Jump to content

ஆசீவக நெறி(அமணம்) - தமிழரின் அழிக்கப்பட்ட நெறி(ஆசீவகம் / Ajivika)


Recommended Posts

என் இனிய தமிழ் மக்களுக்கு தமிழ்வேந்தனின் அன்பான வணக்கங்கள்,
   
1500 ஆண்டிற்கு முன் தமிழர்களின் அழிக்கப்பட்ட நெறியான ஆசீவக நெறியைப்(அமணம்) பற்றிய ஆய்வுக் கட்டுரைகளை உங்களிடம் பகிர்ந்துகொள்ளலாம் என உள்ளேன். இங்கு நான் பகிர்ந்துகொள்ளப்படும் கட்டுரைகள், ஆசீவக நெறியைப் பற்றி பல்வேறு இணையதளங்களில் பல்வேறு இடங்களில் தேடிக் கிடைத்தத் தரவுகளை வைத்து என் ஆய்வுகளின் தரவுகளையும் சேர்த்து எல்லோருக்கும் புரியும் விதம் ஒரு கோர்வையாகத் தொகுக்கப்பட்டது. இதன் மூலம், நம் உண்மையான வரலாறு என் மக்களுக்கு எளிதாகச் சென்றடையும் என்ற நோக்கத்துடனும் நம்பிக்கையுடன் தொடங்குகிறேன். நன்றி.

 

 

கட்டுரைகளை படிக்கத் தொடங்கும் முன்பு, மக்களிடம் இதுவரை பிறரால் பரப்பப்பட்ட தவறான கண்ணோட்டதிற்காக ஒரு தெளிவுரை:

       ஆசீவக நெறி(அமணம்>சமணம்) என்று கூறியவுடன், பெரும்பான்மையானோருக்கு நான் ஜைன நெறியைத்தான் விளக்கப் போகிறேன் என்று தோன்றும். இல்லை, ஆசீவக நெறி என்பது தமிழர்கள் ஆதி காலந்தொட்டு பின்பற்றி வந்த நெறியாகும். அந்நெறியை, கி.பி. 7ஆம் நூற்றாண்டில் சிவ நெறி, சமணர் கழுவேற்றத்தின் பொழுது அழித்தது(சிவனும் ஒரு ஆசீவகரே. அதைப் பற்றி பின்பு பார்ப்போம்). கடந்த எழுபது ஆண்டுகளில் தமிழர் தொடர்புகளுடன் ஆசீவக நெறியைப் பற்றி ஆய்வுகள் எழும் பொழுதெல்லாம் அது இருட்டடிப்பு செய்யப்பட்டே வந்திருக்கிறது. இதன்மூலம், தமிழர்களின் உண்மையான வரலாறு அவர்களுக்கே இதுவரை தெரியாமல் வந்திருக்கிறது.

       தமிழ் ஆய்வுலகில் எப்பொழுதெல்லாம் தமிழகத்தில் ஆசீவக நெறியின் அடையாளங்கள் கண்டுபிடிக்கப் படுகின்றனவோ அப்பொழுதெல்லாம் அவை ஜைன நெறியின் அடையாளங்களாக மாற்றி காண்பிக்கப்படுகிறது. உதாரணமாக, தமிழ் ஆய்வுலகில் அமணர் ஜைனர் பற்றிய பொருள் குழப்பம் நெடுங்காலமாகத் தொடர்ந்து வருகிறது. சமணர் என்ற சொல் அமணர் என்ற தமிழ் வடிவத்தின் திரிபாகும். இச்சொல் வைதீக எதிர்ப்பாளர் என்ற பொருளில் ஆளப்பட்டாலும் தமிழ் இலக்கியங்களில் இச்சொல் ஆசீவகர்களை மட்டுமே குறித்துள்ளது. ஆசீவகர்களை அமணர்கள் என்றும் சைனர்களை அருகர்கள் என்றும் பெரிய புராணம்(பன்னிரெண்டாம் நூற்றாண்டு) இவ்விருவரையும் வேறுபடுத்திக் காட்டுகின்றது. அத்துடன் ஆசீவகர்களை அமணர்கள் என்றும் சைனர்களைச் சாதி அமணர் என்றும் பிரித்து அடையாளப் படுத்தும். இப்படிப் பெரிய புராணம் ஆசீவகர்களையும் சைனர்களையும் வேறுபடுத்திக் காட்டுவதை முதன்முதலாக ஆராய்ந்து உரைத்தவர் பேரா. முனைவர் டி.வி.மகாலிங்கம் ஆவார். தமிழ்நாட்டிலுள்ள சங்க காலக் கற்படுக்கைகள் யாவும் ஆசீவகர்களுக்கு உரியன என்பதைச் சான்றுகளோடு நிறுவியவர் அவரே ஆவார். ஏறத்தாழ 60 ஆண்டுகளுக்கு முன்பே இவ்வுண்மையை அவர் வெளிப்படுத்தியிருந்த போதிலும் தமிழ் ஆய்வுலகம் அவரை இருட்டடிப்புச் செய்து வந்துள்ளது.

       இங்கு நான் விளக்கப்போவது,

  1. ஆசீவக நெறி என்றால் என்ன?. அது ஏன் எப்படி உருவானது?. யாரால் எங்கே உருவாக்கப்பட்டது?
  2. ஆசீவகம் பரவி இருந்த இடங்கள் யாவை?
  3. ஆசீவகம் எப்பொழுது யாரால் அழிக்கப்பட்டது?
  4. ஆசீவகச் சித்தர்கள் எந்ததெந்தத் துறைகளில் வலிமையாயிருந்தனர்?
  5. ஆசீவகத்தின் தெய்வங்கள் யாவர்?. அவர்கள் எப்படி ஆசீவக தெய்வங்கள்?

விநாயகர்

ஐயனார்(கழிவெண் பிறப்பு அல்லது நல்வெள்ளை நிறத்தை அடைந்தவர்கள்), எழுமுனிகள்(சப்தமுனிகள்), ஏழுகன்னிகள்(சப்தகன்னிகள்)

ஔவையார்

தெய்வ நிலையை அடைந்த ஆசீவகச் சித்தர்கள் - சிவன், திருமால்(விஷ்ணு), இந்திரன், வருணன், முருகன், ஐயப்பன்

ஏழுமுனிகளின் வடிவங்கள் - பிரம்மா

ஏழுகன்னிகளின் வடிவங்கள் - சரஸ்வதி, இலட்சுமி, காளி, மாரியம்மன்

அஷ்டலட்சுமி, மாதங்கி(கஜலட்சுமி)

 

அவர்கள் எப்படி ஆசீவகத்தின் தெய்வங்கள் என்பதை பின்பு விளக்கமாகப் பாப்போம்.

மேலும், ஆசீவக நெறியில் உள்ள கடவுள் கோட்பாடுகள்.

  1. ஆசீவக நெறி, ஜைன நெறி, புத்த நெறி இம்மூன்றிற்கும் உள்ள வேறுபாடு?
  2. ஆசீவக நெறி பற்றி உண்மைகள் வெளியே தெரிந்தால் யாருக்கு கட்டம்?
  3. ஆசீவக நெறியின் கோட்பாடுகள்
    1. ஆசீவகச் சித்தர்களின் படிநிலைகள் யாவை?
    2. ஆசீவக நெறியின் பிற கோட்பாடுகள்

இக்கட்டுரைகளின் தரவுகளின் மேற்கோள்களுக்கு நன்றிகள்:
1. தமிழர் சிந்தனைப் பேரவை(தமிழர் உலகம்)

    ஆசீவக நெறியைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள,
    Youtube User Page - http://www.youtube.com/user/tamilsantham/videos

2. ஆதி. சங்கரர், கோரக்கர் சித்தர் பீடம்மூலை ஆற்றங்கரை
3. முனைவர் க. நெடுஞ்செழியன்

Link to comment
Share on other sites

தமிழரின் அழிக்கப்பட்ட நெறி #1

முன்னுரை

இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் ஆசீவகம் பற்றி அறிந்திருந்தவர்கள் தமிழகத்தில் ஒரு சிலரே. அவர்களும் சைன சமயத்தின் ஒரு பிரிவாகவே ஆசீவகத்தைக் கருதினர். ஆசீவகம் பற்றி வடநாட்டு அறிஞர்கள் ஒரு சிலரும் வெளிநாட்டு அறிஞர்கள் ஒரு சிலரும் ஆராயத் தொடங்கினர். ஆயினும் அவர்களால் பெரிய அளவு வெற்றி பெற முடியவில்லை. இந்நிலையில் 1950களின் தொடக்கத்தில் ஆசீவகம் பற்றிய முழுமையான ஆய்வை மேற்கொண்டவர் ஆசுத்திரேலியரான ஏ.எல். பாசம்(Basham, A. L.) ஆவார். ஆசீவகம் பற்றி ஆய்ந்த பலரும் ஆசீவகத்தின் சுவடுகளை பாலி, பாகத மொழிகளில் உள்ள பௌத்த, சைன நூல்களிலேயே தேடினர். அவை யாவும் ஆசீவகத்தை எதிர்த்தவர்களின் கருத்துக்களாகும். தருக்கவியலில் இதனை அயலார் கூற்றுஎன்பர். நன்னூலார் பிறர் மதம் கூறல்என்பார். மற்றவர்களின் ஆய்விலிருந்து விலகி, தமிழ் இலக்கியங்களான மணிமேகலை, நீலகேசி, சிவஞான சித்தியார் ஆகிய நூல்களில் இருந்தும் ஆசீவகம் பற்றிய செய்திகளைத் திரட்டித் தம் ஆய்வினை மேற்கொண்டவர் ஏ.எல்.பாசம் ஒருவரே ஆவார்.

 

ஆசீவகம் - அழிந்து போன ஒரு இந்தியச் சமயம்(Ajivikism: a vanished Indian religion)எனத் தம் ஆய்வு நூலுக்குப் பெயரிட்ட ஏ.எல். பாசம், ஆசீவகத்தின் வேர்கள் தமிழகத்திலேயே நிலை கொண்டுள்ளன என்ற உண்மையையும் வெளிப்படுத்தினார். மோரியர் காலமான கி.மு. மூன்றாம் நூற்றாண்டிற்குப் பின்னர் ஆசீவகம் வடநாட்டில் செல்வாக்கை இழந்து விட்டது எனக் கூறிய ஆய்வாளர்கள், தமிழ் இலக்கியங்களிலோ கி.பி. 14ஆம் நூற்றாண்டு வரையிலும் ஆசீவகம் பற்றிய செய்திகள் இடம் பெற்றுள்ளதைச் சுட்டிக் காட்டினர். அதற்கான கல்வெட்டு, இலக்கியச் சான்றுகளை நிறையவே எடுத்துக் காட்டினார் ஏ.எல். பாசம்.கி.பி. 14ஆம் நூற்றாண்டு வரை தமிழ் இலக்கியங்கள் ஆசீவகம் பற்றிக் குறிப்பிட்டாலும் ஆசீவகத்தின் தோற்றம் வடநாட்டுக்கு உரியதாகவே பாசம் உள்ளிட்ட அனைத்து அறிஞர்களும் நம்பினர். ஆசீவகம் பற்றிய செய்திகளை தமிழ் இலக்கியங்களில் இடம் பெற்றுள்ளது என்று ஆய்வாளர்கள் கூறிய பின்னரும் கூட ஆசீவகம் பற்றிய ஆய்வுகள் தமிழில் தொடங்கப் பெறவில்லை.

ஆசீவகம் என்றால் என்ன?

