Jump to content

வனு-அற்று (Vanuatu)


Recommended Posts

சுற்றுலாப்பயணிகள் பெரிய தீவான தலைனகர் போட் விலா உள்ள Efate தீவிற்கும், Tanna islandற்கும் தான் விரும்பிப்பயணிப்பார்கள். Tanna தீவில் எரிந்துகொண்டிருக்கும் எரிமலைக்குளம்பினைப் பார்க்களாம்.

இத்தீவிற்கு போட் விலாவில் இருந்து விமானம் ஒவ்வொரு நாளும் புறப்படும். அங்கே சென்று ஒரு நாள் தங்கி இரவில் சிறு விமானத்தில் இருந்து எரியும் எரிமலைக்குளம்பினைப் பார்க்கலாம்.

போட் விலாவிற்கு அருகில் இருக்கும் சிறு தீவுகளுக்கும் சுற்றுலாப்பிரயாணிகள் செல்வார்கள். இச்சிறுதீவுகளுக்கிடையில் அடிக்கடி இலவசப்படகுச் சேவைகள் நடைபெறும். சில தீவுகளில் முழு நிலப்பரப்பில் விடுதிகள் மட்டுமே உள்ளது.

p3060237yn6.png

p3070310wx6.png

p3050079lo4.png

Link to comment
Share on other sites

  • Replies 290
  • Created
  • Last Reply

உலகில் கடலுக்கடியில் அமைக்கப்பட்ட ஒரே ஒரு தபால் நிலையம்(The world's first (and only) underwater post office ) HIDEAWAY ISLAND எனும் தீவில் உள்ளது. Efate தீவுக்கு மிக அருகில் உள்ள இத்தீவில் உள்ள இத்தபால் நிலையத்துக்கு நீச்சல் தெரிந்தவர்கள் நீருக்குள் நீந்தி நீர் உட்புகமுடியாத தபால்களினை(waterproof postcards) இத்தபால் நிலையத்தினுடாக அனுப்பலாம். படத்தில் கடலின் நடுவே தெரியும் நிலப்பரப்பு HIDEAWAY ISLAND.

p3040042xj0.png

p3050081jp1.png

Link to comment
Share on other sites

இங்கு அமெரிக்கா, ஐரோப்பியா(பிரித்தானியாவைத் தவிர) நாடுகளினைப்போல இன்னாட்டிலும்[right hand side of the road] வலது பக்கத்தில் வாகனங்கள் ஒடவேண்டும்.

p3080356ab6.png

Link to comment
Share on other sites

போட் விலாவில் உள்ள வனுவற்று சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் இறங்கும் போது அவர்களை வரவேற்று 'வரவேற்பு கீதங்கள்' பாடி இசைக்கருவிகளினை மீட்டி வரவேற்பார்கள். விமான நிலையத்தில் இருந்து குளிரூட்டப்பட்ட சொகுசுப் பேருந்தில் ஏற்றி விடுதியிற்கு கூட்டிச்செல்வார்கள். நான் இருந்த விடுதியிற்கு தங்க வரும் பயணிகளுக்கு, அவர்களது இனிமையான குளிர் பானத்தினைக் குடிக்கத்தந்து 'வரவேற்பு கீதங்கள்' பாடி வரவேற்பார்கள். சில சுற்றுலா இடங்களுக்குச் செல்லும் போதும் வரவேற்பு கீதங்கள் பாடுவார்கள். படத்தில் இருப்பது விமான நிலையத்தில் இறங்கும் பயணிகளினை வரவேற்கும் காட்சி.

p3030003fj1.jpg

Link to comment
Share on other sites

போட் விலாவில் உள்ள விடுதிகளில் அதிக வசதியுள்ள 4 நட்சத்திர விடுதிகளாக(Luxury Accommodation Hotels) Iririki Island Resort ,Le Lagon Resort,Le Meridien இருக்கிறது. படத்தில் தெரியும் சிறு தீவில் உள்ள நிலப்பரப்பில் அமைந்திருப்பது Iririki Island Resort.இதற்கு இலவசப்படகில் தான் செல்லவேண்டும் .

p3050078wo8.jpg

Link to comment
Share on other sites

நான் தங்கியிருந்த விடுதி 75 ஏக்கர் நிலப்பரப்பைக்கொண்டதும் பல பயன் தரும் மரங்கள் நிறைந்ததும், பசுபிக் சமுத்திரத்துடன் இணையும் ஆழம் குறைந்த ஏரியான (Lagoon) எரகொரின் (Erakor) ஒரு பக்கத்தில் அமைந்ததுமான Le Lagon Resort ஆகும். 140 விருந்தினர் தங்கும் அறைகள் உடைய இந்த விடுதியில் மேலதிகமாக 4 அறைகள் தண்ணீரின் மேலே அமைந்திருக்கின்றன. யப்பான் நாட்டினைச் சேர்ந்த ஒருவர் இந்த விடுதியின் உரிமையாளர்.

