Jump to content

சனல் 4 வெளியிட்ட 'இசைப்பிரியா உயிருடன் கைதாகும்' காணொளி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நெஞ்சை உலுக்கும் காட்சி. மறந்து போய்விட்டதாய் நினைத்திருந்த பல சொந்த அனுபவங்களை, யுத்த வடுக்களை மீளக்கீறி விட்டது.

Link to comment
Share on other sites

  • Replies 197
  • Created
  • Last Reply

சொந்தமாக எதையும் செய்யாது என்று சொல்வதோடு மட்டும் நிறுத்தாமல், சொந்தமாக என்ன செய்யலாம் என்பதையும் சொல்ல வேண்டும்.

 

சனல் 4 எந்த நோக்கத்திற்காக இப்படி வெளியிடுகின்றது என்பதில் எமது கவனத்தை செலுத்தத்தேவையில்லை. அவை வெளியிடுவதை நாம் எப்படி பயன்படுத்துகின்றறோம் என்பதே முக்கியமானது. இவைகள் உணர்வுபூர்வமாக அணுகப்படுவதை தவிர புத்திசாலித்தனமாக அணுகப்படவேண்டியது.

 

- இவ்வாறான கணொளிகளை தரவிறக்கம்செய்து வெவ்வேறு சம்மந்தமில்லாத தலைப்புகளில் தரவேற்றம் செய்யலாம். உதாரணமாக மான் வேட்டைக்குக் கீழ் ஆயிரத்துக்கு மேற்பட்ட ஒளிப்பதிவுகள் இருக்கின்றது அவ்வாறான தலைப்புகளுக்குள் இவை நுளையவேணும். இந்த உலகம் தவிர்க்கமுடியாமல் இவற்றைப் பார்க்கவேணும். எல்லா வகைக்குள்ளும் இவை அதுசார்ந்த தலைப்புகளோடு வைரஸ்போல் நுளைக்கப்படவேணும். இது சார்ந்த திட்டமிடலுக்கும் வழிநடத்தலுக்கும் எதிர்பார்த்து நிற்கத்தேவையில்லை. கணணி பயன்படுத்தத்தெரிந்தவன் தன்னாலானதை செய்யமுடியும்.

 

சிரியா எகிப்த்து போன்ற நாடுகளில் மனித உரிமை மீறலுக்காக மேற்குலகம் குரல்கொடுக்கும்போதும் அக்கறைப்படும்போதும் நாம் சிரிய முகமூடியுடன் இவ்வாறான மனிதஉரிமை மீறல்களை முன்வைத்து மேற்குலகை எதிர்த்து அதன் நேர்மையை கேள்விக்குள்ளாகக்க முனையலாம். இவ்வாறு எங்கெங்கு மனித உரிமை மீறல் நடக்கின்றதோ அங்கெல்லாம் மீறுபவர்வர்கள் தம்மை நியாப்படுத்தும் பேச்சுப்பொருளாக எமது அவலங்களை காவிச்செல்ல முனையலாம்.

 

தந்திரமும் புத்திசாலித்தனமும் இருந்தால் தகவல்தொழில்நுட்பத்தை ஆயுதமாகப் பயன்படுத்தலாம். தமிழர்களுக்குள் தமிழர்கள் பகிரந்து ஒப்பாரிவைப்பது பெட்டிசம் போடுவதைக் கடந்து இதை ஒரு உலகின் தலையிடியான விசயமாக மாற்றமுனையலாம். நேர்மை உணர்ச்சிவசம் எமக்குள் நாம் என்ற நிலையை கடந்து இந்த விசயங்களை எப்படி புத்திசாலித்தனமாக அணுகமுடியும் பயன்படுத்தமுடியும் என்று தனிமனிதர்களாக சிந்தித்து அல்லது நம்பிக்கையான சிறு குழுக்களாக ஒருங்கிணைந்து செயற்படுவது பிரயோசனமானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இசைப்பிரியாவின் இன்னொரு ஒளிக்காட்சியை அலை 4 வெளியிட்டிருக்கின்றது. எப்பொழுதோ அவர்களிடம் கிடைத்த அனைத்து காட்சிகளையும் தொடர் நாடகம் போல் பகுதி பகுதியாக வெளியிடுகிறார்கள். நம்மாக்களும் தவணை முறையில் ஒப்பாரி வைக்கிறார்கள். இதனை வைத்தே இந்திய மற்றும் உலக அரசியல் அடுத்த கட்டத்திற்கு இலங்கையை மையமாக வைத்து நகரப் போகின்றது. நம்மாக்கள் தொடர்ந்தும் புலம்புவதும் சர்வதேசம் எதையாவது தரும் என்று நம்புவதோடு மட்டுமே நின்று கொள்ளும். சொந்தமாக எதையும் செய்யாது. ஆனால் கொஞ்ச காலம் கழித்து ஒரு வீடியோ போடுவாங்கள்  . அப்ப பாருங்கோ தலையிலை அடிச்சு அழுவாங்கள் நம்மாக்கள். அதுவரை ...

உங்கள் கருத்து நகைப்புக்குரியது. இந்த ஒளிப்பதிவை பெற அவர்கள் என்ன விலை கொடுத்திருப்பார்கள் எவ்வளவு நாட்கள் எத்தனை தொடர்புகள் .  நாங்கள் தமிழ் பட கள்ள சிடி வாங்கிறது போல சொல்லுறியல்.

