Jump to content

வங்கதேசத்தில் இந்திய அணி: ஒருநாள் தொடர் நாளை ஆரம்பம்


Recommended Posts

வங்கதேசத்தில் இந்திய அணி: ஒருநாள் தொடர் நாளை ஆரம்பம்

ஜூன் 13, 2014.

கோல்கட்டா: மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்க, ரெய்னா தலைமையிலான இளம் இந்திய அணி நேற்று வங்கதேசம் சென்றது.

இம்மாத இறுதியில் இங்கிலாந்து செல்லும் இந்திய அணி, 5 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் ஒரே ஒரு சர்வதேச ‘டுவென்டி–20’ தொடரில் பங்கேற்கிறது. இதற்கு தயாராகும் விதமாக, இந்திய அணி, வங்கதேசத்தில் மூன்று போட்டிகள் (ஜூன் 15, 17, 19) கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. தோனி, கோஹ்லி, அஷ்வின், ரோகித் சர்மா உள்ளிட்டோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டதால், சுரேஷ் ரெய்னா தலைமையிலான இந்திய அணி விளையாடுகிறது.

முதல் போட்டி மிர்புரில் நாளை நடக்கிறது. இதற்காக ரெய்னா தலைமையிலான இந்திய அணியினர் கோல்கட்டாவில் இருந்து விமானம் மூலம் வங்கதேசம் வந்தனர்.

கேப்டன் ரெய்னா, இதுவரை 9 போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்தி உள்ளார். இதில் 4 வெற்றி, 5 தோல்வியை பெற்றுத் தந்தார்.

இந்திய அணி விவரம்: ரெய்னா (கேப்டன்), உத்தப்பா, ரகானே, புஜாரா, அம்பதி ராயுடு, மனோஜ் திவாரி, கேதர் ஜாதவ், விரிதிமன் சகா (விக்கெட் கீப்பர்), பர்வேஸ் ரசூல், அக்சர் படேல், வினய் குமார், உமேஷ் யாதவ், ஸ்டூவர்ட் பின்னி, மோகித் சர்மா, அமித் மிஸ்ரா.

http://sports.dinamalar.com/2014/06/1402679271/rainaindiacricket.html

Link to comment
Share on other sites

பட்டையை கிளப்புமா இளமை பட்டாளம்: இன்று முதலாவது ஒருநாள் போட்டி

ஜூன் 14, 2014.மிர்புர்: இந்தியா, வங்கதேச அணிகள் மோதும் முதலாவது ஒரு நாள் போட்டி இன்று நடக்கிறது. இதில், ரெய்னா தலைமையிலான இளம் இந்திய அணி சாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

வங்கதேசம் சென்றுள்ள இந்திய அணி 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. தோனி, கோஹ்லி உள்ளிட்ட 7 சீனியர் வீரர்களுக்கு ஓய்வு தரப்பட்டதால், ரெய்னா அணியை வழிநடத்துகிறார். முதல் போட்டி மிர்புரில் இன்று நடக்கிறது.

 

இந்திய அணியை பொறுத்தவரை ஐ.பி.எல்., தொடருக்குப்பின் முதல் போட்டியில் பங்கேற்கிறது. ஐ.பி.எல்., தொடரில் 16 போட்டியில் விளையாடிய ரெய்னா 523 ரன்கள் குவித்தார். இந்த ‘பார்ம்’ இன்று கைகொடுக்கும். கடந்த ஆசிய கோப்பையில் கழற்றிவிடப்பட்ட இவர், இதில் ஜொலிப்பது அவசியம். ஐ.பி.எல்., தொடரில் அதிக (16 போட்டி, 660 ரன்கள்) ரன்கள் குவித்த ராபின் உத்தப்பா அசத்தலாம். ஆறு ஆண்டுக்குப்பின் கிடைத்த பொன்னான வாய்ப்பை இவர் தக்க வைப்பது நல்லது. 

