Jump to content

ஊரும் உலகும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

புங்குடுதீவை அழகாய் உணர்வுபூர்வமாய் எழுதியுள்ளீர்கள்  விசுகு , வாழ்த்துக்கள்...! :)

 

 

நன்றியண்ணா

 

புங்குடுதீவின் வளர்ச்சிப்பணியில் பலமாக ஈடுபட்டுள்ளோம்

விரைவில் அதனை  யாழில் இணைப்பேன்

அதுவும் ஒரு வரலாறாக  பதியப்படும்...

உண்மையைச் சொல்லப்போனால் எனக்கு முந்தி புங்குடுதீவு மக்களைப் பிடிப்பதில்லை. முன்னர் இஸ்லாமியருக்கு நிகராக அவர்களை நினைப்பதுண்டு. கொழும்பு வாழ்க்கை என் எண்ணத்தினை அடியோடு மாற்றிவிட்டிருந்தது. பல அரிய தகவல்களை விசுகு அண்ணா சுவைபடத் தந்திருக்கின்றார். இதனைவிட சிறப்பாக எவராலும் எழுதமுடியாது. :)

 

 

நன்றி  தம்பி  வரவுக்கும் கள்ளம் கபடமற்ற  தங்கள் வரிகளுக்கும்....

தெரியாத பல விடயங்கள் அறியமுடிந்தது....நன்றாக எழுதியுள்ளீர்கள் விசுகு அண்ணா. மேலும் உங்கள் ஊர் பற்றி அறிய ஆவலுடன் காத்திருக்கின்றோம்.

 

 

நன்றி  சகோதரி

இன்னும் தொடரும்......

 

எம்மூரைப்பற்றி  எழுதுவது என்றால் எழுதிக்கொண்டேயிருக்கலாம்.....

வீடுகளுக்கு இரு பக்கமும் ஐன்னல் இருப்பது சிறந்தது

எமது ஊருக்கு இரு பக்கமும் ஐன்னல் போல

ஒரு பக்கத்தால் வரும் காற்று  மறு பக்கத்தால் வருடிச்சென்று விடும்

வாடைக்காற்று சோழக்காற்று என்று பக்கம் மாறி  மாறி  வருடி  எந்த நோயும் 

எந்த அசுத்தமும் தங்காது பார்த்துக்கொள்ளும்

கொடுத்து வைத்திருக்கணும் இந்த இயற்கைக்குள் வாழ.....

புங்குடு தீவு பற்றி நன்றாக தந்துளீர்கள் விசுகு. நன்றி

 

நன்றி  சகோதரா

நீங்கள் ஒரு எழுத்தாளன் என்று நினைக்கின்றேன்

எனது குறி  சரியாயின் எனது ஊருடன் உங்களுக்கு  தொடர்புண்டு

நன்றி விசுக்கு, அரை நூற்றான்டுக்கு முன்புவரைக்கும் என்

மூதாதையரின் தீவான நெடுந்தீவுக்கும் புங்குடுதீவுக்குமிடையில் பரவலான திருமணத்தொடர்பிருந்தது. உங்கள் மூதாதையரைரை விசாரித்துப் பாருங்க. உங்க குடும்பத்திலும் நெடுந்தீவு தொடர்பு இருக்கும். தமிழகத்தில் மகாஜான பெள்த்தம் அழிந்தபோது (சிங்கலவர் தேரவாத பெள்த்தம்) அதுசார்ந்த கண்ணகி வழிபாட்டுடன் எங்க தீவுகளில் அது பலமாக இருந்தது.

 

 

நன்றி  தோழர்

நெருங்கிவிட்டோம் போலுள்ளது

 

எப்பொழுதுமே மண்ணைத்துலைத்தவனுக்கே அதன் அருமை  தெரியும்

அந்தவகையில் முதன்மையானோர் நாம்..

முதன் முதலில் இடம் பெயர்ந்தவர்கள் நாமே....

Link to comment
Share on other sites

  • Replies 103
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
....பயணித்த இடங்கள் பற்றிய தகவல்கள், அங்கு நடைபெற்ற சுவாரசியமான அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளலாம்

 

 

ஊர் அனுபவம் என்பது எனக்கு பெரிதாக இல்லை. எனவே அதுபற்றி என்னைவிட அங்கே அதிக காலம் வாழ்ந்தவர்கள் எழுதுவது தான் நன்றாக இருக்கும். 