Link to comment
Share on other sites

Channel-4க்கு யாராவது உதவ விரும்பினால் இதை தெரிந்தவர்களுக்கு, ஆபிஸ் நண்பர்களுக்கு எல்லாம் தான் காட்ட வேண்டும். கணனி தெரிந்தவர்கள் தலைப்பை மாற்றி மாற்றி பதிவதும் அருமையான யோசனை.

 

அவர்கள் தம்மிடமுள்ளவற்றை எல்லாம் போட்டு முடிக்க மாட்டார்கள். விசாரணை வந்தால் சவால்விடப்பட முடியாத ஆதாரங்களை, திகைபூட்டத்தக்கத்தாக சில்வற்றை வைத்துகொள்ள் முடியுமானால் வைத்திருக்கத்தான் பார்ப்பார்கள்.  அதை நமது பிரச்சனை அல்ல. எனவே ஏன் இப்படி துட்டு துட்டாக வெளிவிடுகிறார்கள் என்பது கேள்வியல்ல.  

 

சென்ற கிழமை இலங்கை Channel-4 வீசாகொடுக்காமல் வீசா கொடுப்பதை மூடினார்கள். அப்போதுதான் அவர்கள் இதை வெளிவிட நினைத்திருக்கலாம். அதற்கு ஞாயிற்றுக் கிழமையை தெரிந்திருப்பார்கள். ஆனால் ஜக்குலின் பார்க் அவர உதவி கேட்டு செய்திகள் வெளியே அனுப்ப இதை நேற்று அதிகார பூர்வமில்லாமல் வெளிவிட்டார்கள். இனி ஞாயிற்றுக்கிழமைக்கு இது சற்று சூடு குறைந்து போய்விடும். ஆனால் இலங்கை அரசு வீசா வழங்குவதை திரும்ப திறக்க போவதாக அறிவித்துவிட்டது. ஜக்குலின் பாதுகாப்பாக வீடு போயிருந்திருப்பார்.  Channel -4 இந்த காடைத்தனங்கைளை கவனமான முறையில் ஆயுதமாகவே கையாள்கிறார்கள். 

 

இந்தியா இதை பார்க்க வேண்டும். யாராவது மன்மோகன் சிங்கிடம் அபிப்பிராயம் கேடக வேண்டும். சோனியா பாலச்சந்திரனின் காணொளி வேதனையானது என்றிருந்தார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இசைப்பிரியாவின் இன்னொரு ஒளிக்காட்சியை அலை 4 வெளியிட்டிருக்கின்றது. எப்பொழுதோ அவர்களிடம் கிடைத்த அனைத்து காட்சிகளையும் தொடர் நாடகம் போல் பகுதி பகுதியாக வெளியிடுகிறார்கள். நம்மாக்களும் தவணை முறையில் ஒப்பாரி வைக்கிறார்கள். இதனை வைத்தே இந்திய மற்றும் உலக அரசியல் அடுத்த கட்டத்திற்கு இலங்கையை மையமாக வைத்து நகரப் போகின்றது. நம்மாக்கள் தொடர்ந்தும் புலம்புவதும் சர்வதேசம் எதையாவது தரும் என்று நம்புவதோடு மட்டுமே நின்று கொள்ளும். சொந்தமாக எதையும் செய்யாது. ஆனால் கொஞ்ச காலம் கழித்து ஒரு வீடியோ போடுவாங்கள்  . அப்ப பாருங்கோ தலையிலை அடிச்சு அழுவாங்கள் நம்மாக்கள். அதுவரை ...

என்ன செய்ய வேணும் என்று நேரடியாக எழுதுவதை விட்டு உங்களுக்குத்தான் எல்லா விடயமும் தெரியும் சனல் 4 உங்களைகேட்டுதான் படமே காட்டுறமாதிரி 5 வகுப்பு சேட்டைகளை ஒரு துக்கம் பகிர்விற்க்கு ஒப்பான திரியில் வந்து விலாசம் காட்ட எப்படி உங்களுக்கு மனசு வருது. நீங்கள் எதிர்பார்க்கும் ஒளிநாடா வரும் நேரம் பார்த்துக்கொள்வம் சத்திரியனுக்கு சாவில்லை .

Link to comment
Share on other sites

என்னதான் நாங்கள் கருத்துக்கள் அடிப்படையில் வேறுபட்டாலும் எங்களின் நோக்கத்தை இது மீளவும் உறுத்தி நிக்கிறது.

 

இசைப்பிரியா கொல்லப்பட்ட முதல் ஆதார காட்சியை பார்த்ததும் என்னால் கிரகிக்கமுடிந்தது அங்கே என்ன நடந்திருக்கும் என்று.

 

என்னமோ தெரியாது இந்த காணொளியை பார்க்க எனது மனம் இடந்தவ்வில்லை. இதை பார்க்கவும் நான் முயற்சிக்கபோவதில்லை.

 

இதைப்போல் என்னும் எத்தனை எங்கள் அறிவுக்கும் காதுகளுக்கும் வராமல் மறைக்கப்பட்டது என்பதை ஒருநாள் யாரும் எங்களுக்கு உணர்த்தும் நாள் வரும்போது மீண்டும் வந்து அழுவோம்.

