Jump to content

ஓணான் கோட்டை !


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஓணான் கோட்டை

 

 

2sm18.jpg

 

 

 

தான் இருப்பது எந்த இடம்? என்று சசிக்குப் புரியவில்லை. உள்ளே ஒரே இருட்டு. கொஞ்ச நேரத்தில் அவனைச் சுற்றி ஜோடி ஜோடியாய் விளக்குகள் முளைத்தன. சுற்றிலும் பார்த்த அவன் பயத்தில் கத்தியே விட்டான். அவனைச் சுற்றி ஓணான்களின் கூட்டம்! எல்லாம் கண்களை உருட்டிச் சுழற்றி அவனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தன. பார்த்துவிட்டுத் தலையை ஆட்டிக் கொண்டு மெல்லச் சிரித்தன. சசி எழுந்து ஓடிவிடலாம் என்று நினைத்தான். ஆனால் அவன் ஓணான்களை விடச் சின்னதாக, குட்டியூண்டாக மாறிவிட்டானே! அவனுக்கு அழுகை அழுகையாக வந்தது.

எப்படி இங்கே வந்தான்? பள்ளிக்கூட விடுமுறை நாள்களில் ரமேசும், அவனும் சேர்ந்து ஓணான் வேட்டைக்குப் போவார்கள். ஊருக்கு வெளியே உள்ள கருவேலஞ்செடிகளில் உட்கார்ந்து 'தேமே'ன்னு கண்களை முந்நூற்று அறுபது டிகிரியும் சுழற்றி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் ஓணான்களை கல்லை விட்டு எறிந்து கொன்றுவிடுவார்கள்.

சில சமயங்களில் உயிருடன் இருந்தால், அதன் வாலில் சணலைக் கட்டி இழுத்து வருவார்கள். கல்லைக் குறிபார்த்து எறிவதில் ரமேசு கெட்டிக்காரன். ஓணானைக் கண்டுபிடித்துச் சொல்வதில் சசி கில்லாடி.

"ஏண்டா, அதைப் போட்டு வதைக்கிறீங்க..?"  என்று யாராவது கேட்டால் வந்தவழியாகத் திரும்பி ஓடிப் போய்விடுவார்கள்.

இப்படித்தான் சசியும், ரமேசும் விடுமுறை நாள்களில் தங்களுடைய பொழுதைப் போக்கிக் கொண்டிருந்தார்கள்.

இன்று ரமேசு அவனுடைய அத்தை வீட்டுக்குப் போய்விட்டான். அதனால் சசி தனியாகக் கால்போன போக்கில் நடந்து, அவர்கள் எப்போதும் கூடுகின்ற அந்த கருவேலங்காட்டுக்கு வந்துவிட்டான்.

அங்கே ஒரு செடியில் ஒரு சில்லான் (சிறிய ஓணான்) நின்றுகொண்டிருந்தது. இவனைக் கண்டதும் அது இவனையே வைத்த கண் வாங்காமல் தனது பெரிய விழிகளை உருட்டிப் பார்த்துத் தலையசைத்துக் கொண்டிருந்தது. அது தலையசைப்பது, இவனை வா..வாவென்று கூப்பிடுவது போல இருந்தது!

அவன் அதற்குப் பின்புறமாகப் போய், அதைப் பிடித்துவிடலாம் என்ற எண்ணத்தில் பதுங்கிப் பதுங்கி நடந்து போனான். அப்போதுதான் அது நடந்தது...!

காலுக்குக் கீழே உலகமே சரிவதைப் போல் இருந்தது சசிக்கு. அவ்வளவுதான் தெரியும் அவனுக்கு. அதற்குப் பிறகு -

"ஓணான் கோட்டைக்குத் தங்களை வரவேற்கிறோம்" என்று கரகரப்பான ஒரு குரல் கேட்டது.

 

குரல் வந்த திசை நோக்கித் திரும்பிப் பார்த்தான். அங்கே செதில்கள் நிறைந்த மடிப்பு மடிப்பாய் சதை தொங்கிய ஒரு வயதான ஓணான் உட்கார்ந்திருந்தது!

