Jump to content

தமிழக மீனவர் தொடர்பான செய்திகள்


Recommended Posts

மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு; ஜெ பிரதமருக்கு கடிதம்

திங்கள், 28 அக்டோபர் 2013

 

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த அப்பாவி மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தியதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமருக்கு ஜெயலலிதா எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது, ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 6 அப்பாவி மீனவர்கள் விசைப்படகில் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். கடந்த 26-ம் தேதி பிற்பகல் 1.30 மணியளவில் தனுஷ்கோடி அருகில் மீன் பிடித்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.

இந்த தாக்குதலில் மீனவர்கள் மயிரிழையில் உயிர்தப்பினர். அவர்களின் படகு சேதம் அடைந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த மீனவர்கள் மீன் பிடிப்பதை நிறுத்திவிட்டு, தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்வதற்காக தப்பி வந்துள்ளனர்.

தமிழ மீனவர்கள் மீதான தேவையற்ற, இரக்கமற்ற மற்றும் மனிதாபிமானமற்ற தாக்குதல் காரணமாக மீனவ சமுதாயத்தினரிடையே விரக்தியும், கோபமும் அதிகரித்துள்ளது. இலங்கை கடற்படையினரின் இதுபோன்ற தொடர் தாக்குதல் மற்றும் சூறையாடும் நடவடிக்கைகளை நமது கடற்படையும், கடலோர காவல்படையும் தடுக்கவில்லை. தமிழக மீனவர்களை பாதுகாக்க வேண்டியது மத்திய அரசின் கடமையாகும்.

எனவே, இலங்கை கடற்படையின் இந்த செயல்களை தாங்கள் வன்மையாக கண்டித்து, தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் தமிழர்களின் பாரம்பரிய மீன்பிடி பகுதியான பாக் ஜலசந்தி, மன்னார் வளைகுடா பகுதியில் அவர்களின் உயிர்கள், தொழில்கள் மற்றும் மீன்பிடி உரிமை பாதுகாப்புக்கு இந்தியா உறுதி செய்ய வேண்டும் என்று ஜெயலலிதா தனது கடிதத்தில் கூறியுள்ளார்.

 

http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/1310/28/1131028034_1.htm

Link to comment
Share on other sites

  • Replies 71
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
அக் 31, 2013

கோடியக்கரைக்கு தென்கிழக்கே 4 படகுகளில் சென்று தமிழக மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு சென்ற சிறீலங்கா கடற் படையினர் மீனவர்களை தாக்கி படகுகளை சேதப்படுத்தியுள்ளனர்.

தமிழ மீனவர்கள் 12 பேர் மீது நடுக்கடலில் இலங்கை கடற்படையினர் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர். கோடியக்கரைக்கு தென்கிழக்கே 4 படகுகளில் சென்று தமிழக மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை படையினர் மீனவர்களை தாக்கி படகுகளை சேதப்படுத்தியுள்ளனர்.

மேலும் மீனவர்களின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி ரூ.2 லட்சம் மதிப்புள்ள பொருட்களையும் கொள்ளையடித்துச் சென்று அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் மீனவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
Link to comment
Share on other sites

தமிழக மீனவர்கள் நாடு திரும்பினர்

நவம்பர் 02, 2013

 

இலங்கை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட புதுக்கோட்டையைச் சேர்ந்த 19 மீனவர்கள் மாவட்ட மீனவர்கள் இன்று காரைக்கால் வந்தடைந்தனர்.

 

யாழ்ப்பாணத்தில் 43 நாள் சிறை வாசத்திற்குப் பிறகு அவர்கள் இந்தியா திரும்பினர். அவர்கள் 19 பேரையும் இலங்கை கடற்படையினர் நடுக்கடலில் இந்திய கடற்படையினரிடம் ஒப்படைத்தனர். பின் அவர்கள் காரைக்கால் மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

 

கடந்த செப்டம்பர் மாதம் 19 ஆம் தேதி கடலில் மீன்ப்பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

மீனவர்கள் மீது 4 முறை காவல் நீட்டிப்பு செய்யப்பட்டு தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

 

http://www.puthiyathalaimurai.tv/tn-fishermen-return-to-tamilnadu-from-srilanka-jail-96714.html

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

350 தமிழக மீனவர்களை வளைத்துப் பிடித்தது இலங்கை கடற்படை! - 250 பேர் மட்டும் விடுவிப்பு. 

