Jump to content

ராஜீவ் கொலை யாருக்கு துன்பியல் சம்பவம்? சில சதிக்கோட்பாடுகள்!

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ராஜீவ் கொலை யாருக்கு துன்பியல் சம்பவம்? சில சதிக்கோட்பாடுகள்!

வரலாற்றின் வழிநெடுகே, எப்போதோ நடந்த ஒரு சம்பவம் எப்போதோ நடக்கப் போகும் மற்றொரு சம்பவத்தை பாதித்தோ, வடிவமைத்தோ வரலாற்றின் போக்கையே மாற்றிவிடுவதை நாம் பார்க்கிறோம். முதல் மற்றும் இரண்டாம் உலகப்போர்கள், இந்திய விடுதலைப் போர், ஜெர்மனியில் ஹிட்லரால் கையாளப்பட்ட யூத அழிப்பு என இவை அனைத்துமே வேறு எங்கோ எப்போதோ நடந்த சம்பவங்களின் எதிரிவினைகள் தான். சமகாலத்தில் சொல்லவேண்டுமானால் அமெரிக்காவில் நிகழ்ந்த ரெட்டை கோபுர இடிப்பு சம்பவத்தைச் சொல்லலாம். சி.ஐ.ஏ தன் சுயநலத்திற்காக பின்லாடனையும் அவர் பயங்கரவாதத்தையும் ஆதரித்து வளர்த்தெடுக்கும் போது, ஒருநாள் அமெரிக்காவிற்கும் அவரால் ஆபத்து வரும் என சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. ஆனால் வந்தது! இந்த வரலாறுகளையெல்லாம் தெரிந்தவர்கள் இன்று தனக்கு ஆபத்து என்றவுடன் அமெரிக்கா தானே வளர்த்த பின்லாடனை பயங்கரவாதி என அறிவித்துக் கொன்றபோது ஆச்சரியத்தில் கொஞ்சமாய் சிரிக்கவும் செய்கிறார்கள்! வரலாறு தெரிந்தவர்களுக்கு நிகழ்கால சம்பவங்களின் 'ட்விஸ்ட்'கள் எப்போதுமே ஒரு ஆச்சரியம் தான். இதுபோல் நமக்கு மிகவும் நெருங்கிய தொடர்பு கொண்ட சம்பவம் ஒன்றும் உண்டு. ஆனால் அதை வரலாற்று ரீதியாக, அறிவு ரீதியாக அணுகாமல் உணர்வு ரீதியாக மட்டுமே அணுகி உண்மைகளை தொலைத்துக்கொண்டெ இருக்கிறோம்.

2009 மே மாதம் ஈழத்தில் நிகழ்ந்த இன அழிப்பிற்கான வேர்கள் இந்திய-இலங்கை ஒப்பந்தம் வரை அதாவது 1987 வரை பின்னோக்கி நீண்டிருந்தாலும், அவை பிரம்மாண்டமாக வளரத் துவங்கியது மே21, 1991ல் இருந்துதான். சுருக்கமாய்ச் சொல்லவேண்டுமானால்  ஈழப்போராட்டத்தின் இறுதித் தோல்வி 2009ல் இலங்கையில் ஏற்படவில்லை, 1991ல் ஶ்ரீபெரும்புதூரிலேயே தொடங்கிவிட்டது!

ராஜீவ் கொலைக்கு வெளிப்படையான காரணமாகச் சொல்லப்படும் 'அமைதிப்படையின் அட்டூழியங்களுக்கான விடுதலைப்புலிகளின் பழிவாங்கும் நடவடிக்கை' என்பதை அவ்வளவு சுலபமாக நம்மால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. இந்திய துணைக் கண்டத்தில் 'ஈழம்' என்ற தனிநாடு ஒன்றை அமைப்பதற்கான முயற்சியில் இருக்கும் ஒரு இயக்கம், அத்துணைக்கண்டத்தின் 'நாட்டாமை'யான இந்தியாவின் பிரதமரை வெறும் பழி உணர்ச்சியில் கொன்றிருக்குமா? ஒருவேளை கொன்றால் அது வருங்காலத்தில் அந்த இயக்கத்திற்கு அரசியல் ரீதியாக பல்வேறு சிக்கல்களை உண்டாக்கும் என்பது அவர்களுக்குத் தெரிந்திருக்காதா? அது கூட தெரியாத அப்பாவிகளாக அவர்கள் இருந்திருந்தால் ஒரு நாட்டின் (இலங்கை) ராணுவத்தை எதிர்த்து இவ்வளவு பெரிய தனி இயக்க ராணுவத்தை கட்டமைத்திருக்க முடியுமா அல்லது தனி ராஜாங்கமே நடத்தியிருக்கத்தான் முடியுமா?  

ஜெயின் கமிஷன் அறிக்கையில் சுப்பிரமணியஸ்வாமி, சந்திராசாமி ஆகியோர் விசாரிக்கப்பட வேண்டியவர்கள் எனக் குறிப்பிட்டிருந்தபோதும் அவர்களை சி.பி.ஐ விசாரிக்காமல் விட்டதும், ஊடகங்கள் அதைப்பற்றி இன்றளவும் பேசாமல் இருப்பதும், சோனியாவே அதைப்பற்றி மவுனம் காப்பதும் கண்டிப்பாக ராஜீவ் கொலையில் அவர்களுக்கு தொடர்பிருக்கலாம் என்பதை மட்டுமல்லாமல் இது ஒரு சர்வதேச 'high profile' கொலை என்பதையும் தெளிவாகக்  காட்டுகிறது. (இது பற்றி திருச்சி வேலுசாமி தன் தூக்குக் கயிற்றில் நிஜம் என்ற ராஜீவ் கொலை பற்றிய நூலில் தெளிவாக ஆதாரங்களுடன் விளக்குகிறார்.) ஆனால், அதனால் மட்டும் சிலர் சொல்வதைப் போல் விடுதலைப்புலிகளுக்கு ராஜீவ் கொலையில் முற்றிலும் தொடர்பு இல்லை, அது முழுக்க முழுக்க சுப்பிரமணியசுவாமி போன்றோரின் செயல்தான் என்பதையும் நம்மால் முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஏனெனில் ராஜீவ் கொலையைப் பற்றி நேரடியாக பிரபாகரனிடம் கேள்வி எழுப்பட்டபோது, அது ஒரு துன்பியல் சம்பவம் என்றும் அதைப் பற்றி தாம் பேச விரும்பவில்லையென்றும் சுருக்கமாக முடித்துக்கொண்டாரேயொழிய குற்றச்சாட்டை மறுக்கவில்லை. ஆக இப்படி குழப்பங்களால் முடியப்பட்டிருக்கும் ராஜீவ் கொலையின் மர்மங்களையொட்டிய செய்திகளையும், உண்மைகளையும் வைத்து அலசினால் சில சதிக்கோட்பாடுகளை (conspiracy theory) நம்மால் யூகத்தின் அடிப்படையில் வரையறுக்க முடிகிறது

இந்திராகாந்தி அரசு புலிகளுக்கு ஆயுதமளித்ததும் பயிற்சி அளித்ததும் நம் அனைவருக்குமே தெரியும். இந்திராகாந்தி இயல்பாகவே இந்தியாவை இந்தியத் துணைக்கண்டத்தின் 'பெரியண்ணனாக' ஆக்குவதில் ஈடுபாடு கொண்டவர். அதுமட்டுமல்லாது சீனாவின் அச்சுறுத்தலை சமாளிக்க இந்தியாவுக்கு 'ரவுடி' என்ற முகம் வேண்டும் என்பதில் நம்பிக்கை கொண்டவர். ஆக தனக்கு அடங்காத இலங்கையை அச்சுறுத்தவும், சீனாவை மிரட்டவும் அமெரிக்கா பின்லாடனை வளர்த்ததைப் போல விடுதலைப் புலிகளை வளர்க்கிறார். அவர் எதோ ஈழத்தின் மேல் உள்ள பாசத்தில் புலிகளுக்கு ஆதரவாக இருந்தார் என நினைப்பது அபத்தமாகவே படுகிறது. ஏனெனில் எந்த பெரிய நாடும் கொள்கை கோட்பாடுகளில் சம்பந்தமேயில்லாத ஒரு போராளி இயக்கத்திற்கு ஆதரவு அளிக்கிறதென்றால் ஒருநாள் தன் நோக்கம் முடிந்தபின் அவ்வியக்கத்தை 'பலியிடப்' போகிறது என்றே அர்த்தம். அப்படி இந்திராவால் வளர்க்கப்பட்ட பிரபாகரனுக்கு, பின் எம்.ஜி.ஆரின் ஆதரவும் முழுமையாகக் கிடைக்கிறது. இங்கே ஒரு விசயத்தை நாம் கவனிக்க வேண்டும். எம்.ஜி.ஆர் தீவிர ஈழ ஆதரவாளர் எனச் சொல்வதும் கூட மிகைப்படுத்தப்பட்ட விசயமாகவே தெரிகிறது. ஏனெனில் மத்திய அரசு புலிகள் ஆதரவு நிலையில் இருந்தவரை எம்.ஜி.ஆர் புலிகள் ஆதரவு நிலைப்பாட்டில் இருந்ததையும், இந்திராவின் மரணத்திற்குப் பின் ராஜீவின் புலிகள் எதிர்ப்பு நிலைப்பாட்டுக்கு அவர் தாவிவிட்டதையும் நாம் அவரது ஒரு பேட்டியின் மூலம் அறியலாம். 1987ல் எம்.ஜி.ஆரை அமெரிக்காவின் பால்டிமோர் மருத்துவமனைவில் பேட்டி கண்ட நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியாளர் திரு.பார்த்தசாரதியிடம், புலிகள் இந்தியாவின் பொறுமையை சோதித்துவிட்டதாகவும், தமிழகத்தில் எஞ்சியுள்ள புலிகளை விரட்ட தாம் உத்தரவிட்டுள்ளதாகவும், சிறி சபாரத்தினம் கொல்லப்பட்டபோது புலிகளை வன்மையாகக் கண்டித்த கருணாநிதி இப்போது புலிகளுக்கு ஆதரவாகப் பேசுவது தமக்கு ஆச்சரியமளிப்பதாகவும் எம்.ஜி.ஆர் தெரிவித்திருக்கிறார். அதுமட்டுமல்லாது சென்னையில் உள்ள புலி அலுவலகங்கள் சோதனையிடப்பட்டதும் அவர் ஆட்சியில் தான். இதற்கெல்லாம் மேலாக அமைதிப்படையின் அட்டூழியங்கள் அரங்கேறிக் கொண்டிருந்தபோது ராஜீவ் காந்தியோடு இணைந்து ஒரு பொதுக்கூட்டத்திலும் பங்கு கொண்டார். இதன்மூலம் அமைதிப்படையின் அட்டூழியங்களுக்கு புலிகள் பதிலடி கொடுத்தபின் ராஜீவின் புலி எதிர்ப்போடு எம்.ஜி.ஆர் ஒத்துப்போகிறார் என்பதும் தேசியவாதியாகவே நடந்துகொள்கிறார் என்பதும் தெளிவாகத் தெரிகிறது. ஆனால் அந்த நிலைப்பாட்டில் நின்று தொடர்ந்து செயல்படும் அளவிற்கு அவர் நீண்டநாட்கள் உயிர்வாழவில்லை என்பது ஒருவகையில் அவரது புகழுக்கு சாதகம்தான்!!

