மைத்திரேயி

மைத்திரேயியின் சமையல்கட்டு 05

Recommended Posts

தயிர் சாதம்

Thayir%20Saadham.jpg

என்ன வேணும்???

அரிசி (பஸ்மதி அரிசி ) 2கப் 3 பேருக்கு .

மோர்மிளகாய் 4 .

சின்னவெங்காயம் 6 .

கடுகு தாளிக்க .

இஞ்சி 1 துண்டு .

கஜூ 10 .

உப்பு தேவையான அளவு .

நல்லெண்ணை தேவையான அளவு .

கொத்தமல்லி இலை தேவையான அளவு .

தயிர் ( யோக்கூர்ட் ) 125 கிறாம் , 4 பெட்டி .

கூட்டல் :

ஒரு பானையிலை தண்ணியும் உப்பும் போட்டு தண்ணியை கொதிக்க விடுங்கோ . தண்ணி கொதிச்ச உடனை பஸ்மதி அரிசியை கழுவி போடுங்கோ . சோறு அரை பதத்திலை வெந்த உடனை வடிச்சு இறக்கி அதை ஆற விடுங்கோ . சின்ன வெங்காயம் , இஞ்சியை குறுணியாய் வெட்டுங்கோ . ஒரு தாச்சியை எடுத்து அதிலை கொஞ்சம் நல்லெண்ணை விட்டு , மோர்மிளகாய் ***, கஜூ எல்லாத்தையும் பிறிம்பாய் பொரிச்சு எடுங்கோ . மிஞ்சின எண்ணையிலை கடுகை வெடிக்க விட்டு , ஆறின சோறையும் , பொரிச்ச மோர் மிளகாய் , கஜூவையும் , சின்ன வெங்காயம் , இஞ்சி எல்லாத்தையும் போட்டு ஒரு அகப்பையாலை கிண்டுங்கோ . இப்ப நீங்கள் எரியிற நெருப்பை நிப்பாட்டுங்கோ . தயிரையும் ( யோர்கூர்ட் ) போட்டு நல்லாய் கிளறுங்கோ . அடுப்பாலை இறக்கின உடனை கொத்தமல்லி இலையை நுள்ளி தயிர்சாதத்துக்கு மேலை போடுங்கோ . இவ்வளவு தான் .

பி கு : இது வேலைக்கு போட்டுவாற பொம்பிளையளுக்கு ஒரு குறைஞ்சநேரத்திலை செய்யிற சமயல் முறை . இப்ப வெய்யில் தொடங்கினதாலை , உடம்புக்கு சூட்டை குறைக்கிற சாப்பாடு . இதோடை கொஞ்சம் ஊறுகாய் ஏதாவது ஒரு சிப்ஸ் சேத்து சாப்பிடுங்கோ .
 
*** மோர்மிளகாயை பொரிச்சு சின்னத் துண்டாய் நுள்ளி போட்டு கலவுங்கோ .
 
மைத்திரேயி
16/06/2013

Edited by மைத்திரேயி
  • Like 3

Share this post

Link to post
Share on other sites

அபாரமான அயிட்டம் ! நன்றி  மைத்ரேயி !!

Share this post

Link to post
Share on other sites

செய்முறைக்கு நன்றி, மைதிரேயி. இந்திய நண்பர்களின் வீட்டில் சாப்பிட்டுள்ளேன். சுவையோ சுவை. 

Share this post

Link to post
Share on other sites

இணைப்பிற்கு நன்றிகள் ................ :) 

அப்படியே மாமிசம், மச்சம் போட்டு தயிர்சாதத்தை செய்ய முடியாதா ................. :D 

Share this post

Link to post
Share on other sites

இணைப்பிற்கு நன்றிகள் ................ :) 

அப்படியே மாமிசம், மச்சம் போட்டு தயிர்சாதத்தை செய்ய முடியாதா ................. :D 

ஏனப்பு நீங்க அசைவமோ ? :lol:

தயிர்சாதம் செய்முறை தந்த மைத்திரேயி அக்காவுக்கு நன்றிகள். நாளைக்கு உங்கள் செய்முறை. ஏதும் பிழைச்சால் பொறுப்பு நான்தான். :D

Share this post

Link to post
Share on other sites

இணைப்பிற்கு நன்றிகள் ................ :) 

அப்படியே மாமிசம், மச்சம் போட்டு தயிர்சாதத்தை செய்ய முடியாதா ................. :D 

செய்யலாம், அப்புறம் அது "பசு சாதம்" ஆயிடும்.  தயிரும் அதனுடையதுதானே  அதனால் பரவாயில்லை !