 

 

boats-111213-150.jpg

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 350 மீனவர்களில், 25 பேர் விடுவிக்கப்பட்டனர். கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன்பிடித்த போது இலங்கை கடற்படையினர் இவர்களைக் கைது செய்தனர். தமிழக மீனவர்களின் 35 படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர். கைதான மீனவர்கள் நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையை சேர்ந்தவர்கள் ஆவர். கைதான மீனவர்களை இலங்கை கடற்படையினர் திருகோணமலை கொண்டு செல்வதாக தகவல் வெளியாகியிருந்தது.

  

தற்போது மீனவர்கள் 250 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். வாக்கி-டாக்கியில் தொடர்பு கொண்டு தாம் விடுவிக்கப்பட்டதாக மீனவர்கள் தகவல் அளித்துள்ளனர். எனினும் கைது செய்யப்பட்ட 100 மீனவர்களை விடுவிக்க இலங்கை கடற்படையினர் மறுத்துள்ளனர். மேலும் 15 படகுகளையும் பறிமுதல் செய்து திருகோணமலைக்கு கொண்டு சென்றுள்ளதாக மீனவர்கள் தகவல் தெரிவித்துள்ளன.

மீனவர்கள் கைது சம்பவம் மக்களவையில் எதிரொலித்ததான் காரணமாக உடனடி நடவடிக்கை மேற்கொண்டு மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், இதனையடுத்து மீனவ்ர்கள் விடுதலை செய்ததாகக் கூறப்படுகிறது.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=98815&category=IndianNews&language=tamil

 

Link to comment
Share on other sites

புதுக்கோட்டையை சேர்ந்த 30 மீனவர்களை சிறை பிடித்தது இலங்கை கடற்படை.

 

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 30 மீனவர்களை நேற்று இரவு இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

இந்திய எல்லைப்பகுதியில் மீனவர்கள் மீன் பிடித்து கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினர் அங்கு வந்துள்ளனர்.

அவர்கள் மீனவர்களை தாக்கி சிறைபிடித்து இலங்கை கொண்டு சென்றுள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் காங்கேசன் துறைமுகத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் இலங்கை கடற்படை விசாரணை நடத்தி வருகிறது.

 

http://newsalai.com/details/tamil-nadu-news-12-12-2013-indian-fishermen-arrested-by-sl-navy.html#sthash.nCAWpzx8.dpbs

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

முற்றுகிறது மீனவர் பிரச்சினை; உண்ணாவிரதம் தொடர்கிறது

 

131211153113_indianfishermensrilankatrin

 

இலங்கைத் தரப்பால் தாங்கள் எதிர்நோக்கும் இன்னல்களைக் கண்டித்து தமிழகத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள் காலவரையற்ற உண்ணாவிரதத்தை மேற்கொண்டுள்ளனர்.

நாகபட்டினம் மற்றும் காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 64 கிராமத்து மக்களும் அங்குள்ள பஞ்சாயத்து அமைப்புகளும் இணைந்து இந்த வேலை நிறுத்தம் மற்றும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக போரட்டக் குழுவைச் சேர்ந்த மோகன் தாஸ் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

இலங்கையின் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ள தமது 70 படகுகள்,மற்றும் சிறையில் இருக்கும் சுமார் 200 மீனவர்கள் விடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெறுகிறது.

புதுக்கோட்டை மற்றும் தஞ்சைப் பகுதி மீனவர்கள் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

முதல்வருடன் சந்திப்பு
131015133543_indian_fishermen_304x171_bb

இலங்கையில் நீதிமன்றத்துக்கு செல்லும் தமிழக மீனவர்கள்

தொடர் உண்ணாவிரதத்தில் சுமார் 3000 பேரும், ஆதரவு தெரிவிக்கும் வகையில் 10,000 பேரும் இதில் பங்குபெறுவதாக மோகன் தாஸ் கூறுகிறார்.