 

 

Link to comment
Share on other sites

காணொளிகள் தொடர் நாடகமாக போடப்படவில்லை. முக்கிய தருணங்களில் தான் போடப்படுகிறது. பொதுநலவாய மாநாடு நடக்கும் நிலையில் இப்போ இந்த காணொளி காட்டப்படுகிறது. பல நாடுகள் போக வேண்டாம் என் கேட்டும் அங்கு செல்கின்றன. சில நாடுகள் அங்கு போய் இனப்பிரச்சனை பற்றி (நியூசிலாந்து) பேசலாம் என்கிறார்கள்.இந்நேரம் இப்படியான கணொளிகளை விடுவதால் சிறிலங்கா படம் காட்டலுக்கு தயாராகும் வேளையில் இக்காணொளி அதனை தடுத்து இனப்பிரச்ச்னை பற்றியும் தீர்வு பற்றியும் பேச வைக்கலாம்.
 
மேலும் இவ் ஆதாரங்கள்  சனல் 4 சேர்த்து வைத்து பகுதி பகுதியாக போடுகிறார்கள் என்பதிலும் அவ்வப்போது கிடைப்பதை (பணம் கொடுத்து ராணுவத்திடம் இருந்து பெறுகிறார்கள்)போடுகிறார்கள் போலவே உள்ளது.இராணுவம் முன்பு போல் உழைக்க முடியாததால் இப்படியான ஆதாரங்களை விற்கவே செய்யும்.
Link to comment
Share on other sites

சனல் 4' வீடியோ உண்மையெனில் நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும்: ஜெயந்தி நடராஜன்

இசைப்பிரியா தொடர்பான வீடியோ ஆதாரம் உண்மையென தெரியவந்தால் அதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ஜெயந்தி நடராஜன் தெரிவித்தார்.jayanthi%20natarajan.gif

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை நேற்று சந்தித்த மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன், அங்கு அவர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் தெரிவித்ததாவது,

``இசைப்பிரியா தொடர்பாக `சனல் 4' வெளியிட்டுள்ள புதிய வீடியோ ஆதாரம் உண்மையானதாக இருக்கும்பட்சத்தில், இந்திய மத்திய அரசு அது குறித்து நிச்சயம் நடவடிக்கை எடுக்கும்.

மேலும், இலங்கையில் இடம்பெறவுள்ள பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்பது குறித்து தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து பிரதமர் மன்மோகன் சிங் நல்ல முடிவை எடுப்பார்'' என்றார்.

 

Link to comment
Share on other sites

தமிழர்களிடம் வீரம், ஒற்றுமை செயற்பாடுகள் இன்றும் உள்ளது. அது இல்லாதிருந்தால் தமிழர்களை ஒன்றிணைத்து உலகம் வியக்கும் ஆயுதப்போர் ஒன்றை பிரபாகரனால் நடாத்தியிருக்கவே முடியாது. தோல்வி படுபாதகமான விளைவுகளைத் தோற்றுவிக்கும். ஆழமான காயங்களை உண்டாக்கும். காயங்கள் சற்றேனும் ஆறித் தேறியபின்னரே ஒரு வீரனோ, வீராங்கனையோ திரும்பவும் போராட முடியும். ஆனால் இன்று தமிழினத்திற்கு ஏற்பட்ட காயங்கள் ஆறிவிடாது அவதானமாக சந்தேகம் தோன்றாதபடி, மீண்டும் மீண்டும் குத்திக் கிளறப்பட்டுக் காரியங்கள் நடைபெறுகின்றதா எனவும் சந்தேகிக்கத் தோன்றுகிறது.

 

இந்தச் சம்பவங்கள் நிச்சயம் சிங்களத்தையும் பாதிக்கும். ஆனால் அது இதனை அலட்சியப்படுத்தவே முயல்வதைக் காணலாம். காரணம், எனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை அவனுக்கு இரண்டுகண்களும் போகவேண்டும் என்ற சிந்தனையாகவும் இருக்கலாம்.

 

அவலங்கள் இன்றுமட்டும் அதுவும் தமிழனுக்கு மட்டுமே ஏற்பட்டதல்ல. உலகில் கற்பனை செய்யவும் நடுங்கும்படியான அவலங்களுக்கு மனிதர்கள் உள்ளானதாகப் படித்துள்ளோம், கேட்டுள்ளோம். ஆனால் அவற்றை நினைத்தே அழிந்துபோகாது தன்னைத் தேற்றி வந்துதான் மனிதகுலம் இன்றும் வாழ்கிறது. ஆகவே தமிழர்கள் தங்களைத் தேற்றிக்கொள்வதற்கு நாடும் வழிகளை அடைத்துவிட முயற்சிப்பது எதுவித பலனையும் தராது. மாறாக ஆற்றல் உள்ளவர்கள் நல்வழிகளைக் காட்டி உதவ முன்வருவதே நல்லது.

Link to comment
Share on other sites

சனல் 4' வீடியோ உண்மையெனில் நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும்: ஜெயந்தி நடராஜன்

இசைப்பிரியா தொடர்பான வீடியோ ஆதாரம் உண்மையென தெரியவந்தால் அதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ஜெயந்தி நடராஜன் தெரிவித்தார்.jayanthi%20natarajan.gif

 

 

 

இலங்கையில் தமிழினம் அழிக்கப்படும் உண்மையைக் கூட புரிந்துகொள்ள முடியாத இந்திய அரசியல்வாதிகள்....?

