Jump to content

திருமலை மூதூர் கிழக்குப் பகுதிகளில் கடும்சமர்


Recommended Posts

மூதூர் கிழக்கை கைப்பற்ற சிறிலங்கா இராணுவம் முயற்சி: புலிகள் பதில் தாக்குதல்

[திங்கட்கிழமை, 28 ஓகஸ்ட் 2006, 15:03 ஈழம்] [ம.சேரமான்]

திருகோணமலை மூதூர் கிழக்குப் பகுதியைக் கைப்பற்றும் நோக்கில் சிறிலங்கா இராணுவத்தினர் மும்முனையில் பாரிய அளவிலான இராணுவ நடவடிக்கை ஒன்றைத் தொடங்கியுள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதிகளை நோக்கி பல்குழல் மற்றும் ஆட்லறி எறிகணைத் தாக்குதல்களுடன் இன்று அதிகாலை 4.30மணிக்கு நகர்வு முயற்சியினை சிறிலங்கா இராணுவத்தினர் தொடங்கினர்.

இந் நடவடிக்கைக்கு ஆதரவாக சிறிலங்கா கடற்படையினரும் தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாகவும் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.எழிலன் எமக்குத் தெரிவித்தார்.

சிறிலங்கா இராணுவத்தின் இம் முன்னகர்வுத் தாக்குதல் நடவடிக்கைக்கு எதிரான பதில் தாக்குதலை தமிழீழ விடுதலைப்புலிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இத் தாக்குதல்களில் தமது தரப்பில் இரண்டு பேர் கொல்லப்பட்டும், 40க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தும் உள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ள போதிலும் சிறிலங்கா இராணுவத்தினருக்கு பெருமளவிலான இழப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக எழிலன் மேலும் தெரிவித்தார்.

மூதூர் 64ஆம் கட்டை, கட்டைபறிச்சான், செல்வநகர்ப் பகுதிகளில் பெருமளவு சிறிலங்கா இராணுவத்தினரும் இராணுவத் தளபாடங்களும் குவிக்கப்பட்டுவருவதாகவும், நோயாளர் காவு வண்டிகள் அப்பகுதிகளுக்குச் சென்று திருகோணமலை நகர்ப்பகுதிக்கு திரும்புவதாகவும் திருமலை நகர மக்கள் தெரிவிக்கின்றனர்.

http://www.eelampage.com/?cn=28482

Link to comment
Share on other sites

(2 ஆம் இணைப்பு) மூதூர் கிழக்கை கைப்பற்ற இராணுவம் தாக்குதல்: 20 பொதுமக்கள் பலி- புலிகள் பதிலடி

[திங்கட்கிழமை, 28 ஓகஸ்ட் 2006, 15:03 ஈழம்] [ம.சேரமான்]

திருகோணமலை மூதூர் கிழக்குப் பகுதியைக் கைப்பற்றுவதற்காக சிறிலங்கா இராணுவத்தினர் முப்படைகளுடன் மும்முனையில் பாரிய அளவிலான இராணுவ நடவடிக்கையைத் தொடங்கியுள்ளனர். இந்நடவடிக்கையில் 20 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டு 26 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதிகளை நோக்கி பல்குழல் மற்றும் ஆட்லறி எறிகணைத் தாக்குதல்களுடன் இன்று அதிகாலை 4.30 மணிக்கு நகர்வு முயற்சியினை சிறிலங்கா இராணுவத்தினர் தொடங்கினர்.

இந்நடவடிக்கைக்கு ஆதரவாக இலக்கந்தையிலிருந்து சிறிலங்கா கடற்படையினரும் தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாகவும் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.எழிலன் எமக்குத் தெரிவித்தார்.

இத்தாக்குதல்களில் தமது தரப்பில் இரண்டு பேர் கொல்லப்பட்டும், 40-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தும் உள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ள போதிலும் சிறிலங்கா இராணுவத்தினருக்கு பெருமளவிலான இழப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக சி.எழிலன் மேலும் தெரிவித்தார்.