நிமிடத்துக்கு ஒருமுறை அதன் நிறமும் மாறிக் கொண்டேயிருந்தது. இதைக் கவனித்த சசிக்கு திகிலாக இருந்தது. கை காலெல்லாம் உதறல் எடுத்தது!

அந்த இருட்டு பழகுவதற்கு சிறிது நேரம் பிடித்தது. கண்கள் நன்றாகப் பார்க்கத் தொடங்கியவுடன், சுற்று முற்றும் கவனித்தான். ஒரு சில்லான் அவனைப் பார்த்துக் கையை நீட்டி,

"ஐயா, இவரும், இவருடைய நண்பரான ரமேசும் நம்முடைய இனத்தையே அழித்து விடப் போவதாகச் சபதம் செய்திருக்கிறார்கள் போலும்! நாம் இவர்களுக்கு எந்தத் தொந்தரவும் தந்தது கிடையாது... எந்த மனிதர்களுக்குமே நாம் தொந்தரவு தந்ததில்லையே... ஆனால் இவர்கள் வாரத்துக்கு ஒருமுறை நம்முடைய குடும்பத்தில் சிலரைப் பிடித்து சித்திரவதை செய்து கொன்று விடுகிறார்கள்... இப்போது இவன்தான் கிடைத்தான். ஆகவே இவனுக்கு நாம் தக்க தண்டனை கொடுக்க வேண்டும்...!" என்று கூறியது.

இதைப் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த வயதான ஓணான், தனது தலையை ஆட்டியது.. அதன் முதுகில் இருந்த செதில்கள் சிலிர்த்தன. முகம் சிவந்தது.. எழுந்து நின்று கொண்டு உரத்த குரலில்,

"இவனுக்குச் சரியான பாடம் கற்பிக்க வேண்டும். நம் கூட்டத்தினருக்கு என்னென்ன கொடுமைகள் செய்தானோ, அதையெல்லாம் இவனுக்கு நாமும் செய்ய வேண்டும்..!" என்று கரகரத்தது.

கோபத்தில் பேசியதால் அதன் குரல் சமயங்களில் கீச்சிட்டது. அது மிகவும் கொடூரமாக இருந்ததால் சசி பயந்து போனான்.

சசியும், ராமேசும் சேர்ந்து சணலை ஓணான்களின் வாலில் கட்டி இழுத்திருக்கிறார்கள். ரமேசு அவனுடைய தாத்தாவிடமிருந்து மூக்குப் பொடியைத் தூக்கிக் கொண்டு வருவான். அதை ஓணான் மூக்கில் தூவுவார்கள். காரம் தாங்காமல் அது துடிதுடித்துச் சுற்றிச் சுற்றி வருவதைக் கண்டு ரசித்திருக்கிறார்கள். கல்லைக் கொண்டு எறிந்து காயப்படுத்தியிருக்கிறார்கள். இப்படிப் பலவிதமான சித்திரவதைகள்...! அதெல்லாம் அப்போது விளையாட்டாகத் தெரிந்தது. அதே கொடுமைகள் தனக்கும் நேர்ந்தால்...? நினைக்கவே சசிக்குப் பயமாக இருந்தது...அய்யோ....!

பயத்தில் அழுகை பொங்கி வந்தது. இப்படி வந்து மாட்டிக்கிட்டோமே? என்று நடுங்கினான்.

வயதான அந்த ஓணான், மடிப்பு மடிப்பாகத் தனது தாடையில் தொங்கிக் கொண்டிருந்த சதையைத் தடவிக் கொண்டே யோசித்தது. அதன் வாயிலிருந்து என்ன வார்த்தை வரப்போகிறதோ? என்று சசி பயந்து நடுங்கிக் கொண்டிருந்தான்.

நீண்ட நேரம் சென்றது.

