Jump to content

2014 IPL 7 செய்திகளும்... கருத்துக்களும்


Recommended Posts

யாருக்கு பிளே–ஆப் வாய்ப்பு: மும்பை, ராஜஸ்தான் இன்று மோதல்

மே 24, 2014.

மும்பை: ஐ.பி.எல்., தொடரில் இன்று நடக்கும் முக்கியமான லீக் போட்டியில், மும்பை, ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதில், வெற்றி பெறும் அணி ‘பிளே–ஆப்’ சுற்றுக்கு முன்னேறலாம்.

ஏழாவது ஐ.பி.எல்., தொடருக்கான லீக் சுற்று இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை நடந்த போட்டிகளின் முடிவில், பஞ்சாப், சென்னை, கோல்கட்டா அணிகள் ‘பிளே–ஆப்’ சுற்றுக்கு முன்னேறின. மீதமுள்ள ஒரு இடத்துக்கு மும்பை, ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே பலத்த போட்டி நிலவுகிறது. இவ்விரு அணிகள் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இன்று மோதுகின்றன.

யாருக்கு வாய்ப்பு:

இதுவரை விளையாடிய 13 போட்டிகளில் 7ல் வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணி 14 புள்ளிகளுடனும், 6ல் வெற்றி பெற்ற மும்பை அணி 12 புள்ளிகளுடனும் உள்ளன. ராஜஸ்தான் அணியை பொறுத்தவரை வெற்றி பெற்றால் போதுமானது. ஆனால் மும்பை அணிக்கு வெற்றி மட்டும் போதாது. ஏனெனில் ராஜஸ்தான் அணி +0.247 ‘ரன்–ரேட்’ பெற்று வலுவான நிலையில் உள்ளது. ஆனால் மும்பை அணிக்கு –0.086 ‘ரன்–ரேட்’ மட்டுமே இருப்பதால், சிறந்த வெற்றியை பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

சிம்மன்ஸ் நம்பிக்கை:

ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ.,) தொடர்ச்சியாக ஐந்து போட்டியில் தோல்வி கண்ட மும்பை அணி, இந்தியாவில் வெற்றி முகம் கண்டது. கடைசியாக ராஜஸ்தான், பஞ்சாப், டில்லி அணிகளை வீழ்த்தி, ‘ஹாட்ரிக்’ வெற்றி பெற்ற உற்சாகத்தில் உள்ளது. டில்லிக்கு எதிராக அரைசதம் அடித்த மைக்கேல் ஹசி, பஞ்சாப்புக்கு எதிராக சதம் அடித்த லெண்டில் சிம்மன்ஸ் நல்ல ‘பார்மில்’ இருப்பது பலம். கேப்டன் ரோகித் சர்மா, போலார்டு, அம்பதி ராயுடு அதிரடி காட்டினால் வலுவான ஸ்கோரை பெறலாம்.

வேகப்பந்துவீச்சில் மலிங்கா இல்லாதது பின்னடைவு. ஜாகிர் கானை தொடர்ந்து பிரவீண் குமாரும் காயமடைந்தது வேகத்தின் பலத்தை குறைத்தது. டில்லிக்கு எதிராக 2 விக்கெட் வீழ்த்தி டி லாங்கே இன்றும் கைகொடுக்கலாம். ‘சுழலில்’ அனுபவ ஹர்பஜன் சிங், பிரக்யான் ஓஜாவுடன் இளம் வீரர் ஸ்ரேயாஸ் கோபால் அசத்தலாம்.

ரகானே எதிர்பார்ப்பு:

மும்பை, பஞ்சாப் அணிகளிடம் அடுத்தடுத்து தோல்வி கண்ட சோகத்தில் உள்ள ராஜஸ்தான் அணிக்கு அஜின்கியா ரகானே, கருண் நாயர் ஜோடி சிறந்த துவக்கம் கொடுத்தால் நல்லது. சஞ்சு சாம்சன் வேகமாக ரன் சேர்க்க வேண்டும். பஞ்சாப் அணிக்கு எதிராக ஏமாற்றிய கேப்டன் ஷேன் வாட்சன், ஸ்டவர்ட் பின்னி எழுச்சி காணலாம். பின் வரிசையில் பால்க்னர், கூப்பர், பிராட் ஹாட்ஜ் அதிரடி காட்டினால் இமாலய ஸ்கோரை பெறலாம். ‘சுழலில்’ ராகுல் டிவாட்டியாவுக்கு பதிலாக இக்பால் அப்துல்லாவுக்கு வாய்ப்பு வழங்கலாம். பிரவீண் டாம்பே விக்கெட் வீழ்த்த முயற்சித்தால் பலம்.

ஆறுதல் வெற்றி பெறுமா டில்லி

இன்று நடக்கும் முக்கியத்துவம் இல்லாத மற்றொரு லீக் போட்டியில், பஞ்சாப், டில்லி அணிகள் மோதுகின்றன. இதுவரை விளையாடிய 13 போட்டிகளில் 10ல் வெற்றி பெற்ற பஞ்சாப் அணி, முதல் அணியாக ‘பிளே–ஆப்’ சுற்றுக்கு முன்னேறியது. இன்று மீண்டும் அசத்தினால் 11வது வெற்றியை பெறலாம். ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ.,) இரண்டில் வெற்றி பெற்ற டில்லி அணி, இந்திய மண்ணில் விளையாடிய 8 போட்டியிலும் தொடர்ச்சியாக தோல்வி அடைந்து ‘பிளே–ஆப்’ வாய்ப்பை முதல் அணியாக இழந்தது. கேப்டன் கெவின் பீட்டர்சன், தினேஷ் கார்த்திக், டுமினி உள்ளிட்டோர் கைகொடுத்தால், பலமான பஞ்சாப்பை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெறலாம்.

http://sports.dinamalar.com/2014/05/1400951934/watsoncricketipl.html

Link to comment
Share on other sites

  • Replies 147
  • Created
  • Last Reply

பஞ்சாப் அணி அசத்தல் வெற்றி
மே 25, 2014.

 

மொகாலி: டில்லி அணிக்கு எதிரான லீக் போட்டியில் பஞ்சாப் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியாவில் நடக்கும் ஐ.பி.எல்., தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இன்று மொகாலியில் நடக்கும் லீக் போட்டியில் பஞ்சாப், டில்லி அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற பஞ்சாப் அணி கேப்டன் பெய்லி ‘பவுலிங்’ தேர்வு செய்தார்.

 

டில்லி அணிக்கு அகர்வால் (2), தினேஷ் கார்த்திக் (13) ஏமாற்றினர். கேப்டன் கெவின் பீட்டர்சன் அரை சதம் கடந்தார். கரண்வீர் சிங் ‘சுழலில்’ டுமினி (8), நீசம் (12) சிக்கினர். பீட்டர்சன் 58 ரன்களில் ஆட்டமிழந்தார். மனோஜ் திவாரி (8) உள்ளிட்டவர்கள் சொதப்ப, பஞ்சாப் அணி 18.1 ஓவரில் 115 ரன்களுக்கு ஆல்–அவுட்டானது.

 

எளிய இலக்கை துரத்திய பஞ்சாப் அணிக்கு சேவக் (9), மேக்ஸ்வெல் (0) நிலைக்கவில்லை. வோரா, மில்லர் ஜோடி இணைந்து வெற்றிக்கு வித்திட்டது. வோரா சத (47) வாய்ப்பை இழந்தார். முடிவில், பஞ்சாப் அணி 13.5 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 119 ரன்கள் எடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 

http://sports.dinamalar.com/2014/05/1401020091/maxwellpunjab.html

Link to comment
Share on other sites

கடைசி பந்து வரை திக்...திக்...திக்: தாரே ‘சிக்சர்:பிளே–ஆப் சுற்றில் மும்பை
மே 24, 2014

மும்பை: நெஞ்சம் படபடத்த ஐ.பி.எல்., லீக் போட்டியின், கடைசி பந்தில் ஆதித்யா தாரே சிக்சர் அடிக்க, மும்பை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ‘பிளே–ஆப்’ சுற்றுக்கு முன்னேறியது. ராஜஸ்தான் அணி பரிதாபமாக வெளியேறியது.

 

மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடந்த, 7வது ஐ.பி.எல்., தொடருக்கான கடைசி லீக் போட்டியில் மும்பை, ராஜஸ்தான் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற மும்பை அணி ‘பீல்டிங்’ தேர்வு செய்தது.

 

சாம்சன் அபாரம்:

ராஜஸ்தான் அணிக்கு கேப்டன் ஷேன் வாட்சன் (8) ஏமாற்றினார். பின் இணைந்த சஞ்சு சாம்சன், கருண் நாயர் ஜோடி ஆட்டத்தை கையில் எடுத்துக் கொண்டது. பிரக்யான் ஓஜா, ஸ்ரேயாஸ் கோபால் பந்தில் தலா ஒரு சிக்சர் விளாசிய சாம்சன், அரைசதத்தை பதிவு செய்தார்.

கருண் கலக்கல்:

 

கோபால் வீசிய 11வது ஓவரில் ஒரு சிக்சர், மூன்று பவுண்டரி உட்பட 18 ரன்கள் எடுத்த கருண் நாயர், அரைசதம் அடித்தார். இரண்டாவது விக்கெட்டுக்கு 100 ரன்கள் சேர்த்த போது, கருண் நாயர் (50) அவுட்டானார். பொறுப்பாக ஆடிய சாம்சன் (74) நம்பிக்கை தந்தார்.

கடைசி நேரத்தில் ஜேம்ஸ் பால்க்னர் (23), பிராட் ஹாட்ஜ் (29*) அசத்தினர். ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 189 ரன்கள் குவித்தது.

 

கடின இலக்கு:

பின், 14.3 ஓவரில் 190 ரன்கள் எடுத்தால், ‘பிளே–ஆப்’ சுற்றுக்கு முன்னேறலாம் என்ற கடின இலக்கோடு களமிறங்கிய மும்பை அணிக்கு சிம்மன்ஸ் (12) ஏமாற்றினார். மைக்கேல் ஹசி (22) நிலைக்கவில்லை. போலார்டு (7), கேப்டன் ரோகித் சர்மா (16) சொற்ப ரன்னில் அவுட்டானார்கள்.

 

ஆண்டர்சன் ஆதிக்கம்:

அதிரடியாக ஆடிய கோரி ஆண்டர்சன், ராஜஸ்தான் அணி பந்துவீச்சை விளாசித் தள்ளினார். குல்கர்னி பந்தை சிக்சருக்கு அனுப்பிய ஆண்டர்சன், 26 பந்தில் அரைசதத்தை பதிவு செய்தார். இவருக்கு அம்பதி ராயுடு ஒத்துழைப்பு கொடுக்க, அணியின் ஸ்கோர் ‘ஜெட்’ வேகத்தில் உயர்ந்தது.

 

‘டென்ஷன்’ வெற்றி:

மும்பை அணி 14 ஓவரில் 181 ரன்கள் எடுத்திருந்தது. ‘பிளே–ஆப்’ சுற்றுக்கு முன்னேற, மூன்று பந்தில் 9 ரன்கள் தேவைப்பட்டன. பால்க்னர் வீசிய இந்த ஓவரின் முதல் பந்தில் ஆண்ர்டசன் ஒரு ரன் எடுத்தார். இரண்டாவது பந்தை அம்பதி ராயுடு சிக்சருக்கு அனுப்ப, ‘டென்ஷன்’ எகிறியது. மூன்றாவது பந்தில், இரண்டாவது ரன்னுக்கு ஓடிய ராயுடு (30) ‘ரன்–அவுட்’ ஆனார். மும்பை அணி 14.3 ஓவரில் 189 ரன்கள் எடுக்க ஸ்கோர் சமன் ஆனது. இதனையடுத்து பிளே–ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்  இலக்கு தொடர்பாக சந்தேகம் எழ, 3வது அம்பயரிடம் கேட்கப்பட்டது. இதில் 4வது பந்தில் பவுண்டரி அல்லது சிக்சர் அடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. ஆதித்யா தாரே, 4வது பந்தை சிக்சருக்கு அனுப்ப, மும்பை அணியின் வெற்றி உறுதியானது.

 

மும்பை அணி 14.4 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 195 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஆண்டர்சன் (95 ரன், 44 பந்து, 6 சிக்சர், 9 பவுண்டரி), ஆதித்யா தாரே (6) அவுட்டாகாமல்  இருந்தனர். ஆட்டநாயகன் விருதை கோரி ஆண்டர்சன் வென்றார்.

 

இந்த வெற்றியின் மூலம், 14 போட்டியில் 7 வெற்றி, 7 தோல்வி உட்பட 14 புள்ளிகளுடன் ‘ரன்–ரேட்’ அடிப்படையில், ராஜஸ்தானை (+0.060) பின்தள்ளி மும்பை அணி (+0.095) ‘பிளே–ஆப்’ சுற்றுக்கு முன்னேறியது.

என்ன தான் நடக்குது

ஐ.பி.எல்., தொடரின் கடைசி இரண்டு லீக் போட்டிகளில் நம்ப முடியாத அதிசயம் எல்லாம் அரங்கேறியது. நேற்று முன் தினம் கோல்கட்டா அணி, ஐதராபாத்தை வெறும் 14.2 ஓவரில் வீழ்த்தி இரண்டாவது இடம் பிடித்தது. இதன் மூலம் சொந்த மண்ணான கோல்கட்டாவில் ‘பிளே–ஆப்’ போட்டியில் பஞ்சாப்பை சந்திக்கும் வாய்ப்பை பெற்றது.

