Archived

This topic is now archived and is closed to further replies.

jdlivi

சித்தம் - (மருத்துவம் ....இன்னும் பல) தமிழர்களின் வாழ்வியல் உணவும் மருந்தும்

Recommended Posts

jdlivi    50
பீட்ரூட்டின் மருத்துவ குணங்கள்:-

அழகிற நிறம் மற்றும் நிறைய சத்துகளை கொண்ட காய் பீட்ரூட். நிறைய மருத்துவ பயன்களை தன்னகத்தே கொண்டுள்ளது.

1. பீட்ரூட்டை பிழிந்து சாறு எடுத்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வர அல்சர் குணமாகும்.

2. பீட்ரூட் சாறுடன் வெள்ளரிச்சாறு கலந்து சாப்பிட்டு வடர சிறுநீரகங்களும் பித்தப்பையும் சுத்திகரிக்கப்படும்.

3. பீட்ரூட் சாறுடன் படிகாரத்தை பொடியாக்கி சேர்த்து கலந்து உடலில் எரிச்சல், அரிப்பு உள்ள இடங்களின் மேல் தடவ எரிச்சல் அரிப்பு மாறும்.


4. தீப்பட்ட இடத்தில் பீட்ரூட் சாறைத் தடவினால் தீப்புண் கொப்புளமாகாமல் விரைவில் ஆறும்.

5. பீட்ரூட் கஷாயம் மூலநோயை குணப்படுத்தும்.

6. இரத்த சோகையை குணப்படுத்தும்.

7. பீட்ரூட் சாறு அஜீரணத்தை நீக்கி செரிமானத்தைக் கூட்டும்.

8. பீட்ரூட்டை நறுக்கி பச்சையாக எலுமிச்சை சாற்றில் தோய்த்து உண்டுவர இரத்தத்தில் சிவப்பணுக்கள் உற்பத்தியாகும்.

9. பீட்ரூட்டை வேக வைத்த நீரில் வினிகரைக் கலந்து சொறி, பொடுகு, ஆறாத புண்கள் மேல் தடவி வர அனைத்தும் குணமாகும்.
7163_566933866662266_1875639687_n.jpg

 வீட்டு வைத்திய குறிப்புகள்:-

1.சுக்கு,மிளகு,திப்பிலி

இந்த மூன்றையும் இடித்து வைத்துக் கொண்டால் காய்ச்சல், இருமல், ஜலதோஷம் முதலியவற்றின் போது இவற்றைக் கஷாயமாகப் போட்டு அருந்தினால் உடனே குணம் கிடைக்கும்.மற்ற நாட்களில் சுக்கு காபி அல்லது மல்லி காபி தினமும் ஒரு வேளை அருந்தி வரவேண்டும்.இதனால் கொலஸ்ட்ரால் பிரச்சனை தினமும் கட்டுப்படுத்தப்படும்.

2.இஞ்சி

தினமும் உணவில் இஞ்சி சேர்த்தால் உடல் வலியோ செரிமானக் கோளாறோ ஏற்படாது.வயதானவர்கள் பசியில்லை என்று சொல்ல மாட்டார்கள். குழந்தைகளும் நன்கு சாப்பிடுவார்கள்.

3.புளி

சாம்பாரிலும் இரசத்திலும் சேரும் புளியில் வைட்டமின் பி மற்றும் சி,டார்டாரிக் அமிலம்,கால்சியம் முதலியன உள்ளன. இந்த டார்டாரிக் அமிலம், அதிக மாவுப் பொருட்களால் உடல் நலம் கெடாமல் பார்த்துக் கொள்கிறது. எனவே,காய்ச்சல், ஜலதோஷம் முதலியவை தாக்கினால் மிளகு, பூண்டு,புளி சேர்த்த இரசம் தவறாமல் ஒரு டம்ளராவது அருந்துங்கள்.சாம்பார் தினமும் இடம் பெறட்டும்.

4.துளசி

துளசி இலைக்கு மன இறுக்கம், நரம்புக் கோளாறு, ஞாபகச் சக்தி இன்மை,ஆஸ்துமா,இருமல் மற்றும் பிற தொண்டை நோய்களை உடனுக்குடன் குணமாக்கும் சக்தி உண்டு. துளசி இலைச் சாறில் தேன், இஞ்சி முதலியன கலந்து ஒரு தேக்கரண்டி அருந்தலாம். சளி,இருமல் உள்ள குழந்தைகளுக்கு தினமும் மூன்று வேளை மூன்று தேக்கரண்டி இந்த துளசிக் கஷாயம் கொடுத்தால் போதும்.ஆங்கில மருத்துவத்தில் தரப்படும் ஆன்டிபயாட்டிக்குகள் நல்லதல்ல.

5.பேரிக்காய், காரட்

இவற்றில் புற்று நோயை குணமாக்கும் போரான் என்ற உப்பு இருக்கிறது.மூட்டுகளில் வலி இருந்தால் கொஞ்ச நாளைக்காவது மூலிகை நன்கு சேர்த்து வரவும்.

6.நன்னாரி

உலர்ந்த நன்னாரி வேரை இடித்து வைத்துக் கொள்ளவும்.தினமும் 30 கிராம் அளவு வேரை தேனீராகவோ அல்லது சர்பத்தாகவோ தயாரித்து அருந்தி வந்தால் உடலுக்குச் சத்து கிடைக்கும்.இரத்தம் சுத்தமாகும்.எல்லா உறுப்புகளும் சீரகச் செயல்படும்.காய்ச்சலின் போது நன்னாரி டீ அருந்தினால் உடனே உடல் வியர்த்து காய்ச்சல் பறந்து விடும்.

7.சோற்றுக் கற்றாழை

சோற்றுக் கற்றாழை இலையின் சாறு மந்தமான சிந்தனை சக்தி,மலட்டுத் தன்மை,கல்லீரல் கோளாறுகள் மற்றும் குழந்தைகளின் குடலில் உள்ள பூச்சிகளுக்கு நல்ல மருந்தாகும்.

8.சோம்பு

உணவில் சேரும் சோம்பு கண் கோளாறுகளைத் தடுக்கிறது.சோம்புக் கஷாயம் மாதவிலக்குக் கோளாறுகளை ஆஸ்துமாவுக்கு போடும் ஊசி போல உடனே மட்டுப்படுத்துகிறது.

9.சுரைக்காய்,பூசணிக்காய்

இவை சிறுநீரகக் கோளாறுகளை குணமாக்குகிறது.நீரிழிவு நோய்களும்,கொழுத்த சரீரம் உள்ளவர்களும் தினமும் இவற்றைச் சாப்பிட்டால் உடல் குளிர்ச்சியாக இருக்கும்.

10.விளாம்பழம்

வயிற்றுப் பொருமல்,தொந்தி முதலியவற்றை விளாம்பழம் எளிதில் குணப்படுத்துகிறது.

11.அமுக்கிரா கிழங்கு

இதய நோயாளிகளும்,சோர்வானவர்களும் இரண்டு கிராம் அமுக்கிரா கிழங்குத் தூளைப் பாலில் கலந்து சாப்பிடவும்.புதுமணத் தம்பதிகள் நான்கு கிராம் பவுடரை பாலில் கலந்து அருந்தவும்.

12.கரிசலாங்கண்ணி கீரை,கீழாநெல்லி

கல்லீரல் கோளாறுகள் கரிசலாங்கண்ணிக் கீரைச் சாறால் எளிதில் குணமாகும்.குடிப்பழக்கமும்,மஞ்சள் காமாலையுமிருந்தால் கரிசலாங்கண்ணிக் கீரையுடன் கீழாநெல்லியையும் சேர்த்து அரைத்து ஒரு நாட்டு நெல்லிக்காய் அளவு எடுத்து மோரில் கலந்து குடித்து வரவும்.கரிசலாங்கண்ணிக் கீரைப் பொடி தோல் நோய்களை படிப்படியாகக் குணப்படுத்தும்.

சர்க்கரை நோயாளிகளுக்கு அருகம்புல் சாறும்,வாத நோயாளிகளுக்கு சிற்றாமுட்டி வேர்த் தைலமும் கெட்டிச் சளிக்கு ஆடா தொடைச் சாறை தேனுடன் சேர்த்து சாப்பிடுவதும் கைகண்ட மூலிகை மருந்துகளாகும்.

946275_566933736662279_210947492_n.jpg

  
நீரிழிவு நோய்யை கட்டுபடுத்தும் காய்கறிகள்:-

தற்போது நீரிழிவால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கையில் இந்தியா முதலில் உள்ளது. ஏனெனில் இந்தியர்கள் எந்த ஒரு உணவிலும் சரியான கட்டுப்பாட்டுடன் இல்லாததால், பாரபட்சமின்றி நோய்கள் உடலைத் தாக்குகின்றன. அவ்வாறு தாக்கும் நோயில் ஒன்று தான் நீரிழிவு. அதிலும் அந்த நோய் வந்தால், அதற்கான டயட சார்ட்டை தயார் செய்வது என்பது மிகவும் கடினம். பழங்கள் மற்றும் காய்கறிகள் உடலுக்கு ஆரோக்கியத்தை தந்தாலும், நீரிழிவு நோயளிகளுக்கு சில நேரங்களில் அவை கெடுதலை விளைவிக்கும். ஏனெனில் நிறைய காய்கறிகளில் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அதிகரிக்கும் பொருள் உள்ளது.

உதாரணமாக, உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட் போன்ற காய்கள் அனைத்தும் உடலுக்கு மிகவும் சிறந்தவை. ஆனால், அது நீரிழிவு உள்ளவர்களுக்கு சிறந்தது அல்ல.

பாகற்காய்

நீரிழிவு நோயாளிகளுக்கு பாகற்காய் ஒரு வரப்பிரசாதம் என்று சொல்லலாம். ஏனெனில் இந்த பாகற்காய் ஜூஸை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்படும்.


வெந்தயக் கீரை

கீரை வகைகளில் வெந்தயக் கீரையை சாப்பிட்டு வந்தால், நீரிழிவைத் தடுக்கலாம். இந்த கீரையில் உள்ள லேசான கசப்பு சுவையானது, இரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவை குறைக்கிறது.


வெண்டைக்காய்

வெண்டைக்காயை நறுக்கும் போது வரும் ஒருவித பசை போன்ற நீர்மம், நீரிழிவைக் கட்டுப்படுத்தும். அதற்கு இரவில் தூங்கும் போது வெண்டைக்காயை இரண்டாக கீறி, ஒரு டம்ளர் நீரில் ஊற வைத்து, அதிகாலையில் எழுந்ததும், வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.


சுரைக்காய்

இன்சுலின் குறைபாட்டினால் வரும் நீரிழிவை, சுரைக்காயின் சாற்றை எடுத்து, காலையில் குடித்து வர சரியாகும்.


லெட்யூஸ் (Lettuce)

இந்த பச்சை இலைக் காய்கறியில் நார்ச்சத்து அதிகமாகவும், சர்க்கரையின் அளவு குறைவாகவும் உள்ளது. ஆகவே இதனை சாப்பிடுவது நல்லது.


காலிஃப்ளவர்

மற்ற காய்கறிகளைப் போன்று, காலிஃப்ளவர் இனிப்பு சுவையற்றது. ஆகவே இதனை அதிக அளவில் உணவில் சேர்த்து வந்தால், உடலானது நன்கு ஆரோக்கியமாக இருக்கும். இனிப்பு சுவை இல்லாத காய் என்பதால, நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் ஏற்றது.


பூசணிக்காய்

அனைவருக்குமே பூசணிக்காய் இனிப்பு சுவையுடையது என்பது தெரியும். ஆனால் அவற்றில் கிளைசீமிக் இன்டெக்ஸ் மிகவும் குறைவாக இருக்கும். எனவே தான் இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற ஒரு காய்கறி.


பிரெஞ்சு பீன்ஸ்

பிரெஞ்சு பீன்ஸில் உள்ள ஊட்டச்சத்துக்கள், உடலில் இன்சுலின் அளவை அதிகரிக்கிறது. எனவே இதனை நீரிழிவு உள்ளவர்கள் உண்டால், நீரிழிவைத் தடுக்கலாம்
419108_566934149995571_1313425240_n.jpg

 

Share this post


Link to post
Share on other sites
jdlivi    50

இதயத்துக்கு ஏற்ற சமையல் எண்ணெய்

நம் அன்றாட சமையலில் எண்ணெய்யின் பயன்பாடு பற்ற உங்களுக்கு சொல்லத் தெரியவேண்டியதில்லை. எண்ணெய் இல்லாத சமையலை நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவுக்கு நம் சமையல் முறையில் அசைக்கமுடியாத இடம் பிடித்திருக்கிறது எண்ணெய்.

சமையல் கலைப் புத்தகத்தில் இடம் பெற வேண்டிய தகவல்கள் எல்லாம் மாறி மருத்துவப் புத்தகத்துக்கு வந்துவிட்டதா என நினைக்காதீர்கள். எண்ணெய் பற்றி இங்கு பேசுவதற்கு ஒரு முக்கியமான காரணம் இருக்கிறது.
நாம் பயன்படுத்துகிற எண்ணெய்க்கும் இதய நலனுக்கும் மிக நெருக்கமான தொடர்பு இருக்கிறது. எண்ணெய் பற்றி சில விஷயங்களைச் சொன்னால்தான் உங்களால் அந்தத் தொடர்பு பற்றி முழுமையாகப் புரிந்து கொள்ள முடியும்.

எண்ணெய்யைச் சமையலில் பயன்படுத்துவதற்கு அடிப்படைக் காரணம் என்ன?

நாம் சாப்பிடும் உணவுக்கு அது சுவையையும், நறுமணத்தையும் கூட்டுகிறது.

சமையல எண்ணெய்களை ஆற்றலின் பெட்டகம் என்று சொல்லலாம். மிகவும் குறைந்த அளவில் அதிக வெப்ப ஆற்றலைத் தரக்கூடியது எண்ணெய்.

கொழுப்பில் கரையும் தன்மையுள்ள உயிர்ச்சத்துகளை ஒரு இடத்தில் இருந்து மற்றோர் இடத்துக்கு எடுத்துச் செல்லும் ஊடகமாகச் செயல்படுகிறது.

உணவுக் குழல், இரைப்பையில் உள்ள மென் திசுக்களைப் புற்றுநோயில் இருந்து பாதுகாக்கத் துணை புரிகிறது.

மேலே சொன்னவை போன்ற பல காரணங்களுக்காகத்தான் எண்ணெய்யை நாம் உபயோகிக்கிறோம். நம்மில் பலர் எண்ணெய்யும், கொழுப்பும் வேறு வேறு என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மை என்னவெனில் எண்ணெய் என்பது திட நிலையில் உள்ள கொழுப்பு. கொழுப்பு என்பது திட நிலையில் உள்ள எண்ணெய் (A fat is a solid oil and an oil is a liquid fat). கொழுப்பும், எண்ணெய்யும் புறத்தோற்றத்தில்தான் வித்தியாசப்படுகின்றனவே தவிர, வேதியியல் மூலக்கூறு அடிப்படையில் இரண்டும் ஒன்றுதான்.

பொதுவாக ஒரு மனிதனுக்குத் தினமும் தேவைப்படும் சக்தியானது 1800 கலோரிகள் என வைத்துக் கொள்வோம். இந்த மொத்தக் கலோரிகள் தேவையில் சுமார் 4 சதவீதத்தைப் பூர்த்தி செய்யும் வகையில் சமையல் எண்ணெய்யைப் பாதுகாப்பாக அன்றாடம் பயன்படுத்திக் கொள்ளலாம். அதாவது 72 கலோரிகள் அளவு வெப்பத்தைத் தரக்கூடிய சமையல் எண்ணெய்யைப் பயன்படுத்தலாம். கிராம் அளவில் கணக்கிட்டால் 9 கிராம் அளவு உள்ள எண்ணெய் போதும்.

சமையலுக்கு எந்த எண்ணெய்யைப் பயன்படுத்துகிறோம் என்பது இந்தியாவைப் பொருத்தவரை மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடுகிறது. அந்தந்த மாநிலத்தில் பயிர் செய்யும் எண்ணெய் வித்துகளின் தன்மையை அடிப்படையாகக் கொண்டே இது தீர்மானிக்கப்படுகிறது.

வட மாநிலங்களில் கடுகு எண்ணெண்யையும், தென் மாநிலங்களில் தேங்காய் எண்ணெய், நெய், நல்லெண்ணெய் போன்ற எண்ணெய்களையும் காலம் காலமாகப் பயன்படுத்தி வருகின்றனர்.

17ம் நூற்றாண்டுக்குப் பிறகு போர்ச்சுகீசியர்களின் உபயத்தால் கடலை எண்ணெய்யைப் பயன்படுத்தி வருகிறோம். அண்மையில் சூரியகாந்தி எண்ணெய், மக்காச்சோள எண்ணெய், தவிட்டு எண்ணெண், பருத்திகொட்டை எண்ணெய் போன்ற எண்ணெய்களையும் சமையலுக்குப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறோம்.

பொதுவாக சமையல் எண்ணெய்யின் தன்மை, அதில் அடங்கியிருக்கும் ஹைட்ரஜன் அணுக்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கப்படுகிறது. ஒரு எண்ணெய்யில் எந்த அளவு ஹைட்ரஜன் அணுக்கள் உள்ளனவோ அதை அடிப்படையாகக் கொண்டு செறிவுற்ற, கொழுப்பு செறிவற்ற என எண்ணெய் வகைகளை இரண்டு பிரிவுகளாகப் பிரித்துள்ளனர்.

கொழுப்பு எந்தவிதமான சிதைவு மாற்றங்களும் இல்லாமல் கெட்டியான நிலையில் இருக்கும். வெண்ணெய், நெய், விலங்கினங்களின் கொழுப்பு வகைகள், தேங்காய் எண்ணெய், பாமாயில் போன்றவை செறிவுற்ற கொழுப்புச் சில உதாரணங்கள்.

இவற்றில் தேங்காய் எண்ணெய்யும், பாமாயிலும் திரவ நிலையில் இருந்தாலும், வேதியியல் அடிப்படையில் செயல்படும் போது மற்றவகையான சேறிவுற்ற கொழுப்புபோலவே இருக்கும். இந்தக் கொழுப்பு வகையில் வருகிற சமையல் எண்ணெய்யை சமையலுக்குப் பயன்படுத்தும்போது மிக்க கவனம் தேவை.

ஏனென்றால், இவ்வகையான சமையல் எண்ணெய்கள் ஓரளவு நன்மை தந்தாலும், இவற்றை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தினால் இதயம் மற்றும் இதயம் தொடர்புடைய ரத்தக் குழாய்களுக்குப் பலவகையான சிக்கல்களை காலப்போக்கில் ஏற்படுத்தக்கூடும்.

இவ்வகையான சமையல் எண்ணெய்கள் தோலுக்குத்தான் சிறந்தவை. இதயத்துக்கு அல்ல என்று சொல்வதுண்டு (Oil is good for the skin but bad for the heart).

அளவுக்கு அதிகமாக தினசரி சமையலில் செறிவுற்ற எண்ணெய்யைப் பயன்படுத்துவதால் இதயத்தில் பலவகையான பாதிப்புகள் ஏற்படுகின்றன. குறிப்பாக இதயத் தமனிகள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றன. இவ்வகையா எண்ணெண் ரத்தக் குழாய்களில் கொலஸ்ட்ராலாக அளவுக்கு அதிகமாகச் சேர்ந்துவிடுகிறது. அளவுக்கு அதிகமாகப் படியும் கொலஸ்ட்ரால் இதயத் தமனிகளின் உள்விட்டத்தை முழுமையாக அடைப்பதால் இதயத்துக்குச் செல்லும் ரத்தமானது தடைபட்டு இதயத் தமனி நோய் ஏற்படுகிறது.
செறிவுய்ய கொழுப்பு (Unsaturated Fat) கார்பன் சங்கிலித் தொடரில் ஹைட்ரஜன் அணுக்கள் முழுமையாக இல்லாமல், குறைவான அளவில் இருக்கும் கொழுப்பு வகை எண்ணெய்களை செறிவற்ற கொழுப்பு எண்ணெய் (Unasturated Fatty oils) என்று சொல்வார்கள்.

ஹைட்ரஜன் அணுக்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு இவற்றைப் பொதுவாக மியூஃபா எண்ணெய் என்றும் பியூஃபா எண்ணெய் என்றும் இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரித்துள்ளனர்.

பியூஃபா கொழுப்பு!

கார்பன் சங்கிலித் தொடரில் ஹைட்ரஜன் அணுக்களின் எண்ணிக்கையானது ஒன்றுக்கு மேல் குறைவாக இருந்தால் அவ்வகையானது ஒன்றுக்கு மேல் குறைவாக இருந்தால் அவ்வகையை பியூஃபா என்பது (PUFA) எண்ணெய் என்று சொல்வார்கள். (பியூஃபா என்பது Poly Saturated Fatty Acid என்பதன் சுருக்கம்).

பியூஃபா எண்ணெய்யை ஒமேகா 3 இன்றியமையா கொழுப்பு அமிலம் (Omega-6 Essential Fatty Acid) என்றும் பலவகைகளாகப் பிரித்துள்ளனர்.

பெயருக்கு ஏற்றார்போல் ஒமேகா கொழுப்பு அமிலங்கள் நம் உடலுக்கு இன்றியமையாதவையாக இருக்கின்றன. நம் உடலின் ஆரோக்கியத்துக்கு அத்தியாவசியமாகத் தேவைப்படும் பல முக்கியமான பணிகளை நிறைவேற்றுவது இவைதான்.

ஒமேகா கொழுப்பு அமிலங்கள் நமது உடலில் உள்ள செல்களைப் பராமரிப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன. மேலும் இவ்வகை அமிலங்கள், பிராஸ்டாகிளாண்டென் (Prosta Glanden) என்ற ஹார்மோன் சுரக்கத் துணைபுரிகிறது. ரத்த உறைவைத் தடுக்கவும் ரத்த அழுத்த அளவை சீராக வைத்துக் கொள்ளவும், நோய் தடுக்கும் ஆற்றல் அதிகமாகவும் இவை துணை புரிகின்றன. இதயத்தைப் பாதுகாப்பதிலும் ஒமேகா கொழுப்பு அமிலங்களுக்குப் பெரும் பங்கு உண்டு.

ஒமேகா கொழுப்பு அமிலங்களை, தேவையான அளவில் அன்றாட உணவில் சேர்த்துக் கொண்டால் நன்மை தரும் கொலஸ்ட்ரால் உற்பத்தியை கல்லீரல் அதிகமாக்குகிறது. நன்மைதரும் கொலஸ்ட்ரால் இதயத் தமனிகளின் உள் பகுதியில் படியும் கொழுப்புத் துகள்களை அகற்றி, ரத்தக் குழாய்களை ஆரோக்கியமாக வைத்திருப்பதால்தால் இவற்றை ரத்தக் குழாய்களைத் தூய்மைப்படுத்தும் துப்புரவாளர்கள் என்று குறிப்பிடுவதுண்டு. எனவே ரத்தத்தில் நன்மை தரும் கொலஸ்ட்ராலின் அளவு அதிகமாவதால் இதயத் தமனி அடைப்புகளில் இருந்து இதயத்துக்குப் பாதுகாப்பு கிடைக்கிறது.

ஒமேகா 3 கொழுப்பு எண்ணெய்கள், மீன் வகை உணவுகளிலும், சோயா, மொச்சையில் இருந்து தயாரிக்கப்படம் எண்ணெய்யிலும் மிக அதிகமாக உள்ளன. இதுபோல் ஒமேகா 6 கொழுப்பு எண்ணெய்கள், சூரியகாந்தி எண்ணெய், மக்காச்சோள எண்ணெய் போன்றவற்றில் மிக அதிகமாக உள்ளது.

ஒரு தனி மனிதனின் அன்றாட எண்ணெய்த் தேவையில் பியூஃபா வகை கொழுப்பு, மூன்றில் ஒரு பங்கு என்ற அளவில் சேர்க்கப்பட வேண்டும்.

மியூஃபா கொழுப்பு!

கொழுப்பு அமில சங்கிலித் தொடரில் ஒரு இணை ஹைட்ரஜன் அணுக்கள் குறைந்தால் அவ்வகையான சமையல் எண்ணெய்களை மியூஃபா எண்ணெய்கள் என்று சொல்வார்கள். MONO UNASATURATED FATTY ACID என்பதன் சுருக்கம்தான் மியூஃபா (mufa) என்பதாகும்.

மியூஃபா வகைக் கொழுப்பாலும் நம் உடலுக்குப் பல நன்மைகள் கிடைக்கின்றன.

நமது உடலில் உள்ள கோடிக்கணக்கான செல்களின் அமைப்பைச் சிதைவுறாமல் நிலை நிறுத்துகிறது.

நமது ரத்தத்தில் உள்ள தீமை தரும் கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்க உதவுகிறது. நன்மை தரும் கொலஸ்ட்ராலின் அளவை அதிகரிக்கத் துணைபுரிகிறது. மியூஃபா வகை கொழுப்பு கடுகு எண்ணெய்யிலும், கடலை எண்ணெய்யிலும் அதிக அளவில் உள்ளது.

எண்ணெய்யில் பல வகைகள் இருந்தாலும், இதயத்துக்கு ஏற்ற மிகச்சிறந்த எண்ணெய் என்றால் ஆலிவ் எண்ணெய்யைத்தான் (Oilve Oil) சொல்ல வேண்டும். உலக அளவில் மேலை நாடுகளில் இதயத்துக்கு ஏற்ற சிறந்த சமையல் எண்ணெய்யாக ஆலிவ் எண்ணெய்தான் கருதப்படுகிறது.
இந்த எண்ணெய்யைச் சமையலுக்குப் பயன்படுத்தும் மேலை நாடுகளில் இதய நோய்களின் தாக்கம் மிகமிகக்குறைவாக இருப்பதாக பலவகையான ஆய்வு முடிவுகள் உறுதி செய்துள்ளன. ஆனால் இதன் விலை மிகவும் அதிகமாக இருப்பதால் நம் நாட்டுச் சூழலுக்கு இந்த எண்ணெய் ஒத்துவருவதில்லை. மேலும் இதன் மனமானது நம்முடைய சுவைக்கு ஏற்றதாகவும் இல்லை. நம் நாட்டில் பெரும்பாலும் பலவகையான சாலடுகள் தயாரிக்கத்தான் ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது.

உலக அளவில் ஆலிவ் எண்ணெய் சிறந்ததாகக் கருதப்பட்டாலும் நம் நாட்டு மக்களின் சுவைக்கு ஏற்ப, நமது அன்றாடத் தேவைக்கு ஏற்ப, நமது சமையல் முறைக்கு ஏற்ப நமது உடல் நலத்துக்கு ஏற்ப, குறிப்பாக இதயத்தின் நலம் காக்கும் தன்மையுள்ள சிறந்த சமையல் எண்ணெய் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

தொன்று தொட்டு நம் நாட்டில் பலவகையான சமையல் எண்ணெய்களைப் பயன்படுத்தி வந்தாலும் ஒவ்வொரு எண்ணெய்க்கும் சில சிறப்புத் தன்மைகளும் சில தீய தன்மைகளும் இயற்கையாகவே ஒரு சேர இருக்கும். எனவே நாம் அன்றாட சமையலுக்கு ஒரு குறிப்பிட்ட சமையல் எண்ணெயைப் பயன்படுத்துவதால், முழுமையான பயனைப் பெற இயலாது.

எனவே நம் நாட்டில் பயன்படத்தும் சிறந்த சமையல் எண்ணெய்களைத் தேர்ந்தெடுத்து அவற்றை அன்றாட சமையலுக்கு ஏற்றபடி கலவையாகப் பயன்படுத்துவதுதான் சரியான வழிமுறை.

செறியுற்ற கொழுப்பு என்றும் பியூஃபா கொழுப்பு என்றும் மியூஃபா கொழுப்பு என்றும் சமையல் எண்ணெய் மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன என்பதை ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். இந்த மூன்று வகையான கொழுப்பு வகைகளில் இருந்து இதயத்தைப் பாதுகாக்கக்கூடிய எண்ணெய்களைத் தேர்ந்தெடுத்து அவற்றை 1: 1 : 1 என்ற அளவில் தினசரி சமையலுக்கு அளவாகப் பயன்படுத்தினால் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.

அதாவது நல்லெண்ணெய் (எள் எண்ணெய்), சூரியகாந்தி எண்ணெய், கடலை எண்ணெய் இவற்றை இதயத்துக்கு ஏற்ற சிறந்த எண்ணெய்களாக நாம் தேர்வு செய்யலாம். இந்த எண்ணெய்களைத் தினசரி சமையலுக்கு மாறி மாறி தனித்தனியாக பயன்படுத்தலாம். அல்லது இந்த மூன்று எண்ணெய்களையும் 1: 1: 1: என்ற சம அளவில் கலந்து தினமும் சமையலுக்குப் பயன்படுத்துவதால் இதயத்தின் நலனைப் பாதுகாக்க முடியும். இவ்வாறு மூன்று வகையான எண்ணெய்களையும் கலந்த கலவை எண்ணெய் இனிமையான எண்ணெய் (ஷிஷ்மீமீt ஷீவீறீ) என்று அழைக்கப்படுகிறது.

சமையல் எண்ணெய்களைத் தேர்ந்தெடுக்கும்போது இன்னொரு விஷயத்தையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நமது உடல் அமைப்பு அன்றாட உடல் உழைப்பு, நமது அன்றாட தேவை இவற்றை அடிப்படையாகக் கொண்டு எண்ணெய்யை அளவோடு பயன்படுத்தினால் இதயம் ஆரோக்கியமாக இருக்கும். இந்தக் கணக்கைப் பற்றிக் கவலைப் படாமல், சுவைக்காக அளவுக்கு அதிகமாக எண்ணெய்களைப் பயன்படுத்துவது இதய நலனைப் பெரிதும் பாதிக்கக்கூடும்.

நன்றி: ஆரோக்கியமான வாழ்வு

 

Share this post


Link to post
Share on other sites
jdlivi    50

 

மனிதன் இந்த பிரபஞ்ச இரகசியங்களையும், உயிர்களுக்கிடையே உள்ள தொடர்புகளையும் பற்றி பல விதங்களில் ஆராய்ச்சி செய்து பல பேருண்மைகளைக் கண்டு அதிசயித்து நிற்கிறான். விஞ்ஞான முன்னேற்றம் கண்ட பல நாடுகளில் இன்று ஆன்மிகம் செழித்தோங்கி வளர்கிறது. யந்திரங்கள் பற்றியும், மந்திரங்கள் பற்றியும் ஆராய்ந்து நமக்கே தெரியாத பல உண்மைகளை இன்று விஞ்ஞானத்தின் மூலம் கண்டுபிடித்து சொல்கிறார்கள். யோகாசனம், பிராணாயாமம், தியானம் போன்ற பயிற்சிகளுக்கு எல்லாம் மற்ற நாடுகளில் இன்று மிகப் பெரிய மதிப்பும், வரவேற்ப்பும் ஏற்பட்டுள்ளது. மிருகங்களையும், தாவரங்களையும் ஆராய்ந்து வெளியிடும் முடிவுகள் அதிசயத்தை உண்டு பண்ணுகின்றன.

செடிகளின் அருகே அதை வளர்ப்பவரோ, அல்லது நல்ல அதிர்வுகள் கொணட மனிதர்களோ சென்றால் அவை மகிழ்ந்து தலையசைத்து வரவேற்கின்றன என்றும், அதோடு மட்டுமல்ல தன் மகிழ்ச்சியின் உணர்வுகளை அருகிலுள்ள செடிகளுக்கும் தெரிவிக்கின்றன என்றும், மலர்களை பறிக்கும் எண்ணத்தோடோ, செடியைப் பிடுங்கும் எண்ணத்தோடோ, மரங்களை வெட்டும் எண்ணத்தோடோ யாராவது சென்றால் அதை உணர்ந்து அந்தத் தாவரங்கள் பயந்து நடுங்கி தன் துக்கத்தை மற்ற தாவரங்களுக்கும் வெளிப்படுத்துவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. விஞ்ஞான உபகரணங்களைக் கொண்டு இதையெல்லாம் கண்டுபிடிக்கிறார்கள்.

தாவரங்கள் மட்டுமல்ல விலங்குகளுமே இதே உணர்வுகளை வெளிப்படுத்துவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. ஆட்டு மந்தைக்குள் ஆட்டை வளர்ப்பவர்கள் செல்லும் போது மகிழ்கின்றன என்றும், தங்களை வாங்கிச் செல்லும் வியாபாரி வரும் போது வித்தியாசமாக சத்தமிட்டு தங்கள் மனவருத்தத்தை ஒன்றுக்கொன்று பரிமாற்றம் செய்து வருந்துகின்றன என்றும், வெட்டுபவர்கள் வந்தால் அவர்கள் கையில் ஆயுதம் எதுவும் இல்லையென்றாலும் உணர்வுகளால் கண்டுபிடித்து பயந்து நடுங்கி தப்பிச் செல்ல முயற்சிக்கின்றன என்றும் கண்டறியப்பட்டுள்ளது. மாட்டுத் தொழுவங்களிலும் இதே ஆராய்ச்சி நடத்தப்பட்டு நிருபிக்கப்பட்டுள்ளது.

தொட்டால் சிணுங்கி செடியை யாராவது தொட்டால் அது படக்கென்று தன் இலைகளைச் சுருக்கிக் கொண்டு தன் பயத்தை வெளிப்படுத்தும். இது நாம் அனைவருமே அறிந்த விஷயம். ஆனால் தற்போதைய ஆராய்ச்சி என்ன சொல்கிறது தெரியுமா ? இதை ஒருவர் தனியாகத் தொட்டியில் வைத்து அன்போடு வளர்த்து வரும் போது தினமும் அதைத் தடவிக் கொடுத்தால், அச்செடியானது சில நாட்களில் சுருங்குவதை நிறுத்திவிடும். ஆனால் வேறு யாராவது தொட்டால் படக்கென்று சுருங்கி விடுகிறது. இதையும் தாவரவியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து சொல்லியிருக்கிறார்கள்.

