Jump to content

ஆயுத எழுத்து

Recommended Posts

என்னுரை

வாசகர்களிற்கு வணக்கம்..

இது வரை காலங்கள் பத்திரிகை,சஞ்சிகைகளில் சிறு கதைகளையும்,கட்டுரைகளையும் எழுதிக்கொண்டிருந்த எனது முதலாவது நாவல் முயற்சி இது.கடந்த முப்பது வருடங்களாக இலங்கைத்தீவில் ஈழத்திற்கான ஆயுத விடுதலைப் போராட்டம் நடந்து முடிந்து விட்டிருக்கும் நிலையில், அந்தப் போராட்டத்தில் நான் பார்த்த, கேட்டு அறிந்த,நேரடியாகத் தொடர்புபட்ட பல முக்கிய விடயங்களையும், 1983 ம் ஆண்டு காலப் பகுதியிலிருந்து தொடங்கி இந்த நாவலிற்குள் அடக்கியிருக்கிறேன. இதில் வரும் சம்பவங்கள் அனைத்தும் ஒரே நபருடன் சம்பந்தப் பட்டவையல்ல. பல நபர்களும் சம்பந்தப் பட்ட பல்வேறு சம்பவங்கள். ஆனால் இலகுவாக நாவலை நகர்த்துவதற்காக ஒரு கதாநாயகனை உருவாக்கி அவனூடாகவே இறுதிவரை நாவலை நகர்த்தியிருக்கிறேன். அதனால்தான் நாயகனிற்கு நான் பெயரே வைக்கவில்லை. புத்தகத்தின் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை அவன் என்றே அழைத்திருக்கிறேன். அவன் என்பவன் பலர். அவனிற்கு ஒவ்வொரு ஊர்களிலும் ஒவ்வொரு நாட்டிலும் வெவ்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டான். பல கடவுச்சீட்டுக்களில் பல நாடுகளிற்கும் பறந்து திரிந்திருந்தான். ஒவ்வொரு நண்பர்களிடமும் ஒவ்வொரு பெயர்களில் அறிமுகம் ஆகியிருக்கிறான். எனவே இந்தப் புத்தகத்தினைப் படிப்பவர்கள் பலர் இதில் வரும் சம்பவங்களுடன் தொடர்பு பட்டிருக்கலாம். பல சம்பவங்கள் அவர்களிற்கு மனதில் நிழலாக நினைவிற்கும் வரலாம். அல்லது கேள்விப் பட்டிருக்கலாம். அப்பொழுதெல்லாம் அவனும் ஒவ்வொரு பெயரில் அவர்களிற்கு அறிமுகமாகியிருப்பான். எனவே அவனும் நினைவில் வந்து போவான் ஆகவே அந்த சம்பவங்கள் நினைவிற்கு வந்தவர்கள் அட..அவனா இவன் என்று தங்களிற்கு தெரிந்த பெயரை நினைத்துக் கொள்வார்கள். அல்லது அட அவனா நீயி என்று வடிவேலு பாணியிலும் நினைக்கலாம்...இந்த நாவலைப் படிக்கும் உங்களிற்குள் கோபம், கெலைவெறி,வெறுப்பு, ஆதங்கம், ஆச்சரியம், சிரிப்பு, கவலை,சலிப்பு என்கிற ஏதாவது ஒரு உணர்வையாவது ஏற்படுத்தியிருப்பின், இந்தப் புத்கத்தினை நான் எழுதிய நோக்கத்தில் வெற்றி பெற்றிருக்கிறேன் என்றே எடுத்துக் கொள்வேன்.