சுப்பிரமணியசுவாமி மற்றும் சந்திராசாமி ஆகியோர் சி.ஐ.ஏவின் இந்திய ஏஜண்ட்கள் என்ற குற்றச்சாட்டு பலகாலமாக உண்டு. எப்போதோ ஒருகாலத்தில் கூட்டணி தயவில் சட்ட அமைச்சராக இருந்த, மக்கள் செல்வாக்கு என்பதே முற்றிலும் இல்லாத ஒருவர் இன்றளவும் இந்திய அரசியல் உலகில் பதவி எதும் இல்லாவிடினும் செல்வாக்காக வலம் வருவதையும், எந்த நாட்டுப் பிரதமரையும், ஜனாதிபதியையும் (ஒபாமா உட்பட) நினைத்த நேரத்தில் சந்திக்க முடிவதையும், சர்வதேச அரசியல் ப்ரோக்கராக செயல்படுவதையும் பார்க்கும்போது குற்றச்சாட்டு உண்மைதான் என்ற முடிவுக்கே வரமுடிகிறது.

மேலுள்ள செய்திகளையெல்லாம் வைத்து கணக்குப்போட்டால் சில விசயங்களை அடுக்கி சில தியரிகளை முன்வைக்கலாம். முதலில் இந்தியா புலிகளை (போராளிக்குழுக்களை) ஆதரிக்கிறது, ஆயுதங்கள் கொடுக்கிறது. இந்தியாவுடன் இந்திய அரசு இணக்கமான பின் அல்லது ராஜீவ் இலங்கையுடன் இணக்கமான பின் போராளிகளுக்கு கொடுத்த ஆதரவில் இருந்து பின் வாங்குகிறது. போராளிகளை ஒடுக்குவதற்கான வேலைகளில் இறங்குகிறது. புலிகளைத் தவிர பிற ஈழ அமைப்புகள் தமிழகத்தில் தங்க கருணாநிதி அனுமதிக்காக சூழலில், ஒரிசாவில் இருக்கவேண்டிய பத்மநாபா பாண்டி பஜாரில் சுற்றிக்கொண்டிருந்ததும், அவர் பிரபாகரனால் சுடப்பட்டு இறந்ததும் நடக்கிறது. (ஒரிசாவில் இந்திய அரசின் பாதுகாப்பில் இருக்கவேண்டியவர் எப்படி தமிழகம் வந்தார் என்பது இன்றளவும் மர்மம்தான்) விடுதலைப்புலிகளின் மேல் ரவுடிப்பட்டம் கட்டப்படுகிறது. பின் விடுதலைப்புலிகளுக்கு இந்தியா முழுவதும் எதிர்ப்பு வலுக்கிறது. இவையனைத்தும் இந்திய அரசின் திட்டமிட்ட சதியாக இருக்கும் என்றே எண்ண வேண்டியிருக்கிறது. அதாவது புலிகளை எவ்வகையில் எல்லாம் provoke செய்து கெட்டவர்களாகக் காட்டமுடியுமோ அதையெல்லாம் செய்கிறது இந்திய அரசு. உதாரணத்திற்கு அசோகா ஓட்டலில் பிரபாகரனை தங்க வைத்து மிரட்டியது போன்ற பல விசயங்களைச் சொல்லலாம். (அதே நேரம் இந்திய அரசு புலி ஆதரவாக இருந்தபோது, புலிகளின் சக போராளியான டெலோ தலைவர் சிறி சபாரத்தினம் புலிகளால் கொல்லப்பட்டபோது அதற்கு இந்திய அரசிடமிருந்து பெரிய எதிர்ப்பு இல்லை என்பதையும் நாம் கவனிக்கவேண்டும்)

ஒருகட்டத்தில் ராஜீவ்காந்தி பிரதமராக இருந்தால் ஈழம் சாத்தியமே இல்லை என்ற உண்மை புரியத்துவங்கும் போது ராஜீவ் கொலை செய்யப்படுகிறார். இந்த இடத்தில் இது ஒரு தனி இயக்கச் சதியாக இல்லாமல் பின்னணியில் சர்வதேச சதிகள் இருப்பதற்காக வாய்ப்புகள் கண்டிப்பாக தெரிகிறது. உதாரணத்திற்கு "பிரதமர் என்றெல்லாம் யோசிக்காதீர்கள். நீங்கள் செய்துவிடுங்கள், பின் நடப்பதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். உங்கள் கொள்கைகளுக்கும் வருங்காலங்களில் உறுதுணையாக இருக்கிறோம்" என 'யாரோ' உறுதியான வாக்குறுதி கொடுக்காமல் புலிகள் அந்த கொலையைச் செய்திருக்க வாய்ப்பில்லை. இந்த வாக்குறுதி அநேகமாக இந்தியாவைவிட பெரிய, சக்திவாய்ந்த நாடு எதோ ஒன்றில் இருந்துதான் வந்திருக்கவேண்டும். சு.சாமி, சந்திராசாமி ஆகியோரின் தலையீட்டைப் பார்க்கும் போது சி.ஐ.ஏவின் சார்பாக புலிகளை அணுகிய ப்ரோக்கர்களாக அவர்கள் இருந்திருக்கலாம். சுப்பிரமணியசாமியின் தலையீடு, சி.பி.ஐயின் மவுனம், பிரபாகரன் ராஜீவ் கொலைக் குற்றச்சாட்டை மறுக்காதது போன்ற விசயங்களையெல்லாம் கூட்டிக் கழித்துப் பார்க்கும் போது ராஜீவ் மீதான புலிகளின் கோபத்தையும், சந்தர்ப்பத்தையும் மிகச் சரியாக உபயோகித்து ராஜீவை கொலை செய்ய புலிகளை 'சிலர்' பயன்படுத்தியிருக்கிறார்கள் என்ற முடிவிற்கே நம்மால் வரமுடிகிறது.

ஒருவேளை இந்த யூகங்கள் எல்லாம் உண்மையென்றாலும், இதை ஏன் இக்கட்டான சூழ்நிலைகளில் கூட புலிகள் வெளியிடவில்லை என்ற கேள்வியும் எழத்தான் செய்கிறது. ஆனால் ராஜீவ் கொலைக்குப் பின்பு ஏற்பட்ட படுபயங்கர அவப்பெயரால் யாரையுமே பகைத்துக்கொள்ள முடியாத இக்கட்டான சூழலிலேயே அவர்கள்  இருந்தார்கள்! அதுமட்டுமல்லாமல் தாங்கள் ஒரு கொலையாளியாக பயன்படுத்தப்பட்டதை அவர்கள் வெளிப்படையாக ஒப்புக் கொள்ளமுடியாதது கூட ஒரு காரணமாக இருக்கலாம்.

எது எப்படியோ! இறுதியாக புலிகள் மட்டுமே ராஜீவ் கொலையைச் செய்யவில்லை என்பதும், பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள் என்கின்ற உண்மையையும் நம்மால் ஓரளவிற்கு அனுமானிக்க முடிகிறது! ஆனால் யாரால், எதற்காக பயன்படுத்தப்பட்டார்கள் என்ற விஷயம் மட்டுமே முற்றிலும் விளங்காத மர்மமாக இருக்கிறது. இந்தியாவிலேயே இருக்கும் சுப்பிரமணிசாமியை விசாரித்தால் உண்மை தெரியலாம். ஆனால் இந்திய சி.பி.ஐ அந்த அளவிற்கு எல்லாம் நல்ல, சுயமான அமைப்பு கிடையாது என்பதும் நமக்குத் தெரியும்! ஆக என்ன நடந்தது என்ற உண்மையை சுப்பிரமணியசாமியும், சந்திராசாமியும் அவர்களாக சொல்ல மாட்டார்கள். மேலும் சொல்லக்கூடிய ஆண்டன் பாலசிங்கமும், பிரபாகரனுன் உயிரோடு இல்லை! இந்நிலையில் ராஜீவ் கொலைப் பின்னணி கடைசிவரையில் இப்படி மர்மமாகவே இருக்கப்போகிறதா இல்லை விதை போல எப்போதாவது வெளியில் வருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

