Jump to content

2014 IPL 7 செய்திகளும்... கருத்துக்களும்


Recommended Posts

ட்டை விட்டது எப்படி: புலம்புகிறார் மலிங்கா
ஏப்ரல் 17, 2014.

 

அபுதாபி: ‘‘ காலிஸ் ‘கேட்ச்சை’ கோட்டை விட்டது தான், கோல்கட்டா அணிக்கு எதிரான முதல் போட்டியில் ‘கோட்டை’ விட காரணமாக அமைந்தது,’’ என, புலம்பியுள்ளார் மலிங்கா.

ஐக்கிய அரபு எமிரேட்சில் ஏழாவது ஐ.பி.எல்., தொடர் நடக்கிறது. இதன் முதல் போட்டியில் ‘நடப்பு சாம்பியன்’ மும்பை அணி, 41 ரன்கள் வித்தியாசத்தில், கோல்கட்டாவிடம் வீழ்ந்தது.

இதுகுறித்து மும்பை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா கூறியது:

கோல்கட்டா அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதல் 10 ஓவர்கள் சிறப்பாகத் தான் செயல்பட்டோம். இதன் பின் எங்களது பிடியில் இருந்து அவர்களை நழுவவிட்டு விட்டோம். இதனால், மணிஷ் பாண்டே, காலிஸ் இணைந்து சிறப்பான ‘பார்ட்னர்ஷிப்’ அமைத்துவிட்டனர்.

இதில் காலிஸ் 34 ரன்கள் எடுத்த போது கொடுத்த ‘கேட்ச்சை’ நான் கோட்டை விட்டுவிட்டேன். இதனால், அவர் அதிக ரன்கள் (72) குவித்துவிட்டார். கடைசியில் இதுவே தோல்விக்கான காரணமாக அமைந்து விட்டது.

இப்போட்டியில் அசத்தல் பவுலிங்கை வெளிப்படுத்தி, விக்கெட்டுகளை கைப்பற்றினேன். இருப்பினும், அணி தோல்வியடைந்தது ஏமாற்றமாக உள்ளது.

இருப்பினும், இது முதல் போட்டி தான். இதில் கிடைத்த அனுபவங்களைக் கொண்டு, வரும் போட்டிகளில் வெற்றிப் பாதைக்கு திரும்ப முயற்சிப்போம்.

இவ்வாறு மலிங்கா கூறினார்.

 

http://sports.dinamalar.com/2014/04/1397754588/malingamumbai.html

Link to comment
Share on other sites

  • Replies 147
  • Created
  • Last Reply

வெற்றியுடன் துவக்குமா சென்னை: இன்று பஞ்சாப் அணியுடன் மோதல்
ஏப்ரல் 17, 2014.

அபுதாபி: ஐ.பி.எல்., தொடரின் இன்றைய லீக் போட்டியில் இரு முறை கோப்பை வென்ற சென்னை அணி, பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது.

 

ஏழாவது ஐ.பி.எல்., தொடரின் முதற்கட்ட போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடக்கிறது. அபுதாபியில் இன்று மாலை நடக்கும் லீக் போட்டியில் தோனியின் சென்னை, பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

 

சென்னை அணியை பொறுத்தவரையில் 2010, 2011 என, இரு முறை கோப்பை வென்றுள்ளது. தவிர, 2008, 2012, 2013ல் பைனலுக்கு முன்னேறியது.

தற்போது அணியின் கேப்டன் தோனி, ரெய்னா உள்ளிட்ட சிலரது பெயர்கள் சூதாட்ட அறிக்கையில் இடம் பெற்றது, அணி உரிமையாளர் சிக்கியது என, பல்வேறு தொல்லைகளில் உள்ளது.

 

இருப்பினும், அணியை எப்படியும் அடுத்த சுற்றுக்கு கொண்டு செல்வது தான் முதல் வேலை என்று முடிவு செய்துள்ளார் தோனி. இதனால், அணியின் வெற்றியில் கூடுதல் கவனம் செலுத்துவார் எனத் தெரிகிறது.

 

தவிர, இம்முறை வழக்கமான துவக்க வீரர்கள் முரளி விஜய், மைக் ஹசி அணி மாறிவிட்டனர். இதனால், புதிய வரவுகளான பிரண்டன் மெக்கலம், டுவைன் ஸ்மித் துவக்கம் தர காத்திருக்கின்றனர். மற்றபடி, ‘மிடில் ஆர்டரில்’ ரெய்னா, பாபா அபராஜித் கைகொடுக்க வேண்டும்.

 

‘சுழல்’ கூட்டணி:

‘ஆல்–ரவுண்டர்’ இடத்தில் டுவைன் பிராவோ இடம் பெறலாம். தவிர, சுழற்பந்து வீச்சாளர்கள் அஷ்வின், ரவிந்திர ஜடேஜா கூட்டணியுடன், இம்முறை ‘டுவென்டி–20’ தரவரிசையின் ‘நம்பர்–1’ பவுலர் சாமுவேல் பத்ரீயும் களம் காணலாம்.

 

இதனால், டுபிளசிக்கு இடம் கிடைப்பது சந்தேகம் தான். வேகப்பந்து வீச்சை பொறுத்தவரையில் மோகித் சர்மா, ஈஷ்வர் பாண்டே அல்லது ஆஷிஸ் நெஹ்ரா என, இரு இந்திய வீரர்கள் சேர்க்கப்படத் தான் அதிக வாய்ப்புள்ளது.

 

ஜான்சன் பலம்:

கடந்த 2008ல் நடந்த முதல் தொடரில் அரையிறுதிக்கு தகுதி பெற்ற பஞ்சாப் அணி, இதன் பின் ஒருமுறை கூட லீக் சுற்றினை தாண்டியது இல்லை. ஒவ்வொரு முறையும் பெரும் எதிர்பார்ப்புடன் வரும் இந்த அணி, இம்முறையும் அதிக வலுவான அணியாகத் தான் உள்ளது.

கேப்டன் ஜார்ஜ் பெய்லி தலைமையில், அதிரடி துவக்க வீரர் சேவக், ஷான் மார்ஷ், புஜாரா, மன்தீப் சிங் உள்ளனர். பின் வரிசையில் போட்டியை ‘பினிஷிங்’ செய்ய, மேக்ஸ்வெல், டேவிட் மில்லர், திசரா பெரேரா காத்திருக்கின்றனர்.

 

பவுலிங்கில் ரூ. 6.5 கோடிக்கு வாங்கப்பட்ட வேகப்பந்து வீச்சாளர் மிட்சல் ஜான்சன், அவானா, தமிழகத்தின் பாலாஜி நம்பிக்கை தருவர். சுழலில் முரளி கார்த்திக்கை மட்டும் தான் நம்ப வேண்டும்.

இன்று நடக்கும் மற்றொரு போட்டியில் ராஜஸ்தான், ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

100 வது போட்டி

ஐ.பி.எல்., வரலாற்றில் அதிக போட்டிகளில் பங்கேற்றது, அதிக வெற்றிகள் பெற்ற அணி வரிசையில் முதலிடம் சென்னைக்குத் தான். இதுவரை 99 போட்டிகளில் பங்கேற்று, 59ல் வென்றது. 38ல் தோல்வி, ஒரு போட்டி ‘டை’ ஆனது. ஒரு போட்டி கைவிடப்பட்டது.

 

* இன்று சென்னை அணி தனது 100 வது போட்டியில் களம் காணுகிறது. அடுத்த இடத்தில் மும்பை அணி (96 போட்டி 56 வெற்றி, 40 தோல்வி) உள்ளது.

 

ரெய்னா ‘சதம்’

சென்னை அணி பங்கேற்ற 99 போட்டியிலும் பங்கேற்று அசத்தியுள்ளார் ரெய்னா. இதில் 95 முறை களமிறங்கிய இவர், ஒரு சதம் (100*), 18 அரைசதம் உட்பட மொத்தம் 2,802 ரன்கள் எடுத்து, ஐ.பி.எல்., வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் முதலிடத்தில் உள்ளார்.

இன்று 100வது போட்டியில் களம் காணும் இவர், அணியின் வெற்றிக்கு கைகொடுப்பார் என நம்பலாம். அடுத்த இரு இடங்களில் ரோகித் சர்மா (98 போட்டி, 2,540 ரன்கள்), தோனி (96 போட்டி, 2,243 ரன்கள்) உள்ளனர்.

 

http://sports.dinamalar.com/2014/04/1397753977/rainaiplchennai.html

Link to comment
Share on other sites

பெங்களூரு அணி அசத்தல் வெற்றி: யுவராஜ், கோஹ்லி அபாரம்

சார்ஜா: டில்லி அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில், யுவராஜ் சிங், கேப்டன் விராத் கோஹ்லி அபார ஆட்டத்தை வௌிப்படுத்த, பெங்களூரு அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டுமினியின் அரைசதம் வீணானது.

ஏழாவது ஐ.பி.எல்., தொடருக்கான முதற்கட்டப் போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ.,) நடக்கிறது. சார்ஜாவில் நேற்று நடந்த போட்டியில், பெங்களூரு, டில்லி அணிகள் மோதின.

