Jump to content

காமாட்சி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 'லங்கா சாறி' எனச் செல்லமாக அழைக்கப்பட்ட ஒரு நீலப்புடவை !. நெத்தியில் சின்னதாக ஒரு திருநீற்றுக் குறி ! தேங்காய் எண்ணெய் தடவி, எவ்வளவுக்குத் தலைமயிரை இழுக்கமுடியுமோ, அவ்வளவுக்கு இழுத்து முடிக்கப்பட்டதால்,பளிச்சென்று தெரியும் நெற்றி ! இவ்வளவு தான், காமாட்சியின் வெளித்தோற்றம்! அவளது முகத்தில், ஒரு சோகம் கலந்த ஏக்கம், எப்போதும் இழையோடிய படியிருக்கும். காமாட்சிக்கு ஒரு பத்துவயது மகள். மகளுக்குப் பெயர் கமலம். இவ்வளவும் தான் அவளது குடும்பம். அவளது கழுத்தில் ஒரு மஞ்சள் கயிறு, எப்போதும் தொங்கிக்கொண்டிருக்கும்.

 

காலையில் தோட்டக்காரர் வேலைக்குப் போகும் போது, காமாட்சியையும் அவர்களுடன் அழைத்துச் செல்வார்கள், வறண்டு, காய்ந்து போன, எரு  வரட்டிகளைத் தடியால் அடித்து நொருக்கித் தூளாக்குவது, மண்வெட்டிகளால் வெட்டப்பட்ட ‘அதர்களுக்கிடையில்' காவோலை, அல்லது பூவரசம் குழை போனறவற்றை நிரப்புவது, சிறு நாற்றுகளுக்கு, இடையில் முளைக்கும்  சிறு களைகளை, அகற்றுவது போன்ற வேலைகள், அவளுக்குக் கொடுக்கப்படும். பின்னர், பாடசாலையிலிருந்து மகள் திரும்பி வரமுன்பு, வீட்டுக்கு அவசரமாக வந்து விடுவாள். விடுமுறைக்காலங்களில், பொழுது போகாமல், வீட்டின் ‘போர்டிக்கோவில்' குந்தியிருந்து. புல்லு வளர்வதை அவதானித்துக் கொண்டிருக்கும் வேளைகளில்,அவள் நடந்து சென்றால், அவளைப் பற்றிய சிந்தனைகள் மனதில் உதிப்பதுண்டு. அவளும் தனக்கேயுரித்தான, ஒரு சிரிப்பை உதிர்த்த வண்ணம் நடந்து கொண்டேயிருப்பாள்! சில வேளைகளில், எப்படி, வாத்தியார்த் தம்பி? என்று ஒரு விடையொன்றை எதிர்பார்க்காத கேள்வியையும் கேட்டுவிட்டுச் செல்வாள். வாத்தியாரின் மகன், என்பதால் தான் அந்த' வாத்தியார் தம்பி' என்ற பெயர் எனக்கு வந்தது என நினைக்கிறேன்!

 

ஒரு சனிக்கிழமை மத்தியானம், தோட்டத்திலிருந்த வந்த காமாட்சி, வாத்தியார்த் தம்பி எனக்கொரு கடிதம், எழுதித்தர ஏலுமே? என்று கேட்டாள்.நானும் சரியெண்டு சொல்ல, தம்பியிட்ட இல்லாத பேப்பரா என்று சொலிச் சிரித்தாள். நானும், ஏனக்கா, உங்கட மகள் எழுதித்தர மாட்டாளா என்று கேட்டு வைக்க, அவளும் எல்லா விசயத்தையும் பிள்ளையளிட்டைச் சொல்ல ஏலாது தானே தம்பி என்ற போது, கொஞ்சம் நிமிர்ந்து அமர்ந்து கொண்டேன்.கடிதம் பின்வருமாறு தொடங்கியது..

 

உ. சிவமயம்.