 

புஜாரா விழிப்பாரா:

இவருடன் இணைந்து ரகானே வலுவான அடித்தளம் அமைப்பது அவசியம். டெஸ்ட் பேட்ஸ்மேன் என்ற பெயர் எடுத்த புஜாரா, ஒரு நாள் போட்டிக்கு இதுதான் கடைசி வாய்ப்பு என்பதை உணர்ந்தால் நல்லது. ‘மிடில்–ஆர்டரில்’ மனோஜ் திவாரி, கேதர் ஜாதவ், ராயுடு இடையே களம் காண்பதில் போட்டி உள்ளது. அதே நேரத்தில் விக்கெட் கீப்பர் சகாவின் இடம் உறுதி.

 

மிஸ்ரா அசத்துவாரா:

பந்துவீச்சில் மோகித் சர்மா, உமேஷ் என இரண்டு வேகங்கள் உள்ளன. இதில் மோகித் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இம்மைதானம் சுழலுக்கு ஒத்துழைக்கும் என்பதால், அமித் மிஸ்ரா சுதாரிக்க வேண்டும். இதில் சாதித்து, இங்கிலாந்து தொடரில் புறக்கணித்த தேர்வாளர்களிடம் திறமை நிரூபிக்கலாம். இவருக்கு கைகொடுக்க அக்சர் படேல், பர்வேஸ் ரசூல் உள்ளனர்.

 

சாகிப் நம்பிக்கை:

சொந்த மண்ணில் நடந்த ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடரில் முதல் சுற்றுடன் வெளியேறிய சோகத்தில் வங்கதேச அணி உள்ளது. இதிலிருந்து மீள இந்த அணியினர் பொறுப்புடன் செயல்பட காத்திருக்கின்றனர். கேப்டன் ரகிம், ‘ஆல்–ரவுண்டர்’ சாகிப், தமிம் இக்பால் என பேட்டிங் வரிசை பலமாகவே உள்ளது. சுழலில் சோகக் காஜி, வேகத்தில் மொர்டசா தங்கள் பங்களிப்பை தர வேண்டும்.

 

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஒளிபரப்பு

தோனி, கோஹ்லி உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் இல்லாததால் தொடரின் மீது ரசிகர்கள் பார்வை திரும்புவது சந்தேகமே. இந்த நேரத்தில் உலக கோப்பை கால்பந்து தொடரும் நடப்பது பார்வையாளர்களின் எண்ணிக்கையை குறைக்கலாம். இந்த காரணத்தினால் தொடரை நேரடியாக ஒளிபரப்ப எந்த ‘டிவி’ நிறுவனமும் முன்வரவில்லை. தற்போது ‘ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

 

http://sports.dinamalar.com/2014/06/1402762052/rainaindiacricket.html

 

 

Link to comment
Share on other sites

இந்தியா அசத்தல் வெற்றி: வங்கதேசம் ஏமாற்றம்
ஜூன் 15, 2014.

 

மிர்புர்: வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி வெற்றியுடன் துவக்கியது. மழையால் பாதிக்கப்பட்ட முதலாவது ஒருநாள் போட்டியில், உத்தப்பா, ரகானேவின் அரைசதம் கைகொடுக்க,  7 விக்கெட் வித்தியாசத்தில் ‘டக்வொர்த் லீவிஸ்’ முறையில் வெற்றி பெற்றது.     

 

வங்கதேசம் சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி மிர்புரில் நேற்று நடந்தது. இந்திய அணியில் பர்வேஸ் ரசூல், அக்சர் படேல் அறிமுக வீரர்களாக களமிறங்கினர். ‘டாஸ்’ வென்ற வங்கதேச கேப்டன் முஷ்பிகுர் ரஹிம், ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.                 

முஷ்பிகுர் அபாரம்: வங்கதேச அணிக்கு தமிம் இக்பால் (0), மோமினுல் ஹேக் (6) ஏமாற்றினர். மற்றொரு துவக்க வீரர் அனாமுல் ஹேக் (44) அரைசத வாய்ப்பை இழந்தார். அபாரமாக ஆடிய கேப்டன் முஷ்பிகுர் ரஹிம் (59)அரைசதம் அடித்தார்.

