Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏன் யூதர்கள் அதி சாமர்த்தியசாலிகளாக இருக்கிறார்கள்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Dr. Stephen Carr Leon – எழுதிய கட்டுரையின் மொழிபெயர்ப்பு இது 

தொழில்நுட்பம், இசை, விஞ்ஞானம் என்று எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் யூதர்கள் முன்னணியில் இருக்கிறார்கள் என்பதை எவருமே மறுக்க முடியாது. உலக வர்த்தகத்தில் கிட்டத்தட்ட 70% யூதர்களின் கைவசமே உள்ளது. அழகு சாதனங்கள், நாகரிக உடைகள், உணவுப் பொருட்கள், ஆயுதங்கள், சினிமாத் துறை (ஹாலிவுட் மற்றும் பல) என்று பலவற்றிலும் யூதர்கள் சிறந்து விளங்குவது நிஜம்.

நான் இஸ்ரேல் நாட்டில் சுமார் 3 ஆண்டுகள் சில மருத்துவ மனைகளில் உள்ளகப் பயிற்சிக்காக கழிக்க நேர்ந்தபோதுதான் ஏன் யூதர்கள் அதி சாமர்த்தியசாலிகளாக இருக்கிறார்கள் என்பது பற்றி ஆராயும் எண்ணம் வந்தது.

ஏன் கடவுள் அவர்களுக்கு மட்டும் இந்த திறமையைக் கொடுத்தார்? இந்த திறன் தற்செயலாக வந்ததா? அல்லது ஒரு தொழிற்சாலையில் நாம் நமக்கு வேண்டிய வடிவில் ஒரு பொருளை உற்பத்தி செய்கிறோமே, அதுபோல இந்த திறமையை மனித முயற்சியால் சிருஷ்டி பண்ணிக் கொள்ள முடியுமா? இந்தக் கேள்விகள் எனது 2 ஆம் ஆண்டில் அதாவது 1980 டிசம்பரில் நான் கலிபோர்னியா திரும்ப வர இருந்தபோது என் மனதில் தோன்றிக் கொண்டே இருந்தன.

எனது ஆய்வறிக்கைக்காக யூதர்கள் உட்கொள்ளும் உணவு, கலாச்சாரம், மதம், கர்ப்பிணி தன்னை தயார் செய்துகொள்ளும் விதம் என்று எல்லா விவரங்களையும் ஒன்று விடாமல் துல்லியமாக சேர்ப்பதற்கு 8 ஆண்டுகள் பிடித்தன. இந்த விவரங்களை மற்ற இனங்களுடன் ஒப்பிட்டு பார்க்க முடிவு செய்தேன்.

தனக்குப் பிறக்கப் போகும் குழந்தை ஒரு மேதாவியாக இருக்கவேண்டும் என்பதற்காக ஒரு கர்ப்பிணி முதலிலிருந்தே தன்னை தயார் செய்து கொள்ளுகிறாள். அவள் எப்போதும் பாடிக்கொண்டும் பியானோ வாசித்துக் கொண்டும் இருப்பாள். கணவனுடன் சேர்ந்து சிக்கலான கணித வினாக்களை விடுவிக்க முயற்சி செய்வாள். தான் போகுமிடமெல்லாம் கணக்குப் புத்தகத்தை எடுத்துச் செல்வாள். சில சமயம் நான் அவளுக்கு கணக்குப் போட உதவி செய்வேன். அப்போது அவளிடம், “இதெல்லாம் உன் குழந்தைக்காகவா?” என்று கேட்பேன். “ஆமாம், கருவிலிருக்கும் போதே பயிற்சி கொடுத்தால் பிற்காலத்தில் மேதையாக ஆகும், இல்லையா?” என்பாள். குழந்தை பிறக்கும் வரை விடாது கணித புதிர்களை விடுவித்துக் கொண்டே இருப்பாள்.

கர்ப்பிணியின் உணவும் விசேஷமானது: பாலில் பாதாம்பருப்பு முதலான கொட்டை வகைகளையும், பேரீச்சையையும் கலந்து உண்கிறாள். மதிய உணவுக்கு தலை துண்டிக்கப்பட்ட மீன், பிரெட், பாதாம்பருப்பும், மற்ற கொட்டை வகைளும் (nuts) சேர்த்த பச்சைக் காய்கறிக் கலவை  (salads) ஆகியவற்றை உண்ணுகிறாள்.

