Jump to content

Recommended Posts

Meyar-Siddu-600x849.jpg

போராளிக் கலைஞன் / பாடகன் மேஜர் சிட்டு

ஈழத்துப் போராட்டப் பாடகர்களில் தனக்கென்று தனித்துவமான இடத்தைப் பெற்றிருப்பவர் மேஜர் சிட்டு. போராளியாகப் பணியாற்றி களமொன்றில் வீரச்சாவடைந்தது கலையுலகிற்கு இழப்புத்தான் என்றாலும் மக்கள் மனங்களில் என்றும் நீங்கா இடம்பெற்ற வாழ்க்கை அவருடையது.

தொன்னூறுகளின் தொடக்கத்தில் மேஜர் செங்கதிர் என்ற போராளியின் பாடல்வரிகளைத் தன் குரலிற் பாடி இசையுலகிற்குள் நுழைந்தார். அருமையான போராளிக்கலைஞனை இனங்காட்டியதும் தொடக்கி வைத்ததும் “கண்ணீரில் காவியங்கள் செந்நீரில் ஓவியங்கள்” என்ற அப்பாடலே. சிட்டண்ணனின் நுழைவின்போது இன்னோர் ஈழத்துப்பாடகர் சாந்தன் புகழ்பெற்றிருந்தார். பின்வந்த காலத்தில் கேணல் கிட்டு அவர்கள் நினைவாகப் பாடப்பட்ட பாடல்கள் வெளிவந்தபோது சிட்டண்ணன் புகழின் உச்சிக்குச் சென்றார். அவசரமாக உருவாக்கப்பட்டு இருநாட்களுள் வெளிவந்த பாடலான “கடலம்மா.. எங்களுக்கு நீதி சொல்ல எவருமில்லையா?” என்ற பாடல் மிகப்பிரபலமானது. அதன்பின் சிட்டண்ணன் என்றுமே நீங்காத இடத்தைப் பெற்றுவிட்டார். அதன்பின் அவருக்கு இறங்குமுகமேயில்லை.

கண்ணீரில் காவியங்கள் செந்நீரில் ஓவியங்கள்

போராளியாக தன் கடமையைச் செய்துகொண்டிருந்தார். கலைபண்பாட்டுக் கழகப்பொறுப்பு தொடக்கம் பல கடமைகளைச் செய்திருக்கிறார்.

விடுதலைப்புலிகளால் தயாரிக்கப்பட்ட ஒரு திரைப்படம் ‘உயிர்ப்பூ’.
இப்படத்தில் சிட்டண்ணன் பாடும் ஒரு பாடல் வருகிறது.
ஒருமுறை கேட்டால் யாரையும் கட்டிப்போட்டுவிடும் பாடல்.
“சின்ன சின்ன கண்ணில் வந்து மின்னல் விளையாடிடும்”
சிட்டண்ணனின் புகழ்பெற்ற பாடல்களில் இப்பாடல் எப்போதும் முதன்மையாக இருக்கும்.

கண்ணீரில் காவியங்கள் தொடங்கி இறுதியாக அவர் பாடிய பாடல் . ‘சிறகு முளைத்து உறவை நினைத்துப் பறக்கும் குருவிகள்’ என்ற சோலைச் சிறுவர்களின் இசைத்தட்டில் இடம்பெற்ற பாடல்வரையும் சுமார் 75 பாடல்களைப் பாடியிருக்கிறார்.

தமிழீழ இசைக்குழு என்ற பெயரில் போராளிக் கலைஞர்களைக் கொண்ட இசைக்குழு மக்களிடத்தில் விடுதலைகானங்களை இசைக்கும். ஏராளமான மக்கள் கூடுவர். சிட்டண்ணன் இருந்தவரை மிகப்பெரும் வரவேற்பு இவ்விசை நிகழ்ச்சிக்கு இருந்தது. சிட்டண்ணையின் வீரச்சாவின்பின் மக்கள் இசைநிகழ்ச்சிக்குச் செல்வதைக் குறைத்துக்கொண்டனர்.
‘சிட்டு இல்லாத கோஷ்டிக்கு ஏன் போவான்?’
என்றுமக்கள் பேசிக்கொண்டார்கள்.