"ஏன் தம்பி, அப்படிச் செய்தாய்?" என்று மிகவும் பொறுமையாகக் கேட்டது அந்த வயதான ஓணான்.

சசியால் பதில் சொல்லவே முடியவில்லை. வாயிலிருந்து வார்த்தை வர மறுத்தது. சும்மா ஒரு விளையாட்டுதான் என்று சொல்ல மனம் வரவில்லை. அவனுக்கே தான் செய்த கொடுமைகள் புரிந்தது. என்ன சொல்லித் தப்பிக்க முடியும் என்று யோசித்துப் பார்த்தான். ஒன்றும் தோன்றவில்லை!

பயத்தில் இப்படியும் அப்படியுமாகத் தலையை ஆட்டினான்.

வயதான ஓணான் மீண்டும் தனது கரகரத்த குரலில், "தம்பி... இந்த பூமியில் இறைவன் படைத்த எல்லா உயிர்களும் ஏதோ ஒரு வகையில் பூமியின் உயிர்ச் சங்கிலித் தொடருக்கு உதவி செய்பவைதான். எந்தச் சிறு உயிரும் இழிவானதோ, முக்கியத்துவம் இல்லாததோ கிடையாது. எப்போது இந்த உயிர்ச் சங்கிலித் தொடர் அறுந்து போகின்றதோ, அப்போது பெருங்குழப்பம் நேர்ந்து விடும் என்பது உனக்குத் தெரியுமா?"

சசிக்கு, அவனுடைய அறிவியல் ஆசிரியர் பேசுவது போலத் தோன்றியது.

"மனிதர்கள் மட்டும்தான் இந்த பூமியில் வாழவேண்டும் என்று நினைத்தால் அது முட்டாள்தனம். நாங்கள் எறும்புகள், பூச்சிகள், கொசுக்கள் ஆகியவற்றின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தி உயிர்ச்சமநிலைக்கு உதவுகிறோம் என்பது உனக்குத் தெரியுமா?"

என்று அதட்டலாகக் கேட்டது அந்த வயதான ஓணான்.

சசி பயத்துடன் பள்ளிக்கூடத்தில் தலையாட்டுவது போலத் தனது தலையை ஆட்டினான். அவனுடைய பயந்த முகத்தைப் பார்த்த அந்த வயதான ஓணான், மென்மையான குரலில்,

"பயப்படாதே... சசி...நாங்கள் மனிதர்களைப் போல அவ்வளவு மோசமானவர்கள் அல்ல... உன்னை ஒன்றும் செய்யப் போவதில்லை... நீ எவ்வளவு நல்ல பையன் என்பதும் எங்களுக்குத் தெரியும்!" என்றபடியே சசியின் தலையைத் தடவிக் கொடுத்தது.

சசி விம்மினான். அவனுக்கு அழுகை பொத்துக் கொண்டு வந்தது. கன்னத்தில் கண்ணீர் வழிந்தோடியது! அதைக் கண்ட ஓணான்கள் எல்லாம் சேர்ந்து,

"சசி... அழாதே... சியர் அப் பாய்..." என்று உற்சாகமாகக் கத்திக் கொண்டு, அவனைச் சுற்றி ஆடிப் பாட ஆரம்பித்தன.

கோமாளித்தனமான அவற்றின் ஆட்டமும், நிறங்களை மாற்றி மாற்றி செய்த சேட்டைகளும் சசியைக் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றின. அவன் முகத்தில் மகிழ்ச்சி பூத்தது. சிரிக்க ஆரம்பித்தான். சிரித்தான்... சிரித்தான் அப்படிச் சிரித்தான்.

கிச்சு கிச்சு மூட்டியது போல விழுந்து விழுந்து சிரித்தான்.

கண்களில் ஆனந்தக் கண்ணிர் வழிந்தோடியது. கண்ணீர் கண்களை மறைத்தது....

கண்களைத் துடைத்துக் கொண்டு பார்த்தபோது, ஒரு கருவேலஞ்செடியின் நிழலில் உட்கார்ந்து சிரித்துக் கொண்டிருப்பதை உணர்ந்தான். அருகில் ஒரு எறும்புப் புற்று இருந்தது.