பச்சனூர், பள்ளிமுனை சிறிலங்கா இராணுவ முகாம்களைச் சேர்ந்தவர்கள் தோப்பூர் மற்றும் கிளத்திமுனையூடாக முன்னேற முயற்சித்தனர் என்றும் சி.எழிலன் கூறினார்.

"கடந்த 12 மணிநேரத்துக்கும் மேலாக தமிழீழ விடுதலைப் புலிகள் தற்காப்புத் தாக்குதலை நடத்தி வருவதாக" தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா விமானப் படையின் கிபீர் விமானங்களும் வான்குண்டுத் தாக்குதலை நடத்தின. இதில் பொதுமக்கள் 20 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 26 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

மூதூர் 64 ஆம் கட்டை, கட்டைப்பறிச்சான், செல்வநகர்ப் பகுதிகளில் பெருமளவு சிறிலங்கா இராணுவத்தினரும் இராணுவத் தளபாடங்களும் குவிக்கப்பட்டுவருவதாகவும், நோயாளர் காவு வாகனங்கள் அப்பகுதிகளுக்குச் சென்று திருகோணமலை நகர்ப்பகுதிக்கு திரும்புவதாகவும் திருமலை நகர மக்கள் தெரிவிக்கின்றனர்

http://www.eelampage.com/?cn=28482

Link to comment
Share on other sites

திருமலையில் படையினரின் மும்முனை வலிந்த தாக்குதல்கள் முறியடிப்பு.

திருமலை மூதூர் கிழக்குப் பகுதிகளை நோக்கி சிறீலங்காப் படையினர் மூன்று முனைகளில் பாரிய வலிந்த தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.

இன்று அதிகாலை 4.30 மணியளவில் பல்குழல் உந்துகணைத் தாக்குதல் மற்றும் ஆட்லறி எறிகணைத் தாக்குதல்கள் சகிதம் பாரிய முன்னேற்றத்தை சிறீலங்காப் படையினர் மேற்கொண்டுள்ளனர்.

செல்வநகரில் இருந்து முன்னேற முற்பட்ட சிறீலங்காப் படையினரை முன்னரங்க எல்லைக் கோட்டில் வைத்து விடுதலைப் புலிகள் பாரிய முறியடிப்புத் தாக்குதலை மேற்கொண்டு படையினரை பழைய நிலைக்கு விரட்டியடித்துள்ளனர்.

இதேவேளை கொட்டியாரக் குடா நோக்கி சிறீலங்காப் படையினரின் வலிந்த தாக்குதலை விடுதலைப் புலிகள் எதிர்நோக்கி முறியடிப்பு தாக்குதல்களை நடத்திவருகின்றனர்.

இன்றைய தாக்குதலில் 11 படையினர் கொல்லப்பட்டு 63 படையினர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். எனினும் இதனை மறைக்கும் பயையினர் இன்றைய தாக்குதலில் 2 படையினர் கொல்லப்பட்டதோடு 41 படையினர் காயங்களுக்கு உள்ளாகியதாக அறிவித்துள்ளது.

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பீரங்கிப் படையணிகள் எறிகணைச் சூட்டாதரவை வழங்கியிருந்தன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நண்பரே!

செய்திகளை இணைக்கின்ற போது அவை எத்தளத்தில் இருந்து எடுக்கப்பட்டன என்றோ, அல்லது அந்த இணைப்பையோ தருவது தான் யாழ்கள விதிகளில் ஒன்று!

Link to comment
Share on other sites

இருநாள் முறியப்புத் தாக்குதலில் 65 படையினர் பலி! 10 போராளிகள் வீரச்சாவு.

