Jump to content

தனி ஈழம் அமைய இந்தியா உதவ வேண்டும்: தினமணி வாசகரின் கடிதம்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வங்கதேசத்தை உருவாக்கிய கடமை உணர்வோடு தனி ஈழம் அமைய இந்தியா உதவ வேண்டும் என்று தினமணி நாளேட்டில் அதன் வாசகர் எழுதிய கடிதம் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

தினமணி வாசகர் டி.வி.கோவிந்தன் (மேல்மருவத்தூர்) எழுதிய கடிதம்:

இலங்கை ஒன்றாக இருக்க வேண்டும் என்பதற்கான நியாயங்களை எல்லாம் இலங்கை ஆட்சியாளர்கள் அழித்து விட்டார்கள். எனவே தமிழ் ஈழம் உருவாவதற்கான அனைத்து நியாயங்களும் உள்ளன.

ராஜீவ் காந்தியின் மறைவு இலங்கைத் தமிழர்களுக்குப் பெரும் பின்னடைவு. ஆனால் அதையே நினைத்து வருந்திக் கொண்டிருப்பதால் இன்று இலங்கைத் தமிழர்களுடைய மனித உரிமைகள் நசுக்கப்படுவதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

44 ஆண்டுகளுக்கு முன், நண்பனாக இருந்த சீனா, இந்தியாவின் சில பகுதிகளைப் பிடித்துக் கொண்டது. யுத்தமும் நடந்தது. சில காலம் வரை வைராக்கியமாக இருந்தோம். தற்போது இழந்த பகுதிகளை மீட்காவிட்டாலும், பகைமையை மறந்து உறவாடுகிறோம். இது நல்லதே. உலக இயல்பே.

இது போலவே ராஜீவ் காந்தியின் மரணத்தையும் மறந்து தனித் தமிழ் ஈழம் அமைய உதவுவது, மனித உரிமை காக்கும் செயலாகும். உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடாக இந்தியா இருப்பதாலும், ஐ.நா.வின் மனித உரிமை ஆணையத்தின் மதிப்புமிக்க உறுப்பினராகத் திகழ்வதாலும், மனித உரிமையைக் காப்பதில் நமக்குப் பெரும் பொறுப்பு உள்ளது.

அந்த வகையில் இலங்கைத் தமிழர்களின் மனித உரிமைகளைப் பாதுகாக்க - தமிழ் ஈழம் அமைய உதவுவது நம் கடமை.

நமக்கெதற்குச் சுமை, நாம் ஏன் உதவ வேண்டும் என்ற எண்ணம் பாகிஸ்தானைப் பிரித்து வங்கதேசத்தை உருவாக்கியபோது இருக்கவில்லை. அப்போது இருந்த அதே கடமை உணர்வு இப்போதும் வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.eelampage.com/?cn=28553

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காற்று காண்பதற்கு இல்லை!

வீரம் அடிமைப்படுத்துவதற்கு இல்லை!!!

Link to comment
Share on other sites

பித்தன் தயவு செய்து போடப்பட்ட செய்திகளை இங்கே போடாதீர்கல்

இப்படிப்பட்ட செய்திகளை போட்டு மதி வம்பு போன்றவர்களை ரென்சனாக்கவேண்டாம். :twisted: :twisted: :twisted:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.