p3040021mx2.jpg

p3040020wf9.jpg

p3070319ec1.jpg

p3070322kn8.jpg

Link to comment
Share on other sites

வனு-அற்று மக்கள் செம்பரத்தம் பூவினைக்காதில் அணிவதுண்டு. திருமணம் செய்தவர்கள் வலது காதில் அணிவார்கள். இடது காதில் திருமணம் செய்யாதவர்கள் அணிவார்கள். நான் தங்கியிருந்த அறைக்குச் சென்றபோது அங்கே கட்டிலில் இரண்டு செம்பரத்தம் பூக்களை வைத்திருந்தார்கள்.

p3030005zt5.jpg

Link to comment
Share on other sites

Le Lagon Resortல் காலையில் இருந்து இரவு வரை ஒவ்வொரு நாளும் எதாவது நிகழ்ச்சிகள் நடைபெறும். ஒவ்வொரு நிகழ்ச்சிகள் பற்றிய தகவல்கள், நேரம் பற்றி முதல் நாளே அறிவிப்பார்கள். தேங்காய் பிடுங்குவது எப்படி?, நண்டுகளுக்கிடையே ஒட்டப்போட்டி, BISLAMA மொழி கற்றல், வனு-அற்று கீதங்கள் படித்தல், தண்ணீரில் இருந்து வலைப்பந்தாட்டம் விளையாடுதல் என நிகழ்ச்சிகள் நடைபெறும். இரவு வெளிச்சத்தில் BISLAMA மொழிப்பாடல்கள் பாடிக்கற்கும் நிகழ்ச்சியினை இப்படத்தில் காண்கிறிர்கள்.

p3050167mf9.jpg

ஆங்கில மொழியும் - BISLAMA மொழியும்

Hello - Alo

Goodbye - Tata

Please - Plis

Good morning - Gud morning

Good night - Gud naet

Excuse me - Skiusmi

Thank you very much - Tank yu tumas

And - Mo

How much? - Hamas?

Do you have...? - Yu gat...?

I don't understand - Mi no savee

Child - Pikinini

Drunk - Fuldrong

Fish - Fis

See you - Lukim yu

I am very sorry - Sori tumas

What is your name? - Wanem nem blong yu?

My name is... - Nem blong mi...

Big - Bigfala

Food - Kae-kae

This food is delicious - Kae-kae emi gud

Drinking water - Kolwata

Seawater - Solwata

Seagull - Pigeon blong solwata

Excellent - Nambawan

I am hungry/thirsty - Mi wantem samting long kakae/dring

Call a doctor/police! - Singaot doctor/polis!

You must do good work every day - Yu mas makem gud work evri dai

p3050165nk6.jpg

Link to comment
Share on other sites

வெளினாட்டு சுற்றுலாப்பயணிகளின் திருமணமும் Le Lagon Resortல் நடைபெறுவதுண்டு. மணப்பெண் அழங்கரிக்கப்பட்ட சிறு படகில் வந்து கரையில் இருக்கும் மணமகனை திருமணம் செய்வார்.

p3040063nu1.jpg

p3040064vh1.jpg

Link to comment
Share on other sites

ஒவ்வொரு நாள் மாலை 6மணிக்கு கையில் தீ பந்தம் ஏந்தி வந்து விளக்குகளுக்கு ஒளி ஏற்றும் நிகழ்வு நடைபெறும்.

p3040067yg9.jpg

p3040068ia6.jpg

p3040069pu3.jpg

Link to comment
Share on other sites

அதன் பிறகு வேறு ஒரு குழு வந்து மிருகங்களினை வேட்டையாடுவது போலக் கத்திக் கொண்டு மேள தளங்களுடன் ஆடுவார்கள்.

p3040070gg5.jpg

p3040072ra6.jpg

p3040073nv4.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Le Lagon Resortல் காலையில் இருந்து இரவு வரை ஒவ்வொரு நாளும் எதாவது நிகழ்ச்சிகள் நடைபெறும். ஒவ்வொரு நிகழ்ச்சிகள் பற்றிய தகவல்கள்' date=' நேரம் பற்றி முதல் நாளே அறிவிப்பார்கள். தேங்காய் பிடுங்குவது எப்படி?,

வரப்போகும் தமிழீத்தில் சுற்றுலா செல்பவர்களுக்கு தேங்காய் பறித்தல், வேலி பின்னல், பாக்குமரத்தில் இருந்து பாக்கு ஆயூதல் போன்றவற்றையும் காண்பிக்கலாம் தானே

Link to comment
Share on other sites

ஆனால் உந்த கள் பிலாவில குடிக்கிறத மட்டும் காட்டிக் குடுக்கத் தேவயில்ல எண்டு நினைக்கிறன்.

