Jump to content

pastii-pizza எங்கள் கண்டுபிடிப்பு. (சுவையான.. ஸ்ரைலான உணவு)


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மொத்த சமையல் நேரம்: 1 மணித்தியாலம். (நீங்கள் தொடர்ந்து சமையலறையில் இருக்கனுன்னு அவசியம் இல்லை. இதையே சாட்டு வைச்சு.. ஊரை ஏமாற்றாமல்.. வேறு பயனுள்ள அலுவலையும் கவனிச்சுக் கொண்டு இதனை தயார் செய்யலாம்.) 

தேவையான பொருட்கள்:

12099011_H.jpg?identifier=d53f9d33cac0a2
178933885550e155a537d1a.jpg
Red_Capsicum_2.jpg

Bright_red_tomato_and_cross_section02.jpGluten-free-pasta__1331319a.jpgcheddar-cheese.jpeg

Salt-Chips1.jpg

செய்முறை:

* சுத்தமான பாத்திரத்தில் போதியளவு சுடுநீரை ஊற்றி பாஸ்ராவை வேக வைக்கவும்.

* பாஸ்ரா நன்கு வெந்து வந்த பின்.. மேலதிக நீரை வடித்து அகற்றவும்.

* அதன் பின் வெந்த பாஸ்ராவுக்குள் தேவையான அளவு ( பொதுவாக 4 தொடக்கம் 6 மேலே படத்தில் காட்டியது போன்ற ஒரு பக்கெட் பாஸ்ராவுக்கு மேசைக் கரண்டி..) பாஸ்ரா சோசை விட்டு கரண்டியால்..நன்கு கலக்கவும்.

* சிறிதளவு துருவிய சீஸையும் கொட்டி நன்கு கலக்கவும்.

* சுவைக்கு ஏற்ப உப்புச் சேர்த்தும் கலக்கிக் கொள்ளவும்.

இவற்றைக் கலக்கி எடுத்துக் கொள்ள முன்.. வெங்காயம்.. குடை மிளகாய்.. தங்காளி இவற்றை வட்டமாகவோ.. நீளமாகவே வெட்டி எடுத்துக் கொள்ளவும்.

மேலே சொன்ன செய்முறைகள் முடிந்த கையோடு உங்கள் ஓவன் சரியான முறையின் வேலை செய்யுதா என்று ஒரு முறை சரி பார்த்துக் கொள்ளவும்.. (அநேக தமிழாக்களின் வீடுகளில் ஓவன் சரியா வேலை செய்யுறதில்ல. கண்டதையும் கண்டபடி...திருகோ திருகென்று திருகி.. விரைவில் பழுதாக்கி விடுகிறார்கள். அல்லது காலாவதியான ஓவனுக்கு வெளியில் துடைத்து பளபளக்க வைச்சுக் கொண்டு.. உள்ள கறள் கட்ட வைத்திருப்பார்கள்.)

ஓவன் வேலை.. செய்தால் மேற்கொண்டு கீழ் வரும் செய்முறையை தொடரவும்.

நீங்கள் மேலே தயாரித்துள்ள பாஸ்டா மிக்ஸ் (பாஸ்டா கலவை) க்கு ஏற்ப கேக் வாட்டும் தட்டை எடுத்து.. அதனுள் ஈயக் கடதாசியை விரித்துக் கொண்ட பின் மேற்படி.. பாஸ்டா மிக்ஸைக் கொட்டவும். அதனை சமனாக தட்டு முழுவதற்கும் என்று பரப்பி எடுக்கவும். [பீட்சா சூடாக்கும் தட்டுள்ளவர்கள் அதில் இதனைச் செய்தால் வரவேற்கப்படும். ஆனால் ஈயக்கடதாசியை போட மறந்திடாதீர்கள். அப்புறம்.. கீழ கரிப்பிடிச்சிட்டு என்று நம்ம வந்து திட்டக் கூடாது. ] 

மேற் சொன்னபடி.. பரப்பி.. எடுத்த பின்.. பீட்சாவிற்கு தூவுவது போல.. துருவிய சீஸ்.. மற்றும் வெங்காயம்,பெப்பர், தங்காளி (விரும்பியவர்கள்.. jalapeño உட்பட்ட வேறு மரக்கறிகளும் தூவலாம்.. சிறிய அளவிலான ரிக்கா.. கோழித் துண்டுகளையும் தூவலாம். pepperoni போட விரும்பிறவர்களும் போடலாம். ) போன்றவற்றை பாஸ்டா மிக்ஸின் மேலே பரவலாகத் தூவி எடுக்கவும்.