எல்லா கொலைகளிலும் கொலையுண்டவர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டவர்களாக இருப்பார்கள். ஆனால் ராஜீவ் விசயத்தில் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட புலி இயக்கமும் அவர்களின் நியாயமான போராட்டமும் பெரும் பாதிப்புக்குள்ளாக்கப்பட்டு அழிக்கப்பட்டதும், 'மிகப்பெரிய வழக்குகளில் உண்மையான குற்றவாளி கிடைக்கவில்லையா?? கவலையில்லை! கையில் கிடைத்தவனை தூக்கில் போட்டு கொதிப்படைந்திருக்கும் பொதுமக்களை சாந்தப்படுத்து' என்ற இந்திய நீதிமன்றங்களின் வழக்கப்படி தூக்கு தண்டனை பெற்று கயிற்றை எதிர்நோக்கியிருக்கும் சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகியோரது சொல்லொனாத் துயரமும் உலகத் தமிழர்களை மிகுந்த துன்பத்திற்கு உள்ளாக்குவதாய் இருக்கிறது. ஆனால் ஒன்றை மட்டும் யூகத்திற்கு இடமின்றி உறுதியாகச் சொல்லலாம். ராஜீவ் கொலையால் சோனியாவை விட, ப்ரியங்காவை விட, ராகுலை விட, ஒட்டுமொத்த துன்பத்தை அனுபவித்தவர்கள், அனுபவித்துக் கொண்டிருப்பவர்ர்கள் தமிழர்களே!! தமிழினத்திற்கு துன்பத்தையும், துயரத்தையும் அள்ளி வழங்கிய பெரும் 'துன்பியல்' சம்பவமாகவே அக்கொலையை வரலாறு பதிவு செய்யும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்திருக்காது!!! அச்செயலை செய்துமுடித்தபின் பிரபாகரனுக்கும் கூட அது தெரிந்தே இருக்கலாம்!!!

http://donashok.blogspot.ca/2013/05/blog-post_24.html?spref=fb

Link to comment
Share on other sites

  • Replies 57
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

எமது, தமிழீழ தேசியத் தலைவர் திரு. வே. பிரபாகரன் கூற்றுப் படி,
அது.. இன்றும், என்றும் .... துன்பியல் சம்பவம் தான்.
அவ‌னை... கொல்லாம‌ல் விட்டிருந்தால்.. இந்திய‌, உப‌ க‌ண்ட‌த்துக்கே... சுனாமி வ‌ந்திருக்கும்.
ந‌ல்ல‌, செய‌லையே... அவ‌ர் செய்திருப்பார், என்று நினைக்கின்றேன்.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

***

நாம் வெல்லாததற்கு இது  காரணமல்ல.

அதையும் மீறி நாம் வளர்ந்தோம்

அதற்கு பின்னர்தான் 

உலகுக்கு ஒரு அற்புத நாட்டை நிர்வகித்து காட்டினோம்

இன்று வெற்றி  சூடியிருந்தால் இவை அனைத்தும் மறக்கப்பட்டிருக்கும்

தோற்றதனால் தூக்கிப்பிடித்து திரிகின்றோம்.

தோல்விக்கு காரணம் ராயீவின் கொலை அல்ல.............

(செத்த பாம்பை அடித்த கதைதான்) :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பலர்... புலிகள் "அது ஒரு துன்பியல் சம்பவம்" என்று தமது கருத்தை வெளியிட்டதற்கு புலிகள் தான் அதனைச் செய்தனர் என்ற வியாக்கியானத்தை அளிக்க வெளிக்கிட்டதால தான் பிரச்சனை இவ்வளவு முத்திப்போனது. புலிகள் சொன்னது குறித்த சம்பவம் தங்களுக்கு துக்கரமான ஒன்றென்று. என்ன தான் தமக்கு எதிராக ராஜீவ் தீமைகளைச் செய்திருந்தாலும் அவரின் மரணம் தமக்கும் துக்கத்தை ஏற்படுத்திய ஒரு துன்பியல் என்பதே அதன் அர்த்தம்.

எனி உதுகளைக் கதைச்சு என்ன பிரயோசனம். எல்லாம் முடிந்து போன கதை..! இடையில் ஆட்டுவிப்பவர்கள் நல்ல கடா அறுத்து அனுபவிச்சுக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கும் ஓர் நாள் சாவு வந்தே தான் தீரும். யாரும் இங்கே சிரஞ்சீவி இல்லையே..! :icon_idea::rolleyes:

ஒரு காலத்தில் லலித் அத்துலத்முதலி.... ரஞ்சன் விஜேரட்ன.. அப்புறம்.. ரத்வத்த என்று போட்ட ஆட்டமென்ன.. அதையே இன்று கோத்தா போடுறார். கடைசியில்... எல்லோரும் போய் சேர்ந்த இடம் ஒன்று தான். இடையில் எத்தனை.. இடர்கள் மற்றவர்களுக்கு. என்று புரியுமோ இந்த இலகு உண்மை பேரினப் பிசாசுகளுக்கும் வல்லாதிக்கப் பேய்களுக்கும்..! :icon_idea:

நேற்று நடந்த லண்டன் கொலையைச்செய்த அந்த ஆபிரிக்க இளைஞனின் பேச்சைக்கேட்டதிலிருந்து மனதில் பெரும் அச்சம் நெடுக்கு........

அவன் எந்த பதட்டமும் இல்லாது

மிகச்சாதாரணமாக

தெளிவாக  சொல்கின்றான்

போதும்

போதும்

இனி கண்ணுக்கு கண்

ரத்தத்துக்கு இரத்தம்தான்..

இந்தச்செய்தி

சொல்

வருவதற்கு யார் காரணம்???

(அந்தக்கொலையை  நான் ஏற்கவில்லை)

தலைவர் இப்ப இருந்தால் நீங்கள் ராஜீவ் கொலை தொடர்பாக கொடுக்கும் விளக்கத்தை பார்த்து மெய் சிலிர்த்துப் போவார் :D 

அப்ப அவங்களை[லலித்,ரஞ்சன் போன்றோரை] போடுறத்திற்கு ஆள் இருந்தது.இப்ப இவங்களை போட யார் இருக்கா :(  <_<

இதனை தலைவர் வெளியுலகத் தொடர்போடு.. இருந்த போதும் யாழில் பதிவு செய்திருக்கிறம். அப்போது நடந்த ஒரு விவாதத்தின் போது. இவற்றைக் கண்டு.. தலைவர் மெய்சிலிர்த்திருக்கமாட்டார். ஒருத்தனாவது பாவிக்கப்பட்ட பதங்களின் உண்மையான அர்த்தத்தை புரிஞ்சிருக்கானே என்று பெருமிதம் அடைஞ்சிருப்பார். புலிகளைப் பொறுத்த வரை ஒரு விசயத்தை மறைக்கனுன்னு முடிவுகட்டிட்டா அதை மறைக்க அவர்களுக்கு யாரும் கற்றுக் கொடுக்கத் தேவையில்ல...! நீங்கள் தான் உங்கள் அறியாமையை  நினைத்து வருந்தி இருப்பீர்கள். :)

ரத்வத்தையை போட்ட ஆள் இருக்கிறார் இல்ல. அவர் பார்த்துக்குவார்...! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று நடந்த லண்டன் கொலையைச்செய்த அந்த ஆபிரிக்க இளைஞனின் பேச்சைக்கேட்டதிலிருந்து மனதில் பெரும் அச்சம் நெடுக்கு........

அவன் எந்த பதட்டமும் இல்லாது

மிகச்சாதாரணமாக

தெளிவாக  சொல்கின்றான்

போதும்

போதும்

இனி கண்ணுக்கு கண்

ரத்தத்துக்கு இரத்தம்தான்..

இந்தச்செய்தி

சொல்

வருவதற்கு யார் காரணம்???

(அந்தக்கொலையை  நான் ஏற்கவில்லை)

லண்டனில் நடந்த கொலையை கண்டிக்கும் அருகதை இந்த உலகில் யாருக்குமே இல்லை என்பது தான் என் கருத்து. ஏன்னா.. ஈழத்தில்.. ஈராக்கில்.. ஆப்கானிஸ்தானில்.. இப்படி உலகெமெங்கும்.. எடுத்ததற்கு எல்லாம் ஆயுத சப்பிளை செய்து உயிர்களைப் பலியிட்டு வெற்றி என்ற மாயை வெறியை மனிதர்களிடம் திணித்து மனிதனை மனிதன் கொல்ல வேடிக்கை பார்த்த இன்றைய உலகத்தவர்கள் யாருக்கும்.. அந்தத் தகுதி இருப்பதாக நான் நினைக்கல்ல..!

எல்லாரும் நிறுத்தனும். கத்தி வைச்சிருக்கிறவன் செய்யுறது கொலையுன்னா.. றோன் வைச்சிருக்கிறவன் செய்யுறது என்ன... தர்மமா..???! இதுதான் இந்த உலகில் மனிதன் செய்யும் மிகப்பெரிய அக்கிரமம்..! இவை தான்.. அந்த இளைஞர்களின் எண்ணத்தில் குரோதத்தையே வளர்க்குது. அதைக் களையாமல்... ஐயோ கொலை.. கொலை என்று கத்தி எந்தப் பயனுமில்லை. மாற வேண்டியது வல்லாதிக்கம்.. பிராந்திய ஆதிக்கம்.. ஜனநாயக ஆதிக்கம்.. கம்னியூசிய ஆதிக்கம் என்று.. சாதாரண மனிதனுடைய வாழ்க்கையில் பல வித வெறிகளை வெற்றிப் போதைகளை ஊட்டும் பிற மனிதர்களின் சிந்தனைகளும் செயற்பாடுகளுமே..! இவை மாறாமல்.. இந்த நிகழ்வுகளும் நிற்கப் போவதில்லை..!

இவர் றோன் கொண்டு போய் ஒரே அடியில் நூறு இரு நூறு என்று மனிதர்களைக் கொல்வாராம். அதைப் பயங்கரவாதிகள் என்பாராம். அவன் ஒரு குத்தில் இன்னொரு மனிதனைக் கொல்வானாம். எதிரி என்பானாம். இரண்டு பக்கமும் செத்தது மனிதன்..! இதை வேறு எந்த உயிரினம் செய்துக்கிட்டு இருக்குது இந்தப் பூமிப் பந்தில்....??! இப்படியான கேடு கெட்ட மனிதனுக்கு ஆறறிவு என்ற புகழ் வேற..! :):rolleyes::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான்  நெடுக்கு

ஆனால் சில செக்கனிலேயே  பயங்கரவாதம் என்று அறிவிக்கும் பிரதமர்???

