Jump to content

தமிழக மக்கள் தொகை எவ்வளவு?: கணக்கெடுப்பு வெளீயீடு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை: தமிழக மக்கள் தொகை எவ்வளவு என்பது குறித்த கணக்கெடுப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த 2011-ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணகெடுப்பு இன்று வெளியிடப்பட்டது அதன்படி , தமிழகத்தின் மொத்த மக்கள் தொகை 7 கோடியே 21 லட்சத்து 47 ஆயிரத்து 30 ஆகும்.

இதில் ஆண்களின் எண்ணிக்கை 3 கோடியே 61 லட்சத்து 37 ஆயிரத்து 975. பெண்கள் எண்ணிக்கை 3 கோடியே 60 லட்சத்து 9 ஆயிரத்து 55.ஆகும்.

 

 

கடந்த 10 ஆண்டுகளில்  தமிழக மக்கள் தொகை 97 லட்சம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

http://news.vikatan.com/article.php?module=news&aid=15547

 

 

Link to comment
Share on other sites

அது ..............பாஸ் சூப்பர்  :D 

 

Link to comment
Share on other sites

ம்ம்....மிக அருகில் 7 கோடி தமிழ் மக்கள் இருந்தும், கொத்து கொத்தாய் எம் சனம் சிதைபட்டு வதைபட்டு செத்து இருக்கு....  இனம் என்ற அடையாளத்துக்குள் அடங்க மறுத்து, ஐக்கியபடுத்தபட முடியாத இனமாகத்தான் இன்னும் தமிழ் இனம் இருக்கின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒழுங்கா கரண்ட குடுங்கப்பா

 

 

பாஸ்,

வெவெரமா சொல்ல வேணாமா?

 

கரண்ட ஒழுங்கா கொடுத்தா, பெண்ணுங்க எல்லாரும் சீரியல் பார்க்க ஒக்காத்துருவாங்க.

 

அழுது, விம்மும் தாய்குலத்தை பார்த்து நாம்மாளு மூடிகிட்டு படுத்துருவாரு.

 

அப்புறம் என்ன, சனத்தொகை கம்மிதான்!

Link to comment
Share on other sites

தமிழக மக்கள் தொகை எவளவு?

தமிழக அரசு: எங்களுக்கே தெரியலியே பா

Link to comment
Share on other sites

வருடத்துக்கு கிட்டத்தட்ட 10 லட்சம் குழந்தைகள் பிறக்கிறார்கள்.பிறக்கும் விகிதத்துக்கு நாம் ஒரு பலமான இனமாக இருப்போமானால் சிங்களவர்கள், மராட்டியர்கள் ,மல்லுக்கள்,ஹிந்தியர் எல்லோருக்கும் ஒரு பாடம் படிப்பித்து இருக்கலாம்.
 
 ஒரு பலமான இனம்  நல்ல ஒரு தலைமையில் இருந்து தொடங்க வேண்டும் என நினைக்கிறேன்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் மக்கள் தொகை 121 கோடி.

 

வருடா வருடம் 2% (1.77%) அதிகரிக்கின்றது.

 

வருடம் $2 பில்லியன் சந்தை கொண்ட இந்திய சினிமா சந்தையே உள்ளூரில் மிக பெரிய வியாபார துறையாக கருதப் பட்டது.

 

ஆனாலும், பாஸ்ட் பூட் (Fast Food) மற்றும் சமைத்த உணவு (packed food, food at resturants and roadside) சந்தையானது $44 பில்லியன் கொண்டதாக சமீபத்தில் கணக்கிடப் பட்டதால் பல சர்வதேச நிறுவங்கள் அங்கு படை எடுக்கின்றன.

 

சந்தேகமே இல்லாமல் இந்திய சந்தை மிக, மிக பெரியது.

 

Link to comment
Share on other sites

அன்றாடம் தமது பிரச்சனைகளில் மூழ்கி எழவே ஒரு தனிமனிதனுக்கு நேரம் இப்போது போய்விடும் .அது தமிழ் நாடு என்றாலும் நியூயார்க் என்றாலும் லண்டன் என்றாலும் பொருந்தும் .இல்லாவிட்டால் அரசியல் வாதிகள் இப்படி ஊரை அடித்து உலைக்குள் போடமுடியாது .டொரோண்டோ வாசிகள் இப்போ ஒரு மேயரை தெரிவு செய்து படும்பாடு இருக்கே சொல்லி மாளாது .

 

எமது பிரச்சனைகளுக்கு நாமேதான் தீர்வு காணவேண்டும் .இந்தியா முழுக்க தமிழன் இருந்தால் கூட எமக்கு ஒரு தீர்வு ஏற்படும்  என்பது சந்தேகமே ?

Link to comment
Share on other sites

தமிழக மக்கள் தொகை 7.2 கோடியாக அதிகரிப்பு: கல்வியறிவு பெற்றோர் எண்ணிக்கை 80.1%
May 31, 2013


சென்னை: தமிழக மக்கள் தொகை 7.2 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் மக்கள் தொகை சுமார் 97.4 லட்சம் அதிகரித்துள்ளது. அதே போல தமிழகத்தில் கல்வியறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை 80.1 சதவீதமாக உயர்ந்துள்ளது. மத்திய சென்சஸ் துறையின் தமிழக இணை இயக்குனர் கிருஷ்ணா ராவ் 2011ம் ஆண்டு சென்சஸ் முடிவுகளை வெளியிட்டார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
 
பெண்கள்- ஆண்கள் சம அளவில்:

2011ம் ஆண்டு மார்ச் வரையிலான கணக்கெடுப்பின்படி தமிழக மக்கள் தொகை 7.2 கோடியாகும். இதில் பெண்கள் 3.6 கோடி பேர். ஆண்கள் 3.6 கோடி பேர்.
 