அரவிந்தன் படங்களுக்கு நன்றி, உங்க இருப்பவர்கள் பூர்வ குடிகளா? இங்க எப்படி இத்தின மொழிகள் வந்தன?

அவுஸ்திரேலியாவில் இருக்கும் பழங்குடியினருக்கும் ( அப்போரிகினிஸ்) இவர்களுக்கும் சம்பந்தம் இருக்கா?

Link to comment
Share on other sites

அடப்பாவி கந்தப்ஸ்.....

இப்ப கொஞ்சக்காலமா.. வேலிச்சண்டைகள் ஓய்ந்திருக்கு...

வேலி பின்னப் பழக்குவம் என்று தொடங்கி வேலிப்பிரச்சினைகளை ஆரம்பித்துவைத்தீரோ......

பிறகு நடக்கிறதே வேற....

:lol::lol::lol:

பொட்டுக்குள் புகுந்த ஆதி

Link to comment
Share on other sites

அரவிந்தன், அழகிய படங்கள், அறியாத ஒரு நாட்டை பற்றி நல்ல விளக்கங்கள்.

[

வரப்போகும் தமிழீத்தில் சுற்றுலா செல்பவர்களுக்கு தேங்காய் பறித்தல், வேலி பின்னல், பாக்குமரத்தில்

கந்தபூபூ நீங்க அப்பூ இல்லை...... எண்டதுக்கு மேல் 2ம் சாட்சி... :lol::lol:

அது வேலி இல்லை கிடுகு பின்னல்

பாக்கு மரம் எண்டுறதில்லை -கமுகு எண்டு தான் சொல்லுறது

Link to comment
Share on other sites

வனு-அற்றில் அங்கு வலரும் மரத்தின் வேரினைக்காச்சி வரும் சாற்றின் மூலம் உருவாகும் குடிவகையான கவா தயாரிப்பது எப்படி என்றும் சில இடங்களில் சுற்றுலா காட்டினார்கள். நுவரெலியாவில் தேயிலைத்தோட்டத்திற்கு சென்றிருந்தால் சுற்றுலாப் பயணிகளுக்கு தேயிலை இலையில் இருந்து எவ்வாறு தேயிலை தயாரிப்பது என்று விளங்கப்படுத்துவார்கள். அவ்வாறே வனு-அற்று கவாவினைப்போல ஈழத்திலும் பனை மரத்தில் இருந்து கள்ளு இறக்குவது, நொங்குசாப்பிடுவது, பணித்தம் பனியாரம் செய்வது, பனம்பாத்தி .... எனவும், கடகம், பெட்டி, பாய் பின்னுவது போல தமிழ் மக்களின் தொழில்களினையும் சுற்றுலா பார்க்க வரும் வேறு நாட்டவர்களுக்கு காட்டலாம்

Link to comment
Share on other sites

ஆனால் உந்த கள் பிலாவில குடிக்கிறத மட்டும் காட்டிக் குடுக்கத் தேவயில்ல எண்டு நினைக்கிறன்.

அரவிந்தன் படங்களுக்கு நன்றி, உங்க இருப்பவர்கள் பூர்வ குடிகளா? இங்க எப்படி இத்தின மொழிகள் வந்தன?

அவுஸ்திரேலியாவில் இருக்கும் பழங்குடியினருக்கும் ( அப்போரிகினிஸ்) இவர்களுக்கும் சம்பந்தம் இருக்கா?

ஏற்கனவே குறிப்பிட்டது போல இங்கு இருப்பவர்களில் 94 வீதமான மக்கள் பூர்வீகக்குடிகள். படத்தில் காண்பது போல அவர்கள் உடைகள் அணிவதில்லை. அவர்கள் நாகரிகம் அடைந்திருக்கிறார்கள்.சுற்று

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரவிந்தன், அழகிய படங்கள், அறியாத ஒரு நாட்டை பற்றி நல்ல விளக்கங்கள்.

