Jump to content

தமிழர் வரலாறு


Recommended Posts

சிங்களம் மட்டும் மொழிச் சட்டம்.

பதவியேற்றவுடன் பண்டாரநாயக்கா 1956ம் ஆண்டு யூன் மாதம் 5ம்திகதி சிங்களம் மட்டும் மொழி மசோதாவை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார். இதனை ஐக்கியதேசியக் கட்சியும் ஆதரித்தது.

தொடக்கத்தில் நியாயமான அளவு தமிழ் மொழிப் பயன்பாட்டிற்கு இம்மசோதாவில் இடமளிக்க பண்டாரநாயக்கா விரும்பிய பொழுதும் பிக்குகள் முன்னனி எதிர்ப்பால் அது கைவிடப்பட்டது.

இச் சட்டம் கரையோரச் சிங்கள மக்கள் தங்கள் பொருண்மிய சீர் கேடுகளுக்கு தமிழர் ஆங்கிலம் கற்று அரசாங்கப் பதவிகளில் அதிகம் இருக்கும் தமிழரே அடிப்படைக் காரணம் என்கின்ற இனவாத நோக்கில் மேற்கொள்ளப்பட்ட ஒரு நடவடிக்கையாகும்.

அன்றைய தினமே (5ம் திகதி ) செல்வநாயகம் தலைமையில் இந்திய விடுதலைப் போராட்டத்தின் போது காந்தி பின்பற்றிய சாத்வீக (அகிம்சை) வழிகளில் நாடாளுமன்றத்திற்கு முன்னே களனி முகத்திடலில் 300 பேர் கொண்ட சத்தியாக்கிரகம் எனப்படும் அமைதி வழியிலான எதிர்ப்பில் ஈடுபட்டது.

அன்றைய தினமே பிக்குகள் முன்னனி காலணி முகத்திடலுக்கு ஊர்வலமாக வந்து அங்கேயிருந்த தமிழ்த் தொண்டர்கள் மீது வன்முறைப் பிரயோகம் செய்தது.

பலரைத் தாக்கி, சிலரைத் தூக்கி நாடாளுமன்றத்திற்கு அண்மையிலுள்ள பெய்ரா ஏரியில் போட்டனர். இவ்வளவு நடந்தபின்னும் சிங்களப் பொலீஸ்துறை பார்வையாளராக நின்றது

Link to comment
Share on other sites

1956ம் ஆண்டுப் பொதுத் தேர்தல்.சிங்களவர்களுடைய அரசியல் வரலாற்றில் 1956ம் ஆண்டு மிக முக்கியமான ஆண்டாகக் கருதப்படுகின்றது. சிங்களத் தேசியம் அதனுடைய மொழி, பண்பாடு போன்றவை உரிய இடத்தைப் பெற்றதாகச் சிங்களவர்கள் கருதிக் கொள்ளுகின்றார்கள்.

ஒரு சமூக மாற்றம் நடைபெற்ற ஆண்டாக சிங்கள வரலாற்று ஆசிரியர்கள் 1956ம் ஆண்டைக் கணிக்கிறார்கள். ஆனால் தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் 1956ம் ஆண்டு ஒரு மிக மோசமான ஆண்டாகும். சிங்களம் மட்டும் சட்டம் கொண்டு வரப்பட்டதோடு முதல் இனக் கலவரம் நடைபெற்ற ஆண்டும் 1956.இவற்றுக்குக் காரணமானது 1956ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலேயாகும். இத் தேர்தலிலே மக்கள் ஜக்கிய முன்னனி (M.E.P) என்றொரு பெயரில் பண்டாரநாயக்கா மூன்று கட்சிகள் கொண்ட கூட்டனி ஒன்றை உருவாக்கினார். அவருடைய S. L.F.P கட்சியிலிருந்து பிரிந்து சென்ற பிலிப் குணவர்த்தன உருவாக்கிய V.S.S.P. எனப்படும் கட்சி மூன்று கட்சியுமாகும். இம் முன்னனி ஐ.தே. க. விற்கு முற்றிலும் புறம்பான கொள்கைகளை, சிங்களத் தேசியத்தை, மொழி, புத்தமதத்தை, சாதாரண சிங்கள மக்களை முன்னேற்றப் போவதாக கூறிக் கொண்டது. முதல் தடவையாகப் பிக்குகள் முன்னனி ஒன்றை உருவாக்கியது. களனி ரஜ மகாவிகாரையின் தலைமைக்குருவான புத்தரகித்தர தேரோ என்பவர் தலைமையில் இம் முன்னனி அமைந்தது.

சிங்களம் மட்டும் மொழிச்சட்டத்தை 24 மணித்தியாலத்திற்குள் பதவிக்கு வந்தால் கொண்டு வருவோம் என்று கூறியதன் மூலம் தேர்தலில் 39.5 விழுக்காடு வாக்குகளைப் பெற்று மொத்தம் 95 தொகுதிகளில் 51 தொகுதியைக் கைப்பற்றியது.

படுதோல்வி கண்ட ஐ. தே. க. 27 வீதி வாக்குகளைப் பெற்ற பொழுதும் 8 இடங்களையே பெற்றது. அதே சமயம் இரு மொழிக் கொள்கைக்கு எதிராக பெரும் போராட்டங்கள் நடத்தப் போவதாகக் கூறிய சமஷ்டிக் கட்சி 10 இடங்களைப் பெற்றது. தமிழ் காங்கிரசிற்கு 01 இடந்தான் கிடைத்தது.

Link to comment
Share on other sites

மலையக மக்களிடையே தொழிற் சங்க இயக்கம்.மலையக மக்கள் மத்தியில் தொழிற் சங்க அமைப்பை முதலில் தோற்றுவித்தவர் கே. நடேசுஐயர் ஆவார். அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சம்மேளனம் என்ற அமைப்பை முதலில் தோற்றுவித்தனர். அது போலவே இலங்கை சமசமாசக்கட்சி அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தை ஆரம்பித்தது.

இவர்களோடு நடேசனும் இணைந்து போராட்டங்கள் வேலை நிறுத்தங்கள் என தொழிற்சங்க நடவடிக்கைகள் பலவற்றை மேற்கொண்டனர். முதன் முறையாக 1940ம் ஆண்டு பதுளையில் மேதினத்தைக் கொண்டாடினர்.

இக் காலகட்டத்திலே கேவா கெட்டப்பகுதி, முல்லோயாத் தோட்டத்தில் வேலை நிறுத்தத்தின் பொழுது பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டிற்கு கோவிந்தன் என்ற தொழிலாளி மரணமானார். என்றாலும் இடது சாரிகளின் தொழிற்சங்கம் 1942ம் ஆண்டு ஆங்கிலேயரால் தடை செய்யப்படடது.

இந்திய எதிர்ப்பு உணர்வு இங்கு வளர்ந்த போது அதுபற்றிப் பேசுவதற்காக இலங்கை வந்த ஜவஹர்லால் நேரு அவர்களின் ஒத்துழைப்பால் இந்திய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தமது தேசிய இயக்கமாக 39ஆம் ஆண்டு இலங்கை இந்தியக் காங்கிரஸ் என்கின்ற அமைப்பை உருவாக்கினர்.

இவர்கள் திரு பெரியசுந்தரம் தலைமையில் தொழிற்சங்க அமைப்பையும் தொடங்கினர். இவர்களது செல்வாக்கிற்கு முன்னாள் நடேசஜயர் தோல்வியைத் தழுவினார். இத்தொழிற் சங்கமே 1950களில் தொண்டமான் தலைமையில் இலங்கைத் தொழிலாளர்காங்கிரஸ் (D,W,C) என்று பெயர் மாற்றம் பெற்றது.

தொண்டமான் ஏனைய எல்லா அமைப்புகளையும் விட மலையக மக்களுடைய தேசீய உணர்வை திறமையாகப் பயன்படுத்தினார். அத்தோடு தனது தொழிற்சங்க அமைப்பைப் பெரிதாகக் கட்டியமைத்து பணபலம் நிரம்பிய ஒரு தொழிற் சங்க சாம்ராஜ்யமாக்கினார்.

இவரது போக்குப் பிடிக்காமல் இ. தொ. கா. வின் செயலாளராக இருந்த ஜெனாப் ஏ. அசீஸ் 1956ஆம் ஆண்டளவில் பிரிந்து ஜனநாயகத் தொழிலாளர் காங்கிரஸ் என்ற தொழிற் சங்கத்தை உருவாக்கினார்.

இவரோடு ஊ.ஏ. வேலுப்பிள்ளை, நடேசன் போன்றோரும் பிரிந்து சென்றனர். அசீஸின் பின்னர் இ. தோ. கா. வின் செயலாளராக இருந்த வெள்ளையன் என்பவர் அதிலிருந்து வெளியேறி தேசிய தொழிலாளர் சங்கம் என்கின்ற புது அமைப்பைத் தோற்றுவித்தார்.

இதில் ஊ.ஏ. வேலுப்பிள்ளையும் சேர்ந்து கொண்டார். தமிழரசுக் கட்சியும் இலங்கைத் தொழிலாளர் கழகம் என்ற தொழிற்சங்க அமைப்பை 62ஆம் ஆண்டளவில் உருவாக்கியது. எனினும் மலையக மக்களுக்கு இக்கழகம் அந்நியப்பட்டே இருந்தது. தொண்டமான் தமிழரசுக் கட்சித் தலைவர்களோடு தன்னை நெருக்கமாகக் காட்டிக் கொண்டதோடு இக் கழகத்தின் வளர்ச்சியும் முடிவுக்கு வந்தது.

இன்று மலையகத்தில் தொண்டமானுடைய தொழிற் சங்கமும் ஐ. தே. .கவின் லங்கா தேசிய தோட்டத் தொழிலாளர்; சங்கமுமே பெரியவை. 20ற்கு மேற்பட்ட சிறு தொழிற்சங்கங்கள் அங்கு உள்ளன. இவை தமக்குள் ஒரு கூட்டமைப்பை உருவாக்கியுள்ளன. என்றாலும் மலையக மக்களுடைய போராட்டங்களை ஐ. தே. க. அரசைப் பாதிக்காத வண்ணம் இன்றளவும் தொண்டமான் நடந்து வருகின்றார்

Link to comment
Share on other sites

மலையக மக்கள் வரலாறு

1981ம் ஆண்டு சனத்தொகை கணக்கெடுப்பின் படி இலங்கையில் 8, 26,233 மலையக மக்கள் வாழ்ந்து வந்தனர். இது தொத்த சனத்தொகையில் 5.6 விழுக்காடாகும். சனத் தொகையில் 4வது இடம் ஆனால் 1911ம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி 5, 30, 000 மலையகமக்கள் 12,.9 விழுக்காடு. சனத்தொகையில் 2வது இடம் இந்த நிலை 1965ஆம் ஆண்டுவரை நீடித்தது. இதற்குக் காரணம் இவர்கள் கட்டாயமாக இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டதேயாகும். இதன் காரணமாக இலங்கையில் மொத்தத் தமிழர் தொகையே குறைந்தது.

எடுத்துக்காட்டு:

ஆண்டு சிங்களவர் தமிழர்

1971 66 % 32 %

1981 72 % 27 %

ஆங்கிலேயர் 1820ம் ஆண்டுகளின் பின்னர் தாம் இலங்கையில் புதிய பணிபுரிவதற்குத் தென்னிந்தியத் தமிழ் மக்களை ஏமாற்றி அழைத்து வந்தனர்.

குறிப்பாக பெருந்தோட்டப் பயிர்ச்செய்கை முறையில் குறைந்த வேதனத்தில் தொழிலாளிகளாக மதுரை, திருநெல்வேலி , இராமநாதபுரம் , தஞ்சாவூர் போன்ற மாவட்டங்களில் அப்போது நிலவிய கடுமையான பஞ்சத்தைப் பயன்படுத்தி வறுமையில் வாடிய மக்களை இங்கு அழைத்து வந்தனர்.

