Jump to content

தமிழ்த் தேசிய ஆதரவு ஊடகங்களின் நடத்தை


Recommended Posts

அது சரி எங்கடை ஊடகங்கள் ஏன் அரச தரப்பை குறுக்கு விசாரணை செய்து மடக்கி முகத்திரை கிழிக்க முயற்சிப்பது இல்லை?

Link to comment
Share on other sites

  • Replies 97
  • Created
  • Last Reply

இன்று கொடிகாமம் பகுதியில் விடுதலைப்புலிகளுக்கு சிறிலங்கா இராணுவத்தினருக்கும் இடையில் கடும் மோதல் நடந்து வருகின்றன. விடுதலைப்புலிகள் கொடிகாமத்தின் பெரும் பகுதியை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறார்கள்.

சிறிலங்கா இராணுவத்தின் 3 யுத்த டாங்கிகள் அழிக்கப்பட்டிருக்கின்றன. விடுதலைப்புலிகளின் டாங்கி எதிர்ப்பு படையணியால் முதலில் ஒரு டாங்கி கடும் சேதமாக்கப்பட்டது. அந்த டாங்கியை இழுத்துச் செல்ல வந்தது. இதற்கு பாதுகாப்பாக இன்னும் ஒரு டாங்கி தாக்குதலில் ஈடுபட்டது. கடைசியில் விடுதலைப்புலிகளின் டாங்கி எதிர்ப்பு படையணியினரால் மூன்று டாங்கிகளும் அழிக்கப்பட்டன.

இறந்த, காயமடைந்த படையினரை ஏற்ற வந்த உலங்கு வானூர்த்தியும் விடுதலைப்புலிகளின் தாக்குதலுக்கு இலக்கானது. ஆயினும் உலங்கு வானூர்த்தி மயிரிழையில் தப்பி விட்டது.

தற்பொழுது மோதல்கள் தொடர்ந்து வண்ணம் இருக்கின்றன. சிறிலங்கா இராணுவத்தின் அகோரணமான பல்குழல் எறிகணை வீச்சால் கிளிநொச்சியில் இருக்கின்ற கண்ணாடிகள் கூட வெடித்துச் சிதறுகின்றன.

இது நாள் வரை நடந்த மோதல்களில் இன்று நடந்து கொண்டிருக்கிற மோதலே மிகக் கடுமையானதாகக் கருதப்படுகிறது.

www.webeelam.com

Link to comment
Share on other sites

தயவுசெய்து அனைவரும் புதினத்தின் செய்தி ஆய்வைப் படியுங்கள். முகமாலை களநிலவரத்தின் யாதார்த்த நிலை தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

http://www.eelampage.com/?cn=28238

Link to comment
Share on other sites

அது சரி எங்கடை ஊடகங்கள் ஏன் அரச தரப்பை குறுக்கு விசாரணை செய்து மடக்கி முகத்திரை கிழிக்க முயற்சிப்பது இல்லை?

போனதடவை ஜெனிவா பேச்சுகளின் போது பல ஊடகங்கள் முயன்றும் இலங்கை அதிகாரிகள் தட்டிக்களித்து இருந்தார்கள்....!

திறமையில் நம்பிக்கை இல்லாமலும் திட்டமிடல் அற்றுப்போய் போனதடவை தீபம் தொலைக்காட்டி கனடா TVI மாற்றுக்கருத்தாளரை பேட்டிகாணப்போய் அவர்களுடனான ஒத்தூதலும் சப்புக்கட்டலாய் அமைந்து புலம்பெயர் மக்களால் வெறுப்புக்குள்ளாகியதையும் மறக்க முடியாது இல்லையா....???

Link to comment
Share on other sites

இணைய தளங்கள் செய்திகளை வழங்குவதில் இன்றைய சூழலில் பொறுப்புணர்வோடு நடந்துகொள்ள வேண்டியது மிக அத்தியாவசியமானது. ஆனால் பல ஊடகங்கங்களிடம் அது காணப்படுவதில்லை. அதிலும் குறிப்பபாக இணைய செய்தியை வழங்கும் தமிழ் ஊடகங்கள் செய்திகளை உறுதிப்படுத்தாமலே செய்திகளை வழங்குவதில் முன்னிற்கிறன/ பரபரப்புக்காக செய்திகளை வழங்க முற்படுகிறார்கள்.