இந்தியா-இலங்கை இடையே மீனவர்கள் பிரச்சினையைத் தீர்க்கும் வகையில் நடைபெற்ற பேச்சுவார்தைகள் தீர்வில்லாமல் இழுத்துக் கொண்டே செல்கிறன என்றும், இதற்கு முடிவு காண இந்திய அரசு போதிய முயற்சிகளை எடுக்கவில்லை என்றும் மீனவர்கள் தரப்பு குற்றஞ்சாட்டுகிறது.

இதனிடையே இப்பிரச்சினை குறித்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் குழுவினர் திங்கட்கிழமை(23.12.13) தமிழக முதல்வரை சந்திக்கவுள்ளதாகவும், அதன் பிறகே போராட்டம் குறித்த அடுத்தகட்ட முடிவுகள் எடுக்கப்படும் எனவும் மோகன் தாஸ் தெரிவித்தார்.

இதனிடையே இலங்கை மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன, இந்திய அமைச்சர் ஷரத் பவாரை சந்திக்க புதுடில்லி செல்லவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2013/12/131222_tnfishermen_hungerfast.shtml

Link to comment
Share on other sites

இலங்கை சிறையில் இருந்த தமிழக மீனவர்கள் 6 பேர் விடுதலை

 

கடந்த 11 ஆம் தேதி  கடல் சீற்றத்தால் திசைமாறி சென்ற  6  மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர்கள் 6 பேரும் இன்று மல்லாகம்  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதையடுத்து மீனவர்கள் 6 பேரையும் விடுதலை செய்யவும் 2 நாட்டுப்படகையும் ஒப்படைக்கவும்  மல்லாகம் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.விடுவிக்கப்பட்ட 6  மீனவர்களும் நாகை புதுவையை சேர்ந்தவர்கள் ஆவர்.

 

http://newsalai.com/details/world-news-12-27-2013-Sri-Lankan-fishermen-who-were-released-from-prison-.html#sthash.zqLddApo.dpbs

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக மீனவர்கள் இந்திய பிரதமரை சந்திக்க உள்ளனர்

 

manmogan_CI.jpg


தமிழக மீனவர்கள் இந்திய பிரதமர் டொக்டர் மன்மோகன் சிங்கை சந்திக்க உள்ளனர்.


இலங்கைக்கடற் படையினரால் மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் குறித்து முறைப்பாடு செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


தாக்குதல்களை தடுத்து நிறுத்த உதவிகளை வழங்குமாறு மீனவர்கள் கோரிக்கை விடுக்க உள்ளனர் என அமைச்சர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.


இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள 227 இந்திய மீனவர்களையும், 77 படகுகளையும் மீட்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மீனவர்கள் கோரிக்கை விடுக்க உள்ளனர்.


குறித்த மீனவர்கள் கடந்த மூன்று மாதங்களாக இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.


கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுதலை செய்து, தாக்குதல்களை தடுக்க நிரந்தரத் தீர்வு வழங்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட உள்ளதாகத் தெரிவி;த்துள்ளார்.
 

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/100932/language/ta-IN/article.aspx

Link to comment
Share on other sites

இந்தியா தற்சமையம் படை எடுத்தாலும் என்றாலும் என்றுதான் சிலரை பணயக்கைதிகளாக வைத்திருக்கிறார்கள். அவங்கள் லேசிலை எல்லாறையும் போக விட மாட்டாங்கள்.  மன்மோகன் சிங்கை சந்திப்பது டெல்கி பயணக்காசுக்கு உதாவாத செயல். கருணாநிதி மாதிரி ஒரு தந்தி அடித்திருந்தால் கடலிலை கஸ்டப்பட்டு  உழைச்ச காசு union னிடம் இருந்திருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு- பிரதமர் உறுதி

 

manmoham.jpg

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 210 பேரையும், 75 விசைப்படகுகளையும் விடுவிக்கக்கோரி நாகப்பட்டினம் அக்கரைப்பேட்டை மீனவர்கள் கடந்த 11ம் தேதியில் இருந்தும், தாலுகா மீனவர்கள் 16ம் தேதியில் இருந்தும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
அதனைத் தொடர்ந்து கடந்த 21ம் தேதி முதல் நாகையில் மீனவர்கள் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். மீனவர்களுக்கு ஆதரவாக கடையடைப்பு போராட்டமும் நடந்தப் பட்டது. அதன் பின்னர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்ட மீனவ சங்க பிரதிநிதிகள் 12 பேர் சென்னையில் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து இது குறித்து பேசினர். 