மிருகங்களும், தாவரங்களுமே மனிதனுடைய உணர்வுகளைப் புரிந்து கொண்டு தங்கள் விருப்பு வெறுப்புகளை வெளிப்படுத்துகின்றன. மனிதனாகிய நாமோ சக மனிதர்களின் உணர்வுகளையும் புரிந்து கொள்வதில்லை, மற்ற உயிரினங்களின் உணர்வுகளையும் புரிந்து கொள்வதில்லை. இத்தனைக்கும் நாம் அவற்றை விட அறிவுகளைக் கூடுதலாகப் பெற்றவர்கள். இது எல்லாவற்றையும் விட எனக்குத் தோன்றுவது என்னவென்றால் பிறரையோ, தாவரங்களையோ, விலங்குகளையோ துன்பப்படுத்தும் உணர்வுகளை விட்டுவிட்டு அன்பையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தும் உணர்வுகளை வளர்த்துக் கொண்டால் எவ்வளவு ஆனந்தமாக இருக்கும். இந்த பிரபஞ்சமெங்கும் சந்தோஷம், மகிழ்ச்சி, ஆனந்தம் பொங்கிப் பெருகி வழியுமே.

419043_194486537372685_1674327729_n.jpg

 

 

சிக்ஸ்பேக் உடல் அமைப்பை பெற வேண்டுமா?

உடலை பேணுவது மிகவும் முக்கியம். மனிதனுக்கு உடம்பில் இருக்கும் உடல் பிரச்சனைகளில் ஒன்று உடல் பருமன் அல்லது மெலிவான உடல் அமைப்பு. சரியான அளவு கொண்ட உடல் அமைப்பை ஏற்படுத்த பல வழிகள் உண்டு. அப்படி உடலை ஒரு கட்டமைப்புக்கு கொண்டு வந்தால் அழகுடன் சேர்ந்து ஆரோக்கியமும் நம்மை தொற்றிக் கொள்ளும்.

ஆண்கள் 6-பேக் (6-pack) வயிற்று அமைப்பை கொண்டு வருவதற்கு, அதீத பயத்துடன் அல்பட்ரோஸ் பறவையை பிடிப்பதை போல் காத்திருக்கிறார்கள். அனைத்து ஆணும் நல்ல ஆரோக்கியமான உடல் கட்டமைப்புடன் இருந்து 6-பேக் வயிற்று அமைப்பை கொண்டு வந்து கொழுத்த உடலை கரைக்க வேண்டும். அதனை கீழ்கண்ட வழிகளால் எளிதில் அடையலாம்:

கொழுப்பைக் குறைத்தல்

வீங்கிய வயிறு தொந்தியாக மாறுவதற்கு முன் அதனை குறைத்திட வேண்டும். அதற்கு கீழே சொல்லியிருக்கும் சில வழிகளை கடைப்பிடித்து, வயிற்றை கட்டுகோப்பாக வைத்திருங்கள்.

இதய பயிற்சிகள்

சில தீவிர இதயப் பயிற்சிகளை மேற்கொள்வதை தவிர உடம்பில் உள்ள கொழுப்பின் அளவை வேகமாக குறைக்க வேறு வழி இல்லை. உயர்ந்த இதயத் துடிப்பு மற்றும் வியர்வை உடம்பை விட்டு வெளியேறுவதால், கொழுப்புத் திவலைகளை சிதைக்க உதவி புரியும். இது செல்லுலைட் என்ற தோளில் தேங்கியிருக்கும் கொழுப்பை வேகாமாக சிதைக்க உதவும். இதற்காக மிதிவண்டி ஓட்டுதல், ஓடுதல், நீந்துதல் மற்றும் நடனம் செய்தால் சில கிலோகிராம் எடை நம் உடலை விட்டு ஓடும்.

குறைந்த அளவு சாப்பாடு

எடை குறைப்புக்கு வளர்ச்சிதை மாற்ற விகிதத்தை அதிகமாக வைத்திருப்பது முக்கிய பங்கு வகிக்கிறது. அதிலும் செய்யும் உடற்பயிற்சிக்கு பின்னரும் கூட, அதிகப்படியான வளர்ச்சிதை மாற்றமானது கொழுப்பை எரிக்கும். அதிக வளர்ச்சிதை மாற்ற வீதத்தை அடைய ஒருவர் அளவான உணவை போதிய இடைவெளியில் சாப்பிட வேண்டும்.

காலை உணவை தவறாமல் சாப்பிடுதல்

காலை உணவென்பது மற்ற வேளைகளில் உண்ணும் உணவை விட மிகவும் முக்கியமான ஒன்று. அதனால் அதை தவிர்ப்பது நல்லதல்ல. காலை உணவு என்பது இரவு தூக்கத்தினால் ஏற்படும் நீண்ட விரதத்தை முடிக்க பயன்படுத்தும் உணவு. எனவே காலை எழுந்து ஒரு மணி நேரத்திற்குள் காலை உணவை எடுத்துக் கொண்டால், வளர்ச்சிதை மாற்ற விகிதத்தை நாள் முழுவதும் அதிகமாக வைக்க உதவும்.

பளு தூக்கும் பயிற்சி

சில சமயங்களில் பளு தூக்குவதால், மீள்வரு தசைகளில் உண்டாகும் செல்லுலைட் என்ற தோள்களில் படியும் கொழுப்பை கரைக்க உதவும். பளு தூக்கும் பயிற்சி உடல் கட்டமைப்பை அதிகரிக்க மட்டுமல்லாமல் உடல் கட்டமைப்பை குறைக்கவும் உதவும்.

தசைகளை வளர்த்தல்

உடம்பில் உள்ள கொழுப்பை நீக்கியதும், 6-பேக் வயிற்றுடன் உடலை கட்டமைக்க தசைகளை வலுப் பெறச் செய்ய வேண்டும். அதற்கு சில உடற்பயிற்சிகளை செய்தால் சரியான கட்டமைப்புடன் வயிறு அமையும்.

— with கலை செல்வி.
969289_323769584421609_573771003_n.jpg

 

 

மூட்டு வலிக்கு மருந்தாகும் ‘ஓம்’ யோகா

ஓம் என்பது மந்திரச் சொல் மட்டுமல்ல, நல்ல மருந்தும் கூட என்று யோகா நிபுணர்கள் கூறுகிறார்கள். இந்த ஒற்றைச் சொல்லைச் சொல்லும்போது மூட்டு வலி பறந்து போய் விடுகிறதாம். இந்த ஓம் யோகா பயிற்சியை சென்னையில் உள்ள அரசு யோகாசனம் மற்றும் நேச்சுரோபதி கல்லூரியில் சொல்லிக் கொடுக்கிறார்கள். அங்கு மூட்டு வலி பிரச்சினைக்காக வருவோருக்கு யோகா சொல்லித் தருகிறார்கள். மேலும் குறிப்பாக ஓம் பாராயணத்தையும் சொல்லித் தருகிறார்கள். இந்த ஓம் மந்திரத்தை தினசரி 30 முறை சொல்லி வருகிறாராம் அப்துல் காதர் என்ற வியாபாரி. 50 வயதான இவருக்கு மூட்டுவலி பிரச்சினை இருக்கிறது. இதிலிருந்து மீள இந்த ஓம் பாராயணம் காதருக்கு உதவியுள்ளதாம்.

தொழுகை மாதிரியே யோகாவும்... இதுகுறித்து அவர் கூறுகையில், தினசரி நான் தொழுகையில் ஈடுபடுவதால் எனக்கு மூட்டு வலி பிரச்சினைஉள்ளது. ஆனால் தற்போது இந்த ஓம் பாராயண யோகா பயிற்சியால் எனக்கு மூட்டு வலி வெகுவாக குறைந்து நிவாரணம் ஏற்பட்டுள்ளது. என்னால் எளிதாக முட்டி போட்டு தொழுகையில் ஈடுபட முடிகிறது என்கிறார்.

மருத்துவ பயன்கள்... இதுகுறித்து கல்லூரி உதவிப் பேராசிரியை டாக்டர் கனிமொழி கூறுகையில், ஓம் என்பது மந்திரம் மட்டுமல்ல, நல்ல மருந்தும் கூட. குறிப்பாக மூட்டு வலிக்கு இது உகந்த நிவாரணம் தருகிறது. புற்று நோயாளிகளுக்கும் கூட இது நிவாரணம் தருகிறது. இந்த மந்திரத்தை உச்சரிப்பதன் மூலம் பதட்டத்திற்குக் காரணமான ஹார்மோன்கள் மட்டுப்படுகின்றன. வலி நிவாரணியாக இந்த மந்திரம் பயன்படுகிறது. ஓம் மந்திரத்தை உச்சரிப்பதன் மூலம் நல்ல மருத்துவ பயன்கள் ஏற்படுவது அறிவியல்பூர்வமாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது என்றார்.

ஜாதி, மத பேதமின்றி... யோகாசனத்தோடு இந்த ஓம் உச்சரிப்பையும் இங்கு சொல்லித் தருகிறார்கள். இதை மத பாகுபாடின்றி அனைவரும் பின்பற்றுகின்றனர் என்பது ஆச்சரியமானது.

உச்சரிப்பு பலன்... வலி, தூக்கமின்மை வியாதி, பேச்சுக் குறைபாடு உள்ளவர்களுக்கு இந்த ஓம் மந்திர உச்சரிப்பு நல்ல பலனைத் தருமாம்.

for more health news pls like the page https://www.facebook.com/Siddhacom

942748_204744409674071_941743716_n.jpg

Like · · Share · 12 · 14 hours ago ·

 

உடல் அழகைப் பேண முடிந்தவரை புளிப்பான உணவுகளை தவிர்த்துக்கொள்ளுங்கள்!

உடல் அமைப்பை கட்டுக்கோப்பாக வைத்திருக்க டயட்டில் இருப்பவர்கள் இன்று நிறையபேர் உள்ளனர். உணவைக் குறைத்து உடலை அழகாக்க போகிறோம் என்ற தாரக மந்திரத்தை பின்பற்றும் இவர்களில் பலர் பட்டினி கிடந்து உடல் இளைத்துப்போவதும் உண்டு. இப்படிப்பட்டவர்கள் ஆரோக்கியமான டயட் முறையை பின்பற்ற சில டிப்ஸ்:-

* தினமும் ஏதாவது ஒரு பழ ஜூஸ் குடியுங்கள். நீங்கள் குடிக்கும் பழ ஜூஸ் அப்போது தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். அதில் சர்க்கரை மற்றும் ஐஸ் சேர்க்காமல் சாப்பிடவும். சர்க்கரை சேர்த்தால் பழத்தின் முழு சத்தும் குறைந்து விடும்.

* எண்ணெய் அதிகம் சேர்த்து தயாரிக்கப்பட்ட உணவு வகைகளை முடிந்தவரை தவிர்த்து விடுங்கள். முடிந்தவரை காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளவும்.

* வேக வைத்த பயிறு வகைகள், தானியங்கள், காய்கறிகள் உங்கள் உணவு பட்டியலில் முதலிடம் பிடிக்கட்டும்.

* இட்லி, இடியாப்பம், ஆப்பம், புட்டு போன்ற வேகவைத்த உணவுகளை அளவோடு சாப்பிடவும்.

* உண்ணும் உணவில் அதிக காரம் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். காரத்திற்காக சேர்க்கும் பச்சை மிளகாய்க்கு பதிலாக மிளகு சேர்ப்பது நல்லது.

* மாலை வேலையில் கண்ட கண்ட நொறுக்கு தீனிகளை வாயில் போட்டு நொறுக்காமல், வேக வைத்த தானிய வகைகள், சுண்டல் ஆகியவற்றை சாப்பிடவும்.

* அவ்வப்போது, பல வகை பழங்களை கொண்டு செய்யப்பட்ட சாலட் சாப்பிடுவதும் நல்லதுதான்.

* புளிப்பான உணவுகளை முடிந்தவரை குறைத்துக்கொள்ளவும். அதுக்கு பதில் தக்காளி சேர்த்துக்கொள்ளுங்கள்.

485761_401432686639088_38021596_n.jpg

 

Share this post


Link to post
Share on other sites
jdlivi    50
உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் பருப்பு வகைகள்!!!

உடலை சீராக இயக்குவதற்கு புரோட்டீன்கள் மிகவும் இன்றியமையாதது. அத்தகைய புரோட்டீன்கள் நிறைய உணவுகளில் உள்ளன. அதிலும் அசைவ உணவாளர்களுக்கு என்றால், இறைச்சி, முட்டை போன்றவை உள்ளது. ஆனால் சைவ உணவாளர்களுக்கு புரோட்டீன் சிறப்பான முறையில் அமைந்திருப்பது பருப்பு வகைகளில் தான். மேலும் பருப்புக்களில் புரோட்டீன் மற்றுமின்றி, வேறு சில ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளன.

அந்த வகையில் இதனை உணவுகளில் அதிகம் சேர்த்து வந்தால், உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளை தவிர்க்கலாம். அதுமட்டுமல்லாமல், பருப்புக்களிலேயே பல வகைகள் உள்ளன. அவை ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு சத்துக்கள் நிறைந்துள்ளன. அவற்றில் பொதுவான ஒரு ஒன்று என்றால், அது குறைவான கலோரி இருப்பது தான். இதனால் உடல் எடை அதிகரிக்கும் என்ற கவலை இல்லாமல் இருக்கலாம். மேலும் இதனை தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால், புற்றுநோய், இதய நோய், மாரடைப்பு, பக்கவாதம், டைப்-2 நீரிழிவு போன்றவற்றின் தாக்கத்தில் இருந்து தப்பிக்கலாம். இப்போது பருப்புக்களின் கைகளையும், அதில் உள்ள சத்துக்களையும் பார்ப்போம்.

துவரம் பருப்பு

துவரம் பருப்பில் நல்ல அளவில் புரோட்டீன், ஃபோலிக் ஆசிட் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும் இதில் காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், குடலியக்கம் சீராக இருந்து, மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படுவதை தடுக்கலாம்.

பாசிப்பருப்பு

பாசிப்பருப்பில் வைட்டமின் ஏ, பி, சி, ஈ மற்றும் கனிமச்சத்துக்களான கால்சியம், இரும்புச்சத்து மற்றும் பொட்டாசியம் அதிகம் உள்ளது. மேலும் உடல் எடையை குறைப்பதற்கு உதவியாகவும் இருக்கும். அதுமட்டுமல்லாமல், அதிகப்படியான புரோட்டின் மற்றும் நார்ச்சத்தால், இது உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவை குறைக்கும்.

பச்சை பயறு

இந்த பயறு மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதிலும் புரோட்டீன், கால்சியம், பொட்டாசியம், பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே இதனை சாப்பிட்டால், உடலில் உணவுகள் எளிதல் செரிமானமடைவதோடு, உடல் எடை மற்றும் கொலஸ்ட்ரால் குறையவும் உதவியாக இருக்கும்.

கொண்டைக்கடலை

கொண்டைக்கடலையில் ஃபோலிக் ஆசிட், மாங்கனீசு, இரும்புச்சத்து, காப்பர், மக்னீசியம் போன்றவை அதிக அளவில் இருக்கிறது. ஆகவே கொலஸ்ட்ரால் குறைவதோடு, இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பும் குறையும். மேலும் இது உடல் சக்தியையும் அதிகரிக்கும்.

சுண்டல்

கொண்டைக்கடலையில் ஒரு வகை தான், இந்த சுண்டல். இதனை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், இதயம் ஆரோக்கியமாக இருக்கும். புரோட்டீன், காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரோட், வைட்டமின்கள், இரும்புச்சத்து, கால்சியம், ஃபோலேட் மற்றும் நார்ச்சத்து அதிகம் நிறைந்திருப்பதால், அது கருப்பைக் குழாயில் பிரச்சனை ஏற்படுவதையும், இரத்த சோகை பிரச்சனையையும் தடுக்கும்.

கடலைப் பருப்பு

கடலைப்பருப்பில் ஃபோலிக் ஆசிட், மாங்கனீசு, இரும்புச்சத்து, காப்பர் மற்றும் மக்னீசியம் போன்றவை நிறைந்துள்ளது. இதில் செரிலை விட, இரண்டு மடங்கு அதிகமாக புரோட்டீன் நிறைந்திருப்பதால், இதனை அதிகம் சாப்பிட உடல் வலுவோடு ஆரோக்கியமாக இருக்கும். குறிப்பாக இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், நீரிழிவு மற்றும் கரோனரி இதய நோய் போன்றவை ஏற்படுவது குறையும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சிவப்பு காராமணி

சிவப்பு காராமணியில் பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் மற்றும் பல்வேறு கனிமச்சத்துக்கள் அடங்கியுள்ளது. மேலும் வைட்டமின் பி6, இரும்புச்சத்து, மக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் அதிகம் நிறைந்துள்ளது. ஆகவே இது புற்றுநோய், கொலஸ்ட்ரால் போன்றவை ஏற்படுவதைக் குறைக்கும். இதில் நிறைந்துள்ள வைட்டமின் கே, மூளையின் செயல்பாட்டை சீராக வைக்கும். குறிப்பாக இது எலும்புகளை வலுவோடு வைப்பதற்கு பெரிதும் உதவியாக உள்ளது.

தட்டை பயறு

தட்டை பயறை குழம்பு வைத்து சாப்பிட்டால், அதன் சுவைக்கு ஈடு இணை எதுவும் இருக்க முடியாது. அத்தகைய தட்டை பயறில் கரையக்கூடிய நார்ச்சத்து இருப்பதால், இது இதய நோய் ஏற்படுவதை தடுக்கும். மேலும் இதில் பொட்டாசியம், இரும்புச்சத்து, வைட்டமின் சி மற்றும் ஜிங்க் நிறைந்துள்ளது. இதனால் தசைச் சுருக்கம் ஏற்படுவதைத் தடுக்கும்

உளுத்தம் பருப்பு

இட்லிக்கும், தாளிப்பதற்கு பயன்படுத்தும் உளுத்தம் பருப்பில், கொழுப்பு குறைவாகவும், புரோட்டீன் மற்றும் நார்ச்சத்து அதிகம் அடங்கியுள்ளது. மேலும் இதில் அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் நிறைந்திருக்கிறது. சொல்லப்போனால், இது இறைச்சிக்கு பதிலாக ஒரு சிறந்த உணவுப் பொருள் என்றும் சொல்லலாம்

for more health news pls like the page https://www.facebook.com/Siddhacom
922938_203977146417464_135715579_n.png

 ஆரோக்கிய வாழ்விற்கு மூலிகைக் குடிநீர்
--------------------------------------------------------------------

இன்றைய சூழலில் குடிநீர், உணவு, இருப்பிடம், காற்று என அனைத்தும் மாசுபட்டுக் கிடக்கின்றன. இந்தியா போன்ற வளரும் நாடுகளில் குடிநீரினால் உண்டாகும் நோய்களே மக்களை அதிகம் பாதிப்பதாக ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைத்து விற்கும் நீர் கூட சுத்தமானது என்பதை உறுதி செய்ய முடியாது. இவைகள் பெரும்பாலும் இரசாயன வேதிப் பொருட்கள் கலந்ததாக உள்ளன. இவற்றை அருந்துவதால் பல நோய்களுக்கு இதுவே அஸ்திவாரமாக அமைந்து விடுகிறது. இதனால் நன்கு சுத்தமான நீரை அருந்த வேண்டும்.

வெறும் குடிநீரை அருந்துவதை விட சித்தர்கள் கண்டறிந்து கூறியுள்ள மூலிகைக் குடிநீரை அருந்தினால் உடலுக்கு சக்தி கிடைப்பது மட்டுமின்றி நோயும் தடுக்கப்படும்.

அந்த வகையில் ஆவாரம் பூ குடிநீர், கரிசாலை குடிநீர், நன்னாரி குடிநீர், துளசி குடிநீர், வல்லாரை குடிநீர், சீரகக் குடிநீர், நெல்லிப்பட்டைக் குடிநீர், மாம்பட்டைக் குடிநீர், ஆடாதோடைக் குடிநீர், போன்றவை அடங்கும்.

#ஆவாரம்பூ குடிநீர்
--------------------------

“ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ..”

என்ற மருத்துவப் பழமொழி உண்டு. ஆவாரம் பூ எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்டது. இது நோய்களைக் குணப்படுத்துவதால் நோயினால் மனிதன் இறப்பதை தடுக்கிறது. இன்றைய உலக மக்கள் தொகையில் பாதிபேர் சர்க்கரை நோயால் அவதிப்படுகின்றனர். இந்த சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் குணம் ஆவாரைக்கு உண்டு. மேலும் மேனிக்கு தங்க நிறத்தைக் கொடுக்கும் தங்கநிறப் பூவும் இதுதான்.

நீரில் ஆவாரம் பூக்கள் அல்லது காயவைத்த ஆவாரம் பூ பொடி சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி, குடிநீராக அருந்தி வரலாம்.

இது உடல் சூடு, பித்த அதிகரிப்பு, நீர்க்கடுப்பு, அதிக உதிரப்போõக்கு, ஒழுங்கற்ற மாதவிடாய், குடற்புண் வயிற்றுப்புண் போன்றவை நீங்கும்.

நீரிழிவு நோயாளிக்கு இது மிகவும் சிறந்த மூலிகைக் குடிநீர் ஆகும்.

இரத்தத்தைச் சுத்தப்படுத்தும், உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வியர்வை மூலம் வெளியேற்றி, சருமத்திற்கு மினுமினுப்பைக் கொடுக்கும்.

பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப் படுதலை அறவே நீக்கும்.

இதனைத் தொடர்ந்து அருந்தி வந்தால், உடலை நோயின்றி அரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.

#துளசி குடிநீர்
-------------------

துளசி நமக்கு அருமருந்தாகும். துளசி இலையுடன் சீரகம் சேர்த்து நீரில் கொதிக்க வைத்து குடிநீராக அருந்தி வந்தால் உடலுக்கு பல நன்மைகள் உண்டு.

அடிக்கடி வெளியூர் பயணம் செய்பவர்களுக்கும், வெயில் மற்றும், மழைக்காலங்களில் அலைந்து திரிபவர்களுக்கு துளசி குடிநீர் அருமருந்தாகும். இது உடற்சூடு, பித்தம் போன்றவற்றைத் தணிக்கக் கூடியது.

டைபாய்டு, மஞ்சள்காமாலை, மலேரியா, காலரா நோய்கள் ஏற்படாமல் தடுக்கும். தொண்டைச்சளி, வறட்டு இருமல், புகைச்சல், தலையில் நீர் கோர்த்தல், அடிக்கடி தும்மல், போன்றவற்றைப் போக்கும். இரத்தத்தில் உள்ள சளியை நீக்கி இரத்தத்தை சுத்தப்படுத்தும்.

#வல்லாரை குடிநீர்
-------------------------

எல்லா நோய்களுக்கும் கொடுக்கப்படும் மருந்தில் முதல் மருந்தாகவும், துணை மருந்தாகவும் இருப்பது வல்லாரை.

இதனை சரஸ்வதி மூலிகை என்று அழைக்கின்றனர். இது மூளைக்கும், அதன் செயல்பாட்டிற்கும் அதாவது அறிவுத் திறனுக்கும், ஞாபக சக்திக்கும் ஏற்ற மூலிகையாகும்.

காயவைத்த வல்லாரை பொடியை நீரில் போட்டு கொதிக்க வைத்து அனைவரும் அருந்தலாம்.

இது ஞாபக சக்தியைத் தூண்டுவதுடன், பித்த அதிகரிப்பைக் குறைக்கும். இரத்தத்தில் ஏற்படும் இரும்புச் சத்துக் குறைபாட்டைப் போக்கி இரத்தச் சோகையை நீக்கும். நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுக்கும். தொழுநோய், யானைக்கால் நோய், மூலம், மூட்டுவலி போன்ற வற்றிற்கு சிறந்த மருந்தாகும்.

#கரிசாலை குடிநீர்
------------------------

“ஏர்தரும் ஆன்ற கரிசாலையால் ஆன்மா சித்தி”

என்றார் வள்ளலார் இராமலிங்க அடிகள்.


அத்தகைய சிறப்பு வாய்ந்த கரிசாலை கண்களுக்கு ஒளியையும் உடலுக்குத் தேவையான இரும்புச் சத்தையும் தரக்கூடியது.

வெள்ளை கரிசாலை இலைச் சூரணம் 200 கிராம் எடுத்து அதனுடன் முசுமுசுக்கை இலை 35 கிராம், நற்சீரகத்தூள் 35 கிராம் அளவு சேர்த்து கொதிக்க வைத்து தேவையான அளவு பனங்கற்கண்டு அல்லது பனைவெல்லம் கலந்து காலை, மாலை தேநீருக்குப் பதிலாக அருந்தலாம். அல்லது, கரிசாலையுடன் நற்சீரகம் சேர்த்துகொதிக்க வைத்து குடிநீராகவும் அருந்தலாம்.

கரிசாலை இரத்த சோகையைப் போக்கக் கூடியது. இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற நீர்களை வெளியேற்றும் தன்மை கொண்டது. இரத்தத்தில் உள்ள பித்தத்தைக் குறைக்கும்.

இரத்தக் கொதிப்பு, காசநோய், எலும்பு தேய்மானம் போன்றவை ஏற்படாமல் தடுக்கும்.

#சீரகக் குடிநீர்
------------------

சீர்+அகம் =சீரகம். அகம் என்னும் உடலை சீர்படுத்துவரே சீரகத்தின் சிறப்பான குணமாகும்.

சீரகத்தை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி ஆறிய நீரை தினம் பருகி வருவது நல்லது.

இது உடற் சூட்டைத் தணிக்கும்.பித்தத்தைக் குறைக்கும்.

ரத்தத்தில் உள்ள தேவையற்ற பொருட்களை நீக்கி, ரத்தத்தைக் சுத்தப்படுத்தும். வியர்வை மற்றும் சிறுநீரைப் பெருக்கும்.

கண் சூடு குறைக்கும். வாய்ப்புண் வயிற்றுப்புண்ணைப் போக்கும்.

சரும நோய்கள் வராமல் தடுக்கும். இதயத்திற்கு இதமான குடிநீர்தான் சீரகக் குடிநீர்.

#மாம்பட்டைக் குடிநீர்
------------------------------

மாம்பட்டையை இடித்து நீரில் கொதிக்க வைத்து குடிநீராக்கி அருந்தினால், நரம்புகள் பலப்படும், உடல் சூடு தணியும், சரும நோய்கள் ஏற்படாமல் தடுக்கும். பித்தத்தைக் குறைக்கும். அஜீரணக் கோளாறை நீக்கும்.

#நெல்லிப்பட்டைக் குடிநீர்
---------------------------------

நெல்லி மரப் பட்டையை காயவைத்து இடித்து பொடியாக்கி குடிநீரில் இட்டு காய்ச்சி அருந்துவது நல்லது.

இது ஆஸ்துமா, சளி, இருமல், வறட்டு இருமல், தொண்டைக்கட்டு, நுரையீரல் சளி, இரத்தச் சளி போன்றவற்றைப் போக்கும். ரத்தத்தைச் சுத்தப்படுத்தும். உடல் சூட்டைத் தணிக்கும். குடல்புண்களை ஆற்றும். மூலநோய்க் காரர்களுக்கு மூலநோயின் பாதிப்பைக் குறைக்கும்.

#ஆடாதோடைக் குடிநீர்
------------------------------

ஆடாதோடை இலைகளை சிறிதாக நறுக்கி தேன் விட்டு வதக்கி நீரில் போட்டு கொதிக்க வைத்து குடீநீராக அருந்தி வந்தால்,

சளி, இருமல், கோழைக்கட்டு, நாள்பட்ட நெஞ்சுச் சளி, மூக்கில் நீர் வடிதல், நுரையீரல் சளி போன்றவை நீங்கும்.

வாந்தி, விக்கல் போன்றவை குணமாகும்.

சைனஸ், ஆஸ்துமா நோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கு இது சிறந்த மருந்து.

via http://welcome2medical.blogspot.in/
960291_167524386750799_1115337687_n.jpg

 

Share this post


Link to post
Share on other sites
jdlivi    50

 

வேப்பம் பட்டையின் சிறந்த மருத்துவ குணங்கள்:-

முதிர்ந்த வேம்பின் வேர்ப்பட்டைப் பொடியுடன் முதிர்ந்த பூவரசம் பட்டைப் பொடி கலந்து 2 கிராம் அளவாகச் சிறிது சர்க்கரைக் கூட்டி காலை, மாலை நீண்ட நாட்கள் சாப்பிட்டு வரத் தொழுநோய் முதலான அனைத்துத் தோல் நோய்களும் குணமாகும். வேப்பெண்ணையில் தலை முழுகி வரச் சன்னி, பிடரி இசிவு, வாத நோய்கள் தீரும்.

வேப்பம்பட்டை 5 பலம், கஸ்தூரி மஞ்சள், பூண்டு, மிளகு, சீரகம் இவை வகைக்கு50 கிராம் எடுத்து இவற்றை இடித்துத் தூளாக்கி, ஒரே மாட்டின் பசும்பால் ஒரு படி நல்லெ ண்ணெய் ஒன்றரைப்படி எடுத்து இவையனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து காச்ச வேண்டும். உரிய பதம் வந்த தும் இறக்கி ஆறியவுடன் வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும். இந்த எண்ணெயைத் தேய்த்துக் குளித்து வந்தால் மண்டையிடி பீனிசம், வாதரோகங்கள், பாரிச வாயு, சீதளரோகம் சம்பந்தமுடையவர்கள், தோல் சம்பந்தப்பட்ட நோயுடையவர்கள் விரைவில் குணம் பெறுவார்கள்.

நூறு ஆண்டு வேப்ப மரத்தின் இலை, பூ, பட்டை, வேர்ப்பட்டை, காய் ஆகியவற்றை சம அளவில் எடுத்து உலர்த்து பொடி சூரணம் 2-5 கிராம் அளவு தேனில் காலை சாப்பிட்டு வந்தால் உடல் வலியும் வனப்பும் பெறும். காயகல்பமாகும். உடலில் எந்த நோயும் போகும். நீரிழிவு, சர்கரை குட்டம் முதலான எல்லா வகைத் தோல் நோயும் குணமாகும். புகையிலை, புளி, போகம் நீக்கினால் நூறாண்டு வாழலாம்.

வேப்பம் பட்டையுடன் நீர்,எண்ணெய் மற்றும் பிற மருந்துப்பொருட்களைச் சேர்த்து காய்ச்சி தைலங்களாக தோல் புண்,சொறி, சிரங்குகளின் மீது பூசிவந்தால் அவை குணம் பெறும்

941689_567483156607337_706058563_n.jpg

 

 

பெண்களுக்கான பாட்டி வைத்தியம்--இய‌ற்கை வைத்தியம்:-

* அசோகமரப்பட்டை, மாதுளம் பழத்தை காய வைத்து பொடி செய்து தினமும் காலை, மாலை இரண்டு வேளையும் மூன்று சிட்டிகை அளவுக்கு தண்ணீரில் கலந்து குடித்தால் கருப்பை கோளாறுகள் குணமாகும்.

* கருப்பை கோளாறுகள் வராமல் தடுக்க அசோகமரப்பட்டையை பொடி செய்து பாலில் கலந்து குடிக்கலாம். அருகம்புல் வேருடன் வெண்ணெய் சேர்த்து அரைத்து சாப்பிட்டால் வெள்ளைப்படுதல் பிரச்சனை குணமாகும்.

* ஆலமரப்பட்டையை பொடி செய்து பாலில் கலந்து குடித்து வந்தால் கருப்பை வீக்கம் குணமாகும்.

* ஆற்றுத்தும்பட்டியை மூலப்பொருளாக கொண்டு செய்யப்படும் குன்மகுமோரி மெழுகை கடைகளில் வாங்கி பட்டாணி அளவு தினமும் சாப்பிட்டு வந்தால் கருப்பை சார்ந்த அத்தனை கோளாறுகளும் தீரும்.

* பத்து கிராம் இம்பூறல் வேர்ப்பட்டையுடன் ஒரு கிராம் பெருங்காயம் சேர்த்து கஷாயம் வைத்து குடித்தால் மாதவிலக்கு கோளாறு சரியாகும்.

* கரிசலாங்கண்ணி கீரைச்சாறு 30 மில்லியுடன் பருப்பு கீரைசாறு 30 மில்லி எடுத்து இரண்டையும் ஒன்றாக கலந்து தினமும் காலையில் சாப்பிட்டால் ஆரம்பநிலை புற்றுநோய் குணமாகும்.

601799_567482443274075_95754407_n.jpg

 

 

ஆரோக்கியமான இயற்கை மருத்துவ குறிப்புகள் :-

* முள்ளங்கி சாப்பிட்டால் வாதம் குணமாகும். முள்ளங்கி இருமல், கபம், குடல் நோய்களுக்கும் சிறந்தது.

* இரவில் தூங்க அடம் பிடிக்கும் குழந்தைக்கு படுக்கும் முன் சிறிது தேன் கொடுத்தால் அசந்து தூங்கும்.

* கருவேப்பிலை, மிளகு, சீரகம், சுக்கு ஆகியவற்றை சம அளவில் எடுத்து பொடித்து சாப்பிட்டால் வெயில் காலத்தில் ஏற்படும் மலச்சிக்கல் சரியாகும்.

* 5 கிராம்பு. கொஞ்சம் சீரகத்தை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து குடித்தால் உஷ்ண தலைவலி குறையும்.

* சீரகத்தை தண்ணீரில் கொதிக்க விட்டு ஆறியதும் குடித்தால் ரத்த அழுத்தம் கட்டுப்படும்.

* இஞ்சி, கொத்தமல்லித் தழையுடன் எலுமிச்சைச் சாறு கலந்து துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் நன்கு பசி எடுக்கும்.

* அன்னாசிப்பழத்தை நறுக்கி தேனில் ஊற வைத்து அந்தத் தேனை இரண்டு வாரம் குடித்தால் கல்லீரல் ஆரோக்கியமாகும்.