31-1369994567-census1-600.jpg

 

கிராமப்புறங்களில் 3.7 கோடி, நகர்ப்புறங்களில் 3.49 கோடி:
 
மொத்த மக்கள் தொகையில் கிராமப்புறங்களில் வசிப்போர் 3.7 கோடி பேர். நகர்ப்புறங்களில் வசிப்போர் 3.49 கோடி பேர். கடந்த 10 ஆண்டுகளில் நகர்ப்புறங்களில் வசிப்போர் எண்ணிக்கை 74 லட்சம் உயர்ந்துள்ளது. கிராமப் பகுதிகளில் வசிப்போர் எண்ணிக்கை 23 லட்சம் மட்டுமே அதிகரித்துள்ளது.

மக்கள் தொகை 15.6% அதிகரிப்பு:
 
2001 முதல் 2011 வரையிலான 10 ஆண்டுகளில் தமிழக மக்கள் தொகை 15.6 சதவீதம் அதிகரித்துள்ளது. இது முந்தைய 10 ஆண்டுகளில் (1991 முதல் 2001 வரை) 11.7 சதவீதமாகவே இருந்தது. (2001-2011ம் ஆண்டில் நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் தொகை வளர்ச்சி 17.7 சதவீகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது)
 

மக்கள் தொகை வளர்ச்சியில் காஞ்சிபுரம் முதலிடம்:

 

தமிழகத்திலேயே சென்னையை ஒட்டிய காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் தொகை தான் கடந்த 10 ஆண்டுகளில் மிக அதிகமாக 39 சதவீதம் அதிகரித்துள்ளது. சென்னையைச் சேர்ந்தோர், சென்னையில் பணிபுரிவோர் ரியல் எஸ்டேட் விலை காரணமாக காஞ்சிபுரத்தில் குடியேறுவது அதிகரித்து வருவதே இதற்குக் காரணம்.

 

சென்னையில் ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 26,553 பேர் வசிக்கின்றனர். இது மிக அதிகமான மக்கள் நெரிசலாகும்.
 
31-1369998432-census6-600.jpg

 

பெண் குழந்தைகள் எண்ணிக்கை:
 
பெண் குழந்தைகளின் எண்ணிக்கையும் மாநிலத்தில் அதிகரித்து வருகிறது. 6 வயதுக்குக் குறைவான பெண் குழந்தைகளின் எண்ணிக்கையில் நீலகிரி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி, புதுக்கோட்டை மாநிலங்கள் முன்னிலையில் உள்ளன. இந்த மாவட்டங்களில் 1000 ஆண் குழந்தைகளுக்கு 960 முதல் 985 பெண் குழந்தைகள் உள்ளனர்.

31-1369996168-census4-600.jpg

 

கடலூர், அரியலூர், பெரம்பலூர், தர்மபுரி, நாமக்கல், சேலத்தில் குறைவு:
 
அதே நேரத்தில் கடலூர், அரியலூர், பெரம்பலூர், தர்மபுரி, நாமக்கல், சேலம் மாவட்டங்களின் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இந்த மாவட்டங்களில் 1000 ஆண் குழந்தைகளுக்கு 896 முதல் 916 வரையே பெண் குழந்தைகள் உள்ளனர்.

31-1369995807-census7-600.jpg

 

கல்வியறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை 80.1%:
 
தமிழகத்தில் கல்வியறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை 80.1 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது கடந்த 10 ஆண்டுகளில் 6.6 சதவீத வளர்ச்சியாகும் (நாடு முழுவதும் கடந்த 10 ஆண்டுகளில் கல்வியறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை 8.2 சதவீதம் அதிகரித்துள்ளது).
31-1369995742-census5-600.jpg

 

கல்வியறிவில் முன்னணி- பின் தங்கிய மாவட்டங்கள்:
 
கன்னியாகுமரி, சென்னை, தூத்துக்குடி, நீலகிரி, காஞ்சிபுரம் மாவட்டங்கள் தான் படிப்பறிவில் முன்னணியில் உள்ளன. இங்கு கல்வியறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை 84.5% முதல் 91.7% ஆக உள்ளது.
 
அதே நேரத்தில் தர்மபுரி, அரியலூர், கிருஷ்ணகிரி, விழுப்புரம், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் எழுதப் படிக்கத் தெரிந்தவர்களின் எண்ணிக்கை 68.5% முதல் 72.6%க்குள் தான் உள்ளது.

 

Link to comment
Share on other sites

மக்கள் தொகை உயர்கிறது: தவறா?

சென்னை : தமிழகத்தின் மக்கள் தொகை, 7.21 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த, 10 ஆண்டுகளில், தமிழக மக்கள் தொகை, 97 லட்சம் அதிகரித்துள்ளது. ஆண்களுக்கு நிகரான பெண்கள் விகிதம், 9 புள்ளிகள் அதிகரித்துள்ளது. 16 மாவட்டங்களில், ஆண்களை விட பெண்கள் அதிகமாக உள்ளனர்.

