Jump to content

பாலாவின் பரதேசியும் அரசியல் கங்காணிகளும் !


Recommended Posts


பரதேசி படம் மிக அற்புதம் நான் அந்த படத்தை சிலாகித்து எழுதும் இரண்டாவது பதிவு இது .

ஒட்டுபொறுக்கி  யின் பாட்டி  திரையில் வரும் வரை , ஏதோ மிதமிஞ்சிய கற்பனை என்ற எண்ண  ஓட்டமே என்  மனதில் இருந்தது , அந்த கிழவிக்கு வசனம் எழுதிய வசனகர்த்தா அந்த கிழவியை  திரைக்கு  தேர்ந்து எடுத்த இயக்குனர்  என்று அவர்களின் பணி  மிக அற்புதம்.

அந்த கிழவி , திரையில் வந்த மறு நிமிடம் படத்தோடு அனைவரும் ஒன்றி விட்டார்கள் .

நான் பாலாவை , ஒரு மன நலம் பாதித்த இயக்குனர் என்றே அவரது அனைத்து முந்தைய படங்களை பார்த்த பின்பு ஒரு பிம்பத்தை மனதில் வைத்து இருந்தேன் .(இந்த மனுஷனுக்கு சுத்தமே பிடிக்காது போல , எல்லா பயலையும் அழுக்காவே காட்டுறான் என்று )

அது இல்லை !, பாலா அனைவரது மனத்தையும் பாதிக்கும் திரை பதிப்பை கொடுக்க வல்ல மிக அற்புத கலைஞன் என்பதை, பரதேசி பார்த்து  ஒப்புக்கொண்டேன்.

படத்தை பார்த்து தமிழர்கள் அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டியது ,

இன்னமும் அரசியல் தொழிலுக்கு ,  இலவச வேட்டி , இலவச சேலை , இலவச இத்தியாதிகளை ஒரு வேளை  பிரியாணியோடு  போடும் எவனும் , பரதேசியில், நாற்பத்தி எட்டு நாள் நடக்கவிட்டு அடிமை குழிக்குள் தள்ளி  விட்ட அந்த கூலி  கங்காணி யை போல தேர்தல் கால தேவை ஒன்றை மட்டுமே மனதில் வைத்துகொண்டு அவனது புரோக்கர்   செயல் மூலம் அடிமை எண்ணம் கொண்ட  அரசியல்வாதியின் தொழிலுக்கு நம்மை நிரந்தர அடிமை  படுத்த பட போகிறான் என்று அர்த்தம் .

தேயிலை  தோட்டங்களில் இப்போதும் அடிமை முறை இருக்கிறதா என்று தெரியாது ஆனால் கங்காணிகள்  இடத்தை மாற்றிக்கொண்டு அரசியலில் இருக்கிறார்கள் என்பதை 
வாக்காளர்களிற்கு  இலவசம்  கொடுக்கும் அவர்களின் செயல் மூலம் அனைவரும் அறியலாம்.

அரசியல் கங்காணி , இலவசம் எதற்கு கொடுக்கிறான் என்று மக்களே ஒரு தெளிவுக்கு வராத வரை , அரசியல் , கங்காணி களிற்கு  தமிழன் அடிமையாவதை எந்த சக்தியும் தடுக்க முடியாது.

அரசியலில் இலவசம் கொடுப்பவன் அனைவரும் கங்காணியே !

பரதேசிக்கு மீண்டும் வாழ்த்துக்கள் !

 

http://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&id=13418:bala-and-political-pimps&catid=135:headnews&Itemid=101

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.