Jump to content

'சென்றார்கள்... வென்றார்கள்... வந்தார்கள்...." மண்டைதீவு தளம


Recommended Posts

'சென்றார்கள்... வென்றார்கள்... வந்தார்கள்...." மண்டைதீவு தளம் மீதான அதிரடி நடவடிக்கை

-சிறீ இந்திரகுமார்-

அந்தச் சிறுகாட்டை விசில் சத்தங்கள் சுற்றி வளைத்திருந்தன. விசில் சத்தம் கேட்ட அடுத்த கணம் துப்பாக்கிகள் உரசும் சத்தமும், கோல் சரை இறுகக்கட்டும் அவசரமும் துள்ளிக் குதித்து வேகமாக ஓடும் புூட்ஸ் சத்தங்களுமாய் அந்தப் புலி வீரர்களின் பயிற்சிப் பாசறை சில நாட்களாக சுறுசுறுப்பாகியிருந்தது.

காலையில் வாத்தி 'விசில்" அடிச்சா வாத்தி பயிற்சி முடியுமட்டுக்கும் எங்களைப் பயிற்சி எண்டு வாட்டி எடுக்கும் சில நேரங்களில அண்ண சொன்னத பெடியளுக்கு ஞாபகம் வர மறுத்தாலும் வாத்தி வாட்டுற வாட்டுல அண்ணை சொன்னது ஞாபகத்துக்கு வரும்.

'கடுமையாகப் பயிற்சி செய்

இலகுவாகச் சண்டைசெய்"

அண்ணையிண்ட உந்த வார்த்தை பயிற்சி எடுத்துச் சண்டைக்கென இறங்கினாப்பிறகு தெரியும். இது மண்டைதீவு அதிரடி நடவடிக்கையிலும் தெரியத்தான் செய்தது.

கொஞ்ச நாட்களாகவே பயிற்சியில் வேகம்... எப்படா சண்டைக்குப் போவம் எண்டிருந்தது. ஒவ்வொரு இரவும் விடியும் போதும் இந்தா இண்டைக்குப் போவம், இல்ல நாளைக்குப் போவம் எதிர்பார்த்துப் பயிற்சி எடுப்பம். ஆனால் சண்டைக்கு மட்டும் கூட்டிக்கொண்டு போகவேயில்லை.

உங்கால முகமாலைப் பக்கம் வெளிக் கிட்டவங்களுக்கு எங்கடையாக்கள் நல்ல சாத்து சாத்திப் போட்டு நேர உள்ளுக்கும் இறங்கிட்டாங்களாம் எண்டு கேள்விப்பட்டதிலயிருந்து எங்களுக்கும் இருப்புக்கொள்ளவேயில்லை.

எப்படாப்பா... வெளிக்கிடுறது எண்டு பெடியளுக்குள் ஒரே குசு குசுப்புத்தான். ஆனால் வாத்தி மட்டும் வாட்டி எடுக்கிறதை குறைக்க வேயில்ல.

நாங்களும் தடைவெட்டி, டம்மி பொயிண்ட் உடைச்சு, உள்ளுக்கு மூவ் பண்ணி வெளுத்து வாங்கிறதெண்டு சண்டைக்கான பயிற்சிச் செற்றப்ப அந்த மாதிரிச் செய்து கொண்டிருந்தம்...

ழூழூழூ

எல்லாம் சரியாம். இனிச் சண்டைக்கு வெளிக்கிடலாமாம். கொட்டிலுக்க களைப்போட கிடந்த எங்களுக்கு வந்தது செய்தி.

கூ... கூ... ஏய்... ஏய்...

கொட்டில் அல்லோலகல்லோலப்பட்டுது. பெடியளெல்லாம் சத்தத்தாலேயே கொட்டில பிடுங்கியெறிஞ்சாங்கள்.

மச்சான் இந்த முறை சாத்தெண்டால் சாத்தாத்தான் இருக்கவேணும். பாற்றா இந்தமுறை என்ர விளையாட்ட....

டேய்... டேய்... ~நீ அங்க உன்ர விளை யாட்டக் காட்டப்போறியோ இல்லாட்டி, சண்டையக் காட்டப்போறியோ. சக நண்பனின் நக்கலுக்கு அந்தப் போராளி காது கொடுக்கவேயில்லை. அவன் சண்டைப் புளுகத்தில ரைபிளை நீற் பண்ணிறது.. ரவுண்ஸை நிரப்பிறது... கோல்சருக்க எல்லாம் சரியா இருக்கா எண்டு செக் பண்றது எண்டு எல்லாரும் சுறுசுறுப்பாக இருந்தார்கள்.

வாத்தி திடீரெண்டு வந்து... ~பெடியள் நாங்கள் சண்டைக்கு இரண்டு நாள் பிந்தவேணும்...|

பெடியள் எல்லாம் குழம்பிட்டாங்கள். துள்ளிக்குதிச்சவங்கள் எல்லாம் சுருண்டிட்டாங்கள். எல்லாற்றை வாயிலயும் ச்சீ... ச்சீ... என்னடாப்பா எண்டு ஒரே புளிப்புத்தான்.

இப்படி இரண்டு நாள் போக ~இண்டைக்கு வெளிக்கிடுறமாம்| எண்டு சொன்னதுதான் தெரியும் பயிற்சி முகாமில மேளதாளம்தான்.