 

சாகிப் அரைசதம்: ‘மிடில்–ஆர்டரில்’ வந்த சாகிப் அல் ஹசன் (52), தன்பங்கிற்கு அரைசதம் அடிக்க அணியின் ஸ்கோர் உயர்ந்தது. பின் களமிறங்கிய மகமதுல்லா (41), நசிர் ஹொசைன் (22) ஓரளவு கைகொடுத்தனர். ஜியாவுர் ரஹ்மான் (2), மொர்டசா (18) நிலைக்கவில்லை.                 

வங்கதேச அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 272 ரன்கள் எடுத்தது. அப்துர் ரசாக் (16), அல்–அமின் ஹொசைன் (1) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் உமேஷ் யாதவ் 3, அக்சர் படேல், பர்வேஸ் ரசூல் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.  

          

சூப்பர் துவக்கம்: எட்டக்கூடிய இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு ராபின் உத்தப்பா, அஜின்கியா ரகானே ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. அபாரமாக ஆடிய உத்தப்பா, ஒருநாள் அரங்கில் தனது 6வது அரைசதம் அடித்தார். முதல் விக்கெட்டுக்கு 99 ரன்கள் சேர்த்த போது உத்தப்பா (50) அவுட்டானார்.     

மழை குறுக்கீடு: இந்திய அணி 16.4 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 100 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட, ஆட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது. பின், இரண்டு மணி நேரத்துக்கு மேல், மீண்டும் போட்டி துவங்கியது. இந்திய அணியின் வெற்றிக்கு ‘டக்வொர்த் லீவிஸ்’ முறைப்படி 26 ஓவரில் 150 ரன்கள் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.      

எளிய இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு புஜாரா (0) ஏமாற்றினார். மறுமுனையில் அசத்திய ரகானே, தன்பங்கிற்கு அரைசதம் அடித்தார். இவர், 64 ரன்களுக்கு அவுட்டானார். அடுத்து வந்த கேப்டன் ரெய்னா, மகமதுல்லாவில் 25வது ஓவரில் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரி அடித்து வெற்றியை உறுதி செய்தார்.     

 

இந்திய அணி 24.5 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 153 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ரெய்னா (15), அம்பதி ராயுடு (16) அவுட்டாகாமல் இருந்தனர். வங்கதேசம் சார்பில் சாகிப் அல் ஹசன் 2 விக்கெட் வீழ்த்தினார்.     

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1–0 என முன்னிலை வகிக்கிறது. இரண்டாவது போட்டி மிர்புரில் நாளை (ஜூன் 17) நடக்கிறது.

 

 

http://sports.dinamalar.com/2014/06/1402853004/IndiaBangladeshOneDayInternationalCricket.html

Link to comment
Share on other sites

கோப்பை வென்றது இந்தியா: மழையால் 3வது போட்டி ரத்து
ஜூன் 19, 2014.

 

மிர்புர்: இந்தியா, வங்கதேசம் அணிகள் மோதிய மூன்றாவது ஒருநாள் போட்டி மழையால் பாதியில் ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 2–0 எனக் கைப்பற்றி, கோப்பை வென்றது.

 

வங்கதேசம் சென்ற இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. முதலிரண்டு போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி 2–0 என ஏற்கனவே தொடரை கைப்பற்றி, முன்னிலை வகித்தது. மூன்றாவது மற்றும் கடைசி போட்டி மிர்புரில் நேற்று நடந்தது.

 

இந்திய அணியில் அமித் மிஸ்ரா, உமேஷ் யாதவ் நீக்கப்பட்டு வினய் குமார், மனோஜ் திவாரி சேர்க்கப்பட்டனர். வங்கதேச அணியில் ஜியாவுர் ரஹ்மானுக்கு பதிலாக சோஹக் காஜி இடம் பிடித்தார். ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் ரெய்னா, ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.