 

இத்தாலி எருமையின் தயிர்குடித்து மந்தமான இவர்களின் காதுகளுக்கு உண்மை இடியாக இடித்தாலும் கேட்காது!.

 

மன்மோகன் சிங்கின் தலைப்பாகையினால் மூடப்பட்டிருக்கும் இவர்களால் சூரிய ஒளியையும் காணமுடியாது!. <_< 

Link to comment
Share on other sites

British Tamils Forum members and local constituency residents met Labour Party leader Ed Miliband MP today to discuss the UK's participation in the upcoming Commonwealth Heads of Government Meeting, which is due to take place in Sri Lanka later this month.

 

The delegates encouraged the Labour Party to continue its tough stance against the UK's participation in the summit while grave human rights abuse continue to occur and there has been no accountability for past crimes.

Delegates recounted the horrific abuses of the 2009 war, in which Sri Lankan security forces are accused of killing tens of thousands Tamils, and 147,000 Tamils still remain unaccounted for. They also handed Mr Miliband a copy of BTF's recent report, Reconciliation in Sri Lanka?, which describes the human rights abuses, land grabs, economic persecution and other crimes that continue to be perpetrated against Tamils by the Sri Lankan state today.

 

Mr Miliband was shocked by the statistics of the dead, missing, injured, widowed and orphaned given to him by his constituents. Mr Milliband also reassured the delegates that he shared the views of his colleague, the Shadow Foreign Secretary Douglas Alexander MP, who recently wrote an article in theGuardian newspaper calling on the UK Prime Minister to boycott the Commonwealth summit.

 

Mr Miliband also confirmed the Labour Party's stance that an international, independent inquiry must take place into allegations that war crimes and crimes against humanity were perpetrated during the war in 2009.

Today's meeting took place the day before British Tamils Forum holds a mass rally in Central Londonagainst the UK's participation in the Commonwealth Heads of Government Meeting in Sri Lanka.

media@tamilsforum.com

working together for peace with justice and dignity


 

--
media@tamilsforum.com

Link to comment
Share on other sites

சண்டமாருதன் நல்ல விடயம் எழுதி இருக்கிறீர்கள், அதனைப் பலரும் விரும்பி இருக்கிறார்கள். எனவே இந்த யோசனையை நீங்களே யாழ்க் களத்தில் ஒரு செயற்திட்டமாக முன் எடுக்கலாமே?

தனி ஒரு தலைப்பைத் திறந்து இந்த யோசனையைச் செயற்படுத்தலாம். இதனை இப்பொழுதே நீங்கள் செய்ய வேண்டும்.வெறுமனே கருத்துக்கள் எழுதுவதோடு நின்று விடமால் செயலிலும் இறங்க வேண்டும்.செயற்படும் போதே ஒவ்வொரு யோசனையின் நடைமுறைச் சாத்தியம் பற்றிய பட்டறிவு வரும்.

 

 

Link to comment
Share on other sites

இசைப்ரியவின் காணொளியை முன்னுரிமை கொடுத்து வெளியிட்டிருக்கிற saaksi தெலுங்கு பத்திரிகை, (வேறு எந்த தெலுங்கு பத்திரிக்கையிலும் செய்தி வரவில்லை)
 
இசைப்பிரியாவின் புகைப்படத்தின் கீழே "ltte ஆல் கொல்லப்பட்ட இசைப்பிரியா" என்று தவறாக செய்தி வெளியிட்டிருக்கிறது, தொடர்ந்து தமிழ் தேசிய பிரச்சினைகளான கூடங்குளம் ,மாணவர் போராட்டம் , ஈழம் போன்றவற்றில் நமக்கு ஆதரவாக ஆந்திராவில் செய்தி வெளியிடுகிற saaksi இந்த தவறை செய்ததில் மிகவும் வருத்தம், இதை அவர்களிடம் சுட்டி காட்டி பேசிய போது நமக்கு வருத்தம் தெரிவித்தனர்.

ஆங்கிலம் தெரிந்த தோழர்கள் அவர்களுக்கு அழைத்து தவறை சுட்டி காட்டவும் (040) 23256000
 
16284_196621477192102_1087206153_n.jpg
 
(facebook)
 
பி.கு: தெலுங்கு அல்லது ஆங்கிலம் தெரிந்த யாராவது அந்த number க்கு அழைத்து அடுத்த பத்திரிகையில் திருத்தி வெளியிடுமாறு கூறுங்கள். :rolleyes:
Link to comment
Share on other sites

http://timesofindia.indiatimes.com/india/War-crime-video-throws-shadow-over-Commonwealth-summit-in-Lanka/articleshow/25078927.cms

 

War crime video throws shadow over Commonwealth summit in Lanka

 

CHENNAI: A video clipping that purportedly exposes the killing of a Sri Lankan Tamil actor and television anchor by the army has queered the pitch for the Rajapaksa regime in the run-up to the Commonwealth summit, to be held later this month in Colombo.

As part of an expose on the brutal war fought between the Sri Lankan army and the LTTE, Britain's Channel 4 on Friday telecast a 48-second-long clipping showing Shoba alias Isai Priya being captured alive and whisked away by armymen, hands fastened behind her back. The footage was shot by an unknown Lankan soldier and released to the channel by the UK-based journalist-filmmaker Callum Macrae. According to the official version, her body was found during "mopping up" operations after the war ended on May 19, 2009.