Share this post

Link to post
Share on other sites

அபாரமான அயிட்டம் ! நன்றி  மைத்ரேயி !!

உங்கடை அவாவை கொண்டு செய்து சாப்பிடுங்கோ உடம்புக்கு நல்லது . உங்கடை மஃபிளர் இப்பவும் அவர் வைச்சிருக்கிறார் .

  • Like 1

Share this post

Link to post
Share on other sites

வணக்கம், மைத்திரேயி!

உங்களைக் கொஞ்சக் காலம், காணேல்லை எண்டு யோசிச்சுக்கொண்டிருந்த நேரத்தில், உங்களைச் சோத்துப்பானையோட கண்டது சந்தோசம்!

இதுகளெல்லாம் செய்து பாக்க ஆசை தான்!

எண்டாலும் இந்தச் சோறு ஒரு நாளும் நான் நினைக்கிற பதத்தில வாறது குறைவு! :o

எங்கட ஊர் அரிசியளைப் பாவிக்காமல், தாய்லாந்து, வியட்னாம் போன்ற இடங்களில் விளையும் அரிசியைப் பாவித்துப் பார்க்கிறேன். அவை கொஞ்சம், குழைவுத் தன்மை கூடியவை!

Share this post

Link to post
Share on other sites

உங்கடை அவாவை கொண்டு செய்து சாப்பிடுங்கோ உடம்புக்கு நல்லது . உங்கடை மஃபிளர் இப்பவும் அவர் வைச்சிருக்கிறார் .

நன்றி............

நானும் தான்...

மறக்கமுடியுமே..... :icon_idea:

வந்த அத்தனை பேருக்குமல்லோ

தந்தவர்  சுவி அண்ணா......

  • Like 1

Share this post

Link to post
Share on other sites

நன்றி மைத்திரேயி. நான் தயிர் சாதம் இன்னும் சமைக்கவில்லை, நல்லாய்த் தான் இருக்கும் போலை. சமைத்துப் பார்த்துவிட்டு எழுதுகின்றேன்.

Share this post

Link to post
Share on other sites

நன்றி............

நானும் தான்...

மறக்கமுடியுமே..... :icon_idea:

வந்த அத்தனை பேருக்குமல்லோ

தந்தவர்  சுவி அண்ணா......

உங்களது கோப்பி பார்ட்டிக்கு, ஆண்கள் மட்டும் தான்... வந்தவர்கள் என்று இதுவரை நினைத்திருந்தேன் விசுகு.

Share this post

Link to post
Share on other sites

என்னிடமும் இன்னும் பத்திரமாக இருக்கு சுவி அண்ணா ஞாபகமாகா..நல்ல மனிதர்களை சாகும்வரை மறக்க முடியாது..

Share this post

Link to post
Share on other sites

என்னிடமும் இன்னும் பத்திரமாக இருக்கு சுவி அண்ணா ஞாபகமாகா..நல்ல மனிதர்களை சாகும்வரை மறக்க முடியாது..

நான் 

நீங்கள் 

மற்றும்  கோ

இங்கு உறுதி  செய்யப்பட்டுள்ளது

மற்றது சாத்திரி

இணையவன்.

உங்களது கோப்பி பார்ட்டிக்கு, ஆண்கள் மட்டும் தான்... வந்தவர்கள் என்று இதுவரை நினைத்திருந்தேன் விசுகு.

சிறி

நீங்கள் இப்படி எம்மில் சந்தேகப்படக்கூடாது

மைத்திரேயி அவர் என்று குறிப்பிட்டது கோவை  :icon_idea:

  • Like 1

Share this post

Link to post
Share on other sites

அட  கோவின் கோதையா  மைத்ரேயி , 

குழப்பத்தைத் தீர்த்தத்துக்கு நன்றி விசுகு ! :D

அப்பவும்  யோசிச்சன் :  இணையவனும் , சுபேஸ்சும்  கன்னிக் காங்கேயன் காளைகள் .