மீன் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு நல்லது என்று நம்புகிறார்கள்; ஆனால் மீனின் தலை மூளைக்கு  நல்லதில்லையாம் கர்ப்பிணி பெண் மீன் எண்ணெய் உட்கொள்ளுவது யூத இனத்தின் வழக்கம்.

மீனின் சதைப் பாகத்தையும், எலும்பு இல்லாத பகுதிகளையும் மட்டுமே சாப்பிடுகிறார்கள்; இறைச்சி சாப்பிடுவதில்லை. இறைச்சி மீன் இரண்டையும் ஒன்றாக சாப்பிடுவது நம் உடலுக்கு எந்த விதத்திலும் பயனளிக்காது என்று நம்புகிறார்கள்..

உணவு உண்ணுவதற்கு முன் பழங்கள் சாப்பிடுகிறார்கள். முதலில் பிரெட், சாதம் போன்றவற்றை சாப்பிட்டால் தூக்கம் வரும்; அதனால் பள்ளியில் சொல்லித் தரும் பாடங்கள் சரிவர புரியாது என்கிறார்கள்.

புகை பிடிப்பவர்களின் கவனத்திற்கு!

சிகரெட்டில் இருக்கும் நிகோட்டின் நமது மூளையின் முக்கியமான திசுக்களை அழித்து, மரபணுக்களையும் DNA வையும் பாதிக்கும்; இதன் காரணமாக அடுத்த தலைமுறை அறிவற்றவர்களாகவும் மூளை வளர்ச்சி குன்றியவர்களாகவும் உருவாகக்கூடும். இதனால் இஸ்ரேல் நாட்டில் சிகரெட் புகைப்பது விலக்கப்பட்ட ஒன்று.

இதில் ஒரு வேடிக்கை என்ன தெரியுமா? உலகின் மிகப் பெரிய சிகரெட் தயாரிப்பாளர்……..யார் என்று உங்கள் ஊகத்திற்கே விட்டுவிடுகிறேன்!

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் உண்ணும் உணவில் மிகுந்த அக்கறை காட்டுகிறார்கள். பெற்றோர்களின் மேற்பார்வையிலேயே குழந்தைகளின் உணவும் அமைகிறது.

முதலில் பழங்கள், பாதாம்பருப்பு, பின் மீன் எண்ணெய் என்ற வரிசையில்தான் குழந்தைகள் உணவு உட்கொள்ளுகிரார்கள்.

என் மதிப்பீட்டின் படி ஒவ்வொரு யூதக் குழந்தையும் 3 மொழிகள் -  ஹீப்ரூ, அரபிக் மற்றும் ஆங்கிலம் – அறிந்தவர்களாக இருக்கிறார்கள்; குழந்தைப் பருவத்திலிருந்து பியானோ, வயலின் முதலிய இசைக் கருவிகள் இசைக்கத் தெரிந்தவர்களாக இருக்க வேண்டியது ஒரு  கட்டாயம்

இசைக்கருவி வாசிக்கும் பழக்கம் குழந்தைகளின் IQ (intelligence quotient) வை அதிகரித்து, அவர்களை மேதைகள் ஆக்கும். இசை அதிர்வுகள் மூளையை தூண்டிவிட்டு அதன் திறன்பாட்டை அதிகரிப்பதால்தான் யூதர்களிடையே மேதைகள் அதிகம் என்கிறார் ஒரு யூத விஞ்ஞானி.

முதல் வகுப்பிலிருந்து 6 ஆம் வகுப்புவரை குழந்தைகள் வணிகக் கணிதவியலை  படிக்கிறார்கள். விஞ்ஞானப் பாடம் முன்னுரிமை பெறுகிறது கலிபோர்னியா குழந்தைகளையும் யூதக் குழந்தைகளையும் ஒப்பிட்டு பார்த்தால் கலிபோர்னியா குழந்தைகள் 6 வருடம் பின் தங்கி இருக்கிறார்கள் என்று சொல்லலாம்..