 

என்றும் என்மீது பட்சமுள்ள கணவனுக்கு,

 

இங்கு சுகம், உங்கள் சுகத்துக்கும் அந்தக் கலட்டிப்பிள்ளையார் அருள் புரிவானாக!.  

புனிதம் அக்காவின்ர மகள் போனமாதம் பெரிசாகி விட்டாள். பெரிசாக் கொண்டாடப் போகினம் போல கிடக்கு. ஏதாவது வாங்கிக் குடுக்க வேணும். நீங்கள் போன முறை அனுப்பின மணியோடர் கிடைத்தது. அதை மாத்திப் கமலத்துக்குக் கொஞ்சம் உடுப்பும், புத்தகங்களும் வாங்கினனான். பள்ளிக்குடம் போற பிள்ளை தானே. பழைய உடுப்போடை போனா, நமக்குத் தானே, சங்கேனம். நீங்களும், ஊருக்கு வாறதாய்க் காணேல்லை. (இதைச் சொல்லும்போது, தனது மூக்கை உறிஞ்சிக்கொண்டு, முந்தானையால் முகத்தைத் துடைத்துக்கொண்டாள்.) கனகம்மாவின்ர மூத்த மகள், ஆரோடையோ ஓடிப்போட்டாள் எண்டு ஊரில கதை அடி படுகுது. (இதைச் சொல்லிமுடிய, அவளே ’தம்பி, இந்தப் பரிசுகேட்டை  எழுதவேணாம் எண்டு வெட்டச் சொன்னள் .) . கடைசியா மூன்று, நாலு பேப்பர்கள் கிழிக்கப்பட்ட பின்பு, ஒரு மாதிரிக் கடிதம் முடிந்தது. விலாசம், கொழும்பில் களனிப் பக்கமாக இருந்த்து. இந்தக் கடிதம் எழுதல்களில் இருந்து, அவளது வாழ்வைப் பற்றியோ, கணவனைப்பற்றியோ பெரிதாக ஒன்றும் அறிந்து கொள்ள முடியவில்லை.

 

இண்டைக்கு, அமாவாசை நுவைப்பு. பந்தத்துக்குப் போகப்போறன். நீயும் வாறதெண்டால், அம்மாட்டைச் சொல்லிப்போட்டு வாவன் என்ற படி, எனது அம்மாவின் தகப்பனார் ஆசை காட்டினார். சரியெண்டு சொல்லிப்போட்டு, பின்னேரம் போல கடலுக்கு வெளிக்கிட்டுப் போய்க் கடலுக்கிள்ளையும் இறங்கியாச்சு. அண்டைக்கெண்டு, கடுக்காய் நண்டுகளும், பெரிய கலவாய் மீனும் சந்திக்க, அப்புவின் முகத்தில வலு சந்தோசம். நாளைக்கு நல்ல கூழ் காச்சுவம், தம்பியையும் கூட்டிக்கொண்டு வா என்ற படி கரையை நோக்கி வந்தோம். அப்போது ஒரு மெல்லிய உருவம், தலையில் தலைப்பாகையைக் கட்டியபடி, பந்தத்தைப் பிடித்த படி, நடந்து கொண்டிருந்தது. என்னவோ, கொஞ்சம் ‘அமைப்பு' வித்தியாசமாக இருக்கவே, அப்புவைத் திரும்பிப் பார்த்தேன். அவரும், புரிந்து கொண்டவராக, அது நம்மட ‘காமாட்சி' என்ற படி, நடந்து கொண்டிருந்தார். அவரது முகத்தில், கவலையின் சுவடுகள் தோன்றி மறைந்தன. ஒரு பெருமூச்சும் வந்து போனதையும் அவதானித்தேன்., இந்த மர்மத்துக்கு, நாளைக்கு விடை காண வேண்டும், என்று மனதில், நினைத்த படி, அவருடன் வீட்டை நோக்கி நடந்து கொண்டிருந்தேன்!