கெய்ல் இல்லை:

பெங்களூரு லெவன் அணியில் கிறிஸ் கெய்லுக்கு இடம் கிடைக்கவில்லை. நிக் மட்டின்சன், மிட்சல் ஸ்டார்க், டிவிலியர்ஸ், ஆல்பி மார்கல் தேர்வு செய்யப்பட்டனர். காயம் காரணமாக டில்லி அணி கேப்டன் கெவின் பீட்டர்சன் விளையாடவில்லை. தினேஷ் கார்த்திக் கேப்டனாக செயல்பட்டார். ராஸ் டெய்லர், ஜிம்மி நீஷம், பார்னல், டுமினி இடம் பிடித்தனர்.

‘டாஸ்’ வென்ற பெங்களூரு அணி கேப்டன் விராத் கோஹ்லி, ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.

கார்த்திக் ஏமாற்றம்:

டில்லி அணிக்கு மயங்க் அகர்வால் (6) ஏமாற்றினார். ஆல்பி மார்கல் ‘வேகத்தில்’ கேப்டன் தினேஷ் கார்த்திக் ‘டக்–அவுட்’ ஆனார். வருண் ஆரோன் பந்தில் மனோஜ் திவாரி (1) நடையை கட்டினார். ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்த முரளி விஜய் (18), யுவேந்திரா ‘சுழலில்’ போல்டானார். டில்லி அணி 35 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

டுமினி அபாரம்:

பின் இணைந்த டுமினி, ராஸ் டெய்லர் ஜோடி ஆட்டத்தை கையில் எடுத்துக் கொண்டது. பெங்களூரு அணி பந்துவீச்சை எளிதாக சமாளித்த இவர்கள், விக்கெட் சரிவிலிருந்து அணியை மீட்டனர். டிண்டா வீசிய 18வது ஓவரில் அடுத்தடுத்து ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்த டுமினி, அரைசதத்தை பதிவு செய்தார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த ராஸ் டெய்லர், மிட்சல் ஸ்டார்க் வீசிய 19வது ஓவரில் இரண்டு பவுண்டரி அடித்தார். தொடர்ந்து அசத்திய டுமினி, டிண்டா வீசிய 20வது ஓவரில் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி விளாசினார்.

டில்லி அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 145 ரன்கள் எடுத்தது. டுமினி (67 ரன்கள், 48 பந்து, 3 சிக்சர், 4 பவுண்டரி), ராஸ் டெய்லர் (43) அவுட்டாகாமல் இருந்தனர். பெங்களூரு அணி சார்பில் மிட்சல் ஸ்டார்க், ஆல்பி மார்கல், வருண் ஆரோன், யுவேந்திரா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

பார்த்திவ் ஆறுதல்:

எட்டக்கூடிய இலக்கை விரட்டிய பெங்களூரு அணிக்கு நிக் மட்டின்சன் (4) ஏமாற்றினார். பின் இணைந்த பார்த்திவ் படேல், கேப்டன் விராத் கோஹ்லி ஜோடி பொறுப்பாக ஆடியது. முகமது ஷமி வீசிய 4வது ஓவரில் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரி அடித்த பார்த்திவ் படேல், நதீம் பந்தில் ஒரு இமாலய சிக்சர் அடித்தார். இரண்டாவது விக்கெட்டுக்கு 56 ரன்கள் சேர்த்த போது, ராகுல் சர்மா ‘சுழலில்’ பார்த்திவ் படேல் (37) போல்டானார்.

விராத் விளாசல்:

அடுத்து வந்த யுவராஜ் சிங்குடன் இணைந்த விராத் கோஹ்லி, துவக்கத்தில் நிதானமாக ஆடினார். பின் அதிரடிக்கு மாறிய இவர், ஜிம்மி நீஷம், ராகுல் சர்மா பந்தை சிக்சருக்கு அனுப்பினார். மறுமுனையில் யுவராஜ் சிங் அசத்த ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. நதீம் வீசிய 17வது ஓவரில் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்த யுவராஜ் அரைசதத்தை பதிவு செய்தார்.

பெங்களூரு அணி 16.4 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 146 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. யுவராஜ் (52), கோஹ்லி (49) அவுட்டாகாமல் இருந்தனர். டில்லி அணி சார்பில் முகமது ஷமி, ராகுல் சர்மா தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர். ஆட்டநாயகன் விருதை பெங்களூரு அணியின் யுவேந்திரா சாகல் வென்றார்.

வௌியேறிய பந்து

பெங்களூரு அணியின் மிட்சல் ஸ்டார்க் வீசிய மூன்றாவது ஓவரின் 2வது பந்தை டில்லி அணியின் முரளி விஜய் துாக்கி அடித்தார். சிக்சருக்கு பறந்த பந்து, மேற்கூரையில் பட்டு மைதானத்தை விட்டு வௌியேறியது. பின் புதிய பந்து வரவழைக்கப்பட்டு மீண்டும் பந்துவீசப்பட்டது.

* இதேபோல டில்லி அணியின் நதீம் வீசிய ஆறாவது ஓவரின் 2வது பந்தை பெங்களூரு அணியின் பார்த்திவ் படேல் துாக்கி அடித்தார். சிக்சருக்கு சென்ற பந்து, மேற்கூரையில் பட்டு மைதானத்தை விட்டு வௌியேறியது. பின் புதிய பந்து வரவழைக்கப்பட்டு மீண்டும் பந்துவீசப்பட்டது.

12 கோடிக்கு ‘டக்’

ஏழாவது ஐ.பி.எல்., தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் தினேஷ் கார்த்திக் ரூ. 12 கோடிக்கு டில்லி அணியில் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதன்மூலம் அதிகவிலைக்கு ஏலம் போன வீரர்கள் வரிசையில் 2வது இடம் பிடித்தார். நேற்று கெவின் பீட்டர்சன் காயம் காரணமாக விலகிய நிலையில் கேப்டன் பொறுப்புடன் களமிறங்கிய தினேஷ் கார்த்திக் ரன் எதுவும் எடுக்காமல் அவுட்டாகி, டில்லி அணி நிர்வாகத்திற்கு ஏமாற்றம் அளித்தார்.

30வது மைதானம்

நேற்று டில்லி–பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டி நடந்த சார்ஜா கிரிக்கெட் மைதானம், ஐ.பி.எல்., போட்டியை நடத்திய 30வது மைதானம் என்ற பெருமை பெற்றது.

கண்டம் தப்பினார் விராத்

டில்லி அணியின் பார்னல் வீசிய 13வது ஓவரில் இரண்டு முறை கண்டம் தப்பினார் பெங்களூரு அணி கேப்டன் விராத் கோஹ்லி. இந்த ஓவரின் முதல் பந்தில் 23 ரன்கள் எடுத்த நிலையில் கோஹ்லி கொடுத்த சுலப ‘கேட்ச்’ வாய்ப்பை ஜிம்மி நீஷம் நழுவவிட்டார். பின், கடைசி பந்தில் 24 ரன்கள் எடுத்த நிலையில் கொடுத்த ‘கேட்சை’ மயங்க் அகர்வால் நழுவவிட்டார். இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட கோஹ்லி, 49 ரன்கள் எடுத்து வெற்றிக்கு வித்திட்டார்.

http://sports.dinamalar.com/2014/04/1397757908/yuvrajipl.html

Link to comment
Share on other sites

சென்னை அணி தோல்வி: பஞ்சாப் அசத்தல் வெற்றி
ஏப்ரல் 17, 2014.

 

அபுதாபி: பஞ்சாப் அணிக்கு எதிரான ஐ.பி.எல்., தொடரின் லீக் போட்டியில் சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

ஏழாவது ஐ.பி.எல்., தொடரின் முதற்கட்ட போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடக்கிறது. அபுதாபியில் இன்று நடந்த லீக் போட்டியில் தோனியின் சென்னை, பஞ்சாப் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற சென்னை அணி கேப்டன் தோனி பேட்டிங் தேர்வு செய்தார்.

மெக்கலம், ஸ்மித் அதிரடி:

சென்னை அணிக்கு டுவைன் ஸ்மித், பிரண்டன் மெக்கலம் ஜோடி சிறப்பான துவக்கம் தந்தது. இருவரும் அரை சதம் அடித்தனர். ஸ்மித் (66), மெக்கலம் (67) வலு சேர்த்தனர். ரெய்னா 24 ரன்கள் எடுத்தார். தோனி 26 ரன்களில் ஆட்டமிழந்தார். சென்னை அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 205 ரன்கள் எடுத்தது. பிராவோ (8) அவுட்டாகாமல் இருந்தனர்.

பஞ்சாப் அணிக்கு புஜாரா (13), சேவக் (19) ஏமாற்றினர். மேக்ஸ்வெல், மில்லர் இணைந்து அதிரடி காட்டினர். மேக்ஸ்வெல் (95) சத வாய்ப்பை இழந்தார். மில்லர் அரை சதம் கடந்தார். பஞ்சாப் அணி 18.5 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 206 ரன்கள் எடுத்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டேவிட் மில்லர் (54), கேப்டன் பெய்லி (17) அவுட்டாகாமல் இருந்தனர். சென்னை அணி சார்பில் அஷ்வின் 2 விக்கெட் வீழ்த்தினார்.

 

http://sports.dinamalar.com/2014/04/1397753977/rainaiplchennai.html

Link to comment
Share on other sites

ராஜஸ்தான் அணி அசத்தல் வெற்றி: அஜின்கியா ரகானே அரைசதம்
ஏப்ரல் 18, 2014.

