Jump to content

இஸ்லாமீயராக மாறினார் யுவன் சங்கர்ராஜா


Recommended Posts

இளையராஜாவின் புதல்வர் யுவன் சங்கர்ராஜா இஸ்லாமிய மதத்திற்கு மாறியுள்ளார்... (இன்னுமொரு றஹ்மானாக மாறும் எண்ணமோ?????)

Link to comment
Share on other sites

  • Replies 100
  • Created
  • Last Reply

Illayaraja' son Yuvan Shankar Raja clears air on marriage reports

 

Published by: Deepak Rana 

Published on: Sun, 09 Feb 2014 at 12:16 IST

spacer.gif

ilayaraja-106438.jpg

 

 
 

spacer.gifChennai: Southern composer Yuvan Shankar Raja, son of legendary musician Illayaraja, Sunday denied that he got married for the third time. He also confirmed that he has started following Islam.

"I'm not married for the third time. The news is fake and, yes, I follow Islam and I'm proud about it. My family supports my decision and there is no misunderstanding between me and my dad," Yuvan posted on Twitter page.

The 34-year-old married his long-time girlfriend Sujaya Chandran in 2005, but they separated in 2008 and it was a mutual decision.

In 2011, he married Shilpa Mohan, with whom he currently lives.

In his over a decade long career, Yuvan has composed music for over 100 films. Some of his best albums include "Thulluvadho Ilamai", "7G Rainbow Colony", "Manmadhan" and "Pattiyal".

His forthcoming albums include "Anjaan", "Taramani" and "Vettai Mannan".

 

http://www.pardaphash.com/news/illayaraja-clears-air-on-marriage-reports/729734.html

 

Link to comment
Share on other sites

மதம் மாறியதற்கு என்ன காரணமாக இருக்கும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது அவருடைய தனிப்பட்ட விருப்பமாக இருக்கலாம்.அது கிறிஸ்தவமோ, இஸ்லாமோ என்றால் தப்பில்லை என்றே நினைக்கின்றேன். ஆனால் கடவுளைக் காசுக்கும், பதவிக்கும் விற்பவர்களைத் தான் பிடிப்பதில்லை. அதனால் கிறிஸ்தவம் அப்படிச் செய்யும் போது எனக்கு ஏனோ பிடிப்பதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மதம் மாறியதற்கு என்ன காரணமாக இருக்கும்?

 

முன்னர் அவர் சார்ந்திருந்த மதக்கொள்கைகள் அவருக்குப் பிடிக்காமல் இருந்திருக்கலாம் அல்லது அவற்றில் நம்பிக்கையிழந்து போயிருக்கலாம். மதத்தைத் தேர்வு செய்து பின்பற்றுவது அவரவர் சொந்த விருப்பம். தமிழகத்தில் இஸ்லாமியரும் தமிழர்களே!

Link to comment
Share on other sites

அது அவருடைய தனிப்பட்ட விருப்பமாக இருக்கலாம்.அது கிறிஸ்தவமோ, இஸ்லாமோ என்றால் தப்பில்லை என்றே நினைக்கின்றேன். ஆனால் கடவுளைக் காசுக்கும், பதவிக்கும் விற்பவர்களைத் தான் பிடிப்பதில்லை. அதனால் கிறிஸ்தவம் அப்படிச் செய்யும் போது எனக்கு ஏனோ பிடிப்பதில்லை.

 

 

முன்னர் அவர் சார்ந்திருந்த மதக்கொள்கைகள் அவருக்குப் பிடிக்காமல் இருந்திருக்கலாம் அல்லது அவற்றில் நம்பிக்கையிழந்து போயிருக்கலாம். மதத்தைத் தேர்வு செய்து பின்பற்றுவது அவரவர் சொந்த விருப்பம். தமிழகத்தில் இஸ்லாமியரும் தமிழர்களே!

 

எனக்கு அவர் தான் சார்ந்த தலித் அடையாளத்தை வெறுத்து வேறு மதம் மாறிவிட்டாரோ என்ற எண்ணம் தான் கேட்க தூண்டியது.  அந்த அளவுக்கு அவர் சாதியத்தின் காரணமாக இந்த தமிழ் சமூகத்தின் வெறுப்பு கொண்டு விட்டாரோ என்ற ஒரு சின்ன சந்தேகம் தான் ..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இருக்கலாம். இளையராஜா பல தடவை சாதி பற்றிய கவலைகளை வெளியிட்டுள்ளார். கிறிஸ்தவமும் சாதி பார்க்கின்ற செயலில் இருப்பதால் அவர் இஸ்லாத்தைத் தேர்ந்தெடுத்திருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு அவர் தான் சார்ந்த தலித் அடையாளத்தை வெறுத்து வேறு மதம் மாறிவிட்டாரோ என்ற எண்ணம் தான் கேட்க தூண்டியது.  அந்த அளவுக்கு அவர் சாதியத்தின் காரணமாக இந்த தமிழ் சமூகத்தின் வெறுப்பு கொண்டு விட்டாரோ என்ற ஒரு சின்ன சந்தேகம் தான் ..