நேற்று 14.3 ஓவரில் ஸ்கோர் சமன் ஆனது. இதையடுத்து ‘பிளே–ஆப்’ வாய்ப்பை பெற 14.4வது கடைசி பந்தில் சிக்சர் அல்லது பவுண்டரி அடிக்க வேண்டும் என கூறப்பட்டது. பால்க்னரும் சொல்லி வைத்தது போல் ‘புல் டாசாக’ பந்துவீச... அதனை தாரோ சிக்சருக்கு விரட்ட ‘பிளே–வாய்ப்பு’ மும்பைக்கு தேடி வந்தது. இதன் மூலம் கோல்கட்டவை போல மும்பை அணியும் தனது சொந்த மண்ணில் ‘பிளே–ஆப்’ போட்டியில் விளையாடும் வாய்ப்பை பெற்றிருக்கிறது. துவக்கத்தில் 5 போட்டிகளில் வரிசையாக தோற்ற மும்பை அணி அடுத்த சுற்றுக்கு ‘ரன் ரேட்’ அடிப்படையில் முன்னேிறியது உண்மையில் அதிசயம் தான்.

 

 

 

http://sports.dinamalar.com/2014/05/1400951934/watsoncricketipl.html

Link to comment
Share on other sites

பைனலுக்குள் பாயுமா பஞ்சாப்: இன்று கோல்கட்டாவுடன் மோதல்
மே 26, 2014.

கோல்கட்டா: ஐ.பி.எல்., தொடரில் இன்று நடக்கும் ‘பிளே–ஆப்’ சுற்றுக்கான முதலாவது தகுதிச் சுற்றில், பஞ்சாப், கோல்கட்டா அணிகள் மோதுகின்றன. நல்ல ‘பார்மில்’ உள்ள பஞ்சாப் அணி, அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி, முதன்முறையாக பைனலுக்கு முன்னேறலாம்.   

                          

கோல்கட்டாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில், இன்று நடக்கும் ‘பிளே–ஆப்’ சுற்றுக்கான முதலாவது தகுதிச் சுற்றில், புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடங்களை பிடித்த பஞ்சாப், கோல்கட்டா அணிகள் மோதுகின்றன.                       

 

மேக்ஸ்வெல் எதிர்பார்ப்பு: லீக் சுற்றில் ஆதிக்கம் செலுத்திய பஞ்சாப் அணி, 14 போட்டியில் 11ல் வெற்றி பெற்று 22 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்தது. இதற்கு மேக்ஸ்வெல்லின் அதிரடி ஆட்டம் முக்கிய காரணம். 12 போட்டியில் 4 அரைசதம் உட்பட 533 ரன்கள் எடுத்த மேக்ஸ்வெல், கடைசியாக விளையாடிய மூன்று இன்னிங்சில் 16 ரன்கள் மட்டும் எடுத்தார். டில்லிக்கு எதிராக ‘டக்–அவுட்’ ஆன இவர், இன்று எழுச்சி காணலாம். துவக்க வீரராக சேவக் சோபிக்க வேண்டும். இதுவரை ஒரே ஒரு அரைசதம் உட்பட 324 ரன்கள் எடுத்த இவர், இன்று விரைவாக ரன் சேர்க்க முயற்சித்தால் நல்லது. பஞ்சாப் அணியின் ‘மிடில்–ஆர்டர்’ பலமாக உள்ளது. மனன் வோரா, டேவிட் மில்லர், கேப்டன் ஜார்ஜ் பெய்லி, விரிதிமன் சகா கைகொடுக்கும் பட்சத்தில், இமால இலக்கை பதிவு செய்யலாம். நான்கு வெளிநாட்டு வீரர்களுக்கு மட்டும் லெவன் அணியில் இடம் என்பதால், ஷான் மார்ஷ் விளையாடுவது சந்தேகம்.    

       

சந்தீப் நம்பிக்கை: வேகப்பந்துவீச்சில் சந்தீப் சர்மா (17 விக்கெட்) நம்பிக்கை அளிக்கிறார். இவருக்கு மிட்சல் ஜான்சன் (12 விக்கெட்), பாலாஜி (12 விக்கெட்) உள்ளிட்டோர் கைகொடுத்தால், கோல்கட்டாவின் ‘டாப்–ஆர்டர்’ பேட்ஸ்மேன்களை சொற்ப ரன்னில் அவுட்டாக்கலாம். ‘சுழலில்’ அக்சர் படேல் (14 விக்கெட்) ஆறுதல் தருகிறார். சுழலுக்கு சாதகமான ஈடன் கார்டனில் சாதிக்க முரளி கார்த்திக் தேர்வு செய்யப்படலாம். மித வேகப்பந்துவீச்சில் ரிஷி தவான் (13 விக்கெட்) கைகொடுத்தால் நல்லது.     

            

சொந்த மண் சாதகம்: முதல் ஏழு போட்டியில் 2ல் மட்டும் வெற்றி பெற்ற கோல்கட்டா அணி, பின் எழுச்சி கண்டு தொடர்ச்சியாக 7ல் வெற்றி பெற்று, 18 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தை பிடித்தது. இன்று சொந்த மண்ணில் விளையாட இருப்பது கூடுதல் பலம். உள்ளூர் ரசிகர்களின் ஆதரவோடு, பலமான பஞ்சாப் அணிக்கு பாடம் புகட்டலாம்.  

 

உத்தப்பா அபாரம்: பேட்டிங்கில் ராபின் உத்தப்பா நம்பிக்கை அளிக்கிறார். இதுவரை 14 போட்டியில் 5 அரைசதம் உட்பட 613 ரன்கள் எடுத்து முதலிடத்தில் உள்ள இவரது ரன் வேட்டை இன்றும் தொடரலாம். முதல் மூன்று போட்டியில் ‘டக்–அவுட்டான’ கேப்டன் காம்பிர், பின் எழுச்சி கண்டு மூன்று அரைசதம் உட்பட 311 ரன்கள் எடுத்தார். இவரது பொறுப்பான ஆட்டம் இன்றும் தொடர்ந்தால், சிறந்த துவக்கம் கிடைக்கும். ஐதராபாத் அணிக்கு எதிராக 22 பந்தில் 72 ரன்கள் குவித்த யூசுப் பதான், ‘மிடில்–ஆர்டரில்’ பலம் சேர்க்கிறார். இவருக்கு மனிஷ் பாண்டே, சாகிப் அல் ஹசன், டஸ்காட்டே உள்ளிட்டோர் கைகொடுக்கும் பட்சத்தில், வலுவான இலக்கை பதிவு செய்யலாம்.        

         

நரைன் ஜாலம்: வேகப்பந்துவீச்சில் மார்னே மார்கல் (10 விக்கெட்), வினய் குமார் (7 விக்கெட்) எழுச்சி காண வேண்டும். ‘சுழலில்’ சுனில் நரைன் அசத்துகிறார். இதுவரை 14 போட்டியில் 20 விக்கெட் கைப்பற்றி, முதலிடத்தில் உள்ள இவரது ‘சுழல் ஜாலம்’ இன்றும் தொடரலாம். பஞ்சாப் அணியின் மேக்ஸ்வெல், இத்தொடரில் 6 முறை இடது கை சுழற்பந்துவீச்சாளர்களால் அவுட்டாக்கப்பட்டார். இதனால் இன்றைய போட்டியில் இவரது விக்கெட்டை சாகிப் அல் ஹசன் கைப்பற்ற முயற்சிக்கலாம்.

இதுவரை....                 

ஐ.பி.எல்., அரங்கில் பஞ்சாப்–கோல்கட்டா அணிகள் இதுவரை 13 முறை மோதின. இதில் பஞ்சாப் 6, கோல்கட்டா 7ல் வெற்றி பெற்றது.                 

* இம்முறை இவ்விரு அணிகள் மோதிய இரண்டு போட்டியில், தலா ஒரு வெற்றி பெற்றன.                 

மற்றொரு வாய்ப்பு                 

இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக பைனலுக்கு முன்னேறிவிடும். தோல்வி அடையும் அணி, பைனலுக்கு தகுதி பெற மற்றொரு வாய்ப்பு உள்ளது. நாளை நடக்கும் ‘எலிமினேட்டர்’ போட்டியில் வெற்றி பெறும் அணியுடன், வரும் மே 30ம் தேதி நடக்கும் 2வது தகுதிச் சுற்றுப் போட்டியில் விளையாட வேண்டும். இதில் வெற்றி பெற்றால், ஜூன் 1ல் பெங்களூருவில் நடக்கும் பைனலில் விளையாடலாம்.          

       

மழை வந்தால்                 

நேற்று முன்தினம் கோல்கட்டாவில் மழை பெய்ததால், ஆடுகளம் பாதுகாப்பாக மூடப்பட்டுள்ளது. இதனால் நேற்று இரு அணி வீரர்களும் பயிற்சி மேற்கொள்ளவில்லை. இங்கு அடுத்த இரு தினங்களுக்கு கன மழை வாய்ப்பு இருப்பதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதனால் போட்டி திட்டமிட்டபடி நடப்பதில் சிக்கல் உள்ளது. ஒருவேளை இன்று மழை குறுக்கிடும் பட்சத்தில், போட்டி நாளைய தினத்துக்கு ஒத்தி வைக்கப்படும். நாளையும்  மழையால் போட்டி தடைபட்டால், ஐ.பி.எல்., 21.10 விதிமுறையின் படி, லீக் சுற்றில் அதிக புள்ளிகள் பெற்ற அணி பைனலுக்கு தகுதி பெறும். இவ்வாறு நடக்கும் பட்சத்தில் பஞ்சாப் அணிக்கு பைனல் வாய்ப்பு அதிகம்.

 

 

http://sports.dinamalar.com/2014/05/1401125163/PunjabKolkataIPLCricketMaxwell.html

Link to comment
Share on other sites

மறக்க முடியாத வெற்றி: ரோகித் உற்சாகம்
மே 26, 2014.

 

மும்பை: ‘‘ராஜஸ்தானுக்கு எதிராக கிடைத்த வெற்றியை என்றும் மறக்க முடியாது,’’ என, மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்தார்.     

மும்பையில் நடந்த ஐ.பி.எல்., லீக் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 189 ரன்கள் எடுத்தது. மும்பை அணி, ‘பிளே–ஆப்’ சுற்றுக்கு முன்னேறி, 14.3 ஓவரில் 190 ரன்கள் எடுக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. சவாலான இலக்கை துரத்திய மும்பை அணிக்கு கோரி ஆண்டர்சன் 44 பந்தில் 95 ரன்கள் எடுத்து கைகொடுக்க, 14.3 ஓவரில் 189 ரன்கள் எடுத்திருந்தது. ஸ்கோர் சமன் ஆனதால், ‘பிளே–ஆப்’ வாய்ப்பை பெற 14.4வது பந்தில் சிக்சர் அல்லது பவுண்டரி அடிக்க வேண்டும் என கூறப்பட்டது. பால்க்னர் ‘புல் டாசாக’ வீசிய பந்தை ஆதித்யா தாரே சிக்சருக்கு அனுப்ப, மும்பை அணி ‘பிளே–ஆப்’ சுற்றுக்கு முன்னேறியது.    

 

இதுகுறித்து மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா கூறியது: அம்பதி ராயுடு ‘ரன்–அவுட்’ ஆன போது, போட்டியில் என்ன நடக்கிறது எனப் புரியவில்லை. 14.3 ஓவரில் போட்டி ‘டை’ ஆனது தெரியவில்லை. 14.2 ஓவருக்குள் 190 ரன்கள் எடுக்காவிட்டால், தோல்வி என நினைத்திருந்தோம். ‘டை’ என நினைக்கவில்லை. இது குறித்து, மெகா ஸ்கிரீனில் காட்டிய செய்தியை நான் பார்க்கவில்லை. எங்கள் அணியின் ஆய்வாளர் ‘ரன்–ரேட்’ குறித்து ஒவ்வொரு பந்தின் முடிவிலும் கணக்கிட்டுக் கொண்டிருந்தார். ‘பிளே–ஆப்’ சுற்றுக்கு முன்னேற, அடுத்த பந்தில் கட்டாயம் பவுண்டரி அடிக்க வேண்டும் என்பதை அவர் தான் எங்களுக்கு கூறினார். 190 ரன்கள் என்ற இலக்கு கடினமானது. இதனை 14.3 ஓவருக்குள் எடுக்க வேண்டும் என்பது சாதாரன விஷயமல்ல. முதல் ஓவரின் போது வெற்றிக்கு 13 ‘ரன்–ரேட்’ தேவைப்பட்டது. இப்போட்டியில் கூடுதலாக ஒரு பேட்ஸ்மேனை சேர்த்ததால், நல்ல பலனை கொடுத்தது.

 

கடந்த ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் லீக் தொடரிலும், இதே நிலைதான் எங்களுக்கு இருந்தது. அப்போது 14.3 ஓவரில் 155 ரன்கள் எடுக்க வேண்டும் என இலக்கு இருந்தது. அபாரமாக ஆடிய எங்கள் அணி பேட்ஸ்மேன்கள், அந்த இலக்கை ‘சேஸ்’ செய்தனர்.     

 

இந்த வெற்றியை என்னால் நம்ப முடியவில்லை. முதல் ஐந்து போட்டியில் தொடர்ச்சியாக தோல்வி அடைந்ததால், எங்கள் அணி மீது நிறைய விமர்சனம் எழுந்தது. பின், இந்தியாவில் நடந்த 9 போட்டியில் 7ல் வெற்றி பெற்று, ‘டாப்–4’ வரிசையில் இடம் பிடித்தோம். இது எளிதான காரியமல்ல.   

  

கோரி ஆண்டர்சன் ஆட்டம் அருமையாக இருந்தது. இதன்மூலம் தனது தேர்வை நியாயப்படுத்தினார். ஏற்கனவே ஒருநாள் போட்டியில் அதிகவேக சதம் அடித்ததால், இந்த இலக்கை ‘சேஸ்’ செய்யும் தகுதி இவருக்கு உள்ளது. சமீபத்தில் நியூசிலாந்தில் நடந்த தொடரில் இவரது ஆட்டத்தை நேரில் பார்த்துள்ளேன். இவரது சிறப்பான ஆட்டம் அடுத்து வரும் போட்டிகளில் தொடரும் என நம்புகிறேன்.     

