Jump to content

ராஜீவ் கொலை யாருக்கு துன்பியல் சம்பவம்? சில சதிக்கோட்பாடுகள்!


Recommended Posts

ராஜீவு புலிகளிடம் தேற்றதால் தற்கொலை செய்தார் என்று தானே இதுவரை நினைத்து இருந்தேன் :D

Link to comment
Share on other sites

  • Replies 57
  • Created
  • Last Reply

your trying to say........

Indian (rapist) armies are in excellence in something. I can understand that..........

I can  say without any doubt (their) the  Indian troops are  excellence to abduct women where ever they go. no matter the  ethnicity, also I have strong evidences from Bangladesh, Eelam, Kasmeer and Haiti.

 

 on the above  paragraph I was talking about the  strength of fighting.

where do you have those evidences? they already fought with LTTE for 3years.

 

may Eelam  landscape is not falling or fit in your  category ( desert... forest, mountain such that)  

 

மதிப்புக்குரிய புனிதர்களான இந்திய படை வீரர்களை வீரதீரங்களை அறியாத உங்களை நினைக்க...   :huh:

 

 

http://www.youtube.com/watch?v=xwwPbkyZVJo

 

http://www.presstv.ir/detail/2013/05/01/301192/kashmir-asks-inquiry-into-army-rape-case/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இராஜீவினால் அனுப்பட்ட இந்திய அமைதிப்படை ஈழத்துக்கு வந்ததே விடுதலைப்புலிகளை அழித்து சிங்கள தேசத்துக்கு உதவி செய்யும் நோக்கத்தினால் தான். இந்தியப்படையினால் வயது வேறுபாடின்றி பல அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டு , பல பெண்கள், ஆண்களின் கற்புகள் சூறையாடப்பட்டு, பல தமிழர்களின் உடமைகள் அழிக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டன. ராஜீவின் மரணம் இந்தியப் படையினால் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களுக்கு ஒரு மகிழ்ச்சிதான். ஆனால் ராஜீவின் மரணத்தினாலும், ஈழத்தில் இந்தியப்படையின் நோக்கம் தோல்வியற்றதினை தாங்கமுடியாத இந்திய அரசு( சோனியா காங்கிரஸ்) ஈழத்தமிழர்களை பழிவாங்க சந்தர்ப்பம் பார்த்தது. 1989 ல் இருந்து 2004 வரை பாஜக, காங்கிரஸ் கூட்டணிகள் மாறி மாறி ஆட்சியில் வந்தன. அப்பொழுது இருந்த காங்கிரஸ் அரசு சோனியாவின் கட்டுப்பாட்டில் இருந்த காங்கிரசு அரசல்ல. ஆனால் 2004ற்குப் பிறகு வந்தது சோனியா காங்கிரசின் அரசு. அத்துடன் பின்லாடனின் அமெரிக்காத் தாக்குதலும் உலக நாடுகளில் அரசு அல்லாத போராட்ட அமைப்புக்கள் பயங்கரவாதமாக சித்தரிக்கப்பட்டு வந்தன. விடுதலைப்புலிகள் பேச்சுவார்த்தை காலத்தினை நன்றாக சிங்கள அரசு தனது படைப்பலத்தினைப் பெருக்க உபயோகித்தது. அத்துடன் கருணாவின் பிளவு. விடுதலைப்புலிகளில் ஊடுருவிய எதிரிகள், சீனாவின் வளர்ச்சி, அல்கைடாவின் வளார்ச்சி, விடுதலைப்புலிகளினால் போராட்டத்தில் குடும்பத்தில் ஒருவரைச் சேர்த்தல் (இதில் பல விடுதலைப்புலிகளுக்கு எதிரானவர்கள் விடுதலைப்புலியில் இணைந்தார்கள். அத்துடன் பலருக்கு போராட்டம் வெல்ல விருப்பம், ஆனால் தாங்கள் குடும்பம் போராடக்கூடாது.)கருணாநிதி குடும்பத்து ஊழல்,உலக நாடுகளினா சிங்களத்துக்கு கிடைத்த உதவி, சிங்கள, இந்தியாவின் பலமான அரசியல் எல்லாம் சேர்ந்து ஈழத்தமிழர்களை அழிக்க உதவியது.

Link to comment
Share on other sites

மறவன் நாங்கள் சொல்வதைத்தான் நீங்கள் கேட்டவேண்டும் நம்ப வேண்டும் அதுதான் எங்களுக்கு பழக்கம்.

Link to comment
Share on other sites

இது பலருக்கு பொருந்தும் .

 

 

ஒட்டுக்குழுக்களுக்கு நன்றாகவே பொருந்தும்.

Link to comment
Share on other sites

அத்தோடு மறவன், எங்களுக்குதான் எல்லாம் தெரியும், நாங்ககள் தான் சரி. அதை கேட்காவிட்டால் இன்று நாங்கள் உங்களுடன் எழுதினாலும் நாளை  உங்களை போட்டுக்கொடுப்போம்.  அதாவது இன்று நீங்கள் உங்களை நாங்கள் நாளைபோடுக்கொடுக்கத்தக்கதாக பிழை விட்டு எழுதாதீர்கள். எமக்கு நாம் காப்பற்ற என்று உண்மை நண்பர்கள் யாரும் கிடையாது என்பதை தெரிந்து வைத்துக்கொண்டு எம்முடன் சேர்ந்து எழுதுங்கள். (முடியாவிட்டால் உங்களை நீங்கள் இன்று எம்முடன் சேர்த்துவிட்டு நாம் ஒரு நாள் போட்டுக்கொடுக்கும் போது பாதாளக்கிடங்குக்குள் விழாதீர்கள்)

Link to comment
Share on other sites

மறவன் நாங்கள் சொல்வதைத்தான் நீங்கள் கேட்டவேண்டும் நம்ப வேண்டும் அதுதான் எங்களுக்கு பழக்கம்.

 

 

எங்களுக்கு முழு இலங்கையையும் பிடிப்பது தான் திட்டம் எனும் போது சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் ஏகோபித்த ஆதரவை தந்தனர்.  :icon_mrgreen:  :icon_mrgreen:

Link to comment
Share on other sites

இராஜீவ் காந்தி - கொலை அல்ல, மரணதண்டனை

 
 
 
நான் பேச நினைப்பதுஇந்த நாட்டில் தொடர்ந்து பேசப்பட்டுக் கொண்டிருக்கிற சில முழக்கங்கள். ‘மறக்க மாட்டோம்மன்னிக்க மாட்டோம்’ -இது காங்கிரஸ் முழக்கம்; ‘ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வு’ -இது மார்க்சிஸ்டு முழக்கம்; ‘சகோதர யுத்தம்,சர்வாதிகாரி’ - திமுக முழக்கம். இதில் ஒரு முழக்கத்தை மட்டும், - நாம் யாரை ஒழிக்க நினைக்கிறோமோ - அந்த காங்கிரசின் முழக்கத்தை மட்டும் எடுத்துக் கொள்ள விரும்புகிறேன். மறக்க மாட்டோம்மன்னிக்க மாட்டோம்’ என்று தொடர்ந்து சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். எதைக் காரணமாக வைத்து இப்படி சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்? ‘ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார். ராஜீவ் காந்தி கொலையை நாங்கள் மறக்க மாட்டோம் அதற்காக ஈழத்தமிழர்களைபுலிகளை மன்னிக்க மாட்டோம்’ என்று சொல்கிறார்கள். அது குறித்து சில செய்திகளைப் பேச விரும்புகிறேன்.