அதன்பிறகு, மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா உறுதியளித்ததாக மீனவ சங்க பிரதிநிதிகள் தெரிவித்தனர். அதேநேரத்தில், உண்ணாவிரதம் இருந்த மீனவர்களை திமுக தலைவர் கருணாநிதி உத்தரவின்பேரில், சந்தித்த பாராளுமன்ற திமுக தலைவர் டி.ஆர்.பாலு, ‘இந்த பிரச்னை தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேச ஏற்பாடு செய்வதாக வாக்குறுதி அளித்தார். 

இதையடுத்து, மீனவர்கள் கடந்த 24ம் தேதி தங்கள் உண்ணாவிரத போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொண்டனர். ஆனால், மீனவர்களின் வேலைநிறுத்தம் தொடர்ந்து இன்று 18வது நாளாக நடந்து வருகிறது. இந்நிலையில், நாகை, புதுக்கோட்டை, காரைக்கால் பகுதி மீனவ பிரதிநிதிகள் பிரதமர் மன்மோகன் சிங்கை இன்று சந்தித்தனர். அப்போது, இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்ககோரி மனு கொடுத்தனர். மேலும் இலங்கை வசம் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளை மீட்டுத்தரவும் வலியுறுத்தினர். இதைத்தொடர்ந்து, மீனவப் பிரதிநிதிகளிடம் பேசிய பிரதமர் மன்மோகன்சிங், ஜனவரி 20-ல் நடைபெறும் இரு நாடுகளின் பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு ஏற்படும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

 

 

http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=10822:2013-12-28-12-04-40&catid=1:latest-news&Itemid=18

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

cartoon-bala.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
இன்றும் 26 மீனவர்களை சிறைபிடித்தது இலங்கைக் கடற்படை! 
   
navy-020114-150.jpg

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதி மீனவர்கள் 26 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர். மண்டபம் பகுதியில் இருந்து 4 படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 26 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து நடுக்கடலில் வைத்து விசாரணை நடத்தி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வாரத்தில், தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை பிடித்துச் செல்வது இது மூன்றாவது முறையாகும்.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=100480&category=IndianNews&language=tamil

 

Link to comment
Share on other sites

காரைக்கால் மீனவர்கள் காவல் 6வது முறையாக நீட்டிப்பு!

 

காரைக்கால்: காரைக்கால் மீனவர்கள் 32 பேரின் காவலை ஜனவரி 20 ஆம் தேதி வரை நீட்டித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காரைக்காலில் இருந்து கடந்த அக்டோபர் மாதம் 16 ஆம் தேதி மீன் பிடிக்க 32 மீனவர்கள் சென்றனர். அவர்கள் இந்திய எல்லையில் மீன் பிடித்து கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அவர்கள் அனைவரையும் படகுகளுடன் சிறை பிடித்து சென்றனர்.
 

 

விசாரணைக்கு பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 32 மீனவர்களை அந்நாட்டு நீதிமன்றம் காவலில் வைக்க உத்தரவிட்டது. இதையடுத்து அவர்கள் அனைவரும் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டனர்.

அவர்களின் காவல் 5 முறை நீட்டிக்கப்பட்டு இன்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து இன்று திரிகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 32 மீனவர்களின் காவலை மீண்டும் 6வது முறையாக வருகின்ற ஜனவரி 20 ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

 

32 மீனவர்களும் இன்று விடுவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,  காவல் மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது அவர்களின குடும்பத்தினரை வேதனையடைய வைத்துள்ளது.

 

http://news.vikatan.com/article.php?module=news&aid=23116

Link to comment
Share on other sites

மீனவர்களை மீட்க தூதரகம் மூலம் நடவடிக்கை எடுங்கள்! – மன்மோகன்சிங்கிடம் ஜெயலலிதா கோரிக்கை.