வேறொரு தலைப்பில் பதிவு இணையத்தளம், ரிரிஎன் என்பன சென்சோலை படுகொலை நடந்த அன்று மந்துவிலிலும் தாக்குதல் நடந்து 21 பொதுமக்கள் பலியானதாக செய்தியை வெளியிட்டது பற்றிய கருத்து பகிர்வு நடந்ததாக நினைவு. அன்று ரிரிஎன் பார்த்துகொண்டிருந்த நான் அச்செய்தியை நம்பி உடனடியாக எனது உறவினர்களுக்கும் கூறிவிட்டேன். பின்னர் தான் தெரியவந்தது அச்செய்தி பதிவின் மொழிபெயர்ப்பு குழறுபடியை

எந்த வித உறுதிபடுத்தலும் இல்லாது ரிரிஎன் செய்தியாக்கியக்கியிருக்கிற

Link to comment
Share on other sites

தவறுதலாக பழைய திகதி இடம்பெற்றுவிட்டது.

மன்னியுங்கள் நண்பர்களே!

மற்றையபடி இச் செய்தி நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து பெறப்பட்ட உண்மையான செய்தி.

விடுதலைப்புலிகள் சில காரணங்களினால் செய்திகளை தணிக்கை செய்தே வெளியிடுகிறார்கள்.

முகமாலையில் இருந்த கொடிகாமம் வரை சண்டை நடப்பது உண்மை.

எப்பொழுதுமே இராணுவத்திற்கு ஏற்படும் இழப்புக்களை சொல்லுகின்ற விடுதலைப்புலிகள் இம் முறை மட்டும் எதையும் சொல்கிறார்கள் இல்லை. "புலிகளின் குரல்" கூட இராணுவத்தின் இழப்பாக சிறிலங்கா அரசின் தகவல்களையே வெளியிடுகிறார்கள்.

இதுவரை 80இற்கும் மேற்பட்ட போராளிகள் இறந்துவிட்டார்கள். இப்பொழுதும் முகமாலையின் முன்னரங்குகளில் சண்டை நடப்பதாக சொல்லப்படுவதுதான் நம்புவதற்கு மிகக் கடினமாக இருக்கிறது.

Link to comment
Share on other sites

(விகடகவியும் கொடிகாமத்தைச் சேர்ந்தவனே)

வீரசிங்கம் பாடசாலை தெரியுங்களா...??? :wink: :P

Link to comment
Share on other sites

நல்லா தெரியும் தல அங்கைதான் நான் படிச்சனான்?

நல்லவேளை நான் அங்கை படிக்க இல்லை... :wink:

என்னை காட்டிக்குடுத்து இருப்பியள் (நீங்கதான் காக்கை வன்னியன் ஆச்சே) :wink: :P

நான் நுணாவில்...!

Link to comment
Share on other sites

வீரசிங்கம் பாடசாலை தெரியுங்களா...??? :wink: :P

இல்லை அவர் யார் வீரசிங்கம் என நானறியேன் தல... தலைவா...

ஆனால் திருநாவுக்கரசரை தெரியும் (நல்லா)

Link to comment
Share on other sites

தவறுதலாக பழைய திகதி இடம்பெற்றுவிட்டது.

மன்னியுங்கள் நண்பர்களே!

மற்றையபடி இச் செய்தி நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து பெறப்பட்ட உண்மையான செய்தி.

விடுதலைப்புலிகள் சில காரணங்களினால் செய்திகளை தணிக்கை செய்தே வெளியிடுகிறார்கள்.

முகமாலையில் இருந்த கொடிகாமம் வரை சண்டை நடப்பது உண்மை.