கைது செய்ய சந்தர்ப்பம் இருந்தும்  சுடும் காவல்துறை...........................???

எங்கு போய்க்கொண்டிருக்கின்றோம்..................???

Link to comment
Share on other sites

941784_596731363678451_1372932775_n.jpg
ராஜிவை கொன்னுபுட்டாங்களே...ராஜிவை கொன்னுபுட்டாங்களே என்று கதறுற காங்கிரஸ் காரனுங்களுக்கு தெரியுமா ஈழத்தில் ராஜீவால் அனுப்பிவைக்கபட்ட அமைதிப்படை என்ன செஞ்சாங்கன்னு..? கொஞ்சம் பாருங்கப்பா அவங்க சாதனைகளை....
 
Link to comment
Share on other sites

இந்த கட்டுரை ஆசிரியர் பற்றிய தகல்களை யாருக்கு தெரியும்?

இதில் அவர் உண்மையாகத்தான் ரஜீவின் மரணத்துக்கான காரணத்தைதான் தேடி ஆராய்கிறாரா? இப்போது அதற்கு என்ன தேவை? இந்த ஆசிரியர் தமிழர் நிலப்பரப்புகளில் இருந்து ஆமியை வெளியேற்றி தமிழருக்கு ஒரு தீர்வு காண்பது பற்றி கட்டுரைகள் எழுதிய துண்டா. இதை முகநூல் உறவுகள்தான் செய்ய முடியும்.

அல்லது ஆசிரியர் நமது நெடுக்கர் போல  ஒரு ரோனால் ஒரு அடியில் 100 பேரை  (பாகிஸ்தானிய பொது மக்கள்?) கொலைசெய்கிறார் ஒபாமா என்று ஒபாமா மீது குற்றம் சாட்டமட்டும்தான் ஆசைப்படுகிறாரா :D ?

ரஜீவின் கொலையை "அத்திய அவசிய தேவை, பழிவாங்கள், high profile, தற்செயலான துன்பியல் சம்பவம்" என்றவை எல்லாவற்றுக்கும் ஊடாகத்தான் இழுத்து செல்கிறார். 

அவரின் நோக்கம் இங்கேதான் தெளிவாகிறது. எல்ல நாடுகளும் கொள்கை மாறுகிறார்கள், எல்லா அரசுகளிலும் ஆட்சி மாறுகிறது, எல்லா ஆட்சியிலும் ஆட்சியாளர்கள் மாறுகிறார்கள், எல்லா ஆட்சியாளர்களும் தமது நிலைபாட்டிலும் மாறுவதுண்டு. ஆனால் அமெரிக்கா என்று வந்தால் அது ஆசிரியருக்கு மறந்து போகிறது.

இதை இந்தியா என்று வரும், MGR ன் விஷையத்தில் பெரிதுபடுத்த முயல்கிறார். இந்திரா காந்தி என்று வரும் போது இந்திரா காந்தி இலங்கைக்கு JVPயை அடக்க ஆமியை அனுப்பியதும், சிங்கள அரசின் சினேகிதத்திற்காக கருணாநிதியின் எதிர்ப்பை பாராமல் கச்ச தீவை கொடுத்தவற்றை மறக்கிறார்.

தமிழ் ஈழத்தை மட்டும் அல்ல, அரசியல் அனுபவம் இல்லாத ரஜீவ், இலங்கை முழுவதையும் பிடித்து இந்தியாவுடன் இணைக்க கனவு கண்டார்.  இதனால் இந்திராகாந்தி தனது முடிவுகாலத்தில், தமிழ் ஈழத்தை இலங்கையிலிருந்து பிரித்துவிட்ட,  இலங்கையில் போட்டு வைத்திருந்த பார்த்தசாரதியை திரும்ப பெற்றுக்கொள்கிறார். (ராஜீவின் காலத்தில் மலையாளிகள் சீக்கியரின் இடங்களை பிடித்து முடித்ததை ஆசிரியர் குறிப்பிடவில்லை.) இதனால் அரசியல் அனுபவம் முதிர்ந்த  JR இந்திய ஒற்றுமைக்கே உலைவைக்கத்தக்கதாக ஆப்பிறுக்குகிறார். இப்போது JR உடன் வேலைசெய்த மலையாளிகளால்  புதிய இந்திய கொள்கை ஒன்று வெளிவிடப்படுகிறது. அதில்தான் தமிழ் நாடு பிரியப்போகிறது என்ற பீதியை வேண்டுமென்றே JRக்குகாக மலையாளிகள் கிளப்புகிறார்கள்.

இந்த புது பீதியால், இந்திரா காந்தியால் சீனாவை மிரட்ட முன்வைக்கப்பட்ட பாதுகாப்பு கொள்கை தடம் மாறி உன்னாட்டு மாநிலமான தமிழ் நாட்டை அடக்கத் திருப்ப படுகிறது. அதன் பாகமாக தமிழ் ஈழம் அடக்கப்பட்டு சிங்களத்துடன் சேர்த்து கைப்பற்ற வேண்டிய தேவை வருகிறது.  அன்றிலிருந்து இன்றுவரை, JR விதைத்த குழப்பத்தால் இந்தியப் பாதுகாப்பு கொள்கை இந்திய வெளிநாட்டு கொள்கை என்பன  இலங்கை அரசு, சுப்பிரமணிய சுவாமி, மலையாளிகள், டெல்கி முதலாளிகள் போன்றவர்களின் தனி தேவைக்களுக்க மட்டுமாக மாற்றப்பட்டுவிட்டது. இது பாதுகாப்பு கொள்கைகள் தூக்க நிலையில் இருந்த ஜனதா, பாபஜக ஆட்சிகளின் போதும் கூட உண்மை. எனவே இந்த உண்மைகள்தான் தெற்காசிய அரசிலை வழி நடத்தின.

இந்த பின்னணியில்தான் ராஜிவின் கொலை நடைபெற்றது. இந்திராகாந்தி அணு ஆயுதம் தாயாரித்து, பாகிஸ்தானுடன் சண்டை பிடித்து, நேருவின் பாஞ்சசீல கொள்கையில் இருந்து விலகி சோவியத்துடன் கூட்டு சேர்ந்தவ. பலமான அரசியல்வாதியாக வளர்ந்தவர்.  பனி போரில் இருந்த அமெரிக்காவிற்கு இந்திராகாந்தி ஒரு இடைஞ்சலாக இருந்தவர். எனவே அவரின் மரணத்தில் CIA இன் பங்குச் சதி எதிர்வு கூறப்பட்டது. மேற்கு நாட்டு கம்பனிகளால் லஞ்சத்தால் வாங்கப்பட்ட, பெரும்புத்தூர் கொலைக்கு முதல் 1989 ன் தேர்தலில் தோற்க இருந்த, வலுவில்லாத ரஜிவ் CIA இன் கையாளாக இருந்திருக்கலாமே தவிர CIA இன் இலக்கு என்பது 100% நிரூபிக்க முதல் ஏற்றுகொள்ளக்கூடிய யூகம் இல்லை.

புலிகள் சுப்பிரமணிய, சந்திரசுவாமிகளின் சதிக்குள் மாட்டியிருக்கலாம். அது உள்நாட்டு சதியாக இருக்க சந்தர்ப்பமே அல்லாமால் CIA க்கு உதவதக்க ரஜீவை  CIA போட்டுத்தள்ளியிருக்க நியாயம் இல்லை.

ரஜிவைச் சுட்டது அமெரிக்க கையாளாக மாறிய புலிகள் என்று சொல்வதால் என்ன  லாபம் என்று கேட்டால், கட்டுரையின் ஆரம்பத்தில் அதை பற்றி ஆசிரியர் விரிவாக அலசியிருக்கிறார்.  அதாவது ரஜீவை சுட்டதால்தான் புலிகள் தோல்வியை சந்தித்தார்கள் என்பது. இன்னும் ஒரு படி முன்னால் போனால் "வரலாற்றின் வழிநெடுகே, எப்போதோ நடந்த ஒரு சம்பவம் எப்போதோ நடக்கப் போகும் மற்றொரு சம்பவத்தை பாதித்தோ, வடிவமைத்தோ வரலாற்றின் போக்கையே மாற்றிவிடுவதை நாம் பார்க்கிறோம்." இதுதான் அவர் ஆராய்ந்து போட்ட அரசியல்பொது தத்துவம். இதை அரிச்சுனின் வசனத்தில்"தோல் உரித்து காட்டுவது" என்றால் நான் எங்கோ போவிடுவேன்.   அதில் ஒரு பகுதி உண்மை என்றாலும் நீங்கள் ஒன்றை திட்டமிடும் போது இயற்கையாக நடக்கும் சம்பவங்கள் உங்கள் திட்டத்தை பாதிக்கின்றன. இதனல் மழை பெய்யாது என்று மேகத்தை பார்த்து தீர்மானித்துவிட்டு கூட்டத்தை கூட்டினால் மழை திடு திடுப்பென வந்து கூட்டத்தை குழப்பிவிடுகிறது. இப்படி திட்டமிட முடியாத பங்கை, லக்கு, விதி அல்லது பக்கத்து ஆளின் கெட்ட கண் என்று சொல்லிவிடுவோம். ஆனால் இதில் முன்னல் நகர்ந்து செயல் ஆற்றுவதை Chance எடுப்பது என்பார்கள். (பொருளாதாரம் படிப்பவர்களுக்கு இதை சற்று விரிவாக படிப்பிப்பார்கள். ஏன் எனின் பொருளாதார லாபம் என்பது Chance எடுப்பதுடன் நேரடி தொடர்புள்ள ஒரு மாறி. Chance எடுக்காவிட்டால் லாபம் =0)  இதனால் இவரின் பொது தத்துவத்தில் காணப்படுவது போல பழைய ஒரே ஒரு நிகழ்சி ஒன்றை வைத்து உலகம் காலம் பூராக ஓடுகிறது என்ற மாயை பொய். அந்த ஒரு செயலை மட்டும் வைத்து திரும்ப திருமப திட்டமிடுவதும் நடப்பத்தில்லை.