ஆசீவகம் என்ற சொல்லின் வேரினை கணக்கியல் வழி நின்று விளக்குவோம். எட்டுக்குள் எத்தனை இரண்டுகள் உள்ளன என ஒருவர் அறிய விரும்புகிறார். வகுத்தல் முறையில் நான்கு எனக் கண்டு கொள்கிறார். எட்டு, இரண்டு என்பன அவரிடம் உள்ளவை. இவை, முறையே முதலி, வகுத்தியாம். அவற்றைக் கொண்டு அவர் பெற்ற விடை நான்கு. இதற்குப் பெயர் ஈவு. ஆக, எந்த ஒரு அறிந்த செய்தியிலிருந்தும் அறியாமல் உள்ள விடையை அறியலாம். அதற்கு ஈவு என்று பெயர். ஈவு என்பது வகுத்தும் பகுத்தும் பெறப்படும் விடையாம். கணக்கியலில் மட்டுமின்றி இயங்கியலில் உள்ள அனைத்துத் திணை, துறை, பல்தொழில், மூவிடம், ஐம்பாலிலும் நமக்குத் தெளிய வேண்டியவற்றைப் பகுத்தும் வகுத்தும் நாம் காணும் விடை ஈவு ஆகும்.

 

பண்டைக் கால மாந்தன் சாதி, சமயப் பாகுபாடுகள் இன்னதென்று அவனுக்குள் நஞ்சூட்டப் படுமுன்னர் வெள்ளந்தியாக வாழ்ந்த காலத்திலும், அவனது உடலியல், மருத்துவம், உழவு, தொழில், வானியல் போன்றவற்றில் பல்வேறு ஈவுகள் அவனுக்குத் தேவைப்பட்டன. தன்னை விடவும் படிப்பறிவிலோ, பட்டறிவிலோ தேர்ந்த வல்லுநர்களை அடையாளம் கண்டு அணுகிடப் போதுமான செய்திப் பரிமாற்றங்களும் ஏந்துகளும் இல்லாத சூழலில் யாரிடம் தனக்கான ஈவு பெறுவது?

 

அவனுக்கும் அன்று ஈவு கொடுப்பதற்கு ஒரு இடம் இருந்தது. அதுவே ஆசீவகத் துறவிகளின் கற்படுக்கை. அங்குச் சென்று தனக்குத் தேவையான ஈவுகளைப் பெற்றதால் அத் துறவிகளின் கற்படுக்கை ஈவகம் (ஈவு+அகம்) எனப் பெயர் பெற்றது. (உணவு தருமிடம் உணவகம் எனவும், மழிக்குமிடம் மழிப்பகம் எனவும் வழங்குதல் போன்று.) இதற்காக கைம்மாறு எதுவும் கருதாமல் எவ்வகைப் பிழையுமின்றிச் செம்மையாக ஈவு தந்ததால் ஆசு+ஈவகம் எனச் சிறப்பிக்கப் பட்டது. கைம்மாறு கருதாத செம்மையான கவி ஆசுகவிஎனச் சிறப்பிக்கப் பட்டது போல், இக்கற்படுக்கைகள் ஆசீவகக் கற்படுக்கைகள் எனவும், இங்கிருந்த துறவிகள் ஆசீவகத் துறவிகள் எனவும் பெயரிடப் பெற்றுச் சிறப்புற்றனர்.

 

ஆசீவகம் = ஆசு+ஈவு+அகம்

ஆசு - பிழையற்ற செம்மையான தோல்வியேற்படுத்தாத கேட்ட போதே தங்கு தடையின்றி மடையுடைந்த வெள்ளமென,

ஈவு – தீர்வு

அகம் - தருமிடம் என்பதே ஆசீவகமாகும்.

ஆசீவகம் என்ற பெயர் அத்துறவிகளின் வாழிடத்திற்கான பெயரேயாம். அத்தீர்வுகளைத் தருபவர்கள் ஆசீவக சித்தர்கள் ஆவர்.

 

 

ஆசீவக நெறியின் வேறு பெயர்கள் யாவை?

  1. அமணம்

அம்மண்ணம்(அம்+அண்ணம்)>அம்மணம்>அமணம்>ஸமணம்(ஸ்+அமணம், சமணம்)>ஸ்ரமணம்>ஸ்ரமணா(Sramana)

                  சமணம்>ஸ்ரமணம் என்றத் திரிபுக்கு

ஒப்புநோக்குக:
காமம்(கதிர்காமம்)>க்ராமம்(காமம் என்ற சொல் கமம் என்ற சொல்லிலிருந்து வந்திருக்கலாம்...விடயம் அறிந்தவர்கள் கூறவும்)
மெது(Methu)>ம்ரெது(Mrethu)>ம்ருது
மாதங்கம்?>மதங்கம்(Mathangam)>ம்ரதங்கம்(Mrathangam)>ம்ருதங்கம்
படி(Padi)>ப்ரடி(Pradi)>ப்ரதி
தமிழ்(Thamil>Dhamil)>த்ரமில்(Dhramil)>த்ரமித்(Dhramith)>த்ரவித்>த்ரவிட்(Dhravid)>த்ராவிட்(Dhraavid)
தமிழர்(Thamilar>Dhamilar)>த்ரமிலர்>த்ரமிதர்>த்ரமிடர்>த்ரவிடர்>த்ராவிடர்
தமிழம்(Tamilam>Dhamilam)>த்ரமிலம்(Dhramilam)>த்ரமிதம்>த்ரமிடம்>த்ரவிடம்>த்ராவிடம்
தமிழகம்(Thamilagam>Dhamilagam)>த்ரமிலகம்(Dhramilagam)>த்ரமிதகம்>த்ரமிடகம்>த்ரவிடகம்>த்ராவிடகம்
பார்ப்பன்>ப்ராப்பன்>ப்ராம்மன்>ப்ராமன்(பிராமணன்)>ப்ராமின்(பிராமின், Anglicized)
திருச்சி>த்ரிச்சி(Trichy)

அமணம்>ஸமணம்(ஸ்+அமணம், சமணம்) என்றத் திரிபுக்கு

ஒப்புநோக்குக:
அம்மணம்(Ammanam)>ஸ்+அம்மணம்>சம்மணம்(Sammanam)
அமை(Amai)>ஸ்+அமை>சமை(Samai)
அமையல்(Amaiyal)>ஸ்+அமையல்>சமையல்(Samaiyal)
அறவாணன்>ஸ்+அறவாணன்>சரவாணன்>சரவணன்
அடை(மூடுதல்)>ஸ்+அடை>சடை
அவை>ஸ்+அவை>சவை>சபை
அங்கு(குறுகிய வளைவான பகுதியைக் கொண்டது)>ஸ்+அங்கு>சங்கு
அங்கம்(அங்கு+அம் - குறுகிய வளைவான பகுதியைக் கொண்ட இடம்(கூடும் இடம்))>ஸ்+அங்கம்>சங்கம்
அங்கமம்(அங்கம்+அம்)>ஸ்+அங்கமம்>சங்கமம்
அக்கரம்(அ+கரம் - எட்டு கரங்களைக்(கைகளைக்) கொண்ட ஒன்று)>ஸ்+அக்கரம்>சக்கரம்
அட்டம்(Attam - எட்டு முனைகளைக் கொண்ட ஒன்று, பெட்டி, மூடிய ஒன்று)>ஸ்+அட்டம்>சட்டம்(Sattam)
அமம்>ஸ்+அமம்>சமம்
அரசுவதி>ஸ்+அரசுவதி>சரசுவதி
அதம்(தொகுதி)>ஸ்+அதம்>சதம்

 

அம்மண்ணம் = அம்+அண்ணம் = அம்+ம்+அண்ணம்(தன்னொற்று மிகல்)

அம் - ஊழ்கப் பயிற்சியில் உயிர்வளி மேலேறும் போது மேல்நோக்கி மேலண்ணத்தைக் கடக்கும் போது அம்மெனும் ஒலியை எழுப்பும் என்பது ஊழ்கக் கருத்து.

அண்ணம் - ஊழ்கியின் மேலண்ணம்

அம்மெனும் ஒலியைக் கொண்ட ஊழ்கப் பயிற்சி.

 

ஆசீவக நெறி – பின்னாளில் வடஇந்தியாவில் ஆஜீவிகா என்று மருவியது.

ஆசீவகம்>ஆஜீவகம்>ஆஜீவகா>ஆஜீவிகா(Ajivika)

 

தமிழ் ஆய்வுலகில் அமணர் ஜைனர் பற்றிய பொருள் குழப்பம் நெடுங்காலமாகத் தொடர்ந்து வருகிறது. சமணர் என்ற சொல் அமணர் என்ற தமிழ் வடிவத்தின் திரிபாகும். இச்சொல் வைதீக எதிர்ப்பாளர் என்ற பொருளில் ஆளப்பட்டாலும் தமிழ் இலக்கியங்களில் இச்சொல் ஆசீவகர்களை மட்டுமே குறித்துள்ளது. ஆசீவகர்களை அமணர்கள் என்றும் சைனர்களை அருகர்கள் என்றும் பெரிய புராணம்(பன்னிரெண்டாம் நூற்றாண்டு) இவ்விருவரையும் வேறுபடுத்திக் காட்டுகின்றது. அத்துடன் ஆசீவகர்களை அமணர்கள் என்றும் சைனர்களைச் சாதி அமணர் என்றும் பிரித்து அடையாளப் படுத்தும். இப்படிப் பெரிய புராணம் ஆசீவகர்களையும் சைனர்களையும் வேறுபடுத்திக் காட்டுவதை முதன்முதலாக ஆராய்ந்து உரைத்தவர் பேரா. முனைவர் டி.வி.மகாலிங்கம் ஆவார். தமிழ்நாட்டிலுள்ள சங்க காலக் கற்படுக்கைகள் யாவும் ஆசீவகர்களுக்கு உரியன என்பதைச் சான்றுகளோடு நிறுவியவர் அவரே ஆவார். ஏறத்தாழ 60 ஆண்டுகளுக்கு முன்பே இவ்வுண்மையை அவர் வெளிப்படுத்தியிருந்த போதிலும் தமிழ் ஆய்வுலகம் அவரை இருட்டடிப்புச் செய்து வந்துள்ளது.

இதன்மூலம்,

       அமணம் – ஆசீவக நெறியைக் குறித்தது

       அருகம் – ஜைன நெறியைக் குறித்தது

என்பது நமக்குப் புலப்படும்.

 

பிற்கால சொல்லான சமணம் எனும் கொடுந்தமிழ்ச் சொல் தமிழகத்தின் வடக்கில் ஸ்ரமணா(Sramana) எனத் திரிந்தது(கோட்பாடுகளும் சேர்த்துதான் திரிந்தன). இந்த ஸ்ரமணத்திலிருந்து தான் பின்னாளில், ஜைனம் மற்றும் புத்தம் பிரிந்தன. ஜைனமும் புத்தமும் பிரிந்த பிறகு, ஒரு காலக்கட்டத்தில் சமணம் என்ற சொல் ஆசீவகம், ஜைனம், புத்தம் ஆகிய மூன்றையும் சேர்த்துக் குறிக்கப் பயன்பட்டது. தற்காலத்தில் தான் ஆய்வாளர்கள் ஆசீவகம் ஜைனத்தின் ஒரு பிரிவாகவும், ஜைனம் என்பதற்கு சமணம் என்றும் தவறாக மொழிபெயர்ப்பு செய்கிறார்கள்.

ஆசீவகச் சித்தர்களின் வேறு பெயர்கள் யாவை?

ஆசீவகத் துறவிகள் வழிவழியாக (தலைமுறைகளாக) மக்களுக்கு நன்னெறிகளைப் போதித்து அவர்களை வழி நடத்தினர். போதனைகள் எனும் நன்னெறிகளை யீந்த இடமாகையால் பிற்காலத்தில் இக் கற்படுக்கைகளை அபகரித்தவர்களும் போதி சத்துவர்முதலிய பெயர் பெற்றனர்.போதித்தலில் சத்துவ குணமுடையவர்; அதாவது கற்பித்தலில் சிறந்தவர் அறிவு மென்மை கொண்டவர் எனும் பொருளிலேயே திசைச் சொற்களால் வழங்கப் பெற்றனர். ஆசீவகத்தினரின் கற்படுக்கைகளை அணி செய்த ஒரு பிரிவினர் மாதங்கர் என்பவராவார். மாதங்கர் எனும் பெயர் மாதங்கி எனும் ஆசீவகப் பெண்பாலுக்கு இணையாக ஆண்பாற் பெயராகும். கச்சியப்ப மாதங்கர் (காச்யப மதங்கர்) என்பாரும் இவ்வழி வந்தோரே. தீர்வுகளும் தொல்லை தீர்த்தலும் செய்த காரணம் பற்றித் தீர்த்தவிடங்கர் எனும் பெயராலும் அதைச் சார்ந்த திரிபுச் சொற்களாலும் (தீர்த்தங்கரர்) வழங்கப் பெற்றனர்.