நம் உடலில் ஏற்பட்ட புண்போல தமிழர் வரலாற்றில் ஒரு புண் தோன்றியது. ஈழத்தில்,ஈழ விடுதலை ஆதரவில்தமிழர்களுடைய உரிமை முழக்கத்தில் ராஜீவ் காந்தி பெயரால் ஏற்பட்டஏற்படுத்தப்பட்ட அந்தக் கீறல் ஊறுபுண்ணாகப் போய்விட்டது. அது உள்ளே சீழ் பிடித்துக்கொண்டிருக்கிறது. காலை அசைத்தால் வலிக்கிறதுநடந்தால் வலிக்கிறது. அந்தப் புண்ணை கீறிவிட்டுத்தான் ஆற்றவேண்டும். அதை நாம் யாரும் செய்யவில்லை. நாம் அந்தப் புண்ணைக் கீறிப்பார்க்க வேண்டும்’ என்று நான் விரும்புகிறேன்.

கொலை செய்யப்பட்ட ராஜீவ் காந்தி யார்அவன் எந்தக் கட்சியைச் சார்ந்தவன்?காங்கிரசை ஒழிக்க வேண்டும் என்ற ஒற்றைக் குறிக்கோளை முன்னெடுத்துச் செல்கின்ற இயக்கங்களில் ஒன்றாக இருக்கின்ற எனக்குஅதை விளக்கவேண்டிய கடமை இருக்கிறது. யார் அந்தக் காங்கிரசுக்காரர்கள்இந்தத் தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு என்ன செய்திருக்கிறார்கள்எப்பொழுதாவது நன்மை செய்துஇருக்கிறார்களாநம்முடைய உணர்வுகளைப் புரிந்துகொண்டு செயல்பட்டு இருக்கிறார்களாகாங்கிரஸ் தலைமையில் நமக்காக யாராவது உட்கார்ந்து இருக்கிறார்களாஒருமுறை காமராஜர் அமர்ந்திருந்தார். அதற்குப் பின்னால் யார் இருக்கிறார்கள்அவர் கூட சொன்னார்தலைமை அமைச்சர் தேர்வுக்காக ஆட்களைத் தேடித்திரிந்த காமராஜரிடம்ஏன் நீங்களே நிற்கக் கூடாது என்று கேட்டார்கள். காமராஜர் சொன்னார், ‘நான் சொன்னா போடுவான் நின்னா போட மாட்டான்னு.

தமிழனை ஏற்றுக்கொள்ள மாட்டான் வடவன். அவன் நமக்கு வரலாற்றுப் பகைவன்,நம்மை வரலாற்றுப் பகையாகக் கருதுகிறான். இனத்தால் ஆரியன்திராவிடரான நம்மை ஏற்றுக்கொள்வதில்லைமொழியால் சமஸ்கிருதக் குடும்பத்துக்காரன்திராவிட மொழிக்குடும்பமான தமிழை ஏற்றுக்கொள்வதில்லை. அதுதான் இலங்கையிலும்நடக்கிறது. ஆரிய இனத்தைச் சார்ந்தவன்சமஸ்கிருத மொழிக்குடும்பத்தைச் சார்ந்தவன்திராவிட இனத்தைச் சார்ந்த தமிழ் மொழிக் குடும்பத்தைச் சார்ந்தவனை நசுக்கப் பார்க்கிறான். இங்கு இருக்கின்ற வரலாற்றுப் பகைவன் அங்கு இருக்கிற வரலாற்றுப் பகைவனுக்கு உதவுகிறான். நாம் நம்மினத்தவர்களுக்கு உதவ நினைக்கிறோம். ஆனால் தடையாக வந்து நிற்கிறார்கள் காங்கிரசுக்காரர்கள்.

காந்திநேரு காலத்திலிருந்துஎப்போதாவது இந்தக் காங்கிரசு நமது தமிழர்களுக்கு,உழைக்கும் மக்களுக்குஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக இருந்திருக்கிறதா என்று வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால்கண்டுபிடிக்க முடியவே இல்லை. எந்த்த தடயமும் காணோம். எந்தச் செய்தியையும் காணோம்.

ஆரம்பத்தில் இந்தியை ஆட்சிமொழி ஆக்குவதற்குதமிழர்களுடைய மொழி உரிமையை நசுக்குவதற்கு இந்தக் காங்கிரசு காரணமாக இருந்தது. காங்கிரசு கட்சியில் ஆட்சிமொழித் தீர்மானம் வந்தபோது இந்திக்கு ஆதரவாக சரிபகுதி வாக்குகள்இந்திக்கு எதிராக சரிபகுதி வாக்குகள். காங்கிரசு தலைவர் பட்டாபி சீதாராமையா தன் வாக்கை இந்திக்கு அளித்துதான் காங்கிரசு கட்சியில் தீர்மானத்தை நிறைவேற்றினார்கள். அரசியல் நிர்ணய சபையில் வாக்கெடுப்பு வந்தது. அங்கும் சரிசமமான வாக்குகள் இரண்டு பக்கமும். நிர்ணயசபைத் தலைவராக இருந்த இராஜேந்திர பிரசாத்வாக்களித்துத்தான் இந்தி ஆட்சிமொழியானது. கள்ள ஓட்டு போலஇந்த தலைவர் ஓட்டு. யாரும் வாக்களிக்கவில்லைகள்ள ஓட்டை காங்கிரசு தலைவர்கள் போட்டுத்தான் நம் மீது இந்தியைத் திணித்தார்கள்.

இட ஒதுக்கீடு வந்தது. 1951-யில் பெரிய யோக்கியன் போல் பேசினார் நேரு, ‘நான் பொருளாதார அளவுகோலை ஏற்றுக்கொள்ள மாட்டேன்’ என்று. பெரியார் சொல்லுவார், ‘முற்போக்கு வேடம் தரித்த பிற்போக்குவாதி அவர்’ என்று. ஆனால், ‘நான் பொருளாதாரம் என்ற சொல்லை ஏற்றுக்கொள்ள மாட்டேன்’ என்று 1951-யில் சொன்ன நேரு, 1961-யில் மாநில முதலமைச்சர்களுக்கு கடிதம் எழுதினார், ‘சாதி அடிப்படையில்கொடுப்பதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். பொருளாதார அடிப்படையில் வேண்டுமானால் கொடுங்கள்’ என்று.

