Jump to content

தாலி கட்டிக் கொள்ளும் வயசுப் பையன்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"ஏனுங்க மாமா... இன்னிக்கு என் தாலிய பிரிச்சுக் கட்டணும். சாயுங்காலம் மறக்காம வந்துடுங்க. இன்னிக்குப் போச்சுன்னா, அப்புறம் அடுத்த மாசம்தான் நல்ல நாள் வரும். ஓ.கே.வா? சரி, ஒரு உம்மா கொடுடா ப்ளீஸ்..." _ எதிர்முனையில் இச்சப்தம் இனிப்பாகக் கேட்டதும், செல்போனை கட் செய்து, பேண்ட்டுக்குள் செருகியபடி ஸ்கூலுக்குள் நுழைகிறான் அந்த மாணவன்.

முதல் பாராவைப் படித்ததும், 'ஏதோ... புது லவ் மேரேஜ் ஜோடியா இருக்கும்' என்ற முடிவுக்கு வந்த நீங்கள், 'அந்த மாணவன்' என்ற வார்த்தையைக் கடந்ததும் கொஞ்சம் அதிர்ந்துப் போயிருப்பது நன்றாகவே தெரிகிறது. அதிர்ச்சியைக் கொஞ்சம் மீதி வையுங்கள். ஏனெனில், 'ஏனுங்க மாமா' என்று அழைத்துக் காதல் பொங்கப் பேசியதும்கூட ஒரு மாணவன்தான்.

ஆண் உருவத்துக்குள் பெண் மனதோடு அலையும் 'அந்த' வட்டாரத்தை, 'ஹோமோ வெறியர்கள்' என்று அருவருப்புடன் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அவர்களோ, படிப்படியாகத் தங்களைத் தயார் செய்து, பாரம்பரியம், கலாசாரம், மரபு என்று அத்தனை விஷயங்களுக்கும் இன்று சவால் விட ஆரம்பித்துள்ளனர். அவற்றில் ஒன்றுதான் படு ஸ்பீடாகப் பரவி வரும் 'துமாலி கட்டும்' வைபவம். தாலி கட்டிக் கொள்வதைத்தான் இப்படித் 'துமாலி கட்டுதல்' என்றழைக்கின்றனர். விஷயத்தைக் கொஞ்சம் விரிவாகப் பார்ப்போமா? (இங்கே நாம் சந்திக்கப் போகும் நபர்களின் வேண்டுகோளை ஏற்று, அவர்களின் உண்மையான பெயர்களை மாற்றியுள்ளோம்).

ஜோடி_1

ஈரோட்டிலிருந்து கோவை செல்லும் வழியிலுள்ள ஒரு மெட்ரிக் பள்ளியில், பன்னிரண்டாம் வகுப்புப் படிக்கும் மாணவன் நித்யானந்தம். இயல்பிலேயே அவனுக்குள் பெண் தன்மை அதிகம். இதனால் அவனைச் சுற்றியுள்ள அனைவரும் அவனைத் தள்ளிவைத்துப் பார்க்க, அவனுக்கு வாழ்க்கை வெறுத்துப் போனது. தினமும் காலையில் ஸ்கூலுக்குப் போவதற்காக, இவன் நிற்கும் பஸ்_ஸ்டாப்பில் வந்து நிற்பவர்களில் விஷாலும் ஒருவன். விஷால், ஈரோட்டிலுள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்ஸி. மூன்றாமாண்டு படிக்கிறான். நண்பர்களின் புறக்கணிப்பு, ஹோம் ஒர்க் டென்ஷன் என்றெல்லாம் அசைபோட்டபடியே பஸ்_ஸ்டாப்பிற்கு வரும் நித்யானந்தம், விஷாலைக் கண்டதும், எல்லாவற்றையும் மறந்துவிடுவான். தன்னுடன் படிக்கும் எந்தப் பையனும் விஷால் அளவுக்கு அழகில்லை என்பது நித்யானந்தத்தின் அசைக்க முடியாத எண்ணம். இந்நிலையில் விஷாலும், அவன் பக்கம் திரும்பி, விழுங்கிவிடுவது போன்று அவ்வப்போது பார்ப்பான்.

கொஞ்சம் நாட்களில் இரண்டு பேருக்கும் இடையில் நல்ல நெருக்கமாகிப் போனது. விஷால் பஸ் சீட்டில் உட்கார்ந்ததும், அவன் மடியில் இவன் உட்கார்ந்துகொள்ள ஆரம்பித்தான். அந்தச் சமயங்களில் விஷாலின் கை தன் இடுப்பை வளைத்துப் பிடித்திருப்பதில் நித்யானந்தத்துக்கு உலகம் மறந்து போகும். ஒரு ஞாயிற்றுக்கிழமை இரண்டு பேரும் அவுட்டிங் போயிருந்த நேரத்தில், தன் காதலை விஷாலிடம் நித்யானந்தம் தெரிவிக்க, அப்போதே அதை ஏற்றுக்கொண்டான் விஷால். அன்றிலிருந்து அடிக்கடி வெளியூர் போவதும், லாட்ஜில் ரூம் எடுத்துத் தங்குவதும் தொடர்ந்தது.