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எழுதியுள்ள கடிதத்தில், 275 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் உள்ளனர் என்று தெரிவித்துள்ளார். இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை மீட்க தூதரகம் மூலம் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இலங்கை வசம் உள்ள மீனவர்களின் படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.

 

http://seithy.com/breifNews.php?newsID=100869&category=IndianNews&language=tamil

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பேச்சு நடக்காவிட்டால் இலங்கையில் அகதிகளாக குடியேறுவோம்! – தேசிய மீனவர் பேரவை எச்சரிக்கை. 

fishermen-100114-150.jpg

வரும் 20-ஆம் தேதி திட்டமிட்டபடி இந்திய -இலங்கை மீனவர் பேச்சுவார்த்தை நடைபெறவிட்டால் தமிழக மீனவர்கள் வெள்ளை கொடியுடன் இலங்கையில் அகதிகளாக குடியேறுவோம் என தேசிய மீனவர் பேரவை தலைவர் என்.இளங்கோ தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் நிருபர்களிடம் கூறியது: கடந்த 30 ஆண்டுகளாக தமிழக, காரைக்கால் மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையால் கொல்லப்பட்டு வருகின்றனர். இதுவரை 541 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 401 மீனவர்கள் தற்போது இலங்கை சிறைகளில் உள்ளனர். 113 படகுகளை பறிமுதல் செய்து வைத்துள்ளனர். 772 பேர் காயமடைந்துள்ளனர். ரூ.1000 கோடி அளவுக்கு மீனவர்கள் நஷ்டம் அடைந்துள்ளனர். இலங்கை கடற்படையின் செயலால் மீனவர்கள் வாழ்வே கேள்விக்குறியாகி உள்ளது.

  

இப்பிரச்னையை தீர்க்க இரு தரப்பு மீனவர்கள் பேச்சுவார்த்தை நடைபெறும் என மத்திய, தமிழக அரசுகள், அறிவித்தன. வரும் 20ஆம் தேதி பேச்சுவார்த்தை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் பேச்சுவார்த்தைக்கு முன்னர் இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும். பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் விடுவிக்க வேண்டும்.அதே போல் இந்திய சிறைகளில் உள்ள இலங்கை மீனவர்களையும் விடுவிக்க வேண்டும்.தமிழக, காரைக்கால் மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணா விட்டால் வெள்ளை கொடியுடன் இலங்கையில் அகதிகளாக குடியேறுவோம் என்று கூறினார் இளங்கோ.

 

 

http://www.seithy.com/breifNews.php?newsID=101099&category=IndianNews&language=tamil

Link to comment
Share on other sites

40 தமிழக மீனவர்களின் காவல் 24ம் தேதி வரை நீட்டிப்பு

 

இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டு  உள்ள 40 தமிழக மீனவர்களின் காவல் ஜனவரி 24ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 30ம் தேதி இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட பாம்பன் பகுதியைச் சேர்ந்த 18 மீனவர்களும், டிசம்பர் 29ம் தேதி கைது செய்யப்பட்ட ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த 22 பேரின் காவலும் இன்றுடன் நிறைவு பெறுகிறது.

இதையடுத்து 40 தமிழக மீனவர்களின் காவலையும் இலங்கை நீதிமன்றம் ஜனவரி 24ம் தேதி வரை நீட்டித்துள்ளது.
 

http://www.dinamani.com/latest_news/2014/01/10/40-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-24%E0%AE%AE%E0%AF%8D-/article1993113.ece

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக மீனவர் பிரச்சனையில் மத்திய அரசு மெத்தனம் காட்டி வருவதைக் கண்டித்து திருச்சியில் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு சட்டக்கல்லூரி மாணவர்கள் கறுப்புக் கொடி காட்டினர்.

திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் நடைபெற உள்ள பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக இன்று காலை டெல்லியில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்த மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், தனது சொந்த ஊரான காரைக்குடிக்கு சென்றுவிட்டு, புதுக்கோட்டை வழியாக திருச்சிக்கு இன்று பகல் வந்துகொண்டிருந்தார்.