 

இதே காரணத்தினால் தான் ராஜா சாரின் பெற்றோர் முன்னர் கிறிஸ்தவத்துக்கு மாறியிருந்தனர். ராஜாசாரின் முன்னைய பெயர் டானியல் ராசய்யா என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் ராஜா சார் திரும்பவும் இந்துவாக மாறியிருந்தார். அவரது மேடைக் கச்சேரிகளில் "ஜனனி ஜனனி" என்ற பாடல் கட்டாயம் இருக்கும். நிச்சயம் யுவனின் இந்த மதமாற்றம் ராஜா சாரைப் பாதித்து இருக்கும். ராஜா சார் ஆதிதிராவிடர் (பறையர்) வகுப்பைச் சார்ந்தவர். இவர்களே உண்மையான தூய தமிழர்கள். அன்று அரசர் அவைகளில் முதலிடத்தில் இருந்த இவர்கள், ஆரிய பிராமணர்களின் நரித்தனத்தால் இன்று இந்தச் சமுதாயநிலையில் இப்படியாகினர்.

Link to comment
Share on other sites

இவ்வளவு  சாதி பாகுபாட்டில் இருந்து வந்து தமிழகத்தின் மதிப்புமிகு  கலைஞராக ,புகழ்சேர்த்தவாராக இருப்பவர்  அதன் பாகுபாடை நீக்க பாடு பட வேண்டும் அல்லது தம்சார்ந்த மக்களுக்கு ஏதாவது முன்ன்னோடியாக செய்ய வேண்டும்.

 

அதை விடுத்து  அரை வேக்காட்டு தனமாக மதம் மாறுதல் என்பது முட்டாள்தனம்.எல்லா மதமும்   ஒன்றை ஒன்று மிஞ்சியவைதான்

Link to comment
Share on other sites

ஆனாப்பட்ட அரசியல்வாதிகளே சாதிக்கொரு கட்சியை வைத்து சாதியத்தை எண்ணை ஊற்றி கொழுந்து விட எரிக்கிறார்கள்.ஒரு இசையமைப்பாளனால் எந்த மாற்றத்தை ஏற்படுத்தி விட முடியும்.மேலும் யுவன் சாதியத்துக்காக மதம் மாறினாரா என்பது தெரியவில்லை.அனுமானத்தில் பேசலாமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இளையராசாவின் மகனுக்கே  இந்தநிலை  என்றால்............??? :(  :(  :(  :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில பிரச்சனையே இவர் பிரபலமானவர் என்பதுதான், மதம் மாறுவது சாதாரண மக்கள் வாழ்க்கையில் நடந்தால் யாருமே கண்டுகொள்ள மாட்டார்கள் யுவனைப் போன்ற பிரபலங்கள் மாறும்போது அவரை மட்டும் பாதிப்பதில்லை அவரைச் சார்ந்தவர்களையும் பாதிக்கும். 

Link to comment
Share on other sites

தந்தை பெரிய நாத்திகராக இருந்து ஆத்திகராக மாறியவர். மகன் இந்துவாக இருந்து இஸ்லாமியராக மாறியுள்ளார். இறை தேடல் என்பது அவரவர் மனசு சம்பந்தப்பட்டது. யுவனின் மனசு அவர் நாடிச்செல்லும் இறையை அடைய என் வாழ்த்துக்கள்.

 

பிஸ்மில்லாஹிர் ரஹ்மான்னிர் ரஹீம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாராவது முஸ்லிம் பெண்ணைக் காதலிக்கிறாரோ????

Link to comment
Share on other sites

முன்பு முருக பக்தி படங்களில் நடித்த ஏவிஎம் ராஜன் தற்போது அல்லேலூயா சபைகளில் பிரச்சாரம் செய்கிறார் என்றால் 
நகைச்சுவை நடிகர் செந்திலும் தற்போது சேர்ந்திருக்கிறார்.