 

நகர்ப்புறங்களை நோக்கி மக்கள் இடம் பெயர்ந்து வருவது அதிகரித்து வருவதால், நகர்ப்புறங்களின் மக்கள் தொகை பெருக்கம், 27 சதவீதமாக உள்ளது.ஒவ்வொரு, 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பு, தமிழகத்தில், 2011 பிப்., 9ம் தேதி முதல், 28ம் தேதி வரை நடந்தது. இதில், சேகரிக்கப்பட்ட புள்ளி விவரங்களை வெளியிட்டு, மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணி, இணை இயக்குனர் கிருஷ்ணா ராவ் நேற்று சென்னையில் கூறியதாவது:

ஆண்கள் அதிகம்: தமிழகத்தின் மொத்த மக்கள் தொகை, 2011ம் ஆண்டு கணக்கெடுப்புப் படி, 7 கோடியே, 21 லட்சத்து 30. இக்கணக்கெடுப்பு, 2011 மார்ச், 1ம் தேதி அதிகாலை வரையில் நிலவிய மக்கள் தொகையின் அடிப்படையில், சேகரிக்கப்பட்டது.மொத்த மக்கள் தொகையில், 3 கோடியே, 61 லட்சத்து, 37 ஆயிரத்து, 975 பேர் ஆண்கள்; 3 கோடியே, 60 லட்சத்து, 9 ஆயிரத்து, 55 பேர் பெண்கள்.

மொத்த மக்கள் தொகையில், பெண்களை விட, 1 லட்சத்து, 28 ஆயிரத்து, 920 ஆண்கள் அதிகமாக உள்ளனர். 2001ம் ஆண்டிலிருந்து, 2011ம் ஆண்டு வரையிலான, 10 ஆண்டுகளில், தமிழகத்தின் மக்கள் தொகை, 97 லட்சம் அதிகரித்துள்ளது.

சென்னை முதலிடம்: கிராமப் புறங்களில் 3.72 கோடி பேரும், நகர்ப் புறங்களில், 3.49 கோடி பேரும் வசிக்கின்றனர். கிராமப்புறங்களில், 23 லட்சம் பேரும், நகர்ப் பகுதிகளில், 74 லட்சம் பேரும், கடந்த, 10 ஆண்டுகளில் அதிகரித்துள்ளனர். சென்னை மாவட்டம், 46.5 லட்சம் மக்கள் தொகையுடன்,

 

மாநிலத்தில் முதலிடத்தை பெற்றுள்ளது. காஞ்சிபுரம், 39.99 லட்சம் பேருடன், இரண்டாம் இடத்தையும், வேலூர், 39.3 லட்சம் பேருடன், மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளன. பெரம்பலூர் மாவட்டம், 5.6 லட்சம் பேருடன், கடைசி இடத்தில் உள்ளது.

தமிழகத்தின் மக்கள் தொகை வளர்ச்சி, கடந்த, 10 ஆண்டுகளில், 15.6 சதவீதம் அதிகரித்துள்ளது. கிராமப் பகுதிகள், 6.6 சதவீத வளர்ச்சியும், நகர்ப்புறங்கள், 27 சதவீத வளர்ச்சியையும் பெற்றுள்ளன. அதிகபட்சமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில், 39 சதவீதம், திருவள்ளூர் மாவட்டத்தில், 35.3 சதவீதம், திருப்பூரில், 29.1 சதவீதம் பேரும் அதிகரித்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில், மக்கள் தொகை வளர்ச்சி பெரும் வீழ்ச்சியடைந்துள்ளது. இம்மாவட்டத்தின் மக்கள் தொகை வளர்ச்சி, மைனஸ், 3.5 சதவீதமாக உள்ளது.சதுர கி.மீட்டரில் 555 பேர் தமிழகத்தில், ஒரு சதுர கி.மீட்டர் பரப்பில், சராசரியாக, 555 பேர் வசிக்கின்றனர். அதிகபட்சமாக, சென்னை மாவட்டத்தில், ஒரு சதுர கி.மீட்டரில், 26,553 பேர் வசிக்கின்றனர். அடுத்ததாக, கன்னியாகுமரி மாவட்டத்தில், 1,111 பேரும், திருவள்ளூரில், 1,098 பேரும் வசிக்கின்றனர். மிகக் குறைந்த அளவாக, நீலகிரி மாவட்டத்தில், ஒரு சதுர கி.மீட்டர் பரப்பில், 287 பேர் வசிக்கின்றனர். சிவகங்கையில், 316 பேரும், பெரம்பலூரில், 322 பேரும் வசிக்கின்றனர். இவ்வாறு, கிருஷ்ணா ராவ் கூறினார்.