 

அடுத்தநாள், அப்பு வீட்டை போய்க் கூழ் காய்ச்சி முடியும்வரைக்கும், அப்புவும் காமாட்சியின் கதையைச் சொல்லவில்லை, நானும், சரியான நேரம் வரட்டும் என்று தருணம் பார்த்துக்கொண்டிருந்தேன். பின்னர், அப்புவிடம் மெதுவாக, அப்பு, ஏனப்பு, காமாட்சியின்ரை மனிசன் ஒரு நாளும் ஊருக்கு வாறதில்லை? கொழும்பிலை இருக்கிற ஆக்களெல்லாம் கோவில் திருவிழாக்களுக்கு வந்து போகினம் தானே? என்று கேட்க, அப்புவும்  ஒரு பெருமூச்சொன்றை எறிந்தவாறே, அவருக்குக் கொழும்பிலை வேற குடும்பம் இருக்கு என்று கூறியபடி, வாய்க்குள் கிடந்த மீன்  முள்ளைப் ,பெரிய சத்தத்துடன் காறித் துப்பினார். காமாட்சியின் மாமியாருக்குத் தனது மகன், வேற யாரோ ஒரு சிங்களப் பெண்ணுடன் குடும்பம் நடத்துவது முதலே தெரியுமாம். ஆனால், ஊரிலையிருக்கிற காணியும், வீடும், வேற ஆருக்கோ போறதை  மனுசிக்குப்  பொறுக்க ஏலாமல் போச்சுதாம். அது தான், மனுசி காமாட்சியைப் பிடிச்சு, அந்தப் பாவிக்குக் கட்டி வச்சுப் போட்டுது.  காமாட்சியும் கொழும்பு வரையும் போய், அழுது பாத்திட்டு, இப்ப தனிய வந்து குந்திக்கொண்டுருக்குது. அவனும், எப்பவாவது அஞ்சோ, பத்தோ, அனுப்பிறதெண்டு, காமாட்சி சொல்லுது. ஆனால், எனக்கெண்டால் அதில நம்பிக்கையில்லை. அவன் காசு அனுப்பிறதெண்டால், காமாட்சி , ஏன் தலைப்பாயைக் கட்டிக்கொண்டு, கடலுக்கை நிக்குது என்று சொல்லி முடித்தார்!!

 

அந்தக் கதையைக் கேட்டபிறகு எனக்கு காமாட்சியை நினைக்கப் பெரிய 'பாவமாக' இருந்தது. இப்படி எத்தனை பாவங்களைக் கண்டும் காணாதது மாதிரி நடந்து கொண்டிருக்கிறோம் என 'உள்மனது'  எள்ளி நகையாடினாலும், காமாட்சியின் மகளுக்காவது ஏதாவது உதவி செய்ய வேண்டும் என நினைத்துக் கொண்டேன்.  எப்பவாவது சந்தர்ப்பம் கிடைக்கும் நேரங்களில், பாடம் சொல்லிக் கொடுப்பது, பள்ளிக்கூடப் புத்தகங்கள், கொப்பிகள் வாங்கிக் கொடுப்பது என்ற அளவிலேயே, அந்த உதவிகள் இருந்தன. பண உதவிகள் செய்ய நினைத்த போதும், காமாட்சியின் 'கெளரவம்' அதை ஏற்றுக்கொள்ளவில்லை.

 

சில நாட்களில், நானும் புலம் பெயர்ந்து விடக், காமாட்சியும் மெல்ல மெல்ல, எனது நினைவுகளில் இருந்து விலகிப் போய்க் கொண்டிருந்தாள். இரண்டு வருடங்களின் பின்பு, விடுமுறையில் ஊருக்குப் போனபோது, எனது உறவுகளுக்கெனச், சில பரிசுப்பொருட்கள் வாங்கிக் கொண்டேன். அப்போது, இரண்டு பேர் நினைவுக்கு வந்தார்கள். முதலாவதாக நினைவுக்கு வந்தவள் காமாட்சி. அடுத்ததாக, நான் வழக்கமாக மீன் வாங்கும், ஒரு நல்ல வயதான முதியவர். அடிக்கடி, இந்தக் குளிர் தன்னை வருத்துவதாக, தனக்குத் தானே சொல்லிக்கொண்டிருப்பார். எனவே காமாட்சிக்கு, ஒரு நல்ல சேலையும், அந்த வயதானவருக்கு ஒரு 'சுவெட்டரும்' வாங்கிக் கொண்டேன்!