இலங்கை வரலாற்றில் அப்படி ஒன்று இருக்கின்றது. 1956-யில் சிங்கள ஆட்சி மொழி சட்டம் வந்த பொழுதுஒரு மொழி என்று சொன்னால் இது இரு நாடாகிவிடும்இரு மொழி என்று சொன்னால் ஒரே நாடாக இருக்கும் என்று சொன்னவர் டி சில்வா.1972-யில் அவர் தலைமையில் அரசியல் சட்டம் எழுதப்பட்டதுஅவர் தான் சிங்களம்மட்டுமே ஆட்சிமொழி என்று எழுதினார். வரலாற்றில் மனிதர்கள் மாறுகிறார்கள். நம்வரலாற்றில் நமக்கு எதிராக மாறியவன் நேரு. இந்திரா காந்திநமது உரிமை நிலமானகட்சத்தீவை வாரிக்கொடுத்துவிட்டுஇன்று வரை தமிழக மீனவர்கள் சாவிற்குக் காரணமாக இருந்தவர்அவர் மீது நிறைய குற்றங்களைச் சொல்லலாம்.

ராஜீவ் காந்தியைப் பற்றி பேச வேண்டியிருப்பதால் அதற்கு வருவோம். ராஜீவ் காந்தி யார்வேளாண்மை செய்யும் விவசாயிக்கு விதை முக்கியம். அதில் எவனாவது கேடு செய்தால் வேளாண்மையேமகசூலே பாழ். அவன் வாழ்க்கையே முடிந்தது. ஒரு நாட்டுக்கு பாதுகாப்பு தான் முக்கியம். பாதுகாப்புக்கு நல்ல வீரன் வேண்டும்நல்ல படைக் கருவி வேண்டும். பாதுகாப்புக்கு வாங்கிய படைக் கருவியில் குறைந்த தரம் உள்ளதை வாங்கி பணம் சம்பாரித்து போஃபோர்ஸ் ஊழல் செய்த அயோக்கியன் ராஜீவ் காந்தி. அவன் நம் நாட்டு மக்களின் நலனில் அக்கறையில்லாமல் தனக்கு காசு சேர்த்துக் கொண்டவன். அவன் தான் மரண தண்டனை வழங்கப்பட்டவன். அதை நீங்கள் மனதில் வைத்துக்கொள்ளவேண்டும்.

அடுத்து மண்டல் குழுஇந்த நாட்டில் 52 சதமாக இருக்கிற பிற்படுத்தப்பட்ட மக்களினுடைய உரிமைக்காக பரிந்துரை செய்யப்பட்ட மண்டல் குழு பார்ப்பனர்களால் எதிர்க்கப்பட்டதாக நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். ராஜீவ் காந்தியும் அதை எதிர்த்தவன். மண்டல் நிறைவேற விடமாட்டேன் என்று சொன்னவன் ராஜீவ் காந்தி. பெரும்பான்மையான பிற்படுத்தப்பட்ட மக்களின் உணர்வுகளுக்கு எதிராக இருந்தவன்.

ராஜீவ் அடிப்படை அறநெறியிலாவது நேர்மையானவனாஜான் நீல் என்பவன்,இங்கிருந்து இந்திய அரசால்ஒரு விடுதலைப் புலி வீரன் அங்கு அனுப்பப்பட்டான். சில செய்திகளைப் பற்றி விளக்கம் கேட்டு வரகருத்து கேட்டு வர அனுப்பப் பட்டான். அனுப்பப்பட்ட அதே தூதுவனைஅதே அரசு அதே அரசப் படைகள் சுட்டுக் கொன்றன. ராஜீவ் காந்திப் படைதான் சுட்டுக்கொன்றது. சினிமாவிலெல்லாம் பார்த்திருக்கிறோம்,கட்டபொம்மன் சொல்லுவான் தூதுவனாக வந்ததால் உன்னை உயிரோடு விடுகிறேன் எட்டப்பா என்று. இராமாயணத்தில் இராவணன் சொல்லுவான்அனுமா நீ தூதுவனாகவந்ததால் உயிரோடு விடுகிறேன் என்று. ஆனால் தூதுவனைக் கொன்ற துரோகி இராஜீவ் காந்தி. அது மட்டுமல்லஅறநெறிக்குப் புறம்பாக என்பது சாதாரணமானது அல்ல.

இலங்கைக்கு அனுப்பப்பட்ட இந்திய அமைதிப் படையின் தலைமைத் தளபதியாக இருந்த ஹர்சரத் சிங் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். இண்டர்வென்சன் ஆஃப் இந்தியா இன் சிறீலங்கா’ என்ற புத்தகம். அதில் பல செய்திகள் இருக்கின்றன. நாங்கள் கூட புத்தகம் போட்டு விற்றுக்கொண்டு இருக்கின்றோம், ‘ஒப்பந்தங்களை சீர்குலைத்தது யார்?’ என்ற நூலை பெரியார் திராவிடர் கழகத் தோழர்.விடுதலை இராஜேந்திரன் எழுதிய நூல்அதை விற்றுக் கொண்டிருக்கிறோம். அதைப் படித்துப் பாருங்கள். அதில் பல செய்திகள்அதில் ஒன்று ஹர்சரத் சிங் அங்கு தலைமைத் தளபதியாக இருந்தபோது 1987-யில் போடப்பட்ட ஒப்பந்தத்தின் கூறுகள் கூட நிறைவேற்றப்படவில்லை. அதற்காக எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள்போராட்டம் தொடங்கவிருக்கிறார்கள். திலீபன் நாளை போராட்டம் தொடங்கப் போகிறார்

அது குறித்து பிரபாகரனிடம் பேசுவதற்கு ஹர்சரத் சிங்விரும்புகிறார். பிரபாகரன் சந்திக்க இருக்கிறார். அப்போது இலங்கையிலிருந்த இந்தியத் தூதர் தீட்சித்ஹர்சரத் சிங்கிற்கு தொலைபேசியில் சொல்கிறான், ‘இன்று பேசவருகிற போது பிரபாகரனை சுட்டுவிடு’ என்று. அவர் மறுக்கிறார். நான் அறநெறி பிறழாத இராணுவ வீரன்,வெள்ளைக் கொடியின் கீழ் பேசுகிற போது சுடமுடியாது என்று சொல்கிறார். மீண்டும் கேட்கிறார். அதன்பின் தன்னுடைய தலைமை தளபதி திபீந்தர் சிங்கைக் கேட்கிறார்.மறுத்துவிடு என்று சொல்லிவிடு. அப்படியெல்லாம் அறநெறி பிறழ்ந்து செய்யமுடியாதுஎன்று சொல்கிறார். மீண்டும் தீட்சித்துக்கு முடியாது’ என்று சொல்கிறார்.