பெண்களே அதிகம்:ஆண் – பெண் பாலின விகிதம் குறித்து, 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் வெளியிடப்பட்ட புள்ளி விவரம்:தமிழகத்தில், 1,000 ஆண்களுக்கு நிகரான பெண்கள், 996 என உள்ளது. இந்தவிகிதம் கிராமப் புறங்களில், 993 எனவும், நகர்ப்புறங்களில், 1,000 எனவும் உயர்ந்துள்ளது. கோவை, சிவகங்கை, பெரம்பலூர், வேலூர், விருதுநகர், திருச்சி, அரியலூர், புதுக்கோட்டை, கரூர், திருவாரூர், கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, நாகபட்டினம், நீலகிரி, தஞ்சை ஆகிய, 16 மாவட்டங்களில், ஆண்களை விட பெண்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

பெண்கள் அதிகமாக உள்ள மாவட்டங்களில், நீலகிரி மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. இம்மாவட்டத்தில், 1,000 ஆண்களுக்கு, 1,042 பெண்கள் உள்ளனர். தஞ்சையில், 1,035 பேரும், நாகபட்டினம் மாவட்டத்தில், 1,025 பெண்களும் உள்ளனர். பெண்கள் குறைவாக உள்ள மாவட்டங்களில்,தருமபுரி மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. இம்மாவட்டத்தில், 1,000 ஆண்களுக்கு, 946 பெண்களே உள்ளனர். அடுத்து, சேலத்தில், 954 பெண்களும், கிருஷ்ணகிரியில், 958 பெண்களும் உள்ளனர்.

http://www.marudham.tv/?show=slide

Link to comment
Share on other sites

சாதிவாரி கணக்கெடுப்பு ஏன்?

 
 
2011-க்கான பத்தாண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அடுத்த மாதத்தில் நம் தமிழ்நாட்டில் தொடங்க இருக்கின்றன. இக்கணக்கெடுப்பில் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்பட வேண்டும் என்ற குரல் இந்திய ஒன்றியம் முழுதும் ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. நாடாளுமன்றத்திலும் சூடான விவாதம் நடந்து வருகின்றது.
 
பெரியார் திராவிடர் கழகமும் மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் 27 சதவீதம் இடஒதுக்கீடு பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு உடனடியாக வழங்கப்பட வேண்டும் என்று வற்புறுத்தி தமிழ்நாட்டின் மூன்று பகுதிகளிலிருந்து புறப்பட்ட பரப்புரை குழுக்கள் பத்து நாட்கள் பயணம் செய்து, 2007 அன்று திருச்சியில் நடத்திய கழக மாநாட்டில் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றினோம். ஏன் இந்த கோரிக்கை?ஏன் இவ்வளவு வலிமையாக எழுப்பப்படுகிறது
 
இந்தியத் துணைக் கண்டத்தைப் பொறுத்தவரை ஒரு மனிதனின் வாழ்விடம்தொழில்,உடைதிருமணம்கல்விசமூக அந்தஸ்து அனைத்துமே அவரவர் பிறந்த வழியே தீர்மானிக்கிறது. பெரும்பான்மை மக்களின் வாக்குகளைக்கொண்டு அமைக்கப்படும் குடிநாயக ஆட்சிபெரும்பான்மை மக்களின் கல்விதொழில்வாழ்வுரிமை பற்றியும் அக்கறை காட்ட வேண்டுமல்லவாஅதுதான் இல்லை. விடுதலை பெற்றுதனிஅரசமைப்பு சட்டம் இயற்றி அறுபது ஆண்டுகள் கடந்த நிலையிலும்பெரிய தடைகளையெல்லாம் தாண்டி இந்த ஆண்டுதான் மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் சதவீத இடம், 60, 70 விழுக்காடாய் இருக்கிற பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
 
பிற்படுத்தப்பட்டோருக்கு கல்வியிலும்வேலை வாய்ப்பிலும் இடஒதுக்கீடு செய்வது தொடர்பான  இந்திரா சகானி (எதிர்) இந்திய ஒன்றியம் (1992); எம். நாகராஜ் (எதிர்) இந்திய ஒன்றியம் (2006); அசோக் தாக்கூர் (எதிர்) இந்திய ஒன்றியம் (2008) போன்ற வழக்குகளில் எல்லாம் எதிர் தரப்பினர் வைத்த முதன்மையான வாதம் என்ன? 1931க்குப் பின்னர் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்படவில்லை என்பதை முன்வைத்தே வாதாடினார்கள்.
மேற்கண்ட மூன்று வழக்குகளிலும் ஒட்டு மொத்த மக்களின் சமூக கல்வி நிலை குறித்து முழுமையான கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தொடர்ச்சியாக உச்சநீதிமன்றம் அறிவுறுத்திய பிறகும்கூட, 2011 கணக்கெடுப்பிலும் சாதிவாரி விவரங்களை எடுக்க உரிய வழி வகைகள் ஏதும் செய்யப்படவில்லை.
இந்தியாவில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு 1892 இல் முதன்முறையாக எடுக்கப்பட்டபோதுஅது முழுமையான கணக்கெடுப்பாய் அமையவில்லை.
 
1881 ஆம் ஆண்டு கணக்கெடுப்பில்தான் சாதிவாரி கணக்கெடுப்பு முழுமையாக எடுக்கப்பட்டது. அது 1931 ஆம் ஆண்டு வரை தொடர்ச்சியாக நடந்தது. இரண்டாம் உலகப் போர் நடந்து வந்த நிலையில் 1941 ஆம் ஆண்டு கணக்கெடுப்பு சரிவர,முழுமையாக எடுக்க முடியவில்லை.
 
குடியரசான பிறகு இந்தியாவின் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு 1951 இல் நடைபெற்றபோதுசாதிவாரி கணக்கெடுப்பு கைவிடப்பட்டது. ஆனால் அரசியல் சட்டத்தின் 341, 342 ஆவது பிரிவுகளின்படி பட்டியல் இன சாதிபழங்குடியினர்கணக்கெடுப்பு மட்டும் தொடர்கிறது.
 
