏ மூலமா செய்த அட்டுழியம் கொங்சநெஞ்சமே. போதைவஸ்த்து கடத்திறதிலையிருந்து சகல வேலையும் செய்தவன்தானே.

சரித்திரத்தைப் புரட்டிப் பாருங்கோவன் ஆபிரிக்காக் காரனை அடிமையாப் புடிச்சு வித்தான் பிறகு சப்பான்காரனுக்கு அணுக்குண்டைத் தூக்கிக்கொண்டேப்போட்டான். ஏன் அந்தக் குண்டை கிட்லரின்ரை நாட்டிலை போடேல்லை. பிறகு வந்த காலங்கள்ளை உள்ள சர்வாதிகாரிகளுக்கெல்லாம் உதவிசெய்து மக்களை ஒடுக்கி அந்த நாடுகளையெல்லாம் தன்றை கைப்பொம்மையாய் வைச்சவன் தம்பி. பிறகு இந்த ஜனநாயகம், மனித உரிமை எண்ட பேச்செல்லாம் பெரிய பம்மாத்து கண்டியளே. ஏன் இந்த நோர்வேஜியனைப் பாருங்கோவன் 1000-ஆம் ஆண்டளவிலை உலகமெல்லாந்திரிஞ்சு கொள்ளையடிச்சதுமட்டுமில்லாம

Link to comment
Share on other sites

:roll: குறளோவியம் :roll:

ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்

தீதுண்டோ மன்னு முயிர்க்கு.

பிறர் குற்றத்தைக் காண்பவர்கள் தமது குற்றத்தையும் எண்ணிப் பார்ப்பார்களேயானால் புறங்கூறும் பழக்கமும் போகும்; வாழ்க்கையும் நிம்மதியாக அமையும்.

Link to comment
Share on other sites

கடந்த சில தினங்களாக யாழ் களத்தின் இணைக்கப்பட்டு விவாதிக்கப்படும் சில தலைப்புகள் சிலவற்றை கீழ் தருகிறேன்.

புதிய சிந்தனைகளுக்கும் பார்வைகளுக்கும் செயல்வடிவம் கொடுக்கவேண்டிய காலத்தின் கட்டாயம்........

பிளாட், டியூஎல்ப் எம்பிக்களுக்கு இந்தியா அழைப்பு

செப்டம்பர் 25, 2006

கொழும்பு:

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான தமிழ்க் கூட்டமைப்பைச் சேர்ந்த எம்பிக்களை பிரதமர் மன்மோகன் சிங் சந்திக்க மறுத்த நிலையில், தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணி (டியுஎல்எப்), தமிழ் ஈழ மக்கள் விடுதலை அமைப்பு (பிளாட்), ஈழ மக்கள் புரச்சிகர விடுதலை முன்னணி (இபிஆர்எல்எப்வேரதன் பிரிவு) ஆகிய கட்சிகளைச் சேர்ந்த எம்பிக்களை டெல்லிக்கு வருமாறு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. .............

http://thatstamil.oneindia.in/news/2006/09/25/lanka.html

யாழை விட்டு வெளியேற மக்கள் முண்டியடிப்பு

தென்பகுதிக்குச் செல்வதற்காக யாழ் சிங்களமகாவித்தியாலயத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கடந்த மூன்று நாட்களாக காத்திருக்கின்றனர். ஏந்தவகையான முன்னறிவித்தலுமின்றி சுமார் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கடந்த வெள்ளிக்கிழமையும் முண்டியடித்தனர்.....

விழி் (நெருடல் யாழ். செய்தியாளர்)http://www.nerudal.com/content/view/2807/36/

வகுப்பறையில் இருக்க வேண்டிய சிறார் பேக்கரி முன் காத்து ந

இந்த நாட்டிலுள்ள சிறுவர்கள் காலை வேளையில் பாடசாலைகளுக்கு செல்வதைப் பார்க்க சந்தோசமாக இருக்கிறது. ஆனால் யாழ். குடாநாட்டிலுள்ள மாணவர்கள் கடந்த ஒரு மாத காலமாக காலையில் கடைகளுக்கு முன்பாகவும் பேக்கரிகளுக்கு முன்பாகவும் வரிசையில் நிற்கும் மிகப் பெரும் அவலத்தையே இன்றைய யுத்த சூழல் தோற்றுவித்துள்ளது என்று கூறியவாறு தன்னையே மறந்து கண்ணீர் விட்டழுதார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.சிவநேசன்......

