Jump to content

நான் சொல்வதை என் உடம்பு கேட்குமா??


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பிறந்ததிலிருந்தே

உடம்பில் கவனம் எடுத்த பழக்கமில்லை.

அதிலும் கடந்த சில  வருடங்களாக சாப்பாட்டில் கவனமில்லை.

உடலும் வயிறும் வீஙகத்தொடங்கின.

 

மக்கள் சொல்வார்கள்

அப்பா 

உடம்பைக்கவனியுங்கள் என.

அதிலும் எவராவது என் வயதுக்காரர் மோசம் போய்விட்டால்

தாங்கவே முடியாது

 

ஆனாலும் 7 நாளும் வேலை

அத்துடன் பொது வேலைகள்..................

 

வேலை அலுப்பு

மற்றும் அதிக நேரவேலை

இதனால் தூக்கம் குறைவு

அதனால் எப்பொழுதும் ஒருவித சோர்வு கண்களுக்குள்....

எங்கு இருந்தாலும் தூக்கம் வரும்

கார் ஓடிக்கொண்டிருக்கும் போதும்....

அத்துடன் குறட்டை........

 

அப்பா

உடற்பயிற்சி  அல்லது  நீச்சலுக்காவது  செல்லுங்கள்

அல்லது  குளிசை  வாங்கிப்போடுங்கள்....

 

இல்லை மாட்டேன்

எனக்கு எதுவித வருத்தமுமில்லை..

என்று இத்தனைநாள் இழுத்தாச்சு

ஆனால் நிறை   கூடுவது மட்டும் நின்றபாடில்லை..

நூறை நெருங்கமுதல் தான் ஒருவாறு இசைஞ்சேன்

அதுவும் நம்ம சுமே  தந்த குளிசைக்கு மட்டும்......

 

தொடரும்.....

Link to comment
Share on other sites

அண்ணா

உங்கள் உடல் நீங்கள் உண்ணும் உணவு.

மரக்கறியை கூட்டி, ஊர் அரிசி, முழு கோதுமை உணவை கூட்டுங்கள்.

மற்றும் உடற்பயிற்சியை வேலைகளோடு செய்யுங்கள். எலிவேட்டருக்கு பதில் படி, கிட்ட உள்ள இடங்களுக்கு நடை அல்லது சைக்கிள் என்று உடற்பயிற்சியை கூட்டுங்கள்.

இல்லாவிட்டால் கனடா வாருங்கள், எனது தோட்ட உடற்பயிற்சியில் கிழமைக்கு 30 பவுண்ட் இழக்கலாம். :D

Link to comment
Share on other sites

நூறை நெருங்கமுதல் என்றால் என்ன? நூறு கிலோவா??  :blink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நூறை நெருங்கமுதல் என்றால் என்ன? நூறு கிலோவா?? :blink:

இல்லை 99.99kg
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் சாப்பாட்டுப் பிரியன்தான்.இறைச்சியை விட மீன்தான் கூடுதலாகச் சாப்பிடுவேன்.7நாளும் மச்சமில்லாவிட்டால் சாப்பாடு இறங்காது.நிறை கட்டுக்குள் இருக்கிறது.65-67கிலோ.உங்களைப்பொறுத்தவரை நிறைய மரக்கறியுடன்(சாப்பிட முடியாட்டி மீன் கறி அல்லது கருவாட்டுக்குழம்புடன்)பழவகைகளும் சாப்பிடுங்கள்.காலையில் 2 துண்டு பாண்.மத்தியானம் ஒரளவு நல்ல சாப்பாடு.இரவு 18.00மணிக்கு சலாட்,பழவகைகள் சாப்பிடவும்.அடிக்கடி பசித்தால் பழங்களை சாப்பிடவும்.தண்ணி???pயையும் பசித்தால் குடிக்கலாம்.சிவப்பு வைன் அருந்தலாம்.வாரத்திற்கு 2 தடவைகள் 30 நிமிடம் நடைப்பயிற்சி. செய்யவும்.உடம்பை; கவனமாகப் பார்க்கவும். ஆலோசனை சொல்வது இலகு.ஆனால் நடைமுறை??????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

From- facebook வயிறு தொப்பையை குறைக்க வேண்டுமா? 1. மிக மிக முக்கியமான விஷயம் "வாயை மூடி மென்று சாப்பிட வேண்டும்". நிறைய பேர் செய்வதே கிடையாது. அவசர உலகத்தில் அவசர அவசரமாக 5 அல்லது 10 நிமிடத்தில் சாப்பிட்டு எழுத்து விடுவார்கள். வாயை மூடி மென்று சாப்பிட்டால் 30 நிமிடங்கள் ஆகும். அது தான் சரியான முறை. 2.பசிக்கும் போது சாப்பிடுங்கள். Time- க்கு சாப்பிடுவது முக்கியமல்ல. பசிக்கும் போது சாப்பிடுவதுதான் முக்கியம். 3.அதிக எண்ணை பதார்த்தங்களை எடுத்துக் கொள்ள கூடாது. 4.Fast Food -சாப்பிடக்கூடாது. 5.முக்கியமாக Pizza மற்றும் பன்னீர் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். 6.தினமும் அரை மணி நேரம் நடைபயிற்சி வேண்டும். பசிக்கும் போது சாப்பிடாமல் நேரம் கிடைக்கும் போது சாப்பிட்டால் கண்டிப்பாக தொப்பை விழும். மேலும் முடிந்தால் Dance பண்ணலாம். தேவையில்லாத Cholestral அதிகம் ஆகும் போது, உடம்பில் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். உடல் எடையை குறைய வேண்டும் என்று நினைத்துக் கொண்டு தயது செய்துFasting மட்டும் இருக்காதீர்கள். அப்படிFasting இருந்தால் வயிறு புண் ஆகிவிடும் அதாவது அல்சர் வந்துவிடும். எடை குறையவே குறையாது. அதனால் பசிக்கும் போது சாப்பிட்டால் தான் நல்லது. எனவே மேலே குறிப்பிட்டுள்ள படி கடைபிடித்து உடல் எடை மற்றும் தொப்பையை குறைக்க முயற்சி செய்யுங்கள்.