யாராவது கண்டுபிடிப்பார்களா என்று நான் சோதித்துப்பார்த்தனான். (விழுந்தும் எனக்கு மீசையில் மண் ஒட்டவில்லை. மீசையினை வழித்துவிட்டதினால்)

Link to comment
Share on other sites

Le Lagon Resort இன் ஒருபக்கத்தில் உள்ள Erakor குடாவின்(Lagoon) இருந்து இயந்திரப்படகில் Erakorன் கரையோரமாக தினமும் காலை 10 மணி முதல் கிட்டத்தட்ட 2 மணித்தியாலம் பயணத்தினை Le Lagon Resort நடத்துகிறார்கள். முன்பு குறிப்பிட்டது போல இயந்திரப்படகு என்பதினால் கட்டணம் அறவிடப்படுகிறது. படகின் அடியில் சில பகுதி கண்ணாடியினால் செய்யப்பட்டுள்ளது. அதனூடாக இக்குடாவில் உள்ள மீன்களினை(கடல் வளத்தினை)ப்பார்க்கலாம். படத்தில் தெரிவது இயந்திரப்படகின் அடியில் உள்ள கண்ணாடிப்பகுதி.

p3040018mb7.jpg

Link to comment
Share on other sites

படகில் போகும் போது எடுக்கப்பட்ட படம்

படத்தில் தெரிவது Le Lagon Resort

p3040019sf9.jpg

Link to comment
Share on other sites

படகில் போகும் போது பல் வேறு அழகிய வீடுகளினைக் கண்டேன். வெள்ளைக்காரர்களும் சீனர்களும் இவ்வீடுகளில் வாழ்ந்து வருகிறார்கள்.