அபுதாபி: ஐதராபாத் அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில், அஜின்கியா ரகானே அரைசதம் அடித்து கைகொடுக்க, ராஜஸ்தான் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 

அபுதாபியில் நேற்று நடந்த 7வது ஐ.பி.எல்., தொடருக்கான லீக் போட்டியில், ராஜஸ்தான், ஐதராபாத் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் ஷேன் வாட்சன், ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.

 

ஐதராபாத் அணிக்கு ஆரோன் பின்ச் (2) ஏமாற்றினார். பின் இணைந்த கேப்டன் ஷிகர் தவான், டேவிட் வார்னர் ஜோடி பொறுப்பாக ஆடியது. இரண்டாவது விக்கெட்டுக்கு 75 ரன்கள் சேர்த்த போது, ரஜத் பாட்யா பந்தில் ஷிகர் தவான் (38) அவுட்டானார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த டேவிட் வார்னர் (32), ரஜத் பாட்யாவிடம் சரணடைந்தார். ‘மிடில்–ஆர்டரில்’ களமிறங்கிய லோகேஷ் ராகுல் (20), தவால் குல்கர்னி ‘வேகத்தில்’ வௌியேறினார். ரிச்சர்ட்சன் பந்தில் டேரன் சமி (6), கரண் சர்மா (4) நடையை கட்டினர்.

ஐதராபாத் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 133 ரன்கள் எடுத்தது. வேணுகோபால் ராவ் (16), ஸ்டைன் (0) அவுட்டாகாமல் இருந்தனர். ராஜஸ்தான் சார்பில் குல்கர்னி, ரிச்சர்ட்சன், பாட்யா தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

 

சுலப இலக்கை விரட்டிய ராஜஸ்தான் அணிக்கு முதல் ஓவரில் அதிர்ச்சி காத்திருந்தது. ஸ்டைன் வீசிய ஆட்டத்தின் முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய அபிஷேக் நாயர் (4), மூன்றாவது பந்தில் அவுட்டானார். சஞ்சு சாம்சன் (3), புவனேஷ்வர் குமாரிடம் சரணடைந்தார். அடுத்து வந்த கேப்டன் ஷேன் வாட்சன் (3), இஷாந்த் சர்மா ‘வேகத்தில்’ வௌியேறினார். ராஜஸ்தான் அணி 31 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

 

பின் இணைந்த அஜின்கியா ரகானே, ஸ்டூவர்ட் பின்னி ஜோடி ஆட்டத்தை கையில் எடுத்துக் கொண்டது. நிதானமாக ஆடிய ரகானே அரைசதம் அடித்தார். நான்காவது விக்கெட்டுக்கு 77 ரன்கள் சேர்த்த போது, அமித் மிஸ்ரா ‘சுழலில்’ ரகானே (59) சிக்கினார். பிராட் ஹாட்ஜ் (1), ரஜத் பாட்யா (4) சொற்ப ரன்னில் அவுட்டானார்கள்.

கடைசி ஓவரில் ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு 8 ரன்கள் தேவைப்பட்டன. புவனேஷ்வர் குமார் வீசிய 20வது ஓவரில் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரி அடித்த ஜேம்ஸ் பால்க்னர் வெற்றியை உறுதி செய்தார். ராஜஸ்தான் அணி 19.3 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 135 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றுது. ஸ்டூவர்ட் பின்னி (48), பால்க்னர் (8) அவுட்டாகாமல் இருந்தனர்.

 

http://sports.dinamalar.com/2014/04/1397845108/rahanerajasthanipl.html

Link to comment
Share on other sites

பெங்களூரு அணிக்கு 2வது வெற்றி: மீண்டும் வீழ்ந்தது மும்பை
ஏப்ரல் 19, 2014.

 

துபாய்: ஐ.பி.எல்., லீக் போட்டியில் அசத்திய பெங்களூரு அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தியது.

 

ஏழாவது ஐ.பி.எல்., தொடரின் முதற்கட்ட போட்டிகள், ஐக்கிய அரபு எமிரேட்சில் நடக்கின்றன. நேற்று நடந்த லீக் போட்டியில் ‘நடப்பு சாம்பியன்’ மும்பை அணி, பெங்களூருவை எதிர்கொண்டது.

 

‘டாஸ்’ வென்ற பெங்களூரு அணி கேப்டன் விராத் கோஹ்லி, ‘பவுலிங்’ தேர்வு செய்தார். பெங்களூரு அணியின் கெய்ல், முதுகுவலி காரணமாக நேற்றும் சேர்க்கப்படவில்லை.

ஹசி சொதப்பல்:

மும்பை அணிக்கு மைக் ஹசி, ஆதித்ய தாரே ஜோடி சுமாரான துவக்கம் கொடுத்தது. ஸ்டார்க் பந்துகளில் இரண்டு பவுண்டரி அடித்த ஹசி, 16 ரன்னுடன் திரும்பினார்.

அடுத்து வந்த ராயுடு, தாரே இணைந்து, மார்கல் வீசிய போட்டியின் 6வது ஓவரில் 3 பவுண்டரி உட்பட மொத்தம் 18 ரன்கள் எடுத்தனர்.

 

ஸ்டார்க் ‘ஷாக்’:

இதன் பின் அவ்வளவு தான், நிலைமை அப்படியே தலைகீழானது. ஏற்கனவே கோல்கட்டாவிடம் தோற்ற மும்பை அணியின் ஆட்டம் இம்முறையும் எடுபடவில்லை. தாரே (17), ஆரோன் வேகத்தில் வீழ்ந்தார். கேப்டன் ரோகித் சர்மா (2) வந்த வேகத்தில் கிளம்பினார்.

‘அதிரடி’ போலார்டும் (3) அணியை கைவிட்டார். சற்று தாக்குப்பிடித்த அம்பதி ராயுடுவை (35), ஸ்டார்க் வெளியேற்றினார்.

இவரது அடுத்த பந்தில், அதிகம்  எதிர்பார்க்கப்பட்ட கோரி ஆண்டர்சனும் (18), அவுட்டானார். ‘டெயிலெண்டர்கள்’ ஜாகிர் கான் (0), ஹர்பஜன் (8), மலிங்கா (2) என, வரிசையாக ஏமாற்ற, மும்பை அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 115 ரன்கள் மட்டும் எடுத்தது. ஓஜா (1), பம்ரா (1) அவுட்டாகாமல் இருந்தனர்.

அதிர்ச்சி துவக்கம்:

 

எளிய இலக்கைத் துரத்திய பெங்களூரு அணிக்கு மடின்சன் (12) ஏமாற்றினார். ஜாகிர் கான் வீசிய போட்டியின் 4வது ஓவரின் மூன்றாவது பந்தில் ‘அபாயகரமான’ கோஹ்லி, ‘டக்’ அவுட்டானார்.

5வது பந்தில் ரூ. 14 கோடிக்கு வாங்கப்பட்ட யுவராஜ் சிங்கும் ‘டக்’ அவுட்டாகினார். பெங்களூரு அணி 17 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.

 

பார்த்திவ் அபாரம்:

பின் இணைந்த பார்த்திவ் படேல், டிவிலியர்ஸ் ஜோடி பொறுப்பான ஆட்டத்தை

வெளிப்படுத்தியது. எட்ட வேண்டிய இலக்கு குறைவு என்பதால், ஒன்று, இரண்டு ரன்களாக சேர்த்தனர்.

பம்ரா பந்தை சிக்சருக்கு அனுப்பி, டிவிலியர்ஸ் அதிரடிக்கு திரும்பினார். மறுபுறம் மலிங்கா, ஓஜா ஓவரில் அடுத்தடுத்து தலா 2 பவுண்டரிகள் விளாசினார் பார்த்திவ்.

இவர் மலிங்கா பந்தையும் பவுண்டரிக்கு அனுப்ப, பெங்களூரு அணி 17.3 ஓவரில், 3 விக்கெட்டுக்கு 116 ரன்கள் எடுத்து, 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. ஏற்கனவே டில்லியை வீழ்த்திய பெங்களூரு அணி, இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது.

அரைசதம் கடந்த பார்த்திவ் படேல் (57), டிவிலியர்ஸ் (45) அவுட்டாகாமல் இருந்தனர்.

 

http://sports.dinamalar.com/2014/04/1397927065/ParthivPatelcricket.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஜபிஎல் விலையாட்டு ஒரு சொம்பறி விளையாட்டை போய் விட்டது..இந்த விளையாட்டில் வெற்றி தோல்வியை சூது தான் நியமிக்கிறது....ஜபிஎல் ஆரம்பம் ஆன 2008 காலப் பகுதியில் இந்த விளையாட்டுக்கு மக்கள் மத்தியில் வரவேற்ப்பு கிடைத்து...இப்ப இந்த விளையாட்டை கிரிக்கெட் ரசிகர்கள் கூட கண்டு கொள்வது இல்லை...நான் கூட இந்த விளையாட்டை பார்க்கமாலே விட்டு விட்டேன்.....

Link to comment
Share on other sites

டில்லிக்கு திரில் வெற்றி
ஏப்ரல் 19, 2014.

 

துபாய்: கோல்கட்டாவுக்கு எதிரான பரபரப்பான ஐ.பி.எல்., லீக் போட்டியில், கடைசி ஓவரில் டில்லி அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றி பெற்றது.