எப்பொழுதுமே இராணுவத்திற்கு ஏற்படும் இழப்புக்களை சொல்லுகின்ற விடுதலைப்புலிகள் இம் முறை மட்டும் எதையும் சொல்கிறார்கள் இல்லை. "புலிகளின் குரல்" கூட இராணுவத்தின் இழப்பாக சிறிலங்கா அரசின் தகவல்களையே வெளியிடுகிறார்கள்.

இதுவரை 80இற்கும் மேற்பட்ட போராளிகள் இறந்துவிட்டார்கள். இப்பொழுதும் முகமாலையின் முன்னரங்குகளில் சண்டை நடப்பதாக சொல்லப்படுவதுதான் நம்புவதற்கு மிகக் கடினமாக இருக்கிறது.

சபேசன் அவர்கள் செய்தி வெளியாடததற்கான காரணங்கள் இருக்கின்றன ஆகவே நாங்களும் இவை அதிகார பூர்வமாக வெளிவரும் வரை காத்திருப்பது நல்லது.

முகமாலை சண்டை நடை பெற்றுக்கொண்டிருக்கலாம், புதினத்தில் இன்று இருக்கும் கள நிலவர அலசலில் இருந்து முகமாலை வலயம் எவ்வளவு பெரியது என்று விளங்கும்.ஆங்காங்கே ஊடறுப்பும், ஊடுருவலும் சண்டைகளும் நடந்து கொண்டிருக்கலாம்.ஆகவே செய்திகள் அதிகார பூர்வமாக வெளிவரும் வரை அமைதி காப்பது நல்லது.

Link to comment
Share on other sites

அங்காலை புதினத்திலை ஆய்வு செய்யிறவர் எழுதுறார் சிறிலங்கா ஆமி கட்யுசா றொக்கற் அடிக்குதாம். யாழ்பாணத்தில் இராணுவம் 25 ஆயிரம் பேர் இருக்கினமாம். அப்ப இதுவரை காலமும் சொன்ன 40...41 ஆயிரம் என்றதுக்கு என்ன நடந்தது? ஏன் உங்களுக்கு தேவையில்லாத வேலை. உதுகளை என்ன இழவுக்கு எழுதுறியள். வெளிநாட்டில இருக்கிறவை வாசிச்சுப்போட்டு திண்டது செமிச்சு ஏப்பம் விடவே?

யாழ்பாணத்தோடு தொலைபேசி தொடர்பு மின்னஞ்சல் தொடர்புகள் இருந்தால் அதை வைச்சு அங்குள்ள மக்களின் உணவுத்தட்டுப்பாடு, மருந்துத் தட்டுப்பாடு, இராணுவம்

மக்களிற் செய்யிற அவலத்தை பற்றி எழுதுங்கோ. அதுபற்றிய விபரங்களை முரண்பாடு இல்லாமல் அதாரத்தோடு கொண்டுவாங்கோ, அதை விட்டுட்டு கூகிள் ஏத்திலை படங்கீறி வித்தை காட்டிறியள் 55 டிவிசன் படுக்குது 53 டிவிசன் கொட்டாவி விடுது எண்டு. உதை இஞ்சை இருக்கிறவை வாசிச்சுப்போட்டு என்ன ஆட்டிலறியே அடிக்கப் போயினம்.

உங்களுக்கு போராட்டத்தின்ரை தற்போதைய நிலை விளங்கினா ஏன் தேவையில்லாத வேலை பாக்கிறியள்? இப்படியான செய்திகளையும் ஆய்வுகளையும் பாத்தா உங்களுக்கு தேவையா இருக்கிறது உங்கடை களத்துக்கு வாசகர்கள், உங்கடை களம் பரபரப்பா பேசப்பட வேணும் எண்ட அவதி. வேறை ஒண்டையும் கவனியாதையுங்கோ யோசியாதையுங்கோ. நாசமறுப்பார்.