 

ஓணான்கள்..? அவற்றைக் காணவில்லை....!

எறும்புப் புற்றிலிருந்து வெளியே வருவதும் உள்ளே போவதுமாக இருந்த எறும்புகளைப் பார்த்து சந்தோஷத்துடன் 'டாட்டா' காட்டினான். தெளிவான மனத்துடன் வீடு திரும்பினான்.

மறுநாள், ஊரிலிருந்து வந்த ரமேசு, ஓணான் அடிக்கப் போகலாம், வாடா என்று கூப்பிட்டபோது, சசி மறுத்து விட்டான். அதுமட்டுமில்லாமல் ரமேசையும் போகக்கூடாது என்று சொல்லி வேறு விளையாட்டு விளையாட கூட்டிப் போனான்.

ரமேசிடம், ஓணான் கோட்டையைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லை சசி. சொன்னால் மட்டும் ரமேசு இதையெல்லாம் நம்பவா போகிறான்..?

 

 

நன்றி:  http://dinamani.com/weekly_supplements/siruvarmani/article634457.ece

 

 

 

டிஸ்கி:

 

என்னங்கடா இது பெடியளுக்கு சொல்லும் நீதிக் கதையை ஏன் இங்கே இணைத்தேன் என முழிக்கிறீங்களா...?

 

ஓணான்.. ஓணான்...!! என ஒரே காட்டுக் கூச்சலாக் கிடக்கு இங்கே, அதான் "ஓணான்" என்றால் என்ன என்று தேடியபோது இந்த நீதிக்கதை கிட்டியது... :lol:

ஆனால் ஒரு ஒற்றுமை பாருங்கள்...

கோபம் வந்தால், ஓணான் பல நிறங்களில் தன்னை வெளிப்படுத்தி எதிரியை அலறவைத்து அப்புறப்படுத்திவிடும்.

ஓணானை கொண்டாடுவோரும் சூழ்நிலைக்குத் தக்கவாறு எந்த நிலைக்கும் தங்கள் நிறத்தை மாற்றி எதிரியை வீழ்த்திவிடுவர் / வீழ்த்த முனைவர்.

உதாரணம், எம்.கே.நாராயணன், மேனன், ஜே.என் தீக்சித், நிருபமா ராவ், நம்பியார் (ஐ.நா) இன்னபிற ஓணான்கள்! :)

நாளை ஓணான்களின் பண்டிகை, அவர்களுக்கு இக்கதை சமர்ப்பணம்!

 

Happy Onaan! :unsure:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட... ஓணான் கதை ஏன் இப்ப என்று... அரை மனத்துடன் படித்துக் கொண்டிருந்த போது... முடிவைப் பார்த்து சிரிப்பு வந்து விட்டது. உங்களுக்கு... குறும்பு அதிகம் சார்.
உங்களுக்கும்..... ஹாப்பி ஓணான் வாழ்த்துக்கள். :D 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட... ஓணான் கதை ஏன் இப்ப என்று... அரை மனத்துடன் படித்துக் கொண்டிருந்த போது... முடிவைப் பார்த்து சிரிப்பு வந்து விட்டது.

 

உங்களுக்கு... குறும்பு அதிகம் சார்.

 

முதலில் நானும் சீரியஸ் பேர்வழியாகத்தான் இருந்தேன்.  கடந்து வந்த பாதைகளால் பக்குவபட்ட மனம், மனுசனை இப்படி (?????) ஆக்கிப்போட்டுது. :lol:

 

நன்றி!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்தலுக்கு நன்றி அண்ணா. நீதிக் கதை கூட வித்தியாசமாகத்தான் இருக்கு

Link to comment
Share on other sites

ஓணான் இன்பத் திருநாள் வாழ்த்துக்கள்..! :D கதையும் சத்தாக இருந்தது. குறிப்பாக உயிர்ச்சமநிலை குறித்த ஓணான் உபதேசம்.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களக்கு நன்றி, தமிழ்சிறி, தயா, கே.கரன், சுமே மற்றும் டங்கு.