Macrae, in an earlier award-winning documentary, 'Sri Lanka's Killing Fields' in June 2011, had released visuals of 27-year-old Isai Priya's mauled body, with wounds on her face. Her body was only partially clothed.

Reacting to charges that she was raped and killed by the army, the Sri Lankan government had then claimed that she was killed in a battle with the 53rd division of the Lankan army, commanded by Major General Kamal Gunaratne, on May 18, 2009, a day before LTTE chief V Prabhakaran was killed.

However, the latest visuals raise suspicion that she was captured alive and killed later.


It also gives credence to charges levelled by rights activists that Sri Lanka's "mopping up" operation was a euphemism for genocide by its army. TV channels across the globe began telecasting the visuals since morning, making out a case for prosecution of those responsible for war crimes in the Sri Lankan establishment. The build-up to the Commonwealth summit faded into the background as the focus shifted once again to the ethnic strife that had claimed thousands of lives.

The timing of the latest telecast is significant as most political parties in Tamil Nadu are mounting pressure on the Central government to boycott CHOGM (Commonwealth Heads of Government Meeting), as a mark of protest against Lanka's human rights violations and reluctance to devolve powers to the elected northern provincial council. Moreover, Macrae was in possession of the clipping from April onwards, but chose to release it now to maximise the fallout, especially in India.

Reacting to the developments, Union environment minister Jayanthi Natarajan, who was in city, said that Centre should take action against Lanka if the video footage is true. Release of similar visuals at frequent intervals, shaking the collective conscience of people across the globe, has been a dampener for Sri Lankan efforts to move forward, leaving the bitter memories of the ethnic war behind.V Suryanarayan, a retired professor and an authority on Sri Lankan affairs, said India's boycotting CHOGM would serve little purpose. He said, "India should participate in CHOGM and mobilize Commonwealth countries to pressurise Sri Lanka to grant devolution expeditiously and also institute a credible inquiry into the human rights violations. If we boycott the meet, Lanka will go further nearer to China and Pakistan. By boycotting the meet, we will also be weakening the northern provincial council, for which election was held only because of India's pressure. Our participation will not mean that we are condoning Lanka's acts of human rights violations".

Incidentally, contrary to Lankan claims, Priya was not known to be present on the battlefield because she had a heart problem. "She never carried a gun and her physical condition did not permit her to go to the battlefield. She always had either a camera, a pen or a notepad. She was a journalist working in the propaganda wing of the LTTE," Macrae had said in his previous documentary, quoting Kalpana, one of Priya's friends.

 

Link to comment
Share on other sites

சனல் நான்கு ஏன் பகுதி பகுதியாக வெளியிடுகிறது என்பதற்கான காரணங்களை மேற்காட்டிய செய்தியில் காணலாம்.இதன் பின்னணியில் உளவு அமைப்புக்கள் இருக்கலாம் ,இல்லாமலும் இருக்கலாம்.

ஆனால் நாம் இதன் மூலம் எவ்வாறு எமது மக்களின் விடுவுக்காக உழைக்கப் போகிறோம் என்பதே முக்கியமானது. இன்னொருவன் செய்வதை விமர்சித்துக் கொண்டே இருக்காமால் , தமிழர்கள், யாழ்க் கள உறுப்பினர்கள் ஒவ்வொருவருமே எதாவது ஒரு செயற்திட்டத்தில் கீழ் இறங்கினாலேயே பல அழுத்தங்களை பல இடங்களில் உருவாக்க முடியும்.

 

இன்றைய நிலை என்பது வெட்க்கப் பட வேண்டிய நிலை.புலத்தில் இயங்குபவர்கள் செயற்படுஅவர்களை விட , இணயக் கதிரை விமர்சகர்களின் தொகை அதிகம்.

 

இணையப் போராளிகளே சண்டமாருதனின் யோசனையையாவது யாழ்க் களத்தில் செயற்படுத்துங்கள்.  

Link to comment
Share on other sites

Sri Lankan Tamil journalist was captured, killed

November 2, 2013

 

A video clip from No Fire Zone, a Channel 4 documentary to be released on November 3, has put the spotlight on Sri Lanka yet again, weeks before the Commonwealth Heads of Government Meeting.

 

According to a report on the website of the British television channel, the young woman shown in the footage as being captured by men in army fatigue, and later lying unconscious or dead with a gash across her face is Isaipriya, a newsreader for LTTE’s television channel who, the Sri Lankan government reportedly maintained, had died in combat.

 

When contacted, Sri Lankan army spokesman Brigadier Ruwan Wanigasooriya termed the video clip a “completely false creation by Channel 4”. Commenting on the significance of the new footage, with Callum Macrae, director of the feature documentary Sri Lanka’s Killing Fields observed in the video: “Taken along with all the other evidences of executions and mistreatment of prisoners at the end of the [sri Lankan civil] war, it suggests something systematic.”

 

In February 2013, Channel 4 released photographs of Balachandran Prabakaran, the 12-year-old son of Tamil Tiger leader Velupillai Prabakaran before and after he was reportedly shot dead. These images sparked fierce criticism on the Sri Lankan army over its alleged war crimes.