 

மழை குறுக்கீடு:

இப்போட்டியில் மழையின் பாதிப்பு அதிகமாக இருந்தது. இந்திய அணி 8.3 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 13 ரன்கள் எடுத்த போது முதலில் மழை வந்தது. பின், 12.3 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 37 ரன்கள் எடுத்த போது மீண்டும் மழை பெய்தது.

மழை நின்றபின் 40 ஓவர்களாக குறைக்கப்பட்டு மீண்டும் போட்டி நடந்தது. இந்திய அணி 34.2 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 119 ரன்கள் எடுத்திருந்த போது மூன்றாவது முறையாக மழை குறுக்கிட,  ஆட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது. தொடர்ந்து மழை நீடித்ததால், போட்டியை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனையடுத்து இரு அணிகளின் கேப்டன்கள் சம்மதத்துடன் இப்போட்டி ரத்து செய்யப்பட்டதாக அம்பயர்கள் தெரிவித்தனர்.

 

இதன்மூலம் இந்திய அணி 2–0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி, கோப்பை வென்றது.

 

 

http://sports.dinamalar.com/2014/06/1403198415/rainaindiacricket.html


‘பின்னி’ எடுத்தார் பின்னி: தொடரை வென்றது இந்தியா: சுருண்டது வங்கதேசம்
ஜூன் 17, 2014.

 

மிர்புர்: பந்துவீச்சில் ‘பின்னி’ எடுத்த ஸ்டூவர்ட் பின்னி 6 விக்கெட் வீழ்த்த, இந்திய அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது. இதன் மூலம் தொடரை 2–0 என வென்றது.

 

வங்கதேசம் சென்றுள்ள இந்திய அணி 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்தியா வென்றது. இரண்டாவது போட்டி நேற்று மிர்புரில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற வங்கதேச அணி கேப்டன் முஷ்பிகுர் ரகிம் ‘பவுலிங்’ தேர்வு செய்தார். வங்கதேச அணியில் டஸ்கின் அகமது, மிதுன் அறிமுக வாய்ப்பு பெற்றனர்.

 

‘பேட்டிங்’ சொதப்பல்:

இந்திய அணி பேட்டிங்கில் சொதப்பியது. ரகானே டக்–அவுட் ஆகி அதிர்ச்சி தந்தார். மழை பெய்ததால், 5.2 ஓவரில் ஆட்டம் நிறுத்தப்பட்டது. பின் மீண்டும் போட்டி துவங்கியபோது, 41 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதன் பின் பந்துவீச வந்த டஸ்கின் ‘வேகத்தில்’ மிரட்டினார்.

 

இவரிடம் உத்தப்பா (14), ராயுடு (1), புஜாரா (11) என அடுத்தடுத்து சிக்கினர். சகா(4), மொர்டசா பந்தில் அவுட்டானார். ஓரளவுக்கு விளையாடிய கேப்டன் ரெய்னா (27) ரன் அவுட்டாக, கதை முடிந்தது. மீண்டும் பந்தை கையில் எடுத்த டஸ்கின் இம்முறை பின்னி (3), அமித் மிஸ்ராவை (4)வெளியேற்றி திருப்தி அடைந்தார். இந்திய அணி 25.3 ஓவரில் 105 ரன்களுக்கு ஆல்–அவுட்டானது.  வங்கதேச அணி சார்பில் டஸ்கின் அகமது 5, மொர்டசா 2 விக்கெட் வீழ்த்தினார்.

 

மோகித் ஆதிக்கம்:

எளிய இலக்கை துரத்திய வங்கதேச அணியை இந்திய பவுலர்கள் புரட்டி எடுத்தனர். மோகித் சர்மா பந்துவீச்சில் தமிம் இக்பால் (4), அனாமுல் (0)  நடையைக் கட்டினர். முஷ்பிகுர் (11), மிதுனை (26) பின்னி கவனித்து அனுப்பினார். சாகிப்  (4), ஜியார் (0) சத்தமில்லாமல் மோகித்திடம் சரணடைந்தனர்.