* இதய மாற்று அறுவைச்சிகிச்சை செய்தவர்களுக்கு மஞ்சள் தூள் அருமருந்தாகும். இது இதயத்தில் ரத்த ஒட்டத்தை அதிகரிக்கும். திசுக்களின் சேதத்தையும் சரிப்படுத்தும்.

5364_567482989940687_1400293936_n.jpg

 

 

மிளகின் அற்புதமான மருத்துவ குணங்கள்...

வரலாற்று ஆசிரியர்கள் கூற்றுப்படி கிமு 3000 ஆம் ஆண்டுகளிலிருந்து சிறந்து விளங்கிய கடல் வியாபாரத்தில் தங்கம் போல் விலை மதிக்க முடியாத ஒன்று மிளகு.

மிளகை வீணடித்தால் உப்பு போட்டு அதில் நாள் முழுவதும் மண்டியிட வைக்கும் தண்டனை போர்ச்சுகல் நாட்டில் நடைமுறையில் இருந்தது.

மிளகில் உள்ள சத்துக்கள்:

தாது உப்புகள்

1. கால்சியம்

2. பாஸ்பரஸ்

3. இரும்பு

வைட்டமின்கள்

1. தயாமின்

2. ரிபோபிலவின்

3. ரியாசின்

சளித் தொல்லைக்கு:

மிளகை நன்றாக பொடித்து அதனை தேனுடன் கலந்து சாப்பிட்டு வர சளி தொல்லைகள் மற்றும் சளியினால் ஏற்படும் தொல்லைகளான மூக்கு ஒழுகுதல் குணமாகும். அதிகமாக சளி தொல்லைகள் உள்ளவர்கள் மிளகை நெய்யில் வறுத்து பொடித்து அதனை தினம் அரை ஸ்பூன் முன்று வேளை சாப்பிட்டு வர குணமாகும்.

கொஞ்சம் மிளகு, ஓமம், உப்பு சேர்த்து மென்று சாப்பிட்டு வந்தால் தொண்டை வலி குணமடையும். கல்யாண முருங்கை இலையுடன், அரிசி சிறிது மிளகு சேர்த்து அரைத்து தோசை செய்து சாப்பிட்டு வர சளி குணமாகும்.

FILEபற்களுக்கு:

மிளகுடன் உப்பு சேர்த்து பல் துலக்கினால் பல்வலி, சொத்தை பல், ஈறுவலி, ஈறுகளிலிருந்து இரத்தம் வடிதல் குணமாகும், பற்களும் வெண்மையாக இருக்கும், வாயில் துர்நாற்றத்தை போக்கும்.

தலைவலி:

மிளகுடன் வெல்லம் சேர்த்து காலையும் மாலையும் சாப்பிட்டு வந்தால் தலைவலி, தலைபாரம் குணமாகும். மிளகை அரைத்து அதனை தலையில் பற்று போட்டால் தலைவலி குணமாகும். மிளகை சுட்டு அதன் புகையினை இழுத்தால் தலைவலி தீரும்.

இரத்தசோகைக்கு:

கல்யாணமுருங்கை இலை, முருங்கை இலை, மிளகு மற்றும் பூண்டு சேர்த்து அவித்து சாப்பிட்டு வந்தால் இரத்தசோகை குணமாகும் .

பசியின்மைக்கு:

ஒரு ஸ்பூன் அளவு மிளகை வறுத்து பொடி செய்து அதனுடன் கைபிடியளவு துளசியை சேர்த்து கொதிக்க வைத்து அதனை ஆற வைத்து அதனுடன் சிறிது அளவு தேன் கலந்து சாப்பிட்டு வர பசியின்மை குணமாகும் மற்றும் வயிறு உப்பசம் குணமடையும்.

மிளகு வயிற்றில் உள்ள வாய்வை அகற்றி உடலுக்கு வெப்பத்தை தருவதோடு வீக்கத்தை கரைக்கும் தன்மையுடையது. மிளகு உணவை எளிதில் செரிக்க வைக்கும் தன்மை கொண்டது. மிளகு, சுக்கு, திப்பிலி சேர்த்து சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

மிளகு இரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை கொண்டது.

♥, தமிழ் -கருத்துக்களம்-

600710_486533781414718_587117535_n.jpg

 

 

 

மனஅழுத்தம் போக்கும் “இஞ்சி டீ”!

இந்திய சமையலில் இஞ்சிக்கு தனி இடம் உண்டு. மன அழுத்தமோ, கவலையோ ஏற்பட்டால் வீட்டில் சூடாக ஒருகப் இஞ்சி டீ சாப்பிடுங்கள் கவலை காணாமல் போய்விடும் என்கின்றனர் நிபுணர்கள். அதேபோல் மனஅழுத்தம் போக்கும் நிவாரணியாகவும் இஞ்சி டீ திகழ்கிறது என்கின்றனர் நிபுணர்கள்.

கவலை நிவாரணி

இஞ்சியில் உள்ள ஜிஞ்ஜெரால் என்ற வைட்டமின் நம் ரத்தத்தில் கல ந்திருக்கும் நச்சு ரசாயங்களை சுத்தம் செய்கிறது. நமக்கு துயரம், கவலை ஏற்படும்போது நச்சு ரசா யனங்கள் நம் உடலில் சுரக்கிறது. இதை இஞ்சி பெருமளவு சுத்தம் செய்துவிடுகிறது. அதனால்தான் கவ லை ஏற்படும் போது இஞ்சி டீ குடியு ங்கள் என்கின்றனர் நிபுணர்கள்.

மன அழுத்தம் போக்கும்

மன அழுத்தத்தினால் வயிற்றில் சுரக் கும் அமிலங்கள் பாதிக்கப்படுகிறது இதனால் ஜீரண சக்தி பாதிப்படைகி றது. இம்மாதிரி நிலைகளில் வெந் நீரில் சிறிது எலுமிச்சைத் துண்டு ஒன்றை பிழிந்து பிறகு பொடியாக நறுக்கிய இஞ்சியைப் போட்டு அருந்தினால் பெரிய அளவுக்கு ரிலாக்ஸேஷன் கிடைப்பதாக நிபு ணர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜீரணசக்தி கிடைக்கும்

மேலும் நாக்கின் ருசி சம்பந்த மான தசைகளை எழுச்சியுறச் செய்து ஜீரண சக்தியை ஊக்கு விக்கிறது. மலச்சிக்கல், அழற் சி, சாதாரண மூச்சுக்குழல் பிரச் சனைகள் இவற்றை சரி செய்ய இஞ்சி உதவுவதோடு, ரத்தச் சுழ ற்சியையும் கட்டுக் கோப்பாக வைக்கிறது.

எனவேதான் நாளொன்றுக்கு ஒரு முறை இஞ்சி டீ குடித்தாலே போ தும். அது நமது உணர்வுகளை உற்சாகப்படுத்தி மன அழுத்தத்தை குறைப்பதோடு பெரிய அளவில் ஜீரண சக் தியையும் அதிகரிக்கிறது என்கிறார்கள்.

பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற் படும் தசைப்பிடிப்பைப் போக்க இஞ்சி சாற்றில் நன்றாகத் தோய்த்த துணியை வயிற்றின்மீது வைத்துக்கொண்டால் பெரிய அ ளவுக்கு நிவாரணம் கிடைப்பதாக மருத்துவ நிபுணர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

 

942792_486288828105880_533028803_n.jpg

 

தியானயோகத்தில் மூன்று முக்கியமான விஷயங்கள் உண்டு. எல்லாமே முக்கியம்தான் என்றாலும், இவை அதிமுக்கியம் வாய்ந்தவை எனக் கொள்ளலாம். ஒன்று சித்தத்தின் ஏகாக்ரதை, இரண்டு அதற்கு உதவுமாறு நம்ம் வாழ்வை ஒரு வரம்புக்குள் அமைத்துக் கொள்ளுதல், மூன்று சமநிலை அதாவது சமநோக்கு. சித்தத்தின் ஏகாக்ரதை என்றால் சித்தத்தின் சஞ்சலத்தைக் கட்டுப்பட்டுத்தி அதை ஒரு நிலைப்படுத்த்துவது. அதாவது ஒருமுனைப் பாங்கு. இந்த மூன்று விஷயங்களுக்கும் உதவும் பிற விஷயம் வைராக்யம்.

சித்தத்தின் ஏகாக்ரதையை எடுத்துக் கொண்டால், ஒவ்வொரு விஷயத்தில் ஈடுபடவும், உலகநடவடிக்கை அனைத்திற்குமே ஏகாக்ரதை தேவைப்படுகிறது. எந்த விஷயமானாலும் அதனால் வரும் புகழோ, அவமானமோ, வெற்றியோ, தோல்வியோ எதுவானாலும் ஏகாக்ரதையைப் பொறுத்தே அமைகிறது. ஆனால் அதைப் பெறுவது எவ்வாறு ? அது பேசிக்கொள்வது போன்று அவ்வளவு எளிதல்ல. வெளியே நம் புற உலகில் அப்பாலுக்கும் அப்பால் பரவி நிற்கும் நம் சம்சாரத்தை நிறுத்தாதவரை அது கைகூடாது. இந்த பயங்கரமான சம்சாரம் நம்மை எல்லா திசைகளில் இருந்தும் நம்மை தகித்துக் கொண்ட்டே இருக்கிறது. ஏனென்றால் இறைவனோடு பிரார்த்தனை செய்யக்கூட நமக்கு புறப்பயன்களே காரணமாய் அமைகின்றன. கடவுளிடம் தன்மயமாகி ஒரு கணநேரமாவது உலகாய விஷயங்களை மறந்திருப்போம் என்ற எண்ணம் நமக்கு வருவதில்லை. பிரார்த்தனை கூட வெளி வேசமாகவே இருந்து வருகிறது. இது இவ்வாறு இருக்கையில், கண்ணை மூடி ஆசனத்தில் அமர்ந்தால் மனம் உள்முகமாகப் போவதே இல்லை. அது எங்கோ பரவெளியில் எதையெதையோ எண்ணியபடி பறந்து கொண்டிருக்கிறது. ஒரு புறம் சூன்ய அக்ரதை( ஒரு முன்னைப் பாங்கு இல்லாமை), மறுபுறம் அநேக அக்ரதை(பல விஷயங்களைப் பற்றி சிந்தித்தல்) ஒரு முனைப் பாங்கு என்கிற ஏகாக்ரதையைக் காணவே முடிவதில்லை.

வேறு வழிதான் என்ன ? எல்லா ஓட்டமும் பாடும், அல்லலும் அவதியும், எதற்காக ? நம் இறுதி காலம் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தானே ? ஆயுள் முழுவதும் படும் கஷ்டங்கள் எதற்காக ? அந்தக் கடைசி கணம், மரணத்தின் நேரம் புனிதமாகவும் சுகமாகவும் அமைய வேண்டும் என்பதற்காகத்தானே ? பகலின் முடிவில் மாலை வருகிறது. இன்று பகல் பொழுதில் எல்லா காரியங்களையும் புனித பாவனையில் செய்திருந்தால், இரவில் பிரார்த்தனை இனிமையாக இருக்கும். அப்போது மனம் எளிதில் ஏகாக்ரதை அடையும். ஆக ஏகாக்ரதைக்கு இத்தகைய வாழ்க்கைத் தூய்மை அவசியமாகும். அதனால்தான் அதற்குத் தகுந்தாற் போல வரம்புக்குள் வாழ்வை அமைத்துக் கொள்வது என்பது ஏற்பட்டது. இரண்டு மனிதர்கள் இருக்கிறார்கள். இருவரும் அச்சு அசலாக ஒருவரைப் போல் மற்றொருவர் இருக்கிறார். ஆனால் ஒருவன் உயர்ந்த பண்புகளைக் கொண்டவனாக இருக்கிறான். மற்றவனோ மிருகத்தை விட கேவலமான நடத்தை கொண்டவனாக இருக்கிறான். ஏன் இப்படி ? இந்த வேற்றுமைக்கு காரணமென்ன ? எல்ல்லோரும் இறைவனின் பிள்ளைகள்தான். ஆனால் அவன் அரசன், இவன் ஆண்டி. அவன் வீரன் இவன் கோழை. இது ஏன் இவ்வாறு ? நம் முன்னோர்கள் தீவிரமாகச் சிந்தித்தார்கள். சில கயவர்கள் இது விதி என்றும், படைப்பின் இரகசியமென்றும் ஏதேதோ சொல்லி மேலும் தவறான வழிக்கே ஆளாக்கி விடுவார்கள். ஆனால் நம் முன்னோர்களில் பல மகான்கள் இருந்தார்கள்,அவர்கள் இதைக் குறித்து தீவிரமாக ஆராய்ந்து தெளிவு பெற்றார்கள். ஒருவன் உயர்வானவனாகவும் மற்றவன் தாழ்ந்த நிலையிலும் இருக்கக் காரணம் சித்தமே ஆகும். அது எப்போதும் புறத்தே ஓடிக் கொண்டே இருப்பதுவும், பிறர் காரியங்களை கூர்ந்து பார்த்துக் கொண்டே அதில் குற்றங்களை கண்டு கொண்டே இருந்துவிட்டு, தன் சித்தத்தின் பலத்தை இழந்து விடுவதே காரணமாகும். பிறர் காரியங்களை கூர்ந்து கவனித்துக் கொண்டே இருப்பவன் தன் சித்தத்தை ஏகாக்ரதையாக வைக்க முடியாது. இதற்கு சமநோக்கும் அவசியமாகும். இதுவே நன்னோக்கு. நல்ல நன்மை பயக்கும் நோக்கத்தை பெறாதவரை சித்தம் ஏகாக்ரதை அடையாது.

சிறு குழந்தையின் கண்களை கூர்ந்து நோக்குங்கள். அக்குழந்தை இமையைக் கொட்டாமல் கொட்டக் கொட்ட்ட விழித்துக் கொண்டிருக்கும். ஆனால் நாமோ பத்து தடவை கண்களை இமைத்து விடுவோம். காலணம்ம், குழந்தைகளின் சித்தமானது உடனேயே ஏகாக்ரதை அடைந்துவிடும். ஏனென்றால் குழந்தைகளுக்கு பெரிதான உலக விவகாரங்களோ, கவலைகளோ, சம்சாரங்களோ எதுவும் கிடையாது. அவைகள் எதையும் பற்றி அவர்கள் அறிந்திருக்கவுமில்லை. எனவேதான் அவர்கள் சித்தம் எளிதில் ஏகாக்ரதை அடைந்து விடுகிறது. இன்று மனோத்தத்துவ ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள், மூன்று, நான்கு வயதுக்குள் குழந்தைகள் பெறும் போதனையே உண்மையான போதனை என்றும்,அதற்குப் பிறகு நீங்கள் எவ்வளவு தரமான போதனைகளைத் தந்தாலும் தொடக்கத்தில் கிடைத்த போதனைகளுக்கு ஈடாக அவை நிற்பதில்லை. என்கிறார்கள். ஆரம்பத்தில் ஏற்பட்ட போதனைகள் இரும்புப் பூச்சு, பிறகு வருகின்ற போதனைகளெல்லாம் வெளியே வெறும் சாயப் பூச்சு. சுண்ணாம்புப் பூச்சு. சோப்பு போடுவதால் அழுக்கு வேண்டுமானால் போகும், தோலின் நிறம் எப்படி சிகப்பாக மாறும் ? அது போலவே ஆதி சகாரங்களை நீக்குதல் என்பது மிகவும் கடினமாக இருக்கிறது. இந்த சம்ஸ்காரங்களே சித்தத்தின் ஏகாக்ரதைக்கு பெருந்தடையாக இருக்கின்றன. இந்த ஒரு வரியைச் சொல்லவே இவ்வளவு நீளப் பதிவு.

அந்த சம்ஸ்காரங்களை அடக்க்கியோ, நீக்கியோவிட்டால் சித்தம் ஒரு முனைப்ப் பாங்கு நிலையை அடையும். இந்த ஆதி சம்ஸ்காரம் இவ்வளவு உறுதியாக இருப்பது ஏன் ? ஏனென்றால் சிறு குழந்தைகளின் சித்தத்தின் ஏகாக்ரதை என்பது இயல்பாக இருக்கிறது. ஏகாக்ரதை இருப்பதால் அப்போது ஏற்படும் சம்ஸ்காரங்கள் அழிவதேயில்லை. இந்த ஏகாக்ரதைக்கு அவ்வளவு வலிமை உண்டு. இந்த ஏகாக்ரதை அடைந்தவனால் ஆகாதது எதுவுமில்லை. நம் வாழ்க்கை முழுமையும் இன்று செயற்கை மயமாகிவிட்டது. நம் பிள்ளைகள் மனமோ டீவி, கேம்ஸ் என்று பல விஷயங்களால் பாழாகிக் கிடக்கிறது. வாழ்வின் உண்மையான ரஸம், இனிமை இல்லை. வறண்ட மனங்களே எங்கும் காணப்படுகின்றன. எல்லாமே மேல் பூச்சுதான். சாயம்தான். வேசம்தான். ஏதோ கோணல்மாணலாக மனம் போன போக்கில் நடந்து வருகிறோம். டார்வினல்ல, நாம் தான் நம் செயல்களின் மூலம் மனிதன் குரங்கிலிருந்துதான் பிறந்தான் என்று நிருபித்து வருகிறோம்.

சிறு குழந்தைகள் எதையும் நம்பும் சுபாவம் கொண்டது. தாயோ, தகப்பனோ சொல்வதே அவர்களுக்கு வேதவாக்கு. சொல்லப்படும் கதைகளெல்லாம் பொய் என்று அவர்களுக்குத் தெரிவதில்லை. அப்படியே தகப்பனையும், தாயையும் நம்பிவிடுகின்றன. காக்கை பேசியது, குருவி பேசியது என்பதையெல்லாம் உண்மை என்றே அவர்கள் நினைக்கிறார்கள். இந்த முழு நம்பிக்கையான போக்குதான் அவர்களின் சித்தத்தின் ஏகாக்ரதைக்குக் காரணம். இதில் மிகப் பெரிய விஷயத்தை நீங்கள் அனைவரும் கூர்ந்து கவனிக்க வேண்டும். அது என்னவென்றால் ஏகாக்ரதைக்கு குழந்தைகள் நல்ல உதாரணம். ஆனால், நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு நல்ல போதனையாளரா ? நல் அஸ்திவாரத்தைத் தருபவரா ? அதை நீங்கள் உங்கள் மனதோடு கேட்டு, அதற்கான சரியான வழிமுறைகளைப் பின்பற்றுங்கள். ஏனென்றால் உங்கள் குழந்தையின் எதிர்காலம் மட்டுமல்ல, இந்த தேசத்தின் எதிர்காலமும் உங்கள் நற்போதனைகளிலும், வழிகாட்டுதலிலும்தான் இருக்கிறது.

931325_194875907333748_1726081984_n.jpg

 

Share this post


Link to post
Share on other sites
jdlivi    50
970058_402787966503560_1651853413_n.jpg

பாம்புக்கடி – தெரிய வேண்டியவை 10

பாம்பென்றால் படையும் நடுங்கும் என்பார்கள். அதற்குக் காரணம் மனிதனையே கொல்லக்கூடிய அதன் விசம்தான். இந்த விசகடிக்கு சரியான சிகிச்சை, உரிய நேரத்தில் செய்யவேண்டியது அவசியம்.

உலகில் சுமார் 3500 வகை பாம்புகள் காணப்படுகின்றன. அவற்றில் 250 வகைதான் விசத்தன்மையுள்ளவை.

இந்தியாவில் சுமார் 216 வகைப்பாம்புகள் உள்ளன. அவற்றில் 52 வகைதான் விசமுள்ளவை.

ஒவ்வொரு வருடமும் ஏறக்குறைய இரண்டு லட்சம் பாம்புக்கடிக்கு ஆளாகிறார்கள். அவர்களில் 15000-20000 பேர் விசத்தால் இறக்கிறார்கள்.

விசப்பாம்புகளில் நம் நாட்டில் முக்கியமானது நல்லபாம்பு. இது படமெடுத்து ஆடும். இதன் படத்தில் இரண்டு கருப்பான கண் போன்ற அமைப்பு இருக்கும். கண் போன்ற அமைப்பில் சிறு தங்கநிற செதில்கள் காணப்படும். சில பாம்புகளில் ஒற்றைக்கண் கூட உண்டு. கருநாகத்தின் படத்தில் கண் இருக்காது.

இறந்த பாம்பில் படம் விரிந்து இருக்காது. இதற்கு அந்தக் கழுத்துப்பகுதி இணைப்புகள் இறுகி விடுவதே காரணம். நல்லபாம்பின் தாடையில் விசப்பற்கள் இரண்டு உண்டு. அதனருகில் ஒன்று அல்லது இரண்டு சிறு பற்கள் காணப்படலாம்.

நல்ல பாம்பின் விசக்கடி பற்றி சுருக்கமாகப் பார்ப்போம்.

நல்லபாம்பு விசமானது பொதுவாக நரம்புமண்டலத்தைத் தாக்கக்கூடிய விசமாகும்.

1. கடித்த 6-8 நிமிடத்தில் கடிவாயைச் சுற்றியுள்ள பகுதி சிவந்துவிடும்.

2. கடிவாயிலிருந்து இரத்தத்துடன் நீர் கசியும்.


3. 30 நிமிடத்தில் கடிபட்ட நபருக்கு தூக்கம் வருதல், கால்கள் சுரணைக்குறைவு, நிற்க நடக்க இயலாமை ஆகியவை ஏற்படும்.


4. சிலருக்கு உமட்டல், வாந்தி வரலாம்.


5. நரம்பு மண்டலத்தைத் தாக்குவதால் கால் தசைககள் செயலிழந்து போய்விடும். இதனால் நிற்க முடியாது.


6. கண் இமைகள் செயலிழந்து கண்ணைத் திறக்க முடியாது.


7. கடித்த அரைமணி நேரத்திலிருந்து ஒருமணி நேரத்தில் எச்சில் அதிகம் ஊறும். வாந்தி, நாக்குத் தடித்தல், குரல்வளை தடித்து செயல் இழத்தல் ஆகியவை ஏற்பட்டுப் பேசவும், விழுங்கவும் இயலாது.


8. சுமார் இரண்டு மணி நேரத்தில் உடல் தசைகள் முழுவதும் செயலிழப்பதால் மூச்சு விடுதல் (Respiratory Paralysis) ஏற்படும். இதயத்துடிப்பு அதிகரிக்கும். கடிபட்டவர் சுய நினைவிலிருந்தாலும் பேசமுடியாது.


9. அதன் பின் வலிப்பு வரலாம். நுரையீரல் செயலிழந்து மூச்சு நின்று விடும். பின் இதயத்துடிப்பும் நின்று போகும்.


10. சிகிச்சை:


முதலுதவி – கடிவாயின் மேல் சிறிது அகலமாக, பட்டையாக துணியால் கட்டலாம். அகலமாக அழுத்திக்கட்டுவதால் தோலுக்கடியிலுள்ள இரத்தத் தமனிககளின் வழியாக விசம் பரவுவது குறையும்.


கடித்த கால் அல்லது கைப் பகுதியை அசைக்காமல் வைக்க வேண்டும்.


மருந்துகள்:


விச முறிவு மருந்தை தமிழ்நாட்டில் அனைத்து அரசு மருத்தவ மனைகளிலும் உள்ளது. இது நல்லபாம்பு மற்றும் அனைத்துவிதப் பாம்பு விசத்தையும் குணப்படுத்தும்.


விசம் அதிகமாக இருந்தால் செயற்கை சுவாசக் கருவிகள் (Ventilator) உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெறுதல் சிறந்தது.


நல்லபாம்புக் கடியால் இறப்பதற்கு முக்கிய காரணங்கள் :


1. அதிக அளவு விசத்தை பாம்பு கடித்து உடலுக்குள் செலுத்துதல்.


2. கடிபட்ட நபரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டுவராமை, தகுந்த சிகிச்சை அளிக்காதது ஆகியவையே.


உரிய நேரத்தில் தகுந்த சிகிச்சை அளித்து இன்னுயிர் காப்போம்.

 970769_260560240751581_520897444_n.jpg
கொள்ளு

கொள்ளு என்ற சத்தான சிறுதானியத்தை குதிரைக்கான உணவாக‌ மட்டுமே ஆக்கிவிட்டோம். உடலை வளர்க்கும் முக்கிய அமினோ அமிலங்களை இயல்பாக உள்ளடக்கிய கொள்ளு போன்ற தானியங்கள், நமக்கு உணவாவது மட்டுமின்றி, நம்முடைய நோய் எதிர்ப்பாற்றலையும் வளர்க்கும்.

என்ன சத்து?

லோ கிளைசீமிக் தன்மையும் (low glycemic index), நார்ச் சத்துக்களும், நம்முடைய உடலுக்கு தினமும் தேவையான இரும்புச் சத்தும், புரதச் சத்தும், அழகும் ஆரோக்கியமும் அளிக்கும் அருமருந்தாகிய natural polyphenols உள்ளது.


கொள்ளு கஞ்சி
கொள்ளு மிகவும் சத்தானதும், மருத்துவக்குணம் கொண்டதாகும். வாரம் ஒருமுறை கொள்ளை உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. கொள்ளு உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை கரைக் கூடியது. எல்லா வயதினரும் இக்கொள்ளை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:
கொள்ளு, அரிசி - 200 கிராம், சின்னவெங்காயம் -100 கிராம், துருவிய தேங்காய் - ஒரு கரண்டி, உப்பு - தேவையான அளவு. தாளிக்க: சமையல் எண்ணெய் - ஒரு ஸ்பூன், சீரகம் - ஒரு ஸ்பூன், பச்சைமிளகாய் - 2, கருவேப்பிலை தேவைக்கேற்ப‌

செய்முறை:
கொள்ளை லேசாக வறுக்கவும், அதை மிக்சியில் ஒரு சுற்று உடைத்து எடுக்கவும். பின்னர் அதைச் சுத்தம் செய்து அரிசியுடன் சேர்த்து கழுவிவிடவும். குக்கரில் போட்டு ஐந்து மடங்கு நீர் விட்டு அத்துடன், சின்ன வெங்காயத்தை உரித்து சின்ன துண்டுகளாக நறுக்கிப் போட்டு துருவிய தேங்காயை சேர்த்து, தேவையான அளவு, உப்புச் சேர்த்து ஐந்து விசில் வரும் வரை வேகவைத்து இறக்கவும்.

வாணலியை அடுப்பில் வைத்து ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு, ஒரு ஸ்பூன் சீரகம் போட்டு பொறித்ததும் பச்சைமிளகாய், கருவேப்பிலை சேர்த்து நன்கு வதங்கியவுடன் கொள்ளுக் கஞ்சியில் சேர்த்து நன்கு கலக்கி காலை டிபனாக சாப்பிட சுவையாக இருக்கும். வாரம் ஒரு முறை இவ்வாறு சாப்பிடுவது நல்லது.

கொள்ளு தொக்கு
தேவையான பொருட்கள்:
கொள்ளு - 100 கிராம், சின்ன வெங்காயம் - 4, பச்சைமிளகாய் - 2, சமையல் எண்ணெய்- ஒரு ஸ்பூன், கடுகு + உளுத்தம் பருப்பு - அரை ஸ்பூன், கருவேப்பிலை & ஒரு இணுக்கு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
கொள்ளை முதல் நாள் காலையில் நீரில் ஊறவைத்து, அன்று மாலை கழுவி சுத்தம் செய்து நீர் இல்லாமல் வடித்து ஒரு துணியில் கட்டி வைத்துவிட்டால் மறுநாள் காலையில் முளைவிட்டிருக்கும் அந்தக் கொள்ளை நீர்விட்டு நன்கு வேகவைத்து மசித்து வைக்கவும்.
வாணலியை அடுப்பில் வைத்து ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு + உளுத்தம்பருப்பு போட்டு வெடித்ததும், பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலைப் போட்டு நன்கு வதக்கி மசித்த தொக்குவில் போட்டு, தேவையான அளவு உப்பு போட்டு நன்கு கிளறி சாதத்தில் போட்டு, சிறிதளவு நல்ல எண்ணெய் சேர்த்து பிசைந்து சாப்பிட சுவையாக இருக்கும்.

கொள்ளு துவையல்
கொள்ளு - 100 கிராம், மிளகாய் வத்தல் - 4, புளி - நெல்லிக்காய் அளவு, பூண்டு- 2 பல், தேவையான அளவு உப்பு.
கொள்ளை நன்றாக வறுத்து அத்துடன் மிளகாய் வத்தல், புளி, பூண்டு, உப்புச் சேர்த்து நன்கு அரைத்து துவைலாக சாப்பிடலாம்.

யார் தவிர்க்க வேண்டும்?

கர்ப்பிணிப் பெண்களும், பாலூட்டும் தாய்மார்களும் இதனைத் தவிர்ப்பது நல்லது

நன்றி : விகடன்

 

Share this post


Link to post
Share on other sites
jdlivi    50
கண் பார்வை குறைவை தீர்க்கும் வெந்தயக்கீரை...

வெந்தயக் கீரையைக் கொண்டு அல்வா தயாரித்துக் காலை மாலை கொட்டைப் பாக்களவு சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணிந்து சீராகும் . சீதபேதி குணமாகும். வயிற்றுப் போக்கை நிறுத்தும். மாதவிடாய் தொல்லை நீங்கவும், உடலை வளர்க்கும் புதிய இரத்தத்தை உற்பத்தி செய்யும். உடலுக்கு நல்ல பலம் தரும்.

வெந்தயக்கீரையைக் கூட்டு வைத்துப் பகலில் சாப்பிட்டால் வாய்வு கலைந்து விடும். மூன்றே நாட்களில் வாயு முழுவதையும் கலைத்து விடும். வயிற்று உப்பிசம் இருந்தாலும் தணிந்து விடும். வெந்தயக் கீரையைப் பொடியாக நறுக்கி ஒரு சட்டியில் போட்டு வதக்கி, இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு,ஒரு டம்ளர் அறவிற்குச் சுண்டக்காய்ச்சி, காலை மாலை அரை டம்ளர் வீதம் கொடுத்து வந்தால் நெஞ்சுவலி பூரணமாகக் குணமாகும்.

வெந்தயக் கீரையை ஆய்ந்து வேரை நீக்கி, கழுவி ஒரு சட்டியுல் போட்டுச் சிறிதளவு தண்ணீர் விட்டு நன்றாக வேகவைக்க வேண்டும். வெந்தயக்கீரை இருக்கும் அளவில் இரண்டு பங்கு கோதுமை ரவையை எடுத்து லேசாக வறுத்து இதில் கொட்டி, எல்லாம் எந்த அளவு இருக்கிறதோ அந்த அளவிற்கு சர்கரை சேர்த்து இலேசாகக் கிளறிக் கொண்டே இருந்தால் அல்வா போல வரும்.

வயதுக்கு வரும் பெண்கள் இதைச்சாப்பிட்டால் இரத்த விருத்தியுண்டாகும். வெந்தயக்கீரையில் ஏ வைட்டமின் சத்தியும், சுண்ணாம்புச்சத்தும் இருப்பதால் இதைப் சாப்பிடும் போது மாரடைப்பு, கண்பார்வை குறை, வாதம், சொறி சிரங்கு, இரத்தசோகை ஆகியவை குணமடையவும்,, பசியைப்போக்கவும் பயன்படுகிறது. வெந்தயக்கீரையில் 49 கலோரி சத்துள்ளது
995326_462568877164421_1373620426_n.jpg

 


 
கிட்னி கல் என்றால் என்ன?

சிறுநீரில் பல வேதிப் பொருட்கள் கலந்துள்ளன. அவற்றுள் சில மணிச்சத்துக்கள், சில உயிரியற் பொருட்கள். இவை இரண்டும் தகுந்த விகிதத்தில் இருப்பதால்தான் அவை படிகங்களாகவோ, (crystals) திடப்பொருள்களாகவோ, சிறுநீர்த் தாரைகளில் படியாமல் இருக்கின்றன. சிலருக்கு ஏற்படும் வளர்சிதை மாற்றங்கள் இவற்றின் விகிதங்களை மாற்றி இவற்றைச் சிறு துகள்களாகவோ, கற்களாகவோ படிய வைக்கின்றன. இவையே நாளடைவில் கற்களாக உருவாகின்றன.

கிட்னியில் கற்கள் உருவாவதற்கான காரணங்கள்

இந்நோய் சுலபமாக ஏற்படுவதற்கான உடல் கூறு கொண்டவர்களுக்கு, உணவுப்பொருள் ஒரு காரணமாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். ஆனால் உணவுப் பழக்கம் மட்டுமே இதற்கு காரணம் என்று கூறமுடியாது எனவும் அவர்கள் கூறுகின்றனர்.

கால்சியம், பாஸ்பேட் மூலகங்கள் அடங்கிய கற்களே மிகுதியாக காணப்படுகின்றன. இம்மூலகங்கள் சிறுநீரில் கூடுதலாக வெளிப்படும் நோய்களில் இவை தோன்றுகின்றன. பாரா தைராய்டு மிகுதி நோயும் (Hyperparathyroidis m), சிறுநீர்ப் பாதையில் தொற்றுகள் (Urinary tractinfections) , , சிறுநீரக நோய்கள் (Cystic kidney diseases) போன்ற நோய்களும் இவ்வகைக் கற்கள் ஏற்பட முக்கியமான காரணங்களாகும்

யூரிக் அமிலம், புரதச் சத்து சிதைப்பிற்கு பின்பு உண்டாகும் கழிவுப் பொருளாகும். இது ரத்தத்தில் 6 மிலி கிராம் அளவில் இருக்க வேண்டும். பிறவி நொதிக்குறைகள் சிலவற்றில் யூரிக் அமிலம் இந்த அளவை தாண்டும்போது மிகுதியான யூரிக் அமிலம் சிறுநீரில் வரும். அப்போது அது கற்களாக படிவதுண்டு.

