Jump to content

"மே" தினம்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

1-may_02.jpg

 

"மே" தினம்.

 

தினமும்... 16, 18 மணித்தியாலம் என்று,  முழுக்க  கடுமையாக உழைக்கும், தொழிலாளர்களுக்காக.... போராடி.. எட்டு மணித்தியால வேலை செய்வதை உறுதிப்படுத்திய தினம் இது.

 

இந்தப் போராட்டம்... ஒரு கம்யூனிச நாட்டில் நடந்திருந்தால், ஆச்சரியப் பட்டிருக்க மாட்டேன்.

இது, அமெரிக்காவில் நடந்தது.

 

மருத்துவர், தாதியர்கள், தீயணைப்பு வீரர்கள், காவல் துறையினர் போன்றவர்களுக்கு லீவு இல்லை.

சரித்திரத்தை கதைத்தால்.... உங்களுக்கு, பிடிக்காது என்று எனக்கு வடிவாய்த் தெரியும்.

ஆன படியால்... நிகழ்காலத்துக்கு வருவோம்.

 

நாளைக்கு யாருக்கு லீவு, யார் வேலைக்குப் போக வேணும்?

என்ன காரணத்தால்... வேலைக்குப் போக வேண்டும், என்பதை.... கூறுங்களேன். :)  :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாளைக்கு... விடுமுறை என்ற படியால், வேலைக்குப் போகாதவர்கள்...
என்ன செய்கிறீர்கள்? :)

 

சில அருமையான யோசனைகள்....... :D

 

1) பியர் அடிக்கலாம்.
2) வீட்டுக்கு பெயின்ற் அடிக்கலாம்.
3) கார் கழுவலாம்.
4) தோட்டத்தில் பூக்கண்டு நடலாம்.
5) குடும்பம் சகிதமாக, நண்பர் உறவினர் வீட்டுக்குப் போகலாம்.
6) மாதப் பிறப்பன்று... கோயில், தேவாலயத்துக்குப் போகலாம்.
7) வந்த கடிதங்களை... பிரித்து வாசித்து, பதில் எழுதலாம். (கடிதப் போக்குவரத்து இப்பவும், உள்ளதா? என்று நீங்கள் கேட்பது தெரியுது)
8) ம‌த்தியான‌ம் 1 ம‌ணி வ‌ரை, போத்து மூடிக் கொண்டு ப‌டுத்திருக்க‌லாம்.
9) ந‌ல்ல‌ ச‌மைய‌ல் செய்து... சாப்பிட‌லாம்.

 

இதை... விட‌, வேறை... என்ன‌ செய்ய‌லாம் என்பதற்கு,

உங்களிடம் ஐடியா... இருந்தால், ஒழிக்காமல் எமக்கும் சொல்லுங்கள்.

பலருக்கு, பிரயோசனமாய் இருக்க வாய்ப்புண்டு. :lol:  :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எமக்கு நாளை விடுமுறை இல்லை சிறி அண்ணா :(  ம்ம்ம் நாம் என்னத்த எழுதிறது :)

 

கனடாவில் வசித்துக் கொண்டு.... லீவு இல்லை என்றால், நம்ப முடியவில்லை தமிழினி.

பொதுமக்கள் சம்பந்தமான விடயங்களில், முக்கிய‌ ப‌ணி வ‌கிப்ப‌வ‌ர்க‌ளுக்கு, விடுமுறை நாட்க‌ளிலும் வேலை செய்ய வேண்டும் என்ற நடைமுறையை... நீங்கள் நிச்சயம் அறிந்திருப்பீர்கள் தானே....

கவலை வேண்டாம், கடமையை... செய்யுங்கள், தமிழினி. :)

Link to comment
Share on other sites

கனடாவில் வசித்துக் கொண்டு.... லீவு இல்லை என்றால், நம்ப முடியவில்லை தமிழினி.

பொதுமக்கள் சம்பந்தமான விடயங்களில், முக்கிய‌ ப‌ணி வ‌கிப்ப‌வ‌ர்க‌ளுக்கு, விடுமுறை நாட்க‌ளிலும் வேலை செய்ய வேண்டும் என்ற நடைமுறையை... நீங்கள் நிச்சயம் அறிந்திருப்பீர்கள் தானே....