நெருடல் இணையம்http://www.nerudal.com/content/view/2806/36/

[24 - September - 2006]

பசியின் கொடுமை தாங்காது குடும்பஸ்தர் ஒருவர் வீதியால் பெண்ணொருவர் வாங்கிச் சென்ற அரிசியை அபகரித்துக் கொண்டு ஓடிய பரிதாப சம்பவமொன்று யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது;

நேற்றுமுன்தினம் பெண்ணொருவர் பையொன்றில் அரிசி வாங்கிக்கொண்டு மானிப்பாய் வீதியால் சென்றுள்ளார். அச்சமயம் வேகமாக வந்த சுமார் 50 வயது மதிக்கத்தக்க குடும்பஸ்தர் ஒருவர் அப்பெண்ணின் கையிலிருந்த அரிசியை பறித்துக்கொண்டு வேகமாக ஓடியுள்ளார்.....

...

.....http://www.thinakkural.com/news/2006/9/24/...s_page11496.htm

Link to comment
Share on other sites

அதானாகப்பட்டது மக்களே எதிர்த்து போராடாமல் சரனடைந்து விடுங்கள்...! போராட்டம் என்பது எல்லாம் எதிரியை நோக்கியதால் இல்லாமல் குடும்ப பிரச்சினை பற்றியதாக வேணும்...! சரியா..??

பக்கத்து காணிக்காறன் உங்கட காணியையும் சேர்த்து வேலி போடுவான் அப்ப எல்லாம் எதிர்த்து போராடாமல் போனால் போகட்டும் எண்டு விட்டுவிட்டு அனனிடம் சோத்துக்கு கையேந்த்துங்கள்...!

ஒருவேளை தனியாக நாட்டை கைப்பற்றினால் உங்களுக்கு சோறு போட என்ன வளம் இருக்கு இருக்கு...?? வயல் இருக்கா குளங்கள் இருகா..??? இல்லை பசலைபோட எருவுக்கு மாடுகள் இருக்கா..??? இல்லை நல்ல உளைப்பாளிகள்தா இருக்கிறார்களா..??? எல்லாத்துக்கும் சமாதானம் எண்டு அடிமை சாசனம் எழுதி குடுப்பதுதான் நல்லது..!

Link to comment
Share on other sites

.......

ஒருவேளை தனியாக நாட்டை கைப்பற்றினால் :idea: :?: உங்களுக்கு சோறு போட என்ன வளம் இருக்கு...?? வயல் இருக்கா குளங்கள் இருகா..??? இல்லை பசலைபோட எருவுக்கு மாடுகள் இருக்கா..??? இல்லை நல்ல உளைப்பாளிகள் இருக்கிறார்களா..??? எல்லாத்துக்கும் சமாதானம் எண்டு அடிமை சாசனம் எழுதி குடுப்பதுதான் நல்லது..!

பட்டு வேட்டி பற்றி கனவில் இருந்தால் கட்டிய கோவணமும் பறி போகும்.....!!!!!!!!!!!!!

Link to comment
Share on other sites

அய்யா சமாதானம், ஒரு இனத்திற்கு கோவணம் எது பட்டு வேட்டி எது என்று தீர்மானிக்கிற உரிமையை யார் உமக்கு தந்தது?

அதற்கு உம்மிடம் இருக்கும் தகமைகள் என்ன?

உம்மடை கையெழுத்து பற்றி விளக்கமே தரமுடியாமல் திரியிறீர், உம்மட கோவணம் கிளிஞ்சா புதுசு வேண்டிறதுக்கான பிழைப்ப பாத்துக்கொள்ளும். உந்த ஆடு நானையுது என்ற ஓநாய் ஓலம் எல்லாம் வேண்டாம்.