 

ஊரில் வழக்கம் போலக், காமாட்சி, வாத்தியார்த் தம்பி, எப்ப வந்தனீங்கள்? என்று விசாரித்தாள். எங்களையெல்லாம், நினைவு வைச்சிருக்கிறீங்கள் தானே என்று கேட்டபடி இருக்க, நானும் வீட்டுக்குள்ளே போய் அந்தச் சேலைப் பாசலை, அவளிடம் கொடுத்தேன். அவள் கண்கள் ஆச்சரியத்தால் விரியத், தம்பி, எங்களுக்கு, ஒருத்தரும் இப்படி வாங்கித் தந்தது கிடையாதப்பு, என்று அழுதாள். அழுது முடிந்த பின்னர்,நான் இதைக்கட்டிக் கொண்டு, தோட்டத்துக்கா போறது என்று ஒரு விதமான விரக்தியுடன் சொல்லிச் சிரித்தாள். 

 

அதன் பின்னர் நான் காமாட்சியை, மீண்டும் சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. ஆனால், அம்மா எழுதிய கடிதமொன்றில், அங்கு நடந்த ஒரு சம்பவம் பற்றி எழுதியிருந்தார். காமாட்சியின் மகள் கமலம், பெரியபிள்ளை ஆகிவிட்டதால், அதை ஒரு கொண்டாட்டமாகக் கொண்டாடக் காமாட்சி விரும்பினாளாம். தனக்குக் கிடைக்காமல் போன வாழ்வைத் தனது மகள் மூலம் பார்க்க ஆசைப் பட்டாளாம். அந்த விழாவின் போது.காமாட்சியின் கணவரும் கொழும்பிலிருந்து வந்திருந்தாராம். கமலம், அவருடன் பேசவே இல்லையாம். அப்போது காமாட்சியும், 'அப்பா' வாங்கிக் கொண்டு வந்த சேலையைத் தான் உடுத்திக்கொண்டு வரவேண்டும் என்று கமலத்தைக் கட்டாயப் படுத்தவும், கமலம் மறுத்து விட்டாளாம். அது தான், நம்ம 'பண்பாடு' என்றும் காமாட்சி மகளுக்குச் சொன்னபோதும், கமலம், அந்த 'அப்பா' வாங்கிக் கொண்ட சேலையை உடுக்கப் பிடிவாதமாக மறுத்து விட்டாளாம். தனக்குக் கொண்டாட்டமும் வேண்டாம், ஒன்றும் வேண்டாம் என்று ஒரு மூலையில் குந்திவிட்டாளாம்.

 

அப்ப, என்னத்தைக் கட்டிக் கொண்டு வரப்போறாய்? என்று காமாட்சி கேட்க, வாத்தியார் மாமா, வாங்கிக் கொண்டுவந்த சேலையைத் தான், என்று கூறி, பிடிவாதமாக அதையே கட்டிக் கொண்டாளாம்!

 

கடிதத்தைப் படித்ததும், மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. 'கமலம்'  நிச்சயமாக, இன்னொரு காமாட்சியாக மாறமாட்டாள் என நினைத்துக் கொண்டேன்!