பகல் சுமார் 1.50 மணியளவில் திருச்சி டி.வி.எஸ் டோல்கேட் அருகே வந்துகொண்டிருந்தபோது, திருச்சி சட்டக்கல்லூரியில் 3ஆம் ஆண்டு படிக்கும் மாணவர்கள், இலங்கை சிறையில் இருக்கும் தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரியும், தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பு வழங்காத மத்திய அரசை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பினர்.

பின்னர் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்பு கொடி காட்டினர். இதையடுத்து உளவுத்துறை போலீசார், சிதம்பரத்தை வேறு வழியாக மன்னார்புரம் சர்க்கியூட் ஹவுஸுக்கு அழைத்து சென்றனர். சிதம்பரத்துக்கு கறுப்பு கொடி காட்ட முயன்ற மாணவர்களையும் கைது செய்தனர்.

 

http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=11071:2014-01-11-10-12-32&catid=1:latest-news&Itemid=18

Link to comment
Share on other sites

தமிழக மீனவர்களின் வலைகளை அறுத்து இலங்கை படை அட்டூழியம்

 

ராமேசுவரத்தில் இருந்து நேற்று  632 விசைப் படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். கச்சத்தீவு பகுதியில் அவர்கள் மீன் பிடித்துக் கொண்டு இருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் 10 படகுகளில் இருந்து கடலுக்குள் வீசப்பட்ட வலைகளை அறுத்தனர். பின்னர் அந்த பகுதியில் வந்து மீன்களை பிடிக்கக்கூடாது என்று கூறி மீனவர்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.

இதுகுறித்து கடலுக்கு சென்று வந்த மீனவர்கள் கூறியதாவது:நாங்கள் நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டு இருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் கற்களை வீசி தாக்கினர். பின்னர் அந்த பகுதி அவர்களுக்கு சொந்தமானது என்றும், அங்கு நாங்கள் மீன் பிடிக்கக்கூடாது என்றும் கூறி 10 படகுகளில் இருந்து: கடலில் வீசப்பட்டு இருந்த வலைகளை அறுத்தனர். ஒரு படகையும் சேதப்படுத்தினர். இந்த பிரச்சினையில் தீர்வு காண மத்திய, மாநில அரசுகள் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
 

http://www.dailythanthi.com/2014-01-12--Sri-Lanka-Army-Atrocity-again

Link to comment
Share on other sites

இலங்கை சிறையில் இருந்து 163 மீனவர்கள் விடுதலை

 

கோடியக்கரை அருகே கடந்த டிசம்பர் மாதம் 11-ம் தேதி மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்கள் 111 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் திரிகோணமலை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டிருந்தனர். இதேபோல் காரைக்காலைச் சேர்ந்த 32 மீனவர்களும், புதுக்கோட்டை மீனவர்கள் 20 பேரும் அங்குள்ள சிறைகளில் அடைக்கப்பட்டிருந்தனர்.

இதற்கிடையே மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி, நாகை மீனவர்கள் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்தனர். மேலும் டெல்லி சென்ற மீனவ சங்க பிரதிநிதிகள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் வெளியுறவு மந்திரி சல்மான் குர்ஷித் ஆகியோரை சந்தித்தும் கோரிக்கை மனு அளித்தனர்.

இருப்பினும் அவர்களை விடுதலை செய்யாத இலங்கை நீதிமன்றம், அவர்களின் நீதிமன்றக் காவலை அடுத்தடுத்து நீட்டித்தது.

பின்னர் பல்வேறு அழுத்தங்களுக்குப் பிறகு மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் சென்னையில் இருநாட்டு மீனவ பிரதிநிதிகளும் 20-ம் தேதி பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், பேச்சுவார்த்தைக்கு முன்பாக மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வலுத்தது.