Link to comment
Share on other sites

அய்யா சமாதானம், ஒரு இனத்திற்கு கோவணம் எது பட்டு வேட்டி எது என்று தீர்மானிக்கிற உரிமையை யார் உமக்கு தந்தது?

அதற்கு உம்மிடம் இருக்கும் தகமைகள் என்ன?

உம்மடை கையெழுத்து பற்றி விளக்கமே தரமுடியாமல் திரியிறீர், உம்மட கோவணம் கிளிஞ்சா புதுசு வேண்டிறதுக்கான பிழைப்ப பாத்துக்கொள்ளும். உந்த ஆடு நானையுது என்ற ஓநாய் ஓலம் எல்லாம் வேண்டாம்

:D:D:D :P :P

Link to comment
Share on other sites

அய்யா சமாதானம், ஒரு இனத்திற்கு கோவணம் எது பட்டு வேட்டி எது என்று தீர்மானிக்கிற உரிமையை யார் உமக்கு தந்தது?

அதற்கு உம்மிடம் இருக்கும் தகமைகள் என்ன?

உம்மடை கையெழுத்து பற்றி விளக்கமே தரமுடியாமல் திரியிறீர், உம்மட கோவணம் கிளிஞ்சா புதுசு வேண்டிறதுக்கான பிழைப்ப பாத்துக்கொள்ளும். உந்த ஆடு நானையுது என்ற ஓநாய் ஓலம் எல்லாம் வேண்டாம்.

றொம்பப் பிரமாதமாய் இருக்குது குறுக்ஸ்

:D:D:D:lol::lol::lol::lol:

Link to comment
Share on other sites

அய்யா சமாதானம், ஒரு இனத்திற்கு கோவணம் எது பட்டு வேட்டி எது என்று தீர்மானிக்கிற உரிமையை யார் உமக்கு தந்தது?

ஒருவருக்கு கருத்து தெரிவிக்கும் உரிமை மனிதனது பிறப்புரிமை. அதற்கு யாரும் யாரிடமும் எந்த அனுமதியும் பெறவேண்டியதில்லை....

அது சரி... எனக்கு உரிமை இருக்கிறதா என கேள்வி கேட்கும் உரிமை உமக்கு யார் தந்தது????

அதற்கு உம்மிடம் இருக்கும் தகமைகள் என்ன?

ஒருவர் தனது கருத்தை தெரிவிப்பதற்கு என்ன தகுதி வேண்டிக்கிடக்கிறது. உமக்கு யாழ் களத்தில் கருத்து எழுத உள்ள தகுதிதான் எனக்கும் இருக்கிறது. இது போதும்தானே.....இதைவிட விசேடமாக தேவை இல்லைத்தானே...!!!!!!!

உம்மடை கையெழுத்து பற்றி விளக்கமே தரமுடியாமல் திரியிறீர்...

எனது கையெழுத்து இலகுவாக விளங்கக்கூடிய சாதாரண ஆங்கிலத்தில் உள்ளது.

"Without sovereignty, one cannot exercise or experience a true democracy." என நீர் உமக்கு இட்டிருக்கும் கையெழுத்துப்போல.... இதுக்கு விளக்கம் என்ன வேண்டிக்கிடக்கிறது.

உம்மட கோவணம் கிளிஞ்சா புதுசு வேண்டிறதுக்கான பிழைப்ப பாத்துக்கொள்ளும். உந்த ஆடு நானையுது என்ற ஓநாய் ஓலம் எல்லாம் வேண்டாம்.

கோவணம் கட்டியிருந்தால்தான் கிழிய சாத்தியம்.... கட்டாதவை அம்மணமாக நிற்கவேண்டியது தான்......

குரங்குக்கு புத்தி சொல்லபோன தூக்கணாம் குருவியின் நிலை...... யாருக்குதான் விருப்பம்...???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சமாதானத்திற்கு கோகரா...

ஐயா... மாற்றுக்கருத்து, சனநாயகம், ... சமாதானம்!!! நல்ல சொற்கள்????

