Jump to content

30ம் ஆண்டு வீரவணக்க நாள் நினைவில் .....!


Recommended Posts

Lt-seelan-and-v.ananth-600x445.jpg

1983 ஜூலை 15 அன்று துரோகி ஒருவனின் காட்டிகொடுப்பால் மீசாளைக் கிராமத்தில் சிறிலங்கா கூலிப்படைகளால் சூற்றிவளைக்கப்பட்டு தாக்குதல் தொடர்ந்த வேளை நெஞ்சில் குண்டுபாய்ந்து காயமுற எதிரியிடம் தான் உயிருடன் பிடிபடக்கூடாது எனவும்  ” ஜி 3 ” துப்பாக்கியை பாசறையில் ஒப்படைக்கும் படியும் தன்னை சூட்டு செல்லுமாறு கட்டளை பிறப்பித்த லெப்ரினன் சீலனின் அவன் வழி அவன் தோழன் வீரவேங்கை ஆனந்தின் நெஞ்சம் விட்டு அகலாத காலப்பெருநேடியில் கலந்து தமிழீழ நெஞ்சங்கள் யாவும் நிறைந்த உன்னதர்களின் 30 ம் ஆண்டு வீரவணக்க நினைவில்.

Lep-seelan-copy-600x849.jpg

Veeravengkai-Aananth-600x849.jpg

ggg.jpg

தாயக விடுதலைப்போரில் தங்களை ஆகுதியாக்கிய மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!      

” புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் “

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீரவேங்கைகளுக்கு வீரவணக்கம்!

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக

தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த 

இந்த வீரவேங்கைக்கு

எனது  வீரவணக்கங்கள் !!!

 
இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ

அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்

என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு, வீர வணக்கங்கள்.

Link to comment
Share on other sites

லெப்.சாள்ஸ்அன்ரனி (சீலன்) முப்பதாவது நினைவுதினம்! – ச.ச.முத்து

 

தமிழீழவிடுதலைப்புலிகள் அமைப்பின் முதலாவது தாக்குதற்பிரிவு பொறுப்பாளனாக இருந்த லெப்.சாள்ஸ்அன்ரனி(சீலன்) முப்பதாவது நினைவுதினம் 15.07அன்று வருகின்றது.

அவனின் நினைவு சுமந்த ஆக்கம் இது

சிலவேளைகளில் மௌனத்தைப்போல ஆழமான மொழி வேறெதுவும் இல்லாமல் இருக்கும். ஆயிரம் வார்த்தைகளில் சொல்லப்படும் உணர்வை ஒருசில நிமிட மௌனம் உயிர்ப்பாக வெளிப்படுத்திவிடும்.

இன்றைக்கு முப்பது வருடங்களுக்கு முன்னர் 1983ம்ஆண்டின் இதே யூலை மாதத்து 15ம் நாளில் நீர்வேலியில் ஒருஆசிரியரின் வீட்டில் அமைந்திருந்த தங்குமிடம் ஒன்றின் அறையில் அமர்ந்திருந்த தேசிய தலைவருக்கும் சில போராளிகளுக்கும் முன்னால் இரத்தம் வடியும் கை காயத்துடன் நின்றபடி ‘அருணா’ சொன்னதைக் கேட்டதும் சோகம் இழப்பு பிரிவு கவலை என்பவற்றைவிட நீண்ட மௌனமே நிலவியது. உயிரை உலுக்கும் மௌனமாக அது இருந்தது.

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தாக்குதல் பிரிவுத் தளபதி ‘சீலன் வீரமரணம்’. எல்லோருடனும் அன்பாக நட்புடன் பழகும் சீலனின் மரணத்தை கேள்விப்பட்ட அந்தக் கணத்தினதும் அதன்பின் நீண்ட நிமிடங்களான மௌனமுமே அவனின் மரணத்தின் வலியை காட்டிநின்றது.

சீலன்.பார்க்கும் முதல்க்கணத்திலேயே மனதுக்கு அண்மித்து வரக்கூடிய பேச்சும் பழக்கமும் தோற்றமும் அவனுக்கு. எழுபதுகளின் இறுதியில் திருமலையில் இருந்து இயக்கத்துக்கு வந்தவன். ஆனால் சீலன் இயக்கத்துக்கு வர முன்னரேயே அவனின் சிங்களதேசக்கொடி எரிப்பு பற்றிய நுணுக்கமான திட்டமிடலும்இ வீரமும் அமைப்புக்குள் அதிகமாக பேசப்பட்டதாக இருந்தது.