Link to comment
Share on other sites

நானும் பலநேரங்களில் வரைமுறையின்றிச் சாப்பிடுவதுண்டு.  ஆனால், வசதி இருக்கும்போது டயட்டையும் செய்வதுண்டு.  அப்படி  வருடத்தில் இரண்டு மூன்று தடவைகளாவது பழ, மரக்கறி வகை டயட்டைப் பின்பற்றுவேன்.  அதனால், போனவருடம்கூட இன்சூரன்சிற்காகப் பரிசோதனை செய்த போது எனது உடம்பில் எந்த நோய் அறிகுறிகளும் இல்லாததால் நான் போட்ட தொகையைவிட அதிகம் தந்திருந்தார்கள்.   எனக்கு உடம்பைக் குறைப்பதில்தான் சிரமம் உள்ளது.  அதையும் இந்த வருடத்திற்குள் குறைப்பதாக உள்ளேன்.  குறைத்து விட்டு எனது அனுபவத்தை பகிர்கிறேன்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
வயது போகப்போக வாற பிரச்சனையள்தானே விசுகர்...... :D
 
இதுக்குப்போய்..... :(
 
முந்தி செல்லவண்டி எண்டு என்ரை வண்டியை தடவின மனுசியே இப்ப என்னப்பா ரவுசர் ஒண்டும் அளவில்லாமல் போகுது எண்டு சலிக்கிற அளவுக்கு வந்திட்டுது.. :D
Link to comment
Share on other sites

நானும் சாப்பாட்டுப் பிரியன்தான்.இறைச்சியை விட மீன்தான் கூடுதலாகச் சாப்பிடுவேன்.7நாளும் மச்சமில்லாவிட்டால் சாப்பாடு இறங்காது.

 

இன்றில் இருந்து நீங்களும் என் நெருங்கிய தோழன் ஆகிவிட்டீர்கள் புலவரே.

Link to comment
Share on other sites

கல்யாணம் செய்ய முதல் 68 கிலோ. நேற்று அளந்த போது 74.
 
பின்னேரம் 6.30 தொடக்கம் 7 மட்டும் நடக்க உள்ளேன்.
 
வருகிற சனிக்கிழமை எப்படியும் 73 கிலோ.   :unsure:  :huh:
 
எப்படி புலவர் 65 கிலோ ??? எலும்பும் தோலுமாக இருப்பீர்களா ? :o  
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

...ஆனால் நிறை   கூடுவது மட்டும் நின்றபாடில்லை..

நூறை நெருங்கமுதல் தான் ஒருவாறு இசைஞ்சேன்

....

தொடரும்.....

 

இந்த மாதிரி 'அளவுச் சாப்பாடு' (Limitted meals) சாப்பிடுங்கள் விசு, நாகேஷ் மாதிரி மெலிந்து 'சிக்'கென்று இருப்பீர்கள்! :wub:

2ik8u1z.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விரும்பிய உணவைச் சாப்பிடாமல் விடுவது என்பது கொடுமையிலும் கொடுமை. ஆனால் நான் கவனித்ததில் எமது ஆட்கள் சிறு வயதிலிருந்தே அதிகம் உண்டு பழகிவிட்டோம். பின் அது எம் மூலையில் பதிந்துவிட்டது. சிறிய வயதிலிருந்தே கொஞ்சமாகச் சாப்பிட்டுப் பழகினால் உடம்பு வைக்காது.

நான் இப்ப கிழமையில் ஐந்து நாட்கள் மதியம் அந்த ஐந்து மரக்கறிகளும் அவித்து உண்பது இரவில் சிறிதாக உண்பது. ஆனால் நிறை கூடவில்லையே ஒழிய பெரிதாகக் குறையவில்லை. ஆனால் வயிற்றுப்பகுதி வற்றிக்கொண்டு வருகிறது. மிக மெதுவாகத்தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எப்படி புலவர் 65 கிலோ ??? எலும்பும் தோலுமாக இருப்பீர்களா ? :o உயரம் 165 cm-100=65 ideal weight. 5கிலே கூட அல்லது குறைய இருக்கலாம்.ஆகவே எனது நிறை திருப்தி.வண்டி கொஞ்சம் கூட இந்த வயதுக்கு இது அழகு வண்டி.ஒவ்வொரு வருடமும் மருத்தவ பரிசோதனை செய்வேன்.டயபற்றிஸ் வியாதி இல்லை.கோப்பிக்கு மட்டும் நி-றைய சீனிபோட்டு(4தே.க) குடிப்பேன்.மற்றும்படி இனிப்புச் சாப்பாடு சாப்பிடுவதில்லை.இரத்தத்தில் கொழுப்பு இல்லை.ஆனால் வாய்க் கொழுப்பு கொஞ்சம் கூடத்தான்.இப்பொழுது ஒவ்வொரு நாளும் 1 மணித்தியாலம் சைக்கிள் ஓடுகிறேன்.(அதுவும் ஒரு வேலைதான்).சாப்பாட்டில் வஞ்சகம் இல்லை.அளவோடு குடிப்பேன்.அஸ்மாதான் தொடர்ந்து இருக்கிறது.இழுப்பு பெரிதாக இல்லை நெங்சுச் சளி இருக்கிறது.பம் தொடர்ந்து பாவிக்கிறேன்.