துபாயில் நேற்று நடந்த 7வது ஐ.பி.எல்., தொடருக்கான லீக் போட்டியில், கோல்கட்டா, டில்லி அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற கோல்கட்டா கேப்டன் காம்பிர், ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.

கோல்கட்டா அணிக்கு காலிஸ் (0),  கேப்டன் காம்பிர் (0) ஜோடி மோசமான துவக்கம் கொடுத்தது. பின் இணைந்த மனிஷ் பாண்டே (48), ராபின் உத்தப்பா (55) ஜோடி அசத்தியது. யூசுப் பதான் (11) ஏமாற்றினார். கடைசி கட்டத்தில் சாகிப் அல் ஹசன் (30*), சூர்யகுமார் யாதவ் (8*) கைகொடுக்க, கோல்கட்டா அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 166 ரன்கள் எடுத்தது.

சவாலான இலக்கை விரட்டிய டில்லி அணிக்கு முரளி விஜய் (0) ‘ரன்–அவுட்’ ஆனார். மயங்க் அகர்வால் (26) பெரிய அளவில் சோபிக்கவில்லை. ராஸ் டெய்லர் (6) ஏமாற்றினார். பொறுப்பாக ஆடிய கேப்டன் தினேஷ் கார்த்திக் (56) அரைசதம் அடித்தார். மனோஜ் திவாரி (8) நிலைக்கவில்லை. அபாரமாக ஆடிய டுமினி, மார்னே மார்கல் வீசிய 18வது ஓவரில் 21 ரன்கள் எடுத்தார். கடைசி ஓவரில் 6 ரன்கள் தேவைப்பட்டன. பியுஸ் சாவ்லா பந்தை சிக்சருக்கு அனுப்பிய டுமினி வெற்றியை உறுதி செய்தார்.

டில்லி அணி 19.3 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 167 ரன்கள் எடுத்து முதல் வெற்றி பெற்றது. டுமினி (52) அவுட்டாகாமல் இருந்தார்.

 

http://sports.dinamalar.com/2014/04/1397924043/yusufpathencricket.html

Link to comment
Share on other sites

செய்வீர்களா தோனி: ரசிகர்கள் எதிர்பார்ப்பு
ஏப்ரல் 20, 2014.

 

அபுதாபி: ஐ.பி.எல்., தொடரில் இன்று நடக்கும் லீக் போட்டியில், சென்னை, டில்லி அணிகள் மோதுகின்றன. கடந்த போட்டியில் 205 ரன்கள் எடுத்தும் சென்னை தோற்றது. இதையடுத்து பவுலிங்கில், கேப்டன் தோனி அதிரடி மாற்றங்களை செய்வாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஏழாவது ஐ.பி.எல்., தொடருக்கான முதற்கட்டப் போட்டிகள், ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ.,) நடக்கின்றன. அபுதாபியில் இன்று நடக்கும் தொடரின் 8வது லீக் போட்டியில், சென்னை, டில்லி அணிகள் மோதுகின்றன.

 

பலமான பேட்டிங்:

பஞ்சாப் அணிக்கு எதிரான முதல் போட்டியில் 205 ரன்கள் எடுத்தும் தோல்வி அடைந்த விரக்தியில் சென்னை அணி உள்ளது. இப்போட்டியில் சென்னை அணியின் பேட்டிங் நன்றாக இருந்தது. துவக்க வீரர்களாக அசத்திய டுவைன் ஸ்மித் (66), பிரண்டன் மெக்கலம் (67) இன்றும் சாதிக்கலாம். ‘மிடில்–ஆர்டரில்’ ரெய்னா, கேப்டன் தோனி, டுவைன் பிராவோ, டுபிளசி, ரவிந்திர ஜடேஜா அதிரடி காட்டும் பட்சத்தில், இமாலய இலக்கை பதிவு செய்யலாம்.

 

வருவாரா ஹில்பெனாஸ்:

பந்துவீச்சு தான் கவலை அளிக்கிறது. மோகித் சர்மா, நெஹ்ராவின் ‘வேகம்’ எடுபடவில்லை. இவர்களுக்கு பதில் ஹில்பெனாஸ், ஈஷ்வர் பாண்டேவுக்கு வாய்ப்பு அளிக்கலாம். ‘சுழலில்’ நல்ல ‘பார்மில்’ உள்ள சாமுவேல் பத்ரீயை சேர்க்கலாம். இது போன்ற மாற்றங்களை கேப்டன் தோனி செய்ய வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். அஷ்வின், ரவிந்திர ஜடேஜா ரன்களை கட்டுப்படுத்துவது அவசியம்.

 

பீட்டர்சன் சந்தேகம்:

டில்லி அணியை பொறுத்தவரை காயம் காரணமாக கேப்டன் கெவின் பீட்டர்சன் இன்றைய போட்டியிலும் விளையாடுவது சந்தேகம். தினேஷ் கார்த்திக் மீண்டும் கேப்டனாக செயல்படுவார்.

 

டுமினி நம்பிக்கை:

கடந்த இரண்டு போட்டியில் ஏமாற்றிய முரளி விஜய் (18, 0), மயங்க் அகர்வால் (6, 26) ஜோடி சிறந்த துவக்கம் கொடுக்க முயற்சிக்க வேண்டும்.  கோல்கட்டாவுக்கு எதிராக அரைசதம் அடித்து எழுச்சி கண்டார் தினேஷ் கார்த்திக். இவரது பொறுப்பான ஆட்டம் இன்றும் தொடரலாம். கடந்த இரண்டு போட்டியில் பேட்டிங்கில் அசத்திய டுமினி (67, 52*) இன்றும் ரன் மழை பொழியலாம். இவருக்கு ராஸ் டெய்லர், மனோஜ் திவாரி ஒத்துழைப்பு அளிக்கும் பட்சத்தில் நல்ல ஸ்கோரை பெறலாம்.

முகமது ஷமி, பார்னல், கூல்டர் நைல், ஜெயதேவ் உனத்கத் உள்ளிட்ட ‘வேகங்கள்’ விக்கெட் வீழ்த்த முயற்சிக்க வேண்டும். ‘சுழலில்’ நதீம், ராகுல் சர்மா துல்லியமாக பந்துவீசினால் நல்லது.

 

இதுவரை இவ்விரு அணிகள்...

ஐ.பி.எல்., வரலாற்றில் இதுவரை சென்னை, டில்லி அணிகள் 12 முறை மோதின. இதில் சென்னை அணி 8 போட்டிகளில் வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது. டில்லி அணி 4 போட்டியில் வெற்றி கண்டது.

* டில்லி அணிக்கு எதிராக சென்னை அணி அதிகபட்சமாக 222 ரன்கள் (2012, இடம்–சென்னை) குவித்தது. சென்னைக்கு எதிராக டில்லி அணி அதிகபட்சமாக 189 ரன்கள் (2009, இடம்–டர்பன்) எடுத்தது.

 

http://sports.dinamalar.com/2014/04/1398012336/dhoniiplchennai.html

Link to comment
Share on other sites

பஞ்சாப் அணிக்கு 2வது வெற்றி
ஏப்ரல் 19, 2014.

சார்ஜா: ஐ.பி.எல்.,லீக் போட்டியில் மேக்ஸ்வெல், மில்லர் அதிரடி ஆட்டம் கைகொடுக்க, பஞ்சாப் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சு ஏமாற்றம் அளித்தது. 

 

சார்ஜாவில் நேற்று நடந்த ஐ.பி.எல்., லீக் போட்டியில் பஞ்சாப், ராஜஸ்தான் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற பஞ்சாப் அணி கேப்டன் பெய்லி ‘பவுலிங்’ தேர்வு செய்தார்.

ராஜஸ்தான் அணிக்கு ரகானே (13) ஏமாற்றினார். அபிஷேக் நாயர் 23 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்

வாட்சன், சாம்சன் சேர்ந்து அசத்தினர். அக்சர்  படேல் பந்துவீச்சில் வாட்சன் இரண்டு பவுண்டரி அடித்தார். 3வது விக்கெட்டுக்கு 74 ரன்கள் சேர்த்தபோது, வாட்சன் (50) அவுட்டானார். பின்னி (12) நிலைக்கவில்லை. சாம்சன் அரைசதம் கடந்து (52) அவுட்டானார். ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 191 ரன்கள் குவித்தது.

மேக்ஸ்வெல் சரவெடி:

கடின இலக்கை விரட்டிய பஞ்சாப் அணிக்கு சேவக் (2) மீண்டும் சொதப்பினார். பால்க்னர் வீசிய அடுத்த ஓவரில் சகாவும் (2) நடையைக் கட்டினார். மேக்ஸ்வெல் வழக்கம்போல அதிரடி காட்டினார். ரிச்சர்ட்சன் ஓவரில் தலா ஒரு பவுண்டரி, சிக்சர் அடித்த இவர் அரை சதம் எட்டினார். புஜாரா ஒன்றிரண்டு ரன்களாக சேர்த்தார். குல்கர்னி ஓவரில் மேக்ஸ்வெல் 4 பவுண்டரி அடிக்க, அரங்கம் அதிர்ந்தது. 3வது விக்கெட்டுக்கு 116 ரன்கள் சேர்த்தநிலையில், மேக்ஸ்வெல் (89) அவுட்டானார்.