BE3003021MSS.JPG

அப்புறம் என்ன.. உங்கள் ஓவனை 120 தொடக்கம் 180 பாகைக்குள் ஒன்றில் வைத்து அல்லது... பாகை காட்டி இல்லாதவர்கள் இலக்கம் 5 தொடக்கம் 8 வரை இலக்கங்களுள் ஒன்றைத் தெரிவு செய்து.. 5 நிமிடங்கள்.. முன் சூடு காட்டிய பின்... மேற்படி.. Pastii - pizza கலவையை (மிக்ஸ்) 20 தொடக்கம் 30 நிமிடங்கள் வரை (வேகிற அளவிற்கு ஏற்ப நேரம் கூடலாம்.. குறையலாம்) வாட்டி (வெதுப்பி) மேலே சீஸ் உருகி.. நொதுமல் அற்ற பொன்னிறப் படையாகும் வரை.. வாட்டி எடுக்கவும்.

இப்போ.. உங்கள்.. எங்கள் பாஸ்ரி பீட்சா தயாராகி இருக்கும். தக்காளி சோஸோடு தொட்டும் சாப்பிடலாம். சாப்பிட நிச்சயம் முள்ளுக்கரண்டி பாவிக்கவும்.

இந்தப் pastii-pizza எங்களுக்குரியது. இதனை விளம்பரங்களில்.. உற்பத்திகளில் பாவிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும்..! கடைகளில் செய்து விற்க விரும்புவர்கள் எங்களிடம் அனுமதி பெற வேண்டும். :lol:

இறுதித் தயாரிப்பு இப்படி இருக்கும்..............
 

IMG_20130824_191722.jpg

படைப்பு: நெடுக்ஸ்.

சமைத்துப் பார்த்து சுவைத்து உங்கள் கருத்தையும் சொல்லுங்க..! :)

Link to comment
Share on other sites

  • Replies 56
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு இதற்க்கு காப்புரிமைக்கு விண்ணப்பித்துவிட்டீர்களா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐந்து வருடங்களின் முன்னரே இதன் காப்புரிமையை நான் எடுத்துவிட்டேன். டூஊஊஊ லேட்  நெடுக்ஸ். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வித்தியாசமன சிந்தனை... வித்தியாசமான கண்டுபிடிப்பு!

 

வாழ்த்துக்கள்.  :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த உணவை யெர்மனியில் உள்ள இத்தாலி உணவகங்களில் செய்வார்கள். புதிது அல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த உணவை யெர்மனியில் உள்ள இத்தாலி உணவகங்களில் செய்வார்கள். புதிது அல்ல.

 

அந்த உணவுக்குப் பெயர் என்ன..??! அதன் செய்முறை என்ன..???! வரிக்கி வரி இதே செய்முறைகளால் ஆனதா..???! இன்றேல் இதுதான் அது என்று சொல்ல முடியாது..!!

 

pastii-pizza (இந்தப் பெயர் எங்களது.. ஆங்கில எழுத்து ஒழுங்குகளோடு) மற்றும் மேற்படி செய்முறை முழுக்க முழுக்க எங்களது. அதனை தயாரித்தும் காட்டி இருக்கிறம். கீழே உள்ள படம் அதற்குச் சாட்சி..! :lol::)

நெடுக்கு இதற்க்கு காப்புரிமைக்கு விண்ணப்பித்துவிட்டீர்களா? 

 

அதுதான் எங்காவது இந்த பூமியின் மூலையில் ஏலவே இப்படி செய்திருப்பார்களோ.. என்று சந்தேகித்து செய்தியை உலாவ விட்டிருக்கிறம். இல்லைன்னு தெரிஞ்சால் தானே காப்புரிமை பற்றி சிந்திக்கலாம். அடுத்தவன் செய்முறையை உல்டா பண்ணுறதுக்கு காப்புரிமை தருவாங்களா என்ன..??! :lol::D

 

 

வித்தியாசமன சிந்தனை... வித்தியாசமான கண்டுபிடிப்பு!