நாம் உண்ணும் உணவில் இருந்து தேவையான கால்சியம் நமக்கு கிடைக்கிறது. அதிகப்படியாக கால்சியம் நாம் மாத்திரைகளாகவோ, உணவாகவோ எடுக்கும்போது
அவை சிறுநீரில் கழிவு பொருளாக வெளியேறுகிறது. இப்படிப்பட்ட சமயங்களில் கால்சியம் மூலகங்கள் oxalate மற்றும் phosphate உடன் சேர்ந்து சிறுநீர் தாரைகளில் படிகங்களாக படிந்து பின் கற்களாக மாறுகின்றன.

சில சிறுநீர் பெருக்கி மருந்துகள் (Diuretics) கால்சியம் கலந்த antacid மருந்துகள் கல் உருவாகக்கூடிய வாய்ப்புகளை அதிகரிக்கிறது.

பிறவியிலேயே ஏற்படும் சில நொதிக் குறைகளில் சிறுநீரில் ஆக்ஸாலிக் அமிலம், சிஸ்டீன் போன்ற வேதியல் பொருள்கள் மிகுதியாக வெளிவரும். இவைகளும் கிட்னியில் கல் உருவாக ஏதுவாகிறது.

கிட்னி கற்கள் யாருக்கு வரும்-

பொதுவாக 40 வயதுக்கு மேற்பட்ட ஆண்களக்கு இந்த நோய் வருகிறது. பெண்களைப் பொறுத்தவரை, 50 வயதைத் தாண்டும்போது இந்த நோய் வருகிறது. ஒருவருக்கு
ஒருமுறை கிட்னியில் ஒன்றுக்கு மேற்பட்ட கற்கள் வந்துவிட்டால், அடுத்தடுத்து கற்கள் உருவாவதற்கான வாய்ப்பு அதிகம் உண்டு. நோயாளியின் பெற்றோர்களுக்கோ அல்லது முன்னோர்களுக்கோ, இந்த பாதிப்பு இருந்தாலும், இந்நோய் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

கிட்னி கல் - அறிகுறிகள்

சிறுநீரகத்தில் இருந்து கல் வெளியேறி குறுகிய சிறுநீர்க்குழாயில் நுழைந்து வெளியேற முடியாமல் தடைபடும்போது தாங்கமுடியாத வலி ஏற்படும்.
சிறுநீர் வெளியேறுவதில் சிக்கல் உண்டாகும்.

சில நேரங்களில் சிறுநீர் ரத்தத்துடன் கலந்து வெளியேறும்.

நீர்த்தாரையில் எரிச்சல் உண்டாகும்.

அளவில் சிறியதான கற்கள் சிறுநீர் மூலமாகவே வெளியேறிவிடும். தண்ணீர் அதிகம் அருந்தினால் சிறுநீர் கல் தானாகவே கரைந்து வெளியேறும். தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் அறுவை சிகிச்சை மூலம் கல்லை வெளியேற்ற வேண்டிய அவசியம் ஏற்படும்.

சிறுநீரக கற்களை எக்ஸ் கதிர், கணினி அச்சு வெட்டு, நுண் ஒலி துருவு படங்கள் ஆகியவற்றின் மூலம் அறியலாம். சிறுநீரக கற்கள் உள்ள நோயாளி தாமாகவே வெளிக்கொணரும் கற்களைஆராய்ந்து அதில் கால்சியம், பாஸ்பேட்,ஆக்ஸலேட்களும் மிகுதியாக இருப்பதை அறியலாம். இவற்றை கொண்டு கற்கள் உருவாவதற்கான காரணங்களை அறிந்து அவற்றை அகற்ற வேண்டும்.
425319_462568483831127_51080493_n.jpg

 

Share this post


Link to post
Share on other sites
jdlivi    50
இயற்க்கை வைத்தியம் மருத்துவ டிப்ஸ்:-

மஞ்சள் காமாலை வந்தால் கீழாநெல்லியை அரைத்து பசு மோருடன் கலந்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சரியாகிவிடும்.

பயணத்தின்போது அடிக்கடி வாந்தி வரும். தினசரி வெறும் வயிற்றில் நெல்லிக்காயை சாப்பிட்டு வந்தால். அப்புறம் வாந்தியாவது, ஒண்ணாவது! ஜலதோஷம் வந்தால் மாதுளம் சாப்பிட்டு வந்தால், குணமாகிவிடும்.

மருத்துவ டிப்ஸ்

உடல்வலி குணமாக : வில்வ இலைச் சாறு, அருகம்புல் சாறு கலந்து காலை, மாலை 1 அவுன்ஸ் சாப்பிட்டு வர, குணம் பெறலாம்.

ஞாபக சக்தி பெருக : வல்லாரை 150 கிராம், வசம்பு 15 கிராம் பவுடராக்கி தேனில் கலந்து உண்ணலாம்.

முகப் பருக்கள் ஒழிய : அல்லி இதழ்களை சந்தனத்துடன் சேர்த்து அரைத்து, இரவில் முகத்தில் பூசி காலையில் குளித்து வர ஒழியும்.

தும்மல் நிற்க : தூதுவளைப் பொடியில் மிளகுப் பொடி கலந்து தேனில் அல்லது பாலில் சாப்பிட நிற்கும்.

சதைப் பெருக்கத்திற்கு : நெல்லிக்காய் தூள் அரை ஸ்பூன் பாலில் சாப்பிட்டு வர உடல் சதைப் பிடிப்பு கூடுதலாகும்.

புண்கள் ஆற : கருவேல இலையை அரைத்து புண்கள் மீது கட்ட ஆறும்.

உடல் ஊறல் அரிப்பு குணமாக : உத்தாமணி இலைச் சாற்றினைப் பூசி காய்ந்த பின் குளித்துவர தீரும்.

கால் ஆணி குணமாக : வெள்ளை அருகு இலையை அரைத்து வைத்துக் கட்ட குணமாகும்.

தோல் வியாதி குணமாக : தகரை செடியின் வேரை எலுமிச்ச சாறு விட்டு அரைத்துப் பூச குணமாகும்.

நமைச்சல் தடிப்பு நீங்க : வேப்பமரத்துப் பட்டையைத் தூளாக்கி உடம்பில் பூசி, அரை மணி நேரம் கழித்து குளிக்க நீங்கும்.

அக்கி குணமாக : ஆலம் விழுதை சாம்பலாக்கி நல்லெண்ணெயில் குழைத்து தடவி வர குணமாகும்.

கட்டிகள் குணமாக : அந்திமந்தாரை இலையின் மீது ஆலிவ் எண்ணெய் தடவி அனலில் சூடுகாட்டி கட்டிகள் மீது வைத்துக் கட்ட குணமாகும்.

முடி நன்றாக வளர : மருதாணி இலையை அரைத்து தேங்காய் எண்ணெயில் கலக்கி, பச்சை நிறம் மாறாமல் காய்ச்சித் தடவி வர நன்றாக வளரும்.

செம்பட்டை முடி கருப்பாக : நில ஆவார இலையுடன் மருதாணி இலையைச் சேர்த்து அரைத்து தடவி வரவேண்டும்.

கம்பளிப் பூச்சிக் கடிக்கு : வெற்றிலையைக் கடித்த இடத்தில் வைத்து அழுத்தித் தேய்க்க குணம் பெறலாம்.

எலிக்கடி விஷம் முறிய : குப்பைமேனி இலையை அரைத்து, கடித்த இடத்தில் வைத்துக்கட்ட விஷம் முறியும்.

முகப் பொலிவிற்கு சில குறிப்புகள் :

1. முல்தானிமெட்டி பவுடரை பன்னீர் விட்டுக் கலந்து முகத்தில் தடவி, 1 மணி நேரம் ஊறிய பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

2. பன்னீர் ரோஜா இதழ்களை அரைத்து முகத்தில் தடவி, அரை மணி ஊறிய பின் தண்ணீர் விட்டு அலம்பி வந்தால் முகம் கலர் மாறும்.

3. தக்காளியை அரைத்துப் பூசி, ஊறிய பின் அலம்பினால் முகம் பொலிவு பெறும்.

4. கரும்புள்ளி மறைய வேப்பங் கொழுந்தையும், மஞ்சளையும் அரைத்துப் பூசி, ஊறியபின் கழுவினால் மறைந்துவிடும்.

5. கண்ணிற்கு கீழ் உள்ள கருவளையம் மறைய, உருளைக்கிழங்கை ஸ்லைசாக வெட்டி கண்ணின் மீது வைத்து வந்தால் கண் குளிர்ச்சியடையும். நாளடைவில் கருவளையம் மறைந்துவிடும்.

6. முகத்தில் பூனை முடி வளர்ந்திருந்தால் அதற்கு கஸ்தூரி மஞ்சள் தூளைப் பூசி ஊறவைத்து அலம்பினால் பலன்.
8690_568273333194986_597930206_n.jpg

 

Share this post


Link to post
Share on other sites
jdlivi    50

நிச்சயம் உணவில் சேர்க்க வேண்டிய வேர் காய்கறிகள்!!!

பெரும்பாலும் காய்கறிகளில் தண்டு அல்லது வேர் காய்கறிகள் என்று பிரித்து பார்க்காமல், காய்கறிகள் என்று சொல்லி தான் டயட்டில் சேர்த்து வருகிறோம். இருப்பினும் தண்டில் இருந்து கிடைக்கும் காய்கறிகளை விட, வேரிலிருந்து கிடைக்கும் காய்கறிகளில் ஒருசில சிறப்பான ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் நிறைந்திருக்கும். அந்த வகையில் வேரிலிருந்து கிடைக்கக்கூடிய காய்கறிகள் அதிகம் உள்ளன.

மேலும் அவை பொதுவாக அனைத்து வீடுகளின் சமையலறையிலும் இருக்கக்கூடியதே. உதாரணமாக, உருளைக்கிழங்கு, வெங்காயம், பூண்டு போன்றவை அன்றாடம் உணவில் சேர்க்கும் உணவுப் பொருட்களே.
ஆனால் அதுமட்டுமின்றி இன்னும் நிறைய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த வேர் காய்கறிகள் உள்ளன.

மேலும் அவை மிகவும் பிரபலமானவையும் கூட. அதுமட்டுமல்லாமல், வேரிலிருந்து கிடைக்கும் காய்கறிகள் உடலுக்கு சிறப்பான அளவில் ஆற்றலைக் கொடுக்கக்கூடியவை. ஒவ்வொரு வேர் காய்கறிகளிலும் ஒவ்வொருவிதமான சத்துக்கள் நிறைந்துள்ளன.
இப்போது வேரிலிருந்து கிடைக்கக்கூடிய சில ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காய்கறிகளைப் பார்ப்போம். அதைப் பார்த்து உணவில் சேர்த்து, நன்மைகளை பெறுங்கள்.

பீட்ரூட்

அனைவருக்குமே பீட்ரூட் ஒரு வேர் காய்கறி என்பது தெரியும். அத்தகைய பீட்ரூட்டில் நிறைய நன்மைகள் அடங்கியுள்ளன. குறிப்பாக அவை இரத்த சோகை பிரச்சனை உள்ளவர்களுக்கு ஒரு சிறப்பான உணவுப் பொருள். மேலும் இதில் பீட்டா-கரோட்டீன் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் வளமாக நிறைந்துள்ளது.

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கில் ஸ்டார்ச் நிறைய உள்ளது. மேலும் இவை உடலுக்கு அதிகப்படியான ஆற்றலையும் கொடுக்கக்கூடியவை. ஆனால் உடல் எடையை குறைக்க நினைத்தால், இதனை டயட்டில் சேர்க்கக்கூடாது.

வெங்காயம்

வெங்காயத்தில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் நோயெதிர்ப்பு அழற்சி பொருள் அதிகம் நிறைந்துள்ளதால், அவை நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராடும். மேலும் இதில் ஜிங்கு உள்ளதால், ஆண்களின் ஹார்மோன்களின் செயல்பாடுகளை அதிகரிக்கும்.

பூண்டு

பூண்டில் அல்லிசின் என்னும் பொருள் நிறைந்துள்ளது. எனவே இதனை உணவில் அதிகம் சேர்த்தால், இதயம் நன்கு ஆரோக்கியமாக இருக்கும். அதிலும் பச்சையாக பூண்டை சாப்பிட்டால், சளி மற்றும் இருமல் குணமாகிவிடும்.

இஞ்சி

இஞ்சியில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளன. அதை சொன்னால் தான் தெரிய வேண்டும் என்பதில்லை. இருப்பினும் இஞ்சியில் நிறைய செரிமான நொதிகள் நிறைந்திருப்பால், அவை அசிடிட்டி பிரச்சனை உள்ளவர்களுக்கு மிகவும் சிறந்தது. குறிப்பாக இருமல், சளி மற்றும் தொண்டையில் தொற்று உள்ளவர்களுக்கு இஞ்சி நல்ல நிவாரணத்தைக் கொடுக்கும்

கேரட்

கேரட் சாப்பிட்டால், கண்களுக்கு மிகவும் நல்லது. ஏனெனில் இதில் கண்களுக்கு ஆரோக்கியத்தை தரும் வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. மேலும் இதனை தினமும் சாப்பிட்டால், சருமம் பொலிவாக இருக்கும்.

முள்ளங்கி

நீரிழிவு நோயாளிகளுக்கு முள்ளங்கி ஒரு சிறப்பான உணவுப் பொருள். ஏனென்றால் இதில் கிளைசீமிக் இன்டெக்ஸ் மிகவும் குறைவாக உள்ளது. மேலும் இவற்றில் பொட்டாசியம் அதிக அளவில் நிறைந்துள்ளதால், இரத்த அழுத்தத்தை சீராக வைக்கும்.

சேனைக்கிழங்கு

சேனைக்கிழங்கில் கார்போஹைட்ரேட் அதிகம் நிறைந்துள்ளது. மேலும் இதில் வைட்டமின்-பி காம்ப்ளக்ஸ் அதிகம் இருப்பதால், அவை நரம்புகளை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவியாக இருக்கும்.

சர்க்கரைவள்ளி கிழங்கு

சர்க்கரைவள்ளிக் கிழங்கு சூப்பர் உணவுகளுள் ஒன்று என்று சொல்லாம். ஏனெனில் இதில் உடலுக்கு வேண்டிய ஆற்றல் அதிகம் இருப்பதோடு, சாதாரண உருளைக்கிழங்கை விட குறைவாகவே ஸ்டார்ச்சானது உள்ளது. மேலும் இதில் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் அதிகம் இருப்பதால், இன்சுலின் சுரப்பை சீராக வைக்கும்.

 

947069_206435962838249_983376648_n.jpg

Share this post


Link to post
Share on other sites
jdlivi    50

இயற்கை சார்ந்த உணவுகள்.

இருபது ஆண்டுகளுக்கு முந்தைய காட்சி இது.மண் சுவரால் கட்டப்பட்டு, நடுவில் முற்றம் வைத்த ( Inner Courtyard ) வீடு அது.பின்புறம் கொல்லையில் சில தென்னை மரங்களும், அதன் நடுவில் கிணறும் இருக்கும். முற்றம் வைத்த வீட்டின் வசதி என்னவென்றால், வீட்டின் உள்ளே நின்றவாறே சூரியனை பார்க்கலாம்; படுத்தவாறே நிலவையும், நட்சத்திரங்களையும் ரசிக்கலாம்.

ஒரு நாள் ஏதோவொரு தின்பண்டத்தை கொறித்துக் கொண்டிருந்தேன்.அதில் சில தரையில் சிந்தியிருந்தன.சிறிது நேரம் கழித்து பார்த்தால் எங்கிருந்துதான் அத்தனை எறும்புகள் வந்தனவோ தெரியவில்லை.சில மணித்துளிகளில் சிந்தியிருந்த அனைத்து தின்பண்டங்களையும் எடுத்து சென்றுவிட்டன.

எப்படி எறும்புகளுக்கு தின்பண்டம் தரையில் சிந்திய செய்தி உடனடியாக கிடைத்தது ?. இதற்கு விடை தேடி தொல்காப்பியத்தை நாடுவோம்.தொல்காப்பியத்தின் கூற்றுப்படி எறும்பு ஒரு மூவறிவு உயிரினம்.அதாவது முதலாம் அறிவு உற்றறிவு ( தொடு உணர்ச்சி ) ; இரண்டாம் அறிவு சுவையறிவு ( நாக்கு ) ; மூன்றாம் அறிவு முகர்தல் ( மூக்கு ) ஆகும்.

பொதுவாக குறைந்த அறிவுடைய உயிரினங்கள் , அவற்றுள் ஏதாவது ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட வகையில், மிகச்சிறந்த அறிவை பெற்றிருக்கும்.அந்த வகையில் எறும்புகள் மிகச்சிறந்த முகர்ச்சி ( வாசனை அறிதல் ) அறிவு கொண்டவை.இதற்கு அதன் உணர்வு கொம்புகள் உதவுகின்றன.இதனாலேயே இறுக்கமாக மூடி வைக்கப்பட்ட தேன் பாட்டிலின் மூடியை எறும்புகள் வட்டமிடுகின்றன.இவ்வாறாக மேற்சொன்ன நிகழ்வுக்கு விளக்கம் பெற்றேன்.

நிற்க.இன்றைய தேதிக்கு வருவோம்.முன் சொன்ன அதே நிகழ்ச்சி சற்று மாறுபட்ட நகரச் சூழ்நிலையில் நிலையில் இன்று நிகழ்கின்றது.இப்பொழுதும் தின்பண்டங்கள் தரையில் சிந்துகின்றன.ஆனால் பல நேரங்களில் எறும்புகள் வருவதே இல்லை ; சில நேரங்களில் மிகவும் தாமதமாக வருகின்றன; அதுவும் மிகக்குறைந்த எண்ணிக்கையில் வருகின்றன்.

ஏன் இப்படி ?. ஏனென்றால் நாம் இப்பொழுது சாப்பிடும் உணவுகள் தரமற்றவை. இவை பெரும்பாலும் ( அனைத்தும் அல்ல ) இயற்கைக்கு எதிரான முறையில் ரசாயன உரங்களையும்,பூச்சி கொல்லி மருந்துகளையும் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படுகின்றன.

மேலும்,இதற்கு அடுத்து பல்வேறு கட்டங்களை கடந்து நம் வீட்டிற்கு வந்து சேரும் வரையிலும்,சுவையை அதிகரிக்க,தோற்றத்தை மெருகூட்ட, நீண்ட நாள் இருப்பு வைக்க என்பன போன்ற பல காரணங்களைக் கருதி, பல்வேறு வேதியியல் பொருட்கள் அதில் சேர்க்கப்படுகின்றன.இதன் விளைவுகள் பற்றி அறிந்தோ,அறியாமலோ இந்த நிகழ்வுகள் நடக்கின்றன.யாரையும் குறை கூறுவதற்கு இல்லை.இயற்கைக்கு எதிரான இன்றைய வாழ்வியல் அமைப்பில்,அவரவர்க்கு உள்ள பொருளாதார நெருக்கடி இவ்வாறு செய்யத் தூண்டுகின்றது.

இவ்வாறு தரம் குறைந்து இருப்பதாலேயே, இந்த உணவுகளை எறும்புகள் நிராகரித்து விடுகின்றன.இந்த வகையில் எறும்புகள் மிகச்சிறந்த தர உறுதி குறிகாட்டிகளாக (Quality standard indicators ) செயல்படுகின்றன.

இத்தகைய தரமற்ற உணவுகளை நாம் உண்பதால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றோம்.இன்று நாம் எதிர்கொள்ளும் பல்வேறு நோய்களுக்கு இத்தகைய உணவுகளே முக்கிய காரணமாக அமைகின்றன.இத்தகைய உணவுகளை உண்ணும் குழந்தைகள் விரைவிலேயே பல்வேறு உடல்நலக் குறைபாடுகளுக்கு ஆளாகின்றார்கள்.

இதற்கு என்னதான் தீர்வு ?. நம் முன்னோர்கள் வழியில் இயற்கை சார்ந்த வழிமுறைகளில் உற்பத்தி செய்யப்பட்ட உணவுகளை நாம் சிறிது சிறிதாக உண்ண ஆரம்பிக்க வேண்டும்.இதற்கு அங்கக உணவுகள் என்று பெயர். இவை ஆங்கிலத்தில் Organic Foods எனப்படுகின்றன.

சரி,ஆனால் உடனடியாக இந்த உணவு முறைக்கு முற்றிலும் மாற முடியுமா ?.கடினம். ஆனால் சிறிது சிறிதாக மாற முடியும்.எப்படி ?.

முதல் கட்டமாக காலை உணவுகளை மட்டும் இயற்கை உணவுகளாக உண்ண முயற்சிக்கலாம்.அதாவது நம் தாத்தா பாட்டி தலைமுறையினர் உண்ட கேழ்வரகு,கம்பு,திணை,சாமை,குதிரைவாலி,நாட்டுச்சோளம்,வரகு போன்ற சிறு தானியங்களை கஞ்சி அல்லது கூழாகக் குடிக்கலாம்.( என்னது மறுபடியும் மொதல்லேந்தா ??!! ).

இது மிகவும் சத்துள்ள, அதிக ஆற்றலை வழங்கக் கூடிய ஆகாரம்.மேலும் அவசர கதியில் இயங்கும் இந்த உலகத்தில், மிக விரைவாக தயார் செய்யக்கூடிய இந்த உணவுகள் பெருமளவு நமது நேரத்தை மிச்சப் படுத்தும்
.
இந்த உணவுகள் அளிக்கும் ஆற்றலுக்கு சான்று எனப்பார்த்தால், இதனை உண்ட நம் முன்னோர்களில் ஆண்கள் மிகுந்த உடல் வலு பெற்றிருந்தார்கள்.பெண்கள் பிரசவ நாளன்று கூட வயல் வேலைக்கு சென்று ,இடையில் அங்கேயே குழந்தை பெற்று, பின் மிச்ச வேலையை முடித்து வீடு திரும்புவார்களாம்.பிரசவம் என்பது அவ்வளவு வெகு இயல்பான காரியமாக இருந்தது.ஆனால் இன்று இதை நினைத்து பார்க்க முடியுமா ?.

அடுத்த கட்டமாக இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறிகள்,கீரைகள் மற்றும் பழங்களை வாங்கி உண்ண ஆரம்பிக்கலாம்.
இந்த உணவுப் பொருட்கள் தற்போது எல்லோருக்கும் கிடைகும் அளவுக்கு வரத்து ( Supply ) உள்ளதா ? விலை அதிகமா ?. என்பது போன்ற கேள்விகள் எழுகின்றன.

நடைமுறையில் உள்ள விவசாயமே பல்வேறு நெருக்கடிகளால் கைவிடப்பட்டு வருகின்றது. இத்தகைய சூழ்நிலையில் இயற்கை விவசாயம் செய்வதற்கு ஆரம்பத்தில் கூடுதலான உழைப்பு தேவை.எனவே தற்போது சந்தையில் இந்த உணவு பொருட்களின் வரத்து குறைவாகவே உள்ளது.இந்தக் காரணங்களால் இந்த பொருட்களின் விலையும் சற்று அதிகமாக இருக்கும்.

சரி, இயற்கை உணவுகளை எவ்வாறு இனம் காண்பது ?. இவற்றை எறும்புகள் விரும்பி உண்ணும்.வண்டுகளும் இதனை விரும்பி உண்ணும்.இதன் சுவை மிகவும் நன்றாக இருக்கும்;சமையல் செய்முறைகளின் போது சிறந்த பதங்களைத் தரும்.சிறிது கால பயன்பாட்டிலே நீங்கள் இதனை நன்கு உணர முடியும்.

சரி, இயற்கை உணவுகள் நமக்கு நன்மை விளைவிக்கும் என்பதற்கு என்ன ஆதாரம் ?. காலம் காலமாக இதனை உண்டு வரும் நம் முன்னோர்கள் தொடங்கி, இன்றும் இதனை உண்டு வரும் மிகக் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மக்கள் வரை இதற்கு சான்றாக அமைகின்றனர்.இவர்கள், மற்றவர்களுடன் ஒப்பிடும்போது நல்ல உடல் நலத்துடன் விளங்குகின்றனர்.

மேலும் இன்றைய அறிவியல் ஆய்வுகளும், சிறு தானியங்களின் ஊட்டச்சத்து மதிப்பு ( Nutritional Value ) அதிகம் என்றே உறுதி செய்கின்றன.

என்ன முயற்சி செய்து பார்க்கலாமா ?. உங்கள் முயற்சி வெற்றி பெறட்டும்.

இதனை தயவு செய்து அனைவருக்கும் Share செய்யவும்.

நன்றி.

இப்படிக்கு,
தமிழ் இயற்கை சார்ந்த வாழ்வியல் பக்கம்.

1001783_181193175376454_1496862552_n.jpg


MALUNGGAY (Moringa oleifera)

Malunggay as medicine

Studies have shown that malunggay can be used to treat a number of illnesses.
“Malunggay leaves are good for headache, bleeding from a shallow cut, bacterial and fungal skin complaints, anti-inflammatory gastric ulcers, diarrhea, and malnutrition,”

This is one reason why the Philippine government has used malunggay in its feeding and nutrition programs.
Internal organs are said to benefit from the vegetable. “Malunggay pods are dewormers, good for treating liver and spleen problems, pain of the joints, and malnutrition. Likewise, malunggay seeds treat arthritis, rheumatism, gout, cramp, STD, boils and urinary problems, and is a relaxant for epilepsy,” the senator added.
According to philippineherbalmedicine.org, the plant is anti-diabetic and anti-tumor: "There have been claims that malunggay can be used to lower blood pressure ... as well as its being an anti-tumor plant."

“Malunggay’s young leaves are edible and are commonly cooked and eaten like spinach or used to make soups and salads. They are an exceptionally good source of provitamin A, vitamins B and C, minerals (in particular iron), and the sulphur-containing amino acids methionine and cystine," said Senator Loren Legarda.

Health Benefits:

Malunggay leaves helps strengthens the immune system.
Malunggay can help restores skin condition, controls blood pressure, relieves headaches and migraines.
Malunggay tea can help strengthen the eye muscles.
Malunggay tea can help heal inflammation of the joints and tendons.
Malunggay tea can prevent intestinal worms.
Malunggay can help increase semen count.
Malunggay help normalize blood sugar level therefore preventing diabetes.
Malunggay has anti-cancer compounds (phytochemicals) that help stop the growth of cancer cells.
Malunggay helps relax and promotes good night sleep.
Malunggay tea is used to treat fever and asthma.
Malunggay help heals ulcers.
Malunggay is high in calcium (four times the calcium in milk), therefore lactating mothers are advised to consume malunggay leaves to produce more milk for their babies. The young malunggay leaves are also boiled and taken as tea.
Malunggay contains three times the potassium in bananas.
Malunggay contain four times the vitamin A in carrots.
An ounce of malunggay has the same Vitamin C content as seven oranges.
Malunggay leaves contain two times the protein in milk.
Malunggay seed is used to clean dirty or polluted water

for more health news pls like the page https://www.facebook.com/Siddhacom
379583_206712776143901_1309035435_n.jpg

 


வீட்டுலேயே இருக்கு எளிய மருத்துவ குறிப்புகள்:-

உடல் உஷ்ணம் அடைந்தால்: உடலில் அதிகப்படியான உஷ்ணம் இருப்பவர்கள் சுறுசுறுப்புடன் இருக்க மாட்டார்கள். இவர்களின் தோல் கூட பளபளப்பாக இருக்காது. வெங்காயம் மற்றும் தேனை முடிந்தவரை உணவில் எடுத்துக் கொள்ளவும். தலை முதல் கால் வரை நல்லெண்ணையைத் தேய்த்து குளிப்பதால் உடலில் இருந்து தேவையற்ற சூடு நீங்கி விடும்.
பெண்கள் செவ்வாய் (ம) வெள்ளியும், ஆண்கள் புதன் (ம) சனிக்கிழமைகளிலும் எண்ணெய் தேய்த்து குளித்து வரவும். எண்ணெய் தேய்த்துக் குளித்தபின், இஞ்சி கஷாயம் (அ) சீரககஷாயம் (அ) சுக்குப் பொடியை வெல்லமோ, நெய்யோ கலந்து சாப்பிடவும். எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் நாட்களில் இதை கடைப்பிடித்தல் மிகவும் முக்கியம். இம்முறையினால் உடலில் உள்ள அதிகப்படியான சூடு வெளியேறி, நல்ல ஆரோக்கியம் இயற்கையாக கிடைக்கும்.

ரத்தத்தை சுத்தம் செய்ய: ரத்தம் சுத்தம் செய்வதற்குக் குங்குமப்பூ 5, கொஞ்-சம் குல்கந்தை எடுத்து பொடித்து தேனுடன் கலந்து சாப்பிடவும். இது நல்ல சக்தியைக் கொடுக்கும்.

இதயம் வலுவடைய: தினமும் இரவில் பாலுடன் சிறிதளவு கடுக்காய் பொடியைக் கலந்து குடிக்கவும். இது எல்லாவிதமான இதய நோயையும் தடுத்து நிறுத்தும். மாரடைப்பும் வராமல் தடுக்கும். இதயம் வலுவடையும்.

நல்ல தூக்கம் வேண்டுமா?: காய்ச்சிய பாலுடன் சிறிது கசகசாப் பொடியைக் கலந்து தூங்கச் செல்வதற்கு முன் குடிக்கவும். இது நல்ல தூக்கத்தையும், சுகாதாரமான உடல்நலத்தையும் கொடுக்கும். கசகசா பாயசமும் செய்து சாப்பிடலாம்.

ஆஸ்துமாவை கட்டுப்படுத்த: சிவப்புக் கரும்பின் சாறு 10 அவுன்சுடன் 1 அவுன்சு தேனை கலந்து ஆஸ்துமா ஆரம்பித்தவுடனேயே குடிக்கவும். ஒரு வாரத்திற்குத் தினமும் இரண்டு முறை குடித்து வரவும். சுத்தம் செய்த தூதுவளைக் கீரையின் பூக்களை எடுத்து பாலுடன் கலந்து கொதிக்க வைத்து, படுக்கப்போவதற்கு முன் குடிக்கவும்
936373_462219303866045_757703544_n.jpg

 


எளிய இய‌ற்கை வைத்தியம்

1. சர்க்கரை வியாதிக்கு தினமும் காலையில் வெறும் வயிற்றில் சிறிது வெந்தயத்தை வாயில் போட்டு விழுங்க வேண்டும்.

சர்க்கரை வியாதிக்கு முருங்கை கீரை கண் கண்ட மருந்து பாகற்காயை கழுவி, வட்டவட்டமாக நறுக்கி விதையை நீக்கி, நிழலில் காய வைத்து, மிக்ஸியில் அடித்து பொடியாக்கி பாட்டிலில் அடைத்து வைத்துக் கொண்டு தினமும் 1 தேக்கரண்டி சாப்பிட்டால் குணமாகும்.

குறிஞ்சாக் கீரையும் சர்க்கரை வியாதிக்கு நல்ல மருந்தாகும்.

2. மாங்கொட்டையின் பருப்பை உலர்த்தி, நன்றாகப் பொடி செய்து, தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால், வயிற்றிலுள்ள நாக்குப் பூச்சிகள் மலத்துடன் வெளி வந்து விடும். மூல நோயும் குணமாகும். மாத விடாய் அதிகமாக போவதும் நின்று விடும். கொசுக்களை விரட்ட மாம்பூக்களைப் பொடி செய்து, சாம்பிராணி போல புகைபோட்டால் கொசுக்கள் ஓடி விடும்.

3. இஞ்சியை கற்கண்டுடன் சேர்த்துச் சாப்பிடுவதால் சர்க்கரை நோய் கட்டுப்படும். இஞ்சி சாற்றையும் வெங்காயச் சாற்றையும் சமமாகக் கலந்து குடித்தால் வாந்தி நிற்கும். அஜீரணத்துக் இஞ்சி சாற்றை தொப்புளைச் சுற்றித் தடவலாம்.

4. கொத்துமல்லி தழையை அரைத்து சர்க்கரை போட்டு பால் சேர்த்து தினம் 100 கிராம் சாப்பிட மன நோய் நீங்கும். மல்லி நீரால் கண்களைக் கழுவ கண்கள் பளிச்சிடும். தாகத்தைத் தணிக்கும். பல் வலி, ஈறு வீக்கம் ஆகியவை கட்டுப்படும். இதன் விதை எண்ணெய் சுளுக்கு நீக்கியாகப் பயன்படும்.

5. பூண்டைச் சேர்த்து எந்த வகை உணவு சாப்பிட்டாலும் வாயுத் தொல்லை, வயிற்று உப்புசம் குறையும். இதனை தேங்காய் எண்ணெய் விட்டு காய்ச்சி, அதைத் தேய்த்தால் வாத வலி போகும். பூண்டுத் தழையை உப்பிட்டு அரைத்து சாற்றைப் பிழிந்து சுளுக்குக்குத் தடவ, சுளுக்கு விட்டுப் போகும்.

6. சிரங்கு தொல்லையா?

சிரங்கு : 100மி.லி., தேங்காய் எண்ணெய்யில் 5 வெற்றிலைகளைப் போட்டு நன்றாகக் காய்ச்சி அந்த எண்ணெயைத் தடவ நல்ல குணம் கிடைக்கும்.

42. தினமும் ஒரு கைப்பிடி அளவு கொத்த மல்லிக்கீரையை மண்ணில்லாமல் சுத்தம் செய்து, பச்சையாகவே மென்று சாப்பிட்டு வர கண் பார்வை தெளிவாகும். பித்தமும் நீங்கும்.

7. இரவின் பூவன் பழத்தை செங்குத்து வாக்கில் இரண்டாகப் பிளந்து, அதில் சீரகத்தை வைத்து மூடி வைத்து, அதிகாலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர மூலவியாதி முச்சு காட்டாது.

8. சீரகத்தை நல்லெண்ணையில் காய்ச்சி தலையில் தேய்த்து குளித்து வந்தால், தலை பாரம், பித்த மயக்கம் நீங்கும்.

9. வாழைப்பூவை இடித்து சாறு பிழிந்து பசுமோர் கலந்து அருந்திவர வயிற்று வலி தீரும்

10. முக சுருக்கம் நீங்க பச்சைக் கற்பூரத்துடன் புதினா இலைச் சாறை கலந்து மூட்டு வலி உள்ள இடத்தில் தடவி வர மூட்டு வலி குணமாகும்.