 

சென்னை அணிக்கு எதிரான அடுத்த போட்டி குறித்து சிந்திக்கவில்லை. இன்று தான் அதற்கான பயிற்சியை துவக்க வேண்டும். கடந்த 14 போட்டியில் மும்பை அணியின் செயல்பாட்டை ஆராய வேண்டும். தோனி தலைமையிலான சென்னை அணி, சிறந்தது என்பதில் சந்தேகம் இல்லை. சென்னையின், பலம், பலவீனம் குறித்து எங்களுக்கு தெரியும் என்பதால், அதற்கேற்ப திட்டமிட்டு விளையாடுவோம்.     

இவ்வாறு ரோகித் சர்மா கூறினார்.

 

http://sports.dinamalar.com/2014/05/1401125003/RohitSharmaMumbaiCricketIPL.html

Link to comment
Share on other sites

கொல்கத்தா, மும்பை ஆட்டங்கள்: சில கேள்விகளும் சந்தேகங்களும்

 

  • 564xNxkkr_1915542g.jpg.pagespeed.ic.uON0
    கொல்கத்தா போட்டியில் யூசுப் பதான்
  • 564xNxmumbai_1915541g.jpg.pagespeed.ic.0
    வெற்றியைக் கொண்டாடும் மும்பை வீரர்கள்

சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிராக யூசுப் பதான் அதிரடியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வென்று 2ஆம் இடத்திலிருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைப் பின்னுக்குத் தள்ளியது. நேற்று மும்பை இந்தியன்ஸ் சற்றும் நம்ப முடியாத அளவில் கோரி ஆண்டர்சனின் அதிரடி ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வென்று பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றது.

இந்த 2 ஆட்டங்களில் பந்து வீச்சு, பீல்டிங் தரம் மிக மோசமாக இருந்ததோடு கொல்கத்தா தகுதி பெற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 2வது இடத்திலிருந்து இறக்க சன் ரைசர்ஸ் அணியும் அதிக முனைப்புக் காட்டியதாகவே தெரிகிறது.

சன் ரைசர்ஸ் அணிக்கு எதிராக யூசுப் பதான் களமிறங்கும்போது கொல்கத்தாவுக்கு 47 பந்துகளில் 106 ரன்கள் தேவை அதாவது சென்னையை 3வது இடத்திற்குத் தள்ள என்பது குறிப்பிடத்தக்கது.

ரன் எதுவும் எடுக்காத நிலையில் யூசுப் பதான் கொடுத்த கேட்ச் கோட்டை விடப்பட்டது. பிறகு அவர் 15 ரன்களில் இருந்தபோது டேல் ஸ்டெய்ன் கேட்சைக் கோட்டைவிட்டார். இரண்டுமே உயர்ந்த மட்ட கிரிக்கெட் ஆட்டங்களின் தரநிலையின் படி சுலபமான கேட்ச்களே.

கேட்சை விட்ட டேல் ஸ்டெய்ன் பந்து வீச வந்தபோது அவரது உடல் மொழி எந்த வித ஆக்ரோஷத்தையும் காட்டவில்லை. பந்து வீச்சும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தாமல் தொய்வாக இருந்தது. இல்லையெனில் உலக இருபது ஓவர் கிரிக்கெட்டில் நல்ல சிக்கன விகிதம் வைத்திருக்கும் ஒரு பவுலரை 26 ரன்கள் அடிக்க முடியுமா? என்பதே கேள்வி.

இந்த ஆட்டம் துவங்கும்போதே ஆச்சரியம் காத்திருந்தது. ஆரோன் பின்ச் அணியில் இல்லை. அதுவரை ஒருபோட்டியில் கூட ஆடாத ஜேசன் ஹோல்டர் மற்றும் அனிருதா ஸ்ரீகாந்த் ஆகியோர் அணியில் தேர்வு செய்யப்பட்டனர். இருவரது ஆட்டமும் கூட சோபிக்கவில்லை.

சன் ரைசர்ஸ் பேட்டிங் செய்தபோது வார்னர் பவுல்டு ஆனார். தவான், ஓஜா நிலைத்து ஆடியது போல் தோன்றினாலும் அவர்கள் கடுமையாக தடுமாறினர் என்பதே உண்மை. திடீரென பேட்டிங்கில் தடுமாற்றம் ஏற்பட என்ன காரணம் இருக்க முடியும் என்பது ஆய்வுக்குரிய விஷயம்.

31 பந்துகளில் தவான் 29 ரன்கள் எடுத்தார். இதில் 18 பந்துகள் ரன் இல்லாத பந்துகள். ஓஜா அடித்தது 26 ரன்களே. இதில் ரன் இல்லாத பந்துகளின் எண்ணிக்கை 17.

சன் ரைசர்ஸ் அன்று ஆடியவிதம் உயர்மட்ட கிரிக்கெட்டின் தரநிலைகளை எட்டாதது என்பதோடு, ஒரு உத்வேகமில்லாமலே முழுதும் விளையாடினர். 3 தேவையில்லாத ரன் அவுட்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இத்தனைக்கும் கொல்கத்தா அணி கேட்ச்களையும் கோட்டைவிட்டது. 47 பந்துகளில் 106 ரன்களை எடுக்க முடிகிறது என்றால் கிரிக்கெட்டின் தரம் மட்டுமல்ல வீரர்களின் உத்வேகம், எண்ணம், அணுகுமுறை ஆகியவையும் பெரும் பிரச்சனைக்குள்ளக்கப்படவேண்டியதை அறிவுறுத்துகிறது.

ராஜஸ்தான் ராயல்ஸ் நினைத்திருந்தால் மும்பை தகுதி பெற்றிருக்க முடியாது:

நேற்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இலக்கு 190 ரன்கள் இந்த ரன்களை அவர்கள் 14.3 ஓவர்களில் எடுத்தால் மட்டுமே பிளே ஆஃபிற்குத் தகுதி பெற முடியும்.

கோரி ஆண்டர்சன் அவ்வாறு அடிக்கக் கூடியவர் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அவர் சிங்கிள் எடுத்துவிட்டு எதிர்முனைக்குச் செல்லும்போது பாக்னருக்கு 2 பந்துகளில் 8 ரன்களை அடிக்கவிடாமல் செய்தால் போதும் என்ற எளிதாகவே இருந்தது.

189 ரன்களில் இருந்தபோது ஃபாக்னர் ஒரு வைட் பந்தை வீசியிருந்தாலே போதும் மும்பை வென்றிருக்கும் ஆனால் நிகர ரன் விகிதம் ராயல்ஸ் அணியை விட குறைவாகவே இருந்திருக்கும். இது ஒரு பவுலருக்குத் தெரியாதா? அல்லது அவ்வாறு செய்தால் கிரிக்கெட் ஆட்ட உணர்வு பாதிக்கப்படும் என்று நினைத்தாரா என்னவென்று தெரியவில்லை. ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே வீசியிருந்தாலும் பரவாயில்லை என்று கூறலாம் நேராக வந்து லெக்ஸ்டம்பில் ஒரு அல்வா ஃபுல்டாஸைப் போட்டுக்கொடுத்தது ஏன்?

வாட்சனுக்கு மோசமான மேட்சாக இது அமைந்தது. முதலில் பேட்டிங்கில் சொதப்பல். பிறகு பந்து வீச்சில் 2 ஓவர்களில் 33 ரன்கள் விட்டுக் கொடுத்தது என்று அவருக்கு மோசமான தினமாக அமைந்தது. இதுவும் ஏன் என்று புரியவில்லை. எந்த அளவுக்கு உத்வேகமில்லாமல் வீசியிருந்தால் 5.1 ஓவர்களில் 81 ரன்களை ராயுடுவும், கோரி ஆண்டர்சனும் விளாசியிருப்பார்கள்!

இவை பற்றியெல்லாம் நமக்கு இருப்பது கேள்விகளும் சந்தேகங்களும்தான். ஆனால் நம் கேள்விகளையும் சந்தேகங்களையுமே கேள்விக்குட்படுத்துமாறு அமைந்ததுதான் ராகுல் திராவிட் தோற்றவுடன் செய்த செய்கை. தாரே சிக்ஸ் அடித்தவுடன் கோபமாக எழுந்திருந்த ராகுல் திராவிட் தொப்பியை ஓங்கித் தரையில் அடித்தார்.

இதற்கு முன்பு ஒரே ஒரு முறைதான் ராகுல் திராவிட் மிகவும் கோபப்பட்டதாக செய்திகள் உண்டு. இங்கிலாந்துக்கு எதிராக ஒரு போட்டியில் தோற்றபோது அவர் மிகவும் கோபப்பட்டதாகக் கூறப்படுவதுண்டு. நேற்று 2வது முறையாக அவர் தன்னை மறந்து நடந்து கொண்டார்.

அவரது எதிர்வினை உண்மையில் இந்தப் போட்டி நல்ல முறையில்தான் விளையாடப்பட்டது என்பதை உறுதி செய்தாலும், வைடு வீசியிருந்தாலே போதும் என்ற நிலையில் ஒரு லெக் ஸ்டம்ப் புல்டாஸை வீசியதை எப்படி புரிந்து கொள்வது என்று புரியவில்லை. ஆட்டம் உண்மையான கிரிக்கெட் உண்ர்வுடன் ஆடப்பட்டதா என்பதை பந்து வீச்சும், ஃபீல்டிங்கும் அணுகுமுறையும் கேள்விக்குட்படுத்தியது உண்மையா? அல்லது திராவிட் தோல்விக்குப் பிறகு காட்டிய கோபம் உண்மையா? இந்தப் புதிரை அவ்வளவு சுலபமாக விடுவித்து விட முடியாது என்றே தோன்றுகிறது.

நெட் ரன் விகித விளக்கம்:

மும்பை இந்தியன்ஸ் அணி 14.3 ஓவர்களில் 190 ரன்கள் எடுக்கவேண்டும். ஆனால் 189 ரன்களையே எடுத்தது. ஆகவே இலக்கு வரையே நிகர ரன் விகிதம் கணக்கிடப்படும் என்று கருதப்பட்டதால் அடுத்த பந்தை வைடு வீசினால் மும்பை வெற்றி பெற்றாலும் நிகர ரன் விகிதத்தில் மாற்றம் ஏற்படாது என்று எடுத்துக் கொள்ளப்பட்டு வைடு கோட்பாட்டை முன் வைத்தோம்.

பிறகு நிபுணர்கள் சிலரிடத்தில் ஆலோசித்தபோது வைடு வீசினால் 14.3 ஓவர்களில் 190 என்று மும்பை தகுதி பெறும் ரன் விகிதம் எட்டப்படும் என்று தெரிந்தது. 

அதுமட்டுமல்ல அடுத்த பந்தில் மும்பை இந்தியன்ஸ் ஒரு ரன் எடுத்திருந்தால் 14.4 ஓவர்களில் 190 என்று ஆகிவிடும். இப்போது மும்பை இந்தியன்ஸ் தகுதி பெற வாய்ப்பில்லை.

2 ரன்கள் எடுத்தால் ஸ்கோர் 191 என்று ஆகும். ஆனால் 2 ரன்கள் ஓட முடியாது காரணம் ஒரு ரன் ஓடியவுடனேயே மும்பை வெற்றி பெற்றுவிடும். ஆகவே பவுண்டரிதான் ஒரே தீர்வு. இல்லையென்றாலும் 14.5 வது பந்து அல்லது 15வது ஓவர் கடைசி பந்தில் பவுண்டரி அடித்திருந்தாலும் மும்பை அணியின் நிகர ரன் விகிதம் ராஜஸ்தான் நிகர ரன் விகிதத்தைக் கடந்து விடும்.

அப்படியே 15வது ஓவரில் அந்த 3 பந்துகளில் ரன்னே எடுக்கவில்லயென்றாலும் 16வது ஓவரின் முதல் பந்தை சிக்சர் அடித்தால் மும்பை நிகர ரன் விகிதம் ராஜஸ்தான் ரன் விகிதத்தைக் கடந்து விடும். ஆனால் பிரச்சனை அதுவல்ல, ஆட்டம் ஆடப்பட்ட விதம்தான் நமது பிரச்சனை. மும்பையைத் தடுக்க எந்த வித முயற்சியும் மேற்கொள்ளப்படாதது ஏன் என்பதே நமது கேள்வி.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/article6050262.ece?homepage=true

Link to comment
Share on other sites

சென்னை அணிக்கு முதல் சோதனை: இன்று மும்பையுடன் மோதல்
மே 27, 2014.

 

மும்பை: ஐ.பி.எல்., ‘எலிமினேட்டர்’ போட்டியில் இன்று சென்னை, மும்பை அணிகள் மோதுகின்றன. இந்த முதல் சோதனையில் வெற்றி பெறும் பட்சத்தில் சென்னை அணி, பைனல் வாய்ப்பை தக்க வைக்கலாம். தோல்வியடைந்தால், தொடரில் இருந்து வெளியேற நேரிடும் என்பதால், ஆக்ரோஷமான ஆட்டத்தை எதிர்பார்க்கலாம்.

ஏழாவது ஐ.பி.எல்., தொடர் லீக் சுற்றுக்கள் முடிந்து, ‘பிளே ஆப்’ போட்டிகள் நடக்கின்றன. இன்று நடக்கும் ‘எலிமினேட்டர்’ போட்டியில் புள்ளிப்பட்டியலில் 3, 4வது இடம் பெற்ற சென்னை, மும்பை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

 

சென்னை அணியை பொறுத்தவரையில் இத்தொடரில் மும்பைக்கு எதிராக களமிறங்கிய இரு போட்டிகளிலும் வெற்றி பெற்ற நம்பிக்கையில் உள்ளது.