இங்கு மட்டுமல்ல பர்மா, மலேசியா , மேற்கிந்தியத் தீவுகள் , பிஜித்தீவுகள் போன்ற இடங்களுக்கும் கொண்டு செல்லப்பட்டனர். இங்கு வந்த மக்கள்பட்ட துயரங்கள் கணக்கற்றவை. இராமேஸ்வரத்திற்கு நூற்றுக்கணக்கான மைல் நடந்து வந்து பின்னர் தலைமன்னாரிலிருந்தும் கால் நடையாகக் கொண்டு செல்லப்பட்ட இம்மக்கள் தமது பயணத்தின் பொழுது மலேரியா போன்ற தொற்று நோய்களுக்கு ஆளாகிப் போதிய உணவின்றி 40 வீதம் வரை மடிந்தனர். 1823ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட 1வது கோப்பித் தோட்டத்தில் (கம்பளையில் சிங்கப்பிட்டிய) 14 மலையகத் தொழிலாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

பின்னர் கோப்பிக்கு ஏற்பட்ட நோயொன்றின் காரணமாக அது வீழ்ச்சியடைய 1867ம் ஆண்டு ஜேம்ஸ் ரெய்லர் தேயிலைப் பயிர்ச்செய்கையை இலங்கையில் ஆரம்பித்தார். இதன் பின்னர் மலையக மக்களின் தொகை வெகு வேகமாக அதிகரித்தது. 1827ம் ஆண்டு 10,000 ஆக இருந்த தொழிலாளர் தொகை 1877ம் ஆண்டு 1,45,000 ஆக அதிகரித்தது.

1933ம் ஆண்டுவரை பல இலட்சக்கணக்கான மக்கள் இங்கு வந்து சேர்ந்தனர். இவ்வாண்டின் பின்னர் இந்திய அரசு இலங்கைக்குத் தொழிலாளர் அனுப்பப்படுவதைத் தடைசெய்தது.

1931ம் ஆண்டு 1,00,000 மலையக மக்கள் வாக்குரிமை பெற்றிருந்தனர். மு .நடேசு ஜயர் எனப்படும் மலையக மக்களின் முதற் தொழிற்சங்கத் தலைவர். அத் தேர்தலிலே தெரிவு செய்யப்பட்டார்.

1947ம் ஆண்டு சோல்பரி திட்டத்தின்படி நடந்த 1வது நாடாளுமன்றத் தேர்தலில் 7 மலையகத் தமிழ்ப் பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்பட்டனர். மேலும் 20 தேர்தல் தொகுதிகளில் இடதுசாரிகள் வெற்றி பெறுவதற்கு இம்மக்களது வாக்குகளே தீர்மானிக்கும் சக்தியாக இருந்தன.

தேர்தலில் வலதுசாரி தொழிலாளியக் கட்சியான ஜ. தே. க 93 இடங்களில் 42 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது. இதனால் தமது நலன்கள் பாதிக்கப்படும் என அச்சமடைந்த ஜ. தே. க மலையக மக்களின் வாக்குரிமையைப் பறிப்பதற்குத திட்டமிட்டது. 1948ம் ஆண்டு சுதந்திர இலங்கையின் தமிழ்மக்கள் மீதான 1வது ஒடுக்குமுறைச் சட்டமாக இலங்கைப் பிரசாவுரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

அதற்குத் துணயாக 49ம் ஆண்டு இன்னும் 2 சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. 1949ல் இந்தியர், பாக்கிஸ்தானியர் பிரசாவுரிமைச் சட்டம் 1949ல் தேர்தல் திருத்தச்சட்டம் எனவே அவையாகும்.

1948ம் ஆண்டு இலங்கைப் பிரசாவுரிமைச் சட்டம் மிகக் கொடிய மனிதவுரிமை மீறல்ச் சட்டமாகும்.. 48ம் ஆண்டு மாசிமாதம் 4ம் திகதி வரை எல்லாருமே பிரித்தானியப் பிரசைகளாகக் கருதப்பட்டனர். ஆனால் இதன்பின் மலையக மக்கள் தாம் இலங்கைப் பிரசை என்பதை நிரூபிக்க வேண்டியேற்பட்டது.

சிங்களப் பெயரை உடையவர் இலங்கைப் பிரசையாக ஏற்றுக் கொள்ளப்படும் பொழுது தமிழ், முஸ்லீம் பெயரையுடைய இம்மக்கள் இலங்கைப் பிரசைகளாகக் கருதப்படவில்லை. இதன் பின்னர் மலையக மக்கள் தாம் இலங்கைப் பிரசை என்பதை நிரூபிக்கவேண்டி ஏற்பட்டது. அவர்கள் தமது தந்தை ழு ச தந்தைவழிப்பாட்டன் இலங்கையில்ப் பிறந்ததை நிரூபித்தல் வேண்டும்.

அக்காலகட்டத்தில் பிறப்புச் சான்றிதழ் பதிவு செய்யும் வழக்கம் இம்மக்களிடையே இருக்கவில்லை. இச்சட்டத்தை இப்போதைய தமிழ்த் தலைவர்களான பு. பு. பொன்னம்பலம் , சுந்தரலிங்கம் போன்றோர் ஆதரித்தனர். சிங்கள இடதுசாரிக் கட்சியினரும் வெறுமனே பேச்சளவில் எதிர்த்தனரே அன்றி வேறெதுவும் செய்யவில்லை.

தந்தை செல்வா மட்டுமே இன்று அவர்களுக்கு நாளை எங்களுக்கு என்று கூறி பொன்னம்பலத்தின் கட்சியிலிருந்து பிரிந்து 49ம் ஆண்டு இலங்கைத் தமிழரசுக்கட்சியை ஆரம்பித்தார். பிரசாவுரிமை பறிக்கப்பட்டபின்னர் 49ம் ஆண்டு தேர்தல் திருத்தச் சட்டமூலம் மலையக மக்களது வாக்குரிமையும் பறிக்கப்பட்டது.

பிரசாவுரிமைச் சட்டப்படி 1951ம் ஆண்டில் 8,25,000 பேருக்குப் பிரசாவுரிமை கோரி விண்ணப்பித்தனர். 62ம் ஆண்டு வரை ஏறக்குறைய 11 வருடங்கள் கழிந்த பின் 1,34,000 பேருக்கு மட்டுமே அதாவது விண்ணப்பித்தவர்களில் 16 விழுக்காட்டினருக்கு மட்டுமே பிரசாவுரிமை வழங்கப்பட்டது. எனவே இவ்வாறாக முதலில் வம்சாவளி மக்கள் என அழைக்கப்பட்டவர்கள் இப்பொழுது நாடற்ற மக்கள் என்று அழைக்கப்படலாயினர்.

Link to comment
Share on other sites

இலங்கையின் கட்சி முறையும் அதன் தோற்றமும்.

இலங்கையில் 1947ம் ஆண்டு பொதுத்தேர்தலை அடிப்படையாக வைத்து பலகட்சிகள் தோற்றம் பெறுகின்றன. 1920ம் ஆண்டளவில் இலங்கையின் தொழிற்சங்க முன்னோடியாகக் காணப்படும் A . E. குணசிங்க என்பவர் தொழிற்கட்சி என்னும் ஓர் அமைப்பை உருவாக்கினார். என்றாலும் அது ஒரு பரந்த கட்சியாகக் காணப்படுவதில்லை.

வெளிநாடு சென்று படித்துப் பட்டம் பெற்று பொதுவுடமைக் கருத்துக்களில் ஈடுபாடு கொண்ட கலாநிதி .S .A. விக்கிரமசிங்க , கலாநிதி . N .M. பெரேரா , கலாநிதி . கொல்வின் R. D. பிலிப். குணவர்த்தனா போன்றோர் ஏகாதிபத்திய எதிர்ப்பை மையமாக வைத்து 1935ம் ஆண்டளவில் இலங்கைச் சமசமாஜக் கட்சி என முதலாவது கட்சியினை ஆரம்பித்தனர்.

இலங்கைத் தேசிய காங்கிரசில் இருந்து வந்த பெரும்பான்மை உறுப்பினர்களைக் கொண்டு 1946ம் ஆண்டு D.S. சேனநாயக்கா ஜக்கிய தேசியக் கட்சியை ஆரம்பிக்கின்றார். இக்கட்சியோடு சிங்கள மகாசபை, முஸ்லீம் லீக் என்ற இரு அமைப்புக்களும் சேர்ந்து கொள்கின்றன. சிங்கள மகாசபை என்பது சிங்களக் கலாசாரங்களையும் புத்தமதப் பாரம்பரியங்களையும் பாதுகாப்பதற்காக 1937ம் ஆண்டு S. W . R. D. பண்டாரநாயக்கா என்பவரால் ஆரம்பிக்கப்பட்டதாகும்.

இதுபோலவே 1944ம் ஆண்டு G. G. பொன்னம்பலம் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் ( A. C. T. C ) எனும் கட்சியை ஆரம்பித்தார். 1947ம் ஆண்டுத் தேர்தலில் ஜ .தே. கட்சி 42 , இ. ச. ச. கட்சி (L. S .S. P ) 10, தமிழ் காங்கிரஸ் 7, இலங்கை இந்தியக் காங்கிரஸ் 6, ஏனைய இரண்டு பொதுவுடமைக் கட்சிகள் 8, எனஆசனங்களைப் பெற்றன.

இவ்வாறாகத் தேர்தலில் போட்டியாவதற்காக இக்கட்சிகள் அவசர அவசரமாக உருவாக்கப்பட்டன. காலப்போக்கில் இம் மூன்று கட்சிகளிலும் இருந்து பல்வேறு கட்சிகள் பிரிந்து தொடங்கப்பட்டன.

இலங்கை சமசமாஜக்கட்சியிலிருந்து பிலிப்குணவர்த்ததன 1950களில் பிரிந்து ( V.L.S.S.P ) என்றொரு கட்சியை ஆரம்பிக்கின்றார். அது போலவே எட்மன்ட் சமரக்கொடி என்பவர் 1960களில் ( L. S. S. R ( R )என்னும் கட்சியைத் தொடங்கினார்.

S. A. விக்கிரமசிங்க என்பவர் இரண்டாம் உலகப்போரின் சமசமாஜசக் கட்சியோடு ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக இலங்கை கொம்யூனிஸ் கட்சி (U. P)என்பதனை ஆரம்பித்தார்.

இக் கட்சி சோவியத் யூனியனுக்குச் சார்பான கட்சி. பின்னர் இக்கட்சியிலிருந்தும் 1960களில் N.சண்முகதாசன் என்பவர் பிரிந்து சீனச் சார்பான இலங்கைப் பொதுவுடமைக்கட்சியை ஆரம்பிக்கிறார்.

பின்னர் இதிலிருந்து றோகன விஜயவீர அதிதீவிரமான போக்குள்ள J.V.P. எனப்படும் மக்கள் விடுதலை முன்னனியை ஆரம்பிக்கின்றார்.

ஜ. தே. க. யின் 1வது அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த பண்டாரநாயக்க 1951ம் ஆண்டு ஜ. தே. க. வின் போக்குப் பிடிக்காமல் அதிலிருந்து பிரிந்து ( S . L. R. P )சிறிலங்கா சுதந்திரக் கட்சி என்பதனை ஆரம்பிக்கிறார்.

1944ம் ஆண்டு தோன்றிய தமிழ் காங்கிரஸ் கட்சி ஜ.தே க. வின் ஆட்சியோடு கூட்டுச் சேர்ந்து மலையக மக்களை நாடற்ரவராக அவர்களது குடியுரிமையைப் பறித்த கட்டத்திற்கு ஆதரவு கொடுத்த பொழுது S. J. V செல்வநாயகம் , வன்னியசிங்கம், ( கோப்பாய் கோமகன்) நாகநாதன் ஆகியோர் இலங்கை தமிழரசுக்கட்சியை (சமஸ்டிக் கட்சி) தொடங்கினார்கள். பின்னர் இதிலிருந்து தமிழர் சுயாட்சிக் கழகம் என்ற கட்சியை ஊர்காவற்துறை நவரத்தினம் ஆரம்பித்தார்

Link to comment
Share on other sites

ஆங்கிலேயர் இங்கு புகுத்திய அரசியல் வளர்ச்சி முறை.ஆங்கிலேயர் இங்கு புகுத்திய அரசியல் ஆட்சிமுறையின் வளர்ச்சி வித்தியாசமானது. தாங்கள் புகுத்திய அரசியல் முறையில் பல நச்சு விதைகளை விதைதத்து விட்டே சென்றனர். 1833ஆம் ஆண்டு கோல்புறூக் காலத்தில் தொடங்கி 47ஆம் ஆண்டு சோல்பரி அரசியல் திட்டம் வரை இவற்றை நாம் பார்க்கலாம்.