திருமலை மூதூர் கிழக்குப் பகுதிகளில் விடுதலைப் புலிகளுக்கும் அரச படையினருக்கும் இடையில் பலத்த மோதல்கள் இன்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

விடுதலைப் புலிகளின் முன்னரங்க நிலைகளில் வைத்து சிறீலங்காப் படையினர் மீதான முறியடிப்புத் தாக்குதல்களை போராளிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

நேற்று ஆரம்பித்த படையினரின் வலிந்த தாக்குதல்கள் இன்றும் இரண்டாவது நாளாகத் தொடரும் நிலையில் சிறீலங்காத் தரப்பில் 65 படையினர் கொல்லப்பட்டதோடு மேலும் 200க்கும் மேற்பட்ட படையினர் காயங்களுக்கு உள்ளாகி களத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர

Link to comment
Share on other sites

திருமலை மூதூர் கிழக்குப் பகுதிகளில் விடுதலைப் புலிகளுக்கும் அரச படையினருக்கும் இடையில் பலத்த மோதல்கள் இன்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

விடுதலைப் புலிகளின் முன்னரங்க நிலைகளில் வைத்து சிறீலங்காப் படையினர் மீதான முறியடிப்புத் தாக்குதல்களை போராளிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Link to comment
Share on other sites

புலிகளின் பதில் தாக்குதலால் இராணுவ நகர்வை இடைநிறுத்தியது சிறிலங்கா இராணுவம்

திருகோணமலை மூதூரில் சிறிலங்கா இராணுவத்தினர் இன்று இரண்டாவது நாளாக தமது வலிந்த தாக்குதலை தொடர்ந்த போதும் விடுதலைப் புலிகள் நடத்திய தீவிர எதிர்த்தாக்குதலையடுத்து நகர்வு நடவடிக்கையை இடைநிறுத்தினர்.

கடற்படை படகுகள் பீரங்கித் தாக்குதலை இன்று செவ்வாய்க்கிழமை காலை நடத்த இராணுவத்தினர் செறிவான எறிகணைத் தாக்குதலை நடத்தியவாறு தமது வலிந்த தாக்குதலை தொடங்கினர்.

இதற்கு எதிராக விடுதலைப் புலிகள் தீவிர தாக்குதலை நடத்தினர். இதனையடுத்து இன்று காலையிலேயே இராணுவத்தினர் தமது நகர்வு முயற்சியை இடைநிறுத்தி விட்டனர்.

களநிலைமைகள் குறித்து விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இளந்திரையன் கூறியுள்ளதாவது:

திருகோணமலை மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள சம்பூர் பகுதிகளை நோக்கி இன்றும் சிறிலங்கா இராணுவத்தினர் வலிந்த தாக்குதல் நடவடிக்கையை மேற்கொண்டனர்.

சிறிலங்கா இராணுவ நடவடிக்கையைத் தொடருமேயானால் 2002 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் ஏற்பட்ட யுத்த நிறுத்த ஒப்பந்தத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியதிருக்கும்.

திருகோணமலை மாவட்டத்தில் கடந்த 36 நேர மணி நேரச் சமரில் 18 போராளிகள் வீரச்சாவைத் தழுவியுள்ளனர். 28 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

வவுனியா முன்னரங்க காவல்நிலைகளில் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டிருந்த 7 போராளிகள், இரணை இலுப்பைக்குளம் மற்றும் நொச்சிக்குளம் இடையே காணாமல் போயுள்ளனர் என்றார் இளந்திரையன்.

திருகோணமலை சமரில் 50 இராணுவத்தினர் கொல்லப்பட்டும் 108 படையினர் படுகாயமடைந்தும் உள்ளதாக திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி. எழிலன் தெரிவித்திருந்தார்.

http://www.eelampage.com/?cn=28520

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாப்பம் செப்ரம்பர் வாறதுக்கு இன்னும் கொஞ்ச நாள் தானே இருக்கு.

Link to comment
Share on other sites

புதினம் சொல்லுது இடை நிறுத்திட்டினம் என்று..!