Link to comment
Share on other sites

இப்பிடிதான் குறுக்ஸ் சண்டை தொடங்கின நேரம் ஊரில ஒருத்தரோடை கதைக்கேக்க சொன்னார்..... இராணுவ ஹெலிகள் இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசத்துக்குள்ளேயே தாக்குதல் மேற்கொண்டதாய்...

அனேகமாய் புலிகளை கண்டால் இராணுவத்தை அனுப்பி சுற்றிவளைத்து தேடுவார்கள் ஆனால் ஹெலியை அனுப்பி அடிக்க சொல்ல என்ன வந்தது எண்டு அவரைக்கேட்டால்..... சின்ன முகாம்களை மூடிப்போட்டு ஓடிப்போய் பெரிய முகாம்களில பதுங்கீட்டாங்கள்... பிரகு எப்பிடி ரோந்து போய் தாக்குதல் மேற்கொள்ளுறது எண்டு...

இதை பாக்கேக்கை கனக்க விசயம் விலங்கினாலும் எதுக்கு இப்ப வேண்டாம் நாங்கள் தேவையான விசயத்தை மட்டும் பாப்பம்...!

Link to comment
Share on other sites

அங்க சாகிறவன் ஆற்றையின் பிள்ளை தானே இங்க சும்மா இருந்து கொண்டு இராணுவ ஆய்வு எழுதுகினம் .ஒரு ஊர்வலத்துக்கு வாங்கோ எண்டா வேலை எண்டுடிவாங்கள். பச்சோந்திகள்.

Link to comment
Share on other sites

Fighting erupts in Trincomalee district

[TamilNet, August 16, 2006 20:30 GMT]

Sri Lanka Army troopers stationed in military installations located in Trincomalee town and its suburbs have been firing artillery shells towards Liberation Tigers of Tamil Eelam held positions in Muthur east and Eachchilampathu divisions in support of ground troops in Maavilaru area as fresh fighting was reported in Maavilaru.

Both sides have been firing artilleries and mortar bombs since evening, sources in the area said. Residents in east port town could hear explosions in Muthur area down south of Trincomalee district, sources said.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=19262

Link to comment
Share on other sites

அங்க சாகிறவன் ஆற்றையின் பிள்ளை தானே இங்க சும்மா இருந்து கொண்டு இராணுவ ஆய்வு எழுதுகினம் .ஒரு ஊர்வலத்துக்கு வாங்கோ எண்டா வேலை எண்டுடிவாங்கள். பச்சோந்திகள்.

MASS DEMONSTRATION AT DOWNING STREET ON 21ST AUGUST 2006. -

பிரித்தானிய பிரதமரின் அலுவலகத்திற்கு முன்னால் 4 நாட்கள் மாபெரும் போராட்டம். - மூதூர் அரச சார்பற்ற நிறுவன பணியாளர் கொலை , செஞ்சோலை சிறுவர் கொலைகளை அம்பலப்படுத்துவோம்.

WHITEHALL AT THE JUNCTION OF RICHMOND TERRACE OPPOSITE ENTRANCE STREET. FROM 11 NOON TILL 6PM Monday 11 NOON TILL 6PM , Tuesday 11 NOON TILL 6PM , Wednesday 11 NOON TILL 6PM , Thursday 11 NOON TILL 6PM, Organised by British Tamil Councillors and associate’s members London Baba Suresh Krishna along with Councillor Sasikala Suresh. TO CONDEMN THE KILLING OF 61 SCHOOL CHILDREN AT SENCHOLAI CHILDREN'S HOME AND TO STOP THE BRUTAL KILLING TOWARDS INNOCENT TAMIL CITIZENS IN NORTH AND EAST PART OF TAMIL EELAM. call to RAJAN 077 51 71 70 97, SURESH 07967565477

தகவல் நிதர்சனத்தில் இருந்து

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு நேரத்தில் யாழ்ப்பாணத்தில் ஏறத்தாழ நாற்பதாயிரம் இராணுவம் இருந்தது. அந்தக்கணக்கை இன்றுவரை சொல்லிவருகிறோம்.

25000 தொடக்கம் 30000 வரை இப்போது இருக்கலாம்.