இலங்கையர்க்கும் ஆட்சியில் பங்கு பற்ற வாய்ப்பு அளிப்பதாகக் கூறி இவர்கள் உருவாக்கிய அரசியல் சீர் திருத்தங்கள் பெரும்பான்மை சிறுபான்மை மோதலைத் தூண்டி விடவும் சிங்களவர்களிடையே கண்டிச்சிங்களவர், கரையோரச்சிங்களவர், என்ற பிரிவினை வளர்க்கவும் வழிவகுத்தனர். தமக்கு ஆதரவான ஒரு மேட்டுக்குடி வகுப்பினை உருவாக்கி அதன்முலம் தமது நிர்வாகத்தை நடத்தித் தமது நலன்களைப் பாதுகாத்துக் கொண்டனர். இலங்கையில் உருவான இலங்கைத் தேசிய காங்கிரசில் இருந்த தேசியவாதிகள் மேட்டுக்குடி அரசியல் சீர் திருத்தவாதிகள் என்கின்ற இரண்டு பிரிவினரை இவர்கள் பயன்படுத்தினர்.

தேசியவாதிகள் தேசியவிடுதலையை விரும்பும் அதே சமயம் மாற்றுப் பிரிவினர், அல்லது பழமை பேரினவாதிகள் பேச்சுவாழ்த்தைகள் மூலம் ஆங்கிலேயரிடமிருந்து தமக்குக் கூடிய அதிகாரங்களைப் பெற்று, அவர்களின் கீழ் செயற்பட விருப்பம் கொண்டார்கள்.

இவ்விரண்டு பிரிவினரின் வேறுபாடுகளை ஆங்கிலேயர் தமக்குக் சாதகமாக்கிக் கொண்டனர். அதனை நாங்கள் 1924ஆம் ஆண்டு மனிங் என்பவரின் அரசியல் திட்டத்திலிருந்து புரிந்து கொள்ளலாம்.பலமான அரசியல் சக்தியாக இலங்கைத் தேசிய காங்கிரஸ் வளர்வதைத் தடுப்பதற்காகக் கண்டியர்களையும், தமிழர்களையும், தமக்கு சாதகமாகப் பயன்படுத்தினர். இவைவழியான தேர்தல் தொகுதி முறையைக் கொண்டு வந்தனர்.

அதேபோல பிரதேச வாரியான தேர்தல் தொகுதி முறையைக் கொண்டு வந்து மேட்டுக்குடி சிங்களவர், தமிழர்களிடையேயும் பிளவுகளையும் உருவாக்கினர். புதிய அரசியல் திட்டங்களில் தமிழருடைய செல்வாக்கு குறைந்ததனால் தமிழ்த்தலைவர்கள் முரண்படத் தொடங்கினர்.

இதனால் அருணாசலம் பதவி விலகினார். அதுபோலவே கண்டிய சிங்களவர்களும் தமக்கு கூடிய அதிகாரம் கோரி கண்டிய பிரச்சனைகளுக்கு சமஸ்டி அமைப்பே தீர்வைத்தரும் எனக் கூறினர். இதனை அப்போது இருந்த சிங்களத் தலைவர்கள் எதிர்த்தனர். (S.W.R.D பண்டாரநாயக்கா மட்டும் இதனை ஆதரித்தார்.) இவ்வாறாக ஆங்கிலேயரின் பிரித்தாளும் தந்திரம் வேலைசெய்யத் தொடங்கியது. 1911ம் ஆண்டு இலங்கையில் ஆங்கிலக் கல்வி கற்றோர் கரையோர சிங்களவரில் 3.5 விழுக்காடாகவும் தமிழரில் 3.1விழுக்காடாகவும் இருந்தது. இந்த இரண்டு பகுதி மக்களையே ஆங்கிலேயர் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தினர்.

அத்தகைய பழமைபேண் வாதிகளுக்குமாறாக தேசியவாதிகளும் யாழ்ப்பாணத்தமிழரிடையே தோற்றம் பெற்றனர். 1924ம்ஆண்டு யாழ்ப்பாணத்தில் ஒரு புதிய அமைப்பொன்று தோற்றுவிக்கப்பட்டது.

மாணவர் காங்கிரஸ் என்கின்ற பெயரில் வறண்டி பேரின்பநாயகம், எஸ் நடேசன், எம்.பாலசுந்தரம், நாகையா போன்றோரால் உருவாக்கப்பட்டது. இவர்களது நோக்கம் அந்;நியரிடமிருந்து விடுதலை பெறல், இனவாதத்தினை இல்லாதொழித்தல், தமிழரிடையே தீண்டாமையை ஒழித்தல், தமிழ்மொழியை வளர்த்தல். இவர்கள் இலங்கையிலே முதன்முறையாக 1924ம் ஆண்டும், 1913ம் ஆண்டும் நடாத்தப்பட்ட தேர்தல்களைப் புறக்கணிப்புச் செய்தனர்.

24ம் ஆண்டு மனிங் என்பவரின் திட்டப்படி நடைபெற்ற சட்டசபைக்கான தேர்தலையும் பின் 31ம் ஆண்டு டொனமூரின் திட்டப்படி நடைபெற்ற அரசாங்க சபைக்கான தேபுதலையும் பயனற்றவை எனக் கூறி புறக்கணிப்புச் செய்தனர்.

அதே சமயம் ஆறுமுகநாவலர் போன்றோர் ஆங்கிலேயரின் அந்நிய செல்வாக்கு பரவுவதைத் தடுக்கும்முகமாக சைவசமய தமழ் மொழி வளர்ச்சிக்காக இன்னொரு வகையில் முயன்றனர்.

மனிங் சீர்திருத்தங்களின் பின்னர் பிரதேசவாரியாக பிரதிநிதித்துவ முறை புகுத்தப்பட்டமையால் அதுவரை காலமும் பெரும்பான்மை இனமாகவே தங்களை மாற்றிவந்த தமிழ்த்தலைவர்கள் ஏமாற்றப்பட்டு விட்டதாக நினைத்தனர்.

அப்போது சிங்களத்தலைவர்கள் மேல்மாகாணத்தமிழர்களுக்கு ஒரு பிரதிநிதியை அளிப்பதாகக் கொடுத்த வாக்குறுதியை மீறினர். இதனைத் தொடர்ந்தே அருணாசலம் இராமநாதன் போன்றோர் தேசியகாங்கிரசிலிருந்து விலகினர்.

இதுபோலவே பின்னர் 1931ம்ஆண்டு டொனமூர் பரிந்துரைகளின் பின்னர் சர்வஜன வாக்குரிமை வழங்கப்பட்டு இலங்கை 50 தேர்தல் தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டு அரசாங்க சபையென்று ஒரு அமைப்பும் 7 துறைகளுக்குப் பொறுப்பான தற்போதைய அமைச்சரவைக்கு முன்னோடியான நிர்வாகக்குழு அமைப்பு முறையொன்றும் கொண்டு வரப்பட்டது.

இந்தப் புதியமுறையின் கீழும் தமிழ் மக்களுடைய அடிமைத்தனத்திற்கான அத்திவாரம் இடப்பட்டது. வடக்கிற்கு 4 தொகுதிகள் கிழக்கிற்கு 20 தொகுதி மட்டுமே தமிழருக்குக் கிடைத்தது. அதுமட்டுமன்றி 7 நிர்வாகக்குழுத்தலைவர்களும் முற்றிலும் சிங்களவர்களாகவே இருந்தனர்.

இந்த முறையில் விவசாயத்துறைக்குப் பொறுப்பாகவிருந்த பொன் ஸ்ரீபன் சேனநாயக்க திட்டமிட்ட சிங்களக் குடியேற்ற செயற்பாடுகளைத் தொடங்கினார். பட்டிப்பளை எனப்படும் கல்லோயா குடியேற்றத் திட்டத்திற்கான தொடக்கம் இக்கட்டத்திலேயே நிகழ்ந்தது.

பின்னர் சோல்பரியினுடைய பரிந்துரைகளின் படி இலங்கைக்கு ஆணிலப்பத அந்தஸ்து (டொமினியன்) வழங்கப்பட்டு பிரித்தானிய நாடாளுமன்ற சனநாயக முறையைப் பின்பற்றி (வெஸ்ட்மினிஸ்ர்முறைமை) மேற்சபையும் கீழ்ச்சபையையும் கொண்ட ஒரு நாடாளுமன்றமும், பிரதமமந்திரியைத் தலைவராகக் கொண்டஒரு முறையையும் புகுத்தப்படுகிறது. இலங்கை 95 தேர்தல் தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஏறத்தாழ 50லட்சம் வாக்காளர்கள் வாக்குரிமை பெற்றனர்.

புதியமுறையின் கீழ் தமிழர் சார்பாக தமிழ்காங்கிரஸ் கட்சி 47ம் ஆண்டு நடந்த முதல்தேர்தலில் 9 இடங்களை மட்டுமே பெறுகின்றது. இன்றிலிருந்து பெரும்பான்மை சிறுபான்மை என்கின்ற மோதல் படிப்படியாக வலுக்கத் தொடங்குகின்றது.

Link to comment
Share on other sites

ஆங்கிலேயரின் ஆட்சிக்காலம் ( 1796-1948).

தமிழீழ மக்களைப் பொறுத்தவரையில் ஆங்கிலேயருடைய ஆட்சிக்காலம் இன்றுவரை மாறாத தாக்கங்களை ஏற்படுத்திச் சென்றுள்ளது. ஆங்கிலேயர் தாம் அடிமைப்படுத்திய நாடுகளில் அங்கு வாழும் மக்களிடையே வேற்றுமைகளை உருவாக்கி பிரித்தாளும் தந்திரத்தின் அடிப்படையில் ஆண்டமைக்கு இலங்கையும் ஓது உதாரணம்.

ஆங்கிலேயர் இலங்கையை விட்டுச் சென்றபொழுது அரசியல் அதிகாரத்தை சிங்களவரிடமே ஒப்படைத்துச் சென்றதால் எமது மக்கள் இன்று போராட வேண்டி உள்ளது. அவர்கள் இங்கு புகுத்திய பெருந்தோட்டப் பயிர்ச் செய்கை இறுதியில் தமிழ் மக்களுக்கு பெரிய நாசத்தை விளைவித்தது.

தமிழ் நாட்டிலிருந்து இலட்சக்கணக்கான மக்களைக் கொண்டு வந்து குடியேற்றி அவர்களையும் இறுதியில் சிங்களவர் காலடியில் விட்டுச் சென்றனர். 1948ம் ஆண்டின் பின் பதவிக்கு வந்த சிங்களக் கட்சிகள் இனவாதம் பேசுவதற்கு ஒரு சில தமிழர்கள் ஆங்கிலம் கற்று அரசாங்கப் பதவிகளில் இருப்பதையும் மலையக மக்கள் கண்டிச் சிங்களவர்களுடைய இடங்களைப் பறித்துவிட்டதாகவும் இனவாதக் கூச்சல் எழுப்பி ஆட்சி செய்வதற்கும் ஆங்கிலேயர் வழிவகுத்தனர்.

ஆங்கிலேயர் 1833ம் ஆண்டு கோல்புறூக் என்பவரின் பரிந்துரையின் படி இலங்கை முழுவதையும் ஒரே நிர்வாகத்தின் கீழ்க் கொண்டுவந்தனர். முதலில் 5 மாகாணங்களாவும் பின்னர் 7 மகாணங்களாகவும் தமது நிர்வாக வசதிக்கேற்ப பிரித்தனர். இதன் பின்னர் மெல்ல மெல்ல ஒரு புதிய ஆட்சி முறையையும் இங்கு புகுத்தினர். அதற்கு வசதியாக ஆங்கிலக் கல்வியை கிறிஸ்தவ மிசனரிமாரின் உதவியோடு இங்கு புகுத்தினர்.

காலத்துக்கு காலம் மாற்றங்களைச் செய்து தரம் புகுத்திய முதலாளித்துவ பொருண்மிய முறைக்குப் பயன்படுத்தத்தக்க வகையில் ஒரு உள்நாட்டு மத்திய வகுப்பைத் தோற்றுவித்தனர். இதன் பயனாக படித்த பணமுள்ள தமிழ், சிங்கள உயர் குடியினரை மெதுவாக ஆட்சிப் பொறுப்புக்களில் பயிற்றுவிக்கத் தொடங்கினர்.

தொடக்கத்தில் கரையோரங்களிலே அங்கில மிசனரிமாரின் செல்வாக்கு காரணமாக கரையோர உயர்குடியினரே ஆங்கில அரசியலில் பங்கெடுத்தனர். தொடக்கத்தில் அதிக கல்வியும் தகுதியும் பெற்ற யாழ்ப்பாணத் தமிழர்கள் முன்னணி வகித்தனர்.