 

http://www.thehindu.com/news/international/south-asia/sri-lankan-tamil-journalist-was-captured-killed/article5306552.ece?fb_action_ids=10151962855064795&fb_action_types=og.likes&fb_source=other_multiline&action_object_map={%2210151962855064795%22%3A209003099279506}&action_type_map={%2210151962855064795%22%3A%22og.likes%22}&action_ref_map=[]

Link to comment
Share on other sites

Isaipriya 'raped' and killed by Sri Lankan Army, says Channel 4 video

November 1, 2013

 

issapriya6_moss_110113081750.jpg

 

With political parties in Tamil Nadu already strongly protesting against Prime Minister Manmohan Singh's participation in the Commonwealth Heads of Government Meeting in Colombo on November 15, disturbing new images have emerged that prove that Tamil Tiger news broadcaster and singer Isaipriya alias Shoba was not killed in combat, but in cold blood.

 

issapriya_1_moss_110113081741.jpg
 

A video taken by a Lankan soldier shows Priya lying in a muddy sea water ditch when Lankan forces find her. They treat her with dignity and cover her with a sheet of white cloth. They mistake her for LTTE chief Prabhakaran's daughter. She says no.

 

issapriya1_moss_110113081741.jpg

Later on, the video, obtained by Channel 4, shows Lt. Col. Isaipriya, who was also a soldier in the rebel LTTE army, lying in a ditch with deep cuts on her face. The Channel 4 report says she was sexually assaulted and killed.

 

issapriya2_moss_110113081741.jpg

The Prime Ministers of Australia and Britain are under pressure to boycott the CHOGM meeting to put pressure on the Mahinda Rajapaksa regime for human rights violations.

 

issapriya3_moss_110113081741.jpg

In India, the government itself is split with ministers from Tamil Nadu, Finance Minister P. Chidambaram and Shipping Minister G.K. Vasan, asking the Prime Minister to boycott the meet. The Tamil Nadu Assembly has unanimously passed a resolution urging the Centre to boycott the meeting. DMK chief M. Karunanidhi has warned the Centre of consequences.

 

issapriya5_moss_110113081741.jpg

http://indiatoday.intoday.in/story/sri-lanka-channel-4-documentary-isaipriya-ltte-news-reader-raped-and-killed-by-sri-lanka-army/1/321295.html

 

Link to comment
Share on other sites

இரண்டு விடையங்கள்.

1. அந்த காணொளியின் நீர்த்தேக்க கரையில் அரைநிர்வாணமாக ஓடிதிரியும் ஒருவர் காணப்படுகிறார். அவரின் உடம்பும் நனைந்திருக்கலாம் போலிருக்கு. இதுவரையில் உள்ள ஆமிகள் இசைப்பிரியாவை காயப்படுத்தவில்லை. அழிவுகளை செய்ய பரவலாக எல்லா ஆமிக்கும் இலங்கை அரசு கட்டளை இட்டிருக்கலாம்; அல்லது கோத்தாவின் துடைப்புப்பணியிக்கு(mop up operation) நியமித்த மேலதிக அதிகாரம் உள்ளவர்கள் மட்டும் அதை செய்திருக்கலாம் (பலர் உயிருடன் பிடிபட்ட பின்னர் சித்திரவதைகள் மூலம் அழிக்கப்பட்ட பல காட்சிகள் தொடந்து வெளிவருவதன் காரணமாக இதுவாக இருக்கலாம்.)அதனால் இந்த விசாரணை மேற்படி மேலதிக விசாரணைகளுக்கு  உபயோகமானவராக இருக்கலாம். இசைபிரியா அந்த நீர்நிலையை பயன்படுத்தி தப்ப முயலும் போது மறித்து பிடித்தவராக இவர் இருக்கலாம், அல்லது இசைபிரியா அந்த நீர்நிலையில் தற்கொலை முயற்சிகளை முயன்ற போது நீரில் இறங்கி மீட்டவராகவும் இருக்கலாம். தனது நனைந்து போய்விட்ட சீர் உடையை களைந்துவிட்டு வந்து இருக்கிறார் போல்ப்படுகிறது. அவரின் நடத்தையில் காணப்படும் பரபரப்பு தலைவர் பிரபாகரனின் மகள்தான் இசைப்பிரியா என்ற சந்தேகத்தை ஆமிகள் கொண்டிருப்பதை உறுதிப்படுத்துகிறது. ஒருவேளை இவர் அந்த காரணத்தால் தன் சுய முயற்சிகளால் இசைப்பிரியாவை கரைக்கு கொண்டுவந்தாரா என்பது சந்தேகமாக இருக்கிறது. 

 

2.பேராசியர் சூரியநாராயணனின் கருத்தான If we boycott the meet, Lanka will go further nearer to China and Pakistan. By boycotting the meet, we will also be weakening the northern provincial council, for which election was held only because of India's pressure.(http://www.yarl.com/forum3/index.php?showtopic=131557&p=954127) என்பதில் சீனா, பாகிஸ்த்தானை இந்த வழிகளால் இந்தியாவால் தடுக்க முடியாது என்பதை இந்தியா ஒப்புக்கொள்ள வேண்டும் என்பதும், இப்படி பலதடவைகள் அரைக்கப்பட்டுவிட புளித்த மாவை அரைப்பது புதிய முயற்சி இல்லை என்பதையும் பேராசிரியர் ஒப்புக்கொள்ள வேண்டும். அடுத்த பாகுதி அவர் வெறுமனே விவாதத்திற்காகமட்டும் வைக்கும் பாகம். அவருக்கே அதில் நம்பிக்கை இருக்காது. புலிகள் அடக்கப்படிருந்த காலத்தில் இந்திய படைகள் இலங்கையில் இருந்த போது இணைந்த வடக்கு-கிழக்கில் அதிகாரத்தை நடைமுறைப்படுத்த முடியாது வரதராஜப்பெருமாள்  என்று பதவி விலகினார்.  இப்போது அரசுக்கு வெற்றியாக புலிகள் அழிக்கப்பட்ட பின்னர் பலவீனப்படுத்தப்பட்ட மாகாண சபையை, 150,000 இலங்கை ஆமிகளால் சூழப்பட்டிருக்கும் போது, மன்மோகன்சிங் பொதுநலவாய மகாநாட்டுக்கு போவதால் அதிகாரம் உள்ளதாக்க முடியும் என்பது வெறும் கனவுக்கதை.