மில்லர் மிரட்டல்:

குல்கர்னி வீசிய போட்டியின் 18வது ஓவரில் மில்லர் 4 சிக்சர்கள் உட்பட மொத்தம் 27 ரன்கள் எடுக்க, வெற்றி உறுதியானது. பஞ்சாப் அணி 18.4 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 193 ரன்கள் எடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மில்லர் (51), புஜாரா (40) அவுட்டாகாமல் இருந்தனர்.

ஏற்கனவே சென்னையை வீழ்த்திய பஞ்சாப் அணி நேற்று இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது.

..........

http://sports.dinamalar.com/2014/04/1397927170/davidmillercricket.html

 

Link to comment
Share on other sites

வெற்றி பெறுமா சென்னை ? : இன்று டில்லியுடன் பலப்பரீட்சை

 

7 ஆவது ஐ.பி.எல். தொடரில் இடம்பெற்ற முதலாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. இந்நிலையில் சென்னை அணி 2ஆவது போட்டியில் டெல்லி டேர்டெவில்சை இன்று எதிர்கொள்கிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் தனது வெற்றி கணக்கை தொடங்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. துடுப்பாட்டத்தில் பலம் பெற்று இருந்தும் மோசமான பந்து வீச்சு அந்த அணியின் பாதிப்பாக இருக்கிறது. பஞ்சாப் அணிக்கு எதிராக 200 ஓட்டங்களுக்கு மேல் குவித்தும் வெற்றி பெற இயலாமல் போனது ஏமாற்றமே.

தொடக்க வீரர்கள் மெக்குல்லம், சுமித்தின் அதிரடியான ஆட்டம் அணியின் துடுப்பாட்ட  பலத்தை காட்டுகிறது. அணித் தலைவர் டோனி, ரெய்னா ஆகியோரும் சிறந்த அதிரடி ஆடி அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்த உதவுவார்கள்.

தோள்பட்டையில் காயம் அடைந்த பிராவோ இன்றைய ஆட்டத்தில் விளையாடுவாரா? என்பது உறுதியாக தெரிய வில்லை. சென்னை அணியின் வேகப்பந்து வீச்சு பலவீனத்தை காட்டுகிறது.

டெல்லி அணி தொடக்க ஆட்டத்தில் பெங்களூரிடம் எளிதில் சுருண்டது. மற்றைய ஆட்டத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது.

அந்த அணியில் டுமினி, ரொஸ் டெய்லர், குயின்டன் கெக், மனோஜ் திவாரி, தினேஷ் கார்த்திக், முரளிவிஜய் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர். காயம் காரணமாக கடந்த 2 போட்டியில் விளையாடாத பீற்றர்சன் இன்றைய போட்டியில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அவர் விளையாட முடியாத பட்சத்தில் தினேஷ் கார்த்திக் அணியை வழிநடத்துவார். சென்னை அணிக்கு எல்லா வகையிலும் டில்லி சவால் கொடுக்க கூடியதாகும்.

 

http://www.virakesari.lk/articles/2014/04/21/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88

Link to comment
Share on other sites

பிரிமியர் கிரிக்கெட்: சென்னை அணி வெற்றி

ஏப் 21,2014 19:38

அபுதாபி : 7வது பிரிமியர் கிரிக்கெட் தொடரில் இன்று நடக்கும் போட்டி ஒன்றில் சென்னை அணியும், டில்லி அணியும் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது. சென்னை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 177 ரன்கள் எடுத்துள்ளது.பின்னர் களமிறங்கிய டில்லி அணி 15.4 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 84 ரன்கள் எடுத்திருந்த போது, டில்லி வீரர் கவுல்டர் நைல் காயம் காரணமாக களமிறங்கவில்லை. இதையடுத்து சென்னை அணி 93 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி ஐ.பி.எல்., அரங்கி்ல் தனது சிறந்த வெற்றியை பதிவு செய்தது.
 

 

http://www.dinamalar.com/news_detail.asp?id=959487

Link to comment
Share on other sites

சென்னை கிங்ஸ் சூப்பர் வெற்றி: டில்லி அணி சரண்டர்
ஏப்ரல் 20, 2014.

அபுதாபி: டில்லி அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில், சென்னை அணி 93 ரன்கள் வித்தியாசத்தில் ‘சூப்பர்’ வெற்றி பெற்றது. ரெய்னா, அரைசதம் விளாசினார்.  

ஏழாவது ஐ.பி.எல்., தொடரின் முதற்கட்ட போட்டிகள், ஐக்கிய அரபு எமிரேட்சில் நடக்கிறது. நேற்று அபுதாபியில் நடந்த லீக் போட்டியில், சென்னை, டில்லி அணிகள் மோதின.                  

 

‘டாஸ்’ வென்ற சென்னை கேப்டன் தோனி, ‘பேட்டிங்’ தேர்வு செய்தார். பவுலிங்கில் எதிர்பார்த்த மாற்றங்களை செய்தார். காயமடைந்த பிராவோ, கடந்த போட்டியில் சொதப்பிய ஆஷிஸ் நெஹ்ரா, பவான் நேகி நீக்கப்பட்டு,  ஹில்பெனாஸ், மிதுன் மன்ஹாஸ், ஈஷ்வர் பாண்டே சேர்க்கப்பட்டனர். டில்லி அணியில் கெவின் பீட்டர்சன் (வலது சுண்டு விரல் காயம்) இடம்பெறவில்லை. கேப்டன் பொறுப்பை தினேஷ் கார்த்திக் மீண்டும் ஏற்றார். 

                

ரெய்னா அரைசதம்: சென்னை அணிக்கு டுவைன் ஸ்மித்(29), பிரண்டன் மெக்கலம்(9) ஜோடி சுமாரான துவக்கம் கொடுத்தது. பின் அதிரடியாக ஆடிய ரெய்னா 41 பந்தில் 56 ரன்கள் எடுத்து அவுட்டானார். டுபிளசி (24) நிலைக்கவில்லை. தலா 2 சிக்சர், பவுண்டரி அடித்த தோனி 32 (15 பந்து), ஜடேஜா (7) ஒரே ஓவரில் அவுட்டாகினர். சென்னை அணி, 20 ஓவரில், 7 விக்கெட்டுக்கு 177 ரன்கள் எடுத்தது. மன்ஹாஸ் (13) அவுட்டாகாமல் இருந்தார்.   

   

விக்கெட் மடமட: சற்று கடின இலக்கைத் துவக்கிய டில்லி அணிக்கு துவக்கமே அதிர்ச்சி தான். ரெய்னாவின் அசத்தல் ‘கேட்ச்சில்’ அகர்வால் (2) அவுட்டானார். முரளி விஜய்(11), மனோஜ் திவாரி(0) ஏமாற்றினார். தொடர்ந்து சென்னை பவுலர்கள் அசத்த, விக்கெட்டுகள் வரிசையாக சரிந்தன. டுமினி(15), ராஸ் டெய்லர் (6) நீடிக்கவில்லை.    

சற்று தாக்குப்பிடித்த தினேஷ் கார்த்திக் (21), நீஷம் (22) அடுத்தடுத்து கிளம்பினர். நதீமை (3) ஜடேஜா கிளப்பினார். கூல்டர் நைல் காயம் காரணமாக களமிறங்காததால், டில்லி அணி 15.4 ஓவரில் 84 ரன்களுக்கு சுருண்டு, தோல்வியடைந்தது.      

 

சென்னை சார்பில் ஈஷ்வர் பாண்டே, ஜடேஜா, அஷ்வின் தலா 2 விக்கெட் சாய்த்தனர்.

ஆட்டநாயகன் விருதை ரெய்னா தட்டிச் சென்றார்.

 

பிராவோ ‘அவுட்’                 

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில், பீல்டிங்கின் போது சென்னை ‘ஆல்–ரவுண்டர்’  டுவைன் பிராவோ, இடது தோள்பட்டை பகுதியில் காயமடைந்தார். இவர் நேற்று இடம் பெறவில்லை. இது குறித்து தோனி கூறுகையில்,‘‘காயம் காரணமாக 4 முதல் 5 வாரங்களுக்கு பிராவோ போட்டிகளில் பங்கேற்க மாட்டார். இவர் ‘டிரசிங் ரூமில்’ இல்லாதது சோகம் தான். விரைவில் குணமடைவார் என, நம்புகிறேன்,’’ என்றார். பிராவோ இல்லாதது, சென்னை அணிக்கு பெரிய இழப்பு தான்.

 

அதிக ரன்கள்     

ஐ.பி.எல்., வரலாற்றில் ‘பவர்–பிளே’ ஓவர்களில் அதிக ரன்கள் எடுத்த எணி என்ற பெருமை சென்னைக்கு கிடைத்தது. இதுவரை சென்னை அணி 101 போட்டிகளில் 4,466 ரன்கள் எடுத்தது.     

* ஐ.பி.எல்., தொடரில் டில்லி அணி முதலில் களமிறங்கிய போட்டிகளின் வெற்றி சதவீதம் 52. அதேநேரம், ‘சேஸ்’ செய்த 36 சதவீத போட்டிகளில் தான் வென்றது.      