துவக்க வீரர்கள் ஸ்மித் (535 ரன்கள்), மெக்கலம் (380) ஜோடி நம்பிக்கை தருகிறது. நாடு திரும்பிய மெக்கலத்துக்குப் பதில் களமிறங்கிய டுபிளசியும் ரன்கள் எடுப்பது சிறப்பு.

இதுவரை முடிந்த ஆறு தொடர்களின் லீக் சுற்று முடிவில், எப்படியும் 400 ரன்களை கடந்து விடும் ரெய்னா, இம்முறை 14 போட்டிகளில் 382 ரன்கள் தான் எடுத்துள்ளார்.

லீக் சுற்றில் மும்பை அணிக்கு எதிராக 1, 19 என, ஏமாற்றிய இவர் எழுச்சி பெற்றால் நல்லது. தவிர, டேவிட் ஹசி, கேப்டன் தோனி, ரவிந்திர ஜடேஜாவும் கைகொடுத்தால் நல்லது.

 

பவுலிங் மோசம்:

பவுலிங்கில் மோகித் சர்மா 19 விக்கெட்டுகள் வீழ்த்தி, அதிக விக்கெட் கைப்பற்றிய வீரர்கள் வரிசையில் இரண்டாவது இடத்தில் இருந்தாலும், கடைசி 4 போட்டிகளில் ஒரு விக்கெட் மட்டுமே வீழ்த்தினார்.

 

இவருக்கு ஜடேஜாவும் (16 விக்.,) உதவுகிறார். இருப்பினும், அணியின் பவுலிங் ஒட்டுமொத்த அளவில் பலவீனமாகத்தான் உள்ளது. அஷ்வின், ஈஷ்வர் பாண்டே, பத்ரீ பொறுப்புணர்ந்து செயல்பட்டால் நல்லது.

 

மும்பை எழுச்சி:

முதல் 5 போட்டிகளில் தொடர்ந்து தோற்ற ‘நடப்பு சாம்பியன்’ மும்பை அணி, கடைசி நேரத்தில் எழுச்சி பெற்று, 190 ரன்களை 14.4 ஓவரில் ‘சேஸ்’ செய்த நம்பிக்கையுடன் உள்ளது.

44 பந்தில் 95 ரன்கள் குவித்த கோரி ஆண்டர்சன், மைக் ஹசி என, இருவரும் ‘பார்முக்கு’ திரும்பியுள்ளது, சிம்மன்ஸ் அசத்தல் துவக்கம், கேப்டன் ரோகித், போலார்டு, அம்பதி ராயுடுவின் அபார ரன் குவிப்பு என, பேட்டிங்கில் அசுர பலத்தில் உள்ளது.

 

பவுலிங்கில் மலிங்கா இல்லாதது சிக்கலாக உள்ளது. ஜாகிர்கானுக்குப் பதில் வந்த பிரவீண் குமாருக்கும் ‘பிட்னஸ்’ இல்லை எனத் தெரிகிறது. அதேநேரம், ஸ்ரேயாஷ் கோபால், பம்ரா, சுழலில் ஹர்பஜன் மற்றும் பிரக்யான் ஓஜாவை மட்டும் நம்பி களமிறங்க வேண்டிய நிலையில் உள்ளது.

 

‘நாக் அவுட்’ கோட்டை

ஐ.பி.எல்., வரலாற்றில் மும்பை அணிக்கு எதிராக, மும்பை வான்கடே, டி.ஒய்.பாட்டீல் மைதானங்களில் நடந்த ‘நாக் அவுட்’ போட்டிகளில் சென்னை அணி தான் வென்றது. ஒருமுறை கூட மும்பை, சென்னை அணியை வீழ்த்தியதில்லை.

 

இதன் விவரம்:

* 2010, பைனல்: 22 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற சென்னை சாம்பியன் ஆனது.

* 2012, ‘எலிமினேட்டர்’: 38 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற சென்னை, மும்பையை வெளியேற்றியது.

* 2013, ‘தகுதிச்சுற்று–1’: 48 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற சென்னை பைனலுக்கு முன்னேற்றம்.

இன்றைய போட்டி மும்பையின் பிரபோர்ன் மைதானத்தில் நடக்கிறது. இருப்பினும், சென்னை, மீண்டும் அசத்தும் என நம்புவோம்.

சாம்பியன் லீக் வாய்ப்பு யாருக்கு

 

இன்று நடக்கும் ‘எலிமினேட்டர்’ போட்டியில் வெல்லும் அணி நேரடியாக பைனலுக்கு செல்லாது. தகுதிச் சுற்று 1ல் வென்ற அணியுடன் 30ம் தேதி நடக்கும் போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே பைனலுக்கு செல்லலாம்.

அதேநேரம், இன்று வெல்லும் அணி, 6வது சாம்பியன்ஸ் லீக் தொடருக்கு நேரடியாக முன்னேறும். தோல்வியடையும் அணி, இதற்கான தகுதிச்சுற்றில் பங்கேற்க வேண்டும்.

 

 

http://sports.dinamalar.com/2014/05/1401211127/rainaiplchennai.html

Link to comment
Share on other sites

ஐ.பி.எல். இறுதிப் போட்டியில் இலங்கையின் நடுவர்

நடைபெற்றுவரும் 7 ஆவது ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டிக்கு இலங்கையின் முன்னாள் வீரர் குமார் தர்மசேன மற்றும் அவுஸ்திரேலியாவின் புரூஸ் ஒக்சென்போர்ட் ஆகியோர் நடுவர்களாக கடமையாற்ற தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.


ஐ.பி.எல் தொடரின் லீக் போட்டிகள் அனைத்தும் முடிவடைந்துள்ள நிலையில், இறுதிப்போட்டிக்கான தகுதி சுற்று  போட்டிகள் இன்று முதல் ஆரம்பமாகின்றன.

இந்நிலையில் முதல் தகுதிச்சுற்று நேற்று இடம்பெறவிருந்த நிலையில் மழையால் பாதிக்கப்பட்டது. இதையடுத்து இதன் முதல் தகுதி சுற்று இன்று இடம்பெறவுள்ளது. இதில் கொல்கத்தா- பஞ்சாப் அணிகளும்  இரண்டாவது தகுதி சுற்றில் சென்னை- மும்பை அணிகளும் மோதுகின்றன.

இதைத் தொடர்ந்து ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டி பெங்களூரில் எதிர்வரும் முதலாம் திகதி இடம்பெறவுள்ளது. இந்த இறுதிப் போட்டியானது குமார் தர்மசேன, புரூஸ் ஒக்சென்போர்ட் ஆகிய நடுவர்களின் கீழ் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/articles/2014/05/28/%E0%AE%90%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D

 

Link to comment
Share on other sites

பைனலில் கோல்கட்டா அணி

 

கோல்கட்டா: பஞ்சாப் அணிக்கு எதிரான ஐ.பி.எல்., தொடரின் முதல் தகுதிச்சுற்றில் 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கோல்கட்டா அணி பைனலுக்கு முன்னேறியது.

ஐ.பி.எல்., தொடரின் லீக் போட்டிகள் முடிந்துவிட்டது. கோல்கட்டாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த முதல் தகுதிச்சுற்றில் பஞ்சாப், கோல்கட்டா அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற பஞ்சாப் அணி கேப்டன் பெய்லி ‘பவுலிங்’ தேர்வு செய்தார்.

 

கோல்கட்டா அணிக்கு ராபின் உத்தப்பா சிறப்பான துவக்கம் தந்தார். கேப்டன் காம்பிர் (1) ஏமாற்றினார். மணீஷ் பாண்டே 21 ரன்கள் எடுத்தார். உத்தப்பா 42 ரன்களில் ஆட்டமிழந்தார். போட்டி மழை காரணமாக சில நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டது. கரண்வீர் ’சுழலில்’ சாகிப் (18), யூசுப் பதான் (20), சூர்யகுமார் (20) சிக்கினர். மற்றவர்களும் விரைவில் வெளியேற, கோல்கட்டா அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 163 ரன்கள் எடுத்தது. பியுஸ் சாவ்லா (17) அவுட்டாகாமல் இருந்தனர்.

 

பஞ்சாப் அணிக்கு சேவக் (2) நிலைக்கவில்லை. வோரா (26), சகா (35) ஓரளவு கைகொடுத்தனர். உமேஷ் வேகத்தில் மேக்ஸ்வெல் (6) அவுட்டானார். மில்லர் 8 ரன்களில் வெளியேறினார். பெய்லி (26) உமேஷ் பந்தில் ஆட்டமிழந்தார். பின் வந்தவர்கள் சொற்ப ரன்களில் வெளியேற, பஞ்சாப் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 135 ரன்கள் எடுத்து 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

 

 

http://sports.dinamalar.com/2014/05/1401211384/edengardenground.html

Link to comment
Share on other sites

பிரீமியர் கிரிக்கெட்: சென்னை அணி வெற்றி

மே 28,2014 19:56

 

மும்பை: 7வது பிரீமியர் கிரிக்கெட் தொடரில், இரண்டாவது பிளே ஆப் சுற்றில் இரண்டாவது போட்டியில் சென்னை அணியும், மும்பை அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவரின் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்தது. கடின இலக்கை துரத்திய சென்னை அணி 18.4 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 176 ரன்கள் எடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
 

http://www.dinamalar.com/news_detail.asp?id=985524

 

 


சென்னை அணி வெற்றி
மே 27, 2014.


மும்பை: மும்பை அணிக்கு எதிரான ஐ.பி.எல்., தொடரின் ‘எலிமினேட்டர்’ போட்டியில் சென்னை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐ.பி.எல்., ‘எலிமினேட்டர்’ போட்டியில் சென்னை, மும்பை அணிகள் மோதின. சென்னை அணியில் பத்ரீ நீக்கப்பட்டு, பிரண்டன் மெக்கலம் சேர்க்கப்பட்டார். ‘டாஸ்’ வென்ற சென்னை அணி கேப்டன் தோனி ‘பவுலிங்’ தேர்வு செய்தார்.

 

மும்பை அணிக்கு சிம்மன்ஸ், மைக் ஹசி ஜோடி சிறப்பான துவக்கம் தந்தது. ஹசி 39 ரன்கள் எடுத்தார். அரை சதம் கடந்த சிம்மன்ஸ் 67 ரன்களில் ஆட்டமிழந்தார். கோரி ஆண்டர்சன் (20) அஷ்வின் ‘சுழலில்’ சிக்கினார். கேப்டன் ரோகித் சர்மா (20) நிலைக்கவில்லை. போலார்டு (14), ராயுடு (2), ஆதித்யா தாரே (0) என அடுத்தடுத்து கிளம்பினர். மும்பை அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 173 ரன்கள் எடுத்தது. ஹர்பஜன் சிங் (7), ஓஜா (1) அவுட்டாகாமல் இருந்தனர்.

சென்னை அணியின் மோகித் சர்மா அதிகபட்சமாக 3 விக்கெட் வீழ்த்தினார்.

 

சென்னை அணிக்கு டுவைன் ஸ்மித் (24), டுபிளசி (35) வலுவான துவக்கம் தந்தனர். ரெய்னா அரை சதம் கடந்தார். பிரண்டன் மெக்கலம் 14 ரன்களில் ஆட்டமிழந்தார். சென்னை அணி 18.4 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 176 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 

http://sports.dinamalar.com/2014/05/1401211127/rainaiplchennai.html

Link to comment
Share on other sites

பாதி கிணறு தாண்டியது சென்னை: ரெய்னா அதிரடியில் வெற்றி
மே 27, 2014.

மும்பை:  ஐ.பி.எல்., தொடரின் ‘எலிமினேட்டர்’ போட்டியில் ரெய்னா அரைசதம் அடித்து கைகொடுக்க, சென்னை அணி  7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் பாதி கிணறு தாண்டிய சென்னை அணி, அடுத்து நடக்கும் இரண்டாவது தகுதிச் சுற்றுப் போட்டியில் வென்றால் மட்டுமே பைனலுக்கு முன்னேற முடியும். ‘நடப்பு சாம்பியன்’ அந்தஸ்துடன் களமிறங்கிய மும்பை அணி பரிதாபமாக

வெளியேறியது.

 

மும்பையில் நேற்று நடந்த 7வது ஐ.பி.எல்., தொடரின் ‘பிளே–ஆப்’ சுற்றுக்கான ‘எலிமினேட்டர்’ போட்டியில் சென்னை, மும்பை அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற சென்னை அணி கேப்டன் தோனி, ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.

 

சிம்மன்ஸ் அபாரம்:

மும்பை அணிக்கு லெண்டில் சிம்மன்ஸ், மைக்கேல் ஹசி ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. முதல் விக்கெட்டுக்கு 76 ரன்கள் சேர்த்த போது, மைக்கேல் ஹசி (39) போல்டானார். ராஜஸ்தானுக்கு எதிராக அதிரடி காட்டிய கோரி ஆண்டர்சன் (20) இம்முறை ஏமாற்றினார். ஈஷ்வர் பாண்டே பந்தை பவுண்டரிக்கு விரட்டிய சிம்மன்ஸ் அரைசதத்தை பதிவு செய்தார். அஷ்வின், ரெய்னா, நெஹ்ரா பந்தில் தலா ஒரு சிக்சர் விளாசிய சிம்மன்ஸ் (67), ஜடேஜாவிடம் சரணடைந்தார். கேப்டன் ரோகித் சர்மா (20), போலார்டு (14) பெரிய அளவில் சோபிக்கவில்லை. கடைசி நேரத்தில் ஆதித்யா தாரே (0), அம்பதி ராயுடு (2), பிரவீண் குமார் (1) சொதப்பினர்.