அப்போது தீட்சித் சொல்கிறான், ‘இதை நான் சொல்லவில்லைதலைமை அமைச்சர் பிரதமர் ராஜீவ் காந்தி சொன்னது’ என்று. இதை தனது நூலில் எழுதி இருக்கிறார் ஹர்சரத் சிங். இந்த நாட்டின் படைத் தளபதி அப்போது நடந்த செய்தியை தனது நூலில் பதிவு செய்திருக்கிறார். அந்த நூல் இரண்டாண்டுகளாக இந்தியாவில் உலவுகிறது.அறநெறி பிறழ்ந்து உங்களை நம்பிப் பேச வந்தவனைச் சுடத் துணிந்த அயோக்கியன் இராஜீவ் காந்தி இல்லையாஅப்போது அந்தத் தளபதி இராஜீவ் சொல்லைக் கேட்டிருந்தால் பிரபாகரன் நமக்கு இல்லைஈழத்தமிழர்களுக்கு இல்லை. அப்படிப்பட்ட துரோகி அவன். விமானம் ஓட்டிக்கொண்டிருந்தவன் நேரடியாக பதவிக்கு வந்து உட்காருகிறான். தன்னுடைய தாய்தனக்குப் பதவி வரக் காரணமாக இருந்தவள்,அவரைக் கொல்லப்பட்டதற்கு அமைக்கப்பட்ட ஆணையம் பரிந்துரை செய்கிறது, ‘இவன் தான் காரனமாக இருக்கக் கூடும் விசாரிங்கள்’ என்று ஆர்.கே.தவானைக் காட்டுகிறது.

ஆனால் அவரை தனது கட்சிக்குப் பொது செயலாளராக நியமிக்கிறார் இராஜிவ் காந்தி. அதுமட்டும் இல்லை. இப்படிப்பட்ட ஆணையங்களின் அறிக்கையை நாடாளுமன்றத்தில் வைக்கவேண்டியதில்லை என்ற புதிய சட்டம் ஒன்றை அதற்காகக் கொண்டுவருகிறார். இப்படி தன் தாய்க்கே துரோகம் செய்த துரோகி அவன்.

ஒவ்வொன்றாக சொல்லிக்கொண்டு போனால்ஏராளமான குற்றச்சாட்டுகளைச்சொல்லலாம். அதுமட்டுமில்லை இங்கிருந்து அமைதிப் படையை அனுப்புகிறேன் என்று சொல்லிஎதிரிக்கும் எதிரிக்கும் உடன்பாடு பேசப்போன இவன் ஒரு உடன்பாடு போடுகிறான். இரண்டு பேரையும் உட்கார வைத்தா போட்டார்கள் உடன்பாட்டை? 1987ஒப்பந்தத்தில் யார் கையெழுத்து போட்டிருக்க வேண்டும்இந்தப் பக்கம் இலங்கை குடியரசுத் தலைவர் என்றால் அந்தப் பக்கம் பிரபாகரன் கையெழுத்து போட்டிருக்க வேண்டும். அப்படித்தானே நார்வே செய்தது. ஆனால் இராஜீவ் ஒரு பக்கம் கையெழுத்தாம் அவர் ஒரு பக்கம் கையெழுத்து போட்டு நிறைவேற்றி விட்டு அதில் சொன்னதைக் கூட நிறைவேற்றாமல்அமைதிப்படை என்ற பெயரால் அனுப்பப்பட்டது நம்முடைய தமிழர்களை தமிழர்களுக்குப் பாதுகாப்பாக இருப்பவர்களைக்கொல்வதற்கு.

1987-யில் போட்ட ஒப்பந்தத்தை சிவசங்கர மேனன் இலங்கைக்குப் போய்விட்டு இப்போது தான் பேசுகிறார். 1987 ஒப்பந்தத்தை நிறைவேற்ற வேண்டும் என்று 22ஆண்டுகளுக்குப் பின்னாடி இப்ப கேட்டிருக்கிறார். கலைஞருக்கு 1985-யில் கொடுத்தபேட்டி இப்பொழுது நினைவிற்கு வந்ததைப் போல, 1987 ஒப்பந்தம் இப்பொழுது தான்இவர்களுக்கு நினைவிற்கு வந்திருக்கிறது. சரி அந்த ஒப்பந்ததைப் போட்டு அனுப்பினாயேஎன்ன அந்த ஒப்பந்தத்தை நிறைவேற்ற முயற்சியெடுத்துக் கொண்டாய்ஒப்பதத்தின் கூறு இதுவரை ஏதாவது நிறைவேற்றப்பட்டிருக்கிறதா?வடக்கு கிழக்கு மாகாணங்களை ஒரே நிலப்பகுதியாக ஆக்கப்படவேண்டும் என்று ஒப்பந்தம் சொல்கிறது. அதை நிறைவேற்ற இந்தக் காங்கிரசுஇந்த இந்திய அரசு,அதற்காக உயிர்தியாகம் செய்த’ ராஜீவ் காந்தியின் நினைவாக என்ன செய்திருக்கிறார்கள் இது வரைஇந்திய அரசின் ஒப்புதல் இல்லாமல்இந்தியாவிற்கு எதிரானவர்களை கால் வைக்க விடமாட்டோம் என்று அவர்கள் ஒப்புக்கொண்டுஇருக்கிறார்கள். இப்போது சீன நாடு இலங்கையில் கால்வைத்து விட்டது. நீ கொடுத்தகட்சத்தீவில் வரலாம். ஏன் என்றால் இப்படித்தான் பர்மா/மியான்மருக்கு ஒரு தீவைக்கொடுத்தார்கள். கோகோ தீவு என்று ஒரு தீவு. அங்கே இப்போது அந்தமானுக்குப் பக்கத்தில் சீன நாட்டு கப்பற்படை வந்து அமர்ந்திருக்கிறது. அதுபோல் கட்சத்தீவிற்கு வராது என்று என்ன நிச்சயம்இதுவரைக்கும் கேட்டிருக்கிறீர்களா?