* சென்னை அணி முதலில் ‘பேட்’ செய்து, கடைசி 5 ஓவர்களில் 65 அல்லது அதற்கு மேல் ரன்கள் என, மொத்தம் 13 முறை எடுத்தது. நேற்று கடைசி 5 ஓவர்களில் 66 ரன்கள் எடுத்தது.      

ரெய்னா ‘20’     

நேற்று 56 ரன்கள் எடுத்த ரெய்னா, ஐ.பி.எல்., அரங்கில் தனது 20வது அரைசதத்தை பதிவு செய்தார். இதன் மூலம் அதிக அரைசதம் அடித்த வீரர்கள் வரிசையில், கெய்ல் (பெங்களூரு), காம்பிருடன் (கோல்கட்டா) முதலிடத்தை பகிர்ந்து கொண்டார். மூவரும் 20 அரைசதம் அடித்துள்ளனர்.

 

ஐந்தாவது வெற்றி     

டில்லி அணிக்கு எதிரான ஐ.பி.எல்., போட்டிகளில் தொடர்ந்து நான்கு வெற்றி பெற்றது சென்னை அணி. நேற்று 93 ரன்களில் வெற்றி பெற்ற சென்னை அணி, டில்லிக்கு எதிராக தொடர்ந்து 5வது வெற்றியை பதிவு செய்தது.

 

மிகப்பெரிய வெற்றி

நேற்று டில்லியை வீழ்த்திய சென்னை அணி, ஐ.பி.எல்., அரங்கில், ரன்கள் அடிப்படையில், தனது மிகப்பெரிய வெற்றியை (93 ரன்கள்) பதிவு செய்தது. இதற்கு முன், 2009ல் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் (போர்ட் எலிசபெத்), 92 ரன்கள் வித்தியாசத்தில் வென்று இருந்தது.

 

* ஒட்டு மொத்த அளவில், இந்த வெற்றி 5வது இடத்தில் உள்ளது. அதிக ரன்கள் வித்தியாசத்தில் வென்ற அணிகள் வரிசையில் முதல் மூன்று இடங்களில் கோல்கட்டா (140 ரன்கள், எதிர்–பெங்களூரு, 2008), பஞ்சாப் (111 ரன்கள், எதிர்–பெங்களூரு, 2011, ராஜஸ்தான் (105 ரன்கள், எதிர்–டில்ல, 2008) அணிகள் உள்ளன.

http://sports.dinamalar.com/2014/04/1398012336/dhoniiplchennai.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை அணியில் அஸ்வின் என்ற ஒரு தமிழரேனும் விளையாடுவது மகிழ்ச்சி. டில்லி அணியில் முரளி விஜயும் தினேஷ் கார்த்திக்கும் இரு தமிழர்கள் விளையாடினார்கள். போட்டி ஆரம்பத்தில் இருந்தே சென்னையின் ஆதிக்கமே இருந்தது. வாழ்த்துக்கள். அதேவேளை தினேஷ் கார்த்திக் டில்லி அணிக்கு தலைமை தாங்கினார்.இவர் ஒரு சிறந்த வீரர்.விக்கட் காப்பாளர் ஆவார். இந்திய அணியில் தோனி இருக்கும் வரை இவர் திரும்ப வருவது கடினம்.

Link to comment
Share on other sites

சென்னையின் ஒரே கேப்டன் தோனி: பிரண்டன் மெக்கலம் புகழாரம்
ஏப்ரல் 21, 2014.

 

அபுதாபி: ‘‘சென்னை அணியை பொறுத்தவரை தோனி மட்டும் தான் கேப்டன்,’’ என, நியூசிலாந்து வீரர் பிரண்டன் மெக்கலம் புகழாரம் சூட்டினார்.     

ஏழாவது ஐ.பி.எல்., தொடரில் இடம் பெற்றுள்ள சென்னை அணியில், தோனி (இந்தியா), பிரண்டன் மெக்கலம் (நியூசிலாந்து), டுவைன் பிராவோ (வெஸ்ட் இண்டீஸ்), டுபிளசி (தென் ஆப்ரிக்கா) என நான்கு சர்வதேச கேப்டன்கள் இடம் பெற்றுள்ளனர்.     

 

இதுகுறித்து நியூசிலாந்து கேப்டன் பிரண்டன் மெக்கலம் கூறியது: நான்கு சர்வதேச கேப்டன்கள் இருந்த போதிலும், சென்னை அணிக்கு ஒரே ஒரு கேப்டன் தோனி மட்டும் தான். போட்டியின் போது தன்னிச்சையாக சரியான முடிவு எடுக்கும் திறமை கொண்டவர். சிறந்த அனுபவம் பெற்ற இவர், பயிற்சியின் போது சகவீரர்களுக்கு நிறைய ஆலோசனைகள் வழங்குகிறார். குறிப்பாக இளம் வீரர்களை திறமையாக வழிநடத்தி, அவர்களது திறமைக்கேற்ப ஆலோசனை அளிக்கிறார். போட்டியின் போது சக வீரர்கள் தோனியின் கட்டளை வரும் வரை காத்திருக்காமல், சரியான இடத்தில் பீல்டிங் செய்வது வியப்பாக உள்ளது.  

   

உலகின் சிறந்த கேப்டன்களின் ஒருவரான தோனியின் கீழ் விளையாடுவது மகிழ்ச்சியாக உள்ளது. இவரிடம் இருந்து கேப்டன் பதவி குறித்து நிறைய விஷயங்களை கற்றுக் கொள்ள விரும்புகிறேன். விக்கெட் கீப்பராக தோனி செயல்படுவது மகிழ்ச்சி. தேவைப்படும் பட்சத்தில் இவருக்கு மாற்று விக்கெட் கீப்பராக செயல்படுவேன். 

    

சென்னை அணியின் பயிற்சியாளரான ஸ்டீபன் பிளமிங்கின் வழிநடத்துதலில் சர்வதேச போட்டியில் நியூசிலாந்து அணிக்காக விளையாடி உள்ளேன். தற்போது இவரது பயற்சியின் கீழ் விளையாடுவது பழைய நினைவுகளை ஞாபகப்படுத்துகிறது.     

இவ்வாறு பிரண்டன் மெக்கலம் கூறினா

 

http://sports.dinamalar.com/2014/04/1398092739/BrendonMcCullumChennaiIPLCricketDhoni.html

Link to comment
Share on other sites

மேக்ஸ்வெல் விளாசல்:பஞ்சாப் ‘ஹாட்ரிக்’ வெற்றி
ஏப்ரல் 21, 2014.
 

 

சார்ஜா: ஐ.பி.எல்., லீக் போட்டியில் அசத்திய பஞ்சாப் அணி, ஐதராபாத்தை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் ‘ஹாட்ரிக்’ வெற்றியை பதிவு செய்தது. பேட்டிங்கில் மிரட்டிய மேக்ஸ்வெல், பஞ்சாப் அணிக்கு மீண்டும் கைகொடுத்தார்.

 

ஐக்கிய அரபு எமிரேட்சில், ஏழாவது ஐ.பி.எல்., தொடரின் முதற்கட்ட போட்டிகள் நடக்கின்றன. நேற்று நடந்த லீக் போட்டியில் பஞ்சாப், ஐதராபாத் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற ஐதராபாத் அணி கேப்டன் ஷிகர் தவான், ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.

 

சேவக் நம்பிக்கை:

பஞ்சாப் அணிக்கு சேவக், புஜாரா ஜோடி துவக்கம் கொடுத்தது. முதல் 2 ஓவர்களில் 3 ரன்கள் மட்டும் எடுத்த இந்த ஜோடி, அடுத்து அதிரடிக்கு திரும்பியது.

இர்பான் ஓவரில் போட்டியின் முதல் சிக்சர் அடித்த சேவக், புவனேஷ்வர் பந்தையும் சிக்சருக்கு விரட்டினார். இவர் 30 ரன்னில், சமியிடம் சிக்கினார்.

கடந்த இரண்டு போட்டியில் ‘டுவென்டி–20’க்கு ஏற்ப வேகமாக ரன்கள் சேர்க்க தடுமாறிய புஜாரா, நேற்று ஸ்டைன் ஓவரில் மூன்று பவுண்டரி அடித்தார். தொடர்ந்து சர்மா, ஷமி பந்துகளில் பவுண்டரி விளாசிய புஜாரா (35) நீடிக்கவில்லை.

 

நழுவிய சதம்:

பின் மேக்ஸ்வெல்லுடன், மில்லர் இணைந்தார். 11 ரன்னில் மேக்ஸ்வெல் கொடுத்த எளிதான ‘கேட்ச்சை’, கோட்டை விட்ட ஐதராபாத், இதற்கான பலனை நன்கு அனுபவித்தது.

அமித் மிஸ்ரா ஓவரில் ‘ஹாட்ரிக்’ சிக்சர் விளாசிய, மேக்ஸ்வெல், 21 வது பந்தில் அரைசதத்தை எட்டினார். கடைசியில் இவர், 95 ரன்னுக்கு (43 பந்து, 9 சிக்சர்) அவுட்டாகி, சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார்.

 

பெய்லி (10), ஜான்சன் (4) ஏமாற்றினர். பஞ்சாப் அணி 20 ஓவரில், 6 விக்கெட்டுக்கு 193 ரன்கள் குவித்தது.