 

பின்னி மிரட்டல்:

கடைசி கட்டத்தில் பின்னி விஸ்வரூபம் எடுத்தார். இவரது பந்துவீச்சில் மொர்டசா (2), அல் அமின் (0), நாசிர் (5) அவுட்டாக, வங்கதேச அணி 17.4 ஓவரில் 58 ரன்களுக்கு ஆல்–அவுட்டாகி, 47 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்திய அணி சார்பில் பின்னி 6, மோகித் 4 விக்கெட் வீழ்த்தினர்.

இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 2–0 என கைப்பற்றியது.

 

ஆட்டநாயகன் விருதை பின்னி வென்றார்.
105

வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில், நேற்று இந்திய அணி தனது குறைந்தபட்ச (105) ஸ்கோரை பதிவு செய்தது. இதற்கு முன், 2007 உலக கோப்பை போட்டியில் (போர்ட் ஆப் ஸ்பெயின்) 191 ரன்னுக்கு சுருண்டு இருந்தது.

58

நேற்று 58 ரன்னுக்கு சுருண்ட வங்கதேச அணி, இந்தியாவுக்கு எதிராக, தனது குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்தது. இதற்கு முன், 2003ல் 76 ரன்னுக்கு சுருண்டு இருந்தது.

* கடந்த 2011, மார்ச் மாதம் இதே மிர்புர் மைதானத்தில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 58 ரன்னுக்கு சுருண்ட வங்கதேச அணி, நேற்று மீண்டும் இதே ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

 

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இது தான் வங்கதேச அணியின் குறைந்த பட்ச ஸ்கோர்.

கும்ளே சாதனை தகர்ந்தது

நேற்று 4 ரன்னுக்கு 6 விக்கெட் சாய்த்த ஸ்டூவர்ட் பின்னி, ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் தனது சிறந்த பந்துவீச்சை பதிவு செய்தார்.

தவிர, இந்திய அளவில் முதலிடத்தில் இருந்த கும்ளேயின் (12 ரன்னுக்கு, 6 விக்., எதிர்–வெ.இண்டீஸ், 1993) சாதனையும் தகர்ந்தது.

* உலகளவில் இலங்கையின் சமிந்தா வாஸ் (19/8 விக்.,), அப்ரிதி (பாக்.,–12/7), மெக்ராத் (ஆஸி.,–15/7), பிக்கெல் (ஆஸி.,–20/7), முரளிதரன் (இலங்கை–30/7), வக்கார் யூனிஸ் (பாக்.,–36/7), அக்குய்ப் ஜாவேத் (பாக்.,–37/7), டேவிஸ் (வெ.இண்டீஸ்–51/7) ஆகியோருக்கு அடுத்து, பின்னி சிறந்த பவுலிங்கை (4 ரன்/6 விக்.,) பதிவு செய்த, 8வது வீரர் ஆனார்.

 

 

‘சூப்பர்’ வாரிசு

கடந்த 1983ல் இந்திய அணி உலக கோப்பை வென்ற அணியில் இடம் பெற்றவர் ‘ஆல்–ரவுண்டர்’ ரோஜர் பின்னி. இவரது மகன் தான் ஸ்டூவர்ட் பின்னி, 30. கர்நாடகாவைச் சேர்ந்த இவர், சமீபத்தில் தான் இந்திய அணியில் இடம் பெற்றார்.

 