ஒண்று மட்டும் தெரியுது, என்னைப்போல உங்களிற்கும் "வேட்டியென்ன ... கோவணமும் இல்லாமல் திரியத்தான் விருப்பம்!!!! நாங்கள் அம்மணமாகத் திரிகிறது மட்டுமல்ல, மற்றவங்களுடையதையும் உரியவும் நல்ல விருப்பம்!!!!

நீ எழுதப்பு, அம்மணமாக..... :wink:

Link to comment
Share on other sites

உமக்கு இருக்கும் உரிமை உமது கருதுக்களைத் தெருவிக்க மட்டுமே, மற்றவர்கள் சார்பாக , தமிழ் இனத்தின் சார்பாக, ஒரு இனத்தின் கருத்தாக உமது கருதுக்களை எழுத உமக்கு இருக்கும் உரிமை பற்றியே குறுக்காலபோவான் வினாவினார்? முன்னரும் இகு பற்றிக் கேள்வி எழுப்பிய போது தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டச் சக்திகளான விடுதலைப்புலிகளின் நிலைப்பாட்டோடு நான் ஒருங்குகிறேன் அவர்களுக்கு ஆலோசனை வழங்கவில்லை என்று எழுதினீர்.ஆனால் உமது கருதுக்கள் தமிழ்த் தேசிய விடுதலைப் போர் தோக்கிறது அதனால் மேற்குலகம் சொல்லுவதைக் கேளுங்கள் என்கின்ற பாணியிலயே இங்கு தொடர்ந்து எழுதப்பட்டுக் கொண்டு இருக்கின்றன.போராட்டத்தின் செல் நெறியை உடைக்கும் வண்ணமே இந்தக்கருதுக்கள் இதுவரை உள்ளன.அண்மைய தமிழ்ச் செல்வனின் பேட்டியில் என்ன தீர்வை நாம் எதிர்பார்க்கிறோம் என்பது தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.உமது பரப்புரைகளுக்கு புலிகளின் நிலைப்பாடு எவ்வாறு நேர்மாறானதாக இருக்கிறது என்பது அந்தப் பதிலில் இருந்து தெளிவாகும்.போராட்டம் நடப்பது உரிமைகளுக்காக, சலுகைகளுக்காக அல்ல.

முதலில் தமிழ் ஈழ விடுதலைப் போர் தோற்கிறது என்பதை நீர் எவ்வாறு தீர்மானிக்க முடியும், அதனைத் தீர்மானிக்கக் கூடிய அங்கீகாரமும்,ஆளுமையும்,அறிவு

Link to comment
Share on other sites

...அதாவது போராடும் தலமைச் சக்தியின் நிலைக்கு எதிரான கருதுக்களை எழுதுவதற்கு உமக்கு இருக்கும் அங்கீகாரம், தகுதி நிலை என்ன என்பதே.......

எனது கருத்துகள் தமிழ் தேசிய தலைமைக்கு எதிரானது என்பதை தீர்மானிக்கும் உமக்கு உரிய தகுதி என்ன? அதற்கான அங்கீகாரத்தை உமக்கு யார் தந்தது?

இங்கு நான் எழுதுவது எனது கருத்துகளே அன்றி தமிழ் மக்கள சார்பாகவோஅல்லது அதன் தலைமை சக்திகளான விடுதலை புலிகளதோ அல்ல.

நீர் எப்படி உமது கருத்தை இங்கு எழுதுகின்றீரோ அவ்வாறுதான் எனது கருத்துகளும். அதாவது உமது கருத்துகள் எப்படி தமிழ் தேசியத் தலைமையின் கருத்துகள் ஆகாதோ அவ்வாறுதான் எனது கருத்துகளும்.

Link to comment
Share on other sites

அய்யா சமாதானம், உமது சொந்த கருத்துக்களை தனிமனிதராக தாராளமாக வைய்யும். உதைத்தான் ஆனந்தசங்கரியும் டக்கிலசும் செய்யினம். ஆனால் அவை மக்களை நோக்கி அவர்களுடைய இன விடுதலைப் போராட்டத்தை பற்றியதாக இருந்தால் அந்த இனத்திலிருக்கிற யாரும் கேள்வி கேப்பார்கள் விளக்கம் கேப்பார்கள் விமர்சிப்பார்கள்.