Link to comment
Share on other sites

இந்த மாதிரி 'அளவுச் சாப்பாடு' (Limitted meals) சாப்பிடுங்கள் விசு, நாகேஷ் மாதிரி மெலிந்து 'சிக்'கென்று இருப்பீர்கள்! :wub:

2ik8u1z.jpg

இது விசயகாந்த், பிரபு டயட் போல் தெரிகிறது. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகர், எம்மில் அநேகமானவர்கள் முகம் கொடுக்கின்ற பிரச்சனையைப் பகிர்ந்துள்ளீர்கள்!

 

காலம்,காலமாக வாழ்ந்திருந்த மண்ணிலிருந்து, பலவந்தமாகப் பிடுங்கி எறியப்பட்ட தலை முறை எம்முடையது!

 

விவசாயம், நடை, துவிச்சக்கர வாகன உபயோகம் என ஒவ்வொருநாளும் நாமறியாத விதத்தில், உடற்பயிற்சி எமது வாழ்க்கையில் இணைந்திருந்தது!

 

பெற்றோர்களின் அரவணைப்பு, உறவுகளின் அரவணைப்பு என ஒரு கூட்டுக்குடும்ப முறையில் நாம் வாழ்ந்திருந்தோம்!

 

மிகப்பெரிய தேவைகளும், எதிர்பார்ப்புக்களும் இல்லாத வாழ்வாக, பொருளாதார வேறுபாடுகள் பெரிதாக இல்லாத சமுதாயத்தில் வாழ்ந்திருந்தோம்!

 

எல்லாவற்றுக்கும் மேலாக, மன அழுத்தம் இல்லாத வாழ்வாக அது இருந்தது!

 

இப்போது, ஒன்றை மட்டும் நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்! 

 

உங்கள் உடல்நிலையைப் பற்றி நீங்களாக எடுக்கிற 'உங்கள் அபிப்பிராயங்கள்' எப்போதும், உங்களுக்கு ஆதரவாகவே இருக்கும்! நாங்கள் எல்லோருமே, எங்களைப் பற்றி நல்ல அபிப்பிராயங்களையே வைத்திருக்கிறோம்! இல்லா விட்டாலும், அதற்கான சமாதானங்கக்ளையும் தேடிக்கொண்டிருப்போம்!

 

ஐரோப்பிய வாழ்வில், நானும் எனது உடல்நிலைபற்றி மிகவும் 'உயர்வான அபிப்பிராயம்; தான் வைத்திருந்தேன்!

 

இங்கு புலம் பெயர்ந்த ஆரம்பகாலத்தில், ஒவ்வொரு வாரமும் வாடகை 'வீட்டுக்காரரின் முகவரிடம்' கொண்டுபோய்க் கட்ட வேண்டும்! எனது வீட்டுக்கும், அந்த முகவரின் இடத்திற்கும் இடைவெளி, ஒரு ஐந்து கிலோமீட்டர் மட்டுமே இருக்கும்! ஒருக்கால், நடந்து தான் பார்ப்போமே என்று நடந்த போது. அரைவாசித்தூரம் கூட நடக்க முடியவில்லை! அப்போது தான் தெரிந்தது, ஐரோப்பிய வாழ்வு, ஊர் வாழ்விலிருந்து எவ்வளவு தூரத்திற்கு என்னை அந்நியப்படுத்தி விட்டது என்று!

 

அன்றிலிருந்து வார விடுமுறைகளில் நடப்பது, சைக்கிள் ஓடுவது, விடிகாலையில் 'சூரிய நமஸ்காரம்', தியானம் போன்றவற்றில் ஈடுபடுவது என்று,மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்!

 

எனது நிறை எப்போதும் அறுபத்தைந்துக்கும், எழுபதுக்கும் இடையில் மாறிக்கொண்டிருக்கும்!

 

சில நாட்கள், ஊரில் நின்றுவிட்டு வந்தபோது, சில கட்டுப்பாடுகளை வேண்டுமென்றே விட்டிருந்தேன்! திடீரென நிறை, அதிகரித்ததுடன் வண்டியும் வைக்கத் தொடங்கியது!

 

வெறும் நிலத்தில் படுத்திருந்தபோது, எனது மகள் எனது 'வண்டியை' அவதானித்திருக்க வேண்டும்!

 

அப்பா, திரும்பவும் நடக்கத் தொடங்குங்கோ என்று கூறினாள்!

 

ஏதோ, ஒரு பொறி தட்டிய மாதிரி இருந்தது!