 

இன்று "ஓணான் கோட்டை"யிலிருந்து யாழ் உறவுகளுக்கு வந்துள்ள "விசேட செய்தி" இதோ...! :rolleyes:

 

 

s3ohzn.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல அறிவூட்டல் கதையைத் தந்த, வன்னியனுக்கு நன்றிகளும்,  'ஓணான்' பண்டிகை வாழ்த்துக்களும்!

 

Herpetological%20Tours%20-%20Frill%20Nec

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

104101.gif

இதென்ன அயிற்றம் அப்பு, இலையில குந்திக்கொண்டிருக்கிறது?

 

வாழைக்காயா?  :o

 

ஓணானுக்கு ஓக்கேயா? அல்லது இது நம்ம, மதுரைக்கா? :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதென்ன அயிற்றம் அப்பு, இலையில குந்திக்கொண்டிருக்கிறது?

 

வாழைக்காயா?  :o

 

ஓணானுக்கு ஓக்கேயா? அல்லது இது நம்ம மதுரைக்கா? :icon_idea:

 

அய்யோ...! இந்த நேந்திரம் பழம், சிப்ஸு, புட்டு, கடலைக்கறியைக் கண்டாலே எனக்கு அலர்ஜி அப்பு.

 

எல்லா வெல்லமும், வளமும் அந்த "ஓணானு"க்கே சேரட்டும். :lol::D

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒணம் பண்டிகை வாழ்த்துக்கள் .....இந்த முஸ்லிம் சகோதர்களுக்கு ஒணானை கண்டாள் ஏன் அலர்ஜி? ராசவன்னியன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த முஸ்லிம் சகோதர்களுக்கு ஒணானை கண்டாள் ஏன் அலர்ஜி? ராசவன்னியன்

 

அவர்களுக்கு ஒவ்வாமை பல விடங்களில் உண்டு. :)

அதில் ஓணானும் இருக்கலாம். பன்றி கூட அவர்களுக்கு பிடிக்காது என கேள்வி.

ஆனால் காரணம் தெரியாது, புத்தன்.

 

Link to comment
Share on other sites

  • 11 months later...
  • கருத்துக்கள உறவுகள்

'ஓணான் கோட்டை'யை மறுபடியும் படிக்கும் நாளும் வருகிறது! :icon_mrgreen::)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

chamaleon.gif

 

முனிவர் ஒருவரிடம் சீரடாகச் சேர மூன்று பேர் வந்தார்கள். அவர்களை மறுநாள் தம்மை வந்து பார்க்குமாறு கூறினார். மறுநாள் அவர்கள் வரும்போது மனைவியிடம் தமது காதில் 'ஓணான்' புகுந்து தாம் இறந்துவிட்டதாக சொல்லச் சொன்னார்.

 

மறுநாள் அந்த மூவரும் வந்தபோது முனிவரின் மனைவி அவ்வாறே சொன்னார்.

முதலாமவன், "அவரது ஜாதகப்படி சனி திசை என்பதால் இப்படி ஆகியிருக்கும்!" என்று வருத்ததோடு கூறிவிட்டு அங்கே நிற்காமல் சென்று விட்டான்.

இரண்டாமவன், "முனிவரின் முன் ஜென்ம வினைப்படி இப்படி நடந்திருக்கலாம்!" என்று சொல்லிவிட்டு அவனும் கவலையுடன் சென்று விட்டான்.

மூன்றாமவன், முனிவரின் மனைவி முகத்தை உற்றுப் பார்த்தான். பின்னர் ஆணித்தரமாக. "முனிவர் உயிரோடுதான் இருக்கிறார்!" என்றான். அதுவரை வீட்டுக்குள் ஒளிந்து கொண்டிருந்த முனிவர் வெளிப்பட்டார்.