உமது ஆங்கில கைய்யெழுத்தின் மொழிபெயர்ப்பு தேவையில்லை அது எந்த வகையில் எமக்கு பொருத்தம் எண்டு போட்டுக் கொண்டு வந்து இங்கு "சமாதானம்" விதைக்கிறீர் என்பது தான் கேள்வி.

நீர் தூக்கணாம் குருவியா இரும் நான் குரங்கா இருக்கிறன் நல்லது. அப்படியான கனவிலான் கேவணத்தை துலைச்சுப் போட்டு கேவணம் இல்லாட்டி என்னெண்டு கிளியப்போது என்றீரே?

Link to comment
Share on other sites

னது கருத்துகள் தமிழ் தேசிய தலைமைக்கு எதிரானது என்பதை தீர்மானிக்கும் உமக்கு உரிய தகுதி என்ன?

அதற்கான அங்கீகாரத்தை உமக்கு யார் தந்தது?

நீர் எழுதும் கருத்துக்களை, தமிழ்த் தேசிய விடுதலைப்போராடச் சக்திகளான விடுதலைப் புலிகளின் நிலைப் பாடுட்டன் ஒப்பு நோக்கியதால்.ஒப்பு நோக்குவதற்கு எனக்கு இருக்கும் தகுதி தமிழ் மொழி அறிந்திருத்தல், மேலும் தமிழர் போராட்டம் பற்றி அதன் நோக்கங்கள் பற்றி விடுதலைப்புலிகளின் அரசியல் நிலைப்பாடு பற்றி அறிந்திருத்தல் என்பவை.எனக்கு மட்டுமே அவ்வாறு இருந்தால் எனது ஒப்பு நோக்கில் தவறு இருக்கலாம்.ஆனால் இங்கு பலருக்கும் அவ்வாறே தெரிவதால் உமது கருதுக்கள் என்ன நோக்கானவை என்கின்ற எனது ஓப் நோக்கில் பிழை இருக்க முடியாது.ஆகவே இந்த ஒப்பு நோக்கை மேற்கொள்ள எனக்குத் தகுதி இருக்கிறது என்ற முடிவுக்கு வரலாம்.

:arrow: இங்கு நான் எழுதுவது எனது கருத்துகளே அன்றி தமிழ் மக்கள சார்பாகவோஅல்லது அதன் தலைமை சக்திகளான விடுதலை புலிகளதோ அல்ல.

நீர் எப்படி உமது கருத்தை இங்கு எழுதுகின்றீரோ அவ்வாறுதான் எனது கருத்துகளும். அதாவது உமது கருத்துகள் எப்படி தமிழ் தேசியத் தலைமையின் கருத்துகள் ஆகாதோ அவ்வாறுதான் எனது கருத்துகளும்.

கடந்த சில தினங்களாக யாழ் களத்தின் இணைக்கப்பட்டு விவாதிக்கப்படும் சில தலைப்புகள் சிலவற்றை கீழ் தருகிறேன்.

:arrow: புதிய சிந்தனைகளுக்கும் பார்வைகளுக்கும் செயல்வடிவம் கொடுக்கவேண்டிய காலத்தின் கட்டாயம்........

எனது கருத்துக்கள், எனதுகருதுக்கள் தான் ஆனால் நான் மேற்கோள்காட்டிய தமிழ்ச் செல்வனின் கருத்துக்கள் நிச்சயமாக எனது கருதுக்களாக இருக்க முடியாது.அவை அதிகார பூர்வமாக புலிகளின் கருதுக்களாகவே எடுதுக்கொள்ளப்பட வேண்டும். நான் இங்கு சுட்டிக்காட்டியது எவ்வாறு புலிகளின் கருதுக்களுக்கு எதிர்மாறானதாக உமது கருதுக்களிருக்கின்றன என்பதையே.இங்கே நான் எதுவித சொந்தக்கருத்தையும் தெருவிக்கவில்லை.