கவலை வேண்டாம், கடமையை... செய்யுங்கள், தமிழினி. :)

 

தமிழ் சிறி,

 

கனடாவிலும் அமெரிக்காவிலும் September மாதம் வரும் முதல் திங்கட்கிழமை தான் தொழிலாளர் தினம். நீங்கள் குறிப்பிட்டுள்ள அமெரிக்க தொழிலாளர் போராட்டம் இந்த காலப் பகுதியில் தான் நிழந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாளை மே தின ஊர்வலத்திலை  கலந்து கொண்டு அந்த அந்த நாட்டு
அரசியல்வாதிகளிட்டை  நம்மடை ஈழத்துப் பிரச்னை பற்றிப் பரப்புரை
செய்யலாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சிறி,

 

கனடாவிலும் அமெரிக்காவிலும் September மாதம் வரும் முதல் திங்கட்கிழமை தான் தொழிலாளர் தினம். நீங்கள் குறிப்பிட்டுள்ள அமெரிக்க தொழிலாளர் போராட்டம் இந்த காலப் பகுதியில் தான் நிழந்தது.

 

தகவலுக்கு, நன்றி நிழலி,

 

நான்... எங்கோ வாசித்த‌தில், உள்ள‌ ஞாப‌க‌த்தில்.... உள்ள‌தைத்தான் ப‌திந்தேன்.

எட்டு ம‌ணித்தியால‌ வேலைக்குப், போராடிய‌வ‌ர்க‌ள் அமெரிக்க‌ர்க‌ள் என்ப‌து, ந‌ன்கு தெரியும்.

அப்போ... ஏன், மே தின‌த்தை... ர‌ஷ்யா உட்ப‌ட‌ எல்லா உல‌க‌ நாடுக‌ளும் கொண்டாடுகின்ற‌ன? என்ப‌து... தான் புரிய‌வில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாளைக்கு... விடுமுறை என்ற படியால், வேலைக்குப் போகாதவர்கள்...

என்ன செய்கிறீர்கள்? :)

 

சில அருமையான யோசனைகள்....... :D

 

1) பியர் அடிக்கலாம்.

2) வீட்டுக்கு பெயின்ற் அடிக்கலாம்.

3) கார் கழுவலாம்.

4) தோட்டத்தில் பூக்கண்டு நடலாம்.

5) குடும்பம் சகிதமாக, நண்பர் உறவினர் வீட்டுக்குப் போகலாம்.

6) மாதப் பிறப்பன்று... கோயில், தேவாலயத்துக்குப் போகலாம்.

7) வந்த கடிதங்களை... பிரித்து வாசித்து, பதில் எழுதலாம். (கடிதப் போக்குவரத்து இப்பவும், உள்ளதா? என்று நீங்கள் கேட்பது தெரியுது)

8) ம‌த்தியான‌ம் 1 ம‌ணி வ‌ரை, போத்து மூடிக் கொண்டு ப‌டுத்திருக்க‌லாம்.

9) ந‌ல்ல‌ ச‌மைய‌ல் செய்து... சாப்பிட‌லாம்.

 

இதை... விட‌, வேறை... என்ன‌ செய்ய‌லாம் என்பதற்கு,

உங்களிடம் ஐடியா... இருந்தால், ஒழிக்காமல் எமக்கும் சொல்லுங்கள்.

பலருக்கு, பிரயோசனமாய் இருக்க வாய்ப்புண்டு. :lol:  :icon_idea:

நீங்கள் எழுதும் கருத்துகளை வாசித்துக்கொண்டு இருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கும் இண்டைக்கும 'லீவு' இல்லை! :D

 

எமது நாட்டிலுள்ள மாநிலங்களுக்கு, இப்படியான வ்டுமுறை தினங்களைத் தீர்மானிக்கும் உரிமை உள்ளது!

 

எனவே, தொழிலாளர் தினம், அரசியாரின் பிறந்த தினம், போன்றவை சம்பந்தமில்லாத நாட்களில் வரும்!

 

ஆனால், அனேகமாக, திங்கள் அல்லது வெள்ளியில் வருமாறு பார்த்துக்கொள்ளுவார்கள்!

 

அது ஒரு 'நீண்ட விடுமுறையாக' அமைவதால், அனைவரும் இந்த முறையை விரும்புகின்றார்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் தொழிலாளி  இல்லையாதலால்

எனது முதலாளி லீவு தரமறுத்துவிட்டார்

இன்றும் வேலை  நாள் தான். :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.