இப்படிப்பட்ட துரோகங்களைப் புரிந்த அந்த ராஜீவ் காந்திக்கு நாட்டுப்பற்றுள்ள இந்தியன் யாராவது மரண தண்டனை கொடுத்திருக்க வேண்டும். என் நாட்டின் பாதுகாப்பிற்குக் குந்தகம் விளைவித்தாய்இடஒதுக்கீட்டுக்கு எதிராக இருந்தாய். இந்த நாட்டு பிற்படுத்தப்பட்டவர்களால் மரண தண்டனை கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். தாய்அறநெறி என்று பேசுபவன் எவனாவது மரண தண்டனை கொடுத்திருக்க வேண்டும். நீ சதிகாரனாககொலைகாரனாககொலை செய்ய முயற்சித்திருக்கிறாய். நாம் செய்யத் தவறிய செயலைஒரு ஈழத்தமிழன் செய்திருக்கிறான் என்று வைத்துக்கொண்டால் அதற்காக மகிழ்ச்சியடைய வேண்டும்ஒரு ராஜீவ் காந்திக்கு இவர்களுக்கு இத்தனை ஏக்கம் வருகிறதே! ஆறாயிரம் ஈழத்தமிழர்களைக் கொன்றது யார்அமைதிப்படைதானேஆயிரம் பெண்களைக் கற்பழித்தவன்கொடுமைப்படுத்தியவன் கெடுத்தவன் யார்அமைதிப்படை தானேவீதியில் படுக்க வைத்து மேலே டேங்கை ஓட்டினார்களேதுடிக்காதா நெஞ்சம்ஒரு ஈழத்தமிழன் செய்திருந்தால் நியாயம்விடுதலைப் புலிகள் செய்யாமல் இருந்தால் குற்றம். செய்திருந்தால் பாராட்டுகிறோம்செய்யாமலிருந்திருந்தால் கண்டிக்கிறோம் என்று நாம் பேசியிருக்க வேண்டும். அதுதான் தமிழ்நாட்டில் முழங்கியிருக்கவேண்டிய கூற்று. நாம் துன்பியல் நாடகம்வருத்தப்படுகிறோம் என்று பேசி தவறு செய்துவிட்டோம். இந்தக் குற்றத்தைச் சொல்லிச் சொல்லித்தான் மறக்க மாட்டோம் மன்னிக்க மாட்டோம் என்று காங்கிரஸ்காரன் சொல்கிறான்.

கலைஞருக்கு எவ்வளவு பெருந்தன்மை. இவர் மறப்போம் மன்னிப்போம்அவன் மறக்க மாட்டோம் மன்னிக்க மாட்டோம். தன்னுடைய மகன் ஸ்டாலினைக் காப்பாற்றநெருக்கடி நிலையில் சிறையில் உயிர் கொடுத்த சிட்டிபாபுபாலகிருஷ்ணன் செத்துஇரண்டரை ஆண்டில் காங்கிரசுடன் கூட்டு சேர்ந்தாரேப்பாஅந்தப் பெருந்தன்மை ஏன்காங்கிரசுக்காரனுக்கு வரவில்லை என்று கேட்கிறேன்.

இப்படிப்பட்ட அவர்களுடைய பொய்முகத்தை நாம் புரிந்தாக வேண்டும். ஆம்கொலை செய்திருந்தால் நியாயம். ஏனென்றால் அந்த ஒப்பந்தத்தை ஏற்று புதுமலையில் பிரபாகரன் சொன்னார், ‘ஆயுதங்களை ஒப்படைக்கிறோம்ஆயுதங்களை உங்கள் கையளித்த நிமிடத்திலிருந்துஈழத்தமிழர் பாதுகாப்பை இந்தியாவிடம் ஒப்படைக்கிறோம். இந்திய அரசின் நேர்மையை நான் நம்புகிறேன்’ என்று சொன்னார். ஆனால் நீங்கள் நம்பிக்கை துரோகம் செய்தீர்களா இல்லையா?

தனது உயிருக்கு உயிரான மக்களைக் காப்பாற்ற ஆயுதம் எடுத்தார். ஆயுதம் எவன் எடுப்பான்இரக்கம் மிகுந்தவன் தான் ஆயுதம் எடுப்பான். சாதாரண மனிதர்கள்,ஒருவன் தாக்கப்பட்டால்அநியாயமாக உதைக்கப்பட்டால்இரக்கம் இருக்கிறவன் அக்கிரமம் என்று சொல்லிவிட்டு போய்விடுவான். மீறிப்போனால் கண்ணீர் விடுவான். இவன் சாதாரண இரக்கம் உள்ளவன். இரக்கம் மிகுந்தவன் தான் தட்டிக்கேட்கப் போவான்தடுக்கப் போவான்மீறிப்போனால் ஆயுதம் எடுத்தாவது போராடுவான். அது தான் முத்துக்குமார் சொன்னார்அறத்திற்கே அன்பு சார்பென்ப அறியார்மறத்திற்கும் அஃதே துணை என்று சொன்னார். முத்துக்குமார் தனது கடிதத்தில் அறத்திற்கே அன்பு சார்பென்ப’ என்று திருக்குறளை நினைவூட்டுகிறார். வள்ளுவரே சொல்லியிருக்காரப்பா,அறத்திற்கே அன்பு சார்ப என்ப அறியார்மறத்திற்கும் - விடுதலைப்புலிகள் போராட்டத் திற்கும் அன்பு தான் காரணம் என்று. அவர்கள் இரக்கம் மிகுந்த காரணத்தால் ஆயுதம் எடுத்துப் போராடு கிறார்கள்.

எனவே அந்தப் போராளிகளினுடைய நம்பிக்கைக்கு துரோகம் செய்துதங்கள் உயிருக்கு மேலாக நேசிக்கிற தங்கள் மக்களை காப்பதற்குகையில் வைத்திருந்தஆயுதத்தை உன் நேர்மையின் மீது நம்பிக்கை வைத்து ஒப்படைக்கிறோம் என்று சொல்லிவிட்டு கொடுத்த அந்த நம்பிக்கைக்கு துரோகம் செய்த துரோகியல்லவா!

இந்திய மண்ணில் வந்து கொலை செய்யலாமாகாங்கிரஸ்காரன் கேட்கிறான். இலங்கை கப்பற்படை வீரன் இராஜீவை அடித்தானேஒருவேளை ஓங்கி அடித்திருந்தால்செத்துப் போயிருப்பான். அந்த கப்பற்படை வீரனிடம் கேட்டபோது,அவன் சொன்னான், ‘நான் துடைப்பத்தில் அடிக்கவேண்டுமென்று கருதினேன்கெட்ட வாய்ப்பாக என் கையில் துப்பாக்கியிருந்தது’ என்று.

காங்கிரசுக்காரன் வாதத்தைச் சொல்கிறோம், ‘நான் ஆயுதம்கொடுக்கவில்லையென்றால் அவன் ஆயுதம் கொடுப்பான்’ என்று சொல்கிறானே, ‘நாங்கள் கொல்லாட்டி பஞ்சாப்காரன் கொன்றிருப்பான்அப்ப நாங்கள் செஞ்சது தப்பில்லை’ என்று சொன்னால் ஒத்துக்கொள்வானா அவன்இப்படிப்பட்ட சொத்தை வாதங்களை வைத்து நம்மை ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள். அந்தக் காங்கிரசுக்காரர்கள் இந்த மண்ணில் இருக்கக் கூடாது. இருக்கக் கூடாது என்றால் ஆட்சியில்பதவியில் எந்த இடத்திலும் இருக்கவிடக் கூடாது என்பதுதான் எங்களுடைய கருத்தாக நாங்கள் மூன்று இயக்கங்களும் இப்பொழுதைக்கு இணைந்து இருக்கிறோம்.