ஆதலால் சீலன் இயக்கத்துக்கு வரும்போதே அதிகம் அறியப்பட்டவனாகவே வந்து சேர்ந்தான். திருமலை பாடசாலையில் ஏற்றப்பட்ட சிங்களதேசகொடிக்குள் ‘பொசுபரசை’ எப்படி வைத்தான்’ என்பதே அவனை முதலில் பார்த்து பழகும் இயக்க உறுப்பினர்கள் கேட்கும் கேள்வியாக இருந்தது. அவனும் சலிப்பு இல்லாமல் எல்லோருக்கும் அழகாக சொல்லியும் காட்டுவான்.சீலனின் உடல்மொழி மிகவும் அற்புதமானது.அதுவே ஆயிரம் கதை சொல்லும்.

இயல்பாகவே சீலனுக்குள் உறுதியான இலட்சியப்பற்றும் மக்கள் மீதான புரிதலும் நிறைந்தே காணப்பட்டது. அவன் தனது பாதைபற்றியும் அதனிடையேயான பெரும் வலிகள் பற்றியும் மிகத்தெளிவாக புரிந்தவனாகவே இருந்தான்.

இதைவிட வேறு பாதை எதுவும் இல்லை என்பதிலும் அவன் குழப்பமின்றியே இருந்தான்.

அவன் எந்தப்பொழுதிலும் அறைக்குள் சுருண்டு கிடந்ததையோ விரக்தியுடன் பேசாமல் இருந்ததையோ எவருமே பார்த்திருக்க முடியாது. செயல் மட்டுமே அறிந்த ஒரு மறவன் அவன். அதிகாலை எழுந்து முதல் இரவு படுக்கபோகும் வரைக்கும் விடுதலைக்கான ஏதாவது ஒரு வேலைத்திட்டம் சம்பந்தமாக அசைந்துகொண்டே இருந்தவன்.

ஒன்றில் தாக்குதலுக்கான தரவுகள் எடுக்கும் பணியில் அலைவான். இல்லையென்றால் தாக்குதலில் எடுத்த ஆயுதத்தை பாதுகாப்பான இடத்தில் பாதுகாப்பாக வைப்பதில் திரிவான். அதுவும் இல்லையென்றால் யாராவது ஒருவருடன் விடுதலைப்போராட்டத்தின் அவசியம் பற்றி பேசிக்கொண்டு நிற்பான். அவனின் பேச்சும் முழுமூச்சும் தாயக விடுதலையே என்று இருந்தது.

இரண்டு முறை பெரிய காயங்களை அவன் போராட்ட வாழ்வில் பெற்று சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்த காலத்தைத் தவிர்ந்த அனைத்து தாக்குதல்களிலும் தலைமையாளனாக நின்றவன் சீலன். விடுதலைப் போராட்டத்தின் வளைவுகளில் இருந்து வேகம் பெறவும் தடைகளை நீக்கவும் பின்னர் வந்த காலங்களில் தலைவரால் அறிமுகம் செய்யப்பட்ட ‘தற்கொடை’ முறையை முதலில் அமைப்புக்குள் ஒரு திட்டமாக வெளிப்படுத்தியவன் லெப்.சீலன் ஆகும்.

1982ம் ஆண்டில் சென்னையில் தலைவருக்கும் உமாமகேஸ்வரனுக்குமான பாண்டிபஜார் துப்பாக்கி மோதலில் தலைவர் கைதுசெய்யப்பட்டு சென்னை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். விடுதலைப்புலிகளின் தலைவரும் மற்றவர்களும் கைது

செய்யப்பட்டு சிறைவைக்கப்பட்டது அறிந்து அந்நேரத்து சிங்கள சனாதிபதி ஜெயவர்த்தனா தனது சகோதரனை இந்தியாவுக்கு அனுப்பி போராளிகளை சிறீலங்காவுக்கு நாடு கடத்தும் கோரிக்கையை முன்வைத்தார். இந்தியாவும் அதை பரிசீலிப்பதாக சொல்லி இருந்தநேரம் அது. அந்த நேரம் மதுரையில் இருந்த சீலன் சிறையில் இருந்த தலைவருக்கு ஒரு கடிதம் எழுதினான்.