1916ம் ஆண்டு படித்த இலங்கையர் தெரிவுக்கான தேர்தலில் பொன்னம்பலம் இராமநாதன் என்பவர் சாதி குறைந்தவர் என்ற கருதப்பட்ட சிங்களவரைத் தோற்கடித்தார்.

இதுபோலவே 1919ம் ஆண்டு இலங்கையருக்கு கூடிய அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்று கோரி இலங்கைத் தேசிய காங்கிரஸ் உருவாக்கப்பட்டது. இதனுடைய முதல் தலைவராக பொன்னம்பலம் அருணாசலம் விளங்கினார்.

தொடக்கத்தில் எவ்வாறு இரு இனத்தைச் சேர்ந்த தலைவர்களும் ஒன்றாகச் செயற்பட்டாலும் 1920களின் பின்னர் தமிழ்த் தலைவர்கள் தமது கோரிக்கைகளைச் சிங்களத் தலைவர்கள் புறக்கணித் தொடங்கவே தேசிய காங்கிரசில் இருந்து விலகத் தொடங்கினர்.

1915ம் ஆண்டு இலங்கையின் முதல் இனக்கலவரம் என்று கூறப்படும் சிங்களவர்களும் முஸ்லீம்களுக்கும் இடையிலான வர்த்தகப் பிணக்கின் போது மூண்ட கலவரத்தை ஆங்கிலேயர் கடுமையாக அடக்கினர். இதன் போது பாதிக்கப்பட்ட சிங்களவருக்காக லண்டன் மாநகரம் சென்று வாதாடியவர் பொன்னம்பலம் இராமநாதன். இவர் இறுதியில் சிங்கள அரசியலிலிருந்து விலகி யாழ்ப்பாணம் வந்து கல்வியையும் சைவசமயத்தையும் வளர்ப்பதில் அதிக கவனம் செலுத்தினார்.

Link to comment
Share on other sites

தமிழீழம் குடியேற்ற நாடாக்கப்பட்ட வரலாறு

இலங்கை என்று அழைக்கப்பட்ட நாட்டிலே ஐரோப்பியர் வரமுன்னர் சுதந்திரமாக இயங்கிய மூன்று இராச்சியங்கள் இருந்தன.கண்டி, கோட்டை,யாழ்ப்பாணம் என்பனவே அவை.

யாழ்ப்பாண இராச்சியம் என்பது யாழ்ப்பாணப் பகுதியையும், தீவுப் பகுதிகளையும், மன்னார், முல்லைத்தீவுப் பகுதிகளையும் உள்ளடக்கியிருந்தது. 1619ம் ஆண்டு யாழ்ப்பாணம் அடிமைப்படுத்தப்பட்டது. அதாவது போர்த்துக்கேயர் யாழ்ப்பாணத்தை தங்கள் ஆட்சியின் கீழ் கொண்டு வந்தனர்.

இவ்வாறு எமது தமிழீழப் பகுதி அந்தியரிடம் அடிமைப்படுவதற்கு காரணம் என்ன? 15ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் பல புதிய மாற்றங்கள் தோன்றின. கொலம்பஸ், வஸ்கொடகாமா, மகலன், போன்ற கடலோடிகள் தென்னமரிக்க, ஆசிய, ஆபிரிக்க நாடுகளுக்கும் புதிய கடல் பாதைகளைக் கண்டு பிடித்தனர். இதன் மூலம் இந்நாடுகளிடமிருந்த செல்வங்களையறிந்து கொண்ட ஐரோப்பிய நாடுகள், வணிகம் செய்வதற்காக வருவது போல் வந்து இந்த நாடுகளை அடிமைப்படுத்தினர் இவ்வாறு போர்த்துக்கல், ஒல்லாந்து, ஸ்பெயின், பிரான்ஸ், இங்கிலாந்து, போன்ற நாடுகள் 3ம் உலக நாடுகளை அடிமைப்படுத்தின.

அதாவது தமது நலனுக்காக அப்பொழுது 3ம் உலகநாடுகள் என்று அழைக்கப்படும் ஆசிய, ஆபிரிக்க, தென்னமரிக்க (இலத்தீன் அமெரிக்கா) நாடுகளை அடிமைப்படுத்தி ஆண்டமையே ஏகாதிபத்தியங்கள் எனப்படும் இவ்வாறு அடிமைப்படுத்தப்பட்ட நாடுகள் குடியேற்ற நாடுகள் என்று அழைக்கப்படும்.

Link to comment
Share on other sites

யாழ்ப்பாண இராச்சியம் (கி.பி 13 - கி.பி 17 வரை)

யாழ்ப்பாண இராச்சியம் என்று கூறும்பொழுது போர்த்துக்கேயர் இலங்கை வந்தபொழுது யாழ்ப்பாணம், மன்னார், பனங்காமம், முள்ளியவளை, தென்னமரவடி ஆகிய வன்னி மையங்களைக் கொண்டிருந்த இராச்சியமாகக் கருதப்படுகின்றது. இவர்களது ஆதிக்கம் சில வேளைகளில் புத்தளம் கற்பிட்டி வiரைக்கும், பின்னர் நீர் கொழும்பு வரைக்கும் கிழக்குப் பகுதியில் பாணமை வரைக்கும் பரவியிருந்தது. போர்த்துக்கேயர் காலத்தில் வடக்கே யாழ்ப்பாண அரசு அடங்காப்பற்று வன்னிமை, திருகோணமலை, அம்பாறை, புத்தளம், மாவட்ட வன்னிமைகள் ஆகியனவே இவை.

பின்னர் யாழ்ப்பாண அரசு வீழ்ச்சியுற்றது. தமிழீழத்தின் கிழக்கிலும், மேற்கிலும் இந்தத் தமிழ் வன்னிமைகள் கோட்டை, கண்டி அரசுகளின் மேலாண்மைக்கு உட்பட்டு இருந்தன. ஆனால் வன்னியில் இருந்த அடங்காப்பற்று வன்னிமைகள் எவராலும் அடக்கி ஆளமுடியவிலலை. பின்னர் ஆங்கிலேயர் காலத்திலேதான் பண்டார வன்னியன் வீழ்ச்சியோடு இதுவும் வீழ்ச்சியுற்றது.

கி.பி 13ஆம் நூற்றாண்டிலே தோன்றிய யாழ்ப்பாண இராச்சியம் 17ஆம் நூற்றாண்டின் முற்பகுதிவரை நீடித்தது. பொதுவாக இதனை ஆண்ட அரசரை ஆரியச் சக்கரவர்த்திகள் என்று அழைப்பர்.

இவர்கள் தென்னிந்தியாவிலிருந்து இங்கு வந்து படையெடுப்புக்கள் நடத்தி வெற்றி கொண்ட பரம்பரை ஆகும். இவர்களது ஆட்சி மிகச்சிறப்பாக இருந்து வந்த காலத்திலே போர்த்துக்கேயர் ஆதிக்கத்துக்குப் பின்னர் அதனை எதிர்த்த சங்கிலி மன்னனுடைய தோல்வியோடு முடிவிற்கு வருகின்றது.

சங்கிலியன் இவர்களின் ஆதிக்கத்துக்கு எதிராகச் செயற்பட்டமையால் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்ற பேர்த்துககேயர் முயன்றனர். இதன்பின் 1560ஆம் ஆண்டு சங்கிலியனுக்கு எதிராகப் படையெடுப்பு நடத்தப்பட்டது. இதனைச் சங்கிலியன் முறியடித்தான். எனினும் பின்னர் ஏற்பட்ட பதவிப் போட்டிகள் காரணமாக சங்கிலியன் இறக்க பிலிட்டி ஒலிவேரா என்ற போர்த்துக்கேய தளபதி தலைமையில் ஒரு படை தரைவழியாகவும் அனுப்பப்பட்டது. தரை வழியாக வந்த 5000 போர்; வீரரைக் கொண்ட படை பூ நகரிக்கூடாகவே வந்தது. இவ்வாறாக 1019ஆம் ஆண்டு யாழ்ப்பாண இராச்சியம் வீழ்ச்சியடைந்தது. அப்போது ஆண்ட சங்கிலி குமாரன் என்பவன் சிறைப்பிடிக்கப்பட்டு கோவாவிற்கு அனுப்பப்பட்டான்.

Link to comment
Share on other sites

கதிரமலை அரசும் சிங்கை நகர் அரசும்

கதிரமலை அரசு கி.பி 1ம் நூற்றாண்டில்; இருந்து கி.பி 9ம் நூற்றாண்டு வரை நீடித்துள்ளது கந்தரோடை எனப்படும் கதிரமலையே ஈழமண்டல ஆட்சியாளர்களின் தலைநகரமாக உள்ளது.

இவ் அரசை தென்னிலங்கை பௌத்த ஆட்சியாளர்கள் பல்வேறு காலகட்டங்களில் படை எடுத்துத் தமது ஆட்சியின் கீழ் வைத்திருந்தனர். இது கி.பி 8ம் நூற்றாண்டு வரை அடிக்கடி ஆட்சிக்குட்படுத்தப்பட்டது.

இந்த வகையில் சிங்கள ஆட்சியாளர்களின் பிடியில் இருந்த இந்நகரை ஆட்சி செய்த 2ம் மகிந்த மன்னனுக்கு எதிராக (777-797) உத்தர தேசத்து முதலிகள் கிளர்ச்சி செய்தனர.;

இக்கிளர்ச்சிக்குக் கலிங்க தேசத்தவனான உத்தரசிங்கனே தலைமை தாங்கினான். நெடுங்காலமாக இழந்திருந்த உரிமையை மீட்கும் வகையில், போரிட்டு நாகதீபத்தை உத்தரசிங்கன் பெற்றுக்கொண்டான். இந்த நிகழ்வு கி.பி 785 இல் ஆகும்.

வெற்றி கொண்ட உத்தரசிங்கன் கதிரமலையை தலைநகராகக் கொண்டு, உத்தர தேசத்தை ஆண்டு வந்தான்.

கந்தரோடைப் பிரதேசம் பௌத்தத்தின் செல்வாக்கினால் பௌத்த மக்களது முக்கிய பிரதேசமாக மாறியிருந்தது. பௌத்தம் நாகதீபத்தில் பரவியிருந்த ஒரு காலகட்டத்தில் சிங்கள ஆட்சியாளர்களின் பிடியில் இருந்து விடுவித்தான். நகுலேஸ்வரர் கோயில்,மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில்களை உத்திரசிங்கனின் மனைவி மாருதப்புரவீகவல்லி கட்டுவித்தார்.

யாழ்ப்பாண இராட்சியத்தில் சைவம் இழிவு நிலையிலிருப்பதைக் கண்டு புத்தூக்கம் அளிக்க விரும்பிக் காசிப் பிராமணர்கள், பெரியமனத்தூளார் என்ற அந்தணர் என்பவர்களை வருவித்துள்ளான். இந்தியாவிலிருந்து சில விக்கிரகங்களை எடுத்து வரப்பட்டு இந்துக் கோயில்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு விக்கிரகங்கள் பல்வேறு முயற்சிகள் செய்தும் பௌத்தம் கதிரமலை, வல்லிபுரப் பகுதிகளில் நிலை கொண்டிருந்தது. அதாவது நாகதீபத்தின் மேற்குப் பகுதி கிழக்குப் பகுதி என்பன வேற்றுமத ஆதிக்கத்திலிருக்கத் தென்பகுpதி (யாழ்ப்பாணம்) மக்கள் விரும்பிக் குடியேறியிராத பிரதேசமாக விளங்கியது.

இத்தகைய நிலையில் தனது தலைநகரை இடம் மாற்றுவதற்கு உத்திரசிங்கன் விரும்பினான். இதனையே சைவம் சிறப்புறக்கூடிய புதியதொரு பிரதேசத்தை அவன் செய்ய விரும்பினான். இதன் விளைவே சிங்கநகர் உதயமானது.

உத்திரசிங்கன் புதிய தலைநகர் ஒன்றினைத் தன் இராட்சியத்தில் உருவாக்க விரும்பி வன்னிப் பிரதேசத்திற்கு திடீர் வி ஜயம் ஒன்றினை மேற்கொண்டான.; அவன் வன்னி மார்க்கமாகச் செல்கையில், வன்னியர்கள் ஏழு பேரும் எதிர்கொண்டு வந்த வன்னி நாடுகளைத் திறை கொடுத்து ஆள உத்தரவு கேட்டார்கள். அதற்கு உத்திரசிங்கன் சம்மதித்தான். அப்பிரதேசத்தில் அவன் உருவாக்கிக் கொண்டதே தலைநகர் சிங்கநகர் ஆகும்.