11. தோலில் உள்ள கரும்புள்ளிகளின் மேல் தக்காளிப் பழத்தைத் துண்டாக்கிக் தேயுங்கள். அதில் உள்ள அமிலம் கரும்புள்ளிகளைக் கரைத்துவிடும்.

12. கருவுற்ற மகளிர் நெல்லிக்காய், முருங்கைக் கீரை, முள்ளங்கி ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொண்டால் கை, கால், முகம், பாதம் வீக்கம் வராது. குழந்தைப் பேறு எளிதாக அமையும்.

13. தக்காளி, கோஸ், கேரட் ஆகியவற்றை சாப்பிட்டால் முக சுருக்கம் நீங்கும்.

14. கசகசாவை நைசாக அரைத்து குழந்தையின் தொப்புள் சுற்றி தடவினால் குழந்தையின் அழுகை நின்றுவிடும்.

15. மெலிந்த உடல் பருக்க

1. கற்கண்டை வெண்ணெயுடன் சேர்த்து நாற்பது நாட்கள் சாப்பிட மெலிந்த உடல் பருக்கும்.

2.தொண்டை கட்டிக்கொண்டு குரல் எழாமல் சிரமப்படுபவர்கள் கற்பூர வல்லியை சாறெடுத்து பனங்கற்கண்டு சேர்த்துப் பருக சரியாகும்.

3. வெள்ளை வெங்காயத்தை நெய்யில் வதக்கி, பனங்கற்கண்டு சேர்த்து காலை, மாலை ஒரு தேக் கரண்டி சாப்பிட, வயிற்றின் சுற்றளவு குறையும்.

4. மிளகாயுடன் பத்து துளசி இலைகளை சேர்த்து சாப்பிட சளி போகும்.

5. சுக்கை நீர் விட்டு அரைத்து கொதிக்கவைத்து மூட்டுகளில் தடவ மூட்டுவலி குறையும்.

6. துவரம் பருப்பை வேகவைத்த தண்ணீரை டம்ளர் எடுத்து, சிறிது வெல்லம் சேர்த்து ஏழு நாட்கள் சாப்பிட பூச்சிகள் வெளியேறும்.

7. கருணைக் கிழங்கை தொடர்ந்து வாரம் இரு முறை உணவுடன் சேர்த்து சாப்பிட மூலம் தீரும்.

15. இஞ்சி எலுமிச்சை சாற்றை தண்ணிரில் கலந்து காலையில் அருந்த குணமாகும். எலுமிச்சை சாறைத் தினமும் பருகி வந்தால் காலரா அண்டாது.

 

1001166_568642496491403_1493570015_n.jpg


இயற்கை சார்ந்த உணவு முறைகள்

தலைப்பிற்குள் செல்வதற்கு முன், உணவு எவ்வாறு ஆற்றலாக மாற்றப்படுகின்றது என்பதை, அறிவியல் முறைப்படி பார்க்கலாம்.

நாம் உண்ணும் உணவில் ஆறு முக்கிய ஊட்ட சத்துக்கள் ( Six Essential Nutrients ) உள்ளன. அவை ,

1. புரதங்கள் ( Proteins )
2. மாவுச்சத்து ( Carbohyrates )
3. கொழுப்பு ( Fats )
4. தாதுக்கள் ( Minerals )
5. உயிர் சத்துக்கள் ( Vitamins )
6. தண்ணீர் ( Water )

ஆகியன ஆகும்.

இதில் நம் உடலுக்கு ஆற்றலை கொடுப்பவை புரதங்கள், மாவுச்சத்து மற்றும் கொழுப்பு ஆகும்.எனவே இவை மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன.

இவற்றுள் மாவுச்சத்து ( சர்க்கரை ) உடனடி ஆற்றலை அளிக்க வல்லது. புரதம் மெதுவான மற்றும் நீடித்த ஆற்றலை கொடுப்பது.கொழுப்பு அதிக ஆற்றலை வழங்குவது ஆகும்.

இப்பொழுது நாம் உண்ணும் உணவு, உணவுப்பாதையில் அடையும் மாற்றங்களை வரிசையாக காணலாம்.

• உணவானது, வாயில் உமிழ்நீருடன் நன்கு கலக்கப்பட்டு அரைக்கப்படுகின்றது.உமிழ்நீரில் உள்ள அமிலேஸ் ( AAmylase ) என்னும் நொதி ( Enzyme) உணவுத் துகள்களை ஒரளவு சிதைக்கின்றது.

• பின், உணவுக்குழல் வழியாக இரைப்பையை அடைகின்றது. அங்கு HCL அமிலம் மற்றும் பெப்சின் என்னும் என்சைம் சேர்க்கப்படுகின்றது.இவை உணவின் மீது வேதிமாற்றங்களை நிகழ்த்துகின்றன.மேலும் இரைப்பை தசைகளின் இயக்கங்களாலும் உணவு நன்கு அரைபடுகின்றது.

• அடுத்து உணவு கூழ்நிலையில், சிறுகுடலின் முன்பகுதியை ( duodenum ) அடைகின்றது.அங்கு பித்த நீர்,கணைய நீர் மற்றும் குடல் நீர் சேர்க்க்ப்பட்டு அடுத்தகட்ட வேதிமாற்றம் நிகழ்கின்றது.குடலின் தசை இயக்கங்கள் மூலமும் உணவு மேலும் அரைக்கப்படுகின்றது.

• இறுதியாக நன்கு சிதைக்கப்பட்ட உணவிலுள்ள ஊட்ட சத்துக்கள், உறிஞ்சப்பட்டு ரத்தத்தின் மூலம் கல்லீரலுக்கு எடுத்து செல்லப்படுகின்றன.அங்கு இச்சத்துக்கள் வடிகட்டப்பட்டு, நச்சு நீக்கப்பட்டு, மேலும் வேதிமாற்றங்கள் அடைகின்றன.

• பின் இச்சத்துக்கள் உடலின் பல்வேறு செல்களுக்கு ( Body cells ) எடுத்து செல்லப்படுகின்றன. அங்கு நடைபெறும் பல்வேறு தனி தனி வேதி மாற்றங்கள் மூலம் இவை, ATP ( Adenosine Triphosphate ) எனும் ஆற்றல் வடிவமாக மாற்றப்படுகின்றன.

• இந்த ஆற்றலே மனிதன் நகர்வதற்கும், உள்ளுறுப்புகள் செயல்படுவதற்கும்,புதிய செல்கள் உருவாக்கத்திற்கும் பயன்படுகின்றது.


மேலே பார்த்தவரையில் மூன்று நிகழ்வுகள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன.அவற்றை ஒவ்வொன்றாக பின்வருமாறு பார்ப்போம்,

1. சிதைவு வேதிமாற்றங்கள் ( Catabolism ) :

உணவுப்பாதையில், உணவுத்துகள்கள் பல்வேறு வேதிமாற்றங்களின் மூலம் மிக நுண்ணிய துகள்களாக சிதைக்கப்படுகின்றன.இவை சிதைவு வேதிமாற்றங்கள் ( Catabolism ) எனப்படுகின்றன.

இவற்றுள் குறிப்பாக செல்களில் நடக்கும் பல சிதைவு வேதிமாற்றங்கள் ( Catabolism ) மூலம், ஊட்டச்சத்துகள் முற்றிலும் சிதைக்கப்பட்டு ஆற்றல் பெறப்படுகின்றது. இதில் ஆக்ஸிஜன் பயன்படுத்தப்பட்டு , கார்பன் டை ஆக்சைடு கழிவாக வெளியேற்றப்படுகின்றது.தனித்தனியாக நடைபெறும் இந்த வினைகளை மொத்தமாக பார்க்கும்போது, எரி அறையில் ( Combustion Chamber ) உணவை எரிப்பது போல தோன்றுகின்றது.எனவே இது கலோரியை எரித்தல் ( Calorie Burning ) எனப்படுகின்றது.

2. வளர்ச்சி வேதிமாற்றங்கள் ( Anabolism ) :

புதிய செல்களை உருவாக்கும் வேதிமாற்றங்கள், வளர்ச்சி வேதிமாற்றங்கள் ( Anabolism ) எனப்படுகின்றன.

முற்றிலும் சிதைக்கப்படாத ஊட்டச்சத்துக்கள் மற்றும் ATP ( Adenosine Triphosphate ) வடிவிலான ஆற்றலை பயன்படுத்தி இவ்வேதிமாற்றங்கள் நிகழ்கின்றன.


3. வளர்சிதை வேதிமாற்றங்கள் ( Metabolism ) :

வளர்ச்சி மற்றும் சிதைவு வேதிமாற்றங்களின் தொகுப்பே, வளர்சிதை வேதிமாற்றங்கள் ( Metabolism ) எனப்படுகின்றன.

மனித உடலின் ஒவ்வொரு செல்களிலும் நடைபெறும் இவ்வினைகள், உயிர் வாழ்வதற்கு மிகவும் இன்றியமையாதவை ஆகும்.நமது ஒவ்வொரு செயல்களும் இவற்றுடன் தொடர்புடையனவாகும்.

ஒவ்வொரு செல்களிலும் நடைபெறும் இவ்வினைகளை மொத்தமாக தொகுத்து பார்த்தால்,பல கோடிக்கணக்கான வேதிமாற்றங்கள், நமது உடலில் தினமும் நடப்பதை அறியலாம்.( ப்ப்ப்ப்ப்ப்ப்பா, என்ன ஒரு அதிசயமான படைப்பு நமது உடல் !!!!!. )

இதனால் Metabolism என்பது உடலின் ஆரோக்கியத்தை குறிக்கும் அளவீடாக பார்க்கப்படுகின்றது.

சரி, இப்பொழுது கட்டுரையின் தலைப்பிற்குள் செல்வோம்.

இனி, இயற்கை சார்ந்த உணவு முறைகளையும், அவை எவ்வாறு நம் உடலின் Metabolism மேம்பட உதவுகின்றன என்பதையும் பார்க்கலாம்.

இயற்கை சார்ந்த உணவு முறைகள் :

1. உணவின் குணமறிந்து உண்ணல் :

வாதம், பித்தம், கபம் என்னும் மூன்று குணங்களில் ஏதேனும் ஒரு குணத்தை,ஒவ்வொரு உணவுப் பொருளும் பெற்றிருக்கும்.இந்த மூன்று குணங்களும் நமது உடலில் சமநிலையில் இருக்குமாறு, நாம் நமது உணவு முறையை அமைத்து கொள்ள வேண்டும்.

2. காலமறிந்து உண்ணல் :

தினசரி, நமது உடலில் ஒவ்வொரு வேளையும்,ஒரு குணம் மேலோங்கி இருக்கும்.இதனை பின்வருமாறு காணலாம்.

• கபம், அதிகாலையில் தொடங்கி சிறிது சிறிதாக அதிகரித்து நண்பகலில் உச்சத்தை அடையும்.

• பித்தம், நண்பகலுக்கு பிறகு சிறிது சிறிதாக அதிகரித்து மாலையில் உச்சத்தை அடையும்.

• வாதம், இரவில் சிறிது சிறிதாக அதிகரித்து அதிகாலையில் உச்சத்தை அடையும்.

இவ்வாறு அதிகரிக்கும் குணங்களை சமன்படுத்தவே ,

“ காலையில் இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய் “ – என்ற பாடல் வழி கூறுகின்றது.

இதில் இஞ்சி வாயுவைக் ( வாதம் ) குறைக்கும்; சுக்கு கபத்தை குறைக்கும்; கடுக்காய் பித்தத்தை குறைக்கும்.

இது தவிர வயதிற்கேற்ப மனித உடலில், இக்குணங்கள் பொதுவாக பின்வருமாறு அமைகின்றன. சிறுவயதில் கபம் மேலோங்கி இருக்கும்; நடுவயதில் பித்தம் அதிகமாக இருக்கும்;முதுமையில் வாதம் அதிகமாக இருக்கும்.

இதனை ஒட்டியே சிறு வயதில் குழந்தைகள் அடிக்கடி சளி தொல்லையாலும், நடு வயதினர் பித்தம் தொடர்புடைய நோய்களாலும்,மூத்த வயதினர் வாத நோய்களாலும் பொதுவாக அவதிப்படுவதைக் காணலாம்.

எனவே இவற்றுக்கு ஏற்ப நமது உணவு முறையை அமைத்துக் கொள்ள வேண்டும்.

3. பசித்து புசித்தல் :

“துய்க்க துவர பசித்து ”- என்கின்றார் வள்ளுவர் ( குறள் எண் 944 ).எனவே நன்கு பசித்தபின் உண்ண வேண்டும்.இதுவே முன்னர் உண்ட உணவு நன்கு செரித்ததற்கான அறிகுறி ஆகும்.

மேலும் முன் சென்ற உணவு நன்கு செரித்த பின் உண்டால், உடலுக்கு மருந்தே வேண்டாம் என்கிறார் ( குறள் எண் 942 ).

4. செரிக்கும் அளவறிந்து உண்ணல் :

நமது உடலின் செறிக்கும் அளவறிந்து உண்ண வேண்டும்.இவ்வாறு உண்டால் நீண்ட நாள் வாழலாம் என்கிறார் வள்ளுவர் ( குறள் எண் 943 ).

மேலும் சரியான உணவை அளவோடு உண்டால் உடலுக்கு தீங்கில்லை என்கிறார் ( குறள் எண் 945 ).

5. நொறுங்கத் தின்றல் :

உணவை சிறிது சிறிதாக உமிழ்நீருடன் கலந்து, அதனை நன்கு மென்று பிறகு விழுங்க வேண்டும்.இதனையே நொறுங்கத் தின்றால் நூறு வயது என்றனர் நம் முன்னோர்கள்.வாயில் ஜீரணம் நடைபெறுவதை அன்றே உணர்ந்துள்ளனர்.

6. சரியான உணவு வகைகள் :

காய்கறிகள், பழங்கள், கீரைகள், சிறுதானியங்கள் போன்றவற்றை நம் முன்னோர்கள் உண்டு நீண்ட காலம் உடல் நலத்தோடு வாழ்ந்தனர்.இவற்றையே ஊட்டச்சத்து மதிப்பு ( Nutritional Value ) மிக்க உணவுகளாக அறிவியல் உலகம் அங்கீகரிக்கின்றது.ஆனால் இன்றைய குழந்தைகள் இவற்றை தொட்டுக் கூட பார்ப்பதில்லை என்பது வருத்தமான விஷயம்.

மேலும் நம் முன்னோர்கள் இயற்கை உரம் மற்றும் பூச்சி விரட்டிகளை ( கவனிக்கவும், பூச்சி கொல்லி அல்ல ) பயன்படுத்தி விளைவிக்கப்பட்ட இயற்கை உணவுகளையே ( Organic foods ) உண்டு நோயின்றி, நீண்ட நாட்கள் வாழ்ந்தனர்.

ஆனால் இன்று பெரும்பாலும் வேதியியல் உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தி விளைவிக்கப்பட்ட உணவுகளையே உண்டு வருகின்றோம்.இவை நம் உடலில் அன்றாடம் நடக்கும் பல கோடிகணக்கான Metabolism வேதிமாற்றங்களை நேரடியாக பாதிக்கின்றன.இதனால் பல்வேறு கொடிய நோய்களுக்கு ஆளாகி வருகின்றோம்.

மேற்சொன்ன ஆறும், இயற்கை சார்ந்த உணவு முறைகள் ஆகும்.இவற்றை கடைபிடிப்பதன் மூலம் நம் உடலின் Metabolism வேதிமாற்றங்கள் சிறப்பாக நடைபெறும்; நாம் பல நோய்களிலிருந்து விடுதலை பெறலாம்; நல்ல ஆரோக்கியத்தை பெறலாம்.மேலும் குழந்தைகளின் உடல் நலத்தையும் உறுதி செய்யலாம்.

சரி, இதற்கெல்லாம் என்ன ஆதாரம் ?.

மேற்சொன்னவற்றுள் சிலவற்றை அறிவியல் உலகம் கிட்டதட்ட ஏற்றுக்கொண்டுள்ளது.பிறவற்றுக்கு இதனை கடைபிடித்து பயனடைந்த நம் முன்னோர்களே சான்று. மேலும் இன்று, இதனை பகுதியளவாவது கடைபிடித்து பயன் பெற்றுவரும் சில சமகால மனிதர்களே இதற்கு கூடுதல் சாட்சி ஆகும்.

ஆனால், பரபரப்பான இன்றைய வாழ்வில் இதெல்லாம் சாத்தியமா ?. வேறு வழியில்லை.சிறிது சிறிதாகவாவது முயல வேண்டும். ஏனென்றால் இன்றைய குழந்தைகளின் உணவுப்பழக்கம் Artificially Flavoured foods and drinks, processed foods என்று மோசமான நிலைக்கு சென்று கொண்டிருக்கின்றது.இது தவிர்க்கப்பட வேண்டும்.மக்களிடம் விழிப்புணர்வு அதிகரித்து,பரவலாக ஒத்த கருத்துடைய மனநிலை ஏற்படும்போது இதன் சாத்தியக்கூறுகள் அதிகரிக்கும்.

இதனை தயவு செய்து அனைவருக்கும் Share செய்யவும். நன்றி.

 

931315_487920404609389_1710676416_n.jpg


எளிய இய‌ற்கை வைத்தியம்

1. சர்க்கரை வியாதிக்கு தினமும் காலையில் வெறும் வயிற்றில் சிறிது வெந்தயத்தை வாயில் போட்டு விழுங்க வேண்டும்.

சர்க்கரை வியாதிக்கு முருங்கை கீரை கண் கண்ட மருந்து பாகற்காயை கழுவி, வட்டவட்டமாக நறுக்கி விதையை நீக்கி, நிழலில் காய வைத்து, மிக்ஸியில் அடித்து பொடியாக்கி பாட்டிலில் அடைத்து வைத்துக் கொண்டு தினமும் 1 தேக்கரண்டி சாப்பிட்டால் குணமாகும்.

குறிஞ்சாக் கீரையும் சர்க்கரை வியாதிக்கு நல்ல மருந்தாகும்.

2. மாங்கொட்டையின் பருப்பை உலர்த்தி, நன்றாகப் பொடி செய்து, தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால், வயிற்றிலுள்ள நாக்குப் பூச்சிகள் மலத்துடன் வெளி வந்து விடும். மூல நோயும் குணமாகும். மாத விடாய் அதிகமாக போவதும் நின்று விடும். கொசுக்களை விரட்ட மாம்பூக்களைப் பொடி செய்து, சாம்பிராணி போல புகைபோட்டால் கொசுக்கள் ஓடி விடும்.

3. இஞ்சியை கற்கண்டுடன் சேர்த்துச் சாப்பிடுவதால் சர்க்கரை நோய் கட்டுப்படும். இஞ்சி சாற்றையும் வெங்காயச் சாற்றையும் சமமாகக் கலந்து குடித்தால் வாந்தி நிற்கும். அஜீரணத்துக் இஞ்சி சாற்றை தொப்புளைச் சுற்றித் தடவலாம்.

4. கொத்துமல்லி தழையை அரைத்து சர்க்கரை போட்டு பால் சேர்த்து தினம் 100 கிராம் சாப்பிட மன நோய் நீங்கும். மல்லி நீரால் கண்களைக் கழுவ கண்கள் பளிச்சிடும். தாகத்தைத் தணிக்கும். பல் வலி, ஈறு வீக்கம் ஆகியவை கட்டுப்படும். இதன் விதை எண்ணெய் சுளுக்கு நீக்கியாகப் பயன்படும்.

5. பூண்டைச் சேர்த்து எந்த வகை உணவு சாப்பிட்டாலும் வாயுத் தொல்லை, வயிற்று உப்புசம் குறையும். இதனை தேங்காய் எண்ணெய் விட்டு காய்ச்சி, அதைத் தேய்த்தால் வாத வலி போகும். பூண்டுத் தழையை உப்பிட்டு அரைத்து சாற்றைப் பிழிந்து சுளுக்குக்குத் தடவ, சுளுக்கு விட்டுப் போகும்.

6. சிரங்கு தொல்லையா?

சிரங்கு : 100மி.லி., தேங்காய் எண்ணெய்யில் 5 வெற்றிலைகளைப் போட்டு நன்றாகக் காய்ச்சி அந்த எண்ணெயைத் தடவ நல்ல குணம் கிடைக்கும்.

42. தினமும் ஒரு கைப்பிடி அளவு கொத்த மல்லிக்கீரையை மண்ணில்லாமல் சுத்தம் செய்து, பச்சையாகவே மென்று சாப்பிட்டு வர கண் பார்வை தெளிவாகும். பித்தமும் நீங்கும்.

7. இரவின் பூவன் பழத்தை செங்குத்து வாக்கில் இரண்டாகப் பிளந்து, அதில் சீரகத்தை வைத்து மூடி வைத்து, அதிகாலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர மூலவியாதி முச்சு காட்டாது.

8. சீரகத்தை நல்லெண்ணையில் காய்ச்சி தலையில் தேய்த்து குளித்து வந்தால், தலை பாரம், பித்த மயக்கம் நீங்கும்.

9. வாழைப்பூவை இடித்து சாறு பிழிந்து பசுமோர் கலந்து அருந்திவர வயிற்று வலி தீரும்

10. முக சுருக்கம் நீங்க பச்சைக் கற்பூரத்துடன் புதினா இலைச் சாறை கலந்து மூட்டு வலி உள்ள இடத்தில் தடவி வர மூட்டு வலி குணமாகும்.

11. தோலில் உள்ள கரும்புள்ளிகளின் மேல் தக்காளிப் பழத்தைத் துண்டாக்கிக் தேயுங்கள். அதில் உள்ள அமிலம் கரும்புள்ளிகளைக் கரைத்துவிடும்.

12. கருவுற்ற மகளிர் நெல்லிக்காய், முருங்கைக் கீரை, முள்ளங்கி ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொண்டால் கை, கால், முகம், பாதம் வீக்கம் வராது. குழந்தைப் பேறு எளிதாக அமையும்.

13. தக்காளி, கோஸ், கேரட் ஆகியவற்றை சாப்பிட்டால் முக சுருக்கம் நீங்கும்.

14. கசகசாவை நைசாக அரைத்து குழந்தையின் தொப்புள் சுற்றி தடவினால் குழந்தையின் அழுகை நின்றுவிடும்.

15. மெலிந்த உடல் பருக்க

1. கற்கண்டை வெண்ணெயுடன் சேர்த்து நாற்பது நாட்கள் சாப்பிட மெலிந்த உடல் பருக்கும்.

2.தொண்டை கட்டிக்கொண்டு குரல் எழாமல் சிரமப்படுபவர்கள் கற்பூர வல்லியை சாறெடுத்து பனங்கற்கண்டு சேர்த்துப் பருக சரியாகும்.

3. வெள்ளை வெங்காயத்தை நெய்யில் வதக்கி, பனங்கற்கண்டு சேர்த்து காலை, மாலை ஒரு தேக் கரண்டி சாப்பிட, வயிற்றின் சுற்றளவு குறையும்.

4. மிளகாயுடன் பத்து துளசி இலைகளை சேர்த்து சாப்பிட சளி போகும்.

5. சுக்கை நீர் விட்டு அரைத்து கொதிக்கவைத்து மூட்டுகளில் தடவ மூட்டுவலி குறையும்.

6. துவரம் பருப்பை வேகவைத்த தண்ணீரை டம்ளர் எடுத்து, சிறிது வெல்லம் சேர்த்து ஏழு நாட்கள் சாப்பிட பூச்சிகள் வெளியேறும்.

7. கருணைக் கிழங்கை தொடர்ந்து வாரம் இரு முறை உணவுடன் சேர்த்து சாப்பிட மூலம் தீரும்.

15. இஞ்சி எலுமிச்சை சாற்றை தண்ணிரில் கலந்து காலையில் அருந்த குணமாகும். எலுமிச்சை சாறைத் தினமும் பருகி வந்தால் காலரா அண்டாது.

1001166_568642496491403_1493570015_n.jpg


Top 7 Natural Antibiotics or herbs with Antibiotic Property

Discovery of Penicillin by Sir Alexander Fleming is one of the most important or significant happening in Medical Science. Introduction of Antibiotics led modern medicine to establish and accept around the globe valued for its efficacy in curing any infection. Antibiotics can destroy Staphylococcus and other noxious bacteria and microbes but its overuse is now becoming a threat to mankind. Abuse of Antibiotics has made the organisms more resistant, demanding for higher and higher doses each time. Antibiotics kills the harmful bacteria indiscriminately attacks the good ones too which keep the body functions and systems normal. Doctors in order to preserve these healthy bacteria prescribe medicines again and thus side effects becomes dangerous.

In nature, we have highly effective herbs that are true gift of mother nature with Antibiotic properties. These are not only effective but devoid of any side effects. Including them in our diet and food can protect us from number of infections and with their deep healing values we can be healthy always. A list of top 7 such Antibiotic herbs are listed below :

Garlic :

A natural antibiotic which contains compounds like potassium, germanium that helps to preserve good health. Sulphur compound ‘allicin’ is the natural antibiotic agent present in garlic. It acts against bacteria, viruses and fungus. According to studies, garlic has 20 anti viral and 40 anti bacterial components. Enriched with Antioxidant and Antimicrobial properties, it kills harmful bacteria and improves immunity. Helpful in disinfection and treating wound infection. Excellent to treat digestion and respiratory ailments.

Turmeric :

Commonly used in Indian kitchen, soothes stomach. Enriched with natural anti bacterial and anti septic properties, it helps in management of cough, cold, sinusitis and other respiratory ailments. Applying turmeric paste on fresh wounds has always been a known traditional home remedy to all. Also Liver tonic, excellent blood purifier, Anti cancer and cleanses the uterus.

Ginger :

‘Gingerol’ present in ginger has antimicrobial properties. An old traditional folk medicine used in management of respiratory ailments, arthritis, Rheumatism , gastric problems, pain and cramps. Also has Anti cancer properties. Antibiotic/ Antibacterial action helps to eliminate micro organisms like E coli responsible for diseases like gastroenteritis and Helicobacter pylori that causes peptic ulcer. The antibiotic components also helps to maintain important intestinal flora.

Cardamom :

Rich source of ‘Cineol’, a natural antiseptic that kills bacteria causing bad breath or halitosis. This herb due to its antibiotic properties used in treatment of Caries and Peptic ulcer against H-pylori.

Onion :

Onion is very effective against many bacterial infections including Salmonella, E-coli, Bacillus subtilis etc due to its Anti- bacterial action. Externally used as disinfectant, Onion has Anthelmintic, Carminative, Anti Viral, Anti rheumatic, Anti inflammmatory, Vermifuge, Diuretic properties. Sulphur compounds and flavanoids in Onion provides Anti biotic effect.

Curry leaves :

Pharmacological study on this plant has revealed its anti microbial properties. In a study when 21 plants were screened for antibacterial activity against multi bacterial isolates, curry leaves showed maximum anti bacterial activity and strains of Staphylococcus epidermidis was significantly inhibited. Anti bacterial compound a monomeric protein, isolated from Curry leaves known as APC (Antioxidant proteins from Curry leaves) possess antibiotic properties against almost all human pathogen strains according to research done on this plant. Also possess Antioxidant, Cytotoxic, Anti diabetic, Antiulcer, Anti diarrhoeal properties. A very good Iron tonic and also helpful to manage raised cholesterol and triglyceride level.

Fenugreek :

High in amino acids, fiber, lysine, tryptophan etc, seeds and leaves possess supreme nutritional values. Seeds and leaves also have antibiotic activity against bacteria, fungi and parasites. Used in management of peptic ulcer and other bacterial, fungal and parasitic infections. Also helps to manage Inflammatory bowel disease, Colitis, Diabetes, Arthritis, menstrual problems and other ailments.

These wonder herbs are easily available and beneficial for our body too. They have no side effects unlike modern antibiotics and can be used life long. So trust them and iuse them in your favourite foods and menu. Take care. Stay fit and Keep healthy.

for more health news pls like the page https://www.facebook.com/Siddhacom

Share this post


Link to post
Share on other sites
jdlivi    50

இன்று ஒரு தகவல்:- 10.06.2013

1) மூலிகையின் பெயர் -: முடக்கற்றான்.

2) வேறுபெயர்கள் -: முடக்கறுத்தான், முடர்குற்றான், மொடக்கொத்தான்.

3) தாவரப்பெயர் -: CARDIOSPERMUM HALICACABUM.

4) தாவரக்குடும்பம் -: SAPINDACEAE.

5) பயன் தரும் பாகங்கள் -: இலை, தண்டு, வேர் முதலியன.

6) தாவர அமைப்பு -: முடக்கற்றான் கொடிவகையைச் சேர்ந்தது. இது இந்தியாவிலும், இலங்கையிலும் அதிகமாகக் காணப்படுகிறது.குளிர்ந்த ஈரச்சத்துள்ள இடத்தில்தான் முடக்கற்றான் பயிராகும்.தோட்டங்கள், வீட்டு வேலி இவைகளிலுள்ள பெரிய செடிகளின்மேல் படர்ந்து வளரும். உஷ்ண பிரதேசங்களில் முடக்கற்றான் கொடியைப் பார்க்கமுடியாது. வளமான இடங்களில் இந்தக் கொடிசற்று பெரிய இலைகளுடன் செழிப்பாகப் படரும். இந்தக் கொடியின்தண்டும் இலைக் காம்பும் மெல்லியதாகவே இருக்கும். இது ஏறுகொடியாக சுமார் 3.5 மீ. அளவு படரும்.

இதன் தண்டு, இலை, காம்பு எல்லாம் நல்ல பச்சை நிறமாகவே இருக்கும். இதன் பூ வெண்நிறமாக இருக்கும். இதன் காய் மூன்று பிரிவாகப் பிரிந்து உப்பலான மூன்று தனித் தனி அறைகளைக் கொண்டதாக இருக்கும். ஒவ்வோர் அறையிலும் ஒரு விதை வீதம் ஒரு காயில் மூன்று விதைகள் இருக்கும். காயைப் பறித்துத் தோலை உறித்தால் உள்ளே மிளகளவு, பச்சை நிறமான விதைகள் இருக்கும். அதன் ஒரு பகுதியில் நிலாப்பிறைபோல் ஒரு வெண்ணிறக் குறி தோன்றும்.

இதன் காய் முற்றிய பின் பழுப்பு நிரமாக மாறிக் காய்து விடும். இதை மற்ற கீரைகளுடன் சேர்த்துச் சமைத்துச் சாப்பிடலாம்.இதை தனியாக மருந்தாகவும் பயன் படுத்தலாம்.

இதன் இலையில் அடங்கியுள்ள சத்துக்கள் -: ஈரப்பதம்-83.3, புரதச்சத்து-4.7, கொழுப்புச் சத்து 0.6, மாவு சத்து 9.1, தாது சத்து 2.3, சக்தி-6 கலோரி முதலியவை உள்ளது. விதை மூலம் இனப்பெருக்கம் செய்யப் படுகிறது.

முடக்கு+அறுத்தான்=முடக்கற்றான். இது மூட்டுக்களை முடக்கி வைக்கும்மூட்டு வாத நோயை அகற்றுவதால் முடக்கற்றான்எனப் பெயர் பெற்றது.

குழந்தை பிரசவிக்கும் நேரத்தில் ஒரு சில பெண்கள் ரொம்ப கஷ்டப் படுவார்கள் இவர்கள் வேதனையைக் குறைத்து, சுகமாகசுலபமாக பிரசவிக்கச் செய்ய இந்த முடக்கற்றான் நன்கு பயன்படுகிறது.

சுகப்பிரசவம் ஆக -: முடக்கற்றான் இலையைத் தேவையான அளவுகொண்டு வந்து அதைக் காரமில்லாத அம்மியில் வைத்து மை போல்அரைத்து, பிரசவிக்கக் கஷ்டப்படும் பெண்களின் அடிவயிற்றில் கனமாகப் பூசிவிட்டால் கால் மணி நேரத்திற்குள் சுகப் பிரசவம் ஏற்படும். கஷ்டமோ, களைப்போ தோன்றாது. மருத்துவமனை அருகிலில்லாத கிராமங்களில் உள்ள மருத்துவம் பார்க்கும் பெண்களும், பாட்டி மார்களும் இந்த முறையையே கையாண்டு வருகின்றனர். இது கை கண்ட முறையாகும்.

மலச்சிக்கல், வாயு, வாதம், குணமாக -: மூன்று நாட்களுக்கு ஒருமுறை முடக்கற்றான் இரசம் வைத்துச் சாப்பிட்டு வந்தால்உடலிலுள்ள வாய்வு கலைந்து வெளியேறி விடும். வாய்வு, வாதம்,மலர்ச்சிக்கள் சம்பந்தப் பட்ட எல்லாக் கோளாறுகளும் நீங்கும்.

முடக்கற்றான் இரசம் தயாரிக்கும் முறை -: ஒரு கை பிடியளவுமுடக்கற்றான் இலை, காம்பு, தண்டு இவைகளை ஒரு சட்டியில்போட்டு ஒரு டம்ளரளவு தண்ணீர் விட்டு, நன்றாகக் கொதிக்க வைத்து இறக்கி அந்த நீரை மட்டும் வடித்து, சாதாரண புளி இரசம் வைப்பது போல் அந்த நீரில் புளி கரைத்து, மிளகு, பூண்டு,சீரகம் சேர்த்து இரசம் தயாரிக்க வேண்டும்.

பாரிச வாய்வு குணமாக -: கைப்பிடியளவு முடக்கற்றான் இலையைக்கொண்டு வந்து நைத்து ஒரு சட்டியில் போட்டு இதே அளவு வேலிப்பருத்தி இலையையும், சூரத்து ஆவரையிலையையும் இத்துடன் சேர்த்துஇரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு ஒரு டம்ளராக வடிகட்டிக் காலைவேளையில் மட்டும் தொடர்ந்து மூன்று நாட்களுக்குக் கொடுத்து வந்தால் பாரிச வாய்வு குணமாகும். தேவையானால் மூன்று நாட்கள் இடைவெளிவிட்டு, மறுபடி 3 நாளாக மூன்று முறை கொடுத்து வந்தால், பாரிசவாய்வு பூரணமாகக் குணமாகும்.