யூதக்குழந்தைகள் வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் ஆகிய உடல், மனம்  சார்ந்த விளையாட்டுக்களில் ஈடுபடுகிறார்கள். இவ்விரண்டு விளையாட்டுக்களும்  மனதை ஒருமுகப்படுத்தி துல்லியமான, நுட்பமான முடிவு எடுக்க உதவுகின்றன.

உயர் நிலைப் பள்ளியில் மாணவர்கள் விஞ்ஞானம் படிக்க அதிகம் விழைகிறார்கள்.

போர்த்தடவாளங்கள், மருத்துவம், தொழில்நுட்பம் ஆகியவற்றில் செயலாக்கங்கள், (projects) புதிதாக பொருட்கள் செய்வது (product creation) என்று பல்வேறு முறைகளில் தாங்கள் படித்தவற்றை நடைமுறைப்படுத்துகிறார்கள். இந்தத் திட்டங்கள் உயர் கல்வி நிறுவனங்களிலும், பல்தொழில்நுட்ப கழகங்களிலும் அறிமுகப்படுத்தப் படுகின்றன.

வணிகம் சொல்லித்தரும் ஆசிரியருக்கு  முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. வணிகவியல் படிக்கும் மாணவர்கள் கடைசி வருடம் ஒரு செயல் முறை திட்டத்தை நடைமுறைப் படுத்தி காட்ட வேண்டும்;  10 பேர்கள் அடங்கிய அவர்களது குழுமத்திற்கு இந்த செயல்முறை திட்டத்தில் 10 மில்லியன் யு.எஸ். டாலர் லாபம் கிடைத்தால் தான் அவர்கள் தேர்வு பெறுவார்கள்.

இந்தக் காரணத்தினாலேயே உலக வர்த்தகத்தில் பாதிக்கும் மேல் யூதர்கள் வசம் இருக்கிறது உலகப் புகழ்பெற்ற லீவாய்ஸ் (Levis) பொருட்கள் இஸ்ரேல் பல்கலைக்கழக வர்த்தகம் மற்றும் புதிய பாணி உடை வடிவமைப்பு (business and fashion) ஆசிரியர்களால் உருவாக்கப்பட்டதாகும்.

யூதர்கள் பிரார்த்தனை செய்யும்போது கவனித்து இருக்கிறீர்களா? எப்போதும் தலையை அசைத்து அசைத்துப் பிரார்த்தனை செய்வார்கள். இப்படிச் செய்வதால் மூளை தூண்டிவிடப்பட்டு  மூளைக்கு அதிக ஆக்ஸிஜன் கிடைக்குமாம்.

இவர்களைப் போலவே ஜப்பானியர்களும் சிரம் தாழ்த்தி வணங்குபவர்கள். சுஷி உணவை  (புதிதாகப் பிடிக்கப்பட்ட மீன் உணவு) விரும்பி உண்பார்கள். இந்த இரண்டு இனங்களுக்கும் பல ஒற்றுமை இருப்பதை  தற்செயல் என்று சொல்லலாமா?

நியுயார்க்கில் அமைந்திருக்கும் யூதர்களின் வர்த்தக நிறுவனம் அவர்களுக்குப் பலவகையில் உதவுகிறது. யாருக்காவது பயன்தரும் வர்த்தக யோசனை இருந்தால் வட்டி இல்லாக் கடன் கொடுத்து, அவர்களது வர்த்தகம் தழைக்க எல்லா வகையிலும் உதவுகிறது. இதனாலேயே ஸ்டார்பக்ஸ், டெல் கம்ப்யூட்டர்ஸ்,கோகோகோலா, DKNY, ஆரக்கிள், லீவாய்ஸ், டன்கின் டோனட், ஹாலிவுட் படங்கள் மற்றும் பல நூற்றுக்கணக்கான வர்த்தகங்கள் இவர்களது ஆதரவில் நடை பெறுகின்றன.

யூத மருத்துவ பட்டதாரிகள் நியுயார்க்கில் அமைந்திருக்கும் யூதர்களின் வர்த்தக நிறுவனத்தின் வட்டியில்லாக் கடனைப் பெற்று தனியாக டாக்டர் தொழில் நடத்தலாம். இதனால் நியுயார்க், கலிபோர்னியா நகரங்களில் மருத்துவ மனைகளில் போதுமான டாக்டர்கள் இருப்பதில்லை.