 

எதோ இந்தியாவின் தலையீட்டால் இந்த தேர்தல் வந்தது என்பது வாஸ்த்தவம்தான். ஆனால் இந்த தேர்தலை இந்தியாவிடம் பெற ஐ நா.வில் தமிழர் கொடுத்த விலை மிகப்பெரியது. வலுவில்லாத மாகாண சபையைக் கைவிட்டுவிட்டு மேலே சென்று அதிகாரம் பகிரப்பட வேண்டும்  என்ற LLRC அறிக்கையை ந்டைமுறைப்படுத்த வேண்டும் என்பது ஐ.நா. பிரேரணை. ஐ.நா அதை வலியுறுத்தி, போர்க்குற்ற விசாரணையையும் கொண்டுவர முயன்ற போது சுப்பிரமணியசாமியும் நிரூபம்மா ராவோவும் அமெரிக்க அதிகாரிகள் மீது அழுத்ததை போட்டு பிரேரணையை மாற்றி இலங்கைக்கு சார்பாக இன்னொரு தடவை திரும்ப வரைவித்தார்கள் என்பதுதான் உண்மை.   இந்த பாரிய காப்பாற்றுதலுக்காக இலங்கை, இந்தியாவுக்கு போட்ட சிறிய எலும்புத்துண்டுதான் "வடமாகாணத்தேர்தல்". தேர்தல் நேரம் அங்கு காணப்பட்ட வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்கள் தொடக்கம் ஐ.நா. கமிசனர் நவி பிள்ளை போன்ற்வர்களின் நடமாட்டமும், தற்காலிக ஆமி முடக்கமும் மக்களை மற்றைய தேர்தல்களை பகிஸ்கரித்தது போல் அல்லாமல் இதில் வாக்களிக்க வைத்தது. ஆனால் தேர்தல்  உண்மையில் வடக்கில் ஏற்பட்ட ஒரு மாற்றம் அல்ல. பாம்பு ஒருதடவை செட்டையை கழற்றினால் அதிலிருந்து புது பாம்பு ஒன்றும் வெளிவருவது கிடையாது. வடமாகாணத் தேர்தலால் வடக்கில் வந்த மாற்றம் சீறோ.

 

ஆமி வெளியேறி, சந்திர சிறி நீக்கப்பட்டு, மாகாண சபை இயங்கவிடப்பாட்டால், அதிகாரமில்லாத மாகாணசபை, வரதர் காலத்தில் இயங்கியது போன்று இயங்கும். இல்லையேல் அது கோமாவில் ஆஸபத்திரியில் கிடக்கும் நோயாளி. காப்புறுதி கம்பனிக்கும் குடும்பத்துக்கும் இடையில் நடக்கும் இழுபறிகள் முடிய உண்வு, காற்று வழங்கும் குழாய்கள் பிடுங்கப்பட்டு நிரந்த தூக்கத்தில் போக அந்த நோயாளிவிடப்படுவார். இதில் மன்மோகன்சிங் பொதுநலவாயதுக்கு போவதால் வடமாகாண சபையில் அதிகாரம் பிறந்து மாகாண சபை கோமாவிலிருந்து விளிக்கும் என்பது சூரியநாரணன் வரப்போகும் காங்கிரஸ் தேர்தலுக்கு தேடும் ஒரு விள்க்கமாக இருக்கலாம். ஆனால் அது இலங்கையை பொறுத்தளவில் செம்புச் சதத்திற்கும் பிரயோசனமில்லாத செய்தி. 

 

சுப்பிரமணியசாமி ஐ.நா பிரேரணையை வலுவிழக்கவைக்காதிருந்திருந்தால் இன்றைய இசைப்பிரியாவின் காணொளி இப்படி பத்திரிகை செய்தியாக தோன்றி மறையாமல் ஒரு விசாரணை கோடு ஒன்றில் ஆதாரமாக வைக்கப்பட்டிருந்திருக்க கூடிய சந்தர்ப்பம் அமைந்திருக்கும். பொதுநலவாயத்துக்கு இந்தியா வரவில்லையாயின் இலங்கை இந்தியா என்ற Escort சேவையை தூக்கி ஏறிந்துவிட்டு தனியவேதான் ஐ.நாவில் மேற்குநாடுகளை சந்திக்கும். இதன் பின்னர் வரப்போகும் விளைவுகள் நிச்சயமாக, இந்தியாவின் எந்த முயற்சியும் இன்றி,  சீனா, பாகிஸ்தானின் அழுங்கு பிடியை இலங்கையில் இருந்து உடைக்கும்.