கிழக்கு மாகாண சம்பவங்களின் தகவல்களை சரிபார்ப்பதற்கு உதவிய கிழக்கு மகாணப் பத்திரிகையாளர்களாக பணியாற்றிய இரா.துரைரட்ணம்(சுவிஸ்) நிராச் டேவிட்(சுவிஸ்) ஆகியோரிற்கும்,நாவலிற்கான அட்டை வடிவமைப்பு மற்றும் ஓவியங்களை செய்து தந்த கார்த்திக் மேகாவிற்கும்,பல பகுதிகளாக எழுதி முடித்த கதைகளைத் தொகுத்து ஒரு நாவல் வடிவம் கொடுத்த யோ.கர்ணனிற்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்வதோடு, நான் எழுதத் தொடங்கிய காலங்களில் எனது எழுத்துக்களை வெளியே எடுத்து வந்து அதற்கென வாசகர்களை உருவாக்கித் தந்த யாழ் இணையம்,ஒருபேப்பர் பத்திரிகை (இலண்டன்),பூபாளம் பத்திரிகை (கனடா),எதுவரை இணைய சஞ்சிகை( இலண்டன்), மலைகள் (இந்தியா)ஆகிய ஆசிரியர் குழுவினரையும் நன்றியோடு நினைவு கூர்ந்து இந்தப் புத்தகத்தில் என்னுடைய அனுபவங்களில் வெறும் நாற்பது வீதமானவற்றையே பதிவு செய்துள்ளேன். மிகுதியில் பலவற்றை வெளிநாடுகளில் வாழும் பலரது தனிப்பட்ட பாதுகாப்புக்கள் கருதியும், அதே நேரம் பல விடயங்களை இன்னமும் எழுதக் கூடிய சந்தர்ப சூழ்நிலை உருவாகவில்லையென நான் கருதியதாலும் எழுதவில்லை. குறிப்பாகப் புலிகளின் வெளிநாட்டு வலையமைப்பு பற்றிய பல விடயங்கள் இதில் அடங்கும். நான் எழுதாமல் விட்ட மிகுதி அறுபது வீதம் சம்பவங்களை இவற்றுடன் சம்பத்தப் பட்ட வேறு யாரோ ஒரு நாளில் எழுதலாம். அல்லது இந்தப் புத்தகத்தில் இறுதியில் கார் விபத்தில் சிக்கிய ""அவன்"" என்கிற கதாநாயகனைக் காயங்களோடு உயிரைக் காப்பாற்றி மீண்டுக் கொண்டு வந்து நானே எனது வாழ்நாளின் இறுதிக் காலங்களில் இனியென்ன சாகப் போகின்றேன். மிகுதியையும் எழுதிவிட்டு செத்துப் போகலாமென நினைத்து எழுதவும்கூடும். காலம் என்பது வலியது காலமும் இயற்கையுமே அனைத்தையும் தீர்மானிக்கின்றது. எனவே இதனையும் காலத்தின் கைகளிலேயே கொடுத்துவிட்டு விடை பெறுகிறேன். நன்றி. வணக்கம்..

நாவலைப் படித்தவர்கள் உங்கள் கருத்துக்களை sathiri@gmail.com என்கிற மின்னஞ்சலிற்கு அனுப்பி வையுங்கள்.

படத்தினை பெரிதாக்கி பார்க்க அல்லது எனது முகப்புத்தக கருத்துக்களை பார்க்க இங்கு அழுத்தவும்.நன்றி.

எனது நாவல் ஆயுத எழுத்து விரைவில்.ஓவியங்கள் கார்த்திக்மேகா..தொகுப்பு யோ.கர்ணன்.
10513449_10201297938530242_4874489249060

Link to comment
Share on other sites

  • Replies 141
  • Created
  • Last Reply

நாவலில் முரண்பாடுகளுக்கும் ,புலன் +நாய் வுக்கும் குறைவில்லாமல் இருக்கும் என்றீங்கள் :D  :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதை எழுதியவரே மறைமுகமாக சொல்லி கொள்கிறார் இது ஒரு சுய விளம்பரம் என்று.
வியாபார யுத்தி காரணமாக அடைமொழிகள் அடைக்கலம் தேடிகொண்டிருக்கலாம்.
 
இந்த எழுத்தாளார் எதையும் எழுத தெரியாதவர் என்பது என்னுடைய தனிபட்ட கருத்து. (அதுக்கு மற்று கருத்து இருக்கலாம்). ஏற்கனவே இவர் எழுதிய பலவற்றை நான் படித்து தெரிந்துகொண்டது. இவர் ஒரு சுய விளம்பர தாரி என்பதை மட்டுமே.
 
எழுதுவது என்பதற்கு ஒரு தர்ப்பாரியம் இருக்கிறது. அதில் எதுவும் இவரிடம் இதற்கு முன்பு இருக்கவில்லை.
இதில் இருக்கலாம் என்று தேட எனக்கு இஸ்டமும் இல்லை.
Link to comment
Share on other sites

நாவலை எப்படி பெற்றுக்கொள்வது?  மின் பிரதி உண்டா ?