 

சென்ற வாரம் நான் பாரிஸ் நகரத்திற்கு சென்றிருந்தேன். அது பற்றி எழுத வேண்டும் என நினைத்துக்கொண்டிருக்கையில் இந்த திரி கண்ணில் பட்டது. 

 

பாரிஸ் வாழ் யாழ்கள உறவுகளை புண்படுத்தவல்ல  :wub: 

 

27.07.2014 ஞாயிறு அன்று பரிசில் (Sarcelles என்ற இடம்) விக்டர் வெற்றிக்கிண்ண உதைபந்தாட்ட போட்டி நடைபெற்றது. போவதா இல்லையா என்ற பல நாட்கள் இழுபறிக்கு பின்னர் போட்டிக்கு இரண்டு நாட்கள் முன்னர் போவதாக முடிவெடுக்கப்பட்டது. 

 

விளையாட்டை விட பாரிஸ் போன்ற தமிழர்கள் அதிகமாக வாழும் பெருநகரங்களில் நடைபெறும் போட்டியென்பதால் அதன் பிரமாண்டத்தை எண்ணியே மகிழ்ச்சியடைந்தேன். இங்கே சுவிசில் தமிழீழ கிண்ணம் நடைபெறும். இதனைவிட 5மடங்கு பெரிதாக இருக்கும் என்பதே எனது கற்பனை. 

 

சனிக்கிழமை மதியம் 2 மணிக்கு வெளிக்கிடுவதாக சொல்லப்பட்டது. சொன்ன நேரத்திற்கு வெளிக்கிட்டு தமிழ் கலாச்சாரத்தை கேவலப்படுத்த விரும்பாததால் நாம் சரியாக 3.30ற்கு புறப்பட்டோம். 

 

விளையாட்டு வீரர்கள் தவிர்ந்து இன்னும் ஒரு 10 "குடி" மக்களும் வந்திருந்தனர். 

 

எப்படியும் இரவு 8-9 மணிக்கு லா சப்பல் சென்றுவிடுவோம். அப்படியே அங்கே தமிழ் கடைகளில் மூக்கு பிடிக்க சாப்பிடலாம் என்ற எண்ணத்தில் மதியம் தண்ணியும் குளிர்பாணமும் மட்டுமே உணவாக அருந்தினோம் (என்னை போல் பலர்) :lol:

 

வரும் வழியில் நண்பன் ஒருவன் சொன்னான்:

"பரிசில நடக்கிற விளையாட்டுபோட்டியளில கூழ் காச்சுவாங்கள் சும்மா அந்த மாதிரி இருக்கும்" என்று ஆசையை மேலும் தூண்டி விட்டான். 

 

எங்களுடன் பயணித்த சில "குடி"மக்களின்  உள்சண்டை வெளிச்சண்டை என்று போகும் வழியில் பஞ்சாயத்தாகிவிட்டது. ஒரு மாதிரி பஞ்சாயத்தை முடித்து லா சப்பல் வந்து சேர இரவு 12மணியை தாண்டிவிட்டது. 

 

விடுதிக்குள்ள போய் குளிச்சிட்டு லா சப்பல் ஓடலாம் என்று வெளியில வந்தால் எங்களுக்கு மொழிபெயர்க்க வந்த அண்ணை ஒரு கல்லை தூக்கி போட்டார் இந்த நேரத்தில லா சப்பல்லே கடையள் மூடி இருக்கும் என்று. காலையில் கடைகள் திறக்க முன்னர் நாங்கள் வெளியேறிவிடுவோம். அதன் பின்னர் திரும்பி லா சப்பல் வரமுடியாது.  மதியத்தில் இருந்து எவ்வளவு குறைவாக சாப்பிட முடியுமோ அவ்வளவு குறைவாக சாப்பிட்டதால் பசி தாங்க முடியவில்லை. 

 

"சரி வாங்கோடா McDonalds போவம்" என்றான் ஒருத்தன். அங்க இருந்து McDonalds சாப்பிடவே இங்க வந்தனி என்று அவனுக்கு பேசிவிட்டு ஆளை ஆள் பார்த்துக்கொண்டிருந்தோம். 

 

மொழிபெயர்ப்பாளரா வந்திருந்த அண்ணைக்கிட்ட மறுபடியும் ஒரு நப்பாசையில் லா சப்பலில் எதாவது கடைகள் திறந்திருக்காதா என்று மீண்டும் கேட்க அவரும் எங்களின் நச்சரிப்பு தாங்காமல் சரி வாங்கோ போய் பார்ப்பம் என்று எங்களை ஒரு 15நிமிடம் கால்நடையாகவே கூட்டிச்சென்றார். 

