Jump to content

எட்டு மணி நேரத்தில் புலிகள் வசமான மூதூர்!( வெளிவரும்உண்மைள்)


Recommended Posts

எட்டு மணி நேரத்தில் புலிகள் வசமான மூதூர்!

பிரவீனா

Friday, 11 August 2006

மாவிலாறு அணைக்கட்டை திறந்து விடப் போவதாக சூளுரைத்து சிறிலங்கா அரசு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி மீது மேற்கொண்ட படை நடவடிக்கையை முறியடித்து படைத்தரப்புக்கு பெரும் உயிரிழப்பையும் பின்னடைவையும் ஏற்படுத்திய விடுதலைப் புலிகள் திருமலை மூதூர் கிழக்குப் பகுதி மீது சிறிலங்கா அரசு நடத்தவிருந்த பாரிய படை நடவடிக் கை மற்றும் தமிழர் தாயகப் பகுதி மீதான கண்மூடித்தனமான எறிகணை வீச்சு, தாக்குதலுக்கு பதிலடியாக சிறிலங்கா படையினருக்கு எதிரான மட்டு ப்படுத்தப்பட்ட படைநடவடிக்கை ஒன்றை ஆரம்பித்தனர்.

கடந்த 2ம் திகதி அதிகாலை மூதூர் நோக்கி விடுதலைப் புலிகள் மேற்கொண்ட படை நடவடிக்கையின் போது விடுதலைப் புலிகள் மேற் கொண்ட உக்கிர தாக்குதலில் எட்டு மணி நேரத்துக்குள் மூதூர்ப் பிரதேசம் முழுமையாக விடுதலைப் புலிகள் வசமானது.

இவ்வாறு மூதூர் முழுமை யாகக் கட்டுப்பாட்டுக்கு வீழ்ந்ததன் மூலம் விடுதலைப் புலிகள் பல்வேறு செய்திகளை வெளிப்படுத்தியுள்ளனர். முதலாவதாக போர்நிறுத்த உடன்படிக் கை என்பது இருதரப்பும் சமதரப்பு என்ற அடிப்படையில் தான் கைச்சாத்திடப்ப ட்டது.

ஆனால் போர்நிறுத்த உட ன்பாட்டை சீர்குலைத்த சிறிலங்கா அரசு கருணா விவகாரத்தை தமக்கு சாதகமாக்கியது. விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து வெளியேற்றப்பட்ட கருணாவையும் கருணாவின் சகாக்க ளையும் தன்வயப்படுத்தி வைப்பதன் மூலம் புலிகளை பலவீனப்படுத்தி வெ ற்றி பெறலாம் என அரசு கருதியது.

போர்நிறுத்த உடன்பாட்டை சீர்குலைத்து பேச்சுக்களை இழுத்தடி த்து ஒரு வலிந்த தாக்குதல் யுத்தமொ ன்றை படைத்தரப்பு மேற்கொண்டதும் இதே நம்பிக்கையில் தான். ஆனால் திருமலை கடற்படைத்தளம் மீதான விடுதலைப் புலிகளின் அண்மைய ஆட்லறி தாக்குதல் அதன் பின்னர் மூதூர் நகர்வரை மட்டுப்படுத்தப்பட்ட இராணுவ நடவடிக்கையினை மேற் கொண்டு எட்டு மணி நேர சமரில் மூதூர் நகரை முழுமையாக கட்டுப்பா ட்டுக்குள் கொண்டு வந்ததமை என்பன விடுதலைப் புலிகளின் போரியல் ஆற் றல் சர்வதேச சமூகத்துக்கு மிகப் பெரிய விடயத்தை வெளிப்படுத்தியுள்ளது. விடுதலைப் புலிகளின் சமவலு வாற்றல் குறையவில்லை. என்ற செய்தியையும் எடுத்துக் கூறியிருக்கிறது.

மூன்றாம் கட்ட ஈழப் போரின் போது விடுதலைப் புலிகளிடம் ஆட்ல றிகள் இருந்த போதும் கிழக்கில் அ வை பயன்படுத்தப்படவில்லை. ஆனால் தற்போது திருமலை கடற்படைத்த ளம் மற்றும் மூதூர் பிரதேச மீட்பின் போது அவை பயன்படுத்தப்பட்டதிலிரு ந்து ஆட்லறிப் பலம் விடுதலைப் புலிகளால் தமிழர் தாயகப் பரப்புக்கு விரிவாக்கம் செய்ய ப்பட்டுள்ளதையும் முழு அளவிலான யுத்தமொன்று வெடிக்கி ன்ற போது இந்த ஆட்லறிப் பலம் தாயக நிலப்பரப்பை முழுமையாக மீட்பதற்கு முக்கிய பங்கு வகிக்கப் போகின்றது. எனவும் இராணுவ ஆய்வா ளர்கள் கருதுகின்றனர்.