அரசியல் சட்டத்தின் 340 ஆவது பிரிவு சமூகத்திலும் கல்வியிலும் பின் தங்கியுள்ள வகுப்புகளின் நிலையை பற்றியும்அவர்களுக்குள்ள சங்கடங்களைப் பற்றியும்,அத்தகைய சங்கடங்களைப் போக்குவதற்கான வழி வகைகள் பற்றியும் அவர்களை மேம்படுத்துவதற்காக மத்திய (அ) மாநில அரசுகள் கடைபிடிக்க வேண்டியநடவடிக்கைகள் போன்றவற்றை ஆய்வு செய்து அறிக்கை தர ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கூறுகிறது.
 
அதன் அடிப்படையில் 1953 இல் அமைக்கப்பட்ட காகாகலேல்கர் ஆணையம், 1978 இல் அமைக்கப்பட்ட மண்டல் ஆணையம்பல மாநிலங்களில் அமைக்கப்பட்ட இவையொத்த பிற ஆணையங்கள் எல்லாம் பிற்படுத்தப்பட்ட மக்கள் குறித்த சாதிவாரி கணக்கெடுப்பு செய்ய பரிந்துரைத்தும்அரசு உயர்சாதியினரின் எதிர்ப்பைக் கருதி திட்டமிட்டே புறக்கணித்தும் வந்துள்ளது.
 
ஆனாலும்இதே மய்ய அரசு தான் பிற்படுத்தப்பட்டோர் குறித்த வழக்குகள் நீதிமன்றத்தில் வருகிற போதெல்லாம் 1931 முதல் பிற்படுத்தப்பட்டோரின் முறையான மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஏதும் இல்லை என்ற பார்ப்பன உயர்சாதியினரின் வாதங்களுக்கு முகம் கொடுத்து பார்ப்பனருக்கு எதிரான வாதங்களை முன் வைத்து வந்துள்ளது.
 
புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் சூத்திரர்கள் யார்?” (1946) என்ற தமது நூலில்:
சூத்திரர்களின் பிரச்சினையின் ஆழம் குறித்து மக்கள் சரியாக உணர்ந்திராததற்கு காரணம் சூத்திரர்களின் மக்கள் எண்ணிக்கை குறித்து அவர்கள் அறிந்திராமல் இருப்பதுவே ஆகும். கெட்ட வாய்ப்பாக மக்கள் தொகை கணக்கெடுப்பும் அவர்களின் கணக்கை தனியாக எடுக்கவும் இல்லை. என்றாலும்தாழ்த்தப்பட்டவர்கள் நீங்கலானசூத்திரர்களின் எண்ணிக்கை இந்து மதத்தைப் பொருத்தவரையிலும் 75 சதவீதம் முதல்80 சதவீதம் வரை இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.
 
மண்டல் குழு அறிக்கை இந்துக்களில் 44 சதவீதப் பேரும்பிற மதங்களில் சதவீத பேரும் என மொத்தம் 52 சதவீத பேர் பிற்படுத்தப்பட்டோர் எனக் கூறுகிறது. தேசிய மாதிரிக் கணக்கெடுப்பு முதலில் பிற்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை 36 சதவீதம் என்றது. ஆனால்பின்னர் அவர்களே எடுத்த மாதிரிக் கணக்கெடுப்பு 42 சதவீதம் பேர் பிற்படுத்தப்பட்டவர்கள் என்கிறது.
 
வட்டாரத்துக்கு சில வீடுகள் என எடுத்து கணக்கிடும் மாதிரி கணக்கெடுப்பு துல்லியமானது அல்ல என்றாலும் அதனை ஆதாரமாகக் காட்டி கூக்குரல்எழுப்புகின்றனர். அரசியல் சட்டத்தின் 15(4) பிரிவு சமுதாயத்திலும் கல்வியிலும் பின்தங்கியுள்ள பிரிவினருக்கு கல்வி நிலையங்களில் சிறப்பு ஏற்பாடுகள் (இடஒதுக்கீடு)செய்வது குறித்துப் பேசுகிறது. பிற்படுத்தப்பட்ட மக்களின் எண்ணிக்கை பல்வேறுநிலைகளில் அவர்கள் பெற்றுள்ள கல்வித் தகுதிமாநில சராசரியோடு அப்பிரிவினரின்சராசரி ஆகியவற்றை ஒப்பிட்டே முடிவு செய்வது பொருத்தமாயிருக்கும்.
 