 

  1. அமணர்

அம்மண்ணர்(அம்+அண்ணர்)>அம்மணர்>அமணர்>ஸமணர்(ஸ்+அமணர், சமணர்)>ஸ்ரமணர்

 

அம்மண்ணர் = அம்+அண்ணர் = அம்+ம்+அண்ணர்(தன்னொற்று மிகல்)

அம் - ஊழ்கப் பயிற்சியில் உயிர்வளி மேலேறும் போது மேல்நோக்கி மேலண்ணத்தைக் கடக்கும் போது அம்மெனும் ஒலியை எழுப்பும் என்பது ஊழ்கக் கருத்து.

அண்ணம் - ஊழ்கியின் மேலண்ணம்

அர் - பலர்பால் சிறப்பு விகுதி

 

அம்மெனும் ஒலியைக் கொண்ட ஊழ்கம் பயிலும் மேலண்ணத்தினை உடையவர் எனும் பொருள் கொண்ட இச்சொல், அம்மணம் எனும் ஆடையின்மைக் குறிக்கும் சொல்லின் திரிவாக அம்மணர் எனச் சுட்டப் பட்டதும் வழுவே.

 

(அழகிய சிறந்த அண்ணத்தில் ஊழ்கப் பயிற்சி உடையவர் எனும் பொருள்படும் அண்ணர் எனும் சொல்லும் இதன் அடிப்படையில் எழுந்ததே. ஈற்றுப் போலியாக அண்ணல் எனவும் மருவி இத்தகு அறிவர் வாழ்ந்த இடங்கள் திரு அண்ணர் மலை, அண்ணல் மங்கலம் எனும் பெயர்களுடன் வழங்கப் பட்டு இன்று திருவண்ணாமலை, அண்ணமங்கலம் எனும் பெயர்களால் வழங்கப்பட்டு வருகின்றன. இவ்விடங்களில் இன்றும் ஆசீவகப் பள்ளிகளின் எச்சங்கள் காணக் கிடக்கின்றன.)

  1. ஆசீவகர் (அ) ஆசீவகச் சித்தர் (அ) சித்தர்
  2. ஐயன், ஐயனார், நல்வெள்ளையார் - கழிவெண் பிறப்பு அல்லது நல்வெள்ளை நிறத்தை அடைந்தவர்கள்
  3. அண்ணர் (அ) அண்ணல்

ஒப்புநோக்குக:

சித்தன்னவாசல் - அண்ணல் வாயில்

திருவண்ணாமலை - திரு அண்ணர் மலை

அண்ணமங்கலம் - அண்ணல் மங்கலம்

  1. போதி சத்துவர்
  2. மாதங்கர், மாதங்கி - ஆசீவகத்தினரின் கற்படுக்கைகளை அணி செய்பவர்
  3. அந்தணர்(அந்தம்+அணர்) - சிவ நெறி தனியாக தமிழகத்தில் இல்லாத காலத்தில்(எந்தெந்த காலத்தில் என்று பின்பு பார்ப்போம்)
  4. பார்ப்பார்(பார்ப்பு+ஆர்) - சிவ நெறி தனியாக தமிழகத்தில் இல்லாத காலத்தில்(எந்தெந்த காலத்தில் என்று பின்பு பார்ப்போம்)

(தொடரும்)

Link to comment
Share on other sites

தொடருங்கள் தமிழ் வேந்தன் . தெரியாத பல விடயங்களை அறியக் கூடியதாக உள்ளது .

Link to comment
Share on other sites

தமிழரின் அழிக்கப்பட்ட நெறி #2

ஆசீவகச் சித்தர்களின் படிநிலைகள் யாவை?

 

ஆசீவகச் சித்தர்களின் துறவு வாழ்க்கையில் அறுவகையான நிறக் கோட்பாடு பின்பற்றப் பட்டது.

துவக்க நிலையில் இருப்பவர்களுக்கு ஒரு வண்ணச் சீருடையும் படிப்படியாக மெய்யியலில் முன்னேறும் போதெல்லாம் வேறு வேறு வண்ணச் சீருடைகளும் அணிவர். ஒரு ஆசீவக அறிவர் பள்ளி பல நிலையிலுள்ள துறவு மாணவர்களை அவர்தம் சீருடையின் வண்ணத்தைக் கொண்டே அவரது மெய்யியல் படிநிலையினை அறிந்து கொள்ளலாம்.

 

இதில் முதலாவதாக வரையறுக்கப்படும் வண்ணம் கருப்பு வண்ணமாகும். இந்தக் கருப்பு வண்ண உடையணிந்தவர்கள் கரும் பிறப்பு நிலையில் உள்ளவராகக் கூறப் படுவர். இந்த நிலை மெய்யியலின் துவக்க நிலையாகும். இந்த நிலையில் உள்ளவர்களுக்கு உணவுப் பழக்கங்களிலும், துறவறப் பயிற்சிகளிலும் பெரிய பட்டறிதல் இல்லை. ஏனெனில் இதுதான் துவக்க நிலை. கரும் பிறப்பு நிலையைக் கடந்த பின் அதாவது அடிப்படை ஒழுக்கங்களையும் துவக்க நிலைப் பயிற்சிகளையும் செம்மையாகக் கற்றபின் கருநீல வண்ண உடையால் அடையாளப் படுத்தப் படுவர். அதன் பின்னர் அடுத்த படிநிலைக்கு உயர்த்தப்பட்டு அதற்கேற்ற வண்ண உடையால் அவர் அடையாளப் படுத்தப் படுவார்.

 

இவ்வாறு ஆறு படிநிலைகளை ஒருவர் கடந்த பிறகே இறுதி நிலையான நல்வெள்ளை நிலைக்கு அவர் சென்று வீடுபேறடைவார். இவ்வாறு அறுவகை நிலையிலும், ஒவ்வொரு வண்ணத்திலும் மூவகைப்பட்ட படிநிலைகள் அதாவது 6 x 3 மொத்தம் 18 படிநிலைகளை ஒருவர் கடந்த பிறகே அவர் வீடடைய முடியும் என்பது வரைவு.

 

ஆசீவகப் பள்ளியில் பயிற்சி பெற்ற பின்னரே இல்லறத்திற்குச் செல்லும் வழக்கமிருந்தது. வாழ்வியல் சிக்கல்களுக்கு விடைதேடி அலைவதினை இது குறைக்கும் என்பதும் அதன் சிறப்பு. துறவி கூட உழைத்தே உண்ண வேண்டும் என்பது ஆசீவகப் பொருளியல்.

ஆசீவகத்தினர் அறுவகை நிறங்களால் வகைப்படுத்தப் பட்டனர். இந்த வகைப்பாடு அவரவர்தம் சிந்தனை, செயல், தகுதி, அறிவுநிலை, ஊழ்கப் பயிற்சி, மெய்யியல் அறிவு இவற்றை அடிப்படையாகக் கொண்டது. இந்த ஆறு நிறங்களாவன:

  1. கருமை & சாம்பல் - துவக்க நிலை – இரவு விண்ணின் நிறம்
  2. நீலம் - இரண்டாம் நிலை – விடியற்காலை கதிரவன் உதிக்கும் முன் விண்ணின் நிறம்
  3. பசுமை - மூன்றாம் நிலை – கதிரவன் உதிக்கத் துவங்கும் பொழுது சிறிய நேரத்திற்கு இருக்கும் நிறம்
  4. செம்மை - நான்காம் நிலை – கதிரவன் உதித்தப் பிறகு விண்ணின் நிறம்
  5. மஞ்சள் - ஐந்தாம் நிலை - கதிரவன் உதித்தப் பிறகு கதிரவனின் நிறம்
  6. வெள்ளை - இறுதி நிலை – கதிரவன் உச்சிக்கு வந்த பிறகு கதிரவனின் நிறம்

இந்த அறுவகை வண்ணத்திலும் மும்மூன்று படிநிலைகள் உண்டு. அவை:

  1. துவக்க நிலை - இது வண்ண ஒழுக்கத்தின் துவக்க நிலை. இந்த வண்ணத்திற்குரிய ஒழுக்கங்களையும் கடமைகளையும் அறியத் துவங்கும் புகுநிலை மாணாக்கர் முதல் படிநிலையிலிருப்பவர்.
  2. இடைநிலை - இது வண்ண ஒழுக்கத்தையும் பயிற்சிகளையும் செயல்படுத்தி முறைப்படுத்தி ஒழுகினாலும் ஐயந்தெளியா நிலையில் உள்ள மாணவர்கள்.
  3. கடைநிலை - இது வண்ண ஒழுக்கத்தையும் பயிற்சிகளையும் செவ்வனே தேர்ந்து அடுத்த நிறத்திற்கு உயர்வு பெறத் தகுதியுடைய நிலை. ஐயந்திரிபற உணர்ந்தவர்.

ஒரே நிறத்தில் இந்த மூன்று படிநிலைகளையும் உணர்த்த படிநிலை உயர உயர நிறத்தின் அழுத்தம் குறைக்கப்படும்.

  1. கரும்பிறப்பில்
    1. கருமை முதல் படி
    2. கருமை இரண்டாம் படி
    3. சாம்பல் மூன்றாம் படி
  2. நீலப் பிறப்பில்
    1. கருநீலம் முதல் படி
    2. நீலம் இரண்டாம் படி
    3. வான்நிறம் மூன்றாம் படி
  3. பசும் பிறப்பில்
    1. அடர்பச்சை முதல் படி
    2. பச்சை இரண்டாம் படி
    3. வெளிர்பச்சை மூன்றாம் படி
  4. செம்பிறப்பில்
    1. செம்மை முதல் படி
    2. இளம்சிவப்பு இரண்டாம் படி
    3. காவி மூன்றாம் படி
  5. மஞ்சள் பிறப்பில்
    1. அடர் மஞ்சள் முதல் படி
    2. இளமஞ்சள் இரண்டாம் படி
    3. பொன்மை மூன்றாம் படி
  6. வெண்பிறப்பில் வெண்மை மூன்று படிகளிலும்.

இவற்றைக் கடந்த பிறகே (மேலே கூறப்பட்ட 18 படிகளையும்) நல்வெள்ளை எனும் நிறமிலி நிலையினை அடைவர் என்பதே நிறக்கோட்பாடு. அதாவது கருமையிலிருந்து நல்வெள்ளை நிலை வரையிலும் தகுதி உயர உயர நிறத்தின் அடர்வு குறைவதனைக் காணலாம். அதாவது பயிற்சியாளரின் குறைகளும் குறையும். அவரது அறிவைச் சூழ்ந்துள்ள மாசு குறைவதனையே (அறியாமை இருள் நீங்குவதனை) இந்த நிற வேறுபாடு குறிக்கும்.

 

படிநிலை உயர உயர நிறம் குறையும். இதுவே ஊழ்கப் பயிற்சியிலும் 18 படிநிலைகளைக் கடந்த ஐயனாரை அடைவது எனும் கோட்பாடு. சேர நாட்டு ஐயனாரே தற்போது ஐயப்ப வழிபாட்டால் தொழப்படுகிறார். ஐயப்பன் பெயரால் செய்யும் ஐயனார் வழிபாட்டில் தற்போது சரியான குருமார்களின் வழிகாட்டல் இன்மையால், பிறழ நடத்தும் குளறுபடிகள் ஏராளம்.

