Jump to content

காமாட்சி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கதைக்கு நன்றி புங்கை, நல்லவிதமாக கதையை நகர்த்தியுள்ளீர்கள்

நன்றிகள், வந்தி!

 

இடைக்கிடை என்பதை மாற்றி, அடிக்கடி களத்துக்கு வாருங்கள்! :D

நல்ல ஒரு பதிவு புங்கையூரன்...இவ்வளவு காலமும் தன் குழந்தையை கவனிக்காமல் விட்டிட்டு இப்ப சேலை வாங்கிகொண்டு வந்து கொடுக்கிறான்....பரதேசி

நன்றிகள், புத்தன்!

 

நீங்கள் கொஞ்சம், வில்லங்கமான பேர்வழி போல கிடக்கு! :D

அருமையிலும் அருமை புங்கை .

நன்றிகள், அர்ஜுன்!

 

நீங்கள் ஒரு விமரிசகர் என்பது, யாழில் கனபேருக்குத் தெரியாத ஒரு ரகசியம்! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாய்க்குள் கிடந்த மீன் முள்ளைப் ,பெரிய சத்தத்துடன் காறித் துப்பினார்.

 

பொம்பிளையள் எப்பவும் ஆம்பிளையளுக்கு மீன்முள்ளு போலை கிடக்கு . உங்கடை கதைக்கு வாழ்த்துக்கள் புங்கையூரான் .

மீன் முள்ளைப் பெரிய சத்தத்துடன் காறித் துப்பியது, காமாட்சியின் மாமியின் மீதுள்ள வெறுப்பை வெளிக்காட்டுவதற்குத் தான்!

 

கிராமப்புறங்களில், ஒருவர் நடக்கும் நடையை வைத்தே, அவரது மனநிலையை, 'ஊகித்து' விடலாம்!

 

அவ்வளவு கள்ளமில்லாத வாழ்க்கை முறை! :D

 

ம்ம்.... பருத்திதுறை எல்லாம், இப்ப நகரங்களாய்ப் போட்டுது! :o 

 

நன்றிகள், மைத்திரேயி! 

தம்பி,நல்ல ஆக்கம் 

நன்றிகள், லியோ!

நீண்ட நாட்களாக புங்கை அண்ணாவின் படைப்புக்களைக் காணவில்லையே என்று ஏங்கிய எம் போன்றோர்க்கு ஒரு அருமையான பதிவைத் தந்திருக்கிறீர்கள். ஆனால் உண்மையாக எனக்கு சில சொல்லாடல்கள் புரியவில்லை.

அந்த மண்ணுக்கே உரிய சொற்களாதலால் அவற்றைக் கிரகித்து அறிய முடியவில்லை. :(

 

நன்றி அண்ணா, தொடர்ந்து பல படைப்புகளைத் தாங்கோ.. :)

ஜீவாத் தம்பி,

 

நீங்கள் சொன்னதுக்குப் பிறகு தான், ஓடி வெளிச்சுது, யாழில் கன காலமாய், எழுதாமல் விட்டிடன் என்று! நுணாவும், எங்கோ கூறியிருந்தார்! உங்களுக்குத் தான் முதலில் நன்றி சொல்ல வேணும்! 

 

சில சொல்லாடல்கள், அந்த மண்ணோடு பிணைந்து போனவை! மற்றவர்கள் புரிந்து கொள்வது கொஞ்சம் கடினம் தான்! ஆனால், கதை அந்த மண்ணில் நிகழ்ந்த படியால், அதிகமானவற்றை நான் மாற்ற விரும்பவில்லை! 

 

இனிவரும் பதிவுகளில் கவனிக்கின்றேன்! மீண்டும் நன்றிகள்!

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.