தமிழ்நெற் சொல்லுது அதே செய்தி மூலத்தை முன் வைத்து தாக்குதல் தொடர்வதாக..எதைத்தான் நம்புறது...மக்கள்..????! :roll: :?:

SLA offensive continues on Sampoor - LTTE

[TamilNet, August 29, 2006 11:22 GMT]

Liberation Tigers Military Spokesman Irasaiah Ilanthirayan Tuesday evening said Sri Lanka Army (SLA) was continuing it's offensive towards Liberation Tigers of Tamil Eelam (LTTE) controlled Sampoor in Trincomalee district. SLA has intensified artillery and mortar attacks as the two-pronged offensive movement of SLA troops was contained by the Tigers, he said. "If the Sri Lankan military aggression continued, it would set a full stop to the February 2002 Ceasefire Agreement," LTTE's military spokesman has commented.

18 LTTE fighters were killed in action so far in Trincomalee district during the last 36 hours and 28 wounded in Trincomalee district, according to LTTE military spokesman.

Link to comment
Share on other sites

புதினம் சொல்லுது இடை நிறுத்திட்டினம் என்று..!

தமிழ்நெற் சொல்லுது அதே செய்தி மூலத்தை முன் வைத்து தாக்குதல் தொடர்வதாக..எதைத்தான் நம்புறது...மக்கள்..????!

ஆமி சொல்லுது 90 புலிகளை திருமலையிலும் 16 பேரை வவுனியாவிலும் கொன்று சடலங்களையும் ஆயுதங்களையும் மீட்டது என்று. தாக்குதல் தோல்விகளால் ஆத்திரமடைந்த புலிகள் ஐசிஆர்சி கொடியோட போற லொறிகளை ஆட்லறியால தாக்கி வன்னிக்கு உணவு அனுப்புறததைத் தடுக்கினமாம்..!

தமிழ்நெற்..நடுநிலையோட ஆமி சொல்லுறதையும் இப்ப சொல்லுது..பாராட்ட வேண்டிய விடயம்..நல்ல மாற்றமும் கூட..! :idea:

SLA offensive continues on Sampoor - LTTE

[TamilNet, August 29, 2006 11:22 GMT]

Liberation Tigers Military Spokesman Irasaiah Ilanthirayan Tuesday evening said Sri Lanka Army (SLA) was continuing it's offensive towards Liberation Tigers of Tamil Eelam (LTTE) controlled Sampoor in Trincomalee district. SLA has intensified artillery and mortar attacks as the two-pronged offensive movement of SLA troops was contained by the Tigers, he said. "If the Sri Lankan military aggression continued, it would set a full stop to the February 2002 Ceasefire Agreement," LTTE's military spokesman has commented.

18 LTTE fighters were killed in action so far in Trincomalee district during the last 36 hours and 28 wounded in Trincomalee district, according to LTTE military spokesman.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=19414

Link to comment
Share on other sites

அதே செய்தி பதிவில் இப்படி...

வவுனியாவில் 16 பயணிகள் சிறீலங்காப் படையினரால் சுட்டுப் படுகொலை.

வவுனியா பூவரசம்குளத்தில் சிறீலங்காப் படையினரின் கொலை வெறித் தாக்குதலுக்கு 16 பயணிகள் பலியாகியுள்ளனர்.

இன்று காலை 6.15 இப்படுகொலைச் சம்பவம் நடந்தேறியுள்ளது. கொல்லப்பட்டவர்கள் அனைவரும் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் என படைத்துறைச் செயலகம் தெரிவித்துள்ளது. எனினும் இதனை எம்மால் உறுதி செய்யமுடியவில்லை.

pathivu.com

pro - SL army site says...

Over 16 tigers attempting to overrun Omanthe check point killed

[29th August 2006 - 14:40 S.L.T]

Troopers manning Omanthe check point had retaliated fiercely an attack carried out by tiger terrorists to overrun the check point.

The tigers had launched the attack at about 6.15 a.m. today(29) and in a search operation conducted later 16 bodies of terrorists with their weapons were found strewn around the place. Security forces believe that more terrorists would have died and many more wounded.

Tiger terrorists have launched a mortar and artillery fire at the vehicles which were transporting food items to the un-cleared areas. The food was to be taken to people in Wanni on instruction by Commissioner of Essential Services in lorries under the Red Cross flag. When the terrorist attack was launched members of Red Cross too had been in the lorries.