sw-copy-600x291.jpg

[ அக்காலகட்டம், மேடை அரங்குகள் செயலிழந்துபோகத் தொடங்கிய காலம். மக்களிடத்தில் செய்தியைச் சொல்ல 'தெருக்கூத்து' எனப்படும் வீதி நாடகத்தைப் பரவலாகப் பாவிக்கத் தொடங்கிய காலம். மிகப்பெரும் வீரியத்துடன் வீதிநாடகங்கள் வன்னியில் செழிப்புற்ற காலத்தில் இசைக்குழுக்களோ பெரிய மேடை நிகழ்வுகளோ நடத்தப்படுவதைத் தவிர்த்தனர். அனேகமாக ஓயாத அலைகள்-3 தொடங்கப்பட்டும்வரை வீதி நாடகமே முதன்மைக் கலையாகவும் பரப்புரை ஊடகமாகவும் வன்னியில் இருந்தது. ]

Mejar-Siddu-121.jpg

சிட்டண்ணையின் இழப்பு மக்கள் மத்தியில் பேரிழப்பாகவே உணரப்பட்டது. சிட்டண்ணை ஏன் சண்டைக்குப் போனார் என்றுகூட விசனப்பட்டுக் கதைத்தனர் மக்கள்.

01.08.1997 அன்று ஜெயசிக்குறு நடவடிக்கைமூலம் முன்னேறி ஓமந்தையில் நிலைகொண்டிருந்த சிங்களப்படைகள் மீதான வலிந்த தாக்குலொன்று புலிகளால் தொடுக்கப்பட்டது. அந்நடவடிக்கை எதிர்பார்த்ததைப் போல் வெற்றியாக அமையவில்லை. அச்சமரில்தான் எங்கள் அன்புக்குரிய பாடகன் மேஜர் சிட்டு வீரச்சாவடைந்தார்.

“சோகப்பாட்டுக்கு சிட்டண்ணை” என்ற எடுமானம் பொதுவாக எல்லோரிடமுமுண்டு. அவர் பாடிய பாடல்கள் பெரும்பாலானவை அப்படித்தாம். கரும்புலிகள் நினைவுப்பாடல்கள் பல பாடியுள்ளார்.

தமிழீழ எழுச்சிப் பாடல்களில் எழுபதுக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடிய இம்மாவீரன் 01.08.1997 அன்று ஓமந்தை இராணுவ முகாம் மீதான தாக்குதலில் வீரச்சாவடைந்தார்.

இவர் பாடிய அனைத்துமே அருமையான பாடல்கள். என்றாலும் || உயிர்ப்பூ || படத்தில் இவர் பாடிய ” சின்னச் சின்னக் கண்ணில் ” என்ற பாடல் அனைவரையும் உருக்கியது. தனியே பாடலைக் கேட்பதைவிட படத்தோடு பார்த்தால் அப்பாடலின் முழு அனுபவத்தையும் பெற முடியும்.

அப்படத்தில் மூத்த பிள்ளை (நகுலன்) ஊர்ப்பெண்ணொருத்தியின் தண்ணீர்க்குடத்தை விளையாட்டுத் தனமாக உடைத்ததால் தந்தையால் வீட்டை விட்டுத் துரத்தப்படுகிறான். அவன் மீது அளவற்ற பாசம் கொண்ட தம்பி, தமையனை நினைத்து நொடித்துப்போகிறான். ஒரு குந்தில் இருந்து கொண்டு தமையன் (நகுலன்) தம்பியை நினைத்துப்பாடும் பாடல் தான் இது.

சிட்டுவின் குரல் அழகாக இழைந்தோடும். அந்தப் பாத்திரமாகவே மாறிவிட்ட தமையன், தம்பி இருவரின் நடிப்பும் பாடலுக்கு மேலும் மெருகூட்டும். அந்த நகுலன் பற்றியும் சிறிது சொல்ல வேண்டும்.

zzzzq-copy-600x291.jpg

அந்தப் படத்தின் கதையின்படி, எந்தப்பொறுப்புமற்றுச் சுற்றித் திரியும் மூத்தபிள்ளை தான் நகுலன். ஒரு நேரத்தில் உணர்ந்து கடற்றொழிலுக்குச் செல்கிறான். தன் தம்பியை சிங்களக் கடற்படையினரின் துப்பாக்கிக் குண்டுக்குப் பலிகொடுக்கிறான். பின்னொரு நாள் தந்தையையும் அவ்வாறே கண்ணெதிரில் பலிகொடுக்கிறான். பின் போராட்டத்திலிணைந்து ஒரு கட்டத்தில் கரும்புலியாக எதிரியின் கப்பலை மோதி அழிக்கிறான்.