நடந்து முடிந்த நிகழ்சி ஒன்றின் தாக்கம் பின்னால் வரலாம். ஆனால் ரஜீவின் கொலை மட்டும்தான் புலிகளின் தோல்விக்கு காரணம் என்றோ அல்லது பிரதான காரணம் என்று சொல்வதோ வெறும் ஆதாரமில்லாத கதை. ரஜிவின் இறப்பின் பின்னர்தான் புலிகள் தங்கள் வசந்த காலத்திற்கு சென்றார்கள். புலிகளின் வெற்றிதான் நாடுகளை ஒன்று இணைத்து புலிகளை விழுத்தியது. ராஜீவின் கொலைக்கும் ஸ்ரேல் கொடுத்த  கீபிருக்கும், 2006 க்கு பிறகு அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கா சீனா கொடுத்த  ஆயுதங்களுக்கும் தொடர்பு இல்லை. 9/11 பயங்கரவாத சம்பவம் புலிகளின் தோல்விக்கு காரணமாக இருந்ததில் பத்தில் ஒன்று ரஜீவின் கொலை கொண்டிருக்கவில்லை. மாவிலி ஆற்றில் அமெரிக்கா ஐ.நாவை வைத்து புலிகளுக்கு தண்ணீர் மறுத்தது. IPKF வெளியேற்றம், ரஜீவின் ஏமாற்றம் என்பவற்றிக்கு பின்னர் வாலை சுருக்கொண்டு ஓடிப்போயிருந்த இந்தியா அந்த தோல்விக்கு பின்னால்தான் திரும்ப தைரியம் பெற்று பழிவாங்கல்களை ஆரம்பித்தது. அது வரைக்கும் இலங்கையின் அரசியலில் பாஜக பங்குபற்றா கொள்கையைத்தான் கடைப்பிடித்தது. இதனால்த்தான் அமெரிக்கா தனது முயற்சியாக இலங்கை மீது அழுத்தம் போட்டு அம்பாந்தோடையிலிருந்து சீனாவை வெளிதள்ளுவதற்கு தான் போரின் திசையை நிர்ணயிக்க முயன்றது.  

எனவே முடிந்து போன தொடர்பில்லாத ரஜீவின் கொலையை போருக்கு உதவிய 20 நாடுகளுக்ககூடாக விளங்கப்படுத்த முயல்வதை அரசியல் ஆய்வாக எடுக்கமல் பிரச்சாரமாகத்தான் கொள்ள வேண்டும்.

இந்த ஆசிரியர் இலங்கை அரசியலைப்பற்றி இலங்கையின் பக்கத்தில் இருந்து ஆராய்கிறார்.  ஒழுங்கான ஒரு தமிழ் பெயர் இல்லை. இன்றைய சிங்கள் அரசுக்கு தலையிடியாக இருப்பது அமெரிக்க அரசு. இதன் நோக்கம் அமெரிக்காவையும் தமிழரையும் பிரித்து வைப்பதுதான். எனவே தொடர்பில்லாமல் ஆராய்ந்து, ராஜீவை கொலை செய்விக்க புலிகளை தனது Hitman ஆக CIA  உபயோகப்படுத்தியது என்று கட்டுரையை முடிக்கிறார்.  

ஆசிரியர் தன்னை வெளிப்படுத்தி தனக்கு இதில் என்ன ஆர்வம் என்றதை காட்டாவிட்டால் இவர் இன்னொரு வாழைபழத்தில் ஊசி ஏற்றுபவரே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராஜீவ் கொலை புலிகள் செய்தது இல்லை என்றால் என்னத்துக்கு பாலசிங்கம் அண்ணை இந்திய தொலைக்காட்சிக்கு அதற்காக வருத்தம் கோருகின்றோம் என்று பேட்டி கொடுத்தார்- தமிழ் செல்வன் உடனே அதற்கு ஏன் "அது பாலா அண்ணையின் கருத்து' என்று அவரை தலை குனிய வைத்தார். இந்த கட்டுரையின் நோக்கமே புலிகளை வெறுமனே குற்றம் சாட்டாது இதற்கு பின்னால் இருக்கும் ஆட்களை இனம் காணவைக்கும் விடயத்தினை முன்னிறுத்துவதுதான். ஈற்றில் ராஜீவினைக் கொன்ற புலிகளையும் தமிழ் மக்களையும் அழித்து விட்டு அதற்கு காரணமான முக்கிய ஆட்களை பாதுகாத்து விட்டார்கள். 

Link to comment
Share on other sites

ராஜீவ் கொலை புலிகள் செய்தது இல்லை என்றால் என்னத்துக்கு பாலசிங்கம் அண்ணை இந்திய தொலைக்காட்சிக்கு அதற்காக வருத்தம் கோருகின்றோம் என்று பேட்டி கொடுத்தார்-

தமிழ் செல்வன் உடனே அதற்கு ஏன் "அது பாலா அண்ணையின் கருத்து' என்று அவரை தலை குனிய வைத்தார். 

எழுதியதை படித்துப்பார்த்தீர்களாயின் உங்களுக்குள்ளேயே ஒரு முடிவுக்கு வரமுடியாமையை காட்டுகிறது. 

இதைத்தான் மனத்தில் உண்மை, இல்லாத வறட்டு பிரசாரமாக மேலே காட்டியிருக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராஜீவ் கொலை புலிகள் செய்தது இல்லை என்றால் என்னத்துக்கு பாலசிங்கம் அண்ணை இந்திய தொலைக்காட்சிக்கு அதற்காக வருத்தம் கோருகின்றோம் என்று பேட்டி கொடுத்தார்- தமிழ் செல்வன் உடனே அதற்கு ஏன் "அது பாலா அண்ணையின் கருத்து' என்று அவரை தலை குனிய வைத்தார். இந்த கட்டுரையின் நோக்கமே புலிகளை வெறுமனே குற்றம் சாட்டாது இதற்கு பின்னால் இருக்கும் ஆட்களை இனம் காணவைக்கும் விடயத்தினை முன்னிறுத்துவதுதான். ஈற்றில் ராஜீவினைக் கொன்ற புலிகளையும் தமிழ் மக்களையும் அழித்து விட்டு அதற்கு காரணமான முக்கிய ஆட்களை பாதுகாத்து விட்டார்கள். 

பாலாண்ணா ராஜீவின் மரணத்திற்கு வருத்தம் தெரிவித்தார். தமிழ்செல்வன் அண்ணா அது அவருடைய சொந்தக் கருத்து என்று சொன்னார். இயக்கத்தின் நிலைப்பாடு அது ஒரு துன்பியல் சம்பவம்.. அவ்வளவே.

இதில.. புலிகள் தான் அதனைச் செய்தனர் என்ற முடிவுக்கு வர என்ன இருக்குது.

இன்று ரி எம் எஸ் ஸின் மறைவுக்கு நானும் தான் ரசிகன் என்ற வகையில் இரங்கல்.. வருத்தம் தெரிவித்துள்ளேன். அதற்காக அவரின் மறைவுக்கு நானே காரணம் என்றால்.. நல்ல வேடிக்கையா எல்லோ இருக்கும். அப்படித்தான் உள்ளது உங்கட நியாயங்கள் இங்கு.

இந்திய காவல்துறையும் உளவுத்துறையும் அரசும்.. எவ்வளவு மோசடியானவை என்பதை 1988/9 இல் தலைவரைச் சாகடித்ததில் இருந்தும்.. அதற்காக அவர்கள் வெளியிட்ட ஆதாரங்களைப் பற்றியும் மக்கள் நன்கு அறிவார்கள். அதற்கு முன்னரே தானே ஆயுதங்களைப் பதுக்கி வைச்சிட்டு புலிகளிடம் இருந்து ஆயுதங்கள் மீட்பு என்று வாரா வாரம் அறிவிச்ச இந்தியப் படைகளுக்கும் அதன் ஆலோசர்களுக்கும்.. ராஜீவ் கொலையை புலிகள் தலையில் கட்ட அதிக நேரமோ.. அதிக அனுபவமோ தேவையில்லை..! இதில் சி ஐ ஏ இன் பங்கும் இருக்கலாம். ஏனெனில் ராஜீவ் கொலையால் அதிக ஆதாயம் அடைந்தோர் அடைவோர் பட்டியலைப் போட்டுப் பாருங்கள்.. யார் யார் அதன் பின்னால் இருந்திருப்பார்கள் என்பதற்கான ஆதாரங்கள் புட்டுக்கிட்டு வெளிவருவதைக் காணலாம். சிறீலங்காவின் பங்களிப்பும் அதில் உள்ளது..!

ஏன் அதனை நீங்கள் ஏற்றுக் கொள்ள மறுக்கிறீர்கள். பலவீனமான காரணங்களைக் காட்டி ராஜீவ் கொலையில் புலிகளை சம்பந்தப்படுத்தப் படுற பாட்டை அதற்கு மாறான இன்னொரு முனையில் பொருத்திப் பார்த்தால்.. மேற்படி சம்பவத்தின் பின்னால் உள்ள உண்மைச் சக்திகள் யார் என்பது புலனாகும்..!!! :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாலாண்ணா ராஜீவின் மரணத்திற்கு வருத்தம் தெரிவித்தார். தமிழ்செல்வன் அண்ணா அது அவருடைய சொந்தக் கருத்து என்று சொன்னார். இயக்கத்தின் நிலைப்பாடு அது ஒரு துன்பியல் சம்பவம்.. அவ்வளவே.

இதில.. புலிகள் தான் அதனைச் செய்தனர் என்ற முடிவுக்கு வர என்ன இருக்குது.

இன்று ரி எம் எஸ் ஸின் மறைவுக்கு நானும் தான் ரசிகன் என்ற வகையில் இரங்கல்.. வருத்தம் தெரிவித்துள்ளேன். அதற்காக அவரின் மறைவுக்கு நானே காரணம் என்றால்.. நல்ல வேடிக்கையா எல்லோ இருக்கும். அப்படித்தான் உள்ளது உங்கட நியாயங்கள் இங்கு.