http://sports.dinamalar.com/2014/06/1403026799/stuardbinnyindia.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • ஆண்ட‌ருக்கு தான் வெளிச்ச‌ம்.............................. யாழை விட்டு பொது யூடுப் த‌ள‌த்தில் காணொளிக்கு கீழ‌ போய் வாசியுங்கோ த‌மிழ் நாட்டு ம‌க்க‌ளின் ம‌ன‌ங்க‌ளில் தேர்த‌ல் ஆணைய‌ம் எப்ப‌டி இருக்கின‌ம் என்று.....................நீங்க‌ள் யாழில் சீமானை ப‌ற்றி தேவை இல்லா அவ‌தூற‌ ப‌ர‌ப்புவ‌தை நிறுத்தினால் ந‌ல்ல‌ம்   உத‌ய‌நிதிக்கு தூச‌ன‌ம் கெட்ட‌ சொல்ட்க‌ள் தெரியாது தானே ந‌ல்ல‌ வ‌ளப்பு......................................................    
    • இப்படி எல்லாம் செய்து 39 தொகுதியில் எத்தனையில் பிஜேபி வெல்வதாக அறிவிப்பார்கள் என நினைக்கிறீர்கள்? ——————————————————— வாக்கு பதிவு சதவீதம் பற்றிய இரு வேறுபட்ட தலவல்கள் வந்ததன் பிண்ணனி. 👇 ———————————— 24 மணி நேரம் கழித்து.. வெளியான தமிழக வாக்குப்பதிவு சதவிகிதம்.. இந்தளவுக்கு தாமதம் ஆக என்ன காரணம் VigneshkumarPublished: Saturday, April 20, 2024, 20:16 [IST]   சென்னை: தமிழ்நாட்டில் நேற்று லோக்சபா தேர்தல் நடந்த நிலையில், சுமார் 24 மணி நேரத் தாமதத்திற்குப் பிறகு இன்று மாலை தான் இறுதி வாக்கு சதவிகிதம் வெளியிடப்பட்டுள்ளது. இந்தளவுக்குத் தாமதம் ஏற்பட என்ன காரணம் என்பதைப் பார்க்கலாம். வாக்குப்பதிவு: அமைதியான முறையிலேயே வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில், நேற்று தமிழகத்தில் பதிவான வாக்குகள் எத்தனை என்பதில் குழப்பமே நிலவி வந்தது. நேற்று மாலை முதலில் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு மாநிலத்தில் 72.09% வாக்குகள் பதிவானதாக அறிவித்தார். ஆனால், நள்ளிரவில் வெளியான மற்றொரு டேட்டாவில் வாக்கு சதவிகிதம் 69.46% என்று கூறப்பட்டு இருந்தது. இதுவே பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இருப்பினும், இறுதி வாக்குப்பதிவு சதவிகிதம் இன்று காலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது. இருப்பினும், இரண்டு முறை இது குறித்த செய்தியாளர் சந்திப்பு தள்ளிப்போனது. 12, 3 இரண்டு முறை தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தனது செய்தியாளர் சந்திப்பை ரத்து செய்தார். இது பல வித கேள்விகளை எழுப்பியது. தாமதம்: எப்போதும் தேர்தல் முடிந்து மறுநாள் காலையே இறுதி நம்பர் வந்துவிடும். ஆனால், இந்த முறை வாக்குப்பதிவு முடிந்து 24 மணி நேரம் கழித்து இன்று மாலை தான் இறுதி டேட்டா வந்தது. அதன்படி தமிழ்நாட்டில் 69.45% வாக்குகள் பதிவாகி இருக்கிறது. அதிகபட்சமாகத் தருமபுரியில்81.48% வாக்குப்பதிவும், குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 53.91% வாக்குகள் பதிவாகி உள்ளது. இந்தளவுக்குத் தாமதம் ஏன் என்று பலருக்கும் கேள்வி எழுந்தது. மாவட்ட ரீதியான தகவல்களைப் பெறுவதில் தாமதம் ஆனதே இதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. கடந்த தேர்தல்களில் நள்ளிரவில் ஒரு டேட்டா வரும். தொடர்ந்து காலை இறுதி நம்பர் வரும். தொலைதூர கிராமங்கள் மற்றும் மலைப் பிரதேசங்களில் உள்ள கிராமங்களில் இருந்து இறுதி டேட்டா வர தாமதம் ஆகும். அதுவே இறுதி வாக்கு சதவிகிதம் மறுநாள் வரக் காரணமாக இருக்கும். அதுவும் கூட ஓரிரு சதவிகிதம் மட்டும் மாறுபடும்.. அதுவும் இறுதி நம்பர் அதிகரிக்கவே செய்யும். ஆனால், இந்த முறை குறைந்துள்ளது. என்ன காரணம்: இந்த இறுதி நம்பர் என்பது நள்ளிரவில் வெளியான டேட்டாவுடன் கிட்டதட்ட ஒத்துப் போய் தான் இருந்தது. ஆனால், மாலை வெளியான டேட்டா உடன் ஒப்பிடும் போது தான் பெரியளவில் முரண்பாடு இருந்தது. காரணம் projecton எனப்படும் அனுமானத்தை வைத்து மாலையில் இறுதி நம்பரை கொடுத்ததே இதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. தாமதம் ஏன்: வாக்குப்பதிவுக்கு புதிய செயலியை அவர்கள் பயன்படுத்திய நிலையில், அதில் இருந்த டேட்டாவை வைத்து புரோஜக்ஷன் அடிப்படையில் வாக்கு சதவிகிதத்தைக் கொடுத்ததே டேட்டா தவறாகக் காரணமாக இருந்துள்ளது. ஏற்கனவே இப்படி ஒரு முறை தவறு நடந்துவிட்டதால்.. மீண்டும் தவறு நடக்கக்கூடாது என்பதற்காகவே மாவட்ட வாரியாக பெற்ற தகவல்களை ஒரு முறைக்கு இரண்டு முறை உறுதி செய்துவிட்டு இறுதி செய்துவிட்டு வாக்குப்பதிவு சதவிகிதத்தை வெளியிட்டுள்ளனர். இதுவே தாமதத்திற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. https://tamil.oneindia.com/news/chennai/what-is-the-reason-behind-delay-in-final-polling-percentage-number-in-tamilnadu-599947.html
    • நேற்று 72 ச‌த‌வீம் என்று சொல்லி விட்டு இன்று 69 ச‌த‌வீத‌மாம் 3ச‌த‌வீத‌ வாக்கு தேர்த‌ல் ஆணைய‌ம் அறிவித்த‌து பிழையா..................ஈவிம் மிசினில் குள‌று ப‌டிக‌ள் செய்ய‌ முடியாது ஆனால் நேற்று ஒரு அறிவிப்பு இன்று ச‌த‌வீத‌ம் குறைஞ்சு போச்சு என்று அறிவிப்பு நாளை என்ன‌ அறிவிப்போ தெரிய‌ல‌ நேற்று அண்ணாம‌லை சொன்னார் ஒருலச்ச‌ம் ஓட்டை காண‌ வில்லை என்று அண்ணாம‌லைக்காண்டி பிஜேப்பிக்கான்டி தேர்த‌ல் ஆணைய‌ம் இப்ப‌வே பொய் சொல்லித் தான் ஆக‌னும் அப்ப‌ 12ல‌ச்ச‌ ஓட்டு குறைந்து இருக்கு  நாமெல்லாம் ந‌ம்பி தான் ஆக‌னும் தேர்த‌ல் ஆணைய‌ம் ச‌ரியாக‌ ந‌டுநிலையா செய‌ல் ப‌டுகின‌ம் என்று😏....................................
    • 100% உண்மை. இந்த குத்தி முறிதலில் - சக யாழ் கள கருதாளர்கள் சீமானை இட்டு பயப்படுகிறார்கள் என்ற கற்பனையும் அடங்கும் என்பது என் தாழ்மையான கருத்து.
    • இந்த‌ பாராள‌ ம‌ன்ற‌த்தில் அவ‌ர் போட்டியிட‌ வில்லை அண்ணா.................... அவ‌ர் த‌னிய‌ ச‌ட்டம‌ன்ற‌ தேர்த‌லில் தான் வேட்பாள‌றா நிப்பார் அவ்ரின் நோக்க‌ம் பாராள‌ம‌ன்ற‌ம் போவ‌து கிடையாது ச‌ட்ட‌ ம‌ன்ற‌ம் போவ‌து...........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.