சிலரை மனம் மாற்றுகிறது.
சிலரை பணம் மாற்றுகிறது.  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனமும்  இல்ல  பணமும் இல்ல  எல்லாம்  அரை லூசுகள் ,இருக்கிற கடவுள் தராததா  மற்றக் கடவுள் 

தரப்போறார்  <_<

Link to comment
Share on other sites

திருவள்ளுவர் காலத்தில் யாராவது மதம் மாற நினைத்திருந்தால் அவர்களுக்கு பல தெரிவுகள் இருந்திருக்காது. அப்படியானால் மிச்ச கடவுள்மார் எல்லாம் எங்கே போயிருந்தார்கள்.. :unsure: சின்ன சந்தேகம்தான்.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இருக்கலாம். இளையராஜா பல தடவை சாதி பற்றிய கவலைகளை வெளியிட்டுள்ளார். கிறிஸ்தவமும் சாதி பார்க்கின்ற செயலில் இருப்பதால் அவர் இஸ்லாத்தைத் தேர்ந்தெடுத்திருக்கலாம்.

 

 

நீங்கள் மட்டும் என்ன செய்கிறீர்கள் ? வெட்கமில்லாமல் கிறீஸ்த்தவத்தைத் திட்டித் தீர்க்கிறீர்கள். இந்துத்துவ வெறியர்கள் பற்றி நீங்கள் பேசப்போவதில்லை. ஏனென்றால் நீங்கள் ஒரு இந்துமத அடைப்படைவாத வெறியர். உங்களைப்பொறுத்தவரை அவர் இஸ்லாமியராக இருப்பது கிறீஸ்த்தவராக இருப்பதைவிட மேலானது. தூ....இதெல்லாம் ஒரு கொள்கையா??

 

இந்துத்துவ மதவெறி ஓநாய்களால் தலித்துக்கள் என்று தாழ்த்தி அழிக்கப்பட்ட அடிமைப்படுத்தப்பட்ட ஒரு சமூகம்தான் இளையராஜா - யுவன் சார்ந்த சமூகம். இளையராஜா தனது மனவுணர்வை வெளிக்கட்டவில்லை. ஆனால் மகன் வெளிப்படையாகக் காட்டியுள்ளார். 

 

உலகப்புகழ் பெற்ற ஏ. ஆர். ரகுமான் கூட இந்துவாகவிருந்து உங்களைப்போன்ற இந்துமத அடிப்படைவாதிகளால் சாதிக்கொடுமையால் பாதிக்கப்பட்டு சமூகத்தில் ஒதுக்கப்பட்டு வேறுவழியின்றித்தான் இஸ்லாமியராக மாறினார் என்பதாவது தெரியுமா உங்களுக்கு ? 

 

ஒருவன் இந்துமதத்தைவிட்டு வெளியேறுகிறான் என்றால் முதலில் அதற்கு என்ன காரணம் என்று யோசியுங்கள்( வெறுமனே பணத்துக்காகப் போனான், பட்டத்திற்காகப் போனான் என்று சப்பைக் கட்டுக் கட்ட வேண்டாம். யுவனிடமில்லாத பணமா? )பிறகு அவன் எந்த மதத்திற்குள் போகிறான், அது நல்லதா கெட்டதா என்பது பற்றிக் கவலைப்படலாம். 

 

ஈழத்தில் இந்துக்களைப்போன்றே விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுத்து பலியான கிறீஸ்த்தவர்கள் இருக்கிறார்கள். இன்னும் உயிர்ப்புடன் செயற்படுகிறார்கள். எனது குடும்பமும் ஈழவிடுதலைப்போராட்டத்தில் உயிர்த்தியாகம் செய்திருக்கிறது. உங்களைப்போன்றவர்கள் ஓரிருவர் இருந்தாலே போதும், எமதினத்தினை முற்றாக நாசம் செய்யும் அளவிற்கு கொண்டுசெல்லக்கூடியவர்கள். இனச்சுத்திகறிப்பென்று நாங்கள் சிங்களவனைக் குறை சொல்லத் தேவையில்லை. முதலில் முஸ்லீம்களை அழித்தோம், இன்று கிறீஸ்த்தவர்களை முன்னின்று அழிப்போம். அதன்பிறகு இந்துத்துவ ஈழம் கேட்கலாம். நீங்களெல்லாம் ஒரு தமிழர், உங்களுக்கு விடுதலை ஒரு கேடு ??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை,

சினிமா இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா, முஸ்லிம் மதத்துக்கு மாறினார். அவர் இப்போது தினமும் 5 வேளை தொழுகை நடத்துகிறார்.

 

யுவன்சங்கர் ராஜா

பிரபல சினிமா இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு, கார்த்திக் ராஜா, யுவன்சங்கர் ராஜா என்ற 2 மகன்களும், பவதாரிணி என்ற மகளும் இருக்கிறார்கள். மூன்று பேருமே சினிமா படங்களுக்கு இசையமைத்து வருகிறார்கள்.

