Jump to content

கமகமக்கும் ஹைதராபாத் பிரியாணி!!!!


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிரியாணி... தென் இந்தியாவில் பல வீடுகளில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கும் கமகம ரெஸிபி.

குழம்பு, பொரியல் செய்வதைவிட, பிரியாணியை சீக்கிரம் டேஸ்டியா செய்ய முடியும். பிரஷர்பேன், பிரஷர் குக்கர், எலக்ட்ரிக் ரைஸ் குக்கர், மைக்ரோவேவ் ஓவன், எதுல வேண்டுமானாலும் பிரியாணி செய்யலாம். ஆனால் அது பிரியாணியாக இருக்கணும்கிறதுதான் முக்கிய பாயிண்ட்.

"பிரியாணி பாஸ்மதி அரிசியில்தான் சூப்பரா வரும். எம்.ஜி.ஆருக்கு சரோஜாதேவி மாதிரி, பிரியாணிக்கு பாஸ்மதி அரிசிதான் பெஸ்ட் காம்பினேஷன். ஆனால், பாஸ்மதியில் சமைக்கும்போது, கவுண்ட்டிங் ரொம்ப முக்கியம். சாதா அரிசி மாதிரி பாஸ்மதியை ஹேண்டில் பண்ண முடியாது. 'சாதம் குழைஞ்சிடுது, ரொம்ப வெரவெரன்னு வருது. 'இதெல்லாம் கவுண்ட்டிங் தவறும்போது ஏற்படும் சொதப்பல்கள். அதனால் பாஸ்மதி அரிசியை எப்படி ஹேண்டில் பண்ணணும்னு பார்க்கலாம். பாஸ்மதி அரிசியின் ஸ்பெஷலே அதன் வாசனைதான். அதனால் பிரியாணி செய்யும்போது அரிசியை ஒருமுறை மட்டும் கழுவுங்கள். வாசனை குறைஞ்சிடும். பத்து நிமிடம் ஊறவைத்தபிறகு தண்ணீரை வடித்து விடுங்கள். வாணலியில் சிறிது நெய்விட்டு லேசாக வறுத்துக்கொண்டு பிரியாணி செய்தால் சாதம் ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொள்ளாமல் பொலபொலவென வரும். பிரியாணிக்குத் தயாரிக்கும் மசாலா விழுதில், தேவைக்கு அதிகமாக தண்ணீர் சேர்த்தால் பிரியாணி குழைஞ்சு போகும் வாய்ப்பும் உண்டு.

காய்கறிகளுடன் மசாலா விழுது கலந்த பிறகு, தண்ணீர் சேர்க்கும்போது, தண்ணீரில் தக்காளி ஜூஸ், தயிர், தேங்காய்பால் இவற்றுள் ஏதாவது ஒன்றைச் சிறிது கலந்து சேர்த்தால் பிரியாணியின் மணமும், டேஸ்ட்டும் தூக்கலாக இருக்கும்.

சிலபேர் வீட்டில் பிரியாணி சாப்பிடும் போது, காரசாரமாக தொண்டையைக் கமறும். காரணம், பட்டை சேர்க்கும்போது அதிகமாகச் சேர்த்து அரைப்பதுதான். ஒரு சிறிய துண்டு சேர்த்தாலே போதுமானது. அகல ஃபிளேமில் காய்கறிகள், மசாலா வதக்கியபிறகு அரிசி சேர்த்ததும் சிம்மில் வைத்தால் அடிபிடிக்காமல் பிரியாணி சூப்பராக வரும். பெரிய அளவில் பிரியாணி செய்யும்போது அடுப்பின் மீது தோசைக் கல் வைத்து அதன்மேலே அகல பாத்திரத்தை வைத்து, அதன்மேல் தட்டுப்போட்டு மூடி வாசனை வெளியே போகாமல் இருக்க கோதுமைமாவால் ஒட்டி வைச்சிடுவாங்க. இதைத்தான் தம் கட்டறதுன்னு சொல்வாங்க. ஓ.கே. இனி, உங்க வீட்டுப் பிரியாணியும் கமகமக்க வாழ்த்துக்கள்

(கமகமக்கும்)

ஹைதராபாத் பிரியாணி:

தேவையான பொருட்கள்:

பாஸ்மதி அரிசி _ 1 கப், கெட்டித் தயிர் _ 1 கப், தண்ணீர் _ 1 கப், காய்கறித் துண்டுகள் (உருளைக்கிழங்கு, கேரட், பட்டாணி) 2 கப், இஞ்சி, பூண்டு விழுது 1 டேபிள் ஸ்பூன், வெங்காயம் _ 2, புதினா இலை _ ஒண்ணரை டேபிள் ஸ்பூன், கொத்தமல்லித் தழை _ 1 டேபிள் ஸ்பூன்.

அரைத்துக் கொள்ளவும்:

முந்திரிப் பருப்பு _ 1 டேபிள் ஸ்பூன், சிறிய வெங்காயம் _ 7, இஞ்சி லு அங்குலத் துண்டு, பச்சைமிளகாய் _ 8, பட்டை _ 1 அங்குலத் துண்டு, இலவங்கம் _ 2, ஏலக்காய் _ 2, அரைத்துக் கொள்ள தேவையான பொருட்களை சிறிது எண்ணெய் விட்டு வதக்கி, ஒரு கட்டு கொத்தமல்லித்தழை சேர்த்து அரைக்கவும்.