மும்பை அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 173 ரன்கள் எடுத்தது. ஹர்பஜன் சிங் (7), பிரக்யான் ஓஜா (1) அவுட்டாகாமல் இருந்தனர். சென்னை அணி சார்பில் மோகித் சர்மா 3, ஆஷிஸ் நெஹ்ரா, ரவிந்திர ஜடேஜா தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

 

சூப்பர் துவக்கம்:

எட்டக்கூடிய இலக்கை விரட்டிய சென்னை அணிக்கு டுவைன் ஸ்மித், டுபிளசி ஜோடி சிறந்த துவக்கம் கொடுத்தது. கோரி ஆண்டர்சன் வீசிய 4வது ஓவரில், ஒரு சிக்சர், இரண்டு பவுண்டரி அடித்தார் டுபிளசி. மறுமுனையில் அசத்திய டுவைன் ஸ்மித், பம்ரா பந்தில் ‘ஹாட்ரிக்’ பவுண்டரி விளாசினார். முதல் விக்கெட்டுக்கு 60 ரன்கள் சேர்த்த ஸ்மித் (24), டுபிளசி (35) ஜோடி ஹர்பஜன் வீசிய 7வது ஓவரில் வெளியேறியது.

 

ரெய்னா அரைசதம்:

பிரண்டன் மெக்கலம் (14) நிலைக்கவில்லை. பின் இணைந்த சுரேஷ் ரெய்னா, டேவிட் ஹசி ஜோடி ஆட்டத்தை கையில் எடுத்துக் கொண்டது. ஹர்பஜன், பிரக்யான் ஓஜா பந்தில் தலா ஒரு சிக்சர் விளாசிய ரெய்னா, 30 பந்தில் அரைசதம் அடித்தார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த டேவிட் ஹசி, ஓஜா வீசிய 16வது ஓவரில் இரண்டு சிக்சர் அடித்தார். பம்ரா பந்தை பவுண்டரிக்கு விரட்டிய ரெய்னா வெற்றியை உறுதி செய்தார்.

 

சென்னை அணி 18.4 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 176 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ரெய்னா (54), டேவிட் ஹசி (40) அவுட்டாகாமல் இருந்தனர். மும்பை சார்பில் ஹர்பஜன் சிங் 2 விக்கெட் வீழ்த்தினார்.

பஞ்சாப்புடன் மோதல்

மும்பை, வான்கடே மைதானத்தில் நாளை நடக்கும் இரண்டாவது தகுதிச் சுற்றில் சென்னை அணி, பஞ்சாப்புடன் மோதும். இதில் வெற்றி பெறும் பட்சத்தில், வரும் ஜூன் 1ம் தேதி பெங்களூருவில் நடக்கும் பைனலில், கோல்கட்டாவை எதிர்கொள்ளலாம்.

அனைத்திலும் ‘400’

சென்னை வீரர் ரெய்னா கடந்த ஆறு தொடர்களில் 421 (2008), 434 (2009), 520 (2010), 438 (2011), 441 (2012), 548 (2013) என, ரன்கள் குவித்துள்ளார்.

நேற்று 18 ரன்கள் எடுத்த போது, ஏழாவது தொடரிலும் 400 ரன்களை கடந்தார். இத்தொடரில் இதுவரை பங்கேற்ற 15 போட்டிகளில் 436 ரன்கள் எடுத்துள்ளார்.

மீண்டும் அசத்திய ‘கிங்ஸ்’

மும்பை மண்ணில் நடந்த ஐ.பி.எல்., ‘நாக் அவுட்’ போட்டிகளில், சென்னை அணி, மும்பையிடம் தோற்றதில்லை. இது நேற்றும் நிரூபணம் ஆனது.

கடந்த 2010–பைனல், 2012–‘எலிமினேட்டர்’, 2013–‘தகுதிச்சுற்று–1’ என, அனைத்திலும் வென்ற சென்னை, நேற்று நடந்த ‘எலிமினேட்டர்’ போட்டியிலும் வென்று, வரும் அக்டோபர் மாதம் நடக்கவுள்ள 6வது சாம்பியன்ஸ் லீக் தொடருக்கு நேரடியாக தகுதி பெற்றது.     

பழிதீர்த்தது

கடந்த 2013ல் கோல்கட்டாவில் நடந்த ஐ.பி.எல்., பைனலில், சென்னை, மும்பை அணிகள் மோதின. இதில் மும்பை அணி, 23 ரன்கள் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தி, கோப்பை வென்றது. இதற்கு

நேற்றைய ‘எலிமினேட்டர்’ போட்டியில், மும்பையை வீழ்த்திய சென்னை அணி, பழி தீர்த்து

 

 

http://sports.dinamalar.com/2014/05/1401211127/rainaiplchennai.html

Link to comment
Share on other sites

பைனலுக்கு செல்லுமா சென்னை: இன்று பஞ்சாப் அணியுடன் மோதல்
மே 29, 2014.

 

மும்பை: ஐ.பி.எல்., இரண்டாவது தகுதிச்சுற்று போட்டியில் இன்று சென்னை, பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் வென்று பைனலுக்கு செல்ல இரு அணிகளும் போராட்டத்தை வௌிப்படுத்தக் காத்திருக்கின்றன.

 

ஏழாவது ஐ.பி.எல்., தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. கோல்கட்டா ஏற்கனவே பைனலுக்கு முன்னேறிவிட்டது. இன்று நடக்கும் இரண்டாவது தகுதிச் சுற்றில், சென்னை அணி பஞ்சாப்பை சந்திக்கிறது.

 

ஐ.பி.எல்., வரலாற்றில் 2008, 2010 முதல் 2013 வரை என, ஐந்துமுறை பைனலுக்கு முன்னேறிய சென்னை அணி இரு முறை (2010, 2011) கோப்பை வென்றது. 2009ல் மட்டும் அரையிறுதியுடன் திரும்பியது.

 

இம்முறை புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருந்த சென்னை, ‘எலிமினேட்டர்’ போட்டியில் மும்பை வீழ்த்தியது. இருப்பினும், இன்றைய ‘தகுதிச்சுற்று–2ல்’ பஞ்சாப்பை வென்றாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

 

பேட்டிங்கில் ஸ்மித் (559 ரன்கள்), ரெய்னா (436), மெக்கலம் (394), டுபிளசி (303) என, இணைந்து ‘டாப் ஆர்டரை’ கவனித்துக் கொள்கின்றனர். டேவிட் ஹசி, கடந்த இரு போட்டிகளில் கைகொடுக்கத் துவங்கியுள்ளார். இது கேப்டன் தோனிக்கு உதவுவதால், ‘பினிஷிங்’ எளிதாகிறது.

இத்தொடரில் அதிக விக்கெட் சாய்த்த வேகப்பந்து வீச்சாளர் மோகித் சர்மாவுக்கு (22 விக்.,), ‘சீனியர்’ ஆஷிஸ் நெஹ்ரா உதவினால் நல்லது.

சுழலில் ஜடேஜா (19 விக்.,), அஷ்வின் (15 விக்.,) கூட்டணி கைகொடுக்கிறது. எனினும், பஞ்சாப் அணிக்கு எதிரான 2 லீக் போட்டியில் அஷ்வின் 6 ஓவரில் 79 ரன்கள், ஜடேஜா 7 ஓவரில் 80 ரன்கள் என, வாரி வழங்கியது சற்று சிக்கல் தான்.

 

மேக்ஸ்வெல் மிரட்டல்:

லீக் சுற்றில் 11 வெற்றியுடன் முதலிடத்தில் இருந்த பஞ்சாப், கோல்கட்டாவுக்கு எதிரான முதல் தகுதிச்சுற்றில் தோற்றது. சென்னைக்கு எதிரான இரு லீக் போட்டிகளில் 95, 90 ரன்கள் எடுத்து அதிரடியில் மிரட்டிய மேக்ஸ்வெல் (539 ரன்கள்), கடைசியாக களமிறங்கிய 4 இன்னிங்சில் 14, 2, 0, 6 என, ஏமாற்றினார்.

இன்றும் இவரை விரைவில் அவுட்டாக்குவது முக்கியம். மில்லர், சேவக், வோரா, சகா, கேப்டன் பெய்லியும் ரன்குவிப்பில் ஈடுபட முயற்சிக்கலாம்.

பவுலிங்கில் பஞ்சாப் அணிக்காக அதிக விக்கெட் வீழ்த்திய சந்தீப் சர்மா, இன்று களமிறங்குவாரா எனத் தெரியவில்லை. இருப்பினும், அவானா, மிட்சல் ஜான்சன், இளம் வீரர் கரன்வீர் சிங் கூட்டணி கைகொடுக்கலாம்.

 

வெற்றி அதிகம்

சென்னை, பஞ்சாப் அணிகள் இதுவரை 14 போட்டிகளில் மோதின. இதில் சென்னை 8ல் வெற்றி பெற்றது. பஞ்சாப் 5ல் வென்றது. ஒரு போட்டி ‘டை’ ஆனது.

* கடைசியாக இரு அணிகள் மோதிய 5 போட்டிகளில் சென்னை 2, பஞ்சாப் 3ல் வெற்றி

 

 

http://sports.dinamalar.com/2014/05/1401379263/dhonichennaiipl.html

Link to comment
Share on other sites

பிரீமியர் கிரிக்கெட்: பைனலில் கோல்கட்டா- பஞ்சாப் மோதல்
 

மும்பை: 7வது பிரீமியர் கிரிக்கெட் தொடரில், 3வது பிளே ஆப் போட்டி மும்பையில் நடைபெற்றது. இந்த போட்டியில், சென்னை அணியும், பஞ்சாப் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தது. இதன்படி பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, 20 ஓவரின் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 226 ரன்கள் எடுத்தது. இமாலய இலக்கை நோக்கி பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இதனையடுத்து பைனலில் பஞ்சாப் அணி, கோல்கட்டா அணியை எதிர்கொள்கிறது.

 

http://www.dinamalar.com/news_detail.asp?id=987079

 


பைனலில் பஞ்சாப் அணி:சென்னை ஏமாற்றம்
மே 29, 2014.


மும்பை: பஞ்சாப் அணிக்கு எதிரான எதிரான ஐ.பி.எல்., தொடரின் ‘பிளே–ஆப்’ இரண்டாவது தகுதிச் சுற்றில் 24 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த சென்னை அணி பைனல் வாய்ப்பை இழந்தது.

 

மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இன்று நடந்த ஏழாவது ஐ.பி.எல்., தொடருக்கான ‘பிளே–ஆப்’ சுற்றின் இரண்டாவது தகுதிச் சுற்றுப் போட்டியில், சென்னை, பஞ்சாப் அணிகள் மோதின. சென்னை அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. பஞ்சாப் அணியில் ரிஷி தவானுக்கு பதிலாக சந்தீப் சர்மா இடம் பிடித்தார். ‘டாஸ்’ வென்ற சென்னை அணி கேப்டன் தோனி, ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.

 

பஞ்சாப் அணிக்கு சேவக், வோரா ஜோடி சிறப்பான துவக்கம் தந்தது. எதிரணி பந்துவீச்சை இந்த ஜோடி துவம்சம் செய்தது. வோரா 34 ரன்கள் எடுத்தார். சேவக் சதம் அடித்தார். மேக்ஸ்வெல் (13) நிலைக்கவில்லை. அதிரடி காட்டிய மில்லர் (38) ரன் அவுட் ஆனார். சேவக் 122 ரன்களில் ஆட்டமிழந்தார். கேப்டன் பெய்லி (1), சகா (6) விரைவில் வெளியேறினர். பஞ்சாப் அணி 20 ஒவரில் 6 விக்கெட்டுக்கு 226 ரன்கள் எடுத்தது. அவுட்டாகாமல் இருந்தனர்.

 

சென்னை அணிக்கு டுவைன் ஸ்மித் (7), டுபிளசி (0) சொதப்பினர். அரை சதம் கடந்த ரெய்னா 87 ரன்கள் விளாசினார். பிரண்டன் மெக்கலம் (11) நிலைக்கவில்லை. ஜடேஜா 27 ரன்கள் எடுத்தார். டேவிட் ஹசியும் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். அஷ்வின் 10 ரன்களில் கிளம்பினார். முடிவில், சென்னை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 202 ரன்கள் மட்டும் எடுத்து 24 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து. தோனி (42), மோகித் சர்மா (1) அவுட்டாகாமல் இருந்தனர்.

 

 

http://sports.dinamalar.com/2014/05/1401379263/dhonichennaiipl.html

Link to comment
Share on other sites

சேவக் ‘சூப்பர்’ சதம்: பைனலில் பஞ்சாப் அணி: மண்ணைக் கவ்வியது சென்னை
மே 29, 2014.

 

மும்பை: சேவக் விஸ்வரூபம் எடுத்தால் எந்த பவுலரும் தாக்குப்பிடிக்க முடியாது என்பது மீண்டும் நிரூபணமானது. இவரது அதிரடி சதம் கைகொடுக்க, ஐ.பி.எல்., தொடரின் பைனலுக்கு பஞ்சாப் அணி முதன்முறையாக முன்னேறியது. நேற்று நடந்த ‘பிளே–ஆப்’ இரண்டாவது தகுதிச் சுற்றில், சொதப்பிய சென்னை அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து,

 

வெளியேறியது. சென்னை தரப்பில் ரெய்னாவின் அதிவேக அரைசதம் வீணானது.

மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நேற்று நடந்த ஏழாவது ஐ.பி.எல்., தொடருக்கான ‘பிளே–ஆப்’ சுற்றின் இரண்டாவது தகுதிச் சுற்றுப் போட்டியில், சென்னை, பஞ்சாப் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற சென்னை அணி, ‘பீல்டிங்’ தேர்வு செய்தது.