தமிழரசின் ஆரம்பத் தலைநகரான சிங்கநகர் என்பது யாழ்ப்பாணத்திற்கு வெளியே வன்னிப் பிராந்தியத்தில் குறிப்பாக பூநகரியில் இருந்ததெனக் கூறமுடியும். வல்லிபுரப் பகுதியிலேயே சிங்கைநகர் இருந்ததெனவும், நல்லூருக்கு அருகில் இருந்ததெனவும், வரலாற்றாசிரியர்கள் கொள்வது ஏற்றதாகவில்லை. சிங்கநகரை உத்திரசிங்கன் பகுதியிலேயே நிறுவினான், என்பது பொருத்தமானது.

ஜீ.புஸ்பரட்ணத்தின் ஆய்வுகளிலிருந்து பூநகரிப் பிரதேசம் பண்டைய இராட்சியம் ஒன்றின் தளமான பிரதேசமாக விளங்கியிருக்கின்றது எனத் தெரிகிறது. பூநகரிப் பிரதேசத்தில் கிடைத்த அகழ்வாராய்ச்சிப் பொருட்கள் இதனை நிரூபிக்கின்றன.

கி.பி.10ஆம் நூற்றாண்டில் அதாவது கி.பி.1003 இல் இராஜராஜ சோழன் இலங்கை மீது படையெடுத்து வெற்றிகண்டான் என்றும் 11ஆம் நூற்றாண்டின் பின் முற்பகுதியில் சோழர் ஆட்சி உத்தரப் பிரதேசத்தில் நிலவியதாகச் சான்றுகள் உறுதிப்படுத்துகின்றன.

உத்தரப்பிரதேசத்தைச் சோழரால் நியமிக்கப்பட்ட பிரதிநிதிகள் பலர் நிர்வகித்து வந்தார்கள். இச்சோழ மன்னனின் பிரதிநதியாக புவனேகவாகு சிங்கைநகரி;ல் ஆட்சிப் பொறுப்பில் இருந்துள்ளான். 13ஆம் நூ ற்றாண்டின் நடுப் பகுதி வரை சிங்கைநகர் வட இலங்கையின் தலைநகராகவும், இந்த அரசு சோழரின் ஆதிக்கத்தினுள்ளும் இருந்தது.

உத்திரசிங்க மன்னன் கதிரமலையிலிருந்து தனது தலைநகரைப் பு +நகரிக்கு மாற்றிக் கொண்டான். யாழ்ப்பாணக் குடா நாட்டில் பௌத்தமும் சிங்களவரும் ஆதிக்கம் பெற்றதால் இந்தத் தலைநகர் இடம் மாற்றம் நிகழ்ந்தது. மீண்டும் 13ஆம் நூற்றாண்டில் இந்த நிலைமை மாறியது. நாகதீவிலிருந்து சிங்களவர்கள் தென் புலம் பெயர்ந்தனர். கலிங்கத்து (மாகன்) மீண்டும் உத்தரதேச மன்னனாகச் சிங் கை நகரில் முடிசூடிக்கொண்ட செய்தி, எஞ்சிய பௌத்த சிங்களவரையும் இடம் பெயரச் செய்துள்ளது, எனத் தெரிவிக்கப்படுகின்றது.

Link to comment
Share on other sites

பெருங்கற்காலப் பண்பாடு

பெரிய கற்களை அமைத்து ஈமச் சின்னங்களை அமைத்ததால் இக் கலாச்சாரம் பெருங்கற்காலப் பண்பாடு எனப் பெயர் பெற்றது. ஆனால் கற்களால் அமைக்கப்படாத சவஅடக்கங்களும் தாழியடக்கங்களும் இப்பகுப்பில் அடங்கத்தவறவில்லை. காரணம் இவை யாவற்றுக்கும் இடையே இழைவிட்டோடும் பிற கலாச்சார அம்சங்களாகும். இவ் அம்சங்களிற் கறுப்பு சிவப்பு நிற மட்பாண்டங்கள், இரும்பாயுதங்கள்,பிற வெண்கலப் பொருட்கள், அணிகலன்கள்ஆகியன அடக்கினதும் இக்கலாச்சாரத்திற்குத் தனித்துவத்தினை அளிப்பனவாக மக்கள் குடியிருப்புக்கள், ஈமச்சின்னங்கள், குளங்கள், வயல்கள், ஆகியன விளங்குகின்றன. இத்தகைய ஓர் அமைப்பினையே தென்னிந்திய பெருங்கற்கால கலாச்சாரத்திலும் காண்பதால் அக்கலாச்சாரத்தின் படர்ச்சியே ஈழத்துப் பெருங்கற்காலம் எனவும் உறுதிப்படுத்தப்பட்டது.

இப் பண்பாட்டு மக்கள் வாழ்ந்த வசிப்பிடங்கள், அவர்கள் அமைத்த ஈமச்சின்னங்கள், சவ அடக்கங்கள்,வயல்கள்,குளங்கள், ஆகிய இந்த நான்கு அமச்சங்களும் இப்பண்பாட்டின் முதுகெலும்பாக விளங்கின.

இலங்கையில் வரலாற்று உதய காலம் கி.மு.1000 இற்கும் கி.மு. 300ற்கும் இடையில் நிலவியதாகக் கூறப்படுகிறது. இதன் தோற்றம் தென்னிந்தியப் பெருங்கற்காலப் பண்பாட்டின் முதுகெலும்பாக விளங்கின. வருகையே காரணமாக அமைந்த தென்பறைத் தொல்லியனாளர் பலர் ஏற்றுள்ளனர்.

இப்பண்பாடு பெருங்கற்காலப் பண்பாடு எனவும் இரும்புக்காலம் எனவும் குறிப்பிடப்படுகின்றது.காரணம

Link to comment
Share on other sites

குறுனிக்கற்காலப் பண்பாடு

வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தையே குறுனிக்கற் காலமாக ஆய்வாளர்கள் வகைப்படுத்தியுள்ளனர்.இப்பண்

Link to comment
Share on other sites

லெமூரியா அல்லது குமரிக்கண்டம் அல்லது கண்டுவானா

lemooriya.jpg

கோடான கோடி ஆண்டுகளுக்கு முன்னர் இன்று கடல்ப் பரப்பாக இருக்கின்ற இந்து சமுத்திரம் நீர் மூடாத நிலப்பரப்பாக பரந்து விரிந்து கிடந்தது.இன்று இந்தியத் துணைக்கண்டம், அவுஸ்ரேலியா கண்டம்

,ஆபிரிக்காக் கண்டம் என்பன அன்று ஒன்று சேர்ந்த நிலப்பரப்பாக இருந்தன. இந்த நிலப்பரப்பு கடற்கோள் ஒன்றின் தாக்கத்தினால் சிதறப்பட்டு இன்று இந்தியாகவும் அவுஸ்ரேலியாக் கண்டமாகவும்,

ஆபிரிக்கக் கண்டமாகவும் விரிந்து சென்றன.

லெமூரியாக் கண்டத்தின் ஒருபகுதி இந்து சமுத்திரத்தின் கீழ் மூழ்கிப் போய் உள்ளது. இன்று இந்து சமுத்திரத்தினுள் மூழ்கிப் போயுள்ள நிலப்பரப்பு என்பதைச் செய்மதிப் படங்களும் ,பண்டைத் தமிழ்ப் பட்டினமான

பூம்புகார்ப் பட்டினம் கடலுக்கடியில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின

Link to comment
Share on other sites

  • 6 months later...

1956ம் ஆண்டு முதல் இனக்கலவரம்

1956ம் யூலை 5ம் நாள் நடைமுறைக்கு வந்த சிங்கள மொழிச் சட்டத்தைதத் தொடர்ந்து தந்தை செல்வா தலைமையில் நடத்தப்பட் காந்தியப் போராட்டம் நசுக்கப்பட்டதை அடுத்தும் கொழும்பில் இனக்கலவரம் பரவியது. வீதியிலும் பேருந்துகளிலும் கண்ட வீதிகளிலும் கடைகளிலும் கொள்ளைகள் நடைபெற்றன. இக்கலவரங்கள் கிழக்கு மாகாணத்தில் கல்லோயா அம்பாறைப் பகுதிகளிலும் பரவியது.

தமிழர் பகுதிகளிலே குடியேற்றப்பட்ட சிங்களவர் இப்பகுதித் தமிழ்மக்களைத் தாக்கினர். பெண்கள், குழந்தைகள் உட்பட 150 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர்.

இக்கலவரம் தமிழ் மக்களை அச்சுறுத்தி சிங்களம் மட்டும் சட்டத்தை ஏற்றுக் கொள்ள வைப்பதற்காக பண்டாரநாயக்காவின் சிங்கள அரசால் மேற் கொள்ளப்பட்டது. இதனை சிங்களப் பிக்குகளும், ஏனைய சிங்களத் தீவிரவாதிகளும் நடத்தி முடித்தனர்.

Link to comment
Share on other sites

1956ம் ஆண்டு தமிழரசுக் கட்சியின் திருமலை மாநாடு

சிங்களம் மட்டும் மொழிச்சட்டத்தால் தமிழ்த் தேசியம் என்கின்ற தன்மான உணர்வு தமிழ் மக்களிடையே முளைவிட்டது. 56ம் ஆண்டு கலவரத்தால் கோபமும் அவமானமும் அடைந்த தமிழ்மக்களின் எண்ணங்களை உணர்ந்து கொண்ட தமிழரசுக்கட்சி திருமலையில் ஓகஸ்ட் மாதம் 19ம் திகதி 56ம் ஆண்டு தனது கட்சியின் தேசிய மாநாட்டை நடத்தியது. இங்கு தான் முதன் முறையாக நான்கு அம்சத்திட்டம் என்கின்ற பெயரில் தமிழ்மக்களின் அடிப்படைக் கோரிக்கைகளை அடைவதற்காக அகிம்சை வழியில் தொடர்ந்து போராடப் போவதாகவும் தீர்மானிக்கப்பட்டது.

Link to comment
Share on other sites

பண்டா - செல்வா உடன்பாடு 1957

தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட பின்னர் 57ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இவற்றை நிறைவேற்றக்கோரி சத்தியாக்கிரகப் போராட்டத்தை ஆரம்பிக்கப் போவதாக தமிழரசுக்கட்சி அறிவித்தது. இதைத் தொடர்ந்து பண்டாரவிற்கும் செல்வாவுக்கும் இடையில் பல முறை பேச்சுக்கள் நடந்தன. இதன் விளைவாகவே 1957ம் ஆணடு பண்டா - செல்வா உடன்பாடு ஏற்பட்டது. இது ஒரு முக்கியமான உடன்பாடு. ஏனென்றால் இன்றுவரை செய்யப்பட்ட உடன்பாடுகளை விட கூடியளவு அதிகாரங்களை இவ்வுடன்பாடு வழங்கியது.

இதன்படி தமிழர் பகுதிகளில் பிரதேசசபைகள் (Regional Council) அமைக்கப்பட்ட வடக்கில் ஒன்றும் கிழக்கில் இரண்டோ அதற்கு மேலும் என உருவாக்கப்படும் இச்சபைகள் மாகாண எல்லைகளைக் கடந்து இணைக்கப்படவும் வழிவகுக்கப்பட்டது.

மக்களால் நேரடியாகத் தெரிவு செய்யப்படும் இச்சபைக்கு, நாடாளுமன்றம் பின்வரும் அதிpகாரங்களை இச்சபைக்கு வழங்கவும் ஒத்துக்கொள்ளப்பட்டது. அவையாவன.

01 காணியும் காணி அபிவிருத்தியும்

02 விவசாயம் ( வேளாண்மைத் துறை )

03 கூட்டுறவுத் துறை

04 சுகாதாரம்

05 குடியேற்றத் திட்டங்கள்

06 கல்வி

07 கைத்தொழிலும் மீன்பிடித் துறையும்

08 சமூக சேவைகளும் வீட்டு வசதிகளும்

09 மின்சாரம்

10 வீதிகளும் நீர் விநியோகத் திட்டங்களும்தமிழரசுக் கட்சி தேசிய சிறுபான்மை இனத்தின் மொழியாக தமிழ் அங்கீகரிக்கப்படுமிடத்தும் வடக்கும் கிழக்கும் தமிழே அரசகரும மொழியாக இருக்குமிடத்தும் தமிழுக்குச் சம அந்தஸ்து என்கின்ற கோரிக்கையைக் கைவிடவும் சம்மதித்தது. இது போலவே மலையகமக்களுக்கான பிரசாவுரிமை வழங்கும் கோரிக்கையையும் தள்ளிப் போடச் சம்மதித்தது.