ஏற்கனவே புதினம் சிறிலங்கா அரசின் படைப்பலம் பற்றிய ஒரு பட்டியலை வெளியிட்டது. அதில் சிலவிசயங்களை மிகமிகக் குறைத்துச் சொல்லியது. (அதன் செய்தி மூலம் சிலவேளை தவறாக இருக்கலாம்). சாதாரண பொதுமகனாலேயே அதில் சில தகவல்கள் பொய் என்று சொல்லமுடியும். பிரசுரிக்கும்போது ஒரு விழிப்புணர்வு வேண்டாமா? ஆனால் அப்படிக் குறைத்துச் சொல்லப்பட்ட சிறிலங்கா அரசின் படைப்பலத் தொகுப்பை வெளியிட்டுக்கொண்டு, 'இப்படிப் பட்டியலை வெளியிட்டு வெருட்ட முடியாது' என்று எழுதினார்கள்.

நகைப்பாக இருந்தது.

செய்தித்திரிப்பைப் பற்றிக் கதைத்தால் அது 'உளவியல் யுத்தம் அல்லது தந்திரம்' என்ற சொல்லுக்குள் அடக்கிவிட்டு தொடர்ந்தும் இச்செய்திகளை வைத்து முதுகு சொறிந்து கொண்டிருக்கிறோம். அப்போ சிங்களவன் செய்வது உளவியல் யுத்தம் என்பதை ஏற்கிறோமா?

ஜெயசிக்குறு நடவடிக்கையில் புளியங்குளம் மிகப்பெரிய களமாக இருந்தது. இலங்கை அரசவானொலி பல தடவைகள் 'புளியங்குளததைப் பிடித்துவிட்டோம்' என்று சொன்னது. பிடித்த இடத்தையே திரும்பத் திரும்பப் பிடித்ததாகச் சொல்லிக்கொண்டிருந்தது. முழுமையாக 100 நாட்கள் சென்றும் அச்சந்தியைப் பிடிக்கவில்லை. ஆனால் பலதடவை அதைப்பிடித்துவிட்டதாகச் சொல்லியது.

இறுதியில் உண்மையில் அச்சந்தியை அவர்கள் வந்தடைந்தபோது பிடித்துவிட்டதாகச் சொல்லவில்லை.

இன்று தமிழ் இணைய ஊடகங்கள் செய்வது, அன்றைய அரசவானொலியின் செயற்பாட்டைத்தான். என்ன செய்வது? பெரும்பாலானவர்கள் இன்னும் இவர்களை நம்பிக்கொண்டு இருக்கவேண்டிய நிலை. மந்துவில் விமானத்தாக்குதல் பற்றிய செய்தி தொடர்பில், செய்திப்பிழையைத் தெரிவிக்காமல் நசுக்கிடாமல் இருந்து மாபெரும் அயோக்கியத்தனத்தைச் செய்துள்ளன. (இதைப்பற்றிக் கதைத்தால் செய்தித்தளங்களின் நம்பகத்தன்மையைக் குலைக்க சதி செய்வதாக ஒரு பம்மாத்து. உப்பிடியே போய் கடசியில என்ன செய்யப்போறதா உத்தேசம்?)

தமிழ் இணையத்தளங்களின் சேவையைப் பெறுபவர்கள் புலம்பெயர்ந்தவர்களே. அவற்றை விமர்சித்து, சரியான வழியில் நடத்திச் செல்லவேண்டியதும் அவர்கள்தாம்.

புலிகள் நடப்பதைத் தெரிவிக்கவில்லை, அதற்கு ஏதாவது இராஜதந்திரம் இருக்கிறதென்றால் பிறகெதற்கு இந்த இணையங்கள் அவற்றை வெளியிடுகின்றன? நீங்கள் எதற்கு அவற்றை வைத்துக் கருத்தாடுகிறீர்கள்? புலியின் நோக்கத்துக்கு எதிராகவா?

உறவினர்களோடு தொடர்பு கொண்டால் மக்களின் நிலையை வெளிக்கொணரலாமே?