ஆனால் தொடர்ந்து ஈழத்தமிழர் ஆதரவு என்ற முழக்கம் போதாது. ஈழத்தமிழர்கள்,இலங்கைத் தமிழர்கள் எப்படி வேண்டுமானால் இருக்கட்டும். எப்படி அவர்களைப் பாதுகாக்க முடியும்பாதுகாக்க வானத்திலிருந்து கடவுள் வருவாராதேவதூதன் வந்து காப்பாற்றுவானாஅவர்களைப் பாதுகாப்பதற்கு பலமான பாதுகாப்புக் கவசம்வேண்டும். அமைதியான ஒரு நாடாக இருந்திருந்தால் ஒரு கட்சி ஒரு இயக்கம் போதும். ஆயுதம் கொண்டு தாக்கப்படும்போதுஆயுதம் கொண்டு பாதுகாக்கின்ற ஒரு இயக்கம் தான் வேண்டும். அதற்குச் சரியான இயக்கமாக தொடர்ந்து போராடுகிற இயக்கமாக தமிழீழ விடுதலைப் புலிகள் தான் இருக்கிறது. ஈழத்தமிழர் ஆதரவு என்பதற்குச் சரியான பொருள் தமிழீழ விடுதலைப் புலிகளை ஆதரிக்கிறோம் என்பதுதான். நாம் அஞ்சியஞ்சிச் சொல்லி இனி பயன் இல்லை. அவர்களையும் ஆதரிக்க வேண்டும். ஆதரிப்பது இருக்கட்டும்அவர்கள் மீது தேவையில்லாமல் விதிக்கப்பட்டிருக்கும் தடை நீக்கப்படவேண்டும் என்பது முழக்கமாக இருக்கவேண்டும். தமிழீழ விடுதலைப் போராட்டத்தை அங்கீகரிக்க வேண்டும் என்று முழங்க வேண்டும்.

சிங்களவனுக்கு அநியாயமாக ஆயுதங்கள் கொடுக்கின்ற இந்திய அரசு எங்கள் அரசாக இருக்குமா என்ற அய்யம் வரவேண்டும்அய்யம் வந்தால் தான் முடிவுக்கு நாம் வரமுடியும். நம்ம நாடாக இருந்தால் கொடுப்பானா என்று சந்தேகிக்க வேண்டும்.சந்தேகிப்பதற்கு ஆயிரம் காரணம் இருக்கிறது. பக்கத்து நாடான வங்க நாட்டில் நடந்தவிடுதலைப் போருக்கு பாகிஸ்தானிலிருந்து பிரித்து நாடு கொடுக்க இந்திரா காந்தியுத்தம் தொடுத்தார்கள். அந்த நாட்டில் போராட்டம் நடந்த போது அங்கிருந்த சில மக்கள் அகதிகளாக இங்கு வந்தார்கள். அவர்களுக்கு உதவி செய்வதற்காக இந்த இந்திய அரசு நாம் எழுதிய ஒவ்வொரு கடிதத்திற்கும் அய்ந்து காசு வசூலித்தது. பலருக்கு நினைவிருக்கலாம். 15 காசு அஞ்சலட்டைக்கு கூடுதலாக காசு அஞ்சல் வில்லை ஒட்டவேண்டும். Refugee Relief Fund என்று தனியாக ஒரு முத்திரை ஒட்டவேண்டும் என்று வைத்திருந்தார்கள். நமக்கு எழுதுகிற கடிதத்திற்கெல்லாம் 25விழுக்காடு நாம் அவர்களுக்காக நாம் பணம் செலுத்தினோம். யாருக்குஇன்னொரு நாட்டிலிருந்து இந்த நாட்டிற்கு அகதிகளாக வந்தவர்களுக்காக இந்திய அரசு நம்மிடம் வசூலித்தது.

நமது தமிழக முதல்வராக அப்போது இருந்த கலைஞர், 6 கோடி ரூபாய் நிதியை வங்க அகதிகள் உதவிக்காக திரட்டிக் கொடுத்தார்தமிழ்நாட்டிலிருந்து. எழுபதுகளில் ஒரு பவுன் 150 ரூபாய்இன்றைக்கு 10,000 க்கும் மேலே. கணக்குப் போடுங்கள் அப்போது 6கோடி என்றால் இப்போது 100 கோடி ரூபாயுக்கும் மேல். குஜராத்தில் பூகம்பம்,தமிழ்நாட்டிலிருந்து நிதி போனது. நம்முடைய இரத்த உறவு ஈழத்தமிழனுக்காக நிதி திரட்டியபோது எத்தனை வெளிநாட்டுக்காரன்வேறு மாநிலத்துக்காரன் பணம் கொடுத்திருக்கிறான். எங்களுக்கு அய்யம் வராதாநாங்கள் வேறு அவர்கள் வேறு என்ற சிந்தனை வராதாஇந்த இந்திய அரசு என்ன முயற்சியை செய்திருக்கிறதுஅந்த வங்க அகதிகளுக்காக அத்தனை உதவி செய்தவன் ஈழத் தமிழ் அகதிகளுக்கு என்ன செய்தான்?

நான் கர்நாடக எல்லையில் இருக்கிறவன். ஒரு 50 கி.மீ அந்தப் பக்கம் போனால் திபெத்திய அகதிமுகாம் இருக்கிறது. அழகான வண்ணம் பூசப்பட்ட நிரந்தர கட்டிடங்கள்கான்கிரீட் கட்டிடத்தில் வங்கிகள் இருக்கிறதுவிளையாட்டுத்திடல் இருக்கிறது. 5000 ஏக்கர் அவர்களுக்கு ஒதுக்கித் தரப்பட்டிருக்கிறது. அந்த முகாமுக்குள் காவல்துறையை அவர்கள் அனுமதிப்பதில்லை. போகிற நமக்கெல்லாம் ஒரு மதுவைக் கொடுக்கிறார்கள். அவர்கள் பாணியில் அவர்கள் செய்து காய்ச்சிய மதுவை கொடுக்கிறார்கள். மதுவை விருப்பமானவர்கள் குடிக்கிறார்கள். அதைத் தடுப்பதற்கு,பார்ப்பதற்கு காவல்துறை அந்த முகாமுக்குள் நுழைந்துவிட முடியாது. அதே நாடு தானேஅவன் திபெத்தியன் கர்நாடகத்தில் இருக்கிறான். என் தமிழன் தமிழ்நாட்டில்வந்து இருக்கிறான். அந்த அகதி முகாமுக்குள் நாம் உள்ளே நுழைய முடியுமாநாம்பார்க்கப் போக முடியுமாஎத்தனைக் கொடுமை?