மாவிலாறு அ+ணைக்கட்டு விவகாரத்திற்கு தீர்வு காணும் வழிமு றையாக ஈச்சிலம்பற்று பிரதேச மக் களின் நியாயபூர்வ கோரிக்கைகளை ஏற்று அதற்கான உறுதி மொழிகள் அந்த மக்களுக்கு வழங்கப்படுமானால் மாவிலாறு அணைக்கட்டு விவகாரம் சுலபமாக தீர்க்கப்பட்டு விடும் மாறாக தமிழர் தாயகம் மீது இராணுவ ஆக்கிர மிப்பை மேற்கொண்டு மாவிலாறு அ ணைக்கட்டை திறந்து விடுவது என்ப து. முடியாத காரியம்.

அண்மையில் மாவிலாறு அணைக்கட்டை திறக்கப்போவதாகக் கூறி கடந்த யூலை 31ம் திகதி பாரிய படைநகர்வு ஒன்றை படைத்தரப்பு மேற்கொண்டது. மூன்று முனைக@டாக மாவிலாறு அணைக்கட்டை அடைவ துதான் படைத்தரப்பின் நோக்கம் ~~மிசன் வோட்டர் செட்|| எனப் பெயரிடப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த இராணுவ நடவடிக்கை விடுதலைப் புலிகளின் உ க்கிர வழிமறிப்பு தாக்குதலால் முறியடிக்கப்பட்டதுடன் படைத்தரப்புக்குப் பாரிய சேதம் ஏற்பட்டது. சுமார் 20 ப டையினர் பலியானதுடன் ஐம்பது படையினர் வரை படுகாயமடைந்தனர் இதனை தொடர்ந்து தமது நிலைகளுக்கு பின் வாங்கியது.

இதனைத் தொடர்ந்து மற் றொரு படைநகர்வுக்கான பாரிய தயா ர்ப்படுத்தலை சிங்களப் படைகள் மேற் கொண்டன. இந்த நடவடிக்கைக்காக வடக்கிலிருந்து துருப்புக்களை ஏற்றி வந்த கப்பல் கடல் புலிகளின் உக்கிர வழிமறிப்புத் தாக்குதலுக்கு இலக்கா னது. இதன் காரணமாக திருமலை துறைமுகத்தை சென்றடைய முடியா மல் சர்வதேச கடற்பரப்புக்கு கடற்ப டைக் கப்பல் தப்பிச் சென்றதுடன் துறைமுகத்தைச் சென்றடைவதற்கு முடியாது இந்திய உதவியை கோரியி ருந்தனர். அதே சமயம் இடம் பெற்ற கடற்சமரில் சிறிலங்கா கடற்படை டோரா படகு மூழ்கடிக்கப்பட்டதுடன் சிறிலங்கா கடற்படையினருக்கு பலத்த உயிரழிவு ஏற்பட்டுள்ளது.

இதேவேளை திருமலை உட்துறைமுக வீதியிலுள்ள சிறிலங்கா கடற்படைத் தளம் மீது விடுதலைப் புலிகள் சரமாரியான ஆட்லறித் தாக்கு தல் மூலம் கடற்படையினரை நிலைகு லையவும் வைத்தனர்.

இதன் அடுத்த கட்டமாகத் தான் மூதூர் பிரதேசம் நோக்கிய மட்டுப்படுத்தப்பட்ட இராணுவ நட வடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சிறி லங்கா அரசின் இராணுவ அழுத்த த்தை தனிப்பதற்கான ஒரு நடவடிக் கை தான் மூதூர் வரையிலான இரா ணுவ நடவடிக்கை என விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இளந்திரையன் தெரிவித்திருந்தார்.

கடந்த புதன் கிழமை அதி காலை 2.00 மணிக்கு விடுதலைப் பு லிகளின் நடவடிக்கை ஆரம்பிக்கப்ப ட்டது. விடுதலைப் புலிகளின் சம்பூர் முன்னரங்க காவல் நிலையிலிருந்து 800 மீற்றர் தொலைவிலுள்ள கட்டை ப்பறிச்சான் படைமுகாம் விடுதலைப் புலிகளின் வசம் வீழ்ந்தது.

