Sign in to follow this  
KULAKADDAN

உணவு விளம்பரங்கள் - மக்களை ஏமாற்றும் யுக்தி.

Recommended Posts

நாளாந்தம் தொலைக்கட்சிகளில் பல்வேறு பட்ட விளம்பரங்களை எல்லோரும் பார்த்திருப்பீர்கள்/ பார்ப்பீர்கள். அவற்றில் பல உணவு பொருட்களை விளம்பரப்படுத்துபவை.

 

கனடாவில் அப்படியான உணவு விளம்பரங்களில் பல மக்களை ஏமாற்றி பொருகளை விற்கும் தந்திரம் கொண்டவையாக  இருக்கிறன. அதில் முதல் பத்து இடங்ககளை பெற்ற உணவு விளம்பரங்களை கனேடிய ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் பட்டியல் இட்டுள்ளது.

 

1. Maple Leaf Foods' Natural Selections

 

இந்த உணவு தயாரிப்பு நிறுவனம் பதப்படுத்தப்பட்ட இறைச்சி வகையை விற்கிறது (sausage/hotdog, ham, salami etc). இறைச்சி பதப்படுத்தலுக்கு நைத்திரேற்று சேர்க்கப்படுவது வழக்கம். இந்த நைத்திரேற்று இறைச்சிக்கு சிவப்பு நிறத்தை கொடுக்கும் பொருளுடன் (மயொகுளொபின் ) சேர்ந்து புதிய ஒரு சேர்வையை உருவாக்குகிறது. இந்த புதிய சேர்வை, மற்றும் நைத்திரேற்று என்பன புற்று நோயை உருவாக்கலாம் என அறியப்பட்டுள்ளது. இதனால் மக்களிடம் இந்த பொருட்களுக்கான மதிப்பு குறைந்து வருகிறது. இதை தவிர்க்க இயற்கையிலே நைத்திறெற்றை  கொண்ட செலரி விதைகள் (celery seed) ஐ இறைச்சி பதப்படுத்தலுக்கு சேர்த்து விட்டு , பதப்படுத்திய இறைச்சியில் எந்த செயற்கை இரசாயன பொருட்களும் இல்லை என்று சொல்லி விற்க முயல்கிறார்கள்.

 

 

2. Danone's DanActive

உடலில் இயற்கையான எதிர்ப்பு சக்தியை உறுதி படுத்தும் என்று சொல்லி விற்றார்கள்.

 

அமெரிக்காவில் தடிமன் காய்ச்சலை தடுக்கும் என சொல்லி விற்றதால் 21 மில்லியன் டோலர் வாடிக்கையாளருக்கு கொடுக்க வேண்டி வந்தது.

 

தயிர் யோகட்  போன்றவற்றில் இருக்கும் சில பக்ரீரியக்கள் உடலில் நோய் ஏற்படுவதை குறைக்கும், சமிபாட்டு தொகுதியில் ஏற்படும் தோற்று நோய்களான வயிற்றோட்டம் போன்றவை ஏற்படும் சந்தர்பத்தை குறைக்கும் என்றாலும், அவை நோய்க்கான மருத்துவம் அல்ல.

 

 

3. Carnation Breakfast Essentials

 

இந்த மென்பானம், 38 கிராம் சீனியை கொண்டது.

 

4. Oasis Health Break CholestPrevent juice

 

கொலஸ்திரோலை குறைக்க ஒவ்வொரு நாளும் 2 கிளாஸ் குடிக்க வேண்டும் என சொல்கிறார்கள். அப்படி 

குடித்தால் குடிப்பவர் மாதாந்தம் 1.5 கிலோ சீனியை குடித்திருப்பார்.

 

கொலஸ்திரோல் குறைகிறதோ இல்லையோ , உடல் நிறை கூடி இருக்கும்.

 

5. McCain Pizza Pockets

 

11 கிராம் கொழுப்பு கொண்டது.

 

ஏனையவை 

 

6. Praeventia cookies from Leclerc

 

7. Kraft Canada Inc.'s KD Smart

 

8. Wonder Plus White Loaf With Fibre

 

9. Kellogg's Nutri-Grain bars

 

10. Campbell's Healthy Request soup

 

 

http://www.cbc.ca/news/canada/story/2012/02/02/marketplace-lousy-labels-full.html

 

இதே போல இன்னும் பல இருக்கிறன. இவை சில உதாரணங்கள்.  

 

பல நாடுகளிலும் இப்படிபட்ட விளம்பரங்கள் வரும்.

 

யாழ் உறவுகள் உங்கள் நாடுகளில்  உள்ள உணவு விளம்பரங்கள் பற்றி இப்படி பட்டியல் இருந்தால் இணையுங்கள். பலருக்கும் உதவும்.