இறுதியாக இந்தக் கேள்விகளுக்குப் நேரடியான பதில் அழியும்.

1) தமிழ்த் தேசிய விடுதலைப் போரானது தமிழ் மக்களின் சுய நிற்ணயத்திற்காக நடாத்தப்படுகிறதாக புலிகள் கூறுகிறார்கள்,இது சம்பந்தமாக உமது நிலைப்பாடு என்ன?

2) உமது நிலைப் பாடும் புலிகளின் நிலப்பாடும் ஒன்றெனில், தமிழ் மக்கள் தமது சுய நிர்ணய உரிமையைப் பெற்று விட்டார்களா?

3) அவ்வாறு பெறாத விடத்து, போராட்டத்தை கை விட்டு மேற்குலகு சொல்வதைப் போல் கொடுப்பதை வாங்கிக் கொள்ளுங்கள் என்று நீர் பரிந்துரைப்பது புலிகளின் நிலைப்பாடா?

உமது கருதுக்கள் எவ்வாறு தமிழ் ஈழ விடுதைப் போராட்டத்தின் அடிப்படை நோக்கங்களுக்கு எதிர்மாறானவை என்பதற்கு மேற்குறிய கேள்விகளுக்கான விடைகள் முடிவாகும்.

Link to comment
Share on other sites

துணிவும் நேர்மையும் இருந்தால் நேரடியாகப் பதில் அழியும்,இல்லாது விடின் நீர் யார் என்பது இங்கு எல்லாருக்கும் தெரிந்து விடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் வாசித்தளவில் சமாதானம் சொல்ல வரும் செய்திகள் (பிழையாகவுன் இருக்கலாம்).

1. தொடர் போராட்டம் ஈழத் தமிழரின் அழிவுக்கே உதவும் (போராடவிட்டாலும் தமிழர் காலப் போக்கில் சிங்களமயப் படுத்தப்படுவர் என்பதை விவாதத்திற்கு உட்படுத்தலாமா?)

2. ஆயுதப் போராட்டம் என்பது தற்போதைய பயங்கரவாதத்திற்கு எதிரான போர் நடைபெறும் சூழலில் "உலக அரசுகளால்" பயங்கரவாதமாகவே கருதப்படும். எனவே ஆயுத போராட்டம் சிறந்த தெரிவு அல்ல (அஹிம்சைப் போராட்டமும் சிறந்த தெரிவு அல்ல. எனவே மேற்குலகில் வாழும் தமிழர்கள் மேற்கத்தைய ஜனநாயக பண்புகளுக்கு உட்பட்டு மேற்கு நாட்டு அரசியல் தலவர்களுக்கும் முடிவெடுக்கக் கூடிய அதிகார மையங்களில் உள்ளோரையும் சினேகம் பிடித்து - "லொபி" செய்து - தமிழருக்கோர் தீர்வொன்றை கொண்டுவர முயலவேண்டும்)

3. புலிகள் வன்முறைப் போராட்டம் விடுதலையைப் பெற்றுத் தரமாட்டாது என்பதை உணர்ந்துவிட்டனர் (எனவே முக்கிய அறிவுப்புக்களை மேற்கொள்ளலாம். சிலவேளை "ஈழம்" என்ற பதத்தை அவர்களின் இயக்கப் பேரில் இருந்து நீக்கவும் கூடும்).

4. ஜனநாயகம், பன்மைத்துவம், மனிதாபிமானம் என்பவற்றை முதன்மைப்படுத்தியும், இராணுவவாதத்தைத் பின் தள்ளியும் புதிய அரசியல்முறையை புலிகள் இயக்கம் கைக்கொள்ள வேண்டிய தருணம் வந்துவிட்டது (எனவே புலத்து தமிழராகிய நாம் நம்மையும் இப்பண்புகளூடாகத் தயார்படுத்திக் கொள்ளவேண்டும்)

