Jump to content

கள உறவுகளின், அசத்தல் கருத்துகள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

முன்பு எப்போதும் இல்லாத அளவில் தமிழகத்தில் இன எழுச்சி எற்பட்டுள்ளது, மே மாதம் நடைபெற்ற மாணவர் போரட்டங்களை யாரும் எளிதில் மறக்க இயலாது. நிற்சயம் இவை பாரிய தாக்கங்களை எற்படுத்தி உள்ளது, மீண்டும் மாணவர் போரட்டங்கள் உருவாக கூடாது என்று ஆட்சியாளர்கள் அஞ்சுகின்றனர். சுய லாபத்திற்காக இயங்கும் தமிழக அரசியற் கட்சிகளினாலே இன்று இந்திய அரசின் நிலைப்பாடுகள் மட்டப்படுத்தப் பட்டுள்ளன. 13A விற் கூறப்பட்டுள்ள தீர்வையே பெற்றுத்தர இயலாது என்று தெரிந்திருந்த போதும் அவர்களின் பக்கம் இருப்பதையே கூட்டமைப்பு விரும்புகிறது. இலங்கயின் அரசியலமைப்பிற்குட்பட்ட எந்த அதிகாரத்தையும் கூட்டமைப்பு பெற்றுத்தர இயலாது என்று தெரிந்த போதும் கூட்டமைப்பின் பக்கம் சார்ந்து இருப்பதை நீங்கள் விரும்புகிறிர்கள். போரடுகிறவர்களையும் தூற்றுகின்றீர். அயுத போரட்டம் முடிந்து மக்கள் போரட்டம் துவங்கியுள்ளதை எற்க மறுக்கின்றீர்.

 

தலைப்பை இணைத்தவர்: கோசான்.

அசத்தல் கருத்து: ராஜன் விஷ்வா. பதிவு இலக்கம் - 54

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=130803&page=3

Link to comment
Share on other sites

  • Replies 131
  • Created
  • Last Reply

புகழ்ச்சிக்கு நான் அடிமையில்லை. அது ஏதோவொரு உயர்வென்ற எண்ணம் என் மனதிற்கு உண்டு. தமிழ் சிறி அவர்களின் பதிவானது என் மனதையும் தாண்டி உள்ளே சென்று அதெல்லாம் பிரமை, பொய்யென்று அடித்துக் கூறிவிட்டது. :(   :D  

Link to comment
Share on other sites

புலி பிறந்த தேசத்தில இருந்து இப்ப தான் மீண்டு வந்திருக்கன்.. அங்க ஒரே குள்ளநரிகளின் அட்டகாசமா இருக்கு. :)

 

1383799_539258832806000_1074765772_n.jpg

 

 

 

82´வது கருத்தில்... நெடுக்காலபோவன்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=125416&page=5#entry945037

Link to comment
Share on other sites

 

மில்க்வைட் கனகராசா இருந்த காலத்தில் வடமாகாணத்தில் உள்ள ஏராளமான குளங்களை தூர்வாரி புனரமைத்து நிலத்தடி நீரைப் பாதுகாத்து வந்ததுடன் விழிப்பணர்ச்சி கூட்டங்களையும் நடத்தினார். அவருடைய காலத்தில்தான் மரம் வளர்ப்பினை ஊக்குவிக்கும் செயலும் நடைபெற்றது.

 

இதற்காகவே விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவரது காலில் வீழ்ந்து வணங்கினார்.

 

இவ்வாறானவர்கள் எல்லாம் தற்போது இல்லை. அந்த இடத்தினை நிரப்ப ஓரளவு ஐங்கரநேசன் என்கின்ற தனிநபர் அமைச்சராவதற்கு முன்னரே தனது சொந்தச் செலவில் சுவரொட்டிகளையும் ஒட்டி விழிப்புணர்வு கட்டுரைகளையும் எழுதி வந்தார்.

 

வடபகுதியில் இன்று மண் வளத்தினை சீரழிக்கின்ற பணியினையே அந்த மக்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

 

முன்னர் எல்லாம் மங்கல அமங்கல நிகழ்வுகளில் எல்லாம் வாழை இலையில் உணவு பரிமாறினர். ஆனால், இன்றோ கோப்பைகளில் பொலித்தீன் பேப்பர்களை வைத்து உணவுகளைப் பரிமாறுகின்றனர். அதே போன்று பிளாஸ்டிக்கிலான கப்களில் பானங்களையும் வழங்கி வருகின்றனர்.

 

இதனை இங்கே தவறு என்று நான் வாதிட வரவில்லை. ஆனால், உரிய முறையிலான Recycling இல்லாத காரணத்தினால் பலர் பிளாஸ்ரிக் பொருட்களை எரிப்பதும் மண்ணுக்குள் வைத்தும் மூடுகின்றனர்.

 

இதன் காரணத்தினால் அந்த பிளாஸ்ரிக் பொருட்கள் 25 வருடங்களுக்கு மேலாக உக்காது மண் வளத்தினை சீரழிக்கின்றது.

 

அதே போன்று பயிர்களுக்கான கிருமி நாசினிகளை கண்மூடித்தனமாக பாவிப்பதனால் நைதரசன் செறிவு கூடி மண்ணின் வளம் பாதிக்கப்படுகின்றது.