 

போகும் வழியில் பல "மூத்திரச்சந்துகளை" தாண்டி போகவேண்டியிருந்தது. தெருவோரங்களில் பூட்டி வைக்ப்பட்டிருந்த சைக்கிள்களில் அரைவாசி சைக்கிளை மட்டும் திருடிசென்று மிகுதியை கண்காட்சிக்கு வைத்துவிட்டு சென்ற திருடர்களின் "கலை" ரசனை அழகு :D

 

காரை வெளியில் எடுக்கவே முடியாத போல் நெருக்கி பார்க்கிங் செய்த வித்தை எப்படியென்று தான் கண்டுபிடிக்கமுடியவிலலை. இடம் போதாவிட்டால் முன்னிற்கு நிற்கும் காரை சற்று பின்னால் இடித்து தங்களிற்கு தேவையான இடத்தை அவர்கள் தட்டிப்பறித்தது இன்னொரு அழகு :D

 

இது ஆபிரிக்காவா இல்லை பரிசா என்று வியக்க வைக்கும் ஆபிரிக்கர்களின் ஆடை முறைகள். 

 

இப்படி போகும் வழியெல்லாம் கண்ணை பறிக்கும் அழகுகள் :wub:

 

ஒரு மாதிரி லா சப்பல் வந்து சேர்ந்தாச்சு. நிமிர்ந்து பார்த்தா "தர்சனா உணவகம்" என்று எழுதியிருந்தது. இப்பிடி குறூப்பா சுத்திறது ஆபத்து என்று மனசு சொல்லிச்சுது. அந்த அண்ணை சொன்ன மாதிரி ஒரு கடையும் திறந்திருக்கேலை. தூரத்தில ஒரு McDonalds வெளிச்சம். சரி பசிக்கொடுமை என்ன செய்ய முடியும் என்று அங்கேயே சாப்பிடலாம் என்று முடிவெடுத்தோம். 

 

உருழைக்கிழங்கு பொரியலில் (Pommes) உப்பை காணேலை. எனக்கு மட்டும் தான் அப்படியோ என்று மற்றவங்களின்ரைய எடுத்து சாப்பிட்டா அதுக்கும் இல்லை. சரி பசிக்கு உப்பாவது சப்பாவது இந்த நிலமையில என்னத்தை சாப்பிட்டாலும் ருசியா தான் இருக்கும்.  

 

ஒரு மாதிரி லா சப்பல்ல சாப்பிட்டாச்சு என்று மன திருப்பதியுடன் படுக்கைக்கு சென்றோம். நாங்கள் தங்கியிருந்த விடுதியில் தான் மலேசியா அணியும் தங்கியிருந்தது. அவர்களின் அறைகளிற்கு முன் அவர்கள் சாப்பிட்டு மிச்சம் வைத்த கறிகள் வைத்திருந்தார்கள். அந்த வாசனைகளை கடந்தே போக வேண்டியிருந்தது. எப்படியெல்லாம் சோதனை வருகின்றது மக்கழே :)

இன்டைக்கு நடந்த ஏமாற்றத்துக்கு நாளைக்கு விளையாட்டு போட்டியில டபுள் மடங்கா சாப்பிடுறமடா என்று சத்தியபிரமாணத்துடன் தூங்க போனோம். 

 

காலையில் எழும்பி 5 Euro கட்டினால் எங்களின விடுதியில் எவ்வளவு வேண்டுமென்றாலும் காலை உணவு சாப்பிடலாம். இங்க சாப்பிட்டா விளையாட்டுபோட்டியில சாப்பிட முடியாது. பசியோட போனதான் அங்க வடிவா சாப்பிடலாம். மறுபடியும் விதி விளையாடப்போகுது என்பதை நாங்கள் அறிந்திருக்கவில்லையே :rolleyes:

 

8.30 மணிக்கு மைதானத்துக்கு முன்னால நிக்கிறம். மைதானத்தின் அளவை வைத்தே எங்களின் எதிர்பார்ப்பும் அதிகமாகியது. மைதானத்திற்கு உள்ள போனால் நாங்களும் மலேசியா அணியும் மற்றும் போட்டி ஒழுங்கமைப்பாளர்களும் மட்டுமே நின்றிருந்தோம். சரி விடுடா கொஞ்ச நேரத்தில சனம் அலைமோதும் என்று மனதை ஆறுதல் படுத்தினனேன். சரி வந்த வேலையை கவனிப்போம் என்று உணவகத்திற்கு சென்றால் அங்கே றோல் மற்றும் சமோசா இரண்டு வகைகள் மட்டுமே இருந்தது. சரி என்று மூன்று அயிட்டங்களை வாங்கிக்கொண்டு என்னிடம் இருந்த 20 Euro வை தூக்கிக்கொடுத்தேன். மிகுதி 7 Euro தந்தார்கள். என்னடா இது பயங்கர விலையா இருக்கே என்று நடையை கட்டினேன். 