…. இதுதான் அடிப்படைக்கதை. இதில் நகுலன் நடிக்கும்போதே போராளி. பின்னொரு நாளில் அப்படத்தில் நடந்தது போலவே சம்பவம் நடந்தது. ஆம் ‘உயிர்ப்பூ’ படத்தில் இறுதியாக கரும்புலியாக எதிரியின் கப்பலைத் தகர்ப்பதாய் நடித்த அதே நகுலன், புல்மோட்டைக் கடற்பரப்பில் எதிரியின் டோறாப் பீரங்கிப்படகொன்றைத் தாக்கி மூழ்கடித்து கடற்கரும்புலி மேஜர் நகுலனாக வீரச்சாவடைந்தான்.

போர்க்குயில்களாய்ப் பாடித்திரிந்த மேஜர் சிட்டு, மேஜர் மாதவன் போன்றோர் (இன்னும் பலர்) களத்திலேயே சமரிட்டு வீரச்சாவடைந்தனர். அப்படியே நகுலனும் நடிகனாகவே இருந்துவிடவில்லை. அதேபோல் குட்டிக்கண்ணனும் வீரத்தின் சுவடாகி தமிழினத்தின் காவலராகி ஒளிரவிட்டு வீசுகின்றனர்.

Mejar-Siddu-Kaanam-600x480.jpg

நீ மறைந்து போனாலும் உன் நினைவுகளை மறக்காமல் நாங்கள்…

- சிட்டு இணையத்திலிருந்து….

|| புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் ||

  • Like 1
Link to comment
Share on other sites

மாவீரருக்கு வீரவணக்கம்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரருக்கு வீரவணக்கம்..! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிட்டுவின் அநேக பாடல்களின் ரசிகன் நான். தமிழீழ வானொலியிலும்.. புலிகளின் குரலிலும் இவரின் பாடல்களை விரும்பிக் கேட்பேன்.

 

http://youtu.be/aMKVXB9YeKQ

 

வீரவணக்கம்.


Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரருக்கு வீரவணக்கம்..! 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றிகள், அருள் மொழி இசைவழுதி!

 

என்றோ ஒருநாள், கள உறவு சாந்தியின் வேண்டுகோளின் போது, மாவீரன் சிட்டுக்காக, நான் எழுதிய கவிதை ஒன்று,'தேசக்காற்று' இணையத்தளத்தில் வந்திருப்பதை, உங்கள் இணைப்பைப் பார்த்துதான் தெரிந்து கொண்டேன்! இதை, யாழ் களத்து உறவுகளுடன், பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.

 

மீண்டுமொரு முறை, அந்த இசைவீரனுக்கு, எனது வீர வணக்கங்கள்! 

Link to comment
Share on other sites

மேஜர் சிட்டு 16ம் ஆண்டு நினைவோடு நாங்கள்

 
annalingam04.jpg

காற்றாய் வருகிறாய்

தேசக்கனலாய் திரிகிறாய்…!

காற்றலையின் இளையெங்கும்

கவிதையாய் வாழ்கிறாய்…!

ஊற்றாய் இசையின் மூச்சாய்

உலகெங்கும் உலவித் திரிகிறாய்….!

எங்கள் காதுகளில் உன் கானம்

தீமூட்டி எழுவிக்கும் தீர்க்கமாய் ஒலிக்கிறாய்…..!

‘மேஜர் சிட்டுவாய்’

தமிழ் வாழும் உலகெங்கும்

தமிழிசை வாழும் திசையெங்கும்

தமிழர் வாழும் வரை வாழ்வாய்…..!

அரும்பு மீசைக்கனவறுத்து

ஆழ்மனக் காதல் நினைவறுத்து

ஈழக்காதல் இதயத்தில் சுமந்து

இலட்சியக்கனவோடு போன புலியே….!

வருவாயொரு பொழுது மீண்டும்

பாடியும் பகிடிகள் விட்டும்

பல கதைகள் பேசியும்

கரைந்த பொழுதொன்றை எதிர்பார்த்து….!

இன்றுன் நினைவுகள் கரையும் 16ம் ஆண்டு

மீளும் நினைவோடு கரைகிறோம்

உன் தோழமைகள் நாங்கள்

உன்னை மீளவும் நினைவேற்றி….!

01.08.2013

– சாந்தி யேர்மனி –

http://chiddu.com/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9C%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-16%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9/#more-148

http://mullaimann.blogspot.de/2013/08/16.html

 

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.