Jump to content

ஏப்ரல் 8 முதல் விண்டோஸ் எக்ஸ்.பி. நிறுத்தம்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் எக்ஸ்பி இயங்கு தளத்தின் சேவையை வரும் ஏப்ரல் 8 ஆம் தேதியுடன் நிறுத்திட முடிவு செய்துள்ளது.

img1140321035_1_1.jpg
 
FILE

இந்த விண்டோஸ் எக்ஸ்பி அறிமுகம் செய்யப்பட்டு 13 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இந்நிலையில் அதை பயன்பாட்டில் இருந்து முற்றிலும் அகற்றி கொள்ளப்படும் என்று மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி அது தொடர்பான தொழில்நுட்ப சேவையும் வழங்கபடமாட்டாது என்றும், விண்டோஸ் எக்ஸ்பியை பயன்படுத்துபவர்கள் விண்டோஸ் 8.1.ஐ வாங்கிக் கொள்ளலாம் என்று அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் விண்டோஸ் எக்ஸ்.பி.யை பயன்படுத்தும் வங்கிகள் மற்றும் ஏடிஎம் சேவைகள் பாதிக்கும் எனவும், அதற்கான மாற்று ஏற்பாடுகளை சம்மந்தப்பட்ட வங்கிகள் முன்கூட்டியே செய்து கொள்ள வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.

http://tamil.webdunia.com/newsworld/finance/news/1403/21/1140321035_1.htm

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடப் பாவிங்களா... திடீரென்று இப்படி அதிர்ச்சியான செய்தியை... தருகின்றீர்களே.... :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடப் பாவிங்களா... திடீரென்று இப்படி அதிர்ச்சியான செய்தியை... தருகின்றீர்களே.... :D

எனக்கு  குறைந்தது

20  கணணிகளை   மாற்றணும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு  குறைந்தது

20  கணணிகளை   மாற்றணும்

ஓ.... ஒரேயடியாய் இருபது கணனிகளை மாற்றுவது என்றால், பெரிய ஒரு சவாலான விடயம் தான் விசுகு.

இதனை... அப்பிள் நிறுவ‌னத்துடன், தொடர்பு கொண்டு... "விண்டோஸ் 8.1.ஐ" சலுகை விலையில் பெற்றுக் கொள்ள முயற்சித்துப் பாருங்களேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓ.... ஒரேயடியாய் இருபது கணனிகளை மாற்றுவது என்றால், பெரிய ஒரு சவாலான விடயம் தான் விசுகு.

இதனை... அப்பிள் நிறுவ‌னத்துடன், தொடர்பு கொண்டு... "விண்டோஸ் 8.1.ஐ" சலுகை விலையில் பெற்றுக் கொள்ள முயற்சித்துப் பாருங்களேன்.

நன்றி

யோசிக்கணும்.....

Link to comment
Share on other sites

அடப்பாவிகளா! சிறுபான்மை இனமக்கள் நலன் திட்டங்கள் அனைத்தையும் நாங்கள் எக்ஸ்பியில்தானே பதிந்து வைத்திருந்தோம். - மகிந்த அரசு

Link to comment
Share on other sites

மைக்ரோசொஃப்ட் Windows XP சேவையை நிறுத்துவதாகச் சொல்வதன் அர்த்தம், அவர்கள் இனி எந்த விதமான support களும் செய்ய மாட்டார்கள் என்பது.

உதாரணத்துக்கு XP இயங்கு தளத்தில் ஏதேனும் பாதுகாப்பு ஓட்டைகள் புதிதாகக் கண்டு பிடிக்கப்பட்டாலோ அல்லது புதிய பிரச்சனைகள் ஏதும் ஏற்பட்டாலோ அதற்குரிய திருத்தங்களை வழங்க மாட்டார்கள். அத்துடன் புதிய கருவிகளுக்கான அல்லது இருக்கும் வன்பொருட்களின்  மேம்பட்ட பதிப்புகள் (Upgraded versions)  வேலை செய்வதற்கான திருத்தங்களையும் செய்ய மாட்டார்கள். புதிய கணணிகளில் வருகின்ற புதிய device மற்றும் மேம்படுத்தப்பட்ட அமைப்புகள் வேலை செய்வதற்குரிய மென்பொருள் திருத்தங்களை XP இற்கு செய்ய மாட்டார்கள்.

மற்றப்படி, உங்கள் XP கணணியில் புதிய மென்பொருட்களையோ அல்லது கருவிகளையோ இணைக்காவிடின் அது பிரச்சனை இல்லாமல் இயங்கும்.

நன்றி   நிழலி

அப்படித்தான் நானும் புரிந்து கொண்டேன்

ஓடும்வரை  ஓடட்டும் என்று..... :icon_idea:

என்னிடம் 35 க்கு மேற்பட்ட  Windows XP  சிடிக்கள் உள்ளன.

சிறி  சொன்னது போல்

அவர்களுடன் ஒரு பேச்சுவார்த்தை செய்து பார்க்கலாமா  எனவும் யோசித்தேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

XP ஒரு பிரச்சனையுமில்லாதது.

Link to comment
Share on other sites

புதிய மாற்றங்கள் வருவதில் தவறில்லை. மாற்றங்களுக்கு பழயன பசளையாகவேண்டும் தவிரப் பயனற்றுப் போதல்கூடாது என்ற கவலை ஏற்பட்டது. பயனுள்ள தகவல்களைத் தந்த நிழலி அவர்களுக்கு நன்றிகள்!!. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கணணியின் இயங்குதளத்தை(Operating System) மாற்ற உத்தேசிப்பவர்கள், விண்டோஸ் 8 பதிலாக விண்டோஸ் 8.1 பதிப்பிற்கு நேரடியாக மாறுதலே உசிதம்.

பல மென்பொருள் பிழைகளை களைந்த பதிப்பாக விண்டோஸ் 8.1 வெளிவந்துள்ளது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.