அதனைத் தொடர்ந்து பாலத் தோப்பூர், பச்சனூர், காந்திநகர், தோப் பூர், செல்வநகர், மூதூர், மூதூர் இறங்குதுறை, 64வது மைல்கல் என பல இடங்களை விடுதலைப் புலிகள் தன் வயப்படுத்தினர். இந்த மட்டுப்படுத் தப் பட்ட இராணுவ நடவடிக்கையின் போது மகிந்தபுர, செல்வநகர், 64 வது மைல்கல், மூதூர் இறங்குதுறை கட்டைப்பறிச்சான், இராணுவ முகாம், மற்றும் பச்சனூர் பகுதியிலிருந்த இரு முகாம்கள் மூதூர் பொலிஸ் நிலைய த்துடன் இணைந்திருந்த இராணுவ மினி முகாம்கள் என்பன விடுதலைப் புலிகளால் தாக்கி அழிக்கப்பட்டன.

மூதூர் இறங்கு துறையை விடுதலைப் புலிகள் தன்வயப்படுத்திய தையடுத்து இறங்கு துறையை மீளக் கைப்பற்ற சிறிலங்கா கடற்படையினர் தமது முழுமையான பலத்தைப் பிர யோகித்திருந்த போதும் கடற்புலிக ளின் உக்கிர முறியடிப்புத் தாக்கு தல் காரணமாக இறங்கு துறையை கைப்பற்றும் திட்டம் கைகூடவில்லை. இந்த உக்கிர தாக்குதலின் போது சிறிலங்கா கடற்படையின் அதிவே க டோராக்கள் இரண்டு மூழ்கடிக் கப்பட்டதுடன் மூன்று படகுகள் சேதமாக்கப்பட்டுள்ளன.

மூதூர்ப் பிரதேசத்தை மீளக் கைப்பற்றுவதற்காக சிறிலங் கா முப்படைகளின் அதிகூடிய படையினரை படைத்தரப்பு வலுவை பயன்படுத்தி பகீரத முயற்சி மேற் கொண்ட போதும் விடுதலைப் புலிகள் வயமிருந்த பகுதியை மீட்கமுடியவில்லை. திருமலை கடற்படைத் தளத்திலிருந்து ஆட்லறி எறிகணை, பல்குழல் பீரங்கி, விமானக் குண்டு வீச்சு தாக்குதல்களை மேற்கொண்ட போதும் விடுதலைப் புலிகளிடமிந்து மூதூரை மீளக் கைப்பற்ற முடியாது. படைத்தரப்பு திண்டாடியதை காணக்கூடியதாக விருந்தது.

இரு நாட்கள் மூதூர்ப் பிர தேசம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பா ட்டில் இருந்தது. இந்த நடவடிக்கையின் போது போராளிகள் தரப்பில் 32 போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர். படைத்தரப்பில் சுமார் 150 பேருக்கு மேல் பலியாகியுள்ளனர். சுமார் 200 பேர்வரை படுகாயமடைந்துள்ளனர்.அது மாத்திரமின்றி பெருமளவிலான ஆயுத ங்களும் விடுதலைப் புலிகளால் கைப் பற்றப்பட்டுள்ளது.

சிறு ரக மோட்டார்கள், 40.மி. மீற்றர் கிரனைட் வீசும் ஆயுதங்கள், இலகு இயந்திரத் துப்பாக்கிகள், மற் றும் பெருமளவிலான ஆயுதங்களைக் கைப்பற்றியுள்ளனர். இறுதியில் வெள் ளிக்கிழமை நள்ளிரவு 12.00 மணியுடன் விடுதலைப் புலிகளின் படையணிகள் தமது நடவடிக்கையை நிறைவு செய் து கொண்டு தமது நிலைகளுக்குத் திரும்பினர்.

அதன் பின்னரே மூதூர் பகு திக்கு படைத்தரப்பால் நுழைய முனை ந்தது. மாவிலாறு அணைக்கட்டை திற க்கப் போவதாக கூறி விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் பாரிய படைநகர்வை மேற்கொள்ள ப டையினர் முயன்ற போதும் விடுதலைப் புலிகளின் உக்கிர முறியடிப்பு தாக்கு தலுக்கு முகம் கொடுக்க முடியாது பலத்த இழப்புடன் பின் வாங்க வேண்டி ஏற்பட்டது.

அதேவேளை எட்டு மணி நேரத்துக்குள் பல படை முகாம்களை நிர்மூலம் செய்து மூதூரை விடுதலைப் புலிகள் கைப்பற்றியதியிலிருந்து இரு பெரிய விடயங்களை விடுதலைப் புலி கள் தமது போரியல் ஆற்றல் மூலம் நிரூபித்துக் காட்டியுள்ளனர்.

01) விடுதலைப் புலிகளின் கட்டுப் பாட்டுப் பகுதியை எதிரியால் மீட்க முடியாது என்ற விடயம்.

02) தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்து இருக்கும் சிறிலங்காப் படை முகாம்க ளை நிர்மூலம் செய்து மிக குறுகிய காலத்துக்குள் மீட்டெடுக்கும் போரியல் ஆற்றல் விடுதலைப் புலிகளுக்கு உள்ளது என்பது இரண்டாவது விடயம்.

இந்த அடிப்படையில் நோக் குமிடத்து போர்நிறுத்தம் முடிவுக்கு வந்து போர் பிரகடனப்படுத்தப்பட்டால் தமிழர் தாயகத்தில் சிங்களப் படை ஆக்கிரமிப்பிலிருக்கும் நிலப் பிரதேசம் விரைவாக மீட்கப்பட்டு விடுதலை அடைவதற்கான அந்த செய்தியை விடுதலைப் புலிகள் சொல்லில் மட்டு மல்ல பரீட்சாத்த ரீதியாக மூதூர் மீட்பு மூலம் செயலிலும் காட்டியிருக்கின் றனர்.

விடுதலைப் புலிகள் மூதூர் பிரதேசத்தை தன்வயப்படுத்தி வைத்திருந்த வேளை சிறிலங்காப் படை விடுதலைப் புலிகளிடமிருந்து மீளவும் மூதூரை கைப்பற்றுவதற்கான ஒரு பாரிய படை நகர்வுக்கு அரசாங்கம் திட்ட மிட்டிருந்தது.

திருமலை மாவட்டத்தில் உள்ள படையினரை மட்டும் வைத்து மூதூரை மீட்பதற்கான ஆற்றலை படைத்தரப்பு கொண்டிருக்கவில்லை. மாறாக மட்டக்களப்பு மாவட்டத்தில் நகரப் பிரதேசத்திலிருந்த படைகள் உடனடியாக விலக்கப்பட்டு திருமலைக்கு அனுப்பி வைக்கப்பட்டதுடன் மட்டக்களப்பு நகரம் மற்றும் சுற்றுப்புற பாதுகாப்பினை சிறிலங்கா அதிரடிப்ப டையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இதில் இருந்து மூதூர் பிரதே சத்தினை மீட்பதற்கான படை நடவடி க்கைக்கு அந்த மாவட்டத்திலுள்ள துருப்பினரால் முடியாது பிற மாவட்டங்களில் இருந்து துருப்புக்களை நக ர்த்த வேண்டிய சூழல் ஏற்படுமானா ல் எதிர்காலத்தில் தமிழர் தாயகம் எங்கும் ஒட்டு மொத்தமாக போர் வெடி க்கின்ற போது படைத்தரப்பு நிலை குலைந்து போகும் சூழல் ஏற்பட வாய்ப்பு ள்ளதாக இராணுவ விமர்சகர்கள் அபிப்பிராயம் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை நான்காம் கட்ட ஈழப் போர் மூழுமாகவிருந்தால் மூதூர் பிரதேசம் மீண்டும் விடுதலைப் புலிகள் வசமாகி விடும்.

அத்துடன் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த மூதூர் இற ங்கு துறையை கைப்பற்றி அதிலிருந்து ஆட்லறித் தாக்குதலை மேற்கொள்ளப்படும் பட்சத்தில் திரு மலை துறைமுகத்துக்கு பாரிய அச்சுறுத்தலாக அமைவதுடன் படைத்தரப்பின் கடற் போக்குவரத் தும் முடக்கப்படும் அபாயமுள்ளது.

இவை குடாநாட்டிலுள்ள சிறிலங்கா படைகளுக்கான வழ ங்கல் சேவையை பாதிப்படையச் செய்வதுடன் குடாநாட்டை விடுதலைப் புலிகள் சுலபமாக மீட்பதற்கு வழிவகுக்கும்.

இந்த அடிப்படையில் நாலாம் கட்ட ஈழப் போர் ஆரம்ப த்தில் மூதூரைக் கைப்பற்றும் இராணுவ நகர்வை விடுதலைப் புலிகள் முன்னெடுப்பார்கள் என்ப து உறுதி எனவே இப்போது விடுதலைப் புலிகள் போர்நிறுத்தத்தை மதித்து அதனைப் பேணுவதன் அடிப்படையில் மூதூரை விட்டு விலகி சென்றாலும் நாலாம் கட்டஈழப்போர் ஆரம்பிக்கப்படும் பட்சத்தில் மூதூர் புலிகள் வசம் ஆவது உறுதி என்பது இப்போதே புலனாகின்றது.

http://www.battieelanatham.com/newsite/ind...d=1148&Itemid=1

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌ல‌ம் முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.