 

திரும்பவும், பழைய படி, நடக்கத் தொடக்கி விட்டேன்!

 

எனவே, முதலாவது காலடியை எடுத்து வைத்துள்ளீர்கள்! பின் வாங்க வேண்டாம் என்பதே எனது அன்பு வேண்டுகோள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் உடல்நிலையைப் பற்றி நீங்களாக எடுக்கிற 'உங்கள் அபிப்பிராயங்கள்' எப்போதும், உங்களுக்கு ஆதரவாகவே இருக்கும்! நாங்கள் எல்லோருமே, எங்களைப் பற்றி நல்ல அபிப்பிராயங்களையே வைத்திருக்கிறோம்! இல்லா விட்டாலும், அதற்கான சமாதானங்கக்ளையும் தேடிக்கொண்டிருப்போம்! உண்மையான வரிகள்!!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சில உணவுகளை நாம் சாப்பிடும்போது அவைகள் உடல் எடையை குறைக்க உதவுகின்றது. இதற்கான காரணம் அந்த உணவுகளில் உள்ள கலோரியை விட அந்த உணவு ஜீரணமாக தேவைப்படும் கலோரி அதிகம். பட்டியல் கீழே உள்ளது. முயற்ச்சி செய்து பாருங்கள்.


Vegetables:
Artichokes
Asparagus
Green beans
String beans
Beets
Beet greens
Broccoli
Brussels sprouts
Cabbage
Chinese cabbage
Carrots
Cauliflower
Celeriac
Celery
Chervil
Chicory
Chives
Squash
Tomato (fresh/canned)
Corn (cob/canned)
Cucumbers
Dandelion greens
Dill pickles
Eggplant
Endive
Garlic
Kale
Kohlrabi
Leeks
Lettuce
Mushrooms
Mustard greens
Okra
Onions
Parsley leaves
Turnips
Watercress
Parsnips (raw/boiled)
Peas
Peppers (green/red)
Pickles (sour/sweet)
Pumpkin
Radishes
Rappini
Red cabbage
Rhubarb
Rutabagas
Sauerkraut
Salsify
Scallions
Shallots
Sorrel
Spinach

Fruits:
Apples
Apricots
Blackberries
Blueberries
Cantaloupe
Cherries
Cranberries
Currants
Damson plum
Figs
Fruit salad (fresh/canned)
Grapefruit
Grapes
Honeydew melon
Huckleberries
Kiwi
Kumquats
Lemons
Limes
Loganberries
Mangoes
Muskmelons
Nectarines
Oranges
Papaya
Peaches
Pears
Pineapple
Pomegranates
Prunes
Quince
Raspberries
Strawberries
Tangerines
Watermelon

Meat:
Abalone
Bass (fresh water/sea)
Buffalo fish
Catfish
Clams (cooked)
Cod Steaks
Crab
Crayfish
Flounder
Frog legs
Mussels
Oysters (half shell)
Shrimp
Terrapin
Trout
Tuna
 

இவைகளை சாப்பிடுவதால் உடல் எடை குறையும். ஆனால் நிறை உப்பும் தேங்காய் பாலும் மசாலா தூள்களும் போட்டு அவி அவி என்று அவித்து சாப்பிட்டால் அதில் எந்த பலனும் இருக்காது.

 

சோறு புட்டு இடியப்பம் பாண் போன்ற மாச்சாப்படுகளை நிறுத்தாமல் சீனி போட்ட தேத்தண்ணி உப்பின் அளவை குறைக்காமல் இவற்றை கடைப்பிடிப்பதிலும் பலனில்லை.

 

விரதங்களை கடைப்பிடிப்பது என்னுமொரு வழி. செவ்வாய் வெள்ளி சனிக் கிழமைககளிலும் பிரதோசம் மற்றும் கந்தசஸ்டி போன்ற பல விரதங்களை கடைப்பிடிப்பதால் தெய்வீக அருளும் கிடைக்கும் ஆன்மீக பலமும் உடல் ஆராக்கியமும் கிடைக்கும். விரதச் சமயலுக்கு உப்பு சேர்ப்பதில்லை.

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருத்தக்களுக்கும்

அனுபவப்பதிவுகளுக்கும் நன்றி  உறவுகளே...

ஒவ்வொருவராக பின்னர் எழுதலாம்

தற்பொழுது எழுத தொடங்கிய  விடயத்தை  தொடரலாம் என்று நினைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

இப்ப சில வருடங்களாகத்தான் எனக்கும் உடம்பில் கொஞ்சம் கவனம் வேண்டும் என்று தோன்றியது .

 

நேரத்திற்கு சாப்பிடுவதில்லை ,நேற்று காலை ஒரு மப்பன்(MUFFIN)  பின்னர் இரவு ரொட்டி கோழிக்கறியுடன் ஓடிவிட்டது .   இன்னதுதான் என்று சாப்பிடுவதில்லை அகப்பட்டைதை விழுங்கிவிடுவேன்.(ருசியாக வேண்டும் )

 

சிகரெட் இல்லை குடி சொல்லத்தேவையில்லை .உடற்பயிற்சி என்று பெரிதாக எதுவுமில்லை ஆனால் கிரிக்கெட், வோலிபால் ,நடை இப்போதும் இடைக்கிடை செய்வதுதான் .