 

இந்த வழிபாடு செய்ய மாலை அணிவோர் தொடர்ந்து 18 ஆண்டுகள் செல்வர். இதில் முதல் மூன்றாண்டுகளும் கருப்பு உடையினையும், அடுத்த மூன்றாண்டுகளில் நீல உடையினையும், அடுத்த மூன்றாண்டில் பச்சை உடையினையும், அடுத்த மூன்றாண்டுகளில் சிவப்பு உடையினையும் அதற்கடுத்த மூன்றாண்டுகளில் மஞ்சள் உடையினையும் இறுதி மூன்றாண்டில் ஒளிர் வெண்மை உடையினையும் அணிந்து நோன்பிருப்பர். 18ஆம் ஆண்டிறுதியில் தென்னை வைத்து நோன்பு முடிப்பர். இது ஆசீவக மரபின் ஐயனார் ஊழ்கத்தைத் தழுவிய ஒரு வழிபாடேயாகும். இதில் இறுதியில் கூறப்படும் தென்னை வைத்தல் எனும் நிகழ்வு தேங்காயின் உட்பருப்பு நல்வெள்ளை எனும் கருத்துப் படவே கையாளப் படுகிறது.

 

நல்வெள்ளை எனும் இறுதி நிலை நிறமிலி எனும் நிலையினைக் குறிக்கும்.

 

கருமையில் பிறவி துவங்கி அறியாமை இருளுடன் வாழ்வைத் துவங்கும் ஆசீவக மாணவன் தனது பயிற்சியினாலும் ஒழுக்கத்தினாலும் அறுநிறப் பதினெண் படி கடந்து நிறமிலி நிலையினை அடைவதே வீடடைதல்எனப்படும். அப்படி ஒளியடைதலே ஆசீவக மெய்யியலின் நோக்கம். இந்த அறிவு மரபில் வந்த அறிவர்களுள் ஒருவரான வள்ளல் பெருமான் கூட ஒளிதேகம்என்று குறிப்பிடுவதும் இந்த நல்வெண்மை நிலையையே.

 

மேலும், புத்த நெறியிலும் ஜைன நெறியிலும் ஆசீவக நெறியின் நிறக் கோட்பாட்டின் வெண்மை நிற உடையை மட்டுமே படிநிலை பேதமின்றி அனைவரும் அணிவர். ஆனால், ஜைன நெறியின் கொடியில் ஆசீவகத்தின் நீல நிறத்தைத் தவிற மற்ற நிறங்கள் முறை மாற்றி இருக்கும். அவர்கள் நீல நிறத்த்துடன் கருப்பு நிறத்தையும் சேர்த்து கருப்பு நிறமாக அவர்கள் கொடியில் கூறுகின்றனர். ஆனால், இந்நிறங்களுக்கு அவர்கள் கொடுக்கும் விளக்கம் ஆசீவக நெறியின் நிறக் கோட்பாடுகளின் பொருளாக இருந்தாலும் அவர்கள் வெண்மை நிற உடையை மட்டுமே படிநிலை பேதமின்றி அனைவரும் அணிவர்.

 

இங்கு ஆய்தற்குரிய மற்றொரு ஒரு விடயம் என்னவென்றால், கிறித்துவ நெறியில் உள்ள “Bracelet of Christianity” எனும் கோட்பாடும் இதே நிறங்களைக் கொண்டவை. அங்கும், இறுதியில் மோட்சம் எனும் வீடுபேறு கோட்பாடு தான் உள்ளது.

 

ஆனை(யானை) ஏன் ஆசீவக நெறியின் அடையாளமாக உள்ளது?. விநாயகர் எப்படி ஆசீவக நெறியின் கடவுள்?

 

ஆனை(யானை), தான் பிறக்கும் பொழுது கருப்பு நிறமாக இருக்கும்(முதல் நிலை). பிறகு அது வளர வளர அதன் நிறம் கருப்பு நிறத்திலிருந்து சாம்பல்(Grey) நிறத்திற்கு சிறிது சிறிதாக மாறும். ஆனை, தான் குட்டியாக(கருப்பு நிறம்) இருக்கும் பொழுது, தன் தாயை (சாம்பல் நிறம்) ஒழுக்கத்துடன் பணிவாகப் பின்பற்றிச் சென்று தன் சிறுவயதிலேயே தன் வாழ்விற்கான பாடங்களையும் ஆதாரங்களையும் தன் தாயிடமிருந்துக் கற்றுக்கொள்ளும் அறிவைக் கொண்டது. தாய் ஆனையும் தன் குட்டியானைக்கு ஒழுக்கத்தைக் கற்றுக்கொடுத்தும் தவறு செய்யும் பொழுது திருத்தவும் குட்டிக்கு உதவியாகவும் பரிவுடனும் இருக்கும். அந்தக் குட்டியானை, தான் வளரும்பொழுது அது தன் வாழ்வில் சந்திக்கும் சிக்கல்களுக்கு விடைதேடி அலைவதினை இது குறைக்கும். மேலும், தான் கற்றுக்கொண்டதைப் பிற்காலத்தில் தன் குட்டிக்கும் கற்றுக்கொடுக்கும். மேலும், ஆனை பிற உயிரினங்களிடம் பரிவுடன் இருக்கும்.

 

       இதே போல, ஆறு படிநிலைகளில் கீழ் நிறப் படிநிலையில் உள்ள ஆசீவகர்கள், தனக்கு மேல் நிறப் படிநிலையில் உள்ளவர்களிடமிருந்து தன் பாடங்களைக் கற்றுக்கொள்வர். பிறகு அடுத்தப் படிநிலைக்குச் செல்வர். தான் கற்றப் பாடங்களை தனக்குக் கீழ் உள்ள படிநிலைகளில் உள்ள ஆசீவகர்களுக்குச் சொல்லிக்கொடுப்பர். ஆசீவகப் பள்ளியில் பயிற்சி பெற்ற பின்னரே இல்லறத்திற்குச் செல்லும் வழக்கமிருந்தது. வாழ்வியல் சிக்கல்களுக்கு விடைதேடி அலைவதினை இது குறைக்கும் என்பதும் அதன் சிறப்பு. ஆசீவகர்கள் பிற உயிரினங்களிடம் பரிவுடன் இருப்பர்.

 

ஆனையின் இந்தப் பண்புகளை(மனப்பாங்கை – Attitude) ஒரு ஆசீவகர் பெற்றால்தான் வாழ்வில் மேன்மை அடைந்து நிறமிலி எனும் தெய்வத் தன்மையை அடையமுடியுமென்பதால், ஒவ்வொரு ஆசீவகருக்கும் இப்பண்புகள் முக்கியம். அதனால், ஆனையின் தலையையும் மாந்தரின் உடலையும் சேர்த்து ஆசீவக நெறியின் கடவுளான விநாயகர் உருவாக்கப்பட்டார். ஒவ்வொரு ஆசீவகருக்கும் விநாயகர் உருவம் ஒரு கடவுளாகவும்(உள்ளே கடப்பது) வாழ்வில் மேன்மை அடைந்து தெய்வத் தன்மையை அடைய தேவையானவற்றிற்கு ஒரு பற்றுகோலாகவும்(Inspiration) இருக்கிறது. ஆசீவக நெறியின் நிறக் கோட்பாடும் இதிலிருந்தே தோன்றி வளர்ச்சியடைந்திருக்கலாம்.

 

ஆசீவக சித்தர்கள் மூச்சுப்பயிற்சி செய்பவர்கள். இதற்கு முதன்மையான தேவையாக இருப்பது மூக்கும் மூச்சுக்குழாயும் தான். ஆனையின் மூச்சுக்குழாய் நீளமாக இருப்பதால் அது மூச்சுப்பயிற்சியின் முதன்மைத்துவத்தைக் குறிப்பதாகவும் உள்ளது.

 

மேலும், ஆசீவக நெறியிலிருந்து(அமணம்) பிரிந்த ஜைன புத்த நெறிகளிலும் கி.பி. ஏழாம் நூற்றாண்டில் ஆசீவக நெறியை அழிக்க முற்பட்ட சிவ நெறியிலும் விநாயகர் வழிபாடு பொதுவாக உள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. கி.பி. ஏழாம் நூற்றாண்டில் சிவ நெறி ஆசீவக நெறியை அழிக்க முற்பட்டது என்றால், பின்பு எப்படி ஆசீவக நெறியின் கடவுளான விநாயகர் சிவ நெறியில் வந்தார் என நீங்கள் கேட்கலாம். கி.பி. ஏழாம் நூற்றாண்டில் ஆசீவகர்களை(சமணர்களை) சிவ நெறியினர் தங்கள் நெறிக்கு மாற்ற முயன்றனர். சில ஆசீவகர்கள் மாறினர். பலர் மாறவில்லை. அதனால், எண்ணாயிரம்(8000) ஆசீவகர்களை கழுவேற்றம் செய்து கொல்லப்பட்டனர். இப்படி சிவ நெறியில் சேர்ந்த ஆசீவகர்களால் தான் விநாயகர் வழிபாடு, பிள்ளையார் சுழி, ஊன் உண்ணாமை, உண்ணா நோன்பு, ஐயன்/ஐயர்/அந்தணர்/பார்ப்பார் என்றழைக்கும் வழக்கம், பல அறிவியல் கோட்பாடுகள் முதலிய ஆசீவக நெறிக் கோட்பாடுகள் சிவ நெறியில் நுழைந்தன. அதனால் தான், கி.பி. ஏழாம் நூற்றாண்டுக்கு முன் இயற்றப்பட்ட(ஏதேனும் இயற்றப்பட்டிருந்தால்) சிவ நெறியாளர்கள் இயற்றிய நூல்களில், விநாயகர் பற்றிய குறிப்புகள் இருந்திருக்காது. மேலும், பிள்ளையாரப்பட்டி(காரைக்குடி) கற்பக விநாயகர் கோயில் சிலை அதன் மேல் உள்ள பழங்கால எழுத்தை வைத்து கி.மு. 500ஆம் ஆண்டின் காலத்தியது எனலாம். விநாயகர் வழிபாடு இவ்வளவு பழமையானதாக இருந்தும் கி.பி. 7ஆம் நூற்றாண்டு வரை(1200 ஆண்டுகள்) விநாயகர் பற்றி சிவ நெறியாளர்கள் இயற்றிய இலக்கியங்களில் ஒரு பாடல் கூட இல்லையென்றால், விநாயகர் சிவ நெறியைச் சார்ந்த கடவுள் இல்லை என்றே பொருள்.

 

மேலும், ஜைன புத்த சிவ நெறிகளில் விநாயகர் வழிபாடு ஏன் செய்கிறோம் என்ற விளக்கமும் சரியாக இல்லை. ஆனால், ஆசீவக நெறியில் இருப்பதைப் போல விநாயகர் அந்நெறிகளிலும் கடவுளாகவோ அல்லது முழுமுதற் கடவுளாக இருக்கிறார். மேலும், விநாயகரைக் குறிக்கும் அனைத்து பெயர்களும் தமிழ்ச் சொற்களே.

  1. விநாயகர் = வி + நாயகர் = உயர்ந்த தலைவன்
  2. பிள்ளையார் = பிள்ளை + ஆர் = உயர்ந்தவன்
  3. கணேசன் = கணம் + ஈசன் = கூட்டத்தின் கடவுள்/மக்களின் கடவுள்
  4. கணபதி = கணம் + பதி = கூட்டத்தின் தலைவன்/மக்களின் தலைவன்

விநாயகக் கடவுள்களுக்கு பூசை சமஸ்கிருதத்தில் செய்யும் பொழுது ‘சுக்லாம் பரதரம்’ என்றுக் கூறுவர். அப்படியென்றால், என்றால் ‘வெள்ளை நிற உடை அணிந்தவனே’ என்று பொருள். சமணத்தில்(ஆசீவகத்தில்) கடை நிலையில் உள்ளவர்கள் மட்டும் தான் வெள்ளை நிற உடை அணிவர். வெள்ளை நிறத்திற்கு அப்படி ஒரு சிறப்பு.