அரசு வேலை வாய்ப்புகளில் போதிய பிரதிநிதித்துவம் இல்லாத சாதியினருக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்வது குறித்து அரசியல் சட்டத்தின் 16(4) பிரிவு கூறுகிறது. ஒரு பிரிவினரின் மக்கள் தொகைஅப்பிரிவினரில் அரசு வேலை பெற்றுள்ளோர் எண்ணிக்கைவேலையின் எந்தப் படி நிலையில் எத்தனை பேர் என்ற விவரம்இல்லாமல் எவ்வாறு அரசு சரியாக செயல்பட முடியும்
 
1993 ஆம் ஆண்டின் பிற்படுத்தப்பட்டோருக்கான தேசிய ஆணையச் சட்டத்தின் 11 ஆவது பிரிவின் (1) உட்பிரிவு, “இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தபின் ஒரு முறையும்,அதன்பின் ஒவ்வொரு பத்தாண்டிலும்சமுதாயத்திலும்கல்வியிலும் பின் தங்கியுள்ள நிலையிலிருந்து மீண்டு விட்ட பிரிவினரை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலிருந்து நீக்கவும்அல்லது புதிதாக சேர்க்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்று கூறுகிறது. இது சாதிவாரியான கணக்கெடுப்பு இல்லாத நிலையில் எவ்வாறு நிறைவேற்ற முடியும்
 
நீண்டகாலமாக இடஒதுக்கீட்டு முறை தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தப் படும். தமிழ்நாடுகர்நாடகம் போன்ற மாநிலங்களில் பொதுப் போட்டி (Open Competition)இடங்களிலேயே பெரும் பகுதியைப் பெறும் அளவுக்கு பிற்படுத்தப்பட்ட மக்களும்சில இடங்களைப் பெறும் அளவுக்கு தாழ்த்தப்பட்டபழங்குடி மக்களும் வளர்ந்துள்ளனர். இதைக் கணக்கில் கொண்டுஇதுவரை ஏறத்தாழ எல்லா இடங்களையுமே மொத்தமாகஅனுபவித்து வந்த உயர்சாதிக் கூட்டம்தமக்கு அடுத்த நிலையில் போட்டியாக வளர்ந்து வரும் பிற்படுத்தப்பட்ட மக்களை முடிந்தவரை கல்விவேலை வாய்ப்புகளில் வராமல் பார்த்துக் கொள்வதில் மிகவும் எச்சரிக்கையாக செயல்பட்டு வருகின்றன.
கடந்த காலங்களில் அரசின் உயர் பீடங்களில் அமர்ந்துவிட்ட உயர்சாதி அதிகாரிகளின் உதவியோடு தங்கள் ஏகபோக உரிமையையும் முடிந்த வரையிலும் காப்பாற்ற பல்வேறு வஞ்சக நடவடிக்கைகளிலும்பரப்புரைகளிலும் ஈடுபடு கின்றனர். சாதி வாரி கணக்கெடுப்பால் சாதியம் சமூகத்தில் ஆழமாய் வேர் கொண்டுவிடும் என்ற ஒரு பரப்புரையை செய்கின்றனர். ஆனால்இவர்கள்கடந்த 70 ஆண்டுகளாக சாதிவாரிகணக்கெடுப்பில்லாத நிலையிலும் சாதியம் சமூகத்திலும்அரசியலிலும் ஆளுமை செலுத்துவதை ஏனோ கணக்கில் எடுக்கத் தவறுகின்றனர்.
 
சாதிகளுக்குள் பிளவுகளை சாதிவாரி கணக்கெடுப்பு ஏற்படுத்தும் என்ற வாதமும் மேற்கண்டவாறே ஆதாரமற்றதாகும். சாதிவாதி கணக்கெடுப்பால் மக்கள் தொகை அதிகமுள்ளோரின் ஆதிக்கம் சமுதாயத்தில் ஏற்படும் அபாயம் உள்ளது என்றொருகருத்தையும் உயர்சாதியினர் கூறுகின்றனர். இதுவரை சூழ்ச்சிகளாலும்,தந்திரங்களாலும்கல்விவேலை வாய்ப்புகளில் முற்றாதிக்கம் செலுத்தி வரும் கூட்டம் மிகச் சிறுபான்மையான பார்ப்பன சாதியே ஆகும்.
 
மக்கள் தொகை அதிகமுள்ள பிரிவினர் ஆதிக்கம் செலுத்தி விடுவார்கள் என்ற வாதம் உண்மையானால்முற்று முழுதாய் இந்துக்களே வாழ்ந்து வந்த இந்தியாவில்,வெளியிலிருந்து வந்த மிகக் குறைவான எண்ணிக்கைக் கொண்ட இஸ்லாமியர் ஆட்சி எவ்வாறு ஏற்பட்டதுஅதற்குப் பிறகு முழுதும் இந்துக்களும்இஸ்லாமியர்களுமேஇருந்த இந்தியாவில் நூற்றுக்கணக்கில் மட்டுமே நுழைந்த ஐரோப்பியர்கள்குறிப்பாகஆங்கிலேயர்கள் ஆட்சி எப்படி ஏற்பட்டது
 
அரசியல் சட்டத்தின் 15, 16, 29(2) ஆகிய பிரிவுகள் ‘தம்இனம்சாதிபாலினம்பிறப்பிடம்,மரபு வழிமொழி ஆகிய காரணங்களுக்காக பாகுபாடு காட்டப்படுவது கூடாது என தடை செய்துள்ளது. ஆகவே சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்துவது சரியல்ல என்று ஒரு சொத்தை வாதம் முன் வைக்கப்படுகிறது. இவ்வாதத்தை வைப்போர் சாதியைத் தவிர பிற கூறுகளான மதம்இனம்பாலினம்பிறப்பிடம்மரபு வழிமொழி பற்றிய விவரங்கள் மக்கள் தொகை கணக்கெடுப்பில் பதியப்படுகின்றன என்பதை ஏனோகவனிக்கத் தவறுகின்றனர். மேலும் பட்டியல் இன வகுப்புகள்பழங்குடிகள் மற்றும்ஆங்கிலோ இந்தியர் போன்றோர் பற்றிய விவரங்களும் தொடர்ச்சியாக பதியப்பட்டே வந்துள்ளன என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.
 