1957ம் ஆண்டு யூலை மாதம் 26ம் நாள் இவ்வுடன்பாடு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால் பண்டாரநாயக்கா எதிர்பார்த்தது போல் நடக்கவில்லை. சுpங்களம் மொழி மட்டும் சட்டத்திற்கும் பாதிப்பு இல்லாமல் செயற்பட்டாற்போதும் என்றே அவர் நினைத்தார். ஆனால் சிங்கள இனவாதிகள் அவ்வாறு நினைக்கவில்லை. ஜே. ஆர் அவர்களும் அவரது ஐ.தே. கட்சியும் (தமிழனுக்கு நாடு பிரித்துக் கொடுக்கப்பட்டு விட்டது ) என்று குரல் எழுப்பினார். 57ம் ஆண்டு ஒக்ரோபர் 4ம் திகதி களனி யாத்திரை என்று அழைக்கப்படும் பெரும் யாத்திரை ஒன்றை களனி ரஜமகாவிகாரையிலிருந்து கண்டி தலதா மாளிகை வரை நடாத்தப்பட்டது. அது மட்டுமன்றி டிசம்பர் மாதம் (57ம் ஆண்டு ) ஆங்கில முதலெழுத்துக்களுக்குப் பதிலாக வாகனங்களில் சிங்கள (சிறி ) எழுத்துப் பயன்படுத்தப்பட வேண்டும். எனச்சட்டம் கொண்டு வரப்பட்டது. உடனே தமிழரசுக்கட்சி பண்டா-செல்வா ஒப்பந்தத்தின்படி வடக்குக் கிழக்கில் சிங்கள சிறீ க்குச் சமமான தமிழ் எழுத்துக்கள் பயன்படுத்தப்பட வேண்டும் எனக்கோரியது. ஆனால் இக் கோரிக்கை ஏற்கப்படவில்லை. பதிலாக சிங்கள (சிறீ ) பொறிக்கப்பட்ட வண்டிகள் தமிழ்ப்பகுதிகளுக்கு அனுப்பப்பட்டன. இதனால் தமிழரசுக்கட்சி 58ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் திகதியிலிருந்து தமிழ் எழுத்துக்களை வாகனங்களில் பயன்படுத்துமாறு கோரியது. இதுவே சிறீ ) எதிர்ப்புப் போராட்டம் என அழைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நிலைமைகள் மோசமடையத் தொடங்கின. 58ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 9ம்திகதி சுகாதார அமைச்சராக இருந்த திருமதி விமலா விஐயவர்த்தனா தலமையில் பிக்குகள் ஊர்வலமாகச் சென்று பண்டாரநாயக்காவின் வதிவடத்தின் முன்னாற் சென்று பண்டா - செல்வா உடன்பாட்டைக் கிழித்தெறியுமாறு கோரி அங்கேயே இருந்து கொண்டனர். பண்டாரநாயக்காவும் அவர்கள் விருப்பப்படியே உடன்பாட்டைக் கைவிடுவதாக எழுத்தில் எழுதிக் கொடுத்தார். அத்தோடு ஒப்பந்தத்தின் கதையும் முடிந்தது.

Link to comment
Share on other sites

1958ம் ஆண்டு இனக் கலவரம்

பண்டா-செல்வா ஒப்பந்தம் கிழித்தெறியப்பட்ட பின்னர் மெல்ல மெல்ல இருபகுதியிலும் எதிர்ப்புணர்வுகள் அதிகரித்தன. சிங்கள சிறீஎதிர்ப்பைத் தமிழ்ப்பகுதிகளிற் தமிழரசுக்கட்சி தொடர்ந்தது.

அதே வேளை கொழும்பிலும் ஏனைய சிங்களப் பிரதேசங்களிலும் தமிழ் எழுத்துக்களைத் தார் பூசி அழிக்கும் வேலை தொடர்ந்தது. பௌத்த பிக்குகளே இதற்குத தலைமை தாங்கினர்.

தமிழருக்கு எதிராகச் சிங்களவரைக் கிளர்ந்தெழுமாறு இவர்கள் தூண்டினர். இதனால் கொழும்பிலும் ஏனைய நகர்ப்புறங்களிலும் ஆங்காங்கே தமிழர் தாக்கப்படுவதும் தமிழர் கடைகள் கொள்ளையிடப்படுவதும் வீடுகள் கல்லெறிக்குள்ளாக்கப்படுவது

Link to comment
Share on other sites

பண்டாரநாயக்கா கொலை.

1959ஆண்டளவில் பண்டாரநாயக்காவின் MEP எனப்படும் மக்கள் ஐக்கிய முன்னனியில் பிளவுகள் தோன்றின. இடது சாரிப் போக்குள்ள பிலிப் குணவர்த்தனா போன்றோரை விலக்குமாறு வலது சாரிப் போக்குள்ளோர்களும் பௌத்த பிக்குகளும் வற்புறுத்தினர். இதைத் தொடர்ந்து அவர் வெளியேற்றப்பட்டார்.

எனினும் பண்டாவின் போக்கில் திருப்தியடையாத வலது சாரி அமைச்சர்களும் பிக்குகளும் அவரைக் கொல்லத் திட்டமிட்டனர். பிக்குகள் முன்னனியின் செயலாளரும் களனி விகாரையின் அதிபதியுமான (ரஐமகாவிகாரை ) புத்திர கித்திரதேரோ தலைமையில் கொலைச் சதித்திட்டம் தீட்டப்பட்டது.

செப்ரெம்பர் 25 1959 ல் பிரதமரின் உத்தியோக பூர்வ வீட்டில் சோமராமதேரோவால் பண்டாரநாயக்கா சுட்டுக் கொல்லப்பட்டார். இதன் பின் நாடாளுமன்றம் டிசெம்பர் 1959 ல் கலைக்கப்பட்டது.

மார்ச் 1960 ல் புதிய தேர்தல் நடைபெற்றது. இவ்வாறாகத் தான் வளர்த்துவிட்ட பேரினவாதச் சக்தியினால் அவர்களை முற்றிலும் திருப்திப்படுத்தாத நிலையில் அவர்களாலேயே பண்டா பலியெடுக்கப்பட்டார்.

http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=9&

Link to comment
Share on other sites

1960-1970 அகிம்சை வழியிலான போராட்ட முனைப்புகளின் முடிவும் புதிய போராட்ட வடிவத்தின் ஆரம்பமும்.

1960 மார்ச் நடைபெற்ற தேர்தல் இனவாதத்தின் அடிப்படையிலே நடாத்தப்பட்டது. ஐனவரி 2ம் திகதி 60ம் ஆண்டிலிருந்து இலங்கையில் நிர்வாகமுறை சிங்கள மொழிக்கு மாற்றஞ்செய்யப்பட்டது. அன்றையதினம் தமிழ்ப் பகுதிகளில் தமிழரசுக்கட்சி பூரணகர்த்தாலை மேற்கொண்டது. எனவே மார்ச் 60 தேர்தலில் போட்டியிட்ட எல்லாக் கட்சிகளும் தமிழர்க்கு எதிரான இனவாதத்தைத் தமது வெற்றிக்கு வாய்ப்பாகப் பயன்படுத்த முயன்றனர்.

தகுந்த தலைமை இல்லாததால் சிறீலங்கா சுதந்திரக் கட்சி தேர்தலில் 46 இடங்களை மட்டுமே பெற்றிருந்தது. தமிழரசுக்கட்சி 15 இடங்களைப் பெற்றது. ஐ. தே. க. 50 இடங்களைப் பெற்றது. இந்நிலையில் டட்லி சேனநாயக்கா தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியை அமைத்தது. S .L. F. P யோ , தமிழரசுக்கட்சியோடு இரகசியப் பேச்சுக்களை நடாத்தியது. தமக்கு ஆதரவளித்தால் திரும்பவும் பண்டா-செல்வா உடன்பாட்டை நடைமுறைப்படுத்துவதாகக் கூறியது.

இதை நம்பிய தமிழரசுக்கட்சி ஏப்பிரல் 1ம்திகதி நடந்த வாக்கெடுப்பில் ஐ. தே. க தோற்றடிக்கப்பட்ட பொழுதும் தமிழரசுக்கட்சி எதிர் பார்த்தது போல் S. L. F. P யில் அரசாங்கத்தை அமைக்க முடியவில்லை. ஏனென்றால் டட்லி தான் தோற்றடிக்கப்பட்டபின் நாடாளுமன்றத்தைக் கலைத்து யூலை 60ல் மீண்டும் தேர்தல் நடைபெறும் என்று அறிவித்துவிட்டார்.

தமிழரசுக்கட்சியைப் பொறுத்த வரையில் அதனுடைய தலைமை எப்பொழுதுமே கொழும்புவாழ் மேட்டுக்குடித் தமிழரின் செல்வாக்கிற்கு உட்பட்டேயிருந்தது. அது போலவே இக்கால கட்டத்திற் திருச்செல்வம் எனப்படும் கொழும்பு வாழ் உயர் வழக்கறிஞர் ஒருவரின் முயற்ச்சியாலே சிங்களக்கட்சிகளோடு தரகுப்பேச்சு வார்த்தைகள் நடைபெற்றது. ( இத்தகைய பேர்களுக்கு எதிராகச் செயற்பட்ட சி. வன்னியசிங்கம் என்பவர் 1959ம் ஆண்டே இறந்து விடுகிறார்.)

http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=9&

Link to comment
Share on other sites

யாழ்பாணத்தின் வரலாறு

யாழ்ப்பாணத்தின் வரலாறு, பாதுகாப்பு, பொருளாதாரம், நாட்டாரியல் இப்படிப் பல விடயங்களுடனும் பின்னிப் பிணைந்த சிறப்புடையது, ஹம்மன் ஹீல் என்றும் பூதத்தம்பி கேட்டை என்றும் வழங்கப்படும் கடற்கோட்டை பாக்கு நீரிணையூடாகச் சென்ற பன்நாட்டுக் கடற்பாதையில் இருந்து யாழ்ப்பாணப் பரவைக் கடலுள் நுழையும் வழியை அரண்செய்தது இக்கோட்டை இங்கிருந்து தென்மேற்காக நெடுந்தீவு சென்று அங்கிருந்து ராமேஸ்த்திற்கோ அல்லது மன்னார், கொழும்பிற்கோ செல்லலாம். வடக்கில் கோடிக்கரைக்கோ நாகப்பட்டினத்திற்கோ போய் அங்கிருந்து கிழக்காக, பத்தாவது அகலக்கோட்டைப் பின்பற்றித் தென்கிழக்காசியாவிற்கும் சீனாவிற்கும் போகலாம். நேர் வடக்கில் இந்தியாவின் கிழக்குக் கரையோரமாக எந்தத்துறை முகத்திற்கும் போக முடியும். மேற்குத் திசையில் தொண்டி, அதிராம் பட்டினத்திற்கும் தென் கிழக்கில் யாழ்ப்பாணத்திற்கும் பூநகரிக்கும் போகலாம்.

காரைநகருக்கும், ஊர்காவற்துறைக்கும் இடையில் பரவைக் கடலின் தலைவாயிலில் அமைந்த திட்டொன்றில் ஒல்லாந்தரால் கட்டப்பட்ட இந்தக் கோட்டையில் இருந்து, யாழ்ப்பாணக் கோட்டையைப் பார்க்கவும் முடியும். பாதுகாக்கவும் முடியும். இந்த இடத்தின் கடற்பாதை முக்கியத்துவம், பாதுகாப்பு முக்கியத்துவம் காரணமாக, கடற்கோட்டைக்கு நேர் எதிராக ஊர்காவற்றுறைப் பக்கம் எய்றி (Fort Eyrie) என்றழைக்கப்பட்ட ஒரு கோட்டையை போர்த்துக்கேயர் ஏற்கனவே கட்டியிருந்தார்கள். அது இப்பொழுது பாழடைந்த நிலையில் உள்ளது.

ஊர்காவற்றுறைக்கு முயலவள என்று வழங்கப்படும் பெயர் முயலள என்ற போர்த்துக்கேயச் சொல்லில் இருந்து வந்ததாகக் கருதப்படுகின்றது. இச்சொல், துறைமுகம் அல்லது துறைமுகமேடை எனப்பொள்படும் ‘கீ’ என்று உச்சரிக்கப்படும் Qyal என்ற ஆங்கிலச் சொல் இதற்குச் சமதையானது.