 

மனைவி எனக்கு நேர் எதிர் .சாப்பாடு தொடக்கம் உடற்பயிற்சி யோகா என்று வலு ஒழுங்கு அதனால் நானும் சலாட் பழவகைகள்  என்று தின்ன வேண்டிய கட்டாயம் .தோசை புட்டு என்றால் கூட பல தானியங்கள் அரைத்து வைத்து அதில் கலந்துவிடுவார் .முட்டை அரை அவியல் உப்பு மிளகுடன் கருஞ்சீரகம் எல்லாம் இருக்கும் .

 

எனது குடும்ப வைத்தியர் சொன்ன புத்திமதி இது -இந்துவில் எனது யூனியர் எனது அப்பாவிற்கும் இவர்தான் குடும்ப வைத்தியர் 

 

நீர் இன்னொமொரு முப்பது நாப்பது வருடங்கள் வாழுவதற்காகதான் சில ஒழுங்குமுறைகளை சாப்பாட்டிலும் உடம்பிலும் பின் பற்ற சொல்லி சொல்லுகின்றோம் .இனி  கவனாமக் இருக்காவிட்டால் பல வித வருத்தங்கள் வர சாத்தியங்கள் இருக்கு. டயபிற்றிஸ்,நிரழிவு நோய் ,இதய நோய்கள்,கண்பார்வை குறைவு போன்றவை.

 உமது அப்பாவிற்கு நான் அப்படி சொல்லுவதில்லை ஏனெனில் அவருக்கு தொண்நூறு வயது ஆகிவிட்டது .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்ச  நாளாக எனது அனுபவத்தை 

நான் சாப்பிடும் முறையை

எனது உடல்நிலையை  இங்கு எழுதணும்

அது ஒரு சிலரையாவது சிந்திக்கத்தூண்டணும்   என  யோசித்திருந்தேன்

அதன் புறப்பாடே இது.

 

 

முதலில் இதுவரை  நான் சாப்பாடு

மற்றும் உடல் விடயத்தில் கடந்து வந்தபாதை... :D

 

சிறு வயதில் நல்ல மெலிசு

காலையிலும் மாலையிலும் வார  இறுதிகளிலும் வீட்டில் கட்டாய  கடமைகள்

பின்னேரம் 2  மணித்தியாலம் விளையாடப்போகலாம் என்ற  அப்பாவின் உபதேசம்

என்பவற்றால் வயிறு ஒட்டிய  மெலிசு.

சகோதரர்கள்  சொல்வார்கள்

எனது வயிற்றிற்குள் கறையான் இருக்கு என...

அந்தளவுக்கு என்னத்தை போட்டாலும் அசையாது..

 

அதன் பின் பருவ  வயதில்  கொழும்ப வர

அங்கு அண்ணா  சாப்பாட்டுக்கடை  அத்துடன் கொக்கா (Coco-cola)  பன்ரா (Fanta)  விநியோகித்தர்.

நான்  நடக்கும் போது எனது வயிறு காரணமாக முதுகு உள்ளோக்கி  வளைவதாக  சொல்வார்கள்...

 

அடுத்து

வெளிநாடு......

உள்ளதெல்லாம் போய்

மீண்டும் எலும்பும் தோலும்..........

 

வந்தார் என் காப்புக்கைகாறி....

எப்படி இருந்தவர்

இப்படி ஆகிவிட்டாரே என்று 

ஒரு வழி செய்கின்றேனா இல்லையா என.. :wub:

திருமணமாகும் போது

60 கிலோ

1.72 உயரம்..

 

அத்துடன் தொழில்  (Chef Cuisinier)  சமையல்காறர்.

 

என்ன  பிடிக்கும் என்று மனைவி  கேட்டதற்கு முதல் சொல்

முட்டை  பிடிக்கும்

அதிலும் பொரித்த முட்டை  பிடிக்கும்

அதிலும் வெங்காயத்தை அளவாக  வதக்கி

அத்துடன் முட்டை பொரித்தால் இன்னும் பிடிக்கும் ((Chef Cuisinier)  சமையல்காறர். அல்லவா?)

 

அன்றிலிருந்து இரவும் பகலும் முட்டைப்பொரியல் இல்லாது சாப்பாடில்லை

 

அத்துடன்    கொழும்பிலிருக்கும் போதே

இரண்டாவது தடவை  சோறு வாங்குவதை தவிர்க்கத்தொடங்கியிருந்தேன்

இப்பொழுதும் அப்படித்தான்

ஆனால் கறி  3  தடவையும் வாங்குவேன் :D

சோற்றைவிட அதிகம் கறி  

அதிலும் பயங்கர  காரமாக சாப்பிடும் பழக்கமுள்ளவன்.

இது எமது ஊர் பழக்கம்  என்று நினைக்கின்றேன்

நீங்கள் சிலவேளை எனது உறைப்பைக்கண்டால் அழுது விடுவீர்கள் :(

.

அத்துடன் பொது வேலைகள்

எமது மக்களில் ஒரு பழக்கமுள்ளது

வீட்டுக்கு போனால் உடனே  தேத்தண்ணீர் வந்து விடும்

வெக்கை என்றால் கொக்கா கோலா வந்துவிடும்.....

 

1990 இல் அரச  சார்பு கடிதம் ஒன்று வந்தது

இலவசமாக  உங்களது உடலை நூறு வீதம் செக்  பண்ணுங்கள் என்று....

