Jump to content

ஈழத்தமிழர் வரலாற்றில் முதல் முழுநீளத் திரைப்படம்


Recommended Posts

  • Replies 113
  • Created
  • Last Reply
  • 2 weeks later...

விமர்சனம்: ஆணிவேர் எங்களுக்கான அத்திவாரம். அடுத்து என்ன செய்யப்போகிறோம்?

தமிழீழத்தின் முதலாவது திரைப்படம் எனும் முத்திரையோடு வெளியாகி தமிழர் புலம்பெயர்ந்துள்ள நாடுகளில் எல்லாம் வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கிறது. தேசியப் இனப்பிரச்சனையைக் கருப்பொருளாகக் கொண்டு இயக்குனர் மணிரத்தினம் அவர்கள் மூன்று திரைப் படங்களை இயக்கியிருந்தார். அவற்றுள் ஒன்றுதான் எங்கள் ஈழப் பிரச்சனையை கருவாகக் கொண்டு உருவாக்கப்பட்ட கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படம்.

இந்தத் திரைப்படத்திற்கு முதல் வெளியான தேனாலியோ அல்லது நந்தா போன்ற திரைப்படங்கள் இயல்பான கருத்தியல் விவாதங்களின் அடிப்படையில் எங்கள் பிரச்சனையை கையாளவில்லை. அதிக திரைப்பட அறிவும் கருத்துத் தெளிவும் உள்ள இப்படைப்பாளிகள் எங்கள் வாழ்வின் வலிகளை அல்லது போரியல் வாழ்வை வியாபார நோக்கத்தோடு மட்டுமே பதிவு செய்திருந்தார்கள் என்ற விமர்சனங்களே மேலோங்கியிருந்தது. இவற்றை எல்லாம் நிவர்த்தி செய்யும் வகையிலும், உலகத் தமிழர்கள் உள்ளம் குளிரும் வகையிலும் உண்மை நிலையினை எடுத்துரைக்க ஒரு காத்திரமான படைப்பாக வெளிவந்திருக்கிறது ஆணிவேர்.

ஒரு ஆவணப் படத்திற்குரிய பாணியில் உள்ளது எனச் சில ரசிகர்கள் கருதிநின்றாலும்

இது ஒரு முழுமையான தமிழீழத் திரைப்படம் என்பதை அனைவரும் தெளிவாக புரிந்துகொள்ளலாம். இத்திரைப்படத்தை நேர்த்தியாக இயக்கியிருக்கும் திரு.ஐhன் மகேந்திரன் அவர்கள் நல்லதொரு அத்திவாரத்தை எங்களுக்காகவே அமைத்துக் கொடுத்தது ஓர் வரலாற்றுப் பதிவாகிவிட்டது.

ஈழத் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் திரையிட்ட இடங்களில் எல்லாம் திருவிழாக் கூட்டம். கண்ணுக்கு விருந்தாக தாயக தரிசனம் கிடைத்தாலும் கண்களில் உற்றெடுத்து கொண்டேயிருக்கிறது கண்ணீர்த் துளிகள். தமிழீழத்துக் கலைஞர்களும் தமிழகத்துக் கலைஞர்களும் முதல் முறையாக இணைந்து எங்கள் மண்ணில் உருவாக்கியிருக்கும் இத்திரைப்படம் தொடர்பாக ஏற்கனவே பல ஆக்கபுூர்வமான விமர்சனங்கள் வந்திருக்கலாம். ஆனால் அந்த விமர்சனங்கள் தொடாத சில பக்கங்களைத் தொட்டுக்கொண்டு அடுத்து நாங்கள் என்ன செய்யலாம்? என்பது பற்றி அலசுவதே என்னுடைய விமர்சனப் பார்வையின் நோக்கமாகும்.

இத்திரைப்படம் வெறுமனே பார்த்துவிட்டு பாரட்டுக்களை அள்ளி வழங்கிவிட்டுப் போகவேண்டிய படம் மட்டுமில்லை என்பதை நாங்கள் ஒவ்வொருவரும் மிகவும் தெளிவாக கவனிக்கவேண்டிய கடமையும் உள்ளது. தமிழகத்தில் இருந்து வெளிவருகின்ற சாதாரன திரைப்படங்களைப் போல் அல்லாமல் இத் திரைப்படத்தில் இருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கின்றது.