 

பார்வையாளர்களின் இருக்கயைில் அமர்ந்திருந்த மற்றவர்களிடம் இங்க எல்லாம் பயங்கர விலையா இருக்கே நான் இதை எதிர்பார்க்கவில்லையென்றேன். டேய் லூசா எனக்கு ஒரு Euro தாண்டா எடுத்தவை என்று நக்கலடிக்க மீண்டும் சாப்பாட்டு கடைக்கு போய் காசு மாறி தந்துவிட்டீர்கள் என்றேன். அந்த பெண்மணியும் ஆம் 10 Euro தர மறந்துவிட்டேன் என்று கணக்கை சரி செய்தார். மீண்டும் நண்பர்களிடத்தில் போய் "டேய் இங்க எல்லாம் பயங்கர மலிவடா" என்றேன்.  :D

 

இரண்டு போட்டிகள் முடிந்து அடுத்த சுற்றுக்கு தெரிவாகிவிட்டோம். 

 

சாப்பாட்டு கடைகளை சுற்றி எனது அணி மட்டுமே காணப்பட்டது. கொத்துரொட்டி வாங்கி சாப்பிட்டுப் பார்துவிட்டு மர நிழலில் போய் இருந்தோம். அங்கு வந்த ஒரு உள்ளூர் தமிழிரிடம் எதற்கான மிகவும் குறைந்த அளவு மக்கள் வந்திருக்கிறார்கள் என கேட்டோம். அதற்கு அவர் அங்கே சுற்றுப்போட்டிகளில் பார்வையாளர்கள் மத்தியில் நடைபெறுகின்ற அடிபாடுகளினாலே மக்கள் வருவதை குறைத்துவிட்டார்கள் என்றார். 

 

அவர் சொன்னது போலவே பின்னர் ஒரு போட்டியில் விளையாடிய இரு கழகங்களும் சிரித்து சந்தோசமாக வந்துகொண்டிருக்கையில் பார்வையாளர்களாக வந்திருந்தவர்களிற்கிடையில் கைகலப்பு பற்றிக்கொண்டது. பின்னர் ஒரே பதட்ட நிலை தான் :D

 

இந்த ரணகளத்திற்கு மத்தியிலும் நாங்கள் எங்களின் வேலையை தொடர்ந்தோம். வடை சுட்டு விற்றுக்கொண்டிருந்தார்கள். சரி என்று ஒன்றை வாங்கி சாப்பிட்டால் உள்ளிற்கு வடை வேகவேயில்லை. 

 

விளையாட்டு வீரர்களை தவிர பார்வையாளர்கள் என்று அங்கு யாரையும் இறுதிவரை பெரிதாக காணவில்லை. நாங்கள் உள்ளூரில் நடாத்தும் சுற்றுப்போட்டிகளே இதனைவிட பெரியதாக இருக்குமே என்று மனதிற்குள் முணுகிக்கொண்டு வெளியேறினோம். 

 

நாங்கள் வெளியேறும் தருணம் மழை பெய்தது. இல்லை இல்லை நாங்கள் வெளியேறுவதை பார்த்த பாரிஸ் நகரமே அழுதது  :D

 

Link to comment
Share on other sites

சூப்பர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"டேய் இங்க எல்லாம் பயங்கர மலிவடா" என்றேன்.  :D

எனக்கும் இப்படி தமிழர் விளையாட்டுக்கு போனால் எங்களூர் சாப்பாடுகளை ஆர்வமாக வேண்டி சாப்பிடிற பழக்கம் உண்டு . என்ன மட்டன் ரோல்ஸ் வேண்டி சாப்பிடும் போது தான் ஏமாற்றம் அதிகம்.

விலையும் அதிகம், உள்ளுக்கை மட்டன் துண்டுகளும் மிக குறைவு. அதற்காக வேண்டி சாப்பிடாமல் விட மாட்டோம்.

பகிர்வுக்கு நன்றி ஊர்க்காவலன்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.