 

வாழ்த்துக்கள்.  :icon_idea:

 

இப்படி ஒரேயடியா கண்டுபிடிப்புன்னு எழுதினதை எல்லாம் நம்பக் கூடாது. எங்கள் அளவில் கண்டுபிடிப்புத் தான். ஆனால் உலக அளவில்..???! :lol:

 

இருந்தாலும் வாழ்த்திறதுக்கு நல்ல மனசு தேவை. அது உங்க கிட்ட இருப்பதால் உங்கள் வாழ்த்தை வரவேற்றுக் கொள்ளுறம். :icon_idea::)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அல்லது காலாவதியான ஓவனுக்கு வெளியில் துடைத்து பளபளக்க வைச்சுக் கொண்டு.. உள்ள கறள் கட்ட வைத்திருப்பார்கள்.)

 

 

நெடுக்ஸ்,

 

கறள் ஒரு சிட்டிகை அல்லது ஓவனுக்குள் இருக்கும் அளவு எண்டு போடுங்கள். :icon_mrgreen:  :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
இப்படி ஒரேயடியா கண்டுபிடிப்புன்னு எழுதினதை எல்லாம் நம்பக் கூடாது. எங்கள் அளவில் கண்டுபிடிப்புத் தான். ஆனால் உலக அளவில்..???!  :lol:

 

 

கண்டுபிடிப்பு என்பது சில வேளை கொஞ்சம் ஓவரா இருக்கலாம். ஆனால் வித்தியாசமாக உள்ளது. இதுவரை நான் இப்படியான உணவை பார்க்கவில்லை. 

 

உலக அளவில் கொண்டு போவது பற்றி நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும். :icon_idea:

 

எதற்கும் ஒரு சில உணவகங்களில் கொடுத்து முயற்சி செய்து பார்க்கலாமே. 

 

அப்படி உலக புகழ் அடைந்தால் ஒரு நிறுவனமாக பதிந்து செய்யலாம். 

Uncle Ben's மாதிரி நீங்கள் ஒரு "மாமா நெடுக்ஸ்" ஆகலாம் (சும்மா தமாசுக்கு) :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
இத்தாலி உணவை கொப்பியடிச்சுப் போட்டு :D அதை வேற தன்ட கண்டு பிடிப்பு என்று சொல்லி :lol: யாழ் கள உறவுகளுக்கு,அதுவும் சுமோவுக்கு சாப்பாட்டை பற்றி ஒன்றும் தெரியாது :) என்று நினைச்சுக் கொண்டாராக்கும் நெடுக்ஸ் :)  என்ட கு.சா அண்ணா வேற சமையலில் விண்ணர் :rolleyes:
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிலாக்களுக்கு பொறாமை. இத்தாலியக் கொப்பின்னா.. ஏன் இவ்வளவு நாளும் இவை கொப்பி பண்ணாம இருந்தவை..???! கொப்பி பண்ணி யாழ் உறவுகளுக்கும் அறிமுகப்படுத்தி இருக்கலாமில்ல..! :lol::):rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

இத்தாலி உணவை கொப்பியடிச்சுப் போட்டு :D அதை வேற தன்ட கண்டு பிடிப்பு என்று சொல்லி :lol: யாழ் கள உறவுகளுக்கு,அதுவும் சுமோவுக்கு சாப்பாட்டை பற்றி ஒன்றும் தெரியாது :) என்று நினைச்சுக் கொண்டாராக்கும் நெடுக்ஸ் :)  என்ட கு.சா அண்ணா வேற சமையலில் விண்ணர் :rolleyes:

 

 

இத்தாலிக்காரன்ரை சாப்பாட்டை அப்பிடியே உரிச்சுபடைச்ச மாதிரியே இருக்கு.... :D

ஒரு மாற்றத்துக்கு கத்தரிக்காய் புடலங்காய் போட்டிருந்தாலும் பரவாயில்லை ........ :icon_idea:

 

உதுக்கு ஒருமணித்தியாலம் மினைக்கடுற நேரம் குழல்புட்டு அவிச்சுப்போட்டு அந்தமாதிரி இறுக்கலாம். :wub:  :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இத்தாலிகாரன்ர சாப்பாடு சாப்பாடு என்றீங்கள்... ஆளாளுக்கு. அதென்ன சாப்பாடு... அதின்ர செய்முறை எனென்று கேட்டால் தெரியவில்லை. இதில.. தாங்கள் விண்ணர்களாமில்ல..! :lol::rolleyes:


இதே பிழைப்பாப் போச்சு நம்மாக்களுக்கு..! :icon_idea:

Link to comment
Share on other sites

இந்த உணவை யெர்மனியில் உள்ள இத்தாலி உணவகங்களில் செய்வார்கள். புதிது அல்ல.