நவீன வசதிகள் உள்ள இக்கால கட்டத்தில் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட உபகரணங்களைக் கொண்டு பொருளாதாரச் சுருக்கத்தோடு தயாரிக்கப்பட்ட பிரமாண்டமான படமாகவே கணிக்;கத் தோன்றுகிறது. அது மட்டுமில்லாமல் எங்கள் தாயகத்திலேயே தரமான முறையில் தயாரிக்கப்பட்ட ஓர் முழுமையான திரைப்படமும் கூட. தொழில்நுட்ப வேலைகள் சில தமிழகத்திலும் வெளிநாடுகளிலும் செய்யப்பட்டாலும், இது உருவான தளம் நமது தாயகம் என்பதை மனதில் ஆணித்தரமாகப் பதிவுசெய்யவேண்டும்.

எங்களை பொறுத்தமட்டில் ஏதாவது ஒரு படைப்பு பெயர் சொல்லும்படியாக வெளிவந்துவிட்டால் அதைப் பாராட்டி, உணர்ச்சிவசப்பட்ட நிலையில் வார்த்தைகளை அள்ளி வழங்கிவிட்டுப் போய்விடுவதுதான் நடைமுறை. அதற்கு மாறாக அத்திரைப்படம் பற்றி ஆழமான விமர்சனங்களை வைப்பதோ அன்றி அது பற்றிய விவாதங்களை நிகழ்த்துவதோ மிகக்குறைவு.

இது திரைப்படத்திற்கு மட்டுமே ஏற்படுகின்ற ஒரு பிரச்சனை மட்டும் அல்ல. இது எந்த கலைப்படைப்பாக இருந்தாலும் அது பற்றிய நியாயமான விமர்சனங்களை முன் வைத்து கலைஞர்களை ஊக்கப் படுத்தி, அவர்களை மேலும் பல புதிய படைப்புகளை படைப்பதற்கான ஆக்கபுூர்வமான சுூழ்நிலைகளை ஏற்படுத்தவேண்டுமென்ற நோக்கமில்லை. அதைவிடுத்து தம்பி படம் எப்பிடியாம் என்றால் ஒன்றில் அந்தமாதிரி அல்லது பரவாயில்லை என்ற பதில்கள் மட்டுமே கூடுதலாக எம்மவர் வாய்களில் இருந்து வெளிவரும். அல்லது ஒரு புன்னகை மட்டும் பதிலாகத் தருவார்கள். எங்கள் மத்தியில் தரமான கலைப்படைப்புகள் உருவாக்கப்படாமைக்கு இதுவும் ஒரு காரணமாகிறது. எம்மவர் படைப்புகளை எம்மவர்களே இலவசமாகவும் நுகரத் துடிப்பதும், சந்தைப்படுத்துவதற்;குரிய நல்ல தளம் இல்லாமல் இருப்பதும் முக்கிய காரணங்களாகும். ஆனால் இதை எல்லாவற்றையும் முறியடித்து வெற்றிகரமாக வெளிவந்ததுதான் இந்த ஆணிவேர் திரைப்படம். இத்திரைப்படத்தை தயாரித்தவரால் இந்த முறியடிப்பு எப்படி சாத்தியமானது?

நாங்கள் எல்லாத்துறைகளிலும் எங்கள் எல்லைகளை விரிவடையச் செய்திருக்கிறோம்.

ஆனால் இந்தத் திரைப்படத்துறையில் முப்பது வருடங்கள் பின்தங்கியே நிற்கிறோம். அதாவது இந்தப் புலம்பெயர்நாடுகளுக்கு நாங்கள் தாயகத்தைப் பிரிந்து வந்து கிட்டத்தட்ட மூன்று தசாப்த்தங்கள் கடந்துவிட்டது. இன்னமும் தமிழகத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டும், அவர்களைக் குறைகூறிக்கொண்டும்தான் இருக்கிறோம். எங்களை வைத்து அவர்கள் வியாபாரம் செய்கிறார்கள் என்று சொல்லிக்கொண்டே அவர்களுடைய திரைப்படங்களையும் சின்னத்திரைகளிலேயும்தானே பார்த்து மகிழ்ந்துகொண்டிருக்கிறோம். பலதரப்பட்ட முறைப்பாடுகளை வேறு அவர்கள் மேல் இலகுவாக அள்ளிக் கொட்டிவிட்டு மீண்டும் அங்கலாய்த்து நிற்பதும் அவர்களிடம்தான். இந்த நிலை மாறவேண்டும் என்றால் தரமான, ஆழமான, காத்திரமான நிறையப் படைப்புகளை தயாரிக்க நாங்கள் முன்வரவேண்டும்.