 

மேற்கூறியவற்றை வைத்து, விநாயகர் ஆசீவக நெறியைச் சார்ந்த கடவுள் என்று நாம் ஆணித்தனமாகக் கூறலாம்.

 

விநாயகரை முழுமுதற்கடவுள், வினை(கட்டம்) தீர்த்தான் என நாம் அழைக்கிறோம். அதனால் தான், எந்தப் பெரிய கோயில்களுக்கும் சென்றால் முதலில் விநாயகரை வழிபட்டுவிட்டு தான் பின் மற்ற தெய்வங்களை வணங்குவது வழக்கமாக இருந்து வருகிறது. மேலும், எந்தச் செயலை தொடங்கும் முன்பும் திருமணத்திற்கு முன்பும் விநாயகரை வழிபடுவது நம் வழக்கமாக இருந்து வருகிறது.

 

       விநாயகர் ஆசீவக நெறியின் முழுமுதற் கடவுள் எனப் பார்த்தோம். ஏன் ஒரு ஆசீவக நெறியின் கடவுளை முருகன், சிவன், முதலிய தெய்வங்களை வணங்கும் முன்பு வணங்க வேண்டும் என நெறிகளை வகுக்கவேண்டும்?. ஏனென்றால், விநாயகர் ஆசீவக நெறியின் கடவுள். முருகன், சிவன், முதலியவர்கள் தெய்வ நிலையை அடைந்த ஆசீவக சித்தர்கள்.

 

அதற்காக, சிவன் என்ற தெய்வம் இல்லை என்பதில்லை. அவரும் தெய்வ நிலையை அடைந்த ஒரு ஆசீவக சித்தர்தான். அவரைப் பற்றிப் பின்னால் பார்ப்போம். மேலும், ஆசீவக நெறியின் பிற அடையாளங்களான பிள்ளையார் சுழி, சுழற்றியம்(ஸ்வஸ்திகா சத்தியகம் எனும் தமிழ்ச்சொல்லிலிருந்து திரிந்திருக்கலாம்), தாமரை – செந்தாமரை, வெண்தாமரை, முதலியவற்றைப் பற்றி பின்பு பார்க்கலாம்.

 

அடுத்து முருகன் எப்படி ஆசீவகக் கடவுள் என்றுப் பார்க்கலாம்.

 

(தொடரும்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள், தமிழ் வேந்தன்!

 

மிகவும் ஆர்வத்துடன் வாசிக்கின்றேன்!

Link to comment
Share on other sites

தெரியாத விடயங்களை ஆய்ந்து தருகிறீர்கள் தமிழ்வேந்தன். தொடர வாழ்த்துக்கள்.
 
அத்துடன் இலக்கியத்தில் எந்த சொற்றொடருடன் வருகிறது என்று அந்தப் பாடலின் முதலையும் எந்தக் கல்வெட்டில் காணப்படுகிறது என்று சில குறிப்புகளையும் இணைத்தீர்களானால், இது பற்றி மற்றவரும் ஆய்ந்து அறிய மிகவும் உதவியாக இருக்கும். 
Link to comment
Share on other sites

தெரியாத விடயங்களை ஆய்ந்து தருகிறீர்கள் தமிழ்வேந்தன். தொடர வாழ்த்துக்கள். :icon_idea: 

Link to comment
Share on other sites

அனைவருக்கும் நன்றிகள்...

 

முருகனைப் பற்றி கட்டுரையை உருவாக்கிக்கொண்டு இருக்கிறேன்...பல்வேறு காலங்களில் வாழ்ந்த நான்கு ஔவையாரைப் பற்றியும் அவர்கள் ஒரு ஆசீவகர் என்பதைப் பற்றியும் நிறைய செய்திகள் எனது ஆய்வில் கிடைத்துள்ளன...ஓரிரு நாட்களில் பகிர்ந்துகொள்கிறேன்...நன்றி...

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

தமிழரின் அழிக்கப்பட்ட நெறி #3

 

முருகனை பற்றிய கட்டுரை ஆக்கத்தில் உள்ளதால், தேவை கருதி இதுவரை தொகுத்த தமிழரின் ஆசீவக நெறி இருந்ததற்கான இலக்கியம் மற்றும் கல்வெட்டுச் சான்றுகளைப் பகிர்ந்துகொள்கிறேன்...நன்றி...

 

சான்று 1:

அசோகரின் கல்வெட்டுகளுள் ஒன்றில் ஆசீவக நெறி இருந்ததற்கான சான்று உள்ளது.

 

Ashoka (273–232 BCE), the grandson of Chandragupta was inspired by buddhist ideologies. There is a reference to Aaseevagar(Ajivikas) in the eddicts of Ashoka where the duties of dhammamahatma (law-authorities) are dealt with. The inscription reads:

Piyadasi, who is loved by the gods spoke thus: My supervisors of law are dealing with many connected with mercy, also with those which concern the ascetics and those which concern the house holders. They deal with the religious brotherhoods as well. I have made arrangements so that they will deal with the matter of Sangha (of the Buddhist community); similarly, I have made arrangements so they will deal with the Brahmans and also with the Ajivikas; I have also made arrangements that they deal with the Niganthas (Jainas); I have made arrangements so that they will deal with (all) the religious brotherhoods.

    இதன்மூலம், வடநாட்டில் புத்தத்திற்கு அடுத்து வேத நெறியும் ஆசீவக நெறியும் ஜைன நெறியும்(ஜைனர்களின் வேறு பெயர்கள் நிகண்ட வாதி - Nigandas, அருகர், ஆருகதர், சாதி அமணர்) இருந்தது எனத் தெரிந்துகொள்ளலாம். இங்கு, ஆசீவகமும் ஜைனமும் தனித் தனியாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவே, கி.மு. 3ஆம் நூற்றாண்டில் ஆசீவக நெறி இருந்ததற்குச் சான்றாகும். கி.மு. 3ஆம் நூற்றாண்டிலேயே ஆசீவக நெறி தமிழகத்தில் மட்டும் இல்லாமல் வடஇந்தியாவிலும் இருந்திருக்கிறது என்பது இதன்மூலம் நமக்குத் தெரிகிறது.

    மேலும், ஒரு நெறி, அதன் பிரிவான மற்றொரு நெறி, இவ்விரண்டையும் குறிப்பிடும் இடத்தில், முதலில் மூல நெறியையும் பின்பு அதிலிருந்து வந்த மற்றொரு நெறியையும் குறிப்பிடுவர். ஆசீவக நெறி ஜைன நெறியின் ஒரு பகுதியாக இருந்திருந்தால், ஜைன நெறி பெரியதாகவும் ஆசீவக நெறி ஒரு பகுதியாக/சிறியதாகவும் இருந்திருக்கும். ஜைன நெறியை அல்லவா முதலில் குறிப்பிட்டிருக்க வேண்டும். பிறகு, ஏன் ஆசீவக நெறியை முதலில் குறிப்பிட்டுவிட்டு, ஜைன நெறியை பிறகு குறிப்பிடவேண்டும். மேலும், ஜைனர்கள் இயற்றிய நீலகேசி எனும் காப்பியதிலேயே அவர்கள் ஆசீவக நெறியை வேறொரு நெறியாகத்தான் குறிப்பிட்டுள்ளனர்(சான்று கீழே).

 

சான்று 2:

கி.பி. 2ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட பௌத்தர்களின் நூலான The Ashokavadana எனும் நூலில் ஆசீவக நெறி இருந்ததற்கான சான்று உள்ளது.

 

There was no Buddhist king anywhere in India who persecuted the Jains or the Ajivikas or any other sect.(The Ashokavadana, p.xxxviii - A A.D.2nd
century Buddhism Text) - Differentiates Buddhists, Jains and Ajivikas as different religion.

 

சான்று 3:

இளங்கோவடிகள்(கி. பி. 150-250) - சிலப்பதிகாரம் - தமிழகம்
    கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்த கோவலனுடைய மாமனும், கண்ணகியின் தந்தையுமாகிய மாநாய்கன் என்னும், செல்வத்தில் மேம்பட்ட வணிகன், கோவலனும்,கண்ணகியும் உயிர்நீத்த செய்தி கேட்டு உலகத்தை வெறுத்துத் தனது பெருஞ் செல்வமெல்லாவற்றையும் தானம் செய்துவிட்டு, ஆசீவக மதத்திற் சேர்ந்து துறவுபூண்டதாகச்சிலப்பதிகாரம் கூறுகின்றது. இதன்மூலம், புத்த ஜைன நெறிகள் இருப்பதாகக் குறிப்பிடும் சிலப்பதிகாரமும் மணிமேகலையும், ஆசீவக நெறி எனும் நெறியும் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ள ஒன்றே போதும் கி.பி. 2ஆம் நூற்றாண்டில் ஆசீவக நெறி எனும் நெறி இருந்ததற்கான சான்றாகும்.

'கண்ணகி தாதை கடவுளர் கோலத்
தண்ணலம் பெருந்தவத் தாசீ வகர்முன்
புண்ணிய தானம் புரிந்தறங் கொள்ளவும்'
    (நீர்ப்படைக்காதை)

 

சான்று 4:

சீத்தலைசாத்தனார்(கி. பி. 150-250) - மணிமேகலை

சீத்தலைசாத்தனார் என்பவரால் இயற்றப்பட்ட மணிமேகலை எனும் பௌத்த நூலில் "சமயக் கணக்கர் தம் திறம் கேட்ட காதை" எனும் காதையில் உள்ளப் பாடலில் அக்காலத்தில் தமிழகத்தில் இருந்த ஆறு வகையான மதங்களில் ஆசீவக நெறியையும் ஜைன நெறியையும் தனித்தனியாகக் காட்டியுள்ளனர்
    1. ஆசீவக நெறி
    2. ஜைன நெறி - நிகண்ட வாதி எனக் குறிப்பிடப்பட்டிருக்கும்
எனப் பிரித்துக் காட்டியுள்ளார்.

 

சான்று 5:

நீலகேசி(கி.பி. 6ஆம் நூற்றாண்டிற்கு பின்)
    கதைச்சுருக்கம் : "நீலகேசி" என்பவள் திருவளங்காடு பக்கத்தில் இருக்கும் பழையனூர் என்னும் ஊரில்வசித்து வந்த பேய். அப்பேய், ஜைன முனிவரான முனிசந்திர முனிவர் என்பவரிடம், ஜைன ஆகமங்களைக் கற்று, "திருவறம்" என்று அழைக்கப்படும் ஜைன அறத்தை நிலை நாட்ட உறுதிப் பூணுகிறாள். அவ்வாறே, மற்ற சமயத்தாரிடம் முன் சென்று அவர்களிடம் வாதுசெய்து, ஜைன அறத்தை நிலை நாட்டுகிறாள். இதுதான் "நீலகேசி"யின் கதைச் சுருக்கம். இங்கு ஒன்றைக் குறிக்க நினைக்கிறேன். இது சமய வரலாற்றாய்வில் மிகவும் முக்கியமானஒன்று. அது யாதெனின், நீலகேசி மற்ற சமயங்களிடம் வாது செய்தாள் என்று பார்த்தோம். அந்த சமயங்களாவன,

1.புத்தம் (அ) பெளத்தம்
2.ஆசிவகம்(ஆசீவகவாதச் சருக்கம்)
3.சாங்கியம்
4.வைசேடிகம்
5.வேத மதம்
6.பூத வாதம்

மேற்குறிப்பிட்ட பட்டியலில், தற்போது பெருஞ்சமயங்களாக இருக்கும் சைவம், வைணவம் குறிக்கப்படவில்லையே. ஏன் குறிக்கப்படவில்லை?. சிந்திக்க வைக்கும் கேள்விதான்? இல்லையா! அக்கேள்விக்கு விடை பிறகுப் பார்ப்போம்.