இந்திய காவல்துறையும் உளவுத்துறையும் அரசும்.. எவ்வளவு மோசடியானவை என்பதை 1988/9 இல் தலைவரைச் சாகடித்ததில் இருந்தும்.. அதற்கு ஆதாரங்களை வெளியிட்டதில் இருந்து மக்கள் அறிவார். அதற்கு முன்னரே தானே ஆயுதங்களைப் பதுக்கி வைச்சிட்டு புலிகளிடம் இருந்து ஆயுதங்கள் மீட்பு என்று வாரா வாரம் அறிவிச்ச இந்தியப் படைகளுக்கும் அதன் ஆலோசர்களுக்கும்.. ராஜீவ் கொலையை புலிகள் தலையில் கட்ட அதிக நேரமும்.. அதிக அனுபவமோ தேவையில்லை..!

ஏன் இதனை நீங்கள் ஏற்றுக் கொள்ள மறுக்கிறீர்கள். பலவீனமான காரணங்களைக் காட்டி ராஜீவ் கொலையில் புலிகளை சம்பந்தப்படுத்தப் படுற பாட்டை அதற்கு மாறான இன்னொரு முனையில் பொருத்திப் பார்த்தால்.. அதன் பின்னால் உள்ள உண்மைச் சக்திகள் யார் என்பது புலனாகும்..!!! :icon_idea:

இந்த உலகமும் ஊடக வளர்ச்சியும் மிகவும் வளர்ந்து விட்டது. இத்தகையை அரைவேக்காட்டுத் தனமான விளக்கங்களைத் தாண்டி விடயங்களை அறிந்து கொண்ட பெரும் எண்ணிக்கையான சனம்தான் இன்று உலகில் உள்ளது. புலிகள் தான் ராஜீவ் கொலையைச் செய்தார்கள் என்று உங்களைப் போன்ற ஒன்று இரண்டு எவ்வளவு வியாக்கியானம் செய்தாலும் 99 வீதமானோருக்கு உண்மை தெரியும். அந்த உண்மை உங்ளுக்கும் தெரியும். ஆனால் வளக்கம் போல விதண்டாவாதம் செய்து மறைக்கின்றீர்கள்....அதுவும் பாலா அண்ணை ராஜிவினை கொன்ற விடயத்துக்கு வருத்தம் தெரிவித்ததையும் நீங்கள் செளந்தராஜனிற்கு வருத்தம் தெரிவித்தையும் ஒன்றாக பார்த்தீர்கள் பாருங்கள் அங்க நிற்குது உங்கள் அறிவின் உச்சம். 

இன்று ராஜிவினை படுகொலை செய்த புலிகள் இல்லை. ராஜிவ் கொலையை சும்மாச்சும் காரணமாகக் காட்டி புலிகளையும் மக்களையும் அழிச்சாச்சு. ஆனால் புலிகளை அழித்த அதே சக்திகள் தான் ராஜிவின் கொலைக்கு பின்னாலும் இருக்கு.  புலிகளின் அழிவிற்கு பின்னால் இன்னும் பலம் கொண்டாதாக அது மாறி இருக்கும். கண்டிப்பாக இந்த பலம் கொண்ட அமைப்பு எமக்கு மீண்டும் மீண்டும் சிக்கல் கொடுத்துக் கொண்டு தான் இருக்க போகின்றது. புலிகளின் இந்திய விரோதத்தினை தமக்குச் சாதகமாக்கி ராஜிவினை கொலை செய்ய தூண்டிய அதே சக்திகள் மேலும் மேலும் எம்மை தம் அரசியல் விளையாட்டுக்கு பாவிக்கத் தான் போகுது. உங்களைப் போன்ற மேதாவிகள் இருக்கும் வரைக்கும் இப்படியான குள்ளநரிகளை அடையாளம் காண்பதில் மீண்டும் மீண்டும் தோத்துப் போகப்போகின்றோம்.  

ராஜீவ் கொலை யாருக்கு துன்பியல் சம்பவம்? சில சதிக்கோட்பாடுகள்!

ராஜீவ் கொலைக்கு வெளிப்படையான காரணமாகச் சொல்லப்படும் 'அமைதிப்படையின் அட்டூழியங்களுக்கான விடுதலைப்புலிகளின் பழிவாங்கும் நடவடிக்கை' என்பதை அவ்வளவு சுலபமாக நம்மால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. இந்திய துணைக் கண்டத்தில் 'ஈழம்' என்ற தனிநாடு ஒன்றை அமைப்பதற்கான முயற்சியில் இருக்கும் ஒரு இயக்கம், அத்துணைக்கண்டத்தின் 'நாட்டாமை'யான இந்தியாவின் பிரதமரை வெறும் பழி உணர்ச்சியில் கொன்றிருக்குமா? ஒருவேளை கொன்றால் அது வருங்காலத்தில் அந்த இயக்கத்திற்கு அரசியல் ரீதியாக பல்வேறு சிக்கல்களை உண்டாக்கும் என்பது அவர்களுக்குத் தெரிந்திருக்காதா? அது கூட தெரியாத அப்பாவிகளாக அவர்கள் இருந்திருந்தால் ஒரு நாட்டின் (இலங்கை) ராணுவத்தை எதிர்த்து இவ்வளவு பெரிய தனி இயக்க ராணுவத்தை கட்டமைத்திருக்க முடியுமா அல்லது தனி ராஜாங்கமே நடத்தியிருக்கத்தான் முடியுமா?  

ஜெயின் கமிஷன் அறிக்கையில் சுப்பிரமணியஸ்வாமி, சந்திராசாமி ஆகியோர் விசாரிக்கப்பட வேண்டியவர்கள் எனக் குறிப்பிட்டிருந்தபோதும் அவர்களை சி.பி.ஐ விசாரிக்காமல் விட்டதும், ஊடகங்கள் அதைப்பற்றி இன்றளவும் பேசாமல் இருப்பதும், சோனியாவே அதைப்பற்றி மவுனம் காப்பதும் கண்டிப்பாக ராஜீவ் கொலையில் அவர்களுக்கு தொடர்பிருக்கலாம் என்பதை மட்டுமல்லாமல் இது ஒரு சர்வதேச 'high profile' கொலை என்பதையும் தெளிவாகக்  காட்டுகிறது. (இது பற்றி திருச்சி வேலுசாமி தன் தூக்குக் கயிற்றில் நிஜம் என்ற ராஜீவ் கொலை பற்றிய நூலில் தெளிவாக ஆதாரங்களுடன் விளக்குகிறார்.) ஆனால், அதனால் மட்டும் சிலர் சொல்வதைப் போல் விடுதலைப்புலிகளுக்கு ராஜீவ் கொலையில் முற்றிலும் தொடர்பு இல்லை, அது முழுக்க முழுக்க சுப்பிரமணியசுவாமி போன்றோரின் செயல்தான் என்பதையும் நம்மால் முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஏனெனில் ராஜீவ் கொலையைப் பற்றி நேரடியாக பிரபாகரனிடம் கேள்வி எழுப்பட்டபோது, அது ஒரு துன்பியல் சம்பவம் என்றும் அதைப் பற்றி தாம் பேச விரும்பவில்லையென்றும் சுருக்கமாக முடித்துக்கொண்டாரேயொழிய குற்றச்சாட்டை மறுக்கவில்லை. ஆக இப்படி குழப்பங்களால் முடியப்பட்டிருக்கும் ராஜீவ் கொலையின் மர்மங்களையொட்டிய செய்திகளையும், உண்மைகளையும் வைத்து அலசினால் சில சதிக்கோட்பாடுகளை (conspiracy theory) நம்மால் யூகத்தின் அடிப்படையில் வரையறுக்க முடிகிறது

http://donashok.blogspot.ca/2013/05/blog-post_24.html?spref=fb

இது ஒரு தர்க்கம் மட்டுமே. இது சரியாகவும் இருக்கலாம் பிழையாகவும் இருக்கலாம். ஆனால் இப்படியான தர்க்கங்கள் மூலம்தான் இந்த படுகொலையின் முடிச்சுகள் ஒரு நாள் அவிழ்க்கப்படும்.

Link to comment
Share on other sites

இந்திய அமைதி படைகள் செய்த அட்டுழியதிற்கும் தண்டனை வழங்கபட்டு அதை வழங்கியவர்களும் தண்டனை வழங்கப்பட்டுவிட்டது .