திரைத்துறையென்று சொன்னால் அனுபவம் உள்ள தமிழகக் கலைஞர்களை அணுகி அவர்களோடு இணைந்து திரைப்படங்களைத் தயாரிக்கலாம். அதில் எந்தவிதமான தவறுமில்லை.

இங்கு முக்கியமான ஒரு கருத்தை இத்தருணத்தில் சொல்ல விரும்புகிறேன். எங்களோடு இணைந்து பணியாற்ற முன்வருபவர்களை தடுப்பதற்கு தமிழகத் தமிழர், ஈழத் தமிழர் என்ற தரப்படுத்தலுக்கு உட்படுத்துகின்ற சிலர் எங்கள் மத்தியில் வாழ்கின்றார்கள். என்றுமே எங்களோடு இணைந்து பணியாற்ற முன்வருகின்ற தமிழகக் கலைஞர்கள் மனதை புண்படச்செய்யக்கூடாது. இதுபோன்ற சில விமர்சனங்கள் இணையத்தளங்களில் உலவுவதாக இத்திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் மிகவும் கவலையோடு என்னிடம் தெரிவித்தார்.

தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழ்கின்ற நாடுகளில் இருந்து முதலில் நாட்டுக்கு ஒரு திரைப்படம்; எனும் அடிப்படையில் தரமான முறையில் தயாரிக்கப்படுமானால் வருடத்தின் நிறைவில் எத்தனை திரைப்படங்கள் எங்கள் கைகளுக்கு கிடைக்கும் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். அதைவிட்டு விட்டு எங்களுக்கென ஒரு திரைப்படமாக ஆணிவேர் வந்துவிட்டதுதானனே என்ற ஆனந்தத்தில் மயங்கக்கூடாது. மாலை நேரத்து மயக்கங்களில் இருந்து முதலில் விடுபடவேண்டும். கலைத் தேடுதல்கள் கடின உழைப்புக்கு மத்தியிலும் தொடர்ந்து கொண்டே இருக்கவேண்டும்.

இன்றைய காலகட்டத்தில் சினிமா என்கிற ஊடகம் ஒர் அற்புதமான கலைவடிவமாக எமக்குக் கிடைத்திருக்கிறது. இந்த வடிவத்தையும் நாங்கள் முழுமையாக கையாளப்பழகிக் கொள்ளுவோமே ஆனால் எங்களுடைய விடுதலைப் போராட்டத்தின் வெற்றிக்கு வழிவகுக்க இதுவும் பலவழிகளில் உதவும் என்பது நிதர்சனம். அதுமட்டுமில்லாமல் எங்கள் மொழி, கலை கலச்சார வாழ்வின் விழுமியங்களை சர்வதேசத்தோடு பகிர்ந்து கொள்ள பலவழிகளிலும் உதவும் என்பதும் உண்மை. ஈரானியத் திரைப்படங்களைப் போல் பல நிஐங்களை வெளிப்படுத்தக்கூடிய பல உண்மைக் கதைகள் எங்கள் வாழ்விற்குள் புதைந்து கிடக்கின்றது.

ஆணிவேர் திரைப்படம் மூலம் நமது திரைப்படத்துறை வளர்ச்சி பெறப்போகிறது என்ற ஒரு கருத்து பரவலாக பலராலும் முன்வைக்கப்பட்டிருக்கிறது. இந்த கருத்தை புலம்பெயர்நாடுகளில் வாழும் எத்தனை திரைப்படத்துறை சார்ந்த கலைஞர்கள் உள்வாங்கியிருக்கிறார்கள்? அப்படி உள்வாங்கியிருந்தால் அவர்கள் செய்கின்ற முயற்சிதான் என்ன? சுவிஸ் நாட்டில் இருந்து ஒரு தயாரிப்பாளர் முன்வந்தது போல ஏனைய நாடுகளில் இருந்து எத்தனை தயாரிப்பாளர்கள் முன்வரப்போகிறார்கள். அவர்களுடைய திரைப்படத் தயாரிப்பின் திட்டமிடல் எப்படி அமையப்போகிறது? எங்கள் மத்தியில் உள்ள பெரும்பாலான தயாரிப்பாளர்கள் நிறையப் பணம் வைத்திருந்தாலும் யாரை நம்பி பெரும்தொகைப் பணத்தை முதலீடு செய்வது என்ற சந்தேகத்துடனும், மனப் பயத்துடனும்தான் இருக்கின்றார்கள்.