Edited by புங்கையூரன்
  • Like 20
Link to comment
Share on other sites

மிகுதியையும் எழுதுங்கோ புங்கை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நினைவுப் பதிவு நன்றாக இருந்தது புங்கை...பெண்கள் கமலம் மாதிரித் தான் இருக்க வேண்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனதை நெகிழவைத்துவிட்டது கதை.. கொடுக்கும் பொருள் அல்ல பெரியது..அதைக்கொடுத்த தன்னலமற்ற மனதும்,அதன் அன்பும்தான் பெரியது என்று கமலம் காட்டிவிட்டாள்..கதைக்கு நன்றி புங்கை அண்ணா..தொடர்ந்து இப்படி நேரம் கிடைக்கும்போதெல்லாம் எழுதுங்கள் அண்ணா..

Link to comment
Share on other sites

வாசிப்பதற்கு இலகுவான எழுத்து நடை உங்களுடையது புங்கை.. சொத்தைப் பாதுகாக்க இப்படி எத்தனை பேரைப் பலியிட்டார்கள்..?!!

புலப்பெயர்வு சில மனமாற்றங்களை ஏற்படுத்தியுள்ளமையையும் குறிப்பிடவேண்டும்..

பி.கு.: மாமியார் என்று எழுதுவதற்குப் பதிலாக தாய் என்று எழுதிவிட்டீர்களா?

காமாட்சியின் தாய்க்குத் தனது மகன், வேற யாரோ ஒரு சிங்களப் பெண்ணுடன் குடும்பம் நடத்துவது முதலே தெரியுமாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகுதியையும் எழுதுங்கோ புங்கை 

எழுதியாச்சு, கவிதை!

 

வேற இடத்தில, எழுதிப்போட்டுக் கொண்டுவந்து இணைக்காமல் நேரடியாகவே எழுத முனைந்தேன். அரைவாசியில், களைச்சுப் போய்த் 'தொடரும்' போட்டிட்டுப் போய் விட்டேன்! அவ்வளவு தான் நடந்தது! :icon_idea:

நினைவுப் பதிவு நன்றாக இருந்தது புங்கை...பெண்கள் கமலம் மாதிரித் தான் இருக்க வேண்டும்

 

நன்றிகள், ரதி!

 

இரை மீட்கும் பசுக்களாகத் தானே வாழ்வை நகர்த்துகின்றோம்! :D

மனதை நெகிழவைத்துவிட்டது கதை.. கொடுக்கும் பொருள் அல்ல பெரியது..அதைக்கொடுத்த தன்னலமற்ற மனதும்,அதன் அன்பும்தான் பெரியது என்று கமலம் காட்டிவிட்டாள்..கதைக்கு நன்றி புங்கை அண்ணா..தொடர்ந்து இப்படி நேரம் கிடைக்கும்போதெல்லாம் எழுதுங்கள் அண்ணா..

 

நிச்சயமாக எழுதுவேன், சுபேஸ்! :D

 

கருத்துக்கு மிகவும் நன்றிகள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிக இயல்பான எழுத்துநடையுடன் உங்கள் மனப்பதிவு  நன்று புங்கை. :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

கடிதத்தைப் படித்ததும், மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. 'கமலம்'  நிச்சயமாக, இன்னொரு காமாட்சியாக மாறமாட்டாள் என நினைத்துக் கொண்டேன்!

 

எதிர்பார்ப்பு  தப்பில்லை

ஆனால் பெண்கள் எப்போ

எதுக்காக..........

இப்படியானதுக்குள் விழுகிறார்கள் என்ற கணக்கு எவருக்கம் புரிவதில்லை...

இப்படி சொன்ன பலர் பின்னாளில் அடிமையிலும் கீழாக வாழ்வதை    நேரில் கண்டவன்

காண்பவன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுக்கள் புங்கையூரன். நேரமுள்ளபோது உங்கள் திறமை வெளிவரட்டும்.

Link to comment
Share on other sites

கதைக்கு நன்றி புங்கை. நேசமும் மரியாதையும் வெறும் சம்பிரதாயங்களை மீறி இயல்பாக வருவன என்பதைக் காட்டியுள்ளீர்கள்.