கடின இலக்கு:

கடின இலக்கைத் துரத்திய ஐதராபாத் அணிக்கு எல்லாமே சோகம் தான். ஷிகர் தவான் (1) கொடுத்த துவக்க அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள், அதிரடி வீரர்கள் பின்ச் (19), வார்னரை (8) தனது ஒரே ஓவரில் அவுட்டாக்கி ‘ஷாக்’ கொடுத்தார் பாலாஜி.

வேணுகோபால் (11), இர்பான் (5), டேரன் சமி (15), கரண் சர்மா (10) கைவிட்டனர். போராடிய லோகேஷ் ராகுல் அதிகபட்சமாக 27 ரன்கள் எடுத்தார்.

ஸ்டைனும் (12) ஏமாற்ற, ஐதராபாத் அணி 19.2 ஓவரில் 121 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி, 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது. பஞ்சாப் சார்பில் பாலாஜி அதிகபட்சமாக 4 விக்கெட் வீழ்த்தினார்.

 

இத்தொடரில் ஏற்கனவே சென்னை, ராஜஸ்தான் அணிகளை வீழ்த்திய பஞ்சாப் அணி ‘ஹாட்ரிக்’ வெற்றியை பெற்றது.

ஆட்டநாயகன் விருதை மேக்ஸ்வெல் வென்றார்.

 

அதிர்ஷ்ட மழையில்...

பஞ்சாப் அணியின் மேக்ஸ்வெல்லுக்கு இம்முறை  அதிர்ஷ்டம் கூரையை பிய்த்துக் கொண்டு கொட்டுகிறது. சென்னை அணிக்கு எதிரான முதல் போட்டியில், 37, 77 ரன்னில் தப்பிப்பிழைத்து, 95 (43 பந்து) ரன்கள் எடுத்தார்.

 

ராஜஸ்தானுக்கு எதிராக 45 பந்தில் 89 ரன்கள் எடுத்தார். நேற்று ஐதராபாத் அணியுடனும்11 ரன்னில் தப்பிய இவர், 62 ரன்னில் ‘பிடி’ கொடுத்தார். ஆனால், மீண்டும் அதிர்ஷ்டம் கைகொடுத்தது. சமி வீசிய இந்த பந்து ‘நோ–பாலாக’ அமைய, 95 ரன்கள் (42 பந்து) எடுத்து தான் திரும்பினார்.

இதுவரை மூன்று போட்டியில் 130 பந்தில், 279 ரன்கள் குவித்து, இத்தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் முதலிடத்தில் உள்ளார்.

சிக்சர் சாதனை

நேற்று 9 சிக்சர் அடித்த மேக்ஸ்வெல், ஐ.பி.எல்., தொடரில் ஒரு போட்டியில் அதிக சிக்சர் அடித்த வீரர்கள் வரிசையில், முதலிடத்தை கில்கிறிஸ்ட்டுடன் பகிர்ந்து கொண்டார்.

கடந்த 2011ல், பெங்களூருவுக்கு எதிராக பஞ்சாப் வீரர் கில்கிறிஸ்ட், 9 சிக்சர் அடித்திருந்தார்.

 

http://sports.dinamalar.com/2014/04/1398092884/PunjabHyderabadIPLCricket.html

Link to comment
Share on other sites

மீண்டும் அசத்துமா சென்னை அணி: இன்று ராஜஸ்தானுடன் மோதல்
ஏப்ரல் 22, 2014.

 

துபாய்: ஐ.பி.எல்., லீக் போட்டியில் இன்று சென்னை, ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. கடந்த போட்டியில் சுலப பெற்றி பெற்ற சென்னை மீண்டும் அசத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

ஏழாவது ஐ.பி.எல்., தொடருக்கான முதற்கட்டப் போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ.,) நடக்கின்றன. துபாயில் இன்று நடக்கும் தொடரின் 10வது லீக் போட்டியில் சென்னை அணி, ராஜஸ்தானை எதிர்கொள்கிறது. இவ்விரு அணிகளும் கடந்த தொடரில் சூதாட்ட சர்ச்சையில் சிக்கியவை என்பதால், ஒருவித நெருக்கடியுடன் களமிறங்கும்.

சென்னை அணியை பொறுத்தவரை டில்லிக்கு எதிராக இமாலய வெற்றி பெற்ற உற்சாகத்தில் உள்ளது. டுவைன் ஸ்மித் நல்ல துவக்கம் தருகிறார். பிரண்டன் மெக்கலம் எழுச்சி பெற வேண்டும்.  டில்லிக்கு எதிராக 41 பந்தில் 56 ரன்கள் விளாசிய ரெய்னா, இன்றும் மிரட்டலாம். ‘மிடில்–ஆர்டரில்’ டுபிளசி இருப்பது பலம். கடந்த போட்டியில் 15 பந்தில் 32 ரன்கள் எடுத்த கேப்டன் தோனியின் அதிரடி இன்றும் வெளிப்படலாம். ‘ஆல்–ரவுண்டர்’ ஜடேஜா பேட்டிங்கிலும் கவனம் செலுத்துவது அவசியம்.

 

வேகப்பந்துவீச்சில் ஈஷ்வர் பாண்டே, ஹில்பெனாஸ் நம்பிக்கை தருகின்றனர். ‘சுழலில்’ மிரட்ட அஷ்வின், ஜடேஜா கூட்டணி உள்ளது. கடந்த போட்டியில் சென்னை அணியின் ‘பீல்டிங்’ அருமையாக இருந்தது. இது இன்றும் தொடர்ந்தால், மீண்டும் எளிதான வெற்றியை பெறலாம்.

 

மிரட்டும் வாட்சன்:

ராஜஸ்தான் அணிக்கு அபிஷேக், ரகானே நல்ல அடித்தளம் அமைக்க வேண்டும். கேப்டன் வாட்சன், சாம்சன் நல்ல ‘பார்மில்’ உள்ளனர்.  பின்னி, ஸ்டீவ் ஸ்மித் தங்கள் பங்கிற்கு ரன் குவிக்கலாம். வேகப்பந்துவீச்சில் மிரட்ட பால்க்னர், குல்கர்னி காத்திருக்கின்றனர்.

 

சென்னை பிரிவுயு பாக்ஸ்....

இதுவரை...

ஐ.பி.எல்.,வரலாற்றில் இதுவரை இவ்விரு அணிகளும் 13 போட்டியில் மோதி உள்ளன. இதில் 8 போட்டியில் வெற்றி பெற்று சென்னை ஆதிக்கம் செலுத்துகிறது. ராஜஸ்தான் 5 போட்டியில் வென்றுள்ளது.

 

http://sports.dinamalar.com/2014/04/1398186676/dhonichennaiipl.html

Link to comment
Share on other sites

சென்னை அணி வெற்றி
ஏப்ரல் 22, 2014.

துபாய்: ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் சென்னை அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஏழாவது ஐ.பி.எல்., தொடரின் முதற்கட்ட போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடக்கின்றன. துபாயில் நடக்கும் இதன் லீக் போட்டியில், சென்னை, ராஜஸ்தான் அணிகள் மோதின.

‘டாஸ்’ வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் வாட்சன் ‘பீல்டிங்’ தேர்வு செய்தார். ராஜஸ்தான் அணியில் உடல்நிலை சரியில்லாத ரிச்சர்ட்சனுக்குப் பதில்,  டிம் சவுத்தி சேர்க்கப்பட்டார்.

சென்னை அணிக்கு பிரண்டன் மெக்கலம் (6) அதிர்ச்சி துவக்கம் தந்தார். டுவைன் ஸ்மித் அரை (50) சதம் அடித்து அவுட்டானார். ரெய்னா (4), டு பிளசி (7), கேப்டன் தோனி (5) என யாரும் நிலைக்கவில்லை. மன்ஹாஸ் 10 ரன்களில் அவுட்டானார். சென்னை அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 140 ரன்கள் எடுத்தது. ஜடேஜா (36), அஷ்வின் (9) அவுட்டாகாமல் இருந்தனர்.

ராஜஸ்தான் அணிக்கு வாட்சன் (7), சாம்சனை (16), அபிஷேக் (5) ரகானே (15) நிலைக்கவில்லை. ஸ்டீவன் ஸ்மித் (19), பால்க்னர் (4), சவுத்தி (4) என அடுத்தடுத்து வெளியேறினர். மற்றவர்களும் சொதப்ப, ராஜஸ்தான் அணி 19.5 ஓவரில் 133 ரன்களுக்கு ஆல்–அவுட்டாகி தோல்வியடைந்தது.

 

http://sports.dinamalar.com/2014/04/1398186676/dhonichennaiipl.html

Link to comment
Share on other sites

சென்னை அணி வெற்றி

ஏப்ரல் 22, 2014.

துபாய்: ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் சென்னை அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஏழாவது ஐ.பி.எல்., தொடரின் முதற்கட்ட போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடக்கின்றன. துபாயில் நடக்கும் இதன் லீக் போட்டியில், சென்னை, ராஜஸ்தான் அணிகள் மோதின.

‘டாஸ்’ வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் வாட்சன் ‘பீல்டிங்’ தேர்வு செய்தார். ராஜஸ்தான் அணியில் உடல்நிலை சரியில்லாத ரிச்சர்ட்சனுக்குப் பதில்,  டிம் சவுத்தி சேர்க்கப்பட்டார்.