‘தலைவரை சிறீலங்காவுக்கு அனுப்பும் முடிவை இந்தியா எடுத்தால் அதை எதிர்த்து கடிதங்களையும்இ துண்டுப் பிரசுரங்களையும் எடுத்துச்சென்று சென்னையின் மிக உயர்ந்த கட்டிடமான ‘எல்.ஐ.சி’ க்கு மேல் இருந்து குதிக்ப்போவதாக அதில் குறிப்பிட்டு இருந்தான். போராட்டத்தை தேக்கநிலையில் இருந்து மேல் தள்ளும் கரும்புலிகளின் போர்முறை போலவே முதலில் இது சீலனால் வெளிப்பட்டது.

தமிழர்கள் பலமற்று இருப்பதால்தான் எதிரி எம்மீது கொடும் வெறியாட்டத்தை ஏவிவிடுகிறான். பலமான இனமாக எமது இனம் மாறவேண்டுமானால் ஆயுதங்களை எதிரியிடம் இருந்து பறிக்கவேண்டும் என்று பாடுபட்டவன்.

பொன்னாலை பாலத்தில் கடற்படை வாகன அணிமீதான தாக்குதல் முயற்சி

நெல்லியடி சந்தியில் சிறீலங்காகாவல்துறை வாகனம்மீது தாக்குதல் சாவகச்சேரிகாவல் நிலையம் மீதான தாக்குதலும் தகர்ப்பும் முதன் முதலில் சிங்கள ராணுவம் மீது விடுதலைப்புலிகள் நடாத்திய தாக்குதல் கந்தர்மடம் வாக்குசாவடி மீதான தாக்குதலும் ராணுவ அழிப்பும்… என்று மிகநீளமானது அவனின் களவரிசை.

தாக்குதலுக்கான அனைத்து வளங்களையும் அவனே முன்னின்று செயற்படுத்துவான். தாக்குதலுக்கான நாள் முடிவானது முதல் நித்திரை இல்லாமலும் ஓய்வு இல்லாமலும் சீலனும் அவனின் சைக்கிளும் இயங்கிக்கொண்டே இருக்கும். எல்லா நடவடிக்கைகளிலும் ஒப்புவமை இல்லாத வீரத்தையும் நுண்அறிவையும் வேகத்தையும் காட்டிவன் சீலன். எமது மக்கள் அனைவருக்கும் போராட்டத்தின் அனைத்து விளக்கங்களும் கொடுக்கப்படவேண்டும் என்பதில் மிகவும் விடாப்பிடியாக செயற்பட்டவன்.

சிங்களபடைகளால் மிகவும் தேடப்பட்டவனாக அவன் விளங்கிய காலத்தில்கூட தினமும் பல்கலைகழகத்தினுள் சென்று அங்கும் யாருனாவது போராட்ட நடைமுறை பற்றியும் நகர்வு பற்றியும் கதைத்துக்கொண்டிருந்தவன் சீலன். அவன் மரணிப்பதற்கு ஆறு ஏழு மாதங்களுக்கு முன்னர் தலைவருக்கு இந்தியாவுக்கு எழுதிய கடிதத்தில் ‘போராளிகளை பார்த்து ஒதுங்கிய மக்கள் எல்லோரும் இப்போது போராளிகளாக மாறிவருகின்றனர்’ என்று எழுதிய கடிதத்தில் எமது மக்களின் தெளிவுபற்றிய அவனின் பார்வை புலப்படுகின்றது.

அவனின் போராட்ட வாழ்வில் அவன் மிகவும் அலைக்கழிந்தது அறைகள் எடுப்பதற்காகத்தான். தேடப்படும் போராளிகள் தங்கி இருந்து போராட்டத்தை முன்னெடுப்பதற்கு ஏதாவது தங்குமிடம் தேவை. வீடுகளை வாடகைக்கு எடுக்க முடியாத பொருளாதார நிலை அமைப்புக்கு அப்போது. அறைகள்தான் எடுக்க முடியும். அதுவும் பல்கலைக்கழகத்தில் படிப்பதுபோன்றுஇ அல்லது வேறு படிப்பு படிப்பது போன்றுதான் எடுக்கக்கூடிய நிலை. எடுக்கும் அறையில் எந்த நேரமும் இருந்தால் வீட்டு உரிமையாளனுக்கு சந்தேகம் வரும். வேறு யாரும் அடிக்கடி வந்து போனாலும் பிரச்சனைதான். இதனால் எந்த இடத்திலும் தொடர்ச்சியாக நீண்டகாலம் தங்கி இருக்க முடிந்ததில்லை.