ஈழத்தமிழர்களுக்கு செங்கல்பட்டு முகம் என்ற சிறப்பு முகாம் ஒன்று இருக்கிறது. பல பேருக்குத் தெரிந்து இருக்காது. நமது மதிப்பிற்குரிய டாக்டர் கலைஞர் துவக்கி வைத்தது 1990-யில். குற்றமே செய்யாத ஈழத்தமிழனை புலிகள்’ என்ற சந்தேகத்தின் பேரில் பிடித்து வைப்பதற்குத்தான் தான் அந்த முகாம். 180 பேர் கடந்த ஆட்சியின் போது இருந்தார்கள். இந்தக் கொடுமைக்கார ஜெயலலிதா ஆகக் குறைத்தார் அந்த முகாமில் இருப்பவர்களை. இப்பொழுது திரும்ப 87 ஆகிவிட்டது. அவர்களைப் பார்க்க குடும்ப உறவுகள்மனைவி வந்தால் பார்க்க அனுமதிக்க மாட்டேன் என்கிறார்கள். அவர்களிலும் 18 பேர் விடுதலைப் புலிகள் என்று வேறு இடத்தில போட்டாச்சு. மீதியிருக்கிற 65 பேரைப் பார்க்கப் போகிற மனைவிகள்குழந்தைகள் மாதம் ஒருமுறை வந்து பார்த்துவிட்டுப் போகலாம். வெளிக்காற்றைச் சுவாசித்து ஆண்டுகள் 6ஆண்டுகள் ஆனவர்கள் எல்லாம் அங்கேயிருக்கிறார்கள். இப்படிப்பட்ட கொடுமைகள் நம் சொந்தங்களுக்கு நடக்கிற போதுஅதைச் செய்யச் சொல்லி நிர்பந்திக்கிற போது நாம் யோசிக்கிறோம்இது நம் அரசாக இருக்க முடியுமாநமக்கு அய்யம் வருகிறதல்லவாஇதை நாம் எப்படி வெளிக்காட்டப் போகிறோம்.

ஏற்கனவே சொன்னேன்வெளிநாட்டுக்காரன் நம்நாட்டில் வந்து கொலை பண்ணலாமா என்று கேட்கிறான். இதற்கொரு எடுத்துக்காட்டைச் சொல்லவேண்டும். இந்த நாட்டில் ஒரு கொடுமை நடந்ததுஜாலியன் வாலாபாக் படிகொலை. 1919-யில் 300க்கும் மேற்பட்டவர்களைக் கொன்றதாக ஆங்கிலேயன் சொன்னான்நாம் ஆயிரம் பேர் என்று சொன்னோம். அதைச் செய்தவனைக் கொல்லவேண்டும் என்று இந்த நாட்டு இளைஞன் அப்போது நினைத்தான். அவனை விடக் கூடாது என் நாட்டில் கொடுமைச் செயல் புரிந்தவனைக் கொல்லாமல் விடமாட்டேன்’ என்று 1919-யில் செய்த குற்றத்திற்காக, 1940-யில் இங்கிலாந்தில் போய்அங்கே ஒரு விடுதியில் நடந்த நிகழ்ச்சியில் போய் டயரைச் சுட்டுக் கொன்றான் உத்தம் சிங்.

அங்கே போய் உத்தம்சிங் சுட்டதுஜாலியன் வாலாபாக்கில் துப்பாக்கியில் சுட்ட டயரை அல்லஅதாவது ஜெனரல் டயர் இல்லை. நன்றாக ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். சுட ஆணையிட்டவனின் பெயரும் டயர்தான். அதாவது மைக்கேல் டயர். நல்ல எலெக்ட்ரீசியனாக இருந்தால் ஷாக் அடிக்கிற போது சுவிட்சை ஆஃப் பண்ண மாட்டான்மெயினைத் தான் போய் ஆஃப் பண்ணு என்பான். அதுபோல மெயினை ஆஃப் பண்ணினான். உத்தரவு போட்டவனை போய்க்கொன்றான். சுட்டவன் என்ன பண்ணுவான் பாவம்எய்தவன் இருக்க அம்பை ஏன் நோக வேண்டும்அதனால் எய்தவனைப் போய்க் கொன்றான். அதற்கு ஆணையிட்ட கவர்னரைத்தான் கொன்றான்.

21 ஆண்டுகள் கழித்து இங்கிலந்து மண்ணில் போய் இந்தியாவில் செய்த குற்றத்திற்காக கொலை செய்தான். அவனைப் பாராட்டுகிறது நம் இந்திய நாடு. 40-யில் அடக்கம் செய்யப்பட்ட அவனது உடலை 1974-யில் எடுத்துக்கொண்டு வந்தார்கள். மிச்சங்களைஎச்சங்களை மீதியிருந்த பகுதிகளை இந்தியாவிற்குக் கொண்டுவந்தார்கள்.

கொண்டு வந்த மிச்சங்களை வரவேற்கப் போனவர்கள் யார் தெரியுமாஅப்போது காங்கிரசு தலைவராக இருந்தபின்னால் குடியரசுத் தலைவரான சங்கர் தயாள் சர்மாவரவேற்கப் போனார். அப்போது பஞ்சாப் முதல்வராக இருந்தபின்னால் குடியரசுத் தலைவரான ஜெயில் சிங் வரவேற்கப் போனார். அந்த எச்சங்கள் அடங்கிய பெட்டிக்கு மலர்வளையம் வைத்தவர் யார் தெரியுமாஇந்திய நாட்டின் தலைமை அமைச்சராக இருந்த இந்திரா காந்தி. இந்த நாட்டில் நடந்த குற்றத்திற்காக அடுத்த நாட்டில் 21ஆண்டுகள் கழித்து கொலை செய்தவனைத் தியாகி என்று நீங்கள் பாராட்டலாம். ஈழத்தில் 6000, 7000 பேரைக் கொன்றவனை ஆயிரம் பெண்களைக் கெடுக்கப்பட்டதற்குக் காரணமானவனைஉத்தம்சிங் போல் ஈழத்தமிழன் எவனாவது சுட்டுக் கொல்கிறான். உங்கள் நியாயத்தின் படி இது நியாயம் தானே. உனக்கு அவன் தியாகி தானே. எப்படி அவனைக் குற்றவாளி என்று சொல்கிறீர்கள்?