5. இந்தியாவும் உலக நாடுகளும் சமஷ்டி, அல்லது அதிகாரப் பரவலாக்கம் என்பதின் ஊடாக தமிழர் தமது உரிமைகளைப் பெற்றுக்கொள்ள தம்மாலியன்றவற்றைச் செய்வர். (எனவே மேலதிக அழிவுகளைத் தவிர்த்து கிடைப்பதைப் பெற்றுத் திருப்திகொள்வோம். இவ்வளவு கால அழிவுகளும் எதையும் பெற்றுத்தரவில்லை என்பதையும் ஞாபகத்தில் கொள்ளுவோம்)

ஆக மொத்தத்தில்

"எமது தரப்பிலும் பிழைகள் உள்ளன, எவருமே சுத்தமான அப்பாவிகளாக இல்லை, அன்றாட செயற்பாடுகள் எமது கொள்கைகளை வழிநடாத்தினால் நாம் சிக்கல்களுக்குள் உட்படுவோம்".

அது சரி.. சமாதானம் எங்களை எங்கே அழைத்துச் செல்ல முயற்சிக்கின்றது???

Link to comment
Share on other sites

SAMATHAANAM எழுதியது:

கடந்த சில தினங்களாக யாழ் களத்தின் இணைக்கப்பட்டு விவாதிக்கப்படும் சில தலைப்புகள் சிலவற்றை கீழ் தருகிறேன்.

புதிய சிந்தனைகளுக்கும் பார்வைகளுக்கும் செயல்வடிவம் கொடுக்கவேண்டிய காலத்தின் கட்டாயம்........

மேற்குறிப்பிட்டது நீர் எழுதியது,

இங்கு நீர் குறிப்பிடும் புதிய சிந்தனை என்ன? அதை எவ்வாறு செயற்படுத்தப்போகிறீர்?

நீர் ஒப்பிடும் பழய சிந்தனை என்ன? அது யாருடைய சிந்தனை?

Link to comment
Share on other sites

அது சரி.. சமாதானம் எங்களை எங்கே அழைத்துச் செல்ல முயற்சிக்கின்றது???

வேறெங்க இடுகாட்டுக்குத்தான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனது கருத்துகள் தமிழ் தேசிய தலைமைக்கு எதிரானது என்பதை தீர்மானிக்கும் உமக்கு உரிய தகுதி என்ன? அதற்கான அங்கீகாரத்தை உமக்கு யார் தந்தது?

இங்கு நான் எழுதுவது எனது கருத்துகளே அன்றி தமிழ் மக்கள சார்பாகவோஅல்லது அதன் தலைமை சக்திகளான விடுதலை புலிகளதோ அல்ல.

நீர் எப்படி உமது கருத்தை இங்கு எழுதுகின்றீரோ அவ்வாறுதான் எனது கருத்துகளும். அதாவது உமது கருத்துகள் எப்படி தமிழ் தேசியத் தலைமையின் கருத்துகள் ஆகாதோ அவ்வாறுதான் எனது கருத்துகளும்.

ஐயா சமாதானம்!

புலிவாதத்தின் ஊடகமரபை உமது ஊடகவாதம் பின்பற்றுகிறதா? பாடம் கற்பிக்கின்றதா?

ரி.பி.சி கோவணம் கட்டிய புலிஎதிர்ப்புவாதம் என்றால் உமது கோட்,சூட் போட்ட புலிஎதிர்ப்புவாதம் அவள்வுதான்.

கூட்டிக்கொடுக்கும் புத்தியைவிடவா குரங்குப்புத்தி மோசமாது சமாதனம் அங்கிள்?

Link to comment
Share on other sites

உவரை மாதிரி புருடா விடுற ஆக்களுக்கு நல்ல பதில் மற்றும் குளப்பத்திலிருக்கும் மக்களிற்கு தெளிவுகள் விளக்கங்கள் இந்த வாரத்து நிலவரத்தில்

http://www.eelamist.com/podcast/index.php?d1=NTT&p=30

அடுத்த வாரத்தில் இருந்து நிலவரம் தமிழ் ஒளி இணையத்தில் மீண்டும் ஞயிற்றுக் கிழமை ஒளிபரப்பப்படுமாம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.