 

 

 

 

 

 

 

 

Edited by KULAKADDAN
  • Like 1

Share this post


Link to post
Share on other sites

கிறீன் ரீ குடிச்சால் கொலொஸ்ற்றோல் குறையும் எண்டு சொல்லினம் . என்ரை அவர் கார்டியோலிஸற்ட்டை போற நேரம் நானும் அவரோடை  போனன் . அப்ப இதைப்பதி டொக்ரறிட்டை கேட்டன் . அவர் சிரிச்சு போட்டு சொன்னார் அதிலை ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை எண்டு . அதே மாதிரி தானாம் இந்த பயோ உற்பத்தி சாமானுகளும் . ஆனால் எனக்கு ஒரு விசயம் விளங்கேலை . அப்ப எதைதான் நாங்கள் சாப்பிடிறது ?? நீங்கள் நல்ல விசயத்தை சொல்லிறதுக்கு நன்றி சொல்லிறன் .

Share this post


Link to post
Share on other sites

கிறீன் ரீ குடிச்சால் கொலொஸ்ற்றோல் குறையும் எண்டு சொல்லினம் . என்ரை அவர் கார்டியோலிஸற்ட்டை போற நேரம் நானும் அவரோடை  போனன் . அப்ப இதைப்பதி டொக்ரறிட்டை கேட்டன் . அவர் சிரிச்சு போட்டு சொன்னார் அதிலை ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை எண்டு . அதே மாதிரி தானாம் இந்த பயோ உற்பத்தி சாமானுகளும் . ஆனால் எனக்கு ஒரு விசயம் விளங்கேலை . அப்ப எதைதான் நாங்கள் சாப்பிடிறது ?? நீங்கள் நல்ல விசயத்தை சொல்லிறதுக்கு நன்றி சொல்லிறன் .

 

உங்க‌ள் இத‌ய‌ நிபுண‌ரின் ப‌தில் பூர‌ணமான‌ ப‌தில் அல்ல‌. ப‌ச்சைத் தேனீரில் "ஒட்சியேற்ற‌ எதிரிக‌ள்" (anti-oxidants) என‌ப்ப‌டும் ப‌தார்த்த‌ங்க‌ள் உண்டு. ந‌ம‌து உட‌லினுள் இய‌ற்கையாக‌வும் நாம் உட்கொள்ளும் உண‌வு ம‌ருந்துக‌ள் மூல‌மும் ஒட்சியேற்ற‌த் தாக்கிக‌ள் (reactive oxidant species) என‌ப்ப‌டும் ந‌ச்சுத் த‌ன்மையான‌ பொருட்க‌ள் உருவாக்க‌ப் ப‌டுகின்ற‌ன‌. இவை உட‌ற்க‌ல‌ங்க‌ளைச் சேத‌மடைய‌ச் செய்வ‌தால் ப‌ல‌ நோய்க‌ளின் உருவாக்க‌த்திற்குப் ப‌ங்க‌ளிப்புச் செய்கின்ற‌ன‌ (க‌வ‌னிக்க‌வும்: இவை நோய்க‌ளின் மூல‌ கார‌ணிக‌ள் அல்ல‌!). இத‌ய‌ குருதிக் க‌ல‌ன் நோய்க‌ளிலும், புற்று நோய்க‌ளிலும் ஒட்சியேற்ற‌த் தாக்கிக‌ளின் ப‌ங்கைப் ப‌ற்றி பல‌ ஆய்வுக‌ள் செய்ய‌ப் ப‌ட்டிருக்கின்றன‌‌. ஒட்சியேற்ற‌ எதிரிகளை உட்கொள்வ‌த‌ன் மூல‌ம் இந்த‌ நோய்க‌ளின் தாக்கங்க‌ளைக் குறைக்க‌ முடியும் என்ப‌து இப்போதுள்ள‌ ஒரு க‌ருத்து. ம‌ருத்துவ‌ ரீதியாக‌ நோயாளிக‌ளில் இது ப‌ரீட்சித்துப் பார்க்க‌ப் ப‌ட‌வில்லை என்ப‌தே உண்மை. என‌வே ப‌ச்சைத் தேனீரில் "ஒரு ம‌ண்ணாங்க‌ட்டியும் இல்லை" என்ப‌து த‌வ‌றான‌ க‌ருத்து. ப‌ச்சைத் தேனீர் த‌விர‌ புறொக்கோலி, சிவ‌ப்பு வைன், திராட்சை (தோலுட‌ன் உண்ணும் போது) ஆகிய‌வ‌ற்றிலும் ஒட்சியேற்ற‌ எதிரிக‌ள் உண்டு.

Share this post


Link to post
Share on other sites
Sign in to follow this