ஆகஒவ்வொரு முறை பிற்படுத்தப்பட்டோர் தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் வருகிற போதெல்லாம் 1931க்குப் பின் பிற்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை குறித்த கணக்கெடுப்பு இல்லை என்பதையே முதன்மையான வாதமாய் எதிர்தரப்பினர் வைத்து வந்ததையும்ஒரு வேளை ஒரு குறிப்பிட்ட சாதிப் பிரிவினர் பின் தங்கிய நிலையிலிருந்து மீண்டிருந்தாலோ அல்லது குறிப்பிட்ட மக்கள்பிரிவினரின் பின் தங்கிய நிலை கண்டறியப்பட்டாலும்பிற்படுத்தப்பட்டோர் பட்டியலைஅதற்குத்தக திருத்தி அமைக்க சாதிவாரிக் கணக்கீடு அவசியமாகிறது.
 
1991 ஆம் ஆண்டு முதல் மதுலிமாயி போன்ற பல்வேறு மூத்த தலைவர்கள் சாதிவாரிக் கணக்கெடுப்பை வலியுறுத்தி வழக்குகள் தொடுத்து வந்துள்னர்.  இப்போது சாதிவாரிக் கணக்கெடுப்புக்கு விண்ணப்பத்திலேயே எளிய வழி உண்டு. ஏற்கனவே 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு படிவத்தில் குடும்பவாரியான சமூகத் தன்மை பற்றிய பிரிவில் குடும்பத் தலைவர் சார்ந்துள்ள சாதி / சமுதாயம் பற்றிய கேள்வியில்பட்டியலின சாதி அல்லது பழங்குடியினர்” எனில் குறியீட்டெண்ணைப் பதிவுசெய்யுமாறு அச்சிடப்பட்டிருந்தது. அதில் பட்டியலின சாதி / பழங்குடி /பிற்படுத்தப்பட்டவர்” என சிறு திருத்தம் செய்தாலே போதும்.
 
பெரும்பான்மை மக்களின் வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்படும் குடிநாயக அரசான இந்திய அரசுநாட்டு மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கினராக உள்ள பிற்படுத்தப்பட்ட மக்கள் நலனுக்கும்மேம்பாட்டுக்குமான திட்டங்களை தீட்டுவதற்கும்,நடைமுறைப்படுத்துவதற்கும் வாய்ப்பாகவும்,எழுபது ஆண்டு களாக தவிர்க்கப்பட்டு வந்துள்ள சாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்ளுவதன் வழியாக உரிய சமூகநீதி வழங்க எளிதாக அமையும் என்பதால்தான் பெரியார் திராவிடர் கழகம் சாதி வாரிக்கணக்கெடுப்பை வற்புறுத்துகிறது.
கொளத்தூர் மணிதலைவர்பெரியார் திராவிடர் கழகம்
(பெரியார் முழக்கம் மே 2010 இதழில் வெளியான கட்டுரை)

 