 

சரி  செய்து  தான் பார்ப்பமே என்று செய்தால்

50  வயசில்  இருக்கவேண்டிய  கொழுப்பு  சீனி அத்தனையும் தற்பொழுதே வந்துவிட்டது என்றார் வைத்தியர்

வயசு 27 எனக்கு.

 

முதலாவதாக  மனைவி  கை  வைத்தது முட்டையில்தான்.  இதுவரை தடை.

அடுத்து பன்றி  இறைச்சி  ஆட்டிறைச்சி  இறால் நண்டு....

அத்துடன் அன்றிலிருந்து வதக்கி  கறி  வைப்பதில்லை

பால்  மற்றும்  எண்ணெயில் தரம் மற்றும் தவிர்த்தல்

 

நானாக விட்டது

இனிப்புவகை  கேக் மற்றும் தேத்தண்ணிக்கு சீனி  போடுவது.....

அது இன்று வரை தொடர்கிறது...

 

சொந்தத்தொழில்  என்று நான்   தொடங்கும்வரை 2003 - 

75 இலிருந்து 80 கிலோ

உயரம் 1.75

 

இன்றுவரை

எந்த மருந்தும் பாவிப்பதில்லை

எல்லாம் அளவுக்குள் நிற்கின்றன

ஆனால் எல்லாம் எல்லையில்....

சாப்பாட்டால் மட்டுமே கட்டுப்படுத்தப்பட்டவை  தான் இவை.

ஆனால் 

மற்ற  எந்தவகை  சாப்பாட்டிலும் மாற்றங்களில்லை

சோற்றைவிட கறி அதிகம் உட்பட.......

 

சில வருடங்களுக்கு முன்

சோற்றிலும்  மனைவி  கை வைக்க  கேட்க

அடியே

சோர்ந்து விழுந்திடுவன்  என்று பயப்படுத்தி

போன வருடம் வரை இழுத்து

போன வருடத்திலிருந்து சோறும் துறந்தாச்சு..

வெள்ளிக்கிழமை மட்டும்   சோறு  மரக்கறியுடன்.......

 

ஆனால் சோற்றுக்கு பதில்  ◌பாண்

அதற்கு அளவுக்கதிகமான கறி

பின்னர் எப்படி...??

மனைவியின் முயற்சிகள் தோல்வி.

அதப்பா

இதெல்லாம் பிறப்பால  என்னோட  வந்தது(கொழுப்பு)

அழியாது

மினக்கெடாத...

 

பைல் மெல்ல  மக்களிடம் மாறியது

அவர்கள் கூட்டம் போட்டு

வீட்டுக்கு முன்னால  காரில் ஏறினால்

கடைக்கு முன்னால  இறங்குகிறார்

நடக்க  பண்ணுவம் என்று ஏகமனதாக  தீர்மானம் நிறைவேற்றி

அதில் கொஞ்சம் பாசமழையையும் பொழிய..

(எங்கட  திருமணத்தை பார்க்கணும் பேரப்பிள்ளைகளை  வளர்க்கணும்....)

 

வீட்டைவிட்டு வெளியில் வர 3  கார்களும் நின்று  

என்னைக்கொண்டு போ  என்னைக்கொண்டு போ என  கெஞ்ச

நடந்து BUS எடுத்து ரெயின் எடுத்து மீண்டும்  BUS எடுத்து கடைக்கு வருவது இருக்கே..... :(  

 

அதற்கு பின்னராவது ஏதாவது முன்னேற்றம்....

நாமளாவது குறைகிறதாவது...........??? :D

 

முதலில்  இரண்டு கிலோ குறைந்தது தான்...

ஆனால் மீண்டும் ஏறுமுகம்.....

94 கிலோவை தாண்டியபோது தான்.....

 

 

வேலை அலுப்பு

மற்றும் அதிக நேரவேலை

தூக்கம் குறைவு

அதனால் எப்பொழுதும் ஒருவித சோர்வு கண்களுக்குள்....

எங்கு இருந்தாலும் தூக்கம் வரும்

கார் ஓடிக்கொண்டிருக்கும் போதும்....

அத்துடன் குறட்டை..

மனைவி  சொல்வாள்

மூச்சை இழுத்து சிறிது நிறுத்தி  குறட்டை விடுவதாகவும்

அது தனக்கு பயமாக இருப்பதாகவும்

அத்துடன் எனது பாரம் பற்றியும் முதல் முறையாக சொன்னாள்.. :icon_mrgreen:

 

இதனால்தான் நான் விழிக்கவேண்டி வந்தது

 

 

தொடரும்......

 

(ஒன்றை  மட்டும் நான் சொல்லிக்கொள்கின்றேன்.  இதை ஒரு நல்ல நோக்கத்துக்காகவே  எழுதுகின்றேன். எதையும் கூட்டியோ குறைத்தோ அழகு படுத்தியோ   என்னைப்பற்றிய உயர்ந்த அல்லது தாழ்ந்த பார்வை வரும் என்றோ எழுதவில்லை.  வைத்தியரிடமும் சட்டத்தரணியிடமும் உண்மையை  மட்டும் சொல்லணும் என்பதை உணர்ந்தவன் யான்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உடல் எடை அதிகரிக்கும் காரணங்கள்

தூக்கம்............ போதிய தூக்கம் கிடைக்க வில்லையா? அப்படியானால் எடை அதிகரிக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. இதற்கு காரணம் போதிய தூக்கம் இல்லாதவர்களுக்கு அதிகமாக பசிக்கும். அதனால் அவர்கள் உட்கொள்ளும் உணவின் அளவும் கூடும்.