2005 இல் சிங்கப்பூர் போயிருந்த போது ஓரு விஷயம் என்னை வியப்பில் ஆழ்த்தியது. இங்கு சிகரெட் பிடிப்பவர்களை சமூகத்திலிருந்து ஒதுக்கப்பட்டவர்களாகவே பார்க்கிறார்கள். இஸ்ரேல் நாட்டைப் போலவே இங்கும் சிகரெட் பிடிப்பது தீய பழக்கம் என்று கருதப்படுகிறது. ஒரு சிகரெட் பெட்டியின் விலை 7 யு.எஸ். டாலர்கள்! அரசாங்கமும் இஸ்ரேல் நாட்டு அரசாங்கம் போலவேதான். சிங்கப்பூர் மிகச்சிறிய நாடு; மன்ஹாட்டன் அளவே இருந்தபோதும் உலகத்தரம் வாய்ந்த பல்கலைக் கழகங்கள் இங்கு இருக்கின்றன.

இந்தோனேஷியாவைப் பாருங்கள். ஒரு பாக்கெட் சிகரெட்டின் விலை வெறும் 0.70 யு.எஸ். டாலர்தான். எங்கு பார்த்தாலும் மக்கள் சிகரெட் பிடித்துக் கொண்டு இருப்பார்கள். பலன்? லட்சக்கணக்கான மக்கள் தொகை இருந்தும் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் பல்கலைக் கழகங்கள்; பெருமைப்பட்டுக் கொள்ளக்கூடிய தொழில் நுட்பமோ, தயாரிக்கும் பொருட்களோ எதுவுமே இல்லை அவர்களிடம்! அவர்களது மொழியைத் தவிர வேறு மொழி தெரியாது. ஆங்கில மொழியைக் கற்றுக் கொள்ள எத்தனை சிரமப் படுகிறார்கள். இவையெல்லாம் சிகரெட் பிடிப்பதால்தான். சிகரெட் பிடிப்பவர்களின் அடுத்த தலைமுறை அறிவற்றதாகத்தான் இருக்கும்.

சற்று சிந்தித்துப் பாருங்கள். என்னுடைய ஆய்வறிக்கையில் நான் இனத்தையோ, மதத்தையோ குறிப்பிடவில்லை.

நம்மால் யூதர்களைப் போன்ற புத்திசாலி தலைமுறையை உருவாக்க முடியுமா?

(written by Dr. Stephen Carr Leon) – Translated by Ranjani Narayanan

http://ranjaninarayanan.wordpress.com/2012/04/01/%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D/

  • கருத்துக்கள உறவுகள்

...... தனக்குப் பிறக்கப் போகும் குழந்தை ஒரு மேதாவியாக இருக்கவேண்டும் என்பதற்காக ஒரு கர்ப்பிணி முதலிலிருந்தே தன்னை தயார் செய்து கொள்ளுகிறாள். அவள் எப்போதும் பாடிக்கொண்டும் பியானோ வாசித்துக் கொண்டும் இருப்பாள். கணவனுடன் சேர்ந்து சிக்கலான கணித வினாக்களை விடுவிக்க முயற்சி செய்வாள். தான் போகுமிடமெல்லாம் கணக்குப் புத்தகத்தை எடுத்துச் செல்வாள். சில சமயம் நான் அவளுக்கு கணக்குப் போட உதவி செய்வேன். அப்போது அவளிடம், “இதெல்லாம் உன் குழந்தைக்காகவா?” என்று கேட்பேன். “ஆமாம், கருவிலிருக்கும் போதே பயிற்சி கொடுத்தால் பிற்காலத்தில் மேதையாக ஆகும், இல்லையா?” என்பாள். குழந்தை பிறக்கும் வரை விடாது கணித புதிர்களை விடுவித்துக் கொண்டே இருப்பாள்.