 

இவர் 'லசானியா'வில் சின்ன சின்ன மாற்றங்களை செய்துபோட்டு கண்டுபிடிப்பாம்..!! இடியப்பம் இருக்கேக்கை நூடில்சை கண்டுபிடிச்சமாதிரி..!! :)

 

http://en.wikipedia.org/wiki/Lasagne

 

File:Lasagne_-_stonesoup.jpg

Link to comment
Share on other sites

உதுக்கு ஒருமணித்தியாலம் மினைக்கடுற நேரம் குழல்புட்டு அவிச்சுப்போட்டு அந்தமாதிரி இறுக்கலாம். :wub:  :wub:

 

உங்களுக்கென்ன பணக்காரர்.. மா அவிக்க ஒரு கரண்ட் காசு.. பிறகு புட்டுக்கு ஒரு கரண்ட் காசு.. கரண்டையும் தண்ணியையும் நினைக்க சாப்பிடவும் முடியேல.. குளிக்கவும் முடியேல.. :)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அந்த உணவுக்குப் பெயர் என்ன..??! அதன் செய்முறை என்ன..???! வரிக்கி வரி இதே செய்முறைகளால் ஆனதா..???! இன்றேல் இதுதான் அது என்று சொல்ல முடியாது..!!

 

 

überbackene nudeln (gratin of pasta)

 

இதில் பலவகை உண்டு.

Ex:-

 

* al Forno

* Lasagne

* Cannelloni di carne

* Salmone

* Tris de Pasta

* Combinazione

* Big Mam

 

etc ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த உணவுக்குப் பெயர் Pasta Bake என்று கூறுவர். இதற்கு அரைத்த இறைச்சி (minced meat ) போட்டும் செய்யலாம். கீரை கூடப் போட்டு நான் செய்வேன்.

pasta வை முதலே அவிக்காது Double cream உடன் சிறிது நீர் சிறிது சேர்த்து வேண்டுமானால் எமது சுவைக்கு சிறிது மிளகாய்த்தூள் கூடப் போட்டு இதைச் செய்யலாம்.

ஆனால் பெயருக்கு மட்டும் நீங்கள் வேண்டுமென்றால் உரிமம் எடுக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விபரங்களுக்கு நன்றி சோழியான் அண்ணா.. ஜீவா மற்றும் சுமே அக்கா.

 

நாங்கள் நண்பர்கள் கூடி ஆராய்ந்ததில்.. எங்களின் செய்முறை அவர்களின் செய்முறையில் இருந்தும் தனித்து உள்ளமை இனங்காணப்பட்டுள்ளது. அந்த வகையில்.. இதனை ஒத்த தயாரிப்புக்களில் இருந்து இது வேறுபடுவதாகவே நாங்கள் இன்னும் கருதுகிறோம்.

 

இருந்தாலும்.. இன்னும் விபரங்கள் கிடைக்கும் பட்சத்தில் தான் இது தனித்துவமான தயாரிப்பா என்பதை உறுதி செய்ய முடியும்..! :)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கென்ன பணக்காரர்.. மா அவிக்க ஒரு கரண்ட் காசு.. பிறகு புட்டுக்கு ஒரு கரண்ட் காசு.. கரண்டையும் தண்ணியையும் நினைக்க சாப்பிடவும் முடியேல.. குளிக்கவும் முடியேல.. :)

 

 

ஓம் சோழியர்!வீடு அஞ்சுமாடி வீடு.... வீட்டுக்கு முன்னாலை நாலு பென்ஸ் நிக்கிது......வீட்டுக்கு பின்னாலை சைக்கிள் மோட்டச்சைக்கிள் நிக்கிது......வீட்டுவேலை செய்ய இரண்டுமூண்டு எடுபுடியள்.....என்ரை குலமென்ன கோத்திரமென்ன....வாய் கொப்புளிக்கறதே பன்னீரிலைதான்........ஏறினால் கார் இறங்கினால் காபெட்.....ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கோயிலிலை என்னைக்கண்டாப்பிறகுதான் ஐயர் மணியே அடிப்பார் எண்டால் என்ரை பவர் எப்பிடியெண்டு யோசிச்சுப்பாருங்கோவன்.....இவடத்தை நடக்கிற சாமத்தியவீடு கலியாணவீட்டிலையெல்லாம் நான் தான் பவர்ஸ்டார். :lol:  :D  :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிக எளிமையான செய்முறை! சிறப்பான  விளக்கம்! நிறையச் சாமான்களைப் போட்டு உருட்டிப் பிரட்டி சமையல் அறையை சாமான் அறையாக்கத் தேவையில்லை,  தனிக்கட்டைகளுக்கு மாலையில் ரிலாக்சாக செய்யக்கூடிய நல்ல உணவு!