வடலிமற்றும் மலைகள் இணையத்தில் ஒன்லைனில் பெற்றுக்கொள்ளும் வசதி விரைவில் ஏற்படுத்தப்படும்.பின்னர் இணைப்புகள் இங்கு தருகிறேன்.

இந்த நாவலைப் படிக்கும் உங்களிற்குள் கோபம், கெலைவெறி,வெறுப்பு, ஆதங்கம், ஆச்சரியம், சிரிப்பு, கவலை,சலிப்பு என்கிற ஏதாவது ஒரு உணர்வையாவது ஏற்படுத்தியிருப்பின், இந்தப் புத்கத்தினை நான் எழுதிய நோக்கத்தில் வெற்றி பெற்றிருக்கிறேன் என்றே எடுத்துக் கொள்வேன்.

:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான நூல்களை வரவேற்பதில்.. மிகவும் எச்சரிக்கையோடு இருப்பது அவசியம்.

சமீப காலமாக.. வரலாற்றுத் திரிபுகளை பலர் நூல்களில் ஏற்றி சந்தர்ப்பவாத எழுத்தாளர்களாகி வரும் நிலையில்... அதன் தொடர்சி தான் இது. இயக்கத்தை விட்டு வெளியேற்றப்பட்டு.. இவ்வளவு காலமும் என்ன தூங்கிக்கிட்டா இருந்தார்கள். அப்பவே எழுதி தொலைச்சிருக்கலாமில்ல. "அவன்" பற்றி சொல்லப்படுவதில் உள்ள சரி பிழையாவது தெரிய வந்திருக்கும்...!!!! இப்போ சாட்சியங்கள் அற்ற சபையில் உளறிக் கொட்டுவதெல்லாம்.. தத்துவம் என்றாகும் சந்தர்ப்ப சூழ்நிலையில்.. இவர்கள் குட்டையைக் கலக்கி மீன்பிடிக்க நிற்கிறார்கள்.  :icon_idea::)

Link to comment
Share on other sites

சாத்திரி உங்களை மீண்டும் உங்கள் நாவலுடன் யாழில் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.

புத்தகங்களை பெறக்கூடிய இடங்களையும் அறியத்தாருங்கள் வாசித்துவிட்டு கருத்துகளை வைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனில் எதாவது புத்தகக் கடையில் வாங்கலாமோ?...நான் ஒன்லைனில் வாங்குவதில்லை.கிருபன் இந்த புத்தகத்தை ஒன்லைனில் வாங்கினால் எனக்கும் ஒரு பிரதி வாங்கி அனுப்பும் படி கேட்டுக் கொள்கிறேன்.புத்தகத்தை வாசித்த பின் என் கருத்தை சொல்கிறேன்.ஏன் சாஸ்திரியார் நூல் வெளியீடு ஒன்றும் செய்யவில்லையோ?

வடலிக்காரரிடம் ஒன்லைனில் வாங்கிய அனுபவம் இருக்கின்றது. அதனால் இப்போது ஒழுங்காக அனுப்புவார்களே என்ற சந்தேகம் உள்ளது!

இலண்டனில் சாத்திரியாரின் புத்தகம் எப்படியும் வந்து சேரும்தானே. எனக்கு இலகுவாக எடுக்கக்கூடிய வசதியை சாத்திரியார் ஒழுங்குசெய்வார் என்ற நம்பிக்கை உள்ளது. ஒன்றுக்கு இரண்டாக வாங்கினால் போச்சு.

சிவப்புப் பெட்டியில் போட்டால் ரதியிடம் வந்து சேராமலா போய்விடும்!

Link to comment
Share on other sites

கனடா.இங்கிலாந்து.இந்தியா. பிரான்ஸ்.டென்மார்க்.இலங்கை ஆகிய நாடுகளில் வெளியிட திட்டமிட்டுள்ளேன். மற்றும் வடலி.மலைகள் ஆகிய இணையங்களில் ஒன்லைனில் பெற்றுக்கொள்ளும் வசதி ஏற்படுத்தப்படும்.நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
அதற்கென வாசகர்களை உருவாக்கித் தந்த யாழ் இணையம்
நானும் ஒரு அபிமான வாசகன்......அத்துடன் ஊரான்....:D
Link to comment
Share on other sites

வடலிமற்றும் மலைகள் இணையத்தில் ஒன்லைனில் பெற்றுக்கொள்ளும் வசதி விரைவில் ஏற்படுத்தப்படும்.பின்னர் இணைப்புகள் இங்கு தருகிறேன்.