 

கர்ப்பிணியின் உணவும் விசேஷமானது: பாலில் பாதாம்பருப்பு முதலான கொட்டை வகைகளையும், பேரீச்சையையும் கலந்து உண்கிறாள். மதிய உணவுக்கு தலை துண்டிக்கப்பட்ட மீன், பிரெட், பாதாம்பருப்பும், மற்ற கொட்டை வகைளும் (nuts) சேர்த்த பச்சைக் காய்கறிக் கலவை  (salads) ஆகியவற்றை உண்ணுகிறாள்.

 

மீன் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு நல்லது என்று நம்புகிறார்கள்; ஆனால் மீனின் தலை மூளைக்கு  நல்லதில்லையாம் கர்ப்பிணி பெண் மீன் எண்ணெய் உட்கொள்ளுவது யூத இனத்தின் வழக்கம். மீனின் சதைப் பாகத்தையும், எலும்பு இல்லாத பகுதிகளையும் மட்டுமே சாப்பிடுகிறார்கள்; இறைச்சி சாப்பிடுவதில்லை. இறைச்சி மீன் இரண்டையும் ஒன்றாக சாப்பிடுவது நம் உடலுக்கு எந்த விதத்திலும் பயனளிக்காது என்று நம்புகிறார்கள்..

 

உணவு உண்ணுவதற்கு முன் பழங்கள் சாப்பிடுகிறார்கள். முதலில் பிரெட், சாதம் போன்றவற்றை சாப்பிட்டால் தூக்கம் வரும்; அதனால் பள்ளியில் சொல்லித் தரும் பாடங்கள் சரிவர புரியாது என்கிறார்கள்.

 

புகை பிடிப்பவர்களின் கவனத்திற்கு!

 

சிகரெட்டில் இருக்கும் நிகோட்டின் நமது மூளையின் முக்கியமான திசுக்களை அழித்து, மரபணுக்களையும் DNA வையும் பாதிக்கும்; இதன் காரணமாக அடுத்த தலைமுறை அறிவற்றவர்களாகவும் மூளை வளர்ச்சி குன்றியவர்களாகவும் உருவாகக்கூடும். இதனால் இஸ்ரேல் நாட்டில் சிகரெட் புகைப்பது விலக்கப்பட்ட ஒன்று.

 

..... பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் உண்ணும் உணவில் மிகுந்த அக்கறை காட்டுகிறார்கள். பெற்றோர்களின் மேற்பார்வையிலேயே குழந்தைகளின் உணவும் அமைகிறது.

 

..... யூதக்குழந்தைகள் வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் ஆகிய உடல், மனம்  சார்ந்த விளையாட்டுக்களில் ஈடுபடுகிறார்கள். இவ்விரண்டு விளையாட்டுக்களும்  மனதை ஒருமுகப்படுத்தி துல்லியமான, நுட்பமான முடிவு எடுக்க உதவுகின்றன.

 

உயர் நிலைப் பள்ளியில் மாணவர்கள் விஞ்ஞானம் படிக்க அதிகம் விழைகிறார்கள்.

போர்த்தடவாளங்கள், மருத்துவம், தொழில்நுட்பம் ஆகியவற்றில் செயலாக்கங்கள், (projects) புதிதாக பொருட்கள் செய்வது (product creation) என்று பல்வேறு முறைகளில் தாங்கள் படித்தவற்றை நடைமுறைப்படுத்துகிறார்கள். இந்தத் திட்டங்கள் உயர் கல்வி நிறுவனங்களிலும், பல்தொழில்நுட்ப கழகங்களிலும் அறிமுகப்படுத்தப் படுகின்றன.

 

வணிகம் சொல்லித்தரும் ஆசிரியருக்கு  முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. வணிகவியல் படிக்கும் மாணவர்கள் கடைசி வருடம் ஒரு செயல் முறை திட்டத்தை நடைமுறைப் படுத்தி காட்ட வேண்டும்;  10 பேர்கள் அடங்கிய அவர்களது குழுமத்திற்கு இந்த செயல்முறை திட்டத்தில் 10 மில்லியன் யு.எஸ். டாலர் லாபம் கிடைத்தால் தான் அவர்கள் தேர்வு பெறுவார்கள்.

இந்தக் காரணத்தினாலேயே உலக வர்த்தகத்தில் பாதிக்கும் மேல் யூதர்கள் வசம் இருக்கிறது...