அப்பையா அண்ணை இயக்கத்துக்கு வந்த பின்னர் அவரை ‘சித்தப்பா’ பெரியப்பா என்று உறவுசொல்லி அறைகளை வாடைக்கு எடுக்க முடிந்தது. இப்படித்தான் ஒருமுறை தேங்காய் வியாபாரம் செய்பவர்கள் என்று சொல்லி அரியாலைப்பகுதியில் ஒரு வீட்டின் அறைகளை வாடகைக்கு எடுத்திருந்தார்கள். ஒரு சிறிய பச்சைநிற வாகனத்தில் தேங்காய்களை வாங்கி உரித்து சந்தையில் விற்பவர்கள்போல சீலனும் அப்பையா அண்ணையும் சங்கரும் வேறும் ஓரிரண்டு போராளிகளும் அங்கு இருந்தார்கள்.சீமேந்துதொழிற்சாலையில் வேலைசெய்பவர்கள்போல பாடசாலைஆசிரியர்போல பல்கலைகழகமாணவன்போல என்று எத்தனை எத்தனை முகங்களுடன் இந்த விடுதலைப்போராட்டகளத்தில் கரந்துறைந்து திரிந்தான் சீலனின் தனித்த இயல்புகளில் மிகச்சிறப்பானது என்னவென்றால் எதையும் ஆழமாக முழு ஈடுபாட்டுடன் செய்வது ஆகும். இதனை அவன் தனது தாக்குதல்களின்போது மட்டும் இல்லாமல் எல்லாவிடங்களிலும் வெளிப்படுத்தியவன்.

ஒருமுறை தாக்குதல் ஒன்றின் போது மக்களுக்கு கொடுப்பட இருந்த துண்டுப்பிரசுரத்தை வடிவமைக்கவும் அதில்வரும் வசனங்களை தெரிவுசெய்வதிலும் மிக நீண்டபொழுதுகளை செலவழித்தவன். சிங்கள ராணுவவீரனுக்கு ஒரு விடுதலைப்புலி வீரனின் கடிதம் துண்டுப்பிரசுரம் முதன்முதலில் எம்மால் வடிவமைக்கப்பட்டபோது அந்த துண்’டுபிரசுரத்தின் அநேகமான வசனங்கள் சீலனின் தெரிவாகவே இருந்தன.எதனையும் தெளிவாக இலகுவில் புரியக்கூடியதாக சொல்லவோ எழுதவோ வேண்டும் என்பதே சீலனின் முக்கிய கருத்தாகும். மக்களை தெளிவானவர்கள் ஆக்கவேண்டும் என்று எப்போதும் சொல்லிக்கொண்டு இருப்பான். நிறைய புத்தகங்களை வாசித்தான். அவனின் இருப்பிடம் எப்போதும் புத்தகங்களால் நிறைந்தே காணப்பட்டன.

சில வேளைகளில் ஆயுத நடவடிக்கைகளின்போதும் தாக்குதல் நடவடிக்கைகளின் போதும்கூட சீலன் அங்கு நிற்கும் பொதுமக்களுக்கு போராட்ட நோக்கம் பற்றியும் விடுதலைப்புலிகள் பற்றியும் உரத்தகுரலில் கூறத்தொடங்கிவிடுவான். ஒரு கையில் இயந்திரத் துப்பாக்கியுடன் நின்றுகொண்டு அவன் சொல்லும்போது மக்களும் ஆர்வமாக கேட்டார்கள். ஒருமுறை பருத்தித்துறையில் 1983ம் ஆண்டுப்பகுதியில் சிங்களகட்சி ஒன்றின் பொறுப்பாளர் மீதான நடவடிக்கையின்போது அருகில் இருந்த பொதுமகன் ஒருவரும் தவறுதலாக காயமடைந்தபோது நடுத்தெருவில் வீழ்ந்துகிடந்த அந்த பொதுமகனிடம் பல நூறு மக்கள் பார்த்துநிற்க சீலன் மன்னிப்புக்கேட்டதுடன் தனக்கும் போராட்டத்தின்போது இப்படியாக தவறுதலான வெடிக்காயங்கள் ஏற்பட்டன என்று தனது காயம்பட்ட நெஞ்சை திறந்துகாட்டி விளக்கமும் சொன்னான்.

