Jump to content

இலங்கை கடற்படை அட்டுழியம் 53 மீனவர்கள் சிறைபிடிப்பு.


Recommended Posts

மீன் பிடித்து கரை திரும்பிய மீனவர்களை துரத்தி வந்து இலங்கை கடற்படை
கொடூரமாக இரும்பு கம்பியால் தாக்கியது. மீனவர்கள் 53 பேரை சிறை பிடித்துச்
சென்றதோடு 9 படகுகளையும் பிடித்துச் சென்றனர். இதனால் ராமேஸ்வரத்தில்
பதற்றம் நிலவுகிறது. ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று முன்தினம் காலை
600க்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்.
தனுஷ்கோடிக்கும், கச்சத்தீவுக்கும் இடையே மீன் பிடித்தபோது, நேற்று
முன்தினம் இரவு அங்கு வந்த இலங்கை கடற்படையினர் 4 படகுகள் மற்றும் 19
மீனவர்களை சிறை பிடித்துச் சென்றனர். இவர்கள் தலைமன்னார் போலீசில்
ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நேற்று அதிகாலை மீன் பிடித்து
முடித்த ராமேஸ்வரம் மீனவர்கள் கச்சத்தீவை தாண்டி கரையை நோக்கி வந்து
கொண்டிருந்தனர். அப்போது 5 கன் போட் கப்பலில் இலங்கை கடற்படையினர்,
ராமேஸ்வரம் மீனவர்களை துரத்தி, துரத்தி தாக்கினர். மீனவர்களின் படகு களை
வழிமறித்து அவர்களை இரும்புக் கம்பியால் சரமாரி தாக்கினர். இதில் மெல்டஸ்
என்ற மீனவரின் வலது தோள்பட்டை இறங்கியது. மேலும் சில மீனவர்களுக்கு காயம்
ஏற்பட்டது. இலங்கை கடற்படையினர் துரத்தி வந்ததால் பயந்த மீனவர்கள் வேகமாக
செல்வதற்காக, படகில் கட்டியிருந்த வலைகளை தாங்களே அறுத்து கடலில்
வீசிவிட்டு வந்து கொண்டிருந்தனர்.

எனினும் இலங்கை கடற்படை விரட்டி
வந்து ராமேஸ்வரம் மீனவர்களின் 11 படகுகளையும் அதிலிருந்த மீனவர்களை யும்
பிடித்துச் சென்றனர். இதில் விசுவாசம், அந்தோணி ராயப்பன், தேவசகாயம், மோட்ச
அலங்காரம், ராஜபாண்டி இவர்களது 5 படகுகளை யும், படகில் இருந்த மீனவர்கள்
சந்தியா, சுதாகர், நேபர்ட், மரியநேசர், விஜயகுமார் உள்பட 34 மீனவர்களையும்
நெடுந்தீவு போலீசில் ஒப்படைத்தனர். மற்ற 6 படகுகளை யும் அதிலிருந்த மீனவர்
களையும் விடுவித்தனர்.

இவர்கள் நேற்று ராமேஸ்வரம் திரும்பினர்.
தற்போது 9 படகுகளுடன் 53 மீனவர்கள் இலங்கையின் பிடியில் உள்ளனர். சில
மீனவர்களின் படகுகளில் வலைகளை, இலங்கை கடற்படையினர் அறுத்து வீசியதாக கரை
திரும்பிய மீனவர்கள் தெரிவித்தனர். இதனால் ராமேஸ்வரம் தீவில் பதற்றம்
ஏற்பட்டுள்ளது. சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர் சோகத்தில்
உள்ளனர். இது குறித்து புலனாய்வு பிரிவு மற்றும் மீன்பிடித்துறை அதிகாரிகள்
விசாரணை நடத்துகின்றனர்.

3 மாதங்களில் 18 முறை...

தமிழக
மீனவர்கள் மீது இலங்கை கடற்படை கடந்த மூன்று மாதத்தில் மட்டும் 18 முறை
தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இதில் 93 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டனர்.
இதில் 40 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். 53 பேர் தொடர்ந்து இலங்கையின்
பிடியிலேயே உள்ளனர். தாக்குதல் ஏன்?: இந்நிலையில் தமிழக மீனவர்களின் இழுவலை
மீன்பிடிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கையின் பல்வேறு பகுதிகளில்
தொடர் போராட்டம் நடந்துள்ளது. நேற்றும் இலங்கை தெடுந்தீவு, தலைமன்னாரில்
இலங்கை மீனவர்கள், தமிழக மீனவர்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டம் காரணமாகவே கடந்த மூன்று மாதமாக தமிழக மீனவர்கள் மீது இலங்கை
கடற்படையினர் கடும் தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 

http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=13365:53-fisher-man&catid=36:tamilnadu&Itemid=102

Link to comment
Share on other sites

Adade16.jpg

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.