 

சேவக் அபாரம்:

பஞ்சாப் அணிக்கு சேவக், மனன் வோரா ஜோடி சூப்பர் துவக்கம் கொடுத்தது. ‘பழைய’ சேவக்காக எழுச்சி கண்ட இவர், ரசிகர்களுக்கு உற்சாகம் தந்தார். சென்னை பந்துவீச்சை துவம்சம் செய்த இவர், நெஹ்ரா ஓவரில் ‘ஹாட்ரிக்’ பவுண்டரி அடித்தார். முதல் விக்கெட்டுக்கு 110 ரன்கள் சேர்த்த போது வோரா (34) வெளியேறினார். மேக்ஸ்வெல் (13) ஏமாற்றினார். அசத்தலாக ஆடிய சேவக், 50வது பந்தில் தனது 2வது ஐ.பி.எல்., சதத்தை பதிவு செய்தார். ஜடேஜா வீசிய 18வது ஓவரில் இரண்டு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்த சேவக், 58 பந்தில் 122 ரன்கள் (8 சிக்சர், 12 பவுண்டரி) எடுத்து அவுட்டானார். கேப்டன் ஜார்ஜ் பெய்லி (1) போல்டானார். மில்லர் (38) ‘ரன்–அவுட்’ ஆனார். விரிதிமன் சகா (6) சொதப்பினார். பஞ்சாப் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 226 ரன்கள் எடுத்தது. ஜான்சன் (1) அவுட்டாகாமல் இருந்தார்.

 

ரெய்னா விளாசல்:

கடின இலக்கை விரட்டிய சென்னை அணிக்கு டுபிளசி (0) முதல் ஓவரில் அவுட்டாகி அதிர்ச்சி தந்தார். அடுத்து வந்த சுரேஷ் ரெய்னா, துவக்கத்தில் இருந்தே அதிரடியாக ரன் சேர்த்தார். சந்தீப் சர்மா வீசிய ஆட்டத்தின் 2வது ஓவரில் 3 பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்த இவர், ஜான்சன் வீசிய 4வது ஓவரில் 2 சிக்சர் விளாசினார். பின், சந்தீப் சர்மா பந்தை சிக்சருக்கு அனுப்பிய ரெய்னா, 16 பந்தில் அரைசதத்தை பதிவு செய்தார். இரண்டாவது விக்கெட்டுக்கு 66 ரன்கள் சேர்த்த போது ஸ்மித் (7) போல்டானார்.

 

மெக்கலம் ஏமாற்றம்:

தொடர்ந்து அதிரடி காட்டிய ரெய்னா, பர்விந்தர் அவானா வீசிய 5வது ஓவரில் 2 சிக்சர், 5 பவுண்டரி உட்பட 33 ரன்கள் ரன்கள் எடுக்க, சென்னை அணி 6 ஓவரில் 100 ரன்களை எட்டியது. இதையடுத்து வெற்றி பெற வாய்ப்பு இருந்தது.

 

திருப்புமுனை:

இந்த நேரத்தில் ஜார்ஜ் பெய்லியின் துல்லிய ‘த்ரோவில்’ ரெய்னா (87 ரன், 25 பந்து, 6 சிக்சர், 12 பவுண்டரி) துரதிருஷ்டவசமாக ‘ரன்–அவுட்’ ஆக, போட்டியில் திருப்புமுனை ஏற்பட்டது. படுமந்தமாக ஆடிய பிரண்டன் மெக்கலம் (11) 2வது ரன்னுக்கு ஓடிய போது ‘ரன்–அவுட்’ செய்யப்பட்டார்.

ஆட்டத்தின் 13வது ஓவரை வீசிய அவானா, ரவிந்திர ஜடேஜா (27), டேவிட் ஹசி (1) ஆகியோரை அவுட்டாக்கி இரட்டை ‘அடி’ கொடுத்தார். அஷ்வின் (10) ஏமாற்றினார். அடுத்து வந்த கேப்டன் தோனி நிதானமாக ஆடினார். இவர், அவானா வீசிய ஆட்டத்தின் கடைசி பந்தை சிக்சருக்கு அனுப்ப, சென்னை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 202 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வி அடைந்தது. தோனி (42), மோகித் சர்மா (1) அவுட்டாகாமல் இருந்தனர். பஞ்சாப் சார்பில் பர்விந்தர் அவானா 2 விக்கெட் வீழ்த்தினார்.

 

எல்லாமே ஒன்று

பஞ்சாப் அணி 11வது ஓவரின் முடிவில், 1 விக்கெட்டுக்கு 111 ரன்கள் எடுத்திருந்தது (111/1, 11 ஓவர்) சற்று வித்தியாசமாக இருந்தது.

இரண்டாவது சதம்

நேற்று அபாரமாக ஆடிய பஞ்சாப் அணியின் சேவக் (122 ரன்), ஐ.பி.எல்., அரங்கில் தனது இரண்டாவது சதத்தை பதிவு செய்தார். முன்னதாக 2011ல் டில்லி அணிக்காக விளையாடிய இவர், டெக்கான் அணிக்கு எதிராக 119 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் அதிக சதம் அடித்த வீரர்கள் வரிசையில் கில்கிறிஸ்ட், முரளி விஜய், டேவிட் வார்னர் ஆகியோருடன் இரண்டாவது இடத்தை பகிர்ந்து கொண்டார்.

 

* இது, இம்முறை பதிவு செய்யப்பட்ட இரண்டாவது சதம். முன்னதாக மும்பை அணியின் லெண்டில் சிம்மன்ஸ் (100*), பஞ்சாப் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சதம் அடித்தார்.

* தவிர இது, ஐ.பி.எல்., வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட 30வது சதம். இதில் அதிகபட்சமாக பெங்களூரு அணியின் கிறிஸ் கெய்ல் 4 சதம் அடித்துள்ளார்.

நான்காவது முறை

நேற்று 226 ரன்கள் குவித்த பஞ்சாப் அணி, இத்தொடரில் நான்காவது முறையாக 200 ரன்களுக்கு மேல் எடுத்தது. இதில் மூன்று முறை சென்னைக்கு (231, 226, 206 ரன்கள்) எதிராகவும், ஒரு முறை (211) ஐதராபாத்துக்கு எதிராகவும் இம்மைல்கல்லை எட்டியது. இதன்மூலம் இம்முறை அதிக ரன்கள் எடுத்த அணிகள் வரிசையில் முதல் நான்கு இடங்களில் பஞ்சாப் அணி உள்ளது.

 

அதிவேக அரைசதம்

அபாரமாக ஆடிய சென்னை அணியின் சுரேஷ் ரெய்னா, 16 பந்தில் அரைசதம் அடித்தார். இதன்மூலம் ஐ.பி.எல்., அரங்கில் அதிவேக அரைசதம் அடித்தவர்கள் பட்டியலில் 2வது இடம் பிடித்தார். ஐதராபாத்துக்கு எதிராக 15 பந்தில் அரைசதத்தை பதிவு செய்த கோல்கட்டா அணியின் யூசுப் பதான், முதலிடத்தில் உள்ளார்.

 

‘ஹாட்ரிக்’ தோல்வி

இம்முறை சென்னை அணியால் பஞ்சாப்பை வீழ்த்த முடியவில்லை. லீக் சுற்றில் இரண்டு முறை தோற்றது. நேற்றும் சொதப்பி மூன்றாவது தோல்வியை பெற்றது.

ரெய்னா ‘ரன்–அவுட்’

நேற்றைய போட்டியில், ஒரு கட்டத்தில் சென்னை அணி 6 ஓவரில் 100 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்தது. அப்போது ரெய்னா, 25 பந்தில் 87 ரன்கள் எடுத்திருந்தார். கரண்வீர் சிங் வீசிய 7வது ஓவரின் முதல் பந்தை தட்டிவிட்ட பிரண்டன் மெக்கலம், தேவையில்லாமல் ஒரு ரன்னுக்கு ஓடினார். துல்லியமாக பீல்டிங் செய்த கேப்டன் ஜார்ஜ் பெய்லி, பந்தை சுரேஷ் ரெய்னா ஓடிய திசையில் இருந்த ‘ஸ்டெம்பை’ நோக்கி எறிந்து ‘ரன்–அவுட்’ செய்தார். இது, போட்டியில் திருப்பமாக அமைந்தது. பின் ஆதிக்கம் செலுத்திய பஞ்சாப் அணி எளிதில் வெற்றி பெற்றது

 

விமர்சனத்துக்கு பதிலடி:

சதம் அடித்தது குறித்து பஞ்சாப் அணியின் சேவக் கூறுகையில்,‘‘ சில போட்டியில், குறைவான ரன்களில் அவுட்டாகி ‘பெவிலியனுக்கு’ திரும்பியபோது, என் மனைவி போனில் தொடர்பு கொண்டார். எனது மகனின் நண்பர்கள் நான் சரியாக விளையாடவில்லை என அவனை கேலி செய்வதாக கூறினார். அப்போது, இன்னும் சில போட்டி உள்ளது. பொறுத்திருங்கள் என அவருக்கு பதில் தெரிவித்தேன். தவிர, பஞ்சாப் அணிக்கு என்னால் ஒரு போட்டியிலாவது வெற்றி கிடைக்க வேண்டும் என விரும்பினேன். கவனத்துடன் விளையாடி, சதமும் பதிவு செய்தேன்,’’ என்றார்.

 

இரண்டாவது இந்தியர்

நேற்றைய போட்டியில் சதம் அடித்த சேவக், ஐ.பி.எல்., தொடரில் தனது இரண்டாவது சதத்தை பதிவு செய்தார். இதன் மூலம், ஐ.பி.எல்., தொடரில் 2 சதம் அடித்த இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமை பெற்றார். இதற்கு முன், முரளி விஜய் இந்த சாதனையை பெற்றிருந்தார்.

கைவிட்ட வெளிநாட்டு வீரர்கள்

நேற்று சென்னை அணியின் டுவைன் ஸ்மித் (7), டுபிளசி (0), பிரண்டன் மெக்கலம் (11),  டேவிட் ஹசி (1) ஆகிய நான்கு வெளிநாட்டு வீரர்களும் சொற்ப ரன்னில் வெளியேறி ஏமாற்றினர். அதேவேளையில் பஞ்சாப் அணிக்கு இந்திய வீரரான சேவக் சதம் அடித்து வெற்றிக்கு வித்திட்டார்.

தோனி செய்த தவறு

முக்கியமான போட்டியில் ‘டாஸ்’ வென்ற தோனி, முதலில் ‘பேட்டிங்கை’ தேர்வு செய்ய தவறினார். பிரதான பவுலர்களை சேவக், வெளுத்து வாங்கிய நிலையில் ரெய்னா, டுபிளசி, டுவைன் ஸ்மித் போன்ற பகுதிநேர பந்துவீச்சாளர்களை பயன்படுத்தாமல் ஏமாற்றம் அளித்தார்.

‘பாலிவுட்’ பைனல்

நாளை பெங்களூருவில் நடக்கும் பைனலில் பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் கோல்கட்டா அணி, நடிகை பிரித்தி ஜிந்தாவின் பஞ்சாப் அணியை எதிர் கொள்கிறது.

 

http://sports.dinamalar.com/2014/05/1401379263/dhonichennaiip

 

Link to comment
Share on other sites

மகுடத்தை சூடுவது யார்?: பஞ்சாப்–கொல்கத்தா இன்று மோதல்

 

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் பெங்களூரில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் பஞ்சாப்–கொல்கத்தா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

ஐ.பி.எல். கிரிக்கெட்

7ஆவது ஐ.பி.எல். இருபது-20 கிரிக்கெட் போட்டி கடந்த ஏப்ரல் 16ஆம் திகதி முதல் நடந்து வருகிறது. விறுவிறுப்பான இந்த போட்டி இறுதி கட்டத்தை எட்டி விட்டது. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் ஆட்டங்கள் முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்த கிங்ஸ் லெவன் பஞ்சாப், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய 4 அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே–ஓப்’ சுற்றுக்கு முன்னேறின. ராஜஸ்தான் ரோயல்ஸ், சன் ரைசர்ஸ் ஐதராபாத், பெங்களூர் ரோயல் சேலஞ்சர்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் லீக் சுற்றுடன் வெளியேற்றப்பட்டன.

முதலாவது தகுதி சுற்று ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 28 ஓட்டங்கள் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை வீழ்த்தி முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. மும்பையில் நேற்று முன்தினம் நடந்த இரண்டாவது தகுதி சுற்று வாய்ப்பில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 24 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இரண்டு முறை சாம்பியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சாய்த்து இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்தது.

இன்று இறுதிப்போட்டி

இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். மகுடம் யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி பெங்களூர் சின்னசாமி அரங்கில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 8 மணிக்கு நடக்கிறது. இதில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்–கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

கொல்கத்தா அணி ஏற்கனவே ஐ.பி.எல். கிண்ணத்தை 2012–ம் ஆண்டில் கைப்பற்றி இருக்கிறது. 2ஆவது முறையாக ஐ.பி.எல். கிண்ணத்தை வெல்ல அந்த அணி ஆர்வம் காட்டும்.

முதல்முறையாக தகுதி

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை பொறுத்தமட்டில் முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று இருக்கிறது. ஐ.பி.எல். கிண்ணத்தை உச்சி முகரும் வேட்கையில் அந்த அணி முனைப்புடன் களம் காணும்.