மதுபானம்.......... பல ஆண்கள் கடின உழைப்பிற்கு பின் அலுப்பு தெரியாமல் இருக்க மது அருந்துவர். இது மன அழுத்தத்தை குறைத்து மனதை லேசாக வைத்திருந்தாலும், காலப்போக்கில் எடையை அதிகரிக்க செய்யும்.

காலை உணவு........ மற்ற வேளைகளில் நாம் உண்ணும் உணவை விட காலை உணவு தான் மிகவும் முக்கியமானது. இரவு நன்றாக தூங்கிய பின் காலை நம் உடம்பிற்கு போதிய அளவு எரிபொருள் வேண்டாமா? காலை சாப்பிடவில்லையென்றால் உடல் நிலை பாதிக்கும்


அளவில்லாமல் சாப்பிடுவது.......... அதிகமாக சாப்பாடு பரிமாறிவிட்டார்கள் என்ற ஒரே காரணத்திற்காக அனைத்தையும் சாப்பிட வேண்டும் என்ற அவசியம் கிடையாது. சரியான அளவு உணவே ஆரோக்கியத்தை தரும்.

உடற்பயிற்சி...... கண்டிப்பாக உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும். விளையாட்டு, உடற்பயிற்சி, நடை பயிற்சி போன்றவற்றில் ஈடுபட்டால் தேவைக்கு அதிகமான கலோரிகளை எரிக்கும். அது உங்கள் உடல்கட்டமைப்பு மற்றும் தன் னம்பிக்கையை அதிகரிக்க உதவும்.

இரவு விருந்து......... இரவு விருந்து முடிந்த பின் இனிப்பு பலகாரங்களை பொதுவாக உண்ணும் பழக்கம் உள்ளோர், அதற்கு பதில் சூடான தேநீர், சோடா அல்லது கலோரி இல்லாத உணவை உண்ணலாம்.
 

கடை........ கடும் பசியில் இருக்கும் போது கடைக்கு போனால், பசியை போக்க ஆரோக்கியமற்ற உணவை தான் முதலில் தேர்ந்தெடுப்போம். அதற்கு பதில் வீட்டிலேயே சாப்பிட்டு விட்டு சென்றால் பசி சிறிதளவாவது அடங்கும்.

கடையிலும் ஆரோக்கியமான பொருளை வாங்கலாம் அல்லது போகும் வழியில் ஒரு சாண்ட்விச் அல்லது க்ரில் செய்த கோழிக்கறி போன்றவற்றை சாப்பிடவும்.


சென்ற இடத்தில் பசி எடுத்தால் அருகில் என்ன கிடைக்கிறதோ அதை வாங்கி உண்ணுவோம் அல்லவா? பெரும்பாலும் நமக்கு கிடைக்கும் உணவு அனைத்தும் ஜங்க் உணவுகளே. அதனால் முன் கூட்டியே திட்டம் தீட்டி வீட்டிலிருந்தே சாண்ட்விச், பச்சை கேரட், நற்பதமான பழங்கள், பழச்சாறு என்று எதாவது எடுத்துக் கொள்ளவும்.

தேவையான அளவு........ உணவு வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ, அளவில்லாமல் சாப்பிடுவது பலரது வழக்கம். இதனால் கணக்கில்லாமல் அதிக அளவு உணவை உட்கொள்கிறோம். எந்த அளவு உணவு சரியானது என்பதைதெரிந்து கொண்டு, அந்த அளவு மட்டுமே சாப்பிட வேண்டும்.

கலோரி உணவுகளுக்கு குட்பை சொல்லிவிடலாம். ஆரோக்கியமான பிஸ்கட் மற்றும் இதர உணவுகள் என்று கூறப்படும் அனைத்தும் அப்படி இருப்பதில்லை. எந்த அளவு கலோரி இருந்தாலும் அது நம் உடலுக்கு தீமையே. இதை போன்ற உணவுகளை தவிர்க்கவும்.

சாண்ட்விச்...... கடுகு அல்லது கொழுப்பு சத்து இல்லாத மயோனிஸை சாண்ட்விச்சில் தடவி உட்கொண்டால் கலோரி கட்டுப்பாட்டில் இருக்கும். இதனுடன் சேர்ந்து வெட்டிய காய்கறிகளையும் வைத்தால் ருசியுடன் ஆரோக்கியமும் கூடும்.

வார இறுதியில் அதிகமாக உண்ணுவது....... வார நாட்களில் உணவை கட்டுப்பாட்டில் வைத்து விட்டு, வார இறுதியில் உங்கள் கட்டுப்பாட்டை தளர்த்தி விடுகிறீர்களா? அப்படிச் செய்தால் வாரம் முழுவதும் கடைபிடித்த கட்டுப்பாடு வீணாகப் போய் விடும். இதனை தவிர்க்க தினமும் சிறிதளவு கட்டுப்பாட்டில் இருந்து தளர்த்திகொள்ளலாம்.