இந்த சூழ்நிலையில், திரிகோணமலை சிறையில் வாடும் நாகை மாவட்ட மீனவர்கள் 111 பேரை விடுதலை செய்ய திரிகோணமலை நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. இதேபோல் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த காரைக்கால், புதுக்கோட்டை மீனவர்களும் இன்று விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இதன்மூலம் இன்று மட்டும் 163 மீனவர்களை இலங்கை விடுதலை செய்துள்ளது. இவர்கள் அனைவரும் ஓரிரு நாளில் நாடு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

http://www.maalaimalar.com/2014/01/13181105/Sri-Lankan-163-fishermen-relea.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக மீனவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்படுவர்: ராஜித

 

Rajitha%20Senaratne%20200(2).jpg

இலங்கை சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதுடில்லியில் இன்று (15) இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித சேனரத்ன உறுதியளித்துள்ளார் என்று இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.  

இது தொடர்பில் சட்டமா அதிபருடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் தமிழக மீனவர்களின் படகுகளும் அவர்களிடம் ஒப்படைக்கப்படும் என்றும்  அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.  

இலங்கை - இந்திய மீனவர்களின் பிரச்சினை தொடர்பில் புதுடில்லியில் இன்று பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றது. இதில் மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன, இந்திய மத்திய அமைச்சர் சரத் பவார் ஆகியோர் கலந்துகொண்டு இந்த பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடினர். 

இந்த சந்திப்பின் போது மன்னார் வளைகுடாவில் மீன் பிடிப்பதில் நிலவும் எல்லைப் பிரச்சினை தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது. மேலும் தமிழக மீனவர்களுக்கும், இலங்கை மீனவர்களுக்கும் இடையில் சென்னையில் எதிர்வரும் 20ஆம் திகதி நடைபெறவுள்ள பேச்சுவார்த்தை பற்றியும் ஆலோசிக்கப்பட்டது. 

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசியுள்ள அமைச்சர் ராஜித சேனாரத்ன, 'இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் அனைவரும் உடனடியாக விடுதலை செய்யப்படுவர்' என்று கூறியுள்ளார். 

 

 

http://tamil.dailymirror.lk/pirasitta-seithi/96836-2014-01-15-12-31-52.html

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினைக்கு 90 நாட்களில் தீர்வு: பா.ஜ.க

 

 

former-foreign-minister-Yashwant-Sinha-0

பாரதிய ஜனதா கட்சி ஆட்சிப் பொறுப்பை ஏற்று 90 நாட்களுக்குள் இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் என்று அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் இந்தியாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சருமான யஷ்வந்த் சின்கா தெரிவித்துள்ளார். 

சென்னையில் நடைபெற்ற தமிழக பாரதிய ஜனதா கட்சி கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 

தொடர்ந்தும், மீனவர் பிரச்சினை தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், 'இலங்கை - இந்திய மீனவர்களின் பிரச்சினையில் பாரதிய ஜனதா கட்சி தலைமைக்கும், தமிழக பாரதிய ஜனதா கட்சிக்கும் இடையே எந்த முரண்பாடும் இல்லை' என்றும் குறிப்பிட்டார். 

 

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/101396-----90---.html

Link to comment
Share on other sites

  • 5 months later...
  • கருத்துக்கள உறவுகள்
Tamilnadu-fishermans-arrest-200-seithy.j

மீன் பிடிக்க சென்ற தமிழக மீனவர்கள் 50 பேரை இலங்கை கடற்படையினர் இன்று பிடித்து சென்றனர். அவர்கள் பயணித்த படகுககளும், மீன்களும் பறிமுதல் செய்ப்பட்டன. எல்லையில் மீன்பிடிப்பது தொடர்பாக நீண்ட காலமாக இருந்து வரும் இந்த பிரச்னைக்கு முடிவு காண வேண்டும் என தமிழக முதல்வர் ஜெ., பிரதமருக்கு சமீபத்தில் பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில் 50 பேர் கைது செய்யப்பட்டிருப்பது தமிழக மீனவர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியிருக்கிறது.