இந்நிலையில்தான், கடந்த, திங்கட்கிழமையன்று இருவரும் திருச்செங்கோடு மலைக் கோயிலில் திருமணம் செய்து கொண்டார்கள். அதைப் பற்றி நம்மிடம் பேசிய விஷால், "எனக்கு என் காலேஜ்ல ரொம்ப நெருக்கமான கேர்ள்ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்க. அவங்க கூடவும் நான்அவுட்டிங் போவேன். ஆனா, நித்யா (நித்யானந்தம்) எனக்காகவே வாழுறா. அதனாலதான், நித்யா கேட்டதும் தாலி கட்ட சம்மதிச்சேன். மஞ்சள் கயிறுல எங்க முறைப்படி தாலி செஞ்சு, கோயிலுக்கு வெளியே நின்னு கட்டினேன். இதுல ரெண்டு பேருக்குமே சந்தோஷம்தான். இப்போ நாங்க ரெண்டு பேரும், முழுமையான கணவன், மனைவி" என்றான் சந்தோஷம் பொங்க. நித்யாவிடம்....ஸாரி... நித்யானந்தத்திடம் பேசினோம். "என்னையும் ஒரு பொண்ணா மதிச்சு அவர் தாலி கட்டுனதே பெரிய விஷயம். எனக்கு இந்தத் தாலியை எப்பவுமே கழுத்துல போட்டிருக்கணும்னு ஆசைதான். ஸ்கூல்ல எந்தப் பையனையும் என் பக்கம் வரவிடமாட்டேன். அவனுங்ககிட்டயிருந்து தப்பிடலாம். ஆனா, எங்க கிளாஸ் பொண்ணுங்ககிட்டயிருந்து தப்பிக்கிறதுதான் கஷ்டம். அவளுங்க தாலியப் பார்த்துட்டா சிக்கல்தான். அதே மாதிரி, வீட்ல அம்மாகிட்டயும் மாட்டிப்பேனோனு பயமாயிருக்கு" என்றா(ள்)ன் வெட்கம் விலகாமல்.

ஜோடி_2

ஈரோட்டில் செல்போன் விற்பனை மையம் நடத்திவரும் கணேஷ், இப்போது தன் பெயரை நயன்தாரா என்று மாற்றிக் கொண்டுள்ளார். முப்பது வயதை நெருங்கிவிட்ட இந்த நயன்தாரா திருமணம் செய்துகொண்டுள்ளது, கோவையைச் சேர்ந்த பாஷாவை. மொபைல் வாங்கும் கஸ்டமராக வந்த பாஷா, நயன்தாராவின் அழகில் மயங்கி, பிறகு அவருக்கே கஸ்டமராகிப் போனார். நயன்தாராவுக்குப் பல பாய் ஃப்ரெண்ட்ஸ் இருந்தாலும் கூட, தாலிகட்டிக் கொண்டது பாஷாவிடம் மட்டும்தான். கடந்த மே மாதம் பேரூர் கோயிலுக்கு வெளியே இரவு நேரத்தில் தாலி கட்டிக் கொண்டுள்ளனர். அப்படியே ஐந்து நாட்கள் ஊட்டிக்கு ஹனிமூனும் போய் வந்துள்ளனர். இப்போது நயன்தாராவுக்கு மட்டுமல்ல... அந்த மொபைல் கடைக்கே, திரைமறைவு ஓனர் பாஷாதான். பாஷாவிடம் 'உங்களுக்குப் பிடித்தது எது?' என்று நயன்தாராவிடம் கேட்டால், "அவரோட க்யூட்டான முன் வழுக்கையும், நீளமான விரல்களும்தான்" என்கிறா(ள்)ர் வெட்கம் கலந்த சிரிப்புடன்.