இன்றைய நிலையில் நடக்கக்கூடிய திருட்டுக்கள், கடையுடைப்புக்கள், உணவுப்பொருட்களைப் பதுக்கல் என்பன பற்றி எழுதலாம். அவ்வவ் பகுதிமக்கள் படும் பொருட்தட்டுப்பாட்டை எழுதலாம். 90 களில் நாங்கள் 100 கிராம் தண்ணிதெளித்த சீனிக்காக 100 பேர் வரிசையில் நின்ற நிலை இப்போது உள்ளதாகச் சொல்லப்படுகிறது. அவைபற்றி எழுதலாம்.

ஆம்! களநிலைபற்றியும் எழுதவேண்டும். அவற்றின் வெற்றிதாம் எம்மை உயிர்ப்பித்து வைத்திருக்கும். ஆனால் இப்ப முதுகு சொறிந்துகொண்டிருக்க வேண்டாமே.

Link to comment
Share on other sites

போனதடவை ஜெனிவா பேச்சுகளின் போது பல ஊடகங்கள் முயன்றும் இலங்கை அதிகாரிகள் தட்டிக்களித்து இருந்தார்கள்....!

திறமையில் நம்பிக்கை இல்லாமலும் திட்டமிடல் அற்றுப்போய் போனதடவை தீபம் தொலைக்காட்டி கனடா TVI மாற்றுக்கருத்தாளரை பேட்டிகாணப்போய் அவர்களுடனான ஒத்தூதலும் சப்புக்கட்டலாய் அமைந்து புலம்பெயர் மக்களால் வெறுப்புக்குள்ளாகியதையும் மறக்க முடியாது இல்லையா....???

எங்கடை ஊடகங்கள் அன்று முதல் இன்றுவரை அப்ப முன்னேறவில்லை என்றியள்.

பிபிசிக்காரன விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளரை கேள்வி கேட்டு மடக்க வேணும் என்று துடிக்கிறான். தங்கடை பிரச்சாரத்திற்கு வலுச் சேர்கிறமாதிரியான ஒருதலைப்பச்சமான குதர்க்கமான கேள்விகள் கேக்கிறாங்கள். கள்ளன் ராம்றாஜ் ரிபிசியில புனர்வாழ்வு கழக நிறைவேற்று பணிப்பாளர் றெஜியை கேள்வி கேட்டு மடக்க முயற்சித்தான்.

ஆனான் எங்கட ஊடகம் நடத்திறவைக்குத்தான் திறமையில்லை கேள்விகேக்க? கேட்டாலும் ஒத்தூதுற கேவலத்திலை இருக்கினம் எத்தின வருடங்களாக? ஆர்வமும் துடிப்பும் இருந்த கொஞ்சம் கொஞ்சமாக அனுபவத்தில் நம்பிக்கையையும் கட்டி எழுப்பலாம்.

ஆனால் உந்த நாயள் முயற்சி செய்யிறது இல்லை. முயற்சிக்காமல் எப்படி அனுபவம் வரப்போது. அவங்களுக்கு களவெடுத்ததை கிளிப்பிள்ளை மாதிரி வாசித்து சுகம் கண்டுட்டாங்கள். நாங்களும் அவையை தூக்கி வைச்சிருக்கிறம் தேசிய ஆதரவு ஊடகங்கள் என்று.

செய்திகளில் அவை தமிழர் தரப்பு பிரதிநிதிகளிடம் கருத்து எடுக்கிற அழகை பார்க்க வேணும். செய்தியை கிழிப்பிள்ளை மாதிரி வாசிப்பார் பிறகு சொல்லுவார் இது விடையமா இன்னாரை தொடர்பு கொண்டு அவருடை கருத்தை கேட்டோம் எண்ணுவார். அந்த நபர் எழுதி வைச்சை ஒண்டை மூச்சு விடாமல் வாசிப்பார். அதோடை அந்த விடையம் முடிஞ்சுது. எங்களுக்கு ஆதரவானவர்களோடும் கேள்வி பதிலாக அந்த கருத்துக்களை எடுக்க வேணும் என்று தெரியாத கழுதைகள் தான் எங்கடை ஊடகங்கள் நடத்துதுகள்.