    ஜைன(நிகண்ட வாதம்) நெறியினருக்குக் குழப்பமில்லாமல் தெரியும் தன் நெறியும் ஆசீவக நெறியும் வேறு என்று. அதேபோல, ஆசீவக நெறியினருக்கும் தெரியும் தன் நெறியும் ஜைன நெறியும் வேறு வேறு என்று. அதனால்தான், ஜைனர்கள் தாங்கள் இயற்றிய இந்நூலில் ஆசீவக நெறியை ஒரு தனி நெறியாகக் காட்டுகின்றனர். இவ்வாறு நெறிகளையும் வாதம் செய்து தவறு எனக்கூறி ஜைன நெறியின் கோட்பாடுகளை பரப்புவதே இந்நூலின் நோக்கம்.

    ஒருவேளை, ஜைன நெறியில் உள்ள ஒரு பகுதியான ஆசீவக நெறியை தவறு என வாதம் செய்ய சேர்த்திருக்கலாம் என நீங்கள் கூறலாம். உங்கள் கேள்வி சரியானது தான். ஆனால், அப்படிச் சேர்த்திருந்தால் கி.பி. 3ஆம் நூற்றாண்டிலேயே ஜைனத்திலிருந்து பிரிந்த தற்போதைய ஜைனத்தின் பிரிவுகளான திக்கம்பரத்தில் அல்லது ஸ்வேதம்பரத்தில் சரியான ஜைனத்தை விட்டுவிட்டு மற்றொன்றை தவறு என்றல்லவா அவர்கள் வாதம் செய்திருக்க வேண்டும். அப்படிச் செய்ய வில்லை. ஏனென்றால், திக்கம்பரமும் ஸ்வேதம்பரமும் ஜைன நெறியின் பகுதிகள். அதனால், அவை ஜைனம் தான். ஆனால், ஆசீவக நெறி இல்லை. அதனால் தான் வாதம் செய்து தவறு என நிரூபிக்க முயல்கின்றனர்.

 

சான்று 6:

திவாகர முனிவர்(கிபி 8/9 ஆம் நூற்றாண்டு) - சேந்தன் திவாகரம்

'சாவகர் அருகர் சமணர் ஆகும்;
ஆசீ வகரும் அத்தவத் தோரே'

சமணர் - சாவகர், அருகர்(ஜைனர்), ஆசீவகர்

    கி.பி. 8/9ஆம் நூற்றாண்டில் திவாகர முனிவர் இயற்றிய சேந்தன் திவாகரம் என்ற நிகண்டு நூலில், ஜைனரும் ஆசீவகரும் வேறு வேறு என்கிறார். ஆனால், சமணர் என்ற சொல் சாவகர், அருகர்(ஜைனர்), ஆசீவகர் என்ற மூன்று நெறியினரையும் சேர்த்துக் குறிக்கும் பொதுச் சொல் என்கிறார். நாம் ஒப்புநோக்கப்பட வேண்டியதென்னவென்றால், சமணர் என்ற சொல் அமணர் என்ற தமிழ் வடிவத்தின் திரிபாகும். சமணர் எனும் சொல் வைதீக எதிர்ப்பாளர் என்ற பொருளில் ஆளப்பட்டிருக்கும். அமணர் எனும் சொல் தமிழ் இலக்கியங்களில் ஆசீவகர்கள் என்றப் பொருளில் மட்டுமே ஆளப்பட்டிருக்கும்.

அதாவது, இலக்கியங்களில் நாம் இடத்திற்கேற்பவும் காலத்திற்கேற்பவும் பொருள் கொள்ள வேண்டும். முதலில், சமணர் என்ற சொல்(கி.பி. 6ஆம் நூற்றாண்டின் இடையில் ஜைன நெறி தோன்றுவதற்கு முன்பு) அமணர்களை மட்டுமே குறித்தது. அதாவது, சமணர் என்ற சொல் அமணர் என்ற தமிழ் வடிவத்தின் திரிபாகும். இரண்டும் ஒன்றே என்றப் பொருள் தான். இத்திரிபு, கி.மு. ஆறாம் நூற்றாண்டில் பிராகிருத மொழிக்குடும்பம் தோன்றிய பின்பு நடந்திருக்கலாம். அதாவது,

அமணம்>ஸமணம்(ஸ்+அமணம்)>ஸ்ரமணம் என பிராகிருதத்தில் திரிந்து பின்பு தமிழில் ஸமணம்>சமணம் என வழங்கப்பட்டிருக்கலாம். இதன் பிறகே, ஜைன நெறி தோன்றியிருக்கலாம்.

ஜைன நெறி தோன்றிய பின்பு,
                  1. சமணர் - வைதீக(வேத நெறி) எதிர்ப்பாளர்
                                    அமணர் - தமிழரின் ஆசீவக நெறியைச் சார்ந்தவர்கள்
                                    அருகர்/சாதி அமணர்/நிகண்ட வாதி - ஜைன நெறியைச் சார்ந்தவர்கள்
                                    சாவகர்
                                    தாபதர்
                  2. புத்த நெறியினர்
எனப் பொருள் இருந்தது. சமணர் என்றால் அமணர், அருகர்/சாதி அமணர்/நிகண்ட வாதி, சாவகர், தாபதர் ஆகிய எல்லோரையும் சேர்த்துக் குறித்த பொதுச்சொல்லாக பயன்படுத்தப்பட்டது.

பிறகு, சமணர், அமணர், அருகர் ஆகிய சொற்களின் பொருள்கள் மாறத் துவங்கியதற்கு முதல் சான்று கி.பி. 9ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட பிங்கல நிகண்டு நூலில் பார்க்கிறோம். பிங்கல நிகண்டு நூலில் அமணர் எனும் சொல்லின் பொருள் மாறுபட்டுள்ளது.

பௌத்தமும் தமிழும் எனும் நூலில் மயிலை திரு.சீனி. வேங்கடசாமி  (1900-1980) அவர்கள் அருணந்தி சிவாச்சாரியார்(கி.பி. 13ஆம் நூற்றாண்டு) இயற்றிய சிவஞான சித்தியார் எனும் இலக்கியத்தில் ஆசீவகத்தை ஜைனத்தின் ஒரு பிரிவாக தவறாக காட்டியுள்ளதாகக் குறிப்பிடுகிறார்.

வைதீக நெறியினருக்கு இவர்கள் அனைவரும் வைதீக எதிர்ப்பாளர்களே. அதனால், வைதீக நெறியினருக்கு இவர்கள் எல்லோரையும் சேர்த்து பிற்காலத்தில் சமணர் என்று தவறாக அழைத்தனர். இதுவே பிற்காலத்தில் ஜைனம் என்ற சொல்லுக்கு தமிழில் சமணம் என்று தவறாகப் பொருள் கொள்ளப்பட்டதற்கு முதன்மையான காரணமானது.

 

சான்று 7:

பிங்கல முனிவர்(கிபி 9/10 ஆம் நூற்றாண்டு, சைவம்) - பிங்கல நிகண்டு(திவாகர முனிவர் மாணவர்)

'சாவகர் அருகர் சமணர் அமணர்
ஆசீவகர் தாபதர் அத்தவத் தோரே'

    கி.பி.9/10ஆம் நூற்றாண்டில் சேந்தன் திவாகரம் நிகண்டை இயற்றிய திவாகர முனிவரின் மாணாக்கருள் ஒருவரான பிங்கல முனிவர், தான் இயற்றிய பிங்கல நிகண்டிலும் ஆசீவகர் வேறு அருகர்(ஜைனர்) வேறு என்றுக் குறிப்பிடுகிறார். ஆனால், இங்கு அமணர் எனும் சொல்லின் பொருள் மாறுபட்டுள்ளது.

    மேலும், கி.பி. 3ஆம் நூற்றாண்டிலேயே ஜைனத்திலிருந்து பிரிந்துவிட்ட ஜைனத்தின் பிரிவுகளான திக்கம்பரத்தையும் ஸ்வேதம்பரத்தையும் ஒரு தனி நெறியாகக் குறிப்பிடவில்லை. அனால், எப்படி ஆசீவகத்தை மட்டும் குறிப்பிட்டார் என்பதை நாம் நோக்கவேண்டும். ஏனென்றால், ஆசீவக நெறி என்பது வேறு ஜைன நெறி என்பது வேறு. அவர் ஜைனத்தின் பிரிவுகளான திக்கம்பரத்தையும் ஸ்வேதம்பரத்தையும் சேர்த்து அருகர்(ஜைனர்) எனக் குறிப்பிடுகிறார்.

    மேலும், பிங்கல நிகண்டில் சாவகர், அருகர், சமணர், அமணர், ஆசீவகர், தாபதர், சைவர், வைணவர், புத்த நெறியினர் முதலியவர்களை ஐயர் வகை எனக் குறிப்பிடுகின்றது. ஐயன்(ஐயர்), ஐயனார் முதலிய சொற்கள் ஆசீவகர்களைக் குறிக்கும் சொற்கள். இதிலிருந்தே, இந்நெறிகளின் மூலம் ஆசீவக நெறிதான் என்பது புலனாகிறது. பல நெறிகள் தோன்றும் காலங்களுக்கு முன்பு ஆசீவக நெறிக்கு இருந்த செல்வாக்கையும் இது உணர்த்துகிறது.

 

சான்று 8:

பெரியபுராணம்(12ஆம் நூற்றாண்டு)

தமிழ் ஆய்வுலகில் அமணர் ஜைனர் பற்றிய பொருள் குழப்பம் நெடுங்காலமாகத் தொடர்ந்து வருகிறது. சமணர் என்ற சொல் அமணர் என்ற தமிழ் வடிவத்தின் திரிபாகும். இச்சொல் வைதீக எதிர்ப்பாளர் என்ற பொருளில் ஆளப்பட்டாலும் தமிழ் இலக்கியங்களில் இச்சொல் ஆசீவகர்களை மட்டுமே குறித்துள்ளது. ஆசீவகர்களை அமணர்கள் என்றும் சைனர்களை அருகர்கள் என்றும் பெரிய புராணம்(பன்னிரெண்டாம் நூற்றாண்டு) இவ்விருவரையும் வேறுபடுத்திக் காட்டுகின்றது. அத்துடன் ஆசீவகர்களை அமணர்கள் என்றும் சைனர்களைச் சாதி அமணர் என்றும் பிரித்து அடையாளப் படுத்தும். இப்படிப் பெரிய புராணம் ஆசீவகர்களையும் சைனர்களையும் வேறுபடுத்திக் காட்டுவதை முதன்முதலாக ஆராய்ந்து உரைத்தவர் பேரா. முனைவர் டி.வி.மகாலிங்கம் ஆவார். தமிழ்நாட்டிலுள்ள சங்க காலக் கற்படுக்கைகள் யாவும் ஆசீவகர்களுக்கு உரியன என்பதைச் சான்றுகளோடு நிறுவியவர் அவரே ஆவார். ஏறத்தாழ 60 ஆண்டுகளுக்கு முன்பே இவ்வுண்மையை அவர் வெளிப்படுத்தியிருந்த போதிலும் தமிழ் ஆய்வுலகம் அவரை இருட்டடிப்புச் செய்து வந்துள்ளது.

 

 

ஆசீவக நெறி ஜைனத்தின் ஒரு பகுதி எனத் தவறாக எழுதத் தொடங்கியதற்கான சான்றுகள்.