  

கடந்த ஒரு வாரத்தில் மீன் பிடிக்க சென்று திரும்புகையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக முதல் கட்டமாக தெரிய வந்துள்ளது. 6 படகுகளில் சென்றதாகவும், இவர்கள் எந்த பகுதியை சேர்ந்தவர்கள் என்பது குறித்து விசாரித்து வருவதாகவும் மாவட்ட போலீஸ் இலாக்கா வட்டாரம் தெரிவிக்கிறது.

http://www.seithy.com/breifNews.php?newsID=113996&category=IndianNews&language=tamil

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாடு ஒரு மாநிலம்  தமிழ்நாடு தனிநாடு இல்லை  தமிழ்நாடு வெளிநாட்டு கொள்கையில் 1% கூட. இதுவரை பங்களிப்புகள் செய்யவில்லை   செய்ய முடியாது  தமிழ்நாடு இந்தியா மத்திய அரசாங்கத்தினால் ஆளப்படுகிறது  தமிழ்நாட்டில்,.சீமான் கமல்   விஐய்.  ஸ்டாலின் உதயநிதி   நெடுமாறன். வைகோ      கருணாநிதி  எம் ஜி” ஆர்    அண்ணா,.......இப்படி எவர் முதல்வர் பதவியில் இருந்தாலும்   வெளிநாட்டுத்தமிழராகிய. இலங்கை தமிழருக்கு 1% கூட பிரயோஜனம் இல்லை    தமிழ்நாட்டில் 7 கோடி தமிழனும் தமிழ் ஈழம்  மலர வேண்டும் என்று ஆதரித்தாலும்.  தமிழ் ஈழம்  கிடைக்காது  எனவே… ஏன் குதிக்க வேண்டும்???  இந்த சீமான் ஏன் குதிக்கிறார??  என்பது தான் கேள்வி??  ஆனால்  சீமான்  தமிழ்நாட்டில் அரசியல் செய்யலாம்  முதல்வராக வரலாம்”   தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை செய்யலாம்    எங்கள் ஆதரவு 100% உண்டு”   கண்டிப்பாக ஆதரிப்பேன் ஆனால்  இலங்கை தமிழருக்கு  அது செய்வேன் இது செய்வேன்   என்று  ஏமாற்றக்கூடாது 😀
    • பகிர்வுக்கு நன்றி ஏராளன் ........!   🙏
    • என‌க்கு தெரிஞ்சு கேலி சித்திர‌ம் வ‌ரைவ‌து உண்மையில் த‌மிழ் நாட்டில் வ‌சிக்கும் கார்ட்டூன் பாலா தான்...............த‌மிழ் நாட்டில் நிக்கும் போது ச‌கோத‌ர் காட்டூன் பாலா கூட‌ ப‌ழ‌கும் வாய்ப்பு கிடைச்ச‌து ப‌ழ‌க‌ மிக‌வும் ந‌ல்ல‌வ‌ர்............அவ‌ர் வ‌ரையும் சித்திர‌ம் அர‌சிய‌ல் வாதிக‌ளை வ‌யித்தில் புளியை க‌ரைக்கும்.....................
    • கலியாணம் என்பது சடங்குதானே. பிராமண ஐயரின் நிறத்தில், கனிவான முகத்துடனும், சில சமஸ்கிருதச் சுலோகங்களைச் சொல்லும் திறனும் இருந்தால் சடங்கைத் திறமாக நடாத்தலாம்! தேங்காயை பூமிப்பந்தை மத்தியரேகையில் பிளப்பதைப் போல சரிபாதியாக உடைக்காமல், விக்கிரமாதித்தனின் தலையை சுக்குநூறாக உடைப்பேன் என வேதாளம் வெருட்டியதை நீங்கள் தேங்காய் மீது செயலில் காட்டியிருக்கின்றீர்கள்😂
    • உங்க‌ளை மாதிரி ஆறிவிஜீவி எல்லாம் த‌மிழீழ‌ அர‌சிய‌லில் இருந்து இருக்க‌ வேண்டிய‌வை ஏதோ உயிர் த‌ப்பினால் போதும் என்று புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு ஓடி வ‌ந்து விட்டு அடுத்த‌வைக்கு பாட‌ம் எடுப்ப‌து வேடிக்கையா இருக்கு உற‌வே ஒன்னு செய்யுங்க‌ளேன் சீமானுக்கு ப‌தில் நீங்க‌ள் க‌ள‌த்தில் குதியுங்கோ உங்க‌ளுக்கு முழு ஆத‌ர‌வு என் போன்ற‌ முட்டாள்க‌ளின் ஆத‌ர‌வு க‌ண்டிப்பாய் த‌ருவோம்..........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.