நாம் இன்றும் சர்வதேசத்திடம் முள்ளிவாய்கால் இனப்படுகொலைகளுக்கு நியாயம் பெறமுடியாமல்   இருப்பதற்கு  நாம் செய்த பிழைகளை என்றும் ஏற்றுகொள்ளமுடியாதர்களாக இருப்பதும் ஒரு காரணம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
ராஜீவ் கொலையை புலிகள் செய்யவில்லை என்டால் தனு,சிவராசன் போன்றோர் புலிகள் இல்லையா?
தனு,சிவராசன் போன்றோர் வேறு நாட்டோடு சேர்ந்து இந்தக் கொலையை நடத்தியிருந்தால் ஏன் புலிகளின் தலைமை வெளிப்படையாக தாங்கள் செய்யவில்லை என மறுப்பறிக்கை விடவில்லை?
கடைசி யுத்தத்தில் அமெரிக்காவின் கப்பல் வரும் அந்த மக்களை காப்பாற்றும் என்ட மாதிரித் தான் இங்கே பல பேரின் கதை இருக்குது.
புலிகளையும்,தலைவரையும் ஒரு முட்டாளாக்கும் செயலைத் தானே இங்கு இருக்கும் சிலர் செய்கின்றனர்.
ராஜீவ் இந்தியன் ஆமியை ஈழத்திற்கு அனுப்பி கொண்ட‌ மக்களுக்கும்,வன்புணர்வுக்கு ஆளான மக்களுக்கும்,பாதிக்கப்பட்ட மக்களுக்கும் தெரியும் புலிகள் ராஜீவை கொண்டதில் ஒரு பிழையும் இல்லை என்று  
ஒரு தமிழனாய்,வீரனாய்,புலியாய் அதை ஏற்பதே எமக்கு நல்லது.
ராஜீவ் கொலையை புலிகள் செய்யவில்லை என்று இப்ப பாடுவது இந்திய அரசு எம்மக்களை அழிக்க ராஜீவ் தான் காரணம் என்று  சொன்னதிற்கு இங்குள்ள சில பேர் தங்களை அறியாமல் ஒத்து ஊதுகிறார்கள்.
உண்மையில் அதுவா கார‌ணம்?
ஒரு தமிழிச்சியாய் சொல்கிறேன் புலிகள் ராஜீவை கொண்டு இருக்கா விட்டால் புலிகள் எம்மக்களுக்காய் போராடியதில் ஒரு பிர‌யோச‌மும் இல்லை
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த உலகமும் ஊடக வளர்ச்சியும் மிகவும் வளர்ந்து விட்டது. இத்தகையை அரைவேக்காட்டுத் தனமான விளக்கங்களைத் தாண்டி விடயங்களை அறிந்து கொண்ட பெரும் எண்ணிக்கையான சனம்தான் இன்று உலகில் உள்ளது. புலிகள் தான் ராஜீவ் கொலையைச் செய்தார்கள் என்று உங்களைப் போன்ற ஒன்று இரண்டு எவ்வளவு வியாக்கியானம் செய்தாலும் 99 வீதமானோருக்கு உண்மை தெரியும். அந்த உண்மை உங்ளுக்கும் தெரியும். ஆனால் வளக்கம் போல விதண்டாவாதம் செய்து மறைக்கின்றீர்கள்....அதுவும் பாலா அண்ணை ராஜிவினை கொன்ற விடயத்துக்கு வருத்தம் தெரிவித்ததையும் நீங்கள் செளந்தராஜனிற்கு வருத்தம் தெரிவித்தையும் ஒன்றாக பார்த்தீர்கள் பாருங்கள் அங்க நிற்குது உங்கள் அறிவின் உச்சம். 

இன்று ராஜிவினை படுகொலை செய்த புலிகள் இல்லை. ராஜிவ் கொலையை சும்மாச்சும் காரணமாகக் காட்டி புலிகளையும் மக்களையும் அழிச்சாச்சு. ஆனால் புலிகளை அழித்த அதே சக்திகள் தான் ராஜிவின் கொலைக்கு பின்னாலும் இருக்கு.  புலிகளின் அழிவிற்கு பின்னால் இன்னும் பலம் கொண்டாதாக அது மாறி இருக்கும். கண்டிப்பாக இந்த பலம் கொண்ட அமைப்பு எமக்கு மீண்டும் மீண்டும் சிக்கல் கொடுத்துக் கொண்டு தான் இருக்க போகின்றது. புலிகளின் இந்திய விரோதத்தினை தமக்குச் சாதகமாக்கி ராஜிவினை கொலை செய்ய தூண்டிய அதே சக்திகள் மேலும் மேலும் எம்மை தம் அரசியல் விளையாட்டுக்கு பாவிக்கத் தான் போகுது. உங்களைப் போன்ற மேதாவிகள் இருக்கும் வரைக்கும் இப்படியான குள்ளநரிகளை அடையாளம் காண்பதில் மீண்டும் மீண்டும் தோத்துப் போகப்போகின்றோம். 

இது ஒரு தர்க்கம் மட்டுமே. இது சரியாகவும் இருக்கலாம் பிழையாகவும் இருக்கலாம். ஆனால் இப்படியான தர்க்கங்கள் மூலம்தான் இந்த படுகொலையின் முடிச்சுகள் ஒரு நாள் அவிழ்க்கப்படும்.

ராஜீவ் கொலை என்பது ஒன்றும்  ஆன்லைன் ஆப்பிரேசன் அல்ல..! உலக மக்கள் ஊடகங்கள் மூலம் உண்மையை அறிந்து கொள்ள. அது ரகசியமாக திட்டமிடப்பட்டு.. தமக்கு வேண்டாத சக்திகள் மீது பழிபோட்டு அதன் மூலம் தங்களின் நீண்ட கால நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள மேற்கொள்ளப்பட்ட பெரும் சதிகள் உள்ளடங்கிய ஒரு நிகழ்வு..! இதனை.. இன்றைய ஊடகங்கள் தொழில்நுட்பங்கள் மூலம் மக்கள் புலனாய்வு செய்து எப்படி கண்டு பிடிப்பாங்க என்று எழுதினால் இன்னும் சூப்பரா இருக்கும்..??!

சும்மா கதைவிடப்படாது. இன்றும் மக்கள் ஏமாற்றப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறார்கள்..! அவை புதுப்புது வடிவங்கள் எடுக்கின்றன..! :icon_idea::)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராஜீவ் கொலையை புலிகள் செய்யவில்லை என்டால் தனு,சிவராசன் போன்றோர் புலிகள் இல்லையா?
தனு,சிவராசன் போன்றோர் வேறு நாட்டோடு சேர்ந்து இந்தக் கொலையை நடத்தியிருந்தால் ஏன் புலிகளின் தலைமை வெளிப்படையாக தாங்கள் செய்யவில்லை என மறுப்பறிக்கை விடவில்லை?
கடைசி யுத்தத்தில் அமெரிக்காவின் கப்பல் வரும் அந்த மக்களை காப்பாற்றும் என்ட மாதிரித் தான் இங்கே பல பேரின் கதை இருக்குது.
புலிகளையும்,தலைவரையும் ஒரு முட்டாளாக்கும் செயலைத் தானே இங்கு இருக்கும் சிலர் செய்கின்றனர்.
ராஜீவ் இந்தியன் ஆமியை ஈழத்திற்கு அனுப்பி கொண்ட‌ மக்களுக்கும்,வன்புணர்வுக்கு ஆளான மக்களுக்கும்,பாதிக்கப்பட்ட மக்களுக்கும் தெரியும் புலிகள் ராஜீவை கொண்டதில் ஒரு பிழையும் இல்லை என்று  
ஒரு தமிழனாய்,வீரனாய்,புலியாய் அதை ஏற்பதே எமக்கு நல்லது.
ராஜீவ் கொலையை புலிகள் செய்யவில்லை என்று இப்ப பாடுவது இந்திய அரசு எம்மக்களை அழிக்க ராஜீவ் தான் காரணம் என்று  சொன்னதிற்கு இங்குள்ள சில பேர் தங்களை அறியாமல் ஒத்து ஊதுகிறார்கள்.
உண்மையில் அதுவா கார‌ணம்?
ஒரு தமிழிச்சியாய் சொல்கிறேன் புலிகள் ராஜீவை கொண்டு இருக்கா விட்டால் புலிகள் எம்மக்களுக்காய் போராடியதில் ஒரு பிர‌யோச‌மும் இல்லை

உங்கள் கருத்துத்தான் அதிகமான மக்களுடையது ரதி

ஆனால் பலவாறு துருவித்துருவி கேட்டபோதும் தலைவரே  தளபதிகளோ அரசியல் ஆலோசகரோ 

இது பற்றி ஒரு மழுப்பல் பதிலையே  தந்தார்கள் என்பதை நாம் எல்லோரும் அறிவோம்.

அதை அறிய சர்வதேசம் மட்டுமல்ல நாமும் ஆர்வமாக இருந்தபோதும்  அதற்கு பதில் கிடைக்கவில்லை.

அதை அவர்கள் ஒரு பொறுப்புடனேயே  அதனைத்தவிர்த்து வந்தார்கள்

அப்படி பொறுப்புடன் தவிர்த்த ஒரு விடயத்தை நாம் கிண்டுவது...............??? :(

Link to comment
Share on other sites

தலைவர் தவிர்த்த ஒரு விடயத்தை நீங்கள் எப்படி கிண்டலாம் என சோனியாவிடமும் கேட்டிருக்கலாம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
தமிழ்செல்வன் சிறந்த போராளி,தன்னலம் அற்ற வீர‌ன் ஆனால் அர‌சியல் அறிவே இல்லாத ஞானசூனியம்.அவரது இழப்பிற்கு பின்னர் தான் புலிகள் அதை உண்ர்ந்தார்கள் ஆனால் காலம் கடந்து விட்டது.உண்மையிலேயே புலிகளின் அழிவு என்பது திரு பாலசிங்கத்தின் மறைவோடு ஆர‌ம்பமாகி விட்டது.புலிகளின் மிகப் பெரிய பிழை திரு பாலசிங்கத்தை போல ஒரு அர‌சியல் அறிஞரை உருவாக்காமல் விட்டது தான்
Link to comment
Share on other sites

இந்த உலகமும் ஊடக வளர்ச்சியும் மிகவும் வளர்ந்து விட்டது. இத்தகையை அரைவேக்காட்டுத் தனமான விளக்கங்களைத் தாண்டி விடயங்களை அறிந்து கொண்ட பெரும் எண்ணிக்கையான சனம்தான் இன்று உலகில் உள்ளது. புலிகள் தான் ராஜீவ் கொலையைச் செய்தார்கள் என்று உங்களைப் போன்ற ஒன்று இரண்டு எவ்வளவு வியாக்கியானம் செய்தாலும் 99 வீதமானோருக்கு உண்மை தெரியும். அந்த உண்மை உங்ளுக்கும் தெரியும். ஆனால் வளக்கம் போல விதண்டாவாதம் செய்து மறைக்கின்றீர்கள்....அதுவும் பாலா அண்ணை ராஜிவினை கொன்ற விடயத்துக்கு வருத்தம் தெரிவித்ததையும் நீங்கள் செளந்தராஜனிற்கு வருத்தம் தெரிவித்தையும் ஒன்றாக பார்த்தீர்கள் பாருங்கள் அங்க நிற்குது உங்கள் அறிவின் உச்சம். 