"எப்படிக் கண்டுபிடித்தாய்?" என்று கேட்டார்.

"அய்யா, உங்களின் மறைவினால் வரக்கூடிய துக்கம் உங்கள் மனைவியின் முகத்தில் கொஞ்சமும் இல்லை. அடுத்தது ஒருவரின் காதினுள் ஓணான் நுழைவது என்பது நடக்காத காரியம். எனவேதான் அப்படி உறுதியாகச் சொன்னேன் என்றான்.

விவேகத்தோடு சிந்திக்கத் தெரிந்த அவனையே தனது சீடனாக ஏற்றுக்கொண்டார் முனிவர்.

எனவே வேகம் மட்டுமே முக்கியமில்லை. விவேகமும் கட்டாயம் வேண்டும்.

 

 

டிஸ்கி:

 

- 'ஓணான் பண்டிகை'யையொட்டி இந்தக் கருத்தை சிந்தையில் ஏற்றிக்கொள்ளுபடி கேட்டுக்கொள்கிறேன்! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் நானும் சீரியஸ் பேர்வழியாகத்தான் இருந்தேன்.  கடந்து வந்த பாதைகளால் பக்குவபட்ட மனம், மனுசனை இப்படி (?????) ஆக்கிப்போட்டுது. :lol:

 

நன்றி!

 

 

சீரியஸ் காயாய் இருந்த வன்னியனை சிரிப்புப் பீஸாய் மாற்றி பக்குவப் படுத்திய யாழுக்கு நன்றி...!

 

இப்பதான் இந்த ஓணானைப் படித்து சிரித்து புண்ணாகினேன்..!!

 

என்னடா  நம்ம வன்னியனும் கதை விடுகிறார் என வந்து கனிந்து  போனேன் ...!!! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முனிவர் ஒருவரிடம் சீரடாகச் சேர மூன்று பேர் வந்தார்கள். அவர்களை மறுநாள் தம்மை வந்து பார்க்குமாறு கூறினார். மறுநாள் அவர்கள் வரும்போது மனைவியிடம் தமது காதில் 'ஓணான்' புகுந்து தாம் இறந்துவிட்டதாக சொல்லச் சொன்னார்.

------

"எப்படிக் கண்டுபிடித்தாய்?" என்று கேட்டார்.

"அய்யா, உங்களின் மறைவினால் வரக்கூடிய துக்கம் உங்கள் மனைவியின் முகத்தில் கொஞ்சமும் இல்லை. அடுத்தது ஒருவரின் காதினுள் ஓணான் நுழைவது என்பது நடக்காத காரியம். எனவேதான் அப்படி உறுதியாகச் சொன்னேன் என்றான்.

விவேகத்தோடு சிந்திக்கத் தெரிந்த அவனையே தனது சீடனாக ஏற்றுக்கொண்டார் முனிவர்.

 

Animationlizard.gif

 

முனிவரின் வாயினுள், ஓணான் புகுந்து.....

ஓணானும், முனிவரும் இறந்து விட்டதாக..... சொல்லியிருந்தால்,

சீடர் நிச்சயம் நம்பியிருப்பார். :lol:  :D  

 

சேட்டன், சேச்சிகளுக்கு....  ஓணான் தின வாழ்த்துக்கள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

...

 

இப்பதான் இந்த ஓணானைப் படித்து சிரித்து புண்ணாகினேன்..!!

 

என்னடா  நம்ம வன்னியனும் கதை விடுகிறார் என வந்து கனிந்து  போனேன் ...!!! :D

 

நன்றி சுவி. :)

 

உங்களுக்கு சேட்டன் சாண்டி, ஆளுநர் சதாசிவம் மூலம் கேரளத்தின் வாழ்த்துக்களை தெரிவிக்கச் சொல்லியுள்ளார்.

 

 

"எண்டா சேச்சி...,  சுவி சேட்டனுக்கு ஒரு நேந்திரம் சிப்ஸ் பார்சல்..!"

 

 

ld1061.jpg

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.