செய்முறை: அரிசியைக் கழுவி பத்து நிமிடம் ஊறவைக்கவும். தண்ணீரை வடித்து ஒரு வாணலியில் அரை டீஸ்பூன் நெய்விட்டுச் சூடாக்கி அரிசியை சேர்த்து இரண்டு நிமிடம் வறுக்கவும். குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு, பூண்டு, வெங்காயம் சேர்த்து சிவக்க வதக்கவும். அதில் இஞ்சி, பூண்டு விழுது, அரிந்த காய்கறிகள் சேர்த்து மிதமான வாசனை போகும் வரை வதக்கவும். தயிரைக் கடைந்து, ஒரு கப் தண்ணீர் சேர்த்துக் கலந்து குக்கரில் ஊற்றவும். அது கொதிக்க ஆரம்பித்தவுடன் அரிசியுடன் உப்பு சேர்த்து மூடியை மூடி அனலை முழுவதும் குறைத்து மேலே வெயிட் போடவும். குறைந்த தணலில் பத்து நிமிடம் வேகவைத்து அடுப்பிலிருந்து கீழே இறக்கவும். மூடியைத் திறந்தவுடன் எலுமிச்சம் சாறு விட்டு, அரிந்த புதினாத் தழையும் கொத்தமல்லித் தழையும் சேர்க்கவும். நன்றாகக் கலந்து சுடச் சுட வெங்காய தயிர் பச்சடியுடன் பரிமாறுங்கள்.

கீரை ஃபிரைட் ரைஸ்:

தேவையான பொருட்கள்:

பாஸ்மதி அரிசி _ 1 கப்,முளைக்கீரை _ 4 கட்டு, பெரிய வெங்காயம் _ 3, எண்ணெய் _ 2 டேபிள் ஸ்பூன், எலுமிச்சம்பழம் _ 1, கறிவேப்பிலை கொஞ்சம், முந்திரிப்பருப்பு _ 1 டேபிள் ஸ்பூன், தனியா _ 1 டீஸ்பூன், வெந்தயம் _ ரு டீஸ்பூன், பெருங்காயம் _ 1 சிட்டிகை, பட்டை _ 1 அங்குலத் துண்டு, இலவங்கம் _ 2, காய்ந்த மிளகாய் _ 6, தேங்காய்த் துருவல் _ 2 டேபிள் ஸ்பூன்,

தாளிக்க: கடுகு _ அரை டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு _ 1 டீஸ்பூன்

கடலைப் பருப்பு _ அரை டீஸ்பூன்

செய்முறை : அரிசியைப் பத்து நிமிடம் ஊறவைக்கவும். வெங்காயத்தை மிகவும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கீரையைக் கழுவி பொடியாக அரிந்து கொள்ளவும். எண்ணெயைச் சூடாக்கி தனியா, வெந்தயம், பெருங்காயம், இலவங்கம், பட்டை, காய்ந்த மிளகாய் கடைசியில் தேங்காய்த் துருவலைப் போட்டு வறுத்துப் பொடி செய்யவும். அரிசியை உதிரியாக வேக வைத்து ஆற வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டுச் சூடாக்கி சீரகம், உளுத்தம்பருப்பு, கடலைப் பருப்பு, கறிவேப்பிலை, வெங்காயம் இவற்றைச் சேர்க்கவும். கீரையின் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு அதில் ஆறவைத்த சாதம், உப்பு, மசாலாப் பொடி சேர்த்துக் கலந்து இறக்கவும். எலுமிச்சை சாறு பிழியவும். வறுத்த முந்திரிப் பருப்பை மேலே அலங்கரித்துச் சூடாகப் பரிமாறுங்கள்!

_ ஜனனி

http://www.kumudam.com/magazine/Kumudam/20...-09-20/pg15.php

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன ஜெயதேவன் சார் இப்போ நீங்க தான் வீட்டில் சமையலா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் இந்த பிரியாணியை சாப்பிடமாட்டேன் இது தெலுங்கு பிரியாணி :lol::D:D ஏழுகுண்டல வாடா :wink:

Link to comment
Share on other sites

நான் இந்த பிரியாணியை சாப்பிடமாட்டேன் இது தெலுங்கு பிரியாணி :lol::lol::lol: ஏழுகுண்டல வாடா :wink:

பிரியாணியில கூட தமிழ் பிரியாணி,தெலுங்கு பிறியாணியா உங்களுக்கு உண்மையாக கழன்று போச்சு தான்

:cry: :cry: :cry: :cry: :cry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு சமைக்க எல்லாம் முடியாது.ஒரு பார்சல் அனுப்பி விடுங்கோ யாராவது :P

Link to comment
Share on other sites

எனக்கு சமைக்க எல்லாம் முடியாது.ஒரு பார்சல் அனுப்பி விடுங்கோ யாராவது :P

இப்ப தானெ வாலறுத்தும் சின்னாவை கைது செய்தும் இருக்கிறோம் நிச்சயமாக உங்களுக்கு பார்சல் அனுப்பி வைக்கபடும் தாத்தா

:wink: :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்னும் சமைக்கத் தொடங்கவில்லையோ!

Link to comment
Share on other sites

பிரியாணியில கூட தமிழ் பிரியாணி,தெலுங்கு பிறியாணியா உங்களுக்கு உண்மையாக கழன்று போச்சு தான்

:cry: :cry: :cry: :cry: :cry:

யாருக்கு உமக்குத்தானே நன்றி பிள்ளை ஒத்துக்கொண்டதுக்கு

:wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink:

Link to comment
Share on other sites

யாருக்கு உமக்குத்தானே நன்றி பிள்ளை ஒத்துக்கொண்டதுக்கு

:wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink:

உண்மையை ஒத்து கொண்டதற்குகாண்டி எனக்கு Treat இல்லையா

:cry: :cry: :cry:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.