Jump to content

எந்த திசையில் தலை வைத்து உறங்க வேண்டும்?


Recommended Posts

எந்த திசையில் தலை வைத்து
 உறங்க வேண்டும்?
எந்த திசையில் தலை வைத்து உறங்க  கூ டாது?
thayavu seithu yaaravathu sollunko
Link to comment
Share on other sites

வடக்கே தலை வைத்தால் மாகாண சபை தொல்லை, கிழக்கே தலை வைத்தால் கேட்கவே வேண்டாம்.

தெற்கே தலை வைத்தால் சீனன் தொல்லை. மேற்கில் புத்தன்.

 

சுகமாக தூங்க வேண்டியது உங்கள் அன்புக்கினியவனின் மடி.

Link to comment
Share on other sites

வடக்கே தலை வைத்தால் மாகாண சபை தொல்லை, கிழக்கே தலை வைத்தால் கேட்கவே வேண்டாம்.

தெற்கே தலை வைத்தால் சீனன் தொல்லை. மேற்கில் புத்தன்.

 

சுகமாக தூங்க வேண்டியது உங்கள் அன்புக்கினியவனின் மடி.

விவகரமாக நினைக்கப்போறங்கள், :D  அன்புக்கினியவளின் மடி .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

எந்த திசையில் தலை வைத்து
 உறங்க வேண்டும்?
எந்த திசையில் தலை வைத்து உறங்க  கூ டாது?
thayavu seithu yaaravathu sollunko

 

 

கிழக்கு,மேற்கு அல்லது மேற்கு,கிழக்காக தலை வைத்துப் படுக்க வேண்டும்
 
அது சரி படுப்பதற்கும் வலையில் உலகத்திற்கும் என்ன சம்மந்தம் :unsure:
Link to comment
Share on other sites

ச்சே.. யாழ் களத்திலே எவருக்குமே கேட்ட கேள்விக்கு உருப்படியாய் பதில் சொல்லத் தெரியேல.. எனக்கும்தான்!

Link to comment
Share on other sites

வடக்கு காந்த மூலை என்பதாம் வடக்கு தெற்க்கா தலை வைக்க கூடாது கிழக்கு மேற்க்குதான் பூமியின் சுழற்ச்சி இருப்பதால் உடல் சீரக இருக்கும் உறங்கும்போதும் .

 

என்று நான் சொல்லுறன்

:D

Link to comment
Share on other sites

இப்ப என்ரை வீட்டில எந்தப் பக்கம் கிழக்கு? :blink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொந்தவீடு கிழக்கு
உறவினர்வீடு தெற்கு
தூரதேசம் என்றால் மேற்கு

 

என்று பழைய காலத்தில் கூறுவார்களாம்
 

வடக்கு மட்டும் தலை வைத்து உறங்கக்கூடாதாம்
அது இயமனின் திசையாம் :D

 

ஆனால் வடக்குத் திசையில் இருந்துவரும் ஈர்ப்புச் சக்தி தலையில் பட்டாலும்

கூடாதென விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்களாம்
இணையத்தில் வாசித்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வடக்குத்திசை அவ்வளவு நல்லதில்லையெண்டுதான் ஊரிலையும் கதைக்கிறவை.இதுக்கு விஞ்ஞானவிளக்கமும் இருக்கு.........சமயவிளக்கமும் இருக்கு...!