Link to comment
Share on other sites

கதையில் மயங்கிவிட்டேன் . கதை சொன்ன செய்தியில் பல மயக்கங்கள் உண்டு .  பலர் மறந்த கிராமிய சொல்லாடல்களை நினைவுக்கு கொண்டு வந்திருக்கின்றீர்கள் . வாழ்த்துக்கள் படைப்பிற்கு புங்ஸ் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாசிப்பதற்கு இலகுவான எழுத்து நடை உங்களுடையது புங்கை.. சொத்தைப் பாதுகாக்க இப்படி எத்தனை பேரைப் பலியிட்டார்கள்..?!!

புலப்பெயர்வு சில மனமாற்றங்களை ஏற்படுத்தியுள்ளமையையும் குறிப்பிடவேண்டும்..

பி.கு.: மாமியார் என்று எழுதுவதற்குப் பதிலாக தாய் என்று எழுதிவிட்டீர்களா?

 

தவறைச் சுட்டிக்காட்டியமைக்கு நன்றிகள், இசை!

 

புலம்பெயர்வு, சில சமூக மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது, என்பது, உண்மை தான்!

 

நாங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், 'பணம்' என்பது, தமிழர்களின் வாழ்வில் முக்கியபங்கு வகிக்கின்றது!  மாற்றங்கள் என்பதிலும் பார்க்க, எமது சமூகம் வேறு ஒரு பரிமாணத்தை நோக்கி நகர்ந்து விட்டதென்பதே சரியென்று நினைக்கிறேன்!

மிக இயல்பான எழுத்துநடையுடன் உங்கள் மனப்பதிவு  நன்று புங்கை. :rolleyes:

 

நன்றிகள். சுமே! 

 

உங்கள் கை மோதிரக் கை! :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதிர்பார்ப்பு  தப்பில்லை

ஆனால் பெண்கள் எப்போ

எதுக்காக..........

இப்படியானதுக்குள் விழுகிறார்கள் என்ற கணக்கு எவருக்கம் புரிவதில்லை...

இப்படி சொன்ன பலர் பின்னாளில் அடிமையிலும் கீழாக வாழ்வதை    நேரில் கண்டவன்

காண்பவன்

 

ஒரு முக்கியமான, கருத்தைச் சொல்லியிருக்கின்றீர்கள், விசுகர்!

 

ஒரு பெண்ணின் 'தன்னம்பிக்கை' என்பது வேறு!  அவளது 'பயம்' என்பது வேறு!

 

அந்தத் தன்னம்பிக்கை, அவளை, எப்போதும், மற்றவர்களிலும் பார்க்க, ஒரு 'அடியாவது' முன்னாலேயே நடக்க வைத்துக்கொண்டிருக்கும்! 'அடிமை' நிலையென்று அவள் உணர்ந்து கொண்டால், திருமணத்தைத் தூக்கி எறிந்து விட்டுத் தொடர்ந்து நடக்கும், வல்லமையை, அந்தத் 'தன்னம்பிக்கை' அவளுக்குக் கொடுத்த்திருக்கும்! 

 

ஒரு கோழையால், ஒரு ஆரோக்கியமான, இரண்டாம் தலைமுறையை, உருவாக்க முடியாது என்பது தான் எனது கருத்து!

 

மற்றது, பெண்களின் மனத்தைப் பற்றி, எனக்கு அதிகம் தெரியாது! :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஒரு பதிவு புங்கையூரன்...இவ்வளவு காலமும் தன் குழந்தையை கவனிக்காமல் விட்டிட்டு இப்ப சேலை வாங்கிகொண்டு வந்து கொடுக்கிறான்....பரதேசி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாய்க்குள் கிடந்த மீன் முள்ளைப் ,பெரிய சத்தத்துடன் காறித் துப்பினார்.