 

சீனாவை இலங்கையில் இருந்து விரட்டுவத்தாக கூறிக்கொண்டு  இன்று இந்தியாசெய்யும் முயற்சிகள் எரியும் எண்ணை மீது நீர்வார்ப்பது போலத்தான் ஆகிறது. இந்தியா சீனாவை வெளியேற்ற அரச குடும்பத்துக்கு லஞ்ச கொடுப்பனவுகளை கூட்ட இது சீனாவுக்கு இயற்கையான பயத்தை வரவளைத்து, புதிய புதிய முயற்சிகளில் இறங்க வைக்கிறது. இந்தியாவின் இந்த கொடுப்பனவுகள் என்ற ஒட்டக்கூத்தனின் பாடல்களுக்கு சீனா என்ற இளவரசி புதிய முதலீட்டு முயற்சிகளால் இரண்டாவது தாள்பாள்களை போட்டுக்கொண்டிருப்பதை அரசியல் ஆய்வாளரான பேராசியர் சூரியநாரயணன்  இதுவரையில் கண்டு கொள்ளாதது நகைப்புக்குரியது. . இந்த முயற்சிகளால் மேலும் மேலும் சீனாவுக்கு சந்தேகம் ஏற பிடியை இறுக்கிக்கொண்டு வருகிறதேயல்லாமல் இளக்கம் வரவே இல்லை என்றதை இந்திய ஆளவாளர்கள் கவனிக்கமால் இருபது உணமியான அவர்களின் உண்மையான நடத்தையாகவும் இருக்க முடியாது. இது வெற்று விவாதங்களுக்கான அவர்களின் போலி விளக்கங்களாத்தான் கொள்ளப்பட வேண்டும். பேராசிரியர் சூரிய நாராயணனோ அல்லது யாராவது இந்திய ஆய்வாளர் இதுவரையில் தெரிந்துகொண்டிருக்காவிட்டால் "இந்தியா இலங்கையில் இது வரையில் செய்த கொடுப்பனவுகள் 'ஆற்றினில் கரைத்த புளி' "

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

qqdk.jpg

 

12 கோடி தமிழர்கள் உங்கள் பின்னால் தைரியமாகச்செல்லுங்கள் அய்யா....கரும்புலியாகக்கூட உங்களுக்காக மாற தயார்.எந்த சிங்கள நாயும் உங்களை நெருங்க முடியாது அய்யா...

 

 

 
 

fc

Link to comment
Share on other sites

 

12 கோடி தமிழர்கள் உங்கள் பின்னால் தைரியமாகச்செல்லுங்கள் அய்யா....கரும்புலியாகக்கூட உங்களுக்காக மாற தயார்.எந்த சிங்கள நாயும் உங்களை நெருங்க முடியாது அய்யா...

 

fc

 

Callum Macrae இன் கருத்தை முன்னிட்டு அவரை பாராட்டியே ஆக வேண்டும். :rolleyes: ஆனால் அதற்கு முகநூலில் இவ்வாறு கருத்து போட்டமை நகைப்புக்குரியதாக இருக்கிறது. :)

 

ஒருவேளை அவருக்கு ஒரு ஆபத்து என்றால் எம்மால் என்ன செய்ய முடியும்? :rolleyes: இது வெறும் வீர வசனம். :)

 

பி.கு: fb என்பதற்கு பதிலாக fc என்று போட்டுள்ளீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Callum Macrae இன் கருத்தை முன்னிட்டு அவரை பாராட்டியே ஆக வேண்டும். :rolleyes: ஆனால் அதற்கு முகநூலில் இவ்வாறு கருத்து போட்டமை நகைப்புக்குரியதாக இருக்கிறது. :)

 

ஒருவேளை அவருக்கு ஒரு ஆபத்து என்றால் எம்மால் என்ன செய்ய முடியும்? :rolleyes: இது வெறும் வீர வசனம். :)

 

பி.கு: fb என்பதற்கு பதிலாக fc என்று போட்டுள்ளீர்கள்.

 
அடுத்த முறை ஒழுங்காய் எழுதுறேன்...அவரின் உல் உறுமல் போல அதை வெளிப்படையாய் எழுதி இருக்கிறார்....
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

-----
பி.கு: தெலுங்கு அல்லது ஆங்கிலம் தெரிந்த யாராவது அந்த number க்கு அழைத்து அடுத்த பத்திரிகையில் திருத்தி வெளியிடுமாறு கூறுங்கள். :rolleyes:

 

 

ராஜவன்னியனுக்கு... தெலுங்கு தெரியும். அவரைத்தான், களத்தில் காணவில்லையே...

தனிமடல் போட்டுப் பார்க்கின்றேன், துளசி.

Link to comment
Share on other sites

தெலுகு பத்திரிகைக்கு பிழையான தகவல்களை வழங்கியது சில சிங்கள அல்லகைகளாகத்தான் இருக்க வேணும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தெலுகு பத்திரிகைக்கு பிழையான தகவல்களை வழங்கியது சில சிங்கள அல்லகைகளாகத்தான் இருக்க வேணும்.

 

ஒட்டுக்குழுக்களும்.... சிங்கள அல்லக்கைகளுக்கு, சளைத்தவர்கள் அல்ல.... இசை.

ஒட்டுக்குழு ஒழுங்காக... இருந்திருந்தால், எப்பவோ... ஈழம் கிடைத்திருக்கும்,

இந்த அவலங்களும்... நேர்ந்திருக்காது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.