 

சான்று 1:

அருணந்தி சிவாச்சாரியார்(கி.பி. 13ஆம் நூற்றாண்டு) - சிவஞான சித்தியார்

பௌத்தமும் தமிழும் எனும் நூலில் மயிலை திரு.சீனி. வேங்கடசாமி  (1900-1980) அவர்கள் கொடுத்த விளக்கம்:
    'சிவஞான சித்தியார்' என்னும் சைவ சமய நூலிலே(பரபக்கம் ஆசீவக மதம்), இந்த மதம் ஜைன மதத்தின் பிரிவுகளில் ஒன்றாகக் கூறியிருக்கின்றது. இந்தத் தவற்றினை ஞானப்பிரகாசர் என்னும் உரையாசிரியர் எடுத்துக் காட்டியிருக்கின்றார். 'திகம்பரமொப்பினும் அநேகாந்தவாதிகளாகிய நிர்க்கந்த ஆசீவகனென்க' என்று எழுதியிருக்கிறார். அஃதாவது, ஆசீவகர் ஜைனரில் திகம்பரரை (நிர்க்கந்தரை)ப் போன்ற கொள்கையுடையவரெனினும், அவரின் வேறானவர் என்று விளக்கியுள்ளார். 'மணிமேகலை', 'நீலகேசி' என்னும் இரண்டு நூல்களைத் தவிரப் பிற்காலத்து நூல்களாகிய  'சிவஞான சித்தியார்' , 'தக்கயாகப்பரணி' முதலானவை ஆசீவகமதத்தை (திகம்பர) ஜைன மதம்  என்றே கூறுகின்றன. இவ்வாறு கருதப்பட்டதற்குக் காரணம் ஆசீவகமதத்தவரும் திகம்பர ஜைன மதத்தவரும் மேற்கொண்டு வந்த பொதுவான சில கொள்கைகளாகும். வெளிப்பார்வைக்குப்  பொதுவாகத் தோன்றிய தோற்றக் கொள்கைகளைக் கண்டு, இவ்விரு சமயத்தவரும் ஒரே சமயத்தவரென்று தவறாகக் கருதப்பட்டிருக்கலாம். வெளியொழுக்கத்தில் ஒன்றாகத் தோன்றினாலும் இவ்விருவருடைய தத்துவக் கொள்கைகள் வெவ்வேறானவை. இவ்வாறு ஆசீவகமதத்தினர் திகம்பர ஜைன மதத்தினராகப் பிறகாலத்தில் தவறாகக் கருதப்பட்டது. தமிழ்நாட்டில் மட்டுமன்று வடநாட்டிலும் அவர் இவ்வாறே கருதப்பட்டு வந்தனர்.

 

சான்று 2:

தக்கயாகப்பரணி உரை(16ஆம் நூற்றாண்டு)

பௌத்தமும் தமிழும் எனும் நூலில் மயிலை திரு.சீனி. வேங்கடசாமி  (1900-1980) அவர்கள் கொடுத்த விளக்கம்:
    ஆசீவக மதத்துறவிகள் முதுமக்கட் சாடியில் அமர்ந்து தவம் செய்தனர் என்று 12 ஆம் நூற்றாண்டில் தோன்றிய தக்கயாகப் பரணி என்னும் நூலுக்கு எழுதப்பட்ட உரையான 16ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட தக்கயாகப்பரணியுரையில் கூறப்பட்டுள்ளது. இதனை,

        'தாழியிற் பிணங்களுந் தலைப்படா வெறுந்தவப்
        பாழியிற் பிணங்களுந் துளப்பெழப் படுத்தியே'

என்னும் 376-ஆம் தாழிசைக்கு உரையாசிரியர் 'தாழி-முதுமக்கட் சாடி .. தாழியிற் பிணமென்றது, ஆருகதரிலே ஆசீவகர் பெருமிடாக்களிற் புக்குத் தவம்செய்வராதலின், அவரைச் சுட்டிநின்றது' என்று எழுதியிருப்பதினின்றும் துணியலாம்.
(நூல் இயற்றப்பட்ட காலத்திற்கும் உரை எழுதப்பட்ட காலத்திற்கும் இடையில் நிறைய சொற்பொருட் குழப்பங்கள் நடந்திருப்பதால், மூலநூலில் இந்தப் பொருளில் தான் பாடல் இயற்றப்பட்டதா என்பதைப் பிறகு ஆய்வோம்.)

    மேலே காட்டிய உரைப்பகுதியில், ஆருகதரிலே ஆசீவகர் என்று காணப்படுகிறது. அஃதாவது, ஆசீவகமதம் ஆருகதமதமாகிய ஜைனமதத்தின் ஒரு பிரிவு என்று கூறப்பட்டிருக்கின்றது. ஆனால், மேலே குறிப்பிட்டதைப் போல இந்த உரைநூலுக்கு முன் இயற்றப்பட்ட நூல்களில், ஆருகதமதம் (ஜைனம்) வேறு, ஆசீவக மதம் வேறு என்று தெளிவாகக் கூறப்பட்டிருக்கின்றது. ஆனால், பிற்காலத்தில் இந்த மதம் ஜைன மதத்தின் ஒரு பிரிவு எனத் தவறாகக் கருதப்பட்டது. இத்தவற்றினைத்தான் மேலே காட்டியபடி தக்கயாகப்பரணி உரையாசிரியர் எழுதியிருக்கிறார்.

 

இவற்றின் மூலம்,

 

1. ஆசீவக நெறி என்று ஒரு நெறி உள்ளது

2. ஆசீவக நெறியும் ஜைன நெறியும் வேறு வேறு.

3. சமணமும் ஜைனமும் வேறு வேறு(தற்காலத்தில் தவறாகப் பயன்படுத்துகின்றனர் - பார்க்க சான்று 6)

 

என்பதை அறியலாம்.

 

ஆசீவக நெறி இருந்ததற்கான சான்றுகள் அந்நெறியின் கோட்பாடுகள் இன்னும் பல தமிழ் இலக்கியங்களில் பொதிந்து இருக்கின்றன. ஆசீவக நெறி இருந்ததற்கான தொல்லியல் சான்றுகளும் தமிழகம் முழுவதும் இருக்கிறது. ஆனால், தமிழரின் வரலாற்று இருட்டடிப்புகள் காரணமாக அவை தமிழர்க்கும் வெளியுலகத்திற்கும் தெரியாமலேயே மறைக்கப்பட்டிருக்கிறது.

Link to comment
Share on other sites

ஆசீவக நெறி இருந்ததற்கான சான்றுகள் அந்நெறியின் கோட்பாடுகள் இன்னும் பல தமிழ் இலக்கியங்களில் பொதிந்து இருக்கின்றன. ஆசீவக நெறி இருந்ததற்கான தொல்லியல் சான்றுகளும் தமிழகம் முழுவதும் இருக்கிறது. ஆனால், தமிழரின் வரலாற்று இருட்டடிப்புகள் காரணமாக அவை தமிழர்க்கும் வெளியுலகத்திற்கும் தெரியாமலேயே இருக்கின்றன. ////  உண்மை.......... முறையான ஆவணப் படுத்தல் இல்லை , வரலாற்றுத் திரிபுகள் என்பன தமிழர் வாழ்வைப் புரட்டிபோட்டன . எம்மால் முடிந்த அளவு செம்மையாக்குவோம் . தொடருங்கள் தமிழ் வேந்தன் .

 

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

சான்று 9:

கி.மு. 4ஆம் நூற்றாண்டில் ஆசீவக நெறி இருந்ததற்கான சான்று.

 

கி.மு. 4ஆம் நூற்றாண்டில் ஆசீவக நெறி தற்போதைய இந்தியத் துணைக்கண்டத்தின் பகுதிகள் முழுவதும் செல்வாக்கின் உச்சியில் இருந்தது. மௌரிய அரசன் பிந்துசாரா(அசோகனின் தந்தை) மற்றும் அவனது மனைவிகளுள் ஒருவரான ராணி சுபதாரங்கி ஆகியோர் ஆசீவக நெறியைப் பின்பற்றினர் என்பது தெரியவருகிறது. பிந்துசாராவின் தந்தையான சந்திரகுப்தா மௌரியா, தன் மகனிடம் ஆட்சியதிகாரத்தைக் கொடுத்தப்பின்பு, பிற்காலத்தில் ஜைன நெறியை பின்பற்றினார். மேலும், பிந்துசாராவின் மகனான அசோகன் ஆசீவக நெறியையும் ஆதரித்தான் என்பது, அவன் ஆசீவக நெறியினருக்காகக் கட்டிய பராபர் குகைகள்(Barabar Caves, Bihar) மூலம் நமக்குத் தெரியவருகிறது. ஆனால் பின்பு, பௌத்தத்திற்கு மாறிய அதே அசோகன் தான் பின்னாளில் வடஇந்தியாவில் 18000 ஆசீவக நெறியினர்களையும் பின்பு ஜைனர்களையும் கொன்றான்.

அதாவது,
1.
சந்திரகுப்தா மௌரியா(முதல் மௌரிய அரசன்) - ஜைன நெறி
2. பிந்துசாரா(சந்திரகுப்தா மௌரியா மகன்) - ஆசீவக நெறி
3. அசோகா(பிந்துசாரா மகன்) - ஆட்சிக்காலம்(கி.மு. 268–232) - புத்த நெறி
4. தசரதா(அசோகா பெயரன்) - ஆட்சிக்காலம்(கி.மு. 232–224) - புத்த நெறி
5. சம்ப்ரதி(அசோகா பெயரன்) - ஆட்சிக்காலம்(கி.மு. 224–215) - ஜைன நெறி
6. ப்ரிஹத்ரதா(கடைசி மௌரிய அரசன்) - ஆட்சிக்காலம்(கி.மு. 187–180) - புத்த நெறி

பிந்துசாரா ஆசீவக நெறியைப் பின்பற்றினான் எனப் பார்த்தோம். இதுவரை கிடைத்த சான்றுகள் வரை, வடஇந்தியாவில் முதல் முதலில் ஒரு அரசன் ஒரு நெறியைப் பின்பற்றுவது, இதுவே முதல் முறை. ஒரு நெறி அரசனிடம் செல்வாக்கடைவது என்பது, பிந்துசாரா காலத்தில் முதல் முதலில் நடக்கிறது. இங்கிருந்து தான், நெறிகளுக்கு நடுவே ஏற்கனவே இருந்த போட்டி மனப்பான்மை அரசியல் அளவில் வளர்ந்திருக்க வேண்டும். பிந்துசாராவின் காலத்திற்குப் பின், ஆசீவக நெறியைப் பின்பற்றிய அரசர்கள் இந்திய வரலாறு முழுவதும் ஒருவர் கூட இல்லை. இதன்மூலம், ஆசீவக நெறி மற்ற நெறிகளுடன் போட்டியிடவில்லை என உணரலாம். தங்கள் செல்வாக்கை உயர்த்த எளிய வழியாக மற்ற நெறிகள் இதைப் பார்த்தன. இதனால், நெறிகள் முதலில் அரசனையும் அவன் வாரிசுகளையும்(சிறுவயதிலிருந்தே) குறிவைத்தன. அரசன் எவ்வழியோ, மக்கள் அவ்வழி. அதாவது, அரசனை மாற்றிவிட்டால் போதும், அந்நாட்டு மக்களை எளிதாக மாற்றிவிடலாம். பிறகு இக்கோட்பாட்டைத்தான், வடஇந்திய வரலாறு முழுவதிலும் நாம் பார்க்கிறோம். தமிழக வரலாறிலும் கூட புத்த, ஜைன, வைதீக நெறிகள் இதேக் கோட்பாட்டைத் தான் பின்பற்றியது. ஏன், இன்றளவும் கூட இந்தியத் துணைக்கண்டத்தில் அரசியலையும் நெறியையும்(மதத்தையும்) பிரிக்க முடியவில்லை. ஓர் நாட்டின் பெரும்பான்மையாக இருக்கும் நெறியைச் சார்ந்தவர்களே அந்நாட்டை அரசாள்வர்.