 

......இந்தோனேஷியாவைப் பாருங்கள். ஒரு பாக்கெட் சிகரெட்டின் விலை வெறும் 0.70 யு.எஸ். டாலர்தான். எங்கு பார்த்தாலும் மக்கள் சிகரெட் பிடித்துக் கொண்டு இருப்பார்கள். பலன்?

 

லட்சக்கணக்கான மக்கள் தொகை இருந்தும் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் பல்கலைக் கழகங்கள்; பெருமைப்பட்டுக் கொள்ளக்கூடிய தொழில் நுட்பமோ, தயாரிக்கும் பொருட்களோ எதுவுமே இல்லை அவர்களிடம்! அவர்களது மொழியைத் தவிர வேறு மொழி தெரியாது. ஆங்கில மொழியைக் கற்றுக் கொள்ள எத்தனை சிரமப் படுகிறார்கள். இவையெல்லாம் சிகரெட் பிடிப்பதால்தான். சிகரெட் பிடிப்பவர்களின் அடுத்த தலைமுறை அறிவற்றதாகத்தான் இருக்கும்.

சற்று சிந்தித்துப் பாருங்கள்.

 

http://ranjaninarayanan.wordpress.com/2012/04/01/%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D/

 

பயனுள்ள செய்தியை அறிவுறுத்திய சுவாரசியமான பதிவு. பகிர்வுக்கு நன்றி பெருமாள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யூதர்கள் தண்ணியும் அடிக்கமாட்டார்களா? :rolleyes:  :lol:

பயனுள்ள செய்தியை அறிவுறுத்திய சுவாரசியமான பதிவு. பகிர்வுக்கு நன்றி பெருமாள்.

நமது தமிழர்களும் இதக் கடைப் பிடிப்பார்களா இல்லை என்றால் சினிமா நடிகனின் கட் அவுட்டுக்கு பால் ஊத்துவார்களா :icon_idea:

இவர் ஸ்ரேலுக்கு போய் ஸ்ரேலியரை ஆராந்திருக்கிறார். உலக யூதர் தொகையில் சிறுபாகம் தான் அங்கிருக்கிறது. சிங்கப்பூர் போர் சீன இனமான இந்தோனேசியர்களை ஆராயத் தவறிவிட்டார். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யூதர்கள் தண்ணியும் அடிக்கமாட்டார்களா? :rolleyes:  :lol:

கிட்டத்தட்ட இவர்களுடைய வாழ்க்கை முறை ஆமிஸ் இன மக்கள்  வாழ்க்கை முறையும் பொருந்துகின்றன ஆனாலும் லன்டனில் முக்கியமான இடங்களின் கட்டிட தொகுதி அவர்கள் வசமே உள்ளது. அவர்களுடைய பண இருப்பு இவ்உலகையே வேண்டும் தகுதி உள்ளதாக உள்ளது அனேகமானோர் வெகு இயல்பாக சிம்பிளாக உள்ளனர் ஆனாலும் தங்கள் சார்பாக குரைப்பதற்க்கு நல்ல வேலையாளை வைத்திருப்பார்கள் உ+ம் பாரிஸில் லாசப்பலில் உள்ள தமிழ் கடை, பெயர் தெரியும் அனேகருக்கு.

Edited by பெருமாள்

சுவாரஸ்யமான தகவல்!

அவர்கள் இடம்பெயர்ந்த போது எப்படி நடந்து கொண்டார்கள் என்பதை புலம்பெயர்  தமிழர் தெரிந்து கொள்வது நல்லது.

யாழ்ப்பாணத் தமிழர் யூதர்களைப் போல் கல்வியில் முன்னணியில் இருந்தாலும், தாய்மண் பற்று குறைவாகவே உள்ளது. தமிழ் சினிமாவும், தமிழ் தொலைகாட்சித் தொடர்களும் தமிழர்களை சீரழிக்கும் ஊடகங்களாக மாறிவிட்டன. சிந்தனை வளம் குறைந்த தமிழ் ஊடகவியலாளர்களும் (சிவராம் போன்றவர்கள் விதிவிலக்கு) பின்னடைவுகளுக்கு முக்கிய காரணம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.