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் ஒவ்வொரு சிறிய அசைவையும் வளர்ச்சியையும் அவன் மிக அவதானமாக திட்டமிட்டு செயற்படுத்தினான். தலைவருக்கு அடுத்தபடியாக இந்த அமைப்பின் வளர்ச்சியை செப்படினிட்டவன் சீலன் ஆகும். அந்த இறுதி நேரத்திலும் தமிழினத்தின் விடுதலைக்கான ஆயுதம் எதிரியின் கையில் வீழ்ந்துவிடக்கூடாது என்பதற்காக ‘தன்னை சுட்டுவிட்டு ஆயுதத்துடன் தப்பும்படி’ அருணாவுக்கு உத்தரவிட்டு வீரமரணத்தை மிகத்தெளிவுடன் ஏற்றுக்கொண்டவன்.

இன்றைய பொழுதும் அப்போது சீலன் போராடியகாலத்தைப் போன்றே எதிரியால் முழுதுமாக சூழப்பட்டு உள்ளது. அன்றையபொழுதைவிட குழப்பமானதாக இன்றையநிலை இருக்கின்றது. ஆனாலும் சீலன் இப்போது இருந்தால் அன்றைய நாட்களைப் போலவே அதே உறுதியுடனும் தெளிவுடனும் எல்லோருக்கும் வழிகாட்டி முன்னுக்கு சென்றுகொண்டிருப்பான்.

இன்றுவரை சீலனின் ஏதாவதுஒரு நினைவு இந்த போராட்டத்தின் ஏதாவது ஒரு அசைவில் இருந்துகொண்டே இருக்கிறது. ஏனென்றால் அவன் மிக ஆழமாகவும் உண்மையாகவும் இந்த தாயக விடுதலையை நேசித்தவன். அவனுடைய விடுதலை மீதான விருப்புத்தான் அவனை ஓய்வில்லாமல் போராடவைத்தது. அவனுக்கு நாங்கள் ஆயிரம் ஞாபகக்குறிப்புகளை பெரும் புத்தகங்களாக எழுதலாம். அதைவிடசெறிவான கவிதைகளை வடித்து அவனின் தியாகத்தை போற்றலாம்.

இவை எல்லாவற்றையும்விட தேசியத் தலைவர் தனது முதன் முதலான பத்திரிகைப் பேட்டியான ‘SUNDAY’  க்கு 1984ம் ஆண்டில் கொடுத்த பேட்டியில் 1983ம் ஆண்டு யூலை 23ம் திகதி திருநெல்வேலியில் சிங்களராணுவ அணி மீது தொடுக்கப்பட்ட தாக்குலானது சீலனது மரணத்துக்கு பதிலடியா? என்று கேட்கப்பட்டபோது மிகத்தெளிவாக தலைவர் கூறுகிறார்.

‘எங்களைப் பொறுத்தவரையில் சார்ல்ஸ் அன்ரனி (சீலன்) போன்ற உன்னதப் புரட்சிவாதியின் விடுதலை வீரனின் உயிருக்கு ஒருபோதும் பன்னிரண்டு ராணுவ வீரர்களின் உயிர்கள் ஒருபோதும் ஈடாகாது’ என்று. எக்காலத்திலும் ஈடும் இணையும் இல்லா பெரும் போராளியாகவே சீலன் திகழுவான். எங்களின் மக்களுக்கு சுதந்திரவாழ்வை பெற்றுத்தரப் போராடிய அந்த வீரன் தனது பெருவிருப்ப பாடலாக எந்நேரமும் பாடிய பாடலைப்போன்றே

அவனும்..

‘அதோ அந்த பறவை போல…

திருமலையின் ஒரு வறிய குடும்பத்தில் இருந்து சிறகுவிரித்து தாயகவிடுதலைக்காக களமாடி மீசாலை-கச்சாய் வெளியில் மரணித்த அந்த விடுதலைப் பறவையின் சிறகசைப்புகள் இன்றும் ஏதோ ஒரு வடிவில் அதிர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. தாயகம் மீட்கப்படும்வரை அந்த பறவை ஓயாது.

அதோ அந்தப் பறவைபோல பாடவேண்டும்

இதோ இந்த அலைகள் போல ஆடவேண்டும்

ஒரே வானிலே ஒரே மண்ணிலே

ஒரே கீதம் உரிமைகீதம் பாடுவோம்’

ச.ச.முத்து

www.irruppu.com

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீரவணக்கம்!

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.