செயற்கை இனிப்பு...... செயற்கை இனிப்பு என்பது இயற்கை சர்க்கரையை விட 7000 மடங்கு அதிக சுவை நிறைந்தது. இது உங்கள் சுவை உணர்ச்சியை மங்கச் செய்யும் திறன் உள்ளது. செயற்கை இனிப்பு நமக்கு தெரியாமல் நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவு தானியங்கள், புரதச்சத்து உள்ள பொருட்கள், சுவைச்சாறு, ஏன் குழந்தையின் உணவு பொருட்களில் கூட இருக்கிறது.

 

 

இணையத்தில்    வாசித்தது

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் பதிவுகளுக்கும்  கருத்துக்களுக்கும்  உறவுகளே..

 

தொடரலாம்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் இதுவரை  செய்து பார்த்தவை

அல்லது தோற்றவை........

 

மெதுவாக  சாப்பிட  முயன்று தோல்வி

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா என்ற  கேள்விக்கு இந்தப்பழக்கமும்உதாரணமாகத்தெரிகிறது எனக்கு...

முடியல.

ஒரு முறை விழுங்கும் முன் அடுத்த தடவைக்கு கை தயாராகிவிடுகிறது

அதனையும் முறியடிக்க முள்ளுக்கரண்டியால் சாப்பிடலாம் என  இங்கு படித்து 

அதையும் செய்து பார்த்தேன் முடியல........... :(

 

எனது வேலை காரணமாக

இரவுச்சாப்பாடுக்கு நேரமாகிவிடும்

சாப்பிட்டதும் படுக்கை

இதையும் மாற்ற முயன்று தோல்வி.

 

அடுத்து

பணிகளின் சுமை காரணமாக

உடற்பயிற்சி  இன்மை

அதுவும் ஒரு காரணம்

இந்த நிலை   இன்னும் சிறிது காலம் தொடரும்........

 

 

வீட்டில் உடற்பயிற்சி செய்வதற்காக செலவளித்தது

பல ஆயிரம்

ஆனால் அதைத்தொட்டது சில நிமிடங்களே

அத்துடன் அதுவும் காலாவதி...... :(

 

தற்பொழுதைய  வேலை

குனிந்து நிமிர தேவையில்லை சந்தர்ப்பம் எதுவுமில்லை

இருப்பது குறைவு

நிற்பதே 95 வீதம்....

பாரம் அதிகரிப்பதால் பல சிக்கல்கள்.... :(

 

உடுப்புக்கள்   இறுக்க  தொடங்க

பெரிதாக்கி  பெரிதாக்கி

இனி  அதிகரிக்க முடியாது

கூடாது என்ற மக்களின் நிலை... :(

இரண்டு  பெடியும்

தங்களைப்போல் (வயிறு)அப்பா வரணுமாம்

நடக்கிற  விடயமா  இது... :D

குடலைக்கொஞ்சம் வெட்டி  விடுகின்றேன்

என்றால் நோ...

அது தேவையில்லையாம்..

 

 

அத்துடன்

முகம் கறுக்கத்தொடங்கிவிட்டது

நான் எனது குடும்பத்தில்

வெள்ளையாக  அதுவும் பால் போல்  வெள்ளை  என்று

அம்மாவும் மூத்த சகோதரர்களும் சொல்வார்கள்

ஆனால் தற்பொழுது  பொது நிறத்தையும் தாண்டி ..... :(

 

இவை எல்லாவற்றையும்  கணக்கெடுத்து

கதைத்து

பலதையும் யோசித்து

முன் பின் பிரதிபலிப்புக்கள் அல்லது தாக்கங்களற்ற

சுமேயின் விரதத்தை தொடங்கினேன்.

 

முதலாவது நாள்

பழங்கள்   மட்டும்

இரண்டாவது நாள் 

மரக்கறிகள்  மட்டும்

மூன்றாவது நாள்

இரண்டும் கலந்து

நான்காவது நாளைப்பார்த்தும் மனைவியிடம்  சொன்னேன்

8 வாழைப்பழமும் 3 கப் பாலும்...

இத்துடன் விரதம் முடிக்கப்படும் என்று..

ஆனால் விரதம் தொடர்ந்தது

5வது நாள் ஒருபிடி  சோறும் 6  தக்காளிப்பழமும்

6வது நாள் ஒருபிடி  சோறும் மரக்கறிகளும் 

7வது நாள் ஒருபிடி  சோறும் மரக்கறிகளும் பழங்களும்..

 

விரதம் முடிந்தது

அதற்குள்ளெயே  மக்கள் சொல்லிவிட்டார்கள்

பெரும் வெற்றி  என்று...

நிறுத்தால்

6 கிலோ குறைந்தேன்..... :icon_idea:

தொடரும்...

 

 

 

 

 

 

Link to comment
Share on other sites

என் மனைவியும் இந்த டயட் (GM diet) முறையை ஆரம்பித்து இன்றுடன் 4 ஆவது நாளாகின்றது. நானும் ஒரு முறை முயன்று பார்ப்பம் என்று நினைத்து இருந்தனான். ஆனால் என் மனைவி சாப்பிடும் அளவையும் உணவையும் பார்த்து விட்டு நமக்கெல்லாம் இது ஒரு விஷப் பரீட்சை என்று நினைக்கத் தொடங்கி விட்டேன்.... :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.