கம்பீர் தலைமையிலான கொல்கத்தா அணியில் ரொபின் உத்தப்பா (655 ஓட்டங்கள்), யூசுப் பதான், மனிஷ் பாண்டே, ஷகிப் அல்–ஹசன் போன்ற சிறந்த துடுப்பாட்ட வீரர்களும், சுனில் நரேன் (20 விக்கெட்டுகள்), உமேஷ்யாதவ், மோர்னே மோர்கல் போன்ற சிறப்பான பந்து வீச்சாளர்களும் உள்ளனர். சுனில் நரேன்  நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடரில் தனது நாட்டு அணிக்காக பங்கேற்பதை தவிர்த்து விட்டு இறுதிப்போட்டியில் ஆடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஷேவாக் அதிரடி

ஜோர்ஜ் பெய்லி தலைமையிலான பஞ்சாப் அணியில் ஷேவாக், மேக்ஸ்வெல் (552 ஓட்டங்கள்), டேவிட் மில்லர், மனன்வோரா போன்ற அபாரமான துடுப்பாட்ட வீரர்களும், ஜோன்சன், சந்தீப் ஷர்மா, அக்ஷர் பட்டேல் போன்ற சிறந்த பந்து வீச்சாளர்களும் நல்ல நிலையில் உள்ளனர். ஷேவாக் இரண்டாவது தகுதி சுற்று ஆட்டத்தில் அதிரடியாக 122 ஓட்டங்களை குவித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்து இருப்பது அந்த அணியின் நம்பிக்கையை அதிகரிக்கும். முதல் கட்ட லீக் ஆட்டங்களில் அதிரடியாக ஆடிய மேக்ஸ்வெல் கடந்த சில ஆட்டங்களில் சோபிக்காமல் போனது அந்த அணிக்கு கவலை அளிக்கும் விடயமாகும்.


நேருக்கு நேர்

ஐ.பி.எல். போட்டி தொடரில் இரு அணிகளும் இதுவரை 14 முறை சந்தித்துள்ளன. இதில் கொல்கத்தா அணி 8 முறையும், பஞ்சாப் அணி 6 முறையும் வெற்றி பெற்றுள்ளன. இந்த தொடரில் அபுதாபியில் நடந்த லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணி, கொல்கத்தாவை வீழ்த்தியது. ஆனால் இந்திய மண்ணில் நடந்த இரண்டு ஆட்டங்களிலும் கொல்கத்தா அணி, பஞ்சாபை பதம் பார்த்தது.


இரு அணிகளும் சமபலத்துடன் விளங்குவதால் இறுதிப்போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.  



இன்றைய போட்டிக்கான இரு உத்தேச அணிகள் 

கொல்கத்தா: கம்பீர் (அணித் தலைவர்), ரொபின் உத்தப்பா, மனிஷ் பாண்டே, ஷகிப் அல்–ஹசன், யூசுப் பதான், டென் டஸ்சாட், சூர்யகுமார் யாதவ், பியுஷ்சாவ்லா, சுனில் நரேன், மோர்னே மோர்கல், உமேஷ்யாதவ்.

பஞ்சாப்: ஜார்ஜ் பெய்லி (அணித் தலைவர்), ஷேவாக், மனன்வோரா, மேக்ஸ்வெல், டேவிட் மில்லர், விருத்திமான் சஹா, ஜோன்சன், அக்ஷர் பட்டேல், கரன்வீர்சிங், சந்தீப் ஷர்மா, பர்விந்தர் அவனா.
 

 

http://www.virakesari.lk/articles/2014/06/01/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E2%80%93%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D

Link to comment
Share on other sites

சென்னை அணிக்கு எதிராக மாறிய டோணியின் சொதப்பல்கள் 

 

மும்பை: ஐபிஎல் போட்டியின் இறுதியாட்டத்துக்கு போக முடியாமல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியேறியதற்கு மகேந்திரசிங் டோணியின் தவறான அணுகுமுறைகள்தான் காரணம் என்ற விமர்சனம் எழுந்துள்ளது. 7வது சீசன் ஐ.பி.எல் கிரிக்கெட்டின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதின. முதலில் ஆடிய பஞ்சாப் அணி 226 ரன்களை குவித்தது. அந்த அணியின் துவக்க வீரர் வீரேந்திரசேவாக் சதம் அடித்து அசத்தினார்

 

. பேட்டிங்கின் சொர்க்கம் என்று அழைக்கப்பட்ட மும்பை வான்கடே மைதானத்தில் டாஸ் ஜெயித்தும், பஞ்சாப் அணியை முதலில் பேட்டிங் செய்ய கூறி இமாலய தவறை செய்ததை அப்போதுதான் டோணி உணர்ந்தார். சென்னை அணிக்கு எதிராக மாறிய டோணியின் சொதப்பல்கள் வெற்றிக்கு 227 ரன்கள் தேவை என்ற கடினமான இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது. நியூசிலாந்தின் துவக்க ஆட்டக்காரரான மெக்கல்லத்தை மத்திய வரிசையில் இறக்க முடிவு செய்த டோணி, நடுவரிசை ஆட்டக்காரர் டு பிளெசியை துவக்க ஆட்டக்காரராக களமிறக்கினார்.அவர் டக் அவுட் ஆனார். துவக்க ஆட்டக்காரராக களமிறங்க வேண்டிய மெக்கல்லம் மத்திய வரிசையில் இறங்கி ரன் குவிக்க தடுமாறினார்.

 

25 பந்துகளில் 87 ரன் குவித்த ரெய்னாவை ரன் அவுட்டாக்கியதுடன் தானும் ரன் அவுட்டாகி சென்னை அணியை கவிழ்த்துவிட்டார். ஆனால் நிலைமை மோசமாக இருந்த தருணத்திலும் டோணி களமிறங்கவில்லை. ஐந்தாவது வீரராக ஜடேஜாவையும், அதற்கு பிறகு டேவிட் ஹசியையும் களமிறக்கி 7வது வீரராகத்தான் டோணி இறங்கினார். அப்போது வெற்றிக்கு 48 பந்துகளில் 87 ரன்கள் தேவைப்பட்டது. டோணி போன்ற வீரரால் இந்த ஸ்கோரை எட்ட முடியும். ஆனால் அவரோ அந்த நிலையிலும், சிங்கிள் ரன் எடுத்து அஸ்வின் பேட்டிங் செய்ய இடமளித்தார். சிங்கிள் ரன் ஓடாமல் டோணி பவுண்டரிகளை மட்டும் குறிவைத்திருந்தாலும், ஓவருக்கு 15 ரன்களுக்கு மேலாவது எடுத்தபடி வந்திருக்கலாம்.

 

ஓவர்கள் முடியும் தருவாயை எட்டும்போதாவது ஹெலிகாப்டன் ஷாட்டை அடிப்பார் என்ற ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஜான்சன் பந்து வீச்சில் மிகவும் திணறியபடி பேட்டிங் செய்தார் டோணி. கடைசி ஓவர் வரை களத்தில் நின்று 31 பந்துகளில் 42 ரன்களை மட்டுமே டோணியால் எடுக்க முடிந்தது. பந்தையத்துக்கு பிறகு விரக்தியில் பேசிய டோணி எங்கள் பவுலர்கள் 200 ரன்களை கொடுக்காமல் இருந்திருந்தால்தான் அது ஆச்சரியம் என்று கூறினார். பவுலர்கள் பற்றி தெரிந்து வைத்துக்கொண்டு எதற்காக இரண்டாவது பேட்டிங்கை தேர்வு செய்தார் என்று விமர்சகர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

 

Read more at: http://tamil.oneindia.in/news/sports/mahendra-singh-dhoni-s-wrong-decisions-cost-csk-202455.html

Link to comment
Share on other sites

பொறுப்பற்ற வெளிநாட்டு வீரர்கள்: கேப்டன் தோனி கடும் தாக்கு
மே 31, 2014.

மும்பை: ‘‘பஞ்சாப் அணிக்கு எதிரான ‘பிளே–ஆப்’ இரண்டாவது தகுதிச்சுற்றில் சென்னை அணியின்

வெளிநாட்டு வீரர்கள் பொறுப்பற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தினர்,’’ என, கேப்டன் தோனி கடுமையாக சாடினார்.

 

ஐ.பி.எல்., தொடரின் ‘பிளே–ஆப்’ இரண்டாவது தகுதிச்சுற்றில் சென்னை அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியிடம் தோல்வியடைந்தது. இதற்கு டுவைன் ஸ்மித் (7), டுபிளசி (0), பிரண்டன் மெக்கலம் (11),  டேவிட் ஹசி (1) ஆகிய நான்கு வெளிநாட்டு வீரர்களும் சொதப்பியதே முக்கிய காரணம்.

இது குறித்து சென்னை கேப்டன் தோனி கூறியது:

 

ரெய்னா அதிரடியாக ரன் சேர்த்த போது, உறுதியாக இலக்கை எட்டி விடலாம் என எண்ணினேன். ‘மிடில்–ஆர்டரில்’ .வெளிநாட்டு சீனியர் வீரர்கள்  பொறுப்பற்ற முறையில் விளையாடினர். இது தோல்விக்கு வழிவகுத்தது. பவுலர்கள் ரன்களை வாரி வழங்கி ஏமாற்றினர். சுழற்பந்துவீச்சாளர்கள் இன்னும் முன்னேற்றம் அடைய வேண்டும்.

அதிரடி சேவக்:

டுவைன் பிராவோ இல்லாமல், இத்தொடரில் நன்றாகத்தான் விளையாடினோம். சேவக் அதிரடியாக விளையாட துவங்கினால், எவ்வித பவுலராலும் கட்டுப்படுத்த முடியாது.

இவ்வாறு தோனி கூறினார்.

 

சபாஷ் சஞ்சய் பங்கர்

ஐ.பி.எல்., தொடரில் அன்னிய பயிற்சியாளர்கள் ஏமாற்றிய நிலையில், இந்திய பயிற்சியாளரான சஞ்சய் பங்கர், பஞ்சாப் அணியை பைனலுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

இது குறித்து சேவக் கூறியது: எங்கள் அணி பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் சிறப்பாக செயல்படுவார். எல்லா வீரர்களையும் ஊக்கப்படுத்துவார். இந்திய அணி முன்னாள் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டன், பங்கர் இருவரும் சமமான திறமையானவர்கள். கிறிஸ்டனை போன்றே இவரும் அமைதியானவர்.

தேசிய அணியிலிருந்து வெளியேறியபோது, முதல் தர போட்டியில் சதம் அல்லது இரட்டை சதம் அடிப்பேன் என எதிர்பார்த்தனர். இது நடக்கவில்லை. நான் எல்லா வழியிலும் முயன்றும், ரன் குவிக்க முடியவில்லை. நேரம் சரியில்லாதபோது, எதுவும் சரியாக அமையாது. சென்னை அணிக்கு எதிரான சதம் அடித்தது மகிழ்ச்சி தந்தது.

இவ்வாறு சேவக் கூறினார்.

மகனுக்காக...

சதம் அடித்தது குறித்து பஞ்சாப் அணியின் சேவக் கூறுகையில்,‘‘சில போட்டிகளில், குறைவான ரன்களில் அவுட்டான போது, என் மனைவி போனில் தொடர்பு கொண்டார். எனது மகனின் நண்பர்கள், நான் சரியாக விளையாடாதது குறித்து கேலி செய்வதாக கூறினார். அப்போது, இன்னும் சில போட்டி உள்ளது, பொறுத்திருங்கள் என்றேன். இப்போது சதம் விளாசி விமர்சனத்துக்கு பதிலடி கொடுத்துள்ளேன்,’’ என்றார்.

 

http://sports.dinamalar.com/2014/05/1401556936/dhonichennaiipl.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

226 ரன்கள் கொடுத்ததே அதிகம் . பேசாமல் பவிலியனுக்குத் திரும்பியிருக்கலாம்...!

 

ஓவருக்கு 11 க்கு மேல் ரன்கள் எடுப்பது சாதாரணமான  விடயமல்ல என்று எந்த முட்டாளுக்குமே புரியும். எனக்கே புரியுது...!!!

Link to comment
Share on other sites

7வது பிரீமியர் கிரிக்கெட்: கோல்கட்டா அணி சாம்பியன்

ஜூன் 01,2014 21:35

 

பெங்களூரு: 7வது பிரிமியர் கிரிக்கெட் தொடரில் கோல்கட்டா அணி வெற்றி பெற கோல்கட்டா அணி சாம்பியன் பட்டம் வென்றது.

கடந்த 2 மாதங்களாக நடந்து வந்த 7வது பிரீமியர் கிரிக்கெட் தொடரில் பெங்களூருவில் நடந்த பைனலில் பஞ்சாப் அணியும் கோல்கட்டா அணியும் மோதின. முதல் பிளே ஆப் சுற்றில் பஞ்சாப் அணி கோல்கட்டா அணியிடம் தோல்விடைந்தது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் முதல் முறையாக கோப்பை வெல்ல பஞ்சாப் அணியும், இரண்டாவது முறையாககோப்பை வெல்ல கோல்கட்டா அணியும் தீவிரம் காட்டின.

 

இந்த போட்டியில் டாஸ் வென்ற கோல்கட்டா அணி கேப்டன் காம்பீர் முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தார். இதனையடுத்து பஞ்சாப் அணி களமிறங்கியது. துவக்க வீரராக களமிறங்கிய சேவக் 7 ரன்னில் ஆட்டமிழந்தார். பியூஸ் சாவ்லா 67 ரன்னிலும், கேப்டன் பெய்லி ஒரு ரன்னிலும் ஆட்டமிழந்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மேக்ஸ்வெல் டக் அவுட்டானார். இறுதியில் பஞ்சாப் அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் அணியின் சகா சிறப்பாக விளையாடி சதமடித்தார். 55 பந்துகளை சந்தித்த சகா, 115 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். பிரீமியர் கிரிக்கெட் தொடரின் பைனலில் முதல் சதமடித்த வீரர் என்ற பெருமையையும் சகா பெற்றார்.