http://kolathurmani.blogspot.ca/2011/06/blog-post_01.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மிகவும் மேலோட்டமாக விடயங்களை விளங்கிக் கொண்டு இங்கே பகிர்கிறீர்கள். மேற்கு வங்கம் பங்களாதேஸ் பிரச்சினையில் அக்கறையாக இருந்தது உண்மை தான், ஆனால் அந்த மாநிலம் சொல்லித் தான் இந்திரா பங்களாதேசைப் பாகிஸ்தானில் இருந்து பிரித்தார் என்பது தவறு. இந்திரா, பாகிஸ்தானுடன் போர் நடந்த காலப் பகுதியில், பாகிஸ்தானைப் பலவீனப் படுத்த எடுத்துக் கொண்ட முன்னரே திட்டமிட்ட ஒரு நடவடிக்கை இது. இலட்சக் கணக்கான பங்களாதேச அகதிகள் மேற்கு வங்கத்தினுள் குவிந்ததும் ஒரு சிறு பங்குக் காரணம். இந்தியாவை அமெரிக்காவின் US Trade Representative (USTR) என்ற அமைப்பு வளரும் நாடுகள் பட்டியலில் இருந்து அகற்றியிருப்பது உண்மை. ஆனால், இது IMF போன்ற உலக அமைப்புகளின் முடிவல்ல. இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகம் அதிகரிக்கும் போது, அமெரிக்காவின் USTR அமைப்பு இந்தியாவின் உற்பத்திப் பொருட்களைப் பற்றி விசாரிக்கவும், சட்டங்கள் இயற்றவும் கூடியவாறு இருக்க வேண்டும். இப்படிச் செய்ய வேண்டுமானால் இந்தியாவை இந்தப் பட்டியலில் இருந்து அகற்றினால் தான் முடியும், எனவே அகற்றியிருக்கிறார்கள். இதன் அர்த்தம் இந்தியா உலக வர்த்தகத்தில் அதிக பங்கைச் செலுத்த ஆரம்பித்திருக்கிறது என்பது தான், எனவே இந்தியா வர்த்தக ரீதியில் வளர்கிறது என்பது தான் அர்த்தம். ஆனால், மனித அபிவிருத்திச் சுட்டெண்ணைப் (HDI) பொறுத்த வரை இந்தியா இன்னும் வளர்ந்து வரும் நாடு தான். இந்தியாவை விடப் பணக்கார நாடான கட்டாரும் வளர்ந்து வரும் நாடு தான்.   
    • ஓம். உணர்வு இல்லவே இல்லை என சொல்லவில்லை.  ஆனால் சதவீதம் வீழ்ந்துள்ளது என நினைக்கிறேன்.
    • வருகை, கருத்துக்கு நன்றி நெடுக்ஸ். இப்போ ஊபரும் வந்துள்ளது. ஆனால் கார் மட்டும்தான். ஆட்டோ என்றால் பிக் மிதான். கொழும்பில் பிக் மி யில் மோட்டார் சைகிளிலும் ஏறி போகலாம். அந்த பகுதி ஒரு இராணுவ கண்டோன்மெண்ட் போல இருக்கிறது என சொல்லி உள்ளேனே? நேவி வியாபாரம் செய்வதையும் சொல்லி உள்ளேன். நான் போன சமயம் சுத்தமாக இருந்தது. சிலவேளை முதல் நாள் துப்பரவு செய்தனரோ தெரியவில்லை🤣. கொழும்பில் இது முன்பே வழமை. யாழில் இந்த போக்கு புதிது. நாம் இருக்கும் போது சேவை என இருந்த்ஃ துறை இப்போ சேர்விஸ் என ஆகி வருகிறது. ஆனால் நாடெங்கும் இதுவே நிலை என எழுதியுள்ளேன்.
    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 12:22 PM   உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள விடயங்களை கண்டுபிடிப்பதற்கான முக்கிய தடையாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே காணப்படுகின்றார் என கத்தோலிக்க திருச்சபையின்  பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். ஊடகமொன்றிற்கு வழங்கிய பேட்டியில் இதனை அவர் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று  பலமாதங்ளின் பின்னர் ஜனாதிபதியான பின்னர் கோட்டாபய ராஜபக்ச செய்த எடுத்த முதல் நடவடிக்கை உயிர்த்தஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை செயல்இழக்கச்செய்ததே என அவர் குறிப்பிட்டுள்ளார். உயிர்த்தஞாயிறுதாக்குதல் சூத்திரதாரிகள்யார்  என்பது யார் தனக்கு தெரியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள  அருட்தந்தை  சுயாதீன ஆணைக்குழுவை நியமித்தால் மாத்திரமே உண்மை வெளிவரும் என குறிப்பிட்டுள்ளார். ஷானி அபயசேகர தலைமையிலான ஆணைக்குழுவை மீண்டும் நியமிக்கவேண்டும் சர்வதேசஅளவில் விசாரணை இடம்பெறவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதனை செய்தால் மைத்திரிபாலசிறிசேன அதன் முன்னிலையில் தோன்றி சூத்திரதாரி யார் என்ற உண்மையை தெரிவிக்க முடியும் எனவும் அருட்தந்தை தெரிவித்துள்ளார்.  நீங்கள் கோட்டாபய ராஜபக்சவை சூத்திரதாரி என தெரிவிக்கின்றீர்களா என செவ்வி காண்பவர் கேள்விஎழுப்பியவேளை அருட்தந்தை சிறில் ஆம் அது தெளிவான விடயம் என குறிப்பிட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறுதாக்குதலில் பொதுமக்கள் கொல்லப்பட்டதை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர்கள் வாக்குகளை பெறுவதற்காக பயன்படுத்தக்கூடும் என தெரிவித்துள்ள அருட்தந்தை சிறில்பெர்ணான்டோ ஆட்சிமாற்றத்தின் போது அரசியல் வஞ்சகர்கள் மீண்டும் தெரிவு செய்யப்பட்டால் அது ஏற்கனவே பொருளாதார நெருக்கடி சட்டமொழுங்கின்மையினால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாட்டிற்கு மேலும் பேரழிவாக அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளார். அமைப்புமுறையில் பாரிய மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே உண்மை வெளிவரும் அமைப்பு முறை மாற்றம் ஏற்படுவதற்கு அரசியல் நிர்வாகம் முற்றாக மறுசீரமைக்கப்படுவது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179961
    • அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் விடுத்த கோரிக்கை! ஆசியாவிற்கான BOAO மன்றத்தின் வருடாந்த மாநாட்டில் பிரதமர் தினேஷ் குணவர்தன பங்கேற்றுள்ளார். சீனாவின் ஹைனான் நகரில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் விசேட உரை ஒன்றை நிகழ்த்தினார். வருமானத்தை சமமாகப் பகிர்ந்தளிக்கும் வறுமையற்ற ஆசியாவைக் கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் தினேஷ் குணவர்தன கோரிக்கை விடுத்துள்ளார். விவசாய வளர்ச்சி மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த புதிய முயற்சிகள் தேவை என்றும், இது வறுமையை ஒழிப்பது மட்டுமல்லாமல் சமூக நல்லிணக்கம் மற்றும் அமைதியை உறுதி செய்யும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கொழும்பு துறைமுகம், ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கொழும்பு துறைமுக நகரத்தை விஸ்தரிப்பது தொடர்பில் பிரதமர் விளக்கமளித்ததாகவும் பிரதமர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/297561
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.