The members of Red Cross had decided to turn back as it had been impossible to proceed further amidst terrorist attacks. Brig. Prasad Samarasinghe, Army spokesman said tigers are acting in a ruthless manner to deny the essential food items to the people in Wanni as they are getting beaten in every front.

Link to comment
Share on other sites

வவுனியா முன்னரங்க காவல்நிலைகளில் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டிருந்த 7 போராளிகள்இ இரணை இலுப்பைக்குளம் மற்றும் நொச்சிக்குளம் இடையே காணாமல் போயுள்ளனர் என்றார் இளந்திரையன்.

PUTHINAM

Link to comment
Share on other sites

மூதூர் கிழக்குப் பிரதேசத்தில் இலங்கை அரச படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான தீவிர சண்டை இன்று நான்காவது நாளாகவும்

இலங்கையின் கிழக்கே திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் கிழக்குப் பிரதேசத்தில் இலங்கை அரச படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான தீவிர சண்டை இன்று நான்காவது நாளாகவும் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக அங்கிருந்துவரும் செய்திகள் கூறுகின்றன.

இந்த சண்டை தொடர்ந்து இடம்பெற்று வருகின்ற அதே வேளை திருகோணமலை கடற்படைத் தள பகுதியிலிருந்து எறிகணைகள் மற்றும் பல்குழல் பீரங்கிகளினாலும் ஏக காலத்தில் தாக்குதல் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த மோதல்களில் இரு தரப்பிலும் பலர் கொல்லப்பட்டுள்ளார்கள்.

தொடரும் சண்டையினால் தோப்பூர் செல்வநகர் பிரதேச மக்கள் அங்கிருந்து இடம்பெயர்ந்து கிண்ணியா மற்றும் கந்தளாய் பிரதேசங்களுக்குச் சென்றுகொண்டிருக்கிறார்கள்.

இடம்பெயர்ந்தவர்களில் பல குழந்தைகளும் பெண்களும் அடங்குகிறார்கள்.

Link to comment
Share on other sites

திருகோணமலையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசபடைகளுக்குமிடையில் உக்கிர சமர்.

திருகோணமலையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசபடைகளுக்குமிடையில் தொடர்ந்து மோதல் இடம் பெற்று வருவதாக அங்கிருந்து கிடைக்கின்ற செய்திகள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக தோப்பூர் பள்ளிக்குடியிருப்பு சின்னக்குளம் ஆகிய பகுதிகளில் கடுஞ்சமர் இடம் பெற்று வருவதாகவும் இன்று மதியம் பரஸ்பர எறிகணை வீச்சுக்களுடன் பாரிய வெடிச்சத்தங்களும் கேட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதே வேளை சிறிலங்கா விமானப் படையினர் தற்பொழுது தாக்குதலுக்கு பயன்படுத்தும் ஒரு வகை இரசாயன வெடிகுண்டுகள் பாரியசேதங்களை விளைவிப்பதாக குண்டுவீச்சுகளுக்கு இலக்கான பிரதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக தற்போது திருகோணமலையில் இந்தக் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்படுவதாகவும் இதனால் மக்களின் உடைமைகளுக்கு பாரியசேதங்கள் ஏற்படுவதாகவும் தெரியவருகின்றது.

நேற்றிரவு மல்லிகைத்தீவுப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் காரணமாக தமிழ் விவசாயி ஒருவருக்கு சொந்நதமான சுமார் 15 ஏக்கர் நெல்வயல் அழிக்கப்பட்டுள்ளது. மணற்சேனைப் பகுதியைச் சேர்ந்த செல்வரத்தினம் என்பவரது நெல்வயலே இவ்வாறு முற்றாக அழிந்ததாக தெரிவிக்கப்படுகிறது இதனால் குறிப்பிட்ட விவசாயிக்கு சுமார் 3 லட்சம் ரூபா வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

http://www.tamilwin.net/index.php?subactio...t_from=&ucat=1&

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.