Jump to content

மாவிலாறு சண்டையில் 41 இராணுவம் பலி, 130-க்கும் மேற்பட்டோர் க


Recommended Posts

Fighting kills 41 SLA troops, wounds 130

[TamilNet, August 10, 2006 13:54 GMT]

Sri Lankan Army advancing into LTTE-controlled areas have lost 41 soldiers killed in Thursday’s heavy fighting around the Maavil Aru sluice gates, military sources said. 22 soldiers have been seriously wounded and 98 others wounded, military officials in Colombo said speaking on condition of anonymity. Meanwhile AP quoted the LTTE military spokesman, Rasiah Ilanthirayan, as saying seven Tigers had died and 15 were wounded.

Many of the SLA casualties were amongst elite troops deployed to wrest control of the contested water channel at Maavil Aru, the Colombo military sources said.

Military wounded are pouring into hospitals in government-held parts of Trincomalee, reports say.

Medics treated dozens of new Army casualties taken to the government-held town of Kantale, and were told to expect more, Reuters reported. The local hospital struggled to cope, as injured shared beds and lay on trolleys.

Medical staff attend to an injured SLA soldier in Kantale base hospital, 10 August 2006 2006. (REUTERS)

Beds are being cleared of non-urgent cases to make room for more wounded as fighting continued, Reuters said.

Kantale hospital manager said staff had been pulled away from treating newly arrived displaced people despite rising illness in overcrowded camps.

Reuters quoted accounts by SLA wounded saying mortar and artillery fire from LTTE forces struck the troops as they moved across open ground to close on the sluice after clearing mines and booby traps.

Doctors, medical staff and soldiers rushed to help the wounded out of ambulances, some of them in torn, blood-soaked uniforms, Reuters reported, adding the dead arrived with less fanfare, quietly driven to the morgue in civilian trucks.

"From dawn today, the Sri Lankan army has launched a full-fledged offensive operation against our territories involving thousands of troops, heavy guns and bombardment," LTTE spokesman Ilanthirayan told AP.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=19167

Link to comment
Share on other sites

(2 ஆம் இணைப்பு) மாவிலாறு சண்டையில் 41 இராணுவம் பலி, 130-க்கும் மேற்பட்டோர் காயம்: சிறிலங்கா

[வியாழக்கிழமை, 10 ஓகஸ்ட் 2006, 20:25 ஈழம்] [தெ.சந்திரநாதன்]

மாவிலாறு அணைப் பிரதேசத்தை ஆக்கிரமிக்கும் முயற்சியில் சிறிலங்காப் படைத்தரப்பில் பாரிய இழப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக படைத்தரப்பு ஒப்புக் கொண்டுள்ளது.

மாவிலாறுப் பிரதேசத்தைக் கைப்பற்றும் இன்றைய நடவடிக்கையில் தமது படையினர் 41 பேர் கொல்லப்பட்டதாகவும், 130-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் சிறிலங்கா இராணுவ அதிகாரியொருவர் சர்வதேச செய்தி நிறுவனமொன்றிற்குத் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவின் அதி சிறப்புப் படையினரே பாரியளவில் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர் எனவும் மேற்படி இராணுவ அதிகாரி சர்வதேச செய்தி நிறுவனத்திற்குத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இப் பிரதேசத்தை கைப்பற்றியதாக சிறிலங்காப் படைகள் அறிவித்தாலும் அங்கு கடும் சண்டை தற்போதும் நடந்து வருவதாகவே திருமலை வாசிகள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு உக்கிரமாக நடந்து வரும் வரும் சண்டையில் ஏராளமான படையினர் கொல்லப்பட்டு நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாகவும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள காயமடைந்தோரின் எண்ணிக்கை இன்று நன்பகலே 200-ஐத் தாண்டியுள்ளது எனத் தெரிவித்தனர்.

கந்தளாய் மருத்துவமனையில் மேலதிக மருத்துவர்கள், தாதிகள் சிறப்பு சேவைக்கு அமர்த்தப்பட்ட போதும் அங்கு ஆட்பற்றாக்குறை நிலவுவதாகவும் கட்டில்கள் போதாக்குறை நிலவுவதாக பிறிதொரு சர்வதேச செய்தி நிறுவனமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

காயமடைந்த இராணுவத்தினர் தொடர்ந்து வந்தவண்ணமுள்ளதாகவும், கொல்லப்பட்டவர்களின் உடல்களும் வந்தவண்ணமுள்ளதாகவும் தாங்கள் இன்னமும் நிறைய காயமடைந்தவர்களை எதிர்பார்ப்பதாக மருத்துவர்கள் தெரிவித்ததாக அச்செய்தி நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை படுகாயமடைந்தோர் பொலநறுவை, திருக்கோணமலை மற்றும் கொழும்பு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுவதாக மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விடுதலைப் புலிகள் தரப்பில் 10 பேர் வீரச்சாவடைந்துள்ளதாகவும், 20 பேர் காயமடைந்துள்ளதாகவும் விடுதலைப் புலிகளின் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார்.

http://www.eelampage.com/?cn=28109

Link to comment
Share on other sites

மாவிலாற்றில் தொடரும் உக்கிரமோதல் - 41 படையினர் பலி - 130 பேர் படுகாயம் - ஏழு போராளிகள் வீரச்சாவு

- பாண்டியன் வுhரசளனயலஇ 10 யுரபரளவ 2006 20:32

மாவிலாற்று அணைப்பகுதியை ஆக்கிரமிக்கும் நோக்குடன் சிங்களப் படைகள் மேற்கொண்ட பாரிய நகர்வு முயற்சிக்கு எதிராக விடுதலைப் புலிகள் தமது உக்கிர முறியடிப்புத் தாக்குதல்களை தொடர்ந்து நடத்திக் கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாற்பது வரையான படையினர் விடுதலைப் புலிகளின் எதிர்தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் 130பேர் படுகாயமடைந்துள்ளதாக கொழும்பில் இராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இவர்களில் 22பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

படையினரின் இப்பாரிய ஆக்கிரமிக்கும் முயற்சியை முறியடிக்கும் சமரில் போராளிகள் ஏழுபேர் வீரச்சாவைத் தழுவிக் கொண்டதுடன் மேலும் 15பேர் விழுப்புண்ணடைந்துள்ளனர்.

http://sankathi.com/content/view/4256/26/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.