அதனால்தான் சொன்னேன் ஈழத்தமிழனென்றாலும் எவனாக இருந்தாலும் அதை செய்திருக்க வேண்டும். நல்லது தான். புலிகள் செய்யாமல் இருந்திருந்தால் குற்றம் என்று சொல்கிறோம். ஏனென்றால் அவர்களுக்கானவர்கள் நீங்கள் தான். அவர்களுக்குப் பாதுகாப்பானவர்கள் நீங்கள் தான். புலிகள் செய்யாமல் இருந்தால் கண்டிக்க வேண்டும். இந்த நிலைப்பாடை நாம் எடுக்க வேண்டும். இந்த நிலையில் தான் ஏற்கனவே சொன்னேன். அவர்கள் எல்லாம் நம்மை தமிழனென்று மதிக்கவில்லை. அவன் பாதிக்கப்பட்ட போது நாம் நிதி அனுப்பினோம்நமக்கு அவன் அனுப்ப மாட்டான். நாட்டில் எது நடந்தாலும் தமிழர்களாகிய நாம் இந்தியர்கள் என்று கருதிக்கொண்டு இருக்கிறோம். ஆனால் இந்தியாவில் இருக்கும் வேறு எவனும் அகில இந்தியாபேசுகிறவன் கூட அவனை அவன் தேசிய இனத்தின் பெயரில் தான் இனம்காண்கிறான். நான் இந்திக்காரன்நான் பெங்காளி. அதனால் தான் காங்கிரசு கட்சியினுடைய முதல்வராக இருந்த சித்தார்த்த சங்கர் ரே வங்க தேசத்தில்தன் மொழி பேசுகிற மக்கள் பாதிக்கப்பட்ட போது அவன் சொன்னான், ‘இந்திராவே நீ படை அனுப்புகிறாயாநான் என் மாநிலத்தின் ரிசர்வ் போலீசை அனுப்பச் சொல்லவா’ என்று. டாக்டர் சித்தார்த்த சங்கர் ரே அகில இந்திய காங்கிரசு கட்சியைச் சேர்ந்தவர். அவனும் நம்மை மாதிரி மாநிலக் கட்சியைச் சார்ந்தவன் அல்ல. அகில இந்திய கட்சியில் இருக்கிற இன உணர்வு ஏன் நமக்கு இல்லை?

1972-யில் செல்வா தமிழ்நாடு வந்தார். பெரியாரிடம் தனது திட்டங்களைப் பற்றிச் சொல்லி ஆதரவு கேட்டார். அந்த நாட்டு மக்கள் தலைவர் செல்வநாயகத்துக்கு நமதுதலைவர் சொன்ன பதில் ஓர் அடிமைக்கு எப்படி இன்னோர் அடிமை எப்படி உதவ முடியும்?’. நாம் அடிமைகளாக இருக்காமல் இருந்தால் தான் அவர்களுக்கு உதவ முடியும். நாம் அடிமைகளாக இல்லாமல் இருப்பதற்கு என்ன முயற்சி செய்திருக்கிறோம் இது வரைஇனிமேலாவது செய்வோம் என்று சொல்லி கேட்டுக்கொள்வது தான் நமது கோரிக்கை.

நான் கூட தோழர் கிட்டே பேசினேன்ஐ.நா மன்றம் சொல்லியிருக்கிறதுஒவ்வொரு தேசிய இனத்திற்கும் தன்னுடைய சுயநிர்ணய உரிமையைதன்னுடைய அரசை நிர்ணயித்துக்கொள்ள உரிமை உண்டு. எனவே இங்கிருக்கிற வழக்கறிஞர்கள் வழக்காடலாம்ஐ.நாவின் பிரகடனத்தை நிறைவேற்றுதமிழ்நாட்டுத் தமிழனிடம் வாக்கெடுப்பு நடத்து. நீ இந்தியாவில் தொடர்ந்து இருக்க விரும்புகிறாயாஇல்லையா?ஒரு வாக்கெடுப்பு நடத்தலாம். வழக்கு போடுவோம். அல்லது லயோலா கல்லூரியைச் சேர்ந்த பேரா.ராஜநாயகத்தைக் கேட்டுக் கொள்வோம்மக்களிடம் கருத்துக் கணிப்பு நடத்துங்கள். இப்படிப்பட்ட இந்திய அரசோடு இணைந்து இருக்க தமிழர்கள் விரும்புகிறார்களா இல்லையா என்பதைத் தெரிந்தாவது வெளியிடுங்கள். தெரியட்டும் அப்பொழுதாவது தெரியட்டும்.

1947-யில் பாகிஸ்தான் காஷ்மீருக்குள் வந்தபோது, ‘அவர்கள் இந்தியாவோடு இருக்க விரும்புகிறார்களாபாகிஸ்தானுடன் இருக்க விரும்புகிறார்களாதனிநாடாக இருக்க விரும்புகிறார்களாவாக்கெடுப்பு நடத்துங்கள்’ என்று ஐ.நா மன்றம் இந்தியாவிடம் சொன்னது. 1949, ஜனவரி-1-யில் நடத்தவேண்டிய வாக்கெடுப்பை 60 ஆண்டுகாலமாக நடத்தவே இல்லை இந்திய அரசு. இதற்கு மேலே நடத்திடவா போகிறதுநாம் நடத்தியாவது அறிவிப்போம். நமது உணர்வுகளை வெளிப்படுத்துவோம்.

சத்தியமூர்த்தியைக் குறித்து குத்தூசி குருசாமி அழுகிய முட்டை அரையணாவிற்கு ஆறு’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதினார். தோழர்களே முட்டையால் அடிப்பதால் மனிதன் சாகமாட்டான். அதற்காக முட்டையை வீணாக்காதீர்கள். அதுசத்துள்ள உணவு. அழுகிய முட்டையைப் பயன்படுத்தலாம் அரையணாவிற்கு ஆறு என்று நினைத்துவிடாதேவேண்டாம். யார் மீது வீசினாலும் சத்தியமூர்த்தி மீது வீசாதீர்கள்’ என்று எழுதினார்கள். அடுத்த வாரமே சத்தியமூர்த்தி மீது அடித்தார்கள். எத்தனையோ போராட்ட முறைகள் இருக்கின்றன. காங்கிரசுகாரன் போகிறபோது, ‘அதோ காங்கிரசுகாரன் போறாங்கிறது கூட ஒரு போராட்டம்தான். அவனை அவமானப்படுத்த வேண்டும். வெட்கப்படவேண்டும் வீதியில் நடப்பதற்கு. எத்தனையோ போராட்ட முறை எதிர்ப்புகளைப் பண்ணுவோம். எதிர்ப்புகளைக் காட்டுகிற புதுவழியாக நாங்கள் 20-ஆம் தேதி நடத்தவிருக்கிற மத்திய அரசின் அலுவலகங்களை இழுத்துப் பூட்டுவது என்ற போராட்டத்திற்கு ஆதரவு கொடுங்கள்.

(15.02.2009 அன்று சென்னை எம்.ஜி.ஆர் நகரில் பெரியார் திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற மாவீரன் தோழர் முத்துக்குமாரின் வீரவணக்கக் கூட்டத்தில் கொளத்துார் மணி அவர்கள் ஆற்றிய உரை)

 

http://kolathurmani.blogspot.ca/2011/06/blog-post.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.