p3040022sn2.jpg

p3040026qu9.jpg

Link to comment
Share on other sites

படகில் செல்லும் போது எடுக்கப்பட்ட மேலதிகப்படங்கள்

p3040023bz5.jpg

p3040024iz2.jpg

p3040027qr2.jpg

p3040029jf8.jpg

p3040031yq6.jpg

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆரம்பத்தில் புலிகளை சாடியே தொடர் சென்றது, ஆனால் அதில் வந்த காலபதிவுகள்  பெரும்பாலும் உண்மையாகவே இருந்ததினால் புலம்பெயர் நாடுகளில் அதற்கான வாசகர்கள் படிப்படியாக அதிகமாயினர். தொடரின் ஆரம்பத்தில் எந்த கிட்டுவை சாடி வெளிவந்ததோ பின்னாளில் அதே கிட்டுவை ஆஹா ஓஹோ எனு புகழ்ந்து அற்புதன் எழுத தொடங்கினார் படிப்படியாக புலிகள் சார்பு செய்திகளை வெளியிட  தொடங்கினார் அற்புதன், ஒருகட்டத்தில் புலிகளின் உத்தியோகபூர்வ பத்திரிகை ரேஞ்சுக்கு புலி சார்புநிலைக்கு  வந்தது தினமுரசு. தினமுரசு இதழின் கடல்கடந்த விற்பனை எகிற தொடங்கியது,  காலப்போக்கில்  ஐரோப்பிய அமெரிக்க தமிழர்கள் தினமுரசு பத்திரிகையின் வரவுக்காக தவம் கிடக்க தொடங்கினர், புலம்பெயர் தேசத்தில் இலங்கையிலிருந்து வரும் ஒரு நாளிதழுக்காக  மக்கள் அலை மோதியது முதலும் கடைசியும் தினமுரசுக்கு மட்டுமேயாகதான் இருக்க முடியும். கொஞ்சம் லேற்றா போனால் விற்று முடிந்துவிடும் நிலைக்கு இருந்தது. ஜெயசிக்குறு ஆரம்ப காலகட்டத்தில் அசரடிக்கும் துல்லியமான கணிப்புக்களை வெளியிட்டார் அற்புதன், அந்த காலகட்டத்திலேயே கொல்லப்பட்டார். அற்புதனின் புலி சார்பு நிலை தொடருக்கு புலம்பெயர் தேசத்தில் தினமுரசுக்கு எதிர்பாராமல் கொட்டிய வெளிநாட்டு காசுதான் பிரதானமான காரணம். அதனால் டக்ளசினால் எச்சரிக்கப்பட்டதாகவும், கட்சிவேறு பத்திரிகை தொழில்வேறு என்று அற்புதன் டக்ளசுடன் முரண் பட்டதாகவும் அதனாலேயே டக்ளஸ் குழுவினால் சுட்டுகொல்லப்பட்டதாகவும் கதை உலாவியதுண்டு. அதை உறுதிப்படுத்தும் விதமாக ஜெயசிக்குறு சமரில் புலிகளின் வீரம்பற்றி வந்த தொடர் , அற்புதன் கொல்லப்பட்ட பின்னர் வந்த இதழ்களில் ’’ பூனையொன்றை ஒரு அறையில் மூடிவிட்டு ஒரு ஜன்னலை திறந்து வைத்துக்கொண்டு மிரட்டினால், அது ஜன்னல் வழியாக ஓடிவிடும்,  படையினரின் பின்வாங்கலுக்கு அதுதான் காரணம்’’ மற்றும்படி புலிகள் வீரம் என்றெல்லாம் கிடையாது என்ற அர்த்ததில் செய்தி வந்தது, அத்துடன் புலி சார்பாக செய்தி வெளியிடுவதும் நின்று போனது கூடவே தினமுரசு வியாபாரமும் படுத்துக்கொண்டது, அதன்போதே புரிந்துவிட்டது அற்புதன் என்ன காரணத்துக்காகவும் யாராலும் கொல்லப்பட்டிருப்பார் என்பது, உலவிய வதந்தியும் ஓரளவு உண்மையாக போனதாகவும் பேசிக்கொண்டார்கள். ஆனால் புலிகள் அற்புதன் புலிசார்பு நிலையில் தொடர் எழுதினாலும் அதை கண்டுகொள்ளவேயில்லை,  அதனால்தான் அவர் கொல்லப்பட்டபோது புலிகளின் குரல் செய்தியில் ‘’பாராளுமன்றத்தில்  அவசரகாலநிலை சட்டத்துக்கு ஆதரவாக கையுயர்த்திவிட்டு வெளியே வந்து போராட்டத்திற்கு ஆதரவாக எழுதும் அற்புதன் கொல்லப்பட்டார் ‘’ எனு செய்தி பகிர்ந்தார்கள்.  
    • உற‌வே நானும் ப‌ல‌ வ‌ர‌லாறுக‌ளை தேடி தேடி ப‌டிச்ச‌ நான் ஆனால் நான் ஒரு போதும் இல‌வ‌ச‌ அறிவுறை சொல்வ‌து கிடையாது................அதுக்காக‌ உங்க‌ளை த‌ப்பா சொல்லுகிறேன் என்று நினைக்க‌ வேண்டாம் பொதுவாய் சொல்லுறேன்................. 500வ‌ருட‌த்துக்கு முத‌ல் உல‌க‌ம் எப்ப‌டி இருந்த‌து என்று பாட‌சாலையில் ப‌டித்த‌ கால‌த்தில்  டெனிஸ் வாத்தியார் எங்க‌ளுக்கு சொல்லி த‌ந்த‌வ‌ர்................. நானோ புல‌வ‌ர் அண்ணாவோ இந்தியா மீது இருக்கும் கோவ‌த்தில் எழுத‌ வில்லை கேடு கெட்ட‌ ஆட்சியால‌ர்க‌ளால் இந்தியா என்ற‌ நாடு நாச‌மாய் போச்சு அத‌க்கு முத‌ல் கார‌ண‌ம் இந்திய‌ அள‌வில் ஊழ‌ல்...............ஊழ‌ல் இருக்கும் நாடு சிறு முன்னேற்ற‌த்தை கூட‌ காணாது................. ஒரு சில‌ சிற‌ப்பு முகாமில் வ‌சிக்கும் ஈழ‌ த‌மிழ‌ர்க‌ளுக்கு க‌ழிவ‌ரை இல்லை அதுக‌ள் காட்டுக்கு போக‌ வேண்டிய‌ நிலை.............இது தான் திராவிட‌ம் ஈழ‌ ம‌க்க‌ளை  க‌வ‌ணிக்கும் ல‌ச்ச‌ன‌ம்.................
    • கலாயோகி ஆனந்த குமாரசுவாமி பற்றி சில வரிகள் எழுத வேண்டும் என்று நினைத்திருந்து, மறந்துவிட்டேன். நீங்கள் ஞாபகப்படுத்தி விட்டீர்கள்.........👍
    • IBC தமிழ் நேர்காணல். Sharmila Vinothini Thirunavukarasu மிகவும் நேர்த்தியான நேர்காணலுக்கு நன்றி. #நீ_கொன்ற_எதிரி_நான்_தான்_தோழா புத்தகம் பற்றிய உரையாடலின் நடுவே கேட்கப்பட்ட ஒருசில பிற கேள்விகளுக்கும் எனக்கு தெரிந்த பதில்களை வழங்கினேன் - நன்றி IBCTamil.com   தியா - காண்டீபன்    
    • 🤣.... இது தானே அவர்களின் வழக்கம். டெய்லி மிர்ரர் அற்புதமான கார்ட்டூன்களை தொடர்ந்து போட்டுக் கொண்டு வருகின்றது.....👍
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.