சுக பேதிக்கு -: ஒரு கைப்பிடியளவு முடக்கற்றான் இலையை ஒருசட்டியில் போட்டு, வெள்ளைப் பூண்டு பற்களில் ஐந்து நைத்துஇதில் போட்டு அரைது தேக்கரண்டி அளவு மிளகை ஒன்றிரண்டாகஉடைத்து அதையும் சேர்த்து, இரண்டு டம்ளர் அளவு தண்ணீர்விட்டு அடுப்பில் வைத்து ஒரு டம்ளர் அளவிற்கு சுண்டக் காய்ச்சியகஷாயத்தை வடிகட்டி விடியற் காலையில் சாப்பிட்டு விட்டால் பலமுறை பேதியாகும். அதிகமான பேதியினால் ஒரு எலுமச்சப் பழசாறு சாப்பிட்டால் பேதி உடனே நின்று விடும். இரசம் சாதம்மட்டும் சாப்பிடலாம். இரவு தேவையான பதார்த்தம் சாப்பிடலாம்.

முடக்கற்றான் இலைகளை எண்ணெயில் இட்டுக் காச்சி மூட்டு வலிகளுக்குப் பூசினால் நீங்கும். இதன் இலையை இடித்துப் பிழிந்துஎடுத்த சாற்றினை இரண்டு துளிகள் காதில் விட்டு வர காது வலி,காதில் இருந்து சீழ் வடிவது முதலியவை நீங்கும்.

முடக்கற்றான் இலையையும், வேரையும் குடி நீரிட்டு மூன்று வேளையாக அறுபது மில்லி வீதம் தொடர்ந்து அருந்திவர நாள்பட்டஇருமல் குணமாகும்.

சில பெண்களுக்கு மாதந்தோறும் ஒழுங்காக மாதவிலக்கு ஏற்படாதுஇவர்கள் முடக்கற்றான் இலையை வதக்கி அடி வயிற்றில் கட்டிவந்தால் மாத விலக்கு ஒழுங்காக வரும்.

முடக்கற்றான் இலையை உலர்த்தி எடுத்த பொடியுடன், சித்திரமூல வேர் பட்டை, கரிய போளம் இவைகளையும் பொடி செய்துகுறிப் பிட்ட அளவு மூன்று நாள் அருந்தி வர மாதவிலக்கு ஒழுங்காக வரும்.

முடக்கற்றான் கொடி மல மிளக்கி செய்கை உடையது. இதன் கொடியைமுறைப்படி குடிநீரிட்டு அத்துடன் ஆமணக்கு எண்ணெய் சேர்த்துஅருந்த மலத்தைக் கழிக்கச் செய்யும்.

முடக்கற்றான் வேரை உலர்த்தி பின்னர் முறைப் படி குடி நீர் அருந்திவர நாள் பட்ட மூல நோய் குணமாகும்.

Share this post


Link to post
Share on other sites
jdlivi    50

 

தர்ப்பைப் புல்லின் மருத்துவ குணங்கள்:-

நம்நாட்டில் நவக்கிரகக் கோவில்கள் உள்ளன. அவற்றில் கேது கிரகத்துக்குத் தனியாக ஒரு விக்கிரகம் அமைத்து அதற்கு பூஜை செய்த பின் தர்ப்பைப் புல்லைத் தொட்டு வணங்கும் பழக்கம் இன்றும் கூட இந்து சமுதாய மக்களிடம் காணப்படுகிறது.

தர்ப்பைப்புல் கேது கிரகத்தின் கதிர் வீச்சுகளை தன் உடல் முழுவதிலும் நிரப்பிக் கொண்டிருக்கும். அதைத்தான் மருத்துவகுணம் என வானவியல் மூலிகை சாஸ்திரம் கூறுகிறது.

பொதுவாக கேது கிரகம் மரணத்தை விளைவிக்கக் கூடிய கிரகம் என்று சொல்லப்படுவதால் மரணத்தை உண்டாக்கும் அபாயகரமான நோய்களுக்கு சிகிச்சையளிக்க தர்ப்பைப் புல்லை மூலிகை மருத்துவர்கள் பயன்படுத்துகின்றார்கள்.

முக்கியமாக சிறுநீரக நோய்கள், சிறுநீரகக் கற்கள், பாம்புக்கடி விஷம், இரத்தம் கலந்த சிறுநீர், சிறுநீர்ப்பைத் தொற்று, புண், இரத்த வாந்தி, காயங்கள், இரத்த மூலம், அளவு கடந்த மாதவிடாய் போக்கு, வெள்ளைப்பாடு போன்ற நோய்களில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன.

*தர்ப்பைப் புல் உஷ்ணத்தை அகற்றி உடலைக் குளுமை செய்கிறது.

*உடலில் தாய்ப்பாலை அதிக அளவு சுரக்கச் செய்கிறது.

*சிறுநீரை அதிக அளவில் பெருக்கச் செய்கிறது.

*பாம்புக்கடி விஷத்தை அகற்றுகிறது.

*வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்று தோஷங்களை நீக்கிச் சுத்தம் செய்கிறது.

*சிறுநீரகக் கற்களைச் கரைக்கிறது. இரத்தத்தில் தேங்கும் யூரியா, கிரியாட்டினின் கழிவுப் பொருட்களை அகற்றுகிறது.

*உடல் எடையைக் குறைக்கவும் பயன்படுகிறது.

*ஆஸ்துமாவுக்கு நல்ல மருந்தாக அமைகிறது.

6485_569000426455610_947510_n.jpg

 

 

செம்பருத்திப் பூவிலும் மருத்துவகுணம் - தாவரவியல் ஆராய்ச்சியாளர்கள் தரும் விளக்கம்!

மருத்துவ குணமுள்ள செம்பருத்தி பூவின் நிறம் மற்றும் அழகில் மயங்காதவர்களே இருக்க முடியாது. ஏராளமான நிறங்கள், ஒற்றை மற்றும் அடுக்கு செம்பருத்தி என பல வகைகள் உள்ளன. கண்ணை கவரும் இதன் சிவப்பு நிறத்தால் தோட்டத்தில் மற்ற செடிகளுக்கு இடையில் பளீரென அழகாக தோற்றமளிக்கும். வீட்டில் அழகுக்காக வளர்க்கப்படும் இதில் பல்வேறு மருத்துவ குணங்களும் இருப்பது பலருக்கு தெரிவதில்லை. செம்பருத்தி பூக்கள் மற்றும் இலைகள், தலைமுடி வளர்ச்சிக்கும் தலையில் பொடுகு உள்ளிட்ட பிரச்னைகளுக்கும் தீர்வாகும்.

தேங்காய் எண்ணையில் இதன் காய்ந்த மொட்டுக்களை போட்டு ஊற வைத்து தொடர்ந்து தடவி வந்தால் கூந்தலின் கருமை நிறம் பாதுகாக்கப்படும். இங்கிலாந்தை சேர்ந்த தாவரவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்த தகவல்கள் இவை. இதை நேரடியாகவோ மறைமுகமாகவோ உட்கொண்டால் கிடைக்கும் பலன் மற்றும் பயன்களை பட்டியலிட்டுள்ளனர்.

அதன் விபரம்: உணவில் செம்பருத்தி பூவை சேர்த்துக் கொள்வதால் சோர்வு நீங்கும். இதன் இலைகளை சேர்த்து கொதிக்க வைத்து தேநீராக அருந்தினால் ரத்த அழுத்தம் சீராக இருக்கும். உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். தொடர்ந்து இதை பயன்படுத்தும் போது ரத்தத்தில் உள்ள கொழுப்பு கரையும். அதிகப்படியான கொழுப்பு சேர்வதை தடுக்கும். உடலுக்கு குளிர்ச்சி அளிக்க வல்லது.

சருமத்தை பளபளப்பாக்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இந்த தாவரத்தின் அனைத்து பாகங்களும் மருத்துவ பயன்கள் கொண்டது. இயற்கையின் கொடை என்பது மட்டுமின்றி பக்க விளைவுகளும் பாதிப்புகளும் அற்றது என்று இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

 கலை செல்வி.
1002065_326532714145296_1076262757_n.jpg

 

 

கண்களில் ஏற்படும் கருவளையத்திற்கு சிறந்த இயற்கை வைத்தியம்!

ஒருவருடைய அழகை பிரதிபலிப்பது கண்களே. எப்போதும் சரும நிறத்தை விட கண்களே ஒருவரின் அழகை அதிகரித்து காட்டும். பல காரணங்களுக்காக கண்களில் சுற்றி கருவளையமும் வீக்கமும் ஏற்படும். அதில் ஹார்மோன் மாற்றங்கள், பலதரப்பட்ட அலர்ஜிகள், நஞ்சுக்கள், தூசிகள், தண்ணீர் தேங்குதல் போன்ற காரணங்களால் கண்கள் சோர்வாக ஆகலாம்.

அதனால் முகமும் கலையிழந்து போகும். மேலும் நம்மில் பல பேர் தூக்கத்தை இழப்பதால் மற்றும் போதிய தூக்கம் இல்லாததால், கண்களை சுற்றி கருவளையம் ஏற்படும். தூக்கமே கண்களில் ஏற்படும் கருவளையத்திற்கும், வீக்கத்திற்கும் சிறந்த இயற்கை வைத்தியமாகும்.

மேலும் கருவளையத்தை போக்க எளிய முறையில் சில இயற்கை வழிமுறைகள் உள்ளன. அவை என்னவென்று பார்க்கலாம்.

கண்ணில் வரும் கருவளையங்களுக்கு ஒரு மிகச் சிறந்த மருந்தாக விளங்குவது வெள்ளரிக்காய்கள். வெள்ளரிக்காய்களில் உள்ள அதிகமான நீர்ச்சத்து கண்களை சுற்றியுள்ள கருவளையத்திற்குண எதிராக இயற்கை பாதுகாவலாக விளங்கும்.

இது கண் கருவளையத்தை படிப்படியாக குறைத்து முகத்திற்குப் பொலிவைக் கொடுக்கும். அதிலும் ஓய்வெடுக்கும் வேளையில், தலையை பின்னால் நன்கு சாய்த்து, நல்ல தடிமனான வெள்ளரித் துண்டுக்களை எடுத்து, கண்களின் மேல் வைத்துக் கொள்ள வேண்டும். அதுவும் இந்த துண்டுகள் வெப்பம் ஆகும் வரை கண்களின் மேலே அது இருக்கவும் வேண்டும்.

குளிர்ந்த ஸ்ட்ராபெர்ரியில் அதிக அளவு ஆல்ஃபா- ஹைட்ராக்ஸி உள்ளதால், அவை கண்களின் கருவளையங்களை குணப்படுத்த பெரிதும் உதவும். இயற்கை பொருளான இந்த ஆல்ஃபா- ஹைட்ராக்ஸி சருமத்தை மென்மையாகவும், பளபளப்பாகவும், இளமையாகவும் வைக்க உதவும்.

அதனால் தான் முகத்திற்கு தடவும் விலை உயர்ந்த பல க்ரீம்களில் இந்த ஆல்ஃபா- ஹைட்ராக்ஸி கலக்கப்பட்டிருக்கிறது. ஆகவே கண்களின் கருவளையம் நீங்கி, கண்கள் ஜொலிக்க செய்ய வேண்டியதெல்லாம், குளிர்ந்த பெரிய அளவிலான ஸ்ட்ராபெர்ரியின் தோல்களை நீக்கி, 3 மி.மீ தடிமானத்தில் துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.

பின் ஓய்வெடுக்கும் வேளையில், இந்த துண்டுகளை கண்களின் மேல் சில நிமிடம் வைத்து விட்டு, பிறகு முகத்தை கழுவுங்கள். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் படிப்படியாக கருவளையம் மறைவதை காணலாம்

கலை செல்வி.
992872_326534510811783_1518873683_n.jpg

 

Share this post


Link to post
Share on other sites
jdlivi    50

இன்று ஒரு தகவல்:- 11.06.2013.

1. மூலிகையின் பெயர் -: செம்பருத்தி

2. வேறுபெயர்கள்- செம்பரத்தை, ஷுப்ளவர், சீன ஹைபிஸ்கஸ்.

3. தாவரப்பெயர்- HIBISCUS ROSASINENSIS.

4. குடும்பம்- MALVACEAE.

5. வளரும் தன்மை-எல்லா வகை இடங்களிலும்
நன்றாக வளரும். இது சீன நாட்டிலிருந்து வரப்பெற்ற செம் பருத்தி. அழகுச்செடி எனப் பல தோட்டங்களில் இந்தியா முழுவதிலும் பயிறடப்படுகிறது இது 5-10 அடி உயரம் வரை வளரவல்லது. இதன் இலைகள் பசுமையாகவும் ஓரங்களில் அரிவாள் போன்ற பற்களுடனும் இருக்கும். செம்பரத்தையின் மொட்டுக்கள் சிவப்பு நிறமாக நீண்டு இருக்கும். விரிந்ததும் ஐந்து இதழ்களை உடையதாகவும் நடுவில் குழல் போன்று மகரந்த தாளையும் கொண்டிருக்கும். இதில் பல வகைகள் உள்ளன. பொதுவாகப் பல அடுக்குகளையுடைய அடுக்குச் செம்பருத்தியையும் காணலாம். துவர்ப்பும் பசையும் உடைய பூவில் தங்கச்சத்து உள்ளது. இதை இனப்பெருக்கம் செய்ய நன்றாக முதிர்ச்சி அடைந்த அரை அடி நீளமுள்ள தண்டுக் குச்சிகளை நாற்றங்காலில் நட்டு வேர் பிடிக்கச்செய்ய வேண்டும் 90 நாட்களில் குச்சிகள் வேர்பிடித்துவிடும்.

6. வகைகள் - கோ 1, திலகம் சிகப்பு நிறப்பூக்கள், கோ 2, புன்னகை, மஞ்சள் நிறப்பூக்கள் , அடி பாகத்தில் சிகப்பு நிறங்கொண்ட மஞ்சள் நிறப்
பூக்கள்.

7. பயன்தரும் பாகங்கள் - பூக்கள், இலைகள், பட்டை மற்றும் வேர்கள்.

8. பயன்கள் - செம்பருத்திப்பூ பூஜைக்கு மலராகப்பயன் படுகிறது. சிவந்த நிறமுடைய பூவே சிறந்த பலன் உடையது. இது வெப்பு அகற்றிக் காமம்
பெருக்கும் செய்கையுடையது. கூந்தல் வளர்ச்சிக்கு மூலிகை ஷாம்பு தயார்செய்ய பயன்படுகிறது. இது கருப்பை கோளறுகள் உதிரப்போக்கு , இருதய நோய் ரத்தஅழுத்த நோய் குணமடையப் பயன்படும்.

அழலை, இரத்தபித்தம், தாகம்,பேதி, வயிற்றுக் கடுப்பு, விந்துவை நீற்றும், மேகம், விசுசி வேட்டை போகும். தேகவாரேக்கியம், விழியொளியும் உண்டாகும்.

செம்பையிலைக்கட்டி, ஜந்நி, தினவு, துடைவாழை, நீர்ரேற்றம், பிளவை, பீநாசங்கள், புண்புரை, மேகம், வாதகபம், விப்புருதி, விரணம், வீக்கம், வெடித்த புண், புரைகளும் போகும்.

பூவை நீரிட்டுக்காச்சி வடிகட்டிப்பாலும் சர்கரையும் சேர்த்து காலை மாலை பருக மார்புவலி, இதய பலவீனம் தீரும். காப்பி, டீ புகையிலை நீக்க வேண்டும்.

பூவை உலர்த்திப் பொடித்துச் சம எடை மருதம் பட்டைத்தூள் கலந்து பாலில் காலை மாலை பருக இதயபலவீனம் தீரும்.

பூவை நல்லெண்ணையில் காச்சி தடவ முடி வளரும். செம்பரத்தை வேர்ப்பட்டை, இலைந்தை மரப்பட்டை மாதுளம் பட்டை சம அளவு சூரணம் செய்து 4 சிட்டிகை காலை மாலை சாப்பிட பெரும் பாடு தீரும்.

செம்பரத்தம் பூ 500 கிராம் அம்மியில் நெகிழ அரைத்து அதில் ஒரு கிலோ சர்க்கரையைப் போதிய நீர்விட்டுக் கரைத்து வடிகட்டிக்கலந்து
சிறுதீயில் எரித்து குழம்புப் பதமாக்கி (செம்பரத்தை மண்ப்பாகு) வைத்துக்கொண்டு 15 மி.லி.யாகக் காலை மாலை சாப்பிட்டு வர உட் சூடு, நீரெருச்சல், உள்ளுறுப்புகளில் உள்ள புண், ஈரல் வீக்கம், நீர்கட்டு ஆகியவை தீரும்.

இந்தப்பூவின் கசாயத்துடன் மான் கொம்பு பற்பம் ஒரு கிராம் அளவு சேர்த்து 10-20 நாள் சாப்பிட இதயத்துடிப்பு ஒழுங்கு படும். படபடப்பு
இருக்காது. குருதி தூய்மையாகும். குருதி மிகுதியாக உற்பத்தியாகும். பாரிச வாய்வும் குணமாகும். இதன் மகரந்தக் காம்பு உலர்திய தூள் 5 கிராம் பாலில் சாப்பிட மலடு நீங்கும்.

தஙகச்சத்து இப்பூவில் இருப்பதால் தாதுவிருத்திக்கு மிகவும் சிறந்ததாகும். நாளும் 10 பூவினை மென்று தின்று பால்அருந்தினால் நாற்பது நாளில் தாதுவிருத்தி ஏற்படும். நீர்த்துப்போன விந்து கெட்டி
படும், ஆண்மை எழுச்சி பெறும். உலர்த்திய பூசூரணத்துடன் முருங்கைப்பூ அல்லது விதை உலர்த்திய தூளும் சேர்த்துச்சாப்பிட்டு வந்தால் ஆண்மை குறைபாடு நீங்கும் .............. இன்பம் நீடிக்கும்.

 

601013_344321555695313_1770276830_n.jpg


கீழாநெல்லி
=============
இது வெப்பமண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடியினத்தை சேர்ந்ததுஆகும். இந்தியாவின் எல்லா பகுதிகளிலும் காணப்படுகிறது. சுமார் ஒரு அடி உயரம் வரை வளரும் தன்மைஉடையது. இதன் இலையின் அடிக்காம்பில் வரிசையாக காய்கள் காய்ப்பதால் கீழ்காய்நெல்லி என தமிழர் பெயரிட்டு அழைத்தனர். பேச்சு வழக்கில் கீழாநெல்லி, கீழ்வாய் நெல்லி, கீட்காநெல்லி எனவும் அழைக்கின்றனர்.

தொன்றுதொட்டே தமிழர் மருத்துவத்தில், மஞ்சள்காமாலை நோய்க்கு இம்மூலிகையை பயன்படுத்தி வந்துள்ளனர் என்பதனை இன்றும் கிராமத்து மக்களின் வாய்ச் சொல்லிலும், பயன்படுத்துதலிலுமிருந்து தெரிந்துகொள்ள முடிகிறது.

இந்தியாவில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுகூடங்களில் இம்மூலிகை பல்வேறு விதங்களில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

தாவரவியல் பெயர்: பைலாந்தஸ் அமாரஸ்
குடும்பம்: யூஃபோர்பியேசியே

கீழாநெல்லியானது ஒவ்வொரு மொழியிலும் கீழ்கண்டவாறு அழைக்கப்படுகிறது.

இந்தி: ஜராமலா, நிரூர், ஜங்லி யாம்பலி
வங்காளம்: புய்யாம்லா, சதாஹஸிர்மனி
குஜராத்தி: போன்யா அன்மலி
கன்னடம்: கிலநெல்லிக்கிடா, நெலநெல்லி
தமிழ்: கீழாநெல்லி, கீழ்க்காய்நெல்லி
மலையாளர்: கீழாநெல்லி, கீர்க்காநெல்லி
தெலுங்கு: நெல உசிரிகா
பீகார்: முய்யாரா, முலிகோஆ, காந்தாரா
ஓரியா: புய் ஆவோலா, பேடியான்லா.

சமஸ்கிருதம்: பூமியாம்லகி, தாமலகீ

இதன் முழுப்பகுதியும் நேரடியாகவே மருத்துவத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.

இதன் பயன்கள்:

மஞ்சள் காமாலை, மூத்திர நோய்கள், குடல்புண், தொண்டை நோய்கள், வயிற்றுவலி, வயிற் றோட்டம், முறைசுரம், அதிக உஷ்ணம், கண்நோய்கள், மாதவிடாய்க் கோளாறுகள், பசியின்மை, தோல் நோய்கள், தீராத அழுகல் புண்கள், புரைகள், வீக்கம், குருதிவடிதல் போன்ற பல நோய்களுக்கும் கீழாநெல்லியானது சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.

கீழ்காய்நெல்லியில் பைல் நிரூலின், நார் செக்குரினின், 4-methoxy secyrinine, நிர் பைலின், தேலிக் ஆஸிட், எல்லாஜிக் ஆசிட், ஹேலிக் ஆஸிட் போன்ற 50-க்கும் மேற்பட்ட வேதிப் பொருட்கள் இருப்பதனை அறிவியல் ஆய்வுகள் மூலம் கண்டறிந்துள்ளனர்.

நவீன மருந்தியல் ஆய்வுகளின் மூலம், கீழாநெல்லியானது காளான் நோய்கள், புற்றுநோய்கள், இறுக்க நோய்கள் போன்றவைகளுக்கு எதிராக செயல்படுவதை கண்டுபிடித்துள்ளனர். மேலும் இம்மூலிகைக்கு, இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்கும் தன்மையுடையதெனவும் கல்லீரலை பாதுகாக்கும் தன்மையுடையதெனவும் பல்வேறு ஆய்வுகள் மூலம் தெளிவுபடுத்தி உள்ளனர்.

கீழாநெல்லியில் காணப்படும் ஹைப்போ பைலாந்தின், பைலாந்தின் போன்ற வேதிப் பொருட்கள் மீனுக்கும் தவளைக்கும் மட்டும் நச்சுதன்மையை யூட்டுவதாக ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

ஆனால், இவ்வேதிப் பொருளானது, மனிதர்களுக்கும மற்ற விலங்குகளுக்கும எந்தவித நச்சுத்தன்மையையும், பக்க விளைவுகளையும் ஏற்படுத்துவது இல்லை எனவும் வெளிப்படுத்தி உள்ளனர்.

உண்ணும் அளவு: சாறு 10-20 மி.லி. ஒரு நேரத்துக்கு பயன்படுத்தலாம். தூள் : 3-6 கிராம்.

பயன்படுத்தும் முறைகள்

1. கீழாநெல்லி சமூலம் - கரிசலாங்கண்ணி, தும்பை - சீரகம் - பொன்னாங்கண்ணி இவைகளை சம அளவு எடுத்து காய்ச்சிய பசும்பால் அல்லது தேங்காய்ப்பால் விட்டு நன்றாக அரைத்து புன்னைக்காய் அளவு காலை மாலை மேற்கண்ட பாலில் ஏதாவது ஒன்றில் 7 நாட்கள் கொடுக்க மஞ்சள் காமாலை நோய் தீரும்.

வயதிற்கேற்ப மருந்தின் அளவை குறைத்து சிறுபிள்ளைகளுக்கும் கொடுக்கலாம். மருந்து சாப்பிடும் காலங்களில் புளி, புகை, புகையிலை, காரம், கொழுப்பு நீக்கிய மோர்சாதம், பால் சாதம், சாப்பிடுவது நல்லது. உப்பு வறுத்து சேர்க்கவும்.

2. கீழ்காய் நெல்லி சமூலம் - சீரகம், மஞ்சள் காரைவேர்பட்டை மூன்றும் சமஅளவு எடுத்து நன்றாக அரைத்து பசும்பால் அல்லது தேங்காய் பால் 300 மி.லி. கலக்கி தினம் காலை மாலை குடிக்க மஞ்சள்காமாலை நோய் குணமாகும்.

3. கீழா நெல்லி சமூலம், பேரம்மான் பச்சரிசி, சிற்றம்மான் பச்சரிசி, கரிசலாங்கண்ணி, வல்லாரை, பொன்னாங்கண்ணி இவைகளை சமஅளவு எடுத்து நன்றாக அரைத்து 3 நாள் 6 நேரம் எருமைத் தயிரில் கலந்து கொடுக்க இரத்தக்காமாலை உடனே குணமாகும்.

4. கீழா நெல்லியும் - கரிசலாங்கண்ணியும் சமஅளவு சேர்த்து நெல்லிக்காயளவு பாலில் சாப்பிட்டுவர பாண்டு, சோகை, இரத்தக் குறைவு மாறும்.

5. மாதவிடாய் அளவுக்கு மீறி போய்க்கொண்டிருந்தால் கீழ்க்காய் நெல்லி, அத்திப் பட்டை, அசோகப்பட்டை, அரசம் பட்டை, நாவல் பட்டை இவைகளை சமஅளவாக எடுத்து நன்றாக தூள்செய்து வைத்துக் கொண்டு தினம் ஒரு கரண்டி வீதம் தேன், வெந்நீர், பால் ஏதாவது ஒன்றில் மாறிமாறி சாப்பிட்டு வர கர்ப்பசாய நோய்கள் அனைத்தும் மாறி வெள்ளைப்பாடும் தீரும்.

6. கீழ்காய் நெல்லியை நன்றாக அரைத்து சொறி சிரங்கு படைகளில் போட உடனே மாறும்.

7. கீழாநெல்லியும் மஞ்சளும் சேர்த்து உடலில் தேய்த்து சில நிமிடம் ஊறவிட்டு குளித்து வர தோல் நோய்கள் வராமல் தடுப்பதோடு வந்தநோய்கள் அனைத்தும் தீரும்.

8. கீழ்க்காய் நெல்லியை நன்றாக மென்று பல்துலக்கி வர பல்வலி என்பது பக்கத்திலும் அண்டாது.

9. கீழாநெல்லிப்பொடி, நெல்லிக்காய்பொடி, கரிசாலைப் பொடி மூன்றையும் சமஅளவு எடுத்து தேனில் உண்டுவர அடிக்கடி வரும் சளித் தொல்லை, இரத்தக்குறைவு, இரத்தசோகை மாறி எதிர்ப் பாற்றல் பெருகும்.

10. கீழ்க்காய்நெல்லிச்சாறு, இளநீர், நெல்லிக்காய் சாறு, கரிசலாங் கண்ணி சாறு, பொன்னாங்கண்ணி சாறு இவைகள் ஒருலிட்டர் வீதமும், எலுமிச்சம்பழச்சாறு அரை லிட்டரும், பசும்பால் 5லிட்டரும், தூய நல்லெண்ணெய் (அ) தேங்காய் எண்ணெய் 5 லிட்டரும், மதுரம், கொட்டம், நற்சீரகம், மாயக்காய், கிராம்பு, ஏலம், நற்சந்தனம், வலம்புரி, சடமாஞ்சில் ஆகியவை வகைக்கு 40 கிராம் வீதம் வாங்கி, நன்றாக இடித்து பசும்பால் விட்டு அரைத்து சாறுகள், எண்ணெய், பால் எல்லாவற்றையும் எண்ணெய்ச் சட்டியில் விட்டு அரைத்த மருந்தையும் சேர்த்து, சிறுதீயாக எரித்து மருந்து முதிர் மெழுகு பருவம் வந்ததும் எண்ணெயை வடித்து கொள்ளவும்.

தினமும் இதை தலையில் தேய்த்து தண்ணீரில் குளித்து வந்தால் கண்நோய்கள், பித்த நோய்கள், மேக நோய்கள், மேக உஷ்ணம், வறட்சை, கணை, பெரும்பாடு, காமாலை நோய்கள் தீரும். மஞ்சள் காமாலை நோயாளிக்கு இது சிறந்த மருந்தாகும்.

(நன்றி : புதிய தென்றல் ஆகஸ்ட் 2007)

Share this post


Link to post
Share on other sites
jdlivi    50
இம்மரத்தை ஒழிப்பதற்கு என்று ஒரு பெரிய இயக்கம் தொடங்கினால் என்ன ?

தயவுசெய்து இதனை பகிருங்கள் by World Wide Tamil People

வறட்சி மாவட்டங்களாக உண்டாக்கி கொண்டு இருக்கும் காட்டு காட்டுக்கருவேல மரம் (வேலிக்காத்தான்) பற்றிய தகவல் !!சிந்திங்கள் !! செயல்படுங்கள் !! ( must read )
பரவிய வரலாறு:இந்த வேலிமுள் செடியானது தென் அமெரிக்காவின் மேற்க்குகடலோரம் பாலைநிலங்களில் வளரும்மரமாகும். ஏகாதிபத்திய காலத்தில் போர்த்துகீசியர்களால்உலகமெங்கும் கொண்டு செல்லப்பட்டது. 1828 ஆம் பரவஆரம்பித்து இந்த மரம் 1915 ஆம் ஆண்டுஆஸ்திரேலியா வழியாக இந்தியாவிற்குள் கொண்டுவரப்பட்டு பின்னர் கிழக்கு ஆப்பிரிக்கநாடுகளுக்கு பரப்பப்பட்டது. இன்று உலகம்முழுவதுமுள்ள மிதமான வெப்ப, மற்றும் வெப்பமானவறண்ட பிரதேசங்களில் இதனை காண முடியும். இந்தமரம் மிகவும் வறண்ட சூழலையும் தாக்குபிடித்துவளரக்கூடியது. கடுமையான வெயில் காலத்தில்இலைகளை சுருட்டி நீர்போக்கினை தடுத்து உயிர்வைத்திருக்கும். சிறிது மழை கிடைத்தால் போதும் சட்டென வளரும். நீர் தேங்கி இருக்கும் நிலத்தில்வைத்தாலும் அதனையும் சமாளித்து உயிர்வாழும்.மிதமான நீர் மட்டும் வெப்ப நிலையுள்ள சூழல்கிடைத்தால் அவ்வுளவுதான், புற்றீசல் போல புழுத்துவிடும்.
ராமநாதபுரம், விருதுநகர் போன்ற வறட்சியை பிரதானமாக கொண்ட மாவட்டங்களில், இந்த மரங்கள் அதிகமாக இருக்கின்றன. எந்த வறட்சியிலும் இந்த மரங்கள் வாடுவதில்லை. நிலத்தின் அடி ஆழத்தில் இருக்கும் நிலத்தடி நீரே இல்லை என்றால் கூட இது கவலைப்படாது. காற்றில் இருக்கும் ஈரப்பதத்தை உறிஞ்சி உயிர்வாழும் ஆற்றல் இந்த மரத்திற்கு உண்டு.
தனது சக மனிதர்களை அடித்து உதைத்து அவனிடம் இருக்கும் பொருட்களை பிடுங்கி, தான் மட்டும் சுகமாக வாழும் மனிதனை ரவுடி என்கிறோம். இந்த ரவுடி தன்னைத்தவிர வேறு யாரையும் தலையெடுக்க விடமாட்டான்.

மனிதர்களில் மட்டுமல்ல, தாவரங்களிலும் இப்படிப்பட்ட ரவுடிகள் உண்டு. இதுபோன்ற தாவரங்களைத் தப்பித்தவறிக் கூட வளர்த்துவிடாதீர்கள் என்கிறது அமெரிக்க தாவரவியல் பூங்கா. வளர்க்கக் கூடாத நச்சு மரங்கள் என்று தனிப்பட்டியலே வெளியிட்டுள்ளது. அதில் முன்னணியில் இருப்பது முள்மரம் எனப்படும் காட்டுக்கருவேல மரம் (வேலிக்காத்தான்).

இதனால் காற்று மண்டலம் வறண்டு இந்தமரம் இருக்கும் பகுதிகளில் வறட்சி தாண்டவமாடும். இது வளரும் நிலப்பகுதிகளில் வேறு எந்த தாவரமும் வளராது. நிலத்தடிநீரும் விஷத்தன்மையுடன் மாறிவிடுமாம்.

அத்தோடு நில்லாமல், இந்த மரம் தனது ஒரு கிலோமரத்தினை உற்பத்தி செய்ய 1400 லிட்டர் தண்ணீரைஉறிஞ்சிகிறது. தனக்கு சுற்றிலும் அடியிலும் எந்த ஒருமரமோ, செடியோ முளைக்காத வண்ணம் இதனதுநச்சுத்தன்மை விரவிக்கிடக்கிறது. காற்றின் ஈரமும்குறைந்து விடுகிறது. இது வளரும் பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கபடுவதாக தகவல்கள் உள்ளன. சூடான் நாடுஇதனை அழிக்க போராடி வருகிறது.

பயன்பாடு என்ற நோக்கில் பார்த்தால், நல்ல விறகு. கரி சுடும் அளவுக்கு மிக அருமையான விறகு. வணிகநோக்கில் இதனை தொழிலாக செய்ய முடியும். இதனது பழங்கள் நல்ல கால்நடை தீவனம். எப்படிப்பட்டநிலத்திலும் குறிப்பாக தண்ணீர் பற்றாக்குறையுள்ள பகுதிகளில் வளருவதால் இதன் பயன்பாடு விறகிற்கு அதிகமாகஇருக்கிறது.

எனினும் இதனது தீய விளைவுகளான மண்ணின் வளம் குறைக்கும் தன்மை, பிற பயிர்களை வளர விடாமல்செய்யும் தன்மை, நீர் அபரிதமாக உறிஞ்சும் தன்மை, நிலத்தை பாலைவனமாக்கும் தன்மை, போன்றவை மிகஅபாயமானவை. இதனை ஊக்குவிக்கும் விஞ்ஞானிகள் நீண்டகால நோக்கில் சுற்றுசூழலுக்கு எப்படிப்பட்டகேடு விளையும் என்று சிந்தித்தால் மிக நலமாக இருக்கும். நமது வாழ்வாதாரம் சிதையைய இந்த செடி மட்டுமேபோதும். நீரும், நிலமும் பாழ்பட்டுபோய் விடும்.