திரு, திருமதி விசுவைத் தெரியும் .

திருமதி சாத்திரி  கொஞ்சம் டவுட்டா  இருந்தது .

திருமதி கோ . நோ டவுட் .

சபாஸ் சுவி யு ஆர் 006. :icon_idea:

  • Like 1

Share this post

Link to post
Share on other sites

செய்முறைக்கு நன்றி, மைதிரேயி. இந்திய நண்பர்களின் வீட்டில் சாப்பிட்டுள்ளேன். சுவையோ சுவை. 

இதுதமிழ்நாட்டு ஆக்களின்ரை சாப்பாட்டு முறைதான் . ஆனால் எங்கடையாக்களும் இப்ப செய்யத்தொடங்கினம் .அதாலைதான் இந்த செய்முறையை தந்தன் . கஸ்ரப்பட்ட ஆக்களின்ரை சாப்பாட்டுமுறை எண்டாலும் வெய்யிலுக்கு இந்த சாப்பாடு  நல்லாயிருக்கும் . உங்கடை கருத்துக்கு நன்றி .

Share this post

Link to post
Share on other sites

இணைப்பிற்கு நன்றிகள் ................ :) 

அப்படியே மாமிசம், மச்சம் போட்டு தயிர்சாதத்தை செய்ய முடியாதா ................. :D 

நீங்கள் மியூசிக் போடறனிங்கள் எண்டு வாசிச்சன் . ஒரு ராகம் வரவேணும் எண்டு நினைச்சு " ஸமகசரநி " எண்டு அடிக்கிறதுக்கு பதிலாய் " ஸாகமரசநீ " எண்டு கீ போர்ட்டிலை அடிச்சால் நீங்கள் நினைச்ச ராகம் வருமோ ?? உங்கடை வரவுக்கு நன்றி சொல்லுறன் :) .

  • Like 1

Share this post

Link to post
Share on other sites

இதைப் பார்க்க வெண்பொங்கல் போலலோ இருக்கு. ஏனெனில் வெங்காயத்தைத் தாளித்துச் செய்யும்போது இப்படி வெள்ளை வெளேர் என வராதே மைத்திரேயி.

Share this post

Link to post
Share on other sites

வணக்கம், மைத்திரேயி!

உங்களைக் கொஞ்சக் காலம், காணேல்லை எண்டு யோசிச்சுக்கொண்டிருந்த நேரத்தில், உங்களைச் சோத்துப்பானையோட கண்டது சந்தோசம்!

இதுகளெல்லாம் செய்து பாக்க ஆசை தான்!

எண்டாலும் இந்தச் சோறு ஒரு நாளும் நான் நினைக்கிற பதத்தில வாறது குறைவு! :o

எங்கட ஊர் அரிசியளைப் பாவிக்காமல், தாய்லாந்து, வியட்னாம் போன்ற இடங்களில் விளையும் அரிசியைப் பாவித்துப் பார்க்கிறேன். அவை கொஞ்சம், குழைவுத் தன்மை கூடியவை!

நீங்கள் எந்த முறையிலை சோறு போடுறியள் ??? றைஸ் குக்கறிலை போட்டால் நீங்கள் நினைச்ச பதத்திலை வாறது குறைவு . நான் எப்பவும் பானையிலை தண்ணியை கொதிக்கவிட்டு அரிசி போடிறனான் ( ஊரிலை அரிசி போடிறது மாதிரி ) .எந்த அரிசி சோறுக்கும்  பதம் ஒருக்காலும் பிழைக்காது . நீங்களும் செய்து பாருங்கோ . நீங்கள் கருத்து சொன்னதுக்கு நன்றி சொல்லிறன் .

Share this post

Link to post
Share on other sites

இந்த தயிர் சாதத்துக்கு கத்தரிக்காய் அல்லது வெண்டிக்காயை பொரிச்சுப்போட்டு கலக்கினால் நன்றாக இருக்குமா? ஏன் என்றால் வெறும் சோறையும் தயிரையும் சாப்பிடுறதை நினைக்க ஒருமாதிரி இருக்கு.

சமையல் குறிப்புக்கு நன்றி.  :)

அதை குழை சாதம் எண்டு சொல்லுறவை .

Share this post

Link to post
Share on other sites