 

பொம்பிளையள் எப்பவும் ஆம்பிளையளுக்கு மீன்முள்ளு போலை கிடக்கு . உங்கடை கதைக்கு வாழ்த்துக்கள் புங்கையூரான் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தம்பி,நல்ல ஆக்கம் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீண்ட நாட்களாக புங்கை அண்ணாவின் படைப்புக்களைக் காணவில்லையே என்று ஏங்கிய எம் போன்றோர்க்கு ஒரு அருமையான பதிவைத் தந்திருக்கிறீர்கள். ஆனால் உண்மையாக எனக்கு சில சொல்லாடல்கள் புரியவில்லை.

அந்த மண்ணுக்கே உரிய சொற்களாதலால் அவற்றைக் கிரகித்து அறிய முடியவில்லை. :(

 

நன்றி அண்ணா, தொடர்ந்து பல படைப்புகளைத் தாங்கோ.. :)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுக்கள் புங்கையூரன். நேரமுள்ளபோது உங்கள் திறமை வெளிவரட்டும்.

நன்றிகள், நிலாக்கா!

 

அடிக்கடி தலையைக் காட்டுங்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதைக்கு நன்றி புங்கை. நேசமும் மரியாதையும் வெறும் சம்பிரதாயங்களை மீறி இயல்பாக வருவன என்பதைக் காட்டியுள்ளீர்கள்.

சிறிய வயதில் ஆரம்பித்த விடுதி வாழ்க்கையும், புலம்பெயர் வாழ்க்கையும், சம்பிராதாயமில்லாத உறவுகளைத் தேட வேண்டிய சூழ்நிலைகளை உருவாக்கிவிட்டது. இனம், மதம், எல்லாவற்றையும் தாண்டிய ஒரு மெல்லிய நூலிழையோன்று, மனிதர்களைத் தொடுப்பதை என்னால், இப்போதெல்லாம் மிகவும் தெளிவாக உணரமுடிகின்றது!

 

இப்போதெல்லாம், யாதும் ஊரே, யாவரும் கேளிர், என்பதன், உண்மையான அர்த்தத்தைப் புரிந்து கொள்கின்றேன் என்றே எண்ணுகின்றேன்! நன்றிகள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதையில் மயங்கிவிட்டேன் . கதை சொன்ன செய்தியில் பல மயக்கங்கள் உண்டு .  பலர் மறந்த கிராமிய சொல்லாடல்களை நினைவுக்கு கொண்டு வந்திருக்கின்றீர்கள் . வாழ்த்துக்கள் படைப்பிற்கு புங்ஸ் .

உங்களைப் போலவே, ஜீவாவும் சொல்லாடலில் கொஞ்சம் மயங்கிப்போனார் போல உள்ளது! அந்தச் சம்பவங்களை, மீளவும் நினைத்துப்பார்க்கும் போது, அதே சொல்லாடல்கள் (நீண்ட காலங்கள், அவற்றைப் பாவிக்காத போதும்) திரும்பவும் நினைவுக்கு வருவதானது, ஒருவரது மொழியானது, ஒரு மனிதனுடன் எவ்வாறு இறுக்கமாகத் தன்னைப் பிணைத்துள்ளது என்பதையே காட்டுகின்றது என நினைக்கின்றேன்! நன்றிகள், கோமகன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 -----

'லங்கா சாறி' எனச் செல்லமாக அழைக்கப்பட்ட ஒரு நீலப்புடவை !. நெத்தியில் சின்னதாக ஒரு திருநீற்றுக் குறி ! தேங்காய் எண்ணெய் தடவி, எவ்வளவுக்குத் தலைமயிரை இழுக்கமுடியுமோ, அவ்வளவுக்கு இழுத்து முடிக்கப்பட்டதால்,பளிச்சென்று தெரியும் நெற்றி ! இவ்வளவு தான், காமாட்சியின் வெளித்தோற்றம்! அவளது முகத்தில், ஒரு சோகம் கலந்த ஏக்கம், எப்போதும் இழையோடிய படியிருக்கும். காமாட்சிக்கு ஒரு பத்துவயது மகள். மகளுக்குப் பெயர் கமலம். இவ்வளவும் தான் அவளது குடும்பம். அவளது கழுத்தில் ஒரு மஞ்சள் கயிறு, எப்போதும் தொங்கிக்கொண்டிருக்கும்.