 

இதன் பின்னர் 200 ரன்கள் என்ற இலக்குடன் கோல்கட்டா அணி களமிறங்கியது. துவக்க வீரராக களமிறங்கிய உத்தப்பா 6 ரன்னில் அவுட்டானார். கேப்டன் காம்பீர் 23 ரன்னில் அவுட்டானார். அதிரடியாக விளையாடிய மணிஸ் பாண்டே 94 ரன்னில் அவுட்டானார். யூசுப் பதான் 36 ரன்னிலும், அல் ஹசன் 12 ரன்னிலும், ரியான் டென் 4 ரன்னிலும் அவுட்டானார்கள். இறுதியில் கோல்கட்டா அணி 19.3 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் கோல்கட்டா அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பை வென்றது. கோல்கட்டா அணி கைப்பற்றும் இரண்டாவது கோப்பையாகும்.
 

 

http://www.dinamalar.com/news_detail.asp?id=988512

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நவீனனுக்கு திண்ணையில் வைத்து KKR தான் வெல்லும் என்று எப்போதோ சொன்ன நினைவு :)

Link to comment
Share on other sites

நவீனனுக்கு திண்ணையில் வைத்து KKR தான் வெல்லும் என்று எப்போதோ சொன்ன நினைவு :)

 

நினைவு இருக்கு கிருபன் :)  நீங்கள் சொன்னீர்கள் உங்கள் நண்பர்கள் எல்லாம் சேர்ந்து இருந்து இறுதி போட்டி பார்ப்பதாகவும் அதில் பலர் சென்னை ரசிகர்கள் என்றும் நீங்கள் KKR  ரசிகர் என்றும். :)

 

பஞ்சாப் வெல்லாமல் கொல்கத்தா வென்றது எனக்கும் சந்தோசம்தான். :D

 

Link to comment
Share on other sites

கோல்கட்டாவுக்கு கோப்பை: கடைசி ஓவரில் வீழ்ந்தது பஞ்சாப்
மே 31, 2014.

பெங்களூரு: பந்துக்கு பந்து நெஞ்சம் படபடத்த பரபரப்பான ஐ.பி.எல்., பைனலில் அசத்திய கோல்கட்டா அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றி பெற்றது. இதன் மூலம் கோப்பையை இரண்டாவது முறையாக கைப்பற்றியது. கடைசி ஓவரில் பவுண்டரி அடித்த பியுஸ் சாவ்லா, சாம்பியன் கனவை நனவாக்கினார். போராடிய பஞ்சாப் அணி, இரண்டாவது இடத்தை பிடித்தது. சகாவின் சதம் வீணானது.

 

பெங்களூருவில் நேற்று இரவு நடந்த ஏழாவது ஐ.பி.எல்., தொடரின் பைனலில் கோல்கட்டா, பஞ்சாப் அணிகள் மோதின. பஞ்சாப் அணியில் சந்தீப் சர்மா நீக்கப்பட்டு, பாலாஜி இடம் பெற்றார். கோல்கட்டா அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. ‘டாஸ்’ வென்ற கோல்கட்டா கேப்டன் காம்பிர், துணிச்சலாக ‘பவுலிங்’ தேர்வு செய்தார்.

 

சேவக் ஏமாற்றம்:

பஞ்சாப் அணிக்கு எதிர்பார்த்த துவக்கம் கிடைக்கவில்லை. சென்னைக்கு எதிரான கடந்த போட்டியில் புலியாக உறுமிய சேவக், இம்முறை பூனையாக பம்மினார். இவர், உமேஷ் யாதவ் ‘வேகத்தில்’ வெறும் 7 ரன்களுக்கு நடையை கட்டினார். அடுத்து ‘பேட்டிங்’ வரிசையில் தேவையில்லாமல் மாற்றம் செய்யப்பட்டது. மேக்ஸ்வெல்லுக்கு பதில் முன்னதாக வந்த கேப்டன் ஜார்ஜ் பெய்லி(1), ‘சுழல் மாயாவி’ சுனில் நரைனின் முதல் பந்தில் போல்டானர்.

 

பின் சகா, மனன் வோரா சேர்ந்து அசத்தினர். யார் பந்துவீசினாலும் விளாசித் தள்ளிய இவர்கள், மின்னல் வேகத்தில் ரன் சேர்த்தனர். நரைன் கைநழுவ கண்டம் தப்பிய சகா, தனது அதிரடியை தொடர்ந்தார். உமேஷ் யாதவ் ஓவரில் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசினார். சாவ்லா வலையில் வோரா(67) சிக்கினார். ‘அபாய’ மேக்ஸ்வெல்(0) ஏமாற்றினார். நரைன் ஓவரில் சிக்சர் அடித்த சகா, சதம் கடந்து அசத்தினார். முதல் 10 ஓவரில் 58 ரன்கள் தான் எடுக்கப்பட்டன. அடுத்த 10 ஓவரில் 141 ரன்கள் கிடைத்தன. பஞ்சாப் அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 199 ரன்கள் எடுத்தது. சகா 115 ரன்களுடன்(55 பந்து, 10 பவுண்டரி, 8 சிக்சர்) அவுட்டாகாமல் இருந்தார்.ஆட்ட நாயகன் விருதை மணிஷ் பாண்டே வென்றார்.

 

பாண்டே நம்பிக்கை:

கடின இலக்கை விரட்டிய கோல்கட்டா அணி எடுத்த எடுப்பிலேயே ஆட்டம் கண்டது. ஜான்சன் வீசிய முதல் ஓவரில் உத்தப்பா(5) அவுட்டானார். கேப்டன் காம்பிர்(23) அதிக நேரம் நீடிக்கவில்லை. அடுத்து வந்த யூசுப் பதான், கரண்வீர் சிங் ஓவரில் வரிசையாக 2 சிக்சர்கள் விளாசி நம்பிக்கை தந்தார். மறுபக்கம் அபார ஆட்டத்தை தொடர்ந்த மணிஷ் பாண்டே, அவானா ஓவரில் 2 சிக்சர், பவுண்டரி விளாசினார். இந்த நேரத்தில் கரண்வீர் சிங் பந்தில் யூசுப்(36) அவுட்டாக, சிக்கல் ஏற்பட்டது. சாகிப்(12), டஸ்காட்டே(4) நிலைக்கவில்லை. தனிநபராக போராடிய மணிஷ் பாண்டே, 94 ரன்களுக்கு வெளியேற, பதட்டம் அதிகரித்தது. சூர்ய குமார் யாதவ்(5) அணியை கைவிட்டார்.

 

சபாஷ் சாவ்லா:

ஜான்சன் வீசிய போட்டியின் 19வது ஓவரில் பியுஸ் சாவ்லா ஒரு இமாலய சிக்சர் அடிக்க, மீண்டும் நம்பிக்கை துளிர் விட்டது.

கடைசி ஓவரில் வெற்றிக்கு 5 ரன்கள் தேவைப்பட்டன. அவானா பந்துவீசினார். முதல் பந்தில் ரன் இல்லை. இரண்டாவது பந்தில் நரைன் ஒரு ரன் எடுத்தார். 3வது பந்தில் பியுஸ் சாவ்லா ஒரு ‘சூப்பர்’ பவுண்டரி அடித்து, கோப்பையை உறுதி செய்தார். கோல்கட்டா அணி 19.3 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 200 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சாவ்லா(13), நரைன்(2) அவுட்டாகாமல் இருந்தனர்.

 

ரூ. 15 கோடி பரிசு

நேற்றைய ஐ.பி.எல்., பைனலில் வெற்றி பெற்ற கோல்கட்டா அணிக்கு, கோப்பையுடன் ரூ. 15 கோடி பரிசு வழங்கப்பட்டது. இரண்டாவது இடம் பிடித்த பஞ்சாப் அணிக்கு ரூ. 10 கோடி பரிசு கொடுக்கப்பட்டது. ‘பிளே–ஆப்’ சுற்று வரை முன்னேறி, பைனல் வாய்ப்பை இழந்த சென்னை, மும்பை அணிகளுக்கு தலா ரூ. 7.5 கோடி வழங்கப்பட்டது.

அழுதார் பிரித்தி

நேற்றைய பைனலில் நடிகர் ஷாருக்கானின் கோல்கட்டா, நடிகை பிரித்தி ஜிந்தாவின் பஞ்சாப் அணிகள் மோதியதால், பாலிவுட் ‘டென்ஷனை’ காண முடிந்தது. இருவரும் மைதானத்துக்கு வந்து போட்டியை ரசித்தனர். கோல்கட்டா வென்றதும் ஷாருக் சிரித்து மகிழ்ந்தார். கோப்பை நழுவிய சோகத்தில் பிரித்தியின் கண்கள் குளமாகின.

 

9வது வெற்றி

லீக் சுற்றில் துவக்கத்தில் சொதப்பிய கோல்கட்டா அணி, முதல் 7 போட்டியில் 2ல் மட்டும் வென்றது. அதன்பின் தொடர்ச்சியாக 7 லீக் போட்டியில் வெற்றி பெற்றது. பின், ‘பிளே–ஆப்’ முதலாவது தகுதிச் சுற்றில் பஞ்சாப்பை வீழ்த்தி, தொடர்ந்து 8வது வெற்றியை பெற்றது. இதன்மூலம் ஐ.பி.எல்., அரங்கில் தொடர்ச்சியாக அதிக வெற்றி பெற்ற அணிகள் வரிசையில் முதலிடத்தை பஞ்சாப்புடன் (2013–14, 8 வெற்றி) பகிர்ந்து கொண்டது.

 

நேற்றைய பைனலில் மீண்டும் பஞ்சாப் அணியை வீழ்த்திய கோல்கட்டா அணி, வரிசையாக 9வது வெற்றியை பதிவு செய்து, தொடர்ச்சியாக அதிக வெற்றி பெற்ற அணி என்ற புதிய சாதனை படைத்தது. பெங்களூரு (2011), சென்னை (2013) அணிகள் தொடர்ச்சியாக 7 வெற்றி பெற்றன.

 

சிறந்த ‘சேஸ்’

பஞ்சாப் அணி நிர்ணயித்த 200 ரன்களை எட்டிய கோல்கட்டா அணி, ஐ.பி.எல்., தொடரின் பைனலில் சிறந்த ‘சேஸிங்கை’ பதிவு செய்து, தனது சொந்த சாதனையை முறியடித்தது. முன்னதாக 2012ல் நடந்த பைனலில், சென்னை அணி நிர்ணயித்த 191 ரன்கள் என்ற வெற்றி இலக்கை விரட்டிய கோல்கட்டா அணி 192 ரன்கள் எடுத்து சிறந்த ‘சேஸிங்’ செய்தது.

 

இதெல்லாம் அதிசயம்

மேற்கு வங்கத்தை சேர்ந்த சகா முதலாவது ஐ.பி.எல்., தொடரில் கோல்கட்டா அணிக்காக தான் விளையாடினார். நேற்று, தன்னை புறக்கணித்த அதே கோல்கட்டா அணிக்கு எதிராக சதம் அடித்த இவர், பஞ்சாப் அணிக்கு கைகொடுத்தார்.

 

* பஞ்சாப் அணிக்கு கடந்த போட்டிகளில் கைகொடுத்த வெளிநாட்டு வீரர்களான மேக்ஸ்வெல்(0), மில்லர்(1) இம்முறை ஏமாற்றிய நிலையில், இந்திய வீரர்களான வோரா(67), சகா(115) அசத்தினர்.

* சகா சதம் அடித்ததும், எதிரணியான கோல்கட்டாவின் உரிமையாளரான ஷாருக் கான் எழுந்து நின்று கைதட்டி தனது பெருந்தன்மையுடன் நடந்து கொண்டார்.

* கர்நாடகாவை சேர்ந்த உத்தப்பாவுக்கு பெங்களூரு சின்னசாமி மைதானம் பழக்கப்பட்டது. இத்தொடரில் அதிக ரன் எடுத்தவர் என்பதால் அசத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 5 ரன்களில் வெளியேறினார்.

 

முதல் வீரர்

நேற்று அபாரமாக ஆடிய பஞ்சாப் அணியின் சகா சதம் அடித்தார். இதன்மூலம் ஐ.பி.எல்., பைனலில் சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனை படைத்தார்.  முன்னதாக 2011ல் நடந்த பெங்களூரு அணிக்கு எதிரான பைனலில், சென்னை அணியின் முரளி விஜய் 95 ரன்கள் எடுத்தது அதிகபட்சமாக இருந்தது.

* இது, இம்முறை பதிவு செய்யப்பட்ட 3வது சதம். முன்னதாக மும்பை அணியின் லெண்டில் சிம்மன்ஸ் (100*, எதிர்–பஞ்சாப்), பஞ்சாப் அணியின் சேவக் (122, எதிர்–சென்னை) ஆகியோர் இம்மைல்கல்லை எட்டினர்.

 

* தவிர இது, ஐ.பி.எல்., வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட 31வது சதம். இதில் அதிகபட்சமாக பெங்களூரு அணியின் கிறிஸ் கெய்ல் 4 சதம் அடித்துள்ளார்.

* ஐ.பி.எல்., வரலாற்றில் சதம் அடித்த இரண்டாவது விக்கெட் கீப்பர் என்ற பெருமை பெற்றார் சகா. முன்னதாக டெக்கான் (109*), பஞ்சாப் (106) அணிகளுக்காக விளையாடிய கில்கிறிஸ்ட் இச்சாதனை படைத்தார்.

 

இரண்டாவது அதிகபட்சம்

நேற்று 199 ரன்கள் எடுத்த பஞ்சாப், ஐ.பி.எல்., பைனலில் அதிக ரன்கள் சேர்த்த அணிகள் வரிசையில் 2வது இடம் பிடித்தது. சென்னையில் 2011ல் நடந்த பெங்களூருவுக்கு எதிரான பைனலில், சென்னை அணி அதிகபட்சமாக 205 ரன்கள் குவித்தது.

 

http://sports.dinamalar.com/2014/05/1401556593/iplcup.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.