Jump to content

நிறம் மாறும் உறவு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எமது சமூகத்தின் பேசாப்பொருளை பேசிய சுமோவுக்கு நன்றி. 14 வருடத்தில் தனது கணவரை பற்றி அறியாமல் எப்படி சாந்தினி வாழ்ந்தார். இவர் கொடுத்த இடங்களால் தான் அவரது கணவர் அளவுக்கு மீறி சுதந்திரத்தை எடுத்துக்கொண்டார் என எடுக்கலாமா É  ஆபத்து நேரும் வரை சாந்தினி பொறுத்திருந்தது பிழை. ஆரம்பத்திலேயே அவரது கணவரின் நடவடிக்கையை கட்டுப்படுத்தி இருக்க வேண்டும்.அவருக்கு மன நோய் எனில் அதற்கான இடத்துக்கு அனுப்பப்பட்டிருக்க (counsiling)வேண்டும்.ஆபத்து நிகழும் வரை காத்திருந்து பிள்ளைகளின் வாழ்க்கையை நாசமாக்கி விட்டார்.

 

 எம்மில் பலருக்கு மோசமான அனுபவங்கள் இல்லாமையால் நாம் எம்மைப் போன்றேபலரும் என நினைக்கிறோம். பெண்களை எடுத்துக் கொண்டால் தடைகள் தடைகள் தடைகள்தான். புலம்பெயர்ந்த எல்லோருமே என்னைப் போல் உங்களைப்போல் சுதந்திரமானவர்கள் அல்ல என்பதை நாம் உணரவேண்டும் நுணாவிலான்.

 

மேலை நாடுகளில் கணவனுக்கு தண்டனை கொடுபதற்கு பதிலாக மனநல ஆலோசனையே வழங்குவார்கள். இன்னும் இரண்டு ஒரு ஆண்டுகளில் கணவன் வெளியிலே வந்துவிடுவார். உண்மையில் கணவருக்கு இருப்பது மனநோயே. ஆனால் இந்த சம்பவங்களுக்கு பிறகு சாந்தினியும் குழந்தைகளும் ஒரு நல்ல மன நல வைத்தியரை அணுகி ஆலோசனைகள் பெறுவது நல்லது. இது போன்ற சம்பவங்கள் பிற்காலத்தில் அந்த பிள்ளைகளை பிழையான வழியில் செல்லவும் வழிவகுக்கும்.

சாந்தினிக்கும் பிள்ளைகளுக்கும் மனநல ஆலோசனை நடந்ததுதான். பின் அவர் வேறு இடத்திற்குச் சென்று தான் வசிக்கிறார். பிள்ளைகள் கூட வேறு பள்ளிக்குத்தான் செல்கின்றனர். நன்றி பகலவன்.

 

வெறும் தொலைபேசி அழைப்புகள் அதே விளைவுகளைக் கொடுக்குமா? :huh: பொறுத்திருந்து பாரப்போம்.. :D

யாழ்களத்தின் காளைகளுள் ஒன்று கல்யாணம் கட்டும்வரை ஒரு சிறிய விளம்பர இடைவேளை..! :D

 

தொலைபேசிச் சேவை ஒன்று நானே தொடங்க இருக்கிறேன் :D  

 

"கடந்த வாரம் இப்பிடித்தான் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தாள். இரண்டாவது மகள் தகப்பனின் அறைக்குள் இருந்து சிரித்தபடி ஓடிவந்தாள். இவள் ஏன் சிரிக்கிறீர்கள் என்று கேட்டதற்கு சின்ன மகள் சொல்லிவிட்டு ஓடிய வார்த்தைகளைக் கேட்ட   இவளுக்கு அதிர்ச்சியில் ஒன்றும் ஓடவில்லை".

தவறு நடக்கிறதோ என்று ஐயம் வந்த பின்னும் கூட அதைப் பற்றி கண்டு பிடிக்க அவவின் பதி பக்தி விடவில்லை. 

ஒரு மனிதத்தன்மை அற்ற யந்து விற்கும் ,  முட்டாள் பெண்ணுக்கும் குழந்தைகளை கொடுத்த ஆண்டவன் தான் குற்றவாளி .
 
இந்தக்கதைக்கு ஆன பின்னூட்டதில் கீழ்க்காணும் கருத்தும், இந்தகருத்தை ஆமோதித்து இடப்பட்ட கருத்துகளும் மனதிற்கு வேதனை தந்ததது. 