ழூழூழூ

எல்லோரும் தயார்ப்படுத்தப்பட்டோம். எல்லாம் சரி. சாக்குத் தொப்பியிலிருந்து அடிக்கப்போற ரவுண்ஸ் வரைக்கும் சரி பாத்தாயிற்று.

அந்தப் பயிற்சி முகாமின் ஒன்று கூடும் இடத்தில் எல்லாப் போராளிகளும் அணி வகுத்திருந்தோம். கட்டளைத்தளபதி சிரித்தபடியே வந்தார். நம்பிக்கையின் பிரகாசிப்பு...

~என்னெண்டு சொன்னால் நாங்கள் இப்ப செய்யப் போற சண்டை ஒரு திருப்புமுனைத் தாக்குதல். இந்தச் சண்டை எதிரிக்கு ஒரு அதிர்ச்சியுூட்டும் நடவடிக்கை.

எங்களுக்கு அண்ணை இந்தப் பணியைத்தான் தந்திருக்கிறார். இதை நாங்கள் சரியான முறையில செய்யவேணும்... சரியோ...| எனக்கட்டளைத் தளபதி கேட்க பெடியள் எல்லாம் செய்து காட்டுவம் எண்டிறத அவங்கட கண்களாலேயே சமிக்ஞை செய்தார்கள்.

ழூழூழூ

நிலவு பிந்தி வருகிற தேய்பிறை நாளில் இரவின் ஆரம்ப நேரத்தில் எல்லாப் போராளிகளும் வாகனத்தில் ஏற்றப்பட்டு அந்தக் கடற்கரையோரம் இறக்கப்பட்டோம்.

உப்புக்காற்றின் ஊதல் முகத்தில் பட்டுத் தெறிக்க வானத்தில் நட்சத்திரங்களைத் தவிர வேறேதும் கண்களுக்குப் புலப்படவேயில்லை.

சளார்... சளார்... எண்டு கடலலை மட்டும் தரையில் மோதியபடியிருந்தது. தோளில் ரைபிள், நெஞ்சில் கோல்சர்.. முதுகில் கிற்பாக்.. எனப் பாரம்... உடலை அழுத்தியபோதும் எப்ப சண்டை தொடங்கும் என நெஞ்சுக் கூட்டுக்குள் அழுத்திக்கொண்டிருந்த பாரம் தான் எல்லாவற்றையும் விடப் பாரமாக இருந்தது.

திட்டத்தின்படி மண்டைதீவில இறங்கி சண்டை தொடங்கிட்டாப் பிறகு என்ன பாரம்..? எல்லாம் து}சுதான்... நினைவுகள் எங்கோ ஓடிக்கொண்டிருக்க அலைமேல் ஏறுவதும்... இறங்குவதுமாக எங்களை ஏற்றிப்போக தயாராக நின்ற கடற்புலிகளின் படகுகள் கடலில் ஆடி அசைந்தபடியிருந்தன.

எல்லாரும் வண்டியில் ஏறுவதற்கு முண்டியடிப்பு. எல்லாரும் ஏற வண்டி மண்டைதீவில் குந்தியிருக்கும் கொடியவர் உயிர்பறிக்க அலைகளைக் கிழித்தபடி புறப்பட்;டது.

எல்லோரும் வெளிக்கிடேக்க நாங்கள் போராட வேண்டியது மண்டைதீவில இருக்கிற ஆமியோட மட்டும்தான் எண்டுதான் நினைச்சம். ஆனால் வண்டி புறப்பட்டபிறகு தான் தெரியும் நாங்கள் இயற்கையோடையும் போராட வேண்டியிருக்குமெண்டு.

அந்தளவுக்குக் கடலடி... சும்மா உர்.. எண்டு எழும்புற அலை பனை மாதிரி உயரத்துக்கு எழும்பியும் பிறகு சடாரெண்டு கிணறு மாதிரி உள்ளுக்க போகும்.

பனைக்கு ஏறுவதும் கிணறுக்குள் குதிக்கிறதுமாய் நாங்கள் போன வண்டி படாத பாடு அத்தனையும் பட்டுக்கொண்டிருந்தது. அதோட சேர்ந்து வண்டிக்க போற நாங்களும்தான்...

அப்பிடியிருந்தும் நாங்கள் போன வண்டி அந்த இராட்சத அலைகளை மோதி உடைத்தபடி மண்டைதீவை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தது. கடற்புலி ஓட்டிகள் லாவகமாக இதைச் சமாளித்து வண்டியை ஓட்டுவது இப்ப நினைக்க பிரமிப்பா இருக்குது.

இதே நேரம் மேல் கடல்ல நேவிக்காரன் நிக்கிறது எங்களுக்குத் தெரியும். அவனுக்கும் நாங்கள் வாறது தெரியும். ஆனால் அவன் கிட்ட வரவேயில்ல.

அவன் வந்திருந்தான் எண்டால் நல்ல மாட்டு மாட்டியிருப்பான். ஆனால் கிட்ட வரவேயில்ல.

சுமார் பத்து மணியிருக்கும் மண்டைதீவு கரைக்குக் கிட்ட ரீம் நெருங்கிட்டு. அந்தா... இந்தா.. எண்டு இருக்க அவன் கண்டிட்டு ரெண்டு பக்கத்தாலயும் அடிக்கத்தொடங்க எங்கடயாக்களும் விடேல்ல. செமச்சாத்துச்சாத்திப்போட்ட

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.