சென்னை அணிக்கு பிரண்டன் மெக்கலம் (6) அதிர்ச்சி துவக்கம் தந்தார். டுவைன் ஸ்மித் அரை (50) சதம் அடித்து அவுட்டானார். ரெய்னா (4), டு பிளசி (7), கேப்டன் தோனி (5) என யாரும் நிலைக்கவில்லை. மன்ஹாஸ் 10 ரன்களில் அவுட்டானார். சென்னை அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 140 ரன்கள் எடுத்தது. ஜடேஜா (36), அஷ்வின் (9) அவுட்டாகாமல் இருந்தனர்.

ராஜஸ்தான் அணிக்கு வாட்சன் (7), சாம்சனை (16), அபிஷேக் (5) ரகானே (15) நிலைக்கவில்லை. ஸ்டீவன் ஸ்மித் (19), பால்க்னர் (4), சவுத்தி (4) என அடுத்தடுத்து வெளியேறினர். மற்றவர்களும் சொதப்ப, ராஜஸ்தான் அணி 19.5 ஓவரில் 133 ரன்களுக்கு ஆல்–அவுட்டாகி தோல்வியடைந்தது.

 

http://sports.dinamalar.com/2014/04/1398186676/dhonichennaiipl.html

 

 

ஐரோப்பாவிலிருந்து யாழ்கள விளையாட்டுத்துறை செய்தியாளர் நவீனன்

 

   :D  :D 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

22-1398142866-10174832-877529768940562-8


கோதாரி, விழுந்தவங்கள்.....

Link to comment
Share on other sites

ஐ.பி.எல்.இல் பந்து வீச்சாளர்களை மிரட்டும் மெக்ஸ்வெல்

7 ஆவது ஐ.பி.எல். தொடரில் சிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் மெக்ஸ்வெல் தனது அதிரடியாட்டத்தால் எதிரணி பந்து வீச்சாளர்களை மிரட்டுவது மட்டுமல்லாது கிரிக்கெட் ரசிகர்களையும் தன்வசம் கட்டிப்போட்டுள்ளார்.

நடந்து முடிந்த 3 போட்டியில் ஹெட்ரிக் ஆட்ட  நாயகன் விருது வென்ற இவர் 279 ஓட்டங்களை குவித்துள்ளார்.


ஐ.பி.எல்.  தொடரில் பஞ்சாப் மற்றும் ஐதரபாத் அணிகளுக்கிடையிலான லீக் போட்டி நேற்று முன்தினம் ஷார்ஜாவில் நடந்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் 20  ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 193 ஓட்டங்களை பெற்றது.


ஐதராபாத் 19.2  ஓவரில் 121 ஓட்டங்களுக்குள் சுருண்டு, 72 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. பஞ்சாபின் வெற்றிக்கு காரணமான மெக்ஸ்வெல் 43  பந்தில் 9 சிக்சர், 5 பவுண்டரி உட்பட 95 ஓட்டங்களைப் பெற்று ஆட்ட நாயகன் விருது  வென்றார்.

இத்தொடரில் பஞ்சாப் அணியின் ஹெட்ரிக் வெற்றி இது. அதே போல,  மெக்ஸ்வெல்லும் ஹெட்ரிக் ஆட்ட நாயகன் விருது வென்றுள்ளார்.

இதுவரை 3 போட்டியில் மெக்ஸ்வெல் 3 அரைசதம் உட்பட 279  ஓட்டங்களை  (131 பந்து) குவித்து, அதிக ஓட்டங்களை பெற்றவர்கள் பட்டியலில்  முதலிடத்தில் உள்ளார். 17 சிக்சர், 28 பவுண்டரி அடித்து, அதிலும்  மெக்ஸ்வெல்லே முதலிடத்தை தக்க வைத்துள்ளார். இதனால் இந்த  7ஆவது ஐ.பி.எல். தொடரில் மெக்ஸ்வெல் பல்வேறு புதிய சாதனைகளை நிகழ்த்துவார் என  எதிர்பார்க்கப்படுகிறது.

 

http://www.virakesari.lk/articles/2014/04/24/%E0%AE%90%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D

Link to comment
Share on other sites

கோல்கட்டா திரில் வெற்றி
ஏப்ரல் 24, 2014.

 

 

 

சார்ஜா: பெங்களூரு அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில், கடைசி நேரத்தில் அசத்திய கோல்கட்டா அணி, 2 ரன்கள் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றி பெற்றது.

ஏழாவது ஐ.பி.எல்., தொடரின் முதற்கட்ட போட்டிகள், ஐக்கிய அரபு எமிரேட்சில் நடக்கின்றன. இதன் 11வது லீக் போட்டி, சார்ஜாவில் நடந்தது.  

                

‘டாஸ்’ வென்ற பெங்களூரு அணி கேப்டன் விராத் கோஹ்லி, வழக்கம் போல ‘பீல்டிங்’ தேர்வு செய்தார். கோல்கட்டா அணியில் பியுஸ் சாவ்லா, சாகிப் அல் ஹசன் நீக்கப்பட்டு, உமேஷ் யாதவ், கிறிஸ் லின் சேர்க்கப்பட்டனர்.   

               

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கிறிஸ் கெய்ல், முதுகு வலி தொடர்ந்ததால், நேற்றும் அணியில் சேர்க்கப்படவில்லை. நீண்ட இடைவெளிக்குப் பின், பெங்களூரு அணியில் முரளிதரன் இடம் பெற்றார்.            

 

காம்பிர் ‘டக்’: கோல்கட்டா அணிக்கு காம்பிர், காலிஸ் ஜோடி மோசமான துவக்கம் கொடுத்தது. மும்பை, டில்லி அணிகளுக்கு எதிராக ‘டக்’ அவுட்டான காம்பிர், நேற்றும் ரன் கணக்கைத் துவக்காமல், ‘டக்’ அவுட்டானார். இது, இத்தொடரில் காம்பிர் அடித்த ‘ஹாட்ரிக் டக்’. மணிஷ் பாண்டே (5) வந்த வேகத்தில் திரும்பினார்.            

நழுவிய அரைசதம்: பின் காலிசுடன், கிறிஸ் லின் இணைந்தார். மார்கல் ஓவரில் அடுத்தடுத்து இரு பவுண்டரிகள் அடித்த இவர், முரளிதரன் ஓவரில் இரண்டு சிக்சர் விளாசினார்.            

 

தொடர்ந்து சாகல் பந்தையும் சிக்சருக்கு அனுப்பிய லின் (45), அரைசத வாய்ப்பை இழந்து வெளியேறினார். யூசுப் பதான் தன் பங்கிற்கு ‘டக்’ அவுட்டானார். காலிஸ் (43) கைகொடுத்தார்.  உத்தப்பா (22) நீடிக்கவில்லை. வினய் குமார் 4 ரன்கள் எடுக்க, கோல்கட்டா அணி 20 ஓவரில், 7 விக்கெட்டுக்கு 150 ரன்கள் எடுத்தது. சூர்யகுமார் (24) அவுட்டாகாமல் இருந்தார். பெங்களூரு சார்பில் வருண் ஆரோன், அதிகபட்சமாக 3 விக்கெட் சாய்த்தார்.

 

நல்ல துவக்கம்: எளிய இலக்கைத் துரத்திய பெங்களூரு அணிக்கு பார்த்திவ் படேல், டகவாலே ஜோடி ‘சூப்பர்’ துவக்கம் தந்தது. மார்னே மார்கலின் 2, 3வது ஓவர்களில், தலா மூன்று பவுண்டரி அடித்து அசத்தினார் டகவாலே. இவர் 28 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து காலிஸ் வேகத்தில் சிக்கினார்.

 

கடைசி சொதப்பல்: அடுத்த சில நிமிடத்தில் பார்த்திவ் (21) கிளம்பினார். சற்று தாக்குப்பிடித்த கோஹ்லி (31), யுவராஜ் சிங் (31) அடுத்தடுத்து அவுட்டாக, பதட்டம் ஏற்பட்டது.

பெங்களூரு அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவைப்பட்டன.

 

வினய் குமார் வீசிய இந்த ஓவரின் முதல் 3 பந்தில் 3 ரன்கள் கிடைத்தன. 4வது பந்தில் டிவிலியர்ஸ் (11), கிறிஸ் லின்னின் அசத்தல் ‘கேட்ச்சில்’ அவுட்டாக, அணியின் தோல்வி உறுதியானது.

அடுத்த இரு பந்தில் 3 ரன்கள் மட்டும் எடுக்க, பெங்களூரு அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 148 ரன்கள் எடுத்து, 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. எளிதாக வெல்ல வேண்டிய போட்டியை, கடைசி நேர சொதப்பல் காரணமாக, பெங்களூரு அணி தோல்வியடைந்தது

 

கோஹ்லி காயம்

நேற்று கிறிஸ் லின் அடித்த பந்தை, ‘பீல்டிங்’ செய்த போது, கோஹ்லியின் தாடை பகுதியில் காயம் ஏற்பட, ரத்தம் வழிந்தது. உடனடியாக வெளியேறிய இவர், காயத்துக்கு ‘பிளாஸ்டர்’ போட்டுக் கொண்டு, மீண்டும் களமிறங்கினார்

 

http://sports.dinamalar.com/2014/04/1398363056/BangaloreKolkataIPLCricketChrisLynn.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.