Link to comment
Share on other sites

baby-sleeping1.jpg?w=642&h=508உடல் நலமும் மன நலமும் நன்றாக இருக்க தூக்கம் ஒரு கருவி. அளவாக இருந்தால் அமைதி. அளவு மிகுந்தாலும் அமைதி. தூக்கம் கெட்டால் துக்கம் என்றெல்லாம் கூறக்கேட்கின்றோம்.
சான்றோர்கள், துறவிகள், வினையாளர்கள் தூக்கத்தைக் குறைத்துக்கொண்டே தாங்களாற்ற வேண்டிய பணியைக் கடமையைச் செய்வார்கள். கடமைக்காகவே வாழந்து வருகின்றவர்கள் உடல்சுகத்தை இழந்து புகழ் பெறுகின்றார்கள். அது எல்லோராலும் இயலுவதில்லை.
விதியாவது! மண்ணாவது! என்று, துண்டை விரித்துப் போட்டுக் கொண்டு படுக்கின்றவர்களுக்கும், படுத்த அடுத்த நிமிடத்தில் ‘அம்மனோ சாமியோ! என்று ஆனந்த ராகத்தில் இசையமைத்து குறட்டை விடுபவர்களுக்கும் நோய் நீங்கும். எந்த வித நோயும் வராது, உடலும் நலமாக இருக்கும்.
தூங்குவதற்கான என்பது, சாலை விதி போல, கண்ணை விழித்துக் கொண்டு செயலாற்றுவதல்ல. படுக்கும்போது, எந்தத் திசையில் தலை வைக்க வேண்டும், கையை காலை எப்படி வைக்க வேண்டும். எப்படி படுக்க வேண்டும் என்றெல்லாம் தெரிந்துகொள்ள வேண்டும்.
ஒருவன் தான் பிறந்த ஊரில் இருக்கும் போது எப்படிச் சுதந்திரமாக மகிழச்சியாக இருப்பானோ, அத்தகைய மகிழச்சியைத் தருகிறது, கிழக்கு.
வேலை செய்வதற்காகவோ வேறு காரணத்துக்காகவோ பிறந்த ஊரை வட்டு வேறு ஒரு ஊருக்கு வந்து வாழக்கை நடத்துகின்றவனுக்குக் கிடைக்கக் கூடிய மகிழச்சியைத் தருவது, மேற்கு.
பிறந்த ஊர், குடிபெயர்ந்த ஊர் ஆகிய இரண்டையும் விட்டுவிட்டு, மனைவியின் ஊராகிய மாமியார் ஊரில் வந்து தங்கும்போது மாப்பிள்ளைக்குக்கிடைக்கும் சுகத்தைத் தருகிறது, தெற்கு.
எவர் வீட்டுக்குப் போனாலும் அவர் வீட்டுக்குப் போக மாட்டேன் என்று சொல்வதைப் போல, எந்தத் திசையில் படுத்தாலும் படுக்கலாம்! வடக்குத் திசையில் மட்டும்தலைவைத்துப் படுக்கக் கூடாது.
பூமியின் வடமுனையிலிருந்து தென்முனைக்கு கதிரிழுப்பு விசை இயங்கிக் கொண்டிருக்கும. உறங்கும்போது வடக்கில் தலை இருந்தால், மூளைப் பகுதி அந்தக் கதிரிழுப்பு விசையால் ஓய்வு பெறுவது குறைந்துவிடும். எனவேதான் வடக்குப் பக்கம் தலை வைத்துப் படுக்கக்கூடாது என்கிறார்கள்.
குறிப்பாக, நோயாளிகள் தங்களுக்கு வந்துள்ள நோய்கள் விரைவாகக் குணமாக வேண்டும் என்பதற்காகவும் திசைகளைப் பற்றி தெரிவித்துள்ளார்கள்.
கிழக்கு சிறந்தது; மேற்கு பரவாயில்லை; தெற்கு ஆயுள் பெருகும்; வடக்கு ஆகாது என்று மருத்துவம் நூலார் கூறியுள்ளனர்.
நோயின்றி இருப்பதுடன் சுகமாகவும் நலமாகவும் இருக்க விரும்பின்றவர்கள் தங்களுக்குப் பிடித்த திசையில் படுக்கலாம்.
தூங்குவதனால் உடம்பில் ஏற்பட்ட சோர்வும், வலியும் நீங்கி உடல் வளர்ச்சி பெறும். வலுவுண்டாகும். ஆகையால், நேரந்தவறாமல் தூங்க வேண்டும்.
தூங்குவதற்கு ஏற்ற படுக்கையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ‘இலவம் பஞ்சில் துயில்’ என்று கூறப்பட்டிருப்பதை நினைவில் கொள்வது நலம்.
படுக்கும்போது, இடது பக்கமாகப் படுக்க வேண்டும். இடது கையை மடக்கித் தலையின் கீழே வைத்து கொள்ள வேண்டும். இடது காலை மடக்கி ஒருக்களித்து வலது காலை நீட்டி இடது கால் மேல் வைத்து, வலது கையை நீட்டி வலது கால் மீது வைத்துக் கொண்டு தூங்க வேண்டும்.
இடது புறமாக ஒருக்களித்து தூங்கும்போது, வலது புறத்து நாசி வழியாக மூச்சுக்காற்று இயங்கும். வலப்புறத்து நாசி வழியாக மூச்சுக்காற்று செல்லும்போது, நல்ல தூக்கம் வரும். உடம்புக்குத் தேவையான வெப்பம்கிடைக்கும்.
இதது புறமாக ஒருக்களித்துப் படுக்கும் நோயாளிக்கு நோய் விரைவாகக் குணமாகும்.
எக்காரணத்தைக் கொண்டும் கவிழ்ந்து குப்புறமாகவோ மல்லாந்தோ படுக்க கூடாது. ஏனென்றால், இரவு நேரத்தில்தான் சிறுநீரகக் கற்கள் உருவாகின்றன. பல மணி நேரம் அசைவில்லாமல் உறங்குவதால், சிறுநீரிலுள்ள கால்சியம், அமிலம் ஆகியவை கூடி கற்களை உருவாக்குகின்றன. குறிப்பாகக் குப்புறப்படுக்கும் போதே சிறுநீரகக் கற்கள் உருவாகின்றன என்பது நினைவிற் கொள்ளத்தக்கது.
எப்போதும், இரவில் மட்டுமே தூங்க வேண்டும். பகலில் தூங்கக் கூடாது. பகலில் துஹங்கினால், உடம்பிலுள்ள வெப்பம் தணியாமல் வாத நோய்கள் உருவாகும்.
இரவில் தூங்கினால், பூமி குளிர்ச்சி அடைவதுபோல, உழைப்பினால், உடம்பில் ஏற்பட்ட வெப்பம் நீங்கி, உடல் குளிர்ச்சியாகும்.

http://senthilvayal.wordpress.com/2010/06/26/10-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/

Link to comment
Share on other sites

விளக்கமான இணைப்பிற்கு நன்றி நுனாவிலான். அனைவருக்கும் நன்றி 

Link to comment
Share on other sites

இப்ப என்ரை வீட்டில எந்தப் பக்கம் கிழக்கு? :blink:

 

:lol: :lol: :lol:

இதே குழப்பந்தான் எனக்கும். திக்குத் திசை தெரியாமலேயே இத்தனை நாளை ஓட்டிட்டமே... :rolleyes::lol:

Link to comment
Share on other sites

:lol: :lol: :lol:

இதே குழப்பந்தான் எனக்கும். திக்குத் திசை தெரியாமலேயே இத்தனை நாளை ஓட்டிட்டமே... :rolleyes::lol:

 

நான் ஐபோனிலுள்ள திசைகாட்டி மூலம்தான் திசையைக் கண்டுபிடித்தேன். இந்தத் திரியை வாசித்த பின்பு, அதன் மூலம் பரிசோதித்துப் பார்த்த பொழுது, கடந்த ஒரு வருடமாக வடக்குத் திசையில் தலை வைத்துப் படுத்திருக்கிறேன்.   :icon_mrgreen:  :icon_mrgreen:  :icon_mrgreen:  

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.