உரிமம் பெற்றதும் மறக்காமல் அறியத் தரவும்!! :D  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
இந்த சமையலையும் செய்துபார்த்து எப்படி என்பதினை  எழுதுகின்றேன்.  :D
 
பகிர்விற்கு நன்றி நெடுக்ஸ்  :)
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இத்தாலி உணவாக இருந்தாலும் அதன் செய்முறையை எழுத்தில் வடித்த நெடுக்ஸ் அவர்களுக்கு நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கர் இப்பத் தான் ஒரு பெட்டையை கரெக்ட் பண்ணி,சமைச்சுக் கொடுத்திருக்கிறார் அதைப் பாராட்டுறதை விட்டுட்டு நொட்டை சொல்லிக் கொண்டு :lol:    

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜப்பான்காரனின்.. burger-pizza எங்கட கண்டுபிடிப்புக்கு அடுத்ததா களமிறங்கி இருக்குது. :lol:

 

article-2402598-1B7AE597000005DC-467_634


மிக எளிமையான செய்முறை! சிறப்பான  விளக்கம்! நிறையச் சாமான்களைப் போட்டு உருட்டிப் பிரட்டி சமையல் அறையை சாமான் அறையாக்கத் தேவையில்லை,  தனிக்கட்டைகளுக்கு மாலையில் ரிலாக்சாக செய்யக்கூடிய நல்ல உணவு!

உரிமம் பெற்றதும் மறக்காமல் அறியத் தரவும்!! :D  :D

 

 

 

இந்த சமையலையும் செய்துபார்த்து எப்படி என்பதினை  எழுதுகின்றேன்.  :D
 
பகிர்விற்கு நன்றி நெடுக்ஸ்  :)

 

 

அனுபவம் உள்ளவங்க சரியாத் தான் பேசுறாங்க. :)

 

சமைச்சுப் பார்த்து சொல்லுங்க.. தமிழரசு. அப்புறமா பாருங்க.. எங்கட pastii-pizza famous ஆகாட்டி..! :lol:
 


இத்தாலி உணவாக இருந்தாலும் அதன் செய்முறையை எழுத்தில் வடித்த நெடுக்ஸ் அவர்களுக்கு நன்றி

 


இத்தாலிக்காரனின் சாயல் பெருமளவு.. இருந்தாலும் செய்முறையில்.. தன்மையில் சிறிது வேறுபட்டது வாத்தியார். எளிமையானதும் கூட. தயாரிப்பு மொத்த நேரம் 1 மணித்தியாலம் என்பது சமையலறைக்குப் போய் கிளீன் பண்ணி எல்லாம் முடிச்சு வெளில வாற நேரம். சமைக்க என்று பார்த்தால் 35 நிமிடம் காணும்..! :)


நெடுக்கர் இப்பத் தான் ஒரு பெட்டையை கரெக்ட் பண்ணி,சமைச்சுக் கொடுத்திருக்கிறார் அதைப் பாராட்டுறதை விட்டுட்டு நொட்டை சொல்லிக் கொண்டு :lol:    

 

பிகரை கரெக்ட் பண்ண.. கோவில்ல போய் சுண்டலும் வடையும் வாங்கிக் கொடுத்தாலே போதும். தமிழ் பெட்டைகளுக்கு.. உதெல்லாம்.. சாப்பிட வராது. சோத்துக் கூட்டம். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சோத்துக்கூட்டம் என்பது ஆண்களுக்கே அதிகம் பொருந்துவதால் பெண்களுக்குக் கூறுவதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சோத்துக்கூட்டம் என்பது ஆண்களுக்கே அதிகம் பொருந்துவதால் பெண்களுக்குக் கூறுவதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

 