தகுதியின் திறமையின் அடிப்படையில் ஆக்களுக்கு பதிவி வழங்கப்பட்டால் இந்த கேவலம் தொடராது. தன்நம்பிக்கையுடைய இளையவர்களை ஏன் உள்வாங்கா மறுக்கினம். இளம் ஊடகர்களை ஆய்வாளர்களை வைத்து ஏன் இவற்றை தயாரிக்க முடியாது உள்ளது?

Link to comment
Share on other sites

இன்று நாம் ஒரு முக்கியமான கால கட்டத்தில் இருக்கிறம். ஊடகங்கள் தமது பணிகளை காலத்தின் தேவை அறிந்து செய்வதற்கு விமர்சனங்கள் அவசியம். தமது நிகழ்ச்சி நிரல்களை தேவை அறிந்து மாற்றி உரிய பாணியல் கொண்டு செல்ல வேணும்.

இதற்கு ஒரு தனிப்பிரிவை ஆரம்பித்து அனைத்து உடகங்களின் நடத்தைகள் பற்றிய விமர்சனங்களை தொடர வேண்டும்.

இதுவரை பல விடையத் தலப்புகளில் சிதறியிருக்கிற கருத்துக்களையும் ஒன்று சேர்த்து ஒரு தனிப்பிரிவை ஆரம்பித்து விடுமாறு யாழ் நிர்வாகத்தை கேட்டுக் கொள்கிறேன்.

Link to comment
Share on other sites

எங்கடை ஊடகங்கள் அன்று முதல் இன்றுவரை அப்ப முன்னேறவில்லை என்றியள்.

இதில் என்ன சொல்லக்கிடக்குது.... அதுதான் உண்மை..!

எங்கள் அனைவருக்குமே எப்போதும் ஒருவர் செய்து காட்ட வேண்டும் அதுக்கு பிறகுதான் அந்த வளியை அச்சொட்டாக பின் தொடர்கிறனாங்கள்...!

புதுசாய் ஒரு முறையை கொண்டுவந்து அது வெற்றி பெற்று பாராட்டு பெறவேண்டும் என்பதெல்லாத்தயும் விட எங்களவர்கள் செய்து வெற்றி பெற்ற விடயத்துக்கு மெருகுகூட்டி செய்யிரதிலதான் நாட்டம் கொண்டவர்களாய் இருக்கிறார்கள்....

உருவாக்குதல் என்பதிலை எங்கட ஆக்கள் ஜப்பான் காறன் வரும் போது கொஞ்சம் பிச்சை வாங்கிகொள்ள வேணும் எண்டு கேட்டுக்கொள்கிறேன்.....!

Link to comment
Share on other sites

கள உறவுகளே!

நடக்கும் சம்பவங்கள் ஒன்றுதான். ஆனால் அது எவ்வாறு ஒவ்வொரு பத்திரிகை, வானொலி தொலைக்காட்சி இணயத்தள செய்தி நிறுவனங்களால் செய்திகளாக வருணிக்கப்படுகிறது என்றதை கவனியுங்கள்.

-1- அந்த விடயத்தை என்ன தலையங்கத்தோடு வெளியிடுகிறார்கள்.

-2- சம்பவம்-விடயத்தின் ஆரம்ப விவரணம் என்னவாக எப்படி இருக்கிறது.

-3- சம்பந்தப்பட்டவர்களின் கூற்றுக்களில் அல்லது வெளியிடப்படும் அறிக்கைகளின் எப்பகுதிகளை தமது செய்திகளில் மேற்கோள் காட்டுகிறார்கள்.

-4- பழய விடயங்களை அல்லது சம்பவங்களை சுட்டிக்காட்டி ஏதாவது தொடர்புகளை மறைமுகமாக சொல்ல முனைகிறார்களா?