நன்றி

படிக்க ஆவலாக உள்ளேன்

உங்கள் எழுத்துக்கள் நாவலாக வரவேண்டும் என்று விரும்பியவர்களில் நானும் ஒருவன். அதை  இக்களத்தில் சொல்லியும் உள்ளேன். அந்தவகையில் உங்கள் மூலம் ஒரு நாவல் வந்தது மகிழ்ச்சியானது

விருப்பு வெறுப்பு விமர்சனங்கள் எதிர்பார்ப்புகளைக் கடந்து இவ்வாறான பதிவுகள் அவசியமானது. என்னைப்பொறுத்தவரை ஒரு நாவலும் அதற்கான விமர்சனமும் இணைந்து நிற்கும்போதுதான் ஒரு காலம் பதிவுசெய்யப்படும். கீழே உள்ள கருத்தில் அதற்கான இடத்தையும் கொடுக்கின்றீர்கள்.

இந்த நாவலைப் படிக்கும் உங்களிற்குள் கோபம், கெலைவெறி,வெறுப்பு, ஆதங்கம், ஆச்சரியம், சிரிப்பு, கவலை,சலிப்பு என்கிற ஏதாவது ஒரு உணர்வையாவது ஏற்படுத்தியிருப்பின், இந்தப் புத்கத்தினை நான் எழுதிய நோக்கத்தில் வெற்றி பெற்றிருக்கிறேன் என்றே எடுத்துக் கொள்வேன்.

Link to comment
Share on other sites

இந்த அவன் என்ற பாத்திரம்

  1. வாசகர்களை சம்பவங்களின் ஊடாக பயணிக்க வைத்து அதனை வாசகர்கள் எடை போட / திறனாய்வு செய்ய வைக்குமா ?
  2. அல்லது உங்கள் கருத்துக்களை வாசகர் மீது நியாயப்படுத்த விளையுமா என அறிய ஆவல்

நாவல் என்று கூறியதால் சம்பவங்களின் தொகுப்போ என்றும் தெரியவில்லை ?????????  நியாய விலையில் கிடைக்கும் என்ன நினைக்கிறன் . செலவுக்கு மேலாக கிடைக்கும் வருமானம் ஏதோ charity போவதாக சொன்ன ஞாபகம் :lol: :lol: :lol:

Link to comment
Share on other sites

இந்த அவன் என்ற பாத்திரம்

  • வாசகர்களை சம்பவங்களின் ஊடாக பயணிக்க வைத்து அதனை வாசகர்கள் எடை போட / திறனாய்வு செய்ய வைக்குமா ?
  • அல்லது உங்கள் கருத்துக்களை வாசகர் மீது நியாயப்படுத்த விளையுமா என அறிய ஆவல்
நாவல் என்று கூறியதால் சம்பவங்களின் தொகுப்போ என்றும் தெரியவில்லை ????????? நியாய விலையில் கிடைக்கும் என்ன நினைக்கிறன் . செலவுக்கு மேலாக கிடைக்கும் வருமானம் ஏதோ charity போவதாக சொன்ன ஞாபகம் :lol: :lol: :lol:
மக்கள் கடைகளில் கிடைக்கும் குஞ்சி .

மக்கள் கடைகளில் கிடைக்கும் குஞ்சி .

:)

மக்கள் கடைகளில் கிடைக்கும் குஞ்சி .

:)

அல்லது அவர் இருக்கும் நேசக்கரதுக்கு கொடுப்பார்
Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் ...

அண்ணே  கிழக்கு மகாணப் பத்திரிகையாளர்களாக பணியாற்றிய இரா.துரைரட்ணம்(சுவிஸ்) நிராச் டேவிட்(சுவிஸ்) இவர்கள் இருவரும் ஆயுத எழுத்து என்னும் புத்தகம் ஒன்று வருவதா தங்களுக்கு தெரியாது என்று கூறி உள்ளதா ஒரு தகவல் ...நிராஜ் டேவிட்  உங்களிடம் அது பற்றி தொலைபேசியில் பேசியதாக கூட ஒரு கதை வருது அவர்களிம் அனுமதி இல்லாமல் நிங்கள் விளம்பர நோக்குடன் அவர்களின் பெயர் பாவித்து இருப்பதா சொல்லப்படுது உண்மையே இது .