 

இதன் காரணமாக இன்று யாழ். மாவட்டத்தில் நீரில் நைதரசன் செறிவு கூடிய காரணத்தினால் கிட்னி பாதிப்பினால் பெருமளவிலானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

இன்னுமொரு கவலைக்குரிய விடயம் மரங்களை தறிப்பதில் காட்டும் ஆர்வத்தினை மரம் வளர்ப்பதில் எவருமே காட்டுவதில்லை.

 

ஐங்கரநேசனின் முயற்சிக்கு புலம்பெயர் தமிழர்கள் நாம் தனிப்பட்ட ரீதியில் உதவி புரிந்தால் நல்லது. அவர் தனிப்பட்ட ரீதியிலேயே பல விடயங்களைச் செய்தும் உள்ளார்.

 

அதே போன்று திருநெல்வேலி விவசாய பீட மாணவர்களும் துடிப்பாக இருக்கின்றனர். அவர்களுக்கும் உதவி புரிந்தால் மர வளர்ப்பினையும் இயற்கை பாதுகாப்பு நடவடிக்கையினையும் ஊக்குவிக்கலாம்.

 

இந்த இடத்தில் இன்னுமொரு விடயத்தினையும் குறிப்பிட்டேயாக வேண்டும்.

 

யாழ். மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த பெருமளவிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். அவர்கள் எல்லாம் காக்கைதீவு வழியாக பயணம் செய்வதில்லையோ என்கின்ற ஐயம் எனக்கு நிறையவே உண்டு.

 

அந்த வழியாக செல்லும் போது வீசும் துர்நாற்றம் சகிக்க முடியாதது. அங்கேதான் யாழ். மாவட்டத்து கழிவுகளை கொண்டு வந்து கொட்டுகின்றனர். ஆடு, கோழி ஆகியவற்றின் கழிவுகள் உட்பட அனைத்துக் கழிவுகளையும் கொட்டுகின்றனர்.

 

இதன் காரணத்தினாலேயே அருகில் வசிக்கும் மக்கள் பெருமளவு துன்பத்தினை அனுபவித்து வருகின்றனர்.

 

டக்ளஸ் உட்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் அந்த மக்கள் முறையிட்டுப் பார்த்தனர் எதுவுமே நடக்கவில்லை.

 

Recycling முயற்சியினை ஒருவர் அண்மையில் தொடங்கியிருப்பதாக அறிந்தேன். ஆனால், அது தொடர்பிலான விழிப்புணர்வு மக்களிடம் ஏற்படவில்லை என்று நான் அங்கு இருந்த போது பலரும் தெரிவித்தனர்.

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=131010&page=2#entry949474

 

நிர்மலன் இதுவரை எழுதிய கருத்துக்களில் அசத்தலான கருத்து. #25

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
 
விவசாயி விக், on 25 Oct 2013 - 3:28 PM, said:

நாம் எப்போதும் 20 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் 70 மில்லியன் தமிழரை பாவிக்க தவறுகிறோம்.

இதனால் தான் 90 மில்லியன் தமிழர் 14 மில்லியன் சிங்களவரிடம் அடி பணியும் கேவலமான நிலையில் உள்ளோம்.

கோவில் சுற்றுலாக்கள், கலை நிகழ்சிகள் ஊடாக தமிழ் நாட்டவரை ஈழத்தில் உலவவிடவேண்டும்.

மற்றும் ஒவ்வொரு தமிழ் மாவட்டத்தில் இருந்தும் வியாபார குழுக்கள் தமிழ் நாடு செல்லவேண்டும்.

மற்றும் எமது புத்தக புழு கல்வியாளர்கள் தமிழர்கள் வாழும் நாட்டு பல்கலைகழகங்களுடன் தொடர்புகள் ஏற்படுத்தவேண்டும்.

புத்தகத்தை கரைத்து குடிக்காமல் மக்களின் அவசர தேவைகளை பூர்த்தி செய்யும் திட்டங்கள், பொருட்கள், உபகரணங்களை உருவாக்கவேண்டும்.

எமது மக்களின் அரசியல் தீர்வு வர காலமெடுக்கும் ஆனால் கீழ்மட்ட பொருளாதாரத்தை (Grass root economy) மேம்படுத்துவதால் எமது மக்களை வலுபடுத்தலாம்.

 

 

தலைப்பை இணைத்தவர்: தமிழரசு

அசத்தல் கருத்து: விவசாயி விக், .

பதிவு இலக்கம் - 08

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=131228&p=951646

Link to comment
Share on other sites

  • 2 years later...

நானும் வேதாளம் படம் பார்த்து நொந்து நூலாய்  தான் வெளியில வந்தேன் 
என்னடா 2015 ஆம் ஆண்டில் இப்படி ஒரு பச்சை மசாலாப் படமா ?
இதுக்குப் போயிட்டு 100 கோடி வசூலா? 
எப்படியோ நமக்கு "ஆலுமா டோலுமா ...பதினைஞ்சு டாலர் காலிமா " !!!

-

photo-thumb-9781.pngSasi_varnam

 

 

 

 

 

 

Link to comment
Share on other sites

  • 2 years later...
  • கருத்துக்கள உறவுகள்

 

65 வயதில் உடலில் போதுமான சக்தி இருக்காது ....... கேக் இருக்கும் பழம் இருக்கும் ... கூடவே உடலில் சுகர் இருக்கும்  உண்ண முடியாது. 

மருதங்கேணியார்.
 

பொன்மொழியை உதிர்த்த இடம். ⬇️

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.