ஆண்களுக்கு அந்தச் சோத்தை சமைக்கிற சுகத்திற்காக ஆக்கிப் போடுற ஆன்ரிகளை நாங்களும் வன்மையா கண்டிக்கிறம். ரைஸ் குக்கரில.. அரிசியை அள்ளிப் போடுறதுக்குப் பெயர் சமையல் அல்ல..! :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாடு ஒரு மாநிலம்  தமிழ்நாடு தனிநாடு இல்லை  தமிழ்நாடு வெளிநாட்டு கொள்கையில் 1% கூட. இதுவரை பங்களிப்புகள் செய்யவில்லை   செய்ய முடியாது  தமிழ்நாடு இந்தியா மத்திய அரசாங்கத்தினால் ஆளப்படுகிறது  தமிழ்நாட்டில்,.சீமான் கமல்   விஐய்.  ஸ்டாலின் உதயநிதி   நெடுமாறன். வைகோ      கருணாநிதி  எம் ஜி” ஆர்    அண்ணா,.......இப்படி எவர் முதல்வர் பதவியில் இருந்தாலும்   வெளிநாட்டுத்தமிழராகிய. இலங்கை தமிழருக்கு 1% கூட பிரயோஜனம் இல்லை    தமிழ்நாட்டில் 7 கோடி தமிழனும் தமிழ் ஈழம்  மலர வேண்டும் என்று ஆதரித்தாலும்.  தமிழ் ஈழம்  கிடைக்காது  எனவே… ஏன் குதிக்க வேண்டும்???  இந்த சீமான் ஏன் குதிக்கிறார??  என்பது தான் கேள்வி??  ஆனால்  சீமான்  தமிழ்நாட்டில் அரசியல் செய்யலாம்  முதல்வராக வரலாம்”   தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை செய்யலாம்    எங்கள் ஆதரவு 100% உண்டு”   கண்டிப்பாக ஆதரிப்பேன் ஆனால்  இலங்கை தமிழருக்கு  அது செய்வேன் இது செய்வேன்   என்று  ஏமாற்றக்கூடாது 😀
    • பகிர்வுக்கு நன்றி ஏராளன் ........!   🙏
    • என‌க்கு தெரிஞ்சு கேலி சித்திர‌ம் வ‌ரைவ‌து உண்மையில் த‌மிழ் நாட்டில் வ‌சிக்கும் கார்ட்டூன் பாலா தான்...............த‌மிழ் நாட்டில் நிக்கும் போது ச‌கோத‌ர் காட்டூன் பாலா கூட‌ ப‌ழ‌கும் வாய்ப்பு கிடைச்ச‌து ப‌ழ‌க‌ மிக‌வும் ந‌ல்ல‌வ‌ர்............அவ‌ர் வ‌ரையும் சித்திர‌ம் அர‌சிய‌ல் வாதிக‌ளை வ‌யித்தில் புளியை க‌ரைக்கும்.....................
    • கலியாணம் என்பது சடங்குதானே. பிராமண ஐயரின் நிறத்தில், கனிவான முகத்துடனும், சில சமஸ்கிருதச் சுலோகங்களைச் சொல்லும் திறனும் இருந்தால் சடங்கைத் திறமாக நடாத்தலாம்! தேங்காயை பூமிப்பந்தை மத்தியரேகையில் பிளப்பதைப் போல சரிபாதியாக உடைக்காமல், விக்கிரமாதித்தனின் தலையை சுக்குநூறாக உடைப்பேன் என வேதாளம் வெருட்டியதை நீங்கள் தேங்காய் மீது செயலில் காட்டியிருக்கின்றீர்கள்😂
    • உங்க‌ளை மாதிரி ஆறிவிஜீவி எல்லாம் த‌மிழீழ‌ அர‌சிய‌லில் இருந்து இருக்க‌ வேண்டிய‌வை ஏதோ உயிர் த‌ப்பினால் போதும் என்று புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு ஓடி வ‌ந்து விட்டு அடுத்த‌வைக்கு பாட‌ம் எடுப்ப‌து வேடிக்கையா இருக்கு உற‌வே ஒன்னு செய்யுங்க‌ளேன் சீமானுக்கு ப‌தில் நீங்க‌ள் க‌ள‌த்தில் குதியுங்கோ உங்க‌ளுக்கு முழு ஆத‌ர‌வு என் போன்ற‌ முட்டாள்க‌ளின் ஆத‌ர‌வு க‌ண்டிப்பாய் த‌ருவோம்..........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.