சாத்திரியார் புலநாயை அனுப்பித் தகவல்களைத் திரட்டியிருப்பார். இவைக்கு என்ன கதைச்சது, எப்ப கதைச்சது எல்லாம் தெரியாமலேயே விடயங்கள் கறக்கப்பட்டிருக்கும்! <_<

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் ...

அண்ணே கிழக்கு மகாணப் பத்திரிகையாளர்களாக பணியாற்றிய இரா.துரைரட்ணம்(சுவிஸ்) நிராச் டேவிட்(சுவிஸ்) இவர்கள் இருவரும் ஆயுத எழுத்து என்னும் புத்தகம் ஒன்று வருவதா தங்களுக்கு தெரியாது என்று கூறி உள்ளதா ஒரு தகவல் ...நிராஜ் டேவிட் உங்களிடம் அது பற்றி தொலைபேசியில் பேசியதாக கூட ஒரு கதை வருது அவர்களிம் அனுமதி இல்லாமல் நிங்கள் விளம்பர நோக்குடன் அவர்களின் பெயர் பாவித்து இருப்பதா சொல்லப்படுது உண்மையே இது .

நிராஜ் அல்லது துரைரத்தினம் உங்களிடம் அப்படி சொல்லியிருந்தால் மட்டும் இங்கு வந்து எழுதுங்கள். அல்லது அவர்களோடு நேரடியாக தொலை பேசி இணைப்பை ஏற்படுத்தி உங்களையும் இணைக்கிறேன் நேரடியாக கேட்கவும். அப்படி நான் அவர்களது பெயர்களை தவறாக பயன் படுத்தினேன் என்று அவர்கள் சொன்னால் நான் எனது புத்தகங்கள் அனைத்தையும் வெளியிடாமல் கொழுத்தி விடுவேன். அப்படி இல்லையெனில் நீங்கள் என்ன செய்வீர்கள் சொல்லவும்

இது உங்களிடம் கேள்வியாகவே கேட்கப்பட்டது ......அதுக்கான பதிலை அளிப்பிர்கள் என்னும் நோக்குடன் ஏனெனின் இந்த தகவலை கூறி ஆளுக்கு நான் இதை ஆதாரம் காட்டி ஆகணும் அவ்வளவே ..

Link to comment
Share on other sites

நிராஜ் அல்லது துரைரத்தினம் உங்களிடம் அப்படி சொல்லியிருந்தால் மட்டும் இங்கு வந்து எழுதுங்கள். அல்லது அவர்களோடு நேரடியாக தொலை பேசி இணைப்பை ஏற்படுத்தி உங்களையும் இணைக்கிறேன் நேரடியாக கேட்கவும். அப்படி நான் அவர்களது பெயர்களை தவறாக பயன் படுத்தினேன் என்று அவர்கள் சொன்னால் நான் எனது புத்தகங்கள் அனைத்தையும் வெளியிடாமல் கொழுத்தி விடுவேன். அப்படி இல்லையெனில் நீங்கள் என்ன செய்வீர்கள் சொல்லவும்

புத்தகம் வெளியிடும் நீங்கள் இவற்றை எல்லாம் தாண்டி போகவேண்டும் .வதந்திகளுக்கு பதில் சொல்ல தொடங்கினால் பின்னர் அதுவே வேலையாகிவிடும் .பதில் சொல்ல வெளிக்கிட்ட நம்ம ----- நிலை எவருக்கும் வரக்கூடாது 

Link to comment
Share on other sites

புத்தகம் வெளியிடும் நீங்கள் இவற்றை எல்லாம் தாண்டி போகவேண்டும் .வதந்திகளுக்கு பதில் சொல்ல தொடங்கினால் பின்னர் அதுவே வேலையாகிவிடும் .பதில் சொல்ல வெளிக்கிட்ட நம்ம ----- நிலை எவருக்கும் வரக்கூடாது

இந்த விடையத்தை எனதுமுக புத்தகத்தில் பதிந்து நிராஜ் மற்றும் துரை ரத்தினம் அஞ்சரன் என்கிற யோ அருணகிரி ஆகியோருக்கும் பகிர்ந்துள்ளேன் அவர்கள் பதில் தருவார்கள்

Gowripal Sathiri Sri ...