 

கி.மு. 2ஆம் நூற்றாண்டிற்கு முன் இருந்த வைதீக நெறியால்(ஆரியத்தால்) சிறிதளவு கூட மக்களிடம் செல்வாக்கடைய முடியவில்லை என்பதாகவேத் தெரிகிறது. பின்புதான்(கிமு. 2ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில்), கடைசி மௌரியப் அரசனான ப்ரிஹத்ரதாவின் படைத் தளபதியாக இருந்த புஷ்யமித்ர சுங்கன் எனும் ஆரியன், ப்ரிஹத்ரதாவைக் கொன்று, வடஇந்தியாவில் முதல் ஆரிய அரசை அமைக்கிறான். இவன் காலத்தில் தான், வைதீக நெறி(ஆரிய நெறி) பரவுகிறது. புத்த நெறியை வடஇந்தியாவில் முழுவதும், அசோகன் ஜைன ஆசீவக நெறிகளை அழிக்கப் பயன்படுத்திய முறையை வைத்து, அழித்தவனும் இவன்தான். இதனால், ஏற்கனவே அசோகனால் அழிக்கப்பட்ட சமணம்(ஆசீவகம், ஜைனம்) ஆகிய நெறிகளுடன் புத்த நெறியும் சேர்ந்து, தங்கள் நெறியை தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் வளர்க்கவேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கலாம். இதனால், கி.பி. 2ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் ஐந்து வகையான நெறிகள் இருந்ததாக 'மணிமேகலை' குறிப்பிடுகிறது. இதனால், தமிழகத்தில் பண்டைய காலந்தொட்டு செல்வாக்குடன் இருந்து வந்த ஆசீவக நெறிக்கு போட்டிகள் வந்தன.

 

சான்றுகள்(பல விக்கிபீடியா பக்கங்களிலிருந்து தொகுத்தது):

http://en.wikipedia.org/wiki/Ājīvika

http://en.wikipedia.org/wiki/Ashokavadana

http://en.wikipedia.org/wiki/Chandragupta_Maurya#Jainism_and_death

http://en.wikipedia.org/wiki/Bindusara

http://en.wikipedia.org/wiki/Ashoka#Perceptions

 

Ājīvika is thought to be contemporaneous to other early Indian nāstika philosophical schools of thought, such as Cārvāka, Jainism and Buddhism. While the early nāstika systems such as Cārvāka and Ājīvika gradually became extinct or evolved into others, the Jain and Buddhist traditions spun off into what may be described today as separate religions, distinct from Hinduism (which is now restrictively meant to encompass only the six orthodox Āstika philosophical systems).

 

Unlike his father Chandragupta (who turned to Jainism in the later part of his life), Bindusara believed in the Ajivika[1] sect than Jainism. Bindusara's guru Pingalavatsa (alias Janasana) was a Brahmin[2] of the Ajivika sect. One of Bindusara's wives, Rani Subhadrangi (alias Queen Aggamahesi) was a Brahmin[3] also of the Ajivika sect from Champa (present Bhagalpur district). Bindusara is accredited with giving several grants to Brahmin monasteries (Brahmana-bhatto).[4]

 

According to Jain tradition, Chandragupta gave up his throne in the beginning of 3rd century BCE, when he was forty-two years old, and became an ascetic under the Jain saint Bhadrabahu,

migrating south with them and ending his days in sallekhana (death by fasting) at Śravaṇa Beḷgoḷa in present day Karnataka, though fifth-century inscriptions in the area support the concept of a larger southern migration around that time.

 

Ājīvika reached the height of its popularity during the rule of the Mauryan emperor Bindusara around the 4th century BC. Several rock-cut caves belonging to this sect, built during the times of the Mauryan emperor Ashoka (r. 273 BC to 232 BC) have been found at Barabar Caves, Jehanabad district, Bihar[5].

 

Ashokavadana(A 2nd century A.D. Buddhist text) mentions two incidents of Ashoka turning away from non-violence after adopting Buddhism. In one instance, a non-Buddhist in Pundravardhana drew a picture showing the Buddha bowing at the feet of Nirgrantha Jnatiputra (identified with Mahavira, the founder of Jainism). On complaint from a Buddhist devotee, Asoka issued an order to arrest him, and subsequently, another order to kill all the Ajivikas in Pundravardhana. Around 18,000 followers of the Ajivika sect were executed as a result of this order.[6]:232 Sometime later, another Nirgrantha follower in Pataliputra drew a similar picture. Asoka burnt him and his entire family alive in their house.[7] He also announced an award of one dinara (silver coin) to anyone who brought him the head of a Nirgrantha heretic. According to Ashokavadana, as a result of this order, his own brother was mistaken for a heretic and killed by a cowherd.[6]

 

Ashoka ruled for an estimated forty years. Legend states that during his cremation, his body burned for seven days and nights. After his death, the Mauryan dynasty lasted just fifty more years until his empire stretched over almost all of the Indian subcontinent. Ashoka had many wives and children, but many of their names are lost to time. His supreme consort and first wife was Vidisha Mahadevi Shakyakumari Asandhimitra. Mahindra and Sanghamitra were twins born by her, in the city of Ujjain. He had entrusted to them the job of making Buddhism more popular across the known and the unknown world. Mahindra and Sanghamitra went into Sri Lanka and converted the King, the Queen and their people to Buddhism.

 

According to the text(Ashokavadana), Ashoka started gifting away his empire's resources to the sangha during his last days. His ministers denied him the access to the state treasury amidst fears that he would empty it. Ashoka then gifted away all of his personal possessions and died in peace.

 

References:

1. Sailendra Nath Sen (1999). Ancient Indian History and Civilization. New Age International. p. 142. ISBN 978-81-224-1198-0.

2. Arthur Llewellyn Basham (1951). History and doctrines of the Ājīvikas: a vanished Indian religion. foreword by L. D. Barnett (1 ed.). London: Luzac. pp. 138, 146. Retrieved 8 April 2013.

3. Anukul Chandra Banerjee (1999). Sanghasen Singh, ed. Buddhism in comparative light. Delhi: Indo-Pub. House. p. 24. ISBN 8186823042. Retrieved 8 April 2013.

4. Beni Madhab Barua; Ishwar Nath Topa (1968). Asoka and his inscriptions 1 (3rd ed.). Calcutta: New Age Publishers. p. 171. OCLC 610327889. Retrieved 8 April 2013.

5. Entrance to one of the Barabar Hill caves British Library.

6. John S. Strong (1989). The Legend of King Aśoka: A Study and Translation of the Aśokāvadāna. Motilal Banarsidass. ISBN 978-81-208-0616-0. Retrieved 30 October 2012.

7. Beni Madhab Barua (5 May 2010). The Ajivikas. General Books. pp. 68–69. ISBN 978-1-152-74433-2. Retrieved 30 October 2012.

 

Link to comment
Share on other sites

  • 4 years later...

 

On 08/10/2013 at 12:56 AM, தமிழ்வேந்தன் said:

ஆசீவகம் என்றால் என்ன?

ஆசீவகம் என்ற சொல்லின் வேரினை கணக்கியல் வழி நின்று விளக்குவோம். எட்டுக்குள் எத்தனை இரண்டுகள் உள்ளன என ஒருவர் அறிய விரும்புகிறார். வகுத்தல் முறையில் நான்கு எனக் கண்டு கொள்கிறார். எட்டு, இரண்டு என்பன அவரிடம் உள்ளவை. இவை, முறையே முதலி, வகுத்தியாம். அவற்றைக் கொண்டு அவர் பெற்ற விடை நான்கு. இதற்குப் பெயர் ஈவு. ஆக, எந்த ஒரு அறிந்த செய்தியிலிருந்தும் அறியாமல் உள்ள விடையை அறியலாம். அதற்கு ஈவு என்று பெயர். ஈவு என்பது வகுத்தும் பகுத்தும் பெறப்படும் விடையாம். கணக்கியலில் மட்டுமின்றி இயங்கியலில் உள்ள அனைத்துத் திணை, துறை, பல்தொழில், மூவிடம், ஐம்பாலிலும் நமக்குத் தெளிய வேண்டியவற்றைப் பகுத்தும் வகுத்தும் நாம் காணும் விடை ஈவு ஆகும்.

12345678+87654321= 99999999... ஆதியும் அந்தமும்... விடை நிசப்தம்...

சிலநேரங்களில் ஒரு கூட்டான எண்களை பார்க்கும் பொழுது விடை 9 வருகிறதா என்று மனதினுள் கணக்கிட்டு பார்ப்பதுண்டு...

9துடன் எந்த எண்ணை சேர்த்தாலும், " சேர்க்கும் எண்ணாகவே  விடை இருக்கும்...

உதாரணத்திற்க்கு 9+4=13, 1+3=4..

இதிலிருந்து சுழியம் அவசியமற்றது போலுள்ளது... மனிதனின் தேடல் 9 துடன் முற்று பெற்றிருந்தால் தேவையில்லாத சண்டை, சச்சரவுகள், ஏற்ற தாழ்வில்லாமல் மன நிறைவுடன் வாழ்ந்திருக்கலாமோ என்ற எண்ணம் மேலோங்குகிறது...

Link to comment
Share on other sites

  • 3 months later...
  • கருத்துக்கள உறவுகள்

ஆய்வில் என்னே ஒரு ஆழம், ஆளுமை ! நன்றி பல, தமிழ்வேந்தன்.

Link to comment
Share on other sites

  • 4 months later...

  வரலாற்று ரீதியாக எவ்வித ஆதாரமும் இல்லாமல் தன்னிச்சையாய் தொடர்பற்ற அனைத்தைய்ம் ஏதோ ஏதோ சொல்லி பொருத்துகிறார். 
தலையானங்கானத்து செறு வென்ற பாண்டியன் காலம் பாட்டுத் தொகை காலம் பொ.ஆ.1ம் நூற்றாண்டாம் ஆண்டு
 https://en.wikipedia.org/wiki/Pandyan_dynasty

Link to comment
Share on other sites

முனைவர் க.நெடுஞ்செழியன் முதல் பொய்யாய் அந்தக் கல்வெட்டை திரித்தல் (சித்தன்னவாசல் குடைவரை ஓவியங்கள்), இரண்டாம் பொய் அதை தன்னிச்சையாய் ஒரு அரசன் என்பது, அந்த அரசன் காலம் பற்றி பிதற்றுவது. எதற்கும் ஆதாரம் தரவில்லை. 
பாண்டிய மன்னர் பட்டியல் படி உள்ள முன்னோர் அனைவரும் தமிழ் மெய்யியல் கொள்கையில் நாட்டம் கொண்ட மரபில் வேதங்களைப் போற்றுவோர் (பல்யாக சாலை முதுகுடுமி எனும் பெயரே விளக்கம்) கல்வெட்டுகள், சாசனங்கள் - செப்பேடுகள்[xii] எல்லாமே தமிழர்[xiii] இறை நம்பிக்கையும்[xiv][xv][xvi] வேத மெய்யியல் மரபினர் என்பதை நிருபிக்கின்றன.
கிறிஸ்துவ காலனி அடிமை களாய் மதவெறி தேவநேயன் வழியில்[xvii] பொய்- பித்தலாட்டமே ஆய்வு -அதாவது காலணிக்காய் காலை(Cut Leg to suit Shoe) வெட்டும் வேலை Q%2BPandiyar.jpg

http://thamilkalanjiyam.blogspot.com/2018/09/blog-post_74.html முனைவர் க.நெடுஞ்செழியன் முதல் பொய்யாய் அந்தக் கல்வெட்டை திரித்தல் (சித்தன்னவாசல் குடைவரை ஓவியங்கள்), இரண்டாம் பொய் அதை தன்னிச்சையாய் ஒரு அரசன் என்பது, அந்த அரசன் காலம் பற்றி பிதற்றுவது. எதற்கும் ஆதாரம் தரவில்லை. 
பாண்டிய மன்னர் பட்டியல் படி உள்ள முன்னோர் அனைவரும் தமிழ் மெய்யியல் கொள்கையில் நாட்டம் கொண்ட மரபில் வேதங்களைப் போற்றுவோர் (பல்யாக சாலை முதுகுடுமி எனும் பெயரே விளக்கம்) கல்வெட்டுகள், சாசனங்கள் - செப்பேடுகள்[xii] எல்லாமே தமிழர்[xiii] இறை நம்பிக்கையும்[xiv][xv][xvi] வேத மெய்யியல் மரபினர் என்பதை நிருபிக்கின்றன.
கிறிஸ்துவ காலனி அடிமை களாய் மதவெறி தேவநேயன் வழியில்[xvii] பொய்- பித்தலாட்டமே ஆய்வு -அதாவது காலணிக்காய் காலை(Cut Leg to suit Shoe) வெட்டும் வேலை Q%2BPandiyar.jpg

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.