மண் வளத்தை காக்கவும், மழை பொழியவும் நாடெங்கும் மரங்களை நடவேண்டும் என்று ஒரு பக்கமும், மழை நீரை சேமித்து நிலத்தின் நீர்வளத்தை பெருக்குங்கள் என்றும் அரசாங்கம் பிரசாரம் செய்துகொண்டு வருகிறது. இதை விட மிக முக்கியம், சீமை கருவேலமரத்தை வேருடன் அகற்றுவது. முழுமுயற்சி எடுத்து இதை செய்தாலே போதும். நம் நாட்டின் மண் வளமும் நீர்வளமும் காக்கப்படும்.
பெரிய பாதிப்புகள்

நிலத்தடி நீர் வற்றி போய்விடுகின்றன.

புல் பூண்டு போன்றவற்றை வளரவிடுவதில்லை, இதனால் கால்நடைகளுக்கு உணவு கிடைப்பதில்லை.

மழை இல்லாத காலங்களில் காற்றில் இருக்கும் நீரையும் எடுத்துகொள்வதால் இவை விரவி இருக்கும் இடங்களில் வறட்சி தாண்டவமாடுகிறது.

இது வெளிவிடும் நச்சு காற்றை சுவாசிப்பதால் மனிதனின் மனநிலையும் பாதிப்படைவதாக ஆய்வுகள் சொல்கின்றன. கோபம்,முரட்டுத்தனம் மிகுந்த மனிதனாக மாற்றி விடுகிறது ! ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை போன்ற மாவட்டங்கள் மிகுந்த வறட்சியாக காணபடுவதற்கு இம்மரங்களே காரணம்…!!?

விறகிற்கு பயன்படும் என்று 1950 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின் போது விதைகள் கொண்டுவரப் பட்டு இங்கே தூவப்பட்டன., இதன் விஷத்தன்மை பற்றி முழுதாய் தெரியாமல்…! கடந்த அறுபது ஆண்டுகளில் இவை தமிழகம் முழுவதும் கிளைபடர்ந்து ஏறத்தாழ 25 சதவித விளைநிலங்களை ஆக்கிரமித்து பாழ்படுத்திக் கொண்டிருக்கின்றன. அரசும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் இதை வேருடன் களைய முயற்சி மேற்கொண்டாலும் இன்னும் முழு மூச்சுடன் நடைபெறவில்லை என கருதுகிறேன்.

விறகு தேவை என்பதற்காக வளருங்கள் ஆனால் வளர்க்க கூடிய இடம் நல்ல விளைநிலங்கள் அல்ல…..பாலைவனம் !!

அடுப்பெரிக்க ஏழைகள் எங்கே செல்வார்கள் என்று எதிர் கேள்வி எழும். அதற்கு மாற்று ஏற்பாடு செய்யபட வேண்டும்.

* இலவச கேஸ் அடுப்பு இணைப்பு அனைவருக்கும் கிடைக்கச் செய்யவேண்டும்.

* இயற்கை சாண எரிவாயு, காய்கறி கழிவுகளில் இருந்து வாயு உற்பத்தி போன்றவற்றை முழுவீச்சில் செயல்படுத்த முன் வர வேண்டும்.

விவசாய நிலங்கள் பாழ்பட்டு கிடக்கின்றன. சமைக்க உணவு பொருள் இல்லாமல் வெறும் விறகை வைத்து என்ன செய்ய ?!!

இன்றைய மக்கள் அடுப்பெரிக்க வேண்டும் என்பதற்காக நாளைய தலைமுறையினர் குடிநீருக்கே அவதிப்பட வேண்டுமா ??

கேரளாவில் தொழில்சாலைகளுக்கு விறகுக்கு என்ன செய்கிறார்கள் என்றால் மிக வருத்தமாக இருக்கும், ஆம் இங்கே இருந்து செல்கிறது.

அவர்கள் தங்கள் ஆறுகளை பாதுகாக்க அதில் மண் அள்ள மாட்டார்கள், ஆனால் நம் ஆறுகளில் இருந்து மண் அங்கே போகும்.

கருவேல மரங்களை முற்றிலும் அழித்துவிட்டார்கள், ஆனால் அவர்களின் தேவைகளுக்கு மரம் இங்கே இருந்து செல்லும்…!

சீமை கருவையை அழித்துவிட்டால் நம் நாடும் கேரளா போல் குளுமை பெறும்.
இம்மரத்தை பயன்படுத்தி தொழில் நடத்தும் தொழிற்சாலைகள் இதன் தீமையை புரிந்து கொண்டு பயன்படுத்துவதை நிறுத்தி மாற்று ஏற்பாடுகளை செய்துகொள்ள வேண்டும். அரசாங்கமும் இம்மரத்தை கொண்டு மேற்கொள்ளப்படும் தொழில்களை தடை செய்ய வேண்டும்…இதன் புகை கூட நமக்கு பகை !

நமது அரசாங்கம் இவ்விசயத்தை கருத்தில் கொண்டு துரித கதியில் செயல்திட்டம் வரையறுக்க வேண்டும்…மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளும், வேளாண்மை அமைப்புகளும் அதை நடைமுறைபடுத்த தீவிரமாக ஒத்துழைக்க வேண்டும். அதற்கு முன் மக்களுக்கு இம்மரத்தை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும்.

இதற்கு அதிக பொருட்செலவு ஆகும். விவசாயிகளால் செலவு செய்வது கடினம் எனவே அரசாங்கம்தான் முழு முயற்சி எடுக்க வேண்டும்.மரம் வளர்க்க, மழை நீர் சேகரிப்பு போன்றவற்றிற்கு பணம் செலவாகிறது…..ஆனால் இப்போது மற்ற எல்லாவற்றையும் விட மிக மிக முக்கியம் இந்த மரத்தை வெட்டுவது என்பதை மனதில் கொள்ளவேண்டும்.

ஒருவேளை இம்மரத்தை முற்றிலும் நாம் ஒழித்து விட்டாலும், நம் மண்ணை இவற்றிடம் இருந்து மீட்டு எடுத்தாலும் விவசாயத் தொழிலை உடனே அதில் செய்ய இயலாது, சில காலங்கள் கழித்தே அது வேளாண் பயன்பாட்டுக்கு வரும் என்பது ஒரு வேதனையான நிதர்சனம். அந்த அளவிற்கு இதன் நச்சு தன்மை மண்ணை பாழ்படுத்தி வைத்திருக்கிறது.கூடிய சீக்கிரம் இவை அழிக்கப்படவில்லை என்றால் விவசாய தொழிலே முற்றிலும் அழிந்துவிடும் ஆபத்து உள்ளது !!?

உங்கள் வீட்டை சுற்றி இருக்கும் மரங்களை முதலில் அகற்றுங்கள் (வெட்டினால் போதாது மீண்டும் துளிர்த்துவிடும், வேருடன் அகற்றுங்கள்)

கெட்டதை நாம் எதிர்க்காமல் வளர்த்து வந்தோம் என்றால் அது இன்னும் பல மடங்கு வலிமையுடன் நம் பிள்ளைகளை தாக்கும். நம் குழந்தைகளுக்கு பொருட் செல்வங்களை சேர்க்கா விட்டாலும் பரவாயில்லை (அவர்கள் சம்பாதித்து கொள்வார்கள்) ஆனால் நல்ல நாட்டை, நல்ல சுற்றுப்புறச் சூழலை, நல்ல நிலத்தை, நல்ல காற்றை, சுத்தமான குடிநீரை விட்டுச் செல்வோம் !!

தலைமுறை நம்மை வாழ்த்தட்டும் நாம் மறைந்த பின்பும் !

இந்த ஒரு மரத்தை வெட்டுவது…இரண்டு நல்ல மரங்களை புதிதாய் நடுவதற்கு சமம்.

மரம் வளர்க்கணும் என்ற விழிப்புணர்வு நன்றாகவே மக்களிடம் சென்று சேர்ந்து விட்டது. அதனால்…

‘மரங்களை நடுவோம்’ என்ற கோஷங்கள் போதும் ‘சீமை கருவையை வேரறுப்போம்’ என்றே இனி கோஷமிடுவோம் !!

தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள், தனியார் கிளப்புகள் போன்றவையும் இதில் ஈடுபடவேண்டும். மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த முழு அளவில் உதவி செய்யவேண்டும்.

I am sure u will [̲̅L̲̅][̲̅I̲̅][̲̅K̲̅][̲̅E̲̅] [̲̅T̲̅][̲̅H̲̅][̲̅I̲̅][̲̅S̲̅] [̲̅P̲̅][̲̅A̲̅][̲̅G̲̅][̲̅E̲̅]
⇩⇩⇩⇩⇩⇩⇩⇩⇩⇩⇩⇩⇩⇩⇩⇩⇩⇩⇩⇩⇩⇩⇩⇩⇩⇩⇩⇩⇩⇩⇩
இப்பக்கத்தை விரும்பவும் >>> World Wide Tamil People
1001648_582349045129082_1070426722_n.jpg

 


1005124_348097878650605_1543179845_n.jpg

Papaya For Uric Acid/Gout Problem~

First boil at least 3liters of water, wash properly the green papaya medium size, slice and remove the seeds, then cut into small cubes then place into the water and bring to boil, then add tea leaves (oolong) or green tea at least 5 bags similar to the tea making process. This is very effective for treatment of GOUT/URIC ACID frequent drinking of this formula will heal the pain you've been suffering for ages . . . skin of the papaya should be included . .!

 

via Divya Gobal


 
பப்பாளியின் மருத்துவப் பண்புகள்


1.நல்ல மலமிளக்கி. மலச்சிக்கல் வயிற்றுக் கடுப்பு, செரிமானமின்மை, அமிலத்தொல்லை போன்ற பிரச்சனைகளுக்கு அருமருந்து.

2.பித்தத்தைப் போக்கும்.

3.உடலுக்குத் தென்பூட்டும்.

3.இதயத்திற்கு நல்லது.

4.மனநோய்களைக் குணமாக்குவதில் உதவும்.

5.கல்லீரலுக்கும் ஏற்றது.

6.கணைய வீக்கத்தைக் கட்டுப்படுத்தும்.

7.சிறுநீர்க் கோளாறுகளைத் தீர்க்கும்.

8.கல்லீரல் கோளாறுகளைத் தீர்க்கும்.

9.முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு உதவும்.

10.இரத்தச்சோகைக்கு நிவாரணமளிக்கும்.

11.மண்ணீரல் வீக்க சிகிச்சையில் பப்பாளி பயன்படுகிறது.

12.பழுக்காத பச்சைப் பப்பாளித் துண்டுகள் அல்லது சாறை அருந்தினால், குடலிலுள்ள வட்டப்புழுக்கள் வெளியேறும்.

13.பப்பாளியிலுள்ள ‘பப்பாயின்’ என்சைம்களில் ‘ஆர்ஜினைன்’ என்பது ஆண்களுக்கான உயிர் உற்பத்தித் திறனை மேம்படுத்தவும், ‘கார்பின்’ இருதயத்திற்கும், ஃபைப்ரின் இரத்தம் உறைதலுக்கும் உதவுகின்றது.

14.பப்பாளியிலுள்ள விதவிதமான என்சைம்களின் சேர்க்கை, புற்றுநோயைக் குணப்படுத்த வல்லது.

15.இளமைப் பொலிவைக் கூட்டி வயோதிகத்தைக் கட்டுப்படுத்துவதாக பப்பாளிகளை சிறப்பித்துக் கூறுவர்.

16.உடலிலுள்ள நச்சு முழுக்க பப்பாளியால் சுத்திகரிக்கப்படுகிறது.

17.இயற்கை மருத்துவச் சிகிச்சையின் கீழ் ‘பட்டினிச் சிகிச்சை’ மேற்கொள்கையில் பப்பாளிச் சாறும், வெள்ளரிச் சாறும் மாற்றி மாற்றிக் குடித்தால் உடல் கழிவுகள் நீக்கத்தில் பெரும்பயன் விளையும்.

18.ஆண்டிபயாடிக்’ மருந்துகளில் சிகிச்சை பெற்றபின் ஒருவர், பப்பாளி நிறையச் சாப்பிட வேண்டும். ஏனெனில் குடல் தசைகளில் அழிக்கப்பட்டிருக்கும் நல்ல பாக்டீரியாக்களை மீண்டும் உற்பத்தி செய்வதற்கு பப்பாளி உதவும்.

19.நன்றாகப் பழுத்த பப்பாளிப் பழத்தின் விதைகள், குடல் புழுக்களை வெளியேற்ற உதவும். கூடவே தாகம் போக்குவதில் நல்ல பயன் தரும்.

20.பப்பாளி இலைகளின் பொடி யானைக்கால் வியாதிக்கும், நரம்பு வலிகளுக்கும் மருந்தாக விளங்குகிறது.


21.பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வர உடல் வளர்ச்சி துரிதமாகும். எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும்.

22.பப்பாளிக் காயை கூட்டாக செய்து உண்டு வர குண்டான உடல் படிப்படியாக மெலியும். தொடர்ந்து பப்பாளிப் பழத்தை சாப்பிட்டு வர கல்லீரல் வீக்கம் குறையும்.

23.பப்பாளிப் பழத்தை தேனில் தோய்த்து உண்டு வர நரம்புத் தளர்ச்சி குறையும்.

24.நன்கு பழுத்த பழத்தை கூழாக பிசைந்து தேன் கலந்து முகத்தில் பூசி, ஊறிய பின் சுடுநீரால் கழுவி வர முகச்சுருக்கம் மாறி, முகம் அழகு பெறும்.

25.பப்பாளி விதைகளை அரைத்து பாலில் கலந்து சாப்பிட நாக்குப்பூச்சிக ள் அழிந்து விடும்.

26.பப்பாளிக் காயின் பாலை வாய்ப்புண், புண்கள் மேல் பூச புண்கள் ஆறும்.

27.பப்பாளிப் பாலை, பசும்பாலுடன் கலந்து சேற்றுப் புண்கள் மேல் தடவி வர புண்கள் ஆறும்.

28.பப்பாளிப் பாலை குழந்தைகளின் தலையில் ஏற்படும் புண்களில் பூசி வர புண்கள் ஆறும்.

29.பப்பாளி இலைகளை அரைத்து கட்டி மேல் போட்டு வர கட்டி உடையும்.

30.பப்பாளி இலைகளை பிழிந்து எடுத்து வீக்கங்கள் மேல் பூசி வரவீக்கம் கரையும்.

31.பப்பாளி விதைகளை அரைத்து தேள் கொட்டிய இடத்தில் பூச வலி, விஷம் இறங்கும்.

32.பப்பாளிக் காய் குழம்பை, பிரசவித்த பெண்கள் உணவில் சேர்த்து வர பால் சுரப்பு கூடும்.

for more health news pls like the page https://www.facebook.com/Siddhacom
945523_207257339422778_842977454_n.jpg

 


 
மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும் பெயின்கில்லர் மாத்திரைகள்!

புரூஃபன் மற்றும் டிக்லோஃபெனக் போன்ற பெயின்கில்லர் மாத்திரைகளை அதிக அளவில் வழமையாக பயன்படுத்துபவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் என்று புதிய ஆய்வு ஒன்று கண்டுபிடித்திருக்கிறது. ஒக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் ஆய்வு ஒன்றே இதனைக் கண்டுபிடித்திருக்கிறது. 600 சோதனைகள் நடத்தப்பட்டதில், ஒவ்வொரு 1000 நோயாளிகளில் மூன்று பேருக்கு மேலதிகமாக இதய நோய் வருவதாகவும், அதில் ஒருவருக்கு அது மிகவும் கடுமையானதாக இருப்பதாகவும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். ஆனால், சிறிய அளவில் இந்த மாத்திரைகளை எடுப்பவர்கள் கவலைப்படத் தேவையில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
— with கலை செல்வி.
425199_326532974145270_699582548_n.jpg

 

Share this post


Link to post
Share on other sites
jdlivi    50

எப்படி உடம்பைக் குறைக்கலாம்? இதோ அதற்கான வழிமுறைகள்:

1. தாகத்திற்காக குடிக்கும் சாதாரண தண்ணீரைத் தவிர்த்து, அதற்குப் பதிலாக சோம்பு கலந்த தண்ணீரைக் குடிக்கலாம். சோம்பு கலந்த தண்ணீரைக் குடிப்பதால் விரைவிலேயே உடம்பில் உள்ளதை அடிப்படியான சதைகள் குறைந்து, உடல் அழகான வடிவத்திற்கு வந்துவிடும்.

2. அமுக்கிரா வேர், பெருஞ்சீரகம் ஆகியவற்றை பாலுடன் சேர்த்து காய்ச்சிக் குடித்துவர உடல் எடை குறையும்.

3. சுரைக்காய் வயிற்றுச்சதையை குறைப்பதில் அதிகப்பங்கு வகிக்கிறது. அதனால் சுரைக்காயை வாரத்திற்கு ஒருமுறையாவது உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

4. உடலிலுள்ள கொழுப்புகள் கரைந்தாலே போதும். உடல் எடை வெகுவாக குறைந்துவிடும். கொழுப்புகளைக் குறைப்பதற்கு நாம் அன்றாடம் பயன்படுத்தும் பூண்டு, வெங்காயம் பயன்படுகிறது. இவற்றை உணவுடன் சிறிது அதிகமாக பயன்படுத்தும்பொழுது, உடல் எடை குறையும்.

5. இது தவிர ப்ப்பாளிக் காயை சமையலாகச் செய்து சாப்பிடலாம்.

6. மந்தாரை வேரை நீர்விட்டு, நீர் பாதியாக குறையும் வரை காய்ச்சி தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் உடல் எடையில் பாதியாக குறைந்துவிடும்.

7. அன்றாடம் குடிக்கும் தேநீரில் பாலிற்கு பதிலாக சிறிது எழுமிச்சைச் சாற்றைக் கலந்து குடித்துவர, விரைவில் உடல் மெலிவதை நீங்களே உணரலாம்.

8. வாழ்த்தண்டு சாறு பருகலாம். அரும்புல் சாறும் உடல் எடையைக் குறைக்கிறது.

9. இவற்றுடன் காலையில் நடைபயிற்சி, உடற்பயிற்சி மேற்கொள்ளுதல் இயற்கையாகவே உடல் எடையை குறைப்பதற்குரிய சிறந்த வழிமுறைகளாகும்.

மேற்கண்ட வழிமுறைகள் அனைத்தும் இயற்கையான முறையில் நாம் உண்ணும் உணவால் எடையை குறைக்க முயற்சிக்கும் ஒரு வழிமுறைகளே...உடம்பைக் குறைக்க இன்னும் நிறைய வழிமுறைகள் உள்ளன.

Share this post


Link to post
Share on other sites
jdlivi    50

போதிதர்மரின் போர்க்கலை - சீன வர்மம்

இன்றைய கட்டத்தில் போதிதர்மரைப்பற்றி அறிந்துகொள்ள தமிழ் உலகு பெரும் விருப்பம் கொண்டுள்ளது என்பது கருதி இந்த பதிவு பதியப்படுகிறது. இதில் தமிழ் நாட்டில் வர்மம் சாஸ்திரம் எனப்படும் மருத்துவ போர்க்கலையின் சீன வடிவம், அதாவது போதிதர்மர் சீன தேசத்தில் கற்பித்த வர்ம சாஸ்திரம் பற்றிப்பார்க்கப்போகிறோம்.

"DIM MAK - டிம் மாக்" என்பதுவே சீன மொழியில் வர்ம சாஸ்திரத்தின் பெயராகும், இதன் அர்த்தம் "மரண அடி" என்பதாகும். புருஸ் லீயின் மரணம் கூட இளக்காமல் விட்ட வர்மத்தினால் ஏற்பட்ட மரணம் என்று கூட ஒரு கருத்து உண்டு.

வர்மத்தின் தத்துவம் என்ன அல்லது எப்படி பாதிப்பை ஏற்படுத்துகிறது?
சீன தத்துவத்தின் படி வர்மத்தின் அடிப்படை சீ (chi or ki) எனப்படும் பிராண சக்தி. இந்த பிராண சக்தி மனிதனது உடலில் உள்ள கண்ணுக்குத் தெரியாத நரம்பு மண்டலங்களினூடாக உடல் முழுவதும் பரவி உடலை வலுவூட்டுகின்றன. இவை மெரிடியங்கள் என அழைக்கப்படும். சீன மருத்துவ கொள்கையின் படி (எமது சித்த வைத்திய, தாந்திர யோக கொள்கையின் படியும்தான்) நோய் என்பது இந்த பிராண ஓட்டத்தில் ஏற்படும் தடையாகும். இதனை சீர்செய்வதற்கு பாவிக்கப்படும் உத்திகளே அக்யுபிரசர், அக்யுபங்க்சர் போன்றவை. இவை இந்த அடிப்படையின் நல்ல முகங்கள்! டிம் மாக் அல்லது மரண அடி இதன் கெட்ட உபயோகம்!

நவீன விஞ்ஞான புரிதலின் படி இந்தப்புள்ளிகள் நரம்புகளில் மிகவும் தொய்யலான பகுதியாகும், அத்துடன் நரம்பியல் ரீதியாக அவை உடலின் உள்ளங்கங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. இவை சேதமுறும் போது அவற்றின் விளைவுகள் நேரடியாக உள்ளங்கங்களை பாதிக்க செய்து மரணத்தை ஏற்படுத்துகிறது.

பாதிப்பை ஏற்படுத்துவதற்கு குறித்த இடத்தில் ஏற்படும் அடியின் வேகத்தின் அளவு முக்கியமானதாகும், இதனை தமிழ் வர்மசாஸ்திரத்தில் மாத்திரை அளவு என்பார்கள், மாத்திரை அளவு அதிகமானால் ஒரு நிலையில் வர்மத்தினை இளக்கமுடியாது.

இந்த முறை சீன போர்க்கலையில் இறுதி நிலையில் கற்றுக்கொடுக்கப்படும் ஒரு போர்முறையாகும். இனி இவற்றின் பிரிவுகளைப்பார்ப்போம்.

இந்த பகுப்பு தாக்குதலினையும், பாதிப்பு ஏற்படும் விதத்தினையும் கொண்டு பகுக்கப்பட்டுள்ள ஒருமுறையாகும். இதன் படி சீன வர்மம் மூன்று வகையான தாக்குதல் முறையினைக் கொண்டுள்ளது.

1. Tien Ching - நரம்பு முனைகளை தாக்குதல்
2. Tien Hsueh - இரத்த நாளங்களைத் தாக்குதல்
3. Tien Hsing Chi - Chi எனப்படும் பிராண சக்தி மையங்களைத் தாக்குதல்.

Tien Ching: நரம்பு முனைகளை தாக்குதல்
இது நரம்பு முனைகளை தாக்கி ஒருவரை பக்கவாதம் அல்லது முடமாக்கும் முறையாகும். இவை குறித்த புள்ளிகளை இலக்கு வைத்துதாக்காமல் தனது வலிமையினை கொண்டு எதிராளியின் உடலில் நரம்புகளிற்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகும்.

Tien Hsueh - இரத்த நாளங்களைத் தாக்குதல்
நாடிகளையும் நாளங்களையும் தாக்கி இரத்த அடைப்பை ஏற்படுத்தும் முறையால பாதிப்பை ஏற்படுத்துவதாகும். இந்த தாக்குதல் எதிராளிக்கு பின்வரும் காரணங்களால் மரணத்தை ஏற்படுத்தகூடும்.

1. மூளை, இதயம் போன்ற அங்கங்களுக்கு இரத்தம் செல்வது தடைபட்டு மரணம் சம்பவிக்கலாம்.
2. அடிபடும் போது ஏற்படும் இரத்த உறைதல் இரத்த நாளங்களினூடு சென்று மாரடைப்பு, மற்றும் மூளையில் அடைப்பினை ஏற்படுத்தி பாதிப்பை ஏற்ப்படுத்தலாம்.
3. சில உறுப்புகள் உடனடியாக சேதமடைவதால் இரத்த உறைதல் ஏற்பட்டு சம்பவிக்கும் மரணம்.

Tien Hsing Chi - பிராண சக்தி மையங்களைத் தாக்குதல்.
இது Chi எனப்படும் பிராண சக்தி மையங்களைத் தாக்குதல். இதன் விளைவு மரணம் உடனடியாகவும் சம்பவிக்கலாம், அல்லது நீண்டகாலத்திற்கு பின் சம்பவிக்கலாம். இது மனித உடலில் பிராணனின் ஒட்டத்தினை தடை செய்யும் முறையாகும். இதற்கு தாக்குபவரிற்கு பிராணன் வசப்பட்டிருக்க வேண்டும்.

சீன வர்மக்கலையின் படி உடலில் மரணத்தினை ஏற்படுத்தக்கூடிய புள்ளிகள் 36 ஆகும். தமிழ் வர்மசாஸ்திரத்தின் படி அவை 108 ஆகும்.

கடைசியாக இந்த கட்டுரையின் நோக்கம் தமிழர் கலைகள் எவ்வளவு பிந்தங்கியுள்ளது என்பதனையும் சுட்டிக்காட்டுவதுமாகும். ஏனெனில் சீன மருத்துவம், சீன போர்க்கலை என்பன அவர்கள் அனைவருக்கும் அறிந்து கொள்ளும் படி கொடுத்ததால் இன்று உலகளாவிய அந்தஸ்து பெற்று பலராலும் பயிலப்படுகிறது.

Share this post


Link to post
Share on other sites
jdlivi    50

 

சாத்துக்குடி பழத்தின் மருத்துவ குணங்கள் :-

மனித உடலுக்கு நேரடியாக சத்துக்ளை கொடுப்பது பழங்கள் மட்டுமே. பழங்கள் எளிதில் சீரணமாவதற்கும், வாய், வயிறு, குடல் பகுதியில் உள்ள புண்களை ஆற்றுவதற்கும் ஏற்றவை.

உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்து அதாவது புரதச்சத்து, வைட்டமின் சத்துக்கள், கால்சியம் சத்து, நார்ச்சத்து என அனைத்து சத்துக்களும் பழங்களில் அதிகம் அடங்கியிருக்கின்றது. தினமும் பழங்கள் சாப்பிடுவது நல்லது. அந்தந்த சீதோஷ்ண காலங்களில் அதிகம் விளையும் பழங்களைச் சாப்பிட்டால் நல்லது.

மஞ்சள் கலந்த பச்சை நிறத்தில் இருக்கும் சாத்துக்குடி பழம் நாரத்தை, ஆரஞ்சு வகையைச் சார்ந்தது. தினமும் இரண்டு பழங்கள் சாப்பிடுவது நல்லது.

நோயுற்றவர்களுக்கு:

நோயால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் சாத்துக்குடியை சாற்றைப் பருகி வந்தால் உடலுக்கு புத்துணர்ச்சி உண்டாகும். உடலுக்கு வலு கொடுக்கும். சாத்துகுடியானது இரத்தத்தில் எளிதில் கலப்பதால் உடல் வெகு விரைவில் தேறும்.

ஒவ்வொருவருடைய வளர்ச்சிக்கும் அவர்களுடைய நினைவாற்றலே முக்கிய பங்கு வகிக்கிறது. மறதி என்பது ஒருகொடிய நோய்க்கு ஒப்பாகும். எனவே நினைவாற்றலை அதிகரிக்க சாத்துக்குடி பழம் சாப்பிடுவது நல்லது.

இரத்த விருத்திக்கு:

சிலர் எப்போதும் சோர்வாகவே இருப்பார்கள். சிறிது வேலை செய்தாலும், அதிகமாக அசதி உண்டாவதாகக் கூறுவார்கள். கை, கால் மூட்டுக்களில் வலி உண்டாகும். சில சமயங்களில் தலைச் சுற்றலுடன் இலேசான மயக்கம் ஏற்படும்.

இவர்களுக்கு தினமும் இரண்டு சாத்துக்குடி வீதம் சாறு எடுத்துக் கொடுத்து வந்தால் இரத்தம் விருத்தியாகும். உடல் அசதி நீங்கும்.

இரத்தத்தில் சிவப்பணுக்களின்(ஹீமோகுளோபின்) எண்ணிக்கை குறைவதால் இரத்தச் சோகை ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த இரத்தச் சோகையை விரட்டியடிக்க சாத்துக்குடி நல்ல மருந்தாகும்.

எலும்புகள் வலுவடைய:

சிலருக்கு இலேசாக அடிபட்டால் கூட எலும்புகள் உடைந்துவிடும். மேலும் எலும்புகள் வலுவற்று காணப்படும். இதற்குக் காரணம் கால்சியச் சத்து குறைபாடே ஆகும். இவர்கள் சாத்துக்குடி கிடைக்கும் காலங்களில் அதிக அளவு சாப்பிட்டு வந்தால் எலும்புகள் வலுவடையும்.

நன்கு பசியைத் தூண்ட:

பசியில்லாமல் சிலர் அவதியுறுவார்கள். இவர்களின் வயிறு எப்போதும் நிரம்பி உள்ளது போல் தோன்றும். சாத்துக்குடி பழத்தை தினமும் உண்டு வந்தால் சீரண சக்தியைத் தூண்டி நன்கு பசியை உண்டாக்கும்.

குழந்தைகளுக்கு:

ஒரு வயதுக்குமேல் உள்ள குழந்தைகளுக்கு கால்சியச் சத்து அதிகம் தேவை. குழந்தைகளின் வளர்ச்சிக்கு இன்றியமையாதது இந்த கால்சியம் சத்து தான். சாத்துக்குடியில் அதிகளவு கால்சியச் சத்து இருப்பதால் குழந்தைகளுக்கு சாத்துக்குடி சாறு கொடுப்பது மிகவும் நல்லது.

முதியோர்களுக்கு:

வயது முதிர்ந்தவர்களுக்கு உணவு சரியாக செரிக்காமல் மலச்சிக்கல் உண்டாகும். இதனால் உடல் அசதி, சோர்வு உண்டாகும். இவை நீங்க சாத்துக்குடி நல்ல மருந்தாகும். கிடைக்கும் காலங்களில் இந்தப் பழத்தை அதிகம் சாப்பிட்டு நோயின்றி வாழலாம்.

1003112_569271373095182_750792879_n.jpg

 

 

உடற் பருமனைக் குறைக்க யோசனைகள்:-

உடற் பருமன் மற்றும் அதிக கொழுப்பு ஆகியவற்றால் உயர் ரத்த அழுத்தம், உடலின் கெட்ட கொழுப்பு அதிகரித்தல், மூட்டு வியாதிகள் மற்றும் சர்க்கரை நோய் ஆகியவை வர வாய்ப்பிருக்கிறது. எனவே சில வீட்டு மருத்துவத்தை பயன்படுத்தி அதன் பாதிப்புகளிலிருந்து விடுபட கீழ் வரும் டிப்ஸ் பயனுள்ளதாக இருக்கும் :

1/4 தேக்கரண்டி கரு மிளகுத் தூள், 3 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, ஒரு கோப்பை நீறில் ஒரு தேக்கரண்டி தேன், இந்த கலவையை 3-4 மாதங்களுக்கு தொடர்ந்து எடுததுக் கொண்டு வந்தால் உடல் எடை குறையும்.

தினமும் காலையில் ஒரு டம்ளர் தண்ணீரில் எலுமிச்சை சாறு சிறிதளவு தேன் கலந்து குடிதது வரவும்.

காலை உணவிற்கு முன் தினமும் ஒரு தக்காளி சாப்பிட்டு வரவேண்டும். ஒரு 3-4 மாதங்களுக்கு இதைச் செய்தால் உடல் எடை குறையும்.

தினமும் காலையில் முழுதாக வளர்ந்த 10-12 கருவேப்பிலைகளை சாப்பிட்டு வரவும். 3-4 மாதங்களில் உடல் பருமனில் மிகுந்த மாற்றததை காணலாம்.

பிரஷ்ஷான தக்காளியுடன் வெங்காயத்தை சாப்பிட்டு பிறகு எலுமிச்சை சாற்றை குடிக்கவும்.

இஞ்சியை மெலிதாக நறுக்கிக் கொள்ளவும். பிறகு அதை கொதிக்க விடவும். நன்றாக கொதி வந்த பிறகு எலுமிச்சை துண்டங்களை சேர்க்கவும். இதனை சூடாகவோ அல்லது ஆறிய பிறகு பாட்டிலில் ஊற்றி வைத்து போகும் இடங்களுக்கு கொண்டு செல்லலாம். இது பசியை ஆற்றும் தன்மை கொண்டது. இதனால் உடல் எடை குறையும்.

அரிசி, உருளைக்கிழங்கு போன்ற மாவுச் சத்துப் பொருட்களை குறைக்கவும். பதிலாக கோதுமை எடுத்துக் கொள்ளலாம்.

உயர் கலோரி தின்பண்டங்களான ஐஸ் கிரீம், சாக்லேட், இனிப்புகள், வெண்ணெய், நன்றாக சமைக்கப்பட்ட உணவு, ஆகியவைகளை தவிர்க்கவும்.

பச்சையான முட்டை கோஸ் அல்லது சமைக்கப்பட்ட கோஸ் காயில் மாவுச்சத்தை கொழுப்பு சத்தாக மாற்றமடைவதை தடுக்கூடிய சத்துகள் உள்ளது. எனவே முட்டைக் கோஸ் உடல் பருமனை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

954836_569432996412353_1458529736_n.jpg

 

ஆவாரம்பூ குடிநீர்:-

நீரில் ஆவாரம் பூக்கள் அல்லது காயவைத்த ஆவாரம் பூ பொடி சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி, குடிநீராக அருந்தி வரலாம்.

இது உடல் சூடு, பித்த அதிகரிப்பு, நீர்க்கடுப்பு, அதிக உதிரப்போõக்கு, ஒழுங்கற்ற மாதவிடாய், குடற்புண் வயிற்றுப்புண் போன்றவை நீங்கும்.

நீரிழிவு நோயாளிக்கு இது மிகவும் சிறந்த மூலிகைக் குடிநீர் ஆகும்.

இரத்தத்தைச் சுத்தப்படுத்தும், உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வியர்வை மூலம் வெளியேற்றி, சருமத்திற்கு மினுமினுப்பைக் கொடுக்கும்.

பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப் படுதலை அறவே நீக்கும்.

இதனைத் தொடர்ந்து அருந்தி வந்தால், உடலை நோயின்றி அரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.

துளசி குடிநீர்

துளசி நமக்கு அருமருந்தாகும். துளசி இலையுடன் சீரகம் சேர்த்து நீரில் கொதிக்க வைத்து குடிநீராக அருந்தி வந்தால் உடலுக்கு பல நன்மைகள் உண்டு.

அடிக்கடி வெளியூர் பயணம் செய்பவர்களுக்கும், வெயில் மற்றும், மழைக்காலங்களில் அலைந்து திரிபவர்களுக்கு துளசி குடிநீர் அருமருந்தாகும். இது உடற்சூடு, பித்தம் போன்றவற்றைத் தணிக்கக் கூடியது.

டைபாய்டு, மஞ்சள்காமாலை, மலேரியா, காலரா நோய்கள் ஏற்படாமல் தடுக்கும். தொண்டைச்சளி, வறட்டு இருமல், புகைச்சல், தலையில் நீர் கோர்த்தல், அடிக்கடி தும்மல், போன்றவற்றைப் போக்கும். இரத்தத்தில் உள்ள சளியை நீக்கி இரத்தத்தை சுத்தப்படுத்தும்.

வல்லாரை குடிநீர்

எல்லா நோய்களுக்கும் கொடுக்கப்படும் மருந்தில் முதல் மருந்தாகவும், துணை மருந்தாகவும் இருப்பது வல்லாரை.

இதனை சரஸ்வதி மூலிகை என்று அழைக்கின்றனர். இது மூளைக்கும், அதன் செயல்பாட்டிற்கும் அதாவது அறிவுத் திறனுக்கும், ஞாபக சக்திக்கும் ஏற்ற மூலிகையாகும்.

காயவைத்த வல்லாரை பொடியை நீரில் போட்டு கொதிக்க வைத்து அனைவரும் அருந்தலாம்.

இது ஞாபக சக்தியைத் தூண்டுவதுடன், பித்த அதிகரிப்பைக் குறைக்கும். இரத்தத்தில் ஏற்படும் இரும்புச் சத்துக் குறைபாட்டைப் போக்கி இரத்தச் சோகையை நீக்கும். நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுக்கும். தொழுநோய், யானைக்கால் நோய், மூலம், மூட்டுவலி போன்ற வற்றிற்கு சிறந்த மருந்தாகும்.

கரிசாலை குடிநீர்

"ஏர்தரும் ஆன்ற கரிசாலையால் ஆன்மா சித்தி"

என்றார் வள்ளலார் இராமலிங்க அடிகள். அத்தகைய சிறப்பு வாய்ந்த கரிசாலை கண்களுக்கு ஒளியையும் உடலுக்குத் தேவையான இரும்புச் சத்தையும் தரக்கூடியது.

வெள்ளை கரிசாலை இலைச் சூரணம் 200 கிராம் எடுத்து அதனுடன் முசுமுசுக்கை இலை 35 கிராம், நற்சீரகத்தூள் 35 கிராம் அளவு சேர்த்து கொதிக்க வைத்து தேவையான அளவு பனங்கற்கண்டு அல்லது பனைவெல்லம் கலந்து காலை, மாலை தேநீருக்குப் பதிலாக அருந்தலாம். அல்லது, கரிசாலையுடன் நற்சீரகம் சேர்த்துகொதிக்க வைத்து குடிநீராகவும் அருந்தலாம்.

கரிசாலை இரத்த சோகையைப் போக்கக் கூடியது. இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற நீர்களை வெளியேற்றும் தன்மை கொண்டது. இரத்தத்தில் உள்ள பித்தத்தைக் குறைக்கும்.

இரத்தக் கொதிப்பு, காசநோய், எலும்பு தேய்மானம் போன்றவை ஏற்படாமல் தடுக்கும்.

சீரகக் குடிநீர்

சீர்+அகம் =சீரகம். அகம் என்னும் உடலை சீர்படுத்துவரே சீரகத்தின் சிறப்பான குணமாகும்.

சீரகத்தை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி ஆறிய நீரை தினம் பருகி வருவது நல்லது.

இது உடற் சூட்டைத் தணிக்கும்.பித்தத்தைக் குறைக்கும்.

ரத்தத்தில் உள்ள தேவையற்ற பொருட்களை நீக்கி, ரத்தத்தைக் சுத்தப்படுத்தும். வியர்வை மற்றும் சிறுநீரைப் பெருக்கும்.

கண் சூடு குறைக்கும். வாய்ப்புண் வயிற்றுப்புண்ணைப் போக்கும்.

சரும நோய்கள் வராமல் தடுக்கும். இதயத்திற்கு இதமான குடிநீர்தான் சீரகக் குடிநீர்.

மாம்பட்டைக் குடிநீர்

மாம்பட்டையை இடித்து நீரில் கொதிக்க வைத்து குடிநீராக்கி அருந்தினால், நரம்புகள் பலப்படும், உடல் சூடு தணியும், சரும நோய்கள் ஏற்படாமல் தடுக்கும். பித்தத்தைக் குறைக்கும். அஜீரணக் கோளாறை நீக்கும்.

நெல்லிப்பட்டைக் குடிநீர்

நெல்லி மரப் பட்டையை காயவைத்து இடித்து பொடியாக்கி குடிநீரில் இட்டு காய்ச்சி அருந்துவது நல்லது.

இது ஆஸ்துமா, சளி, இருமல், வறட்டு இருமல், தொண்டைக்கட்டு, நுரையீரல் சளி, இரத்தச் சளி போன்றவற்றைப் போக்கும். ரத்தத்தைச் சுத்தப்படுத்தும். உடல் சூட்டைத் தணிக்கும். குடல்புண்களை ஆற்றும். மூலநோய்க் காரர்களுக்கு மூலநோயின் பாதிப்பைக் குறைக்கும்.

ஆடாதோடைக் குடிநீர்

ஆடாதோடை இலைகளை சிறிதாக நறுக்கி தேன் விட்டு வதக்கி நீரில் போட்டு கொதிக்க வைத்து குடீநீராக அருந்தி வந்தால்,

சளி, இருமல், கோழைக்கட்டு, நாள்பட்ட நெஞ்சுச் சளி, மூக்கில் நீர் வடிதல், நுரையீரல் சளி போன்றவை நீங்கும்.

வாந்தி, விக்கல் போன்றவை குணமாகும்.

சைனஸ், ஆஸ்துமா நோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கு இது சிறந்த மருந்து.

நோயில்லாத வாழ்வே சிறப்பான வாழ்க்கையாகும். இத்தகைய வாழ்வு வாழ வெறும் குடிநீரை அருந்துவதை விட சித்தர்கள் கண்டறிந்து கூறியுள்ள மூலிகைக் குடிநீரை அருந்தினால் உடலுக்கு சக்தி கிடைப்பது மட்டுமின்றி நோயும் தடுக்கப்படும்.

அந்த வகையில் ஆவாரம் பூ குடிநீர், கரிசாலை குடிநீர், நன்னாரி குடிநீர், துளசி குடிநீர், வல்லாரை குடிநீர், சீரகக் குடிநீர், நெல்லிப்பட்டைக் குடிநீர், மாம்பட்டைக் குடிநீர், ஆடாதோடைக் குடிநீர், போன்றவை அடங்கும்.

 

1002431_569432909745695_1314209172_n.jpg

 

சித்த மருத்துவம் --- இய‌ற்கை வைத்தியம்:-

வேப்பமர பிசினை தூளாக்கி பசும்பாலில் உட்கொள்ள கரப்பான் மற்றும் சரும நோய்கள் குணமாகும்.

பச்சை மஞ்சள் கிழங்கை அரைத்து கோலி குண்டு அளவு காலை - மாலை உட்கொள்ள குடல் பிணிகள் அகலும்.

கஸ்தூரி மஞ்சளை கருந்துளசி இலையுடன் சேர்த்து அரைத்து உடல் முழுவதும் வெந்நீரில் நீராட எவ்வித சரும நோயும் வராது.

வெற்றிலையுடன் சிறிது உப்பை மடித்து சாப்பிட்டால் வயிற்றில் ஏற்படும் குத்து வலி நீங்கும்.

கசப்பான மருந்தை உட்கொள்ளும்போது வெத்திலைக் காம்பை சுவைத்தால் நன்றாக இருக்கும். குமட்டல் வராது.

வெற்றிலை வேர், கண்டங்கத்திரிவேர், ஆடா தொடை மூன்றையும் சம அளவு எடுத்து கஷாயம் செய்து உட்கொண்டால் காசநோய் குறையும்.

வேப்பம் பூவை உலர்த்தி தூளாக்கி வெந்நீரில் கலந்து உட்கொள்ள அஜீரணம் காரணமாக ஏற்படும் வாந்தி நிற்கும். வாயுத் தொல்லைகள் அகலும்.

வேப்பம் கொட்டைகளிலிருந்து எண்ணெய் தயாரிக்கப்படும்போது உருவாகும் வேப்பம் புண்ணாக்கை பலவிதமான நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுத்தலாம்.

வேப்பிலையும் மஞ்சளையும் சேர்த்து அரைத்து அம்மைப்புண்கள் மீது தடவ குணமடையும்.

வெற்றிலையும், மிளகும் அரைத்து பாக்களவு உட்கொண்டு பின் வெந்நீர் பருகினால் எல்லாவித விஷங்களும் முறியும்.

கருந்துளசி சாற்றை ஆட்டுப்பாலில் இரண்டு தேக்கரண்டி கலந்து காலை மாலை உட்கொண்டால் ஈரல் தொடர்பான குறைபாடுகள் அகலும்

5594_569433146412338_1400685426_n.jpg

 

 

விளாம்பழம் (wood apple)

பல வியாதிகளை குணப்படுத்தும் சிறந்த பழமாகும். இதில் இரும்பு சத்தும், சுண்ணாம் புச்சத்தும், வைட்டமின் ஏ சத்தும் உள்ளது. இப்பழத்துடன் வெல்லம் சேர்த்து பிசைந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் குணமாகும்.

பித்தத்தால் தலை வலி, கண்பார்வை மங்கல், காலையில் மஞ்சளாக வாந்தி எடுத்தல், சதா வாயில் கசப்பு, பித்த கிறுகிறுப்பு, கை கால்களில் அதிக வேர்வை, பித்தம் காரணமாக இளநரை, நாவில் ருசி உணர்வு அற்றநிலை இவைகளை விளாம் பழம் குணப் படுத்தும்.

விளாம்பழத்திற்கு ரத்தத்தில் கலக்கும் நோய் அணுக்களை சாகடிக்கும் திறன் உண்டு. எனவே எந்த நோயும் தாக்காமல் பாதுகாக் கும். அஜீரண குறைபாட்டை போக்கி பசியை உண்டுபண்ணும் ஆற்றலும் விளாம்பழத்திற்கு உண்டு. முதியவர்களின் பல் உறுதி இழப்பிற்கு விளாம்பழம் நல்ல மருந்து

http://www.facebook.com/groups/siddhar.science/

தமிழ்ச்சித்தர்களின் அறிவியல் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் குழுமம்.

http://www.facebook.com/groups/siddhar.science

999893_459384467488211_1378157624_n.jpg

 

Share this post


Link to post
Share on other sites
jdlivi    50

968924_482758715131969_807377306_n.jpg

MUST MUST SHARE THIS INFORMATION FIRST AND READ AFTERWARDS.....SAVE LIFE

"10000 times stronger killer of CANCER than Chemo".. do share it.. can save many lives, fill up hopes and build confidence in the patients...

The Sour Sop or the fruit from the graviola tree is a miraculous natural cancer cell killer 10,000 times stronger than Chemo.

Why are we not aware of this? Its because some big corporation want to make back their money spent on years of research by trying to make a synthetic version of it for sale.

So, since you know it now you can help a friend in need by letting him know or just drink some sour sop juice yourself as prevention from time to time. The taste is not bad after all. It’s completely natural and definitely has no side effects. If you have the space, plant one in your garden.
The other parts of the tree are also useful.

The next time you have a fruit juice, ask for a sour sop.

How many people died in vain while this billion-dollar drug maker concealed the secret of the miraculous Graviola tree?

This tree is low and is called graviola ! in Brazi l, guanabana in Spanish and has the uninspiring name “soursop” in English. The fruit is very large and the subacid sweet white pulp is eaten out of hand or, more commonly, used to make fruit drinks, sherbets and such.

The principal interest in this plant is because of its strong anti-cancer effects. Although it is effective for a number of medical conditions, it is its anti tumor effect that is of most interest. This plant is a proven cancer remedy for cancers of all types.

Besides being a cancer remedy, graviola is a broad spectrum antimicrobial agent for both bacterial and fungal infections, is effective against internal parasites and worms, lowers high blood pressure and is used for depression, stress and nervous disorders.

If there ever was a single example that makes it dramatically clear why the existence of Health Sciences Institute is so vital to Americans like you, it’s the incredible story behind the Graviola tree..

The truth is stunningly simple: Deep within the Amazon Rainforest grows a tree that could literally revolutionize what you, your doctor, and the rest of the world thinks about cancer treatment and chances of survival. The future has never looked more promising.

Research shows that with extracts from this miraculous tree it now may be possible to:
* Attack cancer safely and effectively with an all-natural therapy that does not cause extreme nausea, weight loss and hair loss
* Protect your immune system and avoid deadly infections
* Feel stronger and healthier throughout the course of the treatment
* Boost your energy and improve your outlook on life

The source of this information is just as stunning: It comes from one of America ‘s largest drug manufacturers, th! e fruit of over 20 laboratory tests conducted since the 1970's! What those tests revealed was nothing short of mind numbing… Extracts from the tree were shown to:

* Effectively target and kill malignant cells in 12 types of cancer, including colon, breast, prostate, lung and pancreatic cancer..
* The tree compounds proved to be up to 10,000 times stronger in slowing the growth of cancer cells than Adriamycin, a commonly used chemotherapeutic drug!
* What’s more, unlike chemotherapy, the compound extracted from the Graviola tree selectivelyhunts
down and kills only cancer cells.. It does not harm healthy cells!

The amazing anti-cancer properties of the Graviola tree have been extensively researched–so why haven’t you heard anything about it? If Graviola extract is

One of America ‘s biggest billion-dollar drug makers began a search for a cancer cure and their research centered on Graviola, a legendary healing tree from the Amazon Rainforest.

Various parts of the Graviola tree–including the bark, leaves, roots, fruit and fruit-seeds–have been used for centuries by medicine men and native Indi! ans in S outh America to treat heart disease, asthma, liver problems and arthritis. Going on very little documented scientific evidence, the company poured money and resources into testing the tree’s anti-cancerous properties–and were shocked by the results. Graviola proved itself to be a cancer-killing dynamo.
But that’s where the Graviola story nearly ended.

The company had one huge problem with the Graviola tree–it’s completely natural, and so, under federal law, not patentable. There’s no way to make serious profits from it.

It turns out the drug company invested nearly seven years trying to synthesize two of the Graviola tree’s most powerful anti-cancer ingredients. If they could isolate and produce man-made clones of what makes the Graviola so potent, they’d be able to patent it and make their money back. Alas, they hit a brick wall. The original simply could not be replicated. There was no way the company could protect its profits–or even make back the millions it poured into research.

As the dream of huge profits evaporated, their testing on Graviola came to a screeching halt. Even worse, the company shelved the entire project and chose not to publish the findings of its research!

Luckily, however, there was one scientist from the Graviola research team whose conscience wouldn’t let him see such atrocity committed. Risking his career, he contacted a company that’s dedicated to harvesting medical plants from the Amazon Rainforest and blew the whistle.

Miracle unleashed
When researchers at the Health Sciences Institute were alerted to the news of Graviola,! they be gan tracking the research done on the cancer-killing tree. Evidence of the astounding effectiveness of Graviola–and its shocking cover-up–came in fast and furious….

….The National Cancer Institute performed the first scientific research in 1976. The results showed that Graviola’s “leaves and stems were found effective in attacking and destroying malignant cells.” Inexplicably, the results were published in an internal report and never released to the public…

….Since 1976, Graviola has proven to be an immensely potent cancer killer in 20 independent laboratory tests, yet no double-blind clinical trials–the typical benchmark mainstream doctors and journals use to judge a treatment’s value–were ever initiated….

….A study published in the Journal of Natural Products, following a recent study conducted at Catholic University of South Korea stated that one chemical in Graviola was found to selectively kill colon cancer cells at “10,000 times the potency of (the commonly used chemotherapy drug) Adriamycin…”

….The most significant part of the Catholic University of South Korea report is that Graviola was shown to selectively target the cancer cells, leaving healthy cells untouched. Unlike chemotherapy, which indiscriminately targets all actively reproducing cells (such as stomach and hair cells), causing the often devastating side effects of nausea and hair loss in cancer patients.

…A study at Purdue University recently found that leaves from the Graviola tree killed cancer cells among six human cell lines and were especially effective against prostate, pancreatic and lung cancers…. Seven years of silence broken–it’s finally here!

Share this post


Link to post
Share on other sites
jdlivi    50

1003444_405351116247245_2026103045_n.jpg

பீட்ரூட்

* பீட்ரூட்டை பிழிந்து சாறு எடுத்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வர அல்சர் குணமாகும்.

* பீட்ரூட் சாறுடன் வெள்ளரிச்சாறு கலந்து சாப்பிட்டு வர சிறுநீரகங்களும் பித்தப்பையும் சுத்திகரிக்கப்படும்.

* பீட்ரூட்டை நறுக்கி பச்சையாக எலுமிச்சை சாற்றில் தோய்த்து உண்டுவர இரத்தத்தில் சிவப்பணுக்கள் உற்பத்தியாகும்.

* கல்லீரல் கோளாறுகளுக்கும் பீட்ரூட் ஒரு சிறந்த டானிக். பித்தம் அதிகமாகி அடிக்கடி பித்த வாந்தி எடுப்பவர்களுக்கு பீட்ரூட் ஒரு சிறந்த டானிக்.

* பீட்ரூட் சாறு அஜீரணத்தை நீக்கி செரிமானத்தைக் கூட்டும்.

* தலையில் ஏற்படும் வெள்ளை நிற பொடுகுகளைக் களைய பீட்ரூட் ஜூஸை பொடுகு இருக்கும் இடங்களில் மசாஜ் செய்து இரண்டு மணிநேரம் கழித்து சீயக்காய் பவுடர் கொண்டு தலை குளித்தால் நாளடைவில் பொடுகுகள் சரியாகும்.

* புற்றுநோயினால் துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் நோயாளிகள், ஊட்டி பீட்ரூட் ஜூஸ் தினமும் 1 டம்ளர் பருகி வந்தால் புற்றுநோய் பரவுவது தடுக்கப்படும். ஆரம்ப நிலையிலுள்ள புற்றுநோயை குணமாக்கும் வல்லமை படைத்தது பீட்ரூட்.

* பீட்ரூட் கீரையையும் மற்ற கீரைகள் போல் சமையல் செய்து சாப்பிட அல்சர், மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் சரியாகும்.

* புதியதாக இரத்த அணுக்கள் உருவாக துணை புரிகிறது. பச்சைக் காய்கறிகள், கீரைகள், பழங்கள், பேரீச்சம் பழம், அத்திப்பழம் ஆகியவற்றை அதிக அளவு உண்டும், இரத்தத்தின் அளவு அதிகரிக்காமல் இருக்கும் பட்சத்தில் பீட்ரூட்டை வாரத்திற்கு நான்கு நாட்கள் உண்டால் நல்ல பலன் கிடைக்கும். சமையல் செய்து சாப்பிடுவதுடன் பச்சையாகவும் சாப்பிடலாம்.


7238_405349806247376_585105094_n.jpg

 

தேன் கலவைகள் ஆரோக்கிய வாழ்க்கைக்கு உதவும்.----மருத்துவ டிப்ஸ்,

...தேனீயின் வயிற்றிலிருந்து பலவித நிறங்களையுடைய ஒரு பானம் (தேன்) வெளியாகிறது; அதில் மனிதர்களுக்கு (பிணி தீர்க்க வல்ல) சிகிச்சை உண்டு; நிச்சயமாக இதிலும் சிந்தித்துணரும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது. (அல்குர்ஆன் 16:69)

தேனின் மருத்துவ குணங்கள் அனைவரும் அறிந்ததே. பின்வரும் தேன் கலவைகள் ஆரோக்கிய வாழ்க்கைக்கு உதவும்.

கண் பார்வைக்கு
தேனை கேரட் சாறுடன் கலந்து காலை ஆகாரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் பருகினால் கண் பார்வை விருத்தியடையும்.
இருமலுக்கு
சரியளவு தேன் மற்றும் இஞ்சி சாறு கலந்து அருந்தினால் இருமல், தொண்டை வலி, மார்பு சளி, மூக்கு ஒழுகுதல் மற்றும் மூக்கடைப்பு போன்ற உபாதைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்
ஆஸ்துமா

அரை கிராம் கருப்பு மிளகை பொடி செய்து சரியளவு தேன் மற்றும் இஞ்சி சாறுடன் கலந்து அருந்த ஆஸ்துமா குணமாகும்
இரத்த கொதிப்பு
ஒரு தேக்கரண்டி அளவு பூண்டு சாறுடன் இரண்டு டீ கரண்டி தேன் சேர்த்து தினமும் இரு வேளை (காலை & மாலை) சாப்பிடுவது இரத்த கொதிப்புக்கு சிறந்த மருந்தாகும்.
இரத்த சுத்திகரிப்பு/கொழுப்பு குறைப்பு
ஒரு குவளை மிதமான சூடுள்ள நீரில் ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி தேனும், ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறும் கலந்து தினமும் காலைக்கடன்களுக்கு முன் பருகவும். இது இரத்த சுத்திகரிப்பிற்கும், உடல் கொழுப்பை குறைப்பதற்கும், மற்றும் வயிற்றை சுத்தமாக்கவும் உதவும்.
இதயத்திற்கு டானிக்

தேனுடன் இஞ்சி, விதை நீக்கிய பேரிச்சம் பழம் இரண்டையும் ஊற வைத்து சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி பெருகுவதுடன், மலச்சிக்கல் ஏற்படுவதும் குறையும். ஒரே டம்ளர் வெந்நீர் அல்லது சூடுபடுத்தப்பட்ட பாலில் மூன்று டீஸ் பூன் தேன் கலந்து இரவு படுக்கைக்கு செல்லும் முன் அருந்தினால் தூக்கம் நன்றாக வரும். நோய் எதிர்ப்பு தன்மை பெருகி, உடல் ஆரோக்கியம் ஏற்படும். நாள்தோறும் 100 கிராம் தேன் கலந்த பானம் பருகினால், ரத்த சோகை ஏற்படுவது தடுக்கப்படும்.

தொடர்ந்து ஆறு வாரம் அருந்தினால் ரத்தத்தில் சிவப்பு அனுக்களின் எண்ணிக்கை அதிகரித்து ரத்த சோகை முற்றிலும் நீங்கி விடும். உடல் அழகையும், குரல் இனிமையையும் ஏற்படுத்தி தரும் குணம் தேனுக்கு உண்டு. வயிற் றுக்கு சிறந்த நன்பன் என்றால் அது தேன் தான். தினமும், 3 டீஸ்பூன் தேனை 100 மில்லி லிட்டர் வெந்நீரில் காலை அல்லது இரவு நேரத்தில் வெறும் வயிற்றில் அருந்தினால், வயிற்றுப்புண், இரைப்பை அலர்ஜி, ஈரல், பித்தப்பை நோய்கள் குணமாகும். குறிப்பாக அமிலத் தன்மையை கட்டுப்படுத்தி அல்சர் நோயை குணப்படுத்தும்.
தேனை உட்கொள்ளும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்:
1. தேனை சூடான உணவு பொருட்களுடன் கலக்கக் கூடாது.
2. தேனை சூடாக்குவதை தவிர்க்க வேண்டும்.
3. வெப்ப நிலை அதிகமாக உள்ள இடங்களில் வேலை செய்பவர்கள் தேன் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.
4. தேனை மழை நீர், கடுகு, நெய் மற்றும் காரமான உணவு வகைகளுடன் ஒருபோதும் கலக்கக் கூடாது.
தேன் பல மலர்களின் மதுரம் கலந்த ஒரு கலவையே. அதில் நச்சு தன்மை வாய்ந்த மலர்களும் அடங்கும். நஞ்சு பொதுவாக கார மற்றும் உஷ்ண குணங்களையே கொண்டிருக்கும். ஆகவே தேனை கார மற்றும் சூடான உணவு பொருட்களுடன் கலக்கும் போது இந்த நச்சு தன்மைகள் மேலோங்கும் சாத்தியக்கூறு உள்ளது.
தேனின் மருந்துவ குணங்கள்:
- பசியை அதிகரிக்கச் செய்யும்
- உடற்கழிவை இலகுவில் அகற்றும்
- நோயெதிர்ப்புச் சக்தியைத் தூண்டும்
- குருதியை தூய்மைப்படுத்தி, சிவப்பனுக்களின் உற்பத்தியைத் தூண்டும்.
- சீழ் பிடித்த புண்ணை குணப்படுத்தும்
- வயிற்றுப் புண்ணை ஆற்றும்
- நரம்புகளுக்கு வலுக்கொடுத்து கை, கால் நடுக்கத்தை போக்கும்
- எலும்புகளுக்கு வலிமையைத் தரும்
- தீப்புண்ணை ஆற்றவல்லது.
- சரும நோய்களுக்கு சிறந்த நிவாரணி
- மூளைக்கு இரத்தோட்டத்தை சீராக்க நினைவாற்றல் அதிகரிக்கும்
- போதைப் பொருட்களின் நஞ்சை முறிக்கும்
- உடல் சூட்டை தணிக்கவல்லது
- உடல் வனப்பையும் தாது விருத்தியையும் அதிகரிக்கும்

தேனில் பதனிட்ட இஞ்சி
இஞ்சியைத் தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி நிழலில் உலரவைத்து. அதிலுள்ள நீர் காய்ந்ததும், அதை ஒரு கண்ணாடிப் போத்தலில் போட்டு, சுத்தமான தேனை ஊற்றிக் கலக்கி மூடி வைக்கவேண்டும். இது நெடு நாள் கெட்டுப்போகாமல் இருக்கக் கூடியது. காலையிலும் மாலையிலும் இரண்டு தொடக்கம் மூன்று துண்டுகளை சாப்பிட சுவையாக இருப்பதோடு, சமிபாட்டு நோய்களும் வராது.

தேனும் இஞ்சிச் சாறும்
இஞ்சியைத் தோல் நீக்கி நசுக்கிப் பிளிய சாறு வரும். சற்றை வடிகட்டி எடுத்து, ஒரு கரண்டி இஞ்சிச் சாற்றிற்கு ஒரு கரண்டி தேன் என்னும் அளவில் கலந்து காலையில் அருந்தி வர, இரத்தம் சுத்தப்பட இரத்தம் விருத்தி அடைவதோடு, வாத, நரம்பு சம்பந்தமான நோய்கள் தலை காட்டா.

தேனும் பாலும்
நீண்ட நாள் நோயுற்று இருந்தோர்க்கும், உடல் நலம் குன்றியோர்க்கும், பாலில் தேனைக் கலந்து தினமும் கொடுத்து வர, உடல்; போசக்குப் பெறும், சோர்வு நீங்கி, புதிய தென்பு உண்டாகும்.
தேனை எல்லா வயதினரும் உண்ணலாம். ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.

Share this post


Link to post
Share on other sites
jdlivi    50

பனிக்காலத்தில் உடலின் சூடு குறைவதால் ரத்தம் உறையும் பிரச்னை இருக்கும். இதனால் மூட்டு, குதிகால் மற்றும் முதுகுத்தண்டு ஆகியவற்றில் வலி ஏற்படும். குளிரில் காலுக்கு ரத்த ஓட்டம் .

குறைவதாலும் குதிகால் வலி ஏற்படும். மூட்டுவலியை குறைக்க நீர்ச்சத்து அதிகம் உள்ள புடலங்காய், பீர்க்கன், சுரைக்காய் உள் ளிட்ட காய்கறிகள் சேர்த்துக் கொள்ளலாம். தினமும் கட்டாயம் ஒரு பழம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

கால் பகுதியை கதகதப்பாக வைத்துக் கொண்டால் ரத்தம் உறைவதால் ஏற்படும் வலியைத் தடுக்கலாம். அடிக்கடி சிறுநீர் கழித்தாலும் தண்ணீர் நிறையக் குடிக்க வேண்டும். தாகத்தை குறைப்பதற்கு குளிர்பானங்கள் குடிப்பதை தவிர்க்கவேண்டும் கீரை வகை கள், பேரீச்சை, பால் மற்றும் பால் பொ ருட்கள், உலர் பழங்கள், கொட்டை வகைகள், மீன் மற்றும் முழு தானியங்கள் சாப்பிடுவதன் மூலம் மூட்டுவலி பிரச்சினையை தவிர்க்க முடியும் என்கின்றனர் நிபுணர்கள்.

திராட்சைப் பழத்தில் அதிக அளவு ஆன்டிஆக்ஸிடென்டுகள் காணப்படுகின்றன. வலி ஏற்படும் போது திராட்சை ஜூஸ் சாப்பிடுவதன் மூலம் வலி கட்டுப்படுவதோடு நிவாரணம் கிடைக்கும்.

சித்தரத்தை, அமுக்காரா, சுக்கு மூன்றையும் சம அளவில் எடுத்து பொடி செய்து இரண்டு கிராம் அளவு பொடியை காலை, மாலை இரண்டு வேளையும் சாப்பிட்டால் மூட்டு வலி மற்றும் வாத நோய்கள் குணமாகும்.

முடக்கத்தானும், பிரண்டையும் மூட்டுவலிக்கு நிவாரணம் தரக்கூடியவை. பிரண்டைக்கீரை, முடக்கத்தான் கீரை மற்றும் சீரகம் சேர்த்து தலா 10 கிராம் அளவுக்கு எடுத்து அரைத்து காலை நேரத்தில் சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி குணமாகும்

Share this post


Link to post
Share on other sites
jdlivi    50
பாத வெடிப்பு குணமாக மருத்துவ குறிப்புகள் :-

தரையைச் சுத்தம் செய்யப் பயன்படும் சில சோப் ஆயிலில் உள்ள கெமிக்கல், கால்களில் பட்டால் ஒரு சிலருக்கு வெடிப்பு உண்டாகும்.

கடினமான செருப்பு அணிவதாலும் பாத வெடிப்புகள் வரும். சிலர் பாதங்களை சுத்தமாக வைத்து கொள்வது இல்லை.இதனாலும் பாத வெடிப்புகள் வரும்.

அதை போக்க சில எளிய வழிகள் இதோ:

மருதாணியை நன்கு அரைத்து வெடிப்பு உள்ள இடங்களில் தேய்த்து உலர விடவேண்டும் பின்பு தண்ணீரால் கழுவி வர நாளடைவில் பித்த வெடிப்பு குணமாகும்.

பாதம் தாங்கும் அளவிற்கு தண்ணீரை சூடுபடுத்தி, அதில் சிறிது உப்பும் எலும்பிச்சை சாறும் சேர்த்து அதில் பாதத்தை வைத்திருந்து பின்பு சொரசொரப்பான பொருட்களால் தேய்த்து வந்தால் கெட்ட செல்கள் உதிரும்.

வேப்பிலை, மஞ்சள் ஆகியவற்றுடன் சிறிது சுண்ணாம்பு சேர்த்து அரைத்து, விளக்கெண்ணெய் சேர்த்து வெடிப்பு ஏற்பட்ட பகுதிகளில் தேய்த்து வந்தால் பித்த வெடிப்பு குணமடையும். பப்பாளி பழத்தை நன்கு அரைத்து அதனை பாதங்களில் வெடிப்பு உள்ள பகுதிகளில் நன்கு தேய்த்து வர வெடிப்பு குணமாவதுடன் எரிச்சல் குறையும்.

தரமான காலணிகளை பயன்படுத்துவதன் மூலம் வெடிப்புகளை தவிர்க்கலாம். விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் சம அளவில் எடுத்துக்கொண்டு அதில் மஞ்சளை சேர்த்து பாதத்திற்கு தடவி வந்தால் வெடிப்பு ஏற்படாது. இரவு நேரங்களில் படுக்க செல்லும் முன்பு காலை சுத்தப்படுத்தி சிறிது தேங்காய் எண்ணெய் தடவி வந்தால் வெடிப்பு வருவதை தவிர்க்கலாம்.

தினமும் குளித்ததும் பாதத்தை துணியால் துடைத்து பின் விளக்கெண்ணெய் தேய்த்து வந்தாலும் வெடிப்பை தவிர்க்கலாம்.

ஒரு நாள் விட்டு ஒரு நாள் எலுமிச்சை பழ தோலால் பாதங்களை நன்றாக தேய்த்து கழுவ வேண்டும். இது வெடிப்பில் உள்ள அழுக்குகளை நீக்கி, பாதத்தை சுத்தமாக்கும் மேலும் கிருமிகளை ஒழிக்கும். கடுகு எண்ணெயை தினமும் கால், கைகளில் தேய்த்து கழுவி வந்தால், சொரசொரப்பு தன்மை நீங்கி, மிருதுவாகும். முதல் நாள் பாத்திரம் தேய்க்கும் நாரில் தயிரை தொட்டு உள்ளங்காலில் தேய்க வேண்டும்.

மறுநாள் தண்ணீரில் கல் உப்பைப் போட்டு நாரில் தொட்டு தேயுங்கள். தொடர்ந்து இப்படி மாறி மாறி செய்து வர, பாதம் மெத்தென்று ஆகும். வெந்தயக் கீரையை அரைத்து கை, கால்களில் அப்பி பின் தேய்த்து கழுவி வந்தாலும், முரட்டுத் தன்மை போய் கை, கால்கள் பளிச்சென்று மாறும். மருதாணி பவுடருடன் டீத்தூள், தேங்கா