 இன்று யாழ் இணையத்தில் அஞ்சரன் என்பவர் முக புத்தகத்தில் Yogoo Arunakiri ஒரு குற்ற சாட்டை வைத்திருக்கிறார் அது என்னவெனில் ...

அண்ணே கிழக்கு மகாணப் பத்திரிகையாளர்களாக பணியாற்றியhttps://www.facebook.com/ramasamy.thurairatnamஇரா.துரைரட்ணம்(சுவிஸ்)https://www.facebook.com/niraj.david?fref=ts நிராச் டேவிட்(சுவிஸ்) இவர்கள் இருவரும் ஆயுத எழுத்து என்னும் புத்தகம் ஒன்று வருவதா தங்களுக்கு தெரியாது என்று கூறி உள்ளதா ஒரு தகவல் ...நிராஜ் டேவிட் உங்களிடம் அது பற்றி தொலைபேசியில் பேசியதாக கூட ஒரு கதை வருது அவர்களிம் அனுமதி இல்லாமல் நிங்கள் விளம்பர நோக்குடன் அவர்களின் பெயர் பாவித்து இருப்பதா சொல்லப்படுது உண்மையே இது ....////அவருக்கு நான் கொடுத்த பதில் நிராஜ் அல்லது துரைரத்தினம் உங்களிடம் அப்படி சொல்லியிருந்தால் மட்டும் இங்கு வந்து எழுதுங்கள். அல்லது அவர்களோடு நேரடியாக தொலை பேசி இணைப்பை ஏற்படுத்தி உங்களையும் இணைக்கிறேன் நேரடியாக கேட்கவும். அப்படி நான் அவர்களது பெயர்களை தவறாக பயன் படுத்தினேன் என்று அவர்கள் சொன்னால் நான் எனது புத்தகங்கள் அனைத்தையும் வெளியிடாமல் கொழுத்தி விடுவேன். அப்படி இல்லையெனில் நீங்கள் என்ன செய்வீர்கள்https://www.facebook.com/yogakumark சொல்லவும் இது ....

Link to comment
Share on other sites

அதே நேரம் அஞ்சரன் உங்களிற்கு நிராஜ் மற்றும் துரை ரத்னம் அண்ணரோடு தொடர்புகள் இருக்காது எனவே எனது இலக்கம் 0611149470 தொடர்பு கொள்ளவும் நானே இணைப்பை ஏற்படுத்துகிறேன் அல்லது உங்களுக்கு போன் அடிக்கிறேன்

சில விடையங்களை உடனம்  தெளிவுபடுத்தினா நல்லது தானே பின்னர் இப்படியான கேள்விகள் எழாமல் இருக்கும் அல்லவா .

Link to comment
Share on other sites

சற்று முன்னர் தான் அஞ்சரனோடு தொலை பேசியில் கதைத்தேன் அப்படி ஒரு தகவலை தயாளன் துரை ரத்னம் என்பவரே கொடுத்ததாக சொன்னார் இவர் அண்மைய. காலத்தில் திருமணமாகி லண்டனில் இருக்கிறார் மிகுதி விடயங்கள் விரைவில் எனவே நன்றி வணக்கம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சாத்தர் உங்கள் ஆக்கம் வெளிவரும்போது பலரைப்பேசத்தூண்டும் என்பதில் ஐயமில்லை.கனடாவில் எப்போது உங்கள் நூல் வெளியீடு? உங்கள் கருத்துக்களைவிட உங்கள் எழுத்தில் ஈர்ப்பு இருக்கிறது. ஒரு நூல் வெளிவருமுன்னர் விமர்சனத்தையோ குற்றச்சாட்டுகளையோ அல்லது இவர் இப்படித்தான் எழுதுவார் என்றோ கருத்திடமுடியாதுதானே..... இருப்பினும் வாசகர்களிடம் இது தொடர்பாக வாசிக்காமலே சர்ச்சை எழுவதைப்பார்க்கும்போது வாசிப்பிற்குப்பின்னால் நிச்சயம் இந்நாவல் பேசப்படுபொருளாக இருக்கப்போகிறது அந்தவகையில் எழுதிய சாத்தருக்கு பெரும் வெற்றியாக அமையும். வரவேற்போம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.