இப்படி ஈரோடு டீ மாஸ்டரிடம் தாலி கட்டிக் கொண்ட நாமக்கல் பாலிடெக்னிக் மாணவன், சேலம் மெடிக்கல் ரெப் ஒருவருக்குத் தாலி கட்டிய கோபிசெட்டிபாளையம் மினிபஸ் டிரைவர் என்று, பல ரக ஜோடிகளைப் பற்றிச் சொல்லிக்கொண்டே போகலாம். இங்கே ஒரு விஷயத்தைத் தெளிவாகக் கவனிக்க வேண்டும். இவர்கள் யாரும் முழுமையான அரவாணிகள் இல்லை. நிர்வாணம் (ஆண் உறுப்பை அறுத்துக் கொள்ளுதல்) செய்து கொண்டவர்கள்தான் முழுமையான அரவாணிகள். நாம் சந்தித்த இந்த நபர்கள், நிர்வாணம் செய்து கொள்ளாதவர்கள். அரவாணிகளுக்கு முந்தைய நிலையில் உள்ளவர்கள் எனலாம். நடை, உடை, ஆண்கள் மீதான மோகம் போன்றவற்றில் பெண்களை இமிடேட் செய்து கொண்டிருக்கும் இவர்கள், 'கோத்தி' என்று அழைக்கப்படுகிறார்கள். ஹோமோ செக்ஸில் ஆர்வமுள்ள ஆண்கள், இவர்களுடன் செக்ஸ் வைத்துக் கொள்கிறார்கள். அந்த ஆண்களை இவர்கள் 'பந்தி' என்று அழைக்கிறார்கள்.

ஈரோடு நகருக்குள் ஏகப்பட்ட கோத்திகள் இருந்தாலும், கிட்டத்தட்ட இருபது நபர்கள்தான் தாலியோடு அலைகிறார்கள். இதே போல் சேலம், கோவையிலும் துமாலி கட்டிக் கொண்ட கோத்திகள் இருக்கின்றனர். இவர்களின் தாலிகளில், இரண்டு மூன்று வகைகள் உண்டு. ஒரு சிலர், மஞ்சள் கயிற்றில் தாலியுடன் சேர்த்து மெட்டியையும் போட்டுக் கொள்கின்றனர்.

ஈரோட்டைப் பொறுத்தவரை, இப்படித் தாலிகட்டிக் கொண்டவர்கள் சந்தித்துக் கொள்ளும் முக்கியமான பாயிண்ட், பேருந்து நிலையம் அருகிலுள்ள வ.உ.சி. பார்க். வாரம் ஒருமுறை இவர்கள் இங்கே கூடி காதல், செக்ஸ், பாய் ஃப்ரெண்ட்ஸ் என்று அத்தனை விஷயங்களைப் பற்றியும் பகிர்ந்துகொள்கிறார்கள். அதை முடித்துவிட்டு ஷாப்பிங் போவது, ப்யூட்டி பார்லர் போவது என்று இவர்கள் பொழுது கழிகிறது. ப்யூட்டி பார்லருக்குப் போய் தங்களை அழகுப்படுத்திக் கொள்வதில் அதிக அக்கறை காட்டுகின்றனர்.

ஈரோட்டில் M S M (Male Social Moment Society) என்ற பெயரில் இந்தக் கோத்திகளை ஒருங்கிணைக்கும் தன்னார்வத் தொண்டு நிறுவனம் நடத்தி வரும் அசோக்கிடம் பேசினோம்.

"அரவாணிகளின் நல்வாழ்விற்காக, ஓர் அமைப்பை ஆரம்பித்து இயக்கி வருகிறோம். இதற்காக அரவாணிகளின் மத்தியிலிறங்கி ஆராயும்போதுதான் இந்த 'கோத்தி' என்ற பிரிவைப் பற்றித் தெரிய வந்தது. வெளியிலிருந்து பார்ப்பவர்கள் இவர்களைக் கேவலமாக நினைக்கலாம். ஆனால், உண்மையில் இவர்கள் மிகவும் பாவப்பட்ட ஜென்மங்கள்.

இந்த மாதிரி சிறுவர்களை ருசிப்பதற்கென்றே சமுதாயத்தில் ஒரு பெரும் கூட்டம் திரிகின்றது. நான் இதுவரை கவுன்சிலிங் செய்துள்ள பல 'கோத்தி' சிறுவர்கள், தங்கள் உறவினர்களாலும், அக்கம் பக்கத்துப் பையன்களாலும்தான் வலுக்கட்டாயமாக செக்ஸ§க்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மெல்லமா காதுக்குள்ளை இருக்கட்டும் ....

.... இங்கு லண்டனிலை "உண்டியலான்" ஜெயதேவனும், "சப் உண்டியலான்" விவேகானந்தனும் தாலி கட்டப்போகினமாம்!!!! வேறை யாருக்குமல்ல! மாறித்தானாம்!! அவ்வளவு நெருக்கமாம்!!! ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸூஊஊஉ....

சத்தம்

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

ஈழவன் எதற்கும் நீர் சேட்டு போட்டு கொள்ளும்.....

Link to comment
Share on other sites

ஈழவன் எதற்கும் நீர் சேட்டு போட்டு கொள்ளும்.....

அவர் சேட்டை விட்டுட்டார்!! :P :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.