ஊர்காவற்றுறையென்று இன்று எழுத்துத் தமிழ் வடிவம் பெற்றிருக்கும் இந்த இடம்பெயர் , ‘ஊறாத்துறை’ என்றே பேச்சு வழக்கில் உள்ளது. 12ஆம் நூற்றாண்டுத் தமிழ்க்கல்வெட்டுக்களில் ஊராத்துறை என்று அழைக்கப்பட்டிருக்கிறது. ஸிகர தித்த என்று சூளவம்சத்திலும் ஹிராதொட அல்லது ஊராதொட என்று பூஜாவலிய, ராஜாவலிய, நிகாயஸங்கிரஹய போன்ற இலங்கையிலும் குறிப்பிடப்பட்டிருக்கின்றத

Link to comment
Share on other sites

ஆரியச் சக்கரவர்த்திகள்

ஆரியச் சக்கரவர்த்திகள் என்பது, இலங்கைத் தீவின் வட பாகத்திலிருந்த யாழ்ப்பாண இராச்சியத்தை 13 ஆம் நூற்றாண்டு தொடக்கம் 17ஆம் நூற்றாண்டு முற்பகுதி வரை ஆண்ட அரச வம்சத்து மன்னர்களைக் குறிக்கும். இவ்வம்சத்தின் தோற்றம் பற்றியோ இவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்பது பற்றியோ எல்லோரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தகவல்கள் ஏதும் இல்லை. யாழ்ப்பாணத்தின் வரலாறு பற்றிக் கூறும் வையாபாடல், யாழ்ப்பாண வைபவமாலை போன்ற நூல்கள், யாழ்ப்பாண அரசு அரசனில்லாது இருந்தபொழுது, தமிழ்நாட்டிலிருந்து அழைத்துவரப்பட்ட இளவரசனாலேயே இந்த வம்சம் ஆரம்பித்துவைக்கப் பட்டதாகக் கூறுகின்றன.

எனினும் இம் முதல் ஆரியச் சக்கரவர்த்தியின் காலம் பற்றியோ அல்லது அவ்வரசனுடைய அடையாளம் பற்றியோ பொதுக்கருத்துக் கிடையாது. வடமேற்கு இந்தியாவின், குஜராத், கிழக்கிந்தியாவிலிருந்த கலிங்க தேசம், தமிழ் நாட்டிலுள்ள ராமேஸ்வரம், சோழநாடு போன்ற பல இடங்களையும், அவர்களது பூர்வீக இடங்களாகக் காட்டப் பல ஆய்வாளர்கள் முயன்றுள்ளார்கள்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள நூல்கள் முதலாவது ஆரியச் சக்கரவர்த்தியை கூழங்கைச் சக்கரவர்த்தி, விஜய கூழங்கைச் சக்கரவர்த்தி, கோளறு கரத்துக் குரிசில் எனப் பலவாறாக குறிப்பிடுகின்றன. அவ்வரசனின் கையிலிருந்த ஊனம் (கூழங்கை) காரணமாகவே இப்பெயர்கள் வழங்கியதாகக், காரணமும் கூறப்படுகிறது.

இது தவிர, 13ஆம் நூற்றாண்டில், தமிழ்ப் படைகளின் உதவியோடு வட பகுதி உட்பட்ட இலங்கையின் ஒரு பகுதியைக் கைப்பற்றிய கலிங்க தேசத்தவனான, கலிங்க மாகன் என்பவனே முதல் ஆரியச்சக்கரவர்த்தி எனவும் சிலர் நிறுவ முயற்சித்துள்ளார்கள். காலிங்கச் சக்கரவர்த்தி என்பதே கூழங்கைச் சக்கரவர்த்தியெனத் திரிபடைந்திருக்கக் கூடும் என்பது அவர்களது கருத்து.

இவ்வம்சத்தின் தோற்ற காலம் பற்றியும், வாதப் பிரதிவாதங்கள் உண்டு. யாழ்ப்பாண வைபவமாலை, வையாபாடல் போன்றவை முதலரசன் காலத்தை முறையே --க்கும், --க்கும் முன்தள்ளியுள்ளன. எனினும் தற்கால ஆய்வாளர்கள், முதல் ஆரியச்சக்கரவர்த்தியின் காலம் 13ஆம் நூற்றாண்டு என்றே நம்புகிறார்கள். இவ்வம்சத்தைச் சேர்ந்தவர்களாகப் போர்த்துக்கீசருக்கு முன் 13 பெயர்களும், போர்த்துக்கீசர் காலத்தில் -- பெயர்களுமாக மொத்தம் -- அரசர்கள் குறிக்கப்படுகின்றனர். இவர்கள் பரராசசேகரன், செகராசசேகரன் என்ற சிம்மாசனப் பெயர்களை மாறிமாறி வைத்துக்கொண்டு அரசாண்டார்கள்.

http://ta.wikipedia.org/இலிருந்து மீள்விக்கப்பட்டது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் உங்கள் இருவருக்கும்.ஈழவன்,பிரசன்னா தொடருங்கள்.

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் உங்கள் இருவருக்கும்.ஈழவன்,பிரசன்னா தொடருங்கள்.

நன்றிகள் கு.சா அங்கிள் :mellow:

Link to comment
Share on other sites

ஒரு தமிழகத்தவனின் பார்வையில் தமிழீழ வரலாறு

ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டமானது அரை நூற்றாண்டு காலமாக வெவ்வேறு வடிவங்களைப் பெற்று ஒரு பரிணாம வளர்ச்சியை அடைந்துள்ளது எனக் கூறலாம். தற்கால ஆயுதந்தாங்கிய வடிவத்தை மட்டும் உற்று நோக்குவோர் அதன் பயங்கர விளைவுகளைக் கண்டு, இதைப் பயங்கர வாதம், பிரிவினை வாதம் எனத் தப்பான பெயர்களைச் சூட்டுவது இதன் பரிணாம வளர்ச்சியை மறைப்பதாக மட்டுமல்லாமல், ஒடுக்கப்பட்ட ஒரு இனத்தின் அடிப்படை உரிமைகளை ஏற்க மறுப்பதாகவும் அமைகின்றது. எனவே இச்சிறிய கட்டுரை இப்போராட்ட வரலாற்றுப் பரிணாம வளர்ச்சியின் வெவ்வேறு வடிவங்களைச் சுட்டிக் காட்டுவதோடு அதன் அடிப்படையில் இவ்வடிவங்கள் காலத்தின் தேவையால் ஈழத்தமிழினத்தின் மீது திணிக்கப்பட்டவை என்பதனையும் எடுத்துக் காட்டுகின்றது.

இலங்கைத் தீவின் பூர்வீக குடிகள் யார் என்பது புராணங்களில் புதைந்து கிடப்பதனால், இன்றும் இது ஒரு விவாதத்திற்குரிய விடயமாகவே அமைகின்றது. இது அர்த்தமற்றது. இவ்விவாதம் கப்பல் ஒன்று நீரில் மூழ்கிக் கொண்டு இருக்கும் பொழுது அதை உருவாக்கியோரைப் பற்றிய விவாதத்தைப் போன்றதாகும். அது மூழ்குவதற்கான காரணத்தைக் கண்டறிந்து ஆவன செய்வதே அர்த்தமுள்ளது. இன்று இலங்கை வாழ் மக்களின் தேசிய பிரச்சினையான இனப்பிரச்சினைக்கு, எல்லா மக்களுக்கும் நிறைவான வாழ்வைக் கொடுக்கக் கூடிய ஒரு தீர்வை எட்ட வேண்டுமாயின், இன்று இலங்கைத்தீவு மொழி, மத, கலாச்சார, சமூக, பாரம்பரிய அடிப்படையில் பல்இன மக்களைக் கொண்டுள்ளமை அடிப்படையாக ஏற்றக்கொள்ளப்பட வேண்டியதொன்றாகும்.

அடுத்தடுத்து வந்த மேலைத்தேய வல்லரசுகளின் (போத்துக்கேய, ஒல்லாந்த, பிரித்தானிய) ஆதிக்கத்தின் கீழ் இலங்கைத் தீவு உட்படுத்தப்படுமுன் (போத்துக்கேயர் 1505 இல் வணிக நோக்குடன் கால் வைத்தது முதல் ) இலங்கை மூன்று (கோட்டை, கண்டி, சீதாவாக்கை அல்லது முதல் இரண்டு) சிங்கள இராட்சியங்களையும் ஒரு (யாழ்ப்பாணம்) தமிழ் இராட்சியத்தையும் கொண்டிருந்தமை சரித்திரம் கூறும் உண்மை. பிரித்தானிய ஆட்சிக்கு 1802 இல் இலங்கைத்தீவு கையளிக்கப்பட்டபோது கைச்சாத்திடப்பட்ட ஆமியன்ஸ் ( Amiens ) ஒப்பந்தத்தோடு இணைக்கப்பட்ட இலங்கைத் தீவின் வரைப்படமே இதை எடுத்துக்காட்டுகின்றது. மேலும் சர். கியுக் கிளேகோன் ( Sir. Hugh Cleghorn) ) 1799இல் பிரித்தானிய அரசுக்கு வரைந்த உத்தியோக பூர்வக் குறிப்பில் இலங்கைத் தீவின் வடகிழக்குப் பகுதி பண்டைக் காலத்தில் இருந்து தமிழர்களின் கைவசமுள்ளமைஇயும் இவர்கள் சிங்களவரில் இருந்து சமயம், மொழி, கலாச்சாரம் என்பனவற்றில் வேறுபட்டவர்கள் என்பதையும் விரித்துக்கூறுகின்றார். ஆயினும் 1815 இல் கண்டி இராச்சியமும் 1818 வன்னிக் குறுநிலத் தலைவர்களும் பிரித்தானிய ஆதிக்கத்திற்கு அடிபணிந்த பின்பு, இலங்கைத் தீவை, அதன் அரசியல் அல்லது தேசியகூறுகளைக் கருதாது அதனை ஓர் புவியியல் கூறாகக் கருதி, தமது நிர்வாக நலன்களுக்காக 1833இல் ஒருங்கிணைத்தனர். எனினும் தேசவளமை போன்ற நடைமுறைச் சட்டங்கள் தொடர்ந்தன. ஏறத்தாழ ஒரு நூற்றாண்டு காலமாக, 1948இல் பிரித்தானிய அரசில் இருந்து இலங்கை சுதந்திரம் பெறும் வரை இலங்கைத்தீவு முழுவதையும் ஒரு தனி நிர்வாக அலகாக அமைக்க எடுத்த முயற்சிகள் முழுக்க முழுக்கப் பயனளிக்கவில்லை.

பிரித்தானிய ஆதிக்கத்தில் இருந்து இலங்கை சுதந்திரமடைந்ததன்பின் சிங்கள அரசு தமிழ் மக்களின் தேசிய உணர்வை நசுக்கும் அல்லது அழித்தொழிக்கும் நோக்குடன் பல சட்ட திட்டங்களைப் புகுத்தியது. S. W. R. D.பண்டாரநாயக்கா, தமது குறுகிய சுய நல நோக்கிற்காகக் ( Sinhala Only ) சிங்களம் மட்டும் அரசியல் மொழியாகப் பிரகடனப்படுத்தப்படுத்தினார

Link to comment
Share on other sites

தமிழும், திராவிடமும்!

உலகின் மூத்தமொழி. கல்தோன்றி, மண்தோன்றா காலத்து மனிதர்கள் பேசி மகிழ்ந்த மொழி. ஆரியக் கலாச்சார, சமஸ்கிருத ஊடுருவல், மொகலாய உருது, பார்சி, வெள்ளையரின் ஆங்கிலேய ஊடுருவல்களையும் சமாளித்து நின்று இன்றும் வாழும் ஒரே மொழி தமிழ்மொழி.

சமயம் மட்டுமே இம்மொழியைக் காத்தது என்ற புனையுரைகள் இணையத்தில் புனையப்பட்டு வரும் சூழ்நிலையில் இனமான திராவிட இயக்கத்தின் பங்களிப்பு இம்மொழியின் வளர்ச்சிக்கு எத்தகையது என்று விளக்க வேண்டிய அவசியம் நமக்கு இயல்பாகவே எழுகிறது.