 
 "ஒரு ஆணுக்கு.........பெண் என்பவள் அன்பில் தாயாகவும்.....ஆதரவில் சகோதரியாகவும்....படுக்கையில் வேசியாகவும் இருக்கவேண்டும். குடும்பம் கலையாது.சஞ்சலப்படாது "
கு. சா. அண்ணா, புன்கையூரான், வந்தியத்தேவன், இசைக்கலைஞ்ஞன், சுண்டல் , 
குமாரசாமி அண்ணா சொன்னது ஒரு வாழ்க்கைத் தத்துவம்தான், அந்தக்காலத்தில் இருந்து சொல்வதுதான், இப்படியாகப் பெண் இருந்தால், குடும்பம் கலையாது.சஞ்சலப்படாதுதான்,
 
ஆனால் இந்தக்கதைக்கு எப்படி, இப்படி ஒரு கருத்து பொருந்தும் ?
தான் புளுகியத்தை கண்டு கொண்டு சொன்னதற்கே மனைவியை அடிக்கும் மிருகம், சோம்பேறி, வீட்டில் சும்மா இருந்தும் மனைவியை அடிமைபோல் தன் வேலை அனைத்தையும் செய்விப்பவன்,பெற்ற குழந்தை யோடு, ....... காமுகன், ஆண் என்ற உருவம் தனக்கு இருப்பதால் தான் ஆதிக்கம் செய்ய நினைப்பவன்.
இவனுக்கு அல்லது இவன் போன்றோருக்கு  ....பெண் என்பவள் அன்பில் தாயாகவும்.....ஆதரவில் சகோதரியாகவும்....படுக்கையில் வேசியாகவும் இருக்கவேண்டுமா ?. 
 
அப்படி புழுவாக இருந்து ஒரு பெண் குடும்பம் காக்க வேண்டுமா?
 
குமாரசாமி அண்ணா, யாழ் வாசகராக, நறுக்கென்று, திருக்குறளாக நீங்கள் எழுதும் கருத்துகளை யாழ் வாசகரான காலம் முதல் ரசித்து வாசிக்கும் நான், உங்களை குறை கூற இதை எழுதவில்லை.
இப்படி எழுதி விடீர்களே என்ற ஆதங்கத்தில் தான் எழுதினேன்.
 
ஒரு ஆண் அன்பான காதலனாக, நண்பனாக, மனிதத்தை மதிப்பவனாக இருந்தால் பெண்ணும்,அன்பில் தாயாகவும்.....ஆதரவில் சகோதரியாகவும்....படுக்கையில் வேசியாகவும் இருக்க குடும்பம் கலையாது.சஞ்சலப்படாது

நன்றி நீதிமதி. சிலபேர் மாடு சொன்னாக் கேட்க மாட்டார்கள். மணிகட்டிய மாடு சொன்னால் தான் கேட்பினம். :lol: :lol: :lol:

Link to comment
Share on other sites

  • Replies 61
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
ஒருவரும் எடுக்கத் துணியாத/விரும்பாத கருவை அடிப்படையாக வைத்து எழுதிய சுமோவுக்கு பாராட்டுக்கள்...இந்தக் கதையில் என்னைப் பொறுத்த வரை சாந்தினியில் தான் அரைவாசிப் பிழையும்...அவன் வேலைக்குப் போகாமல் வீட்டை நிற்கும் போதே இல்லை ஆம்பிள்ளையல் கட்டாயம் வேலைக்குப் போக வேண்டும் என்று அவனை வேலைக்கு துர‌த்தி இருக்க வேண்டும் அல்லது தானும் வேலைக்குப் போகாமல் வீட்டில இருந்திருக்கோணும்...வளர்ந்த பொம்பிள்ளை பிள்ளையல் தகப்பனின்ட‌ அறையில் தனிய இருந்து கொண்டு என்ன செய்கினம் என்பதை அவதானித்திருகோணும்...கணவனில் தான் வித்தியாச‌ம் தெரியா விட்டாலும் அவ பெத்த பிள்ளைகளில் வித்தியாச‌த்தை காணாத தாய் என்ன தாய்?...இப்படிப் பல பெண்கள் எங்கட சமுதாயத்தில் இருக்கினம்.சமுதாயத்திற்கு பயந்து எல்லாத்தையும் மறைக்கிறது..எங்கட‌ பெண்கள் எல்லோரையும் ஓவராய் நம்புறதால தான் இந்த நிலை :(
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாதவூரான் ,

 ".அது தன் மகளாயிருந்தாலும்"

  :o  சீ ....ஆண்களே இந்தக் கருத்தை  ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

 

அந்த கணவன் செய்தது பிழை தான் ஆனால் அதுக்கு அடிப்படையை ஆராயாமல் ஒட்ட நறுக்க வேணும் எண்ட வாதம் ஏற்றுக்கொள்ள முடியவில்லை