இன்று ராஜிவினை படுகொலை செய்த புலிகள் இல்லை. ராஜிவ் கொலையை சும்மாச்சும் காரணமாகக் காட்டி புலிகளையும் மக்களையும் அழிச்சாச்சு. ஆனால் புலிகளை அழித்த அதே சக்திகள் தான் ராஜிவின் கொலைக்கு பின்னாலும் இருக்கு.  புலிகளின் அழிவிற்கு பின்னால் இன்னும் பலம் கொண்டாதாக அது மாறி இருக்கும். கண்டிப்பாக இந்த பலம் கொண்ட அமைப்பு எமக்கு மீண்டும் மீண்டும் சிக்கல் கொடுத்துக் கொண்டு தான் இருக்க போகின்றது. புலிகளின் இந்திய விரோதத்தினை தமக்குச் சாதகமாக்கி ராஜிவினை கொலை செய்ய தூண்டிய அதே சக்திகள் மேலும் மேலும் எம்மை தம் அரசியல் விளையாட்டுக்கு பாவிக்கத் தான் போகுது. உங்களைப் போன்ற மேதாவிகள் இருக்கும் வரைக்கும் இப்படியான குள்ளநரிகளை அடையாளம் காண்பதில் மீண்டும் மீண்டும் தோத்துப் போகப்போகின்றோம்.  

இது ஒரு தர்க்கம் மட்டுமே. இது சரியாகவும் இருக்கலாம் பிழையாகவும் இருக்கலாம். ஆனால் இப்படியான தர்க்கங்கள் மூலம்தான் இந்த படுகொலையின் முடிச்சுகள் ஒரு நாள் அவிழ்க்கப்படும்.

"அமெரிக்கா செய்த சதிக்கு இந்தியா விசாரிக்க மறுக்கிறது" என்று கதை அளப்பதில் தர்க்கம் ஒன்றும் இல்லை. அது வெறும் பிரச்சாரம் மட்டுமே. CIA சதி செய்தால் ஏன் இந்தியா விசாரிக்க மறுக்க வேண்டும். சோனியா மேற்கு நாட்டு CIA ஆனால் ஏன் தனது தேவைக்காக ரஜீவை கொன்றவர்களை அழிக்க வேண்டும். ஏன் அதற்கு மவிலியாறு முடியும் வரை காத்திருக்க வேண்டும்?

வழமை போல் கட்டுரை வெளிவந்தற்கும், பைரவனுக்கும் தொடர்பு இருக்கலாம். இதுதான் யாழில் கொட்டேலில் விபசாரம் செய்த பெண்ணை பிரதேச செயலாளர் கைதுசெய்விக்க பொலிசு வரவில்லை என்றதால் விபசராம் இல்லை என்று விவாதித்தோரின் உண்மை வெளியில் வந்து இறங்கிய போது தெரிய வந்தது. உண்மையில் நடந்து அங்கு பொலிசின் துணையுடனான விபச்சர்ராம். அதனால்தான் பொலிசு போக மறுத்தது. அது மட்டுமல்ல தொடர்ந்து கிடைத்த முறைபாடுகளால் பிரதேச செயலாளர் தனாக நடவடிக்கை எடுக்க முயன்றபொது அவரைத்தான் பொலிசு கைத்துசெய்ய முயன்றது.

அங்கு தர்க்கம் மட்டும் இல்லை. 

Link to comment
Share on other sites

***

நாம் வெல்லாததற்கு இது  காரணமல்ல.

அதையும் மீறி நாம் வளர்ந்தோம்

அதற்கு பின்னர்தான் 

உலகுக்கு ஒரு அற்புத நாட்டை நிர்வகித்து காட்டினோம்

இன்று வெற்றி  சூடியிருந்தால் இவை அனைத்தும் மறக்கப்பட்டிருக்கும்

தோற்றதனால் தூக்கிப்பிடித்து திரிகின்றோம்.

தோல்விக்கு காரணம் ராயீவின் கொலை அல்ல.............

(செத்த பாம்பை அடித்த கதைதான்) :(

உண்மை அண்ணா அது அற்புதத்திலும் ,அற்புதம் கொண்ட ஓர் நாடு.... தமிழீழம் ..............இன்று பெல்ஜியம்  பனுமாதா கோவிலுக்கு சென்றிருந்தேன் ..............அங்கே ஓர் நபருடன் [மனிதன் ]பேசினேன் ....................அவர் சொன்ன அதே வார்த்தைகளை இன்று நீங்களும் எழுதியதை பார்க்கும்போது மனம் இன்னும் அமைதியடைகிறது .....அத்துடன் அவர் ஒரு வார்த்தை கூறினார் ..............30 வருடமாக .உலகமே வியக்கும் அளவிற்கு உலகத்திற்கு முன்மாதிரியாய் உள்ளவர்கள் ..............30 நாளில் அழிந்திருக்க முடியாது ..........பொறுத்திருப்போம் என்றார் ...............நன்றி வணக்கம் ................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ராஜீவ் கொலையை புலிகள் செய்யவில்லை என்டால் தனு,சிவராசன் போன்றோர் புலிகள் இல்லையா?
தனு,சிவராசன் போன்றோர் வேறு நாட்டோடு சேர்ந்து இந்தக் கொலையை நடத்தியிருந்தால் ஏன் புலிகளின் தலைமை வெளிப்படையாக தாங்கள் செய்யவில்லை என மறுப்பறிக்கை விடவில்லை?
கடைசி யுத்தத்தில் அமெரிக்காவின் கப்பல் வரும் அந்த மக்களை காப்பாற்றும் என்ட மாதிரித் தான் இங்கே பல பேரின் கதை இருக்குது.
புலிகளையும்,தலைவரையும் ஒரு முட்டாளாக்கும் செயலைத் தானே இங்கு இருக்கும் சிலர் செய்கின்றனர்.
ராஜீவ் இந்தியன் ஆமியை ஈழத்திற்கு அனுப்பி கொண்ட‌ மக்களுக்கும்,வன்புணர்வுக்கு ஆளான மக்களுக்கும்,பாதிக்கப்பட்ட மக்களுக்கும் தெரியும் புலிகள் ராஜீவை கொண்டதில் ஒரு பிழையும் இல்லை என்று  
ஒரு தமிழனாய்,வீரனாய்,புலியாய் அதை ஏற்பதே எமக்கு நல்லது.
ராஜீவ் கொலையை புலிகள் செய்யவில்லை என்று இப்ப பாடுவது இந்திய அரசு எம்மக்களை அழிக்க ராஜீவ் தான் காரணம் என்று  சொன்னதிற்கு இங்குள்ள சில பேர் தங்களை அறியாமல் ஒத்து ஊதுகிறார்கள்.
உண்மையில் அதுவா கார‌ணம்?
ஒரு தமிழிச்சியாய் சொல்கிறேன் புலிகள் ராஜீவை கொண்டு இருக்கா விட்டால் புலிகள் எம்மக்களுக்காய் போராடியதில் ஒரு பிர‌யோச‌மும் இல்லை

ரதி சொன்ன முதல் பாதியை நான் ஏற்கிறேன் அது தான் உண்மை . இந்துரா காந்தியை கொல்லப்பட்டபோது சீக்கியர்கள் கொன்று குவிக்கப்பட்டனர் , அதே நிலைமை ராஜீவ் கொல்லப்பட்டபோது இந்திய தமிழர்களுக்கு ஏற்பட்டு இருந்தால் எங்கள் நிலை என்னவாக இருக்கும் என புலி தலைவர் எண்ணிபார்கவில்லை இந்திய தமிழ்களை பற்றி யாரும் கவலைப்படவில்லை. 

ராஜீவ் கொல்லப்பட்டபோது இந்தியா புலிகளை அழிக்க வேண்டும் என முடிவு கட்டியிருதால் , 5-6 மணிநேரத்தில்  அது நிறைவேறி இருக்கும் , அப்படிபட்ட ஒரு நிலையை எடுத்திருந்தால் என்ன செய்திருப்பார்  புலிகள். IPKF செய்தது மிகப் பெரிய தவறுதான் மன்னிக்கமுடியாத தவறு எனது இன வலியை நான் உணர்கிறேன் துயரத்தை பங்குகொல்கிரன். அனால் விடுதலை இயக்கந்தின் நோக்கம் விடுதலையாக இருக்கவேண்டுமே  தவிர பழிவாங்கும் அமைப்பாக இருக்கக்குடாது , அந்த பழிவாங்கல் மூலம் பிராந்திய வல்லரசின் பகைமையை பெற்றது தான் மிச்சம்.

நான் மேதகு பிரபாகரனை மதிக்கிறேன் அவர் போல ஒப்பற்ற ,சுயநலம் இல்லாத  தலைவரை  காண்பது அரிது ,அவர் தமிழர் என்பதில் பெருமை கொள்கிறேன் , தமிழ் தாயின் வீரத் திருமகன் என்பதில் சந்தேகமில்லை . அவர் விடுதலையை பெற்றிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். 

ஜோ ............மறவர் என்ன சொல்ல வருகிறீர்கள் ,உண்மையையா ,அல்லது சளுப்பலையா .........அன்று சீக்கியன் இந்திரா காந்தியை  கொன்றான் ..........உண்மை வெளிப்பட்டது .சீக்கியர்கள் கொல்லப்பட்டார்கள் ......நீங்கள்தான் சொல்கிறீர்கள் ................சரி தமிழனே ராஜீவ் காந்தியை கொன்றான் என ஒரு எடுகோள் எடுப்போம் .ஏன் அப்ப தமிழர்கள் உடனே கொல்லப்படவில்லை ...................அங்கே எங்கோ உதைக்கிறது என்றுமட்டும் தான் தெரிகிறது ,,,,,,,,,,,,,ஆனால் ஒன்று மட்டும் தெரிகிறது ராஜீவின் கொலை .......அன்றைய அரசியல் சூழலில் இந்திய அரசாங்கத்திற்கு எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதுதான் ........................அப்ப ராஜீவ் காந்தியை தமிழர்கள் கொல்லவில்லை .என்பதை...........அது கூறிநிற்கிறது .......................ஒன்றும் புரியலையா ...............எனக்கும்தான் ............நன்றி வணக்கம் .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.