-5- செய்தியின் இறுதிப்பகுதி எவ்வாறு முடிக்கப்பட்டுள்ளது.

-6- இந்த விவகாரங்களில் (உதாரணத்துக்கு ஈழப்போராட்டம்) எந்தவெரு முன் அனுபவம்-அறிவு இல்லாத ஒரு சாதாரணமானவர் இச்செய்தியை வாசித்து முடிக்கும் போது எந்த மாதிரியான எண்ணங்கள் அவருள் வரும் என்ன மனோநிலையை அடைவார்.

-7- சம்பவத்தில் நடந்தவற்றை பக்கச்சார்பின்றி நடு நிலையாக அறிவிக்கிறார்களா இல்லை விவரணங்களின் நடுவே சில "கருத்துக்களும்" உள்நோக்கங்களோடு விதைக்கப்பட்டிருக்கின்றனவா?

யாரும் இந்த விசயத்தில ஆர்வம் காட்டிறதா தொரிய வில்லை? :lol: :?

அரசியல் நாட்டு நடப்புக்களில் ஆர்வமாக கருத்தாடும் கள உறுப்பினர்களே உங்கள் கருத்துக்களை முன்வையுங்கள்.

-1- BBC தமிழ் இன் செய்தியின் தலையங்கத்தை மாத்திரம் வாசிக்கும் போது எப்படியான ஒரு விவகாரம் என எண்ண வைக்கிறது?

-2- செய்தி 7 பந்திகளாக பிரிக்கப்பட்டு இருக்கிறது. 5 தாவது பந்தியில் தான் சம்பவம் பற்றிய முக்கிய மான பின்னணித் தகவல் சொல்லப்படுகிறது.

-3- 4வது பந்தி ஒரு பின்னணி மேலதிக தகவலாக செய்தி நிறுவனத்தால் புகுத்தப்படுகிறது. அதுவரை (பந்தி 1 முதல் 3 வரை) சம்பவம் பற்றி கூறியதோடு இந்த "குறிப்பிடத்தக்கது" என கூறப்படும் மேலதிக தகவல் ஒரு சாதாரண மனிதருக்கு எப்படியான உணர்வலைகளை எழுப்பும்?

-4- செய்தியை முழுமையாக வாசித்தபின்பும் தலையங்கம் உணர்த்த முற்பட்ட செய்தியாகத்தான் இருக்கிறதா இல்லை மாற்றம் அடைந்தீர்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது புலிகள் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்ட கணக்கென்று கருதுகிறேன். ஆனால் செய்தி மூலத்தைப்பற்றி புதினம் வழமைபோல எதுவும் சொல்லவில்லை. ஆக குறுக்கால போவான் சொன்னதுபோல புதினம் எண்ணினமாதிரி நினைக்கவேண்டியதுதான்.

என்னளவில் இராணுவத்தின் இறப்புத்தொகை இதைவிட அதிகமாயிருக்குமென்று கணக்கு வைத்திருந்தேன். பரவாயில்லை.

அதுசரி, புதினத்துக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்ப வேணுமெண்டா என்னெண்டு அனுப்பிறது? ஆருக்காவது மின்னஞ்சல் முகவரி தெரியுமா?

இணையத்தளத்தில "தொடர்புகளுக்கு", "உங்கள் கருத்துகள்" எண்டு சும்மா தலைப்புத்தான் வைச்சிருக்கினமேயொழிய அங்க ஒண்டுமில்லை. உது மாசக்கணக்கா இருக்கிற பிரச்சினை. இண்டைவரைக்கும் இவைக்கு ஒருத்தரும் கருத்து எழுதாமல்தான் இருக்கினம்போல. அல்லது தளத்தில முகவரி தந்து என்ர கண்ணுக்குத்தான் அது தெரியேலயோ என்னவோ?

(தமிழ்நாதத்துக்கு எழுதுங்கோ எண்டு புத்திசாலித்தனமாப் பதில் சொல்லாதையுங்கோ)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.