ஆணிவேர் திரைப்படத்தை திரையரங்குகளில் பார்த்தவர்களில் எத்தனை பேருக்கு நாங்களும் இப்படி ஒரு திரைப்படத்தைத் தயாரித்தால் என்ன என்று தோன்றியிருக்கும். ஆனால் எவரிடம் போவது அல்லது குறித்த இயக்குனரை எப்படி நாடுவது போன்ற தயக்கங்களோடு எத்தனை ஆர்வலர்கள் காத்திருப்பீர்கள்?;; எனக்குப் பரிட்சயமான சில இயக்குனர்கள் தமிழகத்தில் இருக்கிறார்கள். அவர்களுடனான தொடர்புகளை ஏற்படுத்தித்தரக் காத்திருக்கிறேன். இந்த விமர்சனத்திற்கு உங்கள் கருத்துகளை வழங்குவதன் மூலம் என்னோடு தொடர்பு கொள்ளலாம்.

இதுவரையில் தாயகத்தை தவிர்த்துப் பார்க்கையில் இரண்டு அல்லது நான்கு படங்கள்தான் புலம்பெயர்நாடுகளில் வெளிவந்திருக்கும். இவை பெரும்பாலும் தமிழகத்திரைப்படங்களைத் தழுவிய திரைப்படம் என்ற வட்டத்திற்குள் அகப்பட்டே திரைப்படமாக்கப்பட்டிருக்கி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆணிவேர் திரைப்படம் அனேகமான நாடுகளில் திரையிடப்பட்டாலும் இன்னமும் அவுஸ்திரேலியாவில் மட்டும் வெளியிடவில்லை!!!

இது ஏன்??????

தென்னக திரைப்படங்கள் உடனுக்குடன் வெளியிடுகிறார்கள் ஆனால்...........

பி.கு:- படப்பெட்டி வந்தும் இன்னும் வெளியிடாமல் "ஒருவர்" புூட்டி வைத்திருப்பதாகவும் கேள்வி!!!

உண்மை ஏதோ யாம் அறியோம்!!!!!!

ஆனால் "அவருக்கு" உறைக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கந்தப்பண்ண உங்களுக்காய்ச்சும் தெரியுமே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கந்தப்பண்ண உங்களுக்காய்ச்சும் தெரியுமே?

மாவீரர் தினம் முடிந்தபின்பு சிட்னியில் அணிவேர் திரைப்படம் திரையிடப்படவுள்ளது( நவம்பர் இறுதியில் அல்லது டிசம்பர் முதல் வாரத்தில்) என யாழில் வரும் சிட்னி வாழ் கள உறுப்பினர் சொன்னார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது சரி ஏன் இவ்வளவு நாளாய் போடலை?

படப்பெட்டி வந்து ஒரு மாதத்திற்கும் மேலாய்ச்சாமே?

ஆமா

அந்த "ஆள்" யார்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது சரி !!!

படம் வந்து 2 மாசத்துக்கும் மேல போனதுக்கு பிறகு ஓட்டி எந்த பெட்டியை யார் நிரப்பபோறாரோ?

ஆண்டவா

நம்மவர் (ஒரு சிலர் மட்டும் தான் ஆனால் நம்மவர் எண்டு சொல்ல மனம் கேட்கல) எப்பவும் பெருமைக்கும் காசுக்கும்தான் குடை பிடிப்பார் போல!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிட்னியிலும் இத்திரைப்படம் இம்மாத இறுதியில் காண்பிக்கப்படவுள்ளதாக ஈழமுரசின் அவுஸ்திரெலியா பதிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.