பண்டிதர்களும், சமயத் தலைவர்களும் தங்களுக்குள்ளாகவே நம் மொழியின் பயன்பாட்டினை பிரித்து எடுத்துக் கொண்டு சமயம் பரப்ப மொழியைப் பயன்படுத்திய வேளையிலே திராவிடர் இயக்கம் மட்டுமே தமிழை பாமரருக்கும் உரிமை கொண்டதாக்கியது.

தமிழிலே புதிய சொற்களை அறிமுகப்படுத்தியதில் முன்னோடிகளாக மறைமலையடிகளாரும், திரு.வி.க.வும் மற்ற பேராசிரியர்களும் பாடுபட்ட போதிலும், அவர்களது பணி எந்த அளவுக்கு மக்களை அடைந்தது என்பது கேள்விக்குறியே. புதுத்தமிழை சாமானியனும் பயன்படுத்தலாம், படைப்புகளை உருவாக்கலாம் என்ற சூழ்நிலையை உருவாக்கியவர்கள் திராவிட இயக்க முன்னோடிகள்.

தேசிய இன உணர்வானது தேசிய மொழியையே நேசிக்கச் செய்யும் இயல்பு கொண்டது என்ற நிலையில் மண்டல மொழியான தமிழின் தனித்தன்மையை காக்கும் வேலையை திராவிடர் இயக்கம் செவ்வனே செய்தது. சமயங்கள் தமிழை வாழவைத்தது என்ற கருத்தாக்கத்தை நாமும் ஒப்புக் கொண்டாலும் கூட சமயத்தமிழால் அடித்தட்டு தமிழனுக்கு விளைந்த நன்மை என்ன என்ற நியாயமான துணைக்கேள்வியையும் நம்மால் புறந்தள்ள முடியாது.

கூடுமானவரை வடமொழிச் சொற்களை தமிழில் இருந்து அகற்றி திராவிடர் இயக்கம் மக்களுக்குத் தந்த தமிழ் உரைநடைத் தமிழாக இருந்தாலும், அத்தமிழ் மக்களிடையே ஏற்படுத்திய எழுச்சியினை எந்தக் கொம்பனாலேயும் மறுக்க முடியாது.

திராவிடர்கள் நடத்திய பத்திரிகைகளான குடியரசு, விடுதலை, திராவிடன், திராவிடநாடு, முரசொலி, முத்தாரம், தோழன், நகரதூதன், போர்வாள், தாய்நாடு, குயில், இனமுழக்கம், தென்றல், தென்னகரம், தாரகை, தன்னாட்சி, தனியரசு, மாலைமணி, நம்நாடு, பிறப்புரிமை, நக்கீரன், அண்ணா, தென்புலம், மன்றம், முல்லை, நீட்டோலை, புதுவாழ்வு, தம்பி, மக்களாட்சி, அறப்போர், அன்னை, முன்னணி, காஞ்சி, பகுத்தறிவு, உரிமை வேட்கை, மக்களரசு, தீப்பொறி, ஈட்டி, திராவிடஸ்தான், தமிழரசு, தென்னரசு, திராவிட ஏடு, அருவி, பொன்னி, ஞாயிறு, பூம்புகார், வெள்ளி வீதி, கனவு, அமிர்தம், தஞ்சை அமுதம், தென்னாடு, முன்னேற்றம், தீச்சுடர், களஞ்சியம், திருவிடம், பூமாலை, சங்கநாதம், எரியீட்டி, புரட்சிக்குயில், திருவிளக்கு ஆகியவவை எளிய உரைநடையில் புதுத்தமிழ் சொற்களை சாமானிய மக்களிடையே பரப்பியது.

வேறு வழியில்லாமல் கல்கி, ஆனந்தவிகடன், சுதேசமித்திரன் போன்ற ஆரியப் பத்திரிகைகளும் தங்களது சொந்த அடையாள நடையை மாற்றவேண்டிய கட்டாயம் இப்பத்திரிகைகளால் ஏற்படுத்தப்பட்டது. பழைய ஆனந்தவிகடன், கல்கி இதழ்களை இன்றைய இதழ்களோடு ஒப்பிட்டுப் பார்த்தோமேயானால் இந்த உண்மை புலப்படும்.

இதுமட்டுமல்லாமல் சிறுகதை, நெடுங்கதை, கவிதை, நாடகம், திரைப்படம் என இலக்கியத்தின் மற்ற கூறுகளிலும் திராவிட இயக்கத்தின் அழகுத்தமிழ் அரசாட்சி மொழியின் பயன்பாட்டை அதற்குரியவர்களுக்கு கொண்டு சென்றது. துக்ளக் ஆசிரியர் சோ ராமசாமியே பலமுறை ஒத்துக் கொண்ட ஒரு உண்மை “திராவிட இயக்கத்தினரால் தமிழர்களுக்கு நல்ல தமிழ் கிடைத்தது” என்பது.

புலவர் குழந்தையின் “இராவணக் காவியம்”, அதுவரை இருந்த இதிகாசத் தமிழ் செயற்பாட்டுக்கு மரண அடி கொடுத்தது.

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், பேரறிஞர் அண்ணா முதற்கொண்டு திராவிட இயக்கத்தின் கடைநிலை எழுத்தாளர் வரை இனமான எழுச்சித் தொடரினை தமிழரிடையே தொடக்கி வைத்தார்கள்.

தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனாரின் தினத்தந்தி எளியத் தமிழில் தினச்செய்திகளை தமிழருக்கு தரத் தொடங்கியது.

தமிழர்களின் வாழ்விலையில் முறையில் நடக்கும் இயல்பான நிகழ்ச்சிகளின் தலைப்புகள் தனித்தமிழில் மாற்றப்பட்டது திராவிட இயக்கம் தமிழ் மொழிக்கு செய்த மறுக்க முடியாத சாதனை எனலாம்.

விவாகசுபமுகூர்த்தப் பத்திரிகை – திருமண அழைப்பிதழ்

கர்ணபூஷனம் – காதணிவிழா

ருதுசாந்தி – மஞ்சள்நீராட்டு விழா

கிரஹப்பிரவேசம் – புதுமனை புகுவிழா

உத்தரகிரியை – நீத்தார் வழிபாடு

நமஸ்காரம் – வணக்கம்

இவ்வாறாக அன்றாட வாழ்க்கையில் தமிழன் பயன்படுத்திய வடமொழி வார்த்தைகள் நீக்கப்பட்டு, தமிழின் அழகுச்சொற்கள் பயன்பாட்டுக்கு வர திராவிட இயக்கம் அடிகோலியது.

அதுமட்டுமா? அரசியல் மேடைகளிலும் தமிழ் கொஞ்சத் தொடங்கியது

அக்ரசானர் – அவைத்தலைவர்

காரியதரிசி – செயலாளர்

அபேட்சகர் – வேட்பாளர்

இவ்வாறாகத் துறைதோறும் தனித்தமிழ் வளர்ச்சி திராவிட இயக்கத்தாரால் நித்தமும் நடைபெற்றது.

வேட்பாளர் என்ற சொல்லை திமுக 1957ல் தேர்தலிலே முதன்முறையாக கலந்துகொண்ட போது தான் தமிழகத்திலே பயன்பாட்டுக்கு வந்தது. இம்மாற்றத்தை பாராட்டி அக்காலக்கட்டத்தில் ஆனந்தவிகடன் பத்திரிகை தலையங்கமே எழுதியது.

“சுவாமி வேதாசலம் தன் பெயரை மறைமலையடிகள் என்று மாற்றியபோது எதிர்த்தார்கள். மந்திரிகளை அமைச்சர்கள் என்றபோது எதிர்த்தார்கள். மகாஜனம் வேண்டாம், பொதுமக்கள் போதும் என்றபோது எதிர்த்தார்கள். உபன்யாசத்தை சொற்பொழிவு என்றபோதும் எதிர்த்தார்கள்.

இவர்கள் எங்கேயிருந்து தமிழை வாழவைக்கப் போகிறார்கள். நெருப்பு எரிகிறவரையே குளிர்தெரியாமல் இருக்கும். நெருப்பு அணைந்துவிட்டால் மீண்டும் குளிர் நடுங்க வைக்கும்.

தமிழ்மொழி மீது ஆர்வமும், சுறுசுறுப்பும் தொடர்ந்து இருந்தால் மட்டுமே தமிழ் வாழும். இல்லாவிட்டால் மீண்டும் மகாஜனம் வந்துவிடும். பொதுமக்கள் அழிந்துவிடும்” என்று பேரறிஞர் அண்ணா ஒருமுறை குறிப்பிட்டார்.

அதாவது திராவிடர் இயக்கம் என்ற நெருப்பு அணைந்துவிட்டால், மீண்டும் மணிப்பிரவாள குளிர்நடுக்கம் தமிழனுக்கு ஏற்படும் என்பதையே பேரறிஞர் சூசகமாக குறிப்பிட்டார்.

இன்றைய தேதியிலும் தமிழ்வளர்ச்சி, தமிழ் முன்னேற்றம், தமிழர் வாழ்வாதாரம் போன்ற சொற்களைக் கேட்டாலே ஒரு கூட்டத்துக்கு வலிப்புநோய் கண்டுவிடுகிறது. திராவிடர்கள் தமிழ், தமிழர் நலனில் தனித்தன்மை கெடாமல் எதைச் செய்தாலும் அக்கூட்டம் எதிர்த்து வந்திருப்பதே வரலாறு.

இந்த குள்ளநரிக்கூட்டம் எதையெல்லாம் எதிர்க்கிறதோ, அதுவெல்லாம் தமிழனுக்கு நன்மை செய்யும் விடயங்கள் என்று அறிந்துக் கொள்ளலாம். அவர்களது எதிர்ப்பு நமக்கெதிராக எப்போதெல்லாம் எழுகிறதோ அப்போதெல்லாம் நாம் சரியான பாதையில் வீறுநடை போட்டு வருகிறோம் என்பதை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்..

நன்றி: http://dravidatamils.blogspot.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழக தேர்தல் நிலவரம் – தந்தி டிவி கருத்துக்கணிப்புகள் தெரிவித்திருப்பது என்ன? திமுக 34 இடங்களில் வெல்லும். அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாது. பாஜக 1 இடத்தில் வெற்றிபெறும். இழுபறி நீடிக்கும் இடங்கள் 5 என தந்திடிவி தெரிவித்துள்ளது இந்திய நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் 5 தொகுதிகளில் கடுமையான இழுபறி நீடிக்கும் என்று தந்தி டிவி கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தொகுதிகளில் பாஜக அதிமுக திமுக இடையே கடுமையான போட்டி நிலவும் என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் நாளை மறுநாள்  தேர்தல் நடக்க உள்ளது. திமுக அதிமுக பாஜக நாம் தமிழர் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. தமிழ்நாட்டில் 4 முனை போட்டி தீவிரமாக நிகழ்ந்து வருகிறது. இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்த அளவில் வரும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் திமுக 21 தொகுதிகளும் அதன் கூட்டணி கட்சிகள் மற்ற தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. தேர்தல் தொடர்பாக வரிசையாககருத்துக்கணிப்புகள்   வெளியாகி வருகின்றன. அந்த வகையில்  தேர்தல் தொடர்பாக தந்தி டிவி கருத்துக்கணிப்பை மேற்கொண்டுள்ளது மொத்தமாக திமுக 34 இடங்களில் வெல்லும். அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாது. பாஜக 1 இடத்தில் வெற்றிபெறும். இழுபறி நீடிக்கும் இடங்கள் 5 என தந்திடிவி தெரிவித்துள்ளது : வேலூர் திருநெல்வேலி கோயம்புத்தூர் கள்ளக்குறிச்சி பொள்ளாச்சி உச்சக்கட்ட  ஆகிய இடங்களில் இழுபறி நீடிக்கும் என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் வேலூர் திருநெல்வேலி கோயம்புத்தூர் ஆகிய தொகுதிகளில் திமுக – பாஜக இடையே இழுபறி நீடிக்கும். கள்ளக்குறிச்சி பொள்ளாச்சி ஆகிய தொகுதிகளில் அதிமுக – திமுக இடையே இழுபறி நீடிக்கும் என்று தந்தி டிவி கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. வாக்கு சதவிகிதம்: திமுகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 42 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். அதிமுகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 34 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். பாஜகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 18 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். நாம் தமிழருக்கு வாக்கு அளிப்போம் என்று 5 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர் : புதுச்சேரியில் பாஜகவிற்கான வெற்றி வாய்ப்பு உள்ளதாக கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.   https://akkinikkunchu.com/?p=274079
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.