 

-----

 

 

உ. சிவமயம்.

 

என்றும் என்மீது பட்சமுள்ள கணவனுக்கு,

 

இங்கு சுகம், உங்கள் சுகத்துக்கும் அந்தக் கலட்டிப்பிள்ளையார் அருள் புரிவானாக!.  

புனிதம் அக்காவின்ர மகள் போனமாதம் பெரிசாகி விட்டாள். பெரிசாக் கொண்டாடப் போகினம் போல கிடக்கு. ஏதாவது வாங்கிக் குடுக்க வேணும். நீங்கள் போன முறை அனுப்பின மணியோடர் கிடைத்தது. அதை மாத்திப் கமலத்துக்குக் கொஞ்சம் உடுப்பும், புத்தகங்களும் வாங்கினனான். பள்ளிக்குடம் போற பிள்ளை தானே. பழைய உடுப்போடை போனா, நமக்குத் தானே, சங்கேனம். நீங்களும், ஊருக்கு வாறதாய்க் காணேல்லை. (இதைச் சொல்லும்போது, தனது மூக்கை உறிஞ்சிக்கொண்டு, முந்தானையால் முகத்தைத் துடைத்துக்கொண்டாள்.) கனகம்மாவின்ர மூத்த மகள், ஆரோடையோ ஓடிப்போட்டாள் எண்டு ஊரில கதை அடி படுகுது. (இதைச் சொல்லிமுடிய, அவளே ’தம்பி, இந்தப் பரிசுகேட்டை  எழுதவேணாம் எண்டு வெட்டச் சொன்னள் .) . கடைசியா மூன்று, நாலு பேப்பர்கள் கிழிக்கப்பட்ட பின்பு, ஒரு மாதிரிக் கடிதம் முடிந்தது. விலாசம், கொழும்பில் களனிப் பக்கமாக இருந்த்து. இந்தக் கடிதம் எழுதல்களில் இருந்து, அவளது வாழ்வைப் பற்றியோ, கணவனைப்பற்றியோ பெரிதாக ஒன்றும் அறிந்து கொள்ள முடியவில்லை.

 

இண்டைக்கு, அமாவாசை நுவைப்பு. பந்தத்துக்குப் போகப்போறன். நீயும் வாறதெண்டால், அம்மாட்டைச் சொல்லிப்போட்டு வாவன் என்ற படி, எனது அம்மாவின் தகப்பனார் ஆசை காட்டினார்.

-----

 

 

புங்கையூரான்... இவ்வளவு எழுத்தையும், இவ்வளவு நாளும்... எங்கே ஒழித்து வைத்திருந்தீர்கள்?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எழுத்துக்களை ஏன்.... சரிந்த நிலையில் எழுதினீர்கள்? புங்கையூரான்.

 

Link to comment
Share on other sites

 
நல்லதொரு ஆக்கம் புங்கையூரான்.காமாட்சி சாதாரண குடும்ப பெண்ணாக காட்டியுள்ளீர்கள்.கமலம் ரோசக்காரி என்பதில் சந்தேகமில்லை.காமாட்சியாரின் தாயாரும் ஒரு பெண்ணாக இருந்தும் தனது மருமகள்,பேத்தியின் உணர்வுகளை புரிந்து கொள்ள முயற்சிக்காமல் மகன் இன்னொரு மணம் புரிந்தும் சொத்துக்காக இன்னொரு பெண்ணை பயன்படுத்திய சுயநலவாதி.கமலத்தின் தந்தைகான சாட்டையடி தகுந்த தண்டனை.
 
சமூகத்தில் காமாட்சியின் மாமியாரும் மகனும் போல இன்றும் ஆட்கள் உள்ளனர்.
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.