 என்ன ஒரு  இனப்பற்று  :D

 
 
தாம்பத்தியத்தை தொல்லை என்று நினைப்பது ஏன் என்று புலப்படவில்லை
தாம்பத்தியம் என்பது உடல் மட்டும் சம்மந்தப் பட்டதல்ல, மனதை புண்படுதுபவருடன் இணைவதைத்தான்  தொல்லை என்று நினைப்பது.
நீங்கள் நான் கூற வந்ததை சரியாக விளங்கி கொள்ளவில்லை என்று நினைக்கிறன்.எந்த பிழைக்கும் அடிப்படையை ஆராய்ந்து அதை குறைக்க வழி தேடாமல் இப்பிடி ஓட்ட நறுக்கி கொண்டிருந்தால் அதாலை பாதிக்கபடுபவருக்கு என்ன பிரயோசனம்.அன்பை பற்றி தான் அது தன் மகளாயிருந்தாலும் என்று கூறினேன்.நான் சொன்ன விதம் விளங்கவில்லை என்று நினைக்கிறேன் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=J77Mlhw_D1A

 

 

இப்படியான ஆண் ஜென்மங்களுக்கு வாழ்க்கைப்பட்டால் யாரும் பொறுப்பல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரதி அக்கா பெண்கள் நல்லவர்களை சந்தேகபடுவினம் ஆனால் கெட்டவர்களை  ம்கூம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவரும் எடுக்கத் துணியாத/விரும்பாத கருவை அடிப்படையாக வைத்து எழுதிய சுமோவுக்கு பாராட்டுக்கள்...இந்தக் கதையில் என்னைப் பொறுத்த வரை சாந்தினியில் தான் அரைவாசிப் பிழையும்...அவன் வேலைக்குப் போகாமல் வீட்டை நிற்கும் போதே இல்லை ஆம்பிள்ளையல் கட்டாயம் வேலைக்குப் போக வேண்டும் என்று அவனை வேலைக்கு துர‌த்தி இருக்க வேண்டும் அல்லது தானும் வேலைக்குப் போகாமல் வீட்டில இருந்திருக்கோணும்...வளர்ந்த பொம்பிள்ளை பிள்ளையல் தகப்பனின்ட‌ அறையில் தனிய இருந்து கொண்டு என்ன செய்கினம் என்பதை அவதானித்திருகோணும்...கணவனில் தான் வித்தியாச‌ம் தெரியா விட்டாலும் அவ பெத்த பிள்ளைகளில் வித்தியாச‌த்தை காணாத தாய் என்ன தாய்?...இப்படிப் பல பெண்கள் எங்கட சமுதாயத்தில் இருக்கினம்.சமுதாயத்திற்கு பயந்து எல்லாத்தையும் மறைக்கிறது..எங்கட‌ பெண்கள் எல்லோரையும் ஓவராய் நம்புறதால தான் இந்த நிலை :(

 

கருத்துக்கு நன்றி ரதி.இதில் சாந்தினியில் நிறையத் தவறுகள் உள்ளனதான். அதை நான் மறுக்கவில்லை.

நீங்கள் நான் கூற வந்ததை சரியாக விளங்கி கொள்ளவில்லை என்று நினைக்கிறன்.எந்த பிழைக்கும் அடிப்படையை ஆராய்ந்து அதை குறைக்க வழி தேடாமல் இப்பிடி ஓட்ட நறுக்கி கொண்டிருந்தால் அதாலை பாதிக்கபடுபவருக்கு என்ன பிரயோசனம்.அன்பை பற்றி தான் அது தன் மகளாயிருந்தாலும் என்று கூறினேன்.நான் சொன்ன விதம் விளங்கவில்லை என்று நினைக்கிறேன் 

 

வாதவூரன் சில விடயங்கள் உலகில் நடைபெறாமல் இருப்பதற்கு, கடுமையான

சட்டங்களே காரணம். அதனால்த்தான் வெட்டவேண்டும் என்று ஒரு சட்டம் இருந்தால்

எவனும் அப்படியான தவறு செய்ய யோசிப்பான். மற்றப்படி எனக்கு யாரில் என்ன

கோபம்.

 

Link to comment
Share on other sites

சுமேயக்காவிற்கு முதலில் வாழ்த்துக்கள். கதைபற்றி நான் எழுத நினைத்த பல விடயங்கள் ஏற்கனவே பலரால் எழுதப்பட்டுள்ளது. இன்னும் இது போன்ற சொல்லாத கதைகளை எங்கள் சமூகம் சுமந்து திரிகிறது. வெளியில் வெள்ளையாய் தெரிகிற பலருள் பல்வகை நிறங்கள் பல்கிப் பெருகிக்கிடக்கிறது.