யுவன்சங்கர் ராஜா, சுஜயா என்ற பெண்ணை முதலில் காதல் திருமணம் செய்தார். கருத்துவேறுபாடு காரணமாக இரண்டுபேரும் பிரிந்துவிட்டார்கள். சுஜயா, யுவன்சங்கர் ராஜாவிடமிருந்து விவாகரத்து பெற்றுக்கொண்டு வெளிநாடு போய்விட்டார்.

 

2–வது திருமணம்

அதன்பிறகு யுவன்சங்கர் ராஜா ஷில்பா என்ற பெண்ணை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இவர்கள் திருமணம் திருப்பதி கோவிலில், பெற்றோர்கள் சம்மதத்துடன் நடைபெற்றது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு யுவன்சங்கர் ராஜாவுக்கும், ஷில்பாவுக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது. இரண்டுபேரும் பிரிந்து வாழ்வதாக கூறப்படுகிறது.

 

முஸ்லிமாக மாறினார்

இந்தநிலையில், யுவன்சங்கர் ராஜா, முஸ்லிம் மதத்துக்கு மாறியிருக்கிறார். அவர் இப்போது தினமும் 5 வேளை தொழுகை நடத்துகிறார். குரான் படிக்கிறார். தாடியும் வளர்த்துவருகிறார். யுவன்சங்கர் ராஜா முஸ்லிம் மதத்துக்கு மாறியதை தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் அவர் நேற்று வெளியிட்டார்.

அதில், ‘‘நான் இஸ்லாம் மதத்துக்கு மாறிவிட்டேன். ஆனால், மூன்றாவது திருமணம் செய்து கொள்ளவில்லை’’ என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

இதற்கிடையில், யுவன்சங்கர் ராஜா, மூன்றாவதாக முஸ்லிம் பெண் ஒருவரை காதல் திருமணம் செய்துகொண்டதாக சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.

 

 

http://www.dailythanthi.com/2014-02-09-Film-composer-Yuvan-Shankar-Raja%252C

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவரில் தான் பிரச்சனை அவரை கட்டியவர்களில் இல்லை ,இதுக்கு ஏனப்பா அல்லாவ இளுக்கிறாய்

Link to comment
Share on other sites

a1506739_210109219183991_510063120_a.jpg


தனது சமயத்தை மாற்றுவதும் பெற்ற தாயை விற்பதுவும் ஒன்றே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தகப்பன் அழுதழுது பாட்டுப்பாடி கோயில் கோபுரம் கட்ட........ இவன் பாவி கலியாணம் கட்ட மதம் மாறுறான்....... :)

என்னைப்பொறுத்தவரைக்கும்  இருக்கிறதை வைச்சு திருப்திப்படாதவனும் தெருநாயும் ஒண்டுதான்..... :D

 

அதுசரி சுண்ணத்துக்கலியாணம் எப்ப நடந்தது? :lol:

Link to comment
Share on other sites

a1506739_210109219183991_510063120_a.jpg

தனது சமயத்தை மாற்றுவதும் பெற்ற தாயை விற்பதுவும் ஒன்றே.

பெற்ற தாய்க்கு மதத்தை ஒப்பிடுவதுதான் தற்போதைய புலித்தேசீயமோ?

எந்த மதத்தில் இருப்பது என்பது அவனவனது தனிப்பட்ட விருப்பம், அதில் மூக்கை நுளைக்கும் உரிமை எவருக்கும் இல்லை.

தாய்நாட்டை விட்டு ஓடிவந்த நிலையே தாயை வித்த நிலை தவிர மதம் மாறுவதில்லை. வாயைத் துறக்க முதல் உங்கள் நிலை என்னவென்று புரிந்துகொள்ளுங்கள்.

தற்போது உங்கள் நிலை ஒன்றும் ஆயுதங்களை கையில் வைத்து அதிகாரம் பண்ணி ஒரே நாளில் முஸ்லீம்களை அகதியாக்கிய சூழலில் இல்லை மாறாக நலமடிக்கப்பட்ட நாம்பன்களில் நிலை. தாயகத்தில் அடிமையும் பரதேசத்தில் இரண்டாம் தரப் பிரசைகளுமாகும். கனவுலகத்தில் அரசனாக வாழ் இல்லையேல் ரவுடியாக வாழ் எப்படிவேண்டமானாலும் வாழ் ஆனால் யதார்த்தத்தில் உனது நிலையை அறிந்து கருத்தைச் முன்வையுங்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.