இக்கதையின் நாயகி பற்றியும் விமர்சனங்கள் எழுந்திருக்கிறது. ஒட்டாத ஒரு வாழ்வை வாழ்ந்து தொலைத்த அந்தத்தாய் போல பலரை தமிழ் கட்டுப்பாடுகளும் பண்பாடெனப்படும் சொல்லும் கட்டி வைத்திருக்கிறது. கட்டுகள் அறுபடும் வரை இவ்வித பிறழ்வுகளும் நடக்கவே செய்யும்.




 தொலைபேசிச் சேவை ஒன்று நானே தொடங்க இருக்கிறேன் :D  


 

வேண்டாமக்கோய் இந்த விசப்பரீட்சை. இன்னொரு அவச மருத்துவ சேவையும் நீங்கள் தொடங்க வேண்டி வரும். :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=J77Mlhw_D1A

 

 

இப்படியான ஆண் ஜென்மங்களுக்கு வாழ்க்கைப்பட்டால் யாரும் பொறுப்பல்ல.

 

யாரும் பொறுப்பல்ல என்று எப்படியண்ணா கூறுவீர்கள்?? எங்கள் சமூகக் கட்டமைப்பும்,. நீண்ட  காலமாகப் பெண்ணை அடக்கி வைத்த எல்லோருமேதான் பொறுப்பு. 

 

நன்றி ரதி, நன்றி சாந்தி கருத்துக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புருசன் குடிச்சுப்போட்டோ அல்லது குடிக்காமலோ மனைவியை அடிக்கிறான்,சின்ன வீடு வைத்திருக்கிறான்,அல்லது மனைவியை திருப்த்தி படுத்த முடியாதவன்(பணம் சம்பாதிப்பில்)மற்றும் இன்னும் இத்தியாதி பிழைகளை எழுதி வெளி உகற்க்கு கொண்டு வருதில் ஆயிரம் நன்மைகள் உண்டு.ஆனால் மனிதனே அல்லாத ஒரு மன நோயாளியின் கேடு கெட்ட நடத்தையை எழுதுவதின் மூலம் நீங்கள் சொல் வருவது என்ன :rolleyes: மனைவி மாரே தாய் மாரே உங்கள்  பெண் பிள்ளகளை தகப்பணுடன் தனிமையில் விடாதீர்கள்,எப்பவும் கணவனில் ஒரு கண் வைத்திருங்கள் என்றா சொல்ல வாறீங்கள்.யாரோ ஒரு மனயோளி நாய் செய்த மிருகத்தனமான செலுக்காக ஒட்டு மொத்த தந்தை மகள் பாசத்தை,உறவை கொச்சை படுத்தவா :unsure:  :(

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவைப் பிரியன்,
உங்கள் கோபம் நியாயமானதுதான். அனால் பல பெண்களே தன்  கணவன் பற்றித் தெரியாமல், தமக்கே தெரியாது தன் கணவனுக்குத் துணை
போகின்றனர். ஒரு கேடு கெட்டவனைப் பற்றி எழுதினால் இன்னொரு கேடுகெட்டவன் தான் கோபம் கொள்ள வேண்டுமே தவிர, நல்ல தந்தை ஏன் கோபம் கொள்ளவேண்டும் என்று கேட்கிறேன்?????

இப்படியானவற்றை வெளியே கொண்டுவருவதால் யாரோ ஒருவருக்குத் தன்னும் பயன் ஏற்படும் என்பது என் தீராத நம்பிக்கை.
தீயனவற்றை மூடி மறைப்பதால் என்ன பயன்???

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

இப்படியான பல சகிக்கமுடியாத சம்பவங்கள் நடப்பதை செய்தி ஊடகங்கள் ஊடாக அறிகிறோம். அண்மையில் யாழ் மண்ணில் கூட இப்படியான ஒரு சம்பவம் நடதிருந்ததாக ஒரு செய்தியில் படித்திருந்தேன். 

சகிக்கமுடியாத,கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டிய மிருகத்தனமான  செயல் இது.

 

இவ்வாறான சம்பவத்தினை மையமாக வைத்து ஆக்கத்தை எழுதத் துணிந்த சுமி அக்காவுக்கு பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கவிதை கருத்துக்கு. ஆனால் எனக்குப் பிடித்த சுமே